அரசியல் அலசல்

தமிழ் மக்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து!

1 week 1 day ago

தமிழ் மக்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து!

on November 12, 2024

sri-lanka-pm-jaffna-e1731390845739.jpeg?

Photo, Economy Next

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கின்றன. முன்னைய நாடாளுமன்ற தேர்தல்களை விடவும் இந்தத் தடவை இலங்கையின் அரசியல் கோலங்கள் பெருமளவுக்கு மாறியிருக்கும் சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகிறது.

பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகளில் எந்த ஒன்றுமே தங்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்கவில்லை. பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயற்படுவதற்கே வாக்களிக்குமாறு அவற்றின் தலைவர்கள்  கேட்கிறார்கள். அதேவேளை, முதன்முதலாக ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் கூட ஒழுங்கான முறையில் அரசாங்கத்தை நடாத்துவதற்குத் தேவையான உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மையைத் தருமாறு மக்களை கேட்கிறதே தவிர, மூன்றில் இரண்டு அல்லது ஆறில் ஐந்து பெரும்பான்மை போன்று எதுவும் தேவையில்லை என்றுதான் கூறுகிறது. அதன் பல தலைவர்களின் தேர்தல் பிரசார உரைகளும் ஊடக நேர்காணல்களும் இதை வெளிக்காட்டுகின்றன.

ஆனால், ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்கத்தின் ஒரேயொரு அமைச்சரான விஜித ஹேரத்தும் நாடாளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் நிரப்புமாறும் எதிர்க்கட்சியே தேவையில்லை என்றும் தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு கடுமைான எதிர்ப்பு கிளம்பியது.

எதிரணி அரசியல்வாதிகள் குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி திசாநாயக்கவின் ஒன்றரை மாதகால ஆட்சியில் தவறு கண்டுபிடிப்பதிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களினால் நீண்ட நாட்களுக்கு ஆட்சிசெய்யக்கூடிய ஆற்றலும் அனுபவமும் இல்லை என்று பிரசாரம் செய்வதிலுமே கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். ஒரு குறுகிய காலத்துக்குள்ளாகவே தேசிய மக்கள் சக்தியில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியையே அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரித்து பதவிக்கு கொண்டுவரும் வழக்கத்தில் இருந்து இந்தத் தடவை மக்கள் விலகுவார்கள் என்று நம்பமுடியாது. மக்களிடம் எதைக்கூறி வாக்கு கேட்பது என்றே தெரியாமல் எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. ஜனாதிபதி திசாநாயக்க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறார். அரசியல் குழப்பநிலை ஒன்று உருவாவதை மக்களும் விரும்பமாட்டார்கள்.

தென்னிலங்கை நிலைவரம் இவ்வாறிருக்கையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நிலைவரம் மிகவும் குழப்பகரமானதாக இருக்கிறது. அடுத்த நாடாளுமன்றத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் ஒரு கட்டுறுதியானதாக இல்லாமல் ஒவ்வொரு கட்சியும் ஓரிரு உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய வாய்ப்பே இருக்கிறது.

இரு மாகாணங்களிலும் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முன்னென்றும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதனால் வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 28 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு 2067 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

வட மாகாணத்தில் மாவட்ட ரீதியாக நோக்கும்போது ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ்ப்பாணத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மொத்தம் 396 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். வன்னி மாவட்டத்தின் ஆறு ஆசனங்களுக்காக 23 கட்சிகளையும் 25 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 432 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் நான்கு ஆசனங்களுக்காக 17 கட்சிகளையும் 14 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 217 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஐந்து ஆசனங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 கட்சிகளும் 27 சுயேச்சைக் குழுக்களும் 392 வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்தின் ஏழு ஆசனங்களுக்காக 23 கட்சிகளையும் 40 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 630 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத்தின் 225 ஆசனங்களில் 29 தேசியப்பட்டியல் ஆசனங்களைத் தவிர்த்தால் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கே மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். வடக்கு, கிழக்கின் 28 ஆசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால் எஞ்சிய ஏழு மாகாணங்களிலும் உள்ள 17 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 168 ஆசனங்களுக்கு 6821 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதாவது, தென்னிலங்கையில் ஒரு ஆசனத்துக்கு 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற அதேவளை, வடக்கு, கிழக்கில் ஒரு ஆசனத்துக்கு 73 பேர் போட்டியிடுகின்றார்கள்.

ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் தமிழ் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்த்தவர்களாகவே இருக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லாதவை என்பதுடன் பல வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள்.

தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, சுயேச்சைக் குழுக்களும் கூட உணர்ச்சிகளைத் தூண்டுவதன் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவதற்காக தமிழ்த் தேசியவாத சுலோகங்களை தாராளமாகப் பயன்படுத்துகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னதாக அரசியலில் எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த பேர்வழிகளும் கூட திடீரென்று சுயேச்சைக் குழுக்களாக தேர்தல் களத்தில் இறங்கி தமிழ்த் தேசியவாதத்தை பாதுகாக்கப்போவதாக கூறுகிறார்கள்.

இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள பல்வேறு குழுக்களும் தனவந்தர்களும் பல தமிழ்க்கட்சிகளுக்கு நிதியுதவி செய்கிறார்கள். பல்வேறு சுயேச்சைக் குழுக்கள் களத்தில் இறங்கியதற்கு அந்த வெளிநாட்டுப் பணமே பெரிதும் காரணமாக இருக்கிறது.

தங்களுடன் தொடர்பு கொண்ட சில புலம்பெயர் தமிழ்க்குழுக்கள் பணம் தந்தால் சுயேச்சைக் குழுவை அமைத்து தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கேட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல கல்விமான்களும் சமூகத்தில் மதிப்புடைய முக்கியஸ்தர்களும் இந்தக் கட்டுரையாளரிடம் நேரடியாகவே கூறினார்கள். இலங்கை தமிழர் அரசியல் முன்னென்றும் இல்லாத வகையில ஊழல் மயப்படுவதற்கு  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அரசியல் குழுக்கள் உதவியாக இருக்கின்றன.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களினால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகள் தமிழரின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவதில் நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்திருந்தால் இன்று தமிழர் அரசியல் சமுதாயம் இந்தளவுக்கு சிதறிச் சீரழிந்திருக்காது.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் காலஞ்சென்ற தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம்  இயல்பாகவே வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகு வடக்கு, கிழக்கு தமிழர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான சக்தியாக கூட்டமைப்பே விளங்கியது.

போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்கைளைக் கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு 2010 தேர்தலில் 14 ஆசனங்களையே பெறக்கூடியதாக இருந்தது. மீண்டும் 2015 நாடாளுமன்ற தேர்தலில்  கூட்டமைப்பின் ஆசனங்கள் 16 ஆக அதிகரித்தன. 2020 தேர்தலில் அதன் ஆசனங்கள் பத்தாகக் குறைந்தன.

தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி போன்ற சில தமிழ் கட்சிகளும் ஓரிரு ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தன.

இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  அங்கத்துவ கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் வளரத்தொடங்கின. பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய எஞ்சியிருந்த தழிழீழ விடுலை இயக்கம் (ரெலோ ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) போன்றவை கடந்த வருட முற்பகுதியில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்தன. கூட்டமைப்பில் இருந்து ஏற்கெனவே வெளியேறியிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் வேறு சில குழுக்களும் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்கியதில் இந்த புதிய கூட்டணி முக்கிய பங்கு வகித்தது. அந்தத் தேர்தல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை மாத்திரமல்ல கட்சிகளுக்குள் நிவவிய பூசல்களையும் அம்பலப்படுத்தியது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பலம்பொருந்திய  அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதில் தங்களுக்கு இருந்த வரலாற்றுப்  பொறுப்பை உணர முடியாதவர்களாக கட்சி அரசியல் நலன்களை மேம்படுத்துவதில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் தீர்க்கதரிசனமற்ற முறையில் செயற்பட்டதன் விளைாகவே தமிழ் அரசியல் சமுதாயம் இன்று சிதறுப்பட்டுக் கிடக்கிறது.

தற்போது தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய மூன்று அணிகளையுமே வடக்கு, கிழக்கில் போட்டியிடும் முக்கியமான கட்சிகளாகும். மூன்று கட்சிகளுமே தங்களை குறைந்தது பத்து ஆசனங்களுடனாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு தமிழ் மக்களிடம் கேட்கின்றன. இவற்றில் இரு மாகாணங்களிலும் பரந்தளவில் மக்கள் ஆதரவைக் கொண்டதாக இதுவரை தமிழரசு கட்சியே விளங்கிவந்தது.

அண்மைக்காலமாக நிலவிவரும் உள் முரண்பாடுகள் தமிழரசு கட்சிக்கு தமிழர்கள் மத்தியில் இருந்த ஆதரவை எந்தளவுக்குப் பாதித்திருக்கின்றது என்பதை இந்த வாரத்தைய தேர்தல் நிச்சயம் வெளிக்காட்டும். இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த பத்து ஆசனங்களில் ஆறு  ஆசனங்கள் தமிழரசு கட்சிக்குரியவை. இந்தத் தடவை அந்த ஆறு ஆசனங்களையாவது அந்தக் கட்சியினால் காப்பாற்றக்கூடியதாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி.

உட்கட்சி முரண்பாடுகளை தேர்தல் காலத்தில் வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச அரசியல் பக்குவமோ, சாதுரியமோ கூட இல்லாதவர்களாக தமிழரசு கட்சியின் சில தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். அதேவேளை, ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் தமிழரசு கட்சியை தாக்கிப் பேசுகிறார்களோ இல்லையோ அதன் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

அண்மைக்காலத்தில் சுமந்திரனைப் போன்று வேறு எந்தவொரு தமிழ்  அரசியல்வாதியும் இந்தளவு விமர்சனங்களுக்கு உள்ளாகியதில்லை எனலாம். இந்த தேர்தலுடன் அவரது அரசியலுக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிநிற்கிறார்கள். காரணத்தைக் கேட்டால் சுமந்திரனால் தமிழ்த் தேசியத்துக்கு ஆபத்து என்கிறார்கள். தாங்கள் எல்லோரும் குடாநாட்டுக் ‘குண்டுச் சட்டிக்குள்’ இருந்துகொண்டு அவ்வப்போது மக்களை உணர்சிவசப்படுத்தும் பேச்சுக்கள் மற்றும் கற்பனாவாத சுலோகங்கள் மூலமாக  தமிழ்த் தேசியத்தை பாதுகாத்து வருவதாக அவர்களின் நினைப்பு.

சுயேச்சைக் குழு ஒன்றை அமைத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் வைத்தியர் ஒருவரும் கூட தமிழ்த் தேசியத்தின் பேரில்தான் வாக்குக் கேட்கிறார்.  அவருக்கு கணிசமானளவு மக்கள் வாக்களித்து விடுவார்களோ என்று தமிழ் அரசியல்வாதிகளே பயப்படுகிறார்கள்.. பாவம் தமிழ்த் தேசியம்.

இத்தகைய சூழ்நிலையில், குறைந்தது ஒரு பத்து ஆசனங்களுடனாவது எந்த கட்சியையும் தங்களது பிரதான அரசியல் அணியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடியதாக தமிழர்கள் வாக்களிப்பார்களா என்பது இன்னொரு முக்கியமான கேள்வி.

இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றியை அடுத்து ஒரு மாற்றத்துக்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதில் ஓரளவுக்கு நாட்டம் காட்டுவதாக தமிழ் அரசியல்வாதிகளே கூறுகிறார்கள். அதற்கு தமிழ் கட்சிகளின் இதுகாலவரையான செயற்பாடுகள் மீதான மக்களின் வெறுப்பைத் தவிர, வேறு என்ன காரணம் இருக்கமுடியும்?

தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்துக்கு மத்தியில் அடுத்த நாடாளுமன்றத்தில் உறுதியான தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டியது வெகுவாக உணரப்படுகின்ற போதிலும், சிதறுப்பட்டுக் கிடக்கும் தமிழ் அரசியல் சமுதாயம் அதற்கான வாய்ப்புக்கு இடையூறாக அமையக்கூடும் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அத்துடன், வடக்கில் தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையும் இருக்கிறது. மக்கள் நிதானமாகச் சிந்தித்து செயற்படக்கூடியதாக எமது அரசியல்வாதிகள் நடந்துகொள்ளவில்லையே!

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்

 

 

https://maatram.org/articles/11846

தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும்  காரணம் என்ன? – மட்டு.நகரான்

1 week 2 days ago

தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும்  காரணம் என்ன? – மட்டு.நகரான்
November 12, 2024

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் திருவிழா வடக்கு கிழக்கிலும் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களின் உரிமைப்போராட்டம் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்ற வகையில் தொடர்ச்சியான பிரசாரங்கள் வடகிழக்கில் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் தமிழர்கள் பௌத்த பேரின வாதத்தினால் நசுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில் தொடர்ச்சியாக தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் நிலைமைகள் காரணமாக இந்த நாட்டில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று சர்வதேசம் வரையில் பேசப்படும் நிலையில் எந்த உரி மைக்காக இழப்புகளை எதிர்கொண்டோமோ அந்த உரிமையினை அந்த சமூகம் மறந்துசெல்லும் நிலைமையினை இலங்கையின் இந்த தேர்தல் களம் வெளிப்படுத்தி நிற்பதை காணமுடிகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியமானது மரணப்படுக்கையில் இருக்கும் நிலைமையே காணப்படுகின்றது.தமிழ் தேசிய அரசியலின் வாக்கு அரசியலை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்படும் செயற்பாடு கள் காரணமாக இன்று தமிழ் தேசிய அரசியல் மரணப்படுக்கைக்கு செல்லும் நிலையேற் படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலையில் இளம் சமூகத்தினர் மத்தியில் அபிவிருத்தி அரசியல் அல்லது தேசிய அரசியல் நிகழ்ச்சி திட்டங்கள் விதைக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் தேசிய அரசியல் தொடர்பில் அலையொன்று காணப்பட்டாலும் காலப்போக்கில் அந்த அலை யானது குறைந்துவருவதை காணமுடிகின்றது.கிழக்கின் தற்போதைய நிலைமையினை உணர்ந்த நிலையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இன்றைய நிலையில் கிழக்கில் தமிழர்களின் இருப்பினை தக்கவைக்க வேண்டுமானால் தமிழ் தேசிய அரசியல் உறுதிப்படுத்தப்படவேண்டும்.கிழக்கினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மட்டுமே செயற்பட்டுவந்தது.இந்த நிலைமையே இன்றும் காணப்படுகின்றது.இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் தமிழ் தேசிய அரசியலின் இருப்பு என்பது மிக முக்கியம் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.

ஆனால் கிழக்கில் தமிழ் தேசிய அரசி யலுக்குள் ஏற்பட்டுள்ள வாக்கு அரசியல் போட்டி மற்றும் கட்சிகளுக்கு இடையே கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் என்பது கிழக்கில் தமிழர்களின் அரசியல் இருப்பினை கேள்விக்குட்படுத்துமா என்ற வகையில் சென்று கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக் கப்படும் பாராளுமன்ற தேர்தலுக்கான செயற்பாடுகள் குறித்து பார்க்கவேண்டியது கட்டாய மாகும். குறிப்பாக தமிழ் தேசிய அரசியல் செயற் பாடுகளை இங்கு பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக பார்க்கின்றேன்.

குறிப்பாக கிழக்கிலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அலையொன்று இளையோர் மத்தியில் ஏற்பட்டுள்ளதுடன் சில கற்ற சமூகமும் இதற்கு பின்னால் உள்ளதை காணமுடிகின்றது.இந்த கோஷ்டி தமிழ் பேசும் மக்கள் தங்களின் பாராளு மன்ற பிரதிநிதித்துவத்தை காப்பது தொடர்பில் சிந்தித்துச் செயற்படுவதை, புதிய புரட்சி மாற்றக் கோஷ்டியினர், இனவாத சிந்தனை என்று விமர்சிக்கிறார்கள்.

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும், புரட்சிகர சிந்தனைகளைப் பேசிய இடதுசாரிக் கட்சிகளில் அநேகமானவை பேரினவாத அரசி யலுக்குள் சிக்கிக் சீரழிந்திருக்கின்றன. நாட்டையும் சீரழித்திருக்கின்றன. அதிக தருணங்களில் புரட்சி, புதிய மாற்றங்கள் என்று பேசிய இடதுசாரி இயக்கங்கள் எல்லாமும் அதிகாரத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூக்கிச் சுமந்திருக் கின்றன.

தேசிய மக்கள் சக்தியின்   கடந்த கால வரலாறும் அப்படித்தான் இருக்கின்றது. ஜே.வி.பி.யாக இருந்து, அவர்கள் பேசாத இனவாதம் என்று ஏதுமில்லை. இன்றைக்கு முகமூடிகளை அணிந்து வந்து நின்று, புதிய புரட்சி மாற்றம் குறித்துப் பேசினாலும், அவர்களின் அடிப்படை சிந்தனையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கின்றது; அடுத்து ஆட்சி நடத்தப் போவது ரில்வின் சில்வா, விஜித ஹேரத், கேடி லால்காந்த தரப்பினரின் சிந்தனைதான்.

அது, மிக ஆபத்தான பேரினவாத – அடிப்படைவாதம் நிறைந்தது. அதுபோக, அந்தக் கட்சியில் யார் வெற்றி பெற்றாலும், அவர் களை தூக்கியெறியும் முடிவை, ஜே.வி.பி எடுத்து விட்டால், அதற்கு எதிராக யாராலும் போராட முடியாது. அந்தக் கட்சியின் கட்டமைப்பு அப்படித்தான் இருக்கிறது. ஆகவே, தமிழ் பேசும் மக்கள், புதிய மாற்றம் என்கிற மாய வலைக் குள் சிக்கி தங்களது பிரதிநிதித்துவத்தினை வீணாக்காமலிருக்கவேண்டியது அவசியமாகும்.இது தொடர்பிலான பூரண தெளிவுபடுத்தல் இளையோர் மத்தியில் முன்னெடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்று கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் வாதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள போட்டி அரசியல் என்பது தமிழ் தேசிய அரசியலை கேள்விக்குட்படுத்திவருவதுடன் இளையோர் மத்தியிலும் கேள்விக்குட்படுத்திவருகின்றது. இதன்காரணமாகவே இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு பதிலாக தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று தமிழ் தேசிய அரசியலுக்குள் போட்டியிடுவோர் பெருமளவான பணத்தை செலவிட்டு தமது வாக்கு அரசியலை முன்னிறுத் திவருவதானது எதிர்கால சமூகத்திற்கு பிழையான வழிகாட்டல்கள் காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெருமளவான பணத் தினை செலவிட்டு சமூக ஊடக பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.எனினும் மட்டக் களப்பு மாவட்டத்தினை தவிர கிழக்கின் ஏனைய திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது.

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றிற்கு இடையே போட்டி அரசியல் நிலவிவருகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிழக்கில் மிகக்குறைந்த வாக்குகளையே பெறும் என்பதுடன் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே கடும்போட்டி நிலவுகின்றது.கிழக்கில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டி யவர்கள் இன்று பிரிந்து நின்று தமிழ் தேசிய அரசியலை கேள்விக்குட்படுத்திவருகின்றனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் விடுதலைப்புலிகள் நீக்க பிரசாரத்தினையே அதிகளவில் கிழக்கில் முன்னெடுத்துவருவதை காணமுடிகின்றது.கடந்த காலத்தில் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டவர்கள்,அரசாங்க கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராக செயற் பட்ட பலர் இன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசாரப்பீரங்கிகளாக மாற்றம்பெற்றுள்ளதே பல்வேறு சந்தேகங்களை கிழக்கில் தோற்றம்பெற்றுள்ளது.

குறிப்பாக கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகயிருந்து பிள்ளையானு டன் இணைந்து செயற்பட்டு வந்த புஸ்பராஜ ஜன நாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் நியமிக் கப்பட்டுள்ளார்.இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத் தில் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிள்ளையானின் கட்சியில் வேட்பாளராக பெயரிடப்பட்டு பிரசாரங்களை முன்னெடுத்த குருக்கள் ஒருவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட் பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் ஆரம் பத்தில் யுத்ததில் தமிழ் மக்களின் விடிவுக்காக மடிந்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டே பிரசார கூட்டங்கள் நடைபெறுகின்றன.ஆனால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரசாரக்கூட்டங்களில் மாவீரர்கள் என்ற பெயர் உச்சரிப்பதற்கே பின் னடிக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் கிழக்கு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை யிழக்கும் நிலைமையே காணப்படுகின்றது.தமிழ் தேசிய பரப்பில் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தினையும் மாவீரர்களையும் யாரும் பிரித்துப்பார்க்கமுடியாது.அதனை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

இவ்வாறான நிலைமையிலேயே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளது.அரசாங்க தரப்பு ஏனைய தரப்பின ரின் கடுமையான பிரசாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய பரப்பின் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்து கிழக்கு மாகாணத்தின் இருப்பினை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 

https://www.ilakku.org/தேசிய-மக்கள்-சக்தி-போன்ற/

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதியின் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்னவாகும்?

1 week 2 days ago
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அநுர குமார திஸாநாயக்க
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இதற்கு முன் அப்படி நடந்திருக்கிறதா?

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகியிருக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுவார்கள். ஆகவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ, கூட்டணியோ 113 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

 

செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்ற நிலையில், அப்போதிருந்த நாடாளுமன்றத்தில் அவரது தேசிய மக்கள் சக்திக்கு வெறும் மூன்று இடங்களே இருந்தன. அந்த நிலையில், எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இருக்கவில்லை. அவருக்கு ஆதரவு வழங்கி, பெரும்பான்மையைத் தரக்கூடிய நிலையிலும் எந்தக் கட்சியும் இருக்கவில்லை.

இலங்கையில் புதிய அரசியல் சூழலை உருவாக்க புதிய நாடாளுமன்றம் அவசியம் என்றும், தான் ஜனாதிபதியானால், நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத்தை அமைப்பேன் என்றும் பிரசாரத்தின்போது சொல்லிவந்தார் அநுர குமார திஸாநாயக்க.

அதன்படி தான் பதவியேற்ற அடுத்த நாளே, செப்டம்பர் 24-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை அவர் கலைத்து உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பர் 14-ஆம் தேதி நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

 
தேர்தலில் யார் போட்டியிடுகின்றனர்?

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல முனைப் போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அங்கத்துவம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி, கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுவிடும் நோக்கத்துடன் களத்தில் நிற்கிறது.

ஜனதா விமுக்தி பெரமுனவை தலைமையாகக் கொண்டு 2019-ஆம் ஆண்டு உருவான இந்த முன்னணியில், 21 கட்சிகளும் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமாகி ஜன பலவெகய (SJB) என்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியாக களத்தில் நிற்கிறது. இந்தக் கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் களத்தில் இருக்கிறது.

இவை தவிர, எஸ். ஸ்ரீதரன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன பலய, ரஞ்சன் ராமநாயகே தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் ஆகியவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர், புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில், இலங்கையில் அமைப்பு ரீதியான பல மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக அநுர குமார திஸாநாயக்க வாக்குறுதிகளை அளித்தார்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அமலில் இருந்தாலும், ஜனாதிபதி விரும்பிய மாற்றங்களைச் செய்ய, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது அவசியம். அதன் காரணமாகவே, ஜனாதிபதி தேர்தலில் இருந்த ஆதரவு அலையின் வேகம் தணியும் முன்பாகவே நாடாளுமன்றத் தேர்தலையும் அநுர குமார திஸாநாயக்க அறிவித்தார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுக்கும் வகையில் கடும் போட்டியைக் கொடுக்க நினைக்கின்றன.

இலங்கையில் நிறைவேற்று ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, பெரும்பாலும் ஜனாதிபதி அங்கத்துவம் வகிக்கும் கட்சியே ஆட்சியை அமைத்திருக்கிறது. ஆனால், அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ஒரு ஸ்திரமற்ற நிலை உருவாகும் என்கிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர்.

"அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெறாவிட்டால், வேறு சிறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைக்கப் பார்ப்பார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்றால், அது ஒரு ஸ்திரமற்ற நிலையையும் சிக்கல்களையும் உருவாக்கும்" என்கிறார் அகிலன் கதிர்காமர்.

காரணம், இலங்கையில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுகள் மட்டுமே ஜனாதிபதியின் கீழ் வரும் என்று கூறும் அவர் பிற அமைச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டின் கீழ்தான் வரும் என்பதால் முடிவுகளை எடுப்பதில் இழுபறி நீடிக்கும் என்கிறார். இது முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும் என கூறுகிறார் அகிலன் கதிர்காமர்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,UNIVERSITY OF JAFFNA

படக்குறிப்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர்
ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சியாக இருந்தால்...

நிறைவேற்று ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, இலங்கையின் வரலாற்றில் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் பிரதமர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி ஒரு நிலை 2001-ஆம் ஆண்டில் ஏற்பட்டது.

1999-ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியானார்.

அந்தச் சமயத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய பொது ஜன முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்தது. ஒரு கட்டத்தில் இந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கூட்டணியிலிருந்து விலகியது.

இதற்குப் பிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் பல கேபினட் அமைச்சர்கள் துணை அமைச்சர்களானார்கள். இதில் அதிருப்தியடைந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தனர். அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் முடிவெடுத்தனர்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1999ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவைத் தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியானார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டார் ஜனாதிபதி. அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கூடுதல் இடங்களைப் பிடித்தது. தேசியப் பட்டியலில் 13 இடங்கள் உட்பட 109 இடங்கள் அந்தக் கட்சிக்குக் கிடைத்தன.

இதையடுத்து 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான உறவு ஆரம்பத்திலிருந்தே உரசலுடன்தான் இருந்துவந்தது.

குறிப்பாக, ரணில் மேற்கொண்ட அமைதி நடவடிக்கைகளிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் சந்திரிகா குமாரதுங்கவுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. இது முற்றிக்கொண்டே சென்றது. அதே நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகள் முற்றிய நிலையில், 2003 -ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சகம், காவல்துறையைக் கட்டுப்படுத்தும் உள்நாட்டு விவகாரங்கள் துறை, ஊடக அமைச்சகம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.

அந்தத் தருணத்தில் அமெரிக்காவில் இருந்த ரணில், நாடு திரும்பியதும் ஜனாதிபதியைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சு தன்வசம் இல்லாவிட்டால், அமைதிப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்வது கடினம் என்றும் பிரதமரிடம் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பைத் தராவிட்டால் இனி ஜனாதிபதியே நேரடியாக அதில் ஈடுபடலாம் எனத் தெரிவித்தார். பிறகு, இரு தரப்பும் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து, முடிவுகளை எட்டலாம் என தீர்மானித்தனர்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2004 ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மகிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றார்.

இரு தரப்புப் பிரதிநிதிகளும் அமைதிப் பேச்சு வார்த்தை குறித்துப் பேசிவந்த நிலையில், 2004 ஜனவரி 20-ஆம் தேதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கும் இடையில் கூட்டணி முடிவானது. யாரும் எதிர்பாராத நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார் ஜனாதிபதி.

ஏப்ரல் 2-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனதா விமுக்தி பெரமுனவும் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 105 இடங்களைப் பெற்று மகிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்றார். ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82 இடங்களே கிடைத்தன.

இத்துடன் இரு ஆண்டுகளாக பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வந்தன.

2018-ஆம் ஆண்டிலும் இதுபோல, பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு, இலங்கையை ஒரு அரசியல்சாஸன நெருக்கடிக்குத் தள்ளியது.

2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரி பால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை புதிய பிரதமராக நியமித்தார். இதற்குப் பிறகு, அதே ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில் ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணிக்கு 106 இடங்கள் கிடைத்தன. இதற்குப் பிறகு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியையும் உள்ளடக்கிய தேசிய அரசு ஒன்று அமைக்கப்பட்டது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் - அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரி பால சிறிசேன பதவி ஏற்றார்.

ஆனால், விரைவிலேயே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்ற ஆரம்பித்தன. 2018-ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த அபார வெற்றிக்கு, தற்போதைய அரசின் மோசமான செயல்பாடுகளே காரணம் எனக் கூறும் குரல்கள் தேசிய அரசுக்குள்ளேயே எழுந்தன.

இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு மே மாதம் ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது ஆதரவாளர்களையும் குறிவைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்தன.

இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி. ஆனால், இதனை ஏற்க மறுத்த ரணில், தனக்கு இன்னமும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகக் கூறியதோடு, நாடாளுமன்றத்தைக் கூட்டும்படி சபாநாயகரிடம் கோரினார்.

இதனால், நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ஆம் தேதிவரை முடக்குவதாக அறிவித்தார் ஜனாதிபதி. நவம்பர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தையே கலைப்பதாகவும் அறிவித்தார்.

இது அரசியல்சாஸனத்திற்கு முரணானது எனக் குற்றம்சாட்டிய ரணில் விக்ரமசிங்க, உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றமும் இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து டிசம்பர் 15-ஆம் தேதி மஹிந்த ராஜபக்ஷ தான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டிசம்பர் 16-ஆம் தேதி ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்றும், கிடைத்தால் முஸ்லிம், தமிழ் கட்சியைச் சேர்ந்தவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியிருக்கிறார்

ஆனால், இந்த ஒட்டுமொத்த விவகாரமும் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற நாடுகளும் பல அமைப்புகளும் வழங்கவிருந்த பல கடன்களும் உதவித் திட்டங்களும் இதனால் தடைபட்டன.

ஆனால், இந்த முறை இதுபோல நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர். சிவராஜா.

"சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ள கருத்துகளை கவனிக்க வேண்டும். தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்றும் அப்படிக் கிடைத்தாலும் முஸ்லிம், தமிழ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். ஆகவே, தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், இந்தக் கட்சிகளை வைத்து கூட்டணி அரசை அமைக்க முயல்வார்கள்." என்கிறார் அவர்.

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்று மாலையே துவங்கி, அடுத்த நாளுக்குள் அறிவிக்கப்படும்.

தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்..!

1 week 3 days ago

பிபிசி தமிழ்ச்சேவை கடந்த 7 ஆம் திகதி ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள அரசியல்வாதிகளையும் பொது மக்களையும் நேர்கண்டு எழுதப்பட்டுள்ளது.

அதில் தேசியம்,சமஸ்டி, 13 ஆவது திருத்தம் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.நேர்காணப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அதுதொடர்பாக முழுமையான விளக்கம் இருக்கவில்லை.

அதுபோலவே சுமந்திரனின் பிரசாரக் காணொளி ஒன்றில் அவர் தேசியம் என்றால் என்ன என்று கேட்கிறார். அந்த வார்த்தையை பயன்படுத்தும் பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது என்ற பொருள்பட கருத்துரைக்கிறார்.

மேலும் அவருடைய பிரசார காணொளிகளில் அவர் “அறிவார்த்த தமிழ் தேசியத்தின் குரல்” என்று அழைக்கப்படுகிறார். அறிவார்ந்த தமிழ்த் தேசியம் என்றால் என்ன? அதுபோலவே மான் சின்னத்தின் கீழ் போட்டியிடும் மணிவண்ணன் “நவீன தமிழ்த் தேசியம்” என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். நவீன தமிழ் தேசியம் என்றால் என்ன?

தேசியம் என்றால் என்ன 

சுமந்திரன் அந்தக் காணொளியில் கேட்பதுபோல, பிபிசி தமிழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பது போல,தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வாக்காளப் பெருமக்களுக்கு மட்டுமல்ல பல வேட்பாளர்களுக்கே பதில் தெரியாது.

ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஒரு கருநிலை அரசை நிர்வகித்து அது தோற்கடிக்கப்பட்ட கடந்த 15 ஆண்டுகளின் பின்னரும் தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு நிலைமைதான் காணப்படுகின்றதா? தமிழ் அரசியல்வாதிகள் எத்தனை பேர் இந்த கேள்விக்கு பொருத்தமான விடையைக் கூறுவார்கள்? அவர்களுக்கு பொருத்தமான விடை தெரிந்திருந்தால் தமிழரசியல் இப்போதுள்ள சீரழிவான நிலைக்கு வந்திருக்காது.

தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்..! | An Electoral Field That Asks What Nationalism

எனவே முதலில் நாங்கள் ஒரு தெளிவிற்கு வருவோம். தேசம், தேசியம் என்றால் என்ன என்பதனை சுருக்கமாகப் பார்க்கலாம்.

தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் தேசமாக வனைகின்றன.

  • முதலாவது பாரம்பரிய தாயகம் அல்லது நிலம்.
  • இரண்டாவது இனம் அல்லது சனம்.
  • மூன்றாவது பொதுவான மொழி.
  • நான்காவது பொதுவான பண்பாடு.
  • ஐந்தாவது பொதுவான பொருளாதாரம்.
  • இந்த ஐந்தையும் விட ஆறாவதாக ஒரு விடயமும் உண்டு. அதுதான் அடக்குமுறை. ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய அடையாளங்களை அழிக்கும் நோக்கத்தோடு கட்டமைக்கப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளும் ஒரு மக்கள் கூட்டத்தை தற்காப்பு உணர்வோடு தேசமாகத் திரட்டுகின்றன.

எனவே இப்பொழுது தெளிவான ஒரு முடிவுக்கு வரலாம். தேசியவாத அரசியல் என்பது அல்லது தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதுந்தான்.

அதாவது அதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், ஒரு மக்கள் கூட்டத்தை உருகிப் பிணைந்த பெருந் திரளாகத் திரட்டுவது.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியாவது மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறதா? இல்லை.இதற்கு முதற்பொறுப்பு தமிழரசுக் கட்சிதான்.

ஏனெனில் உள்ளதில் பெரிய கட்சி அது. வடக்கு கிழக்காக ஒப்பீட்டளவில் பரந்த கட்டமைப்பை கொண்டிருக்கும் கட்சி. கடந்த15 ஆண்டுகளாக தமிழ் மிதவாத அரசியலின் பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த கட்சி.

எனவே கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதற்கு அக்கட்சி தான் முதல் பொறுப்பு.

தேசியவாத அரசியல்

தமிழ்த் தேசிய வரலாற்றில் உருவாகிய, பெரிய கூட்டாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவதற்கு காரணம், தமிழரசுக் கட்சிதான். கூட்டமைப்பிலிருந்து பங்காளிகளை படிப்படியாக அகற்றும் ஒரு போக்கின் விளைவாக இப்பொழுது தமிழரசு கட்சி தானும் இரண்டாகி, பலவாகி நிற்கிறது.

அடுத்தது, தமிழ்த் தேசிய முன்னணி. தேசியவாத அரசியல் என்பதனை தூய்மை வாதமாக சித்தரித்து, தனது அரசியல் எதிரிகளை துரோகிகள்,காட்டிக் கொடுப்பவர்கள், இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று முத்திரை குத்துவதன்மூலம் அந்தக் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக தேசத்தை திரட்டத் தவறிவிட்டது.

தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்..! | An Electoral Field That Asks What Nationalism

சிறிய கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்துவது; பொலிஸாரோடு, புலனாய்வுத் துறையோடு மோதுவது; விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களைத் தத்தெடுப்பது போன்றவற்றின் மூலம் அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் கட்டமைக்கப் பார்க்கின்றது.

தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் காட்டிக் கொள்வதே அடிப்படைத் தவறு. ஆயுதப் போராட்டம் வேறு, மிதவாத அரசியல் வேறு.

இரண்டாவது தவறு, தங்களைப் புனிதர்களாக காட்டுவதற்காக தமது அரசியல் எதிரிகளை சாத்தான்களாக துரோகிகளாக சித்தரிப்பது. மற்றவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் யாரும் தங்களை தியாகிகள் ஆக்கிவிட முடியாது.

மாறாக, முன்னுதாரணம் மிக்க தியாகங்களைச் செய்வதன் மூலம் தான் யாரும் தங்களைத் தியாகிகள் ஆக்கலாம்.

அரசியல் களத்தை தியாகி எதிர் துரோகி என்று பிரிப்பது தேசத்தை திரட்டுவதற்கு உதவாது.

தேசம் என்பது ஒரு சமூகத்தின் பலம் பலவீனம் எல்லாவற்றினதும் திரட்சி தான். நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாருடையதும் திரட்சி தான். முன்னணியின் கடந்த 15 ஆண்டுகால அரசியல் என்பது தேசத்தைத் திரட்டுவது அல்ல. தேசத்தை சிதறடிப்பதுதான். அதன் விளைவாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சிக்குள்ளே உடைவு ஏற்பட்டது.

தமிழரசுக் கட்சியைப் போலவே அவர்களும் தோல்விகளில் இருந்து எதையுமே கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு மாற்றாக எழுவது என்பது தேசத்தைச் சிதறடிக்கும் அரசியலுக்கு எதிராக தேசத்தைத் திரட்டும் அரசியல்தான்.

தேசத்தை திரட்டும் கோரிக்கைகள்

அடுத்தது குத்து விளக்குக் கூட்டணி. இப்பொழுது அது சங்கு கூட்டணி. தொடக்கத்திலிருந்து தன் சொந்தப் பலத்தை நம்பாத ஒரு கூட்டு அது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஜனநாயகம் என்ற ஒரு சொல்லை முன்னொட்டுவதன் மூலம் தன்னை மெய்யான கூட்டமைப்பாக காட்ட அவர்கள் முயன்றார்கள்.

தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்..! | An Electoral Field That Asks What Nationalism

கட்சிப் பெயருக்குத்தான் வாக்கு விழும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதுபோலவே ஜனாதிபதி தேர்தலில் கட்டி எழுப்பப்பட்ட சங்குச் சின்னத்தைக் கைப்பற்றியதின் மூலம் பொது வேட்பாளருக்கு கிடைத்த வெற்றிகளை தங்களுக்கு மடை மாற்றலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அதாவது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட பெயர், இடையில் ஸ்தாபிக்கப்பட்ட சின்னம் என்பவற்றை தம் வசப்படுத்துவதன் மூலம் வாக்குகளைக் கவரலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது ஒரு தேர்தல் உத்தி மட்டுமே. எல்லா தேர்தல் உத்திகளும் தேசத்தை திரட்டுவன அல்ல.

எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தைத் திரட்டும் கோஷத்தின் கீழ் இந்த கூட்டு பொதுக் கட்டமைப்புக்குள் ஓர் அங்கமாக இருந்தது.

பொது வேட்பாளரை முன்நிறுத்தி ஒரு பொதுக் கோரிக்கையாகிய தேசத்தை திரட்டும் கோரிக்கைக்காக உழைத்த கட்சிகள் இந்த கூட்டுக்குள் உண்டு.

ஆனால் அந்த உழைப்பின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்ட சங்கு சின்னத்தை கைப்பற்றும் விடயத்தில் அவர்கள் தேசத் திரட்சியா? அல்லது கட்சி அரசியலா? அல்லது தேர்தல் வெற்றியா? என்று முடிவெடுக்க வேண்டி வந்த பொழுது, இக்கூட்டானது கட்சி அரசியல் சார்ந்த தேர்தல் வெற்றிக்கு முன்னுரிமை வழங்கியது.

எனவே தேசத் திரட்சிக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்களா இல்லையா என்பதனை அவர்கள் மீண்டும் எதிர்காலத்தில் நிரூபிக்க வேண்டியிருக்கும்.

தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் விடயம்

அடுத்தது மான் கட்சி. இக்கட்சியும் பொது வேட்பாளரை முன் நிறுத்திய பொதுக் கட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தது. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து அனேகமாக ஒதுங்கிவிட்டார். கட்சியின் முதன்மை வேட்பாளராகக் காணப்படும் மணிவண்ணன் தன்னுடைய தாய்க் கட்சியாகிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து துலக்கமான விதங்களில் வேறுபடுகிறார் என்பதனை இனி நிரூபிக்க வேண்டியிருக்கும்.

தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்..! | An Electoral Field That Asks What Nationalism

மற்றவை சுயேட்சைகள். இம்முறை தேர்தலில் அதிகம் சுயேட்சைகள் தோன்றக் காரணமே பிரதான கட்சிகளின் தோல்விதான். பிரதான கட்சிகளில் இருந்து வெளிவந்த ஒரு பகுதியினர் சுயேட்சையாக நிற்கிறார்கள்.

பிரதான கட்சிகளால் உள்வாங்கப்படாதவர்களும் சுயேட்சையாக நிற்கின்றார்கள். தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக யாராவது தங்களை வந்து மீட்க மாட்டார்களா என்று காத்திருக்கும் தமிழ் கூட்டு உளவியல் காரணமாக திடீரென்று பிரபல்யம் ஆகிய அர்ஜுனாவை போன்றவர்களும் சுயேட்சையாக நிற்கிறார்கள்.

யார் எதற்காக நின்றாலும் சுயேட்சைகள் அதிகரிப்பதற்கு காரணம் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தேசத்தைத் திரட்ட தவறியமைதான்.

எனவே இம்முறை தேர்தல் களம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதை என்று சொன்னால், தமிழ்த் தேசியம் பேசும் எல்லாக் கட்சிகளுமே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் விடயத்தில் தோல்வி அடைந்துவிட்டன என்பதைத்தான்.

இந்த அடிப்படையில் பார்த்தால், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளர் பெற்ற வெற்றி அரிதானது. அது ஒரு மிகப்பெரிய வெற்றி இல்லைத்தான். ஆனாலும் அடிப்படை வெற்றி. அந்த முயற்சியில் ஈடுபட்ட கருத்துருவாக்கிகளை “பத்தி எழுத்தாளர்கள்” என்று சிறுமைப்படுத்தியது ஒரு பகுதி.

தமிழில் பத்தி எழுத்தாளர் என்ற வார்த்தை அதிகம் அவமதிக்கப்பட்ட ஒரு காலகட்டம் அது. அதாவது தேசத்தைத் திரட்ட முற்பட்ட குற்றத்துக்காக அதில் முன்னணியில் நின்றவர்களை சிறுமைப்படுத்த அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

கட்சிகள் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது

சுமந்திரன் பொது வேட்பாளரை ஒரு கேலிக்கூத்து என்று சொன்னார். கஜேந்திரன் இந்த முயற்சியில் நீங்கள் வென்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும் என்று சொன்னார்.

முடியுமென்றால் ஒரு பொது வேட்பாளர் நிறுத்திக் காட்டுங்கள் என்று ரணில் சவால் விட்டார். பொது வேட்பாளர் முழுத் தீவுக்கும் பொதுவான நாசமாக முடியும் என்று சஜித் எச்சரித்தார். அது ஆண்டிகள் கூடிக் கட்டும் மடம் என்றும் ஆபத்தான விஷப் பரீட்சை என்றும் எழுதினார்கள்.

தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்..! | An Electoral Field That Asks What Nationalism

அதாவது, தென்னிலங்கையில் உள்ள கட்சிகளும் பொது வேட்பாளரை ஆபத்தாகப் பார்த்தன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட பிரதான கட்சிகள் இரண்டு அதனை விரோதமாகப் பார்த்தன.

தேசத் திரட்சிக்கு எதிரான ஊடகவியலாளர் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தமது சொந்த மக்களைத் தோற்கடிப்பதற்காக உழைத்தார்கள். ஆனாலும் பொது வேட்பாளர் அடிப்படை வெற்றியைப் பெற்றார்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியல்வாதி பெற்ற ஆகப்பெரிய வாக்குகளை அவர் பெற்றார். கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளைக் கடந்து தேசத்தைத் திரட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சிக்குக் கிடைத்த அடிப்படை வெற்றி அது.

மக்கள் அமைப்புகளும் கட்சிகளும் இணைந்தால் அவ்வாறு வாக்குகளைத் திரட்ட முடியும் என்பது ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. கட்சிகளின் போதாமை காரணமாகத்தான் மக்கள் அமைப்பொன்று கட்சிகளோடு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிவந்தது.

எனவே கட்சிகள் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை.

இப்பொழுது, மீண்டும் கட்சிகள் தேசத்தைத் திரட்டுவதில் எவ்வளவு தூரம் தோல்வியடைந்துள்ளன என்பதனை நிரூபிக்கும் ஆகப்பிந்திய உதாரணமாக நாடாளுமன்றத் தேர்தல் களம் காணப்படுகிறது.

அதாவது தேசியம் என்றால் என்ன? தேசியவாத அரசியல் என்றால் என்ன? என்பதை ஆழமாக விளங்கிக் கொள்ளத் தவறிய கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை மீண்டும் சிதறடிக்கும் ஒரு தேர்தல் களம் இது.

எனினும், தமிழ்த் தேசிய அரங்கில் ஒரு கட்சி ஏகபோகத்தை மேலும் உடைத்துக்கொண்டு பல தரப்புக்கள் மேலெழுமாக இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் நன்மைக்கே.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 11 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

https://tamilwin.com/article/an-electoral-field-that-asks-what-nationalism-1731296723

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024: ' தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள்' இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகின்றனவா?

1 week 3 days ago
தமிழ் தேசியம் குறித்து தமிழ் இளைஞர்கள் நினைப்பது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள், நெடுங்காலமாக சுயநிர்ணய உரிமை, 13-வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்களை கோரி வருகின்றார்கள்.

இலங்கையில் உள்நாட்டு போர் இடம்பெறுவதற்கு முன்பாகவே, தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம் ஆரம்பமானது.

இலங்கையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில், இன்றும் அரசியல்வாதிகள் தமது பிரசாரங்களில் இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தியே பேசி வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளினால் அரசியல் மேடைகளில் பேசப்படுகின்ற இந்த சுயநிர்ணய உரிமை, 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்கள் குறித்து, இளம் சமூகத்திற்கு எவ்வாறான புரிதல் இருக்கின்றது என்பது குறித்து பிபிசி தமிழ் அறிய முயன்றது.

’அர்த்தம் தெரியாது’

''எல்லா அரசியல்வாதிகளும் 13-வது திருத்தம், சுய நிர்ணயம், தமிழ் தேசியம் என்று தான் கதைக்கின்றார்கள். ஆனால், அது என்னவென்று யாரும் சொல்வதில்லை. எல்லாரும் எனக்கு வாக்களியுங்கள் என்றும் தமிழ் தேசியம் என்றும் கதைப்பார்கள். அதன் வரைவிலக்கணத்தை சொல்வதில்லை.," என நெடுங்கேணியைச் சேர்ந்த பார்த்தீபன் தெரிவித்தார்.

இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார் நொச்சிமேடையைச் சேர்ந்த ரியா.

சுயநிர்ணய உரிமை, 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்றவை தனக்கு புரியவில்லை என வவுனியாவைச் சேர்ந்த தனுஷ் கூறுகின்றார்.

இந்த சொற்கள் அனைத்தும் சுத்த தமிழ் மொழியில் இருப்பதனால், என்னவென்றே தெரியவில்லை என பூந்தோட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் தெரிவிக்கின்றார்.

 
திருகோணமலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்ன காரணம்?

சுயநிர்ணய உரிமை, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், சமஷ்டி, தமிழ் தேசியம், அதிகார பகிர்வு போன்ற விடயங்கள் தமிழர்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக பேசப்பட்டு வருகின்ற போதிலும், இன்றைய தமிழ் இளைஞர்கள் மத்தியில் தற்போது அது தொடர்பில் பெரிய விவாதம் இல்லாததற்கு காரணம் என்ன?

இந்த விடயம் தொடர்பில் அரசியல் எழுத்தாளரரான மேழிக்குமரனிடம் பிபிசி தமிழ் வினவியது.

''2009-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, இங்கிருக்கக் கூடிய எந்த தமிழ் கட்சிகளும் இளைஞர்களுக்கு வரலாறு சொல்லி கொடுக்கவில்லை. இன்றைக்கு கூட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகமாக எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அது தெரியுமே தவிர, அதை இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை எந்த தமிழ் கட்சியும் வைத்துக்கொள்ளவில்லை." என்று அவர் கூறினார்.

 
தமிழ் கட்சிகளுக்கு இது பாதிப்பா?

வடக்கு, கிழக்கு மாகாணம், மலையகம், கொழும்பு போன்ற இடங்களில் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் மேழிக்குமரன்.

சமஷ்டி, அரசியலமைப்பின் 13வது திருத்தம், சுய நிர்ணய உரிமை (சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமை), தமிழ்த் தேசியம், அதிகார பகிர்வு போன்ற சொற்களுக்கான விளக்கத்தை மேழிக்குமரன், பிபிசி தமிழிடம் அளித்தார். அந்த வார்த்தைகளுக்கு அவர் தந்த விளக்கம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

 
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ் தேசியம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் உள்ளதா?
சமஷ்டி என்றால் என்ன?

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. ஆனபடியால், ஒரு கூட்டாட்சி முறைமையை கொண்டு வர வேண்டும். இந்த கூட்டாட்சி முறைமையை சொல்லுகின்ற சொல் தான் சமஷ்டி. தமிழர் அமைப்புகள் சமஷ்டியை வலியுறுத்த காரணம். அது கூட்டாட்சி முறைமையை கொண்டு வரும்.

அரசியலமைப்பின் 13-வது திருத்தம்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கான நடைமுறைகளை மாகாண சபை முறைமையாக கொண்டு வருவதற்காக ஏற்படுத்தப்பட்டது.

அது யாப்பில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற ஒரு திருத்தம். 1978ம் ஆண்டு அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட திருத்தமாகும். தமிழர்களுக்காக அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஒரெயொரு நடைமுறை மாகாண சபை முறைமையாகும்.

மாகாண சபை முறைமை இலங்கை முழுவதும் இருந்தாலும், அது தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது.

 
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ் தேசியம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் உள்ளதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்த் தேசியம்

உலகத்தில் வாழ்கின்ற எல்லா இனங்களும் தங்களுடைய சுய மரியாதையுடன் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான மொழியையும், இனத்தையும் இணைப்பது தான் தேசியம்.

"தமிழர்களாக இருக்கின்றமையினால், தமிழ்த் தேசியம் எனப்படுகிறது. சிங்கள மக்களுடன் இரண்டற கலப்பதன் மூலம் தமிழ்த் தேசியம் மரணித்து விடும். உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்கும் அவர்களுடைய தேசியம் ஒன்று இருக்கின்றது." என்கிறார் மேழிக்குமரன்.

 
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024: தமிழ் தேசியம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் உள்ளதா?
படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம்
அரசியல் கட்சியினர் கூறுவது என்ன?

அரசியல் எழுத்தாளரரான மேழிக்குமரன் வெளியிட்ட கருத்து குறித்து, இலங்கையின் பழமையான அரசியல் கட்சியாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கத்திடம் பிபிசி தமிழ் வினவியது.

''இந்த சொற்பதங்கள் எல்லாம் ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில், மேடை பேச்சுகளில் எந்தளவிற்கு அர்த்தம் புரிந்து பேசுகின்றார்கள் என்பதில் எனக்கும் சந்தேகம் நிலவுகின்றது. இதுவொரு எங்களின் உணர்வை காட்டக்கூடிய வீரமான சொற்களாகவே பயன்படுத்தப்படுகின்றது.

யுத்த காலத்திலும், அதற்கு பின்னர் 2015-ஆம் ஆண்டு வரையும் இந்த சொற்களை பயன்படுத்தி மக்களை அரசியல்மயப்படுத்தக் கூடிய சூழல் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருக்கவில்லை. 2015-ஆம் ஆண்டு பிறகு அரசியல் கட்சிகள் வெளிப்படையாக தங்களுடைய உணர்வுகளை காட்டக்கூடிய அல்லது அரசியல் பேசக்கூடிய ஒரு நிலைமை இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது." என்று அவர் கூறினார்.

"அப்படி ஏற்படுத்தப்பட்டாலும் கூட அரசியல் கட்சிகள் மக்களை அரசியல் ரீதியாக அரசியல்மயப்படுத்தல் வேலைத்திட்டத்தில், தமிழ் கட்சிகள் எல்லாம் பெருமளவிற்கு தோல்வியை கண்டுள்ளன என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். தமிழர்களை அரசியல்மயப்படுத்தும் செயற்பாடு மிகவும் குறைந்தளவே நடைபெற்றிருக்கின்றது.

அரசியல் கட்சிகள் நிச்சயமாக மக்களை, குறிப்பாக இளம் சமூகத்தை அரசியல்மயப்படுத்தும் தேவை இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற இந்த அரசியல் மாற்றத்திற்கு பிறகு எங்களால் இதனை செய்வதற்கு ஓரளவு இலகுவாக இருக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பை உணர்ந்து எதிர்காலத்தில் செயல்படும் என்று நம்புகிறேன்." என பத்மநாதன் சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

NPP யாக JVP 

1 week 4 days ago

 
NPP யாக JVP 

NPP யாக JVP 

—  கருணாகரன் —

மாற்றத்துக்குரிய சக்தியாக ‘தேசிய மக்கள் சக்தி‘ (NPP) யை நம்புகின்ற – வரவேற்கின்ற அளவுக்கு அதைக் குறித்த வலுவான சந்தேகங்களும் உண்டு. இதற்குக் காரணம், JVP யாகும். NPP க்குள் ஒலிக்கும் அல்லது NPP  யை இடையிடு செய்யும் JVP யின் எதிர்மறையான குரல்கள் பலமானவையாகவே உள்ளன.  அதுவே சந்தேகம் (நம்பிக்கையீனம்) அச்சம் ஆகியவற்றுக்குக் காரணமாகும். 

குறைந்த பட்சம் NPP  முற்போக்கு முகத்தையும் முகாமையும் கொண்டுள்ளது. அதனுடைய இன்றைய கவர்ச்சியே இதுதான். ஆனால், NPP யைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது அதை இடையீடு செய்யக்கூடிய  நிலையிலுள்ள JVP யோ கடந்த காலத்தின் ஒளி மங்கிய பிரதேசத்திலேயே இன்னும் இருக்கப்பார்க்கிறது. இதற்கு அது தன்னுடைய அரசியல் உள்ளடக்கத்தில் கொண்டிருந்த இனவாதக் கூறுகளும் ஆயுதந்தாங்கிய அரசியற் பாரம்பரியமும் காரணமாக இருக்கக் கூடும். 

கைவிட முடியாத இந்தப் பலவீனங்களால்தான் JVP யாக அதனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முன்னிலையைப் பெறவும் முடியவில்லை. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவும் முடியவில்லை. NPP யாக தோற்றம் கொண்ட பின்பே அதற்கு ஒளிகூடியுள்ளது. அதுவே இப்பொழுது  ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதனை JVP புரிந்து கொள்வது அவசியமாகும். 

JVP யும் NPP  யும்

==========

JVP யின் 60 ஆண்டுகால முயற்சிக்கும் காத்திருப்புக்கும் ஒரு வாய்ப்பை JVP தோழர்களும் அதனுடைய ஆதரவாளர்களும் இப்போது பெறுகின்றனர். ஆனால், அது தனியே JVP யினால் மட்டும் சாத்தியமாக்கப்பட்ட வாய்ப்பு அல்ல. JVP யின் முதன்மைப் பங்களிப்பு உண்டு. அதை மறக்க முடியாது. ஆனால் அந்தப் பங்களிப்பு மட்டும் வாய்ப்பை அளிக்கவில்லை. அந்த வாய்ப்பை அளித்தது JVP, NPP யாக மாற்றமடைந்ததால் உருவாகியது. 

இப்பொழுது வெளியரங்கில் அல்லது பொது அரங்கில் NPP   க்கே செல்வாக்கும் அறிமுகமும் உண்டு. இன்றைய தலைமுறை அதிகம் அறிந்திருப்பதும் NPP   யைத்தான். அதுவே வெற்றிக்கு அருகில் இருக்கிறது. வெற்றிகளைக் குவிக்கிறது. ஆனால் இதனை முழுதாக ஏற்றுக் கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் JVP முயற்சிக்க வேண்டும். ஆனால் நடப்பதைப் பார்த்தால்  இதையெல்லாம் உணர்ந்து கொள்வதற்கு JVP யினால் முழு அளவில் முடியவில்லை என்றே தெரிகிறது. 

JVP யின் ஐம்பது ஆண்டுகாலத் தாக்குப் பிடிப்பும் அதற்குள் அது இயக்கமாகவும் கட்சியாகவும் தன்னுடைய அரசியல் இருப்பைக் கொண்டிருந்ததும் JVP யினருக்கு ஒரு முன்னிலை உணர்வை அளிக்கிறது. ஐம்பது ஆண்டுகால அரசியற் சூறாவளிகளுக்குள் தாம் தாக்குப் பிடித்து நின்றிருக்காவிட்டால், இப்போது NPP யும் இல்லை. ஆட்சியுமில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், அதே அளவுக்கு மறுக்க முடியாத உண்மை பழைய JVP யை அப்படியே மேடையேற்ற முடியாது என்பதுமாகும். 

ஆனால், என்னதானிருந்தாலும் தாம் கொண்டிருந்த இலட்சியக் கனவுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று JVP யினர் எண்ணுகிறார்கள். இந்த மாதிரியான ஒரு உணர்நிலையும் உளவியற் சிக்கலும் அரசியல் இயக்கங்களில் பொதுவாக இருப்பதுண்டு. அதிலும் ஆயுதம் தாங்கிப் போராடிய இயக்கங்களின் உணர்ச்சிகரமான அணுகுமுறை  (Emotional approach )  மிகச் சிக்கலானது. அதுவே JVP க்குள்ளும் கிடந்து புரள்கிறது. 

ஆனால், காலமும் சூழலும் இதற்கப்பால் வேறு விதமான ஒரு யதார்த்த வெளியை உருவாக்கிக் கொள்ளும். அது கடந்த காலத்தின் அத்தனை விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் இடமளிக்காது. தனக்குரிய – தனக்கு வேண்டிய – கனவுகளுக்கும் தேவைகளுக்குமே முதல்நிலையை அளிக்கும். ஆகவே இந்த யதார்த்தச் சூழலை விளங்கிக் கொண்டு  செயற்படுவது மெய்யாகவே மாற்றத்தை விரும்புவோருக்கு அவசியமாகும். (இது தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். தமிழர்கள் இன்னும் போருக்குப் பிந்திய (Post – War Politics) பற்றிச் சிந்திக்க முடியாமலிருப்பது, அவர்கள் கடந்த காலத்தில் உறைந்து கிடப்பதுதான். ஆகவேதான் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியாதுள்ளது).

ஆனால், JVP யினரிடம் இந்தப் புரிதலைக் காண முடியவில்லை என்பது கவலைக்குரியது. என்பதால்தான் அவர்களால் இலங்கை ஒரு பல்லின தேசம், பன்மைத்துவச் சூழலுக்காக இடம் அளிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உணர முடியாமலிருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்க வேண்டும் என்று முற்போக்காகச்  சிந்திக்க முடியாமலுள்ளது. இவ்வளவுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலமும் அவசரகாலச் சட்டத்தின் மூலமும் தங்களுடைய முகமும் முள்ளந்தண்டும் சிதைக்கப்பட்ட அனுபவத்தைக் கொண்டவர்கள். இருந்தும் அதிகாரத்துக்கு வந்தவுடன் பழைய காயங்களும் வலிகளும் சட்டென மறந்து, அதிகார ருசி மட்டும் தலைக்குள் ஏறுகிறது.  

மட்டுமல்ல, தமிழ்பேசும் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பற்றி அக்கறை கொள்வதற்கு இன்னும் JVP க்குச் சிரமமாகத்தானிருக்கிறது.  தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலிருக்கும் (வடக்குக் கிழக்கில் மக்கள் மத்தியில் உள்ள) படைகளை விலக்குவதற்கு விருப்பமில்லாதுள்ளது. தென்னிலங்கையிலும் பிற இடங்களிலும் உள்ள ஏனைய எந்த அரசியல் தரப்புகளோடும் இடையீடுகளை நடத்துவதற்கு ஆர்வமில்லாதிருக்கிறது. பிற அரசியற் சக்திகள் எதையும் விட்டு வைப்பதற்கு, அதற்கான ஜனநாயக வெளியை அனுமதிப்பதற்கும் தயக்கமாகவுள்ளது. ஏன், NPP யுடன் கூட முழு அளவில் உடன்படவும் முடியாதுள்ளது. இதனை NPP க்குள் நிகழ்ந்து  கொண்டிருக்கும் உட்கொதிப்புகள் காட்டுகின்றன. 

அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகிய பிறகும் JVP யின் முக்கிய தலைவர்களான ரில்வின் சில்வா, லால்கந்த, விஜித ஹேரத், சுனில் கந்துநெத்தி போன்றோர் பழைய தொனியிலேயே கடுமையான அறிவிப்புகளை விடுக்கின்றனர். இது அநுர குமார திசநாயக்கவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று தெரிந்துதான் செய்கிறார்களா? அல்லது எந்தச் சூழலிலும் இனவாதத்தைக் கைவிடப்போவதில்லை. இலங்கையில் நீடித்த ஆட்சிப் பாரம்பரியத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்களா? 

அப்படியென்றால் NPP  யின் ஆட்சி எப்படி இருக்கும்? NPP கூறுகின்ற மாற்றம் எப்படியானது? என்ற கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விதான் இன்று பலரிடத்திலும் அச்சத்தை உண்டாக்குகிறது. அந்தக் கேள்விகள்தான் நடக்கப்போவது NPP யின் ஆட்சியா? அல்லது NPP யின் பேரில் நடத்தப்படும் JVP யின் ஆட்சியாக இருக்குமா? எனச் சந்தேகப்பட வைக்கிறது. 

இதற்கான பதிலை NPP தெளிவாகச் சொல்ல வேண்டும். சொல்ல வேண்டும் என்பது, NPP தன்னுடைய நடைமுறைகளின் வழியாக அதைக் காட்ட வேண்டும். 

அரசியலில் சொல் என்பதையும் விட செயலே முக்கியமானது. சொல்வதை விடவும் செய்து காட்டுவது முக்கியமானது. மக்கள் செயலையே எதிர்பார்க்கிறார்கள். NPP தன்னைச் செயல்களால் நிரூபிக்க வேண்டும். செயலே விளைவுகளை உருவாக்குவது. 75 ஆண்டுகால ஆட்சித் தவறுகளையும் மக்களின் நீடித்த துயரையும் போக்குவதற்கான செயல்களாக அவை இருக்க வேண்டும். 

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகான இரண்டு மாத ஆட்சிக் காலத்தில் NPP, இன்னும் அப்படிச் செழிப்பான முன்னுதாரணங்கள் எதையும் காட்டி அரசியற் பெறுமானங்களாக்கவில்லை. நடந்திருப்பதெல்லாம் மேலோட்டமாக சில விடயங்களே. முழுமையான அளவில் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் பலமான பாராளுமன்ற அதிகாரம் வேணும். அதற்கான கால அவகாசம் வேண்டும் என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

இதற்குள்ளும் அநுர குமார திசநாயக்க ஒரு எதிர்பார்ப்பை நாடு முழுவதிலும் உருவாக்கியுள்ளார் என்பது உண்மையே. அது வளர்ந்து ஒரு செல்வாக்கு மண்டலத்தை உருவாக்கக் கூடிய ஏதுநிலைகள் இன்னும் ஏற்படவில்லை. அதனால் NPP யின் ஆதரவுத் தளம் எதிர்பார்க்கப்பட்டதையும் விடச் சற்று மெல்லியதாக உள்ளதாகத் தென்படுகிறது. இது சரியா இல்லையா என்பதை அடுத்த வாரம் நடக்கவுள்ள தேர்தல்தான் தெளிவாக உரைக்கும். 

ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடந்த தேர்தல்வரையில் நாடு முழுவதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் செல்வாக்கு மண்டலங்கள் இருந்தன. இனவாதத்தை முழு அளவில் பிரயோகப்படுத்தியபோது கூடச் சிறிய அளவிலேனும் வடக்குக் கிழக்கில் ஐ.தே.கவும் சு.க வும் செல்வாக்கைக் கொண்டிருந்தன. ஐ.தே.க வும் சு.க வும் இன்று சீரழிந்த பிறகு அவற்றின் மண்டலங்கள் இல்லாதொழிந்தது வேறு கதை. 

NPP, தன்னை விரிவாக்கி நிலைப்படுத்த வேண்டும். மெய்யாக அது மாற்றத்தை உருவாக்க வேண்டும் என விரும்பினால், அல்லது அதனுடைய சிந்தனையில் மாற்றத்தைக் குறித்த சித்திரங்கள் இருக்குமானால் அது அதற்குரிய அடிப்படைகளை உருவாக்க வேண்டும். புதிய எல்லைகளை நோக்கிப் பயணிக்க முற்படுவது அவசியம். பழைய – தூர்ந்து போக வேண்டிய சங்கதிகளை எடுத்து மேசையில் வைக்க முயற்சிக்கக் கூடாது. அனைத்துச் சமூகத்தினரையும் உள்வாங்குவதற்கான இடத்தை – பன்மைத்துவத்துக்குரிய அடிப்படைகளை – ஏற்படுத்துவதற்குத் தயாராக வேண்டும். 

ஆம், NPP மேலும் நெகிழ்ந்து, நவீனமாக வளர்ச்சியடைய வேண்டும். உணர்ச்சிகரமான உளக் கொந்தளிப்புகளுக்குப் பதிலாக உளப்பூர்வமான மகிழ்ச்சிச் சூழலை மலர்விக்க வேண்டும். அதற்கான அரசியற் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவது அவசியம். அதற்கான அர்ப்பணிப்பு கட்டாயமானது. காலம் அதையே எதிர்பார்க்கிறது. காலம் என்பது அரசியல் அர்த்தத்தில் வாழும் மக்களும் வாழ வேண்டிய மக்களுமேயாகும். 

 

 

https://arangamnews.com/?p=11429

தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்? நிலாந்தன்

1 week 4 days ago

 

தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு தேர்தல் களம்? நிலாந்தன்.
adminNovember 10, 2024
spacer.png

பிபிசி தமிழ்ச்சேவை கடந்த 7 ஆம் தேதி ஒரு கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரை வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள உள்ள அரசியல்வாதிகளையும் பொது மக்களையும் நேர்கண்டு எழுதப்பட்டுள்ளது. அதில் தேசியம், சமஸ்டி, 13 ஆவது திருத்தம் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதில் நேர்காணப்பட்ட அரசியல்வாதிகளுக்கும் அதுதொடர்பாக முழுமையான விளக்கம் இருக்கவில்லை.

அதுபோலவே சுமந்திரனின் பிரச்சாரக் காணொளி ஒன்றில் அவர் தேசியம் என்றால் என்ன என்று கேட்கிறார். அந்த வார்த்தையை பயன்படுத்தும் பலருக்கு அதன் அர்த்தம் தெரியாது என்ற பொருள்பட கருத்துரைக்கிறார்.மேலும் அவருடைய பிரச்சார காணொளிகளில் அவர் “அறிவார்த்த தமிழ் தேசியத்தின் குரல்” என்று அழைக்கப்படுகிறார். அறிவார்ந்த தமிழ்த் தேசியம் என்றால் என்ன?

அதுபோலவே மான் சின்னத்தின் கீழ் போட்டியிடும் மணிவண்ணன் “நவீன தமிழ்த் தேசியம்” என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார். நவீன தமிழ் தேசியம் என்றால் என்ன?

சுமந்திரன் அந்தக் காணொளியில் கேட்பதுபோல,பிபிசி தமிழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல,தேசியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வாக்காளப் பெருமக்களுக்கு மட்டுமல்ல பல வேட்பாளர்களுக்கே பதில் தெரியாது. ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தி ஒரு கருநிலை அரசை நிர்வகித்து அது தோற்கடிக்கப்பட்ட கடந்த 15 ஆண்டுகளின் பின்னரும் தேசியம் என்றால் என்ன என்று கேட்கும் ஒரு நிலைமைதான் காணப்படுகின்றதா? தமிழ் அரசியல்வாதிகள் எத்தனை பேர் இந்த கேள்விக்கு பொருத்தமான விடையைக் கூறுவார்கள்? அவர்களுக்கு பொருத்தமான விடை தெரிந்திருந்தால் தமிழரசியல் இப்போதுள்ள சீரழிவான நிலைக்கு வந்திருக்காது.

எனவே முதலில் நாங்கள் ஒரு தெளிவிற்கு வருவோம்.தேசம், தேசியம் என்றால் என்ன என்பதனை சுருக்கமாகப் பார்க்கலாம். தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் தேசமாக வனைகின்றன. முதலாவது பாரம்பரிய தாயகம் அல்லது நிலம். இரண்டாவது இனம் அல்லது சனம். மூன்றாவது பொதுவான மொழி. நாலாவது பொதுவான பண்பாடு. ஐந்தாவது பொதுவான பொருளாதாரம். இந்த ஐந்தையும் விட ஆறாவதாக ஒரு விடயமும் உண்டு. அதுதான் அடக்குமுறை. ஒரு மக்கள் கூட்டத்தின் தேசிய அடையாளங்களை அழிக்கும் நோக்கத்தோடு கட்டமைக்கப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளும் ஒரு மக்கள் கூட்டத்தை தற்காப்பு உணர்வோடு தேசமாகத் திரட்டுகின்றன.

எனவே இப்பொழுது தெளிவான ஒரு முடிவுக்கு வரலாம். தேசியவாத அரசியல் என்பது அல்லது தேசியம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக வனையும் அம்சங்களைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதுந்தான். அதாவது அதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், ஒரு மக்கள் கூட்டத்தை உருகிப் பிணைந்த பெருந் திரளாகத் திரட்டுவது.

ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியாவது மக்களைத் தேசமாகத் திரட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறதா? இல்லை. இதற்கு முதற்பொறுப்பு தமிழரசுக் கட்சிதான். ஏனெனில் உள்ளதில் பெரிய கட்சி அது. வடக்கு கிழக்காக ஒப்பீட்டளவில் பரந்த கட்டமைப்பை கொண்டிருக்கும் கட்சி. கடந்த15 ஆண்டுகளாக தமிழ் மிதவாத அரசியலின் பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்த கட்சி. எனவே கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதற்கு அக்கட்சி தான் முதல் பொறுப்பு. தமிழ்த் தேசிய வரலாற்றில் உருவாகிய,பெரிய கூட்டாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிதைவதற்கு காரணம், தமிழரசுக் கட்சிதான். கூட்டமைப்பிலிருந்து பங்காளிகளை படிப்படியாக அகற்றும் ஒரு போக்கின் விளைவாக இப்பொழுது தமிழரசு கட்சி தானும் இரண்டாகி,பலவாகி நிற்கிறது.

அடுத்தது, தமிழ்த் தேசிய முன்னணி. தேசியவாத அரசியல் என்பதனை தூய்மை வாதமாக சித்திரித்து, தனது அரசியல் எதிரிகளை துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று முத்திரை குத்துவதன்மூலம் அந்தக் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக தேசத்தை திரட்டத் தவறிவிட்டது. சிறிய கவனஈர்ப்பு போராட்டங்களை நடத்துவது; போலீசாரோடு, புலனாய்வுத் துறையோடு மோதுவது; விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களைத் தத்தெடுப்பது; போன்றவற்றின்மூலம் அக்கட்சி தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் கட்டமைக்கப் பார்க்கின்றது.

தன்னை ஆயுதப் போராட்டத்தின் ஏகபோக வாரிசாகக் காட்டிக் கொள்வதே அடிப்படைத் தவறு. ஆயுதப் போராட்டம் வேறு,மிதவாத அரசியல் வேறு. இரண்டாவது தவறு, தங்களைப் புனிதர்களாக காட்டுவதற்காக தமது அரசியல் எதிரிகளை சாத்தான்களாக துரோகிகளாக சித்தரிப்பது. மற்றவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் யாரும் தங்களை தியாகிகள் ஆக்கிவிட முடியாது. மாறாக, முன்னுதாரணம் மிக்க தியாகங்களைச் செய்வதன் மூலம் தான் யாரும் தங்களைத் தியாகிகள் ஆக்கலாம்.

அரசியல் களத்தை தியாகி எதிர் துரோகி என்று பிரிப்பது தேசத்தை திரட்டுவதற்கு உதவாது. தேசம் என்பது ஒரு சமூகத்தின் பலம் பலவீனம் எல்லாவற்றினதும் திரட்சி தான். நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லாருடையதும் திரட்சி தான். முன்னணியின் கடந்த 15 ஆண்டுகால அரசியல் என்பது தேசத்தைத் திரட்டுவது அல்ல. தேசத்தை சிதறடிப்பதுதான். அதன் விளைவாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அக்கட்சிக்குள்ளே உடைவு ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியைப் போலவே அவர்களும் தோல்விகளில் இருந்து எதையுமே கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழரசு கட்சிக்கு எதிராக ஒரு மாற்றாக எழுவது என்பது தேசத்தைச் சிதறடிக்கும் அரசியலுக்கு எதிராக தேசத்தைத் திரட்டும் அரசியல்தான்.

அடுத்தது குத்து விளக்குக் கூட்டணி. இப்பொழுது அது சங்கு கூட்டணி. தொடக்கத்திலிருந்து தன் சொந்தப் பலத்தை நம்பாத ஒரு கூட்டு அது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஜனநாயகம் என்ற ஒரு சொல்லை முன்னொட்டுவதன் மூலம் தன்னை மெய்யான கூட்டமைப்பாக காட்ட அவர்கள் முயன்றார்கள். கட்சிப் பெயருக்குத்தான் வாக்கு விழும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதுபோலவே ஜனாதிபதி தேர்தலில் கட்டி எழுப்பப்பட்ட சங்குச் சின்னத்தைக் கைப்பற்றியதின்மூலம் பொது வேட்பாளருக்கு கிடைத்த வெற்றிகளை தங்களுக்கு மடை மாற்றலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதாவது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்ட பெயர், இடையில் ஸ்தாபிக்கப்பட்ட சின்னம் என்பவற்றை தம் வசப்படுத்துவதன் மூலம் வாக்குகளைக் கவரலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது ஒரு தேர்தல் உத்தி மட்டுமே. எல்லா தேர்தல் உத்திகளும் தேசத்தை திரட்டுவன அல்ல.

எனினும்,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தைத் திரட்டும் கோஷத்தின் கீழ் இந்த கூட்டு பொதுக் கட்டமைப்புக்குள் ஓர் அங்கமாக இருந்தது. பொது வேட்பாளரை முன்நிறுத்தி ஒரு பொதுக் கோரிக்கையாகிய தேசத்தை திரட்டும் கோரிக்கைக்காக உழைத்த கட்சிகள் இந்த கூட்டுக்குள் உண்டு. ஆனால் அந்த உழைப்பின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்ட சங்கு சின்னத்தை கைப்பற்றும் விடயத்தில் அவர்கள் தேசத் திரட்சியா?அல்லது கட்சி அரசியலா?அல்லது தேர்தல் வெற்றியா?என்று முடிவெடுக்க வேண்டி வந்த பொழுது, இக்கூட்டானது கட்சி அரசியல் சார்ந்த தேர்தல் வெற்றிக்கு முன்னுரிமை வழங்கியது. எனவே தேசத் திரட்சிக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கிறார்களா இல்லையா என்பதனை அவர்கள் மீண்டும் எதிர்காலத்தில் நிரூபிக்க வேண்டியிருக்கும்.

அடுத்தது மான் கட்சி. இக்கட்சியும் பொது வேட்பாளரை முன் நிறுத்திய பொதுக் கட்டமைப்பில் ஒரு அங்கமாக இருந்தது. விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து அனேகமாக ஒதுங்கிவிட்டார். கட்சியின் முதன்மை வேட்பாளராகக் காணப்படும் மணிவண்ணன் தன்னுடைய தாய்க் கட்சியாகிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து எங்கே துலக்கமான விதங்களில் வேறுபடுகிறார் என்பதனை இனி நிரூபிக்க வேண்டியிருக்கும்.

மற்றவை சுயேச்சைகள். இம்முறை தேர்தலில் அதிகம் சுயேச்சைகள் தோன்றக் காரணமே பிரதான கட்சிகளின் தோல்விதான். பிரதான கட்சிகளில் இருந்து வெளிவந்த ஒரு பகுதியினர் சுயேச்சையாக நிற்கிறார்கள். பிரதான கட்சிகளால் உள்வாங்கப்படாதவர்களும் சுயேச்சையாக நிற்கின்றார்கள். தலைமைத்துவ வெற்றிடம் காரணமாக யாராவது தங்களை வந்து மீட்க மாட்டார்களா என்று காத்திருக்கும் தமிழ் கூட்டு உளவியல் காரணமாக திடீரென்று பிரபல்யம் ஆகிய அர்ஜுனாவை போன்றவர்களும் சுயேச்சையாக நிற்கிறார்கள். யார் எதற்காக நின்றாலும் சுயேச்சைகள் அதிகரிப்பதற்கு காரணம் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தேசத்தைத் திரட்டது தவறியமைதான். எனவே இம்முறை தேர்தல் களம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதை என்று சொன்னால், தமிழ்த் தேசியம் பேசும் எல்லாக் கட்சிகளுமே தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் விடயத்தில் தோல்வி அடைந்துவிட்டன என்பதைத்தான்.

இந்த அடிப்படையில் பார்த்தல்,கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளர் பெற்ற வெற்றி அரிதானது. அது ஒரு மிகப்பெரிய வெற்றி இல்லைத்தான். ஆனாலும் அடிப்படை வெற்றி. அந்த முயற்சியில் ஈடுபட்ட கருத்துருவாக்கிகளை “பத்தி எழுத்தாளர்கள்” என்று சிறுமைப்படுத்தியது ஒரு பகுதி. தமிழில் பத்தி எழுத்தாளர் என்ற வார்த்தை அதிகம் அவமதிக்கப்பட்ட ஒரு காலகட்டம் அது. அதாவது தேசத்தைத் திரட்ட முற்பட்ட குற்றத்துக்காக அதில் முன்னணியில் நின்றவர்களை சிறுமைப்படுத்த அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

சுமந்திரன் பொது வேட்பாளரை ஒரு கேலிக்கூத்து என்று சொன்னார். கஜேந்திரன் இந்த முயற்சியில் நீங்கள் வென்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும் என்று சொன்னார். முடியுமென்றால் ஒரு பொது வேட்பாளர் நிறுத்திக் காட்டுங்கள் என்று ரணில் சவால் விட்டார். பொது வேட்பாளர் முழுத் தீவுக்கும் பொதுவான நாசமாக முடியும் என்று சஜித் எச்சரித்தார். அது ஆண்டிகள் கூடிக் கட்டும் மடம் என்றும் ஆபத்தான விஷப் பரீட்சை என்றும் எழுதினார்கள்.

அதாவது,தென்னிலங்கையில் உள்ள கட்சிகளும் பொது வேட்பாளரை ஆபத்தாகப் பார்த்தன. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட பிரதான கட்சிகள் இரண்டு அதனை விரோதமாகப் பார்த்தன. தேசத் திரட்சிக்கு எதிரான ஊடகவியலாளர் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தமது சொந்த மக்களைத் தோற்கடிப்பதற்காக உழைத்தார்கள். ஆனாலும் பொது வேட்பாளர் அடிப்படை வெற்றியைப் பெற்றார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு தமிழ் அரசியல்வாதி பெற்ற ஆகப்பெரிய வாக்குகளை அவர் பெற்றார். கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்ஷத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சிகளைக் கடந்து தேசத்தைத் திரட்டுவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முயற்சிக்குக் கிடைத்த அடிப்படை வெற்றி அது.

மக்கள் அமைப்புகளும் கட்சிகளும் இணைந்தால் அவ்வாறு வாக்குகளைத் திரட்ட முடியும் என்பது ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. கட்சிகளின் போதாமை காரணமாகத்தான் மக்கள் அமைப்பொன்று கட்சிகளோடு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிவந்தது. எனவே கட்சிகள் மட்டும் தேசத்தைத் திரட்ட முடியாது என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை.

இப்பொழுது,மீண்டும் கட்சிகள் தேசத்தைத் திரட்டுவதில் எவ்வளவு தூரம் தோல்வியடைந்துள்ளன என்பதனை நிரூபிக்கும் ஆகப்பிந்திய உதாரணமாக நாடாளுமன்றத் தேர்தல் களம் காணப்படுகிறது. அதாவது தேசியம் என்றால் என்ன ? தேசியவாத அரசியல் என்றால் என்ன? என்பதை ஆழமாக விளங்கிக் கொள்ளத் தவறிய கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமிழ் மக்களை மீண்டும் சிதறடிக்கும் ஒரு தேர்தல் களம் இது. எனினும்,தமிழ்த் தேசிய அரங்கில் ஒரு கட்சி ஏகபோகத்தை மேலும் உடைத்துக்கொண்டு பல தரப்புக்கள் மேலெழுமாக இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் நன்மைக்கே.

https://www.nillanthan.com/6966/

 

நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன்.

1 week 4 days ago
நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன். நாடாளுமன்றத் தேர்தல் களம் 2024: உத்தமர்களாகக் கட்டியெழுப்பப்படும் வேட்பாளர்கள்! நிலாந்தன்.

சுமந்திரன் ஒரு பிரச்சாரக் காணொளியில் கூறுகிறார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியை தானும் சாணக்கியனும்தான் வெற்றிபெற வைத்ததாக.அதற்கு சிவாஜிலிங்கத்தின் அறிக்கை ஒன்றை ஆதாரமாக காட்டுகிறார். ஏனையவர்கள் அந்த பேரணிக்குள் பின்னர் வந்து ஒட்டிக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

சுமந்திரனின் பிரச்சார காணொளிகளைக் கேட்கும் எவருக்கும் அவரைவிட உத்தமர் இல்லை என்ற ஒரு தோற்றம்தான் கிடைக்கும். அவர் எவ்வளவு காணிகளை விடுவித்தார்? எவ்வளவு கைதிகளை விடுவித்தார்? எந்தெந்த ராஜதந்திரிகளை சந்தித்தார்?எப்படியெல்லாம் தமிழ் மக்களுக்காக உழைத்தார்? அதை எப்படி அவருடைய எதிரிகள் வேறுவிதமாக வியாக்கியானம் செய்தார்கள்? என்றெல்லாம் அந்த காணொளிகள் கூறுகின்றன. பிரச்சார காணொளிகளுக்கூடாக யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்கும் ஒரு தமிழ் வாக்காளர் சுமந்திரன் ஒரு நீதியான, சுத்தமான அரசியல்வாதி என்ற முடிவுக்குத்தான் வருவார். தமிழ் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்த ஒருவர்,தமிழ் மக்களுக்காக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்த ஒருவர்,அரங்கில் உள்ள அரசியல்வாதிகள் அநேகமானவர்களைவிட புத்திசாலியான,சட்டப்புலமைமிக்க ஒருவர்,அவர்தான் என்ற முடிவுக்கு வருவார்கள். ஏனென்றால் அந்த காணொளிகள் அப்படித்தான் அவரை கதாநாயகனாக, உத்தமராகக் கட்டமைக்கின்றன.

அப்படித்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் காணொளிகளை தொகுத்துப் பார்த்தால் அங்கேயும் அந்த கட்சியை விட வேறு யாரும் தியாகம் செய்ததில்லை என்ற ஒரு தோற்றம் கிடைக்கும். கடந்த 15 ஆண்டுகளில் அதிகமாக தியாகம் செய்த ஒரு கட்சி அதுதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். அதிகமாக போராடிய ஒரு கட்சி, துணிந்து போலிசாரோடும் புலனாய்வுத் துறையோடும் மோதிய ஒரு கட்சி, வீரமான கட்சி அதுதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அநேகமாக கோழைகள், போராடாதவர்கள், ஒத்தோடிகள், துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், இந்தியாவின் ஏஜென்ட்கள் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். ஆயுதப் போராட்டத்தின் ஒரே ஏகபோக வாரிசு அந்தக் கட்சிதான் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். எனைய எந்த ஒரு கட்சிக்கும் அவ்வாறு உரிமை கோரத் தகுதி இல்லை என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும்.

குத்துவிளக்கு கூட்டணி அதாவது சங்கு கூட்டணி ஜனாதிபதித் தேர்தலில் சங்கு பெற்ற வெற்றிகளின் தொடர்ச்சியாக தன்னைக் கட்டமைக்க முற்படுகின்றது. சங்குச் சினத்தை ஜனாதிபதித் தேர்தலில் முன்நிறுத்திய பொதுக் கட்டமைப்பும் இப்பொழுது சங்கை முன்னிறுத்தும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான் என்ற மயக்கத்தை சராசரி வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் சங்குக்கு கிடைத்த வெற்றிகளை தமக்கும் மடைமாற்றலாம் என்று அந்தக் கூட்டணி நம்புவதாகத் தெரிகிறது. அந்தக் கூட்டணிக்குள் போட்டியிடும் சசிகலா தன்னை, கொல்லப்பட்ட கணவனின் வாரிசாக முன்வைக்கின்றார்.

சங்குச் சின்னத்தின் கீழ் மற்றொரு பெண் வன்னியில் போட்டியிடுகிறார். முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தவராகிய அவர் போரில் ஒரு காலை இழந்தவர். புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பலர் அவருக்காக கடுமையாக உழைக்கின்றார்கள்.ஆயுதப் போராட்டத்தின் வாரிசாக அவர் தன்னை கட்டமைக்கின்றார்.

தமிழரசுக் கட்சி, முன்னணி, சங்கு கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளையும் தவிர்த்து ஏனைய கட்சிகளின் பிரச்சாரக் காணொளிகளைப் பார்த்தால் அங்கேயும் அப்படித்தான் உருப்பெருக்கப்பட்ட கதாநாயகத்தனமான தோற்றங்கள் கிடைக்கும்.

மணிவண்ணன் நவீன தேசியம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்துகின்றார். அவருடைய அணி அவரைக் குறித்து கட்டியெழுப்பும் சித்திரமும் பிரம்மாண்டமானது.

கட்சிகளைத் தவிர்த்து சுயேச்சைகளைப் பார்த்தால், அங்கேயும் பிரச்சாரக் களம் அப்படித்தான்.மாம்பழச் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த தவராசா பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எத்தனை பேரை தான் விடுதலை செய்திருக்கிறார் என்று பட்டியலிடுகிறார்.அவருடைய சுயேச்சை குழுவை சேர்ந்த சரவணபவன் ஐங்கரநேசன் போன்றவர்களும் தாங்கள் தமிழ்த் தேசியத்துக்கு இதுவரை செய்த பங்களிப்பை பட்டியலிடுகிறார்கள்.

மற்றொரு சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த அர்ஜுனா தன்னை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது என்று நம்புகிறார். சாவகச்சேரியில் தான் தொடக்கிய கலகம் தன்னை அந்தளவுக்கு பிரபல்யப்படுத்தியிருக்கிறது என்றும் நம்புகிறார். அண்மை நாட்களாக அவர் தன் வாயாலே கெடுகிறார். யூடியூபர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பலூன் அவர். அவருடைய சின்னம் ஊசி. அந்த ஊசியே அந்த பலூனை உடைக்கும் ஒரு நிலை.

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வெளியே அங்கஜன்,பிள்ளையான் போன்றவர்களும் பிரச்சாரக் காணொளிகளை வெளியிடுகிறார்கள். பிள்ளையான் தன்னை கிழக்கின் மீட்பராகக் காட்டுகிறார்.அவரை பிரச்சாரப்படுத்தும் காணொளிகள் எல்லாவற்றிலும் அவர் கிழக்கிற்கு செய்த நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. வடக்கில் அங்கஜன் ஒப்பீட்டளவில் எல்லாரையும்விட அதிகமாக செலவழிப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.அவருடைய பிரச்சார காணொளிகளும் அவரை கதாநாயகராகக் கட்டமைப்பவை.

வன்னியில் எமில் காந்தனின் சுயேச்சை குழு போட்டியிடுகிறது. அங்கேயும் காசு தாராளமாக அள்ளி வீசப்படுவதாக ஓர் அவதானிப்பு உண்டு.

இவ்வாறாக தமிழர் தாயகத்தில் கட்சிகளும் சுயேச்சைகளும் பிரச்சார காணொளிகளை அதிகமாக வெளியிடுகின்றன.எல்லாப் பிரச்சார காணொளிகளும் வேட்பாளர்களை சினிமாத் தனமாக கதாநாயக பிம்பங்களாக கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன.

ஆனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கட்சிகளோ சுயேச்சை குழுக்களோ பெருங்கூட்டங்களை ஒழுங்குபடுத்தவில்லை. டிஜிட்டல் புரோமோஷன் மட்டும் தமக்குப் போதும் என்று அவர்கள் நம்புகிறார்களா?

சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியுபர்களின் காலத்தில் டிஜிட்டல் புரோமோஷனுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.அனுர ஜனாதிபதி தேர்தலின்போது அதிகம் டிஜிட்டல் புரமோஷனில் ஆர்வம் காட்டினார். குறிப்பாக தமிழ் வாக்காளர்களை கவரும் நோக்கத்தோடு தேசிய மக்கள் சக்தி உருவாக்கிய காணொளிகளில் அனுர ஒரு கதாநாயகனாகக் கட்டமைக்கப்பட்டார். பிரபல சினிமாப் பாடல்களை பின்னணியில் ஒலிக்க, அனுர வாகனத்தை விட்டு இறங்குவது, நடப்பது, கையசைப்பது, குழந்தைகளை பெண்களை நெருங்கி வந்து கதைப்பது போன்ற எல்லாவற்றிலும் அவரை ஒரு கதாநாயகனாக கட்டமைக்கும் விதத்தில் அந்த காணொளிகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

அனுரவின் உடல் மொழி, உடல் அசைவுகள் அந்தப் பாடல்களுக்கும் இசைக்கும் பொருத்தமாக இருக்கின்றன என்பதனை இங்கு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் சில தமிழ்க் கட்சி அரசியல்வாதிகள் வெளியிடும் காணொளிகளில், பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகளுக்கும் இசையின் எழுச்சிக்கும் தோதாக அவர்களுடைய உடல் மொழி காணப்படவில்லை.

யாழ் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சிக்குள் வேட்பாளராக நிற்கும் ஒரு பெண் முன்பு பொங்கு தமிழில் ஈடுபட்டவர். தன்னை பொங்குதமிழின் வாரிசாகவும் அவர் முன்னிறுத்துகிறார்.அவருக்குரிய பிரச்சார காணொளிகளில் அவர் தனக்கென்று பாடல்களைத் தயாரித்திருப்பதாகத் தெரிகிறது.

மேற்கண்ட பிரச்சாரக் காணொளிகள் பெரும்பாலானவை அந்தந்த கட்சி அல்லது அந்தந்த சுயேட்சைகள் காசு கொடுத்து உருவாக்கியவை. ஆனால் இந்த விடயத்தில் கொழும்பு போன்ற மாநகரங்களில் காணப்படும் வளர்ச்சிகள் தமிழ்ப் பகுதிகளில் இல்லை. மாநகரங்களில் விளம்பரம் ஒரு பெருந்துறையாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அங்கெல்லாம் விளம்பரத்துக்கு என்று பெரிய நிறுவனங்கள் உண்டு.அவை விளம்பரத்தை அதற்குரிய கலைப் பெறுமதியோடு வடிவமைப்பவை. அதற்காக கோடிக்கணக்காக பணம் வாங்குபவை. தொழிற்துறை வளர்ந்த மாநகரங்களில் விளம்பரம் கோடிகள் புரளும் ஒரு தொழில்துறை. தெற்கில் பெரும்பாலான பிரதான கட்சிகள் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தொழிற்சார் விளம்பர நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. அதற்காக கோடிக்கணக்காக செலவழிக்கின்றன. அந்த நிறுவனங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கலைத் தாக்கத்தோடும் சராசரி வாக்காளர்களைச் சென்றடையக்கூடிய வியாபார உத்திகளோடும் தயாரிக்கின்றன. அந்தப் பிரச்சார காணொளிகளுக்கு கலைப் பெறுமதியும் உண்டு சந்தைப் பெருமதியும் உண்டு. ஆனால் தமிழ் காணொளிகள் பலவற்றில் அவ்வாறு கலைப் பெறுமதியைக் காண முடியவில்லை. ஏனென்றால் தமிழ்ப் பகுதிகளில் விளம்பரம் ஒரு கலையாகவும் தொழிலாகவும் வளரவில்லை.இந்தப் பற்றாக்குறையை தமிழ் கட்சிகளின் விளம்பரப் பிரச்சாரக் காணொளிகளில் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ்க் கட்சிகள் அதிகம் டிஜிட்டல் புரோமோஷனில் ஆர்வம் காட்டும் ஒரு தேர்தல் களமாக இது காணப்படுகிறது. அதேசமயம் அந்த பிரச்சார விளம்பர காணொளிகளில் தொழில்சார் பற்றாக்குறைகளையும் அழகியல் குறைபாடுகளையும் காணமுடிகிறது. அதற்கு விளம்பரம் ஒரு தொழில்துறையாக தமிழ் மக்கள் மத்தியில் வளராததும் ஒரு காரணம்.

அரசியல் பிரச்சார நடவடிக்கைகளில் மட்டுமல்ல, அரசியலில் ஏனைனய விடையப் பரப்புகளிலும் உரிய தொழில்சார் திறன்களைப் பெற்றுக் கொள்வதில் தமிழ்க் கட்சிகள் எந்தளவுக்கு ஆர்வமாக காணப்படுகின்றன என்ற கேள்வி இங்கு முக்கியம். அரசியலை ஓர் அறிவியல் ஒழுக்கமாக விளங்கி வைத்திருந்திருந்தால்,பயின்றிருந்திருந்தால்,தமிழ்க் கட்சிகள் தமிழரசியலை இந்தளவுக்கு சீரழிவான ஒரு நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்காது. இவ்வளவு சுயேச்சைகள் களத்தில் தோன்றும் ஒரு நிலைமையும் ஏற்பட்டிருக்காது. ஏனென்றால் தமிழ்க் கட்சிகளின் தோல்விதான் இம்முறை தேர்தல் களத்தில் சுயேச்சைகள் அதிகம் பெருகுவதற்கு பிரதான காரணம் ஆகும்.

https://athavannews.com/2024/1407954

இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று

1 week 5 days ago

இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று WhatsApp-Image-2024-10-12-at-12.25.10-67 இலங்கையின் நெருக்கடிகளுக்கு ஒரு மார்க்சிய மாற்று

www.socialistworld.net வெளியாகிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு

வரலாற்றில் முதல் முறையாக ‘இடதுசாரி’ பின்னணியை கொண்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகி இருக்கிறார்.  அனுர குமார திஸ்ஸநாயக்காவை ஒரு இடதுசாரி தலைவராக சர்வதேச ஊடகங்கள் சித்தரித்த போதிலும் அதில் உண்மையில்லை. அவர் பதவிக்கு வந்த ஆரம்ப வாரங்களில் இருந்து அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தத்தையே வெளிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் பேச்சளவில் இடதுசாரிய ஆதரவாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) ஜெனரஞ்சக முன்னணியான தேசிய மக்கள் சக்தி (NPP) இலங்கையின் ஜனாதிபதி பதவியை கைப்பற்றியதில் இருந்து வியக்கத்தக்க முறையில் வலது பக்கம் திரும்பி இருக்கின்றது. அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் சுமாரான முற்போக்கான சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டவை . இது கூட முந்தைய ஆட்சிகள் செயல்படுத்திய நவ தாராளவாத நிகழ்ச்சிநிரலின்  தொடர்ச்சிக்கு ஆதரவாக விரைவாக கைவிடப்பட்டிருக்கின்றது.

இந்த காட்டிக் கொடுப்பால்  NPP க்குள் உள்ளக முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றது. அரசியலில் மாற்று என நிறுவுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து பிரபலமான தனி நபர்கள் மற்றும் குழுக்களை உள்ளிழுப்பத்தன்  மூலம் அரசியலில் நாம் மாற்று சக்தி என்று காட்ட எடுத்த முயற்சி ஜேவிபியின்  NPP கூட்டணிக்குள் இருந்த இடதுசாரி எதிர்ப்பு பிரிவுக்கு அதிகாரத்தை அளித்து இருக்கின்றது. சமூக ஜனநாயக அரசியலில் மட்டும் ஊறி கிடக்கும் – குட்டி முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவத்தின் பல பிரிவுகளின் ஆதரவால் உற்சாகமடைந்து இருக்கின்ற இந்தப் பிரிவு சோசிலிசம் அல்லது இடதுசாரிய அரசியல் என்ற தீவிர நிலைப்பாட்டில் இருந்து NPP யை மாற்றிவிட்டது. இது பல சாப்தங்களாக நாட்டை பாதித்த அதே முதலாளித்துவ கொள்கைகளை NPP இப்போது ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது தொழிலாளர்  வர்க்கத்தின் நெருக்கடியை அதிகப்படுத்தி இருக்கின்றது.

சீர்திருத்தவாதத்திலிருந்து புதிய தாராளமயம் வரை

தேர்தலுக்கு முன், NPP இன் மேடையில் IMF இன் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) மறுபேச்சு, அதானி குழுமத்துடனான ஊழல் ஒப்பந்தங்களை ரத்து செய்தல், மற்றும் தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட முக்கியமான துறைகளின் தனியார்மயமாக்கலை நிறுத்துதல் போன்ற திட்டங்கள் இருந்தன. இந்தக் கொள்கைகள், போதாவையாக இருந்தபோதிலும், குறைந்தபட்சம் கொள்கையளவிலாவது, நவதாராளவாத மரபுவழிக்கு ஒரு சாதாரண சவாலை அளித்தன. ஆனாலும், அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்றவுடன், இந்த வாக்குறுதிகள் விரைவாக நிராகரிக்கப்பட்டன. அரசாங்கத்தின் அணுகுமுறை இப்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளையே  பிரதிபலிக்கிறது – இது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய நவதாராளவாதத்தின் முழுமையான மற்றும் விமர்சனமற்ற தொடர்ச்சியாகும்.

இந்த காட்டிக்கொடுப்பு NPPக்கு அப்பாலும் நீண்டுள்ளது. இலங்கையின் ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் தள்ளாடியுள்ளன. முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP), புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி (NDMLP), மற்றும் சோசலிஸ்ட் மக்கள் முன்னணி (SPF) ஆகியவை “அரகலயா” இயக்கத்தின் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து  மக்கள் போராட்டக் கூட்டணியை (PSA) உருவாக்கின. எவ்வாறாயினும், இணக்கமான அரசியல் உடன்பாடு இல்லாமல்,பொதுமக்களுக்கு ஒரு தெளிவான மாற்றீட்டை முன்வைக்க இயலாது  இந்த கூட்டணி முரண்பாடுகளால் நிறைந்துள்ளது, மேலும் தொழிலாள வர்க்கம் அல்லது பரந்த போராட்டங்களுடன் அர்த்தமுள்ள வகையில் இவர்களால் ஈடுபட முடியவில்லை. இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் மற்ற ஒவ்வொரு பிரிவினரும் குறைதீமை வாதத்தின் அடிப்படையில் NPP உடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

தெளிவான மார்க்சிய வேலைத்திட்டத்தை முன்வைப்பதில் இந்தக் குழுக்களின் கூட்டுத் தோல்வியானது இலங்கையின் இடதுசாரி அரசியலுக்குள் ஆபத்தான அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிடமானது, பொதுமக்கள் மீது தாக்குதலை தொடுக்கும் புதிய தாராளமயக் கொள்கைகளைத் தொடர்ந்து திணிக்க வழி வகுத்துள்ளது. இதன் எதிரொலியாக ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (USP) எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.ஒப்பீட்டளவில்  கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொண்டு சிறிய சோர்வு இருந்த போதிலும் இந்த இடைவெளியை உண்மையான மார்க்சிச மாற்றுடன் நிரப்புவது எங்கள் புரட்சிகர கடமை என்று நாங்கள் நம்புகிறோம்.

புதிய தாராளவாதத்தை சவால் செய்ய ஒரு மார்க்சிய திட்டம்

சர்வதேச நாணய நிதியத்தின் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கையில் நடைமுறை, மார்க்சிய மாற்றீட்டை வழங்கும் ஒரே கட்சி USP ஆகும். நெருக்கடியின் வேர்களைத் தீர்க்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையான தீர்வுகளை வழங்கும் பல முக்கிய தூண்களில் அடிப்படையில் எங்கள் தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. கடன் திருப்பிச் செலுத்த செலுத்த மறுப்பு மற்றும் கடன் ரத்து

எங்கள் திட்டத்தின் மையத்தில் அனைத்து கடன்களையும் செலுத்த மறுப்பது உள்ளது. வெறுக்கத்தக்க கடன், காலநிலை மாற்றத்துக்கான நீதி மற்றும் காலனித்துவ கொள்ளைக்கான இழப்பீடு போன்ற கொள்கைகளின் அடிப்படையில், உடனடியாக கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.இலங்கையின் கடன்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 99.83% ஆக உள்ளது, இது கொள்ளையடிக்கப்பட்ட கடனின் விளைபொருளாகும். ஊழலற்ற தலைமைத்துவத்தையும், நாட்டின் நிதிநிலையின் நிலைத்தன்மையற்ற தன்மையையும் முழுமையாக அறிந்த சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்தக் கடன் பொறியை உருவாக்கின. இதன் விளைவு பேரழிவு. வாங்கப்பட்ட கடன்கள்  சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பதிலாக, சொகுசு வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் நில மீட்புத் திட்டங்கள் போன்ற வீணான திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டன. இதற்கிடையில், சுகாதாரம், கல்வி மற்றும் பொது உள்கட்டமைப்பு போன்ற அத்தியாவசியத் துறைகள் நிதியில்லாமல் திட்டவட்டமாக பட்டினி கிடக்கின்றன.

இலங்கையின் COVID-19 பெருந்தொற்று இந்த தோல்விகளை எடுத்துக்காட்டியது. அடிப்படை மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல்  மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி நிலையங்கள் வீழ்ச்சியடைந்தது,இதனால் மில்லியன் கணக்கான மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியாமல் போகிறார்கள், மேலும் நமது பல்கலைக்கழகங்களால் உயர் கல்விக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்று, அதிக தினசரி வேலை தொடர்பான மன அழுத்தத்தைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை  முன்னிடத்தில் உள்ளது, மேலும்  மலிவு விலையில் வீடுகள் இல்லாதது இளம் தொழிலாளருக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கின்றது. எல்லா நேரங்களிலும், IMF இன்னும் சிக்கனத்தைக் கோருகிறது, இது இது பொது சேவைகளுக்கான நிதி குறைப்பு மற்றும் கடனின் தீய சுழற்சியை மட்டுமே நிலைநிறுத்துகிறது.

இந்தப் போக்கை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். கடனைத் திருப்பிச் செலுத்தும் பாதை நெருக்கடியை மேலும் மோசமாக்கும். அதற்குப் பதிலாக, நாங்கள் கடன் நீதி மற்றும் ரத்துசெய்தலுக்கு ஆதரவாக நிற்கிறோம், இதேபோல் சர்வதேச நிதிச் சுரண்டலின் வலையில் சிக்கியுள்ள மற்ற தென் உலகநாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் எங்கள் போராட்டத்தை இணைக்கிறோம்.

2. திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் முக்கிய வளங்களை தேசியமயமாக்குதல்

இலங்கை மக்களை முதலாளித்துவம் சந்தேகத்திற்கு இடமின்றி தோல்வியடையச் செய்துள்ளது. எங்களின் மாற்றீடு திட்டமிடப்பட்ட பொருளாதாரம் ஆகும், இங்கு முக்கிய சமூக நலன் வளங்கள் வங்கிகள், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை ஜனநாயக தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும். இது தனியார் லாபத்துக்கான அரசவுடமை அல்ல. மாறாக இந்த முக்கிய துறைகள் பொது நலனுக்காக சேவை செய்வதை உறுதி செய்வதற்கான வழிமுறையாகும்.

“முதலீட்டாளர்கள்” என்று அழைக்கப்படுபவர்கள் மற்றும் முதலாளிகள் சுரண்டப்படும் தொழிலாள வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் செல்வத்தை வெளியேற்றுவதைத் தடுப்பதற்கு மூலதனக் கட்டுப்பாடுகள் அவசியம். இந்த வணிக உயரடுக்குகள் வரி மானியங்கள் மற்றும் பிற தேசிய வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, சாமானிய மக்களை சுரண்டி தனது லாபத்தை அறுவடை செய்கின்றனர்.

ஒரு திட்டமிட்ட பொருளாதாரம் பொதுத்துறையை விரிவுபடுத்துவதற்கு உதவும்,இது  பலவீனமான இலங்கை முதலாளித்துவ வர்க்கம் வழங்கத் தவறிய வேலைகளை உருவாக்குகிறது. மேலும், அரிசி, சினி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை முதலாளிகள் செயற்கையாக உயர்த்துவதைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் இயற்றப்பட வேண்டும். இலங்கையின் தன்னலக்குழுக்கள் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி விலைகளை உயர்த்தி, நாட்டைப் பணயக்கைதியாக வைத்து இலாபம் ஈட்டும் திட்டங்களுக்குச் சென்றுள்ளனர். ஒரு திட்டமிடப்பட்ட பொருளாதாரமானது  வளங்கள் சந்தையின் விருப்பத்துக்கு அல்லாமல், தேவையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.

3. வாழ்க்கைச் செலவு நெருக்கடியைத் தீர்க்க விரைவான நடவடிக்கை

தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிபொதுமக்களின் கழுத்தை நெரிக்கிறது. உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பான வேலைவாய்ப்புக்கான அணுகலை உறுதிசெய்து, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உடனடி ஆதரவை எங்கள் திட்டம் கோருகிறது. இலங்கையின் சனத்தொகையில் 24.8% க்கும் அதிகமானோர் தற்போது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். தொழிலாள வர்க்கம், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள், சுழலும் பணவீக்கத்தின் சுமையின் கீழ் உயிர்வாழ போராடி வருகின்றனர். இந்த நெருக்கடியை நேரடியான தலையீட்டின் மூலம் தணிக்க-  யாரும் பின் தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

4. IMF க்கு மறுப்பு – சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையை கட்டி எழுப்புவோம்

IMF மற்றும் அதன் சிக்கன நடவடிக்கைகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். IMF என்பது உலக மூலதனத்தின் ஒரு கருவியாகும், இது இலாப வெறியர்களை வளப்படுத்த செல்வத்தை பிரித்தெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சுமத்துகின்ற நவதாராளவாத சீர்திருத்தங்கள் – சமூக சேவைகளை வெட்டுதல், அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குதல் மற்றும் ஊதியங்களைக் குறைத்தல் – ஆகியன சாதாரண மக்களின் நெருக்கடிகளை மேலும் ஆழமாக்குகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக தெற்குலக  நாடுகளை பாதிக்கும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாகும். பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் வரை, மாலைதீவு முதல் லெபனான் வரை, கடன் சார்ந்து ஏகாதிபத்திய சுரண்டலின் அதே வடிவங்கள் காணப்படுகின்றன. சர்வதேச சொலிடாரிட்டியை கட்டியெழுப்புவதில் எமது தீர்வு உள்ளது. கடன் ரத்து, இழப்பீடு மற்றும் புதிய, நியாயமான பொருளாதார ஒழுங்கைக் கோருவதற்கு இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கிய முன்னணியை உருவாக்க நாங்கள் முன்மொழிகிறோம்.

5. வளங்களைப் பகிர்தல் மற்றும் பொருளாதார நீதி

முதலாளித்துவ வர்க்கம் பொதுமக்களைச் சுரண்டுவதன் மூலம் பணக்காரர்களாக வளர்ந்துள்ளனர்,பொதுச் சேவைகளான வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை மீண்டும் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்படும் வருமானத்தை எடுக்க, பணக்கார தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் மீது வருடாந்திர செல்வ வரியை நாங்கள் முன்மொழிகிறோம். இது தொண்டு அல்ல; அது நீதி. மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் ஆழ்த்திய ஒரு அமைப்பிலிருந்து செல்வந்தர்கள் இலாபம் அடைந்துள்ளனர். இப்போது அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கூடுதலாக, கடுமையான வரிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம், இது பெரிய நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் கடமைகளைத் தவிர்க்கும் வரிகளை மீட்டெடுப்பதை உறுதி செய்கிறது.

அவசரகால பொருளாதார நடவடிக்கையாக வரி சீர்திருத்தம் ஓரளவு நிவாரணம் அளிக்கலாம் என்றாலும், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சனைகளை இது மட்டும் தீர்க்காது. முதலாளித்துவத்தின் கோரமான பிடியில் இருந்து வெகுஜனங்களை விடுவிக்க, தொழிலாளர் சார்பு கொள்கைகளை, சோசலிச கொள்கைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் தலைமையிலான அரசு அமைப்பது அவசியம்.

  1. தேசியக் கோரிக்கை

இலங்கையின் தேசிய இன பிரச்சனையின் தீர்வாக  மார்க்சிச நிலைப்பாட்டை நாங்கள் தொடர்ச்சியாக நிலை நிறுத்தி வருகின்றோம். அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதே வேளையில் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் வாதிடுகிறோம். ஜே.வி.பி/என்.பி.பி தேசியப் பிரச்சினையை மறுக்கும் அதே வேளையில், ஒற்றையாட்சி அரசின் கீழ் சுயராஜ்யத்தை மட்டுமே PSA தெளிவற்ற முறையில் முன்மொழிகிறது, எங்கள் அணுகுமுறை தெளிவாக உள்ளது. ஐக்கிய வர்க்கப் போராட்டத்தை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக தேசிய ஒடுக்குமுறைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். தேசிய உரிமைகள் உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளையும் வழங்குவதை இலக்காகக் கொண்ட வர்க்கப் போராட்டத்தை கட்டியெழுப்ப தொழிலாளர்களின் ஒற்றுமையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

முடிவு: முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் புரட்சிக்கான தேவை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது வெறும் நிதி நெருக்கடி மட்டுமல்ல; அது முதலாளித்துவத்தின் நெருக்கடி. பல தசாப்தங்களாக, தெற்குலகின் பெரும்பகுதியைப் போலவே, நாடும் கடனால் தூண்டப்பட்ட நவதாராளவாத சுரண்டல் அமைப்பில் சிக்கியுள்ளது. இதன் விளைவாக ஒரு மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது, மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் ஆழமாக தள்ளப்பட்டனர், அதே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்து லாபம் ஈட்டுகிறது.

எங்களின் தீர்வு தெளிவானது: முதலாளித்துவ பேராசைக்கு  மாற்றாக கடன் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தர்க்கத்தை நிராகரிக்கும் மார்க்சிச வேலைத்திட்டம்,இது  மனித தேவையின் அடிப்படையிலான  ஒரு சமூகத்தை கட்டமைக்கிறது. நாங்கள் நடத்தும் போராட்டம் இலங்கைக்கு மட்டுமல்ல, உலக முதலாளித்துவத்தின் மூலம் நசுக்கப்படும் உழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஆகும்.

தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து முற்போக்கு சக்திகளையும் இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் ஒன்றிணைந்து, சோசலிச இலங்கையையும், சோசலிச தெற்காசிய கூட்டமைப்பையும், சோசலிச உலகத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

 

https://ethir.org/?p=9002

சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?

1 week 5 days ago

சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?
சூடும்-ருசியும்: மட்டக்களப்பில் ‘போனஸ் ‘ மும்முனைப் போட்டி….?

— அழகு குணசீலன் —

இலங்கை பாராளுமன்ற தேர்தல் களம்,  சமூக வேறுபாடுகளைக்கடந்து பாரம்பரிய கட்சிகள், புதிய கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள், கடந்த தேர்தலில் வென்றவர்கள், தோற்றவர்கள், போடுகாய்கள், வாக்கு சேகரிப்போர், வாக்குப்பிரிப்போர், பழையவர்கள், புதியவர்கள் என பல்வேறுபட்ட 8888 வேட்பாளர்களால் நிரம்பி வழிகின்றது. இதற்கு மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் எப்படி விலக்காக இருக்கமுடியும்? 

இங்கும் அதே நிலைதான்.

 பல தடவைகள் தோல்வி அடைந்த, அடுப்பங்கரையில்  சூடுகண்ட பூனைகளும், அடுப்பங்கரையில் சட்டி, பானைகளில் கிடந்த எச்சசொச்சத்தில் ருசி கண்ட பூனைகளும் களத்தில் நிற்கின்றன. இவற்றில் சில யாரும் பார்க்கவில்லை என நினைத்து கண்களை மூடிக்கொண்டு பாலைக்குடித்தவை. நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம் என்று இதுவரை பார்வையாளராக இருந்த மக்களுக்கு புள்ளடியினால் ‘குறிசுடும்’ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக்கள் எந்த வேட்பாளருக்கு, எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கப்போகிறது… ? யாரையெல்லாம் தோற்கடிக்கப்போகிறது….? 

மட்டக்களப்பு  தேர்தல் கள நிலைமைகளின் படி ‘போனஸ் ‘ ஆசனத்திற்கு மும்முனைப்போட்டி நிலவுவதாக கொள்ள வேண்டி உள்ளது.  இது தமக்கு தான் மூன்று  அல்லது  குறைந்தது இரண்டு கிடைக்கும் என்ற வீடு, படகு, சங்கு கட்சிகளின்  கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டது.  போனஸ் என்பது  மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் அதி கூடிய வாக்குகளை பெறும் கட்சிக்கு/சுயேட்சை குழுவுக்கு உரிய  மேலதிக ஆசனத்தை குறிக்கிறது. அதாவது ஐந்து ஆசனங்களில் முதல் இரண்டு ஆசனங்களையும் பெறும் கட்சி எந்தக் கட்சி என்பதாகும். இம்முறை கள நிலவரங்களின் படி போனஸ் ஆசனத்துடன் மூன்று ஆசனங்களை பெறும் வாய்ப்பு எந்தக் கட்சிக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.  அதற்கு கட்சி ஒன்று குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகளையாவது பெறவேண்டும். 

 1989 தேர்தலில் வெறும் 55, 131 வாக்குகளை பெற்று தமிழர் விடுதலைக்கைட்டணி மூன்று ஆசனங்களை பெற்ற அசாதாரண சூழ்நிலையோ அல்லது 46,413 வாக்குகளை பெற்ற ஈரோஸ் வெறும் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் பெற்ற நிலையோ இன்று இல்லை. கடந்த 2020 தேர்தலில் வாக்களிப்பு மட்டம் உயர்வாகவும், தேர்தல் ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றியும் இடம்பெற்றது. இதனால் வாக்களிப்பு வீதம்  ஒப்பீட்டளவில்  இம்முறையும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அதிகளவான கட்சிகளும், சுயேட்சைகளும் களத்தில் நிற்பது இதற்கு ஒரு காரணம். வழக்கம் போல் சோனக பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பிரதேசங்களை விடவும் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருக்கும் போது மாவட்டத்தின் மொத்த வாக்களிப்பு வீதத்தை இது அதிகரிக்கச் செய்யும் . 

எல்லாத்தரப்பிலும் வாக்காளர் மத்தியில் கட்சிகள், அவற்றின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அதிருப்தி நிலவுகிறது. மட்டக்களப்பு  தமிழ் மக்கள் தேர்தலில் அதிக ஆர்வமாக இல்லை.  சமூகம் சார்ந்த நோக்கில் இது அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. ஒரு பகுதியினர்  எந்தக்கட்சியை, யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. இருந்தும் முஸ்லீம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் எண்பதைத்தொடும் என்றும், தமிழ்ப்பிரதேசங்களில் இது மட்டுமட்டாக வெறும் எழுபது வீதத்தையே  எட்டிப்பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாக்களிப்பு வீதத்தில் ஏற்படும் அதிகரிப்பு ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதற்கு  தேவையான வாக்கு தொகையையும் அதிகரிக்கும். குறைந்தது கட்சி ஒன்று பிரதிநிதித்துவத்தைப்பெற குறைந்தது 35,000 – 40,000 ஆயிரம் வாக்குகளையாவது பெற வேண்டியிருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  (தமிழரசு,ரெலோ,புளட் +)  ஒன்றாக இணைந்து 79,460 வாக்குகளை பெற்றும் இரண்டு ஆசனங்களையே பெறமுடிந்தது. தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் தனித்தும், அதன் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறையில் இருந்தும், வாக்காளர் ஒருவரைக் கூட சந்தித்து ஆதரவு கோரமுடியாத நிலையிலும் ரி.எம்.வி.பி 67, 692 வாக்குகளை பெற்றது. மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கும் பிள்ளையானுக்கு கிடைத்தது. வேட்பாளர்களை  விடவும் தலைமை வேட்பாளருக்கும், கட்சிக்கும் வாக்களிக்கின்ற தேர்தல் தந்திரோபாயத்தின் பெறுபேறு இது. இதன்மூலம் செல்லுபடியற்றதாக கழிக்கப்படுகின்ற வாக்குகள் ரி.எம்.வி.பி. வாக்குகளில் குறைவாக இருக்கும்.

இந்த நடைமுறையை தமிழ்த்தேசிய கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது அவர்கள்  எட்டு பேரும் தங்கள் தங்களை  முதன்மைப்படுத்தி ஓடுகிறார்கள்.    இன்றைய நிலையில் பிள்ளையான் கடந்த முறை பெற்றளவு வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. முக்கியமாக மேய்ச்சல் தரை, நிலப்பிரச்சினைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பிள்ளையானின் போக்குவரத்து வீதி, பாலங்கள் உட்கட்டமைப்பு, கிராமிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள்,  நிர்ப்பாசனம், கல்வி, விளையாட்டு அபிவிருத்திகளுக்கு அப்பால்  இந்த பிரச்சினைகள் அதிக கவன ஈர்ப்பை பெற்றுள்ளன. அதேவேளை பட்டிருப்பில் இம்முறை பெறவுள்ள புதிய வாக்குகளின் மூலமும், கல்குடாவில் வியாழேந்திரனின் ஒரு பகுதி வாக்குகளையும் , தமிழ்த்தேசிய சிதறல் வாக்குகளையும்  பெற்று இந்த வீழ்ச்சியை பிள்ளையானால் சரி செய்யமுடியுமா? இழந்த வாக்குகளை ஈடு செய்ய பெறப்படுகின்ற புதிய வாக்குகள்  போதுமானவையா? என்ற கேள்விக்கு  களத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் இரு பதில்கள் நோக்கர்களால் கூறப்படுகின்றன. நவம்பர் 15இல்  இந்த கேள்விக்கான சரியான விடை தெரிந்துவிடும்.

கடந்த முறை ரி.எம்.வி.பி .சுமார் 12, 000 வாக்குகளால்  ஒரு ஆசனத்தையும் ,  மேலும்  சுமார் 70 வாக்குகளால் தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்தையும் வாக்கு பிரிப்பாளர்கள், வாக்கு பொறுக்குபவர்களிடம் இழக்க வேண்டி ஏற்பட்டது.  இந்த சைக்கிள் காரர்கள் தான் ருசிகண்ட பூனையாக  கிழக்கில் அலைகிறார்கள். அதை அறிந்து மற்றைய பூனைகளும் சட்டி,பானைகளை உருட்டுகின்றன. எனினும் இன்று கடந்த தேர்தலில் நிலவிய அரசியல் சூழல் நிலவுகிறதா?  என்றால் இல்லை. 

ரி.என்.ஏ  வீடாகவும், சங்காகவும், மாம்பழமாகவும், மானாகவும் பிரிந்து நிற்கிறது. உதயசூரியனும்  இன்னோரு பக்கம். வீட்டுக்குள்ளும், சங்கிலும் உட்கட்சி நிலவரங்கள் ஆரோக்கியமாக இல்லை. மட்டக்களப்பிலும் ‘சிறி ‘ எதிர்ப்பு பிரச்சாரம் யாழ்ப்பாணம் போன்று  மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்  இது சிங்கள ‘சிறி’ க்கு தார்பூசிய கதையல்ல. தமிழ் ‘சிறி’க்கு’ முகத்தில் கரிபூசும் கதை.  ஒரு வகையில் பொதுவேட்பாளரை சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிராக ஆதரித்தமைக்கான பழிவாங்கல் கணக்குத்தீர்ப்பு.   இதற்காகவே செஞ்சோற்று கடன் தீர்க்க அரியநேந்திரன் சிறிநேசனை ஆதரிக்கிறார். கடந்த தேர்தலில் தனது வேட்பாளர் நியமனத்தை சாணக்கியன் காகமும், நரியும் வடைக்கதை போன்று தட்டிப்பறித்தார் என்று  ஜனாவை ஆதரித்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜனாவும் இவரை ஆதரித்தபோதும் அந்த நன்றியை மறந்துவிட்டார். இவர்களில் கணக்கை  மக்கள் யாருக்கு தீர்க்கப்போகிறார்கள் ?

கடந்த பாராளுமன்ற காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலை சிதைத்தவர்கள் என்ற குற்றச்சாட்டு தமிழ்த்தேசிய ஆதரவாளர்களால் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் மீது முழு வடக்கு கிழக்கிலும்  மட்டும் அல்ல தென்னிலங்கை தமிழர்களாலும், புலம்பெயர்ந்த தமிழர்களாலும் முன் வைக்கப்படுகிறது.  இவர்களில் யாழில் சுமந்திரனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் ‘சிறி’ க்கு கரிபூசுகிறார்கள். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் 38 கோடியை அபிவிருத்தி நிதியாக பெற்று, குருசாமிக்கு  8 கோடியை கொடுத்து விட்டு மற்றைய மாவட்டங்களுக்கு ஒரு சதமும் பங்கிட்டு ஒதுக்கவில்லை. வடக்கில் பூகம்பம் கக்குகிறது. விவகாரத்தை ஜனா சாம்பல் போட்டு மூடி மௌனம் சாதிக்கிறார். வடக்கு கட்சிகளில்  போடுகாய் பதவி வகிக்கும் கிழக்காரின் பொதுநிலை இதுதான். கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் கி.துரைராசசிங்கம் பதவிதுறக்க வைக்கப்பட்டதும் இந்த பொதுநிலைதான். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரன், சாணக்கியன் அணி சார்ந்து,  அரியநேத்திரன், சிறிநேசனுக்கு எதிராகவும், சஜீத்பிரேமதாசவை ஆதரித்தும்  தம்பிமாரே …! என்று விழித்து,தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைகின்ற இறுதி நாளில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் துரைராசசிங்கம். இதன் மூலம் மற்றவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கின்ற  வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஜனநாயக ஊடகதர்மத்தை கிடப்பில் போட்டார். இப்போது ‘சிறி’ க்கு கரி பூசும்  வகையில்  கல்குடாவில் இருந்து தனது உறவினர் ஒருவரை சுமந்திரனின், சாணக்கியன் ஆதரவுடன் வேட்பாளர் பட்டியலில் இணைத்து பிரச்சாரம் செய்கிறார்.

நல்லாட்சியில் மட்டும் அல்ல, தமிழரசுக்கட்சியில் சுமந்திரனின் தீர்மானம் எடுக்கும் திறன் கடந்த பாராளுமன்ற காலத்திலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமாரவின் புதிய அரசாங்கத்திலும் தமிழ் மக்கள் அதிகாரப்பகிர்வு கோரவில்லை, தமிழர் பிரச்சினை பொருளாதாரப்பிரச்சினை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படமாட்டாது,  பாதுகாப்பு வலையங்கள், காணிகள் விடுவிக்கப்படமாட்டாது , புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமே இல்லை, தமிழரசை அரசாங்கத்தில் இணைக்கமாட்டோம், வேறு கட்சியினருக்கு- சுமந்திரனுக்கு அமைச்சர் பதவி இல்லை என்ற  என்.பி.பி.யின் தொடர்ச்சியான அறிவிப்புகள் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும், சிறப்பாக தமிழரசுக்கட்சிக்கும், அதன் தேர்தல் விஞ்ஞாபன முழக்கத்திற்கும்  என்.பி.பி. ஆட்சியின் சாட்டையடி. 

 இவை சுமந்திரனின் அரசியல் தந்திரோபாயம் மீதான கடும் தாக்குதலாக அமைகிறது. இந்த தோல்வியின் இடைவெளியில் மற்றைய தமிழ்த்தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகள், தேசிய கட்சிகள்  வாக்கு இலாபம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.பி.பி.யின் இந்த நிலைப்பாடு தமிழ்த்தேசிய பாராளுமன்ற போலி அரசியலில் தமிழ்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்து மூளைச்சலவை செய்வதுடன், தென்னிலங்கையில் அவர்களின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு வசதியாக உள்ளது. 

இது எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய அரசியலுக்கான சிவப்பு சிக்னல், அபாயச் சங்கூதல்.  சிக்னல் சிவப்பு என்றாலும், விசில் அடித்தாலும் சைக்கிளை நிறுத்தமாட்டோம் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கதையாடல்வேறு.இவை அனைத்தையும் நிறுத்துப்பார்க்க வேண்டிய நிலையில் மட்டக்களப்பு மக்கள் இருக்கிறார்கள். தமிழ் மக்களை அடைய முடியாத  கோஷங்களை  இலக்காகக் கூறி  இன்று வரை ஏமாற்றி வரும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு  என்.பி.பி. சுடச்சுட வழங்கும் பதில் ஒருவகையில் தமிழ்மக்கள் போலித்தமிழ்த்தேசியத்தில் இருந்து விழிப்படைய உதவியாக அமைகிறது. 

அதை வேளை சுயத்துவம், அபிவிருத்தி என்பன குறித்த எதிர்கால அரசியல் பயணத்திற்கான பாதையை தெரிவு செய்யவேண்டிய நிலையில் மட்டக்களப்பு மக்கள் இருக்கிறார்கள்.அதற்காக திசைகாட்டி சரியான திசையை காட்டுகிறது என்று கொள்ள முடியாது. அது அபிவிருத்தி திசையை கூட சரியாக காட்டவில்லை. சீனவினால் வழங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுத்திட்ட  உதவியில்  ஒரு வீடு கூட  அநுரவின் ஆதரவுடன் இடம்பெற்ற யுத்தத்தினால்  அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்படவில்லை.  சிங்கள மக்களுக்கு சமமான தனித்துவமான சுயத்துவத்தை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அநுரகுமார திசாநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் கால உரையில்  – அவரது பாஷையில் சொன்னால்  “வெற்றுக் காசோலைக்ககு”  வாக்களிக்க வேண்டாம் என்று சஜீத் பிரேமதாசவுக்கு எதிராக அவர் சொன்னதையே தமிழ்மக்கள்  அவருக்கு பதிலாக  திருப்பிக்கொடுக்க முடியும்.

மும்முனைப் போட்டியாளராகவுள்ள மூன்று முக்கிய கட்சிகளில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெறும் கட்சி இரண்டு ஆசனங்களை பெறும் நிலையில் மற்றைய இரண்டும் ஒவ்வொரு ஆசனங்களையே பெறமுடியும்.  அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்கான நான்கு ஆசனங்களும் பங்கிடப்பட்டுவிடும். ஐந்து ஆசனங்களில் எஞ்சியுள்ள ஆசனம் சோனகர்களுக்கு உரியது இதை முஸ்லீம் காங்கிரஸ் – ஹிஸ்புல்லா (?)  வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனக வாக்குகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது.  இது அதிக வாக்காளர்களை கொண்ட காத்தான்குடிக்கே சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

தேர்தல் முடிவுகள் குறித்த இந்த எதிர்வு கூறல் காட்சியை விடவும் வேறு பட்ட வகையில் வாக்களிப்பு மாதிரி அமையுமாயின் அதிகூடிய வாக்கை பெறும் கட்சி மூன்று ஆசனங்களை பெற்றால் ( சாத்தியம் மிக மிக குறைவு) எஞ்சிய ஒரு ஆசனம் மும்முனைப்போட்டியில் உள்ள மற்றைய இரண்டு கட்சிகளில் எதற்கு? என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. இந்த நிலையில் மூன்றில்  ஏதாவது ஒரு கட்சி ஆசனமின்றி  வெறும் கையோடு கச்சேரியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.

மறுபக்கத்தில் வடக்கில் இருந்து  வந்து தேர்தல் காலமழைக்கு வளர்ந்த காளான் விற்கும் கடைகளுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. சைக்கிள், வீணை, சூரியன் இவை மட்டக்களப்பாரின் வாக்குகளால் தேசிய பட்டியலுக்கு வாக்கு சேர்க்க வந்தவை. கடந்த தேர்தலில் தேசிய பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சைக்கிள் கஜேந்திரன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் ஒரு சதத்தைத்தானும் ஒதுக்கீடு செய்யவில்லை. தேசிய பட்டியல் எம்.பி. ஒருவருக்குதான் விரும்பிய மாவட்டத்திற்கு முழுமையாக அல்லது பகுதியாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒதுக்கும் உரிமை உண்டு. மற்றைய எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் விசேட அனுமதி பெற்றே இதைச் செய்யமுடியும்.  இப்படி இருந்தும்   இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் கிழக்கு மாகாணத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. செய்ததெல்லாம் இன பன்மைத்துவத்தை கொண்ட கிழக்கில் இன உறவை பாதிக்கும் வகையில் படையினரை வம்புக்கு இழுத்து படம்காட்டியதுதான். எனவே தேசிய பட்டியலுக்கு வாக்கு சேர்ப்போர் குறித்து மட்டக்களப்பு மக்கள் கவனமாய் இருத்தல் அவசியம்.

இந்த விழிப்புணர்வு இன்மையால் கடந்த 2020 தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ்மக்கள் தேசிய கூட்டணிக்கு 4,960, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,203, ஜே.வி.பி. 348, தமிழர் விடுதலைக் கூட்டணி 8,113, யூ.என்பி 833, ஈரோஸ் 331  போன்று வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சுமார் 15,000 வாக்குகள் மட்டக்களப்பு தமிழர்கள் வாக்குப்பெட்டிக்குள் போடுகிறோம் என்று நினைத்து குப்பைத்தொட்டிக்குள் போட்டவை என்பதையும் , தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்கு, அதிகரிப்பதற்கு எதிராக நமக்கு நாமே அளித்த வாக்குகள் என்பதையும் மட்டக்களப்பு தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மற்றொரு கோணத்தில் நோக்கினால் தென்னிலங்கை கட்சிகள் என்ற அடிப்படையில் மணிக்கூடு, காஸ் சிலிண்டர், திசைகாட்டி என்பவை குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. சோனகர்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதித்துவத்திற்கு உரிமையுள்ளவர்கள். தமிழர்களுக்கு நான்கு பிரதிநிதித்துவம். இதில் தமிழ் வாக்காளர்கள், சோனகர் வாக்காளர்கள் விடுகின்ற தவறானது அவர்கள் சமூகம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை குறைக்கவும், இல்லாமல் செய்யவும் வாய்ப்பு இல்லாமல் இல்லை. தென்னிலங்கை கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு இரு சமூகங்களின் வாக்குகளாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் போது ஒரு சமூகத்தின் வாக்கு இன்னொரு சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு சாதகமாக அமைவது கடந்த கால அனுபவம். அப்படியான நிலையில் திசைகாட்டி, மணிக்கூடு, காஸ் சிலிண்டர் வாக்குகள் இந்த முரண்பாட்டு நிலையை ஏற்படுத்துவதுடன் தமிழர் வாக்குகளால்  சோனகசமூகத்தவர் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளன. தமிழ் பிரதிநிதித்துவம் திசைகாட்டியில்  தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு மட்டக்களப்பில் மிக மிக அரிது.

சுயேட்சை குழு என்ற அடிப்படையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு குழுவாக பசு சின்னம் உள்ளது. கல்குடா தொகுதியின் வியாழேந்திரனின் வாக்குகள்,யோகேஸ்வரனின் வாக்குகள் இந்த சுயேட்சை குழுவுக்கு அளிக்கப்படலாம் என்ற கருத்து காணப்படுகிறது. அதேபோல் பட்டிருப்பில் திசைகாட்டி, மணிக்கூடு , சங்கு , உதயசூரியன், சைக்கிள், பசு என்பன சாணக்கியனுக்கு சேதாரத்தை ஏற்படுத்தக்கூடியவை.

படகு, சங்கு, வீடு இவற்றில்  ஏதாவது ஒன்றில் இருந்து இருவர் தெரிவு செய்யப்பட்டால் ஒருவர் புதியவராக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒருவர்தான் என்றால் வீட்டில் கல்குடாவில்  இருந்து புதியவர்  ஒருவர் தெரிவு செய்ரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி நடந்தால் கரிபூசியவரும், பூசப்பட்டவரும்  அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள். மற்றைய இரண்டிலும் பழையவரே புதியவர்.

நான்கு பிரதிநிதித்துவங்கள் வாக்கு விகிதாசாரத்தில் ஒதுக்கப்பட்ட பின்னர் இறுதியான ஐந்தாவது இடம் கிடைப்பது லொத்தர் விழுந்த மாதிரியான ஒரு அதிஷ்டம். நான்கு பிரநிதித்துவ பங்கீட்டுக்குப் பின்னர் குறைந்த தொகையான வாக்காலும் ஐந்தாமவர் தெரிவு செய்யப்படலாம்.

 அப்படியான ஒரு நிலையில் என்.பி.பி. எஸ்.ஜே.பி, சுயேட்சைக்குழு ஒன்றுக்கும் இடையே  ஒரு போட்டி ஏற்படலாம். இந்த நிலை ஏற்பட்டால்  இரண்டு  சோனகபிரதிநிதித்துவம் (என்.பி.பி/ எஸ்.ஜே.பி)  தெரிவாதற்கும் தமிழ் தரப்பில் ஒரு பிரதிநிதித்துவம் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் மும்முனைப் போட்டியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவ வாய்பை இழக்கப்போகின்ற கட்சி எது ?  

இது  மாத்து நொடி……!
 

 

https://arangamnews.com/?p=11422

பொதுத் தேர்தல் களம் – 2024

1 week 5 days ago

பொதுத் தேர்தல் களம் – 2024
பொதுத் தேர்தல் களம் – 2024

  — சின்னத்தம்பி குருபரன் —

நிறுவனமயப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் வரலாறு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1878 இல் படித்த இலங்கையருக்கான பிரதிநிதித்துவம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு வழங்கப்பட்டதில் இருந்து ஆரம்பமாகிறது. படித்த இலங்கையர் ஒருவரைத் தமிழர் சார்பாகத் தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டி 1878 இல் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப் பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் வை.விசுவநாதபிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதில் இராமநாதனும் பிரபல சட்டத்தரணி பிறிட்டோவும் போட்டியிட்டனர். தெரிவுக்கான விவாதம் நீடித்துக் கொண்டு போகவே ஆறுமுக நாவலர் தலையிட்டுச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததனால் பொன்னம்பலம் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 

பெரும்பான்மைச் சிங்கள மக்கள் சார்பில் செல்வாக்குமிக்க மாக்கஸ் பெர்னாண்டோ தெரிவு செய்யப்பட்டிருந்தும் கரையோரச் சிங்களவர் என்ற காரணத்தினால் கண்டியச் சிங்களவர்களால் நிராகரிக்கப்பட்டு இராமநாதன் தெரிவானார். சட்ட சபைக்குச் சென்ற இராமநாதன் சிறுபான்மை மக்கள் பிரதிநிதியாகச் செய்ததையும்விட பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதயாகவே செயற்பட்டார். இலங்கை அரசியல் வரலாற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் பிரதிநிதிகள் யாவரும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பௌத்த, சிங்கள வலதுசாரி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயற்பட்டமையே வரலாறாகும். 

சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்கதவால் பாராளுமன்றத்துக்குச் சென்று, காரசாரமாகப் பேசி, பின் கதவால் வெளியேறி அரசிடம் தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்து வந்தனர். சிறுபான்மையினர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தித் தீர்வு காண்பதற்கு நாதியற்றவர்களாக அறிக்கை விட்டுக் கொண்டு காலத்தைக் கடத்தி வந்தார்கள். தமக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி, ஊர்வலங்கள், போராட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றை நடத்தி், தமிழ் தேசியம், தனிநாடு, உரிமை, சமத்துவம், சமஷ்டி என்பறெல்லாம் வீரவசனம் பேசி, மக்களை உசுப்பிவிட்டுக் குளிர்காய்ந்த வரலாறு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி ஏமாந்து, ‘இனிமேலும் இவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள்’ என்று மாற்றத்தை விரும்பி நிற்கின்றனர்.

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான முதலாவது கலவரம் 1915 இல் கம்பளையில் நடைபெற்றது. 1918 இல் இரண்டாவது கலவரமும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றது. பௌத்த சிங்கள மேலாதிக்கவாதிகளால் தமிழருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாவது இனப் படுபொலை 1939 இல் கல்லோயாத் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் தமிழர், முஸ்லிங்களுக்கு எதிராகப் பல இனக் கலவரங்களும் படுகொலைகளும் ஆட்சியளர்களால் திட்டமிட்டு மேற்கெள்ளப்பட்டன. நடந்து முடிந்த இனக் கலவரங்கள், படுகொலைகளைக் கண்டித்துப் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் கண்டித்து அறிக்கை விட்டார்களே தவிர நியாயமான தீர்வினை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை பிரச்சினைகள் தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்கின்றனவே தவிர ஆக்கபூர்வமான எந்தவொரு முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனமாகும். இத்தனை காலமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இன்னொரு சந்தர்ப்பம் தாருங்கள் எனத் தமிழரசுக் கட்சியினர் வாக்காளர்களிடம் கோருவது வேடிக்கையாக இருக்கிறது.

இலங்கையில் கட்சி அரசியல் தோன்றிய காலத்தில் இருந்து ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர ஏனையோரிடையே வெட்டுக் கொத்துக்கள், குழி பறிப்புக்கள், துரோகம், ஒற்றுமையின்மை, பிரிந்து செல்லல், இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம், பொய், புரட்டு, கொலை, கொள்ளை, களவு, கடத்தல் ஆகியன சர்வசாதாரணமாகிவிட்டன. வாக்குக் கேட்டுத் தாம் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் வரை மக்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் பாராளுமன்றம் சென்றுவிட்டால் மக்களை மறந்து சுகபோக வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகின்றனர்.. இது வாழையடி வாழையாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தமிழ், முஸ்லிம், மலையக அரசியல்வாதிகள் கொள்கையைத் தூக்கிச் சாக்கடையில் போட்டுவிட்டு வீரம் பேசி, அறிக்கைவிட்டு, மக்களை உசுப்பேத்தி, கட்சிதாவி, அரசாங்க சுகபோகங்களில் தொங்கிக் கொண்டு கொழும்பில் உல்லாச வாங்க்கை வாழ்ந்து வருகின்றனர். இடைக்கிடையே தமது தொகுதிக்கும் மாவட்டத்துக்கும் சென்று நிகழ்வுகளில் பங்குபற்றி, காட்டாப்புக் காட்டி, எந்த மேடையில் எது பேசவேண்டுமோ அதைப் பேசாது, அரைத்த மாவை அரைத்து மேடை அதிர முழங்கோ முழங்கென்று முழங்கி, உப்புச் சப்பற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கி மக்களை உசுப்பேத்திவிட்டுக் களிப்புடன் கொழும்பு செல்வர். இதுவே வெட்கம்கெட்ட நாறிப்போன அரசியலாகிவிட்டது.

இந்த நாறிப்போன அரசியலுக்கு மக்கள் 2022 அரகலயவுக்குப் பின்னர் முற்றுப்புள்ளி வைக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த மாற்றம் மரபுசார்நத வலதுசாரி அரசியல்வாதிகளை வயிற்றில் புளியைக்கரைத்து கதிகலங்க வைத்துவிட்டது. அதனால் பல அரசியலில்வாதிகள் விழுந்தும் உடம்பில் மண் ஒட்டாததுபோல் அரசியலில் இருந்து கௌரமாக ஒதுங்கிவிட்டார்கள். இந்த மாற்றத்தினால் பல தசாப்தங்கள் கோலோச்சிய அரசியல் வாழ்க்கையும் குடும்ப அரசியலும் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன. அரகலயப் போராட்டத்தில் மக்கள் கோரிய மாற்றத்தின் வெற்றி என்பது இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் செய்த கேவலம் கெட்ட அரசியல்வாதிகளை இந்தப் பொதுத் தேர்தலின்மூலம் ஓரங்கட்டி வீட்டுக்கு அனுப்புவதில் தங்கி இருக்கிறது. உண்மையில் வாக்காளர்கள் வேடம் போட்டு அரசியலில் சித்து விழையாட்டுக்கள் செய்து நாடகமாடும் அரசியல் கோமாளிகள் எவரும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகக் கூடாது. அதில் வாக்காளர்கள் உறுதியாக இருத்தல் வேண்டும். இந்த மாற்றத்தை நன்கு உணர்ந்து செயற்படுபவர்களாக வாக்காளர்கள் மாற வேண்டும். இதுவே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் நன்மையாக அமையும். 

மக்கள் வாக்களிக்கும்போது நாட்டில் முறைமை மாற்றத்தை விரும்பி அவற்றை நடைமுறைப்படுத்த எத்தனிக்கின்ற எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கலாம். அது அறுதிப் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் குறித்த கட்சி ஒன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருப்பான்மை பெறுவதற்கு வாக்களிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது நாட்டில் மீண்டுமொரு வரலாற்றுத் தவறு செய்வதாக அமைந்துவிடும். 

1970, 1977, 2020 களில் நடந்த பொதுத் தேர்தல்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அதற்கு மேலும் ஆசனங்களைப் பெறுவதற்கு மக்கள் வாக்களித்தமையினால் ஆட்சியாளர்கள் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டனர். 2010 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறாவிட்டாலும் மகிந்த ராஜபக்ச ஆசைகாட்டி, அச்சுறுத்தி, கட்சிகளைப் பிரித்து, பல பாராளுமன்ற உறுப்பினர்களைத் தம்பக்கம் சேர்த்துக் கொண்டு பாராளுமன்றத்தில் பல காரியங்களைச் சாதித்து விரும்பிய சட்டமூலங்களை நிறவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்திவந்தார். இக்காலத்திலேயே நாட்டில் கேடுகெட்ட மசோதாக்கள் பல பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

உள்நாட்டு யுத்தத்தின் விளைவுகளில் ஒன்றாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போராட்டக் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித் தனிக் கட்சிகளைத் தோன்றுவித்தனர். 

2002 இல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரன் அக்கட்சிகளை ஒன்றிணைத்துத் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். 2005 இல் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பிரித்துச் சென்றார். 2005 இன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுமந்திரனைக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டதில் இருந்து கூட்டமைப்பு ‘கழுதை தேய்ங்து கட்டெறும்பான’ கதை போல் கூட்டமைப்பு சிதைத்துச் சின்னாபின்னமாகிவிட்டது. 

அதற்குப் பல ஊது குழல்களும் சுமந்திரனுக்குப் பக்கபலமாகச் செயற்பட்டனர். தற்போது அன்டனி ஜெகநாதன் பீற்றர்(முல்லைத்தீவு), கேசவன் சயந்தன்(சாவகச்சேரி) சாணக்கியன் போன்றோர் தீவிர ஊதுகுழல்களாகவும், ஏனையோர் பக்கப்பாட்டுப் பாடுபவர்களாகவும் உள்ளனர். அதிலும் சுமந்திரன், சாணக்கியன் போன்றோர் தமிழ் தேசியம், தமிழர் போராட்டம், யுத்தம், யுத்த இழப்புக்கள் பற்றிய தெளிவும் அக்கறையும் இல்லாதவர்களாகக் காணப்பட்டதோடு அவற்றில் ஒதுங்கியே இருந்தனர். இவர்கள் இருவரும் மறைமுகமாகச் சிங்கள, பௌத்த பேரினவாதத்தின் கைக்கூலிகளாகச் செயற்படுகிறார்களோ எனச் சில விமர்சனங்களும் எழுகின்றன.

சுமந்திரனும் சாணக்கியனும் தமது விசுவாசிகளை பொதுத் தேர்தல் களத்தில் நிறுத்திக் குறைந்தபட்சம் தாங்கள் இருவரும் வென்றால் போதும் எனப் பரப்புரைகளை மறைமுகமாக முடுக்கி விட்டிருக்கின்றனர். 12 ஆசனங்களைக் கைப்பற்றும் கதை மறைந்து போய் யாழ், மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து இரு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டாலே போதும் என நினைக்கின்றனர்.

இதுவும் விசுவாசத்திற்கு ஏமாந்து போகும் கேடுகெட்ட அரசியல் என யாழ் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.  இதேநிலை பெரும்பாலான தமிழ்க்கட்சிகளில் காணப்படுகின்றது.

23 ஆசனங்களைப் பெற்ற தமிழரசுக் கட்சி இப்போது இரண்டு ஆசனங்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையில்லை, வேட்பாளர்களுக்கிடையேயும் ஓற்றுமையில்லை, ஒவ்வொருவரும் நான் முந்தி, நீ முந்தியெனப் போட்டி போட்டுக் கொண்டு றேஸ் ஓடுகின்றனர். இறுதிக் கட்டத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமக்குள் ஒற்றுமையில்லை வாக்காளர்களை ஒற்றுமையாகச் சென்று தமது சின்னத்துக்கும் இலக்கத்துக்கும் புள்ளடி இடுமாறு கோருகின்றனர். “இதனைக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இனிமேலும் பாராளுமன்றக் கதிரையும் சுகபோக வாழ்க்கையும் தேவைப்படுகிறதோ” என வாக்காளர்கள் பலர் விசனம் தெரிவிக்கின்றனர். 

தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் பாராளுமன்றம் செல்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் தாருங்கள், எமது பலத்தை நிரூபித்துப் புரையோடிப் போயிருக்கும் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிப்போம் என வெட்கமின்றிவாக்குக் கேட்கின்றனர். ‘23, 18, 14, 10 ஆசனங்கள் தம்வசம் இருந்தபோது தீர்க்கமுடியாத பிரச்சினையை இனிமேலா தீர்க்கப் போகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைத்த வாய்ப்பினையும் பயன்படுத்தத் தவறியவர்கள் இனிமேல் எப்படித் தீர்க்கப் போகின்றனர்’ எனவும் வாக்காளர்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது. 

இதே கருத்தையே ஏனைய தமிழ், முஸ்லிம், மலையக வேட்பாளர்களில் பலர் தொடர்பாக வாக்காளர்கள் பேசிக் கொள்வதையும் அறியக்கூடியதாக உள்ளது. இன்று பல வேட்பாளர்கள் ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்ற தெளிவுக்கு வந்திருப்பதையும் அறிய முடிகிறது. அதனால் பல வாக்காளர்கள் வாக்களிப்பில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர்.

சிங்கள வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு தமிழ், முஸ்லிம் மலையக வாக்காளர்களிடமும் ஏற்பட வேண்டும். பாராளுமன்ற ஆசனங்களைச் சுத்திகரிக்கும் வகையில் முறைமை மாற்றத்தை விரும்பி, இலஞ்சம், ஊழல், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகமற்ற, தாமாகவே முன்வந்து மக்களுக்குச் சேவை செய்த, சேவை செய்ய விரும்புகின்ற வேட்பாளர்களை இனங்கண்டு, கட்சி பேதம் பாராது வாக்களித்து அவர்களைத் தெரிவு செய்வதே சிறந்த முன்மாதிரியான மாற்றமுமாகும். 

முகம் தெரியாத, மக்களுக்குச் சேவை செய்யாத பிரபல்யமற்றவர்களையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களையும் தவிர்த்து புதிய முகங்களைத் தெரிவு செய்வதற்கு வாக்களிப்பதே புத்திசாலித்தனமாகும். அதுவே சிறந்த தேர்வாகவும் அமையும்.

இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து ஆட்சியாளர்களை எதிர்த்து நின்று எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது வடக்கு, கிழக்கு மக்களிடையே காணப்படும் பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கு அரச சார்பு அரசியல் சாணக்கியமே பொருத்தமானதாகும். தற்போது இருக்கும் சாதகமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குச் சிறுபான்மையினர் யாவரும் முன்வர வேண்டும். 

அண்மையில் சமூக வலைத்தளங்களில் “ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம். பொய் பொய்யாச் சொல்லி ஏமாற்றினது போதும்…” என்ற பாடல் முன்னாள் கேடுகெட்ட அரசியல்வாதிகளின் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுவைரலாகிப் பிரபல்யம் பெற்றிருந்தது. அத்தகைய அரசியல்வாதிகளுக்கு வடக்கு, கிழக்கில் வாக்களிப்பதைத் தவிர்த்து மக்களுக்குச் சேவை சேய்யக்கூடிய அப்பழுக்கற்ற,அறிந்த, தெரிந்த புதியவர்களைத் தெரிவு செய்வோம். இந்தப் பொதுத் தேர்தலைச் சிறந்த முன்னுதாரணமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.  
 

https://arangamnews.com/?p=11418

இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைத்த நிலஅபகரிப்புகள்

1 week 5 days ago
முற்றுகைக்குள் திருகோணமலை image

இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைத்த நிலஅபகரிப்புகள்

ஓக்லாண்ட் நிறுவகம் - தமிழில் ரஜீபன்

சிங்கள அரசாங்கம் வடக்குகிழக்கில் உள்ள சிறுபான்மை தமிழ் முஸ்லீம் மக்களின் தாயகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை  தொடர்ந்தும் விஸ்தரிக்கின்றது.

15 வருடங்களிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த போதிலும், இந்த பகுதிகள் பெருமளவிற்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றன.

இந்த நோக்கத்துடன் சிங்கள அரசாங்கம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை மாவட்டத்தில் நில அபகரிப்பை தீவிரப்படுத்துகின்றது.

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதும், சிங்களவர்களின் குடியேற்றத்தை அதிகரிப்பதும் இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து இடம்பெறுகின்றது.

இந்த புதிய ஆராய்ச்சி 2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்தது முதல் நில அபகரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறித்தும், தமிழ் முஸ்லீம் சமூகத்தினரின் அதிகாரங்களை மேலும் பறிப்பதற்காக இலங்கையின் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தவர்களும் இராணுவத்தினரும் முன்னெடுத்துள்ள தந்திரோபாயங்கள் குறித்தும்  ஆராய்கின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதானமான தமிழ் முஸ்லீம் பிரதேசசெயலகங்களில் தீவிர நில அபகரிப்பு இடம்பெறுகின்றது. இதன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகையில் சிங்களவர்கள் 27 வீதமாக காணப்படுவதுடன் 36வீதமான நிலத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.

புவியியல் ரீதியில் வடக்குகிழக்கை இணைக்கும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு, கடந்த பத்து வருடங்களில் மிகமோசமாக பறிபோயுள்ளது.

இந்த பிரதேச செயலாளர் பிரிவில் ஆகக்குறைந்தது 41164 நிலத்தை அபகரித்துள்ளனர். இது ஒட்டுமொத்த நிலப்பரப்பின் 50 வீதமாகும்.

அபிவிருத்தி திட்டங்கள்  என்ற போர்வையில்,சிங்கள விவசாயிகளை தமிழர் நிலப்பகுதிகளில் குடியேற்றும் செயற்பாட்டின் ஊடாக இதனை முன்னெடுக்கின்றனர் - இது சிங்களமயப்படுத்தல் எனப்படுகின்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் உட்பட்ட பகுதிகளை அனுராதபுரத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுடன் இணைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

சிங்கள மயமாக்கல் என்பது பௌத்த மயமாக்கலுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.- பௌத்த மயமாக்கல், என்பது குடிப்பரம்பல் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான தமிழர்கள் முஸ்லீம்களின் பகுதிகளில் விகாரைகளை விஸ்தரிப்பதாகும்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அபகரித்த 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 27க்கும் மேற்பட்ட புத்தவிகாரைகளை கட்டியுள்ளனர்.

trinco_under_siege.jpg

பல பௌத்த ஆலயங்களை அரசாங்கம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது.

விகாரைகளிற்கு பௌத்தபிக்குகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் அதேவேளை இந்த பகுதிகளில் காணப்பட்ட, தமிழர்கள் வழிபாட்ட ஆதி தெய்வங்களின் ஆலயங்களை அழித்துள்ளனர். அல்லது அந்த பகுதிகளிற்கு செல்வதற்கு தடைவிதித்துள்ளனர்.

2020 இல் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவத்திற்காக 11 பேர் கொண்ட செயலணியை நியமித்து, தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இனம்கண்டு அவற்றை பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தலைமையிலான குழுவில் ஆரம்பத்தில் தமிழர்கள், முஸ்லீம்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அவர்கள் கிழக்கின் பெரும்பான்மை சமூகமாக காணப்பட்ட போதிலும் அவர்களை உள்வாங்கவில்லை.

செயலணியில் இடம்பெற்றிருந்த இரண்டு பௌத்த மததலைவர்களில் ஒருவரான பானமுரே திலகவன்ச திருகோணமலையை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு தலைமை தாங்கினார்.

இந்த செயலணி தற்போது செயற்படாத போதிலும், பௌத்த விகாரைகளை கட்டுவதற்காக நிலங்களை அபகரித்தல் தடையின்றி இடம்பெறுகின்றது.

திருகோணாமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நிலத்தின் அளவு மக்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளமான விவசாய நிலங்களும், கடலோர நிலங்களும் பெருமளவில் அபகரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாரம்பரிய வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

தங்கள் நிலங்கை மீட்டெடுப்பதற்காக  வந்தவர்கள் பல சட்டசிக்கல்களை குடியேற்றவாசிகளிடமிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களிற்கான அடிப்படை சேவைகள் மறுக்கப்படுகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால் அவர்களால் கிராமங்களில் வாழமுடியாத நிலை உருவாகலாம் என உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கை இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணங்களில் தொடரும் சிங்கள மயமாக்கல் நிலஅபகரிப்பு இராணுவமயமாக்கல் குறித்த ஆதாரங்களை முன்வைப்பதுடன் வாய்மூல சாட்சிகளையும் முன்வைக்கின்றது.

தமிழ் முஸ்லீம் மக்கள் மீதான தனது இனரீதியான ஆதிக்கத்தை தொடர்வதற்கு இராணுவமயமாக்கல் அவசியம் என இலங்கை  அரசாங்கம் கருதுகின்றது.

இதன் காரணமாக பெருமளவு இராணுவ பிரசன்னம் தொடர்கின்றது.

வடக்குகிழக்கில் அதிகரிக்கும் நிலத்தகராறுகள் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் ஸ்திரதன்மை இழக்கச்செய்யும் பாதிப்புகள் குறித்து தனது 2024 மார்ச் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த ஐக்கிய நாடுகள்மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க், பிற்போக்குதனமான சட்டங்கள், ஏதேச்சதிகார அணுகுமுறைகள் போன்றவற்றால் இலங்கையில் பேண்தகு அமைதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள, இலங்கையின் இனவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் செயற்பாடுகள் துன்பம் துயரம் அநீதி வெறுப்பு ஆகியவற்றை உருவாக்கி நாட்டில் அமைதிய நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளை பாதிக்கின்றது.

அரசாங்கம் வடக்குகிழக்கை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவிக்கும், தமிழ் முஸ்லீம் சமூகங்களின் அடிப்படை நில உரிமையை மதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாவிட்டால் அமைதியும் நல்லிணக்கமும் சாத்தியமாகாது.

EYq2GOLXgAsQmEo.jpg

அறிமுகம்

இலங்கையின் இரத்தக்களறி மிக்க 26 வருடங்கள் நீடித்த அழிவை ஏற்படுத்திய உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வரவழைக்கப்பட்ட பொதுமக்கள் மீது அதன் பின்னர் இடம்பெற்ற இலங்கை படையினரின் ஈவிரக்கமற்ற குண்டுவீச்சினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இதனை உன்னிப்பாக உற்றுநோக்கிய பலர் இனப்படுகொலை என்றே அழைக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழ் பிரிவினைவாதிகள், பெரும்பான்மை சிங்கள பௌத்த அரசாங்கத்தை எதிர்த்த இந்த மோதல், சுமார் 200,000 பேரின் உயிர்களை பறித்துடன் ஒரு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயரச்செய்தது.

இந்த மோதல் நாட்டின் உட்கட்டமைப்பை அழித்தது, இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம்களின் உயிர்கள் வாழ்வாதாரத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக - இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் ஓக்லாண்ட் நிறுவகம், தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வடக்குகிழக்கில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளது.

2015 இல் ஓக்லாண்ட் நிறுவகம் வெளியிட்ட ஆரம்ப அறிக்கையான யுத்தத்தின் நீண்ட நிழல் - யுத்தத்திற்கு பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம், பௌத்த விகாரைகளை அமைத்தல், சுற்றுலாதலங்களை அமைத்தல், வெற்றி நினைவுச்சின்னங்களை அமைத்தல், தொல்பொருள் பாதுகாப்பு, வடக்குகிழக்கில் உள்ள சிங்களவர்களிற்கான விசேட பொருளாதார வலயம் போன்றவற்றின் மூலம்நிலம் அபகரிக்கப்படும் பல வழிமுறைகளை அம்பலப்படுத்தியது,

அதன் தொடர்ச்சியாக வெளியான அறிக்கைகள் இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள், எதிர்கொள்ளும் துன்பங்கள், நீதிக்கான அவர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் குறித்து பேசியது.

முடிவற்ற யுத்தம்-இலங்கையில் அழிக்கப்பட்ட தமிழர்களின் நிலம், வாழ்க்கை அடையாளம், என்ற அறிக்கை 2021 இல் வெளியானது.

அபிவிருத்தி திட்டங்கள்  என்ற போர்வையில், இலங்கையின் வடக்குகிழக்கில் தமிழ் சிறுபான்மையினர் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது குறித்த அதிர்ச்சி தரும் புதிய ஆதாரங்களை அந்த அறிக்கை வெளியிட்டது. மேலும் வடக்குகிழக்கில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடனும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் நிலங்களை அணுகுவதை தடுக்கும் நோக்குடனும், அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கல் தமிழர் பகுதிகளில் அதிகரித்துள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

அந்த அறிக்கை தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் இராணுவமயப்படுத்தலில் சிக்குண்டுள்ளதையும், ஆறு பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் அந்த பகுதியில் இராணுவத்தினர் காணப்படுவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

இலங்கையின் வடக்குகிழக்கு பகுதி தொடர்ந்தும் அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது, இலங்கை இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்து இந்த பகுதியிலேயே காணப்படுகின்றது.

இலங்கையில் கடந்த தசாப்தங்களில் பல ஆட்சிமாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அனைத்து அரசாங்கங்களும் வடக்குகிழக்கில் நில ஆக்கிரமிப்பு அபகரிப்பு பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் என்பவற்றை தொடர்ந்துள்ளன.

தொடரும்

https://www.virakesari.lk/article/198197

சுமந்திரன் கண்ட பகல் கனவு!

1 week 6 days ago

சுமந்திரன் கண்ட பகல் கனவு!
சுமந்திரன் கண்ட பகல் கனவு!

  — அழகு குணசீலன் —

பொதுத்தேர்தல் களநிலவரங்களின்படி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிரணியின் ஆதரவு தேவைப்படும் என்பது வெளிச்சமாகிறது. இதற்கு சிங்கள, சோனக தரப்பில் இருந்து ஆதரவைப்பெறுவதற்கு அவர்  முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ்தரப்பின் தமிழ்த்தேசிய, இணக்க அரசியல் பலவீனத்தை பயன்படுத்தி ஆதரவைப் பெறுவது இலகுவானது என்று கருதி இருக்கக்கூடும். அதேவேளை ஒரு தரப்பில் மட்டும் தங்கியிருக்காமல் இரண்டு தரப்புக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து வீடு இல்லையென்றால் வீணை என்ற நிலையில் தான் அநுரவின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன.

    தன்னை வந்து சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனுடனும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் ஜனாதிபதி என்ன பேசினார் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் தெற்கில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தான் வடக்கு தமிழ்தலைவர்களுடன் பேசுகிறேன், தொடர்பில் இருக்கிறேன் என்று ஜனாதிபதி அநுரகுமார பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சை அல்லது ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து படம் எடுத்துக்கொண்ட போது இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தை தமிழ் அரசியல் வாதிகள் அரைகுறையாக விளங்கிக்கொண்டு அல்லது தங்கள் விருப்பத்திற்கு அதற்கு அர்த்தம் கற்பித்து பூனையை ஆனையாக்கி  தங்களை அமைச்சராக கனவு கண்டிருக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது. 

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று இவர்கள் சொன்னதன் அர்த்தம் அநுரவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது. 

இதுவும் ஆதரவுக்கு சாராயத்தவறணை கேட்டதுபோல் அமைச்சர் பதவி கேட்டல். 

இது ஊழலா? இல்லையா? என்.பி.பி.யிடம் தான் கேட்கவேண்டும்.

சுமந்திரன், டக்ளஸை அநுர நம்புவதற்கு வெறுமனே பாராளுமன்ற இடைவேளை இலைக்கஞ்சி  மற்றும் தனிப்பட்ட சந்திப்பும் -உரையாடலும் மட்டும் காரணமல்ல. அதற்கும் மேலாக காரணங்கள் உண்டு.

என்.பி.பி.யின் அல்லது ஜே.வி.பி.யின் ஈழப்போர் குறித்த நிலைப்பாட்டிற்கும்,  இவர்கள் இருவரின் நிலைப்பாட்டிற்கும், அநுரகுமார திசாநாயக்கவின் நிலைப்பாட்டிற்கும் முக்கிய அம்சங்களில் வேறுபாடு இல்லை. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சுமந்திரனும், டக்ளசும் பயங்கரவாதப்போராட்டம் என்பவர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்பவர்கள். இறுதியுத்தத்தில் நடந்தது இனவழிப்பு அல்ல என்பவர்கள். சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவையற்றது அல்லது அதை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பவர்கள். இதன் மூலம் மறைமுகமாக இராணுவம் தண்டிக்கப்படாத உள்ளக பொறிமுறைக்கு ஆதரவு வழங்குபவர்கள். ஒட்டு மொத்தத்தில் அநுரகுமாரவின் கடந்த காலத்தை  மறைக்க அவர் இனவாதியல்ல என்றும் வெள்ளையடிப்பவர்கள். 

மறு பக்கத்தில் அமைச்சரவையில் ஒரு தமிழரையாவது வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் ஜனாதிபதிக்கு உள்ளது. அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சுமந்திரன் அமைச்சர் பதவி பற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கிறார். அமைச்சர் பதவியையிட்டு பரிசீலிக்க தயாராக இருப்பதாக பல தடவைகள் அறிவித்துள்ளார். அது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்கும் போது புளகாங்கிதம் அடைகிறார். ஜே.வி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளர் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து வந்து யாழில் ஊடகச்சந்திப்பு நடாத்தி  இவர்களின் பிரச்சார யுக்தியை மறுத்திருந்தபோதும் சுமந்திரன் அமைச்சர் பதவி குறித்து தொடர்ந்தும் பேசி வந்தார். சிலவேளை அது தனக்கல்ல டக்ளஸ்க்கு என்று நினைத்தார் போலும்.

இதனால் தான் அமைச்சராவதை நியாயப்படுத்தும் வகையில் சில நகர்வுகளை  தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தார். தேர்தலின் பின்னர் இது குறித்து மக்கள் அறிந்திருந்தார்கள் என்றும் தமிழரசுக்குக்கிடைத்த தேர்தல் வெற்றி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான தமிழ்மக்களின் அங்கீகாரம் என்றும் சுமந்திரன் அறிவிக்கக்காத்திருந்தார். இதே பாணியில் தான் சுமந்திரன் சம்பந்தரை பதவி விலக கோரியபோதும்  திருகோணமலை மக்கள் எனது முதுமையை அறிந்துதான் தனக்கு வாக்களித்ததாகவும் அது மக்களின் அங்கீகாரம் என்றும் கூறி சம்பந்தர் பதவிவிலக மறுத்திருந்தார்.

 அண்மையில்  ஒரு கூட்டத்தில் செல்லையா குமாரசூரியர், கதிர்காமர் ஆகியோருடன் மு.திருச்செல்வத்தை ஒப்பிட்டு சுமந்திரன் பேசியிருந்ததும் மற்றொரு காய்நகர்வு. இதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படாத, நியமிக்கப்பட்ட கடந்தகால தமிழ் அமைச்சர்கள் போன்று தான் செயற்பட மாட்டேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திருச்செல்வம் போல் செயற்படுவேன் என்பதாகும். தேவை ஏற்பட்டால் அமைச்சர் பதவியை திருச்செல்வம் போன்று இராஜினாமாச் செய்வேன் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார். நல்லையா, கே.டபிள்யு.தேவநாயகம், செ.இராசதுரை ஆகியோரை சுமந்திரன் பெயர் குறிப்பிடாதற்கும், ஏன்? டக்ளஸ் தேவானந்தாவை பெயர் குறிப்பிடாததற்கும் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று தனது நிலைப்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முயற்சித்ததே காரணம்.

1965 இல் இருந்த அரசியல் சூழ்நிலை வேறு இன்றைய அரசியல் சூழ்நிலை வேறு. அன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்திலே தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக கொழும்பு அரசியலில் தோல்வியடைந்து வந்துள்ளது. அந்த  தோல்வியின் இடத்திற்கு தமிழரசை கொண்டு வந்து சேர்த்திருப்பவர் சுமந்திரன். இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமானது. திருகோணமலையை புனிதநகராக பிரகடனம் செய்வதிலும், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதிலும்  திருச்செல்வம் தோற்றுப் போனார். 

திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அல்ல இந்து பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்ற ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடம் தமிழரசு தோற்றுப்போனது.  கிழக்கு மாகாணத்தில் முதல் பல்கலைக்கழகம் அமைந்துவிடும் என்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட வைக்கோற்பட்டறை நாய் அரசியல் இது. 

அது மட்டுமா ? மன்னம்பிட்டி பாலம்வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையை தீர்க்கதரிசனமற்ற அரசியலால் பொலனறுவை மாவட்டத்திற்கு பிரித்துக் கொடுத்தவர்  அன்றைய  உள்ளூராட்சி அமைச்சராக இருந்த  சுமந்திரன் முன் உதாரணம் காட்டும் இந்த திருச்செல்வம்.

இந்த நிலையில் சுமந்திரனின் அமைச்சர்பதவி “ஆதரவு” கருத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ்த்தேசிய பிரிவினரிடம் இருந்து எதிர்ப்பு குரல் எழும்பியது. சுமந்திரனின் சகா சாணக்கியனும் அமைச்சர் பதவி பற்றி மட்டக்களப்பு சந்திப்புக்களில் பேசி வந்தார். இந்த நிலையில் சிறிதரன் தரப்பும், மட்டக்களப்பில் சிறிநேசன், அரியநேத்திரன் ஆகியோரும் அமைச்சர் பதவி “பரிசீலிப்புக்கு” எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டனர். 

“அமைச்சர் பதவிக்காக தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கவில்லை. அமைச்சு பதவிக்காக எனில் தமிழரசுக்கு எவரும் வாக்களிக்கத் தேவையில்லை” என்று சுமந்திரன், சாணக்கியன் தலையில் ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியம்.  

மறுபக்கத்தில் முல்லைத்தீவு பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அபயசேகரவும் அரசாங்கத்தின் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.”  வேறு எந்த கட்சியில் இருந்தும் அமைச்சர்களை நியமிக்க மாட்டோம். இருபத்தைந்து அமைச்சர்களும் என்.பி.பி. உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று  அறிவித்தார். அப்போது தான் சுமந்திரன்”ஞானம்” பெற்றவராக பரிசீலிப்பது என்றுதான் கூறினேன் என்றும், அது அமைச்சர் பதவியை ஏற்பதாகாது, அதைக்கட்சியே தீர்மானிக்கும் என்றும்   வழமையான சுத்துமாத்து அப்புக்காத்துதன வாதத்தை முன் வைத்து மறுதலித்துள்ளார். கட்சியே தானாக இருக்கையில் கட்சி எப்படி தீர்மானிப்பது.

சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பாக யாழ், கொழும்பு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டு இருந்தன. வாரத்திற்கு இருமுறை முன்னாள் அமைச்சர் உதய கம்பவெல  சுமந்திரனுக்கு வெளிநாட்டு அல்லது நிதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், சமஷ்டி தீர்வு வழங்கப்படபோகிறது என்றெல்லாம் இனவாத தொனியில் கருத்துக்களை வெளியிட்டுவந்தார். அவற்றை எல்லாம் கேட்டும், படித்தும் வந்த சுமந்திரன் கடந்த ஒரு மாதகாலமாக எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அல்லது “பரிசீலனை” க்கு வியாக்கியானமும் கொடுக்கவில்லை. அவர் கனவுலகில் அமைச்சராகவே பவனிவந்தார்.  பிரதமர் ஹரிணி அபயசேகர வடக்கு தமிழ்மக்களை ஏமாற்று பேர்வழிகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். அதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு எம்.பி.யை என்.பி.பி.க்கு வழங்கி நன்றி செலுத்தினாலும் தகும். இல்லாவிட்டாலும் என்.பி.பி.யின் தேசிய பட்டியல் ஊடாக இராமலிங்கம் சந்திரசேகர் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அமைச்சர் கனவு என்றால் …..,  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை  குறித்த இரகசியம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. உண்மையில் அநுரகுமார திசாநாயக்க ஆட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை என்று புகலிட ஜே.வி.பி.வட்டாரங்களில் கசிகிறது.  அதற்காகத்தான் பிரச்சாரங்களின்போது 113 அல்லது 120  பற்றி அவர்கள் பேசுகிகிறார்களாம். இந்த இலக்கில் தமிழரசு,ஈ.பி.டி.பி. போன்ற பலவீனமான கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கொண்டு நடாத்த முடியும் என்று நம்புவதாக தெரிகிறது. 

மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகார பகிர்வு, புதிய அரசியலமைப்பு போன்றவற்றை தட்டிக்கழிப்பது கஷ்டம் என்று உள்ளுக்குள் கதையடிபடுகிறது.  இன்னொரு புறத்தில் வாக்குறுதியளித்தபடி  நிறைவேற்று அதிகார முறையை. ஒழிக்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இவற்றை தவிர்ப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதே மேல் என்றும், இதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பிராந்திய, சர்வதேச அழுத்தத்தை எதிர்க்கட்சிகளின் தலையில் கட்டிவிடலாம் என்ற வியூகம் வகுக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக்கிறது.

இந்த அரசியல் வியுகத்திலேயே தென்னிலங்கையில் பலமான எதிர்த்தரப்பை தவிர்த்து பலவீனமான, நிபந்தனைகளை விதிக்க முடியாத அல்லது  அழுத்தம் தரும் சக்தியற்ற சிறுபான்மை கட்சிகளின் குறைந்த அளவான உறுப்பினர்களின் ஆதரவுடன் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியை நகர்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த அரசியலுக்கு  ஆதரவளிக்க வடக்கில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி நடக்கிறது.

சந்தர்ப்பத்திற்கு  ஏற்ப தந்திரோபாயங்களை வகுத்து பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கொள்வதும்  ஒரு மாற்றம் தானே….?

இதுதான் சுமந்திரனின்  தேர்தல் விளம்பரம் சொல்லும் அடையாளம்மாறாத மாற்றம்……!

ஆனால் போகிறபோக்கில்  தமிழின அடையாளமே  அழியப்போகிறது….!
 

https://arangamnews.com/?p=11415

தேசிய பிரச்சினைகளின் தீர்வுக்கு, அரசாங்கத்துக்கும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கூட்டுச் செயற்பாடு அவசியம்

1 week 6 days ago

image

கலாநிதி ஜெகான் பெரேரா

நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது.

பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது.

ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை.

அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது.

முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம்.

ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம்.

பிரதான பிரச்சினை

அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன.

கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம்.

ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை.

அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும். 

நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும்.

சாத்தியமான பங்காளிகள்

அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன.

நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள்.

ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள்.

அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும்.

அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம்.

https://www.virakesari.lk/article/198148

ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை

2 weeks 1 day ago

ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை 
 
ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

தங்களது தவறான ஆட்சிமுறையினதும் பொருளாதார முகாமைத்துவத்தினதும்  விளைவாக தோன்றிய முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் ராஜபக்சாக்கள் இரு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தன்னந்தனியான உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்  விக்கிரமசிங்கவிடம் ஆட்சிப்பொறுப்பைக் கையளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது  வழமையான அரசியல் போக்கில் இருந்து ஒரு விலகலாகும்.  அவ்வாறு அடிக்கடி  நடைபெறும்  என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி அண்மைய எதிர்காலத்தில் முடிவுக்கு வரப்போவதில்லை என்று நம்பும் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் கூட நாட்டை ஆட்சி செய்ய முடியாமல்போகும் பட்சத்தில் தன்னை மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்குமாறு கேட்கக்கூடும் என்ற ஒரு மாயையில் இருக்கிறார் போன்று தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு பதவியில் இருந்து இறங்கிய விக்கிரமசிங்க, புதிய ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, “நாமிருவரும் அன்பாக நேசிக்கின்ற இலங்கை என்ற குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். கடந்த இரு வருடங்களாக  ஆபத்தான கயிற்றுப் பாலத்தின் மேலாக நீண்ட தூரம் இந்த குழந்தையை பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு வந்து வந்திருக்கிறேன். என்னையும் விட கூடுதலானளவு பாதுகாப்பாக குழந்தையை பாலத்தின் ஊடாக சுமந்து அடுத்த கரைக்கு கொண்டு போய்ச் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

ஆனால், ஜனாதிபதி திசாநாயக்கவினால் அந்த குழந்தையை அடுத்த கரைக்கு பாதூகாப்பாக தூக்கிக் கொண்டு செல்ல முடியாமல் போகலாம் என்று ஒரு மாதத்துக்குள்ளாகவே  முன்னாள் ஜனாதிபதி முடிவுக்கு வந்துவிட்டார் போன்று தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் விக்கிரமசிங்க தன்னை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து அமைத்த புதிய ஜனநாயக முன்னணிக்காக  தீவிரமாக பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். தேர்தல் தோல்விகளினால் துவண்டுபோகாதவர் என்று பெயர் எடுத்த அவர் தனது நிருவாகத்தில் முக்கியமான பதவிகளை வகித்தவர்கள் பொருளாதார விவகாரங்களை கையாளுவதற்கு அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறிவருகிறார். 

அது மாத்திரமல்ல, நான்கு வருடங்களுக்கு பிறகு வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது அரச வருவாயை அதிகரிப்பதில் சமாளிக்க முடியாத சவாலை ஜனாதிபதி திசாநாயக்க எதிநோக்கப்போகிறார் என்று அபாய அறிவிப்பு செய்யும் முன்னாள் ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தனது முழு பதவிக்காலத்துக்கும் பதவியில் இருக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார். திசாநாயக்க தனது பதவியில் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கமாட்டார் என்ற எண்ணம்  விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டிருப்பதனால்தான் அவ்வாறு கூறுகிறார் என்று தோன்றுகிறது.

ஆட்சிமுறை அனுபவம் இல்லாத  தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வேண்டுமானால் அரசாங்க நிருவாகம் மற்றும் பொருளாதார விவகாரஙகளில் தன்னிடம்  ஆலோசனைகளைப் பெறலாம் என்ற தோரணையில் விக்கிரமசிங்க அடிக்கடி கருத்துக்களை வெளியிடுகிறார். 

அரசாங்க ஊழியர்களுக்கு  சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தனது அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கிய போது உகந்த  நடைமுறைகள் கடைப் பிடிக்கப்படவில்லை என்று புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த விக்கிரமசிங்க வேண்டுமானால் அவருக்கு அரசியலமைப்பை கற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால், 17 தடவைகள் மக்களினால் நிராகரிக்கப்படட அவரிடமிருந்து ஒருபோதும் ஆலோசைகைளைப் பெறப்போவதில்லை என்று பிரதமர் அவமதிப்பாக பதிலளித்திருக்கிறார்.

அதேவேளை, தன்னால் நாட்டை ஆட்சிசெய்ய முடியாமல்போகும் என்று நினைத்தால் இரு வருடங்களில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிவிடப்போவதாக திசாநாயக்க எங்கோ கூறியதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள், தேவை ஏற்படுமானால் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருப்பது அவசியம் என்று கூறி  தங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் பயணிக்கும் பாதையை நோக்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து நாளடைவில் அதிகாரத்தைக்  கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்று விக்கிரமசிங்கவும் கடந்த வாரம் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில்  கூறினார். 

தங்களுக்கு அமோகமாக வாக்களித்து அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆணையைத் தருமாறுதான்  எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் மக்களை கேட்பது உலக வழமை. ஆனால் இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு தங்களை தெரிவு செய்யுமாறு கேட்கும் ஒரு விசித்திரமான போக்கை  காண்கிறோம். 

விக்கிரமசிங்கவை மீண்டும் தீவிர அரசியலுக்கு கொண்டு வருவது குறித்து எந்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியை நடத்தமுடியாமல்போகும் பட்சத்தில் விக்கிரமசிங்கவின் சேவையை மக்கள் விரும்பக்கூடும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினருமான ருவான் விஜேவர்தன கடந்த வாரம் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். 

பொருளாதார முனையில் பெரும் நெருக்கடியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்நோக்குகிறது என்று குறிப்பிட்ட விஜேவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்குமாறு விக்கிரமசிங்கவை  மக்கள் கேட்கக்கூடும் என்றும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவும் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால் மக்கள் விக்கிரமசிங்கவை நோக்கி திரும்பக்கூடும் என்று கடந்தவாரம் கொழும்பில் செய்தியாளர்கள் மக்நாட்டில் கூறினார். புதிய ஜனநாயக முன்னணி கண்டியில் நடத்திய மக்கள் சந்திப்பு ஒன்றில் “எழுதிவைத்துக் கொள்ளுங்கள் இன்னூம் ஆறு மாதங்களில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவார்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரான  அநுராத ஜெயரத்ன கூறினார்.

பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது எந்த அரசாங்கமும் பதவி விலகி ஆட்சிப் பொறுப்பை உடடினயாகவே  ஒப்படைக்கக்கூடிய ஒருவராக  இவர்கள் எல்லோரும் விக்கிரமசிங்கவை காட்சிப்படுத்தி தங்களுக்கு வாக்கு கேட்கும் புதுமையான ஒரு நிலைவரத்தை காண்கிறோம்.

புதிய பாராளுமன்றத்தில் “விளையாட்டைக் காட்டுவதற்கு” தங்களுக்கு நாற்பது  ஆசனங்கள்  மாத்திரமே தேவை என்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு தேவை ஏற்படுமேயானால் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதே தங்களது நோக்கம் என்றும் புதிய ஜனநாயக முன்னணியின்  சில அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளில் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

ராஜபக்சாக்கள் விக்கிரமசிங்கவிடம் ஆட்சிப்பொறுப்பை கையளித்த ஒரு அரிதான  அரசியல் நிகழ்வை வைத்துக்கொண்டு மீண்டும் அவ்வாறு இடம்பெற முடியும் என்ற கற்பனையில் தங்களது அரசியல் வியூகங்களை இந்த அரசியல்வாதிகள் அப்பாவித்தனமாக வகுக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியினால் ஐந்து வருடங்களுக்கு முழுமையாக ஆட்சி செய்ய முடியாது என்ற தங்களது மனதுக்கு பிடித்த விருப்பத்தின் அடிப்படையில் மாத்திரம் இவர்கள் சிந்தனையை பறக்கவிட்டிருக்கிறார்கள். 

 பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் அரசியலுக்கு புதியவர்கள் என்பதால் நாடு எதிர்நோக்கும் பாரதூரமான  பொருளாதாரப் பிரச்சினையை கையாளுவதற்கு அனுபவமுடையவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு மக்களை கேட்கும் இந்த எதிரணி அரசியல்வாதிகள்  கடந்த காலத்தில் தவறான முறையில் ஆட்சி நடத்திய ஜனாதிபதிகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டாம் என்று மக்களை கேட்கின்ற அதேவேளை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் பாராளுமன்றத்தை தங்களது கட்சியின் பிரதிநிதிகளினால் நிரப்புமாறு அறைகூவல் விடுக்கிறார்கள். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியே தேவையில்லை என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு தினமான நவம்பர் 14 ஆம் திகதியை புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை துப்புரவு செய்யும் சிரமதான தினம் என்று ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதி  கூறுகிறார். எதிர்க்கட்சியே தேவையில்லை என்ற அவரின் கருத்து உண்மையில் ஜனநாயக விரோதமானது. 

ஆனால் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் திசாநாயக்கவின் ஒரு மாத கால நிருவாகத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையைக் கொண்டுவரப்போவதாககூட உதய கம்மன்பில் கூறுகிறார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு கொடுப்பது ஆபத்தானது என்று மக்களை அவர்கள் எச்சரிக்கிறார்கள். 

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் எவ்வாறு அமையலாம் என்று மதிப்பிடு செய்யும் எதிரணி  அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை  ஆசனங்களை கைப்பற்றுவது சாத்தியமில்லை என்றும் ஒரு ‘ தொங்கு ‘ பாராளுமன்றமே தெரிவாகும் என்றும்  கூறுகிறார்கள். அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கும் ஏனைய கட்சிகள் சகலதிற்கும் தலா 15 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றதை தங்களது வாதத்திற்கு சான்றாக அவர்கள் முன்வைக்கிறார்கள். 

ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு  பலம்பொருந்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஆணை தருமாறு ஜனாதிபதி திசாநாயக்க மக்களை கேட்கிறார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பெருமளவில் ஆதரவை வழங்குவதே இதுகாலவரையான அரசியல் போக்காக இருந்து வந்திருக்கிறது. 

இந்த தடவையும்  அதுவும் குறிப்பாக பழைய பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரித்து திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்கள் அந்த போக்கில் இருந்து மாறுபடுவதற்கு வாய்ப்பில்லை. என்றே தோன்றுகிறது. புதிய ஜனாதிபதி தனது நிலையை வலுப்படுத்தி ஆட்சியை தொடருவதற்கு மக்கள் வாய்ப்பைக் கொடுப்பார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திசாநாயக்கவின் அரசாங்கம் நின்று பிடிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று அபாயச்சங்கு ஊதிக் கொண்டிருக்கிறாகள். அவர் தற்போது அமைத்திருப்பது மூன்று அமைச்சர்களைக்  கொண்ட ஒரு இடைக்கால அல்லது காபந்து அரசாங்கமேயாகும். அதுவே உலகில் மிகவும் சிறிய அமைச்சரவையாகும். அவரைப் போன்று பதவிக்கு வந்த ஒரு மாதகாலத்திற்குள் பெருமளவுக்கு எதிர்மறையான விமர்சனங்களுக்கும் அரசியல் நெருக்குதல்களுக்கும்  முகங்கொடுத்த அனுபவம் வேறு எந்த முன்னாள் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டதில்லை.

பொருட்களை பெறுவதற்கு மக்கள் நீண்டவரிசைகளில் காத்துநிற்கும் யுகம் மீண்டும் விரைவில் தோன்றப் போகிறது என்றும் இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதற்கு தீட்டப்பட்டதாக கூறப்படும் திட்டம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படப்போகிறது என்றும் பூச்சாண்டி காட்டும் வேலைகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியிருக்கின்றன.

தனது அரசாங்கம் பலவீனமானதாக இருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தேர்தல் பிரசாரங்களில் பதிலளிக்கும் ஜனாதிபதி திசாநாயக்க ஒரு சில நிறுவனங்களில் மாத்திரமே தாங்கள் இதுவரையில் அதிகாரத்தை உறுதிப் படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார்.

” ஜனாதிபதி பதவி, அமைச்சரவை, பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள்  போன்ற பல்வேறு நிறுவனங்களில் உறுதியான அதிகாரம் உறுதிப்படுத்தப்படும் போதுதான் அரசியல் அதிகாரம் நிலை நிறுத்தப்படும். தற்போது ஜனாதிபதியுடன் மிகவும் சிறிய அமைச்சரவையே இருக்கிறது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது. மாகாணசபைகள் பல வருடங்களாக இயங்கவில்லை. நாம் பதவிக்கு வந்து ஒரு மாதத்துக்கும் சற்று கூடுதலான காலமே கடந்திருக்கிறது. சில ஊடக நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் எம்மிடம் பலம்பொருந்திய அரசியல் அதிகாரம் இல்லாத நிலையில் நாட்டில் உறுதிப்பாடின்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் ”  என்று அவர் குற்றஞ் சாட்டியிருக்கிறார்.

  ஜனாதிபதியையும் தேசிய மக்கள் சக்தியையும் தாக்குவதற்கு பொருளாதாரப் நெருக்கடி, விலைவாசி உயர்வு, அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,  ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல்  போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. ஆனால்,  இந்த பிரச்சினைகள் உருவாகுவதற்கு  தேசிய மக்கள் சக்தி அல்ல ஜனாதிபதியை குற்றஞ் சாட்டுகிறவர்களே பெருமளவுக்கு பொறுப்பாக  இருந்திருக்கிறார்கள்.

புதிய ஜனாதிபதி தனது நிலையை வலுப்படுத்தி அதிகாரத்தில் ஒழுங்காக அமருவதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராக தீவிரப்படுத்தப்படும் பிரசாரங்கள் சாமானியன் ஒருவன் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதை பழைய அரசியல் அதிகார வர்க்கத்தினால்  ஜீரணிக்க முடியவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. ஆட்சிமுறை அனுபவக் குறைவு பற்றிய விமர்சனங்கள் எல்லாம் இதன் பிரதிபலிப்பேயாகும்.

தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அதிகாரப்பரவலாக்கம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அந்த கட்சி உறுதியான ஒரு அரசாங்கத்தை அமைக்க அனுமதித்து திசாநாயக்கவின் தலைமையில் அது நாட்டை நிருவகிப்பதற்கு ஒரு கணிசமான கால அவகாசத்தை  வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பிறகு  அவர்களது ஆட்சி பற்றிய விமர்சனங்களை  செய்வதே முறையானதாகும்.  

பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்துக்கு சேவை செய்த  பழைய அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு முறைமை மாற்றத்தை அல்லது ஊழலற்ற நிருவாகத்தை நடத்துவதில் உள்ள அடிப்படைச் சிக்கல்களை குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி திசாநாயக்க நன்றாக விளங்கிக் கொண்டிருப்பார். எது எவ்வாறிருந்தாலும்,  நடைமுறைச் சாத்தியமற்ற பெருவாரியான  வாக்குறுதிகளை வழங்கிய அவர் அதன் விளைவான நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கவேண்டியே இருக்கும் என்பது நிச்சயம். பாராளுமன்றத்தில் ஒரு கணிசமான ஆசனங்களைப் பெற்று அவருக்கு நெருக்குதல்களை கொடுத்து ஆட்சி செய்யவிடாமல் குழப்பியடிப்பதற்கே எதிர்க்கட்சிகள் நோக்கம் கொண்டிருக்கின்றன எனபதை அவற்றின்  தற்போதைய அணுகுமுறைகள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன.

(ஈழநாடு )
 

 

https://arangamnews.com/?p=11405

தமிழ் மக்களின் தீர்வு முயற்சியில் புதிய ஆட்சியாளர்களின் போக்கு ஏற்படுத்தப்போகும் தாக்கம்

2 weeks 1 day ago

நடராஜ ஜனகன்

பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் கட்சியில்  எதிர்பார்ப்புகளையும் எதிரணியின் விமர்சனங்களையும் மேற்படி தேர்தல் முடிவுகள் தீர்மானம் செலுத்தும் பிரதான காரணியாக அமையப்போகிறது.

நடந்து முடிந்துள்ள எம்பிலிப்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பெரிய அளவில் சாதகமான கருத்துக்கணிப்பை வழங்கவில்லை. 48 விகிதத்திற்கும் குறைவான வாக்குகளையே அரசாங்கம் மேற்படி தேர்தலில் பெற்றிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 58 விகிதமான மக்கள் புதிய ஜனாதிபதிக்கு எதிராகவே தமது வாக்குகளை பதிவு செய்திருக்கும் நிலையில் எம்பிலிபிட்டிய தேர்தல் முடிவும் நம்பிக்கை தரும் முடிவாக அமையவில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட இருந்த வேதன உயர்வு தொடர்பான விடயத்தில் ஆட்சியாளர் பின்னடித்தமை எதிரணியினரின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் அமர்வதற்கு ஜனாதிபதி தேர்தலில் அரச ஊழியர்களின் வாக்குகள் பெரிய அளவில் உறுதுணையாக அமைந்திருந்தது. தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அரச ஊழியருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேதன மறுபரிசீலனை செய்யப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்த நிலையில் அந்த வாக்குறுதியானது தற்போது முற்றாகவே கரைந்து போன நிலை காணப்படுகிறது.

புதிய ஆட்சியாளர்களை தொழிற்சங்க தலைமைகள், மாணவ அமைப்புகள், சிவில் அமைப்புகளின் பிரதானிகள் அடுத்த வரவு – செலவு திட்டம் வரை பொறுமை காத்து நிற்கின்றனர். முன்னைய ஆட்சியின் போது தமக்கான கோரிக்கைகளை முன்வைத்து தினம் தினம் போராட்டங்களை முன்னெடுத்து வந்த இவர்கள் தற்போது கருத்துக்கள் எதனையும் பதிவு செய்யாமல் பொறுமை காத்து வருகின்றனர். ஆனாலும் புகையிரத சேவை அதிபர்கள் சங்கத்தினர் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கும் நிலை தோற்றம் பெற்றிருக்கிறது. எனவே நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினர் போதியளவு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது.

இதேநேரம் மக்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைச் செலவு சுமையை குறைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான வேதன உயர்வுகள் வழங்கப்பட்டே ஆக வேண்டும். இவற்றுக்கான நிதி வருமானத்தை எப்படி பெற போகின்றார்கள் என்பது கேள்விக்குறியே. ஏற்கனவே பணத்தை அச்சடித்துள்ளார்கள், கடன்களைப் பெற்றுள்ளார்கள் என்ற விமர்சனங்கள் மேல் வந்திருக்கும் நிலையில், புதிய அரசாங்கத்தின் நிதியீட்டல் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது ஆய்வு அறிக்கை முழுமை பெற்ற பின்னரே நான்காம் கட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அந்த விடயம் இன்னமும் முற்றுப் பெறாத நிலையே காணப்படுகிறது.

புதிய ஆட்சியாளர் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக உறவு முறையில் சிக்கல்கள் வராமல் பார்த்துக் கொண்டாலும் ஈரான், மியன்மார், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்புகளை பேணுவதிலும் ஆர்வத்தை காட்டுவதால் சிக்கல் நிலைகள் உருவாகலாம்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலிருந்த ஆட்சியில் ரணிலின் நகர்வுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளாது. ஏன் என்றால் ரணில் விக்ரமசிங்க தமது பிரதானி என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் தேசிய மக்களின் சக்தி நிலை அதுவல்ல. பூகோள அரசியல் முகாம் இரண்டு அணியாக பிரிந்து நிற்கின்ற இந்தக் காலகட்டத்தில் அதிக பொருளாதார சவால்களை கொண்டிருக்கும் சின்னஞ்சிறிய தேசமான இலங்கை ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டிய நிலையில் காணப்படுகிறது.

தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருந்த நம்பிக்கைகள் தகரத் தொடங்கியுள்ளது. பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டு வரும் முன்னுரிமை கூடியிருக்கின்றதே தவிர குறையும் நிலை தென்படவில்லை. அவர்களது பிரச்சார மேடைகளில் கூட பௌத்த துறவிகளின் அதிக பிரசன்னத்தை காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர்களில் பிரதானமானவரான ரில்வின் சில்வா வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. மேலும் புதிய ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் வெளிப்படுத்தியிருக்கும் நிலைப்பாடுகள் நம்பிக்கை எதனையும் வழங்காத நிலையே ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட மாட்டாது என்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அறிவிப்பு அவர்கள் மீதிருந்த சொற்ப நம்பிக்கையையும் துடைத்தெறிந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இவர்களின் ஆட்சியில் கூட மண்டதீவில் தனியார் காணியை அரசு தரப்பினர் தமதாக்க அளவீடு செய்யும் முயற்சிகளை மேற்கொண்டபோது தமிழ் அரசியல் பிரதானிகளும் மக்களும் தெரிவித்த கடும் எதிர்ப்பால் மேற்படி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே புதிய ஆட்சியில் நில விடுவிப்புக்கு தயாரில்லை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை.காணாமல் போனோருகு பதிலில்லை இத்தகைய சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் எட்டாக்கனியாகவே மாறியுள்ளது.

இத்தகைய சவால் மிக்க தருணத்தில் ஒன்றிணைந்த செயற்பாட்டை நோக்கி தமிழர் தேசம் நகராமல் வெறும் பாராளுமன்ற ஆசனங்களை பெற அந்த முறைமையில் உள்ள வரப்பிரசாதங்களை அனுபவிக்க நூற்றுக்கணக்கானவர்கள் களத்தில் நிற்கின்றனர். இதற்காக ஊடகங்களில் இலட்சக்கணக்கில் செலவுகளை செய்து விளம்பரங்களை வெளிப்படுத்தி தமது வெற்றியை பெற பகிரத பிரயத்தனங்களை செய்து வருகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போரில் அனைத்தையும் இழந்த மக்கள் போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும் எதனையும் பெற்றுக்கொள்ளாத வடக்கு கிழக்கு மக்களின் துயரத்தை துடைக்க எத்தகைய வழி வகைகளையும் செய்ய முன்வராத இவர்கள் வடக்கு, கிழக்கில் உள்ள 20 பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்காக எண்ணற்றவர்கள் களத்தில் நிற்பது வேதனை தரும் நிலையாகும். தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் தலைமறைவாகிவிடுவார்கள் என்பது மட்டும் உண்மை நிலையாகும்.

https://thinakkural.lk/article/311585

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்; சர்வதேசம் எப்படி பார்க்கிறது?

2 weeks 2 days ago

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

missing-person.jpg

“பழைய குருடி கதவை திறவடி” என்ற பழமொழியை யாவரும் அறிந்திருப்பீர்களென நம்புகிறேன். நாங்கள் யாவரும் நினைப்பதற்கு மாறானதே இந்த பழமொழியின் பொருள். ஆனால், நாங்கள் யாவரும் நினைக்கும் பொருளின் அடிப்படையில் பார்ப்போமானால், வடக்கு , கிழக்கில்  மட்டுமல்ல, வேறு பிரதேசங்கள் உட்பட நடந்தேறிய “காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற விடயம் மிகவும் பரிதாபத்திற்குரியது.

இப்படியாக சொல்வதற்கு யதார்த்தமான காரணங்கள் பல உண்டு. பிரான்ஸ் “தமிழர் மனித உரிமைகள் மையம் –  TCHR என்பது யாரால்? எதற்காக? 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பது ஒரு புறமிருக்க, இவ் அமைப்பு அன்றிலிருந்து மேற்கொண்ட செயற்பாடுகளினால், இலங்கைக்கு எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டது என்பதை, ஐ.நா.மனித உரிமை அறிக்கைகளை 2002ம் ஆண்டு வரை, பார்க்கும் மனித உரிமை விடயங்களில் பரீட்சார்த்தம் கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும்.

2002ம் ஆண்டின் பின்னர், வடக்கு, கிழக்கிற்கு சென்று அவ்விடத்து நிலைமைகளை பார்த்து அறிக்கைகளை சர்வதேசத்திற்கு கொடுக்கக்கூடிய காலமாகையால், எமது செயற்பாட்டில், “உண்மைகளை அறியும்” (Fact finding missions) தேவைகள் அவ்வேளையில் காணப்பட்ட காரணத்தினால், இந்த அமைப்பின் வேலை திட்டங்கள் எமது முன்னோடிகளின் வேண்டுகோளிற்கு அமைய மாற்றப்பட்டது.

எது என்னவானாலும், மனித உரிமை செயற்பாட்டாளர் என தம்மை மார்பு தட்டும் ஒவ்வொருவரும், தாம் உண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களா என்பதை அறிந்து பணியாற்ற வேண்டும்.யாவரும் முதலில் அறிய வேண்டிய விடயம், மனித உரிமை என்றால் என்ன?
மனித உரிமைகள் என்றால் என்ன? மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசியம், இனம், மொழி, மதம் அல்லது வேறு எந்த அந்தஸ்தையும் பொருட்படுத்தாமல் அனைத்து மனிதர்களுக்கும் உள்ளார்ந்த உரிமைகள். இவற்றுடன் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், அடிமைத்தனம் மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை. தொடர்ந்து கருத்துச் சுதந்திரம், வேலை, கல்விக்கான உரிமை போன்று பல விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

அடுத்து காணாமல் போதல், காணாமல் ஆக்கப்பட்டோர் என்பதையும் ஆராய வேண்டும்.

காணாமல் போதல் என்பது – ஒரு நபர் அல்லது பொருளைப் பார்க்கவோ அல்லது கண்டுபிடிக்கவோ முடியாத நிலை. மறைவது என்பது ஆவியாகுவது அல்லது மங்குவது. மறைந்துவிடும் என்ற சொல். அதாவது மறைவது என்பது தோன்றுவதற்கு நேர்மாறாகச் செய்வது.
 காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

வலிந்து கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பவர்கள், அவர்களின் குடும்பத்தவர், உறவுக்காரர், நெருங்கியவர்கள் போன்றவர்களிலிருந்து அல்லது தெரு, வியாபார நிலையங்கள் அல்லது அவர்களது வீடுகளில் இருந்து, பலவந்தமாக பிடித்து, பின்னர் அதை மறுக்கும்போது அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கூற மறுத்தல் நிலையில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற நிலையில் கணிக்கப்படுவார்கள்.

உலகில் எந்த மூலை, எந்த நாடு, எந்த பிராந்தியத்தில், எந்த யுத்த களத்தில் இப்படியாக ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட நபர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலுடன், காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுபவர்கள், அணுக வேண்டிய இடம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்தில் – (ஐ.நா.ம.உ.ஆ.கா.)  உள்ள, ஐ.நா.  கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது தன்னிச்சையாக காணாமல் போனவர்கள் பற்றிய பணிக்குழுவாகும் – (ஐ.நா. க.த.கா.ப.)

இதை ஆங்கிலத்தில் UN Working Group on Enforced or Involuntary Disappearances – UN WGEID கூறுவார்கள். யுத்தகாலமாக காணப்பட்டால், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், நண்பர்கள், அங்கு பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (Red Cross) மூலமாகவும் இவற்றை செய்திருக்க முடியும்.

வடக்கு, கிழக்கு வாழ் மக்களை பொறுத்தவரையில், காணாமல் ஆக்கப்பட்டோர் என்பது ஓர் மாபெரும் சர்ச்சையாக காணப்படுகிறது. இந்த அடிப்படையில், வடக்கு, கிழக்கு வாழ் மக்களில் தமது உறவினர்கள், நண்பர்கள் எப்படியாக தாம் தேடும் உறவுகள் பற்றிய விபரங்களை, ஐ.நா. க.த.கா.ப. பிரிவிற்கு எப்படியாக அனுப்ப முடியும் என்பதை முன்பும்  த.ம.உ.மை.ஆகிய நாம் கூறியிருந்தாலும், மீண்டும் இங்கு ஒரு தடவை கூற விரும்புகிறோம்.

 காணாமல் போனோர் பற்றிய  விடயங்களை

காணாமல் போனவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்பாக செயல்படும் அமைப்புகள் (உறவினர்களின் முன் அனுமதியுடன்) காணாமல் போனோர் பற்றிய விடயங்களை ஐ.நா. க.த.கா.ப. சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஐ.நா. க.த.கா.ப.விடம் காணாமல் போனவர் அல்லது போனோர் பற்றி யார் அறிவிக்க முன்வருகிறார்களோ, அவர்களுடனான  தொடர்பை  ஐ.நா.க.த.கா.ப. பேணுவதற்கு, விசேடமாக மேலும் தகவல் அல்லது தெளிவுபடுத்தலுக்கான கோரிக்கைகளுக்காக நிச்சயம் தொடர்பு கொள்வார்கள். ஐ.நா.க.த.கா.ப. அவசர நடைமுறையின் கீழ், சம்பந்தப்பட்ட நாட்டின் வெளியுறவு அமைச்சிற்கு (சில நாட்களுக்குள்) அந்த நாட்டின் ஐ.நா. அலுவலகத்தின் நிரந்தர பிரதிநிதி மூலம் அனுப்புகிறது.

உலகின் எந்த நாட்டிலிருந்தும் காணாமல் போவோர் பற்றி அனுப்பும் தகவல்களை, இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த  பணிக்குழு, சிறப்பாகச் செயல்படுத்துவதில் சிவில் சமூக அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றி தகவல்களை ஐ.நா. க.த.கா.ப.. விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான பிரகடனத்தின் விதிகளை மீறுவது தொடர்பான பொதுவான குற்றச்சாட்டுகளையும், ஐ.நா. க.த.கா.ப. செயற்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில், ஐ.நா.க.த.கா.ப. உறவினர்களுக்கு இடையேயான சந்திப்புகளை ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.

ஐ.நா. க.த.கா.ப. காணாமல் போனவர் அல்லது போனவர்கள் பற்றிய விடயங்களை சமர்ப்பிக்கும் பொழுது பின்வரும் தகவல்கள் எப்போதும் அனுப்பப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்:

(1 பாதிக்கப்பட்டவரின் முழு பெயர்; (2) காணாமல் போன நாள், மாதம் மற்றும் ஆண்டு (3) காணாமல் போன இடம்; (4) அரசு அல்லது அவர்களது படைகள், ஓட்டு குழுக்களின் ஆதரவு பொறுப்பாக கருதப்படுகின்றனவா? (5) குறிப்பிட்ட நபர் அல்லது நபர்கள் பற்றிய  தகவல், மற்றும் தகவல் தொடர்புகளை சமர்ப்பிக்கும் நபரின் – பெயர், தொடர்பு விவரங்கள் ஆகியவை முக்கியமாக கொடுக்கப்பட்டு, உலகில் எந்த நாட்டிலிருந்தும் கீழ் கொடுக்கப்பட்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சல்: hrc-wg-eid@un.org
முகவரி:     Working Group on Enforced or Involuntary Disappearances – WGEID
                Office of the High Commissioner for Human Rights – OHCHR
 Palais des Nations,
                8-14 Avenue de la Paix
CH-1211 Geneva 10, Switzerland             my;yJ
 
General inquiries: njhiyNgrp   +41 22 917 9220
மின்னஞ்சல்:  ohchr-InfoDesk@un.org
Working Group on Enforced or Involuntary Disappearances – WGEID,
Palais Wilson – Rue des Pâquis 52,
 1202 Genève
Switzeland
 
  ஐ.நா. க.த.கா.ப. இலங்கைக்கு இன்றுவரையில் நான்கு தடவை நேரடியாக விஜயம் செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.1991, 1992, 1999, மற்றும் 9-18 நவம்பர் 2015 வரை சென்றுள்ளார்கள். த.ம.உ.மை., தமிழர்களின் மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க் குற்றம் ஆகிய விடயங்களை அன்றிலிருந்து மிகவும் அவதானமாகவும், யதார்த்தமாக வேலை செய்துள்ளார்கள் என்பதை காண்பிப்பதற்கு இங்கு சில விடயங்களை முன்வைப்பது மிக மிக அவசியம்.

தமிழர் மனித உரிமைகள் மையம்

1992ம் ஆண்டு முதல் வடக்கு, கிழக்கில் – கைது, சித்திரவதை, படுகொலை, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்றோர் பற்றிய தகவல்கள், சத்திய கடதாசிகள் கிடைக்கப் பெற்றதும் அவற்றை ஐ.நா.விதி முறைகளுக்கு ஏற்ற வகையில், ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் காரியாலயத்தில் வேறுபட்ட பிரிவினருக்கு அனுப்பப்பட்டு அவர்களிடம் பதில் கிடைத்த பின்னர், நாம் இவற்றை எமது அறிக்கையாக ஐ.நா.மனித உரிமை கூட்டங்களில் கொடுத்து வந்துள்ளதுடன், எமது இணைய தளமான TCHR.NET ல் பிரசுரித்தும் உள்ளோம்.

இவற்றை இன்றும் பார்வையிடலாம் என்பதை நாம் பல முறை கூறியுள்ளோம். முக்கிய குறிப்பு என்னவெனில், இவை யாவும் ஆங்கிலத்தில் உள்ள காரணத்தினால் இவற்றை புரிந்து கொள்ளும் தன்மை சில தமிழர்களுக்கு புரியாது என்பது கவலைக்குரிய விடயம். இந்த அடிப்படையில், சிறிலங்கா உலகத்தில் இரண்டாவது நாடாக 1997ம் ஆண்டு ஐ.நா. க.த.கா.ப. அறிவித்துள்ளதை நாம் காண முடிகிறது. இவற்றிற்கு ஐ.நா.க.த.கா.ப. முன்னைய அறிக்கைகளின் சில பகுதிகளை இங்கு காண்பிப்பது சிறந்தது என நம்புகிறோம். (உதாரணத்துக்கு)

341. மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில், செயற்குழு இலங்கை அரசாங்கத்திற்கு 695 காணாமல் போன சம்பவங்களை அனுப்பியுள்ளது, அவற்றில் 77, 1997 இல் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. ஒன்பது பேர் அவசர நடவடிக்கை நடைமுறையின் கீழ் அனுப்பப்பட்டனர்.

345. புதிதாகப் பதிவு செய்யப்பட்ட விபரங்களில் பெரும்பாலானவை, 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அடிக்கடி நிகழ்ந்தன.1995 இல் மீண்டும் போர் தொடங்கியதைத் தொடர்ந்து இலங்கையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழ் இளைஞர்கள்.அவர்களில் பலர் ஏழை விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் அல்லது திருகோணமலையைச் சேர்ந்த மாணவர்கள்.

1980 மற்றும் 1997 க்கு இடையில்  ஐ.நா. க.த.கா.ப.  இல் விருப்பமின்றி காணாமல் போன புள்ளி விபரங்கள் :

இலங்கை- மொத்தம் 12, 208, பெண்கள் 147; நிலுவையில் உள்ள வழக்குகள் 12, 144; தெளிவுபடுத்தல்கள்; இலங்கை  30 அரச சார்பற்ற அமைப்பு 34; விடுவிக்கப்பட்டோர்  31, தடுப்புக்காவலில் 17, இறந்தவர்; 16

(இலங்கை பற்றிய ஐ.நா. க.த.கா.ப. அறிக்கையின் பகுதிகள்- E/CN.4/1998/43 12 ஜனவரி 1998)
(ஐ.நா. க.த.கா.ப.  1997 இலிருந்து ஒரு பகுதி )

1996 ல் ஐ.நா. க.த.கா.ப.  இல் விருப்பமின்றி காணாமல் போன விபரங்கள்

இலங்கை-மொத்தம் 11, 513- பெண்கள் 127; நிலுவையில் உள்ள வழக்குகள் 11 449; தெளிவுபடுத்தல்கள்; சிறிலங்கா 30 இன் தெளிவுபடுத்தல்கள்; அரச சார்பற்ற அமைப்பு 34 இன் தெளிவுபடுத்தல்கள்; விடுவிக்கப்பட்டோர் 31, தடுப்புக்காவல் 17; இறப்பு 16.

324. மேலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணாமல் போன 23, 000 நபர்களின் தலைவிதியை தற்போது ஆராய்வதாகக் கூறப்படும் விசாரணை ஆணைக்குழுக்களின் ஆணையின் காலப்பகுதியில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.(WGIED 1996 – E/CN.4/1997/34 13 டிசம்பர் 1996 இலிருந்து பகுதிகள்)

சிறிலங்காவிற்கான பொறுப்புக்கூறல் திட்டம் – OSLap

அடுத்து, இலங்கை மீதான அண்மைக்கால ஐ.நா. மனித உரிமை சபையின் – ஐ.நா.ம.உ.ச. தீர்மானங்கள் 46/1 மற்றும் 51/1 ன் அமைய, ஐ.நா.வின் பாரிய நீதியில் உதயமான செயற்திட்டம் என்பது சிறிலங்கா மீதான பொறுப்புக் கூறல் செயல்பாடுகள் ஐ.நா.வினால் வழி வகுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சிலர் அறியாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. சிறிலங்காவின் சர்வதேச சட்டங்களை மீறிய, தமிழீழ விடுதலை புலிகள் மீதான யுத்தம் என்பதற்கு அப்பால், ஒத்து மொத்தமாக தமிழீழ மக்களையும் தொடர்ச்சியான இன அழிப்பிற்கு ஆக்கப்பட்டு யாவரையும், இன அழிப்பு செய்யும் நோக்குடன், 2005ம் ஆண்டு முதல் ஈழத்தமிழர்கள் மீது ராஜபக்ச குடும்பம் என்பதற்கு மேலாக, சிங்கள – பௌத்த ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு யுத்தம்.

இந்த யுத்தத்தில் எந்தவித சர்வதேச சட்டங்கள், மனிதபிமான சட்டங்கள் என்பவை அறவே மதிக்கப்படாமல், இந்தியாவின் ஆட்சியாளரான காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், தற்போதைய சிறிலங்காவின் ஜனாதிபதியும் அவரது கட்சியான ஜே.வி.பி. இவை யாவற்றிற்கும் உடந்தையாக பயணித்தார்கள் என்பதை அவர்களால் அறவே மறுக்க முடியாது.

சிறிலங்கா மீதான பொறுப்புக் கூறல் செயல்பாடுகள் – சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் ஆகியவற்றின் மொத்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை முன்னெடுக்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும், மனித உரிமைகளுக்கான ஐ.நா.ம.உ.ஆ.கா.அலுவலகத்தின்  அதிகாரத்திற்கு உட்பட்டு சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டம் (OSLap) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களின் செயல் திட்டங்கள்: சிறிலங்காவில், விசேடமாக வடக்கு, கிழக்கில் -மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பாதுகாத்தல், மற்றும் பகுப்பாய்வு செய்தல்; மொத்த மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான உத்திகளை உருவாக்குதல்; தகுதிவாய்ந்த அதிகார வரம்பில் உறுப்பு நாடுகள் உட்பட தொடர்புடைய நீதித்துறை மற்றும் பிற நடவடிக்கைகளை ஆதரித்தல்; மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதிடுகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் என்பவற்றின் முக்கியத்துவத்தினை அங்கீகரித்துள்ளதுடன், அதற்கான பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் நோக்கில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆற்றலினை வலுப்படுத்தி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

பொறுப்புக்கூறல் திட்டத்தினூடாக இலங்கையில் சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் என்பவை தொடர்பான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் ஆணைக்குட்பட்டுள்ளது.

தயக்கமின்றி சாட்சியங்களை பதியுங்கள்

இவர்களின் பொறுப்புக்கூறல் திட்டமானது – சாட்சி நேர்காணல்கள், வாக்குமூலங்கள், சாட்சியங்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் உட்பட, அதன் வசம் உள்ள தகவல் மற்றும் ஆதாரங்களை, பொருந்தக்கூடிய முறைகளில் தேசிய, பிராந்திய அல்லது சர்வதேச மட்டத்திற்கமைவான தரத்திலும், அதன் சிறந்த அணுகல் முறையிலும், இசைவான மற்றும் எதிர்காலத்தில் பயன்படுத்துவதை உறுதிசெய்யும் நோக்கில் அமைந்த பொருத்தமான கட்டமைப்புடனும் ஒழுங்கமைக்கிறார்கள்.

இந்த அமைப்பிற்கு சிறிலங்கா விடயங்களில், தம்மிடம் பலவிதப்பட்ட நேரில் கண்ட சாட்சியங்கள், சாட்சியங்கள் உள்ளதாக எண்ணும் யாவரும், எந்த நாட்டிலிருந்தும் இவர்களை தொடர்பு கொண்டு தமது சாட்சியங்களை வழங்க முடியும். ஆகையால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள், போர் குற்றம், இன அழிப்பு என கூறும் யாவரும் இந்த அமைப்பை தொடர்பு கொண்டு தமது சாட்சியங்களை கொடுப்பதற்கு முன்வர வேண்டும்.

புலம் பெயர் தேசங்களில் வாழும்  பலர், தமக்கு அது பற்றி தெரியும், இது பற்றி தெரியும் என கூறும் விடயங்களை, இவ் அமைப்பிடம் பதிவு செய்ய முடியும்.

புலம் பெயர் தேசத்தில் நாம் தொடர்பு கொண்ட சிலர், எமது குடும்பம் ஊரில் உள்ளது, எமது மனைவி பிள்ளைகள் உள்ளனர்,  எமது தகப்பன் தாய் அங்குள்ளனர் , அங்கு அவர்கள் இலங்கையின் புலனாய்வால் துன்புறுத்தப்படுவார்கள் என எம்மிடையே கூறுவதற்கு மேலாக, இவர்களிடம் தயக்கமின்றி  கூறினால், இவர்கள் அவர்களையும் பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்வார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகையால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விலாசத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் சாட்சியங்களை  பதிவு செய்ய முடியும்.
OHCHR Sri Lanka accountability project – OSlap
UN High Commissioner for Human Rights
Palais des Nations
CH-1211 Geneva 10
Switzerland 
Email: ohchr-slaccountability@un.org
General inquiries: njhiyNgrp   +41 22 917 9220
இப்படியான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தவிர்த்து,ஜெனீவாவிற்கு போகிறோமென பத்தாயிரம் மைல்களிற்கு அப்பாலிருந்து, பல தடவை வந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வில், ஒன்றரை நிமிட உரை,பத்து பார்வையாளருடன் பக்க கூட்டங்களில் உரையாற்றுவது, காணமல் போனோருக்கான நீதியை தேடும் செயற்திட்டங்கள் அல்ல.பதினைந்து வருடங்களாகியும் சர்வதேச மட்டத்தில் வடக்கில், கிழக்கில் காணாமல் போனோர் விடயங்களில் எந்த  முன்னேற்றமும் காணப்படாமைக்கு இவையும் காரணிகளாகும்.

ஒன்றரை நிமிட உரையில் – தமிழீழம், இன படுகொலை, ஐ.சி.சி என்று பேச்சில் மட்டும் காண்பிப்பது, அவர்களது மனமார்ந்த எண்ணம் என்ன என்பதை வெளிப்படையாக காண்பிக்கிறது. மேற் கூறப்பட்டவற்றை அடைவதற்கு, இவர்களது வாழ் நாட்களில் என்ன செய்தார்கள் என்பதை அறியாதவர்களிற்கு இது ஓர் நாடகம் என்பது தெரியாது இருக்கலாம். ஆனால் நீண்டகாலம் பயணிக்கும் எமக்கு,  யாவும் நன்றாக விளங்கி செயல்படுகிறோம்.

இவ்விதமான செயற்பாடுகளை, ஐ.நா.மனித உரிமை அமர்வு வேளைகளில், இரவு பகலாக நடத்தி, பாதிக்கப்பட்டோருக்கு நீதி தீர்வு கிடைக்காமல் செய்தவர்களின் பின்னணியை இன்று தன்னும் ஆராய்ந்து உண்மைகளை அறியுங்கள்.

தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினால் ஐ.நா.மனித உரிமையாளர் காரியாலயத்திற்கு முன்பு சமர்ப்பித்துள்ள – கைது, சித்திரவதை, படுகொலை, காணாமல் போனோர் பற்றிய தகவலுக்கு மேல் சில சர்வதேச மனித உரிமை அமைப்புகளே கொடுத்துள்ளன என்பதே உண்மை.

சுருக்கமாக கூறுவதானால்,ஐ.நா.மனித உரிமை அமர்வு வேளைகளில் நடைபெறுபவை யாவும், பிரசார பரப்புரை வேலைகளே தவிர, இவை மனித உரிமை செயற்பாடுகள் இல்லை என்பதை மனித உரிமையை, துறைசார் கல்வியாக பயின்று செயற்படுபவர்கள் புரிந்து கொள்வார்கள்.மனித உரிமையை துறைசார் கல்வியாக கற்றவர்கள் – சர்வதேச போர்க்குற்றம், இன அழிப்பு சம்பந்தமான விடயங்களை கதைப்பதற்கு – விவாதிப்பதற்கு – உரையாற்றுவதற்கு தகுதி பெற்றவர்கள்.

இந்த காரணங்களினாலேயே, அன்று உரியவர்களினால் உரியவர்களிற்கு மனித உரிமை வேலை கொடுக்கப்பட்டது. இவற்றை இலங்கை அரசின் பின்னணியில், ஜெனிவாவிற்கு 2012ம் ஆண்டு முதல்  சமுகமளித்த குழு, ஒழுங்காக நடைபெற்ற மனித உரிமை செயற்பாடுகளை வெற்றிகரமாக திசை திருப்பினார்கள் என்பதே உண்மை.

இவை போலவே, ஐ.நா. முன்றலில் படங்களை காட்சி படுத்தவது, மனித உரிமை செயற்பாடு அல்ல. இவை யாவும் பிரசார வேலைகளே தவிர, இவற்றை மனித உரிமை செயற்பாடாக கூறினால் உலகம் தமிழர்களை பார்த்து சிரிக்கும். ஐ.நா. மனித உரிமை சபையில் கலந்து கொள்வதற்கான நிரந்தர அடையாள அட்டை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களை சிறிலங்கா சார் நபர்களினால், திசை திருப்பப்படுகிறார்கள் என்பதே உண்மை.

காணாமல் போனோர் தகவல்கள் உள்ளதா?

இக் காரணிகளினாலேயே, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்பின் இணையத் தளத்தில், கீழ் கொடுக்கப்படும் வினா தொடுக்கப்பட்டுள்ளது. “வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் செயலாளர், லீலாதேவி ஆனந்த நடராஜாவிடம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் எண்கள் உள்ளதா?” (இலங்கை பாதுகாப்பு செயலக இணையத்தளம் 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி) – (https://www.defence.lk/Article/view_article/845)

ஆகையால் நாங்களே “பொல்லை கொடுத்து அடிவாங்காமல்”, காணாமல் போனோர் விடயம் மட்டுமல்ல, கைது,  சித்திரவதை, பாலியல் வன்முறை, படுகொலை போன்ற விடயங்களில் பாதிக்கப்பட்டோர் பட்டியலுடன், சர்வதேசத்திடம் நீதி கேட்பது வரவேற்கத்தக்க விடயம்.

அடுத்த தடவை, காணாமல் போனோரின் சங்கங்களிலிருந்து யாராவது ஜெனீவாவிற்கு வரும் வேளையில், காணாமல் போனோரின் மேல் குறிப்பிட்ட ஆயிரக்கணக்கான தகவல்களுடன் வந்து, ஐ.நா.க.த.கா.ப. செயற்குழுவினருக்கு வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் தகவல்களை சமர்ப்பிப்பது, ஈழத்தமிழர்களினால் வரவேற்கப்படும் ஓர் விடயமாகும்.

இதேவேளை, 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற – படுகொலைகள், காணாமல் போனோரது விபரங்களை சேகரித்தவர்கள், சேகரித்த தகவல்கள் யாரிடம் எங்கு கையளித்தார்கள் என்பதற்கு இன்றுவரை எந்தவிதமான பதில்களும் கிடையாது.

இவற்றை எம்மிடம் தருங்கள், எமது அனுபவத்தின் அடிப்படையில், இவற்றை ஐ.நா.மனித உரிமையாளர் காரியாலயத்தில், உரிய பிரிவுகளிற்கு சமர்ப்பித்து, பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி பெற்றுக் கொடுப்போமென பலரிடம் பலதடவை வேண்டுகோள் வைத்தும், அவர்கள் அவற்றை எம்மிடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

ஆனால் சிலரின் கைகள் மாறி, இறுதியில் புலம்பெயர் தேசத்தில் வாழும் சிறிலங்கா அரச கைகூலிகள் மூலமாக, மகிந்த, கோத்தபாய ராஜக்சக்களின் கைகளிற்கு சென்றுள்ளதாக அறிந்துள்ளோம்.

ஆகையால் எதிர்காலத்தில் தன்னும் விழிப்படைந்து 2013ம் ஆண்டு முதல் ஒன்றரை நிமிட உரை, பக்கக் கூட்டங்களில் உரையாற்றுவதனால் உங்களிற்கு ஆத்ம திருப்தி ஏற்படும் அதே வேளை, ஐ.நா.மனித உரிமை காரியாலயத்தில் உள்ள வேறுபட்ட பிரிவுகளான –  கைது, சித்திரவதை, பெண்கள் மீதான வன்முறை, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற பிரிவுகளுடன் உங்கள் தகவல்களை கொடுக்க முயற்சிகளை தொடருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

கடந்த சில வருடங்களாக பாதிக்கப்பட்டோர் யாவரும்  சிறிலங்கா புலனாய்விற்கு வேலை செய்யும், புலம்பெயர்ந்த  சில நபர்களினால், தவறான முறையில் வழி நடத்தப்படுகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். புதினைந்து வருடங்கள் விணாகினாலும், எதிர்காலத்தில் தன்னும் சரியான வழிகளில் பாதிக்கப்பட்டோர் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், இன அழிப்பிற்கு நீதி காணுவதற்கு சரியான பாதையில் பயணியுங்கள்.

https://thinakkural.lk/article/311526

மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும்

2 weeks 2 days ago

மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும்

 — கருணாகரன் —

 ஜனநாயக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, தங்களுடைய ஆட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை மக்கள் எப்போதும் சரியாகத்தான் செய்கிறார்களா? 

பல சந்தர்ப்பங்களிலும் இல்லை. அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும். 

சரியான முறையில் (பொருத்தமான) நற்கொள்கை, சிறந்த செயலாற்றல், நற்பண்பு, பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்றவற்றைக் கொண்ட தரப்பைத் தெரிவு செய்திருந்தால் – தவறான தரப்பை நிராகரித்திருந்தால்  நாடும் சமூகமும் (மக்களும்)  பல முன்னேற்றங்களை எட்டியிருக்கும். 

இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றில் சிக்கியிருக்காது. மக்களும் இனமாக, மொழியாக, மதமாகப் பிளவுண்டிருக்க மாட்டார்கள். வெளிச்சக்திகளின் அதிகரித்த தலையீடுகளுக்கு நாடு உட்பட்டிருக்காது. கடன் பொறிக்குள் சிக்க வேண்டியிருக்காது. யுத்தம், போராட்டம் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர் இழக்கப்பட்டிருக்காது. ஊழலும் அதிகார துஸ்பிரயோகமும் நடந்திருக்காது. இயற்கை வளங்கள் அபகரிக்கப்பட்ருக்காது. இயற்கை வளச் சிதைப்பு நிகழ்ந்திருக்காது. 

ஆகவே நாட்டிலே ஏற்பட்ட அழிவு, நெருக்கடிகள், பின்னடைவுகள் அனைத்துக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் மட்டுமல்ல, மக்களும் பொறுப்புடையவர்களே. அதற்கான பொறுப்பை மக்கள் ஏற்கத்தான் வேண்டும். 

பொருத்தமானவர்களை – சிறப்பானவர்களை – நல்லவர்களை – நற்சக்திகளை – தெரிவு செய்யாமல் புறக்கணித்து விட்டு, தவறானோரையும் பிழையான சக்திகளையும் தெரிவு செய்தற்கான தண்டனையையே மக்கள் பெற்றனர். 

தேர்தலில் மக்களுக்கு வழங்கப்படும் நல் வாய்ப்பைப் பொறுப்புடன் ஏற்றுச் செயற்படாமல் விட்டால், அதனுடைய விளைவுகளை மக்களே ஏற்க வேண்டும். நல்ல – சரியான தெரிவுகளைச் செய்தால் நன்மைகளும் சிறப்பும் விளையும். தவறான – பொருத்தமற்ற தெரிவுகள் என்றால், பின்னடைவுகளும் அழிவுகளும் ஏற்படும். 

ஜனநாயகத் தெரிவின் அடிப்படையே இதுதான். 

தவறானோரை அல்லது தவறான சக்திகளைத் தெரிவு செய்து விட்டால், அவர்களை மாற்றுவதற்கும் புறமொதுக்குவதற்குமே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை தேர்தல் வருகிறது. அப்படி வரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, குப்பைகளைப் புறமொதுக்க வேண்டும். அதைச் செய்யத் தவறுவதே பல சந்தர்ப்பங்களிலும் நடக்கிறது. 

இதற்கு என்ன காரணம்?

இதற்குரிய விழிப்புணர்வை உரிய தரப்புகள் மக்களுக்குச் செய்வதில்லை என்பது முக்கியமானது. ஊடகங்கள், புத்திஜீவிகள், சமூக இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற தரப்புகள் கூட பெரும்பாலும் மக்களை வழிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களிடம் அறிவூட்டலை – விழிப்புணர்வை – ஏற்படுத்துவதற்கு மாறாக ‘மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்‘ என்று தவறான முறையிலேயே செயற்படுகின்றன. மக்களுடைய பிழையான உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் பின்னால் இழுபடுகின்றன. 

ஆனால், ஜனநாயக அடிப்படையைக் கொண்ட நாட்டில் – சூழலில் ஊடகங்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக இயக்கங்கள் போன்ற தரப்புகளுக்கு முக்கியமான பங்குண்டு. இந்தத் தரப்புகள்தான் ஜனநாயகச் செழுமையை உண்டாக்க வேண்டியவை. இவைதான் ஜனநாயகத்தின் காப்பரண்கள். இவைதான் ஜனநாயகத்தின் ஊட்டச் சக்திகள்.

ஆனால், இங்கே என்ன நடக்கிறது? 

ஜனநாயகச் சீரழிவுக்கு இவை துணைபோகின்றன. இவற்றின் செயலின்மை அல்லது செயற்பாட்டுப் போதாமை, ஜனநாயகச் சீரழிவுக்கு வழிவகுக்குகிறது.

ஆகவேதான் இலங்கை போன்ற நாடுகள் இன்னும் ஜனநாயக அரசியற் பண்பாட்டில் முன்னேறவில்லை. 

என்பதால்தான் இங்கே இன்னும் பிரபுத்துவ மனோநிலை மக்களிடம் – சமூகத்திடம் அதிகமாக உண்டு. சாதியாகவும் மதமாகவும் இனமாகவும் மொழியாகவும் மக்கள் சமனற்ற நிலையில் காணப்படுவதற்கும் பிளவுண்டிருப்பதற்கும் ஜனநாயக அடிப்படையில் ஏற்பட்ட ஓட்டைகளே காரணமாகும். 

இந்த ஜனநாயக ஓட்டைகள் மக்கள் இயக்கங்களின், ஊடகங்களின், புத்திஜீவிகளின், எழுத்தாளர்களின், மாணவர் அமைப்புகளின் பொறுப்பின்மையினாலும் தவறுகளாலும் ஏற்பட்டவையே. என்பதால்தான் மக்கள் இன்னமும் தேர்தல்களின் தவறான தெரிவுகளை – அணுகுமுறைகளை – க் கையாள்கிறார்கள். 

தேர்தலின்போது வாக்காளர்கள் சில அடிப்படையில் பிரிந்து செயற்படுவதுண்டு.

1.    தாங்கள் விரும்புகின்ற கட்சிக்கு அல்லது சின்னத்துக்கு வாக்களிப்பது.

இது பெரும்பாலும் குறித்த கட்சியின் கொள்கையோடு சம்மந்தப்பட்டதாக இருக்கும். சிலவேளை அந்தக் கொள்கையில் சறுக்கல்கள் – சமரசங்கள் – வீழ்ச்சிகள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தாமும் தமது குடும்பத்தினரும் தொடர்ச்சியாக குறித்த கட்சியை அல்லது குறித்த சின்னத்தை ஆதரித்து வந்தவர்கள் என்பதற்காகத் தொடர்ந்தும் வாக்களிப்பது. 

இங்கே அவர்கள் கட்சிக்கு அப்பால் எப்படிச் சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படித்தான்  நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரையோ அவருடைய தகுதி மற்றும் பொருத்தப்பாடுகளையோ பார்ப்பதில்லை. அது  அவர்களுக்கு அவசியமுமில்லை. தாங்கள் இன்ன கட்சியின் ஆதரவாளர்கள் என்பது மட்டுமே அவர்களுடைய புலனில் (தலைக்குள்) இருக்கும். 

இது ஒருவகையில் அடிமை மனோநிலைதான். அறிவியலுக்கு முரணான எதுவும் அடிப்படைவாதத்தில் – அடிமை நிலையில்தான் இருக்கும். 

இதில் அவர்கள் தேர்தல் என்பது ஜனநாயக விழுமியத்தின்பாற்பட்ட ஒன்று எனச் சிந்திப்பதேயில்லை. ஜனநாயகம் வழங்கும் சிறந்த  பெறுமானத்தின் அடிப்படையில் பொருத்தமற்ற கொள்கையை, பொருத்தமற்ற நடைமுறைகளை, பொருத்தமற்ற ஆட்களை விலக்குவதற்குக் கிடைக்கும் மக்களுக்கான அரிய வாய்ப்பு என்பதைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காதவர்களாகவே உள்ளனர்.  

குறித்த கட்சியோ, வேட்பாளரோ கடந்த காலத்தில் ஆற்றிய பங்களிப்பு என்ன? சமகாலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடும் தகுதியும் எப்படியுள்ளது என்பதையும் பரிசீலிப்பதில்லை. 

ஆக, தாங்கள் குறித்த கட்சிக்கும் (சின்னத்துக்கு) குறித்த வேட்பாளருக்கும் நிரந்தரமாக அடிமைச்சாசனம் எழுதப்பட்டவர்களாவே கருதிக் கொள்கிறார்கள். தாங்கள் பெற்றுக் கொண்ட அறிவையும் அனுபவத்தையும் வைத்துச் சிந்தித்து – பரிசீலித்து முடிவெடுப்பதற்கோ, பொருத்தமான தரப்பைத் தேர்வு செய்வதற்கோ இவர்களால் முடிவதில்லை. 

எனவே இவர்கள் உண்மையில் ஜனநாயகத்தை மறுப்பவர்களாகவும் அதைத் துஸ்பிரயோகம் செய்வோராகவுமே உள்ளனர். எனவே இவர்கள் சமூக வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக இருக்கின்றனர். மட்டுமல்ல, சரியாகச் சிந்திப்போரின் ஆற்றலையும் தெரிவையும் கூட பாழாக்கி விடுகின்றனர். 

ஏனெனில், குறித்த கட்சியோ, அதன் பிரதிநிதியாக முன்னிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரோ, காலப்பொருத்தமற்ற – நடைமுறைச் சாத்தியங்களற்ற கொள்கைப்பிரகடனத்தோடு வந்து முன்னே நிற்கும்போது அதைக் குறித்து கேள்விகளை எழுப்பாமல் இருப்பது எவ்வளவு தவறு? எவ்வளவு அறிவீலித்தனம்?

அதோடு  கடந்த காலத்தில் உருப்படியாகச் செயற்படாமல்  வெறுங்கையோடு வந்து நிற்கும்போது, அதை ஆதரிப்பது மன்னராட்சி, பிரபுத்துவக் கால அடிமை முறையன்றி  வேறென்ன? 

ஆகவே இவர்கள் இந்த நவீன யுகத்துக்குரிய ஜனநாயக – அறிவார்ந்த அடிப்படைக்குரியவர்களில்லை. என்பதால்தான் இவர்களை ஜனநாயக விரோதிகள் என மதிப்பிட வேண்டியுள்ளது. 

2.    தாங்கள் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது அல்லது அவருக்கான விருப்பத்தை முதன்மைப்படுத்தி வாக்களிப்பது. 

இதுவும் ஜனநாயக விழுமியத்துக்கும் அறிவுசார் நடத்தைக்கும் புறம்பான ஒன்றே. இதில் குறித்த வேட்பாளரின் உறவு வட்டம், சாதி, பிரதேசம், நட்பு, அவர் மீதான அபிமானம் போன்றவையே அதிகமாகக் காணப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் குறித்த வேட்பாளர் ஆற்றிய சேவைகளின் மீதான மதிப்பு நோக்கப்படுவதுண்டு. அது அபூர்வமானது. 

அப்படித் தெரிவு செய்யப்பட்டால் பரவாயில்லை. ஆனால் அவ்வாறான ஆற்றலுடையவர், செயற்பாட்டுத்திறனைக் கொண்டவர், மக்களின் நலனில் அக்கறையுடையவர், பொறுப்புணர்ச்சியுள்ளவர், அரசியல் பண்புடையவர் பெரும்பாலும் நீடித்திருப்பது குறைவு. அவரிடம் என்னதான் நற்கூறுகளிருந்தாலும் போதிய பொருளாதார பலமில்லாமல் போகும்போது பணபலத்தோடு கலந்திருக்கும் தேர்தற் களத்தில் அவர் வெற்றி வாய்ப்பைப் பெறுவது கடினமாகவே உள்ளது. மக்கள் அந்த நேரத்தில் கிடைக்கின்ற சொற்ப சலுகைகளுக்காக தவறானவர்களைத் தெரிவு செய்து, சரியானவர்களைத் தோற்கடித்து விடுகிறார்கள். 

எனவே இங்கும் பெரும்பாலும் தவறான தெரிவுகளுக்கே வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இங்கும் ஜனநாயக விழுமியமும் அது வழங்கும் நல்வாய்ப்பும் பாழடிக்கப்படுகிறது. 

3.    தேர்தற்காலத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது எந்த வேட்பாளருக்குச் சார்பான அலை பொதுவெளியில் மிதக்கிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து விடுவோர். 

இவர்களும் பொருத்தமான அரசியலையும் தெரிவுகளையும் தமது சொந்த அறிவினாலும் அனுபவத்தினாலும் தேர்வுக்குட்டுப்படுத்துவதில்லை. 

சிலபோது குறித்த அலையானது நற்தேர்வுகளுக்கு வாய்ப்பளிக்கும். பல சந்தர்ப்பங்களிலும் பிழையான தெரிவுகளுக்கே வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உதாரணம், கடந்த 2020 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டமை இவ்வாறான ஒரு அலையினால்தான். 

ஆகவே இவர்களும் ஜனநாயக அடிப்படைக்கு எதிராக – முரணாகவே செயற்படுகின்றனர். இப்படி ஜனநாயக அடிப்படைக்கு எதிராகச் செயற்படும்போது நாடும் ஏனைய மக்களும் பாதிப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. (இவர்கள் பெரும்பாலும் தாம் இப்படிச் செயற்படுவது தவறானது என்றே தெரியாமல்தான் செய்கிறார்கள்) தவறான தெரிவுகளைச் செய்ய வேண்டியேற்படுகிறது. 

4.    கொள்கை என்ன? அதனுடைய நடைமுறைகள் எப்படியுள்ளன?  அவற்றின் பெறுமானங்கள் எத்தகையன? அவற்றைச் செயற்படுத்த முன்வந்திருப்போரின் தகுதியும் ஆற்றலும் பொறுப்புத் தன்மையும் எவ்வாறானது? எனக் கவனித்து – மதிப்பிட்டு வாக்களிப்போர் அல்லது தெரிவுகளைச் செய்வோர். 

இந்தத் தரப்பினரின் எண்ணிக்கை பல சந்தர்ப்பங்களிலும் குறைவாகவே உள்ளது. அதிலும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இப்படிச் சிந்திப்போரின் செல்வாக்கு சவாலான ஒன்றாகவே உள்ளது. அதனால்தான் மோசமான ஆட்சியாளர்களும் தவறான மக்கள் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுகிறார்கள்; அதிகாரத்தில் அமர்த்தப்படுகிறார்கள். ஆக, இங்கே அறிவார்ந்த தெரிவு தோற்கடிக்கப்படுகிறது. புறக்கணிப்புக்குள்ளாகிறது. 

சரியான – பொருத்தமான தெரிவுகளைச் செய்யக்கூடிய  இவர்களுக்கான பொதுவெளி மிகச் சுருங்கியதாகவே காணப்படுகிறது. mainstream media வில் இவர்களுடைய கருத்துகளுக்கும் நிலைப்பாட்டுக்குமான இடம் அளிக்கப்படுவது குறைவு. மாற்றுக் கருத்துகளுக்கான உரையாடல் வெளி விரிவடைந்து  mainstream media வில் இது இடம்பெறும்போதுதான் இவர்களுடைய தெரிவுக்கான அடிப்படைகள் விளக்கமடையக் கூடியதாக இருக்கும். அந்தப் பரப்பும் விரிவடையும்.

அது இப்போது குறைவு. 

தற்போதுள்ள சூழலில், குறிப்பாகத் தமிழ்ப்பரப்பில் mainstream media வும் சமூக வலைத்தள வெளியும் மக்கள் அமைப்புகளும் புத்திஜீவிகளாகக் கருதப்படுவோரில் பலரும் மாணவர் அமைப்புகளும் சுய சிந்தனைக்கும் சொந்த அனுபவங்களுக்கும் உலக வரலாற்று அறிவுக்கும் மாறாகவே – தவறாகவே இருப்பதைக் காணலாம். 

எனவே இவர்களுடைய தெரிவுகள் செல்வாக்கைச் செலுத்துவது குறைவு. அதனால் எதிர்த்தரப்பினர் – தவறானோர் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உண்டு. இதையே தற்போதைய தேர்தற் கணிப்புப் பற்றிய அடையாளமிடல்கள் நிரூபிக்கின்றன. 

ஆகவே, நடக்கவுள்ள 17 ஆவது தேர்தலில் நாட்டில் மாற்றம் நிகழ்ந்தாலும் வடக்குக் கிழக்கில் (தமிழ்ப்பரப்பில்) அந்த மாற்றத்தின் அளவு என்னவாக இருக்கும்? எப்படியானதாக இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது. அப்படியானால் தெற்கும் மேற்கும் (சிங்கள மக்கள்) தங்களைச் சுத்தப்படுத்துவதற்குத் தயாராகி விட்டது. வடக்கும் கிழக்கும்தான்  பழைய குப்பைக்குழிக்குள்ளேயே தொடர்ந்தும் கிடக்கப்போகிறதா? என்ற இன்னொரு கேள்வியும் அருகிலே எழுந்து நிற்கிறது. 

அரசியல் என்பது நடைமுறைப்பயன்விளைக்கும்அர்ப்பணிப்பான உழைப்பினாலும் உபாயங்களின்விளைவினாலும் உருவாகுவது. முதன்மையாக அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம். உணர்ச்சிகளுக்கு அதில் இடமில்லை. முற்று முழுவதும் அறிவுபூர்வமானது. ஆகவேதான் அதைக் கணிதம் என்று கூறப்படுவதுண்டு. கூடவே அரசியல் என்பது மக்களுடைய அதிகாரமாகும். கவனிக்க, மக்களுக்கான அதிகாரம் இல்லை. 
 

https://arangamnews.com/?p=11400

டிரம்ப் அல்லது ஹரிஸ்? யார் வென்றாலும் உலக பொருளாதாரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிகார மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

2 weeks 2 days ago

image

Larry Elliott- guardian

தமிழில் ரஜீபன்

1992 இல் அமெரிக்கா  உலகில் அதிகாரத்தின் உச்சியில் காணப்பட்ட நாட்களில் கம்யுனிசம் தோற்கடிக்கப்பட்டது. பேர்ளின் சுவர் இடிக்கப்பட்டது. சோவியத்யூனியன் வீழ்ச்சியடைந்தது, திறந்தபொருளாதாரம் குறித்த அதிர்ச்சி வைத்தியத்திற்கான ஆய்வுகூடமாக பயன்படுத்தப்பட்டது.

சீன பொருளாதாரம் தாரளமயப்படுத்தப்பட்டமை அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனங்கள் உற்பத்தியை வேலைகளை வெளியில் கொடுப்பதற்கான (அவுட்சோர்ஸ்) செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது.

அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழான  பூகோளமயமாக்கலின் யுகம்பிறந்தது.

இரண்டு லிபரல் தாராளமயமாக்கவாதிகள் ஜோர்ஜ் எச்டபில்யூபுஷ்  பில் கிளின்டன் ஆகிய இருவரும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டார்கள்.

இறுதியில் கிளின்டன் ஜனாதிபதி புஷ்சினை தோற்கடித்தார்.

பில்கிளின்டன் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து 32 வருடங்களாகின்ற நிலையில் பல விடயங்கள் இடம்பெற்றுவிட்டன.

அமெரிக்கர்கள் செவ்வாய்கிழமை தேர்தலில் வாக்களிக்கவுள்ள நிலையில் தங்களது நாடே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் மிகப்பெரிய இராணுவம் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள்.

ஆனால் முன்னர் போல மேலாதிக்கத்திற்கு சவால்கள் இல்லாமில்லை.

1991 இல் வளைகுடா யுத்தத்தின் இறுதியில் புஷ் பெருமையுடன் தெரிவித்த ஒற்றை துருவ உலகம் வீழ்ச்சியடைந்து கொண்டுள்ளது.

1990களில் பணம், பொருட்கள், மக்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நடமாடக் கூடிய தேசங்கள் அற்ற உலகம் குறித்து பேசப்பட்டது. மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டது சுயாதீனமான மத்திய வங்கிகள் வட்டிவீதங்களை அறிவித்தன. உலக வர்த்தக ஸ்தாபனம் வர்த்தக தடைகளை நீக்கியது

ஆனால் விரைவில் எதிர்பார்த்த விடயங்கள் வேறு பாதையில் செல்ல ஆரம்பித்தன. நவதாரளவாதம் குறித்த அகமகிழ்ச்சி நீண்டநாட்கள் நீடிக்கவில்லை.

மிகவும் குறைவான கட்டுப்பாடுகளுடன்  மூலதனம் சுதந்திரமாக நாடுகள் மத்தியில் சென்றமையும் அது உள்ளுர் சந்தைகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தமையும் இறுதியில் உலகளாவிய வங்கிநெருக்கடியை தோற்றுவித்தது.

அமெரிக்கா நினைத்ததை விட சீனா மிகப்பெரிய வலுவான பொருளாதாரமாக மாறியது. உலக வர்த்தக ஸ்தாபனத்தினால் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்க முடியவில்லை.

வாக்காளர்கள் மந்தகதியிலான வளர்ச்சி குறித்தும் தொழில்மயமாக்கல் இன்மை பாரிய புலம்பெயர்வு குறித்தும் சீற்றத்தை வெளியிட்டனர்.

கொவிட்பெருந்தொற்று சர்வதேச விநியோக சங்கிலிகளின் பலவீனத்தை வெளிப்படுத்தியது.

தேசியவாத அரசாங்கங்கள் மீண்டும் வந்தன. அதனுடன் செயற்பாட்டாளர்களின் கைத்தொழில்கொள்கைகளும்பாதுகாப்புவாதமும் வந்தன.

அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப அணிவகுத்துச் செல்லும் உலகம் குறித்த புஷ்ஷின்  எதிர்பார்ப்புகள் ஒரு தசாப்தகாலம் கூட நீடிக்கவில்லை.

கடந்த மாதம் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நடத்திய பிரிக்ஸ் மாநாடு காலத்தின் அறிகுறி அடையாளம்.

பிரேசில், இந்தியா, சீனா, தென்ஆபிரிக்கா, ரஸ்யா ஆகிய ஐந்து நாடுகளுடன்  உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது நான்கு நாடுகள்  இணைந்துகொண்டுள்ளன. மேலும் பல நாடுகள் பார்வையாளர்களாக கலந்துகொண்டுள்ளன இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளன.

பிரிக்சினை விஸ்தரிப்பதற்கான புட்டின் நோக்கம் தெளிவானது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் உக்ரைன் யுத்தத்தினை தொடர்ந்து தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஸ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்பதே அந்த செய்தி.

அமெரிக்காவின் டொலருக்கு போட்டியாக பிரிக்சினை உருவாக்கும் புட்டினின் முயற்சிகள் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றன. டொலர் உறுதியானதாக இலகுவில் மாற்றப்படக்கூடியதாக காணப்படுகின்றது. அதற்கு உடனடி ஆபத்துக்கள் எதுவுமில்லை. மேலும் இந்திய, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் உறவுகளை துண்டிக்க தயாரில்லை. மாறாக இரண்டு முகாம்களிலும் தங்கள் கால்களை வைத்திருக்க விரும்புகின்றன.

brics.jpg

எனினும் கசான் ( பிரிக்ஸ்மாநாடு) மூன்று காரணங்களிற்காக மிகவும் முக்கியமானது.

முதலாவது – தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் ரஸ்ய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவில்லை என்பதை அது வெளிப்படுத்தியுள்ளது. ஒருபோதும் அது இடம்பெறப்போவதில்லை.

சீனாவும் இந்தியாவும் ரஸ்யாவின் எண்ணையை வாங்க தயாராக உள்ளன. ரஸ்யாவின் உள்நாட்டு பொருளாதாரம் மீள்எழுச்சி தன்மை மிக்கதாக காணப்படுகின்றது.

மேற்குலக நாடுகளிற்கு இதனை ஏற்றுக்கொள்வது கடினம் என்றாலும் ரஸ்யாவால் நீண்டகாலமாக போரிட முடியும் அது யுத்தத்தில் வெல்கின்றது.

கசான் புலப்படுத்தியுள்ள இரண்டாவது விடயம் - வளர்ந்துவரும் உலக பொருளாதாரங்கள் அமெரிக்காவின் மேற்குலகின் அழுத்தங்களிற்கு அடிபணிய தயாரில்லை. இது ரஸ்யாவிற்கு மாத்திரமில்லை சீனாவிற்கும் பொருந்தும். வரிகள் மற்றும் பிற கட்டணங்களால் மேற்குலகசந்தையிலிருந்து அகற்றப்படலாம் என சீனா அஞ்சுகின்றது.

டொனால்ட் டிரம்ப் தான் வெற்றிபெற்றால் அமெரிக்காவிற்குள் வரும் சீன இறக்குமதிகள் அனைத்திற்கும் 60 வீத வரியை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியினரும் சீனா தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

கமலா ஹரிஸ் ஜோபைடன் காலத்தின்  சீனா குறித்த மிகக்கடுமையற்ற ஆனால் வலுவான அணுகுமுறையை தொடருவார்.

பிரிக்ஸ் மாநாடு ஏன் முக்கியமானது என்பதற்கான மூன்றாவது இறுதி காரணம் - உலகின் தென்பகுதி நாடுகளின் அதிகரித்து வரும் செல்வாக்கும் அவர்களின்  பொறுமையின்மையும்.

இந்த நாடுகள் உலகின் சனத்தொகையில் மிகப்பெரிய எண்ணிக்கையையும் உலக பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் பங்கையும் கொண்டுள்ளன.

புதிய உலக ஒழுங்கு என்பது அனைவருக்கும் செழிப்பை  ஏற்படுத்தவேண்டும், ஆனால் அதனை சாதிக்க தவறிவிட்டது.

யுத்தங்கள் அதிகரித்துவரும் கடன்கள், பெருந்தொற்று, காலநிலை மாற்றம் காரணமாக உலக வறுமைக்கு எதிரான போராட்டம் முடக்கப்பட்டுள்ளது என உலகவங்கி தெரிவித்துள்ளது.

இந்த பல்நெருக்கடிகளிற்கு பதிலளிக்க முடியாத அல்லது தயாராகயில்லாத நிலையில் செல்வந்த நாடுகள்  உள்ளன. 1944 இல் உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் ஆகியன பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டின் மூலம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்டதை போன்று மேற்குலக நாடுகள் இன்னமும் வலுவானவையாக காணப்படுகின்றன.

ஆனால் தற்போது வேறுபட்ட உலக பொருளாதாரம் காணப்படுகின்றது.

வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் யார் வென்றாலும் கடந்த 500 ஆண்டுகளாக இல்லாத வகையில் மேற்குலகின் ஆதிக்கம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/197859

அரசியல் சதிகள் அம்பலம்

2 weeks 3 days ago

அதிர்ச்சி தரும் சுமந்திரனின் சதிகள் ஆதாரபூர்வமாக அம்பலம்:

சுமந்திரனும் இத்தியாதிகளும் ஈழத்தமிழ்த்தேசியத்தை எவ்வாறு புதிய அரசியலமைப்பு ஊடாக முற்றாகச் சிதைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை இந்த ஒரு மணி நேர காட்சிப்படுத்தலுடனான நேர்காணலில் தமிழ்நெற் ஆசிரியர் முன்வைக்கிறார்.

 
 
Checked
Thu, 11/21/2024 - 10:51
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed