புதிய பதிவுகள்2

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

3 months 3 weeks ago
இவர்கள் கலைகிறார்களோ இல்லையோ மக்கள் கலைத்தும் களைந்தும் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், சிலதுகள் புரிந்தும் புரியாதது மாதிரித் திரிகிறார்கள். அதைவிட இனிக் கலைக்கவோ, களையவோ ஏதும் இல்லை. கட்சியை இயங்காதவகையில் எதிர்வரும் கால நீதிமன்ற நடவடிக்கைகள் அமையலாம். நட்பார்ந்து நன்றியுடன் நொச்சி

வாடியிட்டபுலம்

3 months 3 weeks ago
வாடியிட்டபுலம் வாடியிட்டபுலம் இயற்கை அழகு, பரவிக் கிடக்கும் வயல்வெளிகள், சுற்றிவர இருக்கும், பசுமையான காடுகள், கோடையிலும் வற்றாத குளம் கொண்ட அழகிய கிராமம். வானவில்லின் நிறங்களில் பூத்திருக்கும் வண்ணமயமான பூக்களுடன் கூடிய நெல் வயல்கள் கண்களுக்கு விருந்து படைக்கும். வயல்களுக்கு இடையே உள்ள சிறிய நீர்நிலைகள் கதிரவன் ஒளியில் மின்னி, கிராமத்தின் அழகை மெருகூட்டுகின்றன. தென்றல் காற்று, பறவைகளின் கீச்சுக் குரல்கள் என வயல்வெளி நமக்கு அளிக்கும் அனுபவங்கள் எண்ணிலடங்கா. கிராமத்தின் இதயமென இருக்கும் குளம் மனிதருக்கு மட்டுமல்ல பலவித உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமே இந்த குளம் தான். வயல்வெளியில் ஓடி விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு ஒலி, குளக்கட்டில் நீச்சலடிக்கும் சிறுவர்களின் குரலோசை கிராமத்தின் அமைதியை உடைத்து மகிழ்ச்சியை பரப்புகிறது. சேந்தன் தலை நகரத்தில் உள்ள வெளி நாட்டு நிறுவனத்தில் கணனி துறையில் வேலை செய்கிறான். இக்கரைக்கு அக்கரை பச்சை போல் பலரும் வரத் துடிக்கும் அதிக வருமானம் கொண்ட தொழில். கார் வீடு என பல வசதிகள் இருந்தாலும் ஒரு நிறைவற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தான் சேந்தன். 30 வயதாகியும் திருமணம் செய்யாமல் இளமையை தொலைத்து இரவு பகல் வேலை செய்தான். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. நகரத்தின் கொந்தளிப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ஒரு அமைதி தரும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை சேந்தனுக்கு எப்போதும் இருந்து வந்தது. ஒரு நாள் தனது பள்ளி நண்பன் மலரவனை பார்க்க அந்த அழகான கிராமம் வாடியிட்டபுலத்திற்கு புறப்பட்டான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே காதுக்கு இனிமை தரும் பறவைகளின் ரீங்காரம் சேந்தனை வரவேற்றது. கிராமம் என்றாலே இளையராஜாவின் பாடல் இல்லாமலா போகும், எங்களை போன்ற நகரத்து வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது அவரின் பாடல்களே. "வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ…மானே" . . பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு பச்ச மனசு பத்திக்கிருச்சு கைய கட்டி நிக்கச்சொன்னா காட்டு வெள்ளம் நிக்காது காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது சாமிகிட்ட கேளு யாரு போட்ட கோடு பஞ்சுக்குள்ள தீய வச்சு பொத்தி வச்சவுக யாரு” எங்கிருந்தோ வந்த பாடல் வரிகள் செவிக்கு விருந்தளித்தது. மலரவனை அவன் வீட்டில் சந்தித்தான். மலரவனும் உரிய முறையில் உபசரித்தான். மதிய உணவின் பின்பு மாமர நிழலில் சாக்கு கட்டிலில் சரிந்தவாறு தங்கள் பாடசாலை கதைகளை அசை போட்டார்கள். பாடசாலையில் தங்களுடன் படித்த செங்கமலம் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் கலை பீடத்தில் படித்ததாகவும், அவள் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருந்ததாகவும் சேந்தன் சொன்னான். ஒரு சிறிய இடைவெளியின் பின்பு "விதி எங்கள் வாழ்க்கையில் விளையாடியது" என்றான். அவள் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டாள், காரணம் தெரியவில்லை. அவளின் சிநேகிதி மூலமாக பல கடிதங்கள் அனுப்பினேன், பதிலில்லை என்றான். சேந்தன் பல்கலைக்கழக படிப்பை முடித்து கணனி துறையில் வேலை செய்ய தொடங்கினான். ஒரு நாள் செங்கமலத்தின் சிநேகிதி ஊடாக ஒரு கடிதம் சேந்தனுக்கு வந்தது. ஆம் அது செங்கமலத்திடம் இருந்து தான் வந்தது. படபடப்புடன் கடிதத்தை திறந்து படித்தான். அன்பின் சேந்தன், நான் நலம், நீங்களும் அது போலவே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கடிதங்கள் கிடைத்தன, நான் பதில் போட முடியாத நிலையில் இருந்தேன், மன்னிக்கவும். உங்கள் உள்ள கிடைக்கைகளை தெளிவாக எழுதி இருந்தீர்கள். நீங்கள் மிகவும் நல்லவர், அன்பானவர். நான்தான் உங்களை அடைய கொடுத்து வைக்கவில்லை. கடமையா? காதலா? என்றால், என்னுள் கடமைதான் வென்றது. அன்று உங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் தேசம் காக்க புறப்பட்டுவிட்டேன். சிலவேளை இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது நான் இந்த உலகில் இருப்பனோ தெரியாது. என்னை மறந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் என்றும் அன்புடன் செங்கமலம் சேந்தனின் கதையை கேட்டு மலரவன் கண்களில் நீர் பனித்தது. அவனது வீட்டு வானொலியில் ஸ்ரீனிவாஸின் பாடல் ஒலித்தது. "நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" மன்னிக்கவும் எனது சோகக் கதையை சொல்லி உன்னை அழ வைத்து விட்டேன், என்றான் சேந்தன். மூன்று நாட்கள் மலரவனுடன் தங்கி விட்டு, அவனது உந்துருளியில் அருகில் உள்ள நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையம் சென்றான். அவன் பேருந்து படிகளில் ஏறும் போது கால்கள் இயலாத பொண்ணு ஊன்று தடிகளுடன் இறங்க முற்பட்டாள். சேந்தன் அவளுக்கு உதவ போனான் "உங்களுக்கு சிரமம் தந்து விட்டேன் " என்றாள். எங்கேயோ கேட்ட பழகிய குரல், திரும்ப கண்களை பார்த்தான் " ஆமாம் நம்ம செங்கமலம்". தனது நண்பன் மலரவனை அழைத்தான், அவன் மனம் ஆகாயத்தில் சிறகடித்து பறந்தது. பேச்சு வரவில்லை. மலரவன் அந்த பெண் செங்கமலம் தான் என்று உறுதி செய்தான். அவள் அருகில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இருப்பதாக சொன்னாள். தனது சக தோழியை காப்பாற்ற போய் கண்ணி வெடிக்கு கால்களை இழந்ததாக சுருக்கமாக கூறினாள். சேந்தன் கண்களில் நீர் வழிந்தது. என்னவள் கிடைத்து விட்டாள் என்ற சந்தோசமா? இல்லை இந்த நிலையில் அவளை பார்க்கிறேன் என்ற சோகமா? நிச்சயமாக முதலாவதுதான். நகரத்தில் தனது சொத்துக்களை விற்று, தனது வேலையும் ராஜினாமா செய்தான் சேந்தன். அவளையும் அவளைப்போன்று இருக்கும் பலருக்கு தான் உதவி செய்ய போவதாக முடிவெடுத்தான். மலரவனின் உதவியுடன் வாடியிட்டபுலத்தில் 6 ஏக்கர் நிலம் வேண்டி கூட்டு பண்ணை விவசாயம் தொடங்கினான். செங்கமலத்தை சம்மதிக்க வைத்து திருமணமும் செய்தான். இன்று இவர்களின் நிழலில் பலர் வாழ்கிறார்கள். ரெண்டு மரங்கள் வைத்தவன் இன்று ஒரு தோப்பையே உருவாக்கினான். நகரத்தில் ஒரு நிறைவற்ற வாழ்க்கை வாழ்ந்த சேந்தன் இப்போ மிகவும் சந்தோசமாக வாழ்கிறான். பரந்த நீல நிற வானம், தூரத்தே பறக்கும் பறவைகள், உடலுக்கு வெது வெதுப்பை தரும் சூரியன், மரங்களுக்கு இடையே வரும் குளிர்ச்சியான காற்று, கால்களை வருடும் நெல் கதிர்கள் இவற்றின் நடுவே தனக்கு பிடித்தவளுடன் வாழ்கிறோம் என்ற ஆத்ம திருப்தி அவனது இதயத்தை நிரப்புகிறது. முற்றும் அகஸ்தியன்

சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?

3 months 3 weeks ago
சூப்பர் அண்ணா. நான் இப்போதும் தலைக்கு வைப்பது நல்லெண்ணைதான். தொண்டை கரகரப்புக்கு கொஞ்சமாய் எடுத்து தடவினால் பறந்து விடும். முன்பு ஊரில் இருக்கும் போது சனிக்கிழமை தோறும் அரையில் ஒரு துண்டை கட்டியபடி நல்லெண்ணையில் மலையாள பட போஸ்டர் மாதிரி நானும் அப்பாவும் மின்னுவோம்🤣. கொழும்பு, வெளிநாடு வந்தாலும் முழுகும் போது நேரம் இருப்பின் ஒரு அரைமணி நேரம் எண்ணை வைத்து ஊறவிட்டே முழுகுவேன். ஒருமுறை இப்படித்தான் மகனுக்கு காது வலி - கொஞ்சம் நல்லெண்ணையை விட்டு சில நிமிடத்தில் கவிழ்த்தால் என்ன என நான் ஐடியா சொன்னேன். குழந்தையாக வெளிநாடு வந்து விட்ட மனைவி என்னை what a country brut என்பதாக லுக்கு விட்டு விட்டு, ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார். அங்கே ஒரு வயதான ஆங்கில வைத்தியர் சோதித்து விட்டு, ஒரு சின்ன இன்பெக்சன் அதனால் வந்த வலிதான் மருத்து ஏதும் தேவையில்லை, வலியை குறைக்க உங்கள் வீடுகளில் பாவிக்கும் seed oil எதையாவது விடலாம் என்றால்… மனைவியின் முகத்தில் வழிந்தது ஒரு போத்தல் எண்ணை அல்ல, அசடு🤣

தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை

3 months 3 weeks ago
பேசாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போல பரம்பரை தலைவர் என்று அறிவித்து விட்டால் இப்படியான பொது சபை கூட்ட வேண்டிய அவசியமே இல்லை.

சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?

3 months 3 weeks ago
சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? அல்லது சீதையை ஶ்ரீராமன் தொடவே இல்லையா? -பெரியார் திரைப்படப்பாடல்- நெஞ்சு கூடு கட்டும். தொய்வு வரும். கண்பார்வை மங்கும். இதெல்லாம் கூட ஓக்கே… கைரேகை அழிந்து விடும் எண்டு ஒருத்தன் மிரட்டிட்டான் பாஸ்….🤣

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

3 months 3 weeks ago
எங்கே யார் யார் பக்கம் என்பதல்ல முக்கியம் யாழ் மாவட்டத்திற்கு தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்கும் அளவுக்கு இரணைமடு குளத்தில் தண்ணீர் உள்ளதா என்பதே முக்கியம். அது இல்லையென்றால் இது எமக்குள் பகை வளர்க்கும் நரித்தனம் மட்டுமே. (நான் புங்குடுதீவைச் சேர்ந்தவன். எனவே குடிதண்ணீர் எங்கிருந்து எனது ஊருக்கு வந்தாலும் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.)

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

3 months 3 weeks ago
//👆👍 இதுதான் உண்மை. நாளைக்கு சுமன் இவருக்கு (சி.வி.கே.சிவஞானம்) பதவி தர ஒத்து கொண்டால் இந்த மனிசன் வாலை ஆட்டி கொண்டு அவர் பின்னால் ஓடும்.// கடந்த வியாழக்கிழமை @goshan_che தெரிவித்த கருத்து, இன்று பலித்து விட்டது. 😂

ஆறுமுகம் இது யாரு முகம்?

3 months 3 weeks ago
எதிர்வரும் காலங்களில் ஆட்சி மாற்றங்கள் வரும் போது தும்புத்தடி முறிக்கும் நிலை எல்லாம் ஏற்படாது என்று நினைககிறேன்.,காரணம்.,பதினெட்டு வயதை கடந்த படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய தற்காப்பு பயிற்சிகள் என்று பாடசாலைகள் ஊடாக வரக் கூடும்.அண்மையில் முகப் புத்தகத்தில் எழுதும் சகோதரி ஒருவரின் ஆக்கம் ஒன்று படிக்கும் சந்தர்ப்பத்தில் புரிந்து கொண்டேன். 🤭🤭

சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?

3 months 3 weeks ago
__ நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் ) கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன் கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....! __ நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை , வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது ) தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது அதை பூவலில் (குப்பையில் ) போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........! 💪

ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா

3 months 3 weeks ago
ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva), பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்து இம்மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடித்திருந்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்காது என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா அல்லது தக்கவைப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் வினவிய போது, அதனை தொடர்வது அல்லது இல்லாதொழிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/retiring-general-shavendra-silva-1735399660

சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?

3 months 3 weeks ago
வயது வந்தவர்களுக்கு மட்டும் 1- கண்ணும் கண்ணும் பார்த்தால் கற்பம் தரிக்கும் 2- உடுப்பு மற்றும் மலசல கூடத்தின் ஊடாக பிள்ளை உருவாகும் 3- பெண்களுக்கு மாதம் 31 நாளும் பிள்ளை தரிக்கும் 4- உடலுறவு என்பது நாய்க்கொழுவலில் தான் முடியும் 5- ஒரு பெண்ணை தொட்டால் கட்டிக்க வேண்டும். (இவற்றை நம்பி தொலைச்சவை அதிகம்) இனி சிறு குழந்தைகளுக்கானது தொடரும்....🤪
Checked
Sat, 04/19/2025 - 08:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed