எங்கள் மண்

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு

3 weeks 4 days ago

யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன.

நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம்.

சமூக விரோத செயற்பாடு

இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலையத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன.

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு | Jaffna Famous Youtuber Controversy Rajeevan Mp

இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களின் சிறப்பு உரிமை

பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு | Jaffna Famous Youtuber Controversy Rajeevan Mp

இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள்.

இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிஸார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/

தாயுமானவன் எங்கள் தலைவன்.- நிலவன்.

3 weeks 5 days ago

தாயுமானவன் எங்கள் தலைவன்.- நிலவன்.

March 07, 2025

தாயுமானவன் எங்கள் தலைவன்.- நிலவன்.

கலைஞர்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கும் மகத்தானது. தங்களின் கலைப் படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களைஎழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை. தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்ச்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவன் சமூகப் பணியின் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்தவன். எந்த நேரத்திலும் எந்த வகையான பணியினைக் கொண்டிருந்தாலும் தேச விடுதலைக்காய் சலிப்பின்றி நேர்த்தியான முறையில் திறம்படத் தன்னம்பிக்கையோடு செயற்படும் பல்துறை ஆளுமைமிக்க போராளி அறிவுச்சோலை நிலவன்.

அமுதன்:- தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமானது எவ்வாறுதோற்றம் பெற்றது? அதன் அடிப்படைக் கோட்பாடு என்னவாக இருந்தது?. 

நிலவன் :- தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது? விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்? போராட்ட வரலாறு என்ன? எதற்காகப் போராடினார்கள்? தெரிந்து கொள்ள வேண்டும். தமிழினத்தை தலை நிமிர்த்தி  தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாகவும்   உலகிற்கு அடையாளப் படுத்தியவர்கள்  தமிழீழ விடுதலைப் புலிகள். புரட்சிகர ஆயுதப் போராகவும், எழுச்சிமிகு வெகுசனப் போராட்டமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய விடுதலைப் போரை முன்னெடுத்தார்கள். தமிழீழ பூமியில் உக்கிரமாகப் பௌத்த சிங்கள அரசின் கொடுமைகளுக்கும், கொலை வெறிக்கும், தமிழ்  இன அழிப்புக்கும், ஆளாக்கப்பட்ட தமிழினத்தைக் காக்க வேண்டியும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ மரபுவலி இராணுவமாக வளர்ச்சி பெற்று ஒரு நடைமுறை அரசினை அமைத்து ஆட்சி செய்து வந்தார்கள்.

தமிழினம் உருத்தோன்றிய காலம்முதல் வாழ்ந்துவந்த எமது பூர்வீக மண்ணினதும் எமது மக்களினதும் விடுதலைக்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினார்கள் தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்து மாவீர்களா விதையாகிப் போனார்கள். உறுதியும், அடங்காத தாய்மண் பற்றும், தன்னலமற்ற விடுதலைக்கு  உலக அரங்கில் எமது இனத்தைத் தலைநிமிர வைத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற வாக்கியம் தமிழீழ விடுதலைப் புலிகளின்தேசிய எழுச்சிக் கோசத்தின் இலட்சியம் ஆகும்.

தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும், அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்ந்தார்கள். தேச விடுதலை என்பது, ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட விடுதலை. அதை  எந்தச் சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத- யாருக்கும் கீழ்ப்படியாத ஒட்டுமொத்த சுதந்திரம். அதனை அடைவதற்கான போராட்டத்தை விடுதலைப் புலிகள் மட்டுமே இறுதி வரை முன்னெடுத்தனர். தமிழ் இனத்தின் விடிவிற்காகவும், தமிழீழ தாயகத்தின் பூரண சுதந்திரத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட, தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டத்தை நடத்தினார்கள்.

தமிழீழ அரசின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது நாற்பது ஆண்டு காலமான, நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. “தமிழீழம்” எனும் தமிழர் தாயக பூமி முழுமையான விடுதலையைக் காண்கின்ற வேளையில் அங்கே ஆதரவற்றர்கள், இயலாமையில் வாழ்பவர்கள், ஏழைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், கையேந்தி நிற்பவர்கள், என்று யாருமே இருக்கக்கூடாது. போரினால் ஏற்படும் நிரந்தரமான தாக்கங்களுள் மக்கள் நசுங்கிப் போக இடமளிக்கக்கூடாது. மாறாக எல்லா வகையிலும்தலை சிறந்த நாடாக, இந்த உலகிற்கே முன்மாதிரியான ஒரு நாடாகத் தமிழீழம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மிகமிக உறுதியாக இருந்தார்,

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபகரன் அவர்களுன் தலைமையில் நடைபெற்ற தேச விடுதலைக்கான இன விடுதலைப் போராட்டம் ஒரு புனிதமானது, அது அறம் வீரம், தியாகம், விடுதலை உணர்வு ஆகிய உயரிய இலட்சியப் பண்புகளைக் கொண்ட இலட்சியமாக திகழ்வது.  தமிழீழ மக்களின் தேசிய அபிலாசையாக வரலாற்றுரீதியாக எழுந்த தனியரசுக் கோரிக்கைக்கு ஒரு செயற்பாட்டு வடிவம் கொடுத்து, அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் இலட்சிய உறுதியுடனே போராளிகளாய் நாம் போராடியிருந்தோம்.

A4-300x201.jpg

அமுதன் :- தமிழ் மக்களின் போற்றுதற்குரிய “மேதகு  வே. பிரபாகரன்” அவர்களால் “தமிழீழ விடுதலைப் புலிகள் ” என்ற கட்டமைப்பு உருவாக்கம்  எவ்வாறு இருந்தது?

நிலவன் :- 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (Liberation Tigers of Tamil Eelam) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார். அன்றுதொட்டு வளர்ந்து விருட்சமாகி தரை கடல் வான் என விரிந்து பல்வேறு இராணுவ துறை சார் மக்கள் சார் கட்டமைப்புகளாக விரிந்து, தமிழர்களுக்கான தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய சமநேரத்தில், தனிநாடு என்ற கட்டமைப்புக்கான அனைத்து கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.

தமிழர்களின் போரிடும் ஆற்றலை உலகறியச் செய்து, உலகை வியக்க வைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் இயக்கத்தின் போராட்ட சாதனையால் தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டம் அன்று உலகப் பிரசித்தி பெற்ற விடுதலைப் போராகச் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது.

மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டது . எல்லாவித ஒடுக்கு முறையும் சுரண்டலும் ஒழிக்கப் பட்ட மக்களின் உண்மையான சனநாயகமாகத் திகழ்ந்தது. தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது பண்பாடு ,கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும் என்பதை நடை முறையில் நிகழ்த்திக் காட்டினார்.

விடுதலைப் புலிகள் முப்படைகளுடன் கரும்புலிகள் என்ற சிறப்பு இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு

நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கில் தமிழீழக் காவல்துறை, நீதித்துறை  குற்றப் புலனாய்வு பிரிவு என பல பிரிவுகளும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்காக இயங்கியது. பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத் திட்டங்களையும் உருவாக்கினார் எங்கள் தாயுள்ளம் படைத்த தலைவர் அவர்கள்.

தமிழீழம் என்ற எம் தாய் நாட்டிற்கு வந்திருந்த  ஐ.நா.அதிகாரிகள் விடுதலைப் புலிகள்  அமைப்புக்களின் வளர்ச்சி கண்டு வியந்தார்கள். போரின் அனர்த்தங்களுக்கு மத்தியில்   சிறிவர்கள் , முதியவர்கள், மற்றும் மாற்றுத்திறனாலிகளுக்கு இப்படியும் ஒரு அரும்பணியா? என்று அவர்கள் வியப்புடன் வினவியுள்ளனர்.

B3-300x201.jpg

அமுதன் :- “காந்தரூபன் அறிவுச் சோலை” இல்லத்தின் உருவாக்க வரலாறு பற்றிக் குறிப்பிடுக?

நிலவன் :- காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர் இல்லம் பற்றி அதன் உருவாக்கம் பற்றியும், அதற்கு  காரணமானவர் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்!.

சிறுவயதில் இருந்து தாய்தந்தையை, இழந்திருந்த  கடற்கரும்புலி மேஜர்.காந்தரூபன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவரினால் வளர்க்கப் பட்டவர்களில் ஒருவன். தமிழீழக் கனவு மற்றும் கொள்கைகள் பிடித்துப் போகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதை விடுத்து ஆரம்பத்தில் தலைவர் அவர்களினால் படிப்பதற்கு ஊக்கப்படுத்திட காந்த ரூபனோ தான் இந்த நாட்டிற்காக போராடுவதையே உயர்ந்ததாக நினைப்பதாக தலைவரிடம் கூறினான்.

1987 இன் ஆரம்பத்தில். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படை முகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தார். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில் எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டு விடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சக நண்பர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப் பட்டார்.இருந்தபோதும், குப்பி (சயனைட் ) விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென மருத்துவ ஆலோசனை வழங்கப் பட்டிருந்தது.

காந்தரூபனிற்கு இப்போது நிறை உணவு தேவைப்பட்டது. சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கு பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர் வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப்பசு ஒன்றைக் காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது. தலைவரின் துணைவியார் (மதிவதனி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார். அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிற்பார்.

தலைவர் அவர்களுடன் மணலாற்றுக் காட்டில் நின்ற 1988, 1989ம் ஆண்டு காலப் பகுதியில்….  அப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றார். ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தார். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர். ‘”அண்ணை…. என்னைக் கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ’” என்றார்.

தலைவர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனைக்கமைவாக அவரது பாதுகாப்புப் பிரிவிலிருந்து “கடற்புறா”  அணிக்குக் காந்தரூபன் அவர்களை அனுப்பினார். காலங்கள் கடக்க காந்தரூபன் கரும்புலியாக தான் போக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதனை தலைவர் அவர்களிடம் கூறினார் காந்தரூபன். கரும்புலிகள் அணியில் இணைவதை  ஆரம்பத்தில் தலைவர்  அடியோடு அதனை மறுத்து விட்டார். சில ஆண்டுகளில் காந்தரூபன்  தனது திறமையினால் கடற்புலிகள் அணியோடு இணைந்து அதில் தனது தனித்துவமான திறமைகளை வெளிக் காட்டியதுடன் கடற் புலிகளின் சிறப்புத் தளபதியான கேணல்.சூசை அவர்களிடம் தனது கரும்புலி ஆசையைக் கூறி நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் அனுமதி கிடைத்தது.

ஏற்கனவே, பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று சகபோரளிகளுக்குச் சொல்லிக்கொண்டும் அதற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுக் கொண்டு மிருந்தவன்தான் காந்தரூபன் மற்றும் கொலின்ஸும். மணலாற்றுக் காட்டில் தலைவர் அவர்களின் பாதுகாப்பணியில் இருந்து செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் தலைவர் அவர்களிடம் நேரடியாக கேட்டுத் தன்னைக் கரும்புலிகளணியில் இணைத்துக்கொண்டிருந்தான்.இவர்களுடன் வடமராட்சி அணியிலிருந்து ஏற்கனவே கரும் புலிகளிணியில் தன்னை இணைத்திருந்த வினோத்தும் “எடித்தாரா”வைத் தாக்கியழிப்பதற்கான கடும்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

1990ம் ஆண்டு இரண்டாங்கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் இலங்கை இராணுவத்திற் கெதிரான தாக்குதல்கள் வலுப்பெறத் தொடங்கி யிருந்தன.ஒவ்வொரு படையணியினரும் தத்தமக்கு வழங்கப்பட்ட இடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்குக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்த காலம்.

தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் காந்தரூபன்  தலைவரிடம் சொன்னார்.”தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள்… அப்பா அம்மா இல்லாம சொந்தக்காரரின் ஆதரவில்லாமல் அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாமல் படிக்க வசதி இல்லாமல் எவ்வளவோ ஏக்கங்களோடையும் துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை நான் அனுபவித்ததில் கண்டனான் அண்ணை….நீங்கள்  என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேண்டும்” என்றார்.

“அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …”.  தலைவரின் இதயத்தை இந்த வார்த்தைகள் தொட்டன. இந்த தமிழீழ மண்ணில் இனி யாரும் அநாதைகளாக இருக்க கூடாது. அவர்களுக்கு தாங்கள் தாயாகவும், தந்தையாகவும் இருக்க வேண்டும்” இதுவே என இறுதி ஆசை என கூறினார். அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர்.

A1-300x197.jpg

அமுதன் :- காந்தரூபன் அறிவுச் சோலை இல்லத்தின் உருவாக்கமும் அதன் எதிர்கால நோக்கமும் என்ன என்பதைத் தலைவரின் தெளிவுபடுத்தலிலிருந்து பதிவு செய்க?

நிலவன் :- 1993 நவம்பர் 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் ஆற்றிய உரையில் “எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள் .எமது போராளிகள் அனைவருமே இவர்களின் சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணை பிரியாத அங்கமாக இணைந்துள்ளனர்.

தனிக்குடும்பம், அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டு வளரப்போகும் இவர்கள், எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச்சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேருன்றி வளரும்.

இத்தகைய நற்பண்புகளுடன் இவர்கள் கல்வியறிவுபெற்று இந்தத் தேசத்தின் நிர்மானிகளாகவும் உருப்பெற்று எமது மக்களுக்குப் பெரும் பணியாற்றுவார்கள். நாங்கள் ஒரு புறம் மண்மீட்புப் போரை நடத்துகின்றோம். மறுபுறம் குழந்தைகளுக்கான வேலைத்திட்டங்கள் போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றோம்.

 ஆனால் இத்தகைய சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்கவேண்டும்” என்று கூறினார்.பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த கந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பித் தலைவரிடம் கேட்டு கரும்புலியாய்ச் சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ” யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப்புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப்போல , தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்கவேண்டும் ” என்றுகேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின்  ஆசையை நிறை வேற்றும் முகமாக “காந்த ரூபன் அறிவுச்சோலை” எனப்பெயரிடப்பட்டது. என அவர் பேசியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அமுதன் :- தலைவரின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப் பட்ட இல்லங்கள்,கல்விக் கூடங்கள் பற்றிய விளக்கங்களையும் அதன் செயற்பாடுகள் பற்றியும் தருக?

நிலவன் :- தமிழ் இன மீட்புக்கான இன விடுதலைப் போரை நடாத்திக் கொண்டு மறுபுறம் தமிழீழத்தின் எதிர்காலத்தைச் சிறப்பான முறையிற் கட்டியெழுப்பும் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தார் தலைவர் அவர்கள். அந்த வகையில் தமிழீழத்தில் உருவான சேவை வழங்கும் கல்விக் கூடங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் தோற்றம் கண்டது. அவற்றில்  “செஞ்சோலை” “காந்தரூபன் அறிவுச்சோலை,” அன்புச் சோலை, வெற்றிமனை, லெப். கேணல் நவம் “அறிவுக்கூடம்” போன்றவை ஆகும்.

யுத்தத்தினாலும் சந்தர்ப்ப சூழ் நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து தவிக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. ஆதரவற்ற முதியோர்களுக்காக அன்புச்சோலையும், போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வெற்றிமனையும், யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக லெப். கேணல் நவம் அறிவுக்கூடமும் உருவாக்கப்பட்டன.

1991ம் ஆண்டு யூலை மாதம் 10ம் திகதி 15 மாணவிகளுடன் செஞ்சோலை மகளிர் பாடசாலை ஆரம்பமானது. யாழ் கல்வளை சண்டிலிப்பாயில் ஓர் சிறப்பான இல்லம் நிர்மாணிக்கப்பட்டு 1991ம் ஆண்டு ஐப்பசி மாதம் 22ம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 23 மாணவர்களுடன் ஆரம்பமான செஞ்சோலை காலப்போக்கில் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட இல்லமாக விளங்கியது.

போர்ச்சூழலால் செஞ்சோலை இடம்பெயர வேண்டிய நிர்ப்ந்தங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. சண்டிலிப்பாயிலிருந்து நகர்ந்து மானிப்பாய், கோப்பாய், போன்ற இடங்களில் தற்காலிகமாக சிறிது காலம் இயங்கி வந்தது. பின்பு 1993,1994,1995ம் ஆண்டு காலப்பகுதியில் அரியாலையிலும் மட்டுவிலிலும்

செஞ்சோலை தன் செயற்பாடுகளை நிரந்தரமாக்கிக் கொண்டு செயற்பட்டு வந்தது .  அதுவும் நீடிக்கவில்லை.  இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக 1995ம் ஆண்டு பிற்பகுதியில் மீண்டும் செஞ்சோலை கிளிநொச்சியிலுள்ள திருவையாறு என்னுமிடத்திற்கு இடம் பெயர்ந்தது. தொடர்ந்து கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து மல்லாவியில் வடகாடு, முல்லைத்தீவு, வள்ளிபுனம், இரணைப்பாலை மீண்டும் வள்ளிபுனம் கிளிநொச்சி என ஓடி ஓடி ஓய்து போகாமல்  பிள்ளைகளின்  கல்வி மற்றும் வினைத்திறன் செயற்பாடுகள் அங்கும் தொடர்ந்தன.

தலைவரின் நேரடிக் கண்காணிப்பில், பாதுகாப்பில் வளர்க்கப்பட்டனர் குழந்தைகள் செஞ்சோலைப் பிள்ளைகள். பல்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள் அங்கு கைக் -குழந்தைகள் முதல் 18 வயது வரையான பெண் பிள்ளைகள் தங்கள் எதிர்காலம் நோக்கி கல்வி வழங்கப் படுகிறது. இங்கு முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, உயர்பாடசாலை போன்ற கல்வி முறைக்கேற்ப கல்வியறிவூட்டப்பட்டது. கல்வியின் நோக்கம் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதல்ல வாழ்க்கைக்குத் தேவையான பூரண ஆளுமை உள்ளவர்களை உருவாக்குவதே அதன்  நோக்கமாக இருந்தது.

கலைகள், விளையாட்டுக்கள் , கைவினைத்திறன்கள் வெளிக்களச் செயற்பாடுகள் போன்றவற்றுடன் நல்லொழுக்கம், நல்மனப்பாங்கு, நற்பண்புகள், ஆளுமைத்திறன், துணிச்சல் முற்போக்குச் சிந்தனை போன்றவற்றை மேம்படுத்துவதற்கு ஏதுவான சிறப்பான பாடத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டன.

C1-300x225.jpgC2-300x150.webp

அமுதன் :- தலைவர் மேதகு அவர்களின் சீரிய சிந்தனை நோக்கில் பாதுகாப்பு, அரவணைப்பு முறைமைகளோடு நிர்வகிக்கப்பட்ட இல்லங்கள் பற்றிய விரிவான தகவல்கள் பற்றிக் குறிப்பிடுக?

நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகளினால் யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தாய்தந்தையரை இழந்து மற்றும் பிரிந்து  தவிக்கும் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டதே செஞ்சோலைச் சிறுவரில்லம். ஆண் குழந்தைகளைக் காத்து வளர்த்தது காந்தரூபன் அறிவுச்சோலை. செஞ்சோலை’ ‘”காந்தரூபன் அறிவுச்சோலை’” அமைப்புக்களில் எமது எதிர்கால வாரிசுகள் கட்டுக்கோப்பான முறையில் வளர்கப்பட்ட அதே வேளை முல்லைத் தீவில் செந்தளிர் சிறுவர் இல்லம், 2000 ஆம் ஆண்டு ஆராம்பிக் கப்பட்டது. கைக் குழந்தை முதல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காகக் குருகுலம் ஒன்றும், தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தால் நடத்தப் பட்டது. காந்தி நிலையம் என்ற பெயரில் சிறுவர் பராமரிப்பு இல்லம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் நடாத்தப் பட்டது.

மேலும், தாய் மண்ணிற்கான தமது பிள்ளைகளை ஈந்து தனித்து நிற்கும் பெற்றோரை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்  தனது நேரடிக் கண்காணிப்பில்  ஆதரவற்ற முதியோர்களுக்காக, ‘”அன்பு முதியோர் பேணலகம்’” போர் அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக “வெற்றிமனையும்”, யுத்தகளங்களிலும், விமானக்குண்டுத் தாக்குதல்களிலும் அங்கங்களை இழந்தவர்களுக்காக “லெப். கேணல் நவம் அறிவுக்கூடம்” இவர்களுக்கு பொதுக் கல்வி, கணினிப் பயிற்சி, தொழிற் கல்வி அளிக்கப்பட்டு புனர்வாழ்வும் அளிக்கப்பட்ட்டது. அதோடு மனநோயாளி களுக்காக “மயூரி இல்லம்” “சந்தோசம் உளவள மையம்”  என பல அமைப்புக்களையும், பல உள்கட்டு மானங்களையும் உருவாக்கினார்கள்.

கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் ஐந்து இல்லங்கள் உட்பட, தமிழர்கள் வாழும் எட்டு மாவட்டங்களில் கிட்டத்தட்ட நாற்பத் தைந்து சிறுவர் இல்லங்கள் இயங்கின. போரினால் இழப்புகளை ச் சந்திக்காத குடும்பங்களே இல்லை என்ற நிலையில், குடும்பத்தை இழந்த குழந்தைகளின் நிலை மிகவும் வேதனைக் குரியதாகும். உளவியல் சிக்கல்கள் உட்படப் பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்பட்டு, திசை மாறிப் போகும் நிலை அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளின் நிலை இன்னும் அதிக சிக்கலானது. இந்நிலையை மாற்றி, போரினால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற ஆண் பெண் குழந்தைகளைப் பராமரிக்கவும், அவர்களது எதிர்காலத்திற்கு நல்வழி காட்டவும் உருவாக்கப்பட்ட சிறிவர் இல்லங்களாக அன்று இயங்கின.  போரின் அனர்த்தங்களினால் சொந்தங்களை இழந்த சின்னஞ் சிறுசுகளை ஒன்றிணைத்து ஒழுங்கான கல்வி புகட்டும் மாபெரும் கைங்கரியம் ஒன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் 2009கு முன்னர்  வரை  செவ்வனே நடந்து கொண்டிருந்தது.

C6-300x200.jpg

அமுதன் :- ஒரு மக்கள் மயமாக்கப்பட்ட விடுதலை இயக்கமான “தமிழீழ விடுதலைப் புலிகள்”பற்றிய மாறுபட்ட கருத்தைக் கொண்ட சர்வதேசத்திற்கும் அதனைச் சார்ந்தவர்களுக்கும் அந்த அமைப்பு பற்றிய  தீர்க்கமான நிதர்சனம் யாதாக இருக்கும்?

நிலவன் :- விடுதலைப் புலிகளை “பயங்கரவாதிகள்/தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே! உங்கள் சுயமூளையுடன் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.  உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் விடுதலைக்கு போராடும் ஈழத் தமிழர்களாய் வளர்ந்ததும் இல்லை, வாழ்ந்ததும் இல்லை! தமிழர்கள் பயங்கரவாதிகள் / தீவிரவாதிகள் என்றும், ஆயுத விரும்பிகள் என்றும் இலங்கையின் பௌத்த சிங்கள பேரினவாத அரசினால் செய்யப்படும் பிரச்சாரங்கள் உண்மைக்கு மாறானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேறு பல நாடுகளில் நிலை கொண்டிருந்த சர்வதேச பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்று வகைப் படுத்தப்பட்ட அமைப்புக்களுடன் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஒப்பிட்டமை எமது விடுதலைப்போரிற்கு ஒரு இருண்ட காலமே ஆகும். தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை 2009ஆம்ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்ற சிங்களத்தின் எதிர்பார்ப்பு பகற் கனவாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல, ஏற்கனவே இத்தாலியின் நாப் போலி மாநகர நீதிமன்றம், டென்மார்க் உயர்நீதிமன்றம், ஐரோப்பிய நீதிமன்றம், விடுதலைப்புலிகள் இயக்கம்  பயங்கரவாத இயக்கமல்ல என்று தீர்ப்பளித்த நிலையில்  சுவிட்சர்லாந்து நாட்டின் கூட்டாட்சி குற்றவியல் நீதிமன்றமும் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று கூறி நீதிமன்றமானது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 16 ஜூன் 2018இல் வழங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என நெதர்லாந்தின் த ஹேக் மாவட்ட நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப் போராளிகள் என இலங்கை அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக 21ஏப்ரல்2019ஆம் ஆண்டின் ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.

CNN – அமெரிக்கா.- இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.

BFM – பிரான்ஸ்.-விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்க வில்லை.

சிறீலங்கா அரசு- அதே வேளை  கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொச்சிக்கடை, புனித அந்தோனியார் தேவாலயத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கும்  பின் விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப் போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை .

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராகக் காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப் பட்டு ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய விடுதலைப் போராளிகள் விடுதலைப் போராட்டத்தை உலகம் பார்த்து அதிசயிக்க வைத்தவர்கள். தமிழினத்தின் வீரத்தையும், தமிழீழ சுதந்திர தாகத்தையும் உலகறியச் செய்தார்கள்.

மனிதநேயமிக்க மனவலிமை படைத்த மகத்தான தலைவனை கொண்ட தமிழீழத்தில் ‘செஞ்சோலை’, ‘காந்தரூபன் அறிவுச்சோலை’ சிறார்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்பில்  பல அர்த்தங்கள் உண்டு. “செஞ்சோலை” ‘”காந்தரூபன் அறிவுச்சோலை’” சிறார்கள் எந்தளவு எதிர்பார்ப்புடன் வளர்க்கப்பட்டார்கள் என்பதை தமிழீழத் தேசியத் தலைவரின் இந்த உரைகள் விளங்குகின்றன.

“எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ள வேண்டும். ஆற்றல் மிக்கவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக, போர்க்கலையில் வல்லுனர்களாக ஒரு புதிய, புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மானிகளாக, நிர்வாகிகளாக, ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது உள்ளக் கிடக்கைகளை வெளிப் படுத்தியிருந்தார்.

“இந்தக் குழந்தைகள் யாருமற்றவர்களல்ல, தமிழன்னையின் புதல்வர்கள். வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப்போராட்டச் சூழலில் இந்த இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விரூட்சங்களாக மாறி, ஒரு காலம் தமிழீழத் தேசத்தின் சிந்தனைச் சோலையாக சிறப்புற வேண்டு மென்பதே எனது ஆவல்.” இது தலைவர் அவர்களின் உள்ளக் கிடக்கைப் பேரவா என்று கூடச் சொல்லலாம் இவைகளே நினைவுக்கு வருகின்றன.

ஒரு வீரஞ்செறிந்த விடுதலை வரலாற்றின் அற்புதமான அர்ப்பணிப்புகளாக எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக தமிழர் இராணுவமாக வாழ்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.  தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெரும் விருட்சத்தை வெட்டி வீழ்த்த நினைத்து  தமிழீழத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்கள ஆக்கிரமிப் பாளர்கள் சிதைத்தி ருந்தாலும் தமிழர்களின் இன விடுதலைக்கான சுதந்திர வேட்கையினைச் சிதைத்து  விட முடியவில்லை.

தமிழர் தாயகப்பூமியில், தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு உருவாகு வதனைத்தவிர ஈழத்தமிழர் தேசத்தின் தேசிய இனச்சிக்கலுக்கு வேறு எந்தத்தீர்வும் அமையப்போவதில்லை. அடக்குமுறைகளையும் தடைகளையும் தாண்டி, தன்னெழுச்சியால் மேலிடும் உணர்வுகளோடு, தமிழீழத் தாய்மண்ணில் பேரெழுச்சிகொண்ட போராளிகளாய்   எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை பின்னடைவுகள் வந்தாலும் நாம் எமது இலட்சியத்தில் உறுதி பூண்டு தமிழீழம் விடுதலையடையும்வரைத் தொடர்ந்தும் போராடுவோம்.

-தொடரும்

https://www.uyirpu.com/?p=19525

போருக்குப் பின்.

4 weeks 2 days ago

https://www.trtworld.com/video/beyond-borders/beyond-borders-how-is-sri-lanka-living-with-the-wounds-of-civil-war-18269480

Beyond Borders: How is Sri Lanka living with the wounds of civil war?

Since its decades-long civil war ended in 2009, Sri Lanka has been living with wounds that won't heal. Beyond Borders travels to northern Sri Lanka to ask what's next for the island's Tamil minority. We meet the local women clearing mines, ex-child soldiers reintegrating into society, war widows finding new opportunities, and families still searching for their missing loved ones. As memories of war still haunt Sri Lanka and ethnic tensions remain high, we ask whether the peace is more fragile than the Sri Lankan government claims.

மன்னாரில் இரத்தம் தோய்ந்த 04.12.1984 உம் கண்டு மனம்கொதித்து விடுதலைப்புலியான சிங்களவனும்!

1 month 1 week ago

எழுத்தாளர்: சபா கிரிஸ்

தமிழ் மக்களுக்காக உயிர்துறந்த சிங்கள இனத்தைச் சேர்ந்த "வில்லியம் ஐயே" உம், போராளியாக மாறி வீரச்சாவடைந்த அவரது மகனது கதையும் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் டிசம்பர் 04, 1984ஆம் உயிர்த்தராசன் குளத்துச் சந்திக்கு அருகில் நடைபெற்ற படுகொலையில், படையினரால் 200+ பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய இன்னுமோர் விடயத்தைக் கட்டாயமாக நாம் அறிந்திருக்க வேண்டும். மேற்சொன்ன சம்பவத்தில் ஒரு பேருந்தில் வந்தவர்களும் சுடப்பட்டார்கள்.

அப்பேருந்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு, அடையாள அட்டை பார்க்கப்போவதாக கூறி, வரிசையில் நிறுத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அப்பேருந்தில் மட்டும் ஏறக்குறைய ஐம்பது(50) பேரளவில் இருந்திருக்கின்றார்கள்.

பேருந்திலிருந்து பயணிகளை இறக்கி அவர்களைச் அழித்தொழிக்கப் போகின்றார்கள் என்பதைத்தன் மதுநுட்பத்தால் புரிந்துகொண்ட பேருந்து நடத்துனரான சிங்கள இனத்தைச் சேர்ந்த ‘வில்லியம் ஐயே(ஐயா)’, பயணிகளை இறக்க அனுமதிக்காது படையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வில்லியம் ஐயாவை முதலில் பலவந்தமாக இழுத்து வெளியே வைத்துக்கொண்டு, எல்லாப் பயணிகளையும் இறக்கிவரிசையில் வைத்துச் சுட்டபோது இந்த ஓட்டுனரையும் கொன்றொழித்திருக்கின்றார்கள். அப்பேருந்தில் பயணம்செய்த திருமணமாகி மூன்று நாள்களான எங்கள் கணித ஆசிரியர், அச்சூட்டுச் சம்பவத்தில் தப்பிப்பிளைத்தவர். அவரே இச்சம்பவத்தை கண்ணீரோடு எங்களுக்கு ஒருமுறை விரித்தார்.

அன்றைய காலத்திலேயே எம் மக்களுக்காக உயிர்கொடுத்த உறவு வில்லியம் ஐயே. சகோதர மொழிபேசும் சகோதர இனத்தவர்.

மறந்துபோகாது இன்றும் பலருடைய நெஞ்சங்களில் இருப்பவர். பூசையறையில் வைத்து பூசிக்கப்படவேண்டியவர்.

மடுறோட்டில்தான் வாழ்ந்தவர். அடிக்கடி மடுவுக்குச் செல்கின்றபோது இவரைப் பல தடவைகளில் பேருந்தில் கண்டிருக்கின்றேன். அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமர், என் கண்களுக்குள் இன்றும் நிழலாடுகின்றார். எல்லா மக்களையும் அறிந்திருந்தார். இயல்பாகப் பழகுகின்ற பண்பான மனிதர். பெருத்த உருவம் உடையவர், சிங்கள உச்சரிப்பில் தமிழைத் தமிழர்களைவிட நன்றாகப் பேசும் திறமையானவர், வறுமைப்பட்டவர்கள் பேருந்தில் ஏறுகின்றபோது அரசினுடைய வர்த்தமானி அறிவிப்பு இல்லாமலேயே அக்காலத்திலேயே சிறப்புச் சலுகை வழங்கியவர், மாணவர்களை அன்றைய காலத்திலேயே இலவசமாக ஏற்றிப் பறித்த பாரி அவர்! தன் பொறுப்பில் உள்ள மக்களுக்காக தன்னுயிரைப் பொருட்படுத்தாத தியாகி அவர்.

அன்று அவர் தாராளமாகத் தப்பித்திருக்கலாம். அவரின் உயிருக்கு எந்த ஊறும் நிகழ்ந்திருக்காது! ஆனால், தன் மக்களுக்கா, நீதிக்காக நின்றதினால் அவர் தன் இன்னுயிரை எமக்காய் இழந்தார். அவ்வாறே அவருடைய மகனும் தமிழீழ விடுதலைப்போரில் புலியாகி நின்று வீரச்சாவடைந்தார்.

கப்டன் பிரவின்ராஜ் (கேடி ஜெயசேன ஆரியவன்ச, 24.02.1993) மடு வீதி, மன்னார். 1993 ஆம் ஆண்டு மன்னார் நானாட்டான் படை முகாமிற்கும் கட்டைக் காட்டிற்கும் இடையில் அமைந்திருந்த தொடர் காவலரண்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவடைந்தார். இவரது பெயரில் ஓர் எழுச்சிக் குடியிருப்பு, "கப்டன் பிரவின்ராஜ் எழுச்சிக் குடியிருப்பு", மன்னாரில் 22/08/1993 அன்று மாவட்டக் கட்டளையாளர் திரு கதிர் மற்றும் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு கணேஸ் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஈகைச்சுடரினை மாவீரரின் தந்தையே ஏற்றிவைத்தார் (24/8/1993 ஈழநாதம், பக்-4).

இப்படிக் கதைகள் கனக்கவே இருக்கின்றன. கதைக்க வெளிக்கிட்டால் இதயம் கனத்துப்போகின்றது…! இருப்பினும் அவை எழுதப்பட வேண்டும். வில்லியம் ஐயா போன்ற மனிதாபிமானிகள், தியாகிகள், உத்தமர்கள், எங்கும் இருக்கின்றார்கள். அவர்கள், இனங்களை மதங்களை நிறங்களை மொழிகளை, மனித வரையறைகளைக் கடந்து — வாழ்ந்தவர்கள் — வாழ்பவர்கள் — வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.

main-qimg-86f79b05a029c16650662c1e5dd806

வான்புலிகளின் வரலாறும் வான்கரும்புலிகளின் நினைவுகளும்

1 month 1 week ago

படைத்தவர்: அறியில்லை

எழுத்தாக்கம்: ஒலிநாடாவிலிருந்து எழுத்தாக்கம் செய்தேன்(நன்னிச் சோழன்)

ஆண்டு: 2012/2011 (https://eelam.tv/watch/%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-history-of-sky-tigers-and-the-memory-of-sky_enyGD5qQmlTPtG5.html)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத சாதனையாக வான்புலிகளின் சாதனைகள் நடந்தேறியுள்ளன.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் வான்பறப்பு முயற்சிகளில் கிட்டண்ணா ஈடுபட்டிருந்தார். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் ஆரம்ப கால பறப்பு முயற்சிகள் வெற்றியளிக்காத போதிலும் விடுதலைப் போராட்டம் இன்று இலக்குத்தவறாத வான் தாக்குதலை நடத்தும் வல்லமையை கொண்ட வான்புலிகள் அணியை அன்று கொண்டதாக வளர்ச்சிபெற்று விட்டது.

இந்த வெற்றியை நேரில் நின்று பார்த்து பெருமைப்படுவதற்கு அவர் இல்லாது போனாலும் வானிலிருந்து ஏனைய மாவீரர்களுடன் பார்த்து நிச்சயம் மகிழ்வார் என்றே நம்பலாம்.

உலக வரலாற்றில் முப்பெரும் படைகளையும் கொண்டிருக்கும் முதற் பெரும் இயக்கமாக விடுதலைப் புலிகளை அடையாளப்படுத்தியது வான்புலிகளின் வருகைதான்.

கடற்புலிகளைப் போன்று வான்புலிகளின் தேவையையும் நன்கு அறிந்த தலைவர் அவர்கள் அதனால் அதற்கான சிந்தனைகளில் செயற்பாடுகளில் தலைவர் ஈடுபட்டிருந்தார்.

இந்த முயற்சியின் வெற்றி 1998ம் ஆண்டு மக்களுக்கு தெரிய வந்தது. அதாவது முள்ளியவளையில் உள்ள மாவீரர் துயிலுமில்லம் மீதில் விடுதலைப் புலிகளின் வான்புலிகள் உலங்குவானூர்தியில் சென்று மலர்தூவி வணக்கம் செலுத்தியது அன்று மக்கள் பலரும் கண்ணூடாக பார்த்தார்கள்.

அதன் பின்புதான் விடுதலைப்புலிகளின் வான்படை பரிணாமம் பெறுகிறது. அன்று வான்புலிகளுக்கு கேணல் சங்கரண்ணா தான் பொறுப்புடன் நின்று செயற்பட்டார்.

வற்றாப்பளைப் பகுதியில் பாரிய முகாம்கள் அமைத்து மக்களுடன் நெருங்கிய உறவினை வளர்த்தார் சங்கரண்ணா அவர்கள். அன்றைய காலகட்டப் பகுதியில் வான்புலிகளின் வான்கலங்கள் வற்றாப்பளை, நந்திக்கடல் வெளியில் தான் பறப்பில் ஈடுபடும்.

அவ்வாறு சிறிய வெளிகளிலெல்லாம் பயிற்சித் தளங்களை அமைத்து விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பயிற்களில் ஈடுபட்டார்கள், தொடக்க காலத்தில். இதில் உலங்குவானூர்தி மற்றும் கிளைடர் வகை வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டன.

விடுதலைப் புலிகளின் இந்த வான்கலங்களை அன்று அப்பகுதியில் வாழ்ந்த மக்களும் அறிந்திருந்தார்கள். ஆனால் வெளியுலகிற்கு வான்புலிகளின் செய்திகள் தெரிந்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் வான்புலிகள் வெளியுலகிற்கு அறிமுகமாகாத காலத்தில் சிறிலங்கா வான்படையிடம் வான்கலமொன்று அகப்பட்டுக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டது.

அது வான்புலிகளின் உலங்குவானூர்தி ஒன்று முல்லைத்தீவு நந்திக்கடல் வெளியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை முள்ளியவளை, கேப்பாப்பிலவு, முல்லைத்தீவு பகுதிகளில் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அந்த வேளையில் தான் சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல் திறம்மிக்க வானூர்தியான புக்காரா, மிகையொலி வேக வானூர்திகள் முல்லைத்தீவை நோக்கி திடீரென வந்துவிட்டன. வான்புலிகளின் உலங்குவானூர்தி இன்னமும் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

முள்ளியவளை பகுதிக்கு போர் வானூர்திகள் வந்துவிட்டன. வானூர்திகள் திடீரென வந்துவிட்டதால் வான்புலிகள் உலங்குவானூர்தியை உடனடியாக தரையிறக்க வேண்டிய நிலை எழுந்துவிட்டது. தங்களது வான்தளத்தில் தரையிறக்கினால் எதிரி அந்த இடத்தினையும் வான்கலங்களையும் அடையாளம் கண்டுவிடக்கூடும் என்பதால் அவசர அவசரமாக வற்றாப்பளைக்கும் கேப்பாபிலவிற்கும் இடைப்பட்ட வயல்வெளிப்பகுதியில் தரையிறக்கினார்கள்.

இவ்வாறுதான் அன்று வான்கலங்களை பாதுகாத்து விடுதலைப் புலிகளின் வான்படையினர் அடுத்தகட்ட பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இரணைமடு பகுதியில் பாரிய வான்படைத் தளத்தினை நிறுவினார்கள். விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. இது சிறிலங்கா அரசின் கண்களுக்கு குத்துகின்றது. பன்னாடுகளில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது, தவிபு இடம் வான்கலங்கள் உள்ளனவென்று. அருகிலுள்ள இந்தியாவிற்கு அச்சுறுத்தலென்று சிறிலங்கா அரசே தனது வாயால் பரப்புரை சொல்கிறது.

இவ்வாறுதான் தவிபு இன் வான்புலி அணியினர் சற்றுச் சற்றாக வளர்ந்துகொண்டிருந்த காலகட்டப்பகுதியில் முதற் தாக்குதலை கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்டார்கள்.

அதன் பின்னரான காலத்தில் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

ஆனால் சிறிலங்கா அரசோ தவிபு இன் வான்படையினரை அழித்துவிடவேண்டுமென்று கங்கணத்தில் இரணைமடுவிலுள்ள வான்தளம் மீதில் இரவு-பகல் பாராது பல தடவைகள் வான்குண்டுகளை வீசி வான்தளத்தை அழித்தார்கள்.

எல்லாவற்றிற்கும் நடுவணில் தான் கோழி தன் இறக்கைக்குள் குஞ்சுகளை காப்பது போல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வான்புலிகள் அணியினை பக்குவமாக பாதுகாத்தார்.

கட்டுநாயக்கா வான்படைத்தளம், அதன் பின்னரான முத்துராஜவெல - கொலன்னாவை எண்ணைக் களஞ்சியங்கள் மீதான தாக்குதல்கள், வவுனியா ஜோசப் படைத்தளம் மீதான தாக்குதல், மணலாறில் ஆற்றடிப் படைத்தளம் மீதான தாக்குதல் என்று வான்புலிகளின் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் வான்புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசு கங்கணம் கட்டியது. இந்த வேளையில் தரையில் போர் உக்கிரமடைந்தது. அதாவது மன்னாரிலிருந்து நகர்ந்த சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியை அண்மித்துவிட்டார்கள். அதன் பின்னர் இரணைமடுப் பகுதியை அண்மித்துவிட்டார்கள்.

இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தை கைப்பற்றிவிட்டதாகவும் அறிவித்திட்டார்கள். இந்த நிலையிலும் தமிழீழத் தேசியத் தலைவரவர்களால் வான்புலிகள் காப்பாற்றப்பட்டு பௌத்திரமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறார்கள்.

இறுதியாக சிறிலங்காப் படையினரின் நகர்வு விசுவமடு - புதுக்குடியிருப்பை அண்மித்த காலகட்டப் பகுதியில் சுற்றுமுழுதான பல்குழல் எறிகணைக்கு தமிழ் மக்கள் இலக்காகிக்கொண்டிருந்த காலகட்டமாக அன்றைய காலகட்டம் காணப்படுகின்றது. அதாவது 20/02/2009 அன்று சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலுக்கு நடுவணில் வான்கரும்புலிகள் பறந்து சென்று கொழும்பின் தலைநகர் பகுதியில் தாக்குதல் நடத்தி வீரவரலாறானார்கள். அந்த வீரவரலாறானவர்கள் தான் கேணல் ரூபன் மற்றும் லெப். கேணல் சிரித்திரன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் வான்புலிகளின் சாதனை என்றும் மறந்திட முடியாது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதியப்பட்ட நாளாக இன்றைய நாள் அன்று காணப்படுகின்றது. அதாவது வான்கரும்புலிகளின் நினைவுநாள் இன்றாகும்.

அந்த வான்கரும்புலிகளின் நினைவுகளை இன்று நாம் மீட்டுகிறோம்.

த‌லைவ‌ர் ப‌ட‌மும் tiktokக்கும்

1 month 1 week ago

வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இப்போது உள்ள‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் போட‌ முடியாது

2007ம் ஆண்டு எல்ளாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் வீர‌ச்சாவு அட‌ந்த‌ 21க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் ப‌ட‌த்தை எடிட் செய்து போட்டேன் , போட்ட‌தும் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் பெரியவ‌ர்க‌ள் என்று ப‌ல‌ர் பார்த்து இருக்கின‌ம்

அந்த‌ ப‌ட‌த்தை த‌லைவ‌ர் 21க‌ரும்புலிக‌ளுட‌ன் இருந்து எடுத்த‌தை போட்டு இருந்தால் உட‌ன‌ நீக்கி இருப்பின‌ம்...............சிறு நேரம் ஒதுக்கி இந்த‌ ப‌ட‌த்தையும் தாய‌க‌ பாட்டு வ‌ரியையும் இணைத்து செய்தேன்.............

521adec08d47d0eee2ac20f55b92fb01-0.jpg

இப்போது எல்லாரும் பார்க்கும் ப‌டி இருக்கு................கால‌ங்க‌ள் மாறினாலும் எம‌க்காக‌ தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது..........எல்ளாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் வீர‌ச்சாவு அடைந்த‌ க‌ரும்புலிக‌ளின் நினைவு வ‌ர‌ க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் இதை செய்தேன்....................

த‌லைவ‌ரின் நினைவு வ‌ரும் போதெல்லாம் எதையாவ‌து செய்வேன் அதை கொண்டு போய் சோச‌ல் மீடியாக்க‌ளில் போட்டால் உட‌ன‌ நீக்கின‌ம்

ப‌ல‌ த‌ட‌வை ம‌ன‌ம் வேத‌னை ப‌ட்ட‌து இவ‌ள‌வு நேர‌ம் ஒதுக்கியும் வீனா போச்சு என்று , இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ரின் வ‌ர‌லாறுக‌ளை தியாக‌ங்க‌ளை தெரியப் ப‌டுத்துவோம் என்றால் அத‌ற்க்கு ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ட‌ங்க‌ள்................அப்ப‌டி இருந்தும் சில‌ குள‌று ப‌டிக‌ள் செய்து த‌லைவ‌ரின் த‌த்துவ‌ங்க‌ளை எழுதி த‌லைவ‌ரின் முக‌ சேர்ப்பை மெதுவாய் மற்ற‌ ப‌க்க‌ம் திருப்பி சில‌ ப‌ட‌ங்க‌ள் ப‌திவேற்றி இருக்கிறேன் 10 ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ உற‌வுக‌ள் பார்த்து இருக்கின‌ம்...............

இந்த‌ உலகில் எவள‌வு காலம் வாழுவோம் என்று தெரியாது ,

அத‌ற்க்குள் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ வ‌ர‌லாறு த‌மிழீழ‌ மீட்புக்கு நீங்க‌ள் அடுத்த க‌ட்ட‌மாய் என்ன‌ செய்ய‌ வேண்டும் என்ற‌தை சொல்லி கொடுப்போம்................

தமிழ் நாட்டில் ப‌ல‌ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ளுக்கு சீமான் த‌மீழீழ‌ம் ப‌ற்றி சொல்லி அவ‌ர்க்ள் விழித்து விட்டின‌ம்.............

எங்க‌ளால் முடியாட்டியும் எங்க‌ட‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ள் புத்திய‌ தீட்டி த‌மீழீழ‌ம் அடைந்தால் பெரும் ம‌கிழ்ச்சி.............மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் வீன் போகாம‌ எங்க‌ட‌ பிள்ளைக‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு🙏👍...............

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்..............

ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.

1 month 1 week ago

ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.

-----------------------------------------------------------

இலங்கையில், ஈழத்தில், சாதி வெறியின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் பெரியார் சிலை ஒன்றல்ல பல நூறு நிறுவப்படும் .

இந்தியாவில் இருந்து அண்மையில் இலங்கை வந்திருந்த வெங்காயம்,பயாஸ்கோப் போன்ற படங்களின் இயக்குநரும் பெரியாரிஸ்ட்டுமான ராஜ்குமார் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்/ பெரியார் படிப்பு வட்டம் மற்றும் அம்பேத்கர் இயக்கம் ஆகியவற்றின் எமது அலுவலகத்தில் எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையில் எமது தலைமையில் நிறுவப்பட இருக்கும் பெரியார் சிலை அமைப்பிற்கு தனது தனிப்பட்ட பங்களிப்பாக ஒரு தொகை பணத்தினை நன்கொடையாக வழங்கி வைத்தார்.

அருண் சித்தார்த்

பெரியார் படிப்பு வட்டம்

large.IMG_2570.jpeg

ஈழத்தில் பெரியார் சிலை நிறுவப்படும்.

---------------------------------------------------------

ஈழத்தில் இலங்கையில் சாதிய ஒடுக்குமுறையின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் தாவடியில், கே.கே.எஸ்.வீதியில் எனது அலுவலகத்திற்கு முன்னால் 10 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலையும் , அண்ணல் அம்பேத்கர் சிலையும் சமூக நீதி, சமதர்மம், பகுத்தறிவு, சுயமரியாதை , பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சீதனமுறை ஒழிப்பு, போன்ற உயரிய மேன்மையான சிந்தனை முறையை பறைசாற்றும் நோக்கில் நிறுவப்படும்.

சிலைகள் நிறுவப்படும் திகதிகள் விரைவில் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.

இந்தச் சிலைகள் இரண்டும் ஈழத்தில் தந்தை பெரியாருக்கும் , அண்ணல் அம்பேத்கருக்கும் நிறுவப்படும் முதலாவது சிலைகளாக வரலாற்றில் பதியப்படும்.

பின்குறிப்பு- ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து சாதிய சண்டியர் அனைவரும் வரவேற்கப்படுகின்றீர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களைக் காலங்காலமாக சுரண்டி வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து வரும் சனாதன சாதிய சங்கிகளுக்கும், சைமனின் வியாபார, புரட்டுத் தேசிய ஆமைக் குஞ்சுகளுக்கும் அருண் சித்தார்த் என்கின்ற ஈழத்துப் பெரியாரிஸ்ட்டின் அறைகூவல் இது.

முடிந்தால் இந்த சிலைகளில் கை வைத்துப் பாருங்கள்.

அருண் சித்தார்த்

பெரியார் படிப்பு வட்டம்

இல.238, கே.கே.எஸ்.வீதி

தாவடி, கொக்குவில்,

யாழ்ப்பாணம்.

தொ.இல.94774842464

வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்!

1 month 2 weeks ago

தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே …..

தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் பலம் பொருந்திய ஆயுதமாக “கரும்புலிகள்” என்ற உயிராயுதங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கினார்.

1987 ஆம் ஆண்டு யூலை 5, “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மண்ணை சிறிலங்காப் படைகள் வல்வளைப்புச் செய்த போது ,கொத்துக் கொத்தாய் எம் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துகள் அழிக்கப்பட்டன. சொந்த மண்ணிலே வாழ முடியாது மக்கள் ஏதிலிகளாய் பெரும் அவலங்களை சந்தித்தனர்.

இந்த நேரத்திலே, வடமராட்சி மண்ணின் சில பகுதிகள் அரச படைகளால் கைப்பற்றபட்டதோடு, வெற்றி மமதையில் இருந்து கொண்டு மீண்டும் ஒரு பட நடவடிக்கைக்கு தம்மை தயாராக்கினர் சிறிலங்கா படைகள்.

இந்த நிலையிலே,அரச படைகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் எமது மண்ணை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் விடுதலைப்புலிகளிடம் இருந்தது.

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் சிறிலங்காப் படைகளால் நிரம்பி வழிந்தது. எந்த நேரத்திலும் இன அழிப்புக்கான அடுத்த கட்ட படை நடவடிக்கை ஆரம்பமாகி விடும்.

இப்படியான ஒரு சூழலில் தான் ஒரு மனிதனால் தன்னுடைய நாட்டுக்காகத் தன்னுடைய மக்களுக்காகச் செய்யக்கூடிய அதி உயர் ஈகமாக கொடையாக தன்னுடைய உயிரை ஆயுதமாக்கி மெய்சிலிர்க்க வைக்கும் ஈக வரலாற்றின் முதல் அத்தியாயத்தை தொடக்கி வைத்தான் கரும்புலி கப்டன் மில்லர். அன்று தொடங்கிய ஈக வரலாறு பின்னாளில் விடுதலைப்போராட்டம் சந்தித்த பெரு வெற்றிகளுக்கெல்லாம் திறவுகோலாய் அமைந்தது.

எமது போராட்டம் சந்தித்த பெரும் நெருக்கடிகளில் இருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பதற்காக தேசத்தின் புயல்களாய் வீசிகடல்தனில் காவியமாகி ,காற்றிலே ஏறி விண்ணையும் சாடி, ஊர் பேர் தெரியாத நிழல் கரும்புலிகளாய் மாறி உயிர் கொடைகளை அள்ளித் தந்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து நெஞ்சிருத்திக் கொள்ளும் திருநாள் இன்று.

உண்மையிலே பார்ப்பவர்களுக்கு நெருப்பு மனிதராய் தெரியும். இந்தக் கறுப்பு மனிதருக்குள் இருக்கும் மென்மையும் ,ஈரமும் வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லி விட முடியாதவை.

“வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்”

யாரிவர்கள்…………விண்ணில் இருந்து குதித்து வந்த விசித்திர மனிதரல்ல…..எம்மைப் போலவே இரத்தமும் சதையுமாய் ஈழத் தாய்குலத்தின் மடியில் பிறந்து வளர்ந்த சரித்திரங்கள். அவர்களுக்கும் அம்மா,அப்பா ,உடன் பிறந்தோர், சொந்தம், சுற்றம் என பந்தங்கள் பல இருந்தன. துன்பங்கள் தெரியாத சுகமான வாழ்வு இருந்தது. பள்ளிப் படிப்பும், நண்பர் கூட்டமும் இருந்தன. இளமைக்கால வண்ணக் கனவுகள் இருந்தன. ஏன் ஒரு சிலருக்குள் அழகான காதல் கூட இருந்தது.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களையும் ,தேசத்தலைவனையும் அவர்கள் நேசித்தார்கள். தமிழீழ மண்ணின் விடுதலையைத் தம் இலட்சியமாக கொண்டார்கள். அதனால் தான் கரும்புலிகள் என்ற உயரிய ,உன்னதமான இலட்சியக் கனவை அவர்களால் நிறைவேற்ற முடிந்தது.

இந்த இலட்சியக்கனவை நிறைவேற்றுவதற்காக எத்தனை நாள் காத்திருப்பு ……வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கடின பயிற்சிகள்….ஓய்வு உறக்கமின்றிப் போன எத்தனையோ இரவுகள் ….பசிகூட மறந்து போன பொழுதுகள்,தம் இலக்கை நோக்கிச் செல்வதற்குள் எத்தனையோ தடைகள் ,அத்தனையும் ,கடந்து பகை அழித்து வென்றவர்கள் இவர்கள்.

இந்த இடத்தில ஒரு சிறிய சம்பவம் ஒன்றைப் பதிவாக்க நினைக்கிறேன் . இன்று தன்னுடைய ஆளுமையாலும், போரியல் நுட்பத்தாலும், மனித நேயத்தாலும்,சுய ஒழுக்கத்தாலும் உலகமே வியந்து பார்க்கும் எம் தலைவர் அவர்கள்,தாக்குதலுக்காகப் புறப்படும் கரும்புலிகளிடம் ஒரேயொரு விடயத்தை மட்டும் மிகவும் வலியுறுத்தி சொல்லுவார் .

“ நீங்கள் தேடிச் செல்லும் இலக்கு எதிரிகள் மட்டும் தான். எதிரி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த மக்களும் எங்களுடைய நேசிப்புக்கு உரியவர்கள். அவர்களுக்கு எந்தவொரு சிறு தீங்கோ இழப்போ ஏற்படக் கூடாது. இந்த விடயத்தில் அனைவருமே மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.”

எங்கள் தேசத்தலைவனின் அந்த வாக்கு இலக்கைத் தேடிச் செல்லும் ஒவ்வொரு கரும்புலிக்குள்ளும் இருந்தது.

அப்படித்தான் அவனுக்கான இலக்கு பகை வாழும் இடத்தில இருந்தது. எத்தனையோ நாள் காத்திருப்பு. எத்தனையோ பல முயற்சியின் பின் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம். எதிரியை மிக நெருங்கி விட்டான். அந்த நேரம் சிறுவர்கள் விளையாடுவதற்காக அந்த இடத்துக்குள் வந்துவிட்டார்கள். அவன் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடும்.

ஒரு நொடி அவனது மனதில் தலைவரின் அறிவுறுத்தல் நினைவுக்கு வருகின்றது. அந்த கணமே அவன் பின் வாங்குகிறான். ஆனால் எதிரிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவன் சுற்றி வளைக்கப்படப் போகின்றான். எதிரியிடம் பிடிபடக் கூடாது. அதே நேரம் பொதுமக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. உடனே மக்கள் நட மாட்டம் இல்லாத பகுதியை நோக்கி அவன் ஓடுகின்றான். மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு தன் உடலில் கட்டிய வெடிமருந்தை வெடிக்க வைத்து சாவை அணைத்துக் கொள்கின்றான்.

உண்மையிலே அவனது சாவு என்பது ஒரு சம்பவமாகி விடவில்லை . அவன் தன் உயிரை விட எதிரி இனத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் அவர்களையும் எவ்வளவு நேசித்தான் என்பதன் அடையாளம் தான் அவனுடைய சாவு. இது முகம் மறைந்த கரும்புலி வீரன் ஒருவனின் வரலாறு.

இது ஒரு சம்பவம் ஆனால் இப்படி எத்தனையோ வெற்றிச் சரித்திரங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

எதிரியின் குகைக்குள்ளே இருந்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ,பகையோடு உறவாடி, சாதுரியமாய் தமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி, வெளியே தன் முகம் மறைத்து ,உள்ளே தன் இலக்கழித்து வெற்றிகளைத் தந்து விட்டு நினைவுகள் கல் கூட இன்றி, ஏன்ஆணா, பெண்ணா என்று கூட தெரியாது வீரச் சாவுகளின் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிழல் கருவேங்கைகளின் ஈகத்தை எப்படி எழுத வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்.

அழகான காதல்

அவனுக்குள் அழகான காதல் இருந்தது. தன் காதலை எப்படியாவது அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று பல தடவை அவன் முயற்சி எடுத்தான்.அது வாழ்வதற்கான காதல் அல்ல .இலட்சியத்தால் ஒன்று பட்டு வரலாறுகளைப் பதிவதற்கான இலட்சியக் காதல்.

அவன் யார் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவன் தன்னை விரும்புகிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். ஆனால் ஒரு போதும் அவனது காதலை அவள் ஏற்க வில்லை.

அவனுக்கான இலக்கு கிடைத்து விட்டது் அவன் புறப் படப் போகின்றான். இறுதி விடை பெறுவதற்காக அவளிடம் வருகின்றான். அப்போதும் அவனைச் சந்திக்க அவள் மறுத்து விடுகின்றாள் . அவன் வழமையான தன் புன்னகையோடே புறப்பட்டு விட்டான். அன்று இரவே சிறிலங்கா கடற்படையின் கப்பல் தகர்த்து கடலிலே காவியம் படைக்கின்றான். அவனும் கூடவே 3 தோழ தோழியருமாக

தொலைத்தொடர்பு சாதனம் காற்றலையில் அவனது வீரச்சாவு செய்தியை தாங்கி வருகின்றது. அவள் விழிகளில் நீர் கோர்த்தது. தோழிகள் அவளிடம் கேட்கின்றனர் . “ அவன் உன்னிடம் பேச நினைத்த போதெல்லாம் நீ பேச வில்லை, இப்போது எதற்காகக் கவலைப்படுகின்றாய்” என அதற்கு அவள் சொல்கிறாள் “ நான் காதலிக்கிறேன் என்ற அந்த ஒற்றைச் சொல் ,அவரது இலக்கு நோக்கிய பயணத்தில் ஒரு சிறிய தடுமாற்றத்தைக் கூட ஏற்படுத்தி விடக் கூடாது. சில வேளை இலக்குச் சரியாக அமையாமல் அவர் திரும்பி வந்தால் கூட என்ர மனது குற்ற உணர்வில் துடித்துப் போய்விடும். எப்போதும் அவர் தன்னுடைய இலட்சியத்தில் வெற்றி அடையவேண்டும் இது தான் என்னுடைய ஆசை. உண்மையிலே நானும் அவரை மனதார நேசிக்கின்றேன்.அவரை மட்டுமல்ல ,அவரது இலட்சியங்களையும் சேர்த்து வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல செயலிலும் அவள் நிரூபித்துக் காட்டினாள்.

விளையாட்டுப் பிள்ளை

அவன் ஒரு குழப்படிக்காரன் . ஒரு இடத்தில இரு என்றால் அது அவனால் முடியாத காரியம். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்ததனாலோ என்னவோ அவனுக்கு அளவுக்கு அதிகமான செல்லம்.

அம்மாவுடன் சேர்ந்து குடும்பச்சுமையை மூத்தவர்கள் சுமக்க வீட்டில் நிற்கும் இவனோ ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பிரச்சனைகளை அம்மாவின் தலையில் ஏற்றி வைப்பான். அந்தளவுக்கு குறும்புக்காரன் . வேலை முடித்து களைத்து வரும் அம்மா ஏக்கத்தோடே வீட்டுக்கு வருவார். இன்றைக்கு என்ன செய்து வைத்திருக்கின்றானோ என்ற பதபதப்பு அம்மாவுக்குள் எப்போதும் இருக்கும்.

ஒரு நாளைக்கு விழுந்து கைய முறிச்சிருப்பான் இல்ல காலில் அடிபட்டிருப்பான் ,இல்ல எதோ வெட்ட எடுத்த கத்தி கைய பதம் பார்த்திருக்கும். அதுகும் இல்லை என்றால் அயல் வீட்டுச் சிறுவர்களோடு அடிபட்டு பிரச்சனையை இழுத்து வைத்திருப்பான் . அப்படியொரு விளையாட்டுப் பிள்ளை அவன்.

ஆனால் இப்போது அவன் ஒரு கரும்புலி வீரன் , அதுகும் நீரடி நீச்சல் கரும்புலி. மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோல்களில் ஒருவனாக அவன்.

சாவுக்கு நாள் குறித்த அவர்கள் பயணம் தொடங்குகின்றது. இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருக்க, நீரின் அடியால் வெடிமருந்துகளைச் சுமந்த படி அவர்கள் ……..

திருமலைத் துறை முகம் பலத்த பாதுகாப்பு நிறைந்த கோட்டையாக இறுமாப்புடன் இருந்தது.

அந்தக் கோட்டைக்குள் அலையோடு அலையாக எதிரி விழிப்படையா வண்ணம் மெல்ல மெல்ல நகர்ந்து , எதிரியின் பாதுகாப்பு வேலிகளைக் கடந்து உள்நுழைந்து ,தமக்கான இலக்கைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார்கள்.

இன்னும் 30 நிமிடங்கள் மிக நிதானமாக கப்பலில் குண்டினைப் பொருத்தி எதிரி விழிப்படையா வண்ணம் மிக அமைதியாகத் தம் கைகளால் அதைத் தாங்கியபடி அவர்கள் நேரங்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. தம் சாவுக்கான ஒவ்வொரு மணித்துளிகளையும் எண்ணிய படி தேசத்தலைவனும், தாம் நேசித்த மக்களும் , மலரப் போகும் தமிழீழத் தேசமும் மனக் கண்ணில் நிலைத்து நிற்க ,ஆடாமல் ,அசையாமல் ,விலகாமல் குண்டை அணைத்த படி அவன்.அந்தக் கடைசி மணித்துளி ……..” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” திருமலைத்துறைமுகம் அதிர்கின்றது. கப்பல் தகர்கிறது. ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்கத் தெரியாத அந்தத் தீராத விளையாட்டுப்பிள்ளை நம் தேச விடுதலைக்காக போரியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோலாக வரலாற்றைப் படைத்தான் கடற்கரும்புலி மேஜர் கதிரவன்.

அக்கினிக் குஞ்சுகள்

அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு ஆண், பெண் கரும்புலிகள் தயாராகின்றனர். இலக்கை அழிப்பதற்கான ஓயாத பயிற்சிகள் எல்லாம் நிறைவடைந்து விட்டன. தேசத்தின் புயல்கள் புறப்படுவதற்கான பொழுது நெருங்கி விட்டது.

தாய்க் குருவியோடு சேய்க்குருவிகள் மகிழ்ந்திருக்கும் அந்த அழகான தருணத்துக்கான காத்திருப்பு கறுப்புவரிச் சீருடைக்குள் புன்னகை வீசிய படி குதூகலத்துடன் அந்த உயிராயுதங்கள் அணிவகுத்து நின்றார்கள் . எங்கும் அமைதி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றது. தலைவர் அவர்கள் உள்ளே நுழைகின்றார்.

“ அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்

அதை ஆங்கொரு காட்டிலோர்

பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு……”

என்ற பாரதியாரின் கவிதை வரிகளைச் சொல்லிக் கொள்கிறார்.

“உண்மையிலே எங்கட விடுதலைப் போராட்டத்தில் நீங்களும் அப்படித்தான் . கரும்புலி என்கின்ற பொறி ,இன்று எங்கட மண்ணிலும் , புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் மக்களுடைய மனங்களில் பெரும் விடுதலை தீயை மூட்டியிருக்கின்றது. உலகம் எங்கும் எமது விடுதலைப் போராட்டத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது”

என்ற தலைவர் அவர்களின் எண்ணத்தை தாங்கியவர்களாய், இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் , எமக்காக வாழ்ந்து தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த இந்தக் கரும்புலிகள் நினைவு சுமந்த நாளில் , அவர்களின் கனவாகிய தாயகக் கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற தார்மீகப் பொறுப்புணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்போமாக.

அ.அபிராமி –

https://eelamaravar.wordpress.com/2019/07/04/black-tigers-17/

தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்!

1 month 2 weeks ago
நக்கீரன்

தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்!


தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்தெறிய சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியம் கையில் எடுத்த ஆயுதம் சிங்களக் குடியேற்றமாகும்.

தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றுவதன் மூலம் வட-கிழக்கு மாகாணத்தின் குடித்தொகையில் படிப்படியான மாற்றத்தை ஏற்படுத்தஇ தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில்இ அவர்களது தந்தையும் – தாயும் மகிழ்ந்து குலாவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண்ணில்-சிறுபான்மையர்கள் ஆக மாற்றுவதே சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்து வருகிறது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாகவே செந்தமிழ் மணம் கமழும் பட்டிப்பளை ஆறு கல்லோயா எனப் பெயர் மாற்றம் பெற்றது, அல்லை கந்தளாய், அல்ல-கந்தளாவ ஆக மாறியது, முதலிக்குளம் பதவியாக உருவெடுத்தது, தமிழீழத்தின் இதயபூமியான மணலாறு இரவோடு இரவாக வெலிஓயாவாக மறு அவதாரம் செய்தது.

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் நரிமூளையில் உருவாகிய நச்சுத் திட்டமே இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள். அவரே பட்டிப்பளை ஆறு கல்ஓயாவாக மாறியதன் சூத்திரதாரி.

ஐம்பதின் முற்பகுதியில் கல்லோயா ஆற்றுக்குக் குறுக்கே இங்கினியாகல என்ற இடத்தில் பாரிய அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு சேனநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டது. 67.2 மில்லியன் டொலர் செலவில் அமெரிக்க கம்பனிகளின் உதவியுடன் கல்ஓயாவில் நிருர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாற்பது கொலனிகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் காணியும் ஒன்றரை ஏக்கர் மேட்டுநிலக் காணியும் வழங்கப்பட்டது. முதற் கட்டமாக இருபதாயிரத்திற்கும் மேலான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் எம் செந்தமிழ் நிலமான தென்தமிழீழம் எவ்வாறு மெல்ல மெல்ல சிங்களவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டது என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அட்டவணை
கிழக்கு மாகாண மக்கள் தொகை (1881-1981)

சிங்களவர்

தமிழர் 

முஸ்லிம்கள்

ஆண்டு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

1881

5947

4.5

75408

61.35

43001

30.65

1891

7512

4.75

87701

61.55

51206

30.75

1901

8778

4.7

96296

57.5

62448

33.15

1911

6909

3.75

101181

56.2

70409

36.0

1921

8744

4.5

103551

53.5

75992

39.4

1946

23456

8.4

146059

52.3

109024

39.1

1953

46470

13.1

167898

47.3

135322

38.1

1963

109690

20.1

246120

45.1

185750

34.0

1971

148572

20.7

315560

43.9

248567

34.6

1981

243358

24.9

409451

41.9

315201

32.2

1881 ம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981 ஆம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881 ஆம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா, மதுறு ஓயா, திருகோணமலை மாவட்டத்தில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்), யான் ஓயா போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும்.

இந்தச் சிங்களக் குடியேற்றங்களில் எல்லாம் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தான குடியேற்றத் திட்டம் வெலிஓயா ஆகும்.

எண்பது முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 1988 ஆம் ஆண்டு அசுர வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. இதற்காக ஸ்ரீலங்காவின் முழு அரச இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது.

1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16ம் நாள் ஒரு சிறப்பு அரசதாள் மூலம் முல்லைத்தீவு மாவடத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அது மட்டும் அல்லாது ஸ்ரீலங்காவின் 26வது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும், வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் எனவும் சிங்கள இராணுவம் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியது. பின்வரும் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இந்த பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாக்கப் பட்டன.

வவுனியா மாவட்டம்

அரியக்குண்டசோலை   – 118
வெடிவைத்தகல்லு         –   89
ஏனையவை                      –  85

முல்லைத்தீவு மாவட்டம்

கொக்குத் தொடுவாய் கிராமசேவகர் பிரிவு

கொக்குத் தொடுவாய்  – 861
கருநாட்டுக்கேணி         – 370
ஏனையவை                    –   66

கொக்குளாய் கிராமசேவகர் பிரிவு

கொக்குளாய்               – 508
மரியமுனை                 –    04
முதத்துவாரம்             – 1004
ஆலடிக்குளம்             –      05
ஆறுமுகத்தான்குளம் –    69
நாயாறு                         –   465
தண்ணிமுறிப்பு           –   243
ஆண்டான்குளம்        –     49
குமுழமுனை               – 1164
புளியமுனை               –     16

வவுனியா வடக்கு கிராமசேவகர் பிரிவு

புதுக்குடியிருப்பு              – 351
காட்டுப்பூவரசங்குளம் –    91
கற்குளம்                          – 101
கோவில்புளியங்குளம் – 81
சொரியல்                        – 6448

இவற்றைவிட ஒவ்வொன்றும் 1000 ஏக்கர் கொண்ட பின்வரும் 14 குத்தகைக் காணிகளில் (99 ஆண்டுக் குத்தகை) குடியிருந்த தமிழ்க் குடும்பங்களும், பெரும்பாலும் மலையகத் தமிழ்க் குடும்பங்கள், வெளியேற்றப் பட்டன. இந்தக் காணிகள் சொந்தக்காரர்களால் பெரிய பொருட் செலவில் பண்படுத்தப் பட்டு அதில் கமம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1. றேடியோ கண்ணன்
2. டொலர் பாம்
3. ஆனந்தா றேடிங் கொம்பனி
4. செகசோதி அன்ட் கொம்பனி
5. எஸ். இராசரத்தினம்
6. எஸ். செல்லத்துரை
7. எஸ். அம்பலவாணர்
8. த.நடராசா
9. கென்ட் பாம்
10. சிலோன் தியேட்டர்
11. அரியகுண்டன்
12. கார்கோ போட் கொம்பனி
13. றெயில்வே குறூப்
14. போஸ்டல் குறூப்

குருவிக் கூட்டைக் கலைப்பதென்றாலே அது பாவம் என்று மனிதர்கள் நினைப்பதுண்டு. உணவு மறுப்பதை விட உறையுள் மறுப்பது பெரிய பாவமாகும். ஆனால் 13, 288 குடும்பங்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து மண்ணில் இருந்து துரத்தப்பட்டாhர்கள் என்றால், அதுவும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக துரத்தியடிக்கப்பட்டார்கள் என்றால் இதைவிடக் கொடுமை, மனிதவுரிமை மீறல் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

ஆனால் சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியவாதிகள், அன்பு,  அகிம்சை, கருணை போதித்த புத்தரின் சீடர்கள் அந்தக் கொடுமையை எந்தவித துக்கமோ வெட்கமோ இன்றிச் செய்தார்கள்!

கல்ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் சூத்திரதாரி டி.எஸ். சேனநாயக்கா என்றால் வெலிஓயா மற்றும் மதுறு ஓயாக் குடியேற்றத் திட்டங்களின் சூத்திரதாரி அன்றைய விவசாய, துரித மகாவெலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசநாயக்கா ஆவார்.

அமைச்சர் காமினி திசநாயக்காவும் அவரது அமைச்சு அதிகாரிகளும் சேர்ந்து மிக இரகசியமாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் யான் ஓயா, மதுறு ஓயா, மணல் ஆறு போன்ற குடியேற்றத் திட்டங்களை எப்படி நடைமுறைப் படுத்தினார்கள் என்பதை துரித மகாவெலி சபை அதிகாரிகளில் ஒருவரான கேர்மன் குணரத்தின சண்டே ரைம்ஸ் (26-08-90) பத்திரிகையில் எழுதிய கட்டுரை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். அவர் எழுதியிருந்ததாவது-
“All wars are fought for land…The plan for the settlement of people in Yan Oya and Malwathu Oya basins were worked out before the communal riots of 1983. Indeed the keenest minds in the Mahaweli, some of whom are holding top international positions were the architects of this plan. My role was that of an executor…

We conceived and implemented a plan which we thought would secure the territorial integrity of Sri Lanka for a long time. We moved a large group of 45,000 land-hungry (Sinhala) peasants into the Batticaloa and Polonnaruwa Districts of Maduru Oya delta. The second step was to make a similar human settlement in the Yan Oya basin. The third step was going to be a settlement of a number of people, opposed to Eelam, on the banks of the Malwathu Oya.

By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state…Yan Oya, if settled by non-separatists (Sinhala people), would have increased the population by about another 50,000. It would completely secure Trincomalee from the rebels…”

‘நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப் படுகிறது……..யான் ஓயா மற்றும் மதுறு ஓயாப் பள்ளத்தாக்கில் (சிங்கள)க் குடியேற்றத்தை அமுல் படுத்துவதற்கு வேண்டிய திட்டம் 1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு முன்னரே தீட்டப் பட்டுவிட்டது. உண்மையில் இந்தத் திட்டத்தின் சிற்பிகள் மகாவலியில் பணியாற்றிய மெத்தப் படித்த அறிவாளிகள் ஆவர். இவர்கள் இப்போது அனைத்துலக மட்டத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றுகிறார்கள். இந்தத் திட்டத்தில் எனது பாத்திரம் அதனை நடைமுறைப் படுத்துவதே.

”இந்தத் திட்டத்தை நாம் சிந்தித்து நிறைவேற்றியதின் காரணம் ஸ்ரீலங்காவின் பிரதேச கட்டுமானத்தை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதே. மதுறு ஓயா பள்ளத்தாக்கை உள்ளடக்கிய மட்டக்களப்புக்கும் பொலநறுவைக்கும் நாங்கள் காணிக்கு அந்தரித்த 45,000 மக்களைக் கொண்டு சென்று குடியேற்றினோம். அடுத்ததாக இதேபோல் யான் ஓயாவில் (சிங்களவர்களை) குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். மூன்றாவதாக ஈழத்துக்கு எதிரானவர்களை மல்வத்து ஓயாவின் கரைகளில் குடியேற்ற முடிவுசெய்தோம்.

‘மதுறு ஓயாவில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தனியரசுக்கு எதிரான ஒருதொகை மக்களை உருவாக்கினோம். யான் ஓயாவில் பிரிவினைக்கு எதிரானவர்களைவர்களை குடியேற்றுவதன் மூலம் மக்கள் தொகை 50,000 ஆகக் கூடியிருக்கும். இதன் மூலம் போராளிகளிடம் இருந்து திருகோணமலையை முற்றாகக் காப்பாற்றி விடலாம்.’

1988-89ல் வெலி ஓயாவில் முதல் கட்டமாக 3,364 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கிறிமினல் குற்றவாளிகள் ஆவர். இரண்டாம் கட்டமாக 35,000 பேர் குடியமர்த்தப் பட்டார்கள். இந்தக் குடியேற்றங்களைப் பாதுகாக்க சிங்கள இராணுவ முகாம்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டன. இதில் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜானக பேரராவின் சேவையை ‘மெச்சி’ தண்ணிமுறிப்பு ஜானகபுரவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு பிரிகேடியர் கிரான் கலன்கொட வெலிஓயாவின் கேந்திர முக்கியத்துவம்பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தது கவனிக்கத் தக்கது.

“Weli Oya is very important militarily. Our presence will not allow the North-East merger. Terrorists cannot win Eelam as long as we stay here. If we go, there will be a threat to Padavia, Kebitigollewa and eventually Anuradhapura.” (Sunday Observer – 22 February, 1998).

இப்போது 11 ஆண்டுகள் கழித்து வெலி ஓயாவில் உள்ள கென்ட் பாம், டொலர் பாம், சிலோன் தியேட்டர், கஜபாகுபுரம் உட்பட ஆறு பெரியதும் சின்னதுமான இராணுவ முகாம்கள் வி.புலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி அவர்களிடம் வீழ்ந்துள்ளன.

இதை எழுதும் போது ஜானகபுர இராணுமுகாம் வி.புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாகவும் அது எந்த நேரத்திலும் அவர்கள் கையில் விழலால் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வி.புலிகளின் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பயந்து சுமார் 9,000 சிங்களக் குடியேற்றவாசிகள் அண்மையில் உள்ள பதவியாவிற்கும், அனுராதபுரத்துக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். இந்த இடப்பெயர்வை ஒத்துக் கொண்ட சனாதிபதி சந்திரிகா அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எண்பதுகள்வரை சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் முடிக்குரிய வெற்றுக் காணிகளிலேயே பெரும்பாலும் இடம் பெற்றது. ஆனால் அதன்பின் தமிழர்களைத் துரத்திவிட்டு அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்களவர்களை குடியேற்றும் படலம் ஆரம்பமானது. மணலாறு அதில் ஒன்றாகும்.

வெலி ஓயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் இன்னொரு ‘சாதனை’யையும் ஸ்ரீலங்கா அரசு படைத்தது. வட தமிழீழத்துக்கும் தென் தமிழீழத்துக்கும் இடையிலான நிலத்தொடர்வை வெட்டியதே அந்தச் ‘சாதனை’யாகும். இதன் மூலம் தமிழர்களது தயாகக் கோட்பாட்டிற்று வேட்டு வைப்பதே சிங்கள அரசின் அரசியல் – இராணுவ நோக்கமாகும்.

வெலி ஓயாப் பிரதேசத்திலிருந்து சிங்களக் குடியேற்றமும் அந்தச் சிங்களக் குடியேற்றத்துக்கு காவலாகச் செயல்படும் இராணுவத்தையும் எங்கள் மண்ணிலிருந்து விரட்டி அடித்து தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீண்டும் முற்றாக மீட்டு எடுக்கப்பட வேண்டும். அந்த மீட்பு நாளே நமது வாழ்வின் திருநாள்.

எமது மரபுவழித் தாயகத்தை இழப்போமா? அல்லது போராடிப் மீழப் பெறுவோமா?

(நக்கீரன்)

தமிழீழத் திருநாட்டின் தலைநகரான திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் (2000)ஆண்டை அகிலவுலக சமாதான ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப் படுத்தியுள்ளது. இதனை ஒட்டி 87 உலக நாடுகளின் நகரங்கள் சமாதான நகரங்களாக யூனெஸ்கோ முன்மொழிந்துள்ளது.

உருசியாவின் மொஸ்கவ், வியட்நாமின் ஹனோய், யப்பானின் ஹிரோசிமா, ,ஸ்ரேலின் ஜெரூசலம், லெபனாவின் பெயிரூட் போன்று தமிழீழத்தில் திருகோணமலை சமாதான நகரமாக யூநெஸ்கோவினால் முன்மொழியப் பட்டுள்ளது.

திருகோணமலை நகரின் சமாதான துவக்க விழா போன வாரம் மிகவும் ‘கோலாகலமாகக்’ கொண்டாடப்பட்டுள்ளது.

அன்புவழிபுரம் சந்தியில் எழுதப்பட்ட அலங்கார வளைவை தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர திரை நீக்கம் செய்து வைத்திருக்கிறார். அத்தோடு திருமலைக் கடற்கரையில் அமைச்சர் மங்கள சமரவீர ‘சமாதான நகர் நினைவுச் சின்னம்’ ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.

சமாதான நகர் துவக்கவிழா திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நடந்தேறியிருக்கிறது. இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர திருகோணமலையை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆரம்பக்கட்டமாக யப்பான் உதவியுடன் திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கென 150 மில்லியன் (15கோடி) ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

‘இலங்கையில் மூன்று இனங்கள் வாழும் திருகோணமலை சமாதான நகரமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. எமது அரசாங்கம் நிரந்தர சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு உறுதியுடன் உழைத்து வருகிறது. திருகோணமலை இலங்கையில் சமாதானத்தைப் பேணும் ‘மாதிரி’ நகரமாக மாறும். இலங்கையின் வர்த்தக நகராக திருகோணமலை நகரம் அபிவிருத்தி செய்யப்படும்” இப்படி அமைச்சர் மங்கள சமரவீர வயிற்றுப் பிள்ளை கீழே நழுவி விழுமாறு அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சனாதிபதி சங்திரிகா குமாரணதுங்கா இந்த துவக்க விழாவையொட்டி ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வட-கிழக்கு மாகாண ஆளுநர் அசோகா ஜெயவர்த்தன வாசித்தார். அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது –

‘திருகோணமலையை சமாதான நகராகப் பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது. அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.”

திருகோணமலை நகரை சமாதான நகராகப் பிரகடனப் படுத்த யூனெஸ்கோ உண்மையாக தன்பாட்டில் முன்வந்திருந்தால்; இந்த யோசனையை முன்மொழிந்த அந்த அமைப்பின் அதிகாரிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு இருந்திருக்க வேண்டும்.

காரணம் திருகோணமலை நகரம் சமாதானத்தைக் கண்டு, அதன் காற்றைச் சுவாசித்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிறது.

திட்டமிட்ட- இடைவிடாத சிங்களக் குடியேற்றம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மையராக இருந்த சிங்களவர் இன்று பெரும்பான்மையராகவும் பெரும்பான்மையராக இருந்த தமிழர் சிறுபான்மையராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு இன்றுவரை திருமலை மாவட்டத்துக்கு தமிழர் ஒருவர் அரசாங்க அதிபராக நியமனம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. பரங்கியர் ஒருவர் அரசாங்க அதிபராக இருந்திருக்கிறார். ஆனால் தமிழர் ஒருவர் இதுவரை இருக்கவில்லை. அரசாங்க அதிபர் பதவி மட்டுமல்ல காணிப் பங்கீட்டுக்குப் பொறுப்பாவுள்ள மாவட்ட காணி அதிகாரி (District Land Office) பதவியும் அன்று தொடக்கம் இன்றுவரை சிங்களவராலேயே நிரப்பப்பட்டு வந்திருக்கிறது.

இவை ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இந்த மாவட்டத்தை சிங்கள மயப்படுத்துவதற்கு வசதியாக திட்டமிட்டே பின்பற்றப்பட்டு வரும் பேரினவாதக் கொள்கையாகும்.

வட- கிழக்கு ஆளுநர் பதவியை முன்னைய காமினி பொன்சேகா இராஜினாமா செய்த போது அவரது இடத்துக்கு இன்றைய மேஜர் ஜெனரல் அசோகாவை சந்திரிகா அரசு அவசர அவசரமாக நியமித்தது.

தனது இராணுவப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற 48 மணித்தியாலங்களுக்குள் அசோகா ஜெயவர்த்தனா வட- கிழக்கு ஆளுனராகப் பதவியேற்றார்.

வட- கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி பேசுவோரே இன்றும் பெரும்பான்மையராக இருக்கிறார்கள். எனவே ஒரு தமிழர் ஆளுனராக நியமிக்கப் படுவதே நியாயமாகும். ஒத்துழைப்புத் தமிழர்களில் ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தியிருக்கலாம். ஒத்துழைப்புத் தமிழர் மீதும் சந்திரிகா அரசுக்கு நம்பிக்கையில்லா விட்டால் குறைந்த பட்சம் ஒரு முஸ்லீமை ஆவது ஆளுநராக நியமித்திருக்கலாம். ஆனால் சிங்கள அரசு ஒருபோதும் அப்படிச் செய்யாது. அப்படிச் செய்வது அதன் எழுதப்படாத அல்லது பிரகடனப் படுத்தப் படாத இனவாதக் கொள்கைக்கு முரணாக இருக்கும்.

மாறி மாறி ஆட்சிக் கதிரையைப் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்குள் அரசியல் மட்டத்தில் அடிபட்டுக் கொண்டாலும் வட-கிழக்கு மாகாணத்தில் தமிழருக்குச் சொந்தமான பூமியில் சிங்களவரைக் குடியேற்றி அதனைச் சிங்கள மயப்படுத்த பெரும்பாடுபட்டு வருகின்றன. இதில் சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பிடத் தக்க வெற்றியும் கண்டுள்ளார்கள்.

ஐ.தே.கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தங்களுக்குள் குத்துப் பட்டு வெட்டுப் பட்டாலும் தமிழ் மண்ணில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடுவதைப் பொறுத்தளவில் இந்த இரண்டு கட்சிகளும் அண்ணன் – தம்பிபோல் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்பதற்கு எடுத்துக் காட்டு அம்பாரையில் சென்ற வாரம் நடந்து முடிந்த கல்லோயாத் திட்ட பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டமாகும்.

இந்தப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அரசியலில் கீரியும் – பாம்பும் போல் சண்டை போடும் நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சரும் துணைப் பாதுகாப்பு அமைச்சருமான அநுருத்த இரத்வத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே மேடையில் இராம-இலட்சுமணர் போல் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.

வட-கிழக்கு மாகாணத்திலும், குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றங்களை குடித் தொகை கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1881ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் எண்ணி 935 சிங்களவரே வதித்து வந்தார்கள். இது மொத்த விழுக்காட்டில் 4.2. ஆனால் ஒரு நூற்றாண்டு கழித்து அதாவது 1981 ஆம் ஆண்டு சிங்களவர்களது தொகை 86,341 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த விழுக்காட்டில் 33. 6. பின்வரும் அட்டவணை இந்தத் தலைகீழ் மாற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது.
அட்டவணை 1
திருகோணமலை மாவட்ட மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981)  

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்கள்

ஆண்டு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

1881

935

4.2

14394

64.8

5746

25.9

1891

1109

4.3

17117

66.4

6426

25.0

1901

1203

4.2

17069

60.0

8258

29.0

1911

1138

3.8

17233

57.9

9714

32.6

1921

1501

4.4

18586

54.5

12846

37.7

1946

11606

15.3

33795

44.5

23219

30.6

1953

15296

18.2

37517

44.7

28616

34.1

1963

40950

29.6

54050

39.1

42560

30.8

1971

54744

29.1

71749

38.1

59924

31.8

1981

86341

33.6

93510

36.4

74403

29.0

 

கிழக்கு மாகாண  மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981)  

சிங்களவர்

தமிழர்

முஸ்லிம்கள்

ஆண்டு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

தொகை

விழுக்காடு

1881

5947

4.50

75408

61.35

43001

30.65

1891

7512

4.75

87701

61.55

51206

30.75

1901

8778

4.70

96296

57.50

62448

33.15

1911

6909

3.75

101181

56.20

70409

36.0

1921

8744

4.50

103551

53.50

75992

39.4

1946

23456

8.40

146059

52.30

109024

39.1

1953

46470

13.10

167898

47.30

135322

38.1

1963

109690

20.10

246120

45.10

185750

34.0

1971

148572

20.70

315560

43.90

248567

34.6

1981

243358

24.90

409451

41.90

315201

32.2

 1881 ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981ம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881ம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது.

இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா (பட்டிப்பளை ஆறு), மதுறு ஓயா, திருகோணமலையில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்) போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும்.

1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடிசன கணிப்பீடு எடுக்கப் படவில்லை. 2001ல் குடிவரவு கணிப்பீடு எடுக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன்போது தமிழர்களது எண்ணிக்கையும் விழுக்காடும் இனக் கலவரங்கள், புலப்பெயர்வுகள், இடப்பெயர்வுகள் காரணமாக பெருமளவு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம்.

திருகோணமலையை தமிழர்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்பது சிங்கள பேரினவாத அரசுகளின் நீண்ட காலத் திட்டமாகும். ஐம்பதுக் கடைசிகளில் திருகோணமலையை அண்டிய பகுதிகளில் ஸ்ரீமாபுர, அக்போபுர குடியேற்றக் கிராமங்கள் உருவாகிவிட்டன. ‘சம்பந்தர் புரம்’ என்ற பெயரில் தமிழ் மீனவர் வீடமைப்புத் திட்டத்தில் குடியிருந்த தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொலைசெய்து எஞ்சியவர்களை கலைத்துவிட்டு அதில் வலோத்காரமாக குடியேறியுள்ளார்கள். இதே போல் இந்து ஆலயங்களின் தீர்த்தத் திருவிழா நடைபெறும் தீர்த்தக் கடற்கரைப் பிரதேசமும் தமிழ் மீனவர்கள் கரைவலை மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தி வந்த ‘உயர்ந்த பாடு’ கடற்கரைப் பகுதியும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் திருகோணமலை கீரித்தோட்டப் பகுதியில் திருமலை நகரசபையால் 60 இலட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பொதுச் சந்தை சிங்கள இராணுவம், சிங்கள வர்த்தகர்கள் இவர்களது எதிர்ப்பால் மூடப்பட்டுக் கிடக்கிறது. திருமலையில் வர்த்தகம், குறிப்பாக மீன், மரக்கறி வியாபாரம் நூறு விழுக்காடு சிங்களவர்கள் கையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனப்படுத்தி அதனை ஒரு வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் மேலும் அங்குள்ள சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே சந்திரிகா அரசின் அந்தரங்க நோக்கமும் திட்டமுமாகும்.

‘திருகோணமலையை சமாதான நகராக பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறோம். அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு’ என்று சனாதிபதி பேசியிருப்பதன் அர்த்தம் திருகோணமலையை கைப்பற்றுவதில் அரசாங்கம் வெற்றிபெறும் அதில் தனக்கு நம்பிக்கையுண்டு என்பதுதான்.

நமது மரபுவழித் தாயகத்தின் பெரும்பகுதியை நாம் இழந்து விட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை சிங்களக் குடியேற்றத்திற்குப் பறிகொடுத்து விட்டோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1961 இல் அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டதும், இதே காலகட்டத்தில் அம்பாரைத் தேர்தல் தொகுதியும் (1960) சேருவில தேர்தல் தொகுதியும் (1977) சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டதும் அதனை உறுதி செய்கிறது.

திருகோணமலை நகரம் சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டதை நாம் போர்ப் பிரகடனமாகவே அர்த்தம் கொள்ளல் வேண்டும்.

முடிவாக எமது மரபுவழித் தாயகத்தை சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு நிரந்தரமாக இழப்போமா? அல்லது போராடி அதை மீழப் பெறுவோமா?

https://nakkeran.com/index.php/2018/06/13/manarl-aru-the-heartland-of-tamil-homeland/

2010இல் வன்னி சென்று திரும்பிய செய்தியாளர் கண்ட காட்சிகளின் விரிப்பு

1 month 2 weeks ago
1/1/2010
 
 
வன்னியின் இன்றையை நிலையை புதினப்பலகை தமிழ் ஈழ இணையதளம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை...

புதினப்பலகையின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார்.

இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார்.

எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது புதினப்பலகை.

- சித்தார்த்தன் என்கிற கௌதம புத்தன் ஒர் ஆக்கிரமிப்பாளன் -

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மூன்று மணி நேரப் பயணத்தில் எனக்குத் தோன்றியதெல்லாம் இது தான்.

மூன்று வருடங்களின் பின்னர் தாயக மண் நோக்கிய எனது பயணம் கடந்த டிசம்பர் 31ஆம் நாள் ஆரம்பமானது. வவுனியா நகரில் இருந்து எங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி "தேக்கவத்தை" என்ற இடத்தில் இறக்கி விட்டது.

இந்த ஊர் முன்னர் 'தேக்கங் காடு' என்றே அறியப்பட்டிருந்தது.

ஈரப்பெரிய குளத்திற்குப் பதிலாக படையினரின் சோதனை நிலையமாக இப்போது அந்த இடம் மாற்றப்பட்டிருக்கிறது.

அது ஒரு பழைய விளையாட்டுத் திடல். முகமாலை மாதிரியே அரைச் சுவர் வைத்த சோதனைச் சாவடிகள் அங்கேயும் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் ஓய்விடத்திற்கு அருகிலேயே பேருந்துகள் தரிப்பிடத்திற்கான நிலம் செம்மையிடப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்தச் சோதனை நிலையம் இன்னும் பல பத்தாண்டுகள் சிறப்பாக இயங்குவதற்காகத் தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.

வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்தும் கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றாக வந்து அங்கே வரத் தொடங்கின.

பிற்பகல் 2 மணிக்கு 6 பேருந்துகள் ஒரே அணியாக அங்கிருந்து புறப்பட படையினர் அனுமதித்தார்கள்.

நாங்கள் 12 மணிக்கே அங்கே போயிருந்தோம். எமது பொதிகள், பைகள் சோதனையிடப்படவில்லை அடையாள அட்டைகளின் பிரதிகள் வாங்கப்படவில்லை.

ஆனாலும் ஓய்விடத்தில் படை ஆட்கள் சொல்லும் படியே அமர்ந்து, அடையாள அட்டைகளை அவர்கள் பார்வையிட்ட பின்னர், அவர்கள் காட்டிய வழியில் நடந்து, அவர்களின் வழிகாட்டலில் பேருந்துகளில் ஏறிக்கொண்டோம்.

அந்த மைதானத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் இருந்து பயணிகளுக்கு பழங்களும் தேநீரும் விற்கப்படுகின்றன. விற்பவர்களில் சிங்களவர்களும் அரசின் தடுப்பு முகாம்களில் வசிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.

பேருந்துகள் தாண்டிக்குளம் ஜோசப் முகாம் தாண்டி ஓமந்தையை அடைகின்றன. அங்கே எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன.

சோதனைச் சாவடிகளுக்கு பேருந்துகளில் இருந்து இறங்கி நெருக்கி அடித்தபடி ஓடும் மக்களையும் சோதனைக்காக கால்கடுக்கக் காத்திருப்பவர்களையும் மட்டும் தான் காணவில்லை.

அமைதிக்காகக் காத்திருந்த 2000 முதல் 2006 வரையான ஆண்டுகளில் இந்தச் சோதனைச் சாவடி வழியாக பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் சென்று வந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் பல தடவைகள் சிங்களப் புலனாய்வாளர்களுடன் வாக்குவாதப்பட வேண்டி இருந்திருக்கின்றது.

அந்தச் சோதனைச் சாவடிகள் மீண்டும் தமது பொற்காலத்திற்காக ஏங்கி அப்படியே கிடக்கின்றன.

பழையபடியே பிரதான சாலையைத் தவிர்த்து சாவடிகளைச் சுற்றிக் கொண்டு பயணிக்கின்றன பேருந்துகள்.

தமிழீழம் வரவேற்கிறது பலகையைக் கண்கள் தேடுகின்றன. ஒன்றும் இல்லை. அங்கே முன்பு ஏதோ இருந்தது என்பதற்கான தடயங்களே கிடையாது.

அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த "பாஸ்" வழங்கும் இடம், தமிழீழ காவல்துறைப் பணியகம், தமிழீழ வருவாய்த்துறை நிலையங்கள் எல்லாமும் அழிக்கப்பட்டு விட்டன, எதுவும் இல்லை, இருந்த இடம்கூடத் தெரியவில்லை.

வெறும் பச்சைப் பசேல் என்ற புல் வெளிகளாக வீதி ஓரங்கள் அனைத்தும் விரிந்து கிடக்கின்றன.

ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் வீதியின் இரு மருங்கும் சுமார் அரைக் கிலோ மீட்டருக்கு இப்போது ஒன்றுமே இல்லை.

செம்புழுதி படிந்தபடி கிடந்த காட்டு மரங்கள் இல்லை. பாலை மரங்களும் ஏனைய பெரிய மரங்களும் அங்கு இருந்ததற்கான அடையாளங்களும் இல்லை.

மேற்கு நாடுகளின் முற்றங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட புல் தரைகளாக அவை காட்சி அளிக்கின்றன. ஏன் அகற்றினார்கள் தமிழீழத்தின் அத்தனை பெரிய மரங்களையும் அடிக்கட்டை கூட இல்லாமல்.....? புரியவில்லை.

அந்தப் புல் வெளிகளுக்கு நடுவே 200 மீட்டர் தூரத்திற்கு ஒன்றாக காவல் அரண்கள் -- கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.

காட்டு மரங்கள் நட்டு, ஓட்டுக் கூரை போட்டு, அரை வாசிக்குச் சரிவாக அணைக்கப்பட்டுள்ள மண்ணில் அறுகம் புற்கள் வேர்விட்டு பசுமையாய் படர்ந்திருக்கின்றன. இந்த காவல் அரண்களுக்கு இடையே தான் மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

அவர்களுக்கு எல்லாமும் கொடுக்கப்படும் தகரங்கள் தான். காட்டுத் தடிகளால் நான்கு கப்பு நட்டு, கூரை போட்டு மேலேயும் தகரம், சுற்றி வரவும் தகரம். இது தான் இப்போதைக்கு அவர்களின் இல்லம்.

பக்கத்தில், மிக நெருக்கமாக, அவர்களுக்கு இருக்கும் துணை - படை ஆட்களின் காவல் அரண்கள் மட்டும் தான்.

மீளக் குடியமர்ந்த மக்களின் வீடுகளில் இருந்து 20 அடி தூரத்தில் காவல் அரண்கள் கண்ணுக்குப்படுகின்றன.

இல்லை.... நான் சொல்வது தவறு என்று நினைக்கிறேன்.... சரியாகச் சொன்னால், காவலரண்களில் இருந்து 20 அடி தூரத்தில் கொட்டகை அமைப்பதற்கு தான் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

வெய்யில் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மேலேயும் சுற்றி வரவும் தகரங்களும் தரப்பாள்களும் கொண்ட கொட்டகைகளில் வாழ்வு எப்படி இருக்கும் என்பதன் அனுபவம் 1996-இல் கிளிநொச்சியை விட்டு ஓடி ஒட்டுசுட்டானில் இருந்த போதே எனக்குத் தெரியும்.

அந்தத் தற்காலிகக் கொட்டகைகளின் அருகிலேயே பெண்களும், சிறுமிகளும், இளைஞிகளும் காணப்படுகிறார்கள். காவல் அரண்களில் படை ஆட்கள் இருக்கிறார்கள்.

சில இடங்களில் காவல் அரண்களுக்குப் பதில் காவல் துறையினரின் நிலைகள். மக்களின் தற்காலிகக் கொட்டில்களை விட அவை உறுதியானவையாகவும், அரை நிரந்தரமானவையாகவும் ஓடு போடப்பட்டவையாகவும் காட்சி தருகின்றன.

கிணறுகளுக்கு அருகில் காணப்படும் இந்தக் காவல் நிலையங்களில் உள்ளவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைப் பேருந்தில் இருந்தபடியே பார்க்க முடிகிறது.

பேருந்து அந்த இடத்தைக் கடக்கையில் 10 அடி தூரத்தில் அடுத்த கொட்டில் தெரிகிறது. உள்ளே இருப்பவர்களைப் பேருந்தில் இருந்தும் பார்க்க முடிகிறது.

வீதியோரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இன்னும் உயிர் வாழும் வாய்ப்பு அரச மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. அரச மரங்கள் காணும் இடங்களில் எல்லாம் அதைச் சுற்றி வெள்ளை வெளீர் என்று சுவர்கள் கண்ணைப் பறிக்கின்றன.

கௌதம புத்தர் அந்த மரங்களின் கீழே சத்தியத்தையும், அமைதியையும், வாழ்க்கையின் நிலையாமையையும், அகிம்சையையும் போதித்தபடி அமர்ந்திருக்கிறார்.

பேருந்துகள் மாங்குளத்தை நெருங்கிவிட்டன. முறிகண்டியில் அவை ஓய்வுக்காக நிறுத்தப்படும் என்றும் அங்கே ஒட்டுசுட்டான் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சாப்பாட்டுக் கடை ஒன்று திறந்திருக்கிறது என்றும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் எனது உறவினர் முறிகண்டியில் தான் இருப்பார் என்பதும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது.

பல வருடங்களின் பின்னர், முக்கியமாக கடைசிப் போரில் எப்படியோ உயிர் தப்பிய அவரைப் பார்க்கும் ஆவல் என்னிடம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமாகி விட்ட தமிழர்களில் நான் விதிவிலக்கா என்ன...? மாங்குளத்தில் உள்ள படைகளின் உணவு விடுதியில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன.

சிற்றுண்டிகளுக்கான பட்டியல் முதலில் சிங்களத்திலும் பின்னர் தமிழிலுமாக எழுதப்பட்டு நீட்டாகத் தொங்க விடப்பட்டிருக்கிறது.

புறப்படும் போது மதியச் சாப்பாடு சாப்பிட்டிருக்கவில்லை எனினும் அங்கே எதையும் சாப்பிட மனம் இடங்கொடுக்கவில்லை. முறிகண்டியில் இனி பேருந்துகள் நிற்காது என்ற ஏமாற்றமும் எரிச்சலும் வேறு மனதை அலைகழித்தது.

சலத்தையாவது கழிப்போம் என்று எதிர்ப் புறத்தில் Toilet என எழுதப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் போனேன். உள்ளே என்ன கந்தறு கோலமோ என நினைத்துக் கொண்டே பற்றைப் பக்கமாக ஒதுங்கினேன்.

சரசரப்புடன் ஏதோ ஒன்று நகர்ந்தது. கூர்ந்து பார்த்தபோது பச்சை உடையில் கைகளில் ஆயுதங்களுடன், தன் மீது தெறித்து விடாதபடிக்கு அந்த மனிதன் நகர்ந்து கொண்டான்.

இழுத்த ஜிப் அரைவாசியில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறையப் பேர் அந்த மனிதன் போன்றே நின்றிருந்தார்கள்.

பேருந்துகளில் வந்தவர்கள் காடுகளுக்குள் போய் விடாமல் இருக்கக் காவல்.

அந்த நாற்றத்திற்குள் நின்று காவல் செய்ய வேண்டும் என்று உனக்கு விதிக்கப்பட்டிருந்தால், நான் என்ன செய்வது...? என் வேலை முடித்து வந்து பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

மாங்குளம் முகாம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஏ-9 வீதிக்குக் கிழக்காக விரிந்து கிடக்கிறது. 200 ஏக்கரா அதற்கும் மேலா என்று எனக்கு மதிப்பிடத் தெரியவில்லை.

(மாங்குளம் சந்தியி்ல் உள்ள ஒரு வழிகாட்டுப் பலகை. ஊர்களின் பெயர்கள் சிங்களத்தில் இரு முறை எழுதப்பட்டுள்ளன: ஒன்று - அந்த ஊர்களுக்கு உரிய சிங்களப் பெயர்கள் (யாப்பாணய). அடுத்தது - சிங்களவர்களால் அந்த ஊர்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள் (யாப்பா பட்டுவ)

முகாமைக் கடந்ததும் மீண்டும் ஒரு அரச மரம், சுற்றி வெள்ளைச் சுவர் அமைதியைப் போதிக்கும் பெரிய கௌதம புத்தர். இதுவரை பார்த்தவர்களிலேயே பெரியவர்.

மீண்டும் வீதியின் இரு மருங்கும் அதே காட்சிகள். எங்கெல்லாம் ஓடு போட்ட கட்டடங்கள் தெரிகின்றனவோ, அவை எல்லாம் ஒன்றில் படையினரின் முகாம்களாக, அல்லது காவல்துறை நிலையங்களாக இருக்கின்றன.

தன் தாய் நிலத்தில் தகரங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறான் தமிழன்.

கனகராயன் குளத்தில் பாடசாலைக் கட்டம் அப்படியே இருக்கின்றது. வெள்ளைச் சீருடையில் சில மாணவர்களைக் காண முடிகிறது.

ஆனால், பாடசாலைகளைக் கடக்கும் போது எப்போதும் கேட்கும் அந்தத் தனித்துவமான இரைச்சல் சத்தம் கேட்கவே இல்லை.

ஆங்காங்கே இடிந்து போன கோயில்களின் எச்சங்கள் தங்களைப் புனரமைக்கப் போகும் மீட்பர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன.

பேருந்துகள் கிளிநொச்சியை நெருங்குகின்றன.

அமைதிக்காகக் காத்திருந்த காலங்களில் எனக்கு மிக நெருக்கமான ஊர் அது. பணி நிமித்தம் பல தடவைகள் அந்த நகரத்துக்கு வந்து போயிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்திற்குப் பின்னர் எனது பாதங்கள் அதிகம் நடந்தது அந்த நகரத்தில் மட்டும் தான்.

55 ஆம் கட்டையில் புலிகளின் குரல் ஒலிபரப்புக் கோபுரங்கள் இருந்த இடத்தில் இப்போது வேறு கோபுரங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ஒன்றல்ல இரண்டு.

கிளிநொச்சியை நெருங்குகையில் புலிகளின் குரல் வானொலிப் பணியகம் இருந்த இடத்தில் சிறிலங்கா படைகளின் சமிக்ஞை மத்திய நிலையம் நின்று கொண்டிருக்கின்றது.

முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வலுவாக நிரந்தரக் கட்டங்களுடன் அது காட்சி தருகிறது. அந்த இடமே சமிக்ஞை தருவதற்குத் தான் உகந்தது போல் இருக்கிறது.

கிளிநொச்சி நகரைப் பார்ப்பதற்கு கண்களும் இதயமும் துடிக்கின்றன. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் ஓட்டையாகிப் போன சுவர்கள் இன்னும் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. அருகில் வேறு எவற்றையும் காணவில்லை.

பாண்டியன் உணவு விடுதி இருந்த இடம் தெரியவில்லை.

முன்னாலேயே பூங்காவில் முதிர்ந்த மரங்கள் தவிர பெரிதாக நினைவிடம் ஒன்று எழுந்து நிற்கிறது. போரில் இறந்த படையினருக்கானது அது.

மேலிருந்து வெடித்துப் பிளந்து பூமி நோக்கி ஒரு வேர் போவதாக அமைத்திருக்கிறார்கள். மிகப் பிரமாண்டமாக இருக்கிறது.

அதே இடத்தில் முன்னர் ஏதோ இருந்ததாக எனக்கு ஞாபகம். நினைவுபடுத்திப் பார்க்க விருப்பம் வரவில்லை.

கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதையின் மேற்குப் புறத்தில் ஒன்றும் இல்லை. கற்குவியல்கள் மட்டுமே கிடக்கின்றன.

சந்தை, கடைகள், மதுக் கடை, எதிர்ப் புறத்தில் இருந்த சேரன் வாணிபம்... கற்குவியல்களுக்குள் தேடினால் தடயங்கள் கிடைக்கக் கூடும்.

எல்லாமும்... எல்லாமுமே... போய்விட்டன. எஞ்சி இருக்கும் கடைகளில் சிங்களம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.

நெஞ்சு விம்மி வெடித்து இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.

பேருந்தில் மயான அமைதி. எல்லோர் கண்களும் கடப்பதற்குள் பார்க்க முடிந்தவற்றைப் பார்வையால் விழுங்கிக் கொள்கின்றன.

புதிதாகக் கட்டப்பட்டிருந்த தமிழீழ காவல்துறை அலுவலகம் கூரைகள் ஏதும் இன்றி எஞ்சி நிற்கிறது.

முன்பு - அடிக்கடி போய் வந்திருக்கிறேன். சில வேளைகளில் இரவு நேர ஓய்வுகூட அங்கே தான் எடுத்திருக்கிறேன். மூன்று வருடங்களில் எல்லாமும் மாறி விட்டன.

அந்தத் தண்ணீர் தொட்டி மீண்டும் உடைந்து கிடக்கிறது. முன்னர் அதன் தண்டுப் பகுதி நொருங்கி தொட்டிப் பகுதி மண்ணில் அரைவாசியாகப் புதையுண்டு கிடந்தது. இப்போது அடியில் தண்டுப் பகுதியுடன் முறிந்து கிழக்கு நோக்கிச் சாய்ந்து கிடக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல் துறைச் செயலகம், மாணவர் அமைப்புச் செயலகம் அமைந்திருந்த அந்தப் பகுதி இப்போது அதி உயர் பாதுகாப்ப வலயமாகத் தோன்றுகின்றது.

அந்த இடத்தில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை தொடங்கும் பிள்ளையார் கோயில் வரைக்கும் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருக்கும் படை முகாம்கள் மட்டுமே தெரிகின்றன.

அந்தப் பக்கத்தில் கடைகள் கொஞ்சம் எஞ்சி இருக்கின்றன. தமிழர்கள் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக அவற்றின் மேல் எழுதப்பட்டுள்ள தமிழ் வாசகங்கள் மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன.

மறு புறத்தில் - மருத்துவமனைப் பகுதியை கடந்து நிமிர்ந்தால், ஞானம் கிடைக்காதவர்கள் மனிதர்களே இல்லை.

அங்கும் கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் கௌதம புத்தர். நயினாதீவு நாக விகாரை சின்னதாகத் தோன்றியது எனக்கு.

பெரிய அரச மரத்தை விட்டு சற்று வெளியே அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தால் தனது இருப்பு மறைக்கப்பட்டு விடும் என்று நினைத்தாரோ என்னவோ வீதியில் செல்வோரைப் பார்த்தபடியே தியானம் செய்கிறார்.

கண்ணைப் பறிக்கும் வெள்ளை மதில் சுவர்கள் கணிசமான பிரதேசத்தைச் சுற்றி வளைத்து நிற்கின்றன.

கிளிநொச்சிப் பிள்ளையார் கோயில் குண்டுக் காயங்களுடன் ஆனாலும் ஓட்டுக் கூரையுடன் முடிய கதவுகளுடன் இன்னும் அங்கேயே இருக்கின்றது.

இனி பேருந்துக்கு வெளியே பார்ப்பதை நிறுத்திக் கொள் என்று மூளையில் இருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதனை மதிக்கத் தவறும் உணர்வுகள் பரந்தன் சந்தியில் அலை மோதுகின்றன.

விசுவமடு நோக்கிச் செல்லும் பாதையின் மூலையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தனியார் நிறுவனம் ஒன்று கட்டிவிட்ட ‘பருவகால வாழ்த்துக்கள்’ பதாகை தொங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தக் கட்டத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை; எனக்குச் சிங்களம் படிக்கவோ பேசவோ வராது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எதிரே இருந்த கடைகளில் சில திறந்திருக்கின்றன. சிற்றுண்டிச் சாலைகள் என்பது பார்த்தால் தெரிகிறது.

ராணுவ உருமறைப்பு உட்சட்டை அணிந்தவர்கள் சிலர் அங்கே அமர்ந்து தேநீர் அருந்துகிறார்கள். அங்கே எழுதி இருப்பவையும் அவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

இத்தனைக்கு மேல் இனியும் பார்க்க வேண்டுமா...? மனம் அங்கலாய்க்கிறது.

நான் பார்க்க விரும்பவில்லை என்பதற்காக உண்மைகள் மறைந்துவிடப் போவதில்லையே!

ஆணையிறவு....!

முகமாலை சோதனைச் சாவடியை மூடிவிடப் போகிறார்களே என்ற காரணத்திற்காக மாலை 4.30 மணிக்கு உந்துருளியில், கண்களில் நீர் தாரையாக வழிய, 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலே, முகத்தில் வந்தறையும் உப்புக் காற்றை எதிர்த்து நான் ஓடித் திரிந்த பாதை.

பளையின் அந்த வளைவுகளைக் காணும் போது மட்டுமே என் உந்துருளியின் வேகம் குறையும். அந்தப் பக்கம் தமிழீழ காவல்துறையின் போக்குவரத்துக் கண்காணிப்பு ஆட்கள் நிற்பார்கள் என்ற பயம்.

உப்புக் கடலைத் தாண்டி, வாடி வீடு இருந்த இடத்தில் முதலில் உடைந்து போன பீரங்கி வண்டி ஒன்று முன்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது எதுவும் இல்லை.

2000-இல், சிறிலங்கா படைகளிடம் இருந்து ஆனையிறவை விடுதலைப் புலிகள் மீட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் விதத்தில் நினைவிடம் நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருந்த இடத்தில் இப்போது ‘ஆனையிறவு மாடி வீடு’ என்ற மிகப் பிரமாண்டமான நினைவிடம் நின்று கொண்டிருக்கிறது.

சிமென்ட்டினால் போடப்பட்ட அடித்தளத்தின் மேலே செப்புப் படிமங்களால் ஆக்கப்பட்ட பல கைகள் முழு இலங்கையைத் தூக்கிப் பிடித்து நிற்கின்றன.


தாமரைப் பூவும் மொட்டும், அந்த இலங்கையின் ஆனையிறவுப் பகுதி வழியாகப் பின்னிருந்து முன்பாகக் கவிழ்ந்து கிடக்கின்றன.

பணிகள் இன்னும் நடைபெறுகின்றன. கீழே மலர்ச் செடிகளும் வண்ணத் தாவரங்களும் வளர்ப்பதற்கும் நடைபாதை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், கட்டத்தைச் சுற்றி இருந்த மறைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. யாரும் இதுவரை அதனைத் திறந்து வைக்கவில்லை. ஆனாலும், சிங்களவர்கள் நிறையப் பேர் யாழ்ப்பாணம் வந்து போகிறார்கள்.

பளையில் விடுதலைப் புலிகளின் சோதனை நிலையங்களும் "பாஸ்" அலுவலகங்களும் இருந்தன என்பது என் நினைவில் மட்டுமே இப்போது இருக்கின்றது.

பளை நகருக்கு அருகிலேயே எனது தோழிக்கு பல ஏக்கர் தென்னந் தோட்டம் இருக்கிறது.

இப்போது வந்தால் அவளுக்கு அது எங்கிருந்தது என்று அடையாளம் தெரியுமா...? சொல்லத் தெரியவில்லை.

எறிகணைகளும் குண்டுகளும் கழுத்தறுத்த தென்னைகள் நின்றிருக்க வேண்டுமே..? 2001-இல் வந்த போது அவற்றைத் தானே முதலில் கண்டோம்.

இப்போது அந்தக் கழுத்தறுந்த தென்கைள் கூட இல்லை. ஆங்காங்கே சில மீட்டர் தூரங்களில் இருக்கும் காவல் அரண்கள் அதற்கான காரணத்தைச் சொல்லக்கூடும்.

இந்தப் பாதை முழுவதும், மீணடும், இடை இடையே கௌதம புத்தர் ஞானம் வேண்டித் தியானம் செய்து கொண்டே இருக்கிறார்.

முகமாலை சோதனை நிலையம் இருந்த இடம் இது தானா என்று ஞாபகப்படுத்திப் பார்க்கக் கடினமாக இருக்கிறது. மிருசுவில் வந்துவிட்ட பின்னர்தான் இந்த இடங்களை எல்லாம் நாம் தாண்டி வந்து விட்டோம் என்பது உறைக்கிறது.

ஒரு நாடு ஒரே மக்கள் ((one nation one people) எழுத்துக்கள் மஞ்சள் பலகையில் கறுப்புப் படிமங்களாகச் சிரிக்கின்றன.

இந்தப் பயணத்தின் முடிவில் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதில் தவறு இருப்பதாக எனக்கு கிஞ்சித்தும் தோன்றவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்டதன் அடையாளமாக நிறுத்தப்படும் வரையில் கௌதம புத்தனும் ஒரு ஆக்கிரமிப்பாளனே தான்.

சித்தார்த்தனாகத் தான் பிறந்த போது செய்யத் தவறியதை சிறிலங்காவில் அவன் செய்கிறான்.

யாழ்ப்பாணம் அப்படியே தான் இருக்கிறது. அபிவிருத்தி அடைந்ததாய் ஊடகங்கள் சொன்னவற்றைக் கண்களால் காண முடியவில்லை.

வங்கிகள் மட்டுமே அவசர அவசரமாக குக்கிராமங்களையும் ஒழுங்கைகளையும் தேடிச் சென்று கிளைகள் திறக்கின்றன.

மதுச் சாலையின் முன்பாகத் தான் வங்கிக் கிளை அமைக்க இடம் கிடைக்குமா...? அது பற்றிக் கவலையில்லை; எங்கே இருந்தாலும் கிடைக்க வேண்டியது பணம் தானே...?

வாழ்ந்த இடங்களும் திரிந்த இடங்களும் இப்படிக் கிடக்கையில் மக்கள் என்ன சொல்கிறார்கள்...?

தாங்கள் பட்ட துன்பங்களின் வடுக்கள் இன்னும் அவர்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை.

ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த பழைய நண்பன் ஒருவனுடன் தெருவோரக் கடை ஒன்றில் தேனீர் அருந்தினேன்.

உதயன் படித்துக்கொண்டு அரசியல் பேசிய பெரியவர் ஒருவரிடம், "தளர்ந்து போகாதங்கோ, ஐயா, எல்லாம் வெல்லலாம். பேராட்டத்தை மட்டும் கைவிட்டுவிடக் கூடாது" என்றான் என் நண்பன்.

பத்திரிகையிலிருந்து கண்களை எடுத்து அவனை நேரே பார்த்து அவர் சொன்னார் -

“வெளிநாட்டில இருந்துவிட்டு வந்து இங்க போராடுறதைப் பற்றிக் கதைக்கக் கூடாது, ராசா. இங்கயே சீவிச்சால் தான் இங்க என்ன நிலைமை எண்டு விளங்கும்."

திரும்பி என்னைப் பார்த்தான் நண்பன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
 
நன்றி
தட்ஸ் தமிழ்

ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்

1 month 3 weeks ago

பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன்
தி. செல்வமனோகரன்
 
First slide

18 நிமிட வாசிப்பு

March 8, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. காலதேச வர்த்தமானத்திற்கேற்ப தெய்வங்களின் முதன்மையும் மாறத்தொடங்கியது. அவ்வாறு மாறாத, மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த மரபார்ந்த தெய்வங்கள், நாட்டார்தெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள் எனப்பட்டன. 

காலனித்துவத்தின் வழி ஈழத்துப்புலத்தில் உருவான நவீனத்துவம், ஆங்கிலமயப்பட்ட, மேலைத்தேய கருத்தாக்கங்களையும், வாழ்வியலையும், கலாசார பண்பாடுகளையும் வியப்புடன் நோக்கி அவையே மேலானவை எனும் மனப்பதிவைத் தந்தன. அரச உத்தியோகம், மத்தியதர வர்க்கத்தைப் பெருகச் செய்தது. சுதேச கலை, கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம், தத்துவம், சமய மரபுகள் போன்றவற்றை கீழ்மையானவையாக எண்ணவும் புறமொதுக்கவும் செய்தன. பின்காலனிய உலகமயமாதல் சூழல், ஒற்றைப் பண்பாட்டை அவாவி நிற்கிறது. இது சிறுசிறு இனக்குழுக்களினது தனித்த அடையாளங்கள் சிதைவதற்கும், வரலாறற்றுப் போதலுக்கும் இருப்புச் சார்ந்த கேள்விகளுக்கும் உட்படுத்தலை அவதானிக்கச் செய்தன. இதன் வழி ‘மாற்றுச்சிந்தனை’ முதன்மையுறத் தொடங்கியது. பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் முக்கியத்துவம், சுதேச அறிவியல், சமயம், தத்துவம், கலாசார மரபுகளின் வழி வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன மீளக் கட்டமைக்கப்படத் தொடங்கின.   

மனிதனுக்கு உள்ளார்ந்த சிந்தனை (abstract thinking) தோன்றிய காலத்திலிருந்து இயற்கை சார் உணர்வு ஏற்பட்டது. அதன்வழி இயற்கை, வழிபாட்டுப் பொருளானது. இயற்கைப் பொருட்கள்  அனைத்தும் கடவுளர் ஆயின. இவ்வியற்கையின் சக்தியே இயக்கன்; இதனை சமூக மானிடவியலாளர்கள் ‘அனிமிசன்’ என்கின்றார்கள். இயற்கையின் கடவுளர் தன்மை இயக்கன் – இயக்கியாயின், இயக்கனும் இயக்கியும் கொடூரமும், அழகும், அன்பும் நிறைந்தவையாக எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் பிரதான சமயங்களான இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்றன இயக்கன் – இயக்கியை உள்வாங்கின. குறிப்பாக ஒரு கடவுளை முதன்மைப்படுத்தும் போது அது இயக்கர்களின் தலைவனாக – இயக்கிகளின் தலைவியாகக் காட்டப்பட்டது. சிவன் பூதநாதரானார். இலங்கையின் வரலாற்று நூல்களில் சிங்கதேசக் குடிமகனான விஜயன் இயக்கியாகிய குவேனியைத் திருமணம் செய்தமையும் தலைவனானமையும் இவ்வாறாகவே இருக்கலாம். 

தமிழர் மரபிலும் ஏனையோர் மரபிலும் இயக்கி பெற்ற இடத்தை இயக்கன் பெறவில்லை. அதேபோல இலங்கை வரலாற்றில் நாகர்கள் பெற்ற வரலாற்றுத்தடத்தை இயக்கர்கள் பெறவில்லை. விஜயனால் குவேனி கைவிடப்பட்ட பின் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து தகாப்புணர்ச்சி வழி குடும்பங்கள் உருவானதாகவும் அவர்களே வேடுவர்கள் எனப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையின் ஆதிவேடர்களின் தெய்வம் ‘யக்கு’ என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் வாழ்வில் நிலமானியமுறையும் அதன்வழி கெடித்திருந்த சாதியமும் சமூகவியல் தளத்தில் முக்கியமானவை. தொழில்ரீதியான அடுக்குமுறை பேதத்தைத் இது தந்தது; கலை, பண்பாடு, பொருளாதாரம், சமயம் என எல்லாத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதன் வழி சாதியத் தெய்வங்களும், சாதியக் கோயில்களும் உருவாகின. பறையிசைக்கும் குடிகளின் தெய்வமே வல்லியக்கன்.  

வல்லியக்கன்  

இயற்கை – இயக்க – இயக்கன் – இயக்கி வழிபாட்டின் வழி உருவான வழிபாடாக இதனை இனங்காண்பதோடு ‘யக்’ வழிபாட்டோடும் இணைத்து இத்தெய்வம் பற்றிய முதன்மை ஆய்வினைச் செய்த பேராசிரியர் இரகுபதி கருத்துரைக்கின்றார். இயற்கை வழிபாடு உலகப் பொதுமைக்குமானது. இயற்கை எனும் தமிழ்ச் சொல் இயற்கை வழிபாட்டைக் குறித்து, அது பின் இயக்க வழிபாடாக இயக்கன் – இயக்கி எனும் ஆண், பெண் வழிபாடாக வளர்நிலை பெற்றிருக்க வேண்டும். அதனை ‘யக்’ வழிபாட்டோடு இணைத்தல் அவசியமற்றது.  ‘வல்லியக்கன்’ எனும் பெயர் பற்றி பல்வகை அனுமானங்கள் உண்டு. 

  1. வல்லி – இயக்கன் – வல்லி எனும் பறையிசைக்கும் மக்களின் மூதாதையால் வழிபடப்பட்ட தெய்வம், வல்லியக்கன் எனக் கூறப்பெற்றிருக்கலாம். ஏனெனில் வல்லி, வல்லியப்பன் எனும் பெயர்கள் இன்றும் பறையிசைக்கும் மக்களிடம் செல்வாக்குடன் காணப்படுகிறது. வல்லியின் வழித்தோன்றல்கள் வல்லியக்கனை வழிபடுகின்றனர்.  
  1. வலிமை பொருந்திய இயக்கன் என்ற நம்பிக்கையின் வழி உருவான பெயராக இருக்கலாம். 
  1. வள்ளிபுனம் – வள்ளி புலம் – வல்லி புரம் வள்ளி – வல்லி எனும் அடிப்படையில் வல்லியின் தலைவன் முருகனைக் குறிப்பதாக எழுந்து பின்பு அது தனித்தெய்வமாக உருப்பெற்றிருக்கலாம். வள்ளி வேடுவர் பெண் என்பதும் இலங்கை வரலாற்றில் இயக்கர் வேடுவர்களாக சித்தரிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. 
ஈழத்தின் வல்லியக்கன் வழிபாட்டிடங்கள்

ஈழத்தில் பறையிசைக்கும் மக்கள் வாழுமிடங்கள் எங்கும் வல்லியக்கன் வழிபாடு இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதற்குப் போதிய சான்றுகள் இல்லை.  

“கன்னாபுரம் நின்று அந்நாள் நடந்து  
அறிதரிய ஏழாலை அதில் மீதுறைந்து  
புன்னாலைக்கட்டுவன் அச்செழுகோப்பாய் புத்தூர்
நீர்வேலி வறுத்தலைவிளான் பளையிரண்டு  
மன்னார் சுழிபுரம் சங்கானை தோலவரம்  
மற்றுமுள்ள தேசமெல்லாங் கடந்து
சுன்னாகம் வாழவரு வல்லியக்கராசனை தொழுவார்க்கு  
வல்வினைநோய் தொலைந்து போகும்”

இப்பாடலை கிறிஸ்தவப் பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். ஏழாலை வல்லியக்கன் கோயில் பூசாரி வல்லியக்கன் ‘பத்தாசியாக’ கோயில் நிகழ்வுத் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இது வாய்மொழிப் பாடலாக இருந்திருக்க வேண்டும். 

இப்பாடல் ஈழநிலத்தின் வடபுலத்தில் வல்லியக்கன் கோயில் இருந்த இடங்களைப் பட்டியற்படுத்துகின்றது. கன்னாபுரம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், அச்செழு, கோப்பாய், புத்தூர், வறுத்தலைவிளான், பளை இரண்டும், மன்னார், சுழிபுரம், சங்கானை, தொல்புரம், சுன்னாகம் என்பன அவையாகும். இவற்றுள் தெல்லிப்பழையில் ஆலயமுண்டு. கிளிநொச்சி மாவட்ட பளை, விடத்தற்பளை மற்றும் இயக்கச்சி பிரதேசங்களில் வல்லியக்கனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கானை கோயில் அழிக்கப்பட்டுவிட்டது. அது போலவே தொல்புரம், சுழிபுரம், சுன்னாகம், மன்னார் கோயில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடிசனப் பரவலாக்கத்தின் வழி உருவான வேலணை சின்னமடு, நவாலி, சண்டிலிப்பாய், இருபாலை, அச்செழுவின் புதியகோயில் போன்றன கள ஆய்வினூடாகப் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.  

வல்லியக்கன் கோயில்கள் தனிக்காணிகளிலும் வீட்டு வளவுகளினுள்ளும் அமைந்துள்ளமை இது ஒரு குலதெய்வ வழிபாடு என்பதை உறுதிப்படுத்துகின்றது. கோயிலாக இல்லாமல் ஆலமரம், நாவல்மரம், மஞ்சவுண்ணா, பூவரசு போன்ற மரங்களின் கீழ் வல்லியக்கன் அமர்ந்திருந்தார். கல் – மயோசியன் கல் (வெள்ளைக்கல்) சூலம் போன்ற பருப்பொருட்களின் ரூபத்தில் அவர் வழிபடப்பட்டார். மரங்களின் கீழ் திறந்த வெளியிலும் சீமெந்துக் கட்டடங்களிலும் இக்கோயில்கள் அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் இணைத்தெய்வமாக முடி மன்னர் (கோண்டாவில், அச்செழு, ஏழாலை) காணப்படுகிறார். இதனை விட தற்காலத்தில் இணைத்தெய்வங்களாக காளி (நவாலி), விறுமர், ஐயனார் (கரவெட்டி) என்பன காணப்படுகின்றன.  

வழிபாட்டு முறைகள்  

வல்லியக்கனை வழிபடும் முறைகள் பிரதேச வழக்காறுகளுக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. சில இடங்களில் நித்தம் ‘விளக்கு வைக்கும்’ வழக்கம் உண்டு. ஆனால் பல ஆலயங்களில் வெள்ளிக்கிழமை, விஷேட நாட்கள் போன்ற குறித்த நாட்களில் மட்டும் இவ்வழக்கம் காணப்படுகின்றது. எல்லாக் கோயில்களிலும் ‘வைகாசி விசாகம்’ மிகச்சிறப்பாகப் பொங்கல் வைத்துப் பூசித்து வழிபடப்படும் நாளாகக் காணப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்குப் பொதுவில் வைகாசி விசாகதினம் குளித்தியாக, பொங்கல் நாளாக, மடை நாளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்னின்றும் மாறுபட்டு ஏழாலை வல்லியக்கனுக்கு சித்திரை மாத நான்காவது புதன்கிழமை விஷேடநாளாகக் கருதப்பட்டு மடைப்பண்டம் எடுக்கப்பட்டு பொங்கி வழிபடப்படுகின்றது. கரவெட்டி கோயிலில் பங்குனி கடைசிப்புதன் விஷேடநாளாகும். மடைப்பண்டம் எடுக்கும் மரபு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மடைப்பண்டம் எடுக்கும் முதல்நாள் ஆலயச்சூழல் தூய்மைப்படுத்தப்படும். ‘விளக்கு வைத்தல்’ நிகழும். விளக்கு வைப்பவர், பூசை செய்பவர் பறையிசைக்கும் மக்களில் ஒருவராக இருப்பார். இந்நிகழ்வின் பூசாரியாக அவர் திகழ்வார். ஆனைக்கோட்டை போன்ற சில கோயில்களில் வாய்கட்டிப் பூசை செய்யும் முறைமையும் உண்டு. இது கப்புறாளை (கதிர்காமம்), கப்பூகர் (மண்டூர்க்திர்காமம், செல்வச்சந்நிதி) எனும் வாய்கட்டி பூசை செய்யும் முறையின் செல்வாக்கால் வந்திருக்கக் கூடும்.

kappuralai

பொங்கலுக்கு உரிய பண்டங்கள், பாத்திரங்கள் இணைத் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்துப் பூசை செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு வல்லியக்கன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படும் போது மடைப்பறை இசைக்கப்படும். ஆலயங்களின் நிகழ்வுகளுக்கு இசைக்கவெனத் தனிப்பறையும் தனியான ‘இசைப்பு’ முறையும் கலைஞர்களும் இருந்ததாக அறியமுடிகிறது. இது மங்கல இசையாக, பறை சாற்றுதலாகக் கூறப்படுகிறது. பலியிடும் வழக்கம் இருக்கவில்லை என எல்லா ஆலயக்காரர்களும் உறுதிபட உரைக்கின்றனர். கரவெட்டி கோயிலில் மட்டும் ஆலயத்துக்கு அப்பால் உள்ள சந்தியில் வைத்து மடைப்பண்டம் எடுப்பதாகவும் மடைப்பண்டம் எடுக்கும் போது ‘கோழியறுத்தல்’ எனும் பலி நிகழ்த்தப்படுவதாகவும் நேர்காணல் (சி.அருணகிரிநாதன், வயது 61) மூலம் அறிய முடிந்தது. வல்லியக்கனை வழிபடுதலினூடாக சந்ததி பெருக்கம், நோய் நொடியில் இருந்து விடுபடுதல் போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமது நேர்த்தி நிறைவுறும் போது நேர்த்திக்கடன் செலுத்தும் முறை காணப்படுகிறது. இது ‘தெய்வக்கடன்’ என்றே கூறப்படுகிறது. பொங்குதல், மடைபரவுதல் போன்றன அவற்றுட்சில. மட்சம், மாமிசம் படைப்பதில்லை. தற்போது காவடியெடுத்தல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாலய விஷேடதினங்களில் கலையாடி, குறிசொல்லல், திருநீறு போடுதல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன.  

சமகாலப் பயில்வுகள் 

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி மிகவும் நசுக்கப்பட்ட நிலையில் தமது பொருளாதாரத்துக்கு மூலமாக இருந்த பறையை 1950 – 1970 இடையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வின் வழி உடைத்தும் எரித்தும் ‘இனி பறை இசைப்பதில்லை’ எனச் சபதம் செய்து ஈழத்தின் வடக்குப் பிரதேசத்தில் பல பிராந்தியங்களில் பறையிசைக்கும் தொழில் கைவிடப்பட்டது. பெருந்தெய்வவுருவாக்கம் – பெருங்கோயிற் பண்பாடு, சமஸ்கிருதமயமாக்கம் எனும் பிராமணர்க்குக் தம் கோயிலைக் கையளிக்கும் செயற்பாட்டின் வழி ஆலயங்களில் பறை வாத்தியம் வெளியேற்றப்பட்டு தவில் மங்கல வாத்தியமாக்கப்பட்டது. கிழக்கிலும் மலையகத்திலும் இன்றும் ஆலயங்களில் பறை ஓரளவேனும் இசைக்கப்படுகிறது. வடக்கில் செல்வச்சந்நிதி போன்ற ஒருசில ஆலயங்களில் பறையிசைக்கும் மக்களின் குலமல்லாத இறையடியவர் பறை ‘அறை’கிறார்.   

vallipuram

இவ்வாறான செயற்பாடுகளும் இலங்கையின் யாவருக்குமான இலவசக்கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச வைத்தியசாலை போன்ற செயற்றிட்டங்களும் எல்லாச் சமூகங்களையும் வலுப்படுத்தியது. அரசாங்க உத்தியோகத்தர்களை, நிலையான மாதச்சம்பளம், ஓய்வூதியம் பெறுகின்றவர்களை உருவாக்கியது. இவ்வாறு உருவான புதிய வர்க்கம் , உயர்சாதியல்லாத மக்களிடம் ‘சாதிய நீக்கம்’ – உறவு நீக்கம், அடையாள நீக்கம் எனும் உணர்வுகளை செயல்நிலைப்படுத்தத் தூண்டியது. இதற்கு பறையிசைக்கும் மக்களின்  படித்தவர்க்கமும் தப்பவில்லை. தம் குலமக்கள் இருந்த இடங்களை விட்டு நகரங்களையும் வேறு நிலங்களையும் நோக்கிப் பெயர்ந்தனர். குல தெய்வங்களைக் கைவிட்டனர்.  

இதன்வழி வல்லியக்கன், ‘சைவம் அகலக்காலூன்றி நின்ற நிலத்தில்’ வல்லிபுரத்தாழ்வார் ஆயினார். தாமே பூசைசெய்து வழிபட்ட வல்லியக்கனை பெருங்கோயில் வழி கட்டமைக்க முற்பட்டு சீதாராமசாஸ்திரிகளை நாடிய போது ‘வல்லி’ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு கோண்டாவில் வல்லியக்கனை வல்லிபுர ஆழ்வாராக மாற்றினார். அக்கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ந்து பிராமணர் கோயிலாக்கப்பட்டது (பறையிசைக்கும் மக்கள் கருவறைக்குள் செல்லுதல் தடைப்பட்டது). இதன் வழி, தாம் மேற்சாதியானதாக அம்மக்கள் நம்புகின்றனர். இவ்வழி, வேலணை சின்னமடு வல்லியக்கன், நாராயணர் – கிருஷ்ணனாக மாற்றப்பட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு இரகுபதி, யாழ்ப்பாண சைவ உயர் சாதியினருக்கு எதிரான வைணவராக வல்லியக்கன் வழி பறையிசைமக்கள் மாறுவதாகவும், இதில் அம்பேத்கார் சிந்தனையின் சாயல் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார் (இரகுபதி, பொ., 2006, பக்22 – 23). ஆனால் அச்செழுவிலுள்ள வல்லியக்கன் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிவபெருமானாக மாற்றப்பட்டுள்ளமை இக்கருத்துக்கு மாறானதாக, அம்பேத்கார் வழி சிந்திக்காது ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்க வழி நின்றதையே காட்டுகின்றது. இவ்வாறான மேனிலையாக்கங்கள் பிராமணரை முதன்மைப்படுத்துகிறது. மக்களை வெளித்தள்ளுகிறது. மடைப்பண்டம் எடுத்தல், மடைப் பறையிசைத்தல் முதலான பாரம்பரிய முறைகள், கலைகள், நம்பிக்கைகள் புறந்தள்ளப்பட்டு இல்லாதொழிக்கப்படுகிறது.  

selachanithi

சீமெந்துக் கற்களால் கட்டப்படட் வல்லியக்கன் கோயில்களில் விஷ்ணுவின் சங்குசக்கரம் (ஆனைக்கோட்டை) பிள்ளையார், முருகன் (சண்டிலிப்பாய்), விறுமர், ஐயனார் (கரவெட்டி) போன்ற சின்னங்கள், தெய்வங்கள் இடம்பிடித்து வருதலையும் சமஸ்கிருதமயமாதலுக்கான வெளி அண்மிப்பதையும் அவதானிக்க முடிகிறது. பறையிசை என்பது இருமரபுக் கோயில்களிலும் இல்லை என்பதும் கோயிற்பறை இல்லாது ஒழிந்து போனதையும் சாவுப்பறை வாசிப்பவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருத்தலையும் அதுவும் தன் கலைப்பெறுமானத்தை இழந்து வருதலையும் சாவுப்பறையின் இடத்தை ‘பாண்ட்’ (Band) வாத்தியம் ஆக்கிரமித்து வருதலையும் அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான பறையிசைக்கும் மக்கள் சாதிய – தன்னடையாள நீக்கத்திற்காகவும் வேறுசில நம்பிக்கைகள், தேவைகள் என்பனவற்றுக்காகவும் கிறிஸ்தவத்திற்கு (குறிப்பாக புரட்டஸத்தாந்தம்) மாறிவருகின்றனர். ஆதிதிராவிடர்களுக்கான அடையாளங்கள், தெய்வங்கள், வழிபாட்டுமுறைகள், கலைகள் கைவிடப்படுகின்றன. சமாந்தரமாக, தமிழர் வரலாறு சிதைவுறுதலும் நிகழ்கிறது.  

நிறைவுரை   

பறையிசை இசைக்கும் கலைஞர்கள் சாதிய ஒடுக்குமுறையினின்றும் தாழ்வு மனப்பாங்கில் இருந்தும் விடுதலை பெற அவாவிநிற்றலின் வழி தன்னடையாளத்தைத் துறத்தல் நிகழ்கிறது. அதன் ஒரு அங்கமாக, ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினரான ஆதித் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் பறையிசைக்கும் மக்கள், தம் குலதெய்வமான வல்லியக்கனை நாராயணனாகவும் சிவனாகவும் மாற்றி பெருந்தெய்வவழிபாட்டினுள்ளும் சமஸ்கிருதமயமாதலினுள்ளும் கலக்கச்செய்து மேனிலையாக்கம் பெற முயற்சிக்கின்றனர். வல்லியக்கனைக் கைவிடுகின்றனர். தம் சமயம் துறந்து கிறிஸ்தவத்திற்கு மாறி புது அடையாளத்தை உருவாக்குகின்றனர். உலகமயமாதலுள் ஒன்ற முற்படுகின்றனர். வரலாற்றாசிரியர்கள் ஈழத்தில் தமிழர், நாகர் வழி வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். இயக்கர் வரலாறு குவேனி வழி வேடுவருள் தொலைக்கப்பட்டது. இயக்கரை – வல்லியக்கரை வழிபடும் வழிபாட்டின் வழி தமிழர் வரலாற்றைச் சீரமைக்க வாய்ப்புள்ளது. அத்தோடு ஈழத்தில் மட்டுமே வல்லியக்கன் வழிபாடு நிலவி வருதலும் கவனத்திற்குரியதாகும்.

தொடரும்.

 

ஒலிவடிவில் கேட்க

14352 பார்வைகள் 

About the Author

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.
 

 

https://www.ezhunaonline.com/valliyakkan-the-god-of-the-people-who-play-parai/

ஈழப்போரில் தமிழகம் செய்த உதவிகளின் பட்டியல்

1 month 3 weeks ago

எழுத்தாளர்: அறியில்லை.

10 July 2014

https://www.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
 

 

1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு.

பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது:

  • பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர்.

  • 25- 6- 82ல் உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது "ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்; தமிழனாக நான் செய்த கடமைக்கு எந்த விளைவையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்." என்று உறுதியாகக் கூறிவிட்டு அவர்களைப் பிணையில் எடுக்கப்போன போதுதான் தாம் உதவி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன் என்று தெரியவருகிறது. அந்த வழக்கை நடத்தி மதுரையில் தமது வீட்டிலும் தமது உறவினர்கள் வீட்டிலும் பிரபாகரன், ரகு, தங்கவேலாயுதம், அன்ரன், மாத்தையா, செல்லக்கிளி ஆகியோரைத் தங்கவைத்தவர். போராளிகளை பிடித்துச் செல்ல சிங்கள அரசு ஆளனுப்ப 1- 6 82 ல் 20கட்சிகளைக் கூட்டி தீர்மானம் போட்டு அதை பிரதமரான இந்திரா காந்திக்கு அனுப்பி போராளிகளைக் காத்தவர்.

  • கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் போன்ற முக்கிய போராளிகளை பாபநாசத்தில் தமது இல்லத்தில் மறைத்து வைத்தவர். 

  • மதுரையில் தமது வீட்டிலும் ஒன்றுவிட்ட தம்பி திரவியம் வீட்டிலும் பிரபாகரனைத் தங்கவைத்தவர்.

  • காங்கிரசு பிரமுகர் வி.கே.வேலு அம்பலம் என்பவர் வீட்டில் இளங்குமரன் மற்றும் தோழர்கள் தங்கவைத்தவர்.

  • தமது தம்பியின் மாமனார் ஊரான அவினாபுரியில் புலிகளுக்கு முகாம் அமைத்து தந்தவர்.

  • தமது தோழர் சந்திரபால் என்பவர் வீட்டில் சீலனுக்கு சிகிச்சை. 

  • உறவினர் பாண்டியன் என்பவர் வீட்டில் இந்திய-புலிகள் போரின்போது முக்கிய ஆவணங்களை மறைத்துவைத்தவர்.

  • பிரபாகரனின் தாய்தந்தையரை தம்மோடு வைத்துகொண்டவர்.

  • அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புலிகளையும் இணைக்க முயன்றவர்.

  • ரஞ்சன், பஷீர்/காகா, சந்தோசம், புலேந்திரன் ஆகியோருக்கு பிரபாகரன் தலைமையில் திருப்பங்குன்றம் அருகேயுள்ள காடுகளில் பயிற்சிக்கு உதவியவர்.

  • 1985ல் புலிகள் பாதுகாப்பில் ஈழத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழர் நிலையை நேரடியாக 'சுதந்திரக் காற்று' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இந்தியா முழுவதும் தடையை மீறித் திரையிட்டவர்.

  • 1983 ஜூலைக் கலவரம் நடந்தபோது 5000இளைஞர்களைத் திரட்டி மதுரையிலிருந்து மக்கள் பேராதரவுடன் நடை ஊர்வலமாக இராமேசுவரம் வந்து எவர் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து பல படகுகளில் கடலில் ஈழம்நோக்கி பாதி தூரம் வந்து இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டவர்.

  • திலீபன் உண்ணோநோன்பிருந்தபோது நேரில் சென்றவர் .

என இவரைப் பற்றி தனி புத்தகமே போடலாம்!

இவை தவிர இன்னபிறரின் வெளித்தெரியா பங்களிப்புகள் பின்வருமாறு:

  1. 1970களிலேயே தமிழர் மாணவர் பேரவை நிறுவனர் சத்தியசீலன் போன்ற பல போராளிகளுக்கு உதவியதோடு நில்லாமல் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் புலிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அறைகள் வழங்கிய மத்திய இணையமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்.

  2. அந்த சமயத்தில் போராளிகளுக்கு அருகேயிருந்து உதவிய புலமைப்பித்தன்.

  3. உமாமகேசுவரன் விடுதலைப் புலிகள் இயக்கப்பெயருக்கு உரிமைகொண்டாடியபோது அவரை சரிசெய்து புளட் இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த அருகோ (எழுகதிர் ஆசிரியர்).

  4.  சென்னை தெற்குப்பகுதியில் கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள சவுக்குத் தோப்புகளில் புலிகள் பயிற்சிபெற உதவிய சென்னைத் தமிழர் பலர் (திருமதி.அடேல் பயிற்சி பெற்ற இடம்).

  5. டெலோ சிறீசபா ரத்தினம் சில பெண்களை பயிற்சிக்காக சென்னை அழைத்து வந்தபோது டெலோ இயக்கம் பெண் போராளிகள் மீது ஆர்வம் காட்டாதபோது சென்னையில் தாழ்த்தப்பட்ட கத்தோலிக்கர் அவர்களைப் புலிகளுடன் சேர்த்துவிட்டனர் (முதல் பெண்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்களில் சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி போன்றோர் இதில் அடங்குவர்).

  6. 1984ல் திருவான்மியூரில் பெண் போராளிகளுடன் தங்கியிருந்த ( தொடர்ச்சி பின்னூட்டத்தில்)

  7. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ப.மாணிக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் என்.டி.வானமாமலை பிரபா-உமா வழக்கை நடத்தினார்.

  8. அமைச்சர் காளிமுத்து பிரபாகரனுக்கு நேரடியாக பல உதவிகள் செய்தவர்.

  9. மருத்துவக் கல்லூரி மாணவனான திண்டுக்கல் சந்திரன் தோழமையுடன் பிரபாகரனுக்கு பல உதவிகள் செய்தவர்.

  10. நெடுமாறன் அவர்களின் தோழர்கள் மீனாட்சி சுந்தரம், ஜெயப்பிரகாசம், தமிழ்க்கூத்தன் ஆகியோரும் உள்ளூருக்குள் பல உதவிகள் செய்தனர்.

  11. மோகன்தாஸ் வரைந்த புலிகளின் இலச்சினையில் சில மாற்றங்கள் செய்து கொடியாக மாற்றி தந்த ஓவியர் நடராசன்.

  12. புலிகளின் உடையை வடிவமைத்த மதுரை தங்கராசு.

  13. முதல் மாவீரன் சங்கருக்கு மதுரையில் தோட்டா நீக்கி சிகிச்சை போன்ற பல முக்கிய மருத்துவ உதவிகளைச் செய்த புலிகளுக்காகவே ரகசிமாக இயங்கிய மருத்துவமனையின் பொறுப்பாளர் மரு.என்.எஸ்.மூர்த்தி.

  14. இசைநிகழ்ச்சி நடத்தி புலிகளுக்கு நிதி திரட்ட உதவிய இளையராஜா.

  15. 1980ல் சீரணியரங்கில் முதன்முதலாக புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய பழநி பாபா.

  16. 1995ல் யாழ்இடப்பெயர்வு மக்களை தமிழகம் ஏற்றுக்கொள்ள முதன்முதலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப்.

  17. புலிகளுக்கும் தமிழக விடுதலை இயக்கங்களுக்கும் பாலமாக விளங்கிய அமரர் சுப.முத்துக்குமார்.

  18. 2009ல் முத்துக்குமார் உட்பட தீக்குளித்த 17 ஈகிகள்.

  19. ராஜீப் காந்திக்கு உயிருடன் இருக்கும் போதே அறம்பாடிய, தனுவுக்கு கவியாரம் சூட்டிய பெருஞ்சித்திரனார்.

  20. Tகெ Hஇச்டொர்ய் ஒf Tகமிரபர்னி எனும் ஈழத்தமிழர்களின் வரலாற்றை எழுதிய, தனி ஈழத்துக்காக தீவிரமாகப் போராடிய, புலிகளால் மாமனிதர் பட்டம் அளிக்கப்பட்ட ஆ. இராசரத்தினத்துக்கு 1973லிருந்து கடைசிவரை அடைக்கலம் வழங்கிய திரு இரா.ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி.

  21. புலிகளின் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடித் தந்த தேனிசை செல்லப்பா.

  22. சிறுமலை என்ற ஊரில் பயிற்சிக்கு தன் இடத்தை வழங்கிய திண்டுக்கல் அழகிரிசாமி. அப்போது முகாமுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் வணிகர் சங்கத் தலைவர் மணிமாறன்.

  23. ஈழத்திற்கு சென்று மரணப்படுக்கையில் இருந்த பிரபாகரனின் தாயாரைப் பல தடைகளை மீறி சந்தித்த வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.

  24. 1986ல் சார்க் மாநாடு பெங்களூரில் நடைபெற்றபோது ஜெயவர்த்தனாவுக்கு ஆயிரக்கணக்கானோரோடு கறுப்புக்கொடி காட்டிய கர்நாடகத் தமிழ்ப்பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம்.

  25. 1996ல் புலிகளுக்கு ஜீப் வண்டி நன்கொடையளித்த பி.எல்.ராமசாமி (திராவிடர் கழகம்).

  26. இந்திய அமைதிப்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க 1988ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு நடத்தி சிறைசென்ற தோழர்.பொழிலன்.

  27. அடேல் மீது தவறான சந்தேகத்தோடு கூடி வந்து தாக்க முற்பட்ட அந்தப் பகுதி தமிழர்கள். அங்கே பொன்னம்மான் தாங்கள் ஈழப்போராளிகள் என்று கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்ட மன்னிப்பு கேட்டு வருந்தியபடி கலைந்துசென்றனர்.

  28. பாலா-அடேல் தங்கியிருந்த வீட்டில் குண்டுவெடித்தபோது அக்கம்பக்கத்து தமிழர்கள் வந்து நலம் விசாரித்தனர். வேறொரு இஸ்லாமியத் தமிழ்க்குடும்பம் துணிந்து வீடுகொடுத்தது.

  29. எம்ஜிஆர் காவல்துறையை முடுக்கிவிட காரணமானவர் இலங்கை அமைச்சர் லலித் அதுலத் முதலி என தெரியவர அவர்மீது வழக்குபோடவிடாமல் இந்திய அரசாங்கம் தடுத்துவிட்டது.

  30.  பயிற்சிக்கு தமது சொந்த இடத்தைக் கொடுத்த கொளத்தூர் மணி. கொளத்தூரில் பயிற்சி நடந்தபோது 150 போராளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சகலதேவைகளையும் நிறைவேற்றியதோடு மட்டுமன்றி தம்மோடு பழகிய பொன்னம்மான் ஈழத்தில் இறந்தபோது நினைவிடம் அமைத்த கொளத்தூர் தமிழக மக்கள். 

  31. அதே நேரத்தில் திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் உள்ள முகாமுக்கு உதவிகளனைத்தும் செய்த அப்பகுதி தமிழர்.

  32. அமைச்சராக இருந்தபோது புலிகளுக்கு உதவியதால் 1992ல் தடா'வில் கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி, அவரது கணவர் செகதீசன்.

  33. கௌதமி, கலாராம், குமார் என்ற மூன்று ஊனமுற்ற ஈழவர் தடாவில் கைது செய்யப்பட்டபோது போராடி விடுதலை பெற்ற வழக்கறிஞர் கே.சந்துரு (தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி).

  34. பிரபாகரன், மாத்தையா உள்ளிட்ட முதல் பிரிவு இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்தபோதும், இந்திய-இலங்கை-ஈழப்போராளிகள் பேச்சுவார்த்தையின் போதும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்த எஸ்.சந்திரசேகரன் (றோ உயரதிகாரி).

  35. புலிகளின் ஆயுதங்கள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டபோதும், புலிகள் இந்தியாவிடம் பயிற்சி பெறவும் பல உதவிகள் செய்த தமிழக காவல்துறை உயரதிகாரி அலெக்சாண்டர்.

  36. 1983ல் ஐநா பேரவைக் கூட்டத்தில் 70நாட்கள் பன்னாட்டு தலைவர்களுடன் பேசி, உரையாற்றி ஐநா பொதுச்செயலர் ஃபெரஸ் டி.கொய்லர் இலங்கை தமிழர் பிரச்சனை மனித உரிமை மீறல் தொடர்பானது என்று ஒப்புக்கொள்ளவைத்த பண்ருட்டி.ராமச்சந்திரன்.

  37. 1985ல் திம்பு மாநாட்டில் ஈழ ஆயுதக்குழுக்கள் ஒன்றிணைந்ததைக் கெடுக்க இந்திய அரசு பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னபோது பொங்கியெழுந்த தமிழகம் போராடி அதைத் தடுத்தது.

  38. கறுப்பு யூலையின்போது அதுவரை தமிழகத்தில் நடக்காத அளவு முழுஅடைப்பும், பல்வேறு போராட்டங்களும் நடந்தன.

  39. ராசீவ் காந்தியால் வெளியுறவுத்துறை அமைச்சரான ஏ.பி.வெங்கடேசன் தமிழர் ஆதரவு செயல்பாட்டால் பதவி விலக்கப்பட்டார். 

  40. ஆலோசகரான ஜி.பார்த்த சாரதி தமிழர் ஆதரவு செயல்பாட்டினால் ஜெயவர்த்தனாவால் குற்றம்சாட்டப்பட்டு பதவி விலகினார். 

  41. கவிஞர்.காசிஆனந்தனுக்கு ஆதரவும் அடைக்கலம் தந்துள்ளது தமிழகம்.

  42. இந்திய அமைதிப் படை ஈழத்தில் நடத்திய கொடுமைகள் பற்றி புலிகள் வெளியிட்ட 'சாத்தானின் படைகள்' நூலுக்கு ஓவியம் வரைந்துகொடுத்ததற்காக இந்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளான ஓவியர்.வசந்தன்.

  43. ஈழ- இந்தியப் போரில் தப்பிவந்த அத்தனை பேருக்கும் தமிழகம் உதவியதுய (காட்டாக அப்போது பாலசிங்கம் தம்பதி தப்பி தமிழகம் வந்து வீட்டுக்காவலில் இருந்த கிட்டுவை சந்தித்துவிட்டு காலாவதியான கடவுச்சீட்டு மூலம் வேறு பெயரில் பயணச்சீட்டு எடுத்து சென்னையிலிருந்து இலண்டன் சென்றனர்).

  44. போர் நடந்தபோது அங்கே களநிலவரம் அறிய மத்திய ரிசர்வு போலீசு உயரதிகாரி கார்த்திகேயன் என்பவரை இந்திய டி.என்.சேஷன் அனுப்பினார், 1989ல் ரகசியமாக போர்ப்பகுதியில் சுற்றிவிட்டு தமிழர்கள் கேட்கும் உரிமைகளைத் தருவதே தீர்வென்றும், புலிகளின் பலத்தையும், இந்தியப் படையினரின் மனமொடிந்த நிலையையும் கூறி போர் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார்.

  45. 1988ல் சிறிலங்க அரசில் அமைச்சராக இருந்த பக்ருதீன் முகமது தலைமையில் இலங்கை இஸ்லாமியர் பற்றி பேச சென்னையில் கிட்டுவை சந்திக்க வந்தபோது அப்துல் சமத் என்ற இந்திய முஸ்லீம் லீக் தமிழகக் கிளை தலைவர் அந்தப் பேச்சுவார்த்தையை பழ.நெடுமாறன் கேட்டுக் கொண்டதன்பேரில் நடத்தி புலிகளுக்கு ஈழத்தமிழ் இஸ்லாமியர் பக்கபலமாக இருக்க உதவியவர்.

  46. இந்திரா கொல்லப்பட்டபோது நடந்த சீக்கியப்படுகொலை போல் இரஜீவ் படுகொலையின்போது தமிழர் படுகொலை போன்ற தீவிர நடவடிக்கை வராமல் பார்த்துக்கொண்டவர் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.

  47. 2002ல் சென்னை ஆனந்த் திரையரங்கில் புலிகள் ஆதரவு கூட்டம் நடத்திய தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பழ.நெடுமாறன், மரு.தாயப்பன், பாவாணன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

  48. 1990களில் புலிகள் கல்வித்திட்டத்தில் தமிழக கல்வியாளர்கள் பாடத்திட்டம், புத்தகங்கள், பயிற்சி என பல வகைகளில் உதவினர்; இராணுவ விஞ்ஞானம் பற்றிய பாடத்திட்டங்களை தீட்டி அளித்தவர் சென்னையில் இதே துறையின் தலைவராக இருந்த பேரா.மனோகரன்; நுண்கலைக் கல்லூரி ஒன்றை புலிகள் ஆரம்பிக்க பேரா.விசயகோபால் திட்டவரைவு வழங்கினார்; நீர்மேலாண்மை பற்றிய பாடத் திட்டம் நெடுமாறனின் தம்பி முனைவர்.பழ.கோமதிநாயகம் என்பவர் தீட்டியது; இவர், தமிழ் பாடத்துக்கு கடையம் பேரா.அறிவரசன், ஆங்கிலத்துக்கு பேரா.அ.அய்யாச்சாமி போன்றோர் ஈழத்திற்கே சென்று ஆண்டுக்கணக்கில் தங்கி உதவினர்.

  49. புலிகள் மீதான பல்வேறு வழக்குகளை தாமே முன்வந்து நடத்தியவர் தடா எஸ்.சந்திரசேகரன், இவரும் இவரது உதவி வழக்கறிஞர் கோபிகிருஷ்ணனும் 2004ல் தலைவரை சந்தித்தனர்.

  50. இயக்குநர்கள் பாரதிராசா, மகேந்திரன், மணிவண்ணன் போன்றோர் தலைவரைச் சந்திக்கச் சென்று தமிழீழக் கலை பண்பாட்டுத் துறை நடத்தும் பூலித்தேவன் நாடகம், இலக்கிய விருதுகள், முத்தமிழ் விழா, பொங்கல் விழா போன்றவை கண்டு வியந்து வாழ்த்துகளும், ஆலோசனைகளும் வழங்கினர்.

  51. புலிகள் 1995ல் வேலூர் கோட்டையிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பியபோது கொளத்தூர் மணி மற்றும் நெடுமாறன் போன்ற பலரின் உதவியால் ஈழம்போய்ச்சேர்ந்தனர் (இவர்கள் சேலம் காடுகளில் பதுங்கியிருந்தபோது எதேச்சையாக வீரப்பனார் அவர்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ந்து வேண்டிய உதவிகளைச் செய்தார், இவர்களில் பிடிபட்டவர் மாறன் தற்போது லண்டனில் வசிக்கிறார்).

  52. பிரேமா என்ற பெண்புலிக்கு குண்டு அகற்றி தமது பொறுப்பில் பாதுகாத்த பழ.நெடுமாறனின் தோழர் மரு.பொ.முத்துசெல்வம்.

  53. சமரச முயற்சிகளை முன்னெடுத்த நீதியரசர்.வி.ஆர்.கிருஸ்ணய்யர்.

 

 

மேலும் சீமான், வைகோ, ஜெகத் கஸ்பர், எம்ஜிஆர் போன்றவர்களின் பங்களிப்பு பலருக்கும் தெரியுமாதலால் அவற்றை விளக்கவில்லை.

சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் செயற்பாடுகளும் அதன் பொறுப்பாளரின் செயல்களும்

2 months ago
0
கல்விசார் சமூகத்தை கையாள்வதில் ஓர் சிறந்த ஆளுமை ந. கண்ணன் (இளந்திரையன்)

கல்விசார் சமூகத்தை கையாள்வதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆசிரியர்கள் தொடக்கம் பேராசிரியர்கள் வரையான கல்விச் சமூகத்தை அவர்களது வாழ்வியலை நடைமுறை போராட்ட வாழ்வியலோடு ஒன்றிணைத்து பயணித்து அவர்களை அவர்கள் சார்ந்த பிரச்சினைகளை நிர்வகிப்பதென்பது இலகுவான காரியம் கிடையாது.

எதிரிகள், துரோகிகளின் சதிப்பின்னல்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் தாண்டி எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த ஒரு நிர்வாக அமைப்பை கொண்டுசெல்வது துணிச்சலான விடயமும் கூட….

இவ்வாறான பல சவால்களை சாதாரணமாக கடந்த ஆளுமை சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் பொறுப்பாளர் ந. கண்ணன் (இளந்திரையன்)

2002ல் ஆரம்பமான சமாதான நடவடிக்கையுடன் மாணவர் சார்ந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டன.

யாழ் பரமேஸ்வரா சந்தியில் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் அலுவலகம் திறக்கப்பட்டது. யாழ் பல்கலைகழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த கண்ணன் அண்ணா அப்பேரவையின் பொறுப்பாளராக இருந்தார்.

சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை ஊடாக கண்ணன் அண்ணா மாணவர் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவை.

*குடாநாட்டில் பல கணிணி மையங்களை நிறுவி இலவச கணிணி கற்கைநெறிகளை மேற்கொண்டமை மற்றும் ஆங்கில வகுப்புக்களை நடத்தியமை.

*வறிய மாணவர்களின் கல்விக்கான உதவித்திட்டங்கள் மற்றும் கல்விக்கான உதவித் தொகையை மாதாந்தம் வழங்கியமை.

*சில வறிய மாணவர்கள், தவறான வழிகளில் பயணித்த சில மாணவர்களை பெற்றோரின் வேண்டுகோளுக்கு அமைய தனது மேற்பார்வையின் கீழ் கல்விகற்க வழிசெய்தமை.

*முன்னால் இலங்கை பொலிஸ் இராணுவ (தமிழ்) உத்தியோகத்தர்களது பிள்ளைகளை அழைத்து “உங்களது பெற்றார்கள் செய்தது அரச உத்தியோகம் அது தவறு கிடையாது. யாரும் தவறாக சித்தரிக்க இடம் கொடாமல் நீங்களும் எல்லா மாணவர்கள் போலவே ஒன்றாக இணைந்து பயணியுங்கள்” என்று அவர்களுடைய மனவாட்டத்தை களைத்து ஊக்கப்படுத்தியமை போற்றத்தக்க செயற்பாடு.

*பேரவையின் ஒரு பகுதியில் மாணவர்கள் தங்கி இருந்து கல்விகற்பதற்காக ஒழுங்குபடுத்தியமை, வெளியிடங்களிலும் மாணவர்கள் தங்கி கல்வி கற்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை.

*கா போ த சாதாரண/உயர்தர பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்களை ஒழுங்கு செய்தமை.

*கருத்தரங்குகள் மற்றும் கல்விசார் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து கொடுத்தமை.

*கல்விக் கண்காட்சிகளை நடத்தியமை. நூல்வெளியீடுகள் மற்றும் படைப்புக்களுக்கான ஊக்கப்படுத்தல். போன்ற பலதரப்பட்ட விடயங்களை குறிப்பிடலாம்.

பல்கலைக்கழகம், தொழில்நுற்பக் கல்லூரி, கல்வியற்கல்லூரி மற்றும் பாடசாலைகளில் இருந்த பிரச்சனைகளை இனம் கண்டு அதை நிவர்த்தி செய்வதில் முன்னின்று செயற்பட்டவர் கண்ணன் அண்ணா.

*யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தியமை.

*பல்கலைக்கழக விருந்துபசார நிகழ்வுகளில் விரும்பத்தகாத கழியாட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தியமை.

*மாணவ மாணவிகளின் விடுதிகள் மற்றும் தங்ககங்களில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அவற்றின் முறைப்பாட்டுக்கமைய கையாண்டமை.

*முறைகேடுகளில் ஈடுபட்ட சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்று, விசாரித்து சிக்கல்களை சீர் செய்தமை.

*பேரிடர் காலங்களில் அல்லது வறுமைநிலையில் உள்ள மாணவர்களின் குடும்பங்களுக்கு அத்தியவசிய உதவிகளை வழங்கியமை.

*சுனாமி அனர்த்தத்தின் போது மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழீழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மீட்பு பணிகளையும் உதவித்திட்டங்களையும் வழங்கியமை.

*வறிய மாணவர்களின் வேலை அற்ற பெற்றோருக்கு வேலைகளை ஒழுங்குபடுத்தி கொடுத்தமை.

*இலங்கை இராணுவத்தால் மாணவர்களிடையே விதைக்கப்பட்ட தவறான பழக்கவழக்கங்களை அடியோடு களைவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டமை.

*தமிழீழ அரசின் வரிவிதிப்பிலிருந்து மாணவர்களுக்கு வரிவிலக்கை பெற்றுக கொடுத்தமை.

*யாழ்மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சொல்வதற்கான அனுமதி (பாஸ்) நடைமுறையில் மாணவர்களுக்கான விசேட நடைமுறைகளை உருவாக்கியமை, இலகுபடுத்தியமை.

*உயர்கல்வி, வெளிநாட்டு கல்வியை தொடர்ந்தவர்களுகான உதவிகளை வழங்கியமை.

*போதைக்கு அடிமையான சில மாணவர்களின் பொற்றோரை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு வன்னியில் தங்கி வேலைசெய்வதற்கான ஒழுங்குகளையும் போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் பெற செய்தமை.

யாழ்மாவட்டத்தில் ஏதும் அசம்பாவிதங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்தால் உரிய இடங்களுக்கு சென்று நிலமைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

*மாணவிகள் மீதான வன்முறைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டை மேற்கொள்ளவும், உடனடியாக அப்பிரச்சினைகளை அம்மாணவிகளுக்கு பாதிப்பில்லாமல் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை.

*வெளிநாடுகளில் எமது மாணவர்கள் எதிர்நோக்கும் இடர்களை தீர்க்க ஆவன செய்தமை, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை.

*வெளிநாடுகளில் உள்ள கல்விசார்ந்த தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழீழ மாணவர்களுக்கும் புலம்பெயர் மாணவர்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டமை.

மாணவ மாணவிகள் தங்களுக்குள் ஏற்படும் எந்த பிரச்சனைகள் என்றாலும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையில் முறையிடலாம் என்ற வழக்கத்தை கொண்டு வந்ததுடன் முறையிட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி முறைப்பாட்டுக்கான தீர்வுகளை மிகச் சாதுரியமாக கையாண்டமை கண்ணன் அண்ணாவின் தனிச்சிறப்பு.

———

இது தவிர சமாதான காலத்தில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள், படுகொலைகள். துணை இராணுக்குழுக்களின் (EPDP) தமிழர் விரோத செயற்பாடுகள் போன்வற்றை சர்வதேச சமாதான முன்னெடுக்கும் தரப்புக்களிடம் (SLMM) ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியமை.

சமாதான முன்னெடுப்புக்களை குழப்பும் வகையான செயற்பாடுகளிலும் தமிழின படுகொலைகளிலும் இராணுவமும் துணைக்குழுக்களும் ஈடுபட்ட போது அவற்றிக்கு எதிராக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதிவழி போராட்டங்கள் பேரணிகளில் கலந்துகொண்டமை.

விடுதலையிலும் சமாதானத்திலும் மக்களிற்கு இருந்த ஆர்வத்தையும் விருப்பத்தையும், பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து இலட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி பொங்குதமிழ் நிகழ்வுகள் மூலம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியமை.

பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகளை தமிழீழத்தின் பல மாவட்டங்களில் ஒழுங்குசெய்தமை. புலம்பெயர் சமூகமும் பொங்குதமிழ் எழுச்சியை மேற்கொள்ள துணையாய் இருந்தமை.
——

இலங்கை அரசுடன் மூன்றாம் தரப்பு அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவிலும் கண்ணன் அண்ணா அங்கம் வகித்திருந்தார்.

2005ம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் யாழ் மாவட்டத்தில் சர்வதேச மாணவர் பேரவையின் செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இலங்கை இராணுவத்தாலும் ஈபிடிபி ஒட்டுக்குழுவாலும் பலமுறை தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டதுடன் மாணவர்களின் இலவச கற்கை நெறிக்கான கணிணிகள் உட்பட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன.

பேரவையில் இருந்து செயற்பட்டவர்கள், கல்விகற்றவர்கள் நேரடியாக உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படியான நிலையிலும் யாழ்மாவட்டத்தை விட்டு வெளியேறாது பேரவை சார்ந்த பணிகளை எந்த தொய்வும் இன்றி கண்ணன் அண்ணாவால் முன்னெடுக்கப்பட்டது.

2005 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் யாழ்மாவட்ட அரசியல் பணிகளையும் தனிஒருவராக நின்று பேரவை உறுப்பினர்களின் துணையுடன் மேற்கொண்டார்.

2005ல் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டது. அதற்கு தன்னாலான உதவிகளை பேரவை ஊடாக செய்தார்.

இராணுவ வன்முறைகளும் படுகொலைகளும் மலிந்திருந்த 2005ம் ஆண்டில் யாழ் மாவட்டத்தின் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களுக்குமான மாவீரர்தின ஏற்பாடு கண்ணன் அண்ணா தலைமையிலான சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்டது. மேலும் அன்று தேசியத்தலைவரின் அனுமதியுடன் வன்னியில் இருந்து மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த யாழ்மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் இளம்பருதி அண்ணா மற்றும் லெப் கேணல் மகேந்தி அண்ணா உட்பட்டோருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரவையினரிடம் வழங்கப்பட்டதும் கண்ணன் அண்ணாவின் பொறுப்பான ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் புதிய ஒரு பரிநாம வளர்ச்சிக்குள் சென்றுகொண்டிருந்த காலம்.

எதிர்கால பேச்சுவார்ததைகள்,
அரசியல் பணிகள் மற்றும் இலங்கை அரசியலில் தமிழர்களின் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திய வகிபாகத்தை அதிகரிப்பதற்கும்,

இலங்கை அரச இயந்திரத்தினுள் தமிழர்களின் ஆளுமையை அதிகரிப்பதற்காகவும் மாணவர் பேரவை ஊடாக பல மாணவர்களை பல்துறைகளில் ஈடுபடுத்தியமையின் பெரும்பங்கு கண்ணன் அண்ணவையே சாரும்.

தேர்தல் காலங்களில் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தமது ஆதரவை தெரிவித்தமையும் அவர்களின் வெற்றிக்காக பங்காற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

போர் உக்கிரம் பெற்ற காலப்பகுதியில் வன்னிக்கு அழைக்கப்பட்ட கண்ணன் அண்ணா தமிழீழ மாணவர் அமைப்பின் பொறுப்பாளராக 2009ன் இறுதிவரை பணியாற்றினார்.

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அண்ணாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கண்ணன் அண்ணவின் தலைமையில் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இயங்கியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கண்ணன் அண்ணா அவரது தனித்தன்மை காரணமாக தமிழீழ நிர்வாக பிரிவுகளிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக விளங்கினார்.

மாணவர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக உரிய பிரிவுகளுக்கு தெரியப்படுத்தி உடனடித் தீர்வுகாணும் நிர்வாக திறமை அவரிடம் இருந்தது. அவரின் திறமையால் அவரின் கீழ் பணியாற்றிய அனைவரும் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.

பேரவையின் செயற்பாடுகள் இலங்கை அரசியலில் சில நகர்வுகளை கல்வியியலினுடாக மேற்கொள்ள காலம் கனிந்திருந்த வேளை உலக நாடுகளின் நயவஞ்சகத்தினால் தமிழீழ தனியரசு சிதைத்தழிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழீழ விடுதலைபோராட்டம் விதைத்த மாணவர்களின் தமிழ் தேசியம் சார்ந்த சிந்தனை ஓர் நாள் மாபெரும் சக்தியாக மாறி தனது இலக்கினை அடைந்தே தீரும்!

தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்!!!

 

வா.அரவிந்தன்

 

-----------------------------------------

 

#குறிப்பு; கண்ணன் அண்ணாவின் பெயர் 2009ல் வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்தவர்களின் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை மற்றும் கண்ணன் அண்ணாவின் செயற்பாடுகளை தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது பேரவா. கண்ணன் அண்ணாவுடன் பணியாற்றிய அனுபவத்தில் நினைவில் உள்ளவற்றை இயன்றவரை சம்பவங்களை உறுதிப்படுத்தி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

இது முழுமையான குறிப்பு கிடையாது. இதில் ஏதாவது திருத்தங்கள்/இணைக்கவேண்டியது இருந்தால் தெரிவிக்கவும்.

தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு பேரவையின் தேவை அதிகமாகவே உள்ளது, அதை செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். இருப்பின் மேற்குறிப்பிட்ட விடயங்களை மனதில் இருத்தி எமது மாணவ சமூதாயம் முன்னேற்றபாதையில் பயணிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்.

 

https://www.uyirpu.com/?p=16208

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது உயிரோடு தான் உள்ளாரா?

2 months ago
4
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது உயிரோடு தான் உள்ளாரா? பதில் -நிலவன்.

அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவின் உருவாக்கம் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த விடயம் யாதெனக் கருதுகின்றீர்?

நிலவன் :- உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது. அப்படித்தான் ஈழதேசத்தில் தேசிய இனமாகிய தமிழர்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப் பட்டபோது தமிழீழத்தின் தேசியத் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் என்ற தலைவன் உருவானார்.

உலகத்திற்கு அறம் போதித்த இலக்கியங்கள் என தமிழுக்கும், தமிழர்களுக்கும் நீண்ட பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்று நாயகனாக மேதகு வே. பிரபாகரன் என்ற பெயர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழின வரலாற்றின் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக இருக்கும்.

உலகிலே எவ்வளவோ போராட்ட இயக்கங்கள் உருவாகி இருந்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் போல், எந்த ஒரு போராட்ட இயக்கமும் இருந்ததில்லை   என்பதற்குப் பல நூறு ஆதரங்களை முன் வைக்க முடியும். தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது.

மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக முறைப்படுத்தி முப்படையைக் கட்டி அமைத்து அதனுள் தடை நீக்கி என தனிப்படை அமைத்து அந்த படைகளுக்குத் தளபதிகளை நியமித்து, அதற்கேற்றாற் போல் சீருடைகளைக் கொடுத்து ஒரு மரபுவழி தமிழீழ இராணுவத்தையே உருவாக்கி நீதி, நிர்வாகம் என ஒரு நடமுறை அரசை அமைத்து முன் மாதிரியாக கையூட்டல் இல்லாத  நாடக சாத்தியமாக்கிக் காட்டினார். இன விடுதலை குறித்தான வேட்கையே நூற்றாண்டு காலம், உலக வல்லாதிக்க அரசுகளை எதிர்த்து துணிச்சலோடு போராட வைத்து. பல வெற்றிகளையும் பெற வைத்தது என்றே சொல்லமுடியும். .

தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தங்களின் மீதான இன ஒடுக்கு முறைக்கு எதிராக எழுச்சி கொண்டார்கள். இன ஒடுக்கு முறைக்குரிய தீர்வைப் பற்றிய தமிழர்களின் பேரம் பேசும் (Negotiation) பிரதிநிதித்துவத்தை இலங்கை பாராளுமன்ற அமைப்பானது ஜனநாயக வழியிலான கோரிக்கையை மறுதலித்த இடத்திலே தான் ஆயுதப் போராட்டத்திற்கான தேவை உத்வேகம் கொண்டது.

இலங்கைப் பாராளுமன்ற அமைப்பு முறையால் மறுதலிக்கப்பட்ட தமிழ் மக்களினுடைய விடுதலைக் கோரிக்கையை, சர்வதேச மத்தியத்துவத்தின் கீழ் சிங்கள அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தை வெளிக்கு இட்டுச் சென்றது மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் தமிழர் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுகளை வாதிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றார்கள் என்றால் மிகையில்லை.

தமிழீழத்தின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் போராட்டத்தையும் போராடும் மக்களையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்தார்கள் . உலக நாடுகளின் இராணுவ பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு தேசிய இன மக்களைத் தமிழர்களை இன அழிப்பு செய்துகொண்டுவர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி மூன்று சகாப்த காலங்களுக்கு மேலாக போராடி தமக்கான, எமக்கான சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தோம்.

Photo-16V-300x195.jpg

அமுதன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பினூடாகத் தன்னை மக்கள் மனதில் மதிப்பிற்குரிய,போற்றுதற்குரிய ஏகதலைவனாக ஏற்றுக் கொள்ளும் வகையில் மேதகுவின் செயலாற்றல் எவ்வாறு இருந்தது?

நிலவன் :- எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை. ஒரு பொதுவான பாரம்பரியமும், பண்பாடும், ஒரு தனித்துவமான மொழியும், தாயக நிலமும் உடையவர்கள் என்பதால், ஈழத் தமிழர்கள் அல்லது தமிழீழ மக்கள் ஒரு தேசிய இன அமைப்பைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது கெரில்லாத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி சிங்கள ஆயுதப் படைகள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்த அதேவேளை தமிழரின் புரட்சிப் போர் உக்கிரமும் விரிவாக்கமும் கண்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகளின் கெரில்லாப் போராட்டம் உக்கிரமடைந்து சிங்கள ஆயுத படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி வந்த அதேவேளை, எமது மக்களின் உறுதியான அரசியற் போராட்டங்களிலிருந்து வரலாற்று ரீதியான படிநிலை வளர்ச்சி பெற்று வடிவம் எடுத்தது.

1990 பின்னர் காலத்தில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி அலகுகளும் படைப் பிரிவுகளுக்கு தனித்துவச் சீருடையுடன் ஒரு தேசிய  தமிழ் இராணுவமாக  உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள். ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தையும் தனது இதயங்களில் சுமந்து அவர்களின் எதிர்காலத்திற்காக, அவர்கள் அறிவில் சிறந்து, அறிவியல் ரீதியாக வளர வேண்டும் என்பதற்காக அல்லும் பகலுமாக அயராது உழைத்தவர்கள்.. இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்  மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள். அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள்.

“தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.” என்ற தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரனின் அவர்களின் நேர்மையையும் வீரத்தையும், அரசியலையும் ஒட்டுமொத்தமாக அவர் மக்களை நேசித்த விதத்தையும், தீர்கதரிசன சிந்தனையும் அதற்கான செயல் வடிவம் கொடுத்த போராளிகள், மற்றும் மாவீர்களின் தியாகங்கள் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பற்றுதலையும் மனவுறுதியையும் அவரை மிக ஆழமாக நேசித்து அறிந்து கொண்ட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்பது திண்ணம்.

எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் நாம் போராடியே ஆக வேண்டும் என்று… புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல்த் திட்டத்தை வரைந்து இதனூடாக அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார்.  தமிழீழ சுதந்திர விடுதலைப் போராட்டம் உலக வல்லாதிக்க அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், எந்த விதமான விட்டுக்கொடுப்புக்களுமின்றி வரித்துக்கொண்ட இலட்சியம் மாறாது, உறுதியோடு வழிநடாத்தி இறுதிவரை அடி பணியாது தமிழீழ விடுதலைக்காகத் தமிழீழ மண்ணிலே, மாவீரர்கள் வழியில் தன்னுயிரையும் அர்ப்பணித்தார் தமிழீழ தேசியத்தலைவர்.

DSCF0034-300x200.jpg

அமுதன் :- தேசியக் கொள்கை நிலைப்பாட்டிலும் அதன் செயற்ப்பாட்டிலும் தலைவர் அவர்களின் செயற்பாடு மற்றும் அவரின் சிந்தனை நீரோட்டமானது எவ்வாறு காணப் பட்டது?

 நிலவன் :- உலக வல்லரசுகளின் பெருந்துணையுடன் தமிழீழ மக்களை இனஅழிப்புச் செய்தவாறு சிங்களம் செய்த ஆக்கிரமிப்பை உறுதியுடன் எதிர்த்துப் போராடி, உலகில் போராடும் மக்கள் பெறவேண்டிய சரணடையாத உறுதியைத் தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார். தமிழீழத் தேசத்தை அமைக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு செயல்களையும் நேர்த்தியோடு முன்னெடுத்த தலைவர் அவர்கள், அதற்கு எதிராக வந்த தடைகளையும், சூழ்ச்சிகளையும், கூடக் கையாள்வதில் தீர்க்கதரிசனமான அரசியல் அணுகு முறையைக் கையாண்டார். உலக வல்லரசுகளின் இராணுவப் படி முறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத் திருப்பி தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, தன் வாழ்வு முழுக்க மக்களுக்கானதொன்று என்பதனை அவர் மிகச் சரியாக அறம் வழி உணர்ந்திருந்தார் எனின் மிகையாகாது.

மக்களின் உரிமைகளை அடகு வைக்காது உறுதியோடு போராடும் துணிவு கொண்ட எங்கள் தேசியத் தலைவர் அவர்கள் போராட்டங்களால் நிகழும் உயிரிழப்புகள் குறித்து அவர் கூறும்போது, “ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்!” என்றார். “ஆயுதப் போராட்டம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, காலம் எங்களிடம் கையளித்திருப்பது. நாங்கள் போர் வெறியர்களோ ஆயுத விரும்பிகளோ அல்ல. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

சமாதான வழியில், தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு முயற்சிகளை எடுக்குமானால், நாம் அதற்கு ஒத்துழைப்பு வழற்குவோம். தமிழரின் தேசியப் போராட்டத்தினது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தைக் கருத்திற் கொண்டு, உருப்படியான சுயாட்சித் தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்படுமானால், நாம் அதனைப் பரிசீலனைசெய்யத் தயாராக இருக்கிறோம். நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.  எனத்  தமிழீழ தேசியத் தலைவரின்  மாவீரர் நாள் உரைகளில் வெளிப்படையாவே தெரிவித்திருக்கின்றார்.

நாம் விடுதலைக்காகப் போராடும் நாம் சலுகைகளுக்காகக் கைநீட்டி நிற்கும் ஒரு சாதாரண கூட்டமல்ல வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே  எத்தனையோ ஆண்டுகளாக, எத்தனையோ அழிவுகளைச் சந்தித்து, எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்து, எத்தனையோ தியாகங்களைப் புரிந்து, எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு, எமது இலட்சியப் பாதையில் முன்னகர்த்தி வருகிறோம். நாங்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மண்ணில் எங்களின் சுதந்திரத்தை மட்டும்தான். நாம் இனத்துவேசிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. சிங்களப் பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை.” என்ற கொள்கை கொண்ட மகத்தான மாமனிதன் எங்கள் தேசியத் தலைவர்.

THALI724-300x208.jpg

அமுதன் :- மாவீர்கள் பற்றிய தேசியத் தலைவரின் நிலைப்பாடு ம் அதன்பால் அவரால் செயற்படுத்தப் பட்ட நிகழ்ச்சி நிரலின் மிக முக்கியமான செயற் பாடாக எதைக் கருதுகிறீர்கள்  … ?

நிலவன் :- தமிழரின் தேசியப் போராட்டம் நீண்ட, சிக்கலான வரலாற்றுச் சூழ்நிலைகளால் உருவாக்கம் பெற்றுப் பெருவளர்ச்சி கண்டிருக்கின்றது. இன்று அதன் பரிமானம் வேறு! வடிவம் வேறு!நீண்ட காலமாக இரத்தம் சிந்திப் போராடிய எமது இயக்கம், இன்று தமிழ்ப் பகுதிகளில் தன்னாட்சிக் கட்டமைப்புகளை நிறுவும் அளவிற்குப் போராட்டத்தை உயர்ந்த படிநிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இன்று நாம் மிகவும் பலமான, உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். இந்த வலுவான அத்திவாரத்தை இட்டுத் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது .

1989 கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் மணலாற்றுக் காட்டுப் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதலாவது விடுதலைப் புலிகளின் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் அவர்களின் வீரச்சாவு நாளான “கார்த்திகை 27″ஐ மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உரையாற்றும்போது…..

எமது போராட்டத்தின் ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பிக்கின்றோம் என ஆரம்பித்தார்.

இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத் தான் கருதினார் தலைவர். வீரச்சாவடைந்த எல்லாப் போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக இணைத்து மாவீரர் எழுச்சி நாளையும் பிரகடனப்படுத்தியிருந்தார் . இல்லாவிட்டால் காலப் போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்று தலைவர் தன் முதலாவது மாவீரர் நாள் உரையிலே மிகத் தெளிவாக் கூறியுள்ளார்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.  தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. “எமது வீரசுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கெளரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

 மாவீரர்களைப் போற்றிப் புகழ்வதாகவும், விடுதலைப் போராட்ட நிலைமைகளை மக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறுவதாகவும் அந்த உரைகள் அமைந்திருக்கும். நேற்றைய உண்மையையும், இன்றைய யதார்த்தத்தையும், நாளைய விடிவையும், ஒருங்கிணைத்து எமது தேசியத் தலைவர் கூறியது எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன. இவ்வாறு மாவீர்களின் தியாக அர்ப்பணிப்பு சுதந்திர வேட்கை தொடர்பாக தேசியத் தலைவர் அவர்களின் பல நூறு சிந்தனைத் துளிகளைப் பார்க்கலாம் அவை தலைவர் அவர்களின் தீர்க தரிசன வரிகள் ஆகும்.

thalaiver4-300x200.jpg

அமுதன் :- தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு செய்தி மறுக்கப் பட்டுள்ளது அவை பற்றி கூறமுடியுமா?

நிலவன் :- 2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு யுத்தம் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனம் கொண்ட தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பலரும் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் மரணமடையவில்லை அவர் திரும்பி வந்து போராடுவார் என்ற கருத்துகளையே கூறி வந்தனர். எமக்கென்று ஒரு திட்டம் இல்லா விட்டால்  நாம் அடுத்தவர்களின் திட்டப்படியே செயல்பட வேண்டிவரும் என்பதன் எடுத்துக்காட்டே இவை.

2009ஆம் ஆண்டுமே 21ஆம் தேதி பேசிய பழ. நெடுமாறன், கூறினார் 2009 மே 22ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த செல்வராசா பத்மநாபன் kp அவர்களைத் தொடந்து மே 24, 2009 அன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மீளவும் ஜூன் 11, 2009: அதே ஆண்டு ஜூன் மாதத்திலும் உயிருடன்தான் உள்ளார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். அப்போது பலரது முகத்திரை கிழியும்” என்று கூறினார்.

ஜனவரி 20, 2010: தேசியத்தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை இறந்தபோது, அதில் பங்கேற்க ஈழதேசம் வந்திருந்து திரும்பிய வி.சி.க திருமாவளவன். அப்போது பேசிய போது , “எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றி மறக்காமல் கேட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறினர்.

2014 ஜனவரி 16: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியி்ல நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரன் மீண்டும் வந்து தமிழீழத்தை மீட்பார் என்று தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன், அவர்கள் கூறுகையில் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக்கட்டப் போரில் கொல்லப் படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார் என்று தெரிவித்தார். 2018 டிசம்பர்: ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வை.கோ. அவர்கள் மீளவும்தேசியத் தலைவர் உயிருடன் இருப்பதாக நான் உணர்வுப் பூர்வமாக நம்புகிறேன். இதில் விவாதிக்க எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரம் செறிந்த உயிர்ப் பணிப்பை தமிழர் வரலாற்றிலிருந்து அழித்து விடும் நோக்கோடு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா- இந்திய- சர்வதேச புலனாய்வுச் சதிகள் கைக் கூலிகளாக 2009கு பின்னர் பலர் செயற்பட ஆரம்பித்தார்கள் என்பது கசப்பான உண்மையினை இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அறவழி தவறாது இலட்சியப் பற்றுடன் மாவீரர் சிந்திய குருதியால் உறுதி பெற்றது. அவர்களின் உன்னதமான உயிர்த்தியாகங்கள் . எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறை வேறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரத்தை  அடைந்து விடவில்லை. தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்கக்கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்குமாயின் தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் மேலும் சிதைந்து சின்னா பின்னமாகி விடும்.

அமுதன் :- இக்காலகட்டத்தில் மேதகு பற்றிய குழப்பமிகு கருத்துக்கள் திட்டமிட்டுவிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர் சம்பந்தமான தெளிவானகருத்தியலைக் கூறுங்கள்?

நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும்,தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்! அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்தினை மீட்டிட ஒரு விடுதலைப் போரொளியாக, வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, வாழ்ந்தவர். உலகத் தமிழ் இனத்தின் விடுதலையின் குறியீட்டின் அரசியல் வழிகாட்டியாக, வரலாற்றில் வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் முள்ளி வாய்க்காலின் நந்திக்கடலோரப் பகுதியில் 17 இரவு தொடக்கம் 19 அதிகாலை வரை நடைபெற்ற இறுதிப் போர்க்களத்தில் அடிபணியாது தீரமுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழினத்தின் ஒப்பற்ற மாபொரும் தலைவன் மாவீரன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு 15 ஆண்டுகளாக வீரவணக்க எழுச்சி நிகழ்வு செலுத்தாமல் இருக்கிறோம் . இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது” என்று வெளிப்படையாக அறிவித்து விட்டால் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருந்திருக்காது ஆனால் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய விடயம். தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை தமிழினம் இழந்து விட்ட உண்மை.

முள்ளிவாய்க்காலோடும், நந்திக்கடலோடும் தலைவரின் வரலாற்றை புதைத்துவிட்டோமென இறுமாப்புக்கொண்டு, சர்வதேச நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தொடர் தடையினை நீடித்து, பிரதான சமூக வலைத் தளங்களில் தேசியத் தலைவரின் உருவப் படங்களை திட்டமிட்டு நீக்கி தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை சிங்களத்துக்குத் துணைபோய் அடையாள அழிப்பு செய்துவரும் அதே உலகநாடுகளின் முற்றத்தில் தேசியத் தலைவரை உயிர்ப்பிக்கப் போராடுகிறது.

பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டு தேசவிடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பதும் யதார்த்த நிலையில்… ஆனால் அவரது வீரச்சாவு ஒன்றும் அவமானகரமானது இல்லை… அவர் புறமுதுகிட்டு ஓடவில்லை… இறுதிவரை களத்தில்தானே நின்று போராடினார்..! மாவீரர் வழியில் தன்னை ஆகுதியாக்கி, தன் குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாக தியாகம் செய்த தேசத்தலைவனின் வரலாறுகள்… விடுதலைப் போராட்டத்தின் எச்சங்களாக உயிர் வாழும் எமது காலத்திலேயே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டு கடந்து போகப் போகின்றோமா..?

விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப் பட்ட பின்னர் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அரசியல்ரீதியாகவும் அமைதிவழியிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வீச்சுப் பெற்றுள்ளது. தாயகத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு எங்கள் தலைவரின் வாழ்வும் ஒரு வழிகாட்டி. இன விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப் போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. போராட்டத்தை அவர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து அவரது பேச்சும் கொள்கையும் மாறவே இல்லையே. கடைசி ஒரு போராளி இருக்கும்வரை போராடுவேன் என்றார். சொன்னதைச் செய்தும் காட்டினார். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது காத்திடும் தமிழீழத் தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழரின் தேசிய எழுச்சிக்கும் கௌரவத்திற்கும் தலைவர் அவர்கள் ஆதாரமாக விளங்குகின்றார்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு  உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

அமுதன் :- போரின் மௌனிப்பிற்கு பிற்பட்ட காலத்தில் நிலவும் தலைவர் சார்ந்த, தேசிய விடயம் சார்ந்த சூத்திர தாரிகளின்குழப்ப நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் உங்கள் கருத்து எவ்வாறு அமைகிறது? எப்படி இந்நிலையைச் சீர் செய்யலாம்?

நிலவன் :- தமிழீழத் தேசிய தலைவரின் சிந்தனையின் செயல் வடிவமாகப் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப் பட்ட தமிழீழ கோட்பாட்டை நிலை நிறுத்தி செயற்பட்டுவரும் அமைப்புக்களை , சமூக நிறுவனங்களை குறிப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை எந்த அன்னியச் சக்திகளாலும் அழித்து விடவோ, ஒழித்து விடவோ, முடியாது. தேசியம் சார்ந்து மக்கள் மையப்படுத்தப்பட்ட இவ்வாறான அமைப்பை, அல்லது குழுக்களில் இடம்பெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் எதிர்காலத் திட்டங்கள் என்பனவற்றை மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

துரோகங்களையும், ஊழல்களையும், மூடி மறைக்க முற்படுபவர்கள் கூட்டுக் களவாணிகளே! தேசியப் பணியாற்றிவந்த சிலர் தேச விரும்பிகளாக தங்களை அடையாளம் காட்டி புலம் பெயர் நாடுகளில் தமிழர் ஒருங்கிணையும் கட்டமைப்புக்களில் இடம்பெற்ற செயற் பாடுகள் அனைத்தையும் மூடி மறைக்கும் விதத்தில் செயற்படுதல் மக்கள் மத்தியில் உண்மைகளை எடுத்துரைக்க முடியாத நிலை காணப்படுகிறது.  எத்தனை நாளைக்குத் தான் மறைப்பது. அமைப்புக்களுக்கிடையில் நடைபெறும் குழப்பங்களை மக்களுக்குச் சொல்வதன்  ஊடாக அது மக்களை மேலும் குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும் …..

மக்களின் உண்மையான அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டாளர்களையும் தங்கள் வலைக்குள் வீழ்த்துவதற்காகவே போடும் சதித் திட்டங்களை மக்கள் விழிப்புடன் கையாள வேண்டும் . தேசியத் தலைவரையும் அவர் குடும்பத்தையும் களங்கப்படுத்தி அதனுள் கருப் பொருளை உருவாக்கி தலைவர் உயிருடன் இருக்கின்றார் என உண்மைக்குப் புறம்பாகவும், நீதியற்று நடப்பவர்களை அடையாளப் படுத்த வேண்டும். இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் முரண்பாடுகளை நமக்குச் சாதகமாக்கி அதனுடாகத் தமிழீழத்தின் சாத்தியத்தினைப் பற்றி சிந்திக்காது இருப்பதை..  கவனம் எடுத்தல் அவசியம்.

பணத்தை மக்களிடமிருந்து வசூலிக்க முடியும். மக்கள் எந்தக் கேள்விகளும் கேட்கமாட்டர்கள் என துரோகக் கும்பலின் எண்ணமும் சிந்தனையும் பண மூட்டையை எப்படி உருவாக்கி காவிச்  செல்வது என்பதாகவே இருந்து வருகிறது. மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் மக்கள் மத்தியில் இருந்து இருட்டடிப்பு செய்து  குழப்பகரமான செயற்பாடுகளும், துரோகத்தனமான நடவடிக்கைகளும், மக்களை பெரிதும் விசனத்திற்கு உள்ளாக்கி  மீண்டும் ஒரு தேசியப் பின்னடைவை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஒருவர் அல்லது  குழுவாகச் சிலர் துரோகிக்காக மிகக் கேவலமான செயற் பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.  இதனை மூடி மறைப்பவர்களிற்கு பின்னாலும் இருப்பது பணம் அரங்கேற்றத் துடிக்கும்  துரோகங்களை இனம் கண்டு கொள்ளுங்கள். அத்தனை துரோகங்களையும் துணிவோடு எதிர்கொள்ளுங்கள். இனத் துரோகச் செயலில் ஈடுபடுபவர்கள் எடுத்துக் கொள்ளும் பெரும் ஆயுதம் தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர் நினைவேந்தல்  பிரசன்னம். அது தேசியத் தலைவர் எனக்கூறிக் தொழில்நுட்ப பின்னணிகளைக் கொண்டு போலியாக வடிவமைக்கப்பட்டு திரையிடப் படவிருக்கும் போலியானதொரு உருவத்தின் உரையே!.

தயவுசெய்து போராளிகள் மேல்  அவதூறு பரப்புவதை விடுத்து  மக்கள் மௌனம் கலைத்து விழித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் போராளிகளாய் நாங்கள் தாங்கி நிற்கின்ற வலிகள் ஏராளம். அவை அனைத்தையும் தாண்டி, மிகத் துணிவுடனும், தெளிவுடனும் தற்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் துரோகங்களிற்கு எதிராகவும் பலதரப்பட்ட மக்களது வினாக்களுக்கு உரிய பதில்களை வழங்க வேண்டிய நிலையில் இருக்கி்ன்றோம்.  திரிவுபடுத்தப்பட்ட  போலிக் கதைகளைக் கூறி மக்களை  ஏமாற்றிப்  பண மோசடியில் ஈடுபடுவோர்க்கு எதிராகச்   சட்ட நடவடிக்கை எடுப்பதும், போலிப் பண வசூலிப்பிற்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்என பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

தமிழ் தேசியம் சார்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் உண்மையான செயற்பாட்டாளர்களும், உணர்வாளர்களும் இளம் தலைமுறையினரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பது…ஒரு சிறந்த திட்டம் எனப் பெருமிதம் கொள்ள வேண்டும். தமிழீழக் கோட்பாட்டுடன் இயங்கும் அமைப்புக்கள் இளையோர் கையில் ஒப்படைக்கப் பட்டால் இந்தப் பொறுப்புகளானது அவர்களுக்குச் சற்று சுமையாக இருந்தாலும் கூட அவர்களது தன்னம்பிக்கையும், செயல் திறனும் என்றும் சிறப்பாகவே இருக்கும் என நம்புகின்றேன்.

தேசியத்தலைவரின் வீராச்சாவு தொடர்பில்் மக்களுக்கு உண்மை நிலை தெரியாத வரைக்கும்தான் இவர்களால் தங்களது இருப்பைத்தக்க வைக்க முடியும்.  விரைவில் 2009ஆம் ஆண்டு மே ஆயுதப் போராட்டம் தானாகவே மௌனம் காணும் வரை களம் கண்ட போராளிகளாய்  ஈழத்திலும் தமிழகத்திலும் புலம்பெயந்து பரந்து வாழும் போராளிகள் ஒன்றிணைந்து விடுதலைப் புலிகளின் மரபுக்கமைய சமர்கள சம்பவ ஆய்வு அறிக்கையின் ஊடாக உண்மை வெளிவரும் போது இவர்கள் நிலை என்னவாகும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தேசியப் பணியை சுமக்கும் போராளிகளும், மக்களும், தேசியத் தலைவரின் பெயருக்கும் அவரது தியாகத்திற்கும்…. துரோகம் விளைவிக்க நினைத்து  நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீரச்சாவடைந்த தேசியத்தலைவரை  திரைக்கு கொண்டு வந்து எப்படி? போலி நாடகங்கள் நிகழ்த்தப் போகிறார்கள் அரசியல் மற்றும் புலனாய்வு கண்ணோட்டத்துடன் தெட்டத் தெளிவாக தொழில்நுட்பப் பின்னணியுடன் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையாக இருக்கும் நிதி மோசடிகள், ஊழல்கள், துரோகங்கள் என்பனவற்றை எவ்வாறு மூடி மறைக்காமல்  வெளியில் கொண்டு வருவது பற்றியும் செயலாற்ற வேண்டும் . உலக வல்லாதிக்க சக்திகளோடு சேர்ந்து இனத்தின் வரலாற்றை இழிவு படுத்த நினைக்கும் துரோகக் கும்பல்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி  தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவனுக்கு கௌரவத்துடனும் மரியாதையுடனும்  உரிய வீர வணக்கத்தினைச் செலுத்தி  உறுதியேற்க முன்வர வேண்டும்.

தமிழீழ தேசிய இராணுவத்தை உருவாக்கி, வீரத்தையும், அறத்தையும் கொண்ட ஒரு மண்ணுரிமைப் போரை உலகமே வியக்கும் வண்ணம் தமிழீழ மண்ணில் நிகழ்த்திக் காட்டி  வீரம் என்பதற்கு புதிய அகராதி படைத்து  உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் மாவீரர்கள். உயர்ந்ததொரு இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். என்பதைக் கருத்தில் கொண்டு  நாம் அடுத்தகட்டப் போராட்டத்தினை முன்நகர்த்துவது குறித்து உறுதியெடுத்துக் கொள்வதே – தலைவர் அவர்களின் இலட்சியக்கனவினை முன்னோக்கி நகர்த்த உதவும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும், தளபதிகளுக்கும், வீரவணக்கத்தைச் செலுத்த வேண்டும். உணர்வுடன் மக்கள் மாற்றங்களை நோக்கிச் செல்லாவிட்டால் இந்தச் சதிகார கும்பல் ஒரு இனத்தின் வரலாற்றையே குழி தோண்டிப் புதைத்து விடும். இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. என்னும் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடாய் அவரின் சிந்தனைகளைப் பின்பற்றிச் செயற் படுவது தான் தலைவருக்கு கொடுக்கும் அதிஉச்ச கௌரவம்  ஆகும்.

kodi-300x169.jpg

அமுதன் :- தேசிய நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமான தீர்க்கமான அறை கூவலாக அமையும் தங்கள் கருத்துக்களின் பதிவு யாதாகவிருக்கும்?

நிலவன் :- தமிழீழவிடுதலைப் போராட்ட மரபுகளைத் தாண்டிய தமிழீழக் கோட்பாட்டு அழிக்கவல்ல நுணுக்கமான இப் புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடைய பூகோள வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதமும் இணைந்து மக்களிடத்தில் தலைவர் இருக்கின்றார் வருவார் என்றும், அவர் மறைந்து வாழ்கின்றார் என்றும், விடுதலைப்போராட்டத்தின் இயங்குவிசையையும், தளத்தையும், செல் நெறியையும் மடைமாற்றம் செய்வதற்காகப் பல செயல்த் திட்டங்களை சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சில நடவடிக்கை களையும் களமிறக்கி உள்ளார்கள்.

மக்கள் முன்னால் குற்றவாளிகளாகத் போராளிகள் தலை குனிந்து நிற்கின்றோம். காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப் பரப்புரைகளும் அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. இது தார்மீகக் கடமை சாந்த விடயம். தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாகக் கூறி, தற்போதைய எமது நடவடிக்கைகள் அனைத்துக்கும் தலைவர் அவர்களைப் பொறுப்பாக்குவது கூறுவதும் தார்மீகத்திற்கு எதிரானது.

எமது விடுதலைப் பயணங்கள் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்னும் பேராளுமையின் சிந்தனையின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலையை  நோக்கித் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும்.எமது மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலை இலக்கினை எங்கள் மனங்களில் ஏந்தி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, தொடர்ந்தும் தாயகக் கோட்பாட்டிற்குப் பெரும் பலம் சேர்ப்போமாக இருந்தால், நிச்சயமாக எங்கள் எல்லோரினதும் ‘தாயகக் கனவு’ நனவாகும்.

அமுதன் :- தேசியக் கொள்கை ரீதியில்  தற்போது மக்கள் மத்தியில் நிலவும் கருத்தும் சூழல் சார்ந்த செயற்பாடும் எவ்வாறு உள்ளது….  இவ் வேளையில் இதுபற்றியவிழிப்பூட்டும்  தங்கள் கருத்தாக அமைவது யாதென விளங்க முடியுமா?

நிலவன் :- தமிழீழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த பாதகச் செயல் முள்ளி வாய்க்கால் இனப்படு கொலையுடன் முற்றுப் பெறவில்லை. அது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.இது இந்திய “றோ” நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் ஆகும். இச் செயல்திட்டத்தை நடை முறைப் படுத்துவதை இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான “றோ” நிறுவனத்தின் உறுப்பினர்களாக புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வருகின்றார்கள். இதில் பலரின் ஒருங்கிணைப்பில், போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பு ஒன்றை இந்தியா உருவாக்க முயற்சித்து வருகிறது.  இதன் ஊடாக நிதி திரட்டும் மோசடியிலும் ஈடுபட்டடுள்ளார்கள். இந்திய சிங்கள அரசுகள் கட்டவிழ்த்து விடும் பொய்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்ட  போராளிகள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மை தாமே தீவிர செயற்பாடுகள் என்று காட்டிக்கொண்டு உலக உளவு நிறுவனங்களுடன் சேர்ந்து  செயற்பட்டு வரும் இனத் துரோகிகளை வைத்தே இந்தியா இதைக் கையாளுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் கிளை கட்டமைப்பில் இருந்து பணமோசாடிகளாலும், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகவும் விலக்கப்பட்ட, அல்லது தாமாக விலகிய சிலரைப் பயன்படுத்தி போலியான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றை இந்திய வெளியகப் புலனாய்வு நிறுவனமான “றோ” உருவாக்கி உள்ளது.

 இனத் துரோகிகளின்  பயிற்சி மற்றும் ஆலோசனையும் அண்ணன் வரப் போகின்றார் என கூறி, புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கின்றார்கள். இவை அனைத்துமே திட்டமிடப்பட்ட இந்தியாவின் “றோ” உளவுப்பிரிவின் திட்டமாக நான் பார்க்கின்றேன்.

இந்திய புலனாய்வுச் சமூகத்தை மேற்கோள் காட்டுவதற்கு காரணங்கள் பல உண்டு. தமிழ் இன அழிப்பு யுத்தத்தின்  உளவியல் போரை  பின்னிருந்து நடத்துவது இந்தியா. இந்திய உளவுத்துறையினர் அன்றும் இன்றும் தாய்நிலத்திலும். புலத்திலும், தமிழகத்திலும் உள்ளார்கள். ஈழத்திற்கான விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின்” துப்பாக்கிகள், முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகிகளே  ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

மக்கள் மத்தியில் தேசவிரோதிகளினால் சில குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்திப்  புலனாய்வு ரீதியாகத் தங்கள் செயற்பாடுகளை  மக்கள் மீது திணிக்கின்றார்கள். தேசியத் தலைவர் மற்றும் துவாரகாவின் பெயரில் மக்களை ஏமாற்றிய போலிகள் யார் என கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப்போலிக்கு பின்னால் செயற்படுபவர்கள் யாரென்பதும் கண்டறியப்பட்டது. அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் கண்டிப்பாக ஏற்க முடியாது. இப்படி செயற்படுபவர்கள் தமிழினத் துரோகிகள் எனக் கருதப்படுவார்கள். எனவே மக்களும் தற்போது விழிப்படைந்துள்ளனர். எமது தேசியத் தலைவரையும் அவரது குடும்பத்தையும் களங்கப்படுத்தும் சதிகளை முறியடிப்பார்கள் என பெருமை கொள்கின்றேன்.

எமது விடுதலைப் போராட்டமானது ஆரம்பகாலம் முதல் பல்வேறு துரோகங்களை, சதிகார நடவடிக்கைகளைச் சந்தித்தே வந்துள்ளது. இந்த காலகட்டங்களில் எல்லாம் எமது மக்கள், உணர்வாளர்கள், ஊடகங்கள் என பல்வேறு தரப்புக்களும் எமக்கு உறுதுணையாய் இருந்துள்ளனர். அந்தவகையில் தற்போது முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கைகள் போராட்ட குணத்தை முழுமையாகச் சிதைத்து, நம்பிக்கையைச் சிதைத்து, அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக ஈழத் தமிழ் மக்களை ஆக்கியிருக்கிறது.

எமது தேசத்தின் வரலாற்றில் மாவீரர்கள் சங்கமமாகி நிற்கிறார்கள் தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. நாம் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக் காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்து முற்றுப் பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

nilavan-285x300.png

அமுதன் :- விடுதலைப் புலிகள் பற்றி சிங்களத் தலைவர்கள்மத்தியிலும் உலகத்தை தலைவர்கள் மத்தியிலும் எவ்வாறான எண்ணப்பாடுகள் நிலவின?

நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்பதை சிங்கள தேசம் ஏற்கத் துவங்கி விட்டார்கள் என்றால் மிகையில்லை . எண்பதுகளில் தமிழீழத்தினதும், சிங்கள தேசத்தினதும் அரசியல் தலைவிதியை ஆட்டிப்படைத்துத் தொண்ணூறுடன் முடிவடைந்த ஒரு முக்கிய தசாப்தத்தின் வரலாற்று நாயகனாக விளங்குகின்றார்  “பிரபாகரன்” இப்படியாகத் தமிழ் இனத் தலைவர் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்குப் புகழாரஞ் சூட்டுகிறார் பிரபல எழுத்தாளரும், ‘லங்கா கார்டியன்’ சஞ்சிகையின் ஆசிரியருமான “மேர்வின் டீ சில்வா”.

புயலின் மையமாக நின்று, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த வீரன் என்ற காரணத்திற்காக ஒரு தசாப்தத்தின் மாமனிதன் எனப்  “மேதகு வே. பிரபாகரன்” போற்றப்பட்டார் . இது எனது தனிப்பட்ட மானசீக மதிப்பீடு அல்ல. இலங்கைத் தீவை அதிர வைத்த பூகம்பமான நிகழ்வுகளின் அடிப் படையில் பார்க்கும் போது, இது தவிர்க்க முடியாத “வரலாற்றின் தீர்ப்பு’’ என்கிறார் மேர்வின்.

முன்னர் ஒரு முறையும் “ புலிகள் தலைவர் மேதகு வே. பிரபாகரன் சிறந்த தலைவர், இறுதிவரை தன்னுடைய மக்களுக்காக நின்று போராடியவர், தனிப்பட்ட ரீதியில் தம்மை பழிவாங்கவில்லை” என்றும் பொன்சேகா கூறினார்.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் கடந்த 23.11.2022 அன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அவர்கள், உலகில் ஒழுகத்தில் தலைசிறந்த இயக்கமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கியுள்ளனர் எனக் கூறியிருப்பது எதிரிகளாலும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் வியந்து போற்றும் நிலையில் உள்ளமைக்கு தக்க சான்றாக அமைந்துள்ளது.

சிங்களப் பேரினவாத கடும்போக்குடைய பொதுபலசேனா அமைப்பின் தலைவர் “ஞானசார தேரர்” கூட “விடுதலைப் புலிகளின் தலைவர்  சிறந்த தலைவர் என்றும், மக்களுக்காக கடுமையாக போராடியவர் என்றும், முல்லைத்தீவில் பிறந்திருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுடன் இணைந்து போராடியிருப்பேன்” என்றும் கூறினார்.

2011ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய, நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயளாலர் ரிச்சர்ட் ஆர்மி ரேஜூம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சிறந்த போரியல் வல்லுனர்,  இராணுவ மேதை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின், போரியல் ஆளுமை என்பது, எவராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்ல என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த காலத்தில் இலங்கை தீவின் அரசியல்வாதிகள் பலரும் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் குறித்தும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் குறித்தும் பல புகழாரங்களைச் சூட்டியுள்ளனர். இனவழிப்புப் போரில் ஈடுபட்ட அரசபடை இராணுவத் தரப்பின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான “மேஜர் கமால் குணரத்தின” போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் மற்றும் தலைவர் பிரபாகரன் அவர்கள் களத்தில் ஒழுக்கத்திற்குப் புறம்பான எந்த விடயங்களும் காணப்படவில்லை என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் “பிரபாகரன் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்க நெறிகளைப் பின் பற்றியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளைக் கண்ணியத்துடன் நடத்தினார். அவர் அனைத்து போராளிகளையும் ஈழத் திருநாட்டின் பிள்ளைகளாகவும் தனது பிள்ளைகளாகவுமே எண்ணினார். எந்த ஒளிப்படத்திலும் பிரபாகரன் மதுபானக் கோப்பையுடன் நாம் கண்டதில்லை.” அவர் ஒழுக்கமான தலைவராக இருந்தார். அவர் உலகத் தலைவர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தடம் பதித்திருந்தார். பலரும் கற்கவேண்டிய பண்புகள் அவரிடம் உண்டு. பிரபாகரனின் தலைமைத்துவம் இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத் திறமையான தாகவே இருந்தது. அவரிடம் நிறையப் பொறுமை இருந்தது. இதுதான் என முடிவெடுத்தால் அவசரப்படமாட்டார். சரியான தருணம் வரை தனது பயணங்களுக்காகக் காத்திருக்கவே செய்வார்”.

முன்னாள் ஐனாதிபதி மகிந்தவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ஐனாதிபதியும், ஆகிய கோத்தபாய கருத்து தெரிவிக்கையில் “தமிழ் மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருக்கிறார்” என்கிறார். முன்னால் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகோ குறிப்பிடுகையில் “மகிந்தவைப்போல் பிரபாகரன் கொடூரமானவர் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.”

மேலும் முன்னாள் இந்திய இராணுவத்தின் உயரதிகாரியான கேணல் ஹரிகரன் பிரபா கரனின் போர்த் திறமைகளைச் சில வருடங்களுக்கு முதல் புகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இராணுவத் தளபதியான “பீல்ட் மாசல் சரத்பொன்சேகா”, “தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சிறந்த தலைவர் என்றும் தனது சொந்த மக்களுக்காகக் குடும்பத்தை யுத்த களத்தில் பலியிட்டு இறுதிவரைப் போராடியவர் என்றும் சிங்களத் தலைவர்கள் பிரபாகரனிடம் இருந்து இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியமையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் தலைவர் பிரபாவினதும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பான போராட்டத்திற்கு எதிரிகள் வழங்கிய புகழ்ச்சியாகும்.

2019 மே மாதம் விடுதலை புலிகளால் ஒரு வெளிநாட்டவர் கூட கொல்லப்படவில்லை என வடக்கு ஆளுநர் கூறுகையில்….

 “இலங்கையில் போர் நடந்தது. இந்தப் போரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப் படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட வெளிநாட்டவர்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் அவர்கள் மிக தெளிவாகவும் மிக நிதானமாகவும் நடந்து கொண்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒழுக்கத்திலும் நேர்மையிலும் சிறந்த கட்டுக்கோப்பு மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிறந்து விளங்கியமையின் காரணமாகவே தமிழீழ தேசம் அன்று குற்றமற்ற தேசமாக மிளிர்ந்தது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தின் போது தமிழீழ தேசத்திற்கு வருகை தந்த சர்வதேச நீதிப் பிரமுகர்கள் தமிழீழ நீதிமன்றுக்கு விஜயம் செய்த வேளையில் தமிழீழத்தின் ஒழுக்கம் கண்டு வியந்தனர்.

தமிழீழ நீதிமன்றங்களிலும் தமிழீழக் காவல்துறை அலுவலகங்களிலும் குற்றங்களின் கோவைகள் குறைவாக இருந்தமை கண்டு வியந்து தமிழீழத்தில் நிலவிய சட்டம் மற்றும் ஒழுக்கின் சீர்மையை பாராட்டினர். முப்பது ஆண்டுகளாக தமிழீழ இலட்சியம் மற்றும் கனவுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை பற்றிக் கொண்டமையின் விளைவாகவே உலகில் தலை சிறந்த தேசத்தை விடுதலைப் புலிகள் சாத்தியமாக்கினர்.விடுதலைப் புலிகளின் தலைவரான மேதகு வே. பிரபாகரன் இலங்கையின் மூவின அரசியல் தலைவர்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் தனித்துவமானவராகவே காணப்படுகின்றார்.

அமுதன் :- சிங்கள மக்களைப் புலிகள் கொன்றார்களா ? அவர்கள் விடயத்தில் புலிகளின் செயற்பாடு எவ்வாறு இருந்தது?

நிலவன் :- ஈழத்தமிழர்கள் கடந்த 75 வருடங்களாகத் தங்களது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகின்ற ஒவ்வொரு சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது.

சிங்கள இராணுவம் விடுதலைப் புலிகள் மேல்தொடுத்த போரின் போது இலட்சக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட போதும், விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத்தை மட்டுமே குறி வைத்துக் கடைசிவரைப் போரிட்டார்கள். தங்கள் உயிரே போனாலும் கடைசிவரை அப்பாவி சிங்கள குடிமக்களை அவர்கள் கொல்லவும் இல்லை, படுகொலை செய்ய முயற்சித்ததும் இல்லை.

விடுதலைப் புலிகள் இயக்கமானது….. ஒருபோதுமே அப்பாவி மக்களை இலக்கு வைத்து எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை தாக்கி அழித்த சமயத்தில்கூட ஒரு சிங்களப் பொதுமகனும், வெளிநாட்டவரும் சிறு காயத்திற்குக் கூட உள்ளாகவில்லை. அதுதான் விடுதலைப் புலிகள் இயக்கம்.

சிங்கள இராணுவம் தமிழீழ மண்ணில் புலிகளை தாக்குகிறோம் என்று சொல்லி நடத்தியவை எல்லாமே இன அழிப்புத்தான். உண்மையில் அதை சிங்கள அரசு தெரிந்தே செய்தது. புலிகளை அழித்தாலும் மக்களை அழித்தாலும் சிங்கள அரசுக்கு ஒன்றுதான். புலிகளும் மக்களும் வேறுவேறல்ல, தமிழ் இனத்தையே அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கு.

போரில் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதை அரசைப் போல புலிகள் நிபந்தனையாகக் கொள்ளவில்லை.  30 வருடங்களுக்கு மேல் இலங்கையில் தமிழின அழிப்பு போர் நடந்தது. இந்தபோரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட வெளிநாட்டவர்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் அவர்கள் மிக தெளிவாக இருந்தார்கள்.

21-04-2019 நடந்துள்ள தாக்குதலில் 37 வெளிநாட்டவர்கள் இறந்துள்ளனர். புலிகள் வெளிநாட்டவா்களை வெறுக்கவில்லை. இவர்கள் வெளி நாட்டவர்களை வெறுக்கிறார்கள் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்ததையும் நினைவு படுத்துகின்றேன்

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல… அவர்கள் விடுதலைப் போராளிகள் என 21-04-2019  பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது”CNN – அமெரிக்கா”….

இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம். BFM – பிரான்ஸ்….

விடுதலைப் புலிகளுக்கும்  இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை- சிறீலங்கா அரசு.

21-04-2019   தாக்குதலின் பின் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப் போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை!

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலில் அறிவித்த சர்வதேச நாடுகளும்  தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே இன விடுதலைக்காகப் போராடிக் கொண்டி _ருக்கும் தேசிய இனமாகிய  தமிழ் மக்களுக்கான விடுதலையையும் நீதியையும் ஏற்படுத்துகின்ற பயணத்திற்கு உதவும்.

Tamil_eelam_map.svg-212x300.png

அமுதன் :- தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் விடயத்தில் அன்றும் இன்றும் இலங்கை அரசு கொண்டுள்ள நிலைப் பாடு என்னவாக இருக்கும்?

நிலவன் :- 1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் இவர்களது இந்த தமிழரசுக்கட்சியே 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இவர்களது இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தைப் பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது.  தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது 75ஆண்டு காலமான நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. அரச ஒடுக்குமுறையும், அதற்கு எதிரான எழுச்சிப் போராட்டமுமாக இந்த வரலாறு விரிகின்றது. தாயகத்திற்கான, தேசியத்திற்கான, சுயநிர்ணய உரிமைக்கான, தமிழர் போராட்டத்தின் வடிவத்தையே, தீவிரவாதிகள் போன்ற சொல்லாடல்களால் உலக வல்லரசுகள் விமர்சித்து வந்திருக்கின்றன. உண்மையில் போராட்ட வடிவத்தை மட்டும் இவர்கள் எதிர்க்க வில்லை. போராட்டத்தையே இவர்கள் எதிர்த்தார்கள். அகிம்சை வழியிலானதாக இருந்தாலும் ஆயுத வழியிலானதாக இருந்தாலும் இவர்கள் எதிர்த்தார்கள்.

அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சித் தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப் பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே  இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.

பௌத்த சிங்கள ஆதிக்கவாதிகள்தான் தமிழர்கள் மேல் வன்முறையைத் தொடங்கி வைத்தனர். பிறகு இவ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இறுதியில் வேறு வழியின்றி இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட வரலாறும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கத் திருப்பி தாக்கதலில் ஈடுபட நேரிட்டது.

புலிகளுக்கு அரசியல் ரீதியாக ஒரு நோக்கம் இருந்தது, அவர்களின் கட்டுபாட்டில் நிலம் இருந்தது,  தமிழ் மக்களின் உரிமைக்காக போராட்டத்தில் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற மூலாதாரக் கோட்பாட்டின் அடிபப்டையில்  தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும்,  அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும்     திகழ்ந்த விடுதலைப் புலிகளின் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காகத் தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள். தமிழ் மக்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தமிழர்கள் கொடுத்த ஆணைக்கே விடுதலைப்புலிகள் வடிவம் கொடுத்தார்கள். – ஒரு அரசை நிறுவினார்கள்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனா

விலிருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் வகுப்பட்டிருந்தமை வெளிச்சத்துக்கு வருகிறது.

நீண்டு தொடர்ந்த இனவழிப்புச் செயற்பாடுகளை இந்த நடைமுறை அரசு ஓரளவு தடுத்து நிறுத்தியது. இராணுவ சாதனைகள் ஊடாக தமிழர் விடுதலை போராட்டம் சிங்கள அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி அதனுடன் அரசியல் ஒப்பந்தம் செய்ய ஆயத்தமானது. இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஆதரித்தது. ஆனால் ஐக்கிய-அமெரிக்க பிரித்தானிய, இந்தியா அரசுகள் ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்த்தன.

2002ம் ஆண்டு சமாதான பேச்சு வார்த்தைகள் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அதன் இராணுவ வெற்றிகளைக் கொண்டு சனநாயக அரசியல் வெளியை உருவாக்கிக் கொடுத்தது.  உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது வல்லாதிக்க நாடுகள்தான். ஆனால் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அந்த இயக்கங்கள் எந்த அரசுக்கு எதிராகப் போரிடுகின்றதோ, அந்த அரசைக் காப்பாற்றுவதே அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் வேலை. எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மறுத்த ரணில் அரசாங்கம் எமது விடுதலை இயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி ஓரம்கட்டுகின்ற வேலையையும் இரகசியமாக மேற்கொண்டது.

2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய இரா. சம்பந்தன், விடுதலைப் புலிகளை அழித்துப் போரை முடிவுக் கொண்டு வந்த பின்னர் நிரந்த அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமெரிக்க இந்தியத் தூதுவர்கள் 2009 ஜனவரி மாதம் தன்னைச் சந்தித்து கேட்டிருந்தாக விபரித்தார். ஈழப்போரின்  யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து  4ம் கட்ட ஈழ யுத்தத்தை பிரகடனப்படுத்தி இனவழிப்பை உள்ளடக்கிய பேரழிவுகள்  தமிழ்த் தேசியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்துவிட்டது.

இந்தியா ,அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கர வாதிகள் என்று குற்றம் சாட்டுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக் கருத்தை வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது. இலங்கைத் தேசத்தின் பௌத்த சிங்கள அரச பயங்கரவாதத்தினை விடவா தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களைச் செய்திருக்கின்றார்கள். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன் வைக்கப் போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது . ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன.

அமுதன் :- தற்பேதைய காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு தேசிய நிலைப் பாட்டிலுள்ள சகலருக்கும் மக்களுக்குமாக நீங்கள் கூறும் தெளிவான கருத்தும் வேண்டுதலும் என்னவாக இருக்கும்?

நிலவன் :- உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் பெயரை களங்கப்படுத்திப், பயன்படுத்தி இனவிரோத மோசடி செயலில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயலாகும். உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் இலங்கைபௌத்த சிங்கள பேரினவாதம்   நடத்திய தமிழின அழிப்புப் போரின் இனப்படு கொலை       களுக்கும் மனித அவலங்களுக்கும் எதிரான இனப்படு கொலைக்காக ஒலிக்கும் குரல்களைப் பலவீனப் படுத்துகிற வகையில்  யுத்தம் பற்றிய கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள்  குறித்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வை உருவாக்கி இனவிரோத மோசடிகளை தடுத்து நிறுத்த வேண்டும். நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதை வரலாற்றுப் பார்வையோடு செயற்படுத்த வேண்டும்.

விடுதலைப்புலிகள் இயக்கம் 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி அவரால் தொடங்கப் படுகிறது. பின்னர் அது படிப்படியான வளர்சியை மேற்கண்டு பல போரியல் வெற்றிகளைக் குவித்து, பலதேச கட்டுமானங்களை நிறுவி தமிழ் மக்களின் ஏகோபித்த நப்பிக்கையைபெற்ற ஒரு நிழல் அரசாக மாறி சரியாக 33 ஆண்டுகள் 12 நாட்கள் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த நிழல் அரசு  2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியோடு முள்ளிவாய்க்கால் முடிவிலும் நந்திக்கடலின் கரையோரமாகவும் எங்கள் தேசியத்தலைவர் தன்னைத் தமிழீழ மண்ணின் விடுதலைக்கு விதையாக்கி இற்றைக்கு பதினைந்து ஆண்டுகள் கடந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் சிறுகச் சிறுக அழித்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக மிகவும் கேவலமான விசமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அசாத்திய மானவற்றை தன் தீர்க்கமான முடிவுகளாலும், மதிநுட்பத்தாலும் சாத்தியமாக்கிக் காட்டியவர். ஆனால் அவர் தீர்க்கதரிசிபோல சிலவற்றை முன்கூட்டியே கணித்தும் உள்ளார்! அதற்கு பல எடுத்துகாட்டுகளும் உள்ளன.

இனியும் காலத்தைக் கடக்காது உலகமெங்கும் பரந்துவாழும் எம்தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் 2009 ஆம் ஆண்டு வரை  களம் கண்ட போராளிகள் ஒன்றிணைந்து எமது விடுதலை இயக்கத்தின் மரபிற்கு அமைவாக எங்கள் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தமிழீழ மண்ணையும் தேசியத் தலைவரையும் நேசித்த தமிழ்மக்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் எமது விடுதலைப் போராட்டத்தின் நீட்சியாக தமிழ்த்தேசிய எழுச்சியுடன் அவரது உரித்துடையோர்கள், தேசிய செயற் பாட்டாளர்கள், தமிழ்தேசிய அமைப்புக்கள், தமிழீழ மண்ணையும் எம்தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்த பொதுமக்கள், மற்றும் தமிழீழத் தேசியத் தலைவரின்  தலைமையின் கீழ் போராடிய போராளிகள் அனைவரையும் இணைத்து நடாத்த வேண்டும்.  இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய எண்ணிலடங்கா மக்களினதும் போராளிகளினதும் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் பங்களிப்புகளும் கொண்டு போராட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க தேசியப் புனிதப் பணியில் அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த புனித வரலாற்றுக் கடமையை முன்னெடுக்க வேண்டி உள்ளது.

“தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

நன்றி – நிலவன்.

https://www.uyirpu.com/?p=19244

தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் தேசிய இன விடுதலையின் எழுச்சி, புரட்சிக்கு வித்திட்டது

2 months ago

அறிமுகம் நிலவன் – ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் அறிவுச் சோலையில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள், ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் நடனம் மற்றும் நாடகங்கள் ஊடகவும் கட்டுரைகளின் வாயிலாக தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்ற போராளிக் கலைஞர். 2000 மேல் அரங்கம் கண்ட “சங்கநாதம் “ புகழ் பேபி ஆசிரியரின் மாணவர்கள் இவரும் ஒருவர் தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

சேயோன்:-  தமிழனின்  மரபுதழுவிய கலை பண்பாடு பற்றி உங்கள் பார்வை ?

நிலவன் :- தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள். தமிழர்கள் உலகம் போற்றும்  அளவிற்கு ஒரு சிறந்த பண்பாட்டைக் கொண்டவர்கள். தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழர்கள் என்பது மானுடத்தை மதிக்கும் இனமாக இருப்பது தான் தமிழுக்கான பெருமை. ‘தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள். உலகமே வியக்கும் வண்ணம் எண்ணிலடங்காத கருத்தை தமிழ் காப்பியங்கள் வாயிலாக எடுத்துரைத்து வரலாற்றில் சிறப்புற்று விளங்குகிறார்கள் தமிழர்கள். உலக மொழிகளான லத்தீன், லாவோஸ் போன்ற மொழிகள் போல பழமையும், பெருமையும் பெற்று விளங்கிய மொழி, தமிழ் மொழிஆகும்.

அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அறிவுக்கு அறிவு சேர்த்து மகிழ்ந்தவன் நம் தமிழன். அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது ஐம்பெரும் காப்பியங்களே. காதலுடன் கூடிய அன்பு, வீரம், விருந்தோம்பல், இயற்கை, மருத்துவம் ௭ன்னும் இனிய நற்சுவைகளினூடே அனைத்திற்கும் பழங்காலத்துப் படைப்பு கண்டவன் தமிழனே. உலகின் உயிர்வளம், இயற்கை வளம், சொல்வளம், போர்த்திறன், செயல் திறன், அரசியல் திறன் போன்றவற்றை தனது காப்பியங்களிலேயே கண்முன் நிறுத்தியவன் பழந்தமிழன்.

தமிழினம் பழமை வாய்ந்த இனம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்ற தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை மிகவும் பழமை வாய்ந்ததும், சிறப்பிற்குரியதுமாகும். தமிழர்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயிரை விடவும் மேலாக நேசிக்கின்றனர். உலகிற்கு வாழக் கற்றுக் கொடுத்த தமிழர்கள், இன்று அவர்கள் வாழும் இடத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பொழுது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேசமாக உருவெடுப்பது தமிழ்த் தேசியத்தின் தார்மீகக் கடமையாகும். அந்த அடக்கு முறைகளுக்கு  எதிரான தெளிவூட்டலை மக்களிற்கு ஏற்படுத்தி, மக்களின் போராட்டத்திற்கான உந்துதல் சக்தியை மக்களிடையே விதைத்து அவர்களை ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில்  தமிழ்மொழி, தமிழினம், தாய்நிலம் என்னும் அடிப்படை கருத்தமைவுக்கு ஏற்ப, எம் அடையாளங்களைக் காத்து, கலையெனும் ஆயுதத்தை தன்னகத்தே கொண்டது தான் கலைபண்பாட்டுக் கழகம் ஆகும்.

kalapanpaddukalam-300x208.png

சேயோன்:-  தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம் எமது தேசியத் தலைவர் மேதகு  வே. பிரபாகரன் அவர்களின் தேரடியான வழி காட்டலுக்குட்பட்டதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய பிரிவுகளில் ஒன்றாக இருந்த தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. இதனால் தான் குறுகிய காலத்துக்குள் பெறுமதியான பலவற்றை கலை பண்பாட்டுக் கழகம் நிறைவேற்றிவிட்டு நிமிர்ந்து நின்றது.

ஈழ விடுதலைப் போராட்டம்  தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர்த் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்கள் முன்னோக்கிய தமிழர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழனாக வாழ்ந்த ௭ம் இனம்  தனித்துவமாக வாழ்ந்த  வரலாற்று வழித்தடத்தில் வீரத்திலும், கலைகளின் வளர்ச்சியிலும், புரட்சிகரமான பண் பாட்டுப் பேணலிலும் முப்பது வருட தசாப்தம் தமிழ் மக்களுக்கான புலிகளின்  பொற்காலம்.

எம் தாயகத்தை  மீட்டெடுக்கும் பயணத்தில் விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பங்களிப்புக் கணிசமானது என எங்கும் பேசவைத்திட எம்மோடு இணைந்த கலைஞர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஓவியர்கள் ௭ன அனைவரும்  விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு ௭ன்பது  மகத்தானது. அவை அனைத்தையும் ௭ழுது கோள் கொண்டு விவரிக்க முடியாது. கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தவர்கள்  கலைஞர்கள் என்றால் மிகையில்லை.

இயற்கை வளமும் மிகுந்த வனப்பும் கொண்ட  தமிழீழ மண் கலைகளிலும்,  பண்பாட்டிலும் தனித்துவம் மிக்கது. தமிழ் தேசிய உணர்வும் , தமிழ்மொழிப் பற்றும், தமிழர் பண்பாடும் ஒருங்கு கூடி சிறப்புமிக்க வீரவாழ்வு வாழ்ந்த வரலாறு தமிழீழ தேச மண்ணுக்கு மட்டுமே உண்டு.

மொழி என்பது ஒரு தாய்இனத்தின்  விளையும் பயிராகும். அதனால் அம்மொழிக்கு உயிருண்டு, உணர்வுண்டு,அவ் இனத்தின் அடையாளமாய் இருக்கவேண்டிய தேவையுமுண்டு.

 அதன் வளர்ச்சியே இன விடுதலையின் புரட்சி  எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது கலையும் பண்பாடும் எமது தேசத்தின் ஆன்மா . என்று தமிழ் இனத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனை நோக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தது விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்.

இன அழிப்பு என்பது ஆண்டாண்டு காலமாக அதே நிலத்தில் வாழுகின்ற ஒரு பரம்பரை  இனத்தைக் சேர்ந்தவர்களை, இன்னொரு இனம்,சிறுமைப்படுத்தி கொலை செய்வது மாத்திரமல்ல. அவர்களின் இருப்பை, கலாசாரத்தை, வாழ்வியலை, நிலத்தை, நிலம் மீதான உரிமையை இல்லாமல் செய்வதும், இன அழிப்புத்தான்.

ஒரு இனத்தின் இருப்பு என்பது பண்பாடு மொழி,  கலைஇலக்கியம், இசை, நடனம், அரங்கியல், நாட்டுப்புறக்கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம்,  கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, பாரம்பரியஉணவு, கலாச்சாரஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சம்பிரதாய சடங்குகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். என்னும் பல ஒட்டு மொத்த விடயங்களிலும் தங்கியிருக்கிறது .

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை சுழலுக்கு ஏற்ப பல வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறித்து நிற்கின்றது. தமிழர் பண்பாடு காலம் காலமாக பேணப்பட்டு,  மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பினை கொண்டது.

பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு விளையாட்டுகள், இவற்றையெல்லாம் குறிக்கும்.

ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்ந்த இலக்கியம் பயன்படுகின்றது. அதனை நாட்டுப் பாடல்களிலும் நாடோடி இலக்கியங்களிலும் பழமொழிகள், முதுமொழிகளிலும் இசையிலும் நாடகத்திலும் நாட்டியத்திலும் செந்தமிழ் – கொடுந்தமிழ் அமைப்பிலும் வளர்ச்சியிலும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கண்டிருப்பீர்கள் ஓவியம், சிற்பம் கட்டிடக் கலை முதலிய கலைகள் முதலியவற்றிலும் தமிழர் பண்பாட்டை காண முடிகின்றது. தமிழர் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறும். தமிழர் பண்பாட்டை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் கவின்கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ௭னவே ௭ங்கிருப்பினும் ௭மது அடையாளங்கள் அழியாமல் பாதுகாப்போம்.

kalaipanpadu-kalakam-1-300x200.jpg

சேயோன்:-  போராட்ட காலத்தில் தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம் பற்றிய முக்கியத்துவம் தொடர்பில்  கூறுங்கள்?

நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தனிநாடு என்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி விடுதலைப் போர் நகர்ந்து கொண்டிருந்த வேளையிலும், கலை பாண்பாட்டிற்கு என அதற்குரிய இடத்தில் இனத்தின் வேரான கலைகளும், பண்பாடும் வளர்ந்தன.  தமிழ் இனத் தேசியத் தலைவர்  தமிழர் கலை, பண்பாட்டிற்கு  கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.

தமிழீவிடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில்  கலை கலாசாரப் பிரிவை ஆரம்பித்து அதனூடாக  பண்பாட்டைப் பாதுகாத்தல் மற்றும் கலைகளை மேம்படுத்திட கலை இலக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றிற்கான பொறுப்புக்களை புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமைத்துவத்தினைக்  கொண்டு ஆரம்பித்திருந்தார் .

கலை உணர்வை வெளிப்படுத்துவோர்க்கு  அவ்வுணர்வை ஊட்டும் பெருமையுடன் கூடிய தகுதிநிலை ௭ன்றும் உரித்தானது. தமிழர்களின் பெருமைகள்,மற்றும் கலைகளின் பங்கும்  அந்தக் கலைகள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சிறப்புகளை கொண்டது. மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும்  கலை கலாசாரப் பணிகள் ஊக்குவிப்பு பிரிவுகளாக மகளீரையும் இணைத்து முக்கியமாக கலாசார துறைக்கு உரிய அனைத்து பணிகளையும் இன விடுதலை நோக்குடன் தனித்துவமாக கலைஞர்களையும், போராளிகளையும், பார்வையாளர்களையும் ஒருங்கிணைக்கின்ற வகையில் பாரியளவு ஈடுபாடு கொண்டிருந்தனர்.

விடுதலைப்போராட்டத்தில் விடுதலை சார்ந்த கருத்தியல்களை மக்களின் பக்கம் நின்று சொன்னது  இன விடுதலைக்கான கலைகளே ஆகும்.  கூத்தும்,  வீதி நாடகங்களும்  எழுச்சிப் பாடல்களும்  ஒவ்வொரு தமிழனின் வீட்டுப் படலையையும் தட்டியது. அவர்களின் முற்றத்தில் நின்றுகொண்டு தமிழர்களின்  சுயநிர்ணய உரிமை பற்றி பேசியது.

மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக , கதைகள், சிறுகதைகள்,நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் எனப் பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் மொழிசார் கலையும் நுண்கலை, பயன்கலை, பருண்மக்கலை, கவின் கலை, நிகழ்த்து கலைகள் என மொழிசாரா கலைகளும் தம் வடிவங்களில் வேறுபட்டிருப்பினும் மனிதனது இயங்கியலும் அதனுடன் தொடர்புடைய அவனது வாழ்வியலுமே தமிழ் தேசியப் படைப்புக்களை தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன.

ஒருகாலத்தில் கலைகள் வெறுமனே மகிழ்வளிப்புக்களுக்கு மட்டுமே என்ற கருத்தியல் நிலவி வந்திருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகளால் எமக்கேயான நாட்டின் எல்லையை நிர்ணயிப்பதற்கு வீரர்களை அனுப்பியது.  எழுத்துக்கள் இலக்கியப்போர்கள் புரிந்தன. ஒவ்வொரு சமரின் வெற்றியிலும் எழுச்சி பாடல்கள் ஓங்கி ஒலித்தன.

தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றி நின்ற கலைகள் இந்திய மற்றும் பௌத்த சிங்களப் ஏகாதிபத்தியத்தின்  இராணுவத்தினால்  தமிழர் தாய் நிலத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து கொண்டிருந்த வேளையில் சிறு அணியாக முன்னெடுத்து வந்த தமிழீழ கலை கலாச்சாரப் பிரிவுகள் 1989 தொடர் 1990களின் பின்னாளில் ஆல மரமாய்  பல விழுதெறிந்து  தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் மாபெரும் வீச்சோடு தனது இனவிடுதலைப் பயணத்தை தொடர்ந்தது.

இக்கலைகளின் மைய மற்றும் பாடுபொருளாக இருப்பது புராண, இதிகாசக் கதைகளே. கிராமங்கள் தோறும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இக்கலைகள் எடுத்துரைத்தன. கண்ணகி, கோவலன் கதைகளை கற்றுக் கொடுத்தது. சிந்துநடைக் கூத்துக்களும் மக்கள் வாழ்வியலுடன் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. போர்க்கால வரலாற்றை காத்தவராயன் கூத்தாகவும் சமூகத்தின் பண்பாட்டை வீதிதோறும் எடுத்துரைத்தது. எளிமையான நடையாலும், பேச்சு வழக்கினாலும் கதைகளை புரியவைத்து மக்களை ரசிக்க வைத்தது.

இன விடுதலைக்கான பரப்புரைகளையும், உண்மையையும், நீதியையும், தர்மத்தையும், நேர்மையையும், பலவித திறமைகளையும் தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கட்டிக்காத்த நாட்டுப்புற ஆட்டக்கலைகள் பறையிசை, தெருக்குத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம்,, கும்மியாட்டம் போன்ற பரம்பரைக் கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் மாவட்டங்கள்,  பிரதேசங்கள் தோறும் நிகழ்ச்சிகளில் பல பண்பாட்டுடன் கூடிய  அரிய கலைகளைப் படைப்புக்கள்  நமது நாட்டுப்புற கலைகள் நீதியை முன்னெடுத்துச் சென்று போராட்ட வரலாற்றைக்  கற்றுக் கொடுக்கும் ஆசானாக இக்கலைகள் விளங்கின.

கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் நுண்கலைக் கல்லூரிகள் இருந்தன. அங்கு ஆடல், பாடற் பயிற்சிகளும் இசைக் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியும், ‘புலிகளின் குரல்’ – வானொலியும் கிளிநொச்சியில் சிறப்பாக இயங்கின. தமிழின உணர்வைத் தட்டி எழுப்புகின்ற இனிய தமிழ்ப்பாடல்களும், ஆடல்களும், நேர்காணல்களும் ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டன. அறம் நீதி தவறாத எம் தேசியத் தலைவனை  உலகிற்கு எடுத்துக் காட்டியது. அறத்தை வலியுறுத்தியது. விருந்தோம்பலை வீடுதோறும் கொண்டுபோய்ச்  சேர்த்தது. இன விடுதலையையும் அரசியலையும் இன அழிப்பு வடிவங்களையும் கற்றுக் கொடுத்து தாய் நாட்டின் மேல் கொண்ட காதலையும், வீரத்தையும் சுட்டிக்காட்டி. வாழ்க்கை வரலாற்றினை எடுத்து இயம்பியது. தாய்நாட்டின் காவல் தெய்வத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. வீரத்தில் சிறந்த போராளிகளை உருவாக்கி  உலகறியச் செய்ததும் இந்த கலைபண்பட்டுக் கழகமே ஆகும்.

kk-300x295.jpg

சேயோன்:- இன விடுதலைப் போராட்டத்திற்கு உரம் ஏற்றியதில் வீதி நாடகங்களின் பங்களிப்பு எவ்வாறு காணபட்டது ?

நிலவன் :- கலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம். அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம் பிடித்து விடுவதும் தான் வழமை அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் அரசியல் உணர்வும், பரந்துபட்ட சிந்தனையும் அமைந்த நாடகங்கள் ஏராளம். விடுதலைப் போராட்டக் காலத்தில் இவை வீறுணர்ச்சியை ஊட்டின. வீர வரலாற்றையும் விடுதலை உணர்வையும் பேசுபொருளாக்கியது.

நாடகம், தமிழ்மக்களின் உழைப்போடும் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றித்து வளர்ந்தது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் மக்கள்   தம் உணர்வுகளோடு கண்டு களித்தனர். உள்ளத்தில் உணர்ச்சியைத் தூண்டி ஒலி, ஒளி இணைவில் காட்சிப்படுத்திக் காட்டுவது கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாவது மட்டுமல்ல பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் இன்புற்றனர். மனித வாழ்வை மனிதர்கள்முன் மனிதர்களால் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கவின்கலை நாடகம். தமிழர்கள் ஊரின் நடுவே, தேரோடும் வீதியிலும் தெருவோரங்களிலும்  அரங்குகளை அமைத்தனர். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளை உடல் வழி, குரல்வழி மூலமாக வெளிப்படுத்தி நடிப்பின் மூலம் மக்களுக்கான அரங்காக

வீதி நாடகம் என்பது நவீன காலத்தில் (1995 இற்குப்பின்) உருவானது. வீதியில் சென்று செய்வது எல்லாமே வீதி நாடகம் அல்ல. அதற்கென்று ஒரு அரசியல் இருக்கிறது. ஒரு வரலாறு இருக்கிறது. வரலாற்று பின்னணி இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். தமிழீழ தேசம் ௭ங்கும் ௭ம் இனத்திற்கு நடந்த அவலங்களை தெருவில் போய் நாடகமாக போடுவது, நாட்டைக் காக்க பிரச்சாரம் செய்வது, சமூக மாற்றத்திற்கான ஒரு உந்துதலை உருவாக்குவது என தேச விடுதலைக்காக வீதி நாடகங்கள், மக்கள் மத்தியில் ஒரு செய்தியை சொல்வதற்கும் மக்களுக்கு அரசியல் தெளிவுடன் கூடிய அறிவுரை சொல்வதற்கும் என்று ஒரு ஊடகமாக இருந்து வந்துள்ளது .

வீதிநாடகம் என்பது மக்களின் கோபங்களை, கொந்தளிப்பை ஆட்சியாளர்களுக்கு, அதிகார மையங்களுக்கு தெரிவித்து, மக்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு வேலை. மக்களுடன் பேசி, மக்களை வழிப்படுத்தி மக்களுக்கு இன விடுதலை  உணர்வை புகட்டி விழிப்புணர்வை ஊட்டுகிற  எல்லோருக்குமான கலை வடிவமாக வீதி நாடகங்களை கலை பண்பாட்டுக் கழகத்தினர் முன்னெடுத்தார்கள்.

தாயகத்தில் நடை பெற்ற சிறந்த ஒரு கலை வடிவம் தான்  இந்த வீதிநாடகம். நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம், எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு. உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் பல நூற்றுக் கணக்கான  மேடைகள் கண்ட வீதிநாடங்களால் “ஜெயசிக்குறு சண்டியன்” வீதி நாடகம்   1000 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டது. அதே போல் “வெள்ளைப்புறா சிவப்பானதேன்” வீதி நாடகம் 500 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டது. இது போன்று பல வீதி நாடகங்கள்  அரங்கம் கண்டது. இதில் குடும்பத்துடன் விடுதலைக்கான கலைப் பணியைச் செய்த  எமது தேசியக் கலைஞர்கள் இரவு பகல் மற்றும் வெய்யில் மழை பாராது மேலும் அவர்கள் செய்த அர்ப்பணிப்புகளை  இலகுவில் சொல்லிவிட முடியாது.

யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் நிறையப் பொறுப்புக்கள் போராளிக் கலைஞர்களில் தங்கிவிட்டது. என்னதான்  நேரமில்லாப் பிரச்சனை,பொருளாதாரம், மற்றும் ஆளணி நெருக்கடிகள் இருந்தாலும் எழுச்சிப்பாடல்கள் வெளிவருவது நிற்கவேயில்லை. அதுதான் போராட்டத்தை வாழ்வித்தது. அதுதான் முக்கிய பரப்புரை ஆயுதம். இதற்கிடையில் இசைத்தட்டு வெளியிடாமல் வீதி நாடகங்களாக நிறையப் பாடல்கள் மக்கள் மத்தியில் உருவாயின. பழைய நாட்டுப்புற மெட்டுக்கள் வீதி நாடகங்கள் வழியாக மீண்டும் மக்களிடம் சென்றன.  கவிஞர்கள், பாடகர்கள் என போராளிக் கலைஞர்கள் பலர் இதுவரை களத்தில் வீரச்சாவடைந்து விட்டார்கள். இவர்களில் சிலர் கரும்புலிகள்.

தமிழீழ இன  விடுதலைப் போருக்கான விடுதலைக் கலைப் பயணத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும். இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும்  இருக்க வேண்டும்.

jj-262x300.jpg

சேயோன்:-  தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் இன விடுதலையினை பறை சாற்றிய  சங்கநாதம் நிகழ்வு பற்றி கூறுங்கள் ?

நிலவன் :- தமிழீழக்  கலை பண்பாட்டுக் கழக ஆதரவில் கலையரசி பேபி வேலுப்பிள்ளை அவர்களினால் 1994 ம் ஆண்டு உருவாக்கப் பட்டதே சங்கநாதம். கலையரசி   பேபி ஆசிரியரின்   நெறியாள்கையில் தாயக எழுச்சிப் பாடல்களுக்கு சிறப்புமிக்க தொகுப்பாளரின் வர்ணனையுடனும் , பாடலின் கருத்தமைவுக்கு ஏற்ப காட்சிப்படுத்தலுடனும், பாத்திரத்திற்கேற்ப உடை, ஒப்பனை மாற்றங்களுடனும் பலதிறம் கொண்ட தேசியக் கலைஞர்களும், போராளிக் கலைஞர்களும்  பங்காற்றி அரங்கம் கண்ட நிகழ்வணியே சங்கநாதம்.

சங்கநாதமானது தமிழர் தாயக நிலப்பரப் பெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சிறந்த கலைக்குழுவாகத் திகழ்ந்தது. இவர்களின் கலைப்படைப்பானது, தமிழீழ வரலாற்றில் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி மனதை எழுச்சி கொள்ளவைக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருந்தது . இவர்களின்  ஆற்றுகை நிகழ்வு  எந்த இடத்தில் நிகழ்ந்தாலும் அங்கு மக்கள் காட்டாறு வெள்ளமெனத் திரளும் அளவுக்கு ஆளுமை மிக்க ஒரு கலைப்படைப்பாகவே இருந்தது. சங்கநாத ஆடல் வேள்வி தேசிய எழுச்சி உணர்வுடன் 2000 இற்கும் அதிகமான அரங்குகளைக் கண்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசியக் கலைஞர்களின் அயராத உழைப்பும், தரம் வாய்ந்த நடிப்பும், பாத்திரத்திற்கேற்றவாறான  நடிகர்களின் தெரிவும், நெறியாளரின் சிறந்த  நெறிப்படுத்தலுமே சங்கநாதத்தின் தனிப்பெரும் சிறப்புகளாக அமைந்தன. கலைப்படைப்பின் வளர்ச்சிக்காக பல பரிசில்களையும் சான்றிதழ்களையும், தேசியத்தின் தங்க விருதுகளையும் பெற்றுக் கொண்டார்கள். பல தேசியக் கலைஞர்கள் பல்துறை ஆளுமைகளைக் கொண்ட,  வரலாற்றுக் காவியக் காலத்தின் சிறந்த கலைஞர்களாக இன்றும் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

tt-2-300x200.jpg

சேயோன்:-  விடுதலைப் போராட்டத்தில் மக்கள் மனங்களில் எழுச்சியினை உருவாக்கியதில் எழுச்சிப் பாடல்களின் பங்கு இருந்துள்ளது பற்றிக் கூறுங்கள் ?

நிலவன் :- ஆயுதப் போராட்டம் முனைப்படையத் தொடங்கிய காலத்திலேயே எழுச்சிப் பாடல்களும் வரத் தொடங்கிவிட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் மனங்களில் எழுச்சியினையும், பல்வேறுபட்ட மாற்றங்களையும்,ஏற்படுத்திய பெருமை தமிழீழ எழுச்சிப் பாடல்களாக அன்று வீசிய காற்று எம் தேசமெங்கும் எழுச்சிக் காற்றாக நிமிர்ந்தெழுந்தது. கலை பண்பாட்டுப் கழகத்தின் பணியில்   போர்க்கால எழுச்சிப் பாடல்கள் பேருதவியாக அமைந்திருந்தன. மிகமிக நேர்த்தியான இசையமைப்புடனும் சிறந்த குரல் வளத்துடனும் அருமையான மெட்டுக்களுடனும் நிறையப் பாடல்களை கலைபண்பாட்டுக் கழகம் வெளியீடு செய்து வந்தது.

இதுவரை எழுச்சிப் பாடல்களாக வெளிவந்த மூவாயிரக் கணக்கான பாடல்களில் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்ட பாடல்கள் ஏராளம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த ஒருவனுக்கு / ஒருத்திக்கு எழுச்சிப் பாடல்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. போராட்டத்தின் மிகமிக முக்கியமான ஆயுதங்களிலொன்று இந்தப் பாடல்கள்.

எமது போராட்டத்தின் தொடக்கப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன. அப்போது திரையிசையில் முன்னணியிலிருந்த பாடகர், பாடகிகளைக் கொண்டே இவ்விசைத் தட்டுக்கள் வெளிவந்தன. புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் ஆகியோரோடு பல கவிஞர்கள் அப் பாடல்களை எழுதியிருந்தார்கள். தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் தாயகத்தில் எழுச்சிப் பாடல்கள் வீச்சோடு வளர்ச்சியுற்றன.

kalaipanpaddu-kalakam2-300x179.jpg

சேயோன்:-  தமிழீழ இசைக்குழுவின் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- தமிழீழ இசைக்குழு மீன்பாடும் தேன் நாடாம் மட்டுநகரில் உருவாக்கம் பெற்று. தமிழீழத்தின்  நிலப்பரப்பெங்கும் தமது இசைநிகழ்வை நடாத்தினார்கள். விடியலுக்காக தம்முயிர் தந்த மாவீரர்களின் ஈகங்களை, போராளிகளின் அர்ப்பணிப்புக்கள் – தியாகங்களை, மக்களின் போராட்ட பங்களிப்புக்களை, இவர்கள் இசையூற்றில் செதுக்கி உங்கள் காதோரம்  தவழ்ந்த  போராளிகளின், தமிழீழக் கலைஞர்களின் உழைப்பினால் வார்த்தெடுக்கப்பட்ட தமிழீழ எழுச்சிப் பாடல்களை வரலாற்று தேவை உணர்ந்து உலகம் முழுவதும் சிதறுண்டு வாழும் எம் உறவுகளின் வாசல் நோக்கி தமிழீழ மண்ணின் வீரத்துடன் தேசக்காற்றாய் வீசச்செய்தார்கள்.

விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள் எனப்படுபவை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் அல்லது விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி வெளியிடப்படும் ஈழப்போராட்ட பாடல்கள் ஆகும். முழுக்க முழுக்க உள் ஊரிலேயே பாடல்களுக்கான முழு வேலைகளும் செய்ய வேண்டிய நிலை. இயக்கத்துக்குள்ளேயே இசைக்கலைஞர்களை வளர்த்தெடுத்தார்கள்.  அதிகமான பாடல்கள் வெளிவந்ததுடன் மிகமிக அருமையான பாடல்களும்  வெளிவந்தன. அவற்றுள் மென்மையான மெட்டுக்களுடன் உணர்வுபூர்வமான பாடல்களும்அமைந்தன.

இப்பாடல்கள்பலதரப்பட்ட வடிவங்களைக் கொண்டன. கள வெற்றியைக் கொண்டாடும் பாடல்கள், வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் பாடல்கள், படுகொலைகளை நினைவுகூரும் பாடல்கள், இடப்பெயர்வுச் சோகங்களைச் சொல்லும் பாடல்கள், ௭திரிக்கு அறைகூவல் விடுக்கும் பாடல்கள் என்று அனைத்துக் கூறுகளுமுண்டு. பொப்பிசைப் பாடல்கள்கூட வெளியிடப்பட்டுள்ளன. ஈழத்தின் இயற்கை வனப்பையும், தமிழின் சிறப்பையும் போற்றிப் பாடும் பாடல்களாகவும் இந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் நிலைபெற்றிருந்தன.

k-300x169.jpg

ஈழத்து எழுச்சிப் பாடல்களில் பங்காற்றிய கலைஞர்களில் பெரும்பான்மையானோர்  தொழில் முறைக்காக இதில் ஈடுபட்டவர்களல்லர். இவர்களில் நிறையப்பேர் போராளிகள். பாடல் எழுதுபவன், இசையமைப்பவன், பாடுபவன் என்று அனைவருமே போராளிகளாக இருந்து பங்காற்றிய நிறையப் பாடல்களுள்ளன. இவற்றில் பங்குகொண்ட பொதுமக்கள் கூட தன்னலமற்ற மக்கட்போராளிகளே. இந்தக்கூறுகள் இயல்பாகவே இப்பாடல்களுக்கான வலுவை அதிகரிக்கின்றன.

1990 களில் தமிழீழத்தில் இருந்தே இப்பாடல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழீழ தேசியக் கவிஞரான புதுவை இரத்தினதுரை, மாமனிதர் கவிஞர் நாவண்ணன் , மேஜர் சிட்டு, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள் போன்ற கவிஞர்களின் உருவாக்கத்திலும் எஸ்.ஜி.சாந்தன், மேஜர் சிட்டு , ஜெயா சுகுமார், வசீகரன்,செங்கதிர் கணேஸ்,குட்டிக்கண்ணன், திருமலைச்சந்திரன், நிரோஜன், திருமதி பார்வதி சிவபாதம், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், இசையரசன், அருணா, கானகி, மாங்கனி, பிரியதர்சினி போன்ற இன்னும் பல  பாடகர்களின் பங்களிப்புடனும் ஏராளமான பாடல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்தினர் இப்பாடல்களில் பெரும்பாலானவற்றை இசையமைத்து வெளியிட்டுள்ளனர்.

இசைத்துறையில் பெண்களின் பங்களிப்பை முன்னிறுத்தும் பொருட்டு   தமிழீழ மகளீர் கலை பண்பாட்டுக்கழகத்தினரால், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் வந்துதித்த  தமிழீழ மகளீர் இசைக்குழு அனைத்து மகளீர் படையணிகளிலுமுள்ள இசைத்துறையில் ஆர்வமான போராளிகளை இனங்கண்டு  அவர்கள்குறுகிய காலத்தில் தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியனின் ஒழுங்கமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டு 160 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டு வந்ததுடன், அந்தந்த மகளீர் படையணிகளுக்கும் சென்று தங்களுடைய இசைத்திறமையைக் காண்பித்து இசை நிகழ்வுகளையும் நடாத்தி அவர்களையும் மகிழ்வித்தனர்

tt-1-300x195.jpg

தமிழீழ  கலைபண்பாட்டுக்கழக ஆதரவில் கலையரசி பேபி வேலுப்பிள்ளை அவர்களினால் 1994 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே சங்கநாதம். பேபி வேலுப்பிள்ளை அவர்களின் நெறியாள்கையில் தாயக எழுச்சிப் பாடல்களுக்கு சிறப்புமிக்க தொகுப்பாளரின் வர்ணனையுடனும் , பாடலின் கருத்தமைவுக்கு ஏற்ப காட்சிப்படுத்தலுடனும், பாத்திரத்திற்கேற்ப உடை, ஒப்பனை மாற்றங்களுடனும் பலதிறம் கொண்ட தேசியக் கலைஞர்களும் போராளிக் கலைஞர்களும்  பங்காற்றி அரங்கம் கண்ட நிகழ்வணியே சங்கநாதம்.

சங்கநாதமானது தமிழர் தாயக நிலப்பரப் பெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சிறந்த கலைக்குழுவாகத் திகழ்ந்தது. இவர்களின் கலைப்படைப்பானது, தமிழீழ வரலாற்றில் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி மனதை எழுச்சி கொள்ளவைக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருந்தது . இவர்களின்  ஆற்றுகை நிகழ்வு  எந்த இடத்தில் நிகழ்ந்தாலும் அங்கு மக்கள் காட்டாறு வெள்ளமெனத் திரளும் அளவுக்கு ஆளுமை மிக்க ஒரு கலைப்படைப்பாகவே இருந்தது. சங்கநாத ஆடல் வேள்வி தேசிய எழுச்சி உணர்வுடன் 2000 இற்கும் அதிகமான அரங்குகளைக் கண்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசியக் கலைஞர்களின் அயராத உழைப்பும், தரம் வாய்ந்த நடிப்பும், பாத்திரத்திற்கேற்றவாறான  நடிகர்களின் தெரிவும், நெறியாளரின் சிறந்த  நெறிப்படுத்தலுமே சங்கநாதத்தின் தனிப்பெரும் சிறப்புகளாக அமைந்தன. கலைப்படைப்பின் வளர்ச்சிக்காக பல பரிசில்களையும் சான்றிதழ்களையும், தேசியத்தின் தங்க விருதுகளையும் பெற்றுக் கொண்டார்கள். பல தேசியக் கலைஞர்கள் பல்துறை ஆளுமைகளைக் கொண்ட,  வரலாற்றுக் காவிய காலத்தின் சிறந்த கலைஞர்களாக இன்றும் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

j-221x300.jpg

சேயோன்:-  தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலத்தில் வெளிச்சம் இதழின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது?

நிலவன் :- “வெளிச்சம் இதழ்” தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. 1990களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலத்திலிருந்து இந்த இதழ் வெளியானது.

ஈழத்தில் இருந்து வெளியான ஒரு காத்திரமான இதழாக இந்த இதழ் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளது. தரமான சிறுகதைகள்,கவிதைகள், கட்டுரைகள் தாங்கி வெளிவந்ததோடு தமிழீழ விடுதலை போராட்டம், போராளிகள் நினைவுப் பகிர்வுகள் என்பனவற்றை தாங்கி வெளியானது. படைப்புகளின் கருப்பொருள் பெரும்பாலும் போருடன் தொடர்பு கொண்டதாக அமைந்தது.

தமிழர் தேசத்தின் விடுதலைக் குரலாக, போராட்ட வாழ்வின் மெய்யுண்மைகளைத் தரிசிக்கும் கலை, இலக்கியப் படைப்புகளைத் தாங்கிய வண்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது ‘வெளிச்சம்’ இதழ். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினாற் பிரசுரிக்கப்பட்டு வந்த இந்தக் கலை இலக்கிய ஏட்டிற்குத் திரு.கருணாகரன் அவர்கள் ஆசிரியராகவும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர்.

இந்த இதழின் வருகை தமிழ் மக்கள் இடையே ஒரு விடுதலை எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த இதழ் வாயிலாக வெளிவந்த பல படைப்பாளிகள் இன்று சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். அன்றைய சூழலில் அரசியல் வேலைப் பழுவுடன் எழுத்தாளர்கள் பத்தி எழுத்துகளை எழுதுவது மிகவும் சிரமமாக இருந்த காலத்திலும்  புதுவை இரத்தினதுரை அவர்களின் அன்புத் தொல்லைக்கும் அழுத்தத்திற்கும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆகவே, வெளிச்சத்திற்கு எழுதுவதெனத் தீர்மானித்தே பலர் எழுத ஆரம்பித்தார்கள் .

ஆயினும் எதை எழுதுவது என்ற பிரச்சினை எழுந்தது. இளைஞர் பரம்பரையை – குறிப்பாக மாணவ சமூகத்தைப் புதிதாக, புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில் ஏதாவது எழுதுங்கள் என்று பணித்தார்.  முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் திருத்தியமைத்து, செப்பனிட்டு, சிலவற்றை விரிவாக்கம் செய்து இத்தொகுதியில் மறுபிரசுரம் செய்கிறார்.

இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் பல்துறை சார்ந்தவை. அரசியல், சமூகவியல், உளவியல், பொருளியல், மெய்யியல், வரலாற்றியல், மானிடவியல் போன்ற பல்வேறு அறிவியற் பரப்புக்களை இவை ஊடுருவி நிற்கின்றன. இவ் விபரணங்கள் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் மனிதன். ஆகவேதான் மனிதன் பற்றியும், மனித மனம் பற்றியும், மனித உணர்வு பற்றியும், மனிதத்துவம் பற்றியும், மனித வரலாறு பற்றியும், மனித விடுதலை பற்றியும், ஆழமான விசாரணைகள் செய்த சிந்தனையாளர்கள் சிலரின் புதுமையான பார்வைகளை இக் கட்டுரைகள் வாயிலாக அறிமுகம் செய்தார்கள் . இந்த எழுத்துக்கள் யாரையாவது புதிதாகச் சிந்திக்கத் தூண்டும் என்ற நம்பிக்கையினையும்  கொண்டிருந்தது .

அன்றைய போர்ச் சூழலில், அந்த நெருக்கடியான கால கட்டத்தில் எழுதத் தூண்டிய விடயங்களைக் கணினியில் அச்சடித்து, பக்கங்களை கணினியில் வடிவமைத்து, மிகவும் பொறுமையுடன் பலமணி நேரத்தை எழுத்துப் பிழை பார்ப்பதில் செலவிட்டு அரும்பணி ஆற்றிய முழுமையான உருவாக்கத்திற்காக உழைத்தார். அது தவிர வெளிச்சம் சிறுகதைகள், “வாசல் ஒவ்வொன்றும்” போன்ற சிறுகதைத் தொகுப்புக்களும் “செம்மணி” போன்ற கவிதைத் தொகுப்புக்களும் கலை பண்பாட்டுக் கழகம் வெளியீடு செய்த அதே வேளை வெளிவந்த “வெளிச்சம்” இதழும்  கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடுகளில் மிக முக்கியமானதாகும்

சேயோன்:-  பொருளாதாரத் தடையினை எதிர்கொள்ளும் நிலையிலும் அறத்தைப் பற்றியே போர்கால கலை இலக்கியங்கள் பேசியிருக்கின்றன அவை பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- “இலங்கை நாட்டுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்கு முறைகளை எதிர்த்தும் தமிழ் மக்கள் தமது தாயகம், தேசியம், தன்னாட்சி, என்ற அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து நகர்ந்த, ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின்  பலத்த அழிவையும் இழப்பையும் சந்தித்தபோதும், அந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் அதன் நோக்கத்தையும் தேவையையும் வலியுறுத்தியே எங்கள் போராட்டம் காணப்பட்டது.

1990ஆம் ஆண்டு  விடுதலைப் புலிகளின் போராட்டம்  வீச்சுடன் எழுச்சியடைகின்ற போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப் பாடல்களாக அல்லது போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமித்திருந்தன. தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலை கானங்களை இசைக்கும் அவ்வேளையில் ஏராளமான மக்கள் கூடுவர். மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு அன்று இருந்தது. அக்காலகட்டம், பொருளாதாரத் தடை கொஞ்சம் கொஞ்சமாக தலை காட்டிய வேளை  மேடை ஒழுங்கு நிகழ்வுகள் ௭ல்லாம் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக் குழுக்களோ, பெரிய மேடை நிகழ்வுகளோ நடாத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்படும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.

மீண்டும் தீவிரப்பட்ட போர்க்காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை, முன்பு போல தமிழகத்தோடு இணைந்திருந்த தகவல் போக்குவரத்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலை வந்த போது ஈழத்தில் பல தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகள் பிறக்கின்றன. அப்போது தான்

இதே நிலையில் அப்போது எழுச்சிப் பாடல்களை விரும்பிக் கேட்ட ரசிகர்களும், ஒலிப்பதிவு நாடாவை ரேப் ரெக்கோர்டரில் பொருத்தி விட்டு, சைக்கிள் ரிம் ஐச் சுத்தி, அதில் பொருத்தியிருக்கும் டைனமோவால் மின்சாரத்தை இறக்கிப் பாட்டுக் கேட்பார்கள். அதைப் பற்றிப் பேச இன்னொரு கட்டுரை தேவை.

செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது  காண்போர், கேட்போர் அல்லது படிப்போர் மனதில் சுவைபடவும், அவர்கள் மனம் கொள்ளுமாறும், அவர்கள் சிந்தையில் அல்லது உணர்வில் ஓரளவாவது அசைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி  மேலும் மேலும் காணுமாறும் கேட்குமாறும் படிக்குமாறும் ஓர் ஆர்வத்தைத் தூண்டி, இன விடுதலையின் முக்கியத்துவத்தினையும் , தேவையினையும் மக்கள் மனங்களில் விதைத்தவர்களும் அதை அறுவடை செய்வதற்கு மக்களைத் தயார்ப் படுத்தியவர்களும் பெரும்பங்கு வகித்தவர்கள். போராளிக் கலைஞர்கள். தமிழீழ இன விடுதலைப் போராட்டத்தின் வழியாக அறத்தையே பெருக்கிப் பேரிலக்கியங்கள் அனைத்தும் பெரும் அறப்பிரச்சார ஆக்கங்களே. போர்கால இலக்கியங்களும் அறத்தைப்பற்றியே பேசுகின்றன .

மின்சாரமோ. தொழில்நுட்ப  வசதிகளோ   எதுவும்   இல்லாத   நிலையிலும்   தமிழீழ   மக்களின்   போராட்ட   உணர்வுகளை    வெளிப்படுத்தும்   வீடியோத்   திரைப் படங்கள்   தமிழீழத்தில்   தயாரிக்கப்பட்டன.  இத்திரைப்படங்கள்   தமிழீழக்  கலைஞர்களின்   திறமைகளை   வெளிக்  கொணர உதவியது .  மக்களின்  போராட்ட  உணர்வுகளை  மேலும் வளர்க்கவும்  உதவியது.

புலம்பெயர்ந்து  வாழும்  நம்  மக்களிடையேயும்  இவ்வீடியோத்   திரைப்படங்கள்   பெரும்   வரவேற்பைப்   பெறத்   தொடங்கின. திரைப்படங்கள்  வெளிப்படுத்தும்  தாய் மண்ணின்   போராட்ட   நிகழ்வுகளும்,   மக்களின்  உறுதியான   போராட்ட  பங்களிப்பும்   புலம்பெயர்ந்து   வாழும்    மக்களிடையே   புத்துணர்ச்சியையும்     புதுத்தென்பையும்   ஏற்படுத்தியமை குறிப்பிடத்க்கது.

mm-300x195.jpg

 சேயோன்:-   தமிழீழ விடுதலையின் எழுச்சியில் போராளிக் கலைஞர்கள் பங்கு பற்றி கூறுங்கள்?

நிலவன் :- தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாகப் பல்வேறு கலைப் படைப்புக்களிலும் களத்திலும் போராளிக் கலைஞர்களின் தேசப் பணி ௭ன்பது மிகவும் சிறப்புடையது. எமது தாயக விடுதலையின் ஆரம்பம் முதல் 2009 மே முள்ளிவாய்க்கால் வரை தாயக மக்களின் மனதில் தமிழீழ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்தை விதைப்பதற்குக் கலைஞர்கள் மற்றும் போராளிக் கலைஞர்களின் கலைப்படைப்புகள் அதிமுக்கிய எழுச்சிக் கருவியாக இருந்துள்ளது என்றால் அது மிகையாகாத உயரிய அர்ப்பணிப்பாகும் .

ஓர் இனத்தின் விடுதலைப் போரில் கலையும் ஒரு போர்க் கருவியே என்பதனை உணர்ந்து தம்மைத் தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகத்துடன் இணைத்து விடுதலைக்கு உரமூட்டிய இக் கலைஞர்கள் வரிசையிலே ௭மது விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்த போராளிக் கலைஞர்கள் பலரை நாம் இன்று இழந்திருக்கின்றோம். அவர்களின் அந்த மீள முடியா நினைவுகளை கனத்த இதயத்துடன் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

புறநானூற்றை விஞ்சிய வீரம் படைத்த போராளிக்  கவிஞர்களின் படைப்புக்கள் வரலாற்றின் பக்கங்களில் முழுமையாகப் பதியப் படாவிடினும் களமாடி வீரச்சாவடைந்த கலைஞர்களை உலகம் ஒருபோதும் மறவாது. போர்க்களக் கலை இலக்கியப் படைப்புக்களின் பெருமைக்கு  அவர்களின் படைப்புகளே சாட்சியங்களாக பகிர்கின்றன.

விடுதலை வேட்கைமிகு கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்கள் பௌத்த சிங்கள இனவாத  இன அழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்து  உயிருக்குப் போராடும் நிலையிலும் நாம் வாழவேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டவர்களாகவும் தமது மனோ தைரியத்தையும் விடுதலைவேட்கையையும் கைவிடாத வீர உணர்வும் தைரியமும் மிக்கவர்களாகவும் தம்மை இனங் காட்டுவதோடு  தமது சுயத்தையும் நம்பிக்கையையும் இழக்காதவர்களாகவும் போராளிக் கலைஞர்கள் மிளிர்கின்றார்கள்.

இசையினால் எமது உணர்வைத் துடித்தெழ வைத்த இக் கலைஞர்களின் விடுதலை கானங்கள் என்றும் எமது மண்ணின் விடுதலைக்கான கதவுகளை அசைக்கும் என்ற நம்பிக்கையுடனும், எமது தேசம் விடுதலை பெற நாமும் அயராது உழைப்போம் என்ற உறுதியுடனும் செயற்படுவோம்

i-1-300x300.jpg

 சேயோன்:-   விடுதலைப்  போராட்டத்தில்  தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பங்கு பற்றி கூறுங்கள் ?

நிலவன் :- தமிழீழ  விடுதலைப்  போராட்டம்  முனைப்புப்  பெற்ற ஆரம்ப  காலகட்டங்களில், ஆற்றுகைத்தளம், அரங்கக் கலை எனும் வடிவத்தையும் தாண்டி இன்று திரைக்குள் நின்று பேச ஆரம்பித்துள்ளது. கால மாற்றம், நவீன உலகம், சினிமாவின் தாக்கம், தொலைக்காட்சியின் வரவுகளில்  கலைகளையும், கலைஞர்களையும், கதைக் கருவினையும் கட்டிக்காத்து. அன்றைய நிதர்சனப் படைப்புக்கள் எஞ்சியுள்ள காண்பிய ஆவணங்களாகவும் வரலாற்றைச் சொல்லிநிற்கும் படைப்புக்களாகியும் விட்டன.

1986-1987  காலப்பகுதிகள்  வரை  போராட்ட  வடிவங்களும்  விளக்கங்களும் மக்களூடே  செலுத்தப்படுவதற்கும். மக்களை  போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதற்கும்.  கருத்தரங்குகள்.  வீதியோர  நாடகங்கள் (தெருக்கூத்து) நாடகங்கள்  போன்ற  ஊடகங்கள்  பயன் படுத்தப்பட்டன. காலப்போக்கில்  மக்கள்  தென்னிந்திய ஒளிப்பதிவு  படங்கள் மீது  அதிக நாட்டம் கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில்  எமது போராட்ட  சிந்தனைகளை மக்கள்  மனதில் பதிய வைப்பதற்கு  நாமும்  அவ்வகையான ஒரு  ஊடகத்தை  அதாவது  ஒளிப்பதிவு படம் என்ற ஊடகத்தை  பயன்படுத்த வேண்டிய  அவசியம் ஏற்பட்டது. இதன் ஆரம்ப கட்டமாக அரியலைப்  பிரதேசத்தில்  முதன் முதலாக ஒரு போராட்ட சிந்தனையூட்டமுடைய ஒரு திரைப்படம்  தயாரிக்கும்  வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க்களப் படப்பிடிப்பு பிரிவினால் நேரடிக் காட்சிகளைப் பதிவு செய்யும் பல நிகழ்படங்களாகும். இவ்வாறான பல நேரடிக் காட்சிகள் அமையப்பெற்று பின்னர் கோப்புக் காட்சிகளுடன் எமது மண்ணின் கதை … மக்களின் கதை.. விடுதலைப்போரை  நிதர்சனம் நிறுவனத்தினர் பல குறும்படங்களையும் முழு நீளத்திரைப்படங்களையும்  தயாரித்தார்கள்.  இதில் பல போராளிக் கலைஞர்களினதும், தேசியக் கலைஞர்களினதும் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அந்த வகையிலே புதுவை இரத்தினதுரை அவர்கள் தமிழீழத்திரைப்படங்களுக்குப் பாடல்களும், படங்களுக்கான தணிக்கை  தொடர்பான செயற்பாடுகளையும், ஒளிவீச்சில் கவிதைகளை ௭ழுதி  கவியரங்கங்களுக்கு தலமை தாங்கி, நிகழ்வுகளை நெறிப்படுத்தி, குறும்பட முழு நீளத்திரைப்படப் பாடல்கள் ௭ழுதி,மற்றும் மாவீரர்கள் நமது மண்ணின் அவலங்களை  நமது  மக்களின் அல்லல்களை ஆற்றல் மிகு  கவி இலக்கியங்கள் ஊடாகவும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தார்.ஆயுத போராட்ட நிகழ்வுகள் பற்றியும்,  இராணுவ அடக்கு முறைகள் பற்றியும், தெளிவாக எடுத்துக் காட்டி  ஒளிவீச்சு முலம்  வெளிப்படுத்தினார். இதனால் மக்களிடையேயும்  குறும்படங்கள் மற்றும்  முழு நீளத்திரைப் படங்கள்   பெரும்   வரவேற்பைப்   பெறத்   தொடங்கின. திரைப்படங்கள்  வெளிப்படுத்தும்  தாய் மண்ணின்   போராட்ட   நிகழ்வுகளும்,   மக்களின்  உறுதியான   போராட்ட  பங்களிப்பும்  மக்களிடையே   புத்துணர்ச்சியையும்     புதுத்தென்பையும்   ஏற்படுத்திய பெருமை இரத்தினதுரைக்கே ௭ன்பது குறிப்பிடத் தக்கது.

கலைகளில்  மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ஒரு தேசத்திற்கும் பின் நிற்காமல் முன் நின்ற பொற்காலம் தமிழர் நாம் எம்மை ஆண்ட விடுதலை புலிகள் காலம். போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள். அக்காலச் சமாதான காலச்செயற்பாடுகள், தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படிப் பலவற்றை உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்து கொண்டு உலகில் ஊடகங்களின் வலிமை உணர்ந்து எமக்கான ஊடகம் மட்டுமே ௭ன்றும் எம் தரப்பான தமிழர் உண்மைகளை சொல்லும் என்பதே திண்ணம்.

சேயோன்:-  முத்தமிழ் விழா நிகழ்வு பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள அதன் பொறுப்பாளராக புதுவை இரத்தினதுரை அவர்கள்  இருந்தார். கவிதைகள் , சிறுகதைகள் , நாடகங்கள் போலல்லாது ஈழப்போராட்ட இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு மிகக் காத்திரமானது. இப் பாடல்கள் தனியே போராட்டத்தைப் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ தேசியத் தலைவர், மாவீரர்கள், போராளிகள், போர்க்கள சாதனைகள், தமிழின வரலாறு , தமிழர்களின் வீரம், பாரம்பரியம், தமிழர் தேசம் , இனவழிப்பு , போர்தந்த வடுக்கள், மாவீரரர்கள் போன்ற பல்வேறு விடயங்களைப் பாடுபொருட்களாகக் கொண்டு பாடப் பட்டுள்ளன. இப்பாடல்கள் மக்களுக்கு விடுதலை உணர்வினை ஊட்டி விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயல்பட உந்துசக்தியாக இருந்துள்ளதுடன் சிறந்த போர்க்கால இலக்கியங்களாகவும் திகழ்வதற்கு அவை இசைவடிவில் கேட்போரின் இதயத்தைத் தொட்டு விடும் அழகான ஆழமான கருத்துக்களையும் அழகிய மொழி நடையையும் கொண்டுள்ளமையும் காரணிகள் எனலாம்.

கலை பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகளில் முத்தமிழ் விழாக்களும் அடங்கும். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் நடந்த முத்தமிழ் விழாக்களை ஒட்டிச் சிறப்பு மலர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டன.  1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கும் நடைபெற்றுள்ளன. 2003 இல்திருகோணமலையில் நடந்த இசை, நடன, நாடக விழாவும் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவையும் நினைவில்க் கொள்ளலாம்.

i-3-236x300.jpg

சேயோன்:-  கலை பண்பாட்டுக்கழகம் நடாத்திய மானுடத்தின் தமிழ்கூடல் நிகழ்வு பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- யாழ்ப்பாணத்தில் மானுடத்தின் தழிழ் கூடல் -2002 மலர்ந்தது. கலை, இலக்கிய ஊடகங்கள் சார்ந்த ஒரு கருத்தியல் தளத்தை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற அந்நிகழ்வு (2002) தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மானுட விடுதலை நோக்கிய இலக்கை, மானுடத்தின் பாலான பற்றுறுதியை, மானுட நேசிப்பை சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்லிய நிகழ்வாக அமைந்திருந்து.

மானுடத்தின் தமிழ்கூடல் – 1 மானுடத்தின் தமிழ் கூடல் II ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஒய்ந்து விடாத நிலையில் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் எம் மனங்களைவிட்டு நீங்காத நிலையில் …

மானுடத்தின் தமிழ் கூடல் II எங்கள் தலை நகரென நீண்ட காலமாக நம்பி வருகின்ற, இன்றும் உறுதியுடன் நம்பிக் கொண்டிருக்கின்ற திருகோணமலை மண்ணில் விழா நடைபெற்றிருப்பது விழாவின் முக்கியத் துவத்தைஇரட்டிப்பாக் கின்றது. இசை, நடன, நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணம்,  மட்டக்களப்பு, வன்னி, திருகோணமலை, வவுனியா என ஈழத்தமிழர் தேசத்தின் பல பகுதிக் கலைஞர்களும் ஒன்று திரண்டு தங்கள் ஆற்றல் களை வெளிப் படுத்தியிருந்தனர். இவ் விழாவை தமிழ் தேசத்தின் கலை ஆளுமைகளின் சங்கமமெனவும் கூறலாம்.

இதனை பிறிதொரு வகையில் அரசியல் சார்ந்து சொல்வதானால் மொழியின் மீதான உதாசீனப்படுத்தலிலிருந்து எழுச்சி கொண்ட ஒரு இனத்தின் கலைஞர்கள் தங்கள் தேசத்தின் தலைநகரில் ஒன்று திரண்டு தம் தேச மொழியின் ஆற்றல்களையும், கலைகளின் வீரியத்தையும் சர்வதேசத்திற்கும் பகிரங்கப்படுத்திய நிகழ்வாக ஐந்து நாட்களாக இடம் பெற்ற இவ்விழாவில் வாத்திய இசை, தமிழிசைப் பாடல்கள், நடனம், நாடகம் எனப் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஈழத்தமிழரின் வாழ்வின் வலியையும், வலிமையையும் பற்றிப் பேசிய இந்நிகழ்வு இப்படியும் ஒரு வரவேற்பை செய்யலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தது.

விழாவில் இடம்பெற்ற நாடகங்களைப் பொறுத்தவரையில் சிங்கள நாடகங்கள் தவிர்ந்த ஏனைய சகல நாடகங்களும் சமகால ஈழத்து தமிழனின் வாழ்வை அதன் உண்மை நிலையில் நின்று தரிசிப்பனவாக அமைந்திருந்தன. வன்னி மக்களின் வாழ்வின் வலிகளையும், துயரங்களையும் அவற்றை எதிர் கொண்ட வாறு மேலெழும் அவர் களினின் வலிமையையும் கோடிட்டுக் காட்டுவதாக புதுவை அன்பனின் “கரைதேடும் ஒடங்கள்” நாடகம் அமைந்திருந்தது.

இதேபோன்று எம்.பி.ரவீந்திராவின் “நெருப்புக்குள் வாழ்வு” எஸ்.பாலாவின் “இரத்த நதியில் பூத்த வெள்ளை ரோஜா” ஆகியன ஈழத்தமிழர்கள் எதிர் கொண்ட பேரினவாத ஒடுக்கு முறைகளையும், பேரினவாத அநாகரிகங்களையும் வெளிப்படுத்திய ஆற்றுகைகளாக அமைந்திருந்தன.

அதே போன்று தர்மசிறி பண்டார நாயக்காவின் ரோஜனத்துப் பெண்கள் யுத்த காலத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் வதைகளையும், வலிகளையும் தத்ரூபமாக சித்தரித்த ஆற்றுகையாக திகழ்ந்தது.

 தமிழ் தேசத்திற்கான தனித்துவமான கலைவடிவத்தை உருவாக்கிக் கொள்ளுதல், சமகால நிகழ்வுகளைக் கலைகளினுாடாக பதிவு செய்தல்,

திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பினையும் , புரிந்துணர்வு ஒப்பந்தத் தின் பின்னரும் விகாரை கட்டுமானம் , விகாரை புனரமைத்தல் என்றபேரில் நில அபகரிப்பு தொடர் வதையும் கண்டிக்கும் வகையில் கருத்துரைகளை அலங் கரித்திருந்தனர்.

ஊடகங்களின் பகைசார் பினையும் , பொறுப் புணராமையையும் தமிழ்த் தேசத்தின் கலைகளின் வளர்ச்சிப்போக்கு குறித்தும், போராட்ட காலத்தில் அவை ஆற்றிய பங்களிப்புக்கள் குறித்தும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பொறுப்பாளர் சி. இளம்பரிதி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் கெளசல்யன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.எழிலன் , திருகோணமலை மாவட்ட மகளிர் அணி அரசியல் பொறுப்பாளர் செல்வி. காருணியா ஆகியோரது சிறப்புரைகள் போராட்டம் குறித்தும், மாவீரர்களின் தியாகங்கள் குறித்தும், மக்களின் அயராத பங்களிப்பு குறித்தும், ஆழமான பார்வைகளை முன்னிறுத்தின. குறிப்பாக இறுதி நாளன்று சிறப்புரை ஆற்றிய விடுதலைப் புலிகளின் மூத்த உறுப் பினர் க.வே.பாலகுமாரன் அவர்கள் சமாதானத்திற்கான காலகட்டம் குறித்து பல உண்மைகளை முன்னிறுத்தினார். அறநெறிகளை வலியுறுத்துவதற்கும் வன்முறை தேவைப் படுகின்றது என்ற கருத்தை முன்னிறுத்தி தமிழரின் இராணுவ பலம் குறித்தும் , அந்தப் பலத்தின் அவசியப் பாடு குறித்தும் பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இறுதியில் விடுதலைப் புலிகளின்  பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் சில நிமிடங்களில் கனதியானதொரு உரையை ஆற்றியிருந்தார். இப்போது கேட்பதைத் தராவிட்டால் இதுவரை கேட்டுவந்ததைத் தர வேண்டிவரும் என்ற கருத்தே அவரின் பேச்சின் ஆணிவேராக இருந்தது.

புரிந்து கொண்ட இனவாதச் சக்திகள் விடுதலையை பலவீனப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே போலிப் பிரச்சாரங்களை கையாண்டன. இந்நிலமைகள் கட்டுடைந்திருக்கிறது. போலிப்பிரச்சாரங்களையும், விம பெயரிலான கொச்சைப் படுத்தல் களையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. விடுதலைப்புலிகளின் விடுதலைப்போராட்டம் தொடர்பாகவும் புதிய புரிதலுக்காக திறந்து விட்டிருக்கிறது. இந்த வகையில் இசை,நடன, தமிழ்த் தேசத்தைப் பொறுத்த வரையில் ஒரு கட்டுடைப்பு தொழிற்பட்டிருகின்றது எனத் துணிந்து கூறலாம்.

விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் கலை, சங்கங்களை போற்றுவதோடும் பேணிப் பாதுகாப்பதோடு சுருக்கிக் கொண்டவர்களல்ல. மாறாக சக தேசமான சிங்கள உயரிய கலைகளைப் போற்றும், மதிக்கும், உயர் பண்பு என்ற உண்மை விழாவினூடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவர்களல்ல.. எப்பொழுதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல எனக் கலைகளை துணையாகக் கொண்டு தெளிவாகச் சொல்லப் புலிகளை இவ்வாறான விழா மூலம்  சிங்கள மக்கள் விடுதலைப் புலிகள் குறித் தும் , விடுதலைப் போராட்டம் குறித்தும் வரித்துக் கொண்டிருக்கும் தவறான புரிதல்களை திருத்திக் கொள்வதற்கும் அல்லது மீள் பரிசீலனை செய்வதற்கும் இவ்விழாவினுாடாக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

கலை, பண்பாட்டுக் கழகத்தின் இசை, நடன, நாடக விழா ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஏறக்குறைய கால் நூற்றாண்டிற்குப் பின்னர் கலையை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களில் பெருந் திரளானவர்களை ஒரிடத்தில் திரட்டி தமிழ் தேசியத்தின்பால் உணர்வு நிலையில் ஒன்று படுத்திய ஒரு அம்சமே. தமிழீழ தேசியக் கொடி காற்றிலே அசைந்து வீர வரலாற்றை பறைசாற்ற ஒட்டு மொத்த மானுடத்தின் தமிழ் ஈழத்தமிழர் தேசிய வித்திட்டிருப்பது பதித்திருக்கிறது.

இனவாதத்திலும், நில ஆக்கிரமிப்பினாலும் சூழப்பட்டு நிமிர முடியாமல் வாழும்தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை, ஒரு புதிய உணர்வு நிலையைப் பாய்ச்சியிருக்கிறது. கலை, ஒரு புதியஅசை வியக்கத்திற்கான வித்தைப் பதித்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம் நடாத்தும்  இசை, நடன, நாடக விழா அரசியல் தொடர்பில் புதிய பார்வைக் கோணங்களுக்கு இனவாத அரசியலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் ஒரு புதிய அசைவியக்கத்திற்கான  மேலாக சிங்களப் பெருந்தேசியவாத ஒடுக்கு முறைக்குள்ளும் எழுந்து நிற்கும் ஒரு தேசிய இனத்தின் கலை, பண்பாட்டுக்கழகத்தின் இசை, நடன, நாடகவிழா  கலை இலக்கியங்கள் கொண்ட மானுடத்தின் தமிழ்கூடல் ஒரு பேசும் பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

kl-300x294.jpg

சேயோன்:-  தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பாகப் புலம்பெயர் தேசத்தில் இளைய தலை முறையின் ஈடுபாடு  எவ்வாறு காணப் படுகிறது?

நிலவன் :- எமது தாயகத்திற்கான விடுதலைப்போரும் விடுதலைப்போருடன் பிணைந்த எங்கள் வாழ்வியலையும் எந்தப் பண்நாட்டுக் கலைஞனாலும் செதுக்கி விடமுடியாது . வீரத்தின் கதைகளும் வலிகளின் குமுறல்களும் வன்முறைகளின் வதைகளும் அறிந்தவர்கள் நாம். மண்ணையும், மரபையும் காப்பது ௭மது கடமை. நமது கலைகள் பற்றியும், அவற்றின் சிறப்புக்கள் குறித்தும், இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்லிக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம் .

தமிழ்மொழியைக் கற்பதோடு, தமது பண்பாட்டு விழுமியங்களைக் காப்பதற்குக் கலைகள் ஏதுவாக அமைந்துள்ளன. தேசிய கட்டமைப்புக்களின்  நிர்வாகங்களின் கீழ் இயங்கிவரும் நுண்கலை வகுப்புகளில் பரதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கலை ஆசிரியர்கள் பயிற்றுவித்து வருகின்றனர். இக்கலைகளோடு தமிழர் மரபுவழிக் கலைகளான கும்மி, கோலாட்டம், காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, நாடகம், வில்லுப்பாட்டு, கூத்து, விடுதலை நடனம், விடுதலைப் பாடல் போன்ற கலைகளையும் பயின்று வருகின்றனர். அதே வேளை தேசிய நிகழ்வுகளையும் , தமிழர் திருநாளான பொங்கல் விழா, வாணி விழா, நத்தார் விழா போன்ற பல நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடாத்தி வருகின்றனர்.

தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள்விழா  கனடா , பிரித்தானியா , அவுஸ்ரேலியா, சுவிஸ் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளிலும்  (புலம்பெயர்நாடுகளில்) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழர் கலை கலாச்சாரப் பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக் கொணரும் இக் கொண்டாட்டத்தில் தமிழர் பண்பாட்டைப் பாரம்பரியக் கலைகளின் மூலம் வெளிக்­ கொணரும் விதத்தில் நடந்த கலைப் போட்டி­ நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

புலம்பெயர்ந்து வாழும் எமது இளையோர்களின் கலைத்திறமையை ஊக்குவித்து கௌரவிக்கும் முகமாகவும், கலை ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொணரும் மேடையாகவும்  போட்டி நிகழ்வுகள் அமைவதோடு தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும், இளைய தலை முறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வைப் பேணவும், தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் இசை நடனப் போட்டியும் அமைகின்றது. இந்  நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்துவரும் விருந்தினர்கள், நடுவர்கள், கலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், போட்டியாளர்கள், அணிசெய் கலைஞர்கள், எமது சக அமைப்புக்களின் பொறுப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், கலை ஆர்வலர்கள், தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வருகின்றார்கள்.

Photo-13V-300x199.jpg

சேயோன்:-   தமிழ் இனத்தின் ஒப்பற்ற  தலைர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  கலை இலக்கியம்,  பண்பாடு பற்றி சிந்தனைதகள் பற்றிக் கூறுங்க?

நிலவன் :- கலை இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத்தூண்ட வேண்டும் பழமையிலும் – பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

 இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கியக் கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும். இந்தப் படைப்புக்கள் எமது புனித விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும்.

போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.

விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்.

மொழியும் , கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது; (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன. தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.

எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரனாக நிற்க வேண்டும்.

மொழி, கலை, கலாச்சாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கட்டமைப்பிற்குத் தூண்களாக விளங்குகின்றன. ஒரு தேசியத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன. ஒரு தேசிய நாகரிகத்திற்கு அத்திவாரமாகின்றன.

பழையன கழிந்து புதியன சேர்ந்து செழுமைப்படும் கலை, கலாசாரம், பண்பாடு எமது இனத்திற்குப் பெருமை சேர்க்கும், எமது மக்களின் மனவுலகில் ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும்.

எமது மொழியில், எமது கலைகளில், எமது பண்பாட்டில், எமது மண்ணில் நாம் கொள்ளும் பாசமும் நேசமும் தேசியப் பற்றுணர்வாகப் பரிணாமம் பெறுகின்றன.

கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள்.

நான் கலை இலக்கியங்களை மதிப்பவன். கலை இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவன்.

மக்களிடையே விழிப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும், விடுதலை உணர்வையும் தூண்டிவிடும் கலை இலக்கிய ஆக்கங்களே எமது இலட்சியப் போருக்கு உரமேற்றுவதாக அமையும். இத்தகைய கலை- இலக்கியப் படைப்புக்களே தேசிய எதிர்ப்பியக்கத்திற்கு உரமூட்டுவதாக அமையும்.

நாம் சுதந்திர மனிதர்களாக, எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருந்தால்தான், கல்வி உட்பட சகல, சமூக அமைப்புக்களையும் ஒரு உன்னதமான வளர்ச்சிப்போக்கில் உயர்நிலைக்கு நகர்த்திச் செல்ல முடியும்.

இளமையிலிருந்துதான் ஒருவனை முழுமையாக வளர்க்க முடியும். முழுமை எனும் பொது அறிவும், ஆற்றலும், அறநெறிப் பண்புகளும் கொண்ட நிறைவான மனித வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றேன்.

எமது மொழியும் – கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றில்,விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை; எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாக நிற்பவை.

சமூகப் புரட்சி என்பது கலாசார மறுமலர்ச்சியை உள்ளடக்கக் கூடியதாக முன்னெடுக்கப் படவேண்டும் என்பதே எனதுகருத்து.

கலாசாரம் உயர்நிலை எய்தும் பொழுதே ஒரு இனம் மகிமை பெறுகின்றது; மனிதவாழ்வு உன்னதம் பெறுகின்றது. மனிதம் வளர்ச்சி பெறுகின்றது. காலத்தின் மூச்சாக வாழ்வியக்கம் அசைகின்றது. அந்தக் காலத்தையும் அந்த வாழ்வாக அவிழும் மனித இன்னல்களையும் விளைச்சல்களையும் நுட்பமாகச் சித்திரிக்கும் கலை – இலக்கியங்கள் உன்னதமானவை.

எமது பண்பாடுதான் எமது தேசத்தின் உயிர் எமது இனத்தின் ஆன்மா. தான் பிறந்த மண், தான் வாழ்ந்த சூழல், தான் வாழும் ;காலம் என்ற ரீதியில் வாழ்க்கையே ஒரு கலைஞனது படைப்புத் தளமாக அமைகின்றது; வாழ்வின் புறநிலை உண்மைகளை மூலப்பொருளாக எடுத்துக் கலைப்பொருள் படைப்பவனே சிறந்த கலைஞன்.

பழையன கழிந்து புதியன சேர்ந்து செழுமைப்படும் கலை – கலாச்சாரம், பண்பாடு எமது இனத்திற்குப் பெருமை சேர்க்கும் எமது மக்களின் மனவுலகில் ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வைத் தோற்றிவிக்கும்.

கலாச்சாரம் என்ற கோலத்தில் எமது சமூக வாழ்வில் ஊடுருவி நிற்கும் பிற்போக்கான பண்புகளை, வழக்குகளை,கருத்தோட்டங்களை நாம் இனங்கண்டு களைதல் அவசியம்.

கல்வி எனும் மூலாதார உரிமையைப் பறித்தெடுத்து, தமிழீழத்தின் கல்வித்துறையைச் சிதைத்துவிட, சிங்களப் பேரினவாதம் நீண்டகாலமாகவே முயன்று வருகின்றது.

எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வி ஆதாரமானது; எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமானது. நீண்ட காலமாகவே, எமது கல்விவாழ்வைச் சிதைத்துவிட எதிரியானவன் முனைந்து வருகிறான் இதனால் தமிழரின் கல்வி பாரதூரமான அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அறிவின் அதி உயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை; தன்னலமும் தற்பெருமையும் அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகிறது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக, பண்பான மனிதராக ஆக்கிவிடுகிறது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் உயரிய நோக்குகளையும் இலக்குகளையும் மாணவ சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். இந்தப் புரிந்துணர்வை வளர்த்து, மாணவரிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரிய சமூகம் முயற்சிக்க வேண்டும்.

கலைத்துறையில் சர்வாதிகாரம் இருக்கக்கூடாது; அப்படி இருந்தால் அது வளராது. கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்து விட எதிரி முனைகிறான். இனத் தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம்.

kll-236x300.jpg

சேயோன்:- இளம் கலைஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது ?

நிலவன் :- தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் பண்பாட்டு வடிவம் ஈழத் தமிழரிடையே சமூக மாற்றத்துக்கான வன்மையான கலை அரங்கினை வளர்ப்பது. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தனது மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தனது மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்கச் செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான் உறங்கிக் கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது. தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூகப் பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும் எந்தத் துறை சார்ந்த கலைஞர்களாக இருந்தாலும், அதில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பும் உணர்வும், உழைப்பும், படைப்பிலும் வாழ்விலும் உண்மையும், நேர்மையும், மேலும் மேலும் வளரத் துணை புரியும் என்பதை உணருங்கள். ஏன் என்றால் தமிழர் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தக் கலைகள் வாயில்களாக அமைகின்றன. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் எனில் முதலிலே நாங்கள் கை வைக்கின்ற இடங்கள் பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பது . கலைகள் ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கின்றன.

தமிழ் மக்களின் பழக்கவழக்கம், வாழ்வியல் முறை மற்றும் பொருளாதார நிலையை வெளிப் ப்படுத்தும் விதமாகக் கலைகள் அமைகின்றன. தமிழ் இனத்தின் மொழியையும், அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அழித்தால் தமிழ் இனம் தானேகவே அழிந்துவிடும் என்பதற்கு உட்பட்டே தமிழர் தாயகம் முழுவதும் பண்பாட்டு இனஅழிப்பு நடவடிக்கைகள் எமது மண்ணில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றது. எமது இனத்தின் இருப்பினை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்! என்பதனைக் காலம் உணர்த்தி நிற்கின்றது

ii-300x196.jpg

சேயோன்:-  இளந் தலைமுறையினரிடம் எழுச்சி உருவாக்கம் பற்றிய உங்கள் கருத்து?

நிலவன் :- ஈழத்தில் வாழும் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறைக்குள் அச்சம் மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளி மக்களின் இயல்பான வாழ்வை முடக்கிப் போராட்டங்களை ஒடுக்கும் அடக்குமுறைத் தனம் மிக்க அரசியல் புத்தியுடன் ஆக்கிரமிப்பு அரசியல் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றார்கள். உலக வல்லாதிக்கக் கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத அரசுகளின் சதிவலையில் அகப்பட்டவர்களாக இருக்காது தமிழ் இன அழிப்புக்கு நீதி தேடும் போராட்டத்தில் எம்மைப் போன்று அடக்கு முறைக்கு எதிராகப் போராடும் பிற இன மக்களோடு கைகோர்த்து நாம் பன்னாட்டு அரங்கிலே அநீதிக் கெதிரான மாபெரும் அணியாகத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னிறுத்த வேண்டும்.

தமிழர், தமிழீழம் என்ற எல்லைக்கோடுகளை புலத்தில் இளைய தலைமுறையினர்   ஒன்றிணைந்து பன்னாடுகள் தழுவிய ஓர் ஒருங்கிணைவு, ஒருமித்த கூட்டு இலக்குகளிற்காக “தமிழீழம்” என்ற கொள்கையை முன்னிறுத்தி ஓர் தேசமாக எண்ணிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். துறைசார் திறன் கொண்ட ஆளுமைகள் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்தியாக இருக்கின்ற எமது இளம் தலைமுறையினரை நாம் முன்நிறுத்திச்   செயற்பட வேண்டும். ஒரு தலைமுறை மாற்றமும்,   எமது நீநிகோரும்  போராட்ட வடிவத்தின் மாற்றமும், காலத்தின் தேவை என்பதைக் களத்திலும், புலத்திலும் உள்ள தமிழ் தேசியத் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களே எம் இனத்தின் எதிர்காலம் என்பதையும் புரிந்துகொண்டு இளையோர்களிற்கு வழிவிட்டு வரலாற்றுக் கடத்தலுடன் “எமது போராட்ட வடிவமாக இளந் தலை முறையினரிடம் குறிக்கோள் மாறாத அற எழுச்சியினை உருவாக்க வேண்டும்”.

புவிசார் அரசியலின் அடிப்படையில் பல்துருவ அதிகார மையங்களாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. இப் புவிசார் அரசியலில், சக்திமிக்க சர்வதேசப் பிராந்திய அரசுகளின் நலன்களைக் கொண்ட பரிமானங்கள் தமிழீழ விடுதலைப் பயணத்தில் தற்பொழுது சவால்கள் மிகுந்த இக் காலப்பகுதியாக உருவெடுத்துள்ளது. எமது இனத்தின் விடுதலை வரலாற்றையும் , தியாகங்களையும் , பண்பாட்டையும் ,அடையாளங்களையும், பாதுகாத்து தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து  வகுக்கப்பட்ட “தமிழீழம்” தனிநாடுத் தீர்வுத்திட்டம் நோக்கிய மக்களின் தொடர்ச்சியான நிலைப்பாட்டைக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக சமர்க்களம் கண்டு வித்தாகி விதையுண்டவர்கள் மாவீரர்கள்.  தமிழீழ மக்களின் விடுதலை வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் தமிழீழத் தனியரசு ஒன்றே வழி என்ற மக்கள் கட்டளையைத் தலைமேற்கொண்டு, விடுதலைக் குறிக்கோளில் உறுதியான நம்பிக்கையுடன் வரலாறாகிப் போன பல்லாயிரம் மாவீரர்களை நெஞ்சிலேந்தி அனைவரும்  தமிழராய் ஒன்றிணைய வேண்டும். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”  “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும் “ என்று சொன்ன திலீபனின் அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும். தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ் மக்கள் விழிப்போடு  ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நன்றி

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://www.uyirpu.com/?p=19204

'கேணல்' கிட்டுவின் வாழ்வும் காலமும்

2 months ago
06 JAN, 2025 | 10:24 PM
image
 
இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும்.

"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 04

2 months 1 week ago

"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 04
 


“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் சிறப்பினையும் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர். மீண்டும் ஒரு சிலப்பதிகார வரிகளை பார்ப்போம்.


  
‘உழவர் ஓதை, மதகோதை,
உடைநீர் ஓதை தண்பதங் கொள்
விழவர் ஓதை, சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவிரி!

[சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம் – கானல் வரி]

அதாவது, உழவரின் ஏர் ஓட்டும் ஓசை, மதகிலே நீர் வழியும் ஓசை, வரப்புகளை உடைத்து பாயும் நீரோசை, புதுப்புனலாடி கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆராவார ஓசை … என இரு மருங்கும் ஒலிக்க .. அந்த ஓசையோடு நடக்கும் காவிரிப் பெண்ணே! நடந்தாய் வாழி காவேரி! என்கிறார். பன்னிரண்டாம் திருமுறையில் திருக்குறிப்புத்தொண்ட  நாயனார் புராணத்தில் 23 ம் பாடலும் நீரின் சிறப்பை இப்படிக் கூறுகிறது.

"அனைய வாகிய நதிபரந்
   தகன்பணை மருங்கில்
கனைநெ டும்புனல் நிறைந்துதிண்
   கரைப்பொரும் குளங்கள்
புனையி ருங்கடி மதகுவாய்
   திறந்திடப் புறம்போய்
வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர்
    வழங்குவ வியன்கால்."

அதாவது அவ்வாறாகிய பாலியாற்று நீர் பரந்து, அகன்ற வயல்களின் பக்கலில் இரைந்து பெருகவரும் திண்மையான பெரிய குளக்கரையில், அங்குள்ள சிறந்த அழகுபடுத்தப்பட்ட காவல் மதகுகள் வாய்திறந்திட, 
 வெளியே சென்று பெருகும் தன்மை கண்டு, அவ் விடமுள்ள வீரராய உழவர்கள் தம் மகிழ்வால் ஒலிசெய, பெருவாய்க் கால்கள், நீர் பெருகி வரும் என்கிறது. இறுதியாக மூத்த சங்க இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.

"வருவிசை புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்"

-தொல்காப்பியம், பொருள்:65.

விசையோடு வரும் நீரை ஒரு கற்சிறை (அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள். கி.மு.5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, கட்டுப் படுத்தி பாசனத்துக்குப் பயன் படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. 
 பாறைகளயும் சிறுகுன்றுகளையும் கரைகளாகக் கொண்டு குளங்கள் அமைப்பது சங்க காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடல்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் பல வகை நீர் நிலைகளை தமிழ் மொழியில் காண்கிறோம் அவை: "இலஞ்சி , கண்ணி, எரி, மடு, வாவி, 
 வட்டம், நளினி, குட்டம், குளம், கயம், கோட்டகம், மலங்கன், ஓடை, 
 சலந்தரம், தடாகம், பொய்கை, கிடங்கு, கற்சிறை ,கிணறு, கேணி, துரவு. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறை கிணறு, ஊருணி, ஊற்று, கட்டு கிணறு, கண்மாய் (கம்மாய்), கலிங்கு, 
 கால், கால்வாய், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை, தடம், தளிக்குளம், தாங்கல், திருக்குளம், தெப்பக் குளம், தொடு கிணறு, நடை கேணி, நீராவி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு, மடை, மதகு, மறு கால், வலயம், வாய்க்கால்" என  50 இற்கு மேற்பட்ட   சொற்களை காண்கிறோம். எந்த ஒரு மொழியில் ஆவது இத்தனை சொற்கள் நீர் நிலைக்கு உண்டா? அப்படி என்றால் தமிழில் மட்டும் எப்படி இத்தனை சொற்கள் வந்தன? இது தான் நாம் கவனிக்க வேண்டியது. அதாவது தமிழனின் வாழ்வு, நாகரிகம் ஆதியில் இருந்து இன்றுவரை  நீர் வளத்துடன் அமைந்ததே இதற்கு காரணம் என நாம் இலகுவாக கருதலாம். அதனால் தான், நீர்பாசனம் அங்கு முக்கியம் அடைகிறது. அந்த நீர்பாசன முறை பொறி முறையாக்கப்பட்டது தான் ஆதித் தமிழரின் அதி உன்னத வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பதே உண்மை. அதனால் தான் இத்தனை சொற்கள் போலும்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 


முற்றிற்று 

474593983_10227855808283401_4365655585376757121_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=OFkcYG0mS4EQ7kNvgEUc7R_&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AXGo-Lz_Wf9fchI9U-cPYCp&oh=00_AYBQjrFHkeCwz9OFK3vGl7RjbKOlvWIbMYBfa-HfOes9tA&oe=679D27DC  474520546_10227855809043420_8036212395637425598_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jdz3U7pMgdkQ7kNvgFEJIMm&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AXGo-Lz_Wf9fchI9U-cPYCp&oh=00_AYDCG2DwBWsfm5mleeD0lDlY296j1bEWRuS0Dr-UIVEFaQ&oe=679D33CE

 

 

 

"உறங்காத உணர்வுகள்"

2 months 1 week ago

"உறங்காத உணர்வுகள்"

 

வலவன் ஒரு காலத்தில் வளமான வன்னிப் பிரதேசத்தின் மையப் பகுதியில், ஒரு பெருமைமிக்க விவசாயக் குடும்பத்தின் தலைவராக இருந்தவர். அவரது பண்ணை ஏக்கர் பரப்பளவில் இருந்தது, அங்கு அவர் தென்றலில் நடனமாடும் நெல் வயல்களையும், ஏராளமாக காய்க்கும் பழத்தோட்டங்களையும் பயிரிட்டார். அவருடைய செல்வம், அவரது கிராமத்தில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவருக்கு வழங்கியது - வராந்தாவுடன் [முன்தாழ்வாரம்] கூடிய ஓடு வேயப்பட்ட பெரிய கல்வீடு, வறண்டு போகாத தோண்டப்பட்ட கிணறு மற்றும் அறுவடையால் நிரம்பி வழியும் தானியக் கிணறு எனப் பல வசதிகளைக் கொண்டிருந்தது. அவருடைய பிள்ளைகளான அருண் மற்றும் மீரா, அழகான சமீபத்திய வடிவமைப்பு செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து, அருகிலுள்ள சிறந்த பள்ளிகளில் படித்து வந்தனர்.

ஆனால், போர் கண்ணுக்குத் தெரியாத பாம்பைப் போல வன்னிக்குள் நுழைந்து, அதன் மக்களின் வாழ்க்கையைப் பயமுறுத்தியது. ஒரு நாள் காலை, இராணுவத்தினர் கிராமத்திற்கு வந்து, அவர்களின் நிலத்தையும் - வீடு, வயல், தோட்டம் உட்பட எல்லா நிலப்பரப்பையும் - பாதுகாப்பு வலயமாக அறிவித்தனர். "உடனடியாக வெளியேறு" என்று அவர்கள் கட்டளையிட்டனர். அவர்கள் எல்லோரும் காவி இருக்கும் துப்பாக்கி முனை போல அவர்களின் வார்த்தைகள் எந்த இரக்கமும் இன்றி கூர்மையாக இருந்தன. அதில் எந்தவித கருணையையும் அவர்கள் காட்டவில்லை. வலவன் தனது முற்றத்தில் இருந்த தன் தாய்மண்ணின் ஒருபிடியை கைகளில் பற்றிக் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்தான், ஆனால் அவனது வேண்டுகோள் ஏளனச் சிரிப்புடனும் அலட்சியத்துடனும் அவர்களால் நிராகரிக்கப்பட்டது. இறுதியில், ஒன்றும் செய்ய முடியா நிலையில், வலவனின் குடும்பம், தங்களால் எடுத்துச் செல்லக் கூடிய விலையுயர்ந்த பொருள்கள், உடைகள் மற்றும் சில பாத்திரங்களைக் மூட்டையாகக் கட்டிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த, உழைத்த பூமியை விட்டுவிட்டு அகன்றனர்.

பக்கத்து அயல் கிராமத்தில் குடியேறிய பிறகு, குடும்பம் மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயற்சித்தது. வலவன் ஒரு சிறிய நிலத்தை வாடகைக்கு எடுத்தான், ஆனால் போரின் நிழல் அங்கும் பெரிதாகத் தெரிந்தது. ஒரு இரவு, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, தொலைதூர வெடிகளின் சத்தம், அவர்களின் தற்காலிக வீட்டைநோக்கி  நெருங்கியது. திடீரென்று, காதை செவிடாக்கக் கூடிய பெரும் சத்தம் [கர்ஜனை] காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தது. ஒரு போர் விமானத்திலிருந்து வீசப்பட்ட பல குண்டுகள் அருகில் இருந்த ஒரு தெருவில் அமைந்திருந்த வீடுகளின் வரிசையை அழித்தது.

சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட, ஒரு உலோக உறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற சிறுசிறு குண்டுகளைக் கொண்ட,  முறையில் வடிவமைக்கப்பட்ட, ஒரே நேரத்தில் வெடித்துச்சிதறி மழைபோல பொழிந்து பல திசைகளிலும் தாக்கி துளைக்கும் தன்மையினைக் கொண்ட, கொத்துக் குண்டுகளுக்கு அங்கு பஞ்சம் இல்லை. எனவே மக்களுக்கிடையில் பயமும் பீதியும் வெடித்தது. இருளில் ஒருவரையொருவர் இறுகப் பற்றிக் கொண்டு, புகையின் வாசனையையும், அங்கு எரியும் உடல் பாகங்களின் சதையையும், அரைகுறை உயிரில் கதறும் மக்களின் சத்தத்தையும் முகர்ந்தும், கண்டும், கேட்டும், தம்  உணர்வுகளையும் திணறடித்தபடி அங்கிருந்து ஓடினர். அவர்களில் வளவனும் அவன் குடும்பமும் கூட இருந்தது.

வலவனின் மனைவி, அஞ்சலை, தன் மகன் அருணுக்கு மிக அருகில் பட்டும் படாமலும் குண்டு அல்லது எறிகணையின் வெடிப்பினால் வெளியே வீசப்பட்ட  துண்டுகள் பாய்வதைக்கண்டு கதறி அழுதாள். அவர்கள் இரவை ஒரு தரையில் வெட்டப்பட்ட ஒரு நீண்ட குறுகிய பதுங்கு குழியில் [அகழியில்] பதுங்கி இருந்தனர். அந்த பயங்கர நேரத்தில் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். காலை வந்தபோது, அவர்கள் தற்காலிகமாக இருந்த வீடும் இடிந்து விழுந்ததைக் கண்டனர்.

மீண்டும் இடம்பெயர்ந்த வலவன் தனது குடும்பத்தை காடுகளுக்குள்ளே தற்காலிகமாக அழைத்துச் சென்றான். ஆனால் நீதியற்ற போருக்கு எல்லைகள் இல்லை. ஒரு நாள் "விசாரணை" என்ற சாக்குப்போக்கில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல படை வீரர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் எனோ வலவனை விட்டுவிட்டார்கள். வலவன் முழங்காலில் விழுந்து கெஞ்சினான், ஆனால் அவர்கள் அவரை துப்பாக்கியின் பிடியால் தாக்கி அவரது குடும்பத்தை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நாட்கள் வாரங்களாக மாறியது, எந்த வார்த்தையும் படை வீரர்களிடமோ அல்லது அரசிடம் இருந்தோ வரவில்லை. வலவன் தான் அறிந்த, கண்ட   ஒவ்வொரு தடுப்பு மையத்தையும், ஒவ்வொரு முகாமையும் தேடினான், ஆனால் அவருடைய குடும்பம் பற்றி எந்த செய்தியையும் அவனால் அறியமுடியவில்லை.

போர் தீவிரமடைந்த நிலையில், அவரது அயலவர்களின் கதைகள் வன்னியின் பகிரப்பட்ட சோகத்தை அவருக்கு பிரதிபலித்தன. படையினர் வீசிய கொத்துக்  குண்டுகள் தொடர்சியாக வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றிட பலர் உடல் கருகி கொல்லப்பட்டார்கள். மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன. படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த பகுதிகளில், ஏராளமான மக்களின் உடலங்கள் சிதறிக் கிடந்தது எனவும் பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே கொல்லப்பட்டார்கள் எனவும் இதில் காயமடைந்தவர்கள் ஏராளமானோர் அந்த நேரத்தில் அதிகளவில் இறந்து கொண்டார்கள் எனவும் கொல்லப்பட்டவர்களை அங்கு  புதைத்துவிட்டு படுகாயமடைந்தவர்களை தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அங்கிருந்த மருத்துவமனை மரண ஓலம் நிறைந்திருந்ததாக எனவும் பள்ளிப் பேருந்து மீதும் கூட எறிகணை வீசியது எனவும் மோதலில் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி குழந்தைகள் பலர் கொல்லப்பட்டனர் எனவும் குடும்பங்கள் பல தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் எனவும் வேகவைத்த இலைகள் மற்றும் சேற்று நீரில் பலர் உயிர் பிழைத்தனர் எனவும் வான்வழித் தாக்குதல்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் பதுங்கு குழிகளில் பிரசவித்தார்கள் எனவும் அவர் அறிந்துகொண்டார். 

"மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்துஇழுது மறப்பச்
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப"

முரசு முழங்கவில்லை. யாழ் வாசிக்கப்படவில்லை. அகன்ற தயிர்ப்பானை கவிழ்த்து வைக்கப்பட்டு, வெண்ணெய் கடையாமல் உள்ளது. வண்டுகள் மொய்க்கும் மதுவை சுற்றத்தார் அருந்தவில்லை. உழவர் உழவுத் தொழிலைச் செய்யவில்லை. சிறிய ஊர்களின் தெருக்களில் விழாக்கள்நடைபெற வில்லை. அப்படியான ஒரு நிலையில் தான் வலவனும் மற்ற ஊர்மக்களும் அவ்வேளையில் இருந்தனர்.

வலவன் தற்காலிகமாக தங்கி இருந்த அகதி முகாம்களில் பட்டினி மற்றும் நோயினால் மக்கள் இறப்பதை வளவன் கண்டான். ஒரு சிறுவன், தன் கையில் ஒரு பிஸ்கட் துண்டை கையில் வைத்துக்கொண்டு, தன் தாயின் உயிரற்ற உடலைப் பார்த்து அழுவதை அவர் பார்த்தார், பெயர் தெரியாத மற்றும் புதைக்கப்படாத உடல்கள் நிறைந்த வயல் வெளிகளை அவர் பார்த்தார், அங்கு அப்போது காட்டு விலங்குகள் பிணம் தின்னிகளாக சுற்றித் திரிவதைக் கண்டார். 

மணிமேகலை (6-11-66-69) 

"சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் றரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்" 

பிணங்களைச் சுடுவோரும், வாளா இட்டுப்போவோரும் [பிணத்தை அங்கு அழுகிக் கெட அல்லது சிதைவடைய எறிந்து விட்டு போவோரும்], அங்கு அடக்கம் செய்வதற்காக பிரத்யேகமாக தோண்டப்பட்ட குழியில் பிணத்தை இடுவோரும், தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போருமாய்ப் [பிணத்தை நறுமணமூட்டி இறந்தோரை அடக்கஞ்செய்துவைக்கும் பானையுள் வைத்து அதன் வாயை மூடுவோரும்] பல்வேறுவகையாக இறுதிக் கடன்கள் செய்தார்கள் தமிழர்கள் அன்று என்று சொல்கிறது. இதில் வாளா இட்டுப்போவோரும் என்ற இரண்டாவது முறை, அதாவது இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட் பாண்டத்தில் இட்டுப் புதைத்தது, வலவனுக்கு ஞாபகம் வந்தது. இங்கும் இந்த வயல் வெளியில் சிதறிக் கிடைக்கும் உடல்களுக்கும் இந்த நிலையே தான் என்று அவனின் உள்ளுணர்வு கூறியது. அப்படித்தான் அந்த புதைக்கப்படாத உடல்கள் நிறைந்த வயலும் காட்டு விலங்குகள் பிணம் தின்னிகளாக சுற்றித் திரியும் காட்சியும் வலவனுக்குத் தெரிந்தது.

வலவனுக்கு, செல்வத்திலிருந்தும் அன்பு மனைவி பிள்ளைகளிலிருந்தும்  ஒன்றுமில்லாத ஒரு நிலைக்கு வீழ்ச்சி என்பது வலியும் நெகிழ்ச்சியும் நிறைந்த ஒரு பயணமாக இருந்தது. ஒரு காலத்தில் அவர்களின் செழுமைக்காக பெருமைபட்ட  அவரது குடும்பம், வீடு, பண்ணை, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் கிராமம் கிராமமாக அலைந்து, ஒவ்வொன்றாக இழந்து இப்போது, வலவன் தன் கைகளால் கட்டிய மண் குடிசையில், அதன் சுவர்கள் பருவக்காற்றுக்கும் வெள்ளத்துக்கு இடிந்து விழக்கூடிய நிலையில், தனிமையில் திண்ணையில் குந்தி இருந்தான்.   அவரது ஆடம்பரமான கடந்த காலம் போரின் கொடுமையால் அழிக்கப்பட்ட தொலைதூரக் கனவு போல் அவனுக்குத் தோன்றியது.

என்றாலும் வலவன் ஒரு நம்பிக்கையில் இன்னும் ஒட்டிக்கொண்டு இருந்தார். வயல்களை உழுதல், வேலிகளைச் சரிசெய்தல் அல்லது பொருட்களை எடுத்துச் செல்வதில் என கிடைக்கும் எந்த வேலையும் செய்து, சம்பாதித்த ஒவ்வொரு நாணயத்தையும் அவரது குடும்பத்தைத் தேடுவதற்காக சேமித்தார். இரவில், அவர் நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து, இன்று அருகில் இல்லாத மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஏதேதோ பேசினார்.

ஒரு நாள் மாலை, அவர் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துச் சென்ற சில உடைமைகளுக்கு இடையே தனது குடும்பத்தின் பழைய புகைப்படத்தைக் கண்டார். அது மங்கி இருந்தது, ஆனால் அவர்களின் முகத்தில் புன்னகை தெளிவாக இருந்தது. அவர் அதை இதயத்தில் தொட்டு தொட்டுப் பார்த்தார், அவரது முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. "ஒரு நாள்," அவர் கிசுகிசுத்தார், "நான் உங்கள் எல்லோரையும் கண்டுபிடிப்பேன், அல்லது குறைந்தபட்சம் உங்களுக்கு என்ன ஆனது என்பதை அறிவேன்." தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

வலவனின் கதை எண்ணற்ற வன்னி வாழ் மக்களின் கதைகளில் ஒன்றாகும், இது போரினால் ஒடுக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிரதிபலிப்பாகும், ஆனால் அதன் மக்களின் நெகிழ்ச்சியால் இன்னும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் வலவனின்  உடலுக்கு வயதாகிவிட்டாலும், அவரது இதயம் சரணடைய மறுத்தது. அன்பு, இழப்பு மற்றும் நம்பிக்கை போன்ற அவரது உணர்வுகள் ஒருபோதும் தூங்கவில்லை.

அவன் இதயத்துக்குள் "உறங்காத உணர்வுகள்" எல்லாவற்றையும் பத்திரமாக வைத்துக்கொண்டு, அவன் இன்னும் தன் மனைவி அஞ்சலை, மகன் அருண், மகள் மீராவை தேடிக்கொண்டு இந்த சின்ன மண் குடிசையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்!   

நன்றி

 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

474433970_10227855669199924_6606995756535777136_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=0-wjLUlW0WMQ7kNvgHDTorG&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AIheWZ1QnfGlO7tuesnxebO&oh=00_AYCn_FTI-B_4mLZ4SHnj7yaj9cbmziTqjSgdpcoGqvFlRA&oe=679D4B4D

 

Checked
Thu, 04/03/2025 - 17:46
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed