சமூகவலை உலகம்

பெண்ணாக மாறிய, பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்.

2 days 17 hours ago

465376898_1092249822482515_3456883669277

பெண்ணாக மாறிய, பிரபல கிரிக்கெட் வீரரின் மகன்.  

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், தான் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை எடுத்துக்கொண்டு பெண்ணாக மாறியதை அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமாக இருந்தவர் சஞ்சய் பாங்கர். இவருடைய மகன், ஆர்யன். இவர், தற்போது பெண்ணாக மாறியுள்ளார். தவிர, தனது பெயரையும் அனயா என மாற்றிக்கொண்டு உள்ளார்.

இதுகுறித்து அவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்மூலமே இந்த தகவல் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த அந்தப் பதிவில், "கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எனது கனவுக்காக பல தியாகங்களை, போராட்டங்களை, அர்ப்பணிப்பை நான் மேற்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் விடியற்காலை களத்துக்குச் சென்று பலரது சந்தேகங்கள் மற்றும் முன் முடிவுகளுக்கு மத்தியில் எனது வலிமையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தேன்.

ஆனால், இந்த ஆட்டத்தைத் தாண்டி எனக்கு இன்னொரு பயணமும் இருந்தது. என்னை நானே சுயமாக கண்டறிய வேண்டிய பாதையில் நிறைய சவால்களை சந்தித்தேன். எனது சுயத்தை அடைவதற்குச் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. இது அத்தனை எளிதாக இல்லை. 

இன்று இந்த விளையாட்டில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நான் வந்த பாதை எளிதானது அல்ல. ஆனால், எனது சுயத்தை நான் கண்டறிந்தது தான் மிகப்பெரிய வெற்றி” என அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனால், அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சூழலில்தான், ஆர்யன் பெண்ணாக உணர்ந்ததை அடுத்து அவர் ஹார்மோன் மாற்றுச்சிகிச்சை மேற்கொண்டு தற்போது பெண்ணாக மாறி இருக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொண்டவர்களுக்கு மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி இல்லை என கூறி இருந்தது. அதனால் தற்போது அனயாவாக மாறியுள்ள ஆர்யனுக்கும் இனி கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவேல் வடலூர் நகராட்சி நகராட்சி  

73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பட்டத்தை வென்ற டென்மார்க்கின் விக்டோரியா கெயர்

3 days 4 hours ago

miss-denmark.jpg

இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேயா தெய்ல்விக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க் போட்டியாளர் ஒருவர் இச்சிறப்பைப் பெற்றிருப்பது இதுவே முதன்முறை.21 வயதாகும் அவர், நடனமணி, தொழில்முனைவர், விலங்குநல ஆர்வலர் எனப் பன்முகத் திறன்களைக் கொண்டவர்.

மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற 73வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் 120க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.

இரண்டாம் பரிசுக்குத் தேர்வானார் நைஜீரியாவின் சிடிம்மா அடெட்ஷினா. இவர் சட்டம் பயிலும் மாணவி.

போட்டியில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பரிசுகளை முறையே மெக்சிகோ, தாய்லாந்து, வெனிசுவேலா நாட்டு அழகிகள் பெற்றனர்.

வெனிசுவேலா போட்டியாளரான 28 வயது மார்க்கெஸ், பிள்ளை பெற்ற பிறகும் அந்நாட்டில் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார்.

2023ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் திருமணமான, பருமனான, பாலின மாற்றம் செய்துகொண்ட போட்டியாளர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந்த ஆண்டு, 28 வயதுக்குமேல் வயதுடைய பெண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதற்குமுன் அத்தகையோர் போட்டியில் பங்கேற்க இயலாது.

மெக்சிகோ ஐந்தாவது முறையாக இந்தப் போட்டியை ஏற்றுநடத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/312229

மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது.. 

4 days 16 hours ago

மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொபதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது.. 

சிங்கள மக்களும் தமிழ்மக்களும் பல பாடங்களை அரசியல் வாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள், 

அத்தோடு யாழ்மக்கள் சில பாடங்களை ஒருசில அரசியல் வாதிகளிடமிருந்து கற்கவும் போகிறார்கள் (அது வேற கதை)..

🏠 எகத்தாளமும், சுத்துமாத்தும், பல சதிகளை சிரித்து கொண்டே செய்து விட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து பேட்டி கொடுக்கும் சுமந்திரன்,  தன்மீதான வெறுப்பை நிறையவே சம்பாதித்து தனதும் தமிழரசு கட்சியினதும் தோல்வியை தானே உறுதிப்படுத்தி இருந்தார்..

🚴 24 கரட் தனமும் தனது பாரம்பரை கட்சியில் , தலைமை பதவியை பாதுகாப்பதே பிரதான நோக்கமாகவும், களத்தில் இறங்கி பணியாற்றும் செயற்றிறன் இன்றி ஓதுவார் தமது இருப்புக்காக பலதையும் சொல்லக்கேட்டு கட்சியை சீரழித்த கஜேந்திரகுமார்; சுமந்திரன் புராணம் பாடுவதை தவிர தமிழரசின் விரக்தி வாக்குகளை தனதாக்கி 2020 வளர ஆரம்பித்த மக்கள் அலையை மேலும் வளர்த்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காது அவர் விரும்பியவாறே ஒரு ஆசனத்தை மட்டும் தக்க வைத்துள்ளார். 

🐚 தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து உருப்படியாக பாராளுமன்றத்தில் கதைக்க கூட தெரியாத பழைய அயுதக்குழுக்கள் எல்லாம் சேர்ந்து தாம் அறமற்றவர்கள் எனகாட்ட அடிப்படை அறமின்றி சங்கை திருடி பின்கதவால் பாராளுமன்றம் வரப்பார்தார்கள் கிடைக்கவில்லை

🦌 கிடைத்த குறுகிய காலத்தில் பல உள்ளக வெளியக நெருக்கடிகளுக்கு மத்தியில் நல்லூர் பிரதேச்சபை மற்றும் மாநரசபையை சிறப்பாக நடத்தினாலும், அடப்படை கட்டமைப்பு ஏதுமற்ற மிகப்புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சியில் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக தம்மை இணைத்த மணி அணி, சைக்கிளில் இருந்து பிரிந்தாலும் அவர்களை குறை சொல்வதையும் அவர்களது துரோகப்பட்டங்களுக்கு பதில் சொல்வதிலும் குறியாக இருந்தார்களே தவிர அவர்களை விட மேம்பட்டவர்களாக தம்மை நிறுவாது மக்களிடம் வாக்கு கேட்டார்கள்.. கிடைக்கவில்லை.

🥭 சுமந்திரனின் திமிர்த்தனத்தாலும் தனக்கு கட்சிக்குள் எடுபிடிகளாகவும் இல்லை என்பதற்காக தமது விலக்கப்பட்ட தனது வியாபாரத்திலேயே குறியாக இருக்குமர சரவணபவன், தவராசா போன்றோர் தமது ஈகோவுக்காக்கவும் அரசியல் இருப்புக்காகவும் மாம்பழத்தில் நின்றார்கள். கிடைக்கவில்லை

இதில் மக்களை பொறுத்தவரை ஒருகட்சிக்கு மட்டும் வாக்கினை அள்ளி வளங்குவதற்கு யாருமே ஒருவரை விட ஒருவர் திறமாக இருக்கவில்லை .. 

ஆனால் எல்லோரும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் ஆணையை கோரி நின்றார்கள் மக்கள் குளத்தோடு கோவித்துகொண்டு கழுவாமல் இருக்கமுடியாதென அனைவருக்கும் தமது வாக்குகளை பகிரந்தளித்தார்கள்.  

ஒட்டுமொத்தமாக இந்த 5 கட்சிகளுக்கும் இம்முறை யாழில் விழுந்த தமிழ்த்தேசிய வாக்குகள் -140,000. 2020 இல் கிடைத்தது 200,000 வாக்குகள்.

ஊசிக்கும், பல சுயேட்சைகளுக்கும், போக மிக சொற்ப வாக்குகளே அநுரபக்கம் போயிருக்கிறது.

அத்தோடு தமிழ்த்தேசியத்தின் பக்கம் திருப்பமுடியத சலுகைகளை நோக்கிய வாக்குதான் NPP பக்கம் சென்றிருக்கிறது.

 

2020 தேர்தலில் யாழில் டக்கிளஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் பெற்ற வாக்குகள் 115,000

2024 இல் JVP+ டக்கிளஸ் மற்றய தேசியக்கட்சிகள் = 114,000

 

எங்கடசனம் தமிழ்த்தேசியத்தில் நின்று மாறாது தமிழ் அரசியல் வாதிகளுக்கும், அநுரவுக்கும் சிறப்பான செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.

Copied from Para https://www.facebook.com/share/1JW4gY83aL/பரன்

உலகை நடுங்க வைத்த ஐ.எஸ் குழு காணாமல் போனதா? இப்போது அவர்களின் குறி?

5 days 16 hours ago

Islamic State: இஸ்லாமிய அரசு என தம்மை தாமே அழைத்துக்கொள்ளும்  ஐ.எஸ் குழு 10 ஆண்டுகளுக்கு முன்  உலகத்தையே உலுக்கியெடுத்தது. 

தனது கோட்டையான இராக் மற்றும் சிரியாவில் இருந்து இந்த குழு கொடூரமான தண்டனைகள், பொதுவெளியில் கொலை செய்வது உள்ளிட்டவற்றை நடத்தின. 

இந்த பயங்கரம் உலகம் முழுவதும் பயங்கரவாத அலையாக பரவுவதற்கு முன்பாக,  ஐஎஸ் குழுவை எதிர்த்து போராட 80க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்தன.  இதன்பின், 2019-ல் தனது கடைசி கோட்டையையும் ஐ.எஸ். இழந்தது. 
 
இப்போது ஐ.எஸ். அமைப்பு என்ன செய்கிறது?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

காதல், உடலுறவு குறித்து சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி பெண்கள்

6 days 4 hours ago
ஹாலி

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு, ‘பெரும்பாலும் ஊடகங்களில், மாற்றுத்திறனாளிகள் என்றாலே பரிதாபமான வாழ்க்கை வாழ்பவர்கள் எனக் காட்டுகிறார்கள்’ என்று ஹாலி கூறுகிறார்
  • எழுதியவர், ஜெம்மா டன்ஸ்டன்
  • பதவி, பிபிசி வேல்ஸ் லைவ்

“நீ மாற்றுத் திறனாளியாக இருப்பதால், எல்லோரையும் போல உன்னால் உடலுறவில் ஈடுபட முடியுமா?” என ஒருவர் ஹாலியிடம் கேட்டபோது அவருக்கு 16 வயது தான் ஆகியிருந்தது.

“சக்கர நாற்காலியில் இருந்தவாறு மட்டும் தான் உன்னால் உடலுறவில் ஈடுபட முடியுமா?” எனக் கடந்த காலங்களில், அவரிடம் உடலுறவு குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

“ஒருவர் என்னைக் காதலிப்பதை ஏதோ மிகப்பெரிய தியாகம் செய்வது போன்று மக்கள் நினைக்கிறார்கள். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் என்னை இப்போது காயப்படுத்துவதே இல்லை” என்கிறார் ஹாலி.

இப்போது 26 வயதாகும் ஹாலிக்கு நாள்பட்ட வலி மற்றும் ‘ஹைப்பர்மொபிலிட்டி சிண்ட்ரோம்’ (Hypermobility syndrome) உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் டேட்டிங் (Dating) மற்றும் காதல் உறவுகள் குறித்து சமூகத்தில் நிலவும் எதிர்மறையான நம்பிக்கைகள் மற்றும் மோசமான எண்ணங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் பல மாற்றுத் திறனாளி பெண்களில் ஹாலியும் ஒருவர்.

 

மாற்றுத் திறனாளிகளுக்கான மகிழ்ச்சியான உறவுகள் குறித்து சமூகத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது முக்கியம் என்று ஹாலி கிரீடர் கூறுகிறார்.

அவர் பதின்ம வயதில், தனது கணவர் ஜேம்ஸை ‘டேட்’ (Date) செய்யத் தொடங்கினார். ஒன்பது ஆண்டுகளாக அவரைக் காதலித்த ஹாலி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டார்.

"பெரும்பாலும் ஊடகங்களில், மாற்றுத் திறனாளிகள் என்றாலே பரிதாபமான வாழ்க்கை வாழ்பவர்கள் எனக் காட்டுகிறார்கள். எங்களுக்கு ஒரு சோகமான கதை உள்ளது எனக் காட்டவே விரும்புகிறார்கள்," என்று ஹாலி கூறுகிறார்.

தனது கணவர் ஜேம்ஸ், எப்போதும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும், ஆனால் மற்றவர்களின் கருத்துகள் தன்னை சங்கடப்படுத்துவதாகவும் ஹாலி கூறுகிறார்.

"நாங்கள் முதன்முதலில் ஒன்றாக ஒரு வீட்டில் குடியேறியபோது, 'உன் உடல்நிலை மோசமடைந்தால், நீ ஒரு சுமையாக மாறிவிடுவாய். அதனால் உன் கணவர் உன்னை விட்டுச் சென்றுவிடுவார்' என்று சிலர் என்னிடம் கூறினர்” என்கிறார்.

 
ஜேம்ஸ், ஹாலி

பட மூலாதாரம்,RAM PHOTOGRAPHY & FILM

படக்குறிப்பு, தனது கணவர் ஜேம்ஸ், எப்போதும் தனக்கு உறுதுணையாக இருப்பதாக ஹாலி கூறுகிறார்.

பள்ளியில் படித்த காலத்தில் தன்னைப் பற்றி பலர் தவறான அனுமானங்களைக் கொண்டிருந்தார்கள் எனவும், சிலர் முகத்திற்கு நேராகவே அதைக் கேட்டார்கள் என்றும் ஹாலி கூறுகிறார்.

"சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக மக்களுக்கு எழும் முதல் கேள்வி, இந்த நபரால் உடலுறவு கொள்ள முடியுமா என்பதுதான்."

பள்ளியில் தனது வகுப்பில் உள்ள சிறுவர்கள், அந்தரங்கமான மற்றும் சங்கடத்தை ஏற்படுத்தும் கேள்விகளைக் கேட்டார்கள் என்று ஹாலி கூறினார்.

"’சக்கர நாற்காலியில் மட்டுமே தான் உன்னால் உடலுறவு கொள்ள முடியுமா?’, ‘உனது மூட்டு எலும்புகள் இடம் மாறிவிடுமா? ‘ஒருவர் உன்னுடன் முரட்டுத்தனமாக உடலுறவு கொள்ள விரும்பினால், உன்னால் தாங்க முடியுமா?' இப்படிப் பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.”

சமூக ஊடகங்களில், செக்ஸ் பற்றித் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் வந்ததாகக் கூறும் ஹாலி, “அவ்வாறு ஒருவர் எனக்கு வாய்ப்பு அளிப்பதற்கே நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கிலே அந்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன,” என்கிறார்.

'பாலியல் கல்வி' (Sex Education) எனும் இணையத் தொடரில் வந்த ஐசக் குட்வின் என்ற கதாபாத்திரத்தை மேற்கோள் காட்டி, ‘சமீபத்தில் ஊடகங்களில்தான் பார்த்த, மாற்றுத் திறனாளிகள் குறித்த நல்லதொரு சித்தரிப்பு அது மட்டும்தான்’ என்று கூறும் ஹாலி, ஊடகங்களில் மாற்றுத் திறனாளிகள் குறித்து ஒரு சிறந்த, நேர்மறையான பிரதிநிதித்துவத்தைக் காண வேண்டுமென விரும்புகிறார்.

 
நிக்கோலா

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு, நிக்கோலாவின் அடுத்ததாக ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்

வேல்ஸ் நாட்டின் கேர்பில்லியை சேர்ந்த 38 வயதான நிக்கோலா தாமஸ், தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி என்பதை முறையாகப் பதிவு செய்து, அரசின் சான்று பெற்றவர்.

"மக்கள் என்னிடம் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று, ‘நீங்கள் எப்படி உடலுறவு கொள்கிறீர்கள்?’ இது எனக்கு ஒருவித அதிர்ச்சியை அளிக்கும். ஒருவரின் அந்தரத்தைக் குறித்த, அதே நேரம் சங்கடத்தை ஏற்படுத்தும் கேள்வி இது” என்கிறார் நிக்கோலா தாமஸ்.

நிக்கோலாவுக்கு நியூரோமைலிடிஸ் ஆப்டிகா எனப்படும் ‘ஆட்டோ இம்யூன் நோய்’ உள்ளது. இதனால், அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கண்ணில் பார்வைத் திறனை இழந்தார். அடுத்து ஐந்து ஆண்டுகளில் மற்றொரு கண்ணிலும் பார்வைத் திறன் பறிபோனது.

"நிறைய பேருக்கு பார்வை மாற்றுத் திறனாளிகள் குறித்துத் தவறான முன்முடிவுகள் உள்ளன. அவற்றைப் பொய்யாக்க விரும்புபவர்களில் நிச்சயமாக நானும் ஒருத்தி" என்கிறார் நிக்கோலா.

நிக்கோலாவின் பொழுதுபோக்குகளில் படகோட்டுதல், பேடல் போர்டிங் (நீர்நிலைகளில் துடுப்புப் பலகை பயன்படுத்தி விளையாடுவது) மற்றும் பயணம் செய்வது ஆகியவை அடங்கும். அவர் அடுத்ததாக ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

 
நிக்கோலாவும் அவரது காதலர் பாலும்

பட மூலாதாரம்,NICOLA THOMAS

படக்குறிப்பு, நிக்கோலாவும் அவரது காதலர் பாலும், ஒன்றாக உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்புகிறார்கள்

நிக்கோலா தனது பார்வையை இழந்தபோது, அவருக்கு ஒரு காதலர் இருந்தார். ஆனால், பின்னர் அந்தக் காதல் உறவு முறிந்தது.

"நான் ஏதோ ஒரு சுமையைப் போல நடத்தப்பட்டேன். ‘நீங்கள் எப்போதும் அவளுக்கு ஒரு காப்பாளராகவே இருக்க முடியாது’ என்று சிலர் என் காதலனிடம் கூறுவார்கள். உண்மை என்னவென்றால், எனக்கு எப்போதும் ஒரு காப்பாளர் தேவைப்பட்டதில்லை" என்கிறார் அவர்.

நிக்கோலாவிற்கு இப்போது ஒரு காதலர் இருக்கிறார், அவரும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. "நாங்கள் இருவரும் பார்வை மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும், ஒரு நகரத்தை மகிழ்ச்சியாகச் சுற்றி வருவோம். யாருடைய உதவியும் இல்லாமல் டேட்டிங் செல்வோம். எதுவும் எங்களைத் தடுக்காது” என்கிறார்.

மக்கள் தன் மீது ஆர்வம் காட்டும்போது, ஒரு முன்முடிவோடு அவர்கள் தன்னை அணுகுவதை உணர்வதாக நிக்கோலா கூறுகிறார்.

"சமூக ஊடகங்களில் என்னை அணுகி, டேட்டிங் செல்லலாமா எனக் கேட்பார்கள். நான் ஒரு பார்வை மாற்றுத் திறனாளி என்று சொல்லும்போது அவர்களின் அணுகுமுறை மாறுகிறது அல்லது வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்."

"அவர்கள் ஏதோ கஷ்டப்பட்டு உங்களுக்கு ஒரு உதவி செய்வதைப் போல நீங்கள் நடத்தப்படுவீர்கள். அது உடனடியாக உங்கள் உற்சாகத்தை குறைத்துவிடும்” என்கிறார் அவர்.

"எங்களது தனிப்பட்ட பண்புகளை, திறன்களைப் பார்க்காமல், ஒரு பொதுப் புத்தியுடன் எங்களை அணுகுகிறார்கள். அந்த எண்ணத்தை நான் உடைக்க விரும்புகிறேன், எனக்கென்று ஒரு முழுமையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளது” என்று கூறுகிறார் நிக்கோலா.

 
கேட்
படக்குறிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு ‘சுய அன்பு’ என்பது மிகவும் முக்கியமானது என்கிறார் கேட்

தங்கள் பாலியல் அடையாளத்தை ஆராயவும், மற்றவர்களைப் போலவே தங்களது காதல் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிமை உண்டு என்று கேட் வாட்கின்ஸ் கூறுகிறார்.

இவர் வேல்ஸ் நாட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கான 'டிஸ்-எபிலிட்டி வேல்ஸ்' (Disability Wales) எனும் அமைப்பு ஒன்றில் அரசியல் திட்ட அதிகாரியாக உள்ளார்.

"இந்தச் சமூகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பாலியல் மற்றும் காதல் உறவுகள் ஏன் தடைசெய்யப்பட்ட ஒன்றாக உள்ளன? வெறுமனே மூன்று வேளை சாப்பாடும், தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தால் போதும் என்ற நிலையை விட, வாழ்க்கையில் எங்களுக்கு செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது" என்கிறார் கேட்.

"வாழ்க்கையை உங்களுக்குப் பிடித்தவாறு வாழ்வது அல்லது அனுபவிப்பது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே. ஆனால், இந்த விஷயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை" என்று கூறுகிறார் கேட்.

மாற்றுத் திறனாளி பெண்களுக்கு மோசமான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதும், அது குறித்து அவர்கள் கவலையுடன் புகார் கூறுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாகக் கூறும் கேட், “இது வருந்தத்தக்க ஒரு விஷயம்” என்கிறார்.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செக்ஸ் பொம்மைகள் மற்றும் கருவிகள் தன்னைப் போன்றோருக்கு நம்பிக்கை அளிக்க உதவும் என்றும், அவற்றை முக்கிய பாலியல்சார் பொருட்கள் விற்கும் தளங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் இன்னும் அதிகமாகப் பார்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

"நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், இயல்பாக உணர வேண்டும். உங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை மற்றவர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்ல முடியும். சுய அன்பு என்பது மிகவும் முக்கியமானது” என்று கூறுகிறார் கேட்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

கொடூரன் பிள்ளையான்.

6 days 16 hours ago

No photo description available.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்சே குடும்பம்  ஒட்டுக்குழு  பிள்ளையானை பயன்படுத்தி  கோரமான  பல்வேறு சட்டவிரோத குற்ற செயல்களை கடந்த காலங்களில் செய்து இருக்கிறது . 

அரசியல் மற்றும் இராணுவ கொலைகள் மட்டுமின்றி ராஜபட்ச குடும்பத்திற்கு விரோதமான பத்திரிகையாளர்கள் உட்பட பலரை கொன்று போட ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை பயன்படுத்திய விவகாரத்தை Daily Mirror அம்பலப்படுத்தி இருக்கின்றது 

குறிப்பாக முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள் ஜோஸ்ப் பரராஜசிங்கம் , ரவிராஜ் ,சந்திரநேரு  உட்பட பல அரசியல் கொலைகளை பிள்ளையானை பயன்படுத்தியே கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் புலனாய்வு பிரிவு செய்து இருந்தது 

அதே போல திருகோணமலையை சேர்ந்த மூத்த சிவில் செயல்பாட்டாளர் விக்னேஸ்வரன் உட்பட சிவில் சமூக பிரமுகர்களும் பிள்ளையானை வைத்தே கொலை செய்யப்பட்டனர். 

பத்திரிகையாளர் நடேசன் போன்ற பத்திரிகை பிரமுகர்களையின் கொலைகளையும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கி இருந்த பிள்ளையானை வைத்தே கோத்தபாயா ராஜபக்சே செய்தார். 

முன்னாள் துணைவேந்தர் ரவீந்தரநாத் அவர்களையும்  ராஜபக்சே குடும்பத்துடன் நெருக்கிய தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் துணையுடனே பிள்ளையான் கடத்தி படுகொலை செய்தான். 

இது தவிர, இலங்கை முழுவதும் தமிழ் வியாபாரிகள் பலரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபட பிள்ளையானை கோத்தபாயா அனுமதி அளித்து இருந்தார் . இவ்வாறு கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான 
வர்த்தகர்கள் வெலிகந்த மற்றும் கபரண இராணுவ முகாம்களில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர் 
மேற்படி வர்தகர்களிடம் பறிக்கப்பட்ட பணம் பிள்ளையனிடம் மட்டுமின்றி மூத்த இராணுவ அதிகாரிகளிடம் பகிரப்பட்டு இருந்தது 

மேற்படி கடத்தல் சம்பவங்களில் போது ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாத பத்திரிகையாளர்கள் உட்பட சிங்களவர்கள் பலர் கொண்டு வரப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை பிள்ளையான் கூட்டாளி அசாத் மௌலானா என்பவன் அம்பலப்படுத்தி இருக்கின்றான் 

இது தவிர ,வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் மேற்படி விவகாரங்களை தெரிந்து இருந்தாலும் பிள்ளையானுக்கு ராஜபக்ச குடும்பத்தில் இருந்த  தொடர்பு காரணமாக அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை 

அதே போல பிள்ளையானை பயன்படுத்தி பெண்களை கடத்தி இலங்கை இராணுவத்திற்கு விருந்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றன . குறிப்பாக திருகோணமலையில்  கடற்படை உளவுப் பிரிவை சேர்ந்த கப்ரன் சுமித் என்பவருடன் இணைந்து பிள்ளையான் கும்பல் நடத்திய விருந்து தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன 

6 வயது மாணவியான வர்ஜா யூட் றெஜி, , 8 வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் போன்ற குழந்தைகளை கூட ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தில் கப்பம் பெறுவதற்காக பிள்ளையான் கடந்து கொன்ற சம்பவங்கள் கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு  தெரிந்தே நடந்தது 

2007 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் பொது பிள்ளையானை பயன்படுத்தி தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் உறவினர்களை கடத்திய பசில் ராஜபக்சே வாக்கெடுப்பில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களை பங்கெடுக்க அனுமதிக்கவில்லை. 

இது போதாதென்று மட்டக்களப்பில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்ட  சம்பவங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமல் போனோர் ஆணைக்குழுவில் பிள்ளையானுக்கு எதிராக கண் கண்ட சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றது. 

கோத்தபாயா ராஜபக்சே தலைமையிலான  புலனாய்வு துறை அதிகாரிகள் வாழைச்சேனையில் ஒரு முஸ்லீம் ஆயுத குழுவை உருவாக்கி கருணா பிள்ளையான் குழுக்களுடன் இணைத்தே இயக்கி வந்தார்கள் . அதே போல முஸ்லீம் ஆயுத குழுக்களுக்கான பிரதான ஆயுத முகவராக  பிள்ளையானையே பயன்படுத்தினார்கள் 
அதே போல  திரு அருண் தம்பிமுத்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை நாமல் ராஜபக்சே உதவிகளுடன் தான் பிள்ளையான்  தக்க வைத்து இருக்கின்றான்  

கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு நெருக்கமான முன்னாள் புலனாய்வு துறை தளபதியாக இருந்த மேஜர் ஜெனெரல் கபில ஹெந்தாவிதாரண அவர்களால் பிள்ளையானுக்கு மேற்படி வீடு பிள்ளையானுக்கு பெற்று கொடுக்கப்பட்டு இருந்தது.
 
இந்த வீட்டு விவகாரத்தில் பிள்ளையான் போலி உறுதி தயாரித்து தேவராஜ் என்பவனுக்கு விற்று அவனிடம் வாங்குவது போல பாசாங்கு செய்து முதலமைச்சராக இருந்த காலத்தில் செய்த மோசடி 7 வருட கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றம் என்கிற போதும் ராஜபக்சே குடும்ப தலையீடு காரணமாகவே இதுவரை நீதி வழங்கப்படவில்லை.

அதே போல முதலமைச்சராக இருந்த போது பிள்ளையான், பிரதீபன்  மற்றும் கண்ணன் ஆகியோர்  சேர்ந்து புதூர் வங்கியில் 15 கோடி பெறுமதியான நகைக மற்றும்  35 லட்சம் பணத்தை  கொள்ளையடித்து இருந்தனர்.  
இந்த கொள்ளையில் பிள்ளையானுக்கு இருந்த தொடர்பை இலங்கை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி பிள்ளையானை கைது செய்ய முயன்ற போதும் ராஜபக்சே குடும்பம் பிள்ளையானை கைது செய்ய அனுமதிருக்க வில்லை.
 
அதே போல அதே போல மட்டு-வந்தாறுமூலை பல்கலைக்கழக மாணவியாக இருந்த 21 வயதேயான தனுஸ்கோடி பிறேமினி. என்கிற பெண்ணை சந்திவெளி இராணுவ முகாமை சேர்ந்த கலீல் (பிள்ளையானுடன் சிறையில் இருந்தவன் ) என்பவனின் உதவியுடன் வெலிகந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கடத்திய பிள்ளையான் குழுவை சேர்ந்த பிள்ளையான், சிந்துஐன், யோகன், புலேந்திரன், குமார், சிரஞசீவி ஆகியோர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்தனர்.

மேற்படி கொலை தொடர்பாக தெளிவான சாட்சியங்கள் இருக்கின்ற போதும் ராஜபக்ச குடும்ப தலையீடு காரணமாக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை. 

அதேபோல பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக வைத்து கொண்டு பாசிக்குடாவில் பலவேறு சட்டவிரோத முதலீடுகளை பசில் ராஜபக்சே செய்து இருந்தார்.
 
மேற்படி சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இன்றைக்கும்  பிள்ளையானும் அவன் கூட்டாளிகளும்  வரிந்து கட்டி கொண்டு  ராஜபக்சே குடும்பம் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள்.

இனமொன்றின் குரல்

சாகும் போது கூட சமைச்சு வச்சுட்டு தான் சாகணும் 😟

1 week ago

சமூகத்தில் வெளியே தெரியாத பெண் அடிமைத்தனம். 

இதை  ஆணாதிக்க மனப்பான்மை உடையவர்களால் புரிந்து கொள்ள முடியாது. 
இது மிகச் சிறந்த கணவனாலும் நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறை! 

பார்த்ததில் மனதை வருடிய காணொளி. நானும் தவறு செய்கின்றேன் என உணர்த்திய காணொளி.

 

அநுரவின் அதிரடி நடவடிக்கை! அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்! ஆரம்பமே பெரும் ஊழல்!

1 week ago

அநுரவின் அதிரடி நடவடிக்கை!

 

அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்!

 

ஆரம்பமே பெரும் ஊழல்!

https://www.facebook.com/share/1AE8sN2Ykp/

யூடியூப் தளத்தால் புது வாழ்வு பெற்ற பார்வை மாற்றுத் திறனாளி தபேலா இசைக் கலைஞர் - காணொளி

1 week 1 day ago

அருண் ஜஞ்சால்: யூடியூப் தளத்தால் ...

இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது.

தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

யூடியூப் பற்றியோ, சமூக வலைதளங்கள் எப்படி இயங்கும் என்பது பற்றியோ அறிந்திராத அருணுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அவருடைய இந்த இணைய பயணம் துவங்கியது எப்படி? அதற்கு அவருடைய சகோதரன் எந்த வகையில் உதவி வருகிறார்? யூடியூப் சேனல் மூலம் அவர்கள் பெற்ற வரவேற்பு எப்படியானது? விளக்குகிறது இந்த வீடியோ!

செய்தி & கேமரா - ஷாகித் ஷேக்

வீடியோ எடிட் - அரவிந்த் பரேக்கர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c704jkpj4nro

 

கண்ணி வெடியில் கால் போச்சு; கருணாநிதி யசோதினி இலங்கை தேர்தலில் களமிறங்குவது ஏன்?

1 week 2 days ago

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கருணாநிதி யசோதினி.

 

 

இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர்

1 week 2 days ago
gopishankar-585x780.jpg

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார்.  கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார்.

யாழ் போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார்.  அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகிறார்.

https://globaltamilnews.net/2024/208189/

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்!

1 week 4 days ago
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்!

 

Indria_image.jpg

மதுரை: பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

மதுரை டிவிஎஸ் காலனியில் வசித்து வந்த இந்திரா சௌந்தரராஜன் மர்மதேசம், விடாது கருப்பு, ரகசியம், சொர்ண ரேகை, அத்திப்பூக்கள் போன்ற டிவி தொடர்கள் நாவல்கள், சிறுகதைகள், படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்திலும் இந்திரா சௌந்தரராஜன் பணியாற்றியுள்ளார்.

இவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் அவர் குளியலறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்தது. உடனடியாக உறவினர்கள் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார். இவருடைய மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், தொலைகாட்சி தொடர்களை எழுதியுள்ளார். இன்றைய தினம் நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த அதிர்ச்சியிலிருந்த மீளவதற்குள் இந்திரா சௌந்தரராஜனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

700 சிறுகதைகள், 340 நாவல்களையும் எழுதிய இந்திரா சௌந்தரராஜன், 105 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/madurai/famous-novelist-indra-soundararajan-passed-away-653309.html

உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவனுக்கு வந்தா சட்னியா?

1 week 5 days ago

ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..

ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி..

மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.

வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!??? 🤨

🤨

IMG-1454.jpg

 

https://www.facebook.com/share/15FunbKmyA/?

மாவீரர்களின் கட்சியான... தமிழரசு அழிந்து போக இடமளியாதீர்கள். -சி.வி.கே. சிவஞானம்.-

2 weeks 3 days ago

465272830_9698018336894327_1349053069304

இவரின் கூற்றுக்கு... சில  பின்னுட்டங்கள். 

ஐயன்மீர் பிரிகேடியர் சம்பந்தன், கேணல் அமிர், லெப்கேணல் சிவபாலன் போன்ற பல "மாமா"வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்!

Eelapriyan Balan

இதைச் சொல்ல இவனுக்கு வெட்கமில்லையா?

Amuthan Singanayagam

தாங்களே அழித்துக் கொண்டு மக்களை அழிய விடாதீர்களாம்..இம் முறையுடன் கதை முடியலாம்.

Sasi Sasikaran

இப்படி கேட்பதை வேறு ஏதாவது கேட்கலாமே. அதுவும் இவரா... இவர், இனத்துரோகி ஆச்சே. சுமந்திரனுக்கு கூசா தூக்குபவனாச்சே.

Sinniah Tiemann Loganathan

வீட்டுக்கு.. தோல்விப் பயம் வந்திட்டு.

Mano Jeganathan

 

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?

2 weeks 4 days ago

பாரதிதாசனின் எழுதிய “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?..”பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலை பல பாடகர்கள் பாடி இருக்கிறார்கள். நேற்று இந்தப் பாடல் முகநூலூடாக  எனக்குக் கிடைத்தது

 

 

 

40 கிலோ மீட்டர் தூரத்தை 5 நிமிடத்தில் கடக்கும் பறக்கும் ஏர் டாக்ஸி பெங்களூரில் அறிமுகம்

2 weeks 4 days ago

 

 
 
May be an image of 1 person and text
 
 
 

டிக்டொக் ஸ்தாபகர் சீன கோடீஸ்வரரானார்

3 weeks 1 day ago

image

உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைடன்ஸின்  இணை ஸ்தாபகர் ஜாங் யிமிங்  சீனாவில் கோடீஸ்வரரானார்.

ஜாங் யிமிங்  49.3 பில்லியன்  சொத்து மதிப்புடன் ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த வருடத்துடன்  ஒப்பிடுகையில்  சொத்து மதிப்பு 43 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு 41 வயதான ஜாங் யிமிங் நிறுவனத்தின் பொறுப்பில் இருந்து விலகினார்.

ஆனால் நிறுவனத்தின் சுமார் 20 சதவீத சொத்துக்கு உரிமையாளராக இருந்தார்.

சீன அரசுடனான உறவு குறித்து சில நாடுகள் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாலும் உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடகளில் ஒன்றாக டிக்டொக் மாற்றமடைந்துள்ளது.

இரு நிறுவனங்களும் தாங்கள் சீன அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக இயங்குவதாக வலியுறுத்தினாலும்,  பைட் டான்ஸ் நிறுவனம்  டிக்டோக்கை விற்பனை செய்யாவிட்டால் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் அதை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களை எதிர்கொண்டாலும் கடந்த ஆண்டு  உலகளாவிய ரீதியில் இலாபத்தை 60 சவீதமாக பைடான்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது.  இதனால் ஜாங் யிமிங்கின் தனிப்பட்ட சொத்து அதிகரித்துள்ளது.

"சாங் யிமிங் கடந்த 26 ஆண்டுகளில் சீனாவில் நாங்கள் பெற்ற 18 ஆவது புதிய கோடீஸ்வரர் “என ஹுருன் ரூபர்ட் ஹூக்வெர்ஃப் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பில் கேட்ஸ், வாரன் பஃபெட், ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகிய 4  பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

இது சீனப் பொருளாதாரத்தின் வேகத்தை குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/197465

Checked
Thu, 11/21/2024 - 07:51
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed