உலக நடப்பு

இஸ்ரேலிய பிரதமர் தனது அரசியல் எதிர்காலத்திற்காக யுத்தத்தை முன்னெடுக்கின்றார் - இஸ்ரேலில் பெரும் ஆர்ப்பாட்டங்கள்

1 month 2 weeks ago
இஸ்ரேலிய பிரதமர் தனது அரசியல் எதிர்காலத்திற்காக யுத்தத்தை முன்னெடுக்கின்றார் - ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பு - இஸ்ரேலில் பெரும் ஆர்ப்பாட்டங்கள்

Published By: RAJEEBAN   06 OCT, 2024 | 12:45 PM

image

ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு ஒரு வருடமாகின்ற நிலையில்  ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலின் பெஞ்சமின் நெட்டன்யாகு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காசாவில் தொடர்ந்தும் சிக்குண்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

hostage_is_pro1.jpg

இஸ்ரேலிய தலைநகர் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள பணயக்கைதிகளின் உறவினர்கள்  பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கு மேலும் தீவிர நடவடிக்கைகள் அவசியம் என மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இஸ்ரேலின் கேசரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தின் முன்னாலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பெஞ்சமின் நெட்டன்யாகு காரணமாகவே பணயக்கைதிகள் இன்னமும் காசாவில் சிக்குண்டுள்ளனர் என காசாவில் சிக்குண்டுள்ள மட்டன் என்பவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

பெஞ்சமின் நெட்டன்யாகு பணயக்கைதிகளை விடுதலை செய்யவிரும்பவில்லை வடக்கில் யுத்தம் முடிவிற்கு வந்தாலும் தெற்கில் யுத்தம் தொடர்வதை அவர் விரும்புகின்றார், என  அந்த தாயார்  தெரிவித்துள்ளார்.

லெபனானில் இடம்பெறுகின்ற மோதல்களையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு அரசியல் ரீதியில் உதவுகின்றது, அவர் ஆட்சியிலிருப்பதை உறுதி செய்கின்றது என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பணயக்கைதியாக சிக்குண்டுள்ள இட்ஜிக் என்பவரின் சகோதரர் இஸ்ரேலிய பிரதமர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

பணயக்கைதிகளாக இஸ்ரேலியர்கள் பிடிக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது, என தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவின் தனிப்பட்ட அரசியல் உயிர்வாழ்தலிற்கான யுத்தத்தில் இஸ்ரேலியர்கள் பயணக்கைதிகளாக சிக்குப்பட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195607

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்: மேக்ரானின் அதிரடி நடவடிக்கை!

1 month 2 weeks ago

காஸா (Gaza) போரில் பயன்படுத்தப்படும் ஆயுத விநியோகத்தை பிரான்ஸ் (France) நிறுத்துவதாகவும், இனி ஆயுதங்களை இஸ்ரேலுக்கு (Israel) விநியோகம் செய்வதில்லை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

மேலும், காஸா மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆயுத விற்பனை முன்னெடுக்கவில்லை என்றும் மேக்ரான் (Emmanuel Macron) அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

போர் தற்போதும் தொடரும் நிலையில் காஸாவில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை இரத்து செய்யாததை அடுத்து மனித உரிமை அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை

ஆனால் இதுவரை இஸ்ரேலுக்கு வெறும் உதிரி பாகங்கள் மட்டுமே பிரான்ஸ் ஏற்றுமதி செய்து வந்துள்ளதாகவும், 2022ல் 15 மில்லியன் யூரோ தொகைக்கு மட்டும் உதிரி பாகங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாகவும் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு வலியுறுத்தி வந்துள்ளார்.

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்: மேக்ரானின் அதிரடி நடவடிக்கை | Macron Urges Halt Deliveries Weapons Used In Gaza

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் எதுவும் பிரான்ஸ் வழங்கவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் உதிரி பாகங்கள் விற்பனையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரான்ஸில் வலுப்பெற்றுள்ளது.

கடந்த மாதம் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை உரிமங்களில் சிலவற்றை பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

ஜனாதிபதி மேக்ரான்

இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடந்த வாரம், இஸ்ரேலுக்கான புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களுக்கு ஜேர்மனி இடைநிறுத்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்: மேக்ரானின் அதிரடி நடவடிக்கை | Macron Urges Halt Deliveries Weapons Used In Gaza

காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் தற்போது ஹிஸ்புல்லா படைகள் மீது போர் தொடுக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் ஆயுத ஏற்றுமதி தடை குறித்து உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/macron-urges-halt-deliveries-weapons-used-in-gaza-1728153076

இஸ்ரேல் - இரான்: மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போர் மூளும் ஆபத்தா? 6 முக்கியக் கேள்விகள்

1 month 2 weeks ago
இஸ்ரேல், இரான், லெபனான்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பைத் துவங்கியது. சிறிது நேரம் கழித்து, இரான் இஸ்ரேலை நோக்கி 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது.

காஸாவில் போர் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் ஒரு முழுமையான பிராந்திய மோதல் ஏற்படும் என்ற அச்சம் பரவலாக உள்ளது.

அதிகரிக்கும் இந்த அச்சுறுத்தல் எவ்வளவு பெரிய ஆபத்து? மோதல் ஏன் அதிகரித்தது? அடுத்து என்ன நடக்கலாம்?

இவை குறித்த பகுப்பாய்வைப் பகிர்ந்து கொள்ளுமாறு ‘பிபிசி இன்டெப்த் (BBC InDepth)’ பிரிவுக்காகப் பல நிபுணர்களிடம் கேட்டோம்.

அவர்களது கருத்துகள் இங்கே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

லெபனானில் இஸ்ரேலின் நீண்டகாலத் திட்டம் என்ன?

இஸ்ரேலின் நோக்கம் முதலில், ஹெஸ்பொலாவை வலுவிழக்கச் செய்வதாக இருந்தது எனக் கூறும் லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்கத் துறைகளுக்கான பள்ளியின் (School of Oriental and African Studies) பேராசிரியர் லினா கதீப், "ஆனால் இப்போது, இஸ்ரேலின் வடக்குப் பகுதியைப் பாதுகாக்கும் வகையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதும், ஹெஸ்பொலாவை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்வதும் இஸ்ரேலின் இலக்குகளாக மாறிவிட்டதாகத் தெரிகிறது," என்கிறார்.

இஸ்ரேலின் இலக்கு இப்படி இருந்தாலும்கூட, “ஹெஸ்பொலாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்த முடிந்தாலும், இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலால் ஹெஸ்பொலாவை முற்றிலுமாக அழித்துவிட முடியாது,” என்கிறார் அவர்.

எழுத்தாளரும், ‘செஞ்சுரி இண்டர்நேஷனல்’ ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினருமான டாலியா ஷிண்ட்லின் இஸ்ரேல் தனது பரப்பளவை விரிவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்.

முதலில் வடக்கு இஸ்ரேல் மக்களை இடம்பெயர வைத்த ஹெஸ்பொலாவின் தாக்குதலை எதிர்த்து, அந்தப் பிரச்னையைச் சரி செய்வதன் மூலம், அப்பகுதி மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த இஸ்ரேல் நினைத்தது என்கிறார் அவர்.

ஆனால் “இப்போது இஸ்ரேல் அரசு மதக் குழுக்களையும் அங்கு அனுப்புகிறது. எனவே அதன் எல்லையை விரிவுபடுத்துவதும் நோக்கமாகக்கூட இது இருக்கலாம்,” என்கிறார்.

சிரியா மற்றும் இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் எஸ் ஃபோர்ட், ஹெஸ்பொலா மீது லெபனான் அரசு தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புவதாகச் சொல்கிறார்.

ஆனால், இது மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

“இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக தரைவழிப் போரை 1982இல் முன்னெடுத்தது. பாலத்தீனிய விடுதலை அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போர், லெபனான் எல்லையில் வசிக்கும் இஸ்ரேலிய குடிமக்களை நீண்டகாலத்திற்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

ஆகவே தற்போதைக்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமே இஸ்ரேலின் நோக்கமாக இருந்தால், வடக்கு இஸ்ரேலில் இடம்பெயர்ந்த 60,000 மக்கள் வீடு திரும்ப வாய்ப்பு உண்டு,” என்று அறிவுறுத்துஅறிவுறுத்துகிறார்.

 
மத்தியக் கிழக்கின் வரைபடம் மாறுகிறதா?
இஸ்ரேல், இரான், லெபனான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அப்படி உடனடியாகச் சொல்லிவிட முடியாது என்றாலும், ஆனால் கண்டிப்பாக மத்தியக் கிழக்கின் அரசியல் அதிகாரச் சமன்பாடுகள் மாறி வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மத்தியக் கிழக்கில் இரானின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் மத்தியக் கிழக்கின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் லினா கதீப்.

ஆனால் அது முழுதாக நடப்பதற்கு நெடுங்காலம் ஆகும் என்கிறார் அவர்.

இதே கருத்தைப் பிரதிபலிக்கிறார் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஆலோசகர் பிலால் சாப். “மத்தியக் கிழக்கில் இரானின் கூட்டணி நாடுகள் வலுவிழந்து வருகின்றன. இஸ்ரேலுக்கு ராஜ்ஜீயரீதியாகச் சில ஆதாயங்கள் கிடைத்துள்ளன. இவை மூலோபாய ஆதாயங்களாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்தே, இஸ்ரேல்-இரானின் சமநிலை தகர்ந்து இஸ்ரேலின் கை ஓங்கி வருவதாக மத்தியக் கிழக்கு இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பால் சலேம் தெரிவித்தார்.

 
இரான் அணு ஆயுதம் உருவாக்குமா?
இஸ்ரேல், இரான், லெபனான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அயதுல்லா அலி கமேனியை பொறுத்தவரை, இஸ்ரேலை அழிக்கும் திட்டம் மிகவும் முக்கியமானது.

இதற்கு பதிலளித்த எழுத்தாளரும், பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியருமான அராஷ் அஸிஸி, ஹமாஸ், ஹெஸ்பொலா ஆகிய தடுப்பான்களை இழந்த இரான், அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பும், என்கிறார்.

“ஒருவேளை இரான் இதைச் செய்தால், அதன்மூலம் அந்நாடு மிகவும் ஆபத்தான பகுதிக்குள் நுழைகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இஸ்ரேலுடன் ஒப்பிட்டால் இரானின் ராணுவ திறன்கள் பலவீனமானது. இதன் காரணமாக, இரான் ஆயுதக்குழுக்களைச் சார்ந்திருப்பது என்ற வியூகத்தைப் பின்பற்றி வருகிறது. இருப்பினும், இந்த அணுகுமுறை மிகச் சிறிய பயனையே அளித்துள்ளது," என்று விளக்குகிறார் அஸிஸி.

இஸ்ரேல் எதிர்ப்பு உணர்வு இரான் ஆட்சியின் மையமாக இருப்பதால், இரானின் அணுசக்திக் கனவுகள் இஸ்ரேலுக்கு கவலை அளிப்பதாகக் கூறுகிறார் அஸிஸி.

அதற்குக் காரணம், “அயதுல்லா அலி கமேனியை பொறுத்தவரை, இஸ்ரேலை அழிக்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. அவர் முன்னெடுத்துச் செல்ல முடிந்த ஒரே திட்டம் இதுதான். இஸ்ரேலுக்கு எதிரான திட்டம்தான், இஸ்லாமிய குடியரசு தலைமை வகிக்கும் ஒரே விஷயம். உலகில் இஸ்ரேலை தாக்கும் ஒரே நாடு இரான்தான்,” என்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், "தனது அணுசக்தி கட்டமைப்புகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல் அபாயம் இருப்பதை உணர்ந்துள்ள இரான், அவற்றைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்யும்" என்கிறார் லினா கதீப்.

 
மத்திய கிழக்கில் மோதல் பரவினால், காஸாவில் இஸ்ரேலின் நிலை கடினமாகுமா?
இஸ்ரேல், இரான், லெபனான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மோதல் பரவினால் இஸ்ரேலிய படைகள் பரவலாகப் பிரிய வேண்டிய நிலை வரும்

காஸாவில் கடந்த ஓர் ஆண்டாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே பெருமளவிலான உயிரிழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், "காஸாவில் இஸ்ரேலின் நோக்கங்கள் நிறிவேறுவதில் உள்ள மிகப்பெரிய பிரச்னை, ஹமாஸுக்கு மாற்றாக இஸ்ரேலிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான்," என்கிறார் டாலியா ஷிண்ட்லின்.

“[மோதல் பரவினால்] இஸ்ரேலிய படைகள் பரவலாகப் பிரிய வேண்டிய நிலை வரும். ஆனால் அதுவல்ல பிரச்னை. பாலத்தீன சுயநிர்ணய உரிமைக்கு வழிவகுக்கும், சர்வதேச மற்றும் பாலத்தீன் வரவேற்பைப் பெறும் அரசாங்கக் கட்டமைப்பிற்கான அரசியல் உத்தி இஸ்ரேலுக்கு தேவை. அது இல்லாமல் போனால், இஸ்ரேலுக்கு ஓர் அச்சுறுத்தலாகவும், இஸ்ரேல் ராணுவத்தைச் சோர்வடையைச் செய்வதாகவுமே காஸா இருக்கும்,” என்கிறார் அவர்.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள், மத்தியக் கிழக்கு மக்களுக்கு இஸ்ரேல் மீது கோபத்தை அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் பேராசிரியர் லினா கதீப். “மத்தியக் கிழக்கின் மக்கள் பாலத்தீனம் மீது கரிசனம் கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். இது அந்தப் பகுதியில் அமைதி ஏற்படுவதைக் கடினமாக்குகிறது,” என்கிறார்.

 
புதிய அமெரிக்க அதிபர் இஸ்ரேலை கட்டுப்படுத்துவாரா?
இஸ்ரேல், இரான், லெபனான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதில், ஜோ பைடனைவிட கமலா ஹாரிஸுக்கு நீண்ட கால நிர்பந்தங்கள் குறைவு என்கிறார் டாலியா ஷிண்ட்லின்.

எந்தவொரு அமெரிக்க அதிபரும் விரும்பினால் பெஞ்சமின் நெதன்யாகு மீது செல்வாக்கு செலுத்த முடியும், என்கிறார் டாலியா ஷிண்ட்லின்.

“ஆனால் அது ஆதாயமானது என்று யாரும் நினைக்கவில்லை. இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதில், ஜோ பைடனைவிட கமலா ஹாரிஸுக்கு நீண்ட கால நிர்பந்தங்கள் குறைவே. ஆனால் அவரது கட்சிக்குள் இதுகுறித்து ஒரு பிளவு உள்ளது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு உள்ளது, மறுபுறம், ஒரு சிலர் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத் தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளனர்,” என்கிறார் அவர்.

“ஆனால் எப்படியாவது இஸ்ரேலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஜனநாயகக் குரல்கள் கணிசமாக வளர்ந்து வருகின்றன. டிரம்ப் பெரிதாகப் பேசுவார், ஆனால் அமெரிக்கா போர்களுக்குள் இழுக்கப்படுவதை அவர் விரும்பமாட்டார்,” என்கிறார் அவர்.

சிரியா மற்றும் இராக்கிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் எஸ் ஃபோர்ட், "பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 84,000 கோடி ரூபாய்) வழங்கும் எந்தவொரு அமெரிக்க நிர்வாகமும், அதன்மீது ஆதிக்கம் செலுத்தும்," என்கிறார்.

ஆனால், "ஆனால், அதன் விளைவாக உள்நாட்டில் ஏற்படும் அரசியல் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு அமெரிக்க அரசியல்வாதி அதிகாரப் பதவியில் இருக்கிறாரா என்பதுதான் கேள்வி. ஆனால், ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் இப்போதைக்கு அப்படி ஒருவர் எந்தக் கட்சியிலும் இல்லை,” என்கிறார் அவர்.

மத்தியக் கிழக்கில் போர் பெரிதாவதைத் தடுக்க என்ன வழி?
இஸ்ரேல், இரான், லெபனான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் படைகளைப் பின்வாங்கச் செய்து மனிதாபிமான உதவிகளை அனுப்புவது ஒரு தீர்வாக இருக்கும் என்கிறார் ராபர்ட் எஸ் ஃபோர்ட்.

முன்னாள் மூத்த எஃப்.பி.ஐ உறுப்பினர் ஜாவேத் அலி, போர் தடுக்கப்படும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்கிறார்.

“இஸ்ரேல் ராணுவமும் சரி, அரசியல்ரீதியாக நெதன்யாகுவின் போர்க்குழுவும் சரி, தங்கள் கை ஓங்கியிருப்பதாக நினைக்கிறார்கள். போர்ச்சூழலில் ஒரு தரப்பு தனது கை ஓங்கியிருப்பதாக நினைக்கும் சூழலில், போர் தடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஏனெனில், தங்கள் கை ஓங்கியிருக்கும்போது எதிரி மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முடியும் என்று நினைப்பார்கள்,” என்கிறார் அவர்.

ராபர்ட் எஸ் ஃபோர்ட், இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளது என்கிறார்.

“முதலாவது, இஸ்ரேல் காஸாவில் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வது. ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களில் படைகளைப் பின்வாங்கச் செய்து மனிதாபிமான உதவிகளை அனுப்புவது. இஸ்ரேலியர்களோ, அமெரிக்கர்களோ அல்ல, பாலத்தீனர்கள் தேர்ந்தெடுக்கும் புதிய பாலத்தீன அதிகாரத்தை அனுமதிப்பது.

இரண்டாவதாக, லெபனானில் ஒரு போர்நிறுத்தம். இஸ்ரேல் தனது விமானத் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் படையெடுப்புகளை நிறுத்த வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா ராக்கெட்/ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்,” என்கிறார் ராபர்ட் எஸ் ஃபோர்ட்.

இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு

1 month 2 weeks ago

இஸ்ரேல் (israel) வேரோடு பிடுங்கப்படும், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Sayyid Ali Hosseini Khamenei) எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல் - ஈரான் (iran) இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் அயதுல்லா

கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல் நாட்டை எச்சரிக்கும் வகையில் பேசினார்.

இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு | Israil Iran War Tension In Middle East

பாலஸ்தீன மற்றும் லெபனான் இயக்கத்திற்கான ஈரான் ஆதரவை உறுதி செய்தார். ஈரான் நாட்டின் எதிரிகளை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை நியாயப்படுத்தினார்.

இஸ்ரேலை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் என்றே குறிப்பிட்ட கமேனி, தங்கள் நாட்டு மக்களைக் காக்கத் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கான ஆதரவு தொடரும் என்ற அவர், ஈரானும் அதன் நட்பு நாடுகளும் சேர்ந்து அதன் எதிரிகளை வீழ்த்தும் எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.

ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி தெரிவித்துள்ளார்.

போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும்

எமது படையினர் சில இரவுகளுக்கு முன்னர் சிறப்பாக செயற்பட்ட நடவடிக்கை முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் முறையானதாகும்.

இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு | Israil Iran War Tension In Middle East

இஸ்ரேலின் உதவியுடன் இந்த பிராந்தியத்தில் உள்ள வளங்களை அமெரிக்கா தன்வசப்படுத்த முயல்கிறது. இஸ்ரேலை அமெரிக்கா ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதே உண்மை.

தங்கள் ஏதோ பெரிய நாடாக இந்த யூத தேசம் நினைக்கிறது. ஆனால், உண்மையில் அந்த போலியான தேசம் வேரோடு பிடுங்கப்படும். நீண்ட காலம் தாங்காது. அது அமெரிக்கர்களின் ஆதரவினால் மட்டுமே உள்ளது” என்று மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தலைவர்கள் கொல்லப்பட்டாலும் கூட பிராந்தியத்தில் எதிர்ப்புப் போராட்டம் பின்வாங்காது என்று கமேனி வலியுறுத்தினார்.

https://ibctamil.com/article/israil-iran-war-tension-in-middle-east-1728118712

ஹெஸ்புல்லா அடுத்த தலைவருக்கு இஸ்ரேல் போட்ட ஸ்கெட்ச்! ரகசிய பாதையில் எஸ்கேப்?

1 month 2 weeks ago
ஹெஸ்புல்லா அடுத்த தலைவருக்கு இஸ்ரேல் போட்ட ஸ்கெட்ச்! ரகசிய பாதையில் எஸ்கேப்?
Israel attack

இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவரை குறி வைத்து இஸ்ரேல் குண்டுமழை பொழிந்துள்ளது.
 

 

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஹெஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேலை தாக்கியது. இதனால் இஸ்ரேல் பதிலடியாக லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பின் ஆக்கிரமிப்பு பகுதிகளை தாக்கத் தொடங்கியுள்ளது.

 

சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா (hassan nasrallah) கொல்லப்பட்டார். தொடர்ந்து அடுத்த ஹெஸ்புல்லா தலைவராக மாற வாய்ப்புள்ள நபர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவ்வாறாக சிரியாவில் இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் மருமகனை சமீபத்தில் இஸ்ரேல் படைகள் கொன்றன.

இந்நிலையில் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் உள்ள தாகியே பகுதியில் குண்டுமழை பொழிந்து தாக்கியுள்ளது இஸ்ரேல். ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவராக மாற வாய்ப்புள்ள ஹாசிம் சஃபிதின் (Hashem Safieddine) தாக்குதல் நடந்த இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பகுதியில் வெடிக்குண்டு தாக்குதலில் தப்பிக்கும் பங்கர் உள்ளதால் அது வழியாக அவர் தப்பியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஹாசிம் சஃபிதின் என்னவானார் என விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/sketch-of-israel-for-the-next-leader-of-hezbollah-escape-through-the-secret-passage-124100400025_1.html

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குங்கள் - அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு அழுத்தம்

1 month 2 weeks ago

ஈரானின் (Iran) அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

பிரச்சார கூட்டமொன்றில் நேற்று (04.10.2024) கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது இஸ்ரேல் குறிவைக்கும் சாத்தியம் தொடர்பில் கேள்வி எழுப்பினால், தமது பதில், கண்டிப்பாக தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதன் தாக்கம் குறித்து பின்னர் கவலை கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கான பதிலடி

எனினும், அப்படியான ஒரு தாக்குதலை முன்னெடுப்பது தவறான ஒரு செயல் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குங்கள் - அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு அழுத்தம் | Hitnuclearsites First Donaldtrump Big Warning Iran

சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான், இனி பதிலடி என்றால் அது உக்கிரமாக இருக்கும் என்றும் மிரட்டல் விடுத்தது. ஆனால், ஈரானுக்கான பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அத்துடன், ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதமாக அங்குள்ள எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க இதுவே சரியான தருணம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளதுடன் ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக தொடங்க இஸ்ரேல் அரசை அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/hitnuclearsites-first-donaldtrump-big-warning-iran-1728096721#google_vignette

ஏமனில் அமெரிக்கா போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமாக தாக்குதல்

1 month 2 weeks ago
ஏமனில் ஹூத்தி இலக்குகளை தாக்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் - என்ன நடந்தது?
ஏமனில் ஹூத்திகள் இலக்குகளை தாக்கிய அமெரிக்கா - என்ன நடந்தது?

பட மூலாதாரம்,DVIDS

படக்குறிப்பு, ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சி குழுவின் 15 இலக்குகளை தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், செபாஸ்டியன் அஷர் & மேக்ஸ் மட்ஸா
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 56 நிமிடங்களுக்கு முன்னர்

ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் 15 இலக்குகளைத் தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

“கடல்வழிப் பயண சுதந்திரத்தைப் பாதுகாக்கும்” நோக்கில், விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஏமன் தலைநகர் சானா உள்பட ஏமனின் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் முதல் செங்கடலில் ஹூத்தி குழு சுமார் 100 கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியது, இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. காஸாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக ஹூத்தி குழு தெரிவித்தது.

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட், இந்தத் தாக்குதல்கள் ஹூத்திகளின் ஆயுதக் கட்டமைப்புகள், தளங்கள் மற்றும் இதர உபகரணங்களைக் குறிவைத்து தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட நகரங்களுள் தலைநகர் சானாவும் ஒன்று என ஹூத்திகள் ஆதரவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த கால தாக்குதல்கள்

ஏமனில் கடந்த திங்கட்கிழமை எம்.க்யூ-9 எனும் அமெரிக்க தயாரிப்பு ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹூத்தி குழு தெரிவித்தது. அதை அமெரிக்க ராணுவமும் ஒப்புக்கொண்டது.

அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஹூத்தி குழு “சிக்கலான தாக்குதலை” மேற்கொண்டதாகவும் ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

ஏமனில் போரிடும் இரு தரப்புக்கும் இடையே சண்டை பெருமளவில் தணிந்ததில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் குண்டுவெடிப்புகளில் இருந்து சானா தலைநகருக்கு ஓய்வு கிடைத்திருந்தது.

 
கடந்த டிசம்பர் மாதம் ஹூத்தி படகுகள் மீது எதிர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா கடற்படை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் ஹூத்தி படகுகள் மீது எதிர்த் தாக்குதல் நடத்திய அமெரிக்கா கடற்படை

செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களுடன் கூடவே, ஹூத்திகள் இஸ்ரேல் மீது நேரடியாகப் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் டெல் அவிவ் நகரைத் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். கடந்த மாதம், இஸ்ரேல் மீது ஹூத்திகள் பல ஏவுகணைகளை வீசினர். அவற்றில் ஒன்று இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்தது.

அந்த இரண்டு தாக்குதலின்போதும் இஸ்ரேல் ஏமனில் உள்ள தளங்களைத் தாக்கி பதிலடி கொடுத்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹூத்திகளுக்கு எதிராக செங்கடலில் கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் 12 நாடுகள் ‘ஆபரேஷன் ப்ராஸ்பரிட்டி கார்டியன்’ (Operation Prosperity Guardian) எனும் கூட்டமைப்பைத் தொடங்கின.

மத்திய கிழக்கில் இரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாக ஹூத்தி குழு உள்ளது. லெபனானில் ஹெஸ்பொலா, காஸாவில் ஹமாஸ் ஆகியவையும் இந்த வலையமைப்பின் அங்கமாக உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஹாலிவுட்: உலகெங்கும் கொடிகட்டிப் பறந்த திரைத்துறையில் ஏற்பட்டுள்ள திடீர் முடக்கம்

1 month 2 weeks ago
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது.

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரீகன் மோரிஸ்
  • பதவி, பிபிசி செய்திகள், லாஸ் ஏஞ்சல்ஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹாலிவுட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களின் பொற்காலத்தில் இருந்தார் மைக்கேல் ஃபோர்டின்.

நடிகரும் வான்வழிக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளருமான, மைக்கேல் ஃபோர்டின் 2012ஆம் ஆண்டில் டிரோன்களை பறக்கச் செய்யும் தனது பொழுதுபோக்கை ஒரு லாபகரமான வணிகமாக மாற்றினார். அதே காலகட்டத்தில்தான் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது.

பல ஆண்டுக்காலமாக, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி போன்ற ஓடிடி தளங்களில் வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான நேர்த்தியான வான்வழிக் காட்சிகளை உருவாக்கி திரைத்துறையில் கொடி கட்டிப் பறந்து வந்தார்.

இப்போது அவர் மீண்டும் வீடற்றவராக மாறும் விளிம்பில் இருக்கிறார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஹண்டிங்டனில் கடல் ஓரமாக ஓர் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். தெற்கு கலிஃபோர்னியாவில் வசிக்க முடியாததால் அவர்கள் லாஸ் வேகாஸில் குடியேறினர். ஆனால் இப்போது அவர்கள் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டனர்.

"நாங்கள் ஒரு வீட்டை வாங்க சேமித்துக்கொண்டிருந்தோம். எங்களிடம் பணம் இருந்தது. நாங்கள் முறையான வழியில் வாழ்ந்து வந்தோம்."

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் உணவகத்திற்குச் சென்று 200 டாலர்கள் செலவழிப்பதைப் பற்றிக்கூட நான் கவலைப்பட்டதில்லை," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், "தான் இப்போது வெளியே சென்று மெக்டொனால்ஸில் 5 டாலர் மதிபுள்ள ஓர் உணவை வாங்கி உண்ணக் கவலைப்படுவதாக" கூறுகிறார் ஃபோர்டின்.

   

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திரைத்துறையில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹூலூ போன்ற புதிய ஓடிடி தளங்களுடன் போட்டியிட ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் போராடி வந்ததால், ஹாலிவுட்டின் வணிகம் வளர்ந்து வந்தது. ஆனால் மே 2023ஆம் ஆண்டு ஹாலிவுட்டின் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கியதில் இருந்து இந்த வளர்ச்சி நின்றுவிட்டது.

இந்த வேலை நிறுத்தங்கள் பல மாதங்கள் நீடித்தன. 1960-களுக்குப் பிறகு முதல் முறையாக எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் இருவரும் இணைந்து இதில் ஈடுபட்டது ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்புகளைத் திறம்பட நிறுத்தியது. ஆனால் இந்த வேலைநிறுத்தங்கள் முடிவடைந்த ஓராண்டில், மீண்டும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்த்த நிலையில் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு முடங்கியுள்ளது.

பல ஸ்டூடியோக்களில் வேலை இல்லாத நிலை ஏற்பட்டதால் ஏற்கெனவே இருந்த படங்களின் தயாரிப்பு ரத்து செய்யப்பட்டு, மேலும் படங்கள் தயாரிப்பதும் குறைந்துவிட்டன. சமீபத்தில் பாரமவுண்ட் ஸ்டூடியோ உள்படப் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணிநீக்கங்களும் செய்யப்பட்டன. ஸ்கை-டான்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவதற்கு முன்பு, பாரமவுண்ட் ஸ்டூடியோ நிறுவனம் அதன் பணியாளர்களில் 15 சதவீதத்தைக் குறைப்பதற்காக, அங்கு இந்த வாரம் இரண்டாவது சுற்று பணி நீக்கங்களை முன்னெடுத்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் வேலையின்மை 12.5% ஆக இருந்தது. பல திரைப்படத் தொழிலாளர்கள் வேலையின்மைக்கான சலுகைகளைப் பெற பதிவு செய்யவில்லை. இதனால் இந்த எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று பலர் நினைக்கிறார்கள்.

 
மைக்கேல் ஃபோர்டின்

பட மூலாதாரம்,MICHAEL FORTIN

படக்குறிப்பு, மைக்கேல் ஃபோர்டின்

கடந்த 2022ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்க தயாரிப்புகளின் எண்ணிக்கை சுமார் 40% குறைந்துள்ளது. உலகளவில், அந்தக் காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பில் 20% சரிவு ஏற்பட்டுள்ளதாக தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்புகளைக் கண்காணிக்கும் ProdPro நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது குறைவான புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளியாகின.

ஆனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள் நீடித்து நிலையானதாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயுடன் இயங்கும் கேபிள் டிவிக்கு மக்கள் சந்தா செலுத்தாதபோது, திரையுலகில் லாபம் ஈட்டுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க ஸ்டூடியோக்கள் முயற்சி செய்கின்றன.

"திரையுலகில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை மக்கள் உணர்கிறார்கள். நான் பீதியைக் கிளப்புவதற்காக இதைக் கூறவில்லை," என்று பொழுதுபோக்குத் துறையைப் பற்றி செய்தி வெளியிடும் பக் நியூஸின் (Puck News) நிறுவனர் மேத்யூ பெலோனி கூறுகிறார்.

ஓடிடி தளங்களின் ஏற்றத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட்டால் தூண்டப்பட்டது. இதையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஓடிடி ஜாம்பவான்கள் சாதனை வளர்ச்சியைக் கண்டன மற்றும் பாரமவுண்ட் போன்ற ஸ்டூடியோக்கள் சொந்த ஸ்ட்ரீமிங் ஓடிடி தளங்களைத் தொடங்கியதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விலை உயர்ந்ததைக் கண்டது.

"இது ஓடிடி தளங்களின் சந்தையைச் சூடு பிடிக்கச் செய்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு 600 ஆக்ஷன் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. பின்னர் பங்குச் சந்தை அதற்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்தியது," என்று மேத்யூ பெலோனி கூறுகிறார்.

"நெட்ஃப்ளிக்ஸ் போன்ற மற்ற அனைத்து ஓடிடி நிறுவனங்களும் செயலிழந்தன. பின்னர் இதிலிருந்து நெட்ஃப்ளிக்ஸ் மீண்டுள்ளது. ஆனால், மற்ற நிறுவனங்கள் உண்மையில் லாபத்தைப் பெற போராடுகிறார்கள்," என்கிறார் அவர்.

 
எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த போராட்டம் பல மாதங்கள் நீடித்தன.

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த போராட்டம் பல மாதங்கள் நீடித்தன.

திரையுலகில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைத் தாண்டி சில தயாரிப்பு நிறுவனங்கள், கலிஃபோர்னியாவில் இருந்து மற்ற மாகாணங்களுக்கும் மற்ற நாடுகளுக்கும், அங்குள்ள கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளால் ஈர்க்கப்படுகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் தலைவர்கள் மந்தநிலையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள், மேயர் கரேன் பாஸ் கடந்த மாதம் ஹாலிவுட்டில் திரைப்படத் தயாரிப்புக்கான புதிய ஊக்குவிப்புகளைப் பற்றி ஆலோசனை செய்ய ஒரு குழுவை உருவாக்கியுள்ளார்.

இந்தக் குழு உருவாக்கத்தை அறிவித்துவிட்டு மேயர் கரேன் பாஸ், "லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு பொழுதுபோக்குத் துறை முக்கியப் பங்காற்றுகிறது" என்று கூறினார். இது அந்நகரத்தின் பொருளாதாரத்தின் "மூலக்கல்" மற்றும் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வழங்கக்கூடும் என்று அவர் விவரித்தார்.

சமீபத்திய தரவுகளின்படி, பொழுதுபோக்குத் துரையானது 6,80,000-க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. அது அந்த மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 115 பில்லியன் டாலர்கள் பங்களிப்பதாக மேயர் கரேன் பாஸ் கூறினார்.

எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த போராட்டம் பல மாதங்கள் நீடித்தன. இதற்குப் பிறகு அதிக பண மதிப்பு அளிக்கும் தொழிற்சங்க ஒப்பந்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான பாதுகாப்புகள் வழங்க வழிவகுத்தன.

ஹாலிவுட்டில் சில ஒருங்கிணைப்பு தவிர்க்க முடியாதது என்று ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் யூனியனுடன் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் டங்கன் க்ராப்ட்ரீ-அயர்லாந்து கூறினார். ஹாலிவுட்டில் கூடிய விரைவில் படங்கள் தயாரிப்பது அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் அவர் கூறுகிறார்.

 
டிஸ்னி அலுவலகத்திற்கு வெளியே வீடியோ கேம் காதப்பத்திரங்களுக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிஸ்னி அலுவலகத்திற்கு வெளியே வீடியோ கேம் கதாப்பத்திரங்களுக்குக் குரல் கொடுக்கும் கலைஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர்.

"தனித்துவமான படைப்பாற்றல் மிக்க தயாரிப்புகளை உருவாக்குவதுதான் இந்த நிறுவனங்களைச் சிறப்பான மற்றும் மதிப்பு மிக்கதாக மாற்றியுள்ளது," என்று அவர் செப்டம்பரில் டிஸ்னி அலுவலகத்திற்கு வெளியே ஒரு மறியல் போராட்டத்திற்குச் சென்றபோது கூறினார். இங்குதான் வீடியோ கேம் கதாப்பத்திரங்களுக்கு குரல் கொடுக்கும் கலைஞர்கள் தற்போது இதேபோன்ற பாதுகாப்புக்காக வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளனர்.

"ஹாலிவுட் எப்போதும் நெருக்கடியில் இருப்பதாக நினைக்கிறது" என்று அவர் கூறுகிறார். இது அனைத்து வகையான மாற்றங்களையும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு நகரம். விஷயங்கள் எப்போதும் இருந்தபடியே இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளதால் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளடக்கத்தை புதியதாக வைத்திருக்க வேண்டியுள்ளது."

மைக்கேல் ஃபோர்டினின் டிரோன் நிறுவனம் இந்த வேலைநிறுத்ததிற்கு முன்பு தினமும் இயங்கி வந்தது. இப்போது இந்த வேலை நிறுத்ததப் போராட்டத்திற்குப் பிறகு இந்த ஆண்டில் வெறும் 22 நாட்கள் மட்டும் டிரோன்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நடிகராக வெறும் 10 நாட்கள்தான் பணிபுரிந்துள்ளார்.

அவர் பின்னணி நடிகராகக்கூட பணிபுரிந்துள்ளார், ஆனால் லாஸ் வேகாஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு செல்வதற்கான பெட்ரோல் செலவைக்கூட அந்த வருமானம் ஈடு செய்யவில்லை.

"முன்பு பணி சிறப்பாக இருந்தது இப்போது அதில் சரிவு ஏற்பட்டுள்ளது," என்று ஃபோர்டினின் ஆப்பிள் டிவி+ நிகழ்ச்சியில் தனது ட்ரோன்களை பறக்கவிட்டதன் பின்னர் கூறினார். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ட்ரோன்களுடன் இதுதான் அவரது முதல் பணி.

"விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகின்றன. ஹாலிவுட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. ஆனால் திரைத்துறை எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் சரிவை ஏற்படுத்தியுள்ளது," என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1 வருட சிறை - சிங்கப்பூர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

1 month 2 weeks ago
03 OCT, 2024 | 03:35 PM
image

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும்  அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத  சிறைத்தண்டனை விதித்துள்ளது.

13 வருடங்கள்  அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு  போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன் 300000 அமெரிக்க டொலர் பெறுமதியான  பரிசுப் பொருட்களை பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச தரப்பு ஆறு-ஏழு மாத சிறைத் தண்டனையை கோரிய போதிலும் நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சரின் குற்றங்களின் அளவையும் அவை பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஏற்படுத்திய பாதிப்பையும் கருத்தில்கொள்ளும் போது ஆறு-ஏழு மாத சிறைத்தண்டனை போதுமானதல்ல என நீதிபதி  தெரிவித்துள்ளார்.

பொது நிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே திறமையான நிர்வாகத்திற்கான அடித்தளம் என தெரிவித்துள்ள நீதிபதி தனிப்பட்ட அரசாங்க  ஊழியர் நேர்மை பொறுப்புக்கூறல் தரத்திற்கு குறைவாக வீழ்ச்சியடைந்துவிட்டார் என்ற என்ற தோற்றப்பாடு பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

சிறந்த வருமானம் வழங்கப்படும் செயறதிறன் மிக்க அதிகாரிகளை கொண்ட வலுவான சுத்தமான ஆட்சி என தங்களை பற்றி பெருமிதம் கொண்டிருந்த சிங்கப்பூர் மக்களிற்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் ஊழல் அற்ற முதல் ஐந்து நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என கடந்த வருடம் டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்திருந்தது.

இறுதியாக 1975 இல் சிங்கப்பூர் அமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/195405

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு

1 month 2 weeks ago

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மக்கள் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமினிடமும் தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை கேட்டறிந்தார். மேலும், போர்ப் பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனும் தொலைப்பேசியில் ஸ்டார்மர் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310282

ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட குண்டு வெடித்தது

1 month 2 weeks ago

Published By: DIGITAL DESK 3   03 OCT, 2024 | 09:39 AM

image

ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த அமெரிக்க குண்டு புதன்கிழமை வெடித்துள்ளது.

குண்டு வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு உயிரிழப்பு இடம்பெறவில்லை.

500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க குண்டுதான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்பதை ஜப்பானின் தற்காப்புப் படையைச் சேர்ந்த குண்டு செயலிழப்புக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த குண்டு இரண்டாம் உலகப் போரின் போது தற்கொலைப் பயணங்களில் "காமிகேஸ்" விமானங்களைத் தடுப்பதற்காக வீசப்பட்டதாகக் கருதப்படுகிறது.

குறித்த பகுதியில் மீண்டும் வெடிப்பு சம்பவம் நிகழ வாய்ப்பில்லை. பொலிஸார் மற்றும் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தற்போது சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையம் வியாழக்கிழமை மீண்டும் திறக்க எதிர்பார்த்துள்ளதாக தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், தென் மேற்கு பகுதியில் மியாசாகி விமான நிலையம் உள்ளது. 1943ல், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் கடற்படை தளமாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட நுாற்றுக்கணக்கான டன் வெடிகுண்டுகள், ஜப்பானை சுற்றி புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், கட்டுமானப் பணிகளின் போது வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

2023 ஆம் ஆண்டில் மொத்தம் 41 டன் எடையுள்ள 2,348 குண்டுகள் அகற்றப்பட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/195362

பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி

1 month 2 weeks ago

பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி
October 3, 2024
a7cc7830-811b-11ef-83dd-fbf1b9732cf0-696

லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மத்திய பெய்ரூட் மீது இந்த வாரம் இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் அதிகளவிற்கு பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதிகளை இலக்குவைத்தே தாக்குதல்களை மேற்கொண்டுவந்துள்ளது.

 ஏவுகணை செல்லும் சத்தத்தையும் பின்னர் அது விழுந்து வெடிக்கும் சத்தத்தையும் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கட்டிடமொன்று தீப்பிடித்து எரிவதையும் மக்கள் தப்பியோடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் பல துணை மருத்துவ பணியாளாகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 கடந்த வாரம் 14 துணை மருத்துவ பணியாளர்கள் கொல்லப்பட்டனர்,திங்கட்கிழமை பெக்காவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் இவர்கள் அனைவரும் இஸ்லாமிய சுகாதார அமைப்பை சேர்ந்தவர்கள் .

 

https://eelanadu.lk/பெய்ரூட்டின்-மத்திய-பகுத/

இஸ்ரேலைச் சேதப்படுத்த நினைக்கும் இரான், இஸ்ரேலின் பதிலடி எப்படி இருக்கும்?

1 month 2 weeks ago
இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,இரானிய ஏவுகணைகள் அக்டோபர் 1 அன்று இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ மூலம் இடைமறிக்கப்பட்டன கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜெரெமி பொவன்
  • பதவி,சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், பிபிசி
  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று அந்தத் தாக்குதல் குறித்தும், அது நடத்தப்பட்ட முறை குறித்தும் இரான் வெளிப்படையாக அறிவித்தது.

இரானின் ஏவுகணைகள் அனைத்தும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளால் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன.

இம்முறை கதையே வேறு. இரான் இஸ்ரேலில் சில கடுமையான சேதங்களைச் செய்ய விரும்புவதைப் போலத் தோன்றுகிறது. தனது நிலைப்பாட்டை ஆக்ரோஷமாகப் பதிவு செய்ய விழைவது போலவும்.

ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவின மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுப்பதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், அதற்கு மீண்டும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இரான் எச்சரித்திருக்கிறது.

கடந்த முறை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ‘வெற்றியை கொண்டாடுங்கள் ஆனால் பதிலடி வேண்டாம்’ என்று கூறினார். அதனால் இஸ்ரேல் அதனைச் செய்யவில்லை. ஆனால், இம்முறை இஸ்ரேலின் மனநிலை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

இஸ்ரேலின் தடுப்பு அமைப்பு என்னவானது?

நேற்றிரவு (அக்டோபர் 1) இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட்டின் ட்வீட்டைப் பாருங்கள்: "இது, மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றியமைக்க, 50 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு."

''இந்த பயங்கரவாத ஆட்சியைக் கொடிய முறையில் முடக்குவதற்கு'' இஸ்ரேல் இரானின் அணுசக்தி நிலையங்களைக் குறிவைக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

இப்போது பென்னட்டின் இஸ்ரேலின் பிரதமராக இல்லை (அவர் வருங்காலத்தில் இஸ்ரேலின் பிரதமராகலாம் என்று பரவலாகக் கூறப்படுகிறது. அதனால்தான் கடினமானவர் என்பதைக் காட்ட அவர் இந்த நிலைப்பட்டை வெளியிட்டார்). ஆனால் இது இஸ்ரேலின் ஒரு குறிப்பிட்ட மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

அணுசக்தி தளங்கள், பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் என இரானியப் பொருளாதாரத்திற்குச் சேதம் விளைவிக்கக்கூடிய எதன் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம். இந்தச் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது.

இரானும் அதன் அணுசக்தி நிலையங்களும் தாக்கப்பட்டால், லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவிடம் இருக்கும் அதிநவீன ஆயுதங்களின் மிகப்பெரிய களஞ்சியம் அதற்குப் பாதுகாப்பாக இருக்கும்.

ஆனால் கடந்த இரண்டு வாரங்களில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல் ஹெஸ்பொலா அமைப்பை நிலைகுலைய வைத்து, அதன் ஆயுதங்களில் பாதியை அழித்துவிட்டது. லெபனானிலும் படையெடுத்துள்ளது.

 
இஸ்ரேல், இரான், அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, அக்டோபர் 1-ஆம் தேதி இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியபோது, வானில் காணப்பட்ட ஓர் எறிகணை
பேச்சுவார்த்தைக்கு இடமிருக்கிறதா?

ஹெஸ்பொலா வடிவில் இரானுக்கு இருந்த தடுப்பு, நொறுக்கப்பட்டுவிட்டது. எனவே இஸ்ரேலியர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமானம் தாங்கிக் கப்பல்களின் மற்றொரு குழுவை மத்தியதரைக் கடலுக்கு அனுப்புகிறார். ‘நீங்கள் இஸ்ரேலைத் தாக்கினால், அமெரிக்காவையும் தாக்குவதாக அர்த்தம்’ என்று அவர் இரானுக்குச் சமிக்ஞை செய்கிறார்.

இந்த ஸ்திரமற்ற தன்மை, நடக்கும் எல்லாவற்றிலிருந்தும் உருவாகும் கொந்தளிப்பு, ஆகியவற்றால்தான் போர் வலுக்குமோ என்ற பயம் பரவலாக இருக்கிறது.

இப்போது அது வெளிவருவதை நாம் காண்கிறோம். இந்த நேரத்தில் ராஜதந்திரத்திற்கு மிகக் குறைந்த இடமே இருக்கிறது.

கனடாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தால் பலருக்கு சிக்கல்

1 month 2 weeks ago

கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புலம்பெயர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன் காரணமாக கனடாவில் உணவகங்கள் உட்பட பல நிறுவனங்களை நடத்துவோருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டிய நிலை ஏற்படும் என, பல உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்காலிக பணியாளர் விசா

பல பணிகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், கனடா அரசு குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

கனடாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தால் பலருக்கு சிக்கல் | Canada New Immigration Rules 2024 Update

குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாகவுள்ளது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள்

அத்துடன், ஒரு வருடத்துக்குதான் பணி அனுமதிகளும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறான நிலையில் பணி வழங்குவோர், புதிதாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தால் பலருக்கு சிக்கல் | Canada New Immigration Rules 2024 Update

அரசின் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாக இருப்பதுடன், பல தொழில்கள் மூடப்படும் அபாயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/canada-new-immigration-rules-2024-update-1727881842#google_vignette

இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் - பாதுகாப்பான இடத்தில் இரான் அதி உயர் தலைவர்; ஐ.நா பொது செயலாளருக்கு தடை விதித்த இஸ்ரேல்

1 month 2 weeks ago
1 அக்டோபர் 2024
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது.

இதற்கிடையே, இரானின் அதி உயர் தலைவர், அயதுல்லா அலி காமேனெயி இன்று (அக்டோபர் 2) தெஹ்ரானில் இரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டினார். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யாக கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

''அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடுகள் அமைதியாக இருக்கும்'' என்றும் அவர் கூறினார்.

நேற்று (அக்டோபர் 1) இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை வழங்கிய இரானின் அதி உயர் தலைவரான காமேனெயி, ஒரு பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து இருப்பதாக இரான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

(கோப்புக்காட்சி)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அயதுல்லா அலி காமேனெயி தெஹ்ரானில் இரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் (கோப்புக்காட்சி)
ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தடை

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குட்டெரெஸ் "வெளிப்படையாக கண்டிக்க" தவறியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வருவதை நேற்று (அக்டோபர் 1) கண்டித்த ஐ.நா பொதுச்செயலாளர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இரான் தாக்குதலும் இஸ்ரேல் பதிலும்

இரான் ஏவிய ஏவுகணைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய விமானப்படையால் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரானுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேலை நோக்கி டஜன்கணக்கான ஏவுகணைகளை ஏவியதாக இரானின் புரட்சிகர காவல்படை உறுதிப்படுத்தும் அறிக்கையை இரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் அது எச்சரித்துள்ளது.

ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் இரானின் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.
இஸ்ரேலில் என்ன நடந்தது?

முன்னதாக இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

சைரன் சத்தம் கேட்டவுடன், ''நீங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து, மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும்", எனவும் அது கூறியது.

இரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதால், இஸ்ரேல் முழுவதும் உள்ள மற்றவர்களைப் போல நாங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றோம் என ஜெரூசலத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஆலிஸ் கட்டி கூறினார்.

அமெரிக்கா என்ன செய்தது?

இதற்கிடையே இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.

இரானிய தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கவும், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் பைடன் உத்தரவிட்டார்.

இரானின் தாக்குதல்களை அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்காணித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

சில இரானிய ஏவுகணைகளை நடுவானில் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார்.

அதிபர் ஜோ பைடன்
படக்குறிப்பு, இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
இரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் உறுதி

இரான் செலுத்திய ஏவுகணைகளை தடுப்பதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார்.

"இரானின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சரியான தொடர் விளைவுகள் இருக்கும்" என்றார் அவர்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்தது.
இரானுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்தது.

இரான் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.

"இரான் அதனை புரிந்து கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் திருப்பித் தாக்குவோம். நாங்களே வகுத்துக் கொண்ட அந்த விதிகளின் கீழ் செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

இரான் - இஸ்ரேல்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, இரானின் தலைநகரான டெஹ்ரானில் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடினர்
இரானில் வீதியில் இறங்கி கொண்டாடிய மக்கள்
இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, டெஹ்ரானில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மக்கள் இரான் மற்றும் ஹெஸ்பொலாவின் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரானின் தலைநகரான டெஹ்ரானில் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடினர்.

ஏராளமான மக்கள் இரான் மற்றும் ஹெஸ்பொலாவின் கொடிகளை ஏந்தியிருந்தனர். லெபனானில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படத்தை மக்கள் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது.

இந்தக் கொண்டாட்டம் தொடர்பாக வெளியான புகைப்படங்களின்படி, சிலர் பட்டாசுகளை வெடிக்கிறார்கள்.

ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்திய பிறகு இதேபோன்ற கொண்டாட்டம் பிரிட்டன் தூதரகத்திற்கு முன் நடந்தது. இப்போதும் அதே இடத்தில் தான் மக்கள் ஒன்று கூடினர்.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, பிரிட்டன் தூதரகத்திற்கு முன் மக்கள் ஒன்று கூடினர்
லெபனானில் கொண்டாட்டம்
இஸ்ரேல் - இரான்
படக்குறிப்பு, பெய்ரூட்டில் பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய செய்தி வெளியான பிறகு, லெபனானில் உள்ள ஹெஸ்பொலா உறுப்பினர்கள், பாலத்தீனிய குழுக்கள் மற்றும் இரானின் ஆதரவாளர்கள், தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாக இருக்கும் ஒரு பள்ளியில் சில கொண்டாட்டங்களை பார்க்க முடிந்தது. இங்கு சிவில் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பிபிசி கேமரா முன்பு ‘V’ (வெற்றி) என்ற அடையாளத்தில் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டி "நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என்று அவர்கள் கூச்சலிட்டனர்.

முன்னதாக சில ஹெஸ்பொலா ஆதரவாளர்களும், லெபனானில் உள்ள சிலரும், ‘இரானை ஹெஸ்பொலாவை விற்றுவிட்டதாக’ கூறி கடுமையாக விமர்சித்தனர். ‘ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இரான் பழிவாங்கவில்லை, இது இஸ்ரேலுக்கு தைரியத்தை அளித்துள்ளது’ என்றும் சிலர் பிபிசியிடம் கூறினார்கள்.

ஒருவர், “இது ஒரு நிகழ்வு மட்டுமே. எங்கள் தலைவர் போய்விட்டார், எந்தப் பழிவாங்கலும் அவரைத் திரும்பக் கொண்டுவராது." என்று கூறினார்.

ஏவுகணையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாலத்தீன மக்கள்
இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகருக்கு அருகே, ஒரு ஏவுகணை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகருக்கு அருகே பாலத்தீனர்கள், அங்கு விழுந்த ஒரு ஏவுகணையின் இடிபாடுகளை பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகின.

ஏ.எப்.பி. செய்தி முகமையின் புகைப்படக் கலைஞரின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத இந்த ஏவுகணையின் மிச்சம் ஹெப்ரோனுக்கு மேற்கே உள்ள துரா நகரின் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஏவுகணையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாலத்தீன மக்கள்

ஏவுகணையுடன் ஒரு குழு புகைப்படம் எடுப்பதையும் காண முடிந்தது. ஆனால் அந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மெக்சிகோவுக்கு முதல் பெண் ஜனாதிபதி; யார் இந்த கிளாடியா ஷீன்பாம்?

1 month 2 weeks ago

மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதியாக ஷெயின்பாம் பதவியேற்க உள்ளார்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷேன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார். இதையடுத்து மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக 62 வயதான கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவுள்ளார். இதையடுத்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு மெக்சிகோவின் ஜனாதிபதியாக கிளாடியா ஷேன்பாம் தொடருவார்.

ரோமன் கத்தோலிக்க சமூகப் பிரிவைச் சார்ந்த கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மெக்சிகோவில் (உலகின் 2-ஆவது பெரிய ரோமன் கத்தோலிக்க மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு), யூத இனத்தை சேர்ந்த ஒருவர், அந்நாட்டின் உயர்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டில் பெண்கள் பாரம்பரியக் கடமைகளை மட்டுமே ஆற்ற வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்படும் சூழலிலும் நாட்டின் தலைமைப் பதவியை ஒரு பெண் அலங்கரிக்கவுள்ளாா்.

உலகளவில் புகழ்பெற்ற பருவநிலை விஞ்ஞானியான கிளாடியா ஷேன்பாம், 2007-ஆம் ஆண்டு ’அமைதிக்கான நோபல் பரிசை’ வென்ற பெருமைக்குரியவர். 2018-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மெக்சிகோ மாநகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். கடந்த 2000-லிருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இவா் பொறுப்பு வகித்துள்ளாா். மெக்சிகோ மட்டுமன்றி, அமெரிக்கா, கனடா ஆகிய வல்லரசுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் எந்தவொரு பெண் வேட்பாளரும் இதுவரை வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்செயல்களும் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வரும் சூழலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக இன்று (அக்.1) பதவியேற்றார் கிளாடியா ஷேன்பாம். பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் மற்றும் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/310209

உளவு குற்றச்சாட்டில் சீன பெண் ஜேர்மனியில் கைது!

1 month 2 weeks ago
10823.jpg?resize=750,375&ssl=1 உளவு குற்றச்சாட்டில் சீன பெண் ஜேர்மனியில் கைது!

ஜேர்மனியின் லைப்சிக் (Leipzig) நகரில் சீன பெண் ஒருவர் வெளிநாட்டு முகவர் நடவடிக்கைகள் மற்றும் ஆயுத விநியோகம் தொடர்பான தகவல்களை அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Yaqi X என பெயரிடப்பட்ட சந்தேக நபர், கிழக்கு ஜேர்மனியில் அமைந்துள்ள Leipzig/Halle விமான நிலையத்தில் தளவாட நிறுவனத்தில் பணிபுரிந்தபோது பெறப்பட்ட தகவல்களை சீன இரகசிய சேவையின் உறுப்பினருக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவர் மீது தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த தகவலில் விமானங்கள், பொருட்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் இராணுவ தளவாடங்களின் போக்குவரத்து பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

https://athavannews.com/2024/1402092

இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!

1 month 2 weeks ago

இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்! Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Iran rockets attacked Israel says Israel defense force civilians in bomb shelter ans

Iran Attacks Israel : ஈரான் இப்பொது இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி, வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ஆதரவு போராளி ஹெஸ்பொல்லாவை குறிவைத்து, லெபனானில் நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் எரித்து, ஈரான் இப்பொது ராக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக உடனடியாக பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக சில மணிநேரங்களுக்கு முன்பு தகவல் கிடைத்த நிலையில், இஸ்ரேல் மீது ராக்கெட் நடத்தியுள்ளது ஈரான் என்று, இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது இஸ்ரேல் பாதுகாப்பு படை. 

அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நட்பு நாடுகளும், கடந்த ஏப்ரலில் ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை பாதுகாக்க உதவ முன்வந்தன. இது குறித்து அமெரிக்க அதிகாரி மேலும் பேசியபோது. "இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் நேரடி இராணுவ தாக்குதல், ஈரானுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று எச்சரித்தனர்.

நஸ்ரல்லாவின் கொலை இஸ்ரேலின் "அழிவை" கொண்டு வரும் என்று ஈரான் கூறியது, ஆனால் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில் தெஹ்ரான், இஸ்ரேலை எதிர்கொள்ள ராணுவ வீரர்களை அனுப்பாது என்று கூறியது கூறியது. தெஹ்ரான் தான் ஈரான் நாட்டின் தலைநகரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் இப்பொது ஈரான், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதல், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் பிற உலக வல்லரசுகள் தவிர்க்க விரும்புவதாக கூறியுள்ள பரந்த பிராந்திய மோதலின் அச்சத்தை கடுமையாக கூட்டும் என்றும் நம்பப்படுகிறது. ஜனாதிபதி ஜோ பிடன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலைத் தாக்கும் ஹெஸ்பொல்லாவின் திறனைத் தகர்க்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை அமெரிக்கா எச்சரிக்கையுடன் ஆதரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் வெளியிட்ட செய்தியில் "மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக" அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். "இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது" என்று பிளிங்கன் செவ்வாய்க் கிழமை காலை தனது மொராக்கோ பிரதிநிதி நாசர் பொரிட்டாவை வெளியுறவுத்துறையில் சந்தித்தபோது கூறினார். வாஷிங்டன் திங்களன்று மத்திய கிழக்கில் தனது படைகளை "சில ஆயிரம்" துருப்புக்களால் உயர்த்தி வருவதாகவும், புதிய பிரிவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஏற்கனவே உள்ள மற்றவர்களை விரிவுபடுத்துவதாகவும் கூறியது.

 

 

https://tamil.asianetnews.com/world/iran-rockets-attacked-israel-says-israel-defense-force-civilians-in-bomb-shelter-ans-skosu7

இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா

1 month 2 weeks ago
01 OCT, 2024 | 07:48 PM
image
 

இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் சிபிஎஸ் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் ஈரானிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி இந்த தாக்குதலை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தன்னை தயார்படுத்துவதற்கு  அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195270

தாய்லாந்தில் விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து தீப்பிடித்து எரிந்தது - 20 சிறுவர்கள் பலி

1 month 2 weeks ago
01 OCT, 2024 | 02:39 PM
image

தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் பாங்கொக்கிற்கு வெளியே  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர், 22 மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது.

LH8El6GA.jpg

பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மீட்பு நடவடிக்கைகளிற்காக உள்ளே நுழைய முடியாத நிலை காணப்படுகின்றது.

தாய்லாந்தின் வடமாகாணத்தில் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பேருந்தே விபத்தில் சிக்குண்டுள்ளது.

பாங்கொக்கின் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது டயர் வெடித்ததால் பேருந்து தடுப்பு மதில் ஒன்றுடன் மோதியது என மீட்பு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195231

Checked
Thu, 11/21/2024 - 10:51
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe