புதிய பதிவுகள்2

முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது

19 hours 36 minutes ago
ஒம. இதோ மாதிரி நாங்களும் ஜேர்மனியில் செய்தோம் பலன் பூச்சியம். .....நான் அளுத்தம். அதாவது இலங்கை அரசாங்கம் செயல்பட வைக்கும் அளுத்தம் இதை இலங்கையிலுள்ள தமிழர்கள் சரி புலம்பெயர் தமாழர்கள் சரி செய்ய முடியுமா?? 🙏

கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு!

19 hours 52 minutes ago
கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு! christopherDec 02, 2024 22:50PM திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 7 பேரில் இதுவரை 4 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூவரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. கரைகடந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தீபமலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அதன் அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் உள்ள வீட்டின் மீது நேற்று மாலை சுமார் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு வந்து விழுந்தது. இதில் அந்த வீடும், அந்த வீட்டில் தங்கியிருந்த ராஜேந்திரன், மீனா அவர்களது இரு பிள்ளைகள், உறவினர் பிள்ளைகள் உட்பட மொத்தம் 7 பேரும் சிக்கினர். சம்பவம் அறிந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆனால் தொடர் மழை மற்றும் இருட்டியதால் நேற்று இரவு மீட்பு பணிகள் தடைபட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியது. பாறை விழுந்த இடத்திற்கு நேரில் வந்த அமைச்சர் எ.வ.வேலு மீட்பு பணிகளை துரிதப்படுத்த, தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தினர். குறுகிய சாலை வசதிக்கொண்ட அந்த பகுதியில் ஒரு வழியாக ராட்சத இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்தது. இந்த நிலையில் மண்ணுள் புதைந்து சிதைந்த நிலையில் ஒரு சிறுவனின் உடல் முதலில் மீட்கப்பட்டது. இதனைக் கண்ட மீட்பு படையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். அதனையடுத்து ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பாறை விழுந்து கடந்த 24 மணி நேரமாக மண்ணில் புதையுண்ட 4 பேரின் உடல்களின் பாகங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனைக்கண்ட அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதக் காட்சி காண்போரை கலங்க செய்தது. மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேரின் உடல்களை கொட்டும் மழைக்கிடையே தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. https://minnambalam.com/tamil-nadu/eye-catching-landslide-in-tiruvannamalai-7-people-including-children-killed-bodies-of-4-recovered/

முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது

20 hours 3 minutes ago
நான் என் கொள்கையை தமிழினத்தின் கொள்கையை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை.நிகாரிக்கவுமில்லை. சிறிய இடைவெளி பற்றி மட்டுமே எழுதினேன்.இலங்கையிலும் இந்த கோணத்தில் தான் தமிழ்மக்கள் இருக்கின்றனர் என நான் நினைக்கின்றேன். ஆனால் நீங்கள் கோவணத்தில் வந்து நிற்கின்றீர்கள்.

மகன் ஹண்டர் பைடனுக்கு அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு!

20 hours 11 minutes ago
உலகத்துக்கு ஜனநாயக பாடம் எடுத்துக்கொண்டு தாங்கள் செய்வதெல்லாம் சுத்துமாத்து அரசியல். பைடன் உக்ரேனில் உள்ள தனது/மகன் சம்பந்தமான ஊழல்களை மறைக்க போர் மூட்டங்களை தொடக்கியதாகவும் ஒரு கதை உண்டு. எது எப்படியிருந்தாலும் இந்த செயல் அமெரிக்க சமுதாயத்திற்கு ஒரு அவமானம். இதே செயலை ரஷ்ய அதிபர் செய்திருந்தால் மேற்கத்திய ஊடகங்களும் அது சார்ந்த கருத்தாடல் ஜாம்பவான்களும் புட்டினை இல்லை உண்டு என ஆக்கியிருப்பார்கள். 😋

சம்பந்தனின் இல்லம் கையளிப்பு

20 hours 20 minutes ago
அதுக்கு பிறகும் அவரின் மகளுக்கு என்ன தேவையிருந்தது அங்கு ? 😃 சுமத்திரன் தருவேன் என்ற பங்கு பத்திரங்கள் போன்றவற்றை தேடுகிறா போல் உள்ளது ?

உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்

20 hours 26 minutes ago
ரைசியவின் லைன் சென்றிக்கு ஆள் எடுப்பதாக சொல்லியே இவர்களுக்கு சொல்லபட்டு அனுப்ப பட்டு உள்ளார்கள் என்கிறார்கள் இம்முறை குளிர் தொடக்கதிலே கில்லி விளையாட பயந்து போய் அலறி இருக்கிறார்கள் .

உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்

20 hours 28 minutes ago
அண்டபுளுகு புளுகுவதில் ரஷ்ய ராணுவமும் இலங்கை ராணுவம்போல்தான், சில மாதங்களின் முன்னர் முகவர்களால் ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு பின்னர் பெலாரசில் கைவிடப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் கையளிக்கப்பட்டஇந்திய இளைஞர்களை 10 வருஷம் ஜெயிலுக்கு போகிறாயா அல்லது ராணுவத்தில் சாரதி போன்ற சாதாரண வேலைகளில் சேர்கிறாயா என்று எழுத்துமூலமான ஒப்பந்ததில் கையெழுத்து வாங்கி ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்ததாக செய்தி ஆதாரத்துடன் வந்தது, அப்போது ரஷ்யா அது அப்பட்டமான பொய் என்று அதை மறுத்தது. பின்னர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பின்னர் அந்த செய்தி காணாமலே போனது . இப்போது அதே பாணியில் முகவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய இலங்கை இளைஞர்கள், உலக வல்லரசு நாடு ஒன்றில் அவர்கள் ராணுவநாட்டின் உடையுடன் அவர்களுக்கு தெரியாமலே இந்த இளைஞர்கள் நடமாடுகிறார்களா? இந்தாபாரு ரஷ்யா தம்பி ஒரு மனிசன் பொய் பேசலாம் இப்படி ஏக்கர் கணக்கில புளுக கூடாது.

மீண்டும் அதிகரிக்கும் பொருட்களின் விலை! மக்கள் கடும் விசனம்

20 hours 44 minutes ago
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பல அரிசி ஆலைகள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் கடந்த அரசாங்கங்களின் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/sri-lanka-weather-change-economy-effects-1733135297

மோடியின் அழைப்பின் பேரில் புடின் இந்தியா விஜயம்

20 hours 46 minutes ago
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என அந்நாட்டின் கிரெம்ளின் மாளிகை(Kremlin - ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ரஷ்ய தூதரகத்தின் தகவலின்படி, புடினின் இந்தியா வருகைக்கான திகதிகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப்படும் என கிரெம்ளின் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற கூட்டங்களை நடத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரெம்ளின் மாளிகை மோடியின் அழைப்பை ரஷ்யா பெற்றுள்ளதாகவும், , நாங்கள் அதை நிச்சயமாக சாதகமாக பரிசீலிப்போம் என கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாடல் கூறியுள்ளார். மேலும், கடந்த ஒக்டோபர் - இல் நடைபெற்ற 16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 23 ஆவது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு இந்தியா வருமாறு புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கமைய இரு தலைவர்களும் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/putin-visits-india-at-modi-s-invitation-1733149422

இலங்கை தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரிடம் எழுப்பப்பட்ட கேள்வி

20 hours 48 minutes ago
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரித்தானிய (UK) வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாக கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானிய அரசாங்கம் இதன்போது, "இன்றை தினம் (27) உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு முக்கியமான நாளாகும்" என்று சுட்டிக்காட்டிய உமா குமரன், 'கடந்த 2023ஆம் ஆண்டு தமிழர்களுக்குத் தோள் கொடுக்குமாறும், மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிக்குமாறும் நீங்கள் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தீர்கள். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சர்வதேச நீதிப்பொறிமுறை தொடர்பான பரிந்துரையைப் பரிசீலிக்குமாறு அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் வலியுறுத்தியிருந்தார். இப்போது நீங்கள் வெளிவிவகார செயலாளர். அவர் பிரதமர். எனவே, நீங்கள் உங்களது முன்னைய கருத்துக்களின்படி செயற்படுவீர்களா? மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைப்பீர்களா?' என டேவிட் லெமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமி, "தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது. அத்தோடு கடந்தகால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட விடயத்தில் முன்னேற்றகரமான சமிக்ஞைகள் தென்படுகின்றன. அதேவேளை, கடந்தகால மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கொள்கைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். மேலும் அத்தகைய மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியமாகும்' என்று தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/british-foreign-secretary-regarding-sri-lanka-1733160919

மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை: கொழும்பு நீதவான் கேள்வி

20 hours 50 minutes ago
மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிடம் இன்றைய தினம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக உடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்தனர். மாவீரர் நிகழ்வு எனினும் இந்த மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு என் கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கெலும் ஹர்ஷன என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நபரை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நீதவான் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார். https://tamilwin.com/article/why-police-not-arressted-maavirar-day-organizers-1733158431

தமிழர் பகுதியை சேர்ந்த 60 வயதுப் பெணுக்கு குற்றத் தடுப்பினரால் விசாரணை!

20 hours 52 minutes ago
திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும், 4ஆம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அழைப்பு இந்நிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே இலங்கை பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. https://tamilwin.com/article/60-year-old-woman-questioned-by-crime-stoppers-1733163593

புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு

20 hours 55 minutes ago
இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு தொடர்ந்தும் காலம் அவகாசம் கோரி வருகிறது. எனினும், இலங்கைக்கு எதிரான பிடியை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவுடன், நீண்டகாலமாக நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்று வரை வலியுறுத்தி வருகின்றன. தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றன. அந்தவகையில் இலங்கையில் வரலாற்று ரீதியான ஆட்சியை கைப்பற்றியுள்ள அநுரகுமார திசாநாயக்க அரசு, சர்வதேச பொறிமுறையின் ஊடாக தமிழர்களுக்கான உள்ளக விசாரனையை ஆரம்பிக்க புதிய நகர்வை கையாள திட்டமிட்டுள்ளதாக அரசியல் தற்போது வட்டாரங்களில் சில கருத்துக்கள் மேலோங்கியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ், சர்வதேச பொறிமுறை என்பது அநுர அரசால் கையாள திட்டமிடப்பட்டுள்ள அதிமுக்கிய செயற்பாடு என சுட்டிக்காட்டினார். மேலும் , இவ்வாறான விடயங்கள், புலம் பெயர் அமைப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார். https://tamilwin.com/article/government-challenges-diaspora-organizations-1733156459

முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது

20 hours 56 minutes ago
நாங்கள் இருக்கும் நாட்டின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முடிந்ததை முழுமனதுடன் செய்தோமே, கந்தையா அண்ணா........ 2009ம் ஆண்டுகளில் எத்தனை நாட்கள் இங்கிருக்கும் அமெரிக்க மத்திய அரச செயலத்தின் முன் நின்றிருக்கின்றோம். அங்கே அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று எங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கவேண்டும். அதற்கு அருகிலேயே எல்லா நாட்டுத் தூதரகங்களும் இருக்கின்றன, இலங்கைத் தூதரகம் உட்பட. இலங்கைத் தூதரகத்திலிருந்து ஆட்கள் வந்து எங்களைப் படமெடுத்துக் கொண்டு போவார்கள். ஒருநாள் இலங்கை தூதரகத்திலிருந்து ஒருவர் எங்களை பேட்டி எடுக்க வந்தார். ஹசீனா, லங்கா கார்டியன் என்று நினைக்கின்றேன். முன்னுக்கு நின்றவர்கள் நழுவிவிட்டார்கள். இவற்றை ஒழுங்கு செய்யாதவர்கள், ஆனால் ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும் என்ற விருப்புடன் அங்கே போயிருந்த இருவருடன் ஹசீனா கதைத்து விபரங்களை தெரிந்துகொண்டார். பின்னர் கோதபாயவின் அரசு வெளியிட்டிருந்த தடைசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் அந்த இருவரின் பெயர்களும் விபரங்களுடன் இருந்தது.......................

முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது

20 hours 59 minutes ago
https://www.virakesari.lk/article/200132 மாவீரர் தினம் தொடர்பான பழைய காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்ட மூவர் கைது Published By: DIGITAL DESK 2 01 DEC, 2024 | 05:31 PM கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல்களின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூன்று பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேக நபர்கள் பேஸ்புக் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக பகிர்ந்துள்ளனர். கடந்த வருடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பல குழந்தைகளை காணவில்லை

21 hours 3 minutes ago
👍உங்கள் சேவைக்கு நன்றிகள் அவர்களின் கோபம் நியாயமானது தானே ...நீங்கள் மட்டும் சிறிலங்கன் மெயின் லான்ட் கொள்ளோ என சொல்லுவியள் .... அவர்களை ஐலண்டர் என சொன்ன?😅
Checked
Tue, 12/03/2024 - 16:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed