புதிய பதிவுகள்2

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி

2 days 1 hour ago
வினா 56) தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) இம்முறை ஓரிடமும் பிடிக்கவில்லை என 11 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1)வாலி - 48 புள்ளிகள் 2)பிரபா- 47 புள்ளிகள் 3)வாதவூரான் - 46புள்ளிகள் 4) நிலாமதி - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6)அல்வாயான் - 41 புள்ளிகள் 7)goshan_che - 41 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 40 புள்ளிகள் 9)புரட்சிகர தமிழ் தேசிகன் - 40 புள்ளிகள் 10)வில்லவன் - 40 புள்ளிகள் 11)நிழலி - 40 புள்ளிகள் 12)நூணாவிலான் - 39 புள்ளிகள் 13)ரசோதரன் - 39 புள்ளிகள் 14)சுவைபிரியன் - 38 புள்ளிகள் 15) கிருபன் - 38 புள்ளிகள் 16) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 17)கந்தையா 57 - 36 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 34 புள்ளிகள் 19)வாத்தியார் - 33 புள்ளிகள் 20) புலவர் - 31 புள்ளிகள் 21)அகத்தியன் - 31 புள்ளிகள் 22)குமாரசாமி - 31 புள்ளிகள் 23)புத்தன் - 30 புள்ளிகள் 24) சுவி - 29 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 77)

கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!

2 days 1 hour ago
கங்குவா : விமர்சனம் Nov 14, 2024 15:07PM IST ஷேர் செய்ய : இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் ரிலீஸாகும் சூர்யா படம், ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் சூர்யா செய்த பான் இந்தியா புரொமோஷன்ஸ், ரிலீஸ் தேதி மாற்றத்தால் ரசிகர்களிடத்து ஏற்பட்ட அதிருப்தி, நீதிமன்ற வழக்கு முதல் தொடர்ந்த பல்வேறு தடங்கல்கள் ஆகியவைகளைக் கடந்து தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்திற்கான ஏகப்பட்ட ஹைப், அதீத நம்பிக்கையுடன் படக்குழு இருப்பது போலான ஒரு தோற்றத்தையே அனைவருக்கும் அளித்தது. குறிப்பாக, படத்தின் ஆடியோ லாஞ்சிலேயே 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் வெற்றி விழாக்கான பாஸை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்தது கொஞ்சம் அதீதமாகவே தெரிந்தது. ஆக, இவ்வளவு ஹைப்களைக் கொடுத்த ’கங்குவா’ திரைப்படம் நமது பார்வையில்! ஒன்லைன்: 2024யில் தொடங்குகிறது திரைப்படம். சூர்யா ஒரு பவுண்டி ஹண்டர். அதாவது, காவல்துறைக்கு உதவும் ஒரு ’ஷாடோ காப்’ எனச் சொல்லலாம். அவர் இறங்கும் ஒரு மிஷனில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அந்த சிறுவனைப் பார்க்கும் போது அவருக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வுக்குக் காரணம் என்ன? இங்கு நடக்கும் இந்த கதைக்கும் 1070ஆம் ஆண்டில் நடந்த ஒரு கதைக்கும் என்ன சம்பந்தம்? போன்ற விஷயங்களைக் கூறுவதே ‘கங்குவா’. அனுபவப் பகிர்தல்: தமிழ் சினிமாவில் இத்தகைய மேக்கிங் உள்ள திரைப்படங்களை சமீப காலங்களில் நிறையவே பார்க்க முடிகிறது. ஆனால், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஃப்ரேம்ஸ் நம் கண்களுக்கு நல்ல விருந்து. கதைக்களத்திற்குள் நம்மை ஓரளவு ஒட்டவைப்பதும் அதுவே. இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு 3டி படம். ஒரு 3டி திரைப்படத்திற்கான தேவை அந்தப் படத்தின் கதையில் இருக்க வேண்டும். அதை விட்டு பொருட்காட்சியில் காண்பிக்கும் 3டி படம் போல் அந்த தொழில்நுட்பத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட கண்ணுக்குள் பாம்பு வருவது, ஜெம்ஸ் மிட்டாய் பறப்பது போன்ற காட்சிகள் சலிப்பே. ஆனால், இந்த அனுபவத்தை தொழில்நுட்பக்குழு நேர்த்தியாகக் கடத்தவே முயற்சி செய்துள்ளதால் அது நமக்கு ஓரளவு நல்ல அனுபவமாகவே இருந்தது. குறிப்பாக சில காட்சிகளில் ஃப்ரேமின் ஒவ்வொரு லேயரையும் நம் கண்கள் முன்னே காண முடிந்தது நன்று. சூர்யாவின் இத்தனை கால உழைப்பை ஸ்கிரீனில் பார்க்க முடிந்தது. ஒரு பெரிய ஸ்டார் நடிகர் ஒரு படத்திற்காக இத்தகைய உழைப்பை போடுவது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம். கூடவே கொஞ்சம் ஸ்கிரிப்டடை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். படம் முழுக்க ஏகப்பட்ட சப்தங்களும், ரத்தங்களும் இந்தப் படமெங்கும் இருந்தது. அதில் சப்தங்கள் வெறும் இரைச்சல்களாகவும், இரத்தங்கள் அனைத்தும் சினிமா இரத்தங்கள் என்றே கடந்து போகும் படி அமைந்தது. பார்ப்போருக்கு எந்த ஒரு பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை. கிளைமாக்ஸில் வரும் ஃபிளாஸ்பேக் மற்றும் நிகழ்காலத்திற்கான நான் லீனியர் கனெக்‌ஷன் காட்சிகள் அற்புதமான யுக்தி. ஆனால், அதில் நிகழும் சில அபத்தமான சண்டை காட்சிகள் அதோடு நம்மை ஒட்டவிடாமல் செய்கிறது. படத்தின் முதல் பாதியில் வரும் சில காமெடி காட்சிகள் ஒரே வார்த்தையில் ‘கிரிஞ்ச் மேக்ஸ்’ ! விரிவான விமர்சனம்: ஒரு அரசனின் அறம், அவன் சத்தியத்தின் வலிமை, போர், வன்முறை, போன்ற விஷயங்களைத் தொட்டு நகரும் இந்தத் திரைப்படத்தில் முன் ஜென்மம், சூப்பர் பவர் போன்ற ஃபேண்டசி படத்திற்கான கூறுகளும் உள்ளன. இதில், மேல் சொன்ன எதையும் பார்வையாளர்களுக்கு அழுத்தமாக கடத்தாத இந்த ’கங்குவா’, பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு சராசரி கமர்சியல் திரைப்படமாகவே உள்ளது. படத்தின் பெரிய பலங்கள் சூர்யா, தொழில்நுட்பக் குழு. இந்தப் படத்திற்காக மேக்கப், உடல் தோற்றம், உடல் மொழி என அனைத்திலும் தன் உழைப்பை அர்ப்பணித்துள்ளார் சூர்யா. ஆனால், அவரது கதாபாத்திரத்தை இன்னும் தெளிவாக வடிவமைக்காததால் அது ஒரு சாதாரண கமர்சியல் ஹீரோவாக மட்டுமே சுருங்கி விடுகிறது. யார் இந்த ’கங்குவா’? அவன் ஏன் இத்தகைய சத்தியத்தை காக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளும், காரணங்களும் வைத்திருக்கலாம். அது இல்லாததால் அந்தக் கதாபாத்திரத்தோடு நம்மால் சரியாக ஒட்டமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்களும் நாம் ஏற்கனவே கண்ட பல பீரியட் பட கதாபாத்திரங்களையே நியாபகப்படுத்துகிறது. அவர் ஏன் இவ்வளவு பலசாலியாக இருக்கிறார் என்றால் அவர் தான் இந்தப் படத்தின் ஹீரோ என்கிற அளவில் தான் அந்தக் கதாபாத்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் இந்தப் படத்தை தாங்கிப் பிடிப்பதில் சூர்யாவின் நடிப்பிற்கு முக்கிய பங்குண்டு. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை முதலில் குறிப்பிட வேண்டியது ஒளிப்பதிவாளர் வெற்றியின் காட்சியமைப்புகள். அத்தனையும் அற்புதம். குறிப்பாக, இயற்கையான ஒளிகளை வைத்து அவர் காட்சியமைத்திருந்த பீரியட் காட்சிகள் அற்புதம். படத்தொகுப்பாளர் நிசாத் யூசப் கிளைமாக்ஸ் காட்சிகளில் செய்திருக்கும் நான் லீனியர் கட்ஸ் அற்புதம். ஆனால், படத்தின் முதல் பாதியில் வரும் அந்த காமெடி கிரிஞ்ச் காட்சிகளை நிச்சயம் பாரபட்சமின்றி வெட்டியிருக்கலாம். மறைந்த கலை இயக்குநர் மிலனின் சிறப்பான செட் வடிவமைப்புகள் மிகுந்த பாராட்டுகளுக்கு உரியவை. குறிப்பாக ஒவ்வொரு குடிகளுக்கான ஊர், வீடுகள், இடங்கள் எப்படி இருக்கும், அந்த காலத்து ஆடை வடிவமைப்புகள் எப்படி இருக்கும் போன்றவற்றை சரியாக வடிவமைத்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஆங்காங்கே காட்சியை மெருகேத்தியது. ஆனால், சில இடங்களில் இரைச்சலாகவும் தோன்றியது. பாடல்களில் ’தலைவனே’ பாடல் இடம்பெறும் காட்சி நன்றாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு பாடல் அவரின் பழைய தெலுங்கு பாடல்களை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. படத்தின் பெரிய பலவீனம், இயக்குநர் சிவாவின் எழுத்து. குறிப்பாக படத்தின் முதல்பாதியில் இடம்பெறும் தற்காலத்தில் நடக்கும் அந்த 30 நிமிட காட்சிகள் மொத்தமும் அபத்தமே. ஃபிளாஸ்பேக் காட்சிகளில் வரும் பழங்குடி கதாபாத்திரங்கள் சாதாரணமாகவே சப்தமாக பேசும் கதாபாத்திரங்களாக வடிவமைத்தது பெரிய சலிப்பை ஏற்படுத்தியது. திரைக்கதையில் எந்த வித திருப்பங்களோ, ஆழத் தன்மையோ இன்றி நகர்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. காரணம், இதுபோன்ற ஒரு மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு பீரியட் படத்தில் நேர்த்தியான எழுத்து இருக்க வேண்டாவா…? கற்பனை மிகப் பெரியதாக இருக்கலாம். ஆனால், அந்த கற்பனை மட்டுமே சுவாரஸ்யமான கதையாகி விடாது தானே? இதுவே ’கங்குவா’ சறுக்கும் முக்கிய இடம். விமர்சிக்க வேண்டிய இடமும் கூட. ‘கங்குவா’ கதாபாத்திரத்தின் அறிமுக காட்சி, பழங்குடி பெண்கள் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி, கிளைமாக்ஸில் நடந்தேறும் ஒரு நான்லீனியர் சண்டை காட்சி ஆகிய காட்சிகள் மட்டுமே நமக்கு சுவாரஸ்யமாக இருந்தது. கதாபாத்திர வடிவமைப்பில், திரைக்கதை நேர்த்தியில் கவனம் செலுத்தாததால் இது வழக்கமான கமர்சியல் படமாக மட்டுமே நிற்கிறது. அடுத்தது, இரண்டாம் பாகத்திற்கான லீடை இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் வைத்து முடித்துள்ள யுக்தி. இது வெற்றிகரமான ஃபார்முலா என சமீக கால படங்கள் பெரும்பாதியில் பயனபடுத்துகின்றனர். ஆனால், அதற்கான தேவையைப் பொறுத்தே அது சுவாரஸ்யமாக அமையும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு ‘கங்குவா’. மேலும், வில்லன் கதாபாத்திரமான பாபி டியோலே சரியாக வடிவமைக்கப்படாததால் அவரது மகன் என கிளைமாக்ஸில் அறிமுகமாகும் அந்த ’தம்பி’ நடிகரின் கதாபாத்திரம் மட்டும் எப்படி பார்ப்போருக்கு அழுத்தம் தரும்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் பழங்குடி அரசன் என்றால் அவனது வசனங்கள் எவ்வளவு நேர்த்தியாகவும், அழுத்தமாகவும், இடம்பெற்றிருக்க வேண்டும்? இதில் எல்லாம் சரியாக கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் இந்த ‘கங்குவா’ தமிழில் எடுக்கப்பட்ட மற்றும் ஒரு அடுத்தகட்ட முயற்சி, மற்றும் ஒரு அழுத்தமில்லா முயற்சி! https://minnambalam.com/cinema/kanguva-movie-review/

ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.

2 days 1 hour ago
கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன - விமல்வீரவன்ச கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத மத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை மாத்திரமல்ல பிரிவினைவாதத்திற்கும் எதிரானவை என அவர் தெரிவித்துள்ளார். பிரிவினைவாத ஆதரவு தமிழ்தேசியகூட்டமைப்பு போன்றவற்றை தெரிவுசெய்வதற்கு பதில் தமிழ் மக்கள் ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்துள்ளனர் இதன் மூலம் பிரிவினைவாதம் இனவாதத்தை நிராகரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே கனடா தமிழ் அமைப்புகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்படுவதற்கு பதில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களின் அபிலாசைகளை சமமாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் ஆணை என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளாhர். https://www.virakesari.lk/article/199128

கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!

2 days 1 hour ago
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு! இரா.சரவணன் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக வலைத்தளங்களில் வன்மத்தை கக்கும் விமர்சனங்கள் வெளிப்பட்டன. அவை கங்குவா என்ற படத்தைக் கடந்து நடிகர் சூர்யா குடும்பத்தை தாக்கும் விமர்சனமாகவும் தூக்கலாக வெளிப்பட்டது. இந்தச் சூழலுக்கு இயக்குனர் இரா.சரவணன் மிக சிறப்பாக எதிர் வினையாற்றி இருக்கிறார்; இவர் மிகச் சமீபத்தில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனர். இந்தப் படம் உள்ளாட்சிகளில் பட்டியலினத் தலைவர்கள் தற்காலத்தில் சந்திக்க நேரும் அவமானங்கள் குறித்து மிகுந்த சமூக அக்கறையுடன் கவனப்படுத்தி இருந்தது. இவரது முந்திய படங்களான கத்துக்குட்டி, உடன்பிறப்பே போன்றவையும் சரவணனின் சமூக அக்கறைக்கு சாட்சி சொல்லும் படங்களே; கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும், உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி இருக்கக் கூடும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக் கொந்தளிக்கும் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, சுரண்டல்களை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கடக்கிறோம். ஆட்சியில், நிர்வாகத்தில், அரசியல் நிலைப்பாடுகளில் நாம் க்யூவில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறு செய்கிற போது இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறோமா? சினிமாவுக்கு எதிராக இவ்வளவு சீறுகிற நாம், நம் பகுதியின் கவுன்சிலரிடம் என்றைக்காவது முறையிட்டிருப்போமா? வீட்டைச் சுற்றி தண்ணீர் நின்றாலும், கொசுக்கடி கொன்றாலும், பாதிச்சாமத்தில் கரண்ட் கட்டானாலும், சாலை நடுவே பள்ளம் உண்டாகி உருண்டாலும், நியாயமான விஷயங்களுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நெருக்கடி வந்தாலும், கண் முன்னே அநீதி நடந்தாலும் அதிகபட்சம் உள்ளுக்குள் குமுறிக் கொண்டே கடக்கிறோம். பிள்ளைகளின் கல்விச் செலவுக்குக் கொஞ்சமும் நியாயமின்றி வசூலிக்கப்படும் கட்டணத்தை கடன் வாங்கியாவது கட்டுகிறோம். உயிர்க் காக்கும் மருத்துவத்தில் நடக்கிற கொடுவினைகளைக்கூடச் சகித்துக் கொள்கிறோம். இந்த ஆவேசமும் கொந்தளிப்பும் அங்கெல்லாம் எப்படி அமைதியாகிறது? ஒரு படம் நம்மை ஏமாற்றுகிற போது பாய்கிற நாம், ஒரு நிஜம் நம்மை ஏமாற்றுகிற போது சகிக்கவும், தாங்கவும் எப்படிப் பழகிக் கொள்கிறோம்? ஒரு பெரியவர் ‘கங்குவா’ படத்திற்கு எதிராகக் கொந்தளித்ததைக் காட்டாத சமூக வலைத்தளங்கள் இல்லை. ஆனால் இன்றைக்கும் சுற்றுச் சூழலுக்காக, சமூக நீதிக்காக, ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனிதர்களை எத்தனை ஊடகங்கள் காட்டுகின்றன? ஒரு படத்தின் நல்லது கெட்டதுகளை போஸ்ட் மார்ட்டம் செய்து கிழித்துத் தொங்கவிட இவ்வளவு புரட்சியாளர்கள் இருக்கிற தமிழ்நாட்டில் நமக்காகக் கொண்டு வரப்படுகிற திட்டங்களை, செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க, விவாதிக்க எத்தனை நாதிகள் இருக்கின்றன? “சூர்யா ஏமாத்திட்டார்…” என ஆதங்கப்பட்ட / ஆத்திரத்தில் இன்னும் சில வார்த்தைகளைக் கொட்டிய என் நண்பர் ஒருவர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் 15 லட்சத்தைப் பறிகொடுத்தவர். எல்லோரும் இணைந்து கொடுத்த புகாரில் கையெழுத்துப் போட்டதைத் தவிர, அந்த நண்பர் காட்டிய எதிர்ப்பும், போராட்டமும் எதுவுமில்லை. நண்பரின் விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், நாமும் இப்படித்தான்…எத்தனையோ அநீதிகளை நெருக்கடிகளை மென்று செரிக்கிறோம். ஆனால், ஒரு சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுகிறோம். “படத்தில் ஏன் இவ்வளவு வன்முறைக் காட்சிகள்” என ஆவேசப்படுகிற நாம், நம் கண் முன்னே நடக்கிற கத்திக் குத்துகளைக் கண்டுகொள்ள மாட்டோம். “படத்தில் ஏன் இவ்வளவு மது போதைக் காட்சிகள்?” என ஆவேசப்படுவோம். வரிசைகட்டி மீன் கடைகள் போல் திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளைப் பார்த்துக்கொண்டே கடப்போம். படத்தில் எதுவும் தவறான காட்சிகள் வந்துவிடக் கூடாது. நிஜத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இது என்ன மனநிலை? நியாயமும் அறச் சீற்றமும் கேள்வி கேட்கும் திராணியும் கொண்ட ஒருவன், தனக்கு எதிராக நடக்கும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் கொந்தளிப்பான். ஓர் அநீதிக்கு அமைதியாகவும், இன்னோர் அநீதிக்கு புரட்சியாகவும் இருக்க மாட்டான். மூன்றே விஷயங்கள்… # சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை. # இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம். 3மணி நேரம் வீணாகி விட்டதாகப் புலம்பும் நாம், நம் எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு 5 வருடங்களை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். # சில சண்டைகளில் என்ன ஏதென்றே தெரியாமல் போவோர் வருவோரும் சேர்ந்து அடிப்பது போல், பெரும்பான்மை கருத்து என்பதாலேயே அதற்கு வலு சேர்க்கும் வேலைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். ஆய்ந்தறியுங்கள். உங்கள் மனம்தான் உயர்ந்த நீதிபதி. பி.கு: நடிகர் சூர்யாவை விமர்சிக்க நமக்கு உரிமை இருக்கிறது. சூர்யாவை விமர்சிக்க அல்ல… இதே போல மற்றொரு சினிமா இயக்குனரும், பத்திரிக்கையாளருமான ரதன் சந்திரசேகர் எழுதிய பதிவு கவனிக்கத்தக்கது. இழிந்த ஓர் அரசியலின் வெறியூட்டல் காரணமாக ஒரு கலைஞன் தாக்கப்படுகிறான் எனில் – அவனுக்காக ஒன்று திரளவேண்டியது நல்லவர்களின் கடமை. அதுவே ஒரு நல்லரசியல் வினையும் ஆகிறது! சில நேரங்களில் – சினிமா பார்ப்பதும் கூட ஒரு சமூகக் கடமை ! https://aramonline.in/19872/kanguva-cinema-saravanan/

புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்!

2 days 2 hours ago
புதிய நாடாளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம்! Veeragathy Thanabalasingham on November 18, 2024 Photo, GETTY IMAGES நாடாளுமன்ற தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரமாண்டமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 1977 ஜூலை பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 144 ஆசனங்களைக் கைப்பற்றி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதற்தடவையாக அதேபோன்ற ஒரு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் இந்தத் தடவை தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி அந்த அத்தகைய ஒரு வெற்றிபை பெற்றபோது பழைய தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால், விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக எந்தவொரு அரசியல் கட்சியுமே இதுவரை பெற்றிராத நிலையில், தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெருப்பான்மைக்கு மேலதிகமான ஆசனங்களுடன் மக்களின் ஆணையைப் பெற்றிருக்கிறது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் 2010ஆம் ஆண்டிலும் கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சியில் 2020ஆம் ஆண்டிலும் அவர்களின் கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனால், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் குறைவான நாடாளுமன்ற ஆசனங்களைத் தேர்தல்களில் பெற்ற அவர்கள் பிறகு கட்சித் தாவல்களை ஊக்குவித்து அந்தப் பெரும்பான்மையை உறுதி செய்து கொண்டார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி தனியாக இந்தத் தடவை தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதித்துக் காட்டியிருக்கிறது. நாடாளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களினால் நிரப்புமாறு தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி திசாநாயக்கவும் அமைச்சர் விஜித ஹேரத்தும் சபையில் எதிர்க்கட்சியே தேவையில்லை என்று கூறினார்கள். ஆனால், அதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பிறகு தேர்தல் பிரசாரங்களின் இறுதிக் கட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) வேறு தலைவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்த கடந்த கால அரசாங்கங்கள் எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டதை சுட்டிக்காட்டி தங்களுக்கு அத்தகைய பெரும்பான்மை தேவையில்லை என்றும் ஒழுங்கான முறையில் அரசாங்கத்தை நடத்துவதற்கு உறுதியான பெரும்பான்மையைத் தந்தால் போதும் என்றும் கூறினார்கள். ஆனால், அவர்களின் வேண்டுகோளை மீறி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பிரமாண்டமான பெரும்பான்மையுடன் ஆணையைக் கொடுத்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்றும் அவர்களினால் பொருளாதார விவகாரங்களை கையாளமுடியாது என்பதால் தங்களது அணிகளைச் சேர்ந்தவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் மக்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், மக்கள் அதை அறவே பொருட்படுத்தாமல் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களினால் நாடாளுமன்றத்தை பெருமளவுக்கு நிரப்பியிருக்கிறார்கள். ஜனாதிபதி திசாநாயக்கவின் ஆட்சித்திறன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் கிளப்பிய சந்தேகங்களை எல்லாம் நிராகரித்த மக்கள் அவர் மீதும் அவரது கட்சி மீதும் வியக்கத்தக்க முறையில் மீண்டும் நம்பிக்கையை வெளிப்டுத்தியிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் இந்தச் சந்தர்ப்பம் தெற்காசியாவில் நேபாளத்துக்கு அடுத்ததாக அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதக்கிளர்ச்சியை முன்னெடுத்த இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று நாடாளுமன்றத்தின் மூலமாக ஆட்சிக்கு வருகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவமுடைய நிகழ்வைக் குறித்து நிற்கிறது. கடந்த நூற்றாண்டில் ஒரு மூன்று தசாப்தகால இடைவெளியில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து தோல்வி கண்ட ஜே.வி.பி. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பது அதன் அரசியலில் முக்கியமான உருநிலை மாற்றமாக அமைகிறது. ஜே.வி.பியின் அரசியலில் மாத்திரமல்ல இலங்கை அரசியல் வரலாற்றிலும் இது ஒரு மைல்கல்லாகும். சுமார் 60 வருடகால வரலாற்றில் ஜே.வி.பி. ஆயுதக்கிளர்ச்சிகளின் விளைவான பயங்கர அனுபவங்களுக்குப் பிறகு ஜனநாயக அரசியல் மூலமாக ஒரு முழுமையான அரசியல் வட்டத்தை சுற்றிவந்து நிறைவு செய்திருக்கிறது. அதனால், அதன் மகத்தான தேர்தல் வெற்றி இலங்கையின் இடதுசாரி அரசியலைப் பொறுத்தவரையிலும் கூட முக்கியமான நிகழ்வாகும். ஜனாதிபதியாக திசாநாயக்க பதவியேற்றதை அடுத்து இலங்கையின் ஆட்சியதிகாரம் பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமிருந்து அந்த வர்க்கத்துக்கு வெளியில் உள்ள சாதாரண குடும்ப பின்னணியைக் கொண்ட ஒருவரின் கைகளுக்கு வந்தது. தேசிய மக்கள் சக்தியின் அதிகப் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட புதிய நாடாளுமன்றம் அந்த அதிகார மாற்றத்தை முழுமை பெறச்செய்வதாக அமைகிறது. புதிய பாராளுமன்றம் இன்னொரு காரணத்துக்காகவும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக அமைகிறது. எந்தவொரு தேசிய கட்சியுமே இதுகாலவரை செய்திராத வகையில் இந்தத் தடவை நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தென்னிலங்கையில் மாத்திரமன்றி நாடு பூராவும் பெருவெற்றி பெற்றிருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் கணிசமான ஆசனங்களை அது கைப்பற்றியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றியை அடுத்து அவரின் கட்சியை நாடாளுமன்ற தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்தது. அந்த மக்கள் தங்களிடம் வாக்கு கேட்க வந்த தமிழ் அரசியல்வாதிகளிடம் நேரடியாகவே தங்களது அந்த விருப்பத்தை வெளிப்படுத்தியும் இருந்தார்கள். ஆனால், தமிழ்ப் பகுதிகளில் ஒரு தேசிய மக்கள் சக்தி அலையே வீசும் என்று எவரும் நினைக்கவில்லை. குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு நாடாளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமாக வடக்கை பிரதிநிதித்துவம் செய்துவந்த பாரம்பரிய தமிழ்க்கட்சிகளைப் பின்னுக்கு தள்ளியிருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பெருமளவில் மக்கள் மத்தியில் பிரபல்யமில்லாதவர்கள் என்றபோதிலும் கூட வியக்கத்தக்க வெற்றியை அவர்களால் சாதிக்கக்கூடியதாக இருந்தது. தமிழ் மக்கள் இந்தளவுக்கு ஆதரவை வழக்கியதற்கு முக்கியமான காரணம் தேசிய மக்கள் சக்தியின் மீதான கவர்ச்சி என்பதை விடவும் தங்களை இதுகாலவரை பிரதிநிதித்துவம் செய்துவந்த தமிழ் அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு என்பதே உண்மையாகும். உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த பதினைந்துக்கும் அதிகமான வருடங்களில் தங்களது தேவைகளையும் அரசியல் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒருமித்த நிலைப்பாட்டுடன் ஐக்கியமாகச் செயற்படத் தவறிய தமிழ் அரசியல்வாதிகள் மீது தமிழ் மக்கள் பெரும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள் காரணமாக தமிழ் அரசியல் சமுதாயம் சிதறுப்பட்டுக் கிடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பெருவாரியான அரசியல் கட்சிகளும் குழுக்களும் இதற்குச் சான்று. தங்கள் மத்தியில் உருப்படியான மாற்று ஒன்று இல்லாத நிலையில் ஜனாதிபதி திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்புவதை தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. தேர்தல் பிரசாரங்களின் இறுதி கட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி மீது கடுமையான தாக்குதல்களை தொடுத்தனர். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் மற்றைய சிங்கள கட்சிகளுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று அவர்கள் தமிழ் மக்களுக்கு கூறினார்கள். தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜனாதிபதி திசாநாயக்க இனப்பிரச்சினை தீர்வு குறித்து எதுவும் பேசவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். ஆனால், மக்கள் இந்த எதிர்ப்பிரசாரங்களை பொருட்படுத்தவில்லை என்பதை அவர்கள் வாக்களித்த முறை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. தேசியக் கட்சி ஒன்றைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் இருந்து முன்னென்றும் இல்லாத வகையில் இந்தத் தடவை நாடாளுமன்றம் செல்லவிருக்கிறார்கள். தமிழ் மக்கள் தங்களுக்கு அளித்த ஆதரவை ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், தங்களது கடந்தகால அரசியல் பாதையை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்காமல் வெறுமனே உணர்ச்சிவசமான தேசியவாத சுலோகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு தமிழ் மக்களை நெடுகவும் ஏமாற்றி நாடாளுமன்றம் சென்று கொண்டிருக்கலாம் என்று நம்பியதன் விளைவை பல தமிழ்க்கட்சிகள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/11863

முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!

2 days 2 hours ago
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்த பிரதமர் மேற்படி மாற்றங்கள் உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு அமைய இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.battinatham.com/2024/11/blog-post_873.html

இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?

2 days 2 hours ago
மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா ரினோசா ஒரு முஸ்லீமாக இருந்தாலும் பெரும்பாலும் நடுலையாக பேசும் ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் சிங்கம்போலவே கர்ச்சிப்பார், ஒருதடவை பரதநாட்டியம் பற்றி ஒரு முஸ்லீம் தலைவர் கொச்சையாக பேசியபோது தமிழர்களுக்கு ஆதரவாய் பேசி அவருக்கெதிராக கொந்தளித்து அவரை கிழித்து தொங்கவிட்டார் ரினோசா. அவர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் இனவாதம் பேசி கொந்தளித்தால் சிங்களவர்கள் தமிழர்களுடன் கைகோர்த்துவிடுவார்கள் என்பதே. ஏனெனில் யாழ்ப்பாண தமிழர்கள்பற்றி கீழே இருக்கும் சிங்கள வீடியோவில் ஆயிரம் சிங்களவர்களுக்குமேல் கருத்திட்டார்கள். தமிழர் தமிழர் அவர்கள் எம் மக்கள் என்று சொல்லி எத்தனை சிங்களவர்கள் அழுகிறார்கள், எமக்கு ஆதரவாக கருத்து போடுகிறார்கள், அதில் ஒரு முஸ்லீம்கூட கருத்திடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஒரு சிங்களவன்கூட தமிழருக்கெதிராய் கருத்திடவில்லை எவரும் கடந்தகால யுத்தங்கள் பற்றி பேசவில்லை, மாறாக கடந்தகால சிங்கள தலைவர்களையே திட்டியுள்ளார்கள். அந்த வீடியோவில் இந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் தொடர்பான சிங்களவர்கள் கருத்து என்பதை பொறுமையாக ஒவ்வொன்றாக மொழி பெயர்த்து பாருங்கள். சிங்களவர் சமூகம் எமக்கு சார்பாய் 100% மாறிவிட்டது என்றோ அல்லது அநுர வந்திட்டார் இனிமே தமிழர்வீட்டு கூரைகளின்மீது பால்மழை பொழிய போகிறது என்றோ நான் ஒருபோதும் சொல்லமாட்டேன், ஆனால் முஸ்லீம்களைவிட தமிழர்கள் எவ்வளவோ நல்லவர்கள் எனும் சூழலை முஸ்லீம்களே சிங்களவர்கள் மனதில் ஏற்படுத்த போகிறார்கள் என்பதே கருத்து. முஸ்லீம்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுத்திருக்கலாம் என்பதில் உடன்பாடு உண்டு, நாமும் தமிழர்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்காமல் விட்டால் விமர்சித்திருப்போம் ஆனால் அநுரவின் இந்த அமைச்சரவை பொது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, தமிழ் அமைச்சர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்கூட 100% சிங்கள பகுதியில் வாழ்ந்தவர்களே, அதிலும் ஒரு பெண் தமிழ் அமைச்சர் சிங்களத்திலேயே சத்திய பிரமாணம் எடுத்தார்.

திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல்; அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என்கிறார் சகாதேவன்

2 days 2 hours ago
திக்கம் வடிசாலை முன்னாள் அமைச்சரால் சூறையாடல்; அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என்கிறார் சகாதேவன் திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் துப்பாக்கி முனையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இங்கு நடைபெற்ற அனைத்து மோசடிகளும் விசாரிக்கப்படும் என பனைஅபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் நகரப்பகுதியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்சபையின் கீழ் உள்ள கற்பகம் பனை உற்பத்திபொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்தை பார்வையிட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றேன்.கடந்தகாலங்களில் பனை வளம் சார்ந்த விடயங்களை பாதுகாப்பதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டு்ள்ளது. பனை உற்பத்திசார் தொழிலாளர்களுக்கு உயர்ந்த வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் சூழ்நிலையில் சபை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றது. திக்கம் வடிசாலை கடந்த பத்துவருடங்களாக முன்னாள் அமைச்சர் ஒருவரால் சூறையாடப்பட்டுள்ளது.அங்கு பணிபுரிந்த முன்னாள் களஞ்சியசாலை காப்பாளர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை எனக்கு வழங்கியுள்ளார். தான் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு தனது வேலையில் இருந்து விலக்கப்பட்டதாகவும்,இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்றும். தான் உயிரைமாய்க்கும் நிலைக்கு சென்றதாக அவர் தெரிவித்திருந்தார். அவரது அதிகாரப்பிடியில் பனை அபிவிருத்திசபை மட்டுமல்ல வடக்குமாகாணமும் சிக்கிசீரழிந்துகொண்டிருந்த நிலையில் இந்த நியமனத்தின் மூலம்தமக்கு நடந்த அநியாயங்களை வெளிக்கொண்டுவர பலர் துணிந்திருக்கிறார்கள். இலங்கையின் மிகப்பெரிய மது உற்பத்தி நிறுவனத்திடம் அந்த தொழிற்சாலை கையளிக்கப்பட்டுள்ளது. பனஞ்சாராய உற்பத்தி ஒன்றும்அங்கு நடந்தது. ஆனால் இதுபற்றிய எந்த தகவலும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. நான் சபையை பொறுப்பெடுத்த பின்னரே அந்த ஒப்பந்தத்தின் பிரதி பனை அபிவிருத்திசபைக்கே கிடைத்தது. முதல்தகவல் அறிக்கையின் பிரகாரம் கிட்டத்தட்ட 100மில்லியன் ரூபாய் நேரடியான பணப்பரிமாற்றம் அந்த இடத்தை கைப்பற்றுவதற்காக நடந்திருப்பதாக அறியமுடிகின்றது. அதனைவிட 2014ஆம் ஆண்டு சபையின் அன்றைய முன்னாள் தலைவரின் அறிக்கையின்படி 69 மில்லியன் பெறுமதியான மதுசாரம் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்டாதக கூறியிருக்கிறார். அங்கு நடைபெற்ற கொள்ளைகள் முறைகேடுகள் மிக அதிகமானவை. இப்போது ஒவ்வொன்றாக வெளிவருகின்றது. சாட்சியங்களை சேகரித்துவருகின்றோம்.இந்த விசாரணைகளில் யாரும் தப்ப முடியாது. இந்த தொழிலை மீள கட்டுவது சவாலான ஒரு விடயமாக மாறியிருக்கிறது. வடிசாலைகள் தென் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு குருநாகல் புத்தளம் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் தென்னங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.நெடுந்தீவுக்கும் தென்னங்கள்ளை விற்பனை செய்யும் நிலமை ஏற்ப்பட்டிருக்கிறது. பனைவளம் இருந்தும் அரசியல் வாதிகளின் ஊழல் நிறைந்த செயற்ப்பாட்டால் இந்த தொழில் அழிந்துபோயுள்ளது. நெடுந்தீவில் பிரதேசசெயலாளர் ஒருவரால் சட்டவிரோதமாக கள் உற்பத்தி நிலையம் நடாத்தப்பட்டு தென் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல முறைப்பாடுகள் கிடைக்கிறது. பனைவளத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். பொதுமக்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன் 11 மாவடங்களில் பனைவளம் உள்ளது. எனவே முழுமையான கணக்கெடுப்பொன்றை செய்ய இருக்கிறோம். அதன் பின்னரே அவற்றை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதா என்ற விடயத்தை ஆராயவுள்ளோம். பனை மீள் நடுகையின் போது நடந்த மோசடிகளால் நிதி அமைச்சுஅதனை இடைநிறுத்தியிருக்கிறது. பனை அபிவிருத்திச்சபை தமதுசட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்ப்படாத காரணத்தால் அரசாங்கம் அந்த செயற்ப்பாட்டை இடைநிறுத்தியிருந்தது. அதனை மீள செயற்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பனஞ்சாராயத்தினை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகமான வருமானத்தை பெறமுடியும். அதற்கான அனுமதியை எமது சபையே வழங்கும் தனியாக எவரும் செய்யமுடியாது. ஒருசில ஊழல்வாதிகள் மற்றும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் லஞ்ச மோசடியில் ஈடுபட்டு புதியவர்கள் இந்த தொழிலுக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.அவ்வாறான ஒரு விடயத்திற்காக 15 மில்லியன் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான கூட்டம் விரைவில் நடக்க உள்ளது- என்றார். https://thinakkural.lk/article/312326

கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.

2 days 2 hours ago
உண்மையில் மிக மகிழ்ச்சியான செய்தி. 👍🏽 நான் சொல்லித்தான் இராணுவம் வெளியேறியது என்று, பைத்தியக்கார… தமிழ் அரசியல் வியாதிகள் உரிமை கோராமல் இருக்க வேண்டும். 😂 🤣

கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.

2 days 2 hours ago
கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ்வுத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/கற்கோவளம்_இராணுவ_முகாமிலிருந்து_இராணுவத்தினரை_வெளியேறுமாறு_உத்தரவு!

ஐ.தே.க.விற்கு அடுத்த 6 வருடத்திற்கு ரணிலே தலைவர்

2 days 2 hours ago
தமிழரசு கட்சிக்கு சுமந்திரன் மாதிரி, அவங்க கட்சிக்கு… ரணில். இரண்டையும்…. குழி தோண்டி புதைக்காமல் போக மாட்டார்கள் போலுள்ளது. 🤣

ஐ.தே.க.விற்கு அடுத்த 6 வருடத்திற்கு ரணிலே தலைவர்

2 days 2 hours ago
ஐ.தே.க.விற்கு அடுத்த 6 வருடத்திற்கு ரணிலே தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வரும் நிலையிலும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தக்க வைப்பதற்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் மூன்று தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை இவர் தன்னகத்தே கொண்டுள்ளமை முக்கிய விடயமாகும். ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளில் படுதோல்வி அடைந்தது. 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் வெற்றி பெற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்கூட்டியே அறிவித்தார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க பொதுத் தேர்தலில் போட்டியிடாமலேயே தேசியப் பட்டியலில் நுழைந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார போட்டியிடவில்லை என்பது மட்டுமன்றி கட்சியின் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் பங்குபற்றாமல் தேர்தல் தொடங்கியவுடன் வெளிநாடு செல்ல நடவடிக்கை எடுத்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன கம்பஹாவில் போட்டியிட்ட போதிலும், கடந்த முறை போன்று கடும் தோல்வியை சந்தித்தார். மாத்தறையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐ.தே.க தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க இந்த ஆண்டு கொழும்பில் இருந்து தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அவரும் கடுமையான தோல்வியை சந்திக்க நேரிட்டது. இது தவிர, முன்னாள் ஜனாதிபதியுடன் ஒரே அமைச்சரவையில் அமர்ந்திருந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை இந்தத் தேர்தலில் வீட்டுக்குச் செல்வதற்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வளவு கடுமையான தோல்வியைச் சந்தித்து ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைந்த நிலையிலும் கட்சியின் தலைமைப் பதவியை இன்னும் 6 வருடங்களுக்கு வைத்திருக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=299743

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024

2 days 2 hours ago
சுமந்திரனுக்கு… 2015’ம் ஆண்டிலிருந்து, 2024’ம் ஆண்டுவரை, ஓவ்வொரு தேர்தலிலும் 50 % மான வாக்குகள் குறைந்தே வந்துள்ளது. 😁 வருகின்ற தேர்தலில்… சுமந்திரன் போட்டியிடும் ஐடியா இருந்தால், இப்பவே மூட்டை கட்டி வைப்பது நல்லது. 😂 இல்லாட்டி…. 7,500 வாக்கு எடுத்து, கட்டுக் காசும் இழக்க வேண்டி வரும். 🤣 அதை விட சிங்கள பியதாச, யாழ்பாணத்தில் கூட வாக்கு எடுத்து விடுவார். 😁 😂 🤣

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இல்லை!

2 days 2 hours ago
புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இல்லை! adminNovember 19, 2024 முந்தைய விதிகளின் நடைமுறையிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சர்கள் என்ற கருத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 துணை அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவர் என அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் என டெய்லி மிரருக்கு தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். சில அமைச்சரவை பதவிகளுக்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்களா அல்லது அனைவருக்கும் நியமிக்கப்படுவார்களா என கேட்டபோது, அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்படுவார்கள், மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள், ஆனால் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், நிதிச் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவைத் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இன்று தானும் தனது அலுவலகத்தில் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக கலாநிதி ஜயதிஸ்ஸ தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/208368/

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024

2 days 2 hours ago
டக்‌ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்! யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣 வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு… 2020- தேர்தல் அங்கஜன்(SLFP)- 49,373 டக்ளஸ்(EPDP)- 45,797 மொத்தம்=95,170 2024- தேர்தல் அங்கஜன் கட்சி- 12,427 டக்ளஸ் கட்சி- 17,730 மொத்தம்=30,157 அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) - 95,170-30,157 மொத்தம் =65,013 2024-JVP 80,830 -65013 =15,817 15817-853(JVP-2020) = 14,964 இந்த 14,964 வாக்குகளும் ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது. ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை. மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன. (2020)132,329- 127,354(2024)= 4,975 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில் சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன், அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 2015-58,043 2020-27,834 2024-15,039 தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும். இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம் இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க.. என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள். (கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)

இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?

2 days 3 hours ago
இந்த முபறாக் முத்தி…. தமிழரை சாட்டி, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார். 😂 இவ்வளவு காலமும்… மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில் என்று ஜானாதிபதி பதவியில் இருப்பவர்களுக்கு குழை அடித்து காரியம் பார்த்துக் கொண்டு இருந்த ஆள்… எந்த வெட்கமும் இல்லாமல், தொப்பியை பிரட்டி… அனுர புகழ் பாட வந்து விட்டார். 🤣

இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?

2 days 3 hours ago
NPP யின் இடதுசாரிக் கொள்கை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் ? “நாங்கள் கலக்கலாம் ஆனால் அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது எமது நாட்டில் பல்கலைக்கழக மானவர்களாக இருக்கும்போது JVP யின் கொள்கையில் கவரப்பட்டு இடதுசாரியாகவும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்பு வலதுசாரியாகவும் மாறிவிடுகின்றனர். இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் JVP யின் ஆதிக்கத்துக்கு வந்தபின்பு அம்மாணவர்கள் தொடர்ந்து அதே கொள்கையில் இருந்திருந்தால், எப்பவோ இந்த நாட்டை JVP ஆட்சி அமைத்திருக்கும். வலதுசாரிக் கொள்கையில் இருப்பது இலகு. கட்டுப்பாடுடன்கூடிய இடதுசாரிக் கொள்கையில் தொடர்ந்து பயணிப்பது கடினம். JVP யின் ஆரம்பகால முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் பின்னாட்களில் JVP யின் கொள்கையை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ வாதிகளாக மாறினர். அந்தவகையில் JVP தலைவரே இனவாதியாக மாறிய வரலாறுகள் இன்றுள்ள முஸ்லிம் புதிய போராளிகளுக்கு தெரியாது. அதாவது நீண்டகாலங்கள் JVP யின் தலைவராக பதவி வகித்த சோமவன்ச அமரசிங்க மற்றும் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் JVP வளர்ச்சிக்காக இன்று உள்ளவர்களைவிட அரும்பாடுபட்டவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் பின்னாட்களில் கொள்கையினை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாது இனவாதியாக முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். விடையம் அவ்வாறிருக்கும்போது, தேசிய அரசியலை கூர்ந்து கவனிக்காமல், ஊழலை ஒழித்தல் என்ற பிரச்சாரத்துக்கு மயங்கி எங்களது தனித்துவ அடையாளத்தினை இழந்துவிட முடியாது. சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாங்கள் தனித்துவ சக்தியாக NPP க்குள் கலக்கலாமே தவிர, எங்களது தனித்துவத்தினை இழந்து அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது. ஏனெனில் அனைவரும் மனிதர்கள். அவர்கள் எந்நேரமும் கொள்கை மாறலாம் அல்லது மரணிக்கலாம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2024/11/npp_14.html

இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?

2 days 3 hours ago
முஸ்லிம் ஒருவ‌ருக்கு அமைச்சு ப‌த‌வி கொடுப்ப‌த‌ன் மூல‌ம் அர‌சு ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை த‌விர்க்க‌ முடியும்.- முபாற‌க் முப்தி முஸ்லிம் ஒருவ‌ருக்கு அமைச்சு ப‌த‌வி கொடுப்ப‌த‌ன் மூல‌ம் அர‌சு ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை த‌விர்க்க‌ முடியும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வுக்கு க‌டித‌ம் அனுப்பியுள்ள‌து. இது ப‌ற்றி ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்த‌தாவ‌து, ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர‌வை மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌தாக‌ உள்ள‌து. இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் அமைச்ச‌ர்க‌ளாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌மை மூலம் த‌மிழ் ம‌க்க‌ள் கௌர‌விக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனாலும் இன்றைய‌ அமைச்ச‌ர‌வை நிய‌மிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வில் யார் முஸ்லிம் அமைச்ச‌ர் என்ப‌தை முழு முஸ்லிம்க‌ளுட‌ன் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ன‌ர். ஆனாலும் எவ‌ரும் நிய‌மிக்க‌ப்ப‌டாத‌து க‌வ‌லைக்குரிய‌தாகும். இது விட‌ய‌ம் முஸ்லிம் ச‌மூக‌த்தின் க‌டுமையான‌ க‌வ‌லையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ங்க‌ள் சொல்கின்ற‌ன‌. முத‌ல் நிக‌ழ்விலேயே இந்நிய‌ம‌ன‌ம் இட‌ம் பெற்றிருக்க‌ வேண்டும். ஆனாலும் இன்ன‌மும் கால‌தாம‌த‌ம் ஆக‌வில்லை. ஆக‌வே கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ முஸ்லிம் ஒருவ‌ரை அமைச்ச‌ராக‌ நிய‌மிப்ப‌துட‌ன் முஸ்லிம் ச‌ம‌ய‌ விவ‌கார‌த்துக்கென‌ பிர‌தி அமைச்சு ஒன்றை உருவாக்கும்ப‌டியும் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தியை கேட்டுக்கொள்கிற‌து. https://www.importmirror.com/2024/11/blog-post_336.html

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது

2 days 3 hours ago
கபிதனுக்கு…. சுமந்திரன் தோற்ற கவலையும், ஶ்ரீதரன் மேல் உள்ள கடுப்பும்… சம்பந்தம் இல்லாதவற்றை எழுத வைக்குது. 😂 இங்கு ஒரு பாலமோ, அணையோ கட்டினால்… அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எத்தனை வருடங்கள் கடந்தாலும் அந்தப் பாலத்தைக் கட்டிய நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த விதத்தில்…. இதனை கட்ட ஒப்பந்தம் கொடுத்த அமைச்சகமும், பாலத்தை கட்டிய நிறுவனமுமே பதில் சொல்ல வேண்டியவர்கள். அதை விடுத்து…. ஶ்ரீதரன் உள்ளூர் மேசன்மாரை வைத்து சீமெந்து குழைத்து அணையை கட்டினமாதிரி கபிதனின் கதை போகுது. 😂 ஶ்ரீதரனுக்கு சேறு அடிக்கிற வேலையை விட்டுட்டு, அங்காலை சுமந்திரன் சோகத்தில் அழுது கொண்டு இருக்கின்றார் போய் ஒத்தடம் குடுத்து விடுங்கோ. 🤣
Checked
Thu, 11/21/2024 - 07:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed