புதிய பதிவுகள்2
2024 : வென்றவை தோற்றவை – நிலாந்தன்.
2024 : வென்றவை தோற்றவை – நிலாந்தன்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்கள் தமிழ் அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்தன.இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலானது தமிழ் அரசியலில் சீரழிவை குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் சீரழிவை வெளியே கொண்டு வந்தது.
இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமையை வெளியே கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியத் தரப்பின் பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கமே தேர்தல்தான். கட்சித் தலைவரை தேர்தல்மூலம் தெரிந்தெடுப்பது கட்சி ஜனநாயகத்தைச் செழிப்பாக்கும். எனினும் தமிழரசுக் கட்சி தன் தலைவரை தேர்தல்கள்மூலம் தெரிந்தெடுக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கவில்லை.அந்த அடிப்படையில் சுமந்திரன்தான் கட்சியின் தலைவராக வந்திருக்க வேண்டும்.ஏனென்றால் சம்பந்தர் அவரைத்தான் தன்னுடைய வாரிசாக வளர்த்தார்.ஆனால் சுமந்திரன் ஜனநாயக வழிமுறைமூலம் தன் பலத்தைக் காட்ட விரும்பினார்.எனினும் அது அவருடைய பலவீனத்தைத்தான் காட்டியது.அவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் விளைவாக கட்சி இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அந்த தேர்தல் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் உட்பகையை வெளியே கொண்டு வந்தது. தமிழரசுக் கட்சி எந்தளவுக்குத் தூர்ந்து போய் உள்ளது என்பதனை அது வெளிப்படுத்தியது.
அதேபோல இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்த் தேசிய அரசியல் எந்தளவுக்குத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது.
சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டதை;டக்ளஸ்,பிள்ளையான்,அங்கஜன் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டதை;தமிழரசு கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்ததை,வெற்றியாகக் காட்டமுடியும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் ஆசனங்கள் குறைந்துவிட்டன.அது ஒப்பீட்டளவில் தோல்வி. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தேசமாக, பலமாக இல்லை.
இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம்.ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையிலும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை வெளிப்படுத்தும் இரண்டு தேர்தல் நடந்திருக்கின்றன.இந்த இரண்டு தேர்தல்களும் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியை பெறத் தேவையான பலத்தை பெருக்கிக் கொள்ள முடியாதிருக்கிறார்கள் என்பதனை வெளியே கொண்டுவந்தன.
எனினும் இந்த இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் ஒரு தேர்தல் வந்தது.அது ஜனாதிபதித் தேர்தல்.அதில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் ஏறக்குறைய 2,26,000.அது ஒரு அடிப்படை வெற்றி.கட்சிகளைக் கடந்து தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்ட போகிறோம் என்று கூறி ஒரு மக்கள் அமைப்பு அந்தத் தேர்தலைக் கையாண்டது.ஏழு கட்சிகளை வைத்து கட்சிகளைக் கடந்த ஒரு வாக்குத் திரட்டியை ஏற்படுத்தலாம் என்று அந்த அமைப்புத் திட்டமிட்டது. அதற்கென்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்புக்குள் கட்சிகளும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர்.
கட்சிகளைக கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தின.இங்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.தேர்தல் பரப்புரைக்காக பிரம்மாண்டமான கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட பொழுது,குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மக்களைக் கொண்டுவரும் பேருந்துகளுக்கு சிறிய தொகைப் பணம் வழங்கப்பட்டது. எரிபொருட் செலவு,சாரதி மற்றும் வழிநடத்தினருக்கான சிற்றுண்டி,தேனீர் செலவுகள். இவ்வாறு வலிகாமம் பகுதியில் இருந்து மக்களைக் கொண்டு வந்த ஒரு பேருந்து உரிமையாளரிடம் செலவுப் பணத்தை கொடுத்த பொழுது, அவர் அதை வாங்க மறுத்து விட்டார்.”15 ஆண்டுகளாக கட்சிகளுக்குத்தான் ஆட்களை ஏற்றி இறக்குகிறேன். இதுதான் முதல் தடவை இப்படி ஒரு கூட்டத்துக்கு ஆட்களைக் கொண்டு வருவது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை இப்படி ஒன்றாக ஒரு கூட்டத்துக்கு அழைத்துக் கொண்டு வருவது என்பது புதியது. 2009க்கு முந்திய நினைவுகளை அது மீட்டியது. எனக்கு நீங்கள் விருப்பம் என்றால் எரிபொருள் செலவு மட்டும் தாருங்கள்” என்று கேட்டார். கட்சி கடந்து தமிழ் மக்களைத் திரட்டும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு எழுச்சி ஏற்பட்டது என்பதனை காட்டும் ஒரு உதாரணம் அது.
அதுபோலவே ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை கிராமங்கள் தோறும் சிறிய மற்றும் பெரிய மக்கள் சந்திப்புகளை நடத்தியது.இந்த சந்திப்புகளில் 75 விகிதமானவற்றில் ஒரு விடயம் திரும்பத் திரும்ப மக்களால் கூறப்பட்டது. என்னவென்றால், “கட்சிகளோடு வராதீர்கள், மக்கள் அமைப்பாக வாருங்கள், கட்சிகள் வேண்டாம்” என்பதே அது.
ஆனால் மக்கள் அமைப்பு தேர்தலை நேரடியாகக் கையாள விரும்பவில்லை. அதற்குரிய கட்டமைப்புப் பலமும் இருக்கவில்லை. எனவே கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியது.அந்தப் பொதுக் கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய அனுபவம்.கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எழுதிச் செயல்படுவது என்பது.
ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையும் அவ்வாறான ஓர் அனுபவந்தான். ஆனால் அங்கே புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஓய்ந்தபின் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாகியது. அது தேர்தலில் ஒரு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது.கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் சுமார் ஒன்றரை லட்சம் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.
ஒரு பெரிய ஊடகத்தின் முதலாளி மக்கள் அமைப்பிடம் சொன்னார் “கிழக்கில் இருந்து கொண்டு வரும் ஒரு வேட்பாளருக்கு வடக்கில் வாக்களிப்பார்களா?” என்று. “ஒரு பத்தாயிரம் வாக்குகள் கிடைக்குமா” என்று கேட்டார்.ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட 20 மடங்கு வாக்குகள் கிடைத்தன.
தமிழ்ப் பொது வேட்பாளர் கடந்த 15 ஆண்டு கால தேர்தல் அரசியலில் தமிழ் மக்களுக்கு ஒரு புது அனுபவம். தமிழ்ப் பொது வேட்பாளரை இந்தியாவின் புரஜக்ட் என்று கூறி நிராகரித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது சிவில் சமூகங்கள் முன் கை எடுத்ததனால் உருவாகிய திரட்சி என்ற பொருள்பட அதை வியாக்கியானம் செய்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளை தேசியவாத வாக்குகள் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார்.அது காலத்தால் பிந்திய ஞானம்.கஜேந்திரக்குமாரை அந்த அணிக்குள் இணைப்பதற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை கடுமையாக உழைத்தது.ஆனால் கஜேந்திரன் ஒரு சந்திப்பின்போது சொன்னார் “இந்த விடயத்தில் நீங்கள் வென்றால் நாங்கள் எங்களிடம் இப்பொழுது இருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.அதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் பொது வேட்பாளரை எதிர்க்கிறோம்.” என்று.
சிறீதரன் சொன்னார் “மக்களமைப்பு சுயேட்சையாக வேட்பாளர்களை இறக்கப் போவதாக எமது ஆதரவாளர்கள் கதைக்கிறார்கள்” என்று. ஒரு மூத்த அரசியல்வாதி மற்றொரு மூத்த அரசியல்வாதி மற்றொரு கட்சியின் தலைவரிடம் கூறினாராம் “இவங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் இல்லாமல் போய் விடுவோம்” என்று.
சுமந்திரன் அதனை மூர்க்கமாக எதிர்த்தார். அதை ஒரு கேலிக் கூத்து என்று வர்ணித்தார். மக்கள் அமைப்பைக் கடுமையாக எச்சரித்தார். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழும் வாக்குகள் அனைத்தும் “வீணாய் போகும் வாக்குகள்” என்று எச்சரித்தார்.அதனை அவர் சஜித்தின் கூட்டத்தில் பேசும்போது சொன்னார்.
தமிழ் ஊடகங்களிலும் ஒரு பகுதி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இருந்தது. ஊடகவியலாளர்களில் சிறு பகுதியினர் எதிராக இருந்தார்கள். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் முகநூலில் எழுதினார் “கட்டுரை எழுதுவது வேறு தேர்தலில் வேட்பாளர் நிறுத்தி வெல்வது வேறு இரண்டும் ஒன்று அல்ல” என்று. தமிழ் மக்கள் பொதுச்சபையைச் சேர்ந்த கருத்துருவாக்கிகளை சில ஊடகவியலாளர்களும் சில யூடியூப் வெறுப்பர்க்களும் எதிரியைவிடக் கேவலமாக சிறுமைப்படுத்தினார்கள்.
தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் பயந்தார்கள். பெரும்பாலான சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் பயந்தார்கள். அல்லது உஷார் அடைந்தார்கள். “நாடு முழுவதும் மாற்றத்துக்காக நிற்கும் பொழுது நீங்கள் மட்டும் அதற்கு எதிராக போகப் போகிறீர்களா” என்று அனுர கேட்டார்.தமிழ் பொது வேட்பாளரை உங்களால் நிறுத்த முடியாது. முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரனிடம் சொன்னார்.”தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது பொதுவான பேரழிவு”என்று சஜித் எச்சரித்தார்.
ஆனால் எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் வடக்கையும் கிழக்கையும் இணைத்தார்.தமிழ் தேர்தல் வரலாற்றில் ஒரு தனி நபருக்கு கிடைத்த ஆகக்கூடிய வாக்குகளை அவர் வென்றார்.
எனினும் பொது வேட்பாளருக்கு கிடைத்த அடிப்படை வெற்றியை கொண்டாட முடியவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டது.அடுத்த தேர்தலை கையாள்வதற்கு மக்கள் அமைப்பு தயாராக இருக்கவில்லை.
மக்கள் அமைப்புக்குள் இருவேறு கருத்துக்கள் கிளம்பின. அதனால் மக்கள் அமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன.மக்கள் அமைப்பு தேர்தலைக் கையாளாத ஒரு பின்னணியில்,வெற்றிபெற்ற சின்னத்தைத் தாங்கள் சுவிகரிப்பது என்று பொதுக் கட்டமைப்புக்கள் இருந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது. அது பொதுக் கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறானது.அதன் விளைவாக கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு சோதனைக்கு உள்ளாகியது. சங்குச் சின்னத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கவில்லை.ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைக்கப்படாத கட்சிகள் மீண்டும் சிதறின. அதிகரித்த அளவில் சுயேச்சைகள் தோன்றின.தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குத் தண்டனையாக அமைந்தன.
அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஒரே அளவு ஆசனங்கள்.தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை மேலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி தனிக் கட்சியாக அதிக ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியைக் கொண்டாட முடியாது. ஏனென்றால் தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்களை தேசமாகத் திரட்டுவது.ஆகப் பெரிய திரளாகத் திரட்டுவது. அவ்வாறு திரட்டப்படாத காரணத்தால்தான் இம்முறை தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை குறைந்தது.தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தமிழரசுக் கட்சியும் உட்பட எல்லாக் கட்சிகளும் தோல்வியடைந்து விட்டன.
எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்களும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவுகளை வெளியே கொண்டுவந்தன.எனினும் செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளைப் பலப்படுத்தியது. இந்த ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்த குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரனுபவம் அது. கட்சிகளைக் கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளை அது புதுப்பித்தது. அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக உழைத்தால் மட்டும்தான் புதிய ஆண்டில் தமிழ் மக்கள் வெற்றி பெறலாம்.
https://athavannews.com/2024/1414409
சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை!
சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை!
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.
அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை
தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.
இதில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
https://athavannews.com/2024/1414404
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி !
181 பேருடன் சென்ற தாய்லாந்து விமானம் விபத்து!
181 பேருடன் சென்ற விமானம் தென் கொரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய சுவரில் மோதியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
விபத்தின் போது, பயணிகள் விமானத்தில் 175 பயணிகளும், 6 விமான பணிப்பெண்களும் இருந்துள்ளனர்.
தாய்லாந்தின் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
இதேவேளை மீட்புப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக கொரிய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
https://athavannews.com/2024/1414412
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி !
தென் கொரியா: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 85 பேர் உயிரிழப்பு
பட மூலாதாரம்,REUTERS
29 டிசம்பர் 2024, 01:50 GMT
புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
பட மூலாதாரம்,REUTERS
இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
பட மூலாதாரம்,REUTERS
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்தது என யோன்ஹாப் கூறுகிறது.
இறந்த 85 பேரில் 46 பெண்கள் பேர் பெண்கள் என்றும், 39 பேர் ஆண்கள் என்றும் அந்நாட்டின் தேசிய தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.
ஒரு விமானப் பணியாளர் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளதாகக் கூறும் தீயணைப்புத்துறை, 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம்,REUTERS
முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.
ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c20e26w86g7o
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயிரச்சுறுத்தல் ஏதும் கிடையாது ; பாதுகாப்பை மேலும் வரையறுக்கலாம் -அமைச்சர் கிருஷாந்த அபேசேன
Published By: DIGITAL DESK 2 28 DEC, 2024 | 05:24 PM
(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலுக்கும் கிடையாதென புலனாய்வு பிரிவு வழங்கிய அறிக்கையின் பிரகாரமே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பு அதிகம் என்று குறிப்பிடப்பட்டால் அதை 30 ஆக குறைக்கலாமென அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு காணப்படும். அரசியலில் இருந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் போலியான பல குற்றச்சாட்டுக்களை தற்போது முன்வைக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் கிடையாது என்று அறிக்கை கிடைத்ததன் பின்னரே வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு மீளப் பெறப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 60 பொலிஸார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் பாதுகாப்பு குறைக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டால் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பை 30 ஆக குறைக்கலாம். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் குறிப்பிடும் தரப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்புக்கு அளிக்க வேண்டும். அப்போது அது குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றார்.
https://www.virakesari.lk/article/202392
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE
படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்
கட்டுரை தகவல்
எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
பதவி, பிபிசி தமிழ்
"இது என்னுடைய கட்சி. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம். அது யாராக இருந்தாலும்..." - பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக சனி அன்று (டிசம்பர் 28) அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறிய வார்த்தைகள் இவை.
கட்சியின் இளைஞரணி தலைவராக தனது மகள்வழிப் பேரனை முன்னிறுத்தியதற்கு எதிராக அன்புமணி கோபப்பட்டதால், ராமதாஸ் இவ்வாறு கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் என்ன நடந்தது? ராமதாஸ் உடன் அன்புமணி வார்த்தை மோதலில் ஈடுபட்டது ஏன்? இதுகுறித்து பா.ம.க நிர்வாகிகள் கூறுவது என்ன?
10.5% இடஒதுக்கீட்டை விட அதிக பலன் பெற்றதா வன்னியர் சமூகம்? ஆர்.டி.ஐ மூலம் வெளியான புதிய தகவல்- பாமக கூறுவது என்ன?
தமிழ்நாட்டில் தேமுதிக, பாமக கட்சிகள் பலம் பெற்றுள்ளனவா? ஓர் அலசல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கள்ளச்சாராய மரணங்கள் முதல் படுகொலைகள் வரை - பலன் தராத எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள்
பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 28) நடைபெற்றது.
பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE
பொதுக்குழு கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பிறகு கட்சியின் வளர்ச்சி குறித்து ராமதாஸ் பேசினார்.
பிறகு, கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இன்று முதல் முகுந்தன் பரசுமரான் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். "மருத்துவர் அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் செயல்படுவார்" எனவும் ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துப் பேசுவதற்காக கௌரவ தலைவர் கோ.க.மணி மைக்கை கையில் எடுத்தார்.
அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய அன்புமணி, "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா... என்ன அனுபவம் இருக்கிறது, கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குப் பதவி கொடுங்கள்" என்று தெரிவித்தார்.
பாமக மீது குடும்பக் கட்சி என்ற விமர்சனம் இருப்பதாகவும் அன்புமணி கூறினார். இதனால் கோபம் அடைந்த மருத்துவர் ராமதாஸ், "கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் இந்தக் கட்சியில் யாரும் இருக்க முடியாது" எனப் பதில் கொடுத்தார்.
"இது நான் உருவாக்கிய கட்சி" என ராமதாஸ் கோபத்தை வெளிப்படுத்த, அதற்கு அன்புமணி, "சரி" என்று மட்டும் பதில் அளித்தார். இதனால் மேலும் கோபம் அடைந்த ராமதாஸ், "மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்" என்றார்.
மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன?28 டிசம்பர் 2024
யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி?28 டிசம்பர் 2024
வெளியேறிய அன்புமணி
பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE
அப்போது தன் கையில் இருந்த மைக்கை அன்புமணி கீழே வைத்தார். மீண்டும் அதை எடுத்துப் பேசிய அவர், "பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளேன். அங்கு என்னைத் தொண்டர்கள் சந்திக்கலாம்" எனக் கூறிவிட்டு செல்போன் எண்ணைப் பகிர்ந்தார்.
அப்போதே, "முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் விருப்பம் இல்லையென்றால்" என ராமதாஸ் கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, "கட்சியை விட்டுப் போகலாம்" என நிர்வாகிகள் தரப்பில் ஒரு சாராரிடம் இருந்து பதில் வந்துள்ளது.
தொடர்ந்து, "நான் தொடங்கிய கட்சி இது. நான் சொல்வதைத் தான் செய்ய வேண்டும். இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம்" என ராமதாஸ் கூறினார். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அன்புமணி வெளியேறினார்.
முகுந்தன் பரசுராமன் யார்?
பொதுக்குழுவில் கட்சியின் இளைஞரணித் தலைவரின் பெயரை ராமதாஸ் அறிவித்தபோது, மேடையே நோக்கி முகுந்தன் பரசுராமன் வரவில்லை.
"யார் இந்த முகுந்தன் பரசுராமன்?" என பா.ம.க நிர்வாகிகளிடம் கேட்ட போது, ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் என்றும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்த்துக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.
இந்தச் சம்பவம் பாமக தொண்டர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளன. கூட்டத்தில் அன்புமணி பேசும் போது ஒரு சாராரும் ராமதாஸ் பேசும் போது ஒரு சாராரும் கை தட்டி தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
'வளாகம் மட்டுமல்ல, வகுப்பறையிலும் கூட பிரச்னைதான்' - அண்ணா பல்கலை. மாணவிகள் கூறியது என்ன?28 டிசம்பர் 2024
சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்27 டிசம்பர் 2024
கட்சியின் செல்வாக்கில் பாதிப்பு வருமா?
பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE
படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்
"கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருக்கும் போது, பல்வேறு விஷயங்களைப் பேசுவதற்கான தளம் கிடைக்கும். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லாத கட்சியாக பா.ம.க இன்று மாறிவிட்டது" என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி.
பாமகவின் தொடக்க காலங்களில் தலித் எழில்மலை, பேராசிரியர் தீரன் போன்றோர் கட்சியை வளர்த்ததாக கூறிய சிகாமணி, "வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்த்துப் பேசிய ராமதாஸ், பிற்காலத்தில் தனது மகனை முன்வரிசைக்கு கொண்டு வந்தார்" என்கிறார்.
குடும்பத்துக்குள் பதவிகளைக் கொடுப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியதைக் குறிப்பிட்ட சிகாமணி, "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியாவை போட்டியிட வைக்கும் போது இந்தக் கேள்விகளை அன்புமணி முன்வைத்திருக்க வேண்டும்?" என்றார்.
"அன்புமணியைத் தவிர ராமதாசுக்கு எதிராக வேறு யார் எதிர்த்துப் பேசியிருந்தாலும் இந்நேரம் கட்சியை விட்டு நீக்கியிருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள், வடமாவட்டங்களில் அக்கட்சியை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்" என்று சிகாமணி கூறினார்.
மன்மோகன் சிங்: இந்தியாவின் தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி27 டிசம்பர் 2024
நல்லகண்ணு: சிறையும் போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை - முக்கிய தருணங்கள்26 டிசம்பர் 2024
பாமக நிர்வாகிகள் சொல்வது என்ன?
பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE
படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்
இதுகுறித்து, பாமக கௌரவ தலைவர் கோ.க.மணியிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை.
"தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம்" என்ற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசிய பாமகவின் மூத்த தலைவரும் மாநில நிர்வாகியுமான ஒருவர், "எல்லா கட்சிகளுக்குள்ளும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இது எங்கள் கட்சியின் பொதுக்குழு. அதில் தங்களின் கருத்தை சிலர் முன்வைத்துள்ளனர்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பொதுக்குழுக்களில் தங்களின் எதிர்ப்பை நிர்வாகிகள் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. பாமக பொதுக்குழுவில் நடந்ததை ஆரோக்கியமான ஒன்றாகக் கருத வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"கட்சியின் சீனியர்களை மதிக்க வேண்டும் என அன்புமணி கூறுவதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறிய அவர், "கட்சிக்குள் நியமனம் தொடர்பாக நடந்த கலந்துரையாடல் இது. கட்சியும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்" எனக் கூறினார்.
முகுந்தன் பரசுராமனை நியமனம் செய்வதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிப்பது குறித்துக் கேட்டபோது, "இதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை" எனக் கூறியதோடு மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c77jm5gn262o
மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்
29 DEC, 2024 | 11:11 AM
ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார்.
கனடாவில் வசித்துவந்த இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.
யோகேந்திரநாதன் எழுதிய “34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு” நாவல் அண்மையில் வெளியாகி மிகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/202436
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
LIVE
4th Test, Melbourne, December 26 - 30, 2024, India tour of Australia
Australia (70 ov) 474 & 189/9
India 369
Day 4 - Session 3: Australia lead by 294 runs.
Current RR: 2.70 • Min. Ov. Rem: 19 • Last 10 ov (RR): 28/1 (2.80)
போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!
சில வேளைகளில் நாங்கள் சில காரியங்களை செய்யும்போது அது பிழையாகி போனால் அதை அப்படியே சரி செய்யாமல் முதலில் இருந்து தொடங்குவோம். அப்படி ஒரு நாடு தான் இந்தியா. இந்தியாவை திருத்த முடியாது அழித்து தான் முதலில் இருந்து கட்டவேண்டும். எனவே 3-ஆம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அதை சரியாக பயன்படுத்தி இந்தியர்கள் முயன்றுபார்க்கலாம்.
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் தார்ப்பரியத்தை இந்த சுற்றுசூழல் ஆர்வலர்கள் நன்கு புரிந்துகொண்டுதான் செயற்பட்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவில் மிருகக் காட்சிசாலைக்கு போகாது சீனர்களின் சமயலறைக்குதான் போகும் என்பதை மனதில் வைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே இங்கு ஜீவகாருண்யத்திற்குத்தான் முதலிடம்.
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
ஓய்வில் இருந்து கொண்டு விசாரணையை எதிர்கொள்ள சுலபமாக இருக்கும் இவருக்கு. இப்போ, இவர் செய்த கொடூரங்களை, சிங்கள மக்கள் பார்வையிட செய்ய வேண்டும்.
"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்."
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
தப்பித்து வெளிநாடுகளுக்கு ஓடிய குரங்குகளும், சமயத்தில் திரும்பி வரும். கவனமாக தப்ப விடாமல், விமான நிலையத்தில் வைத்தே பிடித்து அனுப்பிவிடுங்கள் சீனாவுக்கு. இந்தக்குரங்கு இங்கிலிஷ் கதைக்கும் என்றும் சொல்லுங்கள் மறக்காமல்.
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி !
நான் அடிக்கடி விமானப்பயணம் செய்பவன்.. இப்பெல்லாம் விமானம் ஏறேக்கையும் இறங்கேக்கையும் கால்கை உடம்பு எல்லாம் கூசுது வாற செய்திகளை பாத்து..
போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!
சுமந்திரன் கூறியது நடைமுறை சார்ந்தது. இனப்படுகொலை நடைபெற்றதை நிரூபிப்பது கடினம் என்றுதான் சுமந்திரனால் கூறப்பட்டது.
சுமந்திரன் என்கிற தனிமனிதனை ஏசுவதை விடுத்து இனப்படுகொலை நடைபெற்றது என்பதை நிரூபிக்க புலம்பெயர் தமிழர் நாம் என்ன செய்தோம்?
(இந்த இந்தியாவைத்தான் இலங்கைத் தமிழர் தொப்புழ்கொடி உறவு என்றும் தந்தையர் நாடு என்றும் நாம் கொண்டாடினோம். 😏)
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி !
நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை
CNN புலனாய்வுப் பொறுப்பாளரின் ஆசை நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சியே,...😁
எம்.பி.க்களின் சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 15 வரை காலக்கெடு
எம்.பி.க்களின் சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 15 வரை காலக்கெடு
28 Dec, 2024
(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளது.
புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 82(ஏ) பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து 3 மாத காலத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருடாந்தம் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை 2025.02.15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாதென அரசு அறிவிப்பு
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாதென அரசு அறிவிப்பு
28 Dec, 2024
(நமது நிருபர்)
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி உத்தரவு கடிதங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் கனடாவில் தற்போது தற்காலிகமாக பணியாற்றும் மற்றும் பணியாற்றுவதற்கான பணி உத்தரவு பெற்றுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
இதுகுறித்து கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது,
நமது பொருளாதாரத்திற்குத் தேவையான திறமையாளர்களை ஈர்க்கும் அதே வேளையில், மோசடியைக் குறைப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
கனடாவின் வெற்றிக்கு குடியேற்றம் எப்போதுமே ஒரு மூலக்கல்லாக இருந்து வருகிறது.
கனடாவிற்கு சிறந்த மற்றும் பிரகாசமானவற்றை வரவேற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் .
இதன் மூலம் அனைவருக்கும் தரமான வேலைகள், வீடுகள் மற்றும் அவர்கள் செழிக்கத் தேவையான ஆதரவைப் பெறலாம் என்றார்.
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed