ஊர்ப்புதினம்

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர்

3 months 2 weeks ago

வவுனியா, நெளுக்குளம்,  பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி  கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.

வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று   காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, வேப்பங்குளம்  பகுதியில் வசிக்கும்,

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான கிருஷன் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் குறித்த ஆசிரியரின் துவிச்சக்கர வண்டி, பாதணி, குடை என்பனவும் பாெலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/307397

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 34 ஆண்டுகள் நிறைவு

3 months 2 weeks ago

453503606_3732557863672711_7278465778258175705_n.jpg

 

காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 34 வருடங்களுக்கு முன், இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் இன்று 03-08-2024 நினைவு கூறப்பட்டுள்ளது.

 

 

1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும்ஆ பள்ளிவாசலில், இரவு நேரம் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது, நடத்தப்டப்ட இந்த தாக்குதலில் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள்.
 
 
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும்.
 
அவர்களுக்காக பிரார்த்திப்போம்.

கிழக்கு முஸ்லிம்களின் இழப்புகளுக்கு நீதி வேண்டும்

காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இஷா தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேர் விடு­தலைப் புலி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டு இன்­றுடன் சரி­யாக 33 வரு­டங்­க­ளா­கின்­றன. இன்­றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் ஷுஹ­தாக்கள் தின­மாக அனுஷ்­டிக்­கின்­றனர். இதனை நினைவு கூரும் முக­மாக இன்று காத்­தான்­கு­டியில் பல நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட இயக்­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்­லிம்கள் சந்­தித்த இழப்­பு­களின் உச்­ச­பட்­சமே இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லை­யாகும். கிழக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்ற வேண்டும் என்­பதே அன்று புலி­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இதன் கார­ண­மாக காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை, ஏறாவூர் படு­கொலை, அளிஞ்­சிப்­பொத்­தானை படு­கொலை, குருக்­கள்­மடம் கடத்­தலும் படு­கொ­லையும்,பல்­வேறு குணடுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அவ்­வப்­போ­தான ஆட்­க­டத்­தல்கள், கல்­வி­மான்­களை இலக்கு வைத்த படு­கொ­லைகள் என அக் காலப்­ப­கு­தியில் ஆயுதம் தாங்­கிய குழுக்­களால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான வன்­மு­றை­களால் சுமார் 7000 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி பல்­லா­யிரக் கணக்­கான ஏக்கர் நிலங்­களை முஸ்­லிம்கள் இழந்­துள்­ளனர். இதன் கார­ண­மாக இன்று கிழக்கு மாகா­ணத்தில் மிகவும் குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் மிக நெருக்­க­மாக வாழ்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இது பல்­வேறு சுகா­தார மற்றும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளது.

இந்த நாட்டை பிரி­வி­னை­யி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­காக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் பாரிய விலையைக் கொடுத்­துள்­ளனர். வடக்கு முஸ்­லிம்கள் தமது தாய­கத்­தி­லி­ருந்து எவ்­வாறு விரட்­டப்­பட்­டதன் மூலம் தமது வாழ்­வையே தொலைத்­தார்­களோ அதே­போன்று கிழக்கு முஸ்­லிம்­களும் மேற்­கு­றிப்­பிட்ட வன்­மு­றை­களால் மிக மோச­மான பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்­ளனர். இருப்­பினும் இவற்­றுக்கு இது­வரை குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான எந்­த­வித நஷ்­ட­யீ­டு­க­ளையோ நீதி­யையோ அவர்கள் பெற­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த காலங்­களில் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது முஸ்­லிம்­களைத் தனித்­த­ரப்­பாக அங்­கீ­க­ரிக்­கு­மாறும் இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும் கோரிக்­கை­வி­டுத்தும் அவை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்­லிம்கள் சார்பில் பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அவற்­றுக்கு எவரும் உரிய பதி­ல­ளிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூட கடந்த காலங்­களில் கிழக்கு முஸ்­லிம்­களின் அவ­லங்­களை வைத்தே அர­சியல் செய்து அதி­கா­ரங்­க­ளுக்கு வந்­தனர். முஸ்லிம் தனித்­துவக் கட்­சிகள் அனைத்தும் முஸ்­லிம்­களின் இந்த இழப்­பு­களை சந்­தைப்­ப­டுத்­தியும் அவற்­றுக்கு தீர்வு தரு­வ­தா­கவும் கூறியே அர­சியல் செய்­தன. இன்றும் செய்து வரு­கின்­றன. எனினும் மக்­க­ளுக்கு எந்­த­வித நலனும் கிடைத்­த­தாக இல்லை.

அண்­மைக்­கா­ல­மாக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்த தயார் எனத் தெரி­வித்து வரு­கிறார். அண்­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் குழு­வு­டனும் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். இருப்­பினும் வடக்கு கிழக்கு முஸ்­லிம்­களின் கடந்த கால இழப்­புகள் தொடர்பில் எந்­த­வித கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் முன்வைத்த பிரச்சினைகளில்இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் தரப்பே இதனை ஒரு பிரச்­சி­னை­யாக கருதி ஜனாதிபதியிடம் பேசாத போது இவ்விடயத்துக்கு அவர் முக்கியத்துமவளிப்பார் என எதிர்பார்க்க முடியாது.

எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும்.

யுத்த காலத்தில் முஸ்லிம் தரப்பின் இழப்புகள் எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டனவோ அதேபோன்று தற்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக 33 ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படும் இன்றைய ஷுஹதாக்கள் தினத்தில் அனைவரும் அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனைப் பேசுபொருளாக்க வேண்டும்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/15564

2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன்

3 months 2 weeks ago

2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்கை இன்னாருக்கு அளியுங்கள் என நான் ஒருபோதும் கூறமாட்டேன் cvwiki.jpg

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். அந்த வாக்கினை இன்னாருக்கு அளியுங்கள் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளை யாருக்கு அளிக்கவேண்டும் என்பது குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதித்தேர்தலில் நிறுத்தும்போது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்கவேண்டும். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயமாகும். இதுகுறித்து அவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும்.

இந்த வேட்பாளருக்குத்தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கினை அளிக்கவேண்டும் என்று நான் எந்தவொரு கோரிக்கையையோ அல்லது ஆலோசனையையோ முன்வைக்கவில்லை. ஊடகவியலாளர்களால் பல கேள்விகள் முன்வைக்கப்படும்போது, எமது அடிப்படைக் குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களைத் திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடகவியலாளர்களுக்கு இருப்பதைக் காணமுடிகின்றது.

ஆனால் அவை என்னுடைய கருத்துக்களன்று. நான் சில காலத்துக்கு முன்னர் தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று கூறியது உண்மைதான். இப்போதும் இந்த ஜனாதிபதித்தேர்தலினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து நான் அஞ்சுகிறேன். எந்தவொரு சிங்கள வேட்பாளரினாலும் 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலைவரம் கவலைக்கிடமாகலாம்.

பல தீயசக்திகள் நாட்டில் குழப்பநிலையைத் தோற்றுவிக்க முனையலாம். சீனா தனது படையை நாட்டுக்கு அனுப்பவிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இது சிறுபான்மையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். நாட்டின் பொருளாதார நிலைவரத்திலும், ஸ்திரத்தன்மையிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

வெளிநாட்டு ஊடுருவல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கலாம். இவையனைத்தையும் கருத்திற்கொண்டே தேர்தலை பிற்போடுவது சிறந்தது என்று நான் கூறினேன். அதேவேளை நாட்டின் நலன்கருதி மூன்று பிரதான வேட்பாளர்களும் இதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கலந்தாலோசிக்கலாம் எனவும் கூறினேன்.

அவ்வாறு கூறியதை மனதில் வைத்துத்தான் சில ஊடகங்கள் நான் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு தமிழ் மக்கள் 2 ஆவது விருப்பு வாக்கினை அளிக்கவேண்டும் என்று கூறியதாக தவறாக செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள். நாட்டின் நலன்கருதி நான் கூறியதற்கும் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவில் எனது திடமான முடிவுக்கும் உறவமைத்து கூறியமை பத்திரிகையாளர்களின் ஊகமாகும்.

தமிழ் பொதுவேட்பாளருக்கே தமிழ் மக்கள் தமது முதல் வாக்கினை அளிக்கவேண்டும். 2 ஆம், 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையாகும். இன்னாருக்கு அதனை அளியுங்கள் என்று எந்தத் தருணத்திலும் நான் கூறவில்லை. கூறவும் மாட்டேன் என்றார்.
 

https://akkinikkunchu.com/?p=286956

திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்; குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி

3 months 2 weeks ago

திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்; குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி

திருக்கோணமலை மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றது.

இதன் போது வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், மக்களுடைய காணிகள் விடுவிப்பு, மக்கெய்சர் விளையாட்டு அரங்கு தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன் இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
 

https://thinakkural.lk/article/307386

விசேட தேவையுடையோருக்கான வாய்ப்புகள் அனைத்துமே சீரழிந்துவிட்டன : சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா!

3 months 2 weeks ago
05 AUG, 2024 | 03:57 PM
image

எமது நாடு வங்குரோத்து  நிலையை அடைந்தது தானாக இடம்பெற்ற ஒன்றல்ல. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பிறப்பித்த ஒன்றாகும்.  அதைப்போலவே இந்த நாட்டில் இருக்கின்ற பதினாறு இலட்சம்  வலதுகுறைந்தவர்களில் எவருமே இந்த  வங்குரோத்துநிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களல்ல என சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா தெரிவித்தார்.   

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கடந்த 03 ஆம் திகதி சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகள்  பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே சமூக ஆர்வலர் சுகத் வசந்த த சில்வா இவ்வாறு தெரிவித்தார்.   

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இன்றளவில் பலர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தாலும் கூருணர்வுமிக்க ஒருவராக ஜனாதிபதி பதவிக்காக நியமிக்கப்படுகின்ற ஒருவராக  அநுர குமார திசாநாயக்க மாத்திரமே இருக்கிறார்.   

எமது நாடு வங்குரோத்து  நிலையை அடைந்தது தானாக இடம்பெற்ற ஒன்றல்ல. இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் பிறப்பித்த ஒன்றாகும்.  அதைப்போலவே இந்த நாட்டில் இருக்கின்ற பதினாறு இலட்சம்  வலதுகுறைந்தவர்களில் எவருமே இந்த  வங்குரோத்துநிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களல்ல.  

எனினும் பொருளாதார சீரழிவினால் மூச்செடுக்க இயலாதநிலைக்கு ஆளாகியவர்கள் வலதுகுறைந்தவர்கள் அனைவருமேயாவர். எமது உழைப்பினை விற்க நாங்கள் தயார்.  

அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். வலதுகுறைந்தவர்கள் அத்தகைய இயலாமைநிலையை  வெற்றிகண்டு சமூகமயமாகத் தயார். 

இற்றைவரை சுயதொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வலதுகுறைந்தோருக்கு  நிலவிய வாய்ப்புகள் அனைத்துமே அற்றுப்போய்விட்டன. குறைந்தபட்சம் ஊதுபத்தியைக்கூட தயாரித்து விற்கமுடியவில்லை.

இந்த நிலைமையை மாற்றியமைத்துக்கொள்ள இன்று வெளியிடுகின்ற தேசிய கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமென்ற தீவிர நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.  

https://www.virakesari.lk/article/190310

யாழில் குற்றச் செயலை மேற்கொள்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7

05 AUG, 2024 | 05:23 PM
image
 

யாழில் குற்றச்செயலினை மேற்கொள்வதற்காக பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த 3 வாள்கள், காலணிகள், முகமூடிகள் மற்றும் மேல் அங்கிகள் என்பன இன்று திங்கட்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஏழாலை மேற்கு , ஏழாலை, புளியங்கிணற்றடி என்ற இடத்தில் உள்ள பற்றைக்குள் இருந்தே மேற்குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/190349

ஜனாதிபதியுடனான சந்திப்பு பரகசியமானதே - அனந்தி சசிதரன்

3 months 2 weeks ago

Published By: VISHNU   05 AUG, 2024 | 05:55 PM

image

நான் ஜனாதிபதியுடன் ரகசியமான சந்திப்பில் ஈடுபடவில்லை. பரகசியமான சந்திப்பிலேயே ஈடுபட்டேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமான ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (4) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற வகையில் கடந்த மாதம் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து இருந்தேன். வடக்கு கிழக்கு மக்கள் தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை நான் கேட்டுக் கொண்டேன்.

அதேபோல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களையும் நான் சந்தித்திருந்தேன். நான் ஏற்கனவே வடக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துகின்றேன். தற்பொழுது ஈழத் தமிழர் சிவாஜி கழகத்தினுடைய செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகின்றேன்.

ஒரு மரியாதையின் நிமித்தமே நான் ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்கின்றேன். அந்த சந்திப்பில், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அவருடைய நிலைப்பாடு என்ன? அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான தீர்வுகள் என்ன என்பது தொடர்பாக கேட்டுத் தெரிந்து கொள்கின்ற நிலையில் இந்த சந்திப்பை மேற்கொண்டேன். 

இந்த சந்திப்பானது இரகசியம் அல்ல. பரகசியமான சந்திப்பு தான். அந்த வகையில் நான், தொடர்ந்தும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கு அழைப்பு விடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களையும் சந்தித்து அவர்களுடைய நிலைப்பாடுகள் என்ன என்பதை அறிந்து மக்களுக்கு சொல்வதில் நான் தயாராக இருக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/190362

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்!

3 months 2 weeks ago
Defence-Ministry.webp?resize=650,375 சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்!

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

அத்துடன், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு E-விசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அதற்கமைய ஆகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைய முறையின் ஊடாக விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக விசா பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ON ARRIVAL விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1394793

தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!

3 months 2 weeks ago
Screenshot-2024-04-13-120059-750x430-1.j தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவு என்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் 7 பிரதிநிதிகளும் 7 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளும் கூட்டிணைந்து இந்த தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை ஸ்தாபித்துள்ளனர்.

 

எனினும், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபரை தெரிவு செய்வதற்காக நீண்ட பட்டியலொன்று தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது சந்திரநேரு சந்திரகாந்தன், தவராசா, அரியநேத்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அது பலனளிக்காத நிலையில் தற்போது அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாகவும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் எந்தவொரு தரப்பினரும் பொருந்தாத நிலையில் இறுதியாக சி.வி. விக்னேஸ்வரனை பரிசீலிப்பதாகவும் குறிப்பாக அவர் இரண்டாவது வாக்கு தொடர்பில் அதிகமாக பிரஸ்தாபித்து வருவதால் அவருடைய பெயரை இறுதி நிலையில் வைப்பதற்கு பொதுக்கட்டமைப்பின் சிவில் தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2024/1394799

விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்!

3 months 2 weeks ago
C.V.jpg?resize=720,375 விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்!

விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்பதால் குறித்த ஒரு நபருக்கே வாக்களிக்குமாறு தான் எந்தத் தருணத்திலும் கூறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாா்.

தமிழ் பொது வேட்பாளா் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.

 

 அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேலும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் தொிவித்துள்ளாா்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் குறித்தே தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என தான் முன்னா் கூறியிருந்ததாகவும், எந்த ஒரு சிங்கள வேட்பாளரினாலும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற முடியாமல் போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலை கவலைக்கிடமாகலாம் என்றும்  சி.வி.விக்னேஸ்வரன் தொிவித்தாா்.

விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம் என்பதால், இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தொிவித்துள்ளாா்.

https://athavannews.com/2024/1394797

@புலவர்

ஜனாதிபதித் தேர்தல் – இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினா்!

3 months 2 weeks ago
election-commission.jpg?resize=600,375 ஜனாதிபதித் தேர்தல் – இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினா்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் இருவர் சுயாதீன வேட்பாளர்களாக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

 

இதன்படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்

தம்மிக்க ரத்நாயக்கவினால் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து 9 வேட்பாளர்களும் சுயாதீனமாகப் போட்டியிடவுள்ள 6 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எல் ஏ எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1394822

ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது – உதயங்க வீரதுங்க!

3 months 2 weeks ago
22-62833fa9c6d88.jpeg?resize=600,375 ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது – உதயங்க வீரதுங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

 

“பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் எமக்கு சவாலாக அமையாது.வரலாற்றில் ரணில் விக்ரமசிங்க தவறான தீர்மானங்களையே மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவடைந்தமை ஐக்கிய தேசியக் கட்சி இன்று முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல் மைத்ரிபால சிறிசேனவுக்கு கட்சி என்ற ஒன்று இல்லாமல் உள்ளது.

பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ள பலர் விரைவில் வீடு செல்ல நேரிடும். ஏனெனில் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் ஒரு போதும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.

பொதுஜன பெரமுன கட்சி சார்பாக நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பலர் மஹிந்த ராஜபக்ஷவின் அடையாளத்தினாலேயே நாடாளுமன்றம் சென்றனர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிடகூடாது.

பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறிய எவருக்கும் தனிப்பட்ட விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெறாது” என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1394835

முல்லைத்தீவில் 5 கடைகளையும் கோவில் உண்டியலையும் உடைத்துத் திருடிய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது!

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7   05 AUG, 2024 | 10:22 AM

image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐந்து கடைகளையும் கோவிலையும் உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில்  இருவர்  புதுக்குடியிருப்பு பொலிஸாரால்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (04)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடைகள், ஆலய உண்டியல்  உடைத்து திருடப்பட்ட சம்பவங்கள் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக  இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கடை, வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு கடை , மந்துவில்லில் உள்ள ஒரு கடை, காமன்ஸ் அருகே ஒரு கடை, செம்மண்குன்றில் ஒரு கடை என  ஐந்து கடைகளும்  புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயத்தின் உண்டியலும்  உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார் குறித்த கைது  நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து  திருடப்பட்ட 46,230 பணமும் , திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

புதுக்குடியிருபு்பு 10 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவனும், மந்துவில்லை சேர்ந்த 24 வயதுடைய  இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இவ்வாறான திருட்டு சம்பவங்கள்  தொடர்ச்சியாக  இடம்பெற்று வருவதனால் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புதுக்குடியிருப்பு பொலிஸார் புதுக்குடியிருப்பு பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240804_22112259.jpeg

IMG_20240804_22102300.jpeg

IMG_20240804_22105018.jpeg

IMG_20240804_22105954.jpeg

https://www.virakesari.lk/article/190288

பிரதமர் பதவிக்கு கையேந்தியது எமது நாட்டில் மட்டுமே – ஜனாதிபதி ரணில்!

3 months 2 weeks ago
1715676181-ranil_L.jpg?resize=650,375&ss பிரதமர் பதவிக்கு கையேந்தியது எமது நாட்டில் மட்டுமே – ஜனாதிபதி ரணில்!

நாட்டில் நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்தால் மாத்திரமே மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாச்சார நிலையத்தில் நேற்று நடைபெற்ற
சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

இந்த நாட்டின் அப்போதைய நிலையை நான் நினைவுகூரத் தேவையில்லை. சிலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
ஊருக்கு வரக்கூடாது என அச்சுறுத்தினர்.

ஆனால் 2022 ஜூலை மாதத்தில் நாட்டின் மீட்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம்.

இந்த அமைச்சர்கள், எம்.பிகள் அனைவரும் எங்களுடன் இணைந்து, 2023ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை
வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

இப்போது எம்மால் வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை காண முடிந்தது.

 

2042 வரை எங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை மீறினால், அந்த சலுகைகளை இழக்க நேரிடும்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார்? பிரதமர் பதவிக்கு கையேந்தியது போன்று வேறு எந்த நாடாவது உலகில் இருக்க முடியுமா?

எனது நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும் அப்போது ஓடி ஒழிந்தார்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1394774

எதிர்க்கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் அரசியல் மேடைக்கு ஏற்றதாக இருந்தாலும் நாட்டுக்கு ஏற்றதல்ல - திருகோணமலையில் ஜனாதிபதி

3 months 2 weeks ago

Published By: VISHNU   04 AUG, 2024 | 08:09 PM

image

எதிர்க்கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் அரசியல் மேடைக்கு ஏற்றதாக இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அதனால் இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அனைவரும் அங்கீகரித்து, வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டில் அரசியல் செய்வதற்கு நல்ல பொருளாதாரம் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலவச சப்பாத்துகளை வழங்குவதால் மட்டும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது எனவும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலை இந்து கலாச்சார நிலையத்தில் இன்று (04) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற உறுப்பினர்  கபில அத்துகோரளவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும்  கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''இந்த நாட்டின் அப்போதைய நிலையை நான் நினைவுகூரத் தேவையில்லை. சிலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஊருக்கு வரக்கூடாது என  அச்சுறுத்தினர். ஆனால் 2022 ஜூலை  மாதத்தில் நாட்டின் மீட்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம். இந்த அமைச்சர்கள், எம்.பிகள் அனைவரும் எங்களுடன் இணைந்து, 2023ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை  வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

இப்போது  எமக்கு வங்குரோத்து நிலையில் இருந்து மீள முடிந்துள்ளது. இதற்கிடையில், மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தினோம். அத்துடன் நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் 'உறுமய' வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 250,000 பேருக்கு அந்த வீடுகளின் உரிமையை வழங்கவும் மலையக கிராமங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,  பாடசாலை மாணவர்களுக்கு பல கல்விப் புலமைப்பரிசில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாடு வங்குரோத்தான போது முடியாததை, வங்குரோத்தடைந்த நாடாக இருந்தபோது செய்தோம்.   நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டது தான் அதற்குக் காரணம். அரசாங்கத்தை பாதுகாத்தோம். அரசாங்கத்தை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாட்டை காண முடிந்தது. 2042 வரை எங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளை மீறினால், அந்த சலுகைகளை இழக்க நேரிடும். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று எதிர்க்கட்சிகள் இப்போது பேசுகின்றன. அவர்கள் சொல்வதைச் செய்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.

மேலும் இந்த நாட்டை இளைஞர்களுக்காக கட்டியெழுப்ப வேண்டும். இறக்குமதிக்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி போதுமானதாக இல்லாதிருப்பது தான் எமக்குள்ள பிரதான பிரச்சினையாகும். அதனால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 ஆண்டுகளுக்கு இந்த நிலை தொடர்ந்தால், 15 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.

எனவே, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும். அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய திட்டங்களைத் தொடங்கி இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

இலவச சப்பாத்துகள் வழங்கினால்தான் இந்நாட்டின் பிரச்சினைகள் தீரும் என்றாலும், சப்பாத்துகளை வழங்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசியல் செய்வதற்கும் நாட்டில் பொருளாதாரம் இருக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர் பொதுஜன பெரமுனையிலும் அடுத்த  வீட்டில் இருப்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும் மற்ற வீட்டில் இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தியிலும் இருந்தாலும் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்காவிட்டால்  என்ன பயன். அதனால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு அறிவித்த போது தப்பியோடியது யார்? பிரதமர் பதவிக்கு கையேந்திய வேறு நாடு உலகில் இருக்க முடியுமா? எனது நண்பர் அனுரகுமார திசாநாயக்கவை  கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த சவாலை ஏற்று நாட்டை அபிவிருத்தி செய்தோம். மேற்படி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் திருகோணமலை மாவட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

04 வருடங்களாக இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தொழில் கிடைக்கவில்லை. எனவே, இந்த மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் புதிய திட்டங்களை இப்போது ஆரம்பிக்கிறோம். திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியை வலுசக்தி மையமாக மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கைத்தொழில் பேட்டையொன்றை உருவாக்க சுமார் ஆயிரம் ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கந்தளாய் பிரதேசத்தில் புதிய பயிற்செய்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கிழக்கு மாகாணத்தில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். தற்போது பசு வளர்ப்பு , மீன்பிடித் தொழில்   நவீனமயமாக்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவற்கு  சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாக அதிகரிக்க திட்டமிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அறுகம்பே தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான பல்வேறு இடங்களில் சுற்றுலா வலயங்களை உருவாக்க   எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் அழகான கடற்கரை உள்ளது. அதை பயன்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.

ஹிங்குரக்கொட விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு தற்போது  நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கு வந்து கூச்சல் போடுவதால் எந்தப் பயனும் இல்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் பாடுபட வேண்டும். அதை நாம் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியலில் இருந்து கற்றுக்கொண்டோம். 30 வருடங்கள்  செல்லும் என்று கூறப்பட்ட மகாவலித் திட்டம் 10 வருடங்களில் நிறைவு செய்யப்பட்டது.

பின்னர் இரண்டு வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டன. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் முன்பை விட பல பணிகளை செய்ய முடியும். நாம் புதிய முறையில் முன்னேற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்ததும் சுயாதீனமானதும்  புதிய விடயமாகும்" என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள:

நாங்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து கொண்டு  அரசியலில் ஈடுபட்டவர்கள். எனவே இது எங்களுக்கு புதிய அனுபவம். அப்போது கட்சி ரீதியில் பணியாற்றிய நாங்கள் இப்போது ஒரே முகாமிற்குள் வந்துள்ளோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு பொருளாதார ரீதியாக மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. மீண்டும் அரசியல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.எமது அரசியல் செயற்பாட்டாளர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. சொத்துக்களை  அழித்து  அபிவிருத்தி செய்யும் முறை என்ன என்று வினவ விரும்புகிறேன்.

இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. ஆனால்  ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார். அன்றைய தினம் கட்சி என்ற அடிப்படையில் அவருக்கு ஆதரவளித்தோம். இன்று அவரால் எமக்கு  மீண்டும் அரசியல் செய்ய முடிந்துள்ளது.

அவரது சரியான அரசியல் மற்றும் பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று இந்நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்தது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு கட்சிக்காக நடத்தப்படவில்லை. இந்த நாட்டுக்கு மேலும் தலைவர்கள் தேவையில்லை. அவ்வாறு நடந்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். மக்களுக்கு வீதியில் இறங்க நேரிடும். இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் நியமிக்க நாம் அனைவரும் கட்சி பேதங்களை ஒதுக்கிவிட்டு ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி:

''நாடு நெருக்கடி நிலையை அடைந்த போது  மக்களைக் காப்பாற்ற எந்தத் தலைவரும் முன்வரவில்லை.   மக்களைக் காப்பாற்ற  ரணில் விக்ரமசிங்க நிபந்தனையின்றி முன் வந்தார்.

இன்று நாட்டின் பொருளாதாரம்  ஸ்திர நிலையை அடைந்துள்ளது. இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் சூழலை நாட்டில் உருவாக்க ஜனாதிபதியால் முடிந்தது. அவருடைய பொருளாதாரப் பார்வை நாட்டுக்கு தொடர்ந்தும் அவசியம்.

பொருளாதார வேலைத் திட்டத்தை தொடர முடியாத பட்சத்தில் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்றார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் மாகாண சபை அமைச்சர் நவரத்ன ராஜா, திருகோணமலை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மன்றத்தின் செயலாளர் சாலிய ரத்நாயக்க, முன்னாள்  செயலாளர் சந்துன் ரத்நாயக்க,முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர் கந்தசாமி கோனேஷ்வரன், திருகோணமலை மாவட்ட ஐ.தே.கட்சி தொகுதி அமைப்பாளர் ஏ.பி. அமீன், முன்னாள் உள்ளுராட்சி சபை மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் தலைவர்கள், செயற்பாட்டு  உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/190276

 

1.2 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்திய ஒப்பந்தத்தை நீதிமன்றம் ஊடாக நாம் நிறுத்தினோம் - சஜித் பிரேமதாச

3 months 2 weeks ago

Published By: VISHNU   04 AUG, 2024 | 06:35 PM

image

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்கலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

VFS கொடுக்கல் வாங்கள் மூலம் தமது சொந்த நலனையே இந்த திருடர்கள் முன்னெடுத்தனர். ரவூப் ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க ரணவக்க, அசோக் அபேசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தலைமையிலான  ஏனைய சட்டத்தரணிகளின் வலுவான வாதங்களை ஏற்றுக்கொண்டு VFS கொடுக்கல் வாங்கள் மோசடிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரேலியா மாவட்ட விவசாயிகள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (04)  ஹங்குராங்கெத்தையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரை நியமித்த முறையில் காணப்பட்ட குறைபாடுகளைக் கண்டு, உயர் நீதிமன்றம் தடை விதித்தபோது, ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் விமர்சித்தது. VFS கொடுக்கல் வாங்கள் மூலம் 1.2 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் தடை விதித்துள்ளமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் என்ன கூறப்போகின்றனர் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திருடர்களைப் பிடிப்போம் என பெரிதாக கூறிக்கொள்ளும் சிவப்பு சகோதரர்கள் VFS கொடுக்கல் வாங்கள் தொடர்பில் எந்த பேச்சும் இல்லை. VFS கொடுக்கல் வாங்கல் ஒப்ந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நானே முதலில் வெளிக்கொணர்ந்தேன். இன்று பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரர்கள் திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும் திருடர்களுடன் டீல் போட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ராஜபக்சக்களுடன் கைகோர்த்து அரசியல் செய்தவர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதியுடன் கைகோர்த்து வருகின்றனர்.  மக்களே இவர்களின் முகங்களை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.  அடைக்கலம் தேடியே ரணிலோடு இணைகின்றனர். இன்று ராஜபக்ச குலத்தை முத்தமிட்டு நாட்டையே நாசமாக்கி தரப்பினர் ஜனாதிபதியோடு கைகோர்த்து தமக்கு பாதுகாப்பான இடத்தை தேடி வருகின்றனர்.  ஐக்கிய மக்கள் சக்தியிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியிலும் இந்த திருடர்களுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட நன்கொடையாளர்களின் நிதிப் பங்களிப்பில் எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வந்த “பிரபஞ்சம்” மற்றும் “மூச்சு” திட்டங்களை இடைநிறுத்தியுள்எனர். ஆனால், மக்கள் வரிப்பணத்தால் அரச நிதியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை ஜனாதிபதி திறந்து வைக்கும் வைபவங்களை நடத்துகிறார். சட்டம் யாவருக்கும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். ஜனாதிபதியின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது போன்று பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்பட்டு வருகிறது. 23 இலட்சம் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனிசெப் நிறுவனமே தெரிவித்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும். பாடசாலை மாணவர்களின் போசாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆட்சியாளர்களிடம் இதற்கு தீர்வுகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

விவசாயிக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க அரசிடம் பணம் இல்லாவிட்டாலும், ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கியுள்ளனர். நாட்டின் ஜனாதிபதியே நாட்டுக்காக அதிக தியாகம் செய்து, ஆதர்சமான நபராக திகழ வேண்டும். ஆனால் இங்கு எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. இந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்.

இன்று நாட்டை ஆள்பவர்கள் 7 நட்சத்திர ஹோட்டல்களிலும், மாளிகைகளிலும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருவதனால், சாதாரண மனிதன் படும் துக்கங்களும் வலிகளும் அவர்களுக்குப் புரிவதில்லை. சாதாரண மக்கள் படும் துன்பங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாது இருந்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

எனவே, இந்த மாளிகை கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்த நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளிகள், அரசு ஊழியர், நடுத்தரக் குடும்பங்களின் பிள்ளைகள் சர்வதேச தரத்திலான தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறும் நிறுவனங்களாக மாற்றுவோம். ஐக்கிய மக்கள் சக்தி இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/190273

இருளை இறந்த காலத்திடம் ஒப்படைத்துவிட்டு நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்க முடியும் - அநுர குமார

3 months 2 weeks ago
04 AUG, 2024 | 05:25 PM
image

நான் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு  கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோம்.   எமது நாடு பாரிய சீர்குலைவினை எதிர்நோக்கியதால் மிகவும் அதிகமாக  பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது நீங்கள்தான். நாடு எவ்வளவுதான் சீர்குலைவிற்கு இலக்காகியிருப்பினும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இங்கு குழுமியுள்ள உங்கள் மீது முன்வைக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை (03) ஆம் திகதி இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள்  பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.  

இவர் மேலும் தெரிவிக்கையில்,   

பல்வேறு துறைகளில்  உடலியலாமை நிலையுற்றவர்கள் தம்மை பாதித்துள்ள நிலைமைகள் பற்றிய விபரங்களை பலவிதமாக எம்மிடம் முன்வைத்தார்கள்.  அதைப்போலவே தமது திறன்களையும் ஆற்றல்களையும்  இந்த  மேடையில் வெளிக்காட்டினார்கள். அவற்றைப் பார்க்கும்போது  நாங்கள் எந்தளவுக்கு இரக்கமற்ற சமூகமொன்றில் எவ்வளவு நியாயமற்ற சுற்றுச்சூழலில் வாழ்கிறோம் என்பதே ஞாபகத்திற்கு வருகின்றது.  

நான் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு  கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோம். எமது நாடு பாரிய சீர்குலைவினை எதிர்நோக்கியதால் மிகவும் அதிகமாக  பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது நீங்கள்தான். நாடு எவ்வளவுதாள் சீர்குலைவிற்கு இலக்காகியிருப்பினும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இங்கு குழுமியுள்ள உங்கள் மீது முன்வைக்கப்படவில்லை.   

கண்கள் தெரிகின்ற காதுகள் கேட்கின்ற, சரியான அசைவுகளைக் கொண்டுள்ளவர்கள் தான் நீண்டகாலமாக எங்கள் நாட்டை ஆட்சிசெய்தார்கள். அதன் பாதக விளைவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆரத்தழுவி உள்ளன. உங்களைப் பார்க்கும்போது, உங்களின் பேச்சுகளை செவிமடுக்கும்போது, உங்கள் திறமைகள் வெளிப்படுத்தப்படுகையில் நாங்கள் ஏன் இவ்வளவு தாமதித்திருக்கிறோம் என்ற உணர்வு எமக்கு  ஏற்படுகின்றது. இந்த இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது.   

எம்மோடு பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற சகோதரர்கள்,  பழகிய குழுவினர் இங்கே இருக்கிறார்கள்.  இடைக்கிடையே சந்தித்திருக்கிறோம். சந்தித்த எல்லாச் சந்தர்ப்பங்களையும்விட இன்று எம்மனைவரதும் கண்கள் அகலத் திறந்து விட்டன என நினைக்கிறோம். எம்மனைவருக்காகவும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை   அமைத்துக்கொள்வோமென அழைப்பு விடுக்கிறோம். நாம் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை கடவுளின் விருப்பம் அல்லது  பூர்வஜென்மபலன் என நினைத்து மனதை தேற்றிக்கொண்டோம்.  

உலகம் முன்நோக்கி நகர்ந்து கைத்தொழில் புரட்சி இடம்பெறுகையில் அந்த கைத்தொழில் புரட்சியால் உறிஞ்சிக்கொள்ள முடியாமல் போன பிரிவினரை வலதுகுறைந்த ஆட்கள் என அழைத்தோம். அவர்களை தனிமைப்படுத்தினோம். எனினும் சமூகத்தின் மற்றுமொரு படிமுறையில் அவர்களை கவனித்துக்கொள்வது இரக்கசிந்தை அல்லது புண்ணிய கருமம் எனவும் பிறர்மீது பரிவிரக்கம்  காட்டுதல் போன்ற உணர்விற்கு கட்டுப்படுத்தி நலனோம்பலை வழங்கினோம்.  

எனினும் ஐக்கிய நாடுகள் அங்கீகரித்தக்கொண்ட பிரேரணைக்கிணங்க இந்த மக்களின் உரிமைகள் என்றவகையிலான அடிப்படை விடயங்கள் அறிமுகஞ்செய்யப்பட்டு நீண்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருசில அரசுகள் இந்த சமுதாயத்திற்கு சமத்துவமான உரிமைகளை வழங்கியுள்ளன.  

பொலிஸில்சென்று  ஒருவரிடம் கேள்விகேட்கும்போது "ஊமைபோல் இருக்காமல் பேசு" எனக் கூறுவார்கள். அந்த இடத்தில் இருப்பது பேசாதித்தல் பற்றிய பிரச்சினையல்ல. அவமதிப்பிற்கு உள்ளாக்குதலும்  அச்சுறுத்தலுமாகும். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் "செவிடன்போல்  இருக்கவேண்டாம்" என்பார்கள். மற்றவரை நோகடித்திட பிறரை அவமதிக்க மற்றவர்களின் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

நாமனைவரும் தவப்புதல்வர்களல்ல. ஒருசில பண்புகளால் ஒருசில பரிபூரணமின்மை நிலவுகின்றது. நீங்களும் மற்றவர்களைப்போல் சமத்துவமான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை வகுப்பதும் அமுலாக்குவதுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியமான குறிக்கோளாகும். தேர்தலின்போது முன்வைக்கப்படுகின்ற கொள்கை வெளியீட்டினை பாரதூரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டாமென தொலைக்காட்சி உரையாடலின்போது  ஆட்சியாளர்கள் கூறியது எமக்கு ஞாபகமிருக்கிறது. 

எனினும் கொள்கை வெளியீடு என்பது ஏதேனுமோர் அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக ஏற்படுத்திக்கொள்கின்ற இணக்கப்பாடாகும்.  அதனால் கொள்கை வெளியீடுதான்  வாக்காளர்களுக்கும்  ஆட்சியாளனுக்கும் இடையில் கட்டியெழுப்பப்படுகின்ற உடன்பாடு. இந்த உடன்பாட்டினை சிதைக்க ஒருபுறம் ஒதுக்கிவைக்க பொருட்படுத்தாமல்விட எமக்கு உரிமையில்லை. நாங்கள் இந்த உடன்பாட்டினை அமுலாக்குவதற்காக கடப்பாடு கொண்டுள்ளோம்.  

ஒரு யுகத்தில் இருந்த குழப்பமான பிரச்சினைகள் இன்று குழப்பமானவையல்ல. ஏதெனுமொரு இயலாமைநிலை கொண்டுள்ள ஒருவருக்கு சமூகத்தில் ஏனையோர் அனுபவித்து வருகின்ற அனைத்தையும் அனுபவிப்பது சிரமமான கருமமல்ல. பொருட்படுத்தாமல் விடுவதே இடம்பெற்றுள்ளது. இயலாமை நிலையுற்ற எவரும் எந்த மட்டத்தில் இருந்தாலும் செலியுலர் போனை பாவிக்கக்கூடிய நிலைமைக்கு தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்துள்ளது.   

தற்போது நிலவுகின்ற பெரும்பாலான சிக்கல்களை  மருத்துவவியலில் மற்றும் தொழில்நுட்பத்தில் போன்றே சமூக உளப்பாங்குகளால் தீர்த்துவைக்க முடியும்.  இந்த 21 ஆம் நூற்றாண்டில் நீங்கள் இனிமேலும்  உரையாடலுக்கு ஏற்புடையதாகாத பிரஜைகளாக வாழவேண்டியதில்லை. மனித சமுதாயம் அடைந்துள்ள பெருவெற்றிகளை இலக்குகளைக் கொண்டதாக நெறிப்படுத்தி  உங்களை உள்ளிட்ட அனைவருக்கும் மனிதநேயமிக்க சமூகமொன்றை உருவாக்க முடியும்.  அதனாலேயே தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் "ஒன்றாக பிடி தளராது"  என்பதை தொனிப்பொருளாக கொண்டுள்ளோம்.   

குறிப்பாக கல்வி சம்பந்தமாக இருக்கின்ற தடைகளை நீக்குவதைப்போலவே தொழில்வாய்ப்புகள் சம்பந்தமாக அனைவருக்கும் நியாயமான அணுகலை வழங்குவோம்.  வலதுகுறைந்த ஒரு பிள்ளை இருக்கின்ற குடும்பத்திலுள்ள அனைவரும் வேதனையுற்று சிரமங்களை எதிர்நோக்கி பொருளாதாரத்திற்கு சுமையாகிவிட்ட நிலைமையிலிருந்து மீட்டெடுக்கவேண்டும். பொருளாதாரத்திற்கு ஏதேனும் பெறுமதியை பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களின் ஆற்றல்களை பயன்படுத்துவது தேசிய மக்கள் சக்தியின் பிரதானமான ஒரு செயற்பாடாகும்.  

வலதுகுறைந்தவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வழியுரிமை மீது விசேட கவனஞ் செலுத்தப்படவேண்டியுள்ளது. அது பற்றிக் கவனஞ்செலுத்தி அவர்களின்  பாதுகாப்பு மற்றும் நீதி தொடர்பிலான அடிப்படைப் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். குறிப்பாக வலதுகுறைந்த பெண் பிள்ளைகள் எதிர்நோக்குகின்ற கவலைக்கிடமான நிலைமைகள் செய்தித்தாள்கள் வாயிலாக  வெளிக்கொணரப்பட்டுள்ளன. சீக்கிரமாக மனோபாவரீதியான மாற்றங்கள் ஏற்படவேண்டும். பிறர் மீது ஒத்துணர்வுகொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும்.   

அதனூடாகவே பாதுகாப்பு கட்டியெழுப்பப்படும். வலதுகுறைந்த ஆட்களை சமூகத்தில் முனைப்பான பங்காளிகளாக  மாற்றுவது எமது அடிப்படை  நோக்கமாகும். எமது இந்த கொள்கைகளின் உற்பத்தித்திறன்  இருப்பது தரவுகளிலல்ல மனிதத்துவத்திலாகும். தற்போது இருப்பது மனிதத்துவம் மற்றும்  நீதி பற்றிய பிரச்சினையாகும்.  உங்களையும்  எங்களையும் உள்ளிட்ட அனைவரையும் முன்நோக்கி நகர்த்துகின்ற வழிமுறைகளை நிச்சயமாக நாங்கள் அமுலாக்குவோம்.  நாங்கள் ஒன்றாக பிடி தளராது முன்நோக்கிச் செல்வோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார். 

https://www.virakesari.lk/article/190258

வவுனியா இளைஞனின் மரணத்தில் சந்தேகம் : உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவு

3 months 2 weeks ago
04 AUG, 2024 | 05:18 PM
image
 

வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட 26 வயதுடைய இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது சடலத்தை உடற்கூற்றாய்வு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (02) மாலை தாஸ்நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்ட நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டிருந்தார். 

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் சந்தேகம் தெரிவித்ததையடுத்து, சடலத்தை பார்வையிட்ட நீதவான், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இளைஞனின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளைய தினம் (05) உடற்கூற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/190260

யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!

3 months 2 weeks ago
301096491.jpg?resize=600,375 யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தை படுமோசமாகச்  சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தொியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தொிவித்துள்ளனா்.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன், உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இதனையடுத்து குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கொண்டு சென்றுள்ளார்.

பின்னா் குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலையே குழந்தை இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பளை பொலிஸார் குழந்தையின் தாயாரை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2024/1394724

நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித்திற்கு ஆதரவு – முஸ்லிம் காங்கிரஸ்!

3 months 2 weeks ago
images-20.jpeg?resize=284,177 நிபந்தனைகளின் அடிப்படையில் சஜித்திற்கு ஆதரவு – முஸ்லிம் காங்கிரஸ்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்,

கட்சியின் உயர்பீட கூட்டம் இன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இன்று நாம் நீண்டநேரம் கலந்துரையாடினோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக 3 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடவுள்ளோம்.

அவ்வாறு நிபந்தனைகளுககு உட்பட்டு ஐக்கிய மக்கள் கூட்டணியினக் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு எமது கட்சியின் உயர்பீட கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நான் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடவுள்ளேன்.

எனவே எதிர்வரும் ஜனாதிபித தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1394751

Checked
Thu, 11/21/2024 - 23:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr