ஏமாந்த கடிகாரம்
-----------------------------
கையில் கட்டுவதெல்லாம்
கடிகாரமே என்னும்
பழைய ஒரு பிறவி நான்
கடிகாரம் ஒன்றும் இருந்ததும் இல்லை
எந்த வேளையிலும்
இரவலாகவும் கட்டினதும் இல்லை
மாமனார் கொடுத்த ஒன்று
தங்கம் போல தகதகத்தது
கல்யாணம் முடிந்த அன்றே
கழட்டி வைத்தேன்
இப்ப அது எங்கேயோ
மாமாவிற்கு கடைசிக் காலத்தில்
இதுவும் ஒரு கவலை
ராத்திரி ஆழ்ந்த தூக்கம் இல்லை
என்கின்றான் ஒருவன்
எப்படி என்றால்
அவனின் கடிகாரம் சொன்னது என்கின்றான்
விளையாட்டின் நடுவிலேயே
அய்யோ........... இதயம் எக்கச்சக்கமாக துடித்து விட்டது
என்று அலறுகின்றான் இன்னொருவன்
அதுவும் கடிகாரம் தான் சொன்னது
ஐம்பது வயதுக்காரான்
நாற்பத்து ஐந்தே என்கின்றான்
ஆதாரம் அவனின் கடிகாரம்
அது நாற்பத்து ஐந்து என்றே காட்டுகின்றது
எத்தனை ஆயிரம் அடிகள்
எத்தனை கலோரிகள்
இப்படி அளவேயில்லாத அளவு கணக்குகளை
கைகளில் கொண்டு திரிகின்றனர்
நான் ஓடும் போது
நண்பன் ஒருவன்
அவனின் கடிகாரத்தை கட்டி விட்டான்
வரும் எண்களை
அவன் எங்கோ கொடுக்க வேண்டுமாம்
ஆதாரத்துடன்.