ஊர்ப்புதினம்

அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பணத்தின் பெறுமதி மும்மடங்கால் அதிகரிப்பு!

3 months 1 week ago
13 AUG, 2024 | 09:12 PM
image

(நா.தனுஜா)

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய தரவுகளின் பிரகாரம் கடந்த ஒரு தசாப்தகாலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி (வறுமை மட்டம்) மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது.   

அதற்கமைய 2012 - 2013 காலப்பகுதியில் ஒருவர் தனது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 5,223 ரூபா போதுமானது என மதிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டு ஜனவரி மாதம் அப்பெறுமதியானது 18,350 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. 

அதேபோன்று 2013 இல் 5,223 ரூபாவாகக் காணப்பட்ட இப்பெறுமதி 2016 இல் 6,117 ரூபாவாக அதிகரித்ததுடன் 2019 ஆம் ஆண்டு 6,966 ரூபாவாக மேலும் உயர்வடைந்தது. 

அதேவேளை, 2022 ஆம் ஆண்டு நாட்டில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை அடுத்து பணவீக்கம் சடுதியாக பெருமளவால் அதிகரித்தது. அதன்விளைவாக ஒருவர் அவரது அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தேவையான பணத்தின் பெறுமதி 15,970 ரூபாவாக மிகையான அளவினால் அதிகரித்தது.

மேலும் இப்பெறுமதி இவ்வாண்டு ஜனவரியில் 18,350 ரூபாவாகவும், மே மாதத்தில் 17,608 ரூபாவாகவும் உயர்வடைந்திருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் காண்பிக்கின்றன. 

https://www.virakesari.lk/article/191014

தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி; மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

3 months 1 week ago

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை அடையாளப்படுத்தி, நபர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை  மாத்திரம் இது தொடர்பான 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பேஸ்புக் ஆதரவுக் குழுக்களாக தம்மை காட்டிக்கொண்டு வட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக  சாருக தமுனுகல குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் பேஸ்புக் கணக்கு அல்லது பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக ஃபேஸ்புக் ஆதரவு குழுவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வரலாம். அதை திரும்பப் பெற, உங்கள் தகவலை சிறிது பணத்துடன் அனுப்ப வேண்டும்… இவ்வாறு மோசடிகள் நடைபெறுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக, உங்கள் Facebook பக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டாலோ அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டாலோ, Facebook பயனர்கள் WhatsApp மூலம் வரும் எந்த செய்திகளுக்கும் பதிலளிக்கவோ அல்லது உங்கள் தகவலை தற்காலிகமாக வெளியிடவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது உங்கள் மதிப்புமிக்க தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் Facebook கணக்கு தொடர்பான கடவுச்சொல் உட்பட முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் உங்கள் Facebook கணக்கிற்கான அணுகலை வெளி தரப்பினர் அனுமதிக்கும். இதன் விளைவாக, பயனர்கள் இதுபோன்ற செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

வர்த்தக பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களை இலக்கு வைத்து இந்த மோசடி இடம்பெற்று வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகல மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/307772

இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!

3 months 1 week ago
3-1.jpg?resize=750,375&ssl=1 இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!

மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த மித்ரசக்தி போர்ப் பயிற்சியானது, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்களே நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இவர்களை வரவேற்றனர்.

போர்ப் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் தலைமையில் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர்.

10 ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2.jpg?resize=600,357&ssl=1

11.jpg?resize=600,389&ssl=1

flight-90.jpg?resize=600,364&ssl=1

fe-900.jpg?resize=600,401&ssl=1

https://athavannews.com/2024/1395546

தமிழ் பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் சஜித்

3 months 1 week ago

Published By: VISHNU   13 AUG, 2024 | 03:20 AM

image

(நா.தனுஜா)

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச புதன்கிழமை (14) தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அழைப்புவிடுத்துள்ளார். 

ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் பொதுக்கட்டமைப்பினால் தமிழ்மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான குறியீடாகவே இப்பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ் பொதுக்கட்டமைப்பு, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்துடன் தம்மை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்த விரும்பினால், அவர்களுடன் பேசுவோம் என அறிவித்திருக்கிறது. 

அதற்கமைய இம்முறை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்புக்கு அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அச்சந்திப்பில் தமிழ் பொதுக்கட்டமைப்பின் சார்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்றிருந்ததுடன், அவர்களுடன் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ புதன்கிழமை (14) தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு அழைப்புவிடுத்துள்ளார். இச்சந்திப்பு புதன்கிழமை (14) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

இச்சந்திப்பில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

https://www.virakesari.lk/article/190948

சமஷ்டி தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ரணில்.

3 months 1 week ago

சமஷ்டி முறையான அரசியல் தீர்வுக்கு ஆதரவான, பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தம்மை நேற்று (12.08.2024) திங்கட்கிழமை சந்தித்த மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடமே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தன.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ரெலோவின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு,

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அவரை சந்தித்தனர்.

தமிழ்ப் பொது வேட்பாளர்

தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கிய சூழலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கான அழைப்பைத் தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.

மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் இந்த அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும், ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்பது என்று முடிவு செய்தனர்.

சமஷ்டி தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ரணில் | Ranil Expressed His Stand Regarding Samashti

 

இந்தச் சந்திப்பில் பிரதானமாகத் தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கும் முகமான சமஷ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

ஜனாதிபதி தரப்பில் சமஷ்டி முறையான அரசியல் தீர்வு என்பது பலம் மிக்க நாடாளுமன்றம் ஒன்று அமையும் பட்சத்தில் அது சம்பந்தமாகப் பரிசீலித்து முன்னேற்றகரமான முடிவுகளை எதிர்காலத்தில் எட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுவரை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாண சபைக் கட்டமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காகத் தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் அரசியல் அபிலாஷைகள்

அதற்காகத் தன்னிடம் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் அவர் சமர்ப்பித்தார்.

 

ஏற்கனவே மாகாண சபையின் பறிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் மீள வழங்குவதாகவும், நிதி உட்பட மேலதிக அதிகாரங்களையும் பொருளாதார அபிவிருத்தி ஆணைக்குழுவையும் மாகாண சபை கொண்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமஷ்டி தொடர்பாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ரணில் | Ranil Expressed His Stand Regarding Samashti

தமிழ் மக்கள் சார்பில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது, தமிழ் இளைஞர்கள், யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது, விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய கடற்றொழிலாளர்களுடைய அத்துமீறல் உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

இதற்கான தீர்வுகளை தான் நிச்சயமாக வழங்குவதாகவும், ஏற்கனவே சில விடயங்களுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் தொல்லியல் விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் சமர்ப்பித்த ஆவணத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன எனவும், அவற்றைப் பரிசீலித்த பின்னர் தொடர்ந்தும் சந்திப்புகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கும் முகமான மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தமது தரப்பிலும் தயாராக இருப்பதாகச் சொல்லிய தமிழ்த் தரப்பினர், அவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து கருத்துத் தெரிவிப்பதாகக் கூறியதுடன் சந்திப்பு நிறைவடைந்தது” - என்றுள்ளது. 

https://tamilwin.com/article/ranil-expressed-his-stand-regarding-samashti-1723505976

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு

3 months 1 week ago

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பதிவுத் தபாலில் மகஜர்

இதேவேளை, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம், சுகாதார திணைக்களம், காவல்துறை திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் பதிவுத் தபாலில் மகஜரை கையளித்துள்ளாதாக குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு | Threat Jaffna Teaching Hospital Victim Complains

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு | Threat Jaffna Teaching Hospital Victim Complains

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு | Threat Jaffna Teaching Hospital Victim Complains

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு | Threat Jaffna Teaching Hospital Victim Complains

https://ibctamil.com/article/threat-jaffna-teaching-hospital-victim-complains-1723459685

தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரன் தெரிவானது தமிழரசு கட்சியை வழிக்கு கொண்டுவரும் உத்தியே - செல்வம்

3 months 1 week ago
12 AUG, 2024 | 08:59 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டமை தமிழரசு கட்சியை பொது வேட்பாளர் விடயத்தில் எமது வழிக்கு கொண்டு வரும் ஒரு உத்தியே என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக அரசியல் கட்சி சார்பற்ற ஒருவர் நியமிக்கப்படுவார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இறுதியில் தமிழரசு கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்கள் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒற்றுமையினை எதிர்பார்க்கின்றார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஆனால், எங்களிடம் அது இல்லாதிருப்பது கவலைக்குரியது.

இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளராக தமிழரசு கட்சிக்குள் இருந்து ஒருவரை தெரிவு செய்திருப்பது என்பது தமிழரசுக் கட்சியை வழிக்கு கொண்டுவரும் உத்தியாகவே நான் கருதுகின்றேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/190929

இலங்கை இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கான முதலாவது சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டம்

3 months 1 week ago

Published By: VISHNU   12 AUG, 2024 | 10:16 PM

image
 
சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தில் இலங்கை இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கான முதலாவது சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

in1.png

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சிறப்புப் பாடப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுத்தார். 

in2.png

இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு மாத்திரமன்றி இலங்கைக்கும் பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும் விடயமாக அமையும்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 

சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தின் சிறப்புப் பாடத்தில் உள்ள இலங்கை தூதர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டார். 

உலகளாவிய ரீதியில் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததுடன் டிஜிட்டல் சகாப்தத்தின் சாத்தியங்கள் மற்றும் சவால்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

https://www.virakesari.lk/article/190945

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் - பொ. ஐங்கரநேசன்

3 months 1 week ago

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் - அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்துள்ளது. 

இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இறப்பர் - அரிசி உடன்பாட்டுக்கு வழி சமைத்ததைப்போன்றே தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சீனாவில் இருந்து அவ்வப்போது நன்கொடையாக அரிசியை கையேந்துவதற்கு வழிகோலியுள்ளது. 

அண்மையில் வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் நன்கொடையாக அரிசி விநியோகப்பட்டுள்ளது. இந்நன்கொடையில் மனிதாபிமானத்தை விட பிராந்திய அரசியல் மேலோங்கியிருப்பது வெளிப்படையானது. ஆனால், சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா நன்கொடையாக வழங்கிவருகின்ற அரிசி குறித்து பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகில் அதிகளவில் அரிசியை உற்பத்தி செய்யும் நாடாகவும் அதிகளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் சீனாவே முதலிடத்தில் உள்ளது. ஆனால், அண்மைக் கால ஆய்வுகளின் முடிவுகள் சீனாவின் அரிசியில் சூழல் மாசு காரணமாக கட்மியம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விடவும் பன்மடங்கு அதிகமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கட்மியம் உடலுக்கு அத்தியாவசியம் இல்லாத ஆபத்தான ஒரு பாரஉலோகம். உணவின் மூலம் உடலில் நுழைந்து நீண்டகாலம் தேங்கியிருக்கக்கூடிய இக்கட்மியம் சிறுநீரகங்களை செயலிழக்க வைப்பதோடு மார்பு, நுரையீரல், சதையம், சிறுநீரகம் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தரப்பரிசோதனை செய்யப்படாத அரிசியை நுகர்வது குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.

இலங்கை 2023ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் தன்நிறைவைக் கொண்டிருந்தது. 

கடந்த பெரும்போகத்தில் மழைவெள்ளம் சில பிரதேசங்களில் நெற்செய்கையைப் பாதித்திருந்தாலும் இந்த ஆண்டினது ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படவில்லை. சீனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை மாத்திரமே நோக்கமாகக் கொண்டிருப்பின் தனது சந்தேகத்துக்கு இடமான அரிசியை இலங்கையில் விநியோகிப்பதை நிறுத்தி இலங்கையிலேயே அதனைக் கொள்வனவு செய்து விநியோகிப்பதே சாலச்சிறந்தது. இந்நடைமுறை சரியான சந்தை வாய்ப்புகளின்றித் தவிக்கும் எமது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதோடு ஆபத்தான பார உலோகங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கவும் செய்யும். 

சோற்று அரசியல் சேற்றுக்குள் சிக்கி மென்மேலும் எமது மக்களின் வாழ்வு சீரழியாமல் இருக்க உரிய தரப்புகள் இது குறித்து உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் - பொ. ஐங்கரநேசன்  | Virakesari.lk

வட, கிழக்கில் இந்தியாவுடன் எமக்கு எவ்வித போட்டியுமில்லை : தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சீனத்தூதுவர் தெரிவிப்பு

3 months 1 week ago

Published By: Vishnu

12 Aug, 2024 | 07:01 PM
image
 

(நா.தனுஜா)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியாவுடன் தமக்கு எந்தவொரு போட்டியும் இல்லை என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் தெரிவித்திருக்கும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் இந்தியாவுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றுவதற்கான காரணத்தைக் கேட்டறிந்திருக்கிறார். 

இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (12) கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்றது.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சமகால அரசியல் நிலைவரம் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடும் நோக்கிலேயே சீனத்தூதரகத்தினால் இச்சந்திப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

 அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும், தமிழ்மக்கள் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் தொடர்பான நிலைப்பாடு குறித்தும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த தமிழ் பிரதிநிதிகள், தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர். அதேவேளை ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கவுள்ள பிரதான வேட்பாளர்கள் மூவரும் தாம் வெற்றியீட்டினால் தமிழ் மக்களுக்கு வழங்கவிருக்கும் தீர்வு குறித்து பெரும்பாலும் ஒரேவிதமான கருத்துக்களையே வெளியிட்டிருக்கிறார்கள் எனவும், ஆகவே சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளரை ஆதரிப்பது குறித்து ஆராயலாம் எனத் தாம் தீர்மானித்திருப்பதாகவும் அவர்கள் எடுத்துரைத்தனர். 

அதனை செவிமடுத்த சீனத்தூதுவர், தாம் வட, கிழக்கு தமிழ்மக்களுடன் நெருங்கிய தொடர்பைப்பேண விரும்புகின்ற போதிலும், தாம் சிங்கள மக்களுக்கு ஆதரவானவர்கள் என்பது உள்ளடங்கலாக தம்மைப் பற்றிய பல்வேறு தவறான கருத்துக்களும், புரிதல்களும் தமிழர்கள் மத்தியில் நிலவுவதாகக் கவலை வெளியிட்டார்.

அத்தோடு அண்மையில் தாம் வடமாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்களை வழங்கியமையானது எந்தவொரு அரசியல் நலனையும் எதிர்பார்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல எனவும், மாறாக அம்மக்கள் மீதான உண்மையான அக்கறையின் நிமித்தமே அந்நடவடிக்கைகயை முன்னெடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

அதனைத் தாமும் வரவேற்பதாகத் தெரிவித்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன், சகல தரப்பினருடனும் இணைந்து நட்புறவுடன் பணியாற்றுவதற்கே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டனர்.

அதற்குப் பதிலளித்த சீனத்தூதுவர் 'நீங்கள் இந்தியாவுடன் அல்லவா அதிக நெருக்கத்தைப் பேணுகின்றீர்கள்?' என வினவினார். அதனை ஒப்புக்கொண்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தம்மைப் பொறுத்தமட்டில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விவகாரமே மிகப்பிரதானமானது எனவும், அவ்விடயத்தில் இந்தியா குறிப்பிடத்தக்களவு கரிசனை காண்பிப்பதனால் தமிழ்மக்கள் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுவதாகத் தெரிவித்தனர்.

அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட சீனத்தூதுவர் சி சென்ஹொங், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு இந்தியாவுடன் எவ்வித போட்டியும் இல்லை எனவும், இலங்கையின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் சீனா ஈடுபடாது எனவும் உறுதியளித்தார். 

வட, கிழக்கில் இந்தியாவுடன் எமக்கு எவ்வித போட்டியுமில்லை : தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சீனத்தூதுவர் தெரிவிப்பு | Virakesari.lk

சட்டவிரோதமாக குளம் அமைக்க தனிநபர் ஒருவர் முயற்சி : வவுனியாவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 7   12 AUG, 2024 | 05:20 PM

image
 

வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம் பீகிடியா பாம் கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை (12) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

செட்டிக்குளம் பீகிடியா பாம் கிராமத்தில் தனி நபரொருவர் சட்டவிரோதமாக குளம்  அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. 

தனிநபர் ஒருவர் எந்தவித அனுமதியுமின்றி புதிதாக அணைக்கட்டு போடப்பட்டு குளம் அமைப்பதனால் அதற்கு கீழ் வாழுகின்ற 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் குளக்கட்டு உடைப்பெடுக்குமாயின் தமது வீடுகள் வெள்ளநீரில் மூழ்கிவிடும் எனவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரியே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு, வயல்களே இல்லாத இடத்தில் இந்தவித பொறிமுறையும்  இன்றி குளக்கட்டு அமைப்பதனால் இதற்கு அருகாமையிலுள்ள பிரதேச மக்களின் வாழ்வு கேள்ளவிக்குறியாகியுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த அப்பிரதேசத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இது வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணி எனவே பிரதேச செயலகம் வனவள திணைக்களத்தோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாக கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

Screenshot_20240812_152952_com.hihonor.p

Screenshot_20240812_152959_com.hihonor.p

 

Screenshot_20240812_153017_com.hihonor.p

https://www.virakesari.lk/article/190918

சுமந்திரன், சாணக்கியன் - இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்திப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 3   12 AUG, 2024 | 02:22 PM

image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர்.

சீனத் தூதுவரின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் இன்று திங்கட்கிழமை (12)  குறித்த சந்திப்பு நடைபெற்றது.

தற்போதைய முக்கிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமாகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/190893

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

3 months 1 week ago

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் நிகழ்நிலை விசா வழங்கப்படாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைக்கான விசாவைப் பெறுவதற்கு நீண்ட வரிசைகள் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இலங்கைக்குள் நுழைவதற்கான விசா வழங்குவதில் இருந்து VFS Global நிறுவனத்தை நீக்கி, பழைய முறைப்படி விமான நிலையத்தில் விசா வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒன் அரைவல் விசா

எனினும், அரசாங்கமும் குடிவரவு திணைக்களமும் பழைய முறைப்படி நிகழ்நிலை விசா வழங்குவதை ஆரம்பிக்காததால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா பெற நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை | Problem For Tourists Due To Non Online Visa Sl

இந்த நிலையில், இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒன் அரைவல் விசாவைப் பெறுவதே ஒரே தீர்வாக மாறியுள்ளது.

அதிகளவான விமானங்கள்

இலங்கையில் ஒகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கண்டி எசல பெரஹெரா திருவிழாவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகின்றனர்.

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை | Problem For Tourists Due To Non Online Visa Sl

இதன் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவான விமானங்கள் ஒரே நேரத்தில் வந்து சேரும் போது, விசா பெறுவதற்கு (On Arrival Visa) எப்போதும் நீண்ட வரிசையில் நிற்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

https://ibctamil.com/article/problem-for-tourists-due-to-non-online-visa-sl-1723446143

நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்!

3 months 1 week ago
24-66b346217bb8f.jpg?resize=600,375 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது .

இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1395448

மஹிந்தவுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது!

3 months 1 week ago
jonh.jpg?resize=570,375 மஹிந்தவுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது!

பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு  பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எதிர்வரும் 21ஆம் திகதி அதிகளவான மக்கள் எமது கூட்டத்தில் கூடுவார்கள். எனவே அதற்காக நாம் எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள்
அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது.

அதேபோன்றதொரு விடயம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு கிராம மட்டத்திலேயே அதிகமாக உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அணுகிய சிலர் மீண்டும் கட்சிக்கு வருமாறு கோரியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க மிகக் குறைந்த வாக்குகளை மாத்திரம் பெற்று தேர்தலில் தோல்வியடைவார்.

பொதுஜன பெரமுன ஒரு இளம் ஜனாதிபதி வேட்பாளராக நாமலை களமிறக்கியுள்ளது.
எனவே நாமலை சுற்றி அனைவரும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1395414

நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்!

3 months 1 week ago
ali-sabri.jpg?resize=650,375&ssl=1 நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1395444

டிஜிட்டல் முறைமையிலான சுயநிர்ணயத்தை தமிழர்களுக்கு வழங்கலாம் - பாட்டலி சம்பிக்க ரணவக்க

3 months 1 week ago

Published By: VISHNU  12 AUG, 2024 | 03:44 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு பிலியந்தல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் தெரிவித்ததாவது,

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தீர்மானமிக்கது. பொருளாதார படுகொலையாளிகளான ராஜபக்ஷர்கள் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிடுகிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்ஷர்களால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஊழல் மோசடியை இல்லாதொழிப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஊழல்வாதிகள் தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக குறிப்பிடும் தரப்பினர் அந்த ஆதாரங்களை கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.ஊழல் மோசடிகளை தமது அரசியல் பிரச்சாரத்துக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 ஊழல் மோசடி தொடர்பில் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுக் கொண்டு மக்களை நாங்கள் தூண்டிவிடவில்லை.நீதிமன்றத்தை நாடி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கு வி.எப்.எஸ்.நிறுவனத்தின் ஊடாக விசா விநியோகிக்கும் முறைமையில் பாரிய மோசடி இடம்பெறுவதையும் இந்த முறைமையால் இலங்கையில் ஆட்புல எல்லைக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயர்நீதிமன்றத்தில் ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினோம்.

தரவு மற்றும் ஆதாரங்களை பரிசீலனை செய்து வி.எப்.எஸ்.முறைமையிலான புதிய விசா விநியோகித்தல் முறைமைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படுகிறார்.

வெளிநாட்டு கையிறுப்பை அதிகளவில் ஈட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஜனாதிபதியின் இலக்குக்கு இவரால் பாதிப்பு ஏற்படும். ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தாவிடின் அதன் பெறுபேறு அவருக்கு எதிர்வரும் மாதம்; 21 ஆம் திகதி கிடைக்கப் பெறும்.

தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை கோருகிறார்கள். இதனால் தான் பல்லாயிர கணக்கானோர் உயிரிழந்தார்கள். அரச கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தினால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமையிலான சுயநிர்ணயத்தை வழங்க முடியும். மொழிசார்ந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறாது.

பொருளாதார காரணிகளை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்போம். நாடு வங்குரோத்து நிலைக்கு செல்லும் தீர்மானத்தை எடுப்பதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்பதை மக்களிடம் தெளிவாக எடுத்துரைப்போம்.

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போதைய முன்னேற்றத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒருபோதும் செயற்படமாட்டோம். பொருளாதார கொள்கையினை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.

ஜனநாயகம் பற்றி தற்போது பேசும் தரப்பினர் 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பங்களாதேஸ் நாட்டின் தற்போதைய நிலைமையை ஏற்படுத்த முயற்சித்தார்கள். இலங்கையை பங்களாதேஸ், சூடான் ஆகிய நாடாக மாற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்றார்.

https://www.virakesari.lk/article/190851

தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை. - ரணில் -

3 months 1 week ago
ranill.jpg?resize=750,375 தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை. - ரணில் -

அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்படவுள்ள சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று நுவரெலியாவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

எனவே அதனை மாற்றி வேறுபாதையில் பயணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது
மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் மாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளேன்.

அத்துடன் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில்
தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் கிடைக்கும்”  இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட இந்து பூசகர்கள் குழுவின் தலைவர் வேலு சுவிஸ்வர சர்மா மற்றும் தொழில் வல்லுனர்கள் குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395417

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு

3 months 1 week ago
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
11 AUG, 2024 | 05:01 PM
image
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம் திங்கட்கிழமை (12) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அடிப்படையில் 14 உறுப்பினர்களும் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள். 

தேர்தல் வேலைகளில் மூழ்கியிருப்பதால் குறுகிய கால அழைப்பின் அடிப்படையில் நாளைய சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பாக கலந்துகொள்வது சிரமமாக இருக்கும். 

எதிர்காலத்தில் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று சந்திப்புகளில் கலந்துகொள்வது தொடர்பான முடிவை பொதுக் கட்டமைப்பு கூடி முடிவெடுக்கும் -என தமிழ் தேசிய பொது கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் மூலம் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/190828

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள், 6 மடிக்கணினிகளுடன் மூவர் கட்டுநாயக்கவில் கைது!

3 months 1 week ago
11 AUG, 2024 | 11:58 AM
image
 

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகள் ஆகியவற்றுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தைானவர்கள் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 - 45 வயதுக்குட்பட்ட வர்த்தகர்கள் ஆவர். 

இந்த சந்தேக நபர்கள் நேற்று (10) நள்ளிரவு 12.30 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-649 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது, அவர்களது பயணப்பைகள் அதிகாரிகளால் சோதனையிடப்பட்டது. அவ்வேளை மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் கண்டெடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதனையடுத்து, கைதான மூவரையும் சட்டவிரோதமாக கொண்டு வந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவற்றையும்  மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, சுங்கத்துறை அதிகாரி, சோதனை நடத்தியதன் பின்னர் கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளை பறிமுதல் செய்ததோடு, கைதான மூவருக்கும் 16 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

IMG-20240810-WA0066.jpg

IMG-20240810-WA0067.jpg

https://www.virakesari.lk/article/190803

Checked
Thu, 11/21/2024 - 23:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr