புதிய பதிவுகள்2

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது

3 months 3 weeks ago
புட்டின் தனது நாட்டு வான்பரப்பில் விமானத்துக்கு நேர்ந்த துரதிஷ்ட சம்பவத்துக்கே தன் அனுதாபத்தை வெளிக்காட்டி இருக்கிறார். இந்த விமானத்தை தனது ரோனை வைச்சு மோதி வெடிக்க வைச்சு ரஷ்சியாவுக்கு சிக்கலை உருவாக்க உக்ரைன் பயங்கரவாத நாடு மேற்குலக ஆலோசனையின் பேரில் செயற்பட்டிடுக்கலாம். ஏனெனில் மேற்குலக ஊடகங்கள் கூவிற கூவல் அப்படி. ஆனால் ஈரானில் வைச்சு உக்ரைன் விமானத்தை சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வான் காப்பு பொறிமுறை சுட்டி வீழ்த்தியை இட்டு மேற்குலகம் மற்றும்.அமெரிக்கா ஒரு இரங்கலும் இல்லை. ஆதில்.நெதர்லாந்து பயணிகளே அதிகம் கொல்லப்பட்டிருந்தனர்.

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

3 months 3 weeks ago
ஐரோப்பிய நாடுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சு எடுப்பதில்லை. எல்லாம் மழை நீரை தேக்கங்களிள் சேகரித்தே அன்றாட பாவனைக்கு உபயோகப்படுத்துகின்றார்கள். இலங்கை அரசியல்வாதிகள் மேற்கு நாடுகளுக்கு வந்து போவார்களே ஒழிய இவர்களின் அரசியல் முறைகளையும்,வாழ்க்கை முறைகளையும்,தன்னார்வ திட்டங்களையும் கண்டு கொள்வதேயில்லை. ஆனால் அவர்களின் கோட்டு சூட்டுக்களுக்கு இன்னும் பஞ்சமில்லை.கோட்டு சூட்டின் அர்த்தம் தெரியாதவர்கள்.

போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!

3 months 3 weeks ago
போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்பவர்கள் வரிசையாக வரவும். 😎 இந்தியாவை மீறி எவன் எமக்கு உதவி செய்வான் என்பதையும் கையோட சொல்லவும். 😁

2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்

3 months 3 weeks ago
நினைவஞ்சலி. இந்த சுனாமியில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வந்த சர்வதேச நிதி உதவிகளை அந்த மக்களுக்கு போய் சேர்வதை அன்று தடுத்த ஜேவிபி யே இன்று ஆட்சியில். ஜே வி பி சிந்தனையில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கை வாழ் சிறுபான்மை மக்கள் சிங்கள ஆட்சியாளர்களை சார்ந்தே வாழ வேண்டும் என்பதே ஜே வி பியின் சித்தாந்தம்.

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

3 months 3 weeks ago
அடிக்கடி இரணைமடு நீரை யாழுக்கு கொண்டு வாருங்கள் என்று குரல் எழுப்புகிறார்கள். என்னுள் புரியாத புதிராய் எப்போதும் இருப்பது என்னவென்றால், இரணைமடுகுளம் ஒன்றும் வற்றாத ஜீவநதி அல்ல, மாரிகாலத்தில் நிரம்பி வழிவதும் கோடைகாலத்தில் வற்றிபோவதுமாயுள்ள நீர்பிடிப்பு பகுதி. மாரிகாலத்தில் யாழுக்கு குடிநீர்தேவை வராது, கோடைகாலத்துக்குத்தான் அதிகமாக தேவை , கோடைகாலத்தில் வற்றி காணப்படும் இரணைமடு கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சமுள்ள யாழ்மண்ணின் தேவையை எப்படி பூர்த்தி செய்யும்? நீர்மட்டம் கீழிறங்கி காணபடும் இறணைமடுவிலிருந்து பல லட்சம் மக்கள் குடிதொகையை கொண்ட யாழ்ப்பாணத்தின் தேவையை பூர்த்தி செய்ய எப்படி நீரை வழங்கமுடியும்? ஒரே உறிஞ்சலில் அணையிலுள்ள நீரே காலி ஆகிவிடும். மறுபக்கம் இரணைமடுவை நம்பியிருக்கும் நமது விவசாயிகள் எப்படி நெற்செய்கை பயிற்செய்கைகளில் ஈடுபடமுடியும்? யாழ்ப்பாணத்துக்கு குடிக்க நீர் தேவையென்றால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உணவை உற்பத்தி செய்ய நீர் வேண்டும். இதில் எதை இழக்கலாம் என்று எப்படி முடிவு செய்வது? முதலில் யாழ்பகுதி மக்கள் நீரின் அத்தியாவசியத்தை உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீர் சேகரிப்பு திட்டம், அளவுக்கதிகமாக குளாய்கிணறுகளை அமைத்து நிலத்தடிநீரை ஒட்ட உறிஞ்சி எடுப்பதை தவிர்ப்பது, நீர்பிடிப்பு இருக்ககூடிய பகுதிகளில் கட்டிடங்களை அமைப்பது, குப்பைகளை கொட்டுவது போன்ற நடவடிக்கைகளை முற்றாக தவிர்க்கவேண்டும். மூன்றுபக்கமும் உப்புநீராலும், குடாநாட்டை ஊடறுத்தும் ஓடும் உப்புநீர் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும் நமது பிரதேசம் பொறுப்பற்றமுறையில் நன்னீரை வீணாக்கினால் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக உப்புநீர் மண்ணாக மாறிவிடும். சிறிது காலத்தின் முன்னர் தாளையடி பகுதியில் கடல்நீரை குடிநீராக்குகிறோம் அதை யாழுக்கு வழங்கபோகிறோம் என்று ஆரம்பகட்ட நடவடிக்கைகளீல் இறங்கி பெரும் எடுப்பில் பிலிம் காட்டினார்கள், பின்பு அதுபற்றிய பேச்சையே காணோம். எனக்கென்னமோ இன்னும் ஓரிரு தசாப்தங்களில் நீர் விஷயத்தில் மிக பெரும் அபசகுனத்தை யாழ் எதிர்கொள்ளபோகிறது என்று அச்சமுள்ளது.முடிந்தவரை நீரை சிக்கனமாக பாவிக்க கற்றுக்கொள்ளூங்கள், சிங்களவன் நமக்கு எப்போ நாக்கு வரண்டு சாவோம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறான் அதற்கான வாய்ப்புகளை நாமே தேடி கொடுக்ககூடாது, புலம்பெயர்ந்த உறவுகள் உணவில்லையென்றால் காசு அனுப்பலாம், உடையில்லையென்றால் அதற்கும் உதவலாம், நீர் இல்லையென்றால் எதுவுமே யாரும் செய்ய முடியாது அதற்கு மக்களிடையே விழிப்புணர்வை இப்போதே ஏற்படுத்தவேண்யது அரசியல்வாதிகள், கற்றவர்கள், சமூக ஆர்வலர்களது கடமை.

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

3 months 3 weeks ago
யாழ் மாவட்டம் நன்னீர் தேவைக்கு வன்னியை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வராது சரியான மழை நீர் சேமிப்பு.. குளங்கள் ஏரிகள் நீரை சேமிச்சு பாவிக்கவும் நிலத்தடி நீர்பிடிப்பை தக்க வைக்க கூடிய நீர் முகாமைத்துவம்.. மற்றும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் என்று ஒருங்கிணைந்த திட்டங்களை பாவிப்பின். வீணான அரசியல் சண்டை இங்கு அவசியமில்லை. அது தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தி ஆதாயம் தேட நினைப்போருக்கே நன்மையாக அமையும். மக்களுக்கு அல்ல.

போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!

3 months 3 weeks ago
இந்த நரி தான் மோசமான இனப்படுகொலை குற்றவாளி. ஆனாலும் சம் சும் கும்பல் இவருக்கு வெள்ளை அடிச்சது தான் மிச்சம்.

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

3 months 3 weeks ago
யோவ் சிறியர்,.... உத தங்களின் டமிலினத் தல்லீவர் சிறிதரன் MP க்கு அனுப்பிவிடுங்கோ, புண்ணியமாப்போம். சிரிலங்கன் டமில்ஸ் யூதர் போன்றவர்கள் என்கிற நினைப்போ,.🤣 புலவர் இணைத்த காணொளியைப் பாருங்கோ.

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

3 months 3 weeks ago
கபிதன்... இஸ்ரேலை விடவா...? இஸ்ரேல் கடல் நீரை நன்னீராக்கி பாவிப்பதும் இன்றி..பல நீர்முகாமைத்துவ உக்திகளை பாவித்தே பாலை வனத்திலும் வளமாக இருக்கிறது.

கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது

3 months 3 weeks ago
செத்தகிளி பெரிய வீரன் தான். பயணிகள் விமானத்தை சுட்டுவிழுத்தி பயணிகளைக் காடாத்திய செத்தகிளி பெரிய வீரன் தான். வெய்ட் பண்ணுங்க ஜனவரி 20 மட்டும். நம்மாள் வந்தாப்பிறகு செத்தகிளிக்கு இருக்கு சீவிச் சிங்காரம்!😂

இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!

3 months 3 weeks ago
இந்த விடயங்களை அரசியல்வாதிகள்கையாளாமல் துறைசார்ந்த புத்தியீவிகள் கையாள்வது நல்லது. தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் பூர்த்தியடைந்து அதன் இயக்கம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுவிட்டது. தாளையடி-மீசாலை-யாழ்ப்பாணம் வரையுள்ள வினியோக குழாய்கள் துப்புரவாக்கப்படும் (flushing and disinfecting) வேலை நடைபெறுகின்றது. இதற்கு 1-2 மாதங்கள் எடுக்கலாம். யாழ் குடாநாட்டிற்கு நீர் அவசரமாக தேவைப்படுவது குடிப்பதற்கே. இரசாயன உரங்கள், இரசாயன பூச்சி, பீடை நாசினிகள், மனிதக்கழிவுகள் ஆகியவற்றால் குடாநாட்டு நிலத்தடி நீர் குடிக்கமுடியாதளவு மாசடைந்துவிட்டதால் ஒரு வருடத்தின் 365 நாளும் குடி நீர் வினியோகம் தேவையாகவுள்ளது. கடல் நீரை நன்னீராக்கும் RO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட (desalinatied) நீரை உற்பத்தி செய்வதற்கான செலவு பொதுவாக US$0.5 முதல் $3 வரை இருக்கும். அதாவது ஒரு லீட்டருக்கு Rs 0.20 - Rs1.00 வரை இருக்கும். இதில் மின்சக்திக்கான செலவு 50%-60% ஆகவும் filter இற்கான செலவு 20-30% ஆகவும் தற்போது இருந்து வருகின்றது. இது தற்போது விற்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரின் விலையுடன் ஒப்பிடும்போது நூறில் ஒன்றாக உள்ளது. காற்றாலை, சூரிய சக்தி போன்ற மலிவான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பாவித்தால் இதன் உற்பத்தி செலவு மேலும் சிறிதளவு குறையலாம். மேற்படி எனது கணிப்பீடு அண்ணளவானதே. இதில் அரச மானியம், சுத்திகரிப்பு நிலைய கட்டுமான செலவு, சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கான விலை ஆகியன உள்ளடக்கப்படவில்லை. தற்போது இலங்கை முழுவதும் நீர் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அவை எப்படி சுத்திகரிக்கப்பட்டாலும் சமனாகவே இருந்தாலும் எதிர்காலத்தில் இச்செலவை மாகாணம் பொறுப்பேற்கவேண்டி வரலாம் அல்லது அரசே இது கட்டுபடியாகவில்லை என்று இழுத்து மூடலாம். நாம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தீர்வுக்கு செல்வதே புத்திசாலித்தனம். கோடையில் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரும் (desalinated water) மாரியில் சுத்திகரிக்கப்பட்ட இரணைமடு நீருமே பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தீர்வாக இருக்கமுடியும். இவ்விடயமாக பல பதிவுகளும், குழுக்களுமாக கடந்த பல வருடங்களாகவே நாம் பேசி வருகின்றோம். கடந்த வருட பதிவை பகிர்ந்துள்ளேன். https://www.facebook.com/share/p/18JutiUniS/ Thanks Kumaravelu Ganesan
Checked
Sat, 04/19/2025 - 08:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed