ஊர்ப்புதினம்

ரயில் ஊழியர்களுக்கு இலவச பயண அனுமதி சீட்டு

3 weeks 5 days ago

image

அனைத்து ரயில் ஊழியர்களுக்கும் தாம் வசிக்கும் பகுதிக்கும் பணியிடத்திற்கும் இடையில் பயன்படுத்த இலவச ரயில் பயண அனுமதி வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ஊழியர்கள் தொடர்ந்து பொதுமக்களால் விமர்சிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சகம், இந்நிலையை மாற்றும் நடவடிக்கையாக புதிய பயண அனுமதிச்சீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில், அனைத்து ரயில் ஊழியர்களையும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த ஊக்குவிப்பதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/197153

பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்

3 weeks 5 days ago

பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்
Vhg அக்டோபர் 26, 2024
1000364189.jpg

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஒவ்வொரு மாதமும் தமது கவன ஈர்ப்பை சர்வதேசத்துக்கு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸாரினால் தடை செய்யப்பட்டு போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அமலநாயகி தலைமையில் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

1000364188.jpg

 

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள்

தற்போது தேர்தல் காலம் என்ற நிலையில் மக்கள் ஒன்று கூடுவதையும் கூட்டம் போடுவதையும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்கள் செய்ய முடியாது என அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள் காந்தி பூங்கா வளாக பகுதியில் ஒவ்வொரு இடங்களில் தனித்து நின்று தனது கவன ஈர்ப்பை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1000364191.jpg
 
 

தமிழரசை நானா பிரித்தேன்.சுமத்திரன்

3 weeks 5 days ago

 

நெறியாளர் பார்த்துப் பல்லுப்படாமல் கேட்கும் கேள்விகளுக்கு சுமத்திரன் தனது சட்டத்தனமான பதில்களைக் கொடுத்து தன்னை நியாயப்படுத்துகிறார். ஆனால் இநதக் காணொளியின் கீழே உள்ள பின்னூட்டங்கள்  எதுவும சுமத்திரனுக்குத் சாதகமாக இல்லை. 

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?

3 weeks 5 days ago
election-6.jpg?resize=650,375&ssl=1 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?

நாடாளுமன்ற தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என்று, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும், அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://athavannews.com/2024/1405925

தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் - மனோ கணேசன்

3 weeks 5 days ago

image

தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் என   தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு  தீர்வாக முன் வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி கலந்துரையாடலை முன்னேடுப்போம் என்பதாகும்.

ஜனாதிபதி அநுரகுமாரவின்  இந்த யோசனையை நாம் வரவேற்கிறோம். அனுர ஆட்சிக்கு வந்த இந்த ஒரே மாதத்திற்கு உள்ளேயே  நாட்டின் அனைத்து சவால்களுக்கும் பதில் தரவேண்டும் என்ற குறுகிய அரசியலையும் நாம் செய்யவில்லை. புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்க பட வேண்டும் என நாம் எண்ணுகிறோம்.  

ஆனால், அதேவேளையில் புதிய பாராளுமன்றத்தில், இந்த உத்தேச புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சர்வகட்சி கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வெற்று காசோலை  தரவும் நாம் தயார் இல்லை.

புதிய பத்தாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்று உத்தேச தேசிய கலந்துரையாடலில் பங்கேற்று, நமது மக்களின் நியாயமான அபிலாசைகளை புதிய அரசியலமைப்பில் இடம் பெற செய்ய வேண்டும். இந்நோக்கில், தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும், வடகிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் பாராளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம். இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லாட்சியின் போது (2015-2018) நடந்த நல்ல பல விடயங்களில் ஒன்று, நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சமபல (Balanced)  தீர்வுகளை தேடும் புதிய அரசியலமைப்பு ஒன்றை கலந்துரையாடி உருவாக்கும் பணியாகும். அது ஒரு சர்வ கட்சி பணி.

2015 ஆம் ஆண்டு, சபாநாயகர் பாராளுமன்றத்தில் பெயர் குறிப்பிட்டு நியமித்த வழிகாட்டல் குழு (Steering Committee), புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கில், கலந்துரையாடி, வாத விவாதம் செய்து, குறைந்தபட்ச பொது உடன்பாடுகளில் கருத்தொற்றுமை கண்டு முன்னெடுத்தது. இடைக்கால அறிக்கையையும் சமர்பித்தது. இன்னும் பல துறைசார் உப குழுக்ளையும் தனக்கு உதவியாக நியமித்தது.

அந்த வழிகாட்டல் குழுவில் இலங்கையின் தேசிய இனங்களையும், அரசியல் சித்தாந்தங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் சர்வ கட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

வழிகாட்டல் குழுவுக்கு அன்றைய பிரதமர் ரணில் தலைமை தாங்கினார். ஜேவிபி சார்பில் இன்றைய ஜனாதிபதி அனுர, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான், மனோ கணேசன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் மறைந்த இரா. சம்பந்தன், சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிசாத் பதுர்தீன் மற்றும் தினேஷ் குணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க, சம்பிக்க ரணவக்க, டிலான் பெரேரா, ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகியோர் உட்பட இன்னும் பலர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

சிங்கள, ஈழத்தமிழ், முஸ்லிம், மலையக இலங்கை மக்கள் சார்பாக விரிவான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கபட்டு, கலந்துரையாடி மிக சிறப்பாக நடந்த இந்த பணியை, அதன் இடைகால அறிக்கை வந்ததும், திட்டமிட்டு அரசியல் நோக்கில், மகிந்த ராஜபக்ச தலைமையியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை குழப்பியது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை சார்பில் அன்று வழிகாட்டல் குழுவில் இடம் பெற்றவர்கள், கடந்த மாதம் வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தன மற்றும் பிரபல அமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்க ஆகியோராகும்.  

வழிகாட்டல் குழுவு செயற்பாட்டை குழப்ப, இந்த இனவாத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை கும்பல் பயன்படுத்திய கோஷம் “பிரபாகரன் ஆயுத பலத்தால், பெற முடியாததை, சம்பந்தன் பேச்சு வார்த்தையால் பெற முயல்கிறார்” என்பதாகும். இந்த கும்பலுக்கு அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால, இரகசிய ஆதரவு வழங்கி, 52 நாள் திருட்டு அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது வரை அந்த அலங்கோல வரலாறு தொடர்ந்தது. அத்துடன் அந்த புதிய அரசியலமைப்பை எழுதும் “வழிகாட்டல் குழு” (Steering Committee), செயன்முறை இடை நின்றது.      

இன்று, இனவாதிகள் அரசியல் பரப்பில் கணிசமாக இல்லை. ஆகவே, நாம் அனைவரும் அன்று ஆரம்பித்த, புதிய அரசியலமைப்பை எழுதும் சர்வ கட்சி பணியை தொடர போவதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க அறிவித்துள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும், அரசியல் யாப்பை உருவாக்கும் உரையாடலில் ஆளுமையும், அனுபவமும் உள்ள சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் பங்கு பெற வேண்டுமா?  இல்லையா? என்பதை தமிழ் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும்.  

இந்த நோக்கில், கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரேலியா, பதுளை மாவட்டங்களில் போட்டியிடும்  தமிழ் முற்போக்கு கூட்டணியும், யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் பாராளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம். இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/197147

கிளிநொச்சி அக்கராயன் காட்டுக்குள் எறியப்பட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான விதைப்பந்துகள்!

3 weeks 5 days ago
image

2024ஆம் ஆண்டுக்கான விதைப்பந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான நிகழ்வாக நேற்று (25) காலை 8.30 மணியளவில் அக்கராயனில் ஒதுக்கப்பட்ட காட்டினுள் விதைப்பந்துகள் வீசுப்பட்டன. 

ஓராயம் அமைப்பின் அனுசரணையுடன் கிளி/ விவேகானந்த வித்தியாலயத்தினால் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.

IMG-20241025-WA0140.jpg

இதன்போது விவேகானந்த வித்தியாலய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதைப்பந்துகள் அக்கராயன் காட்டுக்குள் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகாரிகளாலும் எறியப்பட்டன.

IMG-20241025-WA0095.jpg

இன்று உலகம் எதிர்கொள்கின்ற மிக ஆபத்தான பிரச்சினையாக காலநிலை மாற்றம் காணப்படுகிறது. 

காடு அழிப்பு உட்பட எமது சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்களின் விளைவாக காலநிலை மாற்றம் நிலவுகிறது. 

எனவே, எமது சூழலை பாதுகாத்து, அடுத்த சந்ததியினருக்கு கொடுப்பதற்காகவும் மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

விதைப்பந்து வீசும் செயற்பாட்டில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர்  ஏ.எம்.றியாஸ் அகமட், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் சி. லதீஸ்குமார், வன பாதுகாப்பு திணைக்களத்தின் வன விரிவாக்க உத்தியோகத்தர்,  கிளிநொச்சி மகா வித்தியாலய பிரதி அதிபர் அரவிந்தன், சூழலியலாளரும்  இலங்கை வனவிலங்குகள் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் வட மாகாண பிரதிநிதியுமான ம.சசிகரன், ஊடகவியலாளரும்  சூழலியலாளருமான மு. தமிழ்ச்செல்வன், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளி/ திருவையாறு மகா வித்தியாலயம் மற்றும் கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் இணைந்துகொண்டனர்.

IMG-20241025-WA0133.jpg

IMG-20241025-WA0127.jpg

IMG-20241025-WA0075.jpg

IMG-20241025-WA0072__1_.jpg

IMG-20241025-WA0115.jpg

IMG-20241025-WA0118.jpg

IMG-20241025-WA0101.jpg

IMG-20241025-WA0060.jpg

https://www.virakesari.lk/article/197146

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்கள் குழுக்களாக மோதல்; ஒருவர் வைத்தியசாலையில்!

3 weeks 5 days ago

image

முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர்.

குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஒரு மாணவன் கைதுசெய்துள்ள நிலையில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த பாடசாலையின் பல்வேறுபட்ட  நிர்வாக நிதி மோசடிகள் தொடர்பில் ஏற்க்கனவே பல செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/197137

ரஷ்யர்கள், இஸ்ரேலியர்களை தேடுவதற்கு நடவடிக்கை

3 weeks 5 days ago

ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்து தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளைத் தேடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் மாத தொடக்கத்தில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால், தெற்கு கரையோரப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தெற்கு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள்.

இலங்கையின் தெற்கு கடலோரப் பகுதிக்கான சுற்றுலாப் பருவம் நவம்பரில் தொடங்கி மார்ச் மற்றும் ஏப்ரல் வரை நீடிக்கும். மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவின் நாட்டின் புகழ்பெற்ற கடற்கரைகளுக்கு வருகை தருவார்கள்.

இது குறித்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, “அவர்கள் வழக்கமாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை மற்றும் மே முதல் செப்டம்பர் வரை முறையே தெற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் சிறப்பு விஜயங்களை மேற்கொள்கின்றனர்.

“கிறிஸ்மஸ் விடுமுறைக்காக தென்பகுதிக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்துள்ளனர். இலங்கையின் விசா இல்லாத ஆறு நாடுகளில் ரஷ்யவும் உள்ளதாக தெரியவந்தது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் 30 நாட்கள் சுற்றுலா விசாவைப் பெறுவார்கள் அல்லது அவர்கள் ஆன்-அரைவல் விசா அல்லது எலக்ட்ரானிக் டிராவல் அங்கீகாரத்திற்கு (ETA) விண்ணப்பிக்கிறார்கள்.

“30 நாட்கள் சுற்றுலா விசா காலம் முடிந்தவுடன், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கின்றனர், அதே நேரத்தில் செல்லுபடியாகும் விசா இல்லாமல் கணிசமான தொகை இன்னும் நீண்டதாக இருக்கும்.

“திணைக்கள அதிகாரிகள் கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் அருகம்பை விரிகுடா உள்ளிட்ட கிழக்கு கரையோரப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால் இஸ்ரேலியர்கள் உட்பட அதிகமான சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்படவில்லை” என்று, அந்த அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், தென் பருவத்தில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா விசாவில் அதிக காலம் தங்கியிருப்பது மற்றும் வணிகம் செய்வது போன்ற விசா மீறல்களை அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். அத்தகைய பயணிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

https://thinakkural.lk/article/311172

கடுமையாக்கப்பட்டுள்ள சட்டம் – 5 வருடம் சிறை

3 weeks 5 days ago
1000090882.jpg?resize=585,328&ssl=1 கடுமையாக்கப்பட்டுள்ள சட்டம் – 5 வருடம் சிறை.

பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரசபையில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் பணிப்பாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோரின் குடும்பத் தகராறுகள் குழந்தைகளை கடுமையாகப் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1405868

வெளியானது ஜனாதிபதி தேர்தலுக்கான செலவின அறிக்கை – 19.9 கோடி செலவு செய்துள்ள மொட்டு கட்சி

3 weeks 5 days ago
 வெளியானது ஜனாதிபதி தேர்தலுக்கான செலவின அறிக்கை – 19.9 கோடி செலவு செய்துள்ள மொட்டு கட்சி வெளியானது ஜனாதிபதி தேர்தலுக்கான செலவின அறிக்கை – 19.9 கோடி செலவு செய்துள்ள மொட்டு கட்சி.

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  வாக்காளர் ஒருவருக்காக, வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவை செலவிட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.  இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவின கணக்கறிக்கை வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்காக 186 கோடியே 82 இலட்சத்து 98, 586 ரூபாய் செலவிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 பேர் உரிய செலவின அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் தமது செலவின அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 83 கோடியே 62 இலட்சத்து 58,524 ரூபாவை செலவு செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவும் தமது செலவறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஜேவிபி கட்சியின் வங்கி கணக்குகளில் பெறப்பட்ட நன்கொடைகள் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளார்களால் வழங்கப்பட்ட 52 கோடியே 79 இலட்சத்து 99,089 ரூபாய் 38 சதத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அவர் செலவிட்டுள்ளார்.

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளராக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிக செலவினத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துள்ளார்.

அவர், 99 கோடியே 3 இலட்சத்து 27,687 ரூபாய் 16 சதத்தை செலவிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எழுது பொருட்களுக்காக மாத்திரம் 20,000 ரூபாவை பயன்படுத்தியுள்ளதாக அவரது செலவறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலத்திரனியல், அச்சு ஊடக மற்றும் சமூக ஊடக பிரசார நடவடிக்கைகளுக்காக இரண்டு கோடியே 31 இலட்சத்து 44,987 ரூபாவை செலவிட்டுள்ளதுடன், 38 கோடியே 89 இலட்சத்து 39,000 ரூபாவை தேர்தலுக்காக செலவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொத்த வருமானம் 18.8 கோடி என்பதுடன், 19.9 கோடி ரூபாய் செலவினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரன், பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சரத் கீர்த்திரத்ன மற்றும் ஏனைய 10 கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது செலவறிக்கைகளை இதுவரையில் சமர்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1405865

 

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இன்று தேர்தல் சட்டங்களுக்கு அமைய செயற்படுங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு

3 weeks 6 days ago

(இராஜதுரை ஹஷான்)

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சை குழுக்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்து. எல்பிட்டிய தேர்தல் தொகுதியை அண்மித்த பகுதியில் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் பதவி காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நிறைவு செய்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கடந்த மாதம்  வெளியிட்டிருந்தார்.

பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடத்தி நிறைவு செய்ததன் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்தது.

8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட 2 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 8 அரசியல் கட்சிகளும்,1 சுயேட்சை குழுவும் மாத்திரமே குறித்த காலப்பகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இதற்கமைய தபால்மூல வாக்களிப்பு இம்மாதம் 14 மற்றும் 18 ஆகிய தினங்களில் இடம்பெற்றது.

2024.09.21 ஆம் திகதியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளரின் இடது கை சிறு விரலில் தோதான (உரிய) குறியீடு இடப்பட்டுள்ளமையால்இ உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53 அ(3) ஆம்  பிரிவினால் வாக்காளரை தோதான குறியீட்டினால் அடையாளமிடுதல் தொடர்பில் தோற்றம் பெறக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு  இன்று

நடைப்பெறவுள்ள காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் போது வாக்காளரின் இடது கை பெருவிரலில் தோதான (உரிய) அடையாளமிடப்படும்.

வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில் உள்ளுர் அதிகார சபைகள் தெர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3), அ,ஆ, (1),(2), (3) ஆம் பிரிவுகளுக்கு அமைய அவரது வலது கையில் உள்ள வேறேதேனுமொரு விரல் உரிய  குறியீட்டினால் அடையாளமிடப்படும் .

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இன்று தேர்தல் சட்டங்களுக்கு அமைய செயற்படுங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு | Virakesari.lk

ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

3 weeks 6 days ago

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான  டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது,  அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பணியாற்றிய கடந்த காலப் பகுதியில், அடையாளம் கண்டு சிபார்சு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை தொடர்வது, மற்றும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருத்த திட்டங்களை ஆரம்பிப்பது  வேண்டியவற்றுள், முன்னுரிமைப்படுத்தப்பட்ட  38 விடயங்கள்  தொடர்பாக வெள்ளிக்கிழமை (25) டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட குறித்த விடயங்கள், ஜனாதிபதியினால் சாதகமாக பரிசீலிக்கப்பட்ட நிலையில், சந்திப்பு சுமூகமாக நிறைவடைந்தது.

இதன்போது, நடைபெவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கணிசமான ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் வரவேண்டும் என்ற வாழ்த்துக்களை  ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/197128

உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு - அமெரிக்கத் தூதர் ஜுலி சங்

3 weeks 6 days ago

image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற குடும்பங்களுக்கு, அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். 

வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் வெள்ளிக்கிழமை (25) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து, அவர்களது நிலைப்பாடுகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இச்சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனான சந்திப்பை அடுத்து, அவர்களது கதைகளால் தான் மிகுந்த துயருற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவர்களது கதைகளைப் போலவே வட, கிழக்கு மாகாணங்களிலும், தெற்கிலும் தான் சந்தித்து, கேட்டறிந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் கதைகள், காணாமல்போன தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் உண்மை மற்றும் நீதிக்காகப் போராடிவருகின்ற தரப்பினரின் பெருந்துயரை வெளிக்காண்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சகல குடும்பங்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/197126

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு; ஒருவர் கைது

3 weeks 6 days ago

image

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வெள்ளிக்கிழமை (25) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2024-10-25_at_3.52.04_PM_

குறித்த  யானை அண்மைக்காலமாக பரப்புக் கடன் தான் பகுதியில் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாய காணிகளில் சுற்றித்திரிந்த தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

WhatsApp_Image_2024-10-25_at_3.52.04_PM_

இந்த நிலையில் குறித்த யானை வியாழக்கிழமை (24)  இரவு உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யானை இறந்த இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த யானை சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில்  சிக்குண்டு   இறந்திருப்பதாக   தெரிவித்தனர்.

இறப்பு சம்பவம் தொடர்பில் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

https://www.virakesari.lk/article/197127

கிழக்கு மாகாண ஆளுநர் - திருகோணமலை உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் சந்திப்பு

3 weeks 6 days ago

image

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (25) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர். எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கவும், கழிவுகளை பிரித்து சேகரித்து கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் செயளாலர்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டார். 

ஒவ்வொரு உள்ளுராட்சி சபையும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

WhatsApp_Image_2024-10-25_at_14.50.08__1

WhatsApp_Image_2024-10-25_at_14.50.07__2

WhatsApp_Image_2024-10-25_at_14.50.08.jp

https://www.virakesari.lk/article/197100

சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை

3 weeks 6 days ago

சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தன் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தனின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்துள.

அவர் இறப்பதற்கு முன்னர் பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவரின் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளோம் என, அவரது மகள் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த பின்னரும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்தும் வாழும் வாய்ப்பு சம்பந்தனுக்கு கிடைத்தது.  

அது நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.

சம்பந்தன் கடந்த ஜூலை 1ஆம் தேதி காலமானார்.  அவர் காலமாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் அவரது குடும்ப உறுப்பினர்களிடமே உள்ளது.

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் இரா.சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது.

இதற்கிடையில், இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சம்பந்தன் தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்த அமைச்சரவைப் பத்திரத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் தண்ணீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கமே செலுத்துவதுடன், வீட்டைப் பராமரிக்கும் தொழிலாளர்களின் சம்பளமும் அரசாங்கமே செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது். AN

 

Tamilmirror Online || சம்பந்தனின் வாசஸ்தலத்தை ஒப்படைக்க நடவடிக்கை

என்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் - பா.அரியநேத்திரன்

3 weeks 6 days ago

என்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி பொது வேட்பாளாராக போட்டியிட்டவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

நான் கட்சியில் இருந்து இதுவரை நீங்கப்படவில்லை நான் பொது வேட்பாளராக போட்டியிட்ட காரணத்தால் ஒரு விளக்கம் கூறுமாறு  கடிதம் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் தன்னை தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துவரும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இவ்விடம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்.

நான் கட்சியில் இருந்து இதுவரை  நீங்கப்படவில்லை நான் பொது வேட்பாளராக போட்டியிட்ட காரணத்தால்  ஒரு விளக்கம் கூறுமாறு  கடிதம் மாத்திரமே அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிரகாரம்  அதற்கான பதிலை நான் அனுப்பி வைத்துள்ளேன் இவ்வளவுதான்  நடந்து முடிந்திருக்கின்றது. 

நான் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்காக  நான்  இன்னும் செயற்பட்டு கொண்டிருக்கின்றேன். என்னை மத்திய குழு தீர்மானத்தின்படி தமிழரசுக்கட்சி நிருவாக சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்கின்ற தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.  நான் அதனையேற்று அக் கூட்டங்கள் எதிலும்  கலந்து கொள்ளவில்லை. 

நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் வெற்றிக்காக வேட்பாளர்களுடன் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றேன். அது  என்னுடைய தனி மனித சுதந்திரம் அதனை எவரும் தடைசெய்ய முடியாது.

கட்சியை விட்டு விலக்குவதாயின் யாப்பு விதிமுறைகளின்படி  பல நடைமுறைகள் இருக்கின்றது இந் நிலையில் யாப்பு விதிமுறையினை அறியாதவர்கள் மத்திய குழுவில் இல்லாதவர்கள் என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர் என அவர் இதன் போது தெரித்தார்.

என்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் - பா.அரியநேத்திரன் | Virakesari.lk

இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா

3 weeks 6 days ago

இலங்கைக்கு  Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா  இலவசமாக வழங்கியுள்ளது.

இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும்.

அவுஸ்திரேலியா இந்த விமானத்தை இலங்கைக்கு வழங்கியமை, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை வலியுறுத்துவதோடு, மனித கடத்தலை தடுப்பதற்கும்  பிராந்திய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் கூட்டு அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

 

c55aafe7-469a-4ebf-aaa4-7381baae6aa1.jpg

 

இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா | Virakesari.lk

சிங்கள பௌத்த மனோநிலையையே அநுர அரசாங்கமும் பின்பற்றுகின்றது ; சிறீதரன் தெரிவிப்பு!

3 weeks 6 days ago
25 Oct, 2024 | 10:35 AM
image

 

மாற்றத்தை விரும்பிய மக்களின் ஆணையால் இலங்கைத் தீவில் ஆட்சி மாறியிருக்கிறதே தவிர, அதிகாரபீடங்களின் செயல்நோக்கும், மனோநிலையும் சிங்கள வல்லாதிக்கத்தின் வெளிப்பாடாகவே இன்றும் தொடர்கிறது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.        

பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறீதரன், நேற்று வியாழக்கிழமை (24) கிளிநொச்சி - கண்ணகிநகர் கிராமத்தில் தமது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அவர் மேலும் கூறியதாவது,  

காலம்காலமாக இந்த நாட்டின் அதிகாரபீடங்களும், கொள்கைவகுப்பாளர்களும் எத்தகையதோர் ஆதிக்க மனோநிலையுள் சிக்குண்டிருந்தார்களோ, அதே மனோநிலையில்தான் அநுர அரசின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன.  

இன்றையதினம்  தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ். மாநகரசபையின் மேனாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியதாகும்.  

அதேபோல், இலங்கையின் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி இதுவரைகாலமும் அரச ஆவணங்களில் இரண்டாம் மொழியாக பிரயோகிக்கப்பட்டுவந்த நிலையில், புதிய கடவுச்சீட்டுகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமையும், சனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்படும் கடிதங்கள் தனிச்சிங்கள மொழியில் அமைந்திருப்பதும் இந்த நாட்டின் மொழிக்கொள்கையின் தளம்பலையே காட்டுகிறது.  

இத்தகைய சம்பவங்களும் , திட்டமிட்ட நகர்வுகளும் "இந்தநாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதே தவிர தமிழினத்தின் தலைவிதி ஒருபோதும் மாறப்போவதில்லை" என்ற அபாயச் செய்தியின் அறிவிப்புகளாகவே அமைந்துள்ளன.   

இத்தகைய யதார்த்தப் புறநிலைகளை புரிந்துகொண்டு, இந்தத் தேர்தல் களத்தில் பெருந்தேசியவாத கட்சிகளை முழுமையாக நிராகரித்து, இனத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் காலக்கடமை எமது மக்களின் கைகளிலேயே உள்ளது என்றார்.

சிங்கள பௌத்த மனோநிலையையே அநுர அரசாங்கமும் பின்பற்றுகின்றது ; சிறீதரன் தெரிவிப்பு! | Virakesari.lk

சபையின் பெயரை பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவிப்பு

3 weeks 6 days ago

கட்சி அரசியலில் ஈடுபடும் ஆலிம்கள் தேர்தல் பிரசாரங்களின்போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பயன்படுத்துவது ஜம்இய்யாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது; பிழையானது என்பதுடன் உலமா சபையின் பெயரை எந்தக் கட்டத்திலும் எந்த நிலையிலும் தங்களது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. 

இன்றையதினம் (25) உலமா சபை வெளியிட்ட ஊடகச் செய்தியினூடாகவே இவ்வாறு அறிவித்துள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட அரசியல் சார்பற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபையாகும் என்பதுடன் இதில் எமது நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆலிம்கள் அங்கத்தவர்களாக உள்ளனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் அங்கத்துவர்கள் எவராவது, கட்சி அரசியலில் ஈடுபடுவார்களாயின் அது அவர்களது ஜனநாயக உரிமை மற்றும் தனிப்பட்ட விருப்பின் அடிப்படையில் அமைந்ததே தவிர, அது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதித்துவமாக கணிக்கப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருகிறோம்.

அவ்வாறு கட்சி அரசியலில் ஈடுபடும் ஆலிம்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரை பயன்படுத்துவது ஜம்இய்யாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதனால் அவ்வாறு பயன்படுத்தி பிரச்சாரங்களைச் செய்வது பிழையான செயலும் கண்டிக்கத்தக்க செயலுமாகும் எனத் தெரிவிப்பதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை எந்தக் கட்டத்திலும் எந்த நிலையிலும் தங்களது பிரச்சாரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என கண்டிப்புடன் அறிவிக்கின்றோம்.

அத்துடன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் ஏனையோரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பயன்படுத்தி பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று வினயமாக வேண்டிக்கொள்கின்றோம்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகம் மற்றும் மாவட்ட பிரதேசக் கிளைகள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அனுசரனை வழங்குவதில்லை என்பதை மிக உறுதியுடன் அறிவித்துக்கொள்கின்றோம் என்றுள்ளது. 

சபையின் பெயரை பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவிப்பு   | Virakesari.lk

Checked
Thu, 11/21/2024 - 23:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr