உலக நடப்பு

தாய்லாந்தில் விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து தீப்பிடித்து எரிந்தது - 20 சிறுவர்கள் பலி

2 months ago
01 OCT, 2024 | 02:39 PM
image

தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் பாங்கொக்கிற்கு வெளியே  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர், 22 மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது.

LH8El6GA.jpg

பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மீட்பு நடவடிக்கைகளிற்காக உள்ளே நுழைய முடியாத நிலை காணப்படுகின்றது.

தாய்லாந்தின் வடமாகாணத்தில் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பேருந்தே விபத்தில் சிக்குண்டுள்ளது.

பாங்கொக்கின் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது டயர் வெடித்ததால் பேருந்து தடுப்பு மதில் ஒன்றுடன் மோதியது என மீட்பு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195231

ஜப்பானின் புதிய பிரதமர் - சிகெரு இசிபா

2 months ago
01 OCT, 2024 | 12:28 PM
image
 

ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான சிகெரு இசிபாவை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது.

கட்சியின் புதிய தலைவராக சில நாட்களிற்கு முன்னர் இசிபா தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் இன்று தனது அமைச்சரவையை அறிவிப்பார்.

புதிய பிரதமர் ஒக்டோபர் 27 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார். 

https://www.virakesari.lk/article/195221

ஆஸ்திரியாவில் புதிய சகாப்தத்தைப் படைக்கவுள்ள தீவிர வலதுசாரி கட்சி!

2 months ago
Election-2.jpg?resize=672,349 ஆஸ்திரியாவில் புதிய சகாப்தத்தைப் படைக்கவுள்ள தீவிர வலதுசாரி கட்சி!

ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) ஞாயிற்றுக்கிழமை இரவு (29) நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இதுவாகும்.

10 மில்லியன் மக்கள் வசிக்கும் குறித்த நாட்டில் அதிக பணவீக்கம், உக்ரேன் – ரஷ்யப் போர்   மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் ஆகியன  பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதனால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் விரக்தியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் முதற்கட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் சுதந்திரக் கட்சி 29.2% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததாகவும், ஜனாதிபதி கார்ல் நெஹாமரின் ஆஸ்திரிய மக்கள் கட்சி 26.5% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததாகவும் தெரிவித்தது.

மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் 21% உடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

வெளியேறும் அரசாங்கம் – நெஹாமரின் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைவாதிகளின் கூட்டணி – நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பெரும்பான்மையை இழந்தது.

2021 முதல் சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கிய முன்னாள் உள்துறை அமைச்சரும் நீண்டகால பிரச்சாரருமான ஹெர்பர்ட் கிக்ல் (Herbert Kickl) ஜனாதிபாயக இருக்க விரும்புகிறார்.

ஆனால், ஆஸ்திரியாவின் புதிய தலைவராவதற்கு, அவருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஒரு கூட்டணிக் கட்சி தேவை. அரசாங்கத்தில் கிக்லுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.

இதனால், சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கான வாய்ப்பு சிக்கலாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1401707

சவூதி கல்வி, மருத்துவத் துறைகளில் AI, ரோபோக்களின் பயன்பாடு : ரியாத் புத்தக கண்காட்சி மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் முன்னோடி கண்டுபிடிப்பு

2 months ago
30 SEP, 2024 | 01:31 PM
image

காலித் ரிஸ்வான்

அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம்,  போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது. 

அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும் ரோபோக்களின் பயன்பாடு மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் வெற்றிகரமான ரோபோ உதவி மூலமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அண்மைய தொழில்நுட்ப ரீதியான மருத்துவ மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவூதியின் சாதனைகள் மற்றும் ஆர்வம் போன்றவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

WhatsApp_Image_2024-09-30_at_7.47.42_AM.

இவ்வாண்டு நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சவூதியின் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்  AI மூலமான சேவைகளை அறிமுகப்படுத்தி செயற்படுத்தி இருந்தது. 

அந்த வகையில் பல்வேறு மொழிகளில் தொடர்புகொள்ளும் திறன் கொண்ட AI மூலம் இயங்கும் ரோபோக்கள் கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு விதிவிலக்கான துல்லியத்துடன் வழிகாட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன. 

WhatsApp_Image_2024-09-30_at_7.47.43_AM_

இந்த ரோபோக்கள் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களைக் கண்டறிய உதவுவனவாக இருந்ததோடு, பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு பல மொழிகளிலான உதவிகளை, வழிகாட்டல்களை வழங்கின. 

மேலும் இந்த ரோபோக்கள் புத்தகங்களுக்கான ஆடியோ  (Audio) வடிவிலான சுருக்கங்களை வழங்குகின்றன. முக்கிய கருப்பொருள்கள் மற்றும் காண்பிக்கப்படும் புத்தகங்களின் உள்ளடக்கத்தையும் வழங்குகின்றன.

புத்தக ஆர்வலர்களுக்கான சிறந்த ஒரு அனுபவத்தை இந்த திட்டமானது வழங்குகின்றது. 

WhatsApp_Image_2024-09-30_at_7.47.43_AM.

இக்கண்காட்சியின் சகல அரங்குகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்ததோடு, ஊடாடும் சாதனங்கள், தேவைக்கேற்ப கதை அச்சிடுவதற்கான அச்சியந்திரங்கள் வைக்கப்படல் மற்றும் தகவல் திரைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் கண்காட்சியின் கவர்ச்சி மேலும் அதிகரிக்கப்பட்டது.

சுகாதாரத்துறையை பொருத்தமட்டில், மதீனா நகரில் உள்ள மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மெடிக்கல் சிட்டி, 70  வயதான ஒரு பெண்ணுக்கு முதல் முதலாக ரோபோ உதவியுடன் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்துள்ளது. 

WhatsApp_Image_2024-09-30_at_7.47.43_AM_

சிறப்பு எலும்பியல் மற்றும் மூட்டு மாற்றுக் குழுவால் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, மதீனா சுகாதாரத் தொண்டு நிறுவனத்துக்கு (Madina Health Cluster) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. 

மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் ரோபோ அமைப்புகளின் பயன்பாடானது எலும்பு சீரமைப்பு மற்றும் எழும்பு மாற்று செயற்பாடுகளில் துல்லியத்தை உறுதி செய்கிறது. 

அத்தோடு இது சிறந்த அறுவை சிகிச்சை விளைவுகளுக்கும் விரைவான குணமடைதலுக்கும் வழிவகுக்கிறது. 

இந்த புதுமையான செயல்முறையின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணமாக நோயாளி பூரண ஆரோக்கியத்துடன் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்.

கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலுமான இந்த முன்னேற்றங்கள் தொழில்நுட்பத்தை முக்கிய துறைகளில் ஒருங்கிணைப்பதற்கான சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. அத்தோடு இவ்வாறான முயற்சிகள் பிராந்திய ரீதியாகவும் உலகளவிலும் சவூதியை புதுமை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியிருக்கின்றன.

https://www.virakesari.lk/article/195126

ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?

2 months ago
இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகளில் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படம்
28 செப்டெம்பர் 2024, 05:20 GMT
புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹெஸ்பொலா உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ, வேறு ஏதேனும் கருத்து சொல்லவோ இல்லை.

மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பைடன் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன?

ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.

ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,REUTERS

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

இந்நிலையில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது.

ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், "ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது.

Twitter பதிவை கடந்து செல்ல

Hassan Nasrallah will no longer be able to terrorize the world.

— Israel Defense Forces (@IDF) September 28, 2024
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

 
‘இஸ்ரேலை யார் அச்சுறுத்தினாலும் விடமாட்டோம்’
ஹெர்சி ஹலேவி

பட மூலாதாரம்,IDF

படக்குறிப்பு, ஐடிஎப் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி

இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

"நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி" என்று அதில் அவர் கூறியுள்ளார்.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

"பல்வேறு கட்ட ஆயத்தப்பணிகளுக்கு பிறகு, இஸ்ரேலிய ராணுவம், நஸ்ரல்லா மற்றும் ஹெஸ்பொலாவின் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தியது" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார்.

"மிகச்சரியான நேரத்தில், மிகவும் துல்லியமான முறையில் அந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் இது முடிவல்ல என்பதில் தெளிவாக இருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும் திறன் எங்களிடம் அதிகமாகவே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

‘தாக்குதலில் ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

‘ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவின் ஏவுகணைப் பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது உட்பட இஸ்ரேல் மீதான ஏராளமான தாக்குதல்களின் பின்னணியில் அலி இஸ்மாயில் இருந்தார் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

தாக்குதலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு

மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

‘எந்த சக்தியாலும் இஸ்ரேலைத் தடுக்க முடியாது’
ஜோசப் பொரெல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் ‘தடுக்க முடியாது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பொரெல் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் செய்வது போர்நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுப்பது தான். ஆனால் காஸாவில் அல்லது மேற்குக் கரையில் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை யாராலும் தடுக்க முடியாது என்று தான் தெரிகிறது" என்றார்.

“ஹெஸ்பொலா அழிக்கப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாது” என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியதாக பொரெல் கூறினார்.

21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் அழைப்பையும் அவர் ஆதரித்து பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஹெஸ்பொலா மீதான இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் இரானுக்கு புதிய சிக்கல் - என்ன செய்யப் போகிறது?

2 months ago
இஸ்ரேல் - இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, ஹெஸ்பொலா மீதான இஸ்ரேல் தாக்குதல் - இரானின் நிலைப்பாடு என்ன? கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜியர் கோல்
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நீண்ட கால நண்பனும், அண்டை நாடுமான லெபனானில் உள்ள ஹெஸ்பொலா ஆயுதக் குழு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிராக இரான் எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பது அந்த நாட்டில் உள்ள பழமைவாதிகளுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் செவ்வாய்க்கிழமை அன்று ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் பேசிய போது காஸா மீதான இஸ்ரேல் போரை விமர்சனம் செய்தார். லெபனான் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு பதில் கிடைக்காமல் போகாது என்று அவர் எச்சரிக்கையும் செய்துள்ளார்.

ஆனால் ஜூலை மாதம் அதிபராக தேர்வு செய்யப்பட்ட பெசெஷ்கியன், தனக்கு முன்பு ஆட்சி செய்த அதிபர்களைக் காட்டிலும் மிகவும் மென்மையான போக்கை கையாளத் துவங்கினார். இஸ்லாமியக் குடியரசின் எதிராளிகளை அழிப்பது என்பது போன்ற பேச்சுகளை அவர் தவிர்த்து வந்தார்.

"நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எந்த நாட்டுடனும் சர்ச்சையில் ஈடுபடும் எண்ணம் எங்களுக்கு இல்லை," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

2015-ஆம் ஆண்டு தடைபட்டுப் போன அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர அவருடைய அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேல் இரான் மீதும் அதன் முக்கிய கூட்டாளிகளான ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலா மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பழிவாங்குவது தொடர்பாக மூத்த இரானிய தலைவர்களும், இஸ்லாமிய புரட்சிப் படைக் குழுவின் ( Islamic Revolution Guard Corps (IRGC)) தளபதிகளும் வெளிப்படுத்தும் கருத்துகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

ஹமாஸ், ஹெஸ்பொலா அமைப்புகளுக்கும் இரானுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இந்த இரண்டு குழுக்களுக்கும் ஆயுதம் வழங்கியதோடு மட்டுமின்றி நிதியும் பயிற்சியும் அளித்தது இரான் மட்டுமே. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுக்கும் பெரிய அரணாக ஹெஸ்பொலா அமைப்பை டெஹ்ரானில் உள்ள தலைவர்கள் அதிகமாக நம்பியுள்ளனர்.

1980களில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர படைக்குழுவினர் ஹெஸ்பொலா அமைப்பை உருவாக்கினர். ஹெஸ்பொலா லெபனானின் பலமான ஆயுதமேந்திய குழுவாக மாறியதற்கும், அரசியலில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்ததற்கும் இரானின் ஆதரவு முக்கிய பங்காற்றுகிறது.

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஹெஸ்பொலா பயன்படுத்தும் அதிநவீன ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் விநியோகிப்பது இரான் தான். ஹெஸ்பொலாவுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை இரான் வழங்கியதாக அமெரிக்கா முன்பே குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வாரம் பெய்ரூட்டில் இரான் தூதரக அலுவலகத்தில் நடந்த பேஜர் குண்டுவெடிப்பில் லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானி பலத்த காயம் அடைந்தார். ஹெஸ்பொலா உறுப்பினர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள், பேஜர்கள் அடுத்தடுத்து நடந்த இரண்டு தொடர் நிகழ்வுகளில் வெடித்து சிதறின. இதில் 39 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு இஸ்ரேலே காரணம் என்று குற்றம் சாட்டியது இரான். ஆனால் பதில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் இரான் உடனடியாக வெளியிடவில்லை.

ஆனால், ஏப்ரல் மாதத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 8 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியது இரான். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கில் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி தாக்குதல் நடத்தியது.

டெஹ்ரானில் கடந்த ஜூலையில் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டத்திற்கு எதிர்வினையாற்றிய இரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தும் என்று சூளுரைத்தது. ஆனால் இதுவரை பதில் தாக்குதல் தொடர்பாக எந்த அறிவிப்பையும் இரான் வெளியிடவில்லை.

இஸ்ரேல் - இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கடந்த வாரம் நடைபெற்ற பேஜர் தாக்குதலில் லெபனானுக்கான இரான் தூதர் மொஜ்தபா அமானி காயம் அடைந்தார்
அமைதி காக்கும் தலைவர்கள் - காரணம் என்ன?

இரானின் இஸ்லாமிய புரட்சிப் படைக் குழுவின் முன்னாள் தளபதி பிபிசியிடம் பேசும் போது, "எந்த விதமான செயல்பாடும் தொடர்ச்சியாக வெறும் எச்சரிக்கை மட்டும் செய்வது, உள் நாட்டு ஆதரவாளர்கள் மத்தியிலும், வெளிநாட்டினர் மத்தியிலும் ராணுவத்தின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கும்," என்று கூறினார்.

திங்கள் கிழமை அன்று, அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய பெசெஷ்கியன் இஸ்ரேல் இரானை போருக்குள் இழுத்து வர சரியான தருணத்திற்காக காத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

"இஸ்ரேல் உடனான பதற்றத்தைக் குறைக்க இரான் தயாராக உள்ளது. மேலும் இஸ்ரேல் ஆயுதங்களை கைவிடும் பட்சத்தில் இரானும் அதனை பின்பற்ற தயாராக உள்ளது," என்று கூறினார்.

அதிபரின் இத்தகைய போக்கு இரானின் பழமைவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி-யின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள பழமைவாதிகள் பலரும் அதிபரின் இந்த கருத்தை விமர்சனம் செய்துள்ளனர். அதிபர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஊடக நேர்காணல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

பெசெஷ்கியன் செப்டம்பர் 25-ஆம் தேதி அன்று அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தார். அது பின்னர் ரத்து செய்யப்பட்டது. அவர் இதற்கு முன்பு தெரிவித்த கருத்துகளின் காரணமாக பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய வற்புறுத்தப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

ராணுவ வீரர்கள் மத்தியில் காமனெயி செப்டம்பர் 25-ஆம் தேதி நடத்திய உரையின் போது இஸ்ரேலை தாக்குவது தொடர்பாக எந்த விதமான கருத்தையும் அவர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரின் வழக்கத்திற்கு மாறான செயலாகவே கருதப்படுகிறது.

இஸ்ரேல் - இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, இரானின் பாதுகாப்பு வாரத்தையொட்டி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைகள்
இரானுக்கு புதிய சிக்கல்

செப்டம்பர் 24-ஆம் தேதி அன்று பாரக் ரவித் என்ற இஸ்ரேலிய ஊடகவியலாளர் அமெரிக்க செய்தி தளமான அக்ஸியோஸில் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உதவுமாறு இரானுக்கு ஹெஸ்பொலா அழைப்பு விடுத்தது என்று இரண்டு இஸ்ரேலிய தலைவர்களும் மேற்கத்திய ராஜ்ஜிய அதிகாரிகளும் கூறியதாக தெரிவித்திருந்தனர். "இது சரியான தருணமல்ல," என்று இரான் ஹெஸ்பொலாவிடம் கூறியதாகவும் இஸ்ரேலிய தலைவர்கள் கூறியதாக ரவித் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம், இரானின் இணைய தொலைக்காட்சி நிகழ்வை தொகுத்து வழங்கும் மைதான், இஸ்ரேல் இரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படைக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்ல தாக்குதல் நடத்தியதாகவும், முக்கியமான ஆவணங்களை திருடிச் சென்றிருப்பதாகவும் இரானிய உளவுத்துறை கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.

இரானுக்குள் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிடுவதற்கு இரானியப் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் அது வெளிவருவதை கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

IRGC-யுடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்திக் குழுமம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இரான் இஸ்லாமியக் குடியரசும் கூட ஒரு நிச்சயமற்ற தன்மையில் தான் இருக்கிறது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது அமெரிக்காவின் ராணுவ பதிலடியை தூண்டி, நாட்டை பெரிய பிரச்னைக்கு இட்டுச்செல்வதாக அமைந்துவிடும் என்று யோசிக்கிறது இரான்.

அமெரிக்காவின் பொருளாதார தடை மூலமாக பொருளாதார சிக்கலில் இருக்கும் இரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அது அந்த நாட்டை மேலும் வலுவற்றதாக மாற்றும். இதனால் இரானிய எதிராளிகள் மீண்டும் ஒன்றாக எழும் சூழலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எவ்வாறாயினும், இஸ்ரேலுடனான ஹெஸ்பொலாவின் மோதலில் இரான் நேரடியாக தலையிடுவதைத் தவிர்த்தால், அது பிராந்தியத்தில் உள்ள இதர ஆயுதமேந்திய குழுக்களுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பக் கூடும். நெருக்கடி காலங்களில், இரான் இஸ்லாமிய குடியரசு அதன் சொந்த நாட்டிற்கும் மற்றும் நலன்களுக்குமே முன்னுரிமை அளிக்கும் என்பதே அந்த சமிக்ஞையாகும்.

இது இரான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் செல்வாக்கை இந்த பிராந்தியத்தில் வலுவிழக்கச் செய்துவிடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.

2 months ago

2024-09-27t204218z-2092140364-rc279aa5ni

 

gettyimages-2173926448.jpg?c=original&q=ap24271647200852-copy.jpg?c=original&q=w

 

25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவளி.

புளோரிடா ஜோர்ஜியா தெற்கு வடக்கு கரோலினா என்று 4 மாநிலங்களை பிரட்டி எறிந்துள்ளது.

இன்று மகன் வசிக்கும் இடமான எபிக்ஸ் வட கரோலினாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் – ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து!

2 months ago
usaa.jpg?resize=671,375 புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் – ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்குத் தீர்வு காணும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள  புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

இப் புதிய சட்டப்படி, பாடசாலைகளில்  மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும், சட்டவிரோதமான துப்பாக்கிகள், ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத 3-டி முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கண்டறிந்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் விற்பனையையும், கண்மூடித்தனமான பயன்பாட்டையும் கண்காணிக்க அதிரடிப் படை அமைக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1401465

சீனாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது - அமெரிக்க அதிகாரிகள் தகவல்

2 months ago
27 SEP, 2024 | 03:08 PM
image

சீனாவின்  அணுசக்தியில் இயங்கும்  புதிய தாக்குதல் நீர்மூழ்கி அந்த நாட்டின் துறைமுகத்தில் தரித்து நின்றவேளை கடலில் மூழ்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மே ஜூன் மாதத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ளார்.

புதிய அணுசக்தி தாக்குதல் எதன் காரணமாக மூழ்கியது என்பது தெரியவில்லை. மூழ்கிய வேளை அதில் அணுஎரிபொருள் காணப்பட்டதா என்பதும் தெரியவில்லை என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

தனது நீர்மூழ்கி மூழ்கியதை சீன கடற்படை மறைக்க முயன்றுள்ளமை ஆச்சரியமளிக்கவில்லை என  தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி நீர்மூழ்கி மூழ்கியமை பயிற்சி மற்றும் உபகரணங்களின் தரம் பற்றிய வெளிப்படையான கேள்விகளிற்கு அப்பால் இந்த சம்பவம் சீன இராணுவம் அந்த நாட்டின் பாதுகாப்பு துறையை எவ்வாறு கண்காணிக்கின்றது என்பது குறித்தும்   பொறுப்புக்கூறல் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது என தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து வழங்குவதற்கு எந்த தகவலும் இல்லை அமெரிக்காவிற்கான சீன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இந்த சம்பவம் தனது இராணுவ வல்லமையை விஸ்தரிக்க முயலும் சீனாவிற்கு பெரும் அவமானம் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

சீன உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதனிடம் 370 கப்பல்கள் உள்ளன தற்போது நவீன அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/194925

இந்தியாவின் நீண்டநாள் விருப்பத்தை ஐ.நா-வில் வெளிப்படையாக ஆதரித்த பிரான்ஸ் அதிபர்

2 months ago
இமானுவேல் மக்ரோங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் ஐநா பேரவையில் உரையாற்றுகையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்
5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்கவேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழனன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற ஐ.நா. பேரவையின் 79-வது கூட்டத்தில் மக்ரோங் உரையாற்றினார். பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு சபையில் இந்தியா, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக ஒருவர் மற்றவரை (முன்மொழிவுகளை) நிறுத்தும் வரை முன்னேறுவது கடினம் என்று மக்ரோங் கூறினார்.

“இங்கே எல்லாம் சரியாக இருக்கிறதா? நான் அப்படி நினைக்கவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபையை பயனுள்ளதாக்க வேண்டும். ஆனால் இதற்கு அதிக உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். எனவே பாதுகாப்பு சபையின் விரிவாக்கத்தை பிரான்ஸ் ஆதரிக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

வெளிப்படையான ஆதரவு

“ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும். இதனுடன் ஆப்பிரிக்காவால் பரிந்துரைக்கப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டு நாடுகளையும் அதன் உறுப்பினர்களாக ஆக்க வேண்டும்,” என்று மக்ரோங் கூறினார்.

அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், மற்றும் அமெரிக்கா மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

 
ஐ.நா., இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜி-4 நாடுகளின் கூட்டத்தில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்துக்கான கோரிக்கை
இந்தியா உறுப்பினராக உள்ள ஜி-4 நாடுகளின் குழு என்ன கூறியது?

இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நீண்டகாலமாக பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியைக் கோரி வருகின்றன.

இந்த நாடுகளின் அமைப்பான ஜி-4, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை மீண்டும் கோரியுள்ளது.

இதனுடன் எல்-69 மற்றும் சி-10 நாடுகளின் குழுவும் இதற்கு ஆதரவளித்தன.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பேரவையின் 79-வது கூட்டத்தின் பின்னணியில் நடந்த ஜி-4 குழுவின் கூட்டத்தில், ஐ.நா. சபையில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பலதரப்பு அமைப்புகள் எதிர்கொள்ளும் தற்போதைய முக்கியமான சவால்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் ஐ.நா-வின் 'எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு', ஐக்கிய நாடுகள் சபையில் தேவையான சீர்திருத்தங்களுக்கான அழைப்பை வரவேற்றது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களுடன் கூடவே தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜி-4 நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில், ஐ.நா-வின் 'எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு' ஐக்கிய நாடுகள் சபையில் தேவையான சீர்திருத்தங்களுக்கான அழைப்பை வரவேற்றது.

 
தற்காலிக உறுப்பினர்களின் கோரிக்கை

நிரந்தர உறுப்பினர்களுடன், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று ஜி-4 நாடுகள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் வளரும் நாடுகளுடன் கூடவே சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் நாடுகளும் பிரதிநிதித்துவம் பெறமுடியும் என்று அந்த நாடுகள் கூறின.

ஆப்பிரிக்கா, ஆசிய-பசிஃபிக், லத்தீன் அமெரிக்கா, மற்றும் கரீபியன் நாடுகளுக்கு நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் பிரிவில் அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று ஜி-4 நாடுகளின் குழு தெரிவித்துள்ளது.

வியாழனன்று செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (Saint Vincent and the Grenadines) பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்-69 நாடுகள் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தின.

இந்தியாவும் எல்- 69 இல் உறுப்பினராக உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் சி-10 குழுவும் இந்தக்கோரிக்கையை விடுத்தது.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
'ஐ.நா. தன்னை புதுபித்துக் கொள்ளவில்லை'

எல்-69 மற்றும் சி-10 ஆகிய நாடுகளின் முதல் கூட்டுக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைக்கு கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்ட 'பிரேசில் 2024' கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த விஷயத்தை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழுப்பினார்.

"ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தின் கைதியாகவே உள்ளது. ஆனால் உலகளாவிய தெற்கு (குளோபல் சவுத்) அதன் உண்மையான முக்கியத்துவத்தை விடக் குறைவான முக்கியத்துவம் கொடுக்கும் முறை இந்த அமைப்பில் இனி தொடர முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தங்களின் கீழ் இந்த நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குவது அத்தியாவசியமாகிவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

"இன்றைய உலகம் புத்திசாலித்தனமாகவும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும், பல் துருவ முறையிலும் உருவாகி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதிலிருந்து அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கூட அது கடந்த காலத்தின் கைதியாகவே உள்ளது,” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் ஐக்கிய நாடுகள் சபை திணறுவதாகத் தோன்றுவதற்கு இதுவே காரணம். இதன் காரணமாக, அதன் தாக்கம் மற்றும் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்று அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 25) நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஜெய்சங்கர், ஐ.நா., பாதுகாப்பு சபையின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் பிரிவில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால், 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் தாக்கம் பலவீனமாகவே இருக்கும் என்று கூறினார்.

 
அன்டோனியோ குட்டரெஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் தமைமை செயலர் அன்டோனியோ குட்டரெஸ், பாதுகாப்பு சபை 'காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை’ என்று கூறினார்
நிரந்தர உறுப்பினராக இந்தியாவின் முயற்சிகள்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியா நீண்ட காலமாகக் கோரி வருகிறது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு சபை 21-ஆம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்றதாக இல்லை என்று இந்தியா கூறுகிறது. இன்றைய புவிசார் அரசியல் யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு அதில் சீர்திருத்தம் அவசியம், என்று கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினராகும் உரிமை தனக்கு உள்ளது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தியா கடைசியாக 2021-22-இல் தற்காலிக உறுப்பு நாடாக ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொண்டது.

ஒருதலைப்பட்சமான பாதுகாப்பு சபை இன்றைய உலகில் அமைதி மற்றும் பாதுகாப்பின் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டதாக இல்லை என்று இந்தியா கூறுகிறது.

உதாரணமாக, ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் யுக்ரேன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் விஷயத்தில் மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலர் அன்டோனியோ குட்டரெஸ், பாதுகாப்பு சபை 'காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை’ என்று கூறினார். அதன் செல்வாக்கு தற்போது குறைந்து வருவதாகவும், அதன் செயல்பாட்டு முறைகளை மேம்படுத்தாவிட்டால் அதன் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

தாத்தா, பாட்டி காலத்து முறையில் செயல்பட்டு நம் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.

இதே கருத்தை வலியுறுத்திய ஜெய்சங்கர், விதிகள் அடிப்படையிலான, பாரபட்சமற்ற, நியாயமான, திறந்தமனம் கொண்ட, உள்ளடக்கிய, சமத்துவமான மற்றும் வெளிப்படையான அமைப்பை இந்தியா விரும்புகிறது என்று கூறினார்.

 
ரவிசங்கர் பிரசாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரவிசங்கர் பிரசாத்
இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகாததற்கு நேருதான் காரணமா?

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா உறுப்பினராக இல்லாமல் இருப்பதற்கு, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை பா.ஜ.க அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறது.

2022-ஆம் ஆண்டு ஒரு செய்தியாளர் சந்திப்பில், 2004-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியான 'தி இந்து' நாளிதழின் ஒரு நகலைக் காட்டிப் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சீனா அதை பெறுவதற்கு இது வழி வகுத்தது,” என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைச் செயலருமான சசி தரூரின் 'நேரு - தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா' புத்தகத்தை ’தி இந்து’ நாளிதழின் அறிக்கை மேற்கோள் காட்டியிருந்தது.

1953-ஆம் ஆண்டு வாக்கில், ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் முன்மொழிவை இந்தியா பெற்றதாக சசி தரூர் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

நேருவின் மறுப்பு குறிப்பிடப்பட்டிருந்த கோப்புகளை இந்தியத் தூதரக அதிகாரிகள் பார்த்ததாக தரூர் எழுதியுள்ளார். உறுப்பினர் பதவியை தைவானுக்கு அளிக்குமாறும் அப்படி இல்லாவிட்டால் சீனாவுக்கு அதை வழங்குமாறும் நேரு பரிந்துரைத்தார் என்று அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

சீனா இன்று ஐ.நா. சபையில் நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கு நேருவே காரணம் என்றும் அதன் விளைவுகளை இந்தியா அனுபவிக்க நேரிடுகிறது என்றும் ரவிசங்கர் பிரசாத் சொல்ல நினைத்தார்.

 
ஐக்கிய நாடுகள் சபை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஜவஹர்லால் நேரு
உண்மை என்ன?

இந்த விஷயத்தில் நேருவை விமர்சிப்பவர்கள் வேறு பல உண்மைகளை புறக்கணிக்கிறார்கள் என்று பலர் கருதுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை 1945-இல் உருவாக்கப்பட்டது. அப்போதுதான் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் வடிவம் பெறத்தொடங்கியிருந்தன.

1945-இல் பாதுகாப்பு சபையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டபோது இந்தியா சுதந்திரம் பெற்றிருக்கவில்லை.

பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு எந்த முன்மொழிவையும் இந்தியா பெறவில்லை என்று 1955-ஆம் ஆண்டு செப்டெம்பர் 27-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நேரு தெளிவுபடுத்தினார்.

அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் டாக்டர். ஜே.என்.பாரேக்கின் கேள்விக்கு பதிலளித்த நேரு, "ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அதிகாரபூர்வ அல்லது அதிகாரபூர்வமற்ற எந்த முன்மொழிவும் வரவில்லை. சந்தேகத்திற்குரிய சில குறிப்புகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. அதில் எந்த உண்மையும் இல்லை,” என்றார்,

"ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை ஐ.நா. சாசனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு அதில் நிரந்தர உறுப்பினர் பதவி கிடைத்தது. சாசனத்தில் திருத்தம் செய்யாமல் எந்த மாற்றமும் அல்லது புதிய உறுப்பினரையும் சேர்க்க முடியாது. இவ்வாறான நிலையில், இந்தியாவுக்கு இடம் வழங்கப்பட்டதா, இந்தியா அதனை ஏற்க மறுத்ததா என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு தகுதியுடைய எல்லா நாடுகளையும் உள்ளடக்குவதே எமது அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்,” என்று குறிப்பிட்டார்.

1950-களில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் சீனா சேர்க்கப்படுவதற்கு இந்தியா பெரிய ஆதரவாக இருந்தது என்று கூறப்படுகிறது. அப்போது இந்த இடம் 'ரிப்பப்ளிக் ஆஃப் சைனா’ என்ற பெயர் கொண்ட தைவானிடம் இருந்தது.

1949-இல் சீன மக்கள் குடியரசு தோன்றியதில் இருந்து சீனாவை ஆளும் சியாங் கய்-ஷேக்கின் சீனக் குடியரசு பிரதிநிதித்துவப்படுத்தி வந்தது, மாவோவின் மக்கள் சீனக் குடியரசு அல்ல. இந்த இடத்தை சீன மக்கள் குடியரசிற்கு வழங்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துவிட்டது. ஆனால் பின்னர் அந்த இடம் 1971-ஆம் ஆண்டு வாக்கெடுப்புக்குப் பிறகு சீன மக்கள் குடியரசிற்கு வழங்கப்பட்டது.

சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது!

2 months ago
crude-oil-fe.jpg?resize=750,375 சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது!

சவுதி அரேபியாவின் முடிவால் சர்வதேச சந்தையில் நேற்றைய தினம்  (26)எண்ணெய் விலைகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளதாக  ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகின் முதன்மையான மசகு எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, டிசம்பர் மாதத்தில் OPEC உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உற்பத்தியை உயர்த்த தீர்மானித்ததன் பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெ்ய் ஒரு பீப்பாய்க்கு $1.86 அல்லது 2.53% குறைந்து 71.60 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $2.02 அல்லது 2.90% குறைந்து 67.67 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

சவுதி தனது அதிகாரப்பூர்வமற்ற எண்ணெய் விலை இலக்கான பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்கள் என்ற இலக்கை கைவிடத் தயாராக உள்ளது என்று இராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கொள்காட்டி தி பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது.

இதன்படி, சவுதி அரேபிய அதிகாரிகள் டிசம்பரில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக உள்ளனர், இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு எண்ணெய் விலை குறைப்புக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

https://athavannews.com/2024/1401335

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்திற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க் விஜயம் - சிறுவர்களை கொலை செய்யாதே என ஆர்ப்பாட்டம்

2 months ago
27 SEP, 2024 | 12:06 PM
image

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் யூத - இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை தெரிவித்துக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூதகொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

GYcKoAsbMAAa2Sr.jpg

ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஒருவர் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் இஸ்ரேலியர்களாகிய எங்களிற்கு பொய் சொல்வதை போல  உலகிற்கு பொய்சொல்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

GYcKn6UbEAAwZiE.jpg

சிறுவர்களை கொலை செய்வதை நிறுத்துங்கள்,யுத்தத்தை நிறுத்துங்கள் பணயக்கைதிகளை இஸ்ரேலிற்கு கொண்டுவாருங்கள் இராணுவதீர்வு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்களிற்கு திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/194898

சீனாவின் இந்த ஏவுகணை எவ்வளவு சக்தி வாய்ந்தது? உலக நாடுகள் பதற்றமடைவது ஏன்?

2 months ago
தொலைதூர ஏவுகணைகளை வைத்து சோதனை நடத்திய சீனாவால் புதிய பதற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் ஏவுகணைகள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், கெல்லி என்.ஜி & ஃப்ரான்செஸ் மாவோ
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கண்டம் தாண்டிய இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்தும் தொலைதூர ஏவுகணைகளை (intercontinental ballistic missile - ICBM) வைத்துச் சோதனை நடத்தியுள்ளதாகக் கூறியிருக்கிறது சீனா. சர்வதேச கடல்பரப்பில் சீனா இத்தகைய சோதனையை மேற்கொண்டது அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக கடந்த புதன்கிழமை அன்று (செப்டம்பர் 25) இத்தகைய சோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இது ஒரு வழக்கமான சோதனை ஓட்டம் தான் என்று கூறிய சீன அரசு, எந்த ஒரு தனி நாட்டையும் இலக்காக வைத்து இத்தகைய சோதனையை நடத்தவில்லை என்றும் கூறியுள்ளது. தொடர்புடைய நாடுகளுக்கு ஏற்கனவே இது சம்பந்தமான அறிக்கையை சீன அரசு அளித்துவிட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஜப்பானும், இது போன்ற அறிக்கை எதையும் தாம் பெறவில்லை என்று கூறியதோடு, சீனாவின் இந்தச் செயலுக்குக் கவலை தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்தச் செயல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிபுணர்கள் சீனாவின் அணு ஆயுதங்களின் திறனை இந்தச் சோதனை ஓட்டம் மேற்கோள்காட்டியுள்ளது என்று கூறுகின்றனர்.

'அசாதாரணமான சோதனை'

சீனா கடந்த ஆண்டு பாதுகாப்புத் தேவைக்காக அணு ஆயுதக் கிடங்கு ஒன்றை உருவாக்கியதற்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில், தற்போது நடந்திருக்கும் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட ICBM ஏவுகணைகள் 5,500கி.மீ., தூரம் பயணித்து இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை எனத் தெரியவந்துள்ளது. இது அமெரிக்காவின் பிராதன பகுதியையும் ஹாவாயையும் தாக்கும் எல்லைக்குள் சீனாவைக் கொண்டு வந்துவிடும் திறனைக் கொண்டதாக உள்ளது.

ஆனால் பெய்ஜிங்கில் உள்ள அணு ஆயுதக்கிடங்கானது, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஆயுதக்கிடங்குகளைக் காட்டிலும் அளவில் ஐந்து மடங்கு சிறியது. மேலும் சீனா தன்னுடைய அணு ஆயுதப் பராமரிப்பு தொடர்பாகக் குறிப்பிடும் போது இது வெறும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் பணிகள் என்றே தெரிவித்து வருகிறது.

செப்டம்பர் 25-ஆம் தேதி தொலைதூர ஏவுகணை ஒன்று உள்ளூர் நேரப்படி 08:44 மணி அளவில் சோதிக்கப்பட்டது என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது. அந்தச் சோதனை ஓட்டத்தின் போது ஏவப்பட்ட ஏவுகணையின் இலக்கு தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால், இந்தச் சோதனை ஓட்டம், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பயிற்சியின் ஒரு அங்கமாக வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான் என்று சீனாவின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், 1980-களுக்கு பிறகு கடந்த நாற்பது ஆண்டுகளில், தொலைதூர ஏவுகணையை சீனா ஏவியிருப்பது இதுவே முதல்முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்கு முன்பு இத்தகைய ஏவுகணைகளை சீனாவின் மேற்கே ஜின்ஷியாங் பிராந்தியத்தில் உள்ள தக்லமகான் பாலைவனத்தில் தான் ஏவப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தச் சோதனைகள் அசாதாரணமானவையல்ல. சீனாவுக்கு தான் இது அசாதாரணமானது என்று பிபிசியிடம் கூறுகிறார் ஏவுகணை ஆய்வாளர் அங்கித் பாண்டா.

சீனாவில் தற்போது அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் நிகழ்வுகள் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவிக்கிறார் அவர். சீனாவின் அணுகுமுறையிலும் இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருப்பதை இந்தச் சோதனை ஓட்டம் உறுதி செய்கிறது என்று கூறுகிறார் அவர்.

 
கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் (மாதிரி படம்)
பதற்றத்தில் உலக நாடுகள்

சீனாவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக நாடுகள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ஜப்பான் இது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் தாம் பெறவில்லை என்று கூறியதோடு, இது அதிக கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தைத் தவறாக மதிப்பிடுவதால் உருவாகும் சிக்கல்களை இது அதிகப்படுத்துகிறது என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது. மேலும் இந்தச் சோதனை ஓட்டத்திற்கான விளக்கத்தை சீனாவிடம் கேட்டிருப்பதாகவும் கூறியுள்ளது. இது தேவையற்றது என்றும், கவலை அளிக்கக் கூடிய நிகழ்வு என்றும் நியூசிலாந்து கூறியுள்ளது.

சீனா ஒரு அரசியல் செய்தியை அளிப்பதற்காக இதை மேற்கொண்டுள்ளது என்பதை நம்பவில்லை என்று பாண்டா கூறுகிறார். ஆசியாவில் தங்களின் அணு ஆயுத நிலைப்பாட்டை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளும் அமெரிக்காவுக்கும், இந்தப் பிராந்தியத்திலும் இது ஒரு தெளிவான நினைவூட்டலாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு ஒரு அழைப்பு மணியாக இந்தச் செயல் இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் இந்தச் செயல்பாடு, தைவான் தொடர்பான விவகாரங்களில் தலையீடு நிகழும் பட்சத்தில் உங்கள் நாடும் தாக்குதலுக்கு ஆளாகும் பலவீனமான நிலையில் தான் இருக்கிறது என்று செய்தியை அமெரிக்காவுக்குக் கடத்துவதாக இருக்கிறது என்று தென்கொரியாவில் உள்ளா எவா பெண்கள் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் லெய்ஃப்-எரிக் ஏஸ்லே கூறுகிறார்.

ஆசியாவில் உள்ள அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு, ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதலை நடத்துவதற்கான திறன் தன்னிடம் இருப்பதை நிரூபிக்க இந்தச் சோதனையை சீனா நடத்தியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இது நடந்திருக்கும் நேரம் தான் முக்கியம் என்று கூறுகிறார் சிங்கப்பூரில் உள்ள ராஜரத்தினம் சர்வதேச விவகாரங்கள் துறை பள்ளியில் ஆராய்ச்சியாளராக இருக்கும் ட்ரூ தாம்சன்.

"சீனா தன்னுடைய அறிக்கையில் எந்த நாட்டையும் இலக்காக வைத்து இதனை நடத்தவில்லை என்று கூறுகிறது. ஆனால் இந்தச் சோதனை ஓட்டம் சீனா, மற்றும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், தைவான் இடையே அதிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று கூறுகிறார் அவர்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு கடந்த ஆண்டு மேம்பட்டு வந்த நிலையில் இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது சீனா. கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய இடங்களில் தொடர்ந்து சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினரின் படகுகள் மோதிக்கொள்வது இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம், சீனாவின் உளவு விமானம் ஒன்று ஜப்பானின் எல்லைக்குள் உலவியதாகக் குற்றம்சாட்டிய ஜப்பான் அந்த நடவடிக்கையை துளியும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று குற்றம்சாட்டியிருந்தது.

 
பெண்டகன் அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அலுவலகமான பெண்டகன் சீனாவின் அணு ஆயுத கிடங்களில் 500க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறியுள்ளகூறியுள்ளது
500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள சீனா

சீனாவுடனான தைவானின் உறவும் இந்தப் பதற்றத்திற்கு மற்றொரு காரணம்.

தைவானின் பாதுகாப்பு அமைச்சர் புதன்கிழமை அன்று சீனா நடத்திய சோதனை ஓட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தைவானைச் சுற்றி 23 சீன ராணுவ விமானங்கள் செயல்பட்டு வந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடுருவல்களை நியாயப்படுத்தும் வகையில் ‘கிரே ஸோன் வார்ஃபேர்’ என்ற பெயரில் தைவானின் நீர்வழிகள் மற்றும் வான்வெளியில் சீனா தொடர்ச்சியாகக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி வருகிறது.

தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கியதால் ஜூலையில் சீனா அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்தது.

அமெரிக்காவைக் காட்டிலும் சீனா குறைவாகவே ஆயுதங்களை வைத்திருக்கும் போதும், கடந்த ஆண்டு சீனாவின் ஆயுதங்களை நவீனப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அலுவலகமான பெண்டகன், சீனாவின் அணு ஆயுத கிடங்களில் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவற்றில் 350 ஆயுதகங்கள் தொலைதூர ஏவுகணைகள் என்றும் மதிப்பிட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,000-ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவும் அமெரிக்காவும் 5,000-க்கும் மேலே இத்தகைய ஆயுதங்களை வைத்துள்ளது.

அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிட்டு வரும் சீனா பாதுகாப்புத்துறையின் ராக்கெட் படையிலும் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்தப் படையின் இரண்டு தலைவர்கள் பணி இழப்புக்கு காரணமாக அமைந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சுவிட்சர்லாந்து: தற்கொலை சாதனம் பயன்படுத்தி இறந்த பெண், விசாரணை வளையத்தில் முக்கிய நபர்கள்

2 months 1 week ago
தற்கொலை சாதனம் பயன்படுத்தி பெண் தற்கொலை : விசாரணை வளையத்தில் சுவிட்சர்லாந்து நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சார்கோ சாதனத்தின் சமீபத்திய மாடல் - ஜூலை மாதம் சூரிச்சில் காட்சிப்படுத்தப்பட்டது
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் இருக்கலாம்.)

சுவிட்சர்லாந்தில் ஒரு பெண் `தற்கொலை பாட்’ என்ற சாதனத்தைப் பயன்படுத்தித் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பலரை காவல்துறை கைது செய்துள்ளது.

திங்களன்று சார்கோ (Sarco) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தற்கொலை சாதனத்தைப் (suicide pod) பயன்படுத்தி ஒரு பெண் இறந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, ஷாஃப்ஹவுசென் (Schaffhausen) பகுதியில் உள்ள போலீசார், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் அதற்கு உதவி செய்தல் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் "பல நபர்களை" கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

சுவிட்சர்லாந்தில் சில நிபந்தைகளின் கீழ் `அசிஸ்டெட் மரணம்’ (assisted dying) சட்டப்பூர்வமானது என்றாலும், அதில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. சார்கோ நிறுவனத்தின் இந்தத் தற்கொலை சாதனம் பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டது.

 

காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து ஒரு தற்கொலை சாதனம் மற்றும் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.

சர்ச்சைக்குரிய இந்தத் தற்கொலை சாதனத்தைத் தயாரித்த நிறுவனம், ``மருத்துவ மேற்பார்வையின்றி, தனது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் நபரால் இந்தச் சாதனத்தை இயக்கி மரணிக்க முடியும்” என்கிறது.

காவல்துறையின் கூற்றுப்படி, ஜெர்மன் எல்லைக்கு அருகிலுள்ள சுவிட்சர்லாந்தின் தொலைதூரப் பகுதியான மெரிஷாவுசென் பகுதியில் திங்கள்கிழமை ஒரு வீட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சார்கோ சாதனத்தைப் பயன்படுத்தி நடந்த தற்கொலை குறித்து ஒரு சட்ட நிறுவனம் தகவல் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இறந்தவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

 

சுயவிருப்ப இறப்பை (Assisted dying) ஆதரிக்கும் ஒரு குழு, கடந்த ஜூலை மாதம், சார்கோ சாதனத்துக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த ஆண்டு முதல் முறையாக அது பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்த்ததாக அந்தக் குழு கூறியது.

இந்த கையடக்க சாதனத்தை 3D மூலம் அச்சிட்டு வீட்டிலேயே கட்டமைக்க முடியும். எனவே இது கருணைக் கொலைக்கான அணுகலை அதிகரிக்கிறது என்றும், மருந்துகள் அல்லது மருத்துவ நிபுணர்களைச் சாராமல் சுயவிருப்ப இறப்பை நிகழ்த்த உதவுவதாகவும் இதை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், சுவிட்சர்லாந்திலும் இந்தச் சாதனம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது.

இந்தச் சாதனத்தின் நவீன வடிவமைப்பு தற்கொலையைத் தூண்டுவதாக விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். மருத்துவ மேற்பார்வையின்றி அதை இயக்க முடியும் என்பது அதிக கவலைக்குரியது என்கின்றனர்.

பிரிட்டனிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் சுயவிருப்ப இறப்பு (Assisted dying) சட்டவிரோதமானது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்கு நிபந்தனைகளின் கீழ் சுயவிருப்ப இறப்பு சட்டப்பூர்வமானது.

சுவிட்சர்லாந்து: தற்கொலை சாதனம் பயன்படுத்தி இறந்த பெண், விசாரணை வளையத்தில் முக்கிய நபர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முக்கியத் தகவல்

மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

  • சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை)
  • மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (224 மணிநேர சேவை)
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
  • மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
  • தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!

2 months 1 week ago
putin-fe.jpg?resize=735,375 மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார்.

ரஷ்யாவை  ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், குறித்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ அணுசக்தி கோட்பாட்டில் மூன்று முக்கிய மாற்றங்களை கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1401211

லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி

2 months 1 week ago
26 SEP, 2024 | 10:33 AM
image

லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக அந்த நாட்டின் முப்படை பிரதானி மேஜர் ஜெனரல்  ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வெளிதாக்குதல்கள்  ஹெஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பினை அழிப்பதை நோக்கமாக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் எல்லையை கடந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வடபகுதியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஒரு இராணுவநடவடிக்கைக்கு தயாராகிவருகின்றோம். இதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் இராணுவகாலணிகள் எதிரியின் பகுதிக்குள் நுழையும், என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்காக ஹெஸ்புல்லா அமைப்பு இராணுவ நோக்கங்களிற்காக தயார்படுத்தியுள்ள கிராமங்களிற்குள் உங்கள் இராணுவ காலணிகள் நுழையும் என இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194823

பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்!

2 months 1 week ago
WhatsApp-Image-2024-09-26-at-08.30.22.jp பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்!

இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்னை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது

எனினும் கொள்கலன்னில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்ற விபரங்களை இஸ்ரேல் முறையாக வெளியிடாத காரணத்தினால் அவற்றை பெறுப்பேடுப்பதற்கு ஹமாஸ் நடத்தும் காசா சுகாதார அமைச்சு மறுத்து விட்டது.

இது குறித்து காசா சுகாதார அமைச்சின் ஊடக அதிகாரியான இயாத் கதீஹ் தெரிவிக்கையில்

அடையாளம் தெரியாத சடலங்களுடன் ட்ரக் வண்டி காசாவுக்குள் வந்தமை இது ஐந்தாவது சந்தர்ப்பமாகும் என்றும் இனிமேல் சுகாதார அதிகாரிகள் எந்த ஒரு உடலையும் அடையாளம் காணாத நிலையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவ‍ேளை ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேலியப் படைகள் நூற்றுக்கணக்கான உடல்களை அசுத்தமான நிலையில் காசாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளதுடன் அவற்றில் பல சிதைந்த மற்றும் அடையாளம் காண முடியாத சடலங்களும் அடங்கும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

https://athavannews.com/2024/1401176

தாய்லாந்தில் அமுலுக்கு வரும் ஒரே பாலின சட்டமூலம்!

2 months 1 week ago
தாய்லாந்தில் அமுலுக்கு வரும் ஒரே பாலின சட்டமூலம்! தாய்லாந்தில் அமுலுக்கு வரும் ஒரே பாலின சட்டமூலம்!

தாய்லாந்தின் அரசர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரே பாலின திருமண சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம், தென்கிழக்கு ஆசியாவில் அதிகாரப்பூர்வமாக குறித்த சட்டம் அமுல்படுத்தபடும் முதல் நாடாகவும், ஆசியாவில் மூன்றாவது நாடாகவும் தாய்லாந்து மாறியுள்ளது.

புதிய சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகுதியில் அதிகாரப்பூர்வ அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. புதிய சட்டம் 2025 ஜனவரி 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரும்.

இரண்டு தசாப்தகால முயற்சிகளுக்கு பின்னர் ஒரே பாலின சட்டமூலம், ஜூன் மாதம் செனட்டால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400989

செனகல் கடற்பரப்பில் 30 சிதைந்த உடல்களுடன் படகு மீட்பு - குடியேற்றவாசிகள் என அச்சம்

2 months 1 week ago
24 SEP, 2024 | 04:28 PM
image

செனெகலின் கரையோர பகுதியில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக தகவல் கிடைத்தாக தெரிவித்துள்ள செனெகல் கடற்படை இதனை தொடர்ந்து மரப்படகினை கரைக்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது.

உடல்கள் மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதால் மீட்பு அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக செனெகல் கடற்படை தெரிவித்துள்ளது.

செனெகலில் இருந்து ஸ்பெயினின் கனரி தீவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணி;க்கை அதிகரித்துள்ள நிலையிலேN இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

உடல்கள் சிதைவடைந்துள்ள நிலையை பார்க்கும்போது குடியேற்றவாசிகள் பல நாட்களாக அட்லண்டிக் சமுத்திரத்தில் மிதந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக  கடற்படையினர் தெரிவித்துள்;ளனர்.

குறிப்பிட்ட படகு எப்போது எங்கிருந்து புறப்பட்டது என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன.

நாங்கள் இவ்வாறான பயணங்களை தவிர்க்கவேண்டும் இது தற்கொலை என படகு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/194707

அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

2 months 1 week ago
heat.jpg?resize=750,375&ssl=1 அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு.

அரிசோனாவின் ஃபீனிக்ஸ் என்ற பாலைவன நகரத்தில் கடந்த 113 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் (38 டிகிரி செல்சியஸ்) அதிகமான வெப்பநிலை நிலவி வருகின்றது.

அதிரகரித்த வெப்பநிலை காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த பகுதியில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் பல பிராணிகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஃபீனிக்ஸ் மரிகோபா கவுண்டியில் இந்த ஆண்டின்  இதுவரையான காலப்பகுதியில் வெப்ப அலை காரணமாக 256 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1400846

Checked
Tue, 12/03/2024 - 16:32
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe