ஊர்ப்புதினம்

இரண்டு துண்டாகிய கையை பொருத்தி சாதித்த யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்

3 months ago

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நெடுநேர சத்திர சிகிச்சையின் பின்னர் மீண்டும் கை பொருத்தப்பட்டு சிகிச்சைகள் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

குறிப்பிட்ட சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள் ,வைத்தியர்கள், தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/307980

படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் – தீபச்செல்வன் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கடிதம்!

3 months ago
IMG-20240816-WA0078.jpg?resize=750,375 படைப்பாளிகளுக்கு அரசாங்கம் அச்சுறுத்தல் – தீபச்செல்வன் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு கடிதம்!

இலங்கையில் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்க அரசாங்கம் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ் எழுத்தாளர் தீபச்செல்வன் அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறு யுனஸ்கோ மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸூலே மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் ஆகியோருக்கு இலங்கை எழுத்தாளர் தீபச்செல்வன் கடிதங்களை எழுதியுள்ளார்.

இக் கடிதங்களின் பிரதிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோரிடம் கையளித்தார்.

குறித்த கடிதத்தில் அவா் மேலும் தொிவித்துள்ளதாவது,

“நான் இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளன். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட நான், போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகக் கல்வியை முடித்து தற்போது ஒரு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.

போர் நடைபெற்ற காலத்தில் அதன் விளைவாக நான் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டேன். போரின் துயரங்களையும் போரில் என்னைச் சார்ந்த சமூகம் எதிர்கொள்ளும் உரிமை மறுப்புக்களையும் எழுத உந்தப்பட்டேன். புகழ், வருமானம் போன்ற நோக்கங்கள் இல்லாமல் மனித உயிர்கள் அழிக்கப்பட்டும் எனது தேசத்தில் இல்லாமல் ஆக்கப்படுபவர்களின் மனசாட்சியாய் இறுதிக்குரலாய் என் எழுத்துகள் வெளிப்பட்டன.

“பதுங்கு குழியில் பிறந்த குழந்தை“ என்பது 2008ஆம் ஆண்டில் வெளியான என் முதல் கவிதை நூல். உரிமைக்கான போராட்டத்தில் தன் பிள்ளையை இழந்த தாய் அவன் நினைவுகளுக்காக முன்னெடுக்கும் வாழ்வையும் போராட்டத்தையும் பேசுவது நடுகல் என்ற என் முதல் நாவல். போரில் தாய் தந்தையை இழந்து தப்பும் ஒரு குழந்தை எந்தச் சூழலிலும் கல்வியைக் கைவிடாது பல்கலைக்கழகம் சென்று அங்கு மாணவத் தலைவராகிய நிலையில் அரச படைகளால் அவன் கொல்லப்படும் கதையைப் பேசுவது பயங்கரவாதி என்ற என் இரண்டாவது நாவல்.

பயங்கரவாதி என்ற எனது இரண்டாவது நாவல், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்கிறதா என்ற கோணத்தில் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்னிடம் கடந்த ஜூன் மாதம் விசாரணையை மேற்கொண்டது. சுமார் இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதற்கு முன்பு நான் தலைமை தாங்கி நடாத்திய ஒரு புத்தக வெளியீட்டிற்காகவும் மூன்று மணிநேரம் விசாரணையை பயங்கரவாத தடுப்ப்ப் பிரிவு மேற்கொண்டது.

என் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையானவையா? பிரதான கதாபாத்திரமாக வரும் மாறன் என்பவர் யார்? அவர் எங்குள்ளார் என விசாரணை நடாத்தப்பட்டது. இலங்கையில் கடந்த காலத்தில் பல எழுத்தாளர்கள்இ ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருத்துச் சுதந்திரத்தின் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. இந்த நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை என்னையும் என் குடும்பத்தினரையும் மாத்திரமின்றி என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த மேலாதிக்கத்திற்கான போர் மற்றும் உரிமைக்கான போராட்டத்தில் சந்தித்த இழப்புக்கள், தியாகங்கள், அனுபவங்கள் குறித்து இலக்கியங்கள் எழுதுவது இந்த தீவின் எதிர்கால அமைதிக்கும் சுபீட்சத்திற்கும் அவசியமானது. உலகின் எந்தவொரு தேசத்திலும் எழும் படைப்புக்களும் இலக்கியங்களும் உலக மக்கள் அனைவருக்குமான அறிவு மற்றும் படைப்பாக்கச் சொத்தாகும். அந்த வகையில் வரலாற்றினதும் கடந்த கால கசப்பக்களினதும் விளைவாக எழும் இலக்கியங்களை தடுக்க முற்படுவது அறிவுவெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையுமாகும்.

பொருளாதார நெருக்கடி போன்ற சூழலிலும் தமிழ் சிறுபான்மை எழுத்தாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இத்தகைய செயற்பாடுகளை தடுக்க தாங்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கைத் தீவின் கலாசார பண்பாட்டு மற்றும் படைப்புக்கள்மீது மிகுந்த மதிப்பும் கரிசனையும் கொண்டுள்ள தங்களின் கவனம் இலங்கைத் தீவில் எழுத்தாளர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதுடன் தமிழ் பேசும் மக்களின் இருப்பையும் சுதந்திரத்தையும் காத்து நிற்கும் என்றும் எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றேன்” என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1396097

பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் ; ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் - சந்திரசேகரன்

3 months ago
16 Aug, 2024 | 05:36 PM
image
 

பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் - ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை ஆட்சிக்கு வந்தபின் பெற்று தருவதாக கூறும் ரணில் விக்கிரமசிங்கவின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நேற்று (15) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஜனாதிபதி தேர்தலில் 22 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். 

அனேகமாக சுயேச்சை குழு வேட்பாளராக களம் இறங்கியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் களமிறங்கியவர்கள். 

தேசிய மக்கள் சக்தி தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளது. 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அனைவருடைய ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சகித்துக் கொள்ள முடியாத ஏனைய கட்சிகள் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. 

இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளை சந்தித்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் தான் கரிசனையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

ரணில் விக்கிரமசிங்க 41 வருட காலமாக பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் ஆறு தடவைக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் பிரதமர் மற்றும் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.

தமிழ் மக்களுக்கு காணி போலீஸ அதிகாரத்தை வழங்க வேண்டுமானால் தனது விசேட அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கியிருக்க முடியும் ஏன் மீண்டும் ஜனாதிபதி ஆகிய பின்னர் வழங்கப் போவதாக கூறுகிறார்.

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய இன பிரச்சனையை தீர்ப்பதற்காக முழு பாராளுமன்றமும் செயற்குழுவாக கூடிய நிலையில் 84 தடவைகள் கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்து எந்த ஒரு முன்மொழிவையும் சமர்ப்பிக்காத ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கப் போகிறேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழ் மக்கள் கடந்த காலங்களாக பச்சை மற்றும் நீல நிறங்களுக்கு தடுமாறியமைக்கு தமிழ் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும். 

ஏனெனில் தமது மக்களை சரியான வழியில் வழிநடத்த முடியாதவர்களாக தமிழ் தலைவர்கள் காணப்பட்டதன் காரணமாக மக்களும் பல நிறங்களை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் அப்பா, தாத்தா மற்றும் பாட்டன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறுகளே அதிகமாக உள்ள நிலையில் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் ; ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் - சந்திரசேகரன் | Virakesari.lk

எம் கையாலேயே எம் கண்களைக் குருடாக்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் : தமிழ் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்கிறார் சுரேஷ்

3 months ago
16 Aug, 2024 | 09:02 PM
image
 

எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து, எமது அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

எனவே நாம் விழிப்புடன் இருந்து எம்மை பலியிடத் துடிக்கும் சக்திகளைப் புறந்தள்ளி அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதன் முக்கிய வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க போன்றோர் அடிக்கடி வடக்கு - கிழக்குக்கு வருவதும் அங்குள்ள பல்வேறு கட்சிகளையும் தனிநபர்களையும் சந்தித்துப் பேசுவதும் இப்பொழுது கிரமமாக நடைபெற்று வருகின்றது.

இதற்கு மேலதிகமாக தமிழர் தரப்புகளை கொழும்புக்கு வருமாறு அழைத்து அவர்களைச் சந்திக்க விரும்புவது ஒருபுறமும, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் இவர்களைத் தேடித்திரிந்து சந்திப்பது இன்னொருபுறமுமாக அரசியல் நகர்த்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சுமந்திரன் அண்மைக்காலங்களில் மீண்டும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதும் அவற்றைப் பெரிய செய்தியாகப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதும் பத்திரிகைகளும் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகிறார் என்ற சாரப்பட கருத்துகளை எழுதுவதும் இப்பொழுது நடைபெற்று வருகின்றது.

2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. அதன் பிரகாரம் ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான தேவை இருக்கின்றது என்பதை எமது கூட்டணி ஏற்றுக்கொண்டது.

அதேசமயம் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள சிவில் அமைப்புகளும் இவ்வாறான ஒரு தேவை இருப்பதை தமது கலந்துரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தின. அதன் பின்னர் இருதரப்பினரும் இணைந்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்ற இலக்கை நோக்கி முன்னேறினர்.

இந்தக் காரணங்களினால் அச்சமடைந்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பலமுனைகளிலும் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமந்திரன் தனிநபராக தனது கட்சியினரின் ஒப்புதலோ அல்லது தமிழ் மக்களின் ஒப்புதலோ இல்லாமல் தான் ஜனாதிபதியுடன் பேசுகிறேன் என்று கூறுவதும் 13 ஐ அவர் முழுமையாகத் தந்துவிடப்போகிறார் என்று சாரப்பட கருத்துகளை வெளியிடுவதும் தேர்தலில் மக்களை பிழையான பாதைக்கு இட்டுச்செல்வதற்கான ஒரு முயற்சியாகும்.

தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஜனாதிபதித்தேர்தல் களத்தைப் பாவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் நோக்கமாகும். ஆனால் அதனை எதிர்த்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காட்டி நிற்கும் சுமந்திரன் தமிழ் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவை முன்னிறுத்தியே இந்த பேச்சு வார்த்தைகளை நடாத்தி வருகின்றார்.

சுமந்திரனுக்கு பேச்சுவார்த்தைகள் தொடர்பாக குறைந்தபட்ச அனுபவங்களாவது இருக்கும் என்று நான் கருதுகின்றேன். மஹிந்த ராஜபக்ச தரப்புடன் 17 சுற்றுப்பேச்சுகள் நடாத்தப்பட்டு அவை எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பது அவருக்குத் தெரியும். இதேபோன்று நல்லாட்சி காலத்தில் இதே ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புதிய அரசியல் சாசனத்திற்காக நான்கு வருடங்கள் பேசி அது எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பதும் அவருக்குத் தெரியும். அதன் பின்னர், ரணில் விக்கிரசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் தயாரா என்று கேட்டபொழுது மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால் அதன் பின்னர் அது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதே காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு - கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும்வரை ஒரு இடைக்கால சபையை உருவாக்கும்படியும் அதற்கான முழு ஏற்பாடுகளையும் அவருக்கு சமர்ப்பித்தும்கூட அது தொடர்பாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்ற சமயத்திலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இலங்கை வந்தபோதும் 13 ஐ முழுமையாக நிறைவேற்றும்படி வற்புறுத்தியும்கூட எதுவும் செய்யவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரசிங்கவினால் அரசியல் சாசனத்தில் காணப்படும் 13 ஆவது திருத்தத்தில் உள்ள ஒருபகுதியைக்கூட நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில், சுமந்திரன் போன்றோர் தொடர்ச்சியாக ரணிலை சந்திப்பதும் மாகாணசபை அதிகாரங்கள் அனைத்தையும் அவர் கொடுப்பார் என்பது போன்ற அறிக்கையை வெளியிடுவதும் தமிழ் மக்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் ஒரு முயற்சியாகும்.

முன்னர் 13 ஐ முற்றுமுழுதாக எதிர்த்து நின்ற சுமந்திரன் இப்பொழுது 13 தான் ஏதோ பெற்றுக்கொடுப்பதுபோல் படம் காட்டுவதும் தமிழ் மக்கள் அரசியல் ஞானசூன்யங்கள் என்றும் அவர்களுக்கு எதுவும் புரியாது என்ற பாணியில்; நடந்துகொள்வதும் அவரது அறிவு முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடாகும்.

கொரோனா காலத்திற்குப் பின்னர் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துவிட்டது என்ற சூழ்நிலையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது.

ஆனால் ஜனாதிபதி இப்பொழுது தான் விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் விரும்பியவாறு ஒதுக்கும் நிலையைக் காணமுடிகின்றது. இதன்மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை இலகுவாகப் பெற்றுவிடலாம் என்று ரணில் கனவு காண்பதாகவும் தோன்றுகின்றது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜெனிவாவிலும், நியூயார்க்கிலும் சுமந்திரனின் நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களது கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவே இருந்திருக்கின்றது. இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறுவதும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துவிட்டது என்று கூறுவதும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுப்பதிலும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தையும் புரிந்துகொள்வதினூடாக நாம் ஏன் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது என்ற முடிவை எடுத்தோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தமிழ் மக்கள் நீண்டகாலமாக இலங்கை அரசியலை கண்காணித்து வருபவர்கள். அவர்களை ஏமாளிகள் என்றோ இலகுவாக ஏமாற்றிவிடலாம் என்றோ நினைப்பது மடைமைத்தனமானது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

எம் கையாலேயே எம் கண்களைக் குருடாக்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் : தமிழ் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்கிறார் சுரேஷ் | Virakesari.lk

கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்தில் 34 வருடங்களின் பின் வழிபட அனுமதி

3 months ago

34 வருடங்களின் பின் வழிபட அனுமதி

image_e2232e630c.jpg

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு சென்று வழிபட வௌ்ளிக்கிழமை (16) அனுமதி வழங்கப்பட்டது. அங்கு பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

கடந்த முப்பது வருட காலத்திற்கும் மேலாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலய வழிபாடுகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டநிலையில் அங்கு சென்ற பொது மக்கள் ஆலயத்தை சிரமதானம் செய்ததன் பின்னர் பொங்கல் பொங்கி பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நீண்ட காலத்தின் பின்னர் தமது ஆலயத்திற்குச செல்ல அனுமதிக்கப்பட்டதை மிகவும் சந்தோசமாக வரவேற்ற பொது மக்கள் ஆலயம் சிதைவடைத்திருப்பதை பார்த்து கடும் மனவேதனை அடைந்திருந்தனர்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், கடற்படை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் இன்று முதல்  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்கு  சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிருஷ்ணன் ஆலயம் என்ற காரணத்தால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விசேட தினங்களிலும் வழிபட பொதுமக்கள் அனுமதி கோரியதால் அது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பரிசீலிப்பதாகவும் வலிகாமம் வடக்கிலுள்ள ஏனைய காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

image_aa77543834.jpgimage_dc799b0851.jpgimage_d602e0cfb0.jpgimage_79c0a65880.jpgimage_ef2777e45d.jpgimage_9894835d8d.jpgimage_d95e31dd8d.jpgimage_690467272f.jpg

https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/34-வருடங்களின்-பின்-வழிபட-அனுமதி/46-342288

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் புதையலை தேடிய அகழ்வு பணி

3 months ago

Published By: DIGITAL DESK 7   16 AUG, 2024 | 05:26 PM

image

யுத்த காலத்தில் விடுதலை புலிகள் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்று வெள்ளிக்கிழமை (16)  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி தர்மலிங்கம் உத்தரவிட்டதனை தொடர்ந்து மூடப்பட்டிருந்தது.

மேலும், மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_20240816_15444156.jpeg

IMG_20240816_15450570.jpeg

IMG-20240816-WA0066.jpg

IMG_20240816_15434593.jpeg

https://www.virakesari.lk/article/191248

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

3 months ago
16 AUG, 2024 | 05:44 PM
image
 

வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.  

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்றைய தினம் அதிகாலை தோட்டத்திற்கு சென்ற மகன் நீண்டநேரமாகியும் காணாதமையினால் அவரது தந்தை தேடியுள்ளார்.  

இதன்போது காணியின் பின்புறத்தில்  குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

குறித்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞரே மரணமடைந்துள்ளார்.  

அவர் விலங்குகளுக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/191228

சிறந்த இணையத்தளத்துக்கான விருதினைத் தனதாக்கிய Vigo.lk

3 months ago
vigi.jpg?resize=750,375 சிறந்த இணையத்தளத்துக்கான விருதினைத் தனதாக்கிய Vigo.lk

lk domain Registry 2024 ஆம் ஆண்டிற்கான BestWeb.lk விருது வழங்கும் விழாவில் Vigo.lk இணையத்தளமும் விருது ஒன்றை தன்வசப்படுத்தியது.

Cinnamon Grand ஹொட்டலில் 14ஆம் திகதி (14.08.2024) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அதன் நிறுவுநர் சபாநாயகம் விதுசகன் விருதினை பெற்றுக்கொண்டார்.

இதன்படி, Fashion and Lifestyle பிரிவில் இலங்கையின் மிகச்சிறந்த இணையத்தளத்துக்கான விருது Vigo.lk இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவின் கீழ் பல இணையத்தளங்கள் போட்டியிட்ட போதும் முதலாம் கட்டமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்களின் அதிக வாக்குகளை Vigo.lk பெற்றிருந்தது.

இதனையடுத்து, சுயாதீன நடுவர்களால் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தப்பட்டு அதில் அதிகபடியான புள்ளிகளை பெற்று Vigo.lk இணையம் மகுடம் சூடியது.

கிழக்கு மாகாண மட்டக்களப்பில் இருந்து நாடுபூராகவும் இயங்கும் ஓர் வியாபார இணையத்தளமானது இவ் விருதினைப் பெற்றுக் கொள்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருதினை பெற்றுக்கொண்ட Vigo.lk நிறுவுநர் விதுசகன் கருத்து தெரிவிக்கையில்” எமது இணையத்தளம் ஊடாக உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகின்றோம். எமது Vigo.lk இணையத்தளத்தின் மூலம் நவீன விற்பனை செய்யும் அனைத்து ஆடைவகைகளும் எமது தனித்துவமான ஆடை வடிவமைப்பில் முழுவதுமாக தேர்ச்சி பெற்ற வடிவமைப்பாளர்களைக் கொண்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம்.

மட்டக்களப்பை மையமாக கொண்டு இலங்கை மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் எமது சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் தலைநகரில் எமது நிறுவனத்தின் காட்சியறையினைத் திறந்து வைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

குறுகிய காலத்தில் எங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை மக்கள் தந்து இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த விருதே சான்றாகவுள்ளது. எமக்கு இந்த விருது கிடைப்பதற்கு பல்வேறு வழிகளில் உதவிய அனைத்து நல்உள்ளங்களுங்கும் நன்றி” என அவா் மேலும் குறிப்பிட்டார்.

vigi-1.jpg?resize=592,600

WhatsApp-Image-2024-08-15-at-1.17.02-PM.

https://athavannews.com/2024/1395994

வவுனியாவில் வாள்வெட்டில் நால்வர் படுகாயம்!

3 months ago
16 AUG, 2024 | 01:32 PM
image

வவுனியாவில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத்தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16)  செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்றது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,   

குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுளைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது வீட்டில் இருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.  

காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளநிலையில் பறயநாலங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/191217

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தில் விசாரணை!

3 months ago
16 AUG, 2024 | 01:27 PM
image

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று வெள்ளிக்கிழமை (16) விசாரணைகள் இடம்பெற்றது. 

உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களிடையே  விசாரணைகள் இடம்பெற்றது. 

இவ்விசாரணைகள்  காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாளை 17 ஆம் திகதி பருத்திதுறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், நாளை மறுதினம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தோருக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும் விசாணைகள் இடம்பெறவுள்ளன.

20240816_102228.jpg

20240816_102217.jpg

20240816_102206.jpg

20240816_102307.jpg

20240816_102415.jpg

https://www.virakesari.lk/article/191214

இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா?????

3 months ago
1h  · 
 
 
May be an image of 1 person and text
 
 
 
14h  · 
பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்தார் அத்தோடு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் உடனடியாக அரச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தின் ஊடாக அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது அதில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனை நரம்பு சார்ந்த dr அசுரஆதி பகவனுக்கு காட்டுமாறு கூறப்பட்டது ஆனாலும் அவர் தனது விடுமுறைக்குச் சென்றதால் இரண்டு கிழமைகள் அவர் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை வேறு தெரிவுகளும் அந்த ஆசிரியருக்கு கூறப்படவில்லை மூன்று பிள்ளை கொண்ட அந்த தாய் இன்று மூளை நரம்பு வெடித்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா????? மீண்டும் ஒரு மருத்துவத்தவறால் அவரின் உயிர் போனது??????? பாடசாலை தொடங்கும் போது பாடசாலையில் கால் பதித்தவர் அவருக்கு சென்ற வருடம் 2023 உடன் எமது பாடசாலையின் பணிக்காலம் முடிவடைந்துவிட்டது அவர் விரும்பி இருந்தால் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கலாம் நான் கேட்டபோது அவர் கூறிய ஒரே பதில் Sir நான் நீங்கள் இருக்கும் மட்டும் இருந்து விட்டுப் போகின்றேன் என்றார். பாடசாலைக்கு முதல் ஆசிரியராக எப்போதும் பிள்ளைகளை வழி நடத்திக் கொண்டிருப்பார் வந்துகற்பித்தலில் பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்த ஒரு தாய் இன்று மூச்சடங்கி கிடக்கின்றாள். ஒரு மாதத்துக்கு முன்னர் தனது உடல் உபாதையும் கருத்தெடுக்காமல் பாடசாலைக்கு வந்து காலை கூட்டத்தில் நற்சிந்தனை கூறிக் கொண்டிருந்தபோது மயக்கமுற்து கீழே விழுந்தார் எந்தப் பாடசாலைக்கு அயராது உழைத்தாரோ அதே பாடசாலையின் மண்ணில் தலை சாய்ந்து விழுந்தார். கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசி ஊடாகவே பிள்ளைகளுக்கு என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை சக ஆசிரியர்களுக்கு கூறிவழிப்படுத்திக் கொண்டிருந்தார். இறுதியாக என்னிடம் பேசிய போது தான் பாடசாலைக்கு திங்கள் வரப்போவதாகவும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்றும் கூறினார் அவருக்கு விருப்பமான சக ஆசிரியை செல்வா வீட்டுக்குச் சென்று அவர்களின் கையால் டீ குடித்துவிட்டு சாரி ஒன்றையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார். பிள்ளைகளின் உணவு விடயத்திலும் அதீத ஈடுபாடு கொண்டவர் என்ன வேலை சொன்னாலும் முடியாது என்று சொல்லாமல் எனக்கு வலதுகரமாக தோளோடு நின்ற அன்பு தாயே சகோதரியே உமது பணி பலாலி வடக்கு பாடசாலையில் எ ப்போதும் நினைவு கூரப்படும் சென்று வா தாயே உமது ஆத்மா சாந்திக்காக நாங்கள் எல்லோரும் தலை சாய்த்து வணங்குகின்றோம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
 
அதிபர்
 
All reactions

தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கு அமைய ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் - இலங்கை மத்திய வங்கி

3 months ago

Published By: DIGITAL DESK 3   16 AUG, 2024 | 11:26 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர் படையின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு முதலிரு காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையில் உள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டு வரை முதன்மை பணவீக்கம் குறைவானதாக பேணப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாணயக்கொள்கை (2024 ஆகஸ்ட்) அறிக்கையில் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழான பணவீக்க இலக்கு தொடர்பான சிறப்புக் குறிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மை பொருளாதார மீட்சியின் மீதான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் அதேவேளை,  திறமைசாலிகளின் உயர்ந்தளவான வெளியேற்றமானது தொழிலாளர் பற்றாக்குறைகளுக்கும், குறைந்த உற்பத்தித் திறனுக்கும் வழிவகுக்கும் இது பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வாக அமையும் என்றும் இலங்கை மத்திய வங்கி கூறுகின்றது.

2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் உயர்வடைந்துள்ள பணவீக்கத்தை 5 வீதம் நிலையாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்புள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு அமைய ஊழியர்படையின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

வாழ்க்கை செலவு உயர்வுக்கும், ஊழியர்களின் சம்பள வீதத்துக்கும் இடையில்  நீண்ட இடைவெளி காணப்படுவதாகவும் சம்பள அதிகரிப்பு நாணய கொள்கை செயற்திட்டத்துக்கு பாதகமானதாக இருக்காது என்றும் இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

இதேவேளை, ஆட்சி  மாற்றத்துக்கேற்ப பொருளாதாரக் கொள்கைகளை இனி மாற்றியமைக்க முடியாது எனவும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/191199

வெற்றிக்காக போட்டியிடவில்லை; தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்தவே போட்டியிடுகிறேன் - பா.அரியநேத்திரன்

3 months ago

Published By: VISHNU   16 AUG, 2024 | 03:16 AM

image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு சக்தியாக இலங்கை அரசுக்கும், சர்வதேசத்துக்கும் காண்பிப்பதற்காகவே போட்டியிடுகிறேன் என தமிழ் பொதுவேட்பாளரான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சிங்கள அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை, கடந்த கால பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இதன் காரணமாகவே இம்முறை தனித்து போட்டியில் இறங்கியுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தமிழ் பொது கட்டமைப்பின் ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படுகிறது.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெகு விரைவில் வெளியிடுவோம். அத்துடன் தேர்தல் பிரச்சாரங்களையும் முன்னெடுப்போம். இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம். எமது வெற்றி அரசுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்றார்.

https://www.virakesari.lk/article/191182

நாட்டின் ஒற்றையாட்சியை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும்தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் - நாமல் ராஜபக்ஷ உறுதி

3 months ago

Published By: VISHNU   16 AUG, 2024 | 12:15 AM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்தி ஆகியவற்றை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும். தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் எவரும் எமக்கு சவாலல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (15) வேட்புமனுவை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் தேசிய உற்பத்திகளை எம்மால் மாத்திரமே பாதுகாக்க முடியும். இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் செயற்படவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம். நாங்கள் செயற்படுகிறோம். அரசியலில் நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்பார்கள். ஆகவே எம்மை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணைவார்கள் என்றார்.

இதன்போது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்பாக ஒன்றுக்கூடி நாமல் ராஜபக்ஷவை வரவேற்றார்கள். பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள். ஆதரவாளர்கள் மத்தியில் வந்த நாமல் ராஜபக்ஷ தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

https://www.virakesari.lk/article/191181

யாழில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி

3 months ago

யாழில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
adminAugust 15, 2024
Indian-Army1-1170x780.jpg

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவாக பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றன.

இந்த மோதல்களில் கொல்லப்பட்ட இந்திய படையினர் நினைவாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் யாழ். இராணுவ தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரங்கத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணத்திள்ள இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

Indian-Army2-800x533.jpgIndian-Army3-800x533.jpg

 

 

https://globaltamilnews.net/2024/205868/

தோ்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை – அமைச்சர் கீதா வருத்தம்!

3 months ago
12a4e39689c5fab1ff5983681b5a8f4a_XL.jpg? தோ்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை – அமைச்சர் கீதா வருத்தம்!

ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கூட பெண்களுக்கு உரிய இடமும் சமமான இடமும் வழங்கப்பட வேண்டும் என கட்சித் தலைவர்கள் பெருமையுடன் கூறினாலும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாட்டில் பெண் உரிமைகள் தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்களும் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும், இம்முறை பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது எனவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1395964

 

454760592_903317585166548_81771934263686

தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை – விக்கினேஸ்வரன் கவலை!

3 months ago
thampi.jpg?resize=750,375 தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்கவில்லை – விக்கினேஸ்வரன் கவலை!

தமிழ் மக்களின் அடையாளமாக விளங்கும் பா.அரியேத்திரனுக்கு அனைத்து தமிழர்களும் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழ் வேட்பாளர் விவகாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி உறுதியான தீர்மானத்தை எடுக்காமல் இருப்பது கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற வேட்புமனு கையளிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரான பா.அரியேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பில் சிந்திக்காமல் தமிழ் மக்கள் சார்பில் சிந்திக்க வேண்டும் என்பதுடன், இதற்கான கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கட்சி ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் அடையாளமாக பா.அரியேந்திரனை 89 கட்சி தரப்பினர் தேர்ந்தெடுத்துள்ளார்கள் எனவும், இனி அவரை பற்றியோ, அவரின் கட்சி பற்றியோ பேசுவது அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கின்றதாக வெளிப்படையாக தெரிவிப்பதாகவும், ஆனால் ஒரு சிறுபான்மை தரப்பினர் இதனை தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இவர்கள் தமது முரண்பாடுகளை விட்டு விட்டு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1395961

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசுரம் வழங்கல்!

3 months ago

Published By: Vishnu

15 Aug, 2024 | 07:13 PM
image
 

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

IMG-20240814-WA0294.jpg

புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

IMG-20240814-WA0290.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240814-WA0288.jpg

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசுரம் வழங்கல்! | Virakesari.lk

யாழ். மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

3 months ago
15 AUG, 2024 | 02:35 PM
image

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடத்தப்பட்டது. 

வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், யாழ். மாநகர சபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மடம் அறக்கட்டளையின் பொறுப்பாளர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

download__3_.jfif

யாழ்ப்பாண இராசதானி காலத்துக்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. எனினும், மந்திரி மனை அமைந்துள்ள காணி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமானதாக காணப்படுகிறது. 

இந்நிலையில் மந்திரி மனையை புனரமைப்பதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், கலந்துரையாடலில் உரிய தீர்மானங்கள் எட்டப்படாமையால் காலதாமதம் ஏற்பட்டது.

download.jfif

இந்நிலையில், வடக்கு மாகாண ஆளுநர்  தலைமையில் நடைபெற்ற இவ்விசேட கலந்துரையாடலின்போது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மந்திரி மனையை புனரமைத்து பாதுகாப்பதற்கு மடம் அறக்கட்டளை பொறுப்பாளர் இணக்கம் தெரிவித்துள்ளார். 

தொல்பொருள் திணைக்களத்தின் திட்ட முன்மொழிவுக்கு அமைய, திணைக்கள மேற்பார்வையுடன் அறக்கட்டளையின் நிதியில் மந்திரி மனையை புனரமைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை அடங்கிய கடிதம் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி பிராந்திய தொல்பொருள் திணைக்களத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/191151

தமிழ் வேட்பாளருக்கு சங்கு.

3 months ago
sangu-e1723712841656.jpg?resize=320,180& தமிழ் வேட்பாளருக்கு சங்கு.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உட்பட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2024/1395872

Checked
Thu, 11/21/2024 - 23:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr