அரசியல் அலசல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன? - வி.சிவலிங்கம்

1 month 2 weeks ago

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மற்றும் தமிழ் அரசியலின் வகி பாகம் என்ன?
 

— வி.சிவலிங்கம் —

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலும், அதன் முடிவுகளும் புதிய அரசியல் சகாப்தத்தைத் தோற்றுவித்துள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னதான அரசியல் வரலாற்றில் முதன் முறையாக அதிகார வர்க்கத்திற்கு அப்பால் அரசியல் அதிகாரம் கை மாற்றப்பட்டிருக்கிறது. அதுவும் சாமான்ய குடும்பத்தில் பிறந்து, அதிகாரம் என்பதை சுவைத்து அனுபவிக்காத குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அதுவும் மிகவும் கொடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுத்த அமைப்பினைச் சார்ந்த ஒருவர் மிக நீண்ட போராட்டத்தின் பின்னணியில் இன்று மக்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். இதற்காக அவர்கள் பல சகாப்தங்கள் சளைக்காமல் பல இழப்புகளுக்கு மத்தியில் மக்கள் மத்தியில் செயற்பட்டதன் விளைவே இவ் அதிகார மாற்றம் ஆகும்.

கோட்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள்:

———————————-

இத் தேர்தல் முடிவுகளைக் கோட்பாட்டு அடிப்படையில் விபரிப்பதானால் மக்கள் இனவாதம், அதிகாரக் குவிப்புக் கலந்த நவதாராளவாத ஆட்சிக் கட்டுமானத்தை மாற்ற உதவியதோடு, அதன் அடிப்படையில் உருவான பொருளாதாரக் கட்டுமானத்தையும் மாற்றும்படி கோரியுள்ளனர். அவ்வாறாயின் புதிதாக பெரும்பான்மை மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன முன்னைய பிரதான கட்சிகளை விட முற்றிலும் வேறான அரசியல் மற்றும் பொருளாதாரக் கோட்பாடுகளைக் கொண்டிருப்பதாகவே அடையாளப்படுத்த முடியும்.

அந்த அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன நவதாராளவாத அரசியல் மற்றும் நவ தாராளவாத பொருளாதாரக் கட்டுமானங்களுக்கு மாற்றாக புதிய சமூக ஜனநாயக அரசியல் கட்டுமானத்தையும், சமூக சந்தைப் பொருளாதாரக் கோட்பாட்டை நோக்கியே தமது கவனத்தைக் குவித்துள்ளதாக கருதலாம்.  

குறிப்பாக இந்த இரு சாராரும் இடதுசாரி மைய விசையைக் ( Centre-left forces) கொண்ட சக்திகளாகவே கொள்ள வேண்டும். இதற்கான நியாயங்களைத் தொடர்ந்து படிக்கும் வேளையில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அத்துடன் தமிழ் அரசியலின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு பார்க்கையில் பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கியே மக்களின் எண்ணம் திரும்பியுள்ளது எனலாம். இக் கட்டுரை அகில இலங்கை அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனத்தில் கொண்டும், தேசிய ஐக்கியத்தை நோக்கிய பாதையில் நாடு மாற்றத்தை நோக்கி நகர்வதாக கருதுகிறது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதியும் வெளியாகியுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்து பொதுத் தேர்தலுக்கான அணுகுமுறை எவ்வாறு அமைதல் அவசியம்? என்பது குறித்தே இக் கட்டுரை அதிக கவனம் செலுத்துகிறது.

தேர்தலும், கொள்கை மாற்றங்களும்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி- ஜே வி பி இணைந்த அணி வெற்றி பெற்ற போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி சகல சமூகங்களினதும் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்த இரு கட்சிகள் பற்றிய குறிப்பாக அரசியல் தாக்கங்களையும், எதிர் காலம் பற்றிய விபரங்களையும் ஆராய்வது முக்கியமானது.

ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி ஆகியன இணைந்து எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது? என்பதை நாம் அறிதல் அவசியம். இக் கட்சிகளின் இணைவும், தேர்தல் முடிவுகளும் ஓர் பாரிய மாற்றம் ஒன்றிற்கான ஆரம்பமாகவே உள்ளது. மாக்ஸிச சித்தாந்தத்தினை தனது அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்த கட்சி குறிப்பாக மிகவும் அடிப்படை மாற்றங்களைக் கோரி பல இழப்புகளைச் சந்தித்த ஒரு கட்சி இன்று தன்னால் நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தின் தீர்மானகரமான அரசியல் சக்தியாக தேசிய அளவில் நடைபெற்ற தேர்தலில் தனித்து வெல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளது.

இந்தக் கட்சியின் வெற்றி என்பது நாட்டு மக்கள் கடந்த கால அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் எவ்வளவு வெறுப்படைந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டியது. குறிப்பாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன நாட்டின் அரசியலில் பல தசாப்தங்களாக பாரிய தாக்கத்தைச் செலுத்தி வந்தன. ஆனால் இன்று அக் கட்சிகளே நாட்டில் ஊழலையும், பொருளாதார நெருக்கடியையும். வறுமையையும் மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது பரந்த தொழிலாள வர்க்கத்தின் செயற்பாட்டின் வெளிப்பாடே இந்த வெற்றியாகும். அவர்களே பொருளாதார மாற்றம் ஒன்றைத் தரும்படி தேசிய மக்கள் சக்தி மேல் அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள். நியாயமான விதத்தில் தேசிய செல்வத்தைப் பங்கீடு செய்யுமாறும், ஊழலை ஒழிக்கும்படியும், சமூக நீதியை வழங்குமாறும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் கோரினார்கள். இத் தேர்தல் முடிவுகள் அவர்களின் குரலாகவே முடிவடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியினர் தமது கூட்டங்களில் பொருளாதார ஏற்றத் தாழ்வை, ஊழலை ஒழிப்பதாக மக்களுடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றை இத் தேர்தல் மூலம் ஏற்படுத்தியுள்ளனர்.

ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி இணைப்பு அமைப்பினர் எதிர்க் கட்சியில் இருந்த வேளையில் அதுவும் மூன்று உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் இருந்த போதிலும் தமது அரசு பதவிக்கு வந்தால் என்ன செய்வோம்? என்பது குறித்து மிகவும் விரிவாகவே விவாதங்களின்போது முன் வைத்தார்கள். குறிப்பாக, வினைத்திறன் மிக்க பொருளாதார முகாமைத்துவம், அரச கட்டுமானங்களில் சீர் திருத்தம், வெளி நாட்டு முதலீடுகளை ஆகர்ச்சிக்கும் வகையில் உள்கட்டுமான மாற்றங்கள்  போன்றவற்றை மேற்கொள்வதாக மக்களுக்கு உறுதியளித்தார்கள். இதுவே இக் கட்சி மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு காரணமாக அமைந்தது. அத்துடன் நாட்டினை ஓர் கலப்புப் பொருளாதாரத்தின் அடிப்படையில் எடுத்துச் சென்று நாட்டில் ஓர் சோசலிச சமூகத்தைத் தோற்றுவிக்க முடியும் என்பதாக நம்பிக்கை ஊட்டினார்கள்.

இங்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பணி குறித்து குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் நம்பிக்கையை அக் கட்சி வென்றுள்ளது. அக் கட்சி தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தித் துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்தார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் இத் தேர்தலில் எவ்வாறு தேசிய சிறுபான்மை இனங்களின் வாக்குகளை அதிகளவில் பெற முடிந்தது? என்பதனை ஆராய்ந்தால் அக் கட்சியினர் முதலில் தேசிய நல்லிணக்கம் தொடர்பாகவும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் குறிப்பாக தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக எடுத்த முடிவுகள் ஒரு வகையில் லிபரல் ஜனநாயக அடிப்படைகளைக் கொண்டுள்ளதாகவும், மத்தியை நோக்கிய பாதையாகவும் சிறுபான்மை இனத்தவர் அடையாளம் கண்டார்கள். குறிப்பாக வரலாற்று அடிப்படையில் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்ட மக்கள் அதுவும் இனக் குழுமம் மற்றும் மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான நம்பிக்கையான அணுகுமுறையாக சகல சிறுபான்மைத் தேசிய இனங்களும் உணர்ந்தன.

தேர்தல் முடிவுகளை ஆராயும்போது ஐக்கிய மக்கள் சக்தி தன்னைத் தேசிய நல்லிணக்கத்திற்கான சக்தியாக, சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை அங்கீகரிக்கும் சக்தியாக, ஆட்சியில் சகல பிரிவினருக்குமான வாய்ப்பு உண்டு என்பதை நம்பும் வகையில் கருத்துக்களை முன் வைத்தார்கள். இக் கட்சியினர் தேசிய பொருளாதார வளர்ச்சியில் சாத்தியமான வகைகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த திட்டங்களை முன் வைத்தார்கள். குறிப்பாக பொருளாதார வளர்ச்சியுடன், சமூக பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளையும் தேசிய மக்கள் சக்தியை விட வித்தியாசமான வகையில் முன் வைத்தார்கள்.

இந்த இரு கட்சிகளினதும் அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை நோக்கும்போது சில அடிப்படைகளில் வித்தியாசமான போக்குகளை நாம் அடையாளம் காண முடியும்.

உதாரணமாக தேசிய மக்கள் சக்தியின் அணுகுமுறை என்பது தொழிலாள வர்க்கத்தை முதன்மைப்படுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக கிராமிய ஏழை விவசாய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியினரின் அணுகுமுறைகள் சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் தேவைகளை உள்ளடக்கியதாக அமைந்தது.

வாக்களிப்பு முறை

இலங்கையின் வாக்களிப்பு முறை என்பது சமூகம் மிக அதிக அளவில் வர்க்கங்களாக பிளவுற்றிருப்பதையே இத் தேர்தல் உணர்த்தியது. தேசிய மக்கள் சக்தியினர் செல்வத்தை நியாயமான விதத்தில் பங்களிப்பதையும், இதில் அரசின் தலையீட்டின் அவசியம் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பதிலாக ஐக்கிய மக்கள் சக்தியினர் உற்பத்தி குறித்தே அதிக கவனம் செலுத்தினர். இக் கொள்கைகள் மத்தியதர வர்க்கத்தினருக்கு உகந்த கொள்கைகளாக அமைந்திருந்தன.

இருப்பினும் இனப் பிரச்சனை குறித்த அம்சங்கள் குறிப்பாக பிராந்திய மற்றும் இனக் குழும அடிப்படையில் நோக்கும்போது சிறுபான்மைத் தேசிய இனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி மேல் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். வெவ்வேறு பிரதேசங்களில் காணப்பட்ட வாக்களிப்பு விபரங்கள் இவற்றைப் புலப்படுத்தின. இப் பிரச்சனை என்பது மிகவும் உணர்ச்சிகள் கலந்த பிரச்சனை என்பதும், தேசிய மக்கள் சக்தியினர் அதில் மேலும் தெளிவான நிலைப்பாடுகளை எடுத்தல் அவசியம் என்பதையே முடிவுகள் உணர்த்துகின்றன. இனப் பிரச்சனை குறித்து சரியான கொள்கைகளைப் பின்பற்றாவிடில் மேலும் பிளவுகளை அதிகரிப்பதாகவே நிலமைகள் மாறக் கூடும். எனவே தேசிய நல்லிணக்கம், அதிகார பகிர்வு போன்ற அம்சங்களில் தீவிர கவனம் செலுத்துவதன் மூலம் ஓர் நிலையான அரசியல் புறச் சூழலை ஏற்படுத்த முடியும்.

கூட்டு அரசியலுக்கான அடித்தளங்கள்

இத் தேர்தல் முடிவுகள் புதிய அத்தியாயம் ஒன்றிற்கான குறிப்பாக புதிய அரசியல் கூட்டணிக்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. உதாரணமாக, தேர்தல் முடிவுகளை ஆராயும் போது தேசிய மக்கள் சக்தியினர் தமது ஆட்சியை பலமானதாகவும், வினைத் திறன் மிக்கதாகவும் நடத்துவதற்கு அதுவும் பாராளுமன்ற ஆட்சி முறைக்குள் கூட்டணி அவசியமாகிறது. அதே போலவே ஐக்கிய மக்கள் சக்தியினரும் சிறிய கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணி உருவாக்குவது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. குறிப்பாக, சிவில் சமூக அமைப்புகள், சிறிய கட்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறையுடைய வர்த்தக சமூகத்தினது ஆதரவு அவசியமாகிறது. இதன் மூலமே எதிர்கால தேர்தல்களை எதிர் நோக்க முடியும்.

பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கொள்கை வேறுபாடுகள்

தேசிய மக்கள் சக்தியினர் தற்போது மிகவும் பலமான சவால்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் உள்ளனர். மிக அதிக அளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன், உள்நாட்டு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி மூலப் பொருட்கள் இல்லாமல் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை, வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறை, உற்பத்திச் செலவு அதிகரிப்புக் காரணமாக விவசாயம் பாதிப்படைந்துள்ள நிலமைகள் எனப் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகின்றனர்.

தேர்தலில் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தேசிய செல்வத்தைப் பகிர்ந்தளித்தல் என்ற அடிப்படையில் பல வாக்குறுதிகள் தேசிய மக்கள் சக்தியினரால் வழங்கப்பட்டுள்ளன. இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதானால் அதிக வரி விதிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உள்ளுர் வர்த்தக சமூகமும், வெளிநாட்டு கடன் வழங்குவோரும் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. இவ்வாறான தருணத்தையே அரசியல் எதிரிகளும் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான சிக்கலான வேளையில் இரு தரப்பாருக்குமிடையே சம நிலையைப் பேணிச் செல்வது தவிர்க்க முடியாத அம்சமாக மாறலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் தம்மை பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்பவர்களாகவும், சந்தை நடிவடிக்கைகளில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும், தேசிய உற்பத்தியைத் தூண்டும் விதத்தில் புதிய உற்பத்தியாளர்களை உருவாக்கப் போவதாகவும் தெரிவித்தார்கள். தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதி முகாமைத்துவம், ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரித்தல், சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தித் துறைகளை விஸ்தரித்தல் என்ற கொள்கைகளை முன்வைப்பதில் அல்லது செயற்படுத்துவதில் கொள்கை வேறுபாடுகள் எழ வாய்ப்பு உண்டு.

சிக்கலைத் தோற்றுவிக்கும் அம்சங்கள்

மேலே குறிப்பிட்ட அம்சங்களை அவதானிக்கும் போது பொருளாதாரக் கொள்கைகளில் முரண்பாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுதல், தனியார் மயமாக்குதல், சந்தைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் என்பன சிலவாகும். இன்று இந்தியப் பொருளாதாரத்தில் இப் பிரச்சனைகள் மிகவும் உக்கிரமடைந்து வருவதை அவதானிக்கலாம்.

திறந்த பொருளாதாரம் குறித்து இந்த இரு சாராரும் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்ற போதிலும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியினரின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியினரின் அணுகுமுறைகளோடு முரண்படும் வாய்ப்புகள் உண்டு. உதாரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் சந்தை விஸ்தரிப்பில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அவ்வாறாயின் சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். உதாரணமாக நாடு அதிகளவு கடனில் இருப்பதால் கடன் வழங்குபவர்கள் பல நிபந்தனைகளை விதிக்கலாம். வரிச் சலுகைகள், மற்றும் பல கோரிக்கைகளை முன் வைக்கலாம். இதன் மூலம் இந்த இரு பிரிவினருக்குமிடையே கொள்கை அடிப்படையில் முரண்பாடுகள் தோற்ற வாய்ப்பு உண்டு.

தேசியவாதமும், நாட்டின் இறைமையும்

இப் பிரச்சனை குறித்து நாம் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகிறது. தேசிய மக்கள் சக்தியினர் இலங்கைத் தேசியத்தின் அடையாளம் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கடந்து வந்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் பொருளாதார இறைமையை அந்நிய நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்ற கோட்பாட்டை அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தேசிய உற்பத்தியின் பிரதான துறைகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருத்தல் அவசியம் என்கின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியினர் நாட்டின் பிரதான துறைகள் சர்வதேச தரத்திற்கு உற்பத்தியை மேற்கொள்ளும் விதத்தில் நவீன மயப்படுத்தப்பட வேண்டுமென வற்புறுத்துகின்றனர். அவ்வாறு நவீன மயப்படுத்த வேண்டுமெனில் அந்நிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறாயின் நாட்டின் இறைமை அதிகாரம் என்பது பங்கீட்டு அடைப்படையில் அமைய வேண்டும். ஒரு புறத்தில் தேசத்தின் உற்பத்தித் துறையை பாதுகாத்தல் என்பதும், மறு புறத்தில் அவை வெளிநாட்டு உதவியுடன் நவீன மயப்படுத்தல் என்பதும் மிகவும் சிக்கலான கொள்கைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம். இலங்கை உற்பத்திகள் சர்வதேச தரத்தை அடைய வேண்டுமெனில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகள் இவற்றை எதுவித லாப நோக்கமும் இல்லாமல் இந் நாடுகள் வழங்கப் போவதில்லை. அத்துடன் சீனா அல்லது ரஷ்யா பொன்ற நாடுகளின் உதவிகளைப் பெறுவதாயின் அணிசேராக் கொள்கை என்பது சிக்கலான நிலைக்குள் தள்ளப்படும்.  

நாம் ஒரு புறத்தில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியைக் கொண்டாடுகின்ற போதிலும், அவை அதிகாரக் கட்டுமானத்தை அடைந்ததும் புதிய நிலமைகளைத் தோற்றுவிப்பதால் ஏற்கெனவே தெரிவித்த கொள்கைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கின்றன. இவற்றைக் கட்சி அடிப்படையிலான பிரச்சனைகள் என்பதை விட சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரின் நலன்களின் போட்டியாக அவை மாறிவிடும். இங்கு கட்சி அரசியலை விட தேசிய நலன் முதன்மை பெறுகிறது. விட்டுக் கொடுப்பு என்பது நிர்ப்பந்திக்கப்படுகிறது.

கூட்டாட்சியும், கட்டுமான சீர் திருத்தமும்

பொருளாதார அடிப்படைகளில் முரண்பாடுகள் எழும்போது அது ஆட்சிக் கட்டுமானத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறது. தற்போதுள்ள ஆட்சிக் கட்டுமானம் இவ்வாறான நெருக்கடிகளைச் சமாளிக்கும் அடிப்டையில் மாற்றங்கள் தேவையாகின்றன. பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் சில பிரிவினர் அரசாங்கத்திற்கு சில சமயங்களில் நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தக் கூடும். தேசிய மக்கள் சக்தியினர் இவ்வாறான பிரிவினரின் நிபந்தனைகள், ஊழல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாயின் அரச நிறுவனங்கள் பலப்படுத்தப்படுதல் அவசியமாகிறது.

இவ்வாறான சமயங்களில் ஐக்கிய மக்கள் சக்தியினர் வெளிப்படைத் தன்மை, வினைத் திறன் மிக்க பொதுச் சேவை, சட்டப்படியான ஆட்சி என்பவற்றை வற்புறுத்தக் கூடும்.

எதிர்காலம் எவ்வாறு அமையலாம்?

இலங்கையின் சமீப கால அரசியலை நோக்கும்போது அவை ஓர் கூட்டு அரசாங்கமாகவே அமைந்துள்ளன. அவ்வாறான ஓர் கூட்டு அரசு ஒன்றிற்கான அடையாளங்களே தற்போதும் தென்படுகின்றன. நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கையில் கட்சி அரசியலுக்கு முதலிடம் கொடுக்க எந்த ஆட்சியாளரும் விரும்பப் போவதில்லை.

தேர்தல் முடிவுகள், கொள்கைகள் அக் கொள்கைகள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகப் பிரிவுகளின் நலன்களும் செயற்பாடுகளும் சமூக முன்னேற்றத்திற்கு அவசியமானவை. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தல் முடிவுகளைக் கணித்தால் அவை ஆட்சி என்பது நல்லிணக்க கூட்டு அரசாக அமைவதே சாத்தியம் எனக் கருத முடிகிறது.

தென் ஆபிரிக்கா 1994 ம் ஆண்டு வெள்ளை இன ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு பெரும்பான்மை கறுப்பு இன மக்களின் அரசாக மலர்ந்தது. அவ் விடுதலைப் போராட்டத்தில் நெல்சன் மன்டெலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கியது. கடந்த 30 ஆண்டுகளாக தென் ஆபிரிக்க பாராளுமன்றத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது பெரும்பான்மையை இழந்தது. இதற்குப் பிரதான காரணம் ஆபிரிக்க தேசிய காங்கிரசிற்குள் ஏற்பட்ட உள் முரண்பாடுகள், ஊழல், விரயம் அதிகரித்துச் சென்றமையேயாகும்.

இந் நிலையில் தமது தோல்வியை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பின்வருமாறு விபரித்தது. அதாவது தேசிய ஐக்கியமும், எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தியும் அடைய முடியாமைக்குக் காரணம் அரசியல் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகளே எனவும், தேசிய பொருளாதாரத்தை எடுத்துச் செல்வதில் அதாவது முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையில் நாட்டை இட்டுச் செல்வதா? அல்லது தாராளவாத பொருளாதார அடிப்படையில் எடுத்துச் செல்வதா? என்ற பிரச்சனைகள் எழுந்த நிலையில் நாட்டின் பிரதான எதிர்க் கட்சியாகிய ஜனநாயக கூட்டணியுடன்  ( பெரும்பான்மை வெள்ளை இன மக்களின் ஆதரவுடைய கட்சி) புதிய அரசை உருவாக்கினர். தற்போது அந்த அரசு தேசிய ஐக்கிய அரசு என அழைக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய அடிப்படையில் அவ்வாறான ஒரு தேசிய அரச உருவாக்கமே இலங்கையிலும் சாத்தியமாகத் தென்படுகிறது. தேசிய மக்கள் சக்தியினர் நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களினதும்,  மத்தியதர வர்க்கத்தினரதும் நம்பிக்கையை வெற்றி கொள்வதாயின் ஒரு கூட்டு அரசை தோற்றுவிப்பதன் மூலம் நிலைபேறான ஆட்சியை வழங்க முடியும். ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்க் கட்சியாக அமர்ந்தாலும் தேசிய முன்னேற்றம் குறித்த பிரச்சனைகளில் ஒத்துழைப்பு வழங்கும் விதத்திலான இணைப்பு அவசியம்.

உதாரணமாக, தேசிய இனப் பிரச்சனை சாத்தியமான விதத்தில் தீர்க்கப்படுவதற்கு இந்த இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தேவையாகிறது. மிக நீண்டகாலப் பிரச்சனையை நியாயமான விதத்தில் அணுகித் தீர்த்தால் பொருளாதாரப் பிரச்சனை தீர்வதற்கான பல கதவுகள் திறக்க வாய்ப்புண்டு. உதாரணமாக தேர்தல் முடிவுகளை ஆழமாக அவதானிக்கும் போது குறிப்பாக 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே ஜனாதிபதிக்கு வாக்களித்த நிலையிலும், பெரும்பான்மையான சிறுபான்மை இனத்தவர்களும், மத்தியதர வர்க்கத்தினரும் புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்காத நிலையிலும் அனைவரையும் அணைத்துச் செல்லும் அரசியல் அணுகுமுறை மூலமே நிலைபெறான ஆட்சியை நடத்த முடியும் என்பது மிகவும் வெளிப்படை.

எனவே கூட்டு அடிப்படையிலான அரசு ஒன்றிற்கான அதாவது சிறுபான்மைத் தேசிய இனங்களினதும், மத்தியதர வர்க்கத்தினதும் நம்பிக்கையைப் பெறும் வகையிலான கூட்டு அரசு தேவையாகிறது.

தேர்தல் முடிவுகள் தற்போது புதிய தேர்தல் கூட்டணிக்கான அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலமையை ஏற்படுத்தவும், ஆட்சி முறையில் பாரிய மாற்றங்களையும் ஏற்படுத்தினால் தேசிய மக்கள் சக்தியின்மேல் தொழிலாள வர்க்கத்தினர் நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் மறு பக்கத்தில் பொருளாதார செயற்பாடுகள் சிக்கலான நிலமைகளைத் தோற்றுவித்தால் மத்தியதர வர்க்கத்தினரும், நகர்ப்புற தொழிலாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தியை நோக்கி நகர முற்படலாம். இவை பொதுத் தேர்தலில் பலமான போட்டிக் களங்களைத் தோற்றுவிக்கலாம்.

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல் என்பது எதிர்கால அரசியல் பொருளாதாரப் பாதையை தேர்ந்தெடுக்கும் தேர்தலாக அமையலாம்.

தேசிய இனப் பிரச்சனை

இலங்கை அரசியலில் தேசிய இனப் பிரச்சனை என்பது பிரதான மைய அம்சமாக உள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐக்கிய மக்கள் சக்தியினர் தேசிய சிறுபான்மை இனங்களின் பலமான ஆதரவைக் கொண்டிருப்பது புலப்படுகிறது. அந்த அடிப்படையில் தேசிய இனப் பிரச்சனைக்கான நியாயமான தீர்வுகளை எட்டுவதற்கு அக் கட்சி காத்திரமான பங்கினைச் செலுத்த வேண்டும். குறிப்பாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாக அல்லது ஐக்கிய மக்கள் சக்தி அரசாக அமைந்தாலும் நிலையான ஆட்சி ஒன்றினைத் தருவதாயின் நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகளைத் தணித்தல் அவசியமாகிறது. குறிப்பாக இனியும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்து விடப்பட்டவைகளாக உணரும் நிலை ஏற்படக் கூடாது.

தேசிய பொருளாதாரக் கட்டுமானம் தொடர்பான விவாதங்கள் எதிர் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் நிறைந்த அம்சங்களாக மாற வாய்ப்புண்டு. இவையே தேசிய அரசியலின் எதிர்காலப் போக்கினைத் தீர்மானிக்கும். கடந்த காலங்களில் இனவாதம், தேசிய பாதுகாப்பு என்பன தேசிய அரசியலின் போக்கைத் தீர்மானித்தன.

தேசிய மக்கள் சக்தியின் பிரதான இலக்குகளான தேசிய பொருளாதார வளர்ச்சி, சந்தைச் செயற்பாடுகளில் நம்பிக்கை கொள்ளுதல் என்பன தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பாரிய பங்கினைச் செலுத்தப் போகின்றன. ஒரு புறத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கான பாதுகாப்புக் கொள்கைகளுக்கும், பொருளாதார வளர்ச்சியில் சந்தைச் செயற்பாடுகளின் பங்களிப்பிற்குமிடையே மிகக் காத்திரமான பொருளாதார முரண்பாடுகள் தோற்றம் பெற வாய்ப்பு உண்டு.

இலங்கையின் எதிர்கால அரசியல் என்பது ஏற்கெனவே குறிப்பிட்ட பிரச்சனைகளில் ஜே வி பி- தேசிய மக்கள் சக்தி எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறது? என்பதிலும் அவ்வாறான நெருக்கடிகளின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளிலும் எதிர்காலம் மிகவும் தங்கியுள்ளது.    

இவ்வாறான சிக்கலான பின்னணியில் தமிழ் அரசியலின் மூலோபாய தூர நோக்கு என்ன? என்பதே பிரதான கேள்வியாக அமைகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னதான நிலமைகளை அவதானிக்கும் போது தமிழ் பிரதேசங்களிலுள்ள இடதுசாரி மையக் கருத்துகளைக் கொண்டிருக்கும் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள், தனி நபர்கள் என்போர் இச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது எழுந்துள்ள அரசியல் சூழல் என்பது மிக அபூர்வமாகவே ஏற்படும். பழைய வலதுசாரி இனவாத, ஏகாதிபத்தியசார்பு அதிகார வர்க்க பிரிவினர் நாட்டை மிக மோசமான நிலைக்குள் தள்ளி மக்களை வறுமை நிலைக்குத் தள்ளியதன் விளைவே தற்போதைய புதிய நிலமையாகும். அது மட்டுமல்லாது கடந்த காலங்களில் தமிழ் அரசியல் என்பது முரண்பாட்டை கூர்மைப்படுத்தும் அணுகுமுறையைக் கையாண்டிருந்தது. உதாரணமாக, இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாக 1970 ம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு தோற்றம் பெற்றது. தமிழரசுக் கட்சி அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. 1994 இல் சந்திரிகா தலைமையில் அரசு உருவானபோது எடுக்கப்பட்ட முடிவுகள் குறிப்பாக 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசியல் பொதி தமிழரசுக் கட்சியின் ஆதரவு அற்ற நிலையில் தோற்றுப் போனது. அதே போலவே 2015ம் ஆண்டில் மைத்திரி தலைமையில் நல்லிணக்க அரசு தோற்றம் பெற்ற வேளையில் தமிழரசுக் கட்சிக்குள் உள் முரண்பாடுகள் அதிகரித்தன.

இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பங்கள் நழுவ விடப்பட்ட பின்னர் அத் தீர்வுகள் குறித்து குறிப்பாக சந்திரிகா தலைமையில் முன்வைக்கப்பட்ட அரசியல் பொதி பற்றி இன்னமும் சிலாகித்துப் பேசப்படுகிறது.  

இந்த நிலமைகளைச் சரியாகக் கணித்து எதிர்கால அரசியலுக்கான புதிய பாதையைத் தோற்றுவிப்பதே இந்த இடதுசாரி மைய விசைகளின் பணியாக அமையும். குறிப்பாக இலங்கை முழுவதும் புதிய மாற்றத்தை நோக்கி மக்கள் தயாராவதை அவதானிக்க முடிகிறது. பழைய பிற்போக்கு இனவாத, மதவாத சக்திகளைத் தோற்கடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போலவே இன முறுகல்களைப் பயன்படுத்தி பிரிவினைவாத அரசியலை முன்னெடுக்கும் குறும்தேசியவாத சக்திகளும் தோல்வியடையும் நிலைகள் உள்ளன.

மறு புறத்தில் பல அரசியல் கட்சிகள் சமூக ஜனநாயக கோட்பாடுகளை வரித்து இன நல்லிணக்கம், சகல பிரிவினரையும் உள்ளடக்கிய ஆட்சி முறை, மொழி அடிப்படையிலான பாரபட்ச கொள்கைகளை நிராகரிக்கும் போக்கு, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரதேசங்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள், அதிகார பரவலாக்கம் என்பது பற்றி தேசிய அளவில் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான விவாதங்கள் முன்னெப்போதும் சிங்களப் பகுதிகளில் நடந்ததில்லை.

நிறைவேற்று அதிகாரத்தை எட்டியுள்ள தேசிய மக்கள் சக்தியினர் பிரதேச அபிவிருத்தி, சம அடிப்படையிலான பிரதிநிதித்துவம், சுயாதீன செயற்பாடு என்பவற்றை மிகவும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். சிறுபான்மைத் தேசிய இனங்களின் நம்பிக்கையை வெல்வதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான முன்னெடுப்புகள் என்பது மொழி, மத, இன மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து செல்வதாக உள்ளது.

இக் கொள்கைகள் இன்று பலமாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்ப் பிரதேச அரசியல் மேலும் மேலும் இன ஐக்கியத்தை நோக்கிய வழியில் திரும்பியுள்ள பின்னணியில், தமிழ் மக்களின் வாக்குப் பலம் படிப்படியாக தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் கட்சிகளை நோக்கிச் சென்றுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன  தேசிய நல்லிணக்கத்திற்கான பாலமாக மாற்றமடைந்து வருகின்றன. இவ்வாறான வரலாற்று மாற்றத்தை தமிழ் அரசியலில் உள்ள இடதுசாரி மைய விசைகள் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு சக்திகளையும் தமது நேச சக்திகளாக மக்கள் கருத வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சமத்துவம், தேசிய செல்வத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்தல் போன்றவற்றில் இணைந்தும், சமூக நீதி, பொருளாதார சமத்துவம், சகலத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தி போன்றவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் செயற்பட முடியும்.

இந்த இரு கட்சிகளும் ஊழலுக்கு எதிராகவும், நியாயமான பொருளாதார வளர்ச்சியை ஆதரித்தும், தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும், ஓர் ஜனநாயக அரசை தோற்றுவித்தலை வலியுறுத்தியும் செல்கையில் இப் பொதுவான அம்சங்களில் தமிழ் தலைமை தனித்து நிற்பதை விட இணைந்து செல்வதே மேல் என்பதை நாம் உணர வேண்டும்.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அடையாளங்கள் தென்படும் இவ் வேளையில் குறிப்பாக தமிழ் பிரதேசங்களின் கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் காத்திரமான கரிசனையைக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன தேசிய வளர்ச்சியில் அதிக கரிசனையைக் கொண்டிருக்கும் வேளையில் அதிகார பரவலாக்கம், போர்க்குற்ற விசாரணைகள், காணி அதிகாரம், கலாச்சார சுயாதீனம் என்பவற்றை வலியுறுத்தும் புறச் சூழல் படிப்படியாக ஏற்பட்டு வருகிறது.

தேசிய ஐக்கியம், தேசிய அரசுக் கட்டுமானத்தில் சகல தேசிய இனங்களுக்குமான பங்களிப்பு என வற்புறுத்தி வரும் இன்றைய அரசு ஒரு பரந்த தேசிய நல்லாட்சிக் கட்டுமானத்தை நோக்கிச் செல்கையில் அவ்வாறான முற்போக்கான பயணத்தில் ஏனைய தேசிய சிறுபான்மை இனங்கள் இணைந்து கொள்ள மறுப்பதற்கான தடைகள் என்ன? ஓர் காத்திரமான சமூக நீதியை நோக்கிச் செல்கையில் அவற்றைப் பலப்படுத்த தவறுவதன் அடிப்படை என்ன?

இலங்கை ஒரு பல் தேசிய இனங்கள் வாழும் நாடு என்பதை ஏற்றுள்ள நிலையில் குறிப்பாக பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்துவதோடு, தேசிய சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகளையும் அணுகித் தீர்ப்பதற்கான தருணத்தில் ஐக்கியத்தை நோக்கிய பாதையில் அரசியலை எடுத்துச் செல்வது அத்தியாவசியமானது.

இடதுசாரி மைய விசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் இந்த ஒட்டு மொத்தமான மாற்றத்தில் ஓர் பரந்த முற்போக்கு அணியைப் பலப்படுத்துவதில் ஈடுபட வேண்டும். குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு மற்றும் இடதுசாரி மையவிசை சக்திகள் வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான இப் போராட்டத்தில் கலந்து பலப்படுத்துவது வரலாற்றுக் கடமையாகும். இவ்வாறான பரந்த இடதுசாரி மைய விசைக் கூட்டணியை தோற்றுவிப்பதன் மூலம் பிளவுபட்டிருக்கும் தமிழ், முஸ்லீம், மலையக தமிழ் கட்சிகளையும் அதே வேளை தேசிய முன்னேற்றத்தில் அதிக கவனத்தைச் செலுத்தும் மத்தியதர வர்க்கத்தினருடனும் இன, மத, வாக்காளர் என்ற எல்லைகளைக் கடந்து இணைய முடியும். இவ்வாறான இணைப்பு என்பது பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

தமிழரசுக் கட்சியின் பணி என்ன?

தமிழரசுக் கட்சியும் மிக நிர்ணயமான அரசியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 76 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் தேசிய பாதுகாப்பை நோக்கி தமிழ் அரசியல் சென்றிருந்தது. ஆரம்பத்தில் மிதவாதத் தலைமையினாலும் பின்னர் தீவிரவாதத் தலைமையினாலும் வழி நடத்தப்பட்டது. முடிவில் தீவிரவாதத் தலைமையின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் படிப்படியாக வன்முறையை நோக்கி மாறி பாரிய சிவில் யுத்தத்தைத் தோற்றுவித்தது. பல ஆயிரம் மக்களும், கோடிக் கணக்கான சொத்துக்களும், பல லட்சம் மக்களின் இடப் பெயர்வுகளும் தமிழ் தேசியவாதத்தின் விளைபொருளாக அமைந்தன.

இன்று தமிழ் தேசியவாதம் என்பது மிகவும் பலவீனமடைந்து கூறுகளாக உள்ளது. இவ்வாறான நிலையைச் சிங்கள பௌத்த பேரினவாதம் தமக்குச் சார்பாகப் பயன்படுத்தியது. தமிழ் பிரதேசங்களில் ராணுவ முகாம்கள், குடியிருப்புகள், குடியேற்றங்கள், நில அபகரிப்புகள், அரச நிறுவனங்களில் தமிழர்களின் பங்களிப்பு அருகிச் செல்லல் என நிலமைகள் நாளாந்தம் அடையாளங்களை இழக்கும் அவதிக்குள் சென்றுள்ளன.

இவ்வாறான நிலையில் முதலில் இருப்பதையும் இழக்கும் நிலையை நோக்கி வழுக்கிச் செல்லும் நிலமைகளைத் தடுப்பதாயின் தற்போதுள்ள வாய்ப்பான ஜனநாயக மாற்றங்களை இறுகப் பற்றுவது அவசியமானது. தற்போதைய தமிழ் அரசியல் மிக மோசமான தனிநபர் தாக்குதலாக மாறி பண்பற்ற, நெறி பிசகிய வரலாற்றிற்குள் சென்றுள்ளது. இவ்வாறான நிலையிலிருந்து மாற்றத்தைக் கோரும் வகையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை ஏற்று வாக்களித்துள்ளனர். 2015ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ தனது மூன்றாவது பதவிக் காலத்திற்காக நடத்திய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள, முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் ஒன்றிணைந்து தோற்கடித்தார்கள். அவ்வாறே 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இனவாத ரணில்-ராஜபக்ஸ கூட்டிற்கு எதிராக முழு நாடும் இணைந்து வாக்களித்தது.

இன்று தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்துள்ளது. தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகளை வலியுறுத்தியும், தேசிய பொருளாதார வளர்ச்சியை முன் நிறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் தமிழ் மக்களும் இணைந்துள்ளனர்.

எனவே தேசிய நல்லிணக்கத்திற்கு ஆதரவான இரு பிரதான சக்திகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இக் கட்சிகளுடன் நல்லுறவை ஏற்படுத்துவது தமிழரசுக் கட்சியின் பிரதான கடமையாகிறது. குறும் தேசியவாத சகதிக்குள் மக்களை அழைத்துச் செல்லாது தேசிய அடிப்படையிலான மாற்றத்தின் பங்குதாரிகளாக மாற்றுவது தமிழ் அரசியல் தலைமைகளின் பிரதான பணியாகிறது.    

எனவே எதிர்வரும் பொதுத் தேர்தல் என்பது தமிழ் அரசியலில் காத்திரமான அடிப்படை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியைத் தோற்றுவிக்க வேண்டும்.  

 

https://arangamnews.com/?p=11302

பார் பெர்மிற் – நிலாந்தன்

1 month 2 weeks ago

பார் பெர்மிற் – நிலாந்தன்

461996942_1062087241948814_4895406642689

அரசுத் தலைவர் அனுர, பார் பெர்மிற் – மதுச்சாலை அனுமதிகள் தொடர்பான விடயத்தைக் கைவிட்டாலும் சுமந்திரன் அதனைக் கைவிட மாட்டார் போலத்  தெரிகிறது என்று ஒரு வெளிநாட்டில் வசிக்கும் நண்பர் முகநூலில் எழுதியுள்ளார். அதில் உண்மை உண்டு. தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பகுதியினருக்கு ரணில் விக்கிரமசிங்க மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் அதிகமாக முன்வைத்ததும் அதைப் பிரசித்தப்படுத்தியதும் சுமந்திரனும் அவருடைய அணியினரும்தான். ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன் வசப்படுத்துவதற்கு அவ்வாறு மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களை வழங்கியதாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே தமது சொந்த மக்களுக்கு மது விற்கிறார்கள் என்பது தமிழ் பொது உளவியலில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய ஒரு குற்றச்சாட்டு. சுமந்திரன் அதை நன்கு விளங்கி தனக்கு எதிரான தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதனை திட்டமிட்டுக் கட்டமைத்து வருகிறார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் மதுச்சாலைகளுக்கான அனுமதிப் பத்திரத்தை அல்லது எரிபொருள் விற்பனை நிலையத்துக்கான அனுமதிப் பத்திரத்தை வாங்குகிறார்கள், மதுசாலைகளையும் எரிபொருள் விற்பனை நிலையங்களையும் தாங்களே நடத்துகிறார்கள் அல்லது தங்களுடைய பினாமிகளுக்கு ஊடாக நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு புதியது அல்ல. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீதும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்டு.

ஆனால் தொகையாக ஒரு தொகுதி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவ்வாறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது இதுதான் முதல் தடவை. அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறுமைப்படுத்தலாம், மக்கள் முன் அம்பலப்படுத்தலாம் அவமானப்படுத்தலாம். அவர்களுடைய வாக்காளர்கள் மத்தியிலேயே அவர்களுடைய மதிப்பைக் குறைக்கலாம். அவர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதையும் தடுக்கலாம்.

தமிழ்ப் பொதுப் புத்திக்குள் குடியாமை அதாவது மது அருந்தாமை என்பது ஓர் ஒழுக்கமாக கருதப்படுகின்றது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய பல சான்றோர், துறைசார் நிபுணர்கள் மதுப்பிரியர்களாக இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்.

இங்கே பிரச்சினை எங்கு வருகிறது என்றால் மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான். அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகிய விக்னேஸ்வரன் அதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியதன் விளைவாக இப்பொழுது சர்ச்சைகளுக்குள் சிக்கியிருக்கின்றார். ஆனால் குற்றஞ்சாட்டப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவர் ஒருவர் தான் இதுவரை குற்றச்சாட்டு தொடர்பாக தனது வாக்காளர்களுக்கு தன்னிலை விளக்கத்தை வழங்கியிருக்கிறார். ஏனைய யாருமே அது தொடர்பாக வாய் திறக்கவில்லை. அரசுத் தலைவர் அந்தப் பட்டியலை வெளிவிடும்வரை காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் குற்றச்சாட்டுகளில் உண்மை உண்டா இல்லையா என்பதனை தமது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களில் மட்டுமல்ல காசுப் பெட்டி கைமாறியது, கள்ள டீல்கள் செய்தது போன்றவை தொடர்பாகவும் வாய்திறக்க வேண்டும். இவை  தொடர்பில் அவர்கள் கள்ள மௌணம் சாதிக்க முடியாது. இவைபோன்ற விடயங்களில் தமது சொந்த மக்களுக்குப் பொறுப்புக்கூற முடியாத அல்லது பதிலளிக்க முடியாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள்.

தென்னிலங்கையில் இப்பொழுது “அனுர அலை” ஒன்று அடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ் நோக்கு நிலையில் அது மெய்யான மாற்றம் இல்லைத்தான். ஆனாலும் அரசியலில் நேர்மையானவர்களையும் கண்ணியமானவர்களையும் தெரிவு செய்ய வேண்டும் என்ற பொது ஜன விருப்பத்தை அது மீண்டும் அரங்கில் பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. அந்த அலை தமிழ் மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், கண்ணியமானவர்கள் போட்டியிட வேண்டும். குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்களும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலை தேக்க நிலையில் வைத்திருப்பதற்கு பொறுப்பானவர்களும் போட்டியிடக் கூடாது என்ற கோரிக்கைகள் வலிமையாக மேலெழுகின்றன. பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், தமது மக்களுக்கு பொறுப்புக் கூறத்தக்க நேர்மையானவர்கள், தகுதியுள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக மேலெழுகின்றன.

இப்படிப்பட்டதோர் பின்னணியில் தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக சுமந்திரன் அணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு வலிமை உண்டு. தமிழ்ப் பொது புத்தியை பொறுத்தவரை மக்கள் பிரதிநிதிகள் மதுச்சாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றது, அல்லது தமது பினாமிகளின் ஊடாக மதுச்சாலைகளை நிர்வகிப்பது என்பது அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கூடியது. ஆனால் தன் அரசியல் எதிரிகளை அவ்வாறு தகுதி நீக்கம் செய்ய முற்படும் சுமந்திரன் அணி அந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் தகுதியுடையதா?

ஏனெனில் சுமந்திரன் எப்படிப்பட்ட ஒரு அரசியலை செய்கின்றார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியலைத்தான் அவர் செய்து வருகிறார். அவர் எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்கிறார். தனது சொந்தக் கட்சியையும் கொட்டிக்குலைக்கிறார். அவரும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஒருவர்தான். அதைவிட முக்கியமாக, தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்புத் தொடர்பில் பொறுப்புக்கூறத்  தயாரற்ற சஜித் பிரேமதாசாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடந்த பொழுது ஐநா கூட்டத் தொடரும் நடந்து கொண்டிருந்தது. அங்கே போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சஜித் பிரேமதாச பொறுப்புக்கூறல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை.

பொறுப்புக்கூறல் எனப்படுவது இறந்த காலத்தில் நிகழ்ந்த குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது. இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயாரற்ற ஒரு தலைவர் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் எப்படிப் பொறுப்புக் கூறுவார்? இந்த விடயத்தில் பொறுப்புக் கூறத் தயாரற்ற சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கும் ஒரு அரசியல்வாதி, தமிழ் அரசியலை எங்கே கொண்டு போய் நிறுத்த முயற்சிக்கின்றார்? தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத் தர முயற்சிக்கின்றார்?

பிரதான அரசியல் விவகாரத்தில் தனது சொந்த மக்களுக்குப் பொறுப்புக் கூறாத ஓர் அரசியல்வாதி தனது அரசியல் எதிரிகள் சலுகையாக மதுச்சாலை அனுமதிகளைப் பெற்றது குறித்துக் குற்றம் சாட்டுகிறார். தனது அரசியல் எதிரிகளை சிறுமைப்படுத்தித் தோற்கடிக்க முயற்சிக்கும் அவர் எப்படிப்பட்ட ஓர் அரசியலை முன்னெடுக்கிறார்? தமிழ் மக்களைச் சிதறடிக்கும் ஓர் அரசியலைத்தானே முன்னெடுக்கிறார்? தனது அரசியல் எதிரிகளைக் குற்றஞ் சாட்டுவதன் மூலம் அவர் தன்னை குற்றமற்றவராகக் காட்டப் பார்க்கிறாரா?

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மிதவாத அரசியல் எனப்படுவது குற்றங்கள் மிகுந்ததாக, கண்ணியமற்றதாக, நேர்மையற்றதாக மொத்தத்தில் பொறுப்புக்கூறத் தயாரற்றதாக மாறிவிட்டது. அதற்கு சம்பந்தரும் பொறுப்பு, சுமந்திரனும் பொறுப்பு. சுமந்திரனை குற்றஞ்சாட்டும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பு. ஆனால் அதைத் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான சக்திகள் மிகவும் தந்திரமாக திட்டமிட்டு பயன்படுத்துகின்றன. எப்படியென்றால், தமிழ் மக்கள் தெரிந்தெடுத்த பிரதிநிதிகளையே அவர்கள் முன் குற்றவாளிகளாகக் காட்டி, சிறுமைப்படுத்தி, கீழ்மைப்படுத்தி தமது சொந்த பிரதிநிதிகளை தமிழ் மக்கள் நம்ப முடியாத ஒரு சூழலை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது எங்கே கொண்டு போய்விடும்? தமது சொந்தப் பிரதிநிதிகளின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அலைக்குப் பின் போகக்கூடிய வாய்ப்புகளை அதிகப்படுத்தும். தமிழ் வாக்குகள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு வெளியே போகும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

இதை இப்படி எழுதுவதற்காக இக்கட்டுரையானது மதுச்சாலை அனுமதிகளைப் பெற்ற அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தக்கூடாது என்று கூறுவதாக   எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தமது வாக்காளர்களுக்குப் பொறுப்புக்கூறும் தகுதியற்றவர்கள் அனைவரையும் தமிழ் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். ஆனால் அதனை தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டும். தமிழ் மக்களை ஒரு இனமாகத் திரட்டுவது; தேசமாகத் திரட்டுவது என்ற நோக்கு நிலையிலிருந்து செய்ய வேண்டும். தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கு நிலையிலிருந்து செய்ய முடியாது. தமிழ் மக்களைச் சிதறடிக்கும் அரசியல்வாதிகள் அதைச் செய்வது என்பது தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்க முற்படும் வெளித் தரப்புகளுக்குத்தான் சேவகம் செய்யும். மாறாக தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கு நிலையில் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள நேர்மையற்றவர்கள், கண்ணியமற்றவர்கள், நபுஞ்சகர்கள், நசியல் பேர்வழிகள், வழிந்தோடிகள், டீலர்கள் போன்றவர்களைத் தமிழ்மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

 

https://www.nillanthan.com/6916/

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை: அதிருப்தியை வெளிப்படுத்தினாரா அநுர!

1 month 2 weeks ago

அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake தோற்கடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு நாடு ( இந்தியா) எப்படி அவருடன் ஒரு சுமூகமான ஒரு உறவை பேண முடியும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா கேள்வியெழுப்பியுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திசாநாயக்கவும் இந்தியாவும் ஒருவரையொருவர் கைவிட முடியாத நிலையிலே உள்ளனர்.

இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சரின் இலங்கைகைக்கான பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையில் ஏனைய நாடுகள் தலையீடுவதை விரும்பவில்லை.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியோ பிரதமரோ சென்று வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை. இதனால் இவர்கள்  ஜனாதிபதி தேர்தலின் போது சஜித்திற்கு ஆதரவளித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்களா என தோற்றுகின்றது என்றார்.

மேலும், தேர்தலுக்கு முன்னரான அஜித் டோவலின் வருகை தேர்தலுக்கு பின்னரான ஜெய்சங்கரின் (S.Jaishankar) வருகை என்பவற்றை அலசி ஆராய்கின்றது இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி.

https://ibctamil.com/article/india-sri-lanka-relationship-jaishankar-visit-sl-1728171442#google_vignette

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்ந்துகொண்டேயிருக்கும்!

1 month 2 weeks ago
05 OCT, 2024 | 12:29 PM
image

டி.பி.எஸ். ஜெயராஜ்

லங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக தேர்தல்களில் வாக்குறுதி  அளித்து மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் எவருமே அதை ஒழிக்கவில்லை என்பது அண்மைக்கால வரலாறு.

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் அநுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்த ஆட்சிமுறையை ஒருபோதுமே ஆதரிக்காத  ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர்  திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அந்த பதவிக்கு வந்தவர்களில் எவருமே அதை ஒழிப்பதில் அக்கறை காட்டவில்லை. சிலர் ஏற்கெனவே ஜனாதிபதி பதவிக்கு இருந்த அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்தார்கள் என்பது எம்மெல்லோருக்கும் தெரியும்.

ஜனாதிபதி திசாநாயக்கவும் அவர்களைப் போன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்று முன்கூட்டியே கூறுவது பொருத்தமில்லை என்றாலும் கூட அவரால் அதைச் செய்யக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. 

திசாநாயக்க பதவியேற்று ஒரு சில தினங்களில் தேசிய மக்கள சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுனில் ஹந்துனெத்தி இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. 

இத்தகைய பின்புலத்தில் இலங்கையில்  ஜனாதிபதி ஆட்சிமுறையின் வரலாற்றை இந்த கட்டுரை திரும்பிப் பார்க்கிறது.

ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக கடந்த பல வருடங்களாக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றபோதிலும், ஜனாதிபதிகளை தெரிவுசெய்வதற்கு மக்கள் தேர்தல்களில் பெருமளவு உற்சாகம் காண்பிப்பது ஒரு முரண் நகையாகும். ஜனாதிபதி ஆட்சிமுறை ஒரு புறத்தில் கடுமைான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்ற அதேவேளை, மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் மக்கள் பெருமளவு ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள்.

பெரிதும் பழிகூறப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் 1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சி முறையை இல்லாமல் செய்து ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்த அந்த அரசாங்கத்தில்  அண்மையில் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் அங்கம் வகித்தார்.

நீண்ட வரலாறு

ஜே.ஆர். ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை  நீண்ட வரலாற்றை கொண்டது. பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் (1965 - 1970)  இராஜாங்க அமைச்சராக (தற்போதைய இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து வேறுபட்டது) பதவிவகித்த ஜெயவர்தன 1966 டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு நிகழ்த்திய உரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய தனது சிந்தனையை முன்வைத்து  அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வகைமாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை ஒன்றுக்கு ஆதரவாக வாதிட்டார்.

"நிறைவேற்று அதிகார தலைவர் நேரடியாக மக்களினால் தெரிவுசெய்யப்படுவார். அவர் குறித்துரைக்கப்படும் வருடங்களை உள்ளடக்கிய தனது பதவிக்காலம் முழுவதும் சட்டவாக்க சபையில் (பாராளுமன்றம்) தங்கியிருக்கமாட்டார். அவர் குறிப்பிட்ட வருடங்கள் பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகார பதவியில் இருப்பார். சட்டவாக்க சபையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகமாட்டார். பாராளுமன்ற கட்சியின் கண்டனத்துக்கு ஆளாகுவோமே என்ற பயத்தில் சரியான, ஆனால் பிரபலமான தீர்மானங்களை எடுக்காமல் விடமாட்டார்" என்று அவர் அந்த உரையில் கூறினார். "மக்களினால் நேரடியாக தெரிவுசெய்யப்படும் நிறைவேற்று அதிகார தலைவர் அதே மக்களினால் தெரிவுசெய்ப்படும் ஒரு  பாராளுமன்றத்தின் விருப்பு வெறுப்புகளில் தங்கியிருக்கமாட்டார்" என்பதே ஜெயவர்தனவின் சிந்தனையின் சாராம்சம்.

அவரின் இந்த கருத்து அரசியல் அதிகார வர்க்கத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் ஜெயவர்தனவுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்திருந்தன. ஜெயவர்தனவின் யோசனையை டட்லி உறுதியாக எதிர்த்தார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் கூட ஒரு சிலரே ஜெயவர்தனவின் யோசனையை ஆதரித்தனர். அத்தகைய சூழ்நிலையின் தனது யோசனையை அவரால் முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. ஆனால் அந்த சிந்தனையை ஒருபோதும் கைவிடவில்லை.

ஆறு வருடங்கள் கழித்து பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் (1970 - 1977) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி தொடர்பான தனது சிந்தனையை ஒரு புரிந்துகொள்ளத்தக்க முன்மொழிவின் வடிவில் முன்வைப்பதற்கு ஜெயவர்தனவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்காக பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அப்போது டட்லி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த அதேவேளை  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெயவர்தன வகித்தார். இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள்  தீவிரமடைந்த நிலையில் ஜெயவர்தன கட்சிக்குள் பெரும்பாலும் தனித்து தன்னெண்ணத்தில் செயற்படும் ஒருவராக விளங்கினார்.

அரசியல் நிர்ணய சபையில் ஜெயவர்தன 1971 ஜூலை 2ஆம் திகதி ஒரு பிரேரணையை முன்வைத்தார். "அரசின் நிறைவேற்று அதிகாரம் குடியரசின் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் அவர் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார். 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் வாக்குகளினால் மாத்திரம் நேரடியாக தெரிவு செய்யப்படும் குடியரசின் ஜனாதிபதி ஏழு வருடங்கள் பதவிக்காலத்தைக் கொண்டிருப்பார்.  அமைச்சரவையின் தலைவராகவும் அவரே இருப்பார்" என்று அந்த பிரேரணையில் கூறப்பட்டது. கொழும்பு மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் இருந்த ரணசிங்க பிரேமதாச  பிரேரணையை வழிமொழிந்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு ஆதரவாக ஜெயவர்தன அரசியல் நிர்ணய சபையில் தனது பேச்சுத்திறனை வெளிக்காட்டி வாதிட்டார். பிரேரணை நிராகரிக்கப்பட்டது.  அவரின் பிரேரணைக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அரசியலமைப்பு விவகார அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா தலைமை தாங்கினார். டட்லி சேனநாயக்க உறுதியாக எதிர்த்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பானர்களும் ஜெயவர்தனவின் பிரேரணையை ஆதரிக்கவில்லை. அன்றைய அரசியல் நிர்ணய சபையினால் ஜெயவர்தன - பிரேமதாச பிரேரணை நிராகரிக்கப்பட்டது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே 22ஆம் திகதி புதிய குடியரசு அரசியலமைப்பை பிரகடனம் செய்தது. சோல்பரி அரசியலமைப்பின் கீழான மகாதேசாதிபதியை (Governor General) ஜனாதிபதி பதிலீடு செய்தார். தேசிய அரச சபை என்று அறியப்பட்ட பாராளுமன்றத்திடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. வில்லியம் கோபல்லாவ  சம்பிரதாயபூர்வமான அரச தலைவராக இருந்தபோதிலும், உண்மையான அதிகாரம் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடமே இருந்தது.

ஜே.ஆர். தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 

டட்லி சேனநாயக்க 1973 ஏப்ரலில் காலமானதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ஜெயவர்தன பொறுப்பேற்றார். தனது தலைமைத்துவத்தை மிகவும் விரைவாகவே நிலையுறுதிப்படுத்தக்கொண்ட அவர் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். இப்போது ஒரு வலுவான நிலையில் இருந்துகொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பான தனது சிந்தனையை அவரால் முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.

"மக்களினால்  தெரிவு செய்யப்படும் ஒரு ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் ஒப்படைக்கப்படும். எமக்கு பழக்கப்பட்டுவிட்ட பாராளுமன்ற முறையும் பேணப்படும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக்  கொண்ட  கட்சியில் இருந்து பிரதமரை ஜனாதிபதி தெரிவுசெய்வார். தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சர்களாக இருப்பர்" என்று ஐக்கிய தேசிய கட்சியின் 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் ஆட்சிமுறையில் இருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கான மாற்றம் என்பதே அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான பிரசாரப் பொருளாக அமைந்தது. மகத்தான வெற்றி பெற்ற அந்த கட்சி பாராளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 141  ஆசனங்களைக் கைப்பற்றியது. 1977 ஜூலையில் ஜெயவர்தன பிரதமராக பதவியேற்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் தனது சிந்தனையை நடைமுறைப்படுதும் நோக்கில் அவர் விரைவாகச் செயற்படத் தொடங்கினார்.

ஜே.ஆர். ஜெயவர்தனவும் சில அமைச்சர்களும்  ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கியஸ்தர்களும் (ஜே. ஆரின்  சகோதரரர் எச்.டபிள்யூ. ஜெயவர்தன  கியூ.சி. உட்பட) முன்னணி சட்ட அறிஞர் மார்க் பெர்னாண்டாவின் உதவியுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் இலக்கை  நோக்கி செயற்படத் தொடங்கினர்.  பூர்வாங்க கலந்தாலோசனை 1977 ஆகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெற்றது. முதலில் 1972 அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்று வரையப்பட்டது. அது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்ட பிறகு தேசிய நலனுக்கு  அவசரமான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

அதற்கு பிறகு அது தொடர்பான சட்டமூலம்  'அவசர சட்டமூலமாக' அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த  அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு சபாநாயகரால் அனுப்பி வைக்கப்பட்டது.  அந்த நீதிமன்றம் 24 மணி நேரத்துக்குள் சட்டமூலத்தை அங்கீகரித்தது. பிறகு தேசிய அரச சபையில் (பாராளுமன்றம்) விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. 1972 குடியரசு அரசியலமைப்புக்கான இரண்டாவது திருத்தமாக அது 1977 செப்டெம்பர் 22ஆம் திகதி தேசிய அரச சபையினால் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு மாற்றப்பட்டது. இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜெயவர்தன 1978 பெப்ரவரி 4ஆம் திகதி (சுதந்திர தினம்) பதவியேற்றார்.

7d39996f-9891-4d49-a3f6-23f69d4530b3.jfi

பாராளுமன்ற தெரிவுக்குழு 

அதேவேளை, 1972 அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரும் இலக்கு நோக்கியும் ஜெயவர்தன செயற்படத் தொடங்கினார். தேசிய அரச சபையில் 1977  அக்டோபர் 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றையடுத்து சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமித்தார். இலங்கை குடியரசு அரசியலமைப்பையும் எழுத்தில் உள்ள ஏனைய சட்டங்களையும் மீளாய்வு செய்வதே அந்த தெரிவுக்குழுவுக்கு உரிய ஆணையாகும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு 1977 நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. பிரதமராக இருந்த ஜெயவர்தனவே தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் கொழும்பு மேற்கு தொகுதி உறுப்பினராக இருந்தார். பிறகு அவர் 1978ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற  பிரேமதாச தெரிவுக்குழுவுக்கு தலைவராக சபாநாயகரால் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே அவர் தெரிவுக்குழுவின் உறுப்பினராக இருந்தார்.

காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, றொனி டி மெல், கே.டபிள்யூ.தேவநாயகம்,   எம்.எச்.எம். நைனா மரிக்கார்  ஆகியோர் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கவும் மைத்திரிபால சேனநாயக்கவும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறூப்பினர்கள். 1977ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் இணைந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானும் தெரிவுக்குழுவில் இருந்தார்.

அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு மறுத்துவிட்டது. இடதுசாரி கட்சிகள் 1977 பொதுத் தேர்தலில் துடைத்தெறியப்பட்டதன் விளைவாக தெரிவுக் குழுவில் ரொட்ஸ்கியவாதிகளோ அல்லது கம்யூனிஸ்டுகளோ அந்த குழுவில் இடம்பெறுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

முன்னதாக இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவி புதிய அரசியலமைப்பு வரைவில் இப்போது சேர்க்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இப்போது அரசினதும் அரசாங்கத்தினதும் தலைவர். தேர்தல் முறையும் தொகுதி அடிப்படையிலான முறையில் இருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாற்றப்பட்டது. இலங்கை குடியரசு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக மாறியது.

"ஜே.ஆர். அரசியலமைப்பு" என்று பிரபல்யமாக கூறப்படும் புதிய அரசியலமைப்பு  1978 செப்டெம்பர் 7ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டதை அடுத்து இலங்கையின்  அரசியல் முறைமை பிரிட்டிஷ் வெஸ்ட்மினிஸ்டர் முறைமையில் இருந்து பிரெஞ்சு கோலிஸ்ட் அரசியலமைப்பை நெருக்கமாக ஒத்த முறைமையாக மாறியது. அதிகாரம் சம்பிரதாயபூர்வமான பதவியில் இருந்து மெய்யான அரச தலைவராக மாற்றப்பட்ட  ஜனாதிபதிக்கு மாறியது. இதையடுத்து பிரதமர் பதவியின் மதிப்பு குறைக்கப்பட்டது.

அவசரமாக நிறைவேறிய திருத்தம்

 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை  அறிமுகப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்னதாக 1972 குடியரசு அரசியலமைப்புக்கு இரண்டாவது திருத்தத்தை ஜெயவர்தன கொண்டு வந்தபோது பெருமளவு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக அந்த திருத்தத்தில் அவர் காட்டிய அவசரம் குறித்து கடுமையாக விசனம் தெரிவிக்கப்பட்டது.

லங்கா சமசமாஜ கட்சியின் பழம்பெரும் ரொட்ஸ்கியவாத தலைவரான கலாநிதி என்.எம். பெரேரா அந்த விசனங்களை வெளிப்படுத்தி ஒரு பகிரங்க சொற்பொழிவை நிகழ்த்தினார். அது ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.

"இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு காட்டப்பட்டிருக்கும் அவசரம் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பு ஒன்றை திருத்துவதில் ஏன் இந்தளவு அவசரம்?  எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பு திருத்தங்கள் எனப்படுபவை ஓரிரு வருடங்களுக்கு உரியவை அல்ல. எல்லாக் காலங்களுக்கும் உரியவை. எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட வேறு எந்த நாடுமே  ஜெயவர்தன  செய்வதைப் போன்று ஒரு திருத்தத்தை முன்யோசனையற்ற முறையில் அவசரமாக கொண்டுவந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

"பெரும்பாலான அரசியலமைப்பு திருத்தங்கள் பயனளிப்பதற்கு பல வருடங்கள் எடுக்கும். சில நாடுகள் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும். இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பில்  வேறுபட்ட அபிப்பிராயங்களை கொண்டவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் தங்களது அபிப்பிராயங்களை பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தி அவற்றை முழுமையாக பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துவதற்கான உரிமையை ஏன் பறிக்கவேண்டும்?" என்று கலாநிதி பெரேரா கூறினார். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அவசரமாக கொண்டுவருவதற்குஎ பதிலாக புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக் ஏன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் கொண்டு வரமுடியாது என்பதே பல வட்டாரங்களிலும் கிளப்பப்பட்ட தர்க்க ரீதியான கேள்வியாகும். இந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயவர்தன  2வது திருத்தத்தை தான் நினைத்தபடி நிறைவேற்றினார்.

ஐக்கிய தேசிய கட்சி முகாமில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்புவதற்கு முன்னதாக அதைச் செய்துமுடித்துவிட வேண்டும் என்பதற்காகவே அந்தளவு அவசரத்தை ஜெயவர்தன காட்டினார். பிரதமர் பதவியை மலினப்படுத்தி பாராளுமன்றத்தின் பெறுமதியையும் குறைத்து தனியொருவரிடம் அதிகாரங்களை குவிக்க வழி செய்யும் முறைமை ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடமே அங்கீகாரத்தை கோருவது என்பது துணிச்சலானதும் ஆபத்தானதுமான காரியமாகும். அது தாங்களாக முன்வந்து மரக்குற்றியில் தலைகளை வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்பதற்கு சமமானதாகும். 

அதனால் சாத்தியமானளவு விரைவாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை கொண்டுவர வேண்டியது ஜெயவர்தனவை பொறுத்தவரை அவசரமானதாக இருந்தது. காலம் தாழ்த்தினால் சந்தேகங்களும் எதிர்ப்பும் கிளம்பக்கூடும். அதனால் ஜெயவர்தன தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டார். ரணசிங்க பிரேமதாச தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு "ஜெயவேவா" போட்டார்கள். பிரதமராக வந்ததன் மூலம் பிரேமதாச பெருமிதமடைந்தார். ஆனால், பிரதமர் பதவி என்பது "கௌரவமான பீயோனாக" தாழ்த்தப்பட்டதை அவர் விளங்கிக்கொள்வதற்கு அப்போது காலங் கடந்துவிட்டது.

அரசியல் என்பது சாத்தியமானதை சாதிக்கும் கலையாகும். அதில் நேரம் முக்கியமானது. ஜெயவர்தனவைப் பொறுத்தவரை புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக தாமதமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை கொண்டுவருவதை விடவும் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அதைச் செய்வது விருப்பத்துக்குரியதாக இருந்தது. அரசியலயைப்பு திருத்தம் என்பது உடனடி யதார்த்தம். புதிய அரசியலமைப்பு ஒன்று தொலைவில் உள்ள சாத்தியப்பாடு மாத்திரமே.

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்  

ஜனாதிபதி ஆட்சிமுறை நிறுவப்பட்ட பிறகு பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் "ஆசியாவில் கோலிஸ்ட் முறைமை; இலங்கையின் அரசியலமைப்பு"  என்ற நூலில் அது குறித்து ஆய்வு செய்தார். "உள்ளுக்குள் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ எளிதில் தாக்கத்துக்கு உள்ளாகாத உறுதி வாய்ந்த நிறைவேற்று அதிகாரத்தை ஜெயவர்தன விரும்பினார். அதன் இறுதி விளைவே பல வழிகளிலும் அதுவும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் பிரெஞ்சு ஜனாதிபதியையும் விட கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட  இந்த ஜனாதிபதி பதவி" என்று அவர் எழுதினார்.

ஜெயவர்தன ஜனாதிபதி ஆட்சிமுறை ஒன்றை  அறிமுகப்படுத்திய போதிலும் கூட, பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்து அமைச்சரவையை நியமிக்கும் ஏற்பாட்டைக் கொண்டுவரவில்லை. அமைச்சரவைக்கு  சமாந்தரமான ஒரு அதிகார மையமாக பலம்பொருந்திய ஜனாதிபதி செயலகம் ஒன்று இருப்பதையும் ஜெயவர்தன விரும்பவில்லை. ஏன் அது? 

அந்த விவகாரத்தில் பேராசிரியர் வில்சனின் விசேடமான கேள்விக்கு பதிலளித்த ஜெயவர்தன, "ஜனாதிபதியைச் சுற்றி இருக்கக்கூடிய ஆலோசகர்களை நியமிக்க நான் தயங்குகிறேன் என்பதை நான் நிச்சயம் கூறவேண்டும். அதற்கு காரணம் பிரதமரையும்  அமைச்சரவை உறுப்பினர்களையும்  மாத்திரமே ஜனாதிபதி ஆலோசகர்களாகக் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களே மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்" என்று கூறினார்.

இந்த நிலைப்பாட்டை ஜெயவர்தன  1978 மே 31ஆம் திகதி இலங்கை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தியபோது விபரித்துக் கூறினார்.

"நான் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, அரச தலைவர், அரசாங்க தலைவர். இது அதிகாரம் மிக்க பதவி. அதனால் பொறுப்பு வாய்ந்த பதவி. எனக்கு பிறகு பலர் இந்த பதவிக்கு வரவிருப்பதால் அவர்கள் எல்லோரும் பின்பற்றுவதற்கு பெறுமதியான முன்னுதாரணங்களை எனது பதவிக் காலத்தில் உருவாக்க விரும்புகிறேன். முதலாவதாக, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் ஊடாகவே நான் எப்போதும் செயற்படுவேன். அவர்களது அதிகாரங்களை மலினப்படுத்தாமல் பாராளுமன்ற முறைமையை பேணுவேன். இரண்டாவதாக, ஜனாதிபதி மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அவரின் ஆட்கள் என்று அறியப்படும் ஒரு குழுவை நான் உருவாக்கப்போவதில்லை"  என்று அவர்  தனதுரையில்  கூறினார்.

ஜெயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தபோது பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். "தரங்குறைக்கப்பட்ட" பாராளுமன்றத்தை விடவும் ஜனாதிபதி பதவி மேலானதாகவும் சுதந்திரமானதாகவும் இருந்தபோதிலும், ஜெயவர்தன சாத்தியமானளவுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக செயற்படுவதற்கே விருப்பினார். அது உண்மையில் அவரின் பொம்மையாக இருந்ததே அதற்கு காரணமாகும். தவிரவும், அவ்வாறு செய்வது ஒரு சர்வாதிகாரி போன்று அதிகாரத்தை அபகரித்துவிட்டதாக முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுக்களின் கடுமையை  தணிக்கவும் உதவியது. 

அவ்வாறாக  பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருந்த பிரமாண்டமான பெரும்பான்மை ஜெயவர்தன  சர்வாதிகாரி என்று நாமம் சூட்டப்படாமலேயே  ஒரு சர்வாதிகாரியை போன்று  ஆதிக்கப் போக்குடன் அதிகாரத்தை பயன்படுத்த உதவியது. இவை எல்லாவற்றுக்கும் பாராளுமன்றத்தின் மீது முழுக்கட்டுப்பாடு தேவைப்பட்டது. சர்ச்சைக்குரிய பல வழிமுறைகளின் ஊடாக பாராளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் அவர் தொடர்ந்து வைத்திருந்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிறகு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை ஜே.ஆரின் அரசியலைமைப்பு தடுத்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு மாறுவதை அரசியலயைப்பு ரீதியான சட்டத்தின் மூலமாக அவர் தடுத்தார். ஜெயவர்தனவும் பிரேமதாசவும் ஐக்கிய தேசிய கட்சியின் தளத்தை சமூகத்தின் பல தரப்பினரையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியதன் விளைவாக  1977 பொதுத் தேர்தலில் பெருமளவு "சாமானியர்கள்" பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். 

கடுமையான உயர் வர்க்க உணர்வு கொண்ட ஜெயவர்தன மக்கள் பிரதிநதிகளின் விசுவாசங்கள் குறித்து நம்பிக்கையற்றவராக இருந்தார். அதனால் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்கு கட்சிமாறலை தடுக்க வேண்டியிருந்தது. என்றாலும், மட்டக்களப்பு தொகுதி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரை அரசாங்கத்துடன் இணைவதற்கு வசதியாக ஜெயவர்தன அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தார். அபகீர்த்தி மிக்க அந்த "இராஜதுரை திருத்தம்" எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க பங்கத்துக்கு வருவதற்கு வசதியாக அமைந்தது. ஆனால், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தரப்புக்கு செல்லமுடியாது.

பிரமாண்டமான பாராளுமன்ற பெரும்பான்மைப் பலத்தை பேணுவதற்கு இன்னொரு சூழ்ச்சித்தனமான வழிமுறையையும் ஜெயவர்தன  கையாண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமானைத் தவிர அரசாங்கத்தின் ஏனைய சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் திகதியிடப்படாத பதவிவிலகல் கடிதங்களை அவர் கேட்டுப் பெற்றுக்கொண்டார். கட்சிக்கு அவர்கள் துரோகம் இழைப்பதை அது தடுத்தது.

பழிப்புக்குள்ளான சர்வஜன வாக்கெடுப்பு 

1982ஆம் ஆண்டின்  சர்வஜன வாக்கெடுப்பு ஜெயவர்தன செய்த மிகப் பெரிய ஜனநாயக விரோதச் செயலாக அமைந்தது. 1977ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இன்னொரு ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதில் அவர் வெற்றியும் பெற்றார். 

பாராளுமன்ற தேர்தல் 1983ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜெயவர்தனவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும் வரை ஐக்கிய தேசிய கட்சியின் ஆறில் ஐந்து பாராளுமன்ற பெரும்பான்மையை வைத்திருப்பதே அதன் நோக்கமாகும்.

இதே ஜெயவர்தனதான் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 1975ஆம் ஆண்டில் இருந்து 1977ஆம் ஆண்டு வரை நீடித்ததை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று ஆட்சேபித்தார். கொழும்பு தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய அவர் "ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக" 1975ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெருவெற்றி பெற்றார். தனது ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்கள் நீடிப்பதில் அவருக்கு எந்த மன உறுத்தலும் இருக்கவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இப்போது 46 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. அதன் ஆரம்பத்தில் இருந்தே அந்த ஆட்சி முறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இலங்கையில் தவறாகிப்போன சகல விடயங்களுக்கும் ஜே.ஆரின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை மீதே பழிபோடப்பட்டது. இலங்கையில் உள்ள சகல கெடுதிகளுக்கும் மூல காரணம் ஜனாதிபதி ஆட்சி முறையே என்று கண்டனம் செய்வது  அரசியல் ரீதியில் ஒரு நாகரிகமாகிவிட்டது.

1991ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக காமினி திசாநாயக்கவும் லலித் அத்துலத் முதலியும் கிளர்ச்சி செய்யத்தொடங்கிய நாள் முதலாக இலங்கையின் அரசியல் விவாதத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இலங்கையில் முதலாவது சிங்கள பேசும்படம் 1947ஆம் ஆண்டில் வெளியானது. அந்த படத்தின் பெயர் "கடவுனு பொறந்துவ" (மீறப்பட்ட வாக்குறுதி) என்பதாகும். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்ற வாக்குறுதியைப் பொறுத்தவரை கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் மீறப்பட்ட வாக்குறுதிகளையே பார்த்து வருகிறார்கள்.  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக தேர்தல்களில் வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற்று பதவிக்கு வந்ததும் அதை நிறைவேற்றாமல் விட்டதே இதுவரையான அனுபவமாக இருக்கிறது.

பல்வேறு அரசாங்கங்கள் வந்து போய்விட்டன. பல ஜனாதிபதிகளும் வந்து போய்விட்டார்கள். ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதை ஒழிப்பது தொடர்பில் பொதுவில் அரசியல் கட்சிகளினாலும் குறிப்பாக பிரதான கட்சிகளினாலும் கருத்தொருமிப்புக்கு வரமுடியாமல் இருப்பது அல்லது கருத்தொருமிப்புக்கு வர விருப்பமில்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதையோ அல்லது அதன் அதிகாரங்களை குறைப்பதையோ  அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அல்லது புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக மாத்திரமே செய்யமுடியும்.  இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரமும் பெறப்படவேண்டும்.  மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்கள்  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவில்லை. அதேவேளை ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு விரும்பிய அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை.

அல்பிரட் ரெனிசனின் நீரோடை 

விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கவில்லை. அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. அதனால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்தொருமிப்பு நழுவிக்கொண்டே செல்கிறது.  ஜனாதிபதிகள் வரலாம் போகலாம். ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தனவின் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஆங்கிலேயக் கவிஞர் அல்பிரட் ரெனிசனின் நீரோடை போன்று  என்றென்றைக்கும் ஓடிக்கொண்டேயிருக்கும்.

https://www.virakesari.lk/article/195539

இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?

1 month 2 weeks ago
ஜெய்சங்கர் மற்றும் அநுர குமார திஸாநாயக்கவை

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், முதல் தடவையாக இலங்கைக்கு வருகைத் தந்த உயர்நிலை வெளிநாட்டு இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மக்களினால் தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரி கட்சியொன்று ஆட்சி பீடம் ஏறியது சர்வதேச அளவில் பேசுப் பொருளாக மாறியது.

இலங்கை நிலப் பரப்பு தொடர்பில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதிக போட்டித்தன்மையுடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், இடதுசாரி கட்சியொன்று ஆட்சி பீடம் ஏறியமை பூகோள அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ஒரு நாள் இலங்கை விஜயமானது, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெய்சங்கரின் இலங்கை விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றைய தினம் (அக்டோபர் 4) இலங்கையில் ஒரு நாள் விஜயம் செய்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வருகைத் தந்தார். எஸ்.ஜெய்சங்கருடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்நிலை குழுவொன்றும் வருகைத் தந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலை குழுவினர் வரவேற்றனர்.

எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை முதலில் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் பயணங்களில் , தமிழ் கட்சிகளை சந்திப்பது வழமையானது என்ற நிலையில், இம்முறை தமிழ் கட்சியை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தவில்லை.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு, இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினர்.

 
அநுர குமார திஸாநாயக்க மற்றும் எஸ்.ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பு

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பல்வேறு துறைகளின் ஊடே பலப்படுத்திக் கொள்வது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடுகள், மின்சக்தி மற்றும் வலுசக்தி, பால் சார்ந்த உற்பத்தித் துறை என்பவை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அக்கறையை வலியுறுத்திய அவர், இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும் தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக இந்தியாவின் பாரிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்தியாவுடனான தொடர்புகளை தொடர்ந்து பேணுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை போன்ற இரு தரப்பும் அக்கறை காட்டும் விடயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து வெகு விரைவில் இந்தியாவிற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி விடுத்த அழைப்பை ஜனாதிபதிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரியப்படுத்தினார். அதை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வருகைத்தர வேண்டுமென இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.

 
பிரதமர் ஹரினி அமரசூரிய

பட மூலாதாரம்,HARINI AMARASURIYA

படக்குறிப்பு, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் சந்தித்து பேசினார்.
இலங்கை பிரதமருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான கலந்துரையாடலின் போது பேசியதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பதவியேற்ற ஹரிணி அமரசூரியவிற்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்து இரண்டு தரப்பினரும் கலந்துரையாடல்களை நடாத்தித்தியுள்ளனர்.

 
சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்

இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் விசேட சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.

இலங்கை எதிர்நோக்கிய வங்குரோத்து நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு, சஜித் பிரேமதாஸ தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் ஒத்துழைப்பை தான் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கூறிய சஜித் பிரேமதாஸ, இந்தியாவுடனான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

 
சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம்,SAJITH PREMADASA MEDIA

படக்குறிப்பு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்தார்
தமிழ் கட்சிகளை சந்திக்காதது ஏன்?

இலங்கை அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக செயற்பாட்டை இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

'அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றதுமே தான் பெரிய நாடு என்பதை காண்பிப்பதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் முதல் விஜயத்தையும் நான் அப்படியே பார்க்கின்றேன். இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்துடனும் நேரடி தொடர்புகளை இந்தியா பேணி வருகின்றது. வேறு நாடுகள் அரசியல் கட்சிகளுடன் நேரடி தொடர்புகளை இந்தியா போன்று வைத்திருக்காது. இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரிய பலமொன்று வர போவதை ஏற்கனவே உணர்ந்ததால்தான் அநுர குமார திஸாநாயக்கவை முன்கூட்டியே நேரில் அழைத்து இந்தியா பேசியிருந்தது. இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும், இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் தக்க வைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றது." என்று அவர் கூறினார்.

 
மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன்

பட மூலாதாரம்,NIRSHAN

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் இராமானுஜம் நிர்ஷன்
தமிழ் கட்சிகளை ஏன் சந்திக்கவில்லை?

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் தமிழ் கட்சிகளை சந்திக்கவில்லை என்பது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் கட்சியொன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி தமிழிடம் பேசினார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒரு நாள் விஜயமாக வருகைத் தந்தமையினால், நேரமின்மை காரணமாக அரசத் தலைவர் உள்ளிட்ட சிலரை மாத்திரமே சந்தித்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். அதனாலேயே, தமிழ் கட்சிகளை சந்திக்காது உடனடியாக நாடு திரும்பியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே தமிழ் கட்சிகளுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறினார். இந்தியா இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்த போதிலும், அது சாத்தியப்படாத ஒன்று எனவும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

இளைஞர்களின் அரசியல் வருகையை தட்டிப்பறிக்கும் வயதான தமிழ் அரசியல்வாதிகள்

1 month 2 weeks ago

தமிழர் அரசியல் களத்தில் இளைஞர்கள் களமிறங்க வேண்டுமென்றால் சில முதியவர்கள் தாமாக முன்வந்து ஓய்வுபெற வேண்டுமென்று பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (D. Dibhakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 15 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் எந்தவொரு காத்திரமான அரசியலையும் முன்னெடுக்கவில்லை.

தமிழர் அரசியல் களம்

அழிவின் விளிம்பில் தமிழ் தேசிய கட்டுமானம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் தரப்பில் சில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போதுள்ளவர்களும் அவ்வாறு ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வாயப்பளிக்க வேண்டும்.

அத்தோடு, இளைஞர்களும் தானாக வந்து அரசியலை கையில் எடுத்தால் மாத்திரமே தமிழர் அரசியல் களத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

மேலும், இலங்கை அரசியலில் இந்தியாவின் வகிபங்கு, தமிழர் அரசியல் களம், இளைஞர்களின் அரசியல் வருகை மற்றும் வயதான அரசியல்வாதிகளின் ஓய்வு தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://ibctamil.com/article/the-political-arrival-of-youth-in-the-tamil-region-1728079807#google_vignette

ஒப்பரேசன் பார் லைசன்ஸ்'சிக்கிய தமிழ்க் கட்சிகள் | இரா மயூதரன்.

1 month 2 weeks ago

 

இந்தக் காணொளியில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் எடுத்தவர்களின் குணாதிசயங்கள் அனுபவங்கள் தமிழ்தேசியம் என்று சொல்லிச் சொல்லியே எப்படி தமிழ்மக்களை அழிக்கிறார்கள் என்று பல்வேறு கோணத்தில் அலசப்படுகிறது.

இடையில் ஒரு உதாரணத்துக்கு தேசியதலைவரின் மதிநுட்பத்தையும் குறுகிய சிந்தனை இல்லாமல் நீண்டகாலமாக மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று எண்ணி

நந்திக் கடலில் இரால்பண்ணை வைக்கலாம் நிறைய லாபம் எடுக்கலாம் என்று ஒரு திட்டத்தை வைத்த போது இதில் அனுபவம் இல்லாத தலைவர்

இரால்பண்ணை எங்கெங்கே செய்கிறார்கள் என்று ஆராய்ந்து நீர்கொழும்மு பக்கத்திலிருந்தவர்களை வரவழைத்து அதன் நன்மைதீமை பற்றி முழுமையாக ஆராய்ந்து கடைசியில் அந்த திட்டம் வருமானமாக இருந்தாலும் 

இந்த மண்ணும் கடலும் நச்சுத்  தன்மை கொண்டதாகவும் மலட்டுத்தன்மை கொண்டதாகவும் 10-15 வருடங்களில் மாறிவிட்டால் மீண்டும் அந்த கடலையோ மண்ணையோ அடுத்த சந்நதி பாவிக்க முடியாது என்பதால் அத்திட்டத்தை முற்றாகவே கைவிட்டதாக சொல்கிறார்.

இவர் தான் மக்களுக்கான தலைவன்.இல்லை கடவுள்.

இதைப்பற்றிய உரையாடலை 18வது நிமிடத்திலிருந்து விரும்பியவர்கள் கேட்கலாம்.

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி வட, கிழக்கு நகரவேண்டும்

1 month 2 weeks ago

Published By: VISHNU   03 OCT, 2024 | 08:30 PM

image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி 

  • தெற்கில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம்.  அதேபோன்று வடக்கு கிழக்கிலும் பாரிய அரசியல் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது

புதிய அரசியல் என்பது நீண்ட காலமாகவே தமிழ அரசியல் பரப்பில் ஒரு சவாலாக காணப்படுகிறது. ஐக்கிய இலங்கைக்குள் தென்பகுதி மக்களுடன், முஸ்லிம் மக்களுடன், மலையக மக்களுடன் இணைந்த ஒரு அரசியலை நாம் எவ்வாறு முன்னெடுப்பது  என்பது இங்கு முக்கியமாகும் என்று யாழ். பல்கலையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் பொருளாதார நிபுணருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்தார். 

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர்  இவற்றை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு  

கேள்வி இலங்கையின் வரலாற்றில்  பாரம்பரிய கட்சிகளிலிருந்து விலகி  மாற்று அணிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். புதிய ஜனாதிபதி  தெரிவை எப்படி பார்க்கின்றீர்கள்? 

பதில் இதனை ஒரு வரலாற்று ரீதியான மாற்றமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.  அதாவது இலங்கையில்  பிரதான இரண்டு கட்சிகள் அல்லது அதிலிருந்து பிரிந்து வந்த கட்சிகளுக்கு அதிகாரத்தை கொடுக்கவில்லை.  இலங்கையில் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு  கட்சி தற்போது ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருக்கின்றது.  நாம் 2022 ஆம் ஆண்டில் இருந்து மிகப்பெரிய ஒரு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறோம். 

இந்த பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போது ஏற்பட்டு இருக்கின்ற இந்த மாற்றம் இரண்டும் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றன.  எனவே இங்கு எழுகின்ற மிக முக்கியமான கேள்வி, இந்த பாரிய பொருளாதர நெருக்கடியில் இருந்து இந்த அரசாங்கம் எங்களை மீட்டெடுக்குமா என்பதாகும்.  

கேள்வி அந்த சவாலை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எப்படி சமாளிக்கும் ?

பதில் உண்மையில் பாரிய சவாலாக தான் இருக்கப் போகிறது.  யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுபோன்ற ஒரு ஆழமான பொருளாதார  நெருக்கடியை தீர்த்து வைப்பதற்கு பல வருடங்கள் போகலாம். ஆனால் அவர்கள் உடனடியாக என்ன செய்வார்கள் என்ற ஒரு கேள்வி இருக்கிறது.  கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும்   பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.  குறிப்பாக வறுமை இரட்டிப்பாகியிருக்கிறது.   

போஷாக்கின்மை ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.  வேலையின்மையும் காணப்படுகிறது. இதுபோன்று பல நெருக்கடிகள் நாட்டில் காணப்படுகின்றன.  வாழ்க்கைச் செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.  எப்போதும் இல்லாதவாறு தற்போது நாட்டின் பொருளாதாரம் சுருங்கியிருக்கிறது. எனவே பொருளாதார ரீதியாக மக்களுக்கு நிவாரணங்களை கொடுக்க வேண்டும்.  அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரித்து படிப்படியாக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

அதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஆனால் இங்கு ஒரு மிகப்பெரிய சிக்கலும் இருக்கிறது.  இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடன்களை மீள் செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலைக்கு சென்றது. அதனுடன் தொடர்புபட்டதாகவே நாணய நிதியத்துடன் நாங்கள் ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம். 

அவர்களின் இறுக்கமான நிபந்தனைகளும்  காணப்படுகின்றன.  அவற்றைப் பார்க்கும்போது அரசாங்கம் சிக்கன கொள்கைகளை முன் கொண்டு செல்ல வேண்டும்.  எனவே சிக்கன கொள்கையை கடைப்பிடித்தல் மறுபுறம் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் என்பது இருவேறுபட்ட விடயங்கள். 

அந்தவிடயத்தை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது மிகப்பெரிய விடயமாகும்.  மறைமுக வரியை கொண்டு செல்வதும் கடினமாக இருக்கும்.  காரணம் மக்களின் வருமானம் குறைவாக இருக்கின்றது.  இவ்வாறான சூழலில்  சொத்து வரியை அறிமுகப்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. மீள்விநியோகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை கொண்டு வரலாமா என்று பார்க்கப்படலாம்.  ஆனால் அதற்கு பாரியதொரு அரசியல் விருப்பு தேவையாகும்.  ஒருசில தரப்பினர் அதனை விரும்பமாட்டார்கள். 

கேள்வி  சர்வதேச நாணயத்துடனான  பயணம் தொடரும் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாரே? 

பதில் தற்போதைய ஜனாதிபதிக்கு இருக்கின்ற முக்கியமான சவால் என்னவென்றால் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  தற்போது அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.  எனவே அவர்களின் கவனம் தற்போது பாராளுமன்ற தேர்தலில் இருக்கின்றது.  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றால் மட்டுமே மாற்றங்களை செய்ய முடியும்.  அதனால் எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் அவர்கள் பாரிய மாற்றங்கள் எதையும் செய்யமாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

கேள்வி தற்போதைய அரசாங்கம் இந்த வெற்றிமுகத்தை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு மற்றும் மக்களின் தேவைகள் நிறைவேற்றுவதற்கு ஒரு புத்திஜீவி என்ற வகையில் உங்களது ஆலோசனைகள் எப்படி இருக்கும்?

பதில் தற்போது ஜனாதிபதி தலைமையிலான   அரசாங்கத்திற்கு மூன்று சவால்கள் காணப்படுகின்றன.  முதலாவது மக்களுடைய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதேபோன்று புதிய அரசாங்கம் என்று வரும்போது முதலாளித்துவ சமூகத்தின்  எதிர்ப்பும் காணப்படும்.  அதற்கு முகம் கொடுப்பது அவசியம்.   

மூன்றாவதாக சர்வதேச ரீதியான அழுத்தங்களும் ஏற்படலாம்.  எனவே இந்த மூன்று தரப்பையும் சமாளித்துக் கொண்டு படிப்படியாக அரசாங்கம் பயணிக்க வேண்டியுள்ளது.     அதேநேரம் ஒரு புது திசையிலும் நாட்டை கொண்டு செல்ல வேண்டும்.  எமது நாட்டின் வரலாற்றில் அரசியல் பொருளாதாரப் பார்வையில் இது உண்மையிலேயே ஒரு திருப்புமுனையாகும்.  அந்த திசைமாற்றத்தை அவர்கள் படிப்படியாக எப்படி செய்யப் போகிறார்கள்?  அந்த திசை மாற்றத்திற்கான அரசியல் விருப்பு மற்றும்   தேசிய இணக்கப்பாடு என்பவற்றினூடாக அதனை செய்ய முடியும். 

கேள்வி  தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை இடதுசாரி ஆட்சி என்றும் ஒருபுறத்தில் சிலர் விழிப்பதை காண்கிறோம்.  அந்த பின்னணியில் மேற்குலகம் இந்த வெற்றியை எப்படி பார்க்கும்?

பதில் அந்த தரப்புக்கள் இதனை ஒரு சந்தேகத்துடன்தான் பார்க்கும்.  காலம் காலமாக காலணித்துவத்தில் இருந்து அவர்களுடன் இணங்கி போகின்ற ஒரு அரசாங்கத்தை தான் எப்போதும் மேற்கு நாடுகள் விரும்பும்.   அதேநேரம் ஜே.வி.பி.யின் வரலாற்றை எடுத்தும்  பார்க்கும்போது கடந்த 20 வருடங்களில் பாரிய மாற்றங்கள் வந்திருக்கின்றன.  அவர்கள் தமது அந்த தீவிர இடதுசாரி கொள்கைகளிலிருந்து தங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

கிராமப்புறங்களில் இருந்து  நகரங்களை நோக்கி தமது தளங்களை அமைத்திருக்கின்றார்கள்.  கடந்த சில வருடங்களில் முழுமையாக நடுத்தர வர்க்கத்தை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். உதாரணமாக ஊழலுக்கு எதிரான அவர்களது பிரச்சாரத்தை பார்க்கும்போது அது பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் நடுத்தர வர்க்கத்துடன் தாக்கம் செலுத்துவதாகவே இருக்கும்.  அந்தவகையில் அவர்கள் தங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். 

அப்படியிருந்தும் சர்வதேச மட்டத்தில் சில அழுத்தங்கள் வரும்.    அதற்கு முகம் கொடுப்பதற்கு அவர்களுக்கு இலங்கை மக்களிடமிருந்து பாரிய ஆதரவு இருந்தால்தான் முடியும்.  மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் ஊடாகத்தான் இதனை செய்யக் கூடியதாக இருக்கும். 

கேள்வி வட, கிழக்கு தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் நீண்ட காலமாக தமக்கான ஒரு அரசியல் தீர்வை கோரி வருகின்றனர்.  தற்போதைய இந்த புதிய அரசாங்கத்தில் வடக்கு,  கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் எப்படி அணுகப்படும் என்று நீங்கள் பார்க்கிறீர்கள்?

பதில் சிறுபான்மை மக்கள் முகம் கொடுக்கும் பாரபட்சம் ஒடுக்குமுறைகள் நீண்டகால பிரச்சினையாக வந்திருக்கின்றன.  அதற்கான தீர்வாகத்தான் அதிகார பகிர்வு, அதிகார பரவலாக்கம் என்பன முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் ஜே.வி.பி.யின் வரலாற்று ரீதியான  பார்வைகளை பார்க்கும்போது அவர்கள் அதற்கான சரியான தீர்வை முன்வைக்கவில்லை.  ஆனால் அவர்கள்   கடந்த தேர்தலில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக கூறியிருக்கிறார்கள்.

 அந்த மாற்றத்தை அவர்கள் கொண்டு வருவார்களா என்ற கேள்வி உள்ளது.  தெற்கில் மிகப்பெரிய ஒரு அரசியல் மாற்றத்தை நாங்கள் காண்கிறோம்.  அதேபோன்று வடக்கு கிழக்கிலும் பாரிய அரசியல் மாற்றங்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.  இதற்கு முக்கிய காரணமாக  பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது.  உணவு பாதுகாப்பு மிகப் பிரச்சினையாகியுள்ளது. அதனால் கிராமப்புற பொருளாதாரத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். 

கிராமப்புற பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது எனும்போது அங்கு அதிகார பரவலாக்கம் முக்கியமாகின்றது.  அந்தந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்குத் தான் தங்களுடைய தேவைகள் தெரியும்.  அவர்களாகவே அந்த தீர்வுகளை கொண்டுவரும் போதுதான் அவை வெற்றியளிக்கும்.  இந்த விடயங்களை விளங்கி தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமது கொள்கைகளை மாற்றி  அமைப்பார்களா என்பது கேள்வியாகும். 

கேள்வி இலங்கை பொறுத்தவரையில் இந்தியா சீனா என்ற இரண்டு பெரிய நாடுகளின் ஆதிக்கத்துக்குள் இருப்பதாக விமர்சர்கள் கூறுகின்றனர்.  இரண்டு நாடுகளுமே இங்கு பிரசன்னத்தை அதிகரிக்க விரும்புகின்றன.  இந்தியா மிக நெருங்கிய நாடாக இருக்கின்றது.  இந்த நிலைமையை புதிய ஜனாதிபதி எவ்வாறு சமாளிப்பார்?

 பதில் அ  என்னை பொறுத்தவரை மிகப் பெரிய சவாலாக தான் இருக்க போகிறது.  காரணம் பூகோள அரசியலில் காணப்படும் போட்டி,  ஒருபக்கம் இந்தியா,  மறுபக்கம் சீனா,  இன்னொரு பக்கம் மேற்கு நாடுகள் என உள்ளன.  அந்தப்போட்டி எமக்கு நலனை கொண்டுவரப் போவதில்லை.  அதனை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்பதுதான் இங்கு கேள்வி.  1960 மற்றும் 70களில் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை அணிசாரா கொள்கையாக இருந்தது. 

அப்போது  அணிசேரா  இயக்கமும் இருந்தது.  அதனுடன் இருந்து நாங்கள் பயணித்தோம்.  அந்தக் கொள்கைக்குத்தான் நாங்கள் மீண்டும் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  இலங்கை அபிவிருத்தி அடையாத மற்றும் மூன்றாம் உலக நாடுகளுடன் பலமான உறவை பேண வேண்டிய தேவை காணப்படுகிறது.

இலங்கை போன்ற கிட்டத்தட்ட 70 நாடுகள் உலகத்தில் கடன் பிரச்சனையில் சிக்கி காணப்படுகின்றன.  அந்த நாடுகளுடன் ஒரு கூட்டை உருவாக்கி இலங்கை  போன்ற நாடுகளின் நலனை முன்னுருத்திய தேவைகளை கொண்டு செல்லும் கொள்கைகளை உருவாக்கவேண்டும்.   அணிசேரா கொள்கைகளின் அடிப்படையில்தான் இந்த பயணம் அமையவேண்டும்.   

கேள்வி இதற்கு முன்னர் நீங்கள் வடக்கு கிழக்கில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டமையை முட்டாள்தனமான முடிவு என்று கூறினீர்கள். அவர் 2,14,000 வாக்குகளை பெற்றிருக்கின்றார்.  இப்பொழுது உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்  இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றேன்.  தமிழ் அரசியலில் ஒரு பாரிய மாற்றம் தேவைப்படுகிறது.  பொது வேட்பாளருக்காக  நின்றவர்கள் தற்போது மீண்டும் ஒரு கூட்டை உருவாக்கத்தான் முயற்சிக்கிறார்கள்.  புதிய அரசியலைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. 

கேள்வி புதிய அரசியல் என்று நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள் 

பதில் புதிய அரசியல் என்பது நீண்ட காலமாகவே தமிழ அரசியல் பரப்பில் ஒரு சவாலாக காணப்படுகிறது.  ஐக்கிய இலங்கைக்குள்   தென்பகுதி மக்களுடன்,  முஸ்லிம் மக்களுடன்,  மலையக மக்களுடன் இணைந்த ஒரு அரசியலை நாம் எவ்வாறு முன்னெடுப்பது  என்பது இங்கு முக்கியமாகும்.  அதற்கேற்ற வகையில் ஒரு அரசியலமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதும் இங்கு  முக்கியமாகும். 

அதற்கு நாங்கள் தென்பகுதியில் இருக்கின்ற அரசியலுடன் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகிறது.  இந்த பொது வேட்பாளர் மற்றும் தற்போது யாழ்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அரசியலானது பொதுவாக புலம்பெயர் மக்களினால் தீர்மானிக்கப்படுகிறது.  இதுவும் ஒரு அபாயமான நிலைமையாகும். 

இங்குள்ள மக்கள் தான் இங்குள்ள பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.   புலம்பெயர் மக்கள் தமது நிதி   பலத்தை பயன்படுத்தி செய்யப்படுகின்ற விடயங்கள்   கற்பனை அரசியலாகத்தான் இருக்கும்.  அது எமது மக்களுக்கு ஒரு பாதகமான நிலையை தான் ஏற்படுத்தும்.

https://www.virakesari.lk/article/195426

The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்

1 month 2 weeks ago
                                                                           The Sun/Son shines
                                                                                                       -  சுப.சோமசுந்தரம்
 
 
             திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏதோ இதற்கு முன் நிகழாத புதுமை போல.
                திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவாக வாரிசு அரசியலில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அது ஒரு முதிர்ச்சியற்ற ஜனநாயகம் என்பதையே பிரதிபலிப்பதாக எண்ணுபவன் நான். அந்த முதிர்ச்சியின்மை அரசியல்வாதிகள் சார்ந்தது என்பதை விட மக்கள் சார்ந்தது என்பதுவே சாலப் பொருத்தம். ஒரு மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவர் ஆவதில் எனக்கு மாறுபாடு இல்லை. அதே போலவே ஒரு ஆசிரியருக்கும் இன்ன பிற தொழில் முனைவோருக்கும். இவ்வளவு ஏன், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தீவிர அரசியலில் இறங்குவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் ஒரு தலைமை மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவரான கையோடு எடுத்த எடுப்பில் தலைமை மருத்துவர் ஆக்கப்படுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றோ, அவ்வாறே ஒரு ஆட்சியாளரின் மகன் அல்லது மகள் எத்தனையோ காலம் கொள்கை பிடிப்புடன் அக்கட்சியில் அல்லது ஆட்சியில் பணியாற்றியோரை ஓரங்கட்டி ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்படுவது ஏற்புடையதன்று. இவை எல்லாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தில், கொள்கைப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்குப் பொருந்தி வருவது. இன்றைய அரசியல் சூழலில் நான் முன்னர் குறிப்பிட்ட பண்பட்ட அரசியல் பொருந்தி வருமா என்பது ஐயப்பாடே !
                 திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டினை அநேகமாக அத்துணைத் துறைகளிலும் முன்னேற்றிக் காட்டியது தமிழ் நிலத்திற்கான பேறு. திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகியதாகவும், மாநிலம் சீர்கேடு அடைந்ததாகவும் மாற்றார் கூக்குரலிடலாம். பூமிதானில் யாங்கணும் துலங்கிய ஊழல் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்கிப் பெருகியமை உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் எல்லாம் ஊழலை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பது ஒரு புறம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சீரழிந்ததாகச் சொல்வதெல்லாம் முழுப் பொய் அன்றி வேறென்ன ? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவ்விருவரையும் சிறந்த வழிகாட்டிகளாக எண்ணும் நான் பெரிய அளவில் திமுக வின் ஆதரவாளன் என்று சொல்வதற்கில்லை. எக்காலத்திலும் அதிமுகவின் ஆதரவாளனாய் இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார், தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாகத் தேசியக் கட்சி எதுவும் தமிழ் நிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைக் கனவிலும் நினைக்க முடியாமல் செய்தார்களே ! தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சி செய்வதில் அப்படி என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்புடைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ? உலக அரங்கில் பன்மைத்துவம்தானே இந்தியத் திருநாட்டின் தனித்துவமாக இருக்க முடியும் ? 'ஒற்றுமை உன்னதம், ஓர்மை பாசிசம்' (Unity is noble, Uniformity is fascist) என்பதே இந்திய அரசியலமைப்பு நமக்குச் சொல்லித் தருவது; உலகுக்கும் சொல்வது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை நிலை நாட்டுவதில் திமுகவும் அதிமுகவும் தம் பங்கினை நெடுங்காலம் செவ்வனே நிறைவேற்றின. ஆனால் அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் அனைத்து அணியினரும் தங்கள் சுயநலம் சார்ந்து ஒரு பாசிச அரசிடம் தம்மையும் நம்மையும் அடகு வைப்பதிலேயே குறியாய் இருப்பதாய்த் தெரிகிறது (அம்மையார் சுயநலம் அற்றவர் என்று சொல்ல வரவில்லை; தம்மையும் நம்மையும் அடகு வைக்க அவரது தன்மானம் இடம் கொடுப்பதில்லை). இத்தகைய சூழலில் மதவாத, வகுப்புவாத பாசிசத்திடமிருந்து நம்மைக் காக்க மக்கள் ஆதரவுடன் உள்ள ஒரே கட்சி - நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் - திமுக என்றே தோன்றுகிறது. எனவே திமுக மேலும் உரம் பெற்றுத் திகழ்வது - அச்சங்கிலித் தொடர் தற்போது பாதகமின்றித் தொடர்வது -  தமிழினத்தைப் பொறுத்தமட்டில் காலத்தின் கட்டாயமாகிறது. அதனைத் தொடர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, மக்கள் ஆதரவு பெற்றோர் வேறு இல்லை என்று ஆணித்தரமாய்ச் சொல்வதைத் தவிர வேறு வழி, ஒளி தெரியவில்லையே ! தோழமைக் கட்சிகளில் திறமையானோர், நேர்மைத் திறமுடையோர் உண்டு. இடதுசாரிகளில் உண்டு; தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் உண்டு. ஆனால் அவர்களும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் அடிபட்டுப் போகிறார்களே ! சாதி பேதம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கான தலைவர் தொல்.திருமா என்றே சொல்லலாம். அவரையெல்லாம் 'வையத் தலைமை கொள்' என்று அழைப்பதற்குத் தமிழ் மக்கள் தம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த நிதர்சனங்களைப் புரிந்து, மற்றுப்பற்று இல்லாத மக்கட் பற்றாளராய் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் தமிழ் அரசியலில் வலம் வருவது நமக்கான பேறு.
                 திமுக அரசியலில் இன்று முன்னணியில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இம்மூன்று கலைஞர் கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அரசியல் முகங்களும் பண்பட்டதாகவே தோன்றுகின்றன. உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சமீபத்தில் சங்கிகள் ஓலமிட்டது பெரும் நகைப்பானது. அவர் சநாதனம் பற்றிப் பேசியது ஒரு முதிர்ந்த திராவிட அரசியலே ? வெள்ள நிவாரணம் தொடர்பாகப் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது.
            எனவே சூழல்களைக் கருத்தில் கொண்டு மாற்றார்தம் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, எத்தனை குறை கொண்டிருந்தாலும் இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் திராவிட முன்னேற்றக் கழகமே ! நம் நம்பிக்கை வானில் உள்ள ஒளிக்கீற்று உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ! போகிற வரை போகட்டும்; ஆகிற வரை ஆகட்டும்.
             இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?               

அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்

1 month 2 weeks ago

Published By: DIGITAL DESK 7   01 OCT, 2024 | 10:47 AM

image
 
பாகம் 1

டி.பி.எஸ். ஜெயராஜ் 

அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ' சீன வானில்  சிவப்பு நட்சத்திரம்  ' (Red Star over China ) என்ற நூல்தான்  கட்டுரைக்கு இந்த தலைப்பை  வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது.

பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ' சீன வானில்  சிவப்பு நட்சத்திரத்தின் ' பிரதிகள்  பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது.

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஒரு அர்த்தத்தில் இன்று இலங்கை வானில்  எழுந்திருக்கும்  சிவப்பு நட்சத்திரம்  அல்லது இடதுசாரி நட்சத்திரமே. அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபல்யமாக அறியப்பட்ட திசாநாயக்க  2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையின் ஒனபதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்றார்.

WhatsApp_Image_2024-10-01_at_09.45.00.jp

55 வயதான திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர்.  ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்து பிறகு அரசியல் கட்சியாக மாறிய ஜே.வி.பி. ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது.

தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி.யையும் வேறு 21 அமைப்புக்களையும் உள்ளடக்கிய இடதுசாரிப் போக்குடைய ஒரு பரந்த  கூட்டணியாகும். இந்த அமைப்புக்களில் சிறிய கட்சிகள், தொழிற் சங்கங்கள், உரிமைகள் குழுக்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகள் அடங்குகின்றன.  ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியாகும். திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில்  திசையறிகருவி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தேர்தலில் வெற்றி  பெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) திசாநாயக்கவை மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட்   லெனினிஸட், சோசலிஸ்ட்,  நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ' இந்திய விரோதி ' என்றும்  ' தமிழர் விரோதி ' என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர்.

எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது எனக்கு சந்தேகமே.

சில காலத்துக்கு  முன்னர் ட்ரம்ப் என்ற ஒரு பேர்வழி  " வெள்ளை மாளிகையை " அசிங்கப்படுத்துவதற்கு   முன்னதாக  அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு  மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர்  ஆபிரகாம் லிங்கனையே  சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப் போர் ஒன்றையே நடத்தும் அளவுக்கு அவர் சென்றார்.

லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு  " மரக் கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான " ஒரு கதை என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே.  அவரின் குறிப்பிடத்தக்க உயர்வையும் கூட "  மண்வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு "  வந்த ஒரு காவியம் என்று வர்ணிக்க முடியும். இந்த பின்னணியில்தான்  இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை  இந்த பத்தி  இரு பாகங்களாக  ஆராய்கிறது.

தம்புத்தேகம வாழ்க்கை 

திசாநாயக்க முதியான்சலாகே அநுரா குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 ஆம் திகதி பிறந்தார். அவரின் பிறந்த இடம் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் கலேவெல ஆகும்.அவரின் பெற்றோர்கள் கண்டிய கொவி பௌத்த சாகியத்தைச் சேர்ந்தவர்கள். திசாநாயக்கவும் அவரது மூத்த சகோதரியும் சிறுவர்களாக இருந்தபோது குடும்பம் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டதுக்கு குடிபெயர்ந்தது. சில வருடங்கள் கெக்கிராவையில் வாழ்ந்த பிறகு குடும்பம் அதே மாகாணத்தின் தம்புத்தேகமவுக்கு நகர்ந்தது.

தம்புத்தேகம அநுராதபுரம் நகரில் இருந்து  25 கிலோமீட்டர்கள் தொலைவிலும்  தலைநகர் கொழும்பில் இருந்து 190 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் ஒரு விவசாயப் பிரதேசமாகும். திசாநாயக்க தனது ஆரம்பக்கல்வியை காமினி மகா வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் நிறைவுசெய்தார். அவரே தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக பிரவேசம் செய்த முதல் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

திசாநாயக்கவின் தந்தையார் ஒரு விவசாயத் தொழிலாளி.  பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு நில அளவையாளர் திணைக்களத்தில் ஒரு அலுவலக உதவியாளராக நிரந்தரமான தொழில் வாய்ப்பு கிடைத்தது. சில சந்தர்ப்பங்களில் நில அளவையாளர்கள் களவேலைக்கு செல்லும்போது தந்தையார் உபகரணங்களை தூக்கிச்செல்லும் வேலையையும் செய்தார். குடும்பப் பெண்மணியான தாயாருக்கு நெல் விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களில் ஒழுங்காக வேலை கிடைக்கும்.

தம்புத்தேகமவுக்கு வந்த பிறகு ஆரம்ப வருடங்களில் குடும்பம் பெரும் பணக் கஷ்டத்துக்குள்ளானது. அவர்களது வீட்டுக்கு மின்சார வசதி கிடையாது. இளம் திசாநாயக்க இரவு வேளைகளில் மண்ணெண்ணெய் குப்பி விளக்கின் வெளிச்சத்தில்தான் படிக்கவேண்டியிருந்தது. குடும்ப வருமானத்துக்கு உதவுவதற்காக  தாயார் இனிப்புப் பலகாரங்கள் தயாரிப்பார். மகன் அவற்றை எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள தம்புத்தேகம புகையிரத நிலையத்தில் யாழ்தேவி, உத்தரதேவி மற்றும் ரஜரட்ட போன்ற நீண்டதூர ரயில்களின் பயணிகளுக்கு விற்பனை செய்வார். பாடசாலை விடுமுறை நாட்களில் திசாநாயக்க குழிவெட்டுபவராக பகுதிநேர வேலை செய்தார்.

குடும்பத்துக்கு பொருளாதாரக் கஷ்டம் இருந்த போதிலும், திசாநாயக்க திறமை  மிகுந்த  ஒரு மாணவனாக பிரகாசித்தார். பாடங்களை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆற்றலையும் நுட்பநுணுக்கமான விடயங்களை எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமையும் கொண்டவராக அவர் இருந்தார். நல்ல நினைவாற்றலும் அவருக்கு இருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து தெரிவான முதல் மாணவன் என்ற வகையில் அந்த பாடசாலைக்கு அவர் பெருமை சேர்த்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாக அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை கௌரவித்தனர். அந்த நிகழ்வு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைக்கவிருந்த வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

ஆர்வமிக்க வாசகர்

திசாநாயக்க தனது மாணவ காலத்திலும் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலும்  ஒரு ஆர்வமிக்காவாசகர். இப்போதும் தான். சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய அவரிடம் விரும்பிய நூல்கள் குறித்து கேட்கப்பட்டது. லியோ டால்ஸ்ராயின் ' போரும் சமாதானமும் ' , மார்க்சிம் கோர்க்கியின் ' தாய் ' , மகிந்த பிரசாத் மாசிம்புல எழுதிய 'செங்கோட்டன் ', மோகன் ராஜ் யடவலவின் ' 'ஆதரனீய விக்டோரியா' ஆகியவை அவர் குறிப்பிட்டவற்றில் சில நூல்கள். பல சிறுகதைகளையும் தான் விருப்பி வாசித்ததாக அவர் கூறினார்.

தனது பாடசாலை நாட்களில் டாக்டர் ஆபிரஹாம் கோவூரின் படைப்புக்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். தென்னிந்திய மாநிலமான கேரளாவில் திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்த டாக்டர் கோவூர் இலங்கைக்கு குடிபெயர்ந்து கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் பல வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினார். பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த்அவர் மூடநம்பிக்கைகள், போலிச் சாமியார்கள் மற்றும் மதங்களின் பெயரால் இடம்பெறும் போலித்தனங்களுக்கும் எதிராக பெருமளவு நூல்களை எழுதினார்.

மாபெரும் சிந்தனையாளர்களினதும் அரசியல் தலைவர்களினதும் சரிதைகளையும் சுயசரிதைகளையும் திசாநாயக்க நன்கு சுவைத்துப் படிப்பார். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காந்தி, டிட்டோ, காஸட்ரோ மற்றும் கிளின்ரோ ஆகியோரின் சரிதைகள் திசாநாயக்கவின் வாழ்வை வளப்படுத்திய மகத்தான மனிதர்களின் நூல்களில் முக்கியமானவை.  அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில் " எனது வாழ்க்கையை பல நூல்கள் மாற்றியமைத்தன.சோவியத் ரஷ்யாவின் இலக்கியங்களினால் குறிப்பாக  நாவல்கள் , சிறுகதைகளினால் நான் மிகவும் ஆழமாக ஆகர்சிக்கப்பட்டேன். அந்த காலகட்டத்தின் இலக்கியங்கள் எமது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின" என்று குறிப்பிட்டிருந்தார்.

வாசிப்பின் மீதான திசாநாயக்கவின் காதலையும்  நூல்கள் தனது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய அவரின் மதிப்பையும் வைத்துக்கொண்டு  அவரை  வெறுமனே ஒரு புத்தகப்பூச்சி என்று நினைத்துவிடக் கூடாது. அவருக்குள் இருக்கின்ற ஒரு ' மெய்வல்லுனரை "  மக்கள் நேரிலும் தொலைக்  காட்சிகளிலும் பார்த்திருப்பார்கள். சுறுசுறுசுறுப்பாக நடந்துவந்து மேடைகளில் அவர் ஏறுகின்ற பாங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த உடல்தகுதியின் தோற்றுவாய் அநுராதபுரத்தின் தண்ணீரில் தங்கியிருக்கிறது.

நல்ல நீச்சல் வீரர்

திசாநாயக்க வேகமும் உரமும் கொண்ட நல்ல நீச்சல் வீரர். தனது மாணவ காலத்தில் அவர்  அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த திஸ்ஸவேவ, அபயவேவ,  நுவரவேவ ஆகிய மூன்று வாவிகளில் நீந்துவார். முதலாவது நூற்றாண்டில் வலகம்பா மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட நுவரவேவவின் முழுமையான மூன்று கிலோ மீட்டர்கள் நீளத்தையும் திசாநாயக்க அடிக்கடி நீந்தி முடிப்பார்.

அரசியல் செயற்பாட்டாளராக மாறிய பிறகு திசாநாயக்க இலங்கை பூராவும் பயணம் செய்தார். எங்கெல்லாம்  குளங்கள், வாவிகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றனவோ அங்கு  சாத்தியமான வேளைகளில் அவர் நீச்சலில் இறங்குவதற்கு தவறுவதில்லை. "நான் நீச்சலை மிகவும் விரும்புபவன். சராசரியாக  சுமார் இரு கிலோமீட்டர்கள் நீந்துவேன்.  அதனால் எனக்கு ஒரு நீச்சல் தடாகம் போதாது. உண்மையைச் சொல்கிறேன், எனக்கு நீச்சல் தடாகங்களைப் பிடிப்பதில்லை" என்று அவர் ஒரு தடவை நேர்காணலில் கூறினார்.

நீச்சலும் வாசிப்பும் படிப்பும் நிறைந்த அமைதியான கிராமப்புற வாழ்க்கையில் இருந்து திசாநாயக்க தனது பதினகவைகளின் இறுதி வருடத்தில் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு போரையும் சமாதானத்தையும் கொண்டதாக இருந்தது. அதுவே திசாநாயக்கவின் வாழ்வை முற்றுமுழுதாக மாற்றியமைத்த ஆண்டாகவும் அமைந்தது. அதற்கு பிறகு நடந்தவற்றை விளங்கிக்கொள்வதற்கு வரலாற்றை ஒரு தடவை திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்திய --  இலங்கை சமாதான உடன்படிக்கை

இலங்கையின் இனநெருக்கடி பல வருடங்கள் நீடித்த  கொடூரமான ஒரு ஆயுதமோதலாக மாறியது.  முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஜே.ஆர். ஜெயவர்தனவும் கொழும்பில் 1987 ஜூலை 29 ஆம் திகதி  இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். போர்நிறுத்தம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. அமைதியைப் பேணுவதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் நிலைகொண்டது.

இலங்கை ஆயுதப்படைகளுக்கும் ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் மெச்சத்தக்க குறிக்கோளுடனேயே ராஜீவ் -- ஜெயவர்தன உடன்படிக்கை கைச்சாத்திடப்ப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, இந்திய - இலங்கை உடன்படிக்கை மேலும் வன்முறைக்கும் இரத்தக்களரிக்கும் வழிவகுத்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்து மீண்டும் போரைத் தொடங்கியது. விரைவாகவே வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக விடுதலை புலிகள் முழு அளவிலான கெரில்லப்போரை தொடுத்தனர்.

றோஹண விஜேவீர 

அதேவேளை றோஹண விஜேவீர தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனயும்  (ஜே.வி.பி. ) இந்திய --  இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில்  ஈடுபட்டது. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தபோது 1971 ஆம் ஆண்டில்  ஜே.வி.பி.  ஆயுதக்கிளர்ச்சி ஒன்றை தொடங்கியது. பல நாடுகளின் உதவியுடன் அந்த கிளர்ச்சியை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாக நசுக்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்களன சிறையில் அடைக்கப்பட்டனர். இது முதலாவது ஜே.வி.பி. கிளர்ச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம்  ஜே.வி.பி. மீதான தடையை நீக்கி  விஜேவீர உட்பட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்தது. ஜே.வி.பி. மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்தது.விஜேவீர 1982 அக்டோபர் ஜனாதிபதி தேர்தலிலும்  போட்டியிட்டு மூன்றாவதாக வந்தார். ( ஐக்கிய தேசிய கட்சி முதலாவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாவதாகவும் வந்தன )  இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியாக  " புதிய இடது " ஜே.வி.பி." மேலெழுந்தது போன்று தோன்றியது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பல அமைச்சர்களின் அந்தரங்க ஆதரவுடன் 1983 ஜூலையில் நாடுபூராவும் தமிழர்களுக்கு எதிராக இனவன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அந்த வன்செயல்களுக்கு ஜே.வி.பி.பொறுப்பென்று தவறாகக் குற்றஞ்சாட்டி  ஜனாதிபதி ஜெயவர்தன  அந்த கட்சியை தடைசெய்தது. ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக செயற்படத் தொடங்கியது. விஜேவீர உட்பட தலைவர்களும் தலைமறைவாகினர்.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி 

ஆனால், இந்திய -- இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படை நிலை கொண்டபோது   ஜே.வி.பி. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது. கடந்த காலத்தில் இந்திய மன்னர்கள் இலங்கை மீது நடத்திய பல்வேறு  படையெடுப்புகள் பற்றிய பழைய அச்சங்களை மீண்டும் கிளறிய ஜே.வி.பி. சிங்கள பெரும்பான்மை மாகாணங்களில் இந்திய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை தொடங்கியது. அது ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி என்று அழைக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. இரண்டாவது கிளர்ச்சியை தொடங்கியபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகப் பெரும்ப்னமையா வாழும் பிரதேசங்களில் அந்த இயக்கத்துக்கு  உறுப்பினர்கள் இருக்கவில்லை. அதனால் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மகாணங்களிலிலேயே அதன் ஆயுதப்போராட்ட நடவடிக்கைகள இடம்பெற்றன.

ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு இராணுவப் பிரிவுக்கு தேசபக்த மக்கள் இயக்கம் ( தேசப்பிரேமி ஜனதா வியாபாரய ) என்று பெயரிடப்பட்டது. மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கே தேசபக்திக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதிக்கு கீர்த்தி விஜேபாகு என்று இயக்கப்பெயர் கொடுக்கப்பட்டு வரலாற்று சம்பவங்கள்  நினைவு மீட்டப்பட்டன.

பத்தாவது நூற்றாண்டில்  மன்னர்களான  இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் எதிராக இளவரசர் கீர்த்தியே போராடினார். ருஹுணு இளவரசரான அவர் இறுதியில்  பொலன்னறுவையில் இருந்து சோழ படையெடுப்பாளர்களை விரட்டி தன்னை விஜேபாகு மன்னன் என்று முடாசூடிக் கொண்டார். தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதி கீர்த்தி விஜேபாகுவின் உண்மையான பெயர் சமான் பியசிறி பெர்னாண்டோ.  மொரட்டுவையில் லுணாவ பகுதியைச் சேர்ந்த அவர் களனி பல்கலைக்கழக பட்டதாரி.

ஜே.வி.பி.யில் இணைவு 

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் தான் 19 வயதான அநுரா குமார திசாநாயக்க 1987 ஆம் ஆண்டில் தனது ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் இரத்நாயக்கவுடன் சேர்ந்து ஜே.வி.பி.யில் இணைந்துகொண்டார். திசாநாயக்க ' சுனில் ஐயா ' என்று அழைத்த அந்த சகோதரன்  அவரின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினார். தாய்நாட்டுக்காக தாங்கள் ஜே.வி.பி.யில் இணையவேண்டும் என்று திசாநாயக்கவை நம்பவைத்தவரே அந்த சுனில்தான்.

அரவிந்த என்ற அநுரா 

அநுரா குமார திசாநாயக்க ஜே.வி.பி.யில் இதைந்தபோது அவர் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு பிறகு திசாநாயக்கவுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்தது. அவர் கண்டிக்கு சென்று தனது மூன்றாம் நிலைக் கல்வியை ஆரம்பித்தார். 

ஆனால் அவர் தனது கூடுதலான நேரத்தை தலைமறைவு அரசியல் நடவடிக்கைகளிலேயே செலவிட்டார். "அரவிந்த ' என்ற இயக்கப் பெயருடன் ஜே.வி.பி./ தேசப்பிரேமி ஜனதா வியாபாரயவுக்கு  ஆதரவான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். ஜே.வி.பி.யின் பல்வேறு அமைப்புக்களிடையே தகவல்களைக் கொண்டுசெல்லும் பணிகளை தூதருக்குரிய பணிகளை அவர் செய்தார்.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் நீடித்தது. அதில் ஜே.வி.பி.யினாலும்  பொலிசார், பரா இராணுவம் மற்றும் படைகள் மேற்கொண்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளினாலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அரசின் முகவர்களினால் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படைகளினாலும் அரசின் ஏனைய முகவர்களினாலும் கொல்லப்மட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் நம்பகமான மதிப்பீடுகள் கிடைக்கவில்லை எனினும் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ விபரங்கள் இருக்கின்றன.

அந்த மூன்று வருட காலப்பகுதியில் 487  அரசாங்க சேவையாளர்கள், 342 பொலிஸ்காரர்கள், 209 பாதுகாப்பு படையினர், 16  அரசியல் தலைவர்கள் 4,945 குடிமக்கள் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையில் 30 பௌத்த பிக்குகள், இரு கத்தோலிக்க மதகுருமார், 52 பாடசாலை அதிபர்கள், நான்கு மருத்துவர்கள், 18 பெருந்தோட்ட அத்தியட்சகர்கள் மற்றும் 27  தொழிற் சங்கவாதிகளும் அடங்குவர். அதில் 93 பொலிஸ்காரர்கள் மற்றும் 69 படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கூட அடங்குவர்.

அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை 

ஜே.வி.பி.யினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்துக்கு இணையாக அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் அமைந்தன. அரச பயங்கரத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் திசாநாயக்கவின் ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் அடங்குவார்.

சுனில் ஐயா கைதாகி சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தார். அரவிந்த என்ற திசாநாயக்க பேராதனையை விட்டு தப்பியோடி தலைமறைவானார்.  அவர் தேடப்படும் ஒருவராக இருந்தார். அரசியலில் ஈடுபாடு இல்லாத அவரின் குடும்பம் தங்களது மண்வீட்டில் இருந்து ஒரு எளிமையான  கல்வீட்டுக்கு குடிபெயர்ந்தது. அரவிந்தவுக்கு ஒரு எச்சரிக்கையாக அரசின் முகவர்கள் அந்த வீட்டுக்கு தீவைத்துக் கொளுத்தியதாக கூறப்பட்டது.

திசாநாயக்க மேராதனையில் கல்வியை இடையில் நிறுத்தி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றார். பெரிதாக வெளியில் தலைகாட்டாமல் அவர் இடத்துக்கு இடம் சென்று வந்ததாக ஜே.வி.பி. வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியே அவரது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான கட்டமாக இருந்தது.

றோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட பெரும்பாலான சிரேஷ்ட ஜே.வி.பி. தலைவர்கள்  பிடிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டனர். சிரேஷ்ட தலைவர்களில் சோமவன்ச அமரசிங்க மாத்திரமே உயிர்தப்பி இந்திய உதவியுடன் ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்றார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி முற்றுமுழுதாக நசுக்கப்பட்டது. 

களனி பல்கலைக்கழகம் 

நிலைவரம் தணியத் தொடங்கியது. எந்தவிதமான தொடர்புமின்றி ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலமாக தலைமறைவாக இருந்த பிறகு திசாநாயக்க வெளியில் வந்து  சமூகத்தில் மீண்டும் இணைந்துகொண்டார். ' அரவிந்தவின் ' அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வந்தது. திசாநாயக்க தனது கல்வியை மீண்டும் ஆரம்பித்தார். இந்த தடவை களனி பல்கலைக்கழகத்துக்கு மாற்றம் பெற்று அங்கு கல்வியை தொடர்ந்தார்.

தலைவிதி 

ஜே.வி.பி.க்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான நடவடிக்கைகளில் இருந்து தப்பிய திசாநாயக்கவுக்கு எதிர்காலத்தில் பெரிய ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கு விதி எழுதப்பட்டிருந்தது போன்று தோன்றியது. இதிகாசத்தில் வரும் பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து  ஜே.வி.பி. வெளிக்கிளம்பியது.

திசாநாயக்க படிப்படியாக உயர்ந்து ஜே.வி.பி.யினதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் தலைவராக வந்தார். தற்போது அவர் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. இடதுசாரித் தாரகை இலங்கை மேலாக எழுந்திருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/195194

அனுர வெற்றியின் இரகசியம்

1 month 2 weeks ago

-நஜீப் பின் கபூர்-

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் நாம் நிறைய கட்டுரைகளை எழுதி மக்களைத் தெளிவுபடுத்தி வந்திருந்தோம். நமது கருத்துகள் அப்போது பக்கச்சார்பாக இருந்தது என்று சிலருக்கு யோசிக்க இடமிருந்தது. ஆனால் நாம் யதார்த்தத்தை தான் சொல்லி வந்திருக்கின்றோம் என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம். இன்றும் அதேபோல கள நிலைவரங்களையும் யதார்த்தங்களையும் தான் எமது வாசகர்களுக்கு சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். அனேகமான ஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்களைக் கடந்த காலங்களில் பிழையான தகவல்களை-நம்பிக்கைகளைக் கொடுத்து ஏமாற்றி வந்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் வலியுறுத்தி சொன்ன சில தகவல்களை மீண்டும் ஒருமுறை சுருக்கமாக இங்கு தொட்டுச் செல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமாரவை தோற்கடிப்பதாக இருந்தால் ரணில் – சஜித்- ராஜபக்ஸக்கள் ஒரு மெகா கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்று நமது வார இதழில் ஒரு நீண்ட கட்டுரையில் தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தோம்.

வடக்கு, கிழக்கு மற்றும் முஸ்லிம் வாக்குகள் சஜித், ரணில், அரியநேந்திரன், அனுர என்று பிரிவதால் அது சஜித்தின் வெற்றியைப் பாதிக்கும் என்றும் தேர்தலுக்கு முன்பே சொல்லி இருந்தோம். இது போன்று இன்னும் நிறையவே கதைகளை தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்கு நெருக்கமான நாட்களிலும் நாம் சொல்லி வந்தோம்.

2024 நடந்து முடிந்த தேர்தல் என்.பி.பி. க்கு அதிர்ஸ்டவசமாகக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.நாம் குறிப்பிடுகின்ற இந்த சம்பவத்தை – கதையைச் சற்று எண்ணிப்பாருங்கள். அப்போது யதார்த்தம் புரியும். ஒரு அரசியல் ஆய்வாளர் என்ற வகையில் எல்லாக் கட்சிகளின் செயல்பாட்டாளர்களுடனும் நமக்கு ஒரு உறவு இருப்பது போல ஜே.வி.பி.-என்.பி.பி. யுடனும் நமக்கு மிக நெருக்கமான ஒரு உறவு இருந்து வருகின்றது.

கடந்த மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற போது ஜே.வி.பி. கம்பளை அமைப்பாளர் ஹேரத் மற்றும் அவர்களுடன் நெருக்கமான உறவில் இருக்கும் பாஹிம் என்பவருடன் மஹியங்கனையில் அன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்கு நாமும் தகவல் சேகரிக்க போய் இருந்தோம்.

அன்று மதியநேரம் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் பலகே அவர்கள் வீட்டில் மதிய உணவுக்காக போயிருந்த போது இன்றைய ஜனாதிபதி அனுரகுமாரவும் பதுளை வெள்ளி நாக்கு என அழைக்கப்படும் சமந்த வித்தியாரத்ன அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.அப்போது நாம் ஒரு தேர்தலில் பத்து சதவீத (10) வாக்கை எப்போது பெற்றுக் கொள்கின்றோமோ அதன் பின்னர் வருகின்ற பொதுத் தேர்தலில் நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வந்து விடுவோம். அதுவரைக்கும் நிறையவே உழைக்க வேண்டி இருக்கின்றது என்று சமந்த வித்தியாரத்ன நம்மிடம் சொல்லி இருந்தார்.

நாம் ஏன் இதனை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம் என்றால் அடுத்து வருகின்ற தேர்தல்களில் அந்த இலக்கிற்கு அருகில் கூட அவர்களினால் நெருங்க முடியவில்லை. அப்படியாக இருந்தால் அவர்கள் இன்று அதிரடியாக இந்த இலக்கை கடந்து ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று பார்த்தால் அதில் சில இரகசியங்கள் மறைந்திருக்கின்றன.

ஆனாலும் இதுபற்றி எந்தவொரு ஊடகமும் இது தொடர்பாகப் பேசவில்லை என்பது நமது கணிப்பு. அதில் முதலாவதாக வரலாற்றில் மிகப் பெரிய வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ராஜபக்ஸக்களின் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை கடவுளே ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதிகாரத்துக்கு வந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவர்களை அதிகாரத்தில் இருந்து இறைவன் கவிழ்த்துவிட்டான்.

குறிப்பாக கோத்தாபய ராஜபக்ஸவின் அட்டகாசங்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் தண்டனை கிடைத்திருக்கின்றது. நாம் முன்பு சொன்னது போல அனுரவை எதிர்க்க ஒரு மெகா கூட்டணி கட்டாயம் தேவை என்று சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. சஜித் தரப்பினர் அதீத நம்பிக்கையில் இருந்து இன்று மூக்குடைபட்டிருக்கின்றார்கள். அடுத்து மொட்டுக் கட்சியின் கோட்பாதர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்குச் செல்வதுதான் அனுரவுடன் ஒரு நெருக்கமான நாடாளுமன்றத்தை வைத்திருக்க வாய்ப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

பசிலின் அதே கருத்தை நாம் அன்று சொல்லி இருந்தோம். ரணில் அதற்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலை ரணில் முன்கூட்டி நடத்தியதால் அனுர சுலபமாக இலக்கை எட்டிவிட முடிந்தது. வருகின்ற பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி அனுர தரப்பினர் தனிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவார்கள் என்று நாம் அடித்துச் சொல்லி வைக்கின்றோம். இதனையும் நமது வாசகர்கள் பொறுத்திருந்து பார்க்க முடியும் என்பது நமது கணிப்பு.

கோட்டாவின் அட்டகாசமான ஆட்சியும் ரணிலின் அரசியல் தீர்மானங்களும் அனுர தரப்பினர் அவர்கள் குறிப்பிட்ட பத்து சதவீதத்தைக் கூட எட்டாத ஒரு நிலையில் அதிரடியாக அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமாக இருந்தது. 2019 மற்றும் 2020 தேர்தல்களில் வெறும் நான்கு – மூன்று சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜே.வி.பி-என்.பி.பி வரலாற்றில் இப்படி ஒரு அதிரடிச் சாதனையை நிலைநாட்டி இருக்கின்றது என்றால் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட அடக்குமுறைகளும் பிழையான தீர்மானங்களுமாகும் என்பது எமது கருத்து.

இப்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலும் முடிவுகள் எப்படி அமையப் போகின்றது என்பது தொடர்பாக பார்ப்போம். நாம் இங்கு குறிப்பிடுகின்ற தகவல்களையும் கணிப்புகளையும் எமது வாசகர்கள் வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகளுடன் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

2024 ஜனாதிபதித் தேர்தல்
பொதுத் தேர்தல் முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று இப்போது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இன்னும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் வரை இருக்கும் நிலையில், பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று இப்போது பார்ப்போம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே 2024 ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு அதிக வாய்ப்பு என்று நாம் ஊடகங்களில் சொன்ன போது எமது கணிப்பு மிகைப்பட்ட ஒரு கணிப்பு என்று சிலர் விமர்சித்தார்கள். அப்படி எமது கருத்தை ஜீரணித்துக் கொள்ளாத நமது நண்பர்களும் நெருக்கமானவர்களும் கூட இதில் இருந்தார்கள்.

மேலும் ஜனாதிபதித் தேர்லுக்கு இரண்டொரு நாட்கள் இருக்கும் போது வேட்பாளர்கள் பெறுகின்ற வாக்கு வீதத்தையும் நமது சகோதர ஊடகங்களுக்கு அதனைத் துல்லியமாகச் சொல்லி இருந்தோம். அதனை வாசகர்கள் பார்த்திருப்பார்கள். இப்போது வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது தொடர்பாக எமது கணிப்பைத் தர இருக்கின்றோம்.

சஜித் மற்றும் ரணில் இணைந்தால் அனுரவை சுலபமாக வெற்றி கொள்ள முடியும் என்று இப்போது சிலர் கணக்குப் பார்க்கின்றார்கள்-கதை விடுகின்றார்கள். இது தமது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாக்குகளை பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சி. ஆனால் களநிலவரம் அப்படி இல்லை என்பதனை குடிமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து சஜித் – ரணில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் கதைகள் வருகின்றன.ஆனாலும் அதில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. சஜித் ரணிலுடன் கூட்டணி பற்றிய கருத்தை இப்போதே நிராகரித்திருக்கின்றார். ஆனால் கட்சியில் இருக்கின்ற சிலர் அதற்கு இசைவாக பேசுகின்றார்கள். கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 55,64,239 வாக்குகளைப் பெற்ற சஜித் அதன் பின்னர் 2020ல் நடந்த பொதுத் தேர்தலில 27,71,984 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார்.

இது எந்தளவு வீழ்ச்சி என்று சிந்தித்துப் பாருங்கள். எனவே வருகின்ற பொதுத் தேர்தலில் அனுர தரப்பு தனிக்குதிரையாகத்தான் களத்தில் இருக்கப் போகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ் தரப்புக்கள் தனியாகத்தான் தேர்தலுக்கு வருவார்கள். அதேபோன்று இன்று சஜித்துடன் இருக்கின்ற மலையகக் கட்சிகளும் பெரும்பாலும் பொதுத் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ அனுரவுடன் இணைந்து போக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான வியூகங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை நாம் உறுதியாக கூறி வைக்கின்றோம்.

முஸ்லிம் தனித்துவத் தலைவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரவுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட விஷமத்தன கதைகளினால் அனுர தரப்புடன் அவர்களுக்கு இணங்கிப் போக வாய்ப்புக்கள் இல்லை. பொதுத் தேர்தலில் அனுர தரப்பிலிருந்து புதிய பல முஸ்லிம் பிரதிநிதிகள் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். இந்தத் தேர்தலில்கூட அது தெளிவாகி விட்டது.

கிழக்கில் கூட அனுர தரப்பு முஸ்லிம் வேட்பாளர்கள் பலர் ஆசனங்களை சுலபமாகப் பெற்றுக்கொள்வார்கள். இன்று அவர்களுக்கு கிடைத்திருக்கின்ற வாக்குகள் இரட்டிப்பாக மாறவும் அதிக வாய்ப்பிருக்கின்றன. ஹக்கீம், ரிசாட் , ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா இதற்குப் பின்னர் அனுரவுக்கு எதிராக விஷமத்தன பிரசாரங்களை மேற்கொள்ள வாய்ப்பில்லை. அவர்கள் ஏற்கனவே சரணாகதி அடைந்து விட்டார்கள். அலி சப்ரி அரசியலை விட்டே ஓடி விட்டார்.

ரணிலுக்கு கிடைத்த வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகளும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக வந்த வாக்குகளும்தான். இதில் மொட்டு வாக்குகள் 15 இலட்சம் வரை இருக்கும் என்பது நமது கணக்கு. ஆனால் அவர்கள் இதனை நிராகரிக்கின்றார்கள். சஜித்- ரணில் கூட்டணி அமைந்தாலும் அதனுடன் வேட்பாளர் பங்கீடு தொடர்பில் பெரும் இழுபறி வரும்.

அப்போது மேலும் பலர் அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள். இன்று ரணிலுடன் இருப்போர் திரும்ப மொட்டு அணிக்குத் தாவவும் இடமிருக்கின்றது. எனவே கூட்டல் – கழித்தல் கணக்குப்படி அனுர தரப்பை பொதுத் தேர்தலில் இலகுவாக வெற்றி கொள்ள முடியும் என்ற சஜித் – ரணில் கணக்கு மொண்டசூரி-பால்போத்தல் கணக்காகத்தான் இருக்கும். இது பற்றி தகவல்களை நாம் விரைவில் மாவட்ட ரீதியில் விரிவாகத் தர இருக்கின்றோம்.

நடந்து முடிந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஆசனங்களை மாவட்ட ரீதியில் கணக்குப் பார்த்தால் அது ஏறக்குறைய பின்வருமாறு அமைகின்றது.

அனுர 105 ஆசனங்கள்
சஜித் 068 ஆசனங்கள்
ரணில் 037 ஆசனங்கள்
நாமல் 002 ஆசனங்கள்
அரியநேந்திரன் 009 ஆசனங்கள்
திலித் 001 ஆசனம்
இதர 003 ஆசனங்கள்
மொத்தம் 225 ஆசனங்கள்

அதேபோன்று வருகின்ற 2024 பொதுத் தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமையவே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அனுர 140 ஆசனங்கள்
சஜித் 046 ஆசனங்கள்
ரணில் 009 ஆசனங்கள்
தமிழ் தரப்பு 020 ஆசனங்கள்
நாமல் 005 ஆசனங்கள்
இதர 005 ஆசனங்கள்
மொத்தம் 225 ஆசனங்கள்

மொட்டுக் கட்சியில் இன்று ரணிலுடன் இருப்போரில் கணிசமானவர்கள் மீண்டும் மொட்டுக் கட்சிக்குத் தாவ இடமிருக்கின்றது. அப்படியான நிலையில் அது ரணில் தரப்பு எண்ணிக்கையில் மேலும் கடுமையான தாக்கங்களைச் செலுத்தும். ரணில் தனித்து நின்றால் 2020 தேர்தல் முடிவுதான் அவருக்கு மீண்டும் வரும். சஜித் கூட்டணியில் இருப்போரில் பெரும்பாலானவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அத்துடன் தற்போது அவர்கள் கூட்டணியில் இருப்போரில் பலர் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரவுடன் இணங்கிப் போகும் மன நிலையில் இருக்கின்றார்கள்.

கடந்த 2020 பொதுத் தேர்தலுடன் ஒப்பு நோக்குகின்ற போது யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல ஆகிய மாவட்டங்களில் இருந்து குறைந்தபட்சம் ஒரு என்.பி.பி. வேட்பாளராவது வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கின்றது. அனுர வெற்றியைத் தொடர்ந்து அவர்களது வாக்கு மேலும் அதிகரிக்கும் ஒரு நிலையும் பிரகாசமாகத் தெரிகின்றது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சஜித் கூட்டணியில் குழப்பங்களுக்கு இடமிருக்கின்றது என்று நாம் முன்பு சொல்லி இருந்தோம். இப்போது அங்கு அது நடந்து கொண்டிருக்கின்றது. சஜித் அணியில் இருந்து வெளியேற இருப்பவர்களுக்கும் இப்போது அதற்கு ஒரு கட்சி இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.

ரணில் அரசியலை விட்டு வெளியே செல்வார் என்று எதிர்பார்ப்பதால் அவருடன் சென்ற மொட்டுக் கட்சிக்காரர்களின் நிலை இன்னும் தெளிவில்லாமல் இருக்கின்றது. அவர்கள் இப்போது ஏதாவது ஒரு கூட்டணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அல்லது பலர் தெருவில் நிற்க வேண்டி வரும். எப்படியும் தற்போது நாடாளுமன்றத்தில் இருப்போரில் மூன்றில் இரண்டு பங்கினர் வெளியே என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

https://thinakkural.lk/article/310044

மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்

1 month 2 weeks ago

மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
 

 — வீரகத்தி தனபாலசிங்கம் —

  இரு வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றம் ஜனாதிபதியாக தெரிவு செய்தபோது இலங்கை வரலாறு கண்டிராத மக்கள் கிளர்ச்சியினால் இறுதியில் பயனடைந்தவர் அவரே என்று கூறப்பட்டதுண்டு. ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் அந்த கிளர்ச்சியின் உண்மையான பயனாளி யார் என்பதை உலகிற்கு காட்டியது.

இடதுசாரி அரசியல் கட்சிகளினதும் அவற்றின் தொழிற் சங்கங்களினதும் தலைமையில்  முன்னெடுக்கப்பட்ட 1953  ஆகஸ்ட் ஹர்த்தால் போராட்டத்துக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க மூன்று வருடங்களுக்கு பிறகு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று  பிரதமராக பதவிக்கு வந்ததைப் போன்று, ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு இரு வருடங்கள் கடந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையில்  குறிப்பிடத்தக்க  வித்தியாசங்கள் இருக்கின்றன. பண்டாரநாயக்க ஹர்த்தாலை ஆதரிக்காமலேயே அதன் விளைவாக மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தினார். ஹர்த்தாலை நடத்திய இடதுசாரி தலைவர்களினால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அந்த போராட்டத்தின் வெற்றியினால் தடுமாறிப்போன அவர்கள் அடுத்த நகர்வை செய்வதற்கு பயனுறுதியுடைய தந்திரோபாயத்தை வகுக்க முடியாதவர்களாக அப்போது இருந்தார்கள்.

ஆனால், திசாநாயக்க ‘அறகலய’வுக்கு  தலைமை தாங்கவில்லை என்றபோதிலும், அவரின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி  முழுமையான ஆதரவை வழங்கியது. அந்த போராட்டத்தின்  விளைவாக  நாட்டின் அரசியல் நிலவரத்தில்  ஏற்பட்ட மாற்றத்தின் பயனாக  அவர் இன்று ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.  அன்றைய இடதுசாரி தலைவர்களினால் அவர்களது சொந்தத்தில் ஒருபோதும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியவில்லை. 

 ஜனாதிபதி தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றி இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக  ஒரு இடதுசாரி அரசியல்வாதியை நாட்டின் தலைவராக உச்சநிலைக்கு  கொண்டு வந்திருக்கிறது. 

அவரது வெற்றி ஏழு தசாப்தங்களுக்கும்  அதிகமான காலமாக ஆட்சியில்  ஏகபோகத்தை தங்கள் பிறப்புரிமை போன்று  அனுபவித்த பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை ஒரு சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவருக்கு கைமாற்றியிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “திசாநாயக்க”வின் வெற்றி குறித்து கருத்துக் கூறியபோது குடும்ப ஆதிக்க அரசியலை மக்கள் நிராகரித்திருப்பது பற்றி எதுவும் கூறாமல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று நாட்டின் உயர்பதவிக்கு வந்ததற்கு  தனது தந்தையார் மண்டாரநாயக்க 1956 ஆண்டில் செய்த ‘புரட்சியே’ காரணம் என்று உரிமை கோரியிருக்கிறார்.

இலங்கையின் முக்கியமான அரசியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொடவின் வார்த்தைகளில் கூறுவதானால் அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்கள் கொழும்பை மையமாகக்கொண்டு வாழும்  மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைக் கொண்ட  சிறுபான்மையினரான உயர்குடியினரிடம் இருந்து சாதாரண சமூக சக்திகளுக்கு  மாறியிருக்கிறது. ஜனநாயகத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் வர்க்க ஏகபோகம் அதே ஜனநாயகத்தினால் தகர்க்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கையில் முதற்தடவையாக மார்க்சியவாதி ஒருவர் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதாக வர்ணிக்கப்படுகிறது.  பாரம்பரிய அர்த்தத்திலான மார்க்சியவாதியாக திசாநாயக்கவை இன்று நோக்கமுடியாது. பத்து வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் தலைவராக வந்த பிறகு அவர்  முன்னைய போக்குகளில் இருந்து பெரிதும் வேறுபட்ட முறையிலேயே கட்சியை வழிநடத்தி வந்திருக்கிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது என்றால் திசாநாயக்க கட்சியின் போக்குகளில் செய்த மாற்றங்கள் அதற்கு முக்கிய காரணம். 

தெற்காசியாவில் நேபாளத்திற்கு பிறகு இடதுசாரி தலைவர் ஒருவரை அரசாங்க தலைவராக தெரிவு செய்த நாடாக இலங்கை விளங்குகிறது. உலகின் ஒரேயொரு இந்து இராச்சியமாக விளங்கிய நேபாளத்தில் முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மாவோவாத கம்யூனிஸ்ட் ஆயுதக்கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய பிரசண்டா முதற் தடவையாக 2008 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றார். இதுவரையான 18 வருடங்களில் அவர் மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வந்தார். இப்போதும் அவரே பிரதமராக இருக்கிறார்.

மாவோவாதியான  பிரசண்டாவும் அவரது கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியதிகாரத்தில் இருந்துவந்த காலப்பகுதியில் அவர்களின் அணுகுமுறைகளில்  ஏற்பட்ட மாற்றம்  அவர்களை  நேபாளத்தின் ஏனைய தாராளவாத முதலாளித்துவ கட்சிகளில் இருந்து பெருமளவுக்கு வேறுபடுத்திப் பார்க்கமுடியாத நிலையை உருவாக்கி விட்டது என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இலங்கையில் திசாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி. ஏற்கெனவே ஒரு இடதுசாரிப் போக்கில் இருந்து பெருமளவுக்கு விடுபடத் தொடங்கி விட்டது. தீவிர வலதுசாரியான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரு வருடங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுத்துவந்த பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை தொடருவதாக உறுதியளிக்கின்ற அளவுக்கு தேசிய மக்கள் சக்தி மாறுதலுக்கு உள்ளாகியிருக்கிறது. 

ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வேளைகளில் எல்லாம்  திசாநாயக்க அடிப்படைக் கொள்கைகளை கைவிடவில்லை என்ற போதிலும்  தற்போதைய சர்வதேச நிலைவரங்களுக்கு   ஏற்ற முறையில் தங்களது  அணுகுமுறைகளில்  பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று  கூறிவந்திருக்கிறார். உலகில் ஒரு சோசலிச முகாம் இல்லாத காரணத்தால் இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் அவர் விளக்கமளித்தார்.

பொருளாதார நெருக்கடி உட்பட தாங்கள் எதிர்நோக்கும் பெருவாரியான பிரச்சினைகளுக்கு பாரம்பரிய அரசியல் சக்திகளின் தவறான ஆட்சிமுறையே காரணம் என்பதை விளங்கிக் கொண்ட மக்கள்  மத்தியில் பொது வாழ்வை தூய்மைப்படுத்துவது குறித்து திசாநாயக்க அளித்த உறுதிமொழி பெரும் வரவேற்பை பெற்றது. ஊழலுக்கு எதிரான அவரின் செய்தியும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக அளித்த  வாக்குறுதியும்  முறைமை மாற்றம் ஒன்றை வேண்டிநின்ற இளம் வாக்காளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

நீண்டகாலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் கூட  பழைய பிரதான அரசியல் கட்சிகளையே மாறிமாறி  ஆட்சிக்கு கொண்டுவந்து சலித்துப்போன மக்கள் இரு வருடங்களுக்கு முன்னர்  ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பநிலைக்கு பிறகு  பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒருவரிடம்  ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதில் காட்டிய ஆர்வத்தை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின. உண்மையில் இது மக்கள் செய்து பார்க்கத்துணிந்த ஒரு பரிசோதனையே என்பதில் சந்தேகமில்லை. 

 பாரம்பரிய அதிகார வர்க்கத்தின் மீது கடுமையாக வெறுப்படைந்த மக்கள்  ‘மாற்றத்துக்கான’ வேட்பாளராக திசாநாயக்காவை நோக்கினார்கள். கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக தன்னால் சாதிக்க முடிந்ததாக  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பிரசாரப்படுத்திய ‘உறுதிப்பாட்டையும் வழமை நிலையையும்’ அனுபவிக்கக்கூடியவர்களாக இருந்த பிரிவினரே அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு விக்கிரமசிங்க தனது பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மாத்திரம் முழுமையாக தங்கியிருந்தது அவரின் தந்திரோபாயங்களில் இருந்த மிகப்பெரிய குறைபாடாகும். நீண்டகால அரசியல் அனுபவத்தையும் வளமான அறிவையும் கொண்ட அவருக்கு நாடு அண்மைக்காலமாக எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மக்கள் பொருளாதாரக் காரணியை மாத்திரம் மனதிற்கொண்டு வாக்களிக்கப் போவதில்லை  என்பது தெரிந்திருக்கவில்லை. 

பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடும் ஆர்வத்தில் மக்கள் இதுகாலவரையான தவறான ஆட்சிமுறை, குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவு மற்றும் முன்னென்றும் இல்லாத ஊழலை  மறந்து விடுவார்கள் என்று அவர் நினைத்தாரோ? 

தனது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இல்லாத நிலையில் ராஜபக்சாக்களின் கட்சியில் இருந்தும் வேறு கட்சிகளில் இருந்தும் வந்த அரசியல்வாதிகளை நம்பி கூட்டணி ஒன்றை அமைத்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்று விக்கிரமசிங்க நினைத்தது பெரும் தவறு. முன்னரைப் போன்று சிறுபான்மைச் சமூகங்களும் அவரை இந்த தடவை ஆதரிக்க முன்வரவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பெரும்பாலான மக்கள்  பாரம்பரிய அரசியல் அதிகார  வர்க்கத்தின் ஒரு அங்கமாகவே நோக்கினார்கள். அவருக்கு இது ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது தோல்வி. திசாநாயக்கவிடம் தோல்வி கண்டாலும் கூட விக்கிரமசிங்கவை தோற்கடித்துவிட்டதில் பிரேமதாச ஒருவிதத்தில் திருப்தியடைந்திருக்கக்கூடும்.

ஜனாதிபதி திசாநாயக்கவும் கூட ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மற்றைய வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய நிர்ப்பந்தம் இந்த தடவையே ஏற்பட்டது. தனக்கு கிடைத்த ஆணையின் தன்மையை  அவர் விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தேவை இருக்கிறது.

கொழும்பில் அதிகார ஏகபோகத்தைக் கொண்டிருந்த மூன்று பிரதான அரசியல் கட்சிகளையும் கிரகணம் செய்து திசாநாயக்கவும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தியும் தேர்தலில் கண்டிருக்கும் வெற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டை விட்டு வெளியேற வைத்த 2022 மக்கள் கிளர்ச்சியுடன் தொடக்கிய மாற்றத்தை நோக்கிய  அரசியல் நிகழ்வுகளின் சுழற்சியை நிறைவு செய்கிறது என்று எவரும் மெத்தனமாக நினைத்து விடக்கூடாது. ஜனாதிபதி திசாநாயக்க சமாளிக்க முடியாத எண்ணற்ற சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவராக இருக்கிறார்.

பாராளுமன்றத்தை கலைத்து இரு மாதங்களுக்கும் குறைவான இடைவெளிக்குள்  பொதுத்தேர்தலுக்கான திகதியை அவர் அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் கண்ட தோல்வியின் தாக்கத்தில் இருந்து மற்றைய கட்சிகள்  விடுபடுவற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

பொருளாதாரத்தை உறுதிப்பாட்டுக்கு கொண்டுவரவும் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று திசாநாயக்க தன்னை ஜனாதிபதியாக தெரிவு  செய்த மக்களிடம் கோருவார். ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் தான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அமையுமா அல்லது அவருக்கு முழுமையான வாய்ப்பைக் கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகப்பெரும்பான்மை ஆசனங்களுடன் தெரிவு   செய்வார்களா என்பது முக்கியமான கேள்வி.

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் புவியியல் ஒழுங்கை கருத்தில் எடுக்கவேண்டியதும் அவசியமாகிறது.

தென்னிலங்கையில்  இருந்து குறிப்பாக சிங்கள பௌத்த சமூகத்தவர்கள் அதிகப்பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களில் இருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெற்று திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மயைகத்திலும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்   பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்குமே பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். 

சிறுபான்மைச் சமூகங்கள் திசாநாயக்கவுக்கு முற்றாக வாக்களிக்கவில்லை என்று கூறமுடியாது. ஆனால், பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகள் தான் அவரை வெற்றிபெற வைத்தன. அதற்காக கோட்டாபய ராஜபக்ச போன்று சிங்கள மக்களே தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள் என்று திசாநாயக்க ஒருபோதும் சொல்லப்போவதில்லை.

 கோட்டாபய சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணத்துக்கும் திசாநாயக்க தெரிவு  செய்யப்பட்ட காரணத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.

அதேவேளை, தாங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவராக திசாநாயக்கவை சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளில் கணிசமான பிரிவினர் அடையாளம் கண்டு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால்,  சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான அந்த தேசியவாத சக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல் துணிச்சலாக திசாநாயக்க நடந்து கொள்வாரா இல்லையா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். தங்களது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து புதிய அணுகுமுறையை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன.

சிறுபான்மைச் சமூகங்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்று தேர்தல் முடிவுகளை வியாக்கியானம் செய்யமுடியாது. சிங்கள மக்கள் விரும்புகின்ற மாற்றத்திற்குள் தங்களது  அபிலாசைகளுக்கு எந்தளவுக்கு மதிப்பளிக்கப்படும் என்பதே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. 

எது எவ்வாறிருந்தாலும், இதுகாலவரை இலங்கை அரசியல் அதிகாரத்தை தங்களது ஏகபோகத்தில் வைத்திருந்த ஒரு வர்க்கத்துக்கு வெளியில் உள்ள ஒரு ‘ தோழர்’  ஜனநாயக வழிமுறையின் மூலமாக நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதில்  உள்ள வரலாற்று முக்கியத்துவத்துவம் உரியமுறையில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கணிசமான காலப்பகுதிக்கு ஆட்சிசெய்த பின்னர் மாத்திரமே அவரைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்யமுடியும்.
 

 

https://arangamnews.com/?p=11287

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன? — வி. சிவலிங்கம் —

1 month 3 weeks ago

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன?(கேள்வி, பதில் வடிவில்) 

— வி. சிவலிங்கம் —

கேள்வி:

நடந்து முடிந்த 9வது ஜனாதிபதித் தேர்தல் என்பது பல வகைகளில் வித்தியாசமானது எனக் குறிப்பிடப்படுகிறது. அவை எவை?

பதில்:

சுதந்திரத்திற்குப் பின்னதான தேர்தல்களில் இத் தேர்தல் என்பது மிகவும் அமைதியாக நடைபெற்றதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இத் தேர்தலை ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறும் அமைதியான தேர்தல்களோடு பலரும் ஒப்பிடுகின்றனர். இதற்கான பிரதான காரணம் நாடு பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் தேர்தல் செலவினம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதை சாமான்ய மக்களே புரிந்திருந்த நிலையில் அவை சாதகமாக இருந்தன.

அடுத்ததாக, தேர்தல் ஆணையம் மிகவும் இறுக்கமாக செயற்பட்டமை இம் மாற்றத்திற்கான பிரதான அம்சமாகும். பொதுவாகவே அதிகார தரப்பினர் அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்வது வழமையான சம்பிரதாயமாக இருந்துள்ளது. இம்முறை பாரிய அளவில் செயற்படுவதற்கான வாய்ப்புகள் கிட்டவில்லை. மக்களும் மிகவும் விழிப்பாகவே செயற்பட்டனர். சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்கள், தேவையற்ற உரைகள் போன்றன மிகவும் தவிர்க்கப்பட்டிருந்தன. இதனை அவதானிக்கும்போது தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் இறுக்கமான செயற்பாடுகளில் தங்கியிருப்பதை இத் தேர்தல் உணர்த்தியது.

தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையலாம்? என்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டதால் பிரதான கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகள் மிகவும் அடக்கியே செயற்பட்டன. குறிப்பாக, இன விரோத உரைகள், செயற்பாடுகளுக்கு மக்கள் ஆதரவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

கேள்வி:

இத் தேர்தல் முடிவுகளை அவதானிக்கும்போது அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை மக்கள் பெருமளவில் ஆதரித்த நிலையில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை இரண்டாவது நிலைக்குத் தள்ளியிருப்பது எவ்வாறான செய்தியை தருகிறது?

பதில்:

தேர்தல் முடிவுகளை ஆராயுமிடத்து, வாக்களிப்பில் நாடு சில பிரச்சனைகளில் ஒருமித்தும், மற்றும் சில பிரச்சனைகளில் வேறுபாடாகவும் செயற்பட்டிருக்கிறது. உதாரணமாக, தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் பொதுவான இலக்கைக் கொண்டிருப்பினும் அவ்வாறாக பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் எதற்கு முக்கியத்துவம் வழங்குவது என்பதில் வேறுபாடு காணப்படுகிறது. அநுரவிற்கு தேசத்தின் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினர் ஆதரித்துள்ளதையும், அதேவேளை  பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் நாட்டமுடைய மத்திய தர வர்க்கம் பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருப்பதால் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஆதரித்துள்ளனர். இந்த இரு சாராரும் தமக்கே உரித்தான தேர்வை மேற்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக விகிதாசாரத்தில் உள்ளதால் அவர்களின் வாக்குப் பலம் அநுரவை ஜனாதிபதியாக அமர்த்தியுள்ளது.

கேள்வி:

இக் கருத்தை அவதானிக்கும்போது இந்த இரு பிரிவினரும் எதிர், எதிர் முகாம்களாக மாறுவார்களா? அல்லது தேசத்தின் முன்னேற்றம் கருதி இணைந்து செயற்பட வாய்ப்பு உண்டா?

பதில்:

இதற்கான பதிலை சற்று விரிவாக தர விரும்புகிறேன். இந்த இரு பிரிவினரதும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த நிலையில் இரு சாராரும் ஒரு பலமான அரச கட்டுமானம் அவசியம் என்பதனையும், நாட்டின் பொருளாதாரம் தனியார், பொதுத்துறை இணைந்ததாக அமைதல் அவசியம் என்பதும் தெளிவாக இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியினரின் அரசியல் ஆரம்பம் என்பது இடதுசாரி மையக் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருந்தது. எனவே அவர்கள் நாட்டின் அரசியல் அடிப்படை மாற்றம் என்பது வர்க்க அடிப்படையில் அணுகப்பட்டது. முதலாளித்துவ கட்டுமானம் ஒன்றினால் தேசியப் பிரச்சனைகள் உக்கிரப்படுமே தவிர தீர வாய்ப்பில்லை என்பதே விளக்கமாக அமைந்தது.

ஆனால் கடந்த 40 ஆண்டுகால தாராளவாத திறந்த பொருளாதார கட்டமைப்பு பல விதங்களில் வர்க்கப் போராட்டத்திற்கான அடிப்படைகளை மாற்றி அமைத்தது. தொழிலாள வர்க்கம் கூறுகளாக்கப்பட்டு தொழிற்சங்க செயற்பாடுகள் முடக்கப்பட்டன. ஒரு புறத்தில் நாட்டின் ஜனநாயகக் கட்டுமானம் ஏகபோக அல்லது சர்வாதிகார அல்லது குடும்ப ஆட்சியை நோக்கி அதிகாரக் குவிப்பை மேற்கொண்ட நிலையில் முதலில் ஜனநாயக கட்டுமானத்தைப் பலப்படுத்துவதற்கு முன்னுரிமை தேவைப்பட்டது. இதன் காரணமாகவே இதுவரை வர்க்க அரசியலைப் பேசி வந்த ஜே வி பி இனர் பாராளுமன்ற ஆட்சிமுறையை வலியுறுத்தும் லிபரல் ஜனநாயக நெறிமுறைகளை நோக்கி தமது பாதையை மாற்றினர். இதனைச் சந்தர்ப்பவாதம் என்பதை விட தேசத்தின் நிலை அவ்வாறான மாற்றத்தை நோக்கித் தள்ளியது எனலாம். இதுவே இன்று ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்கிறது.

எனவே 2019ம் ஆண்டளவில் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினர் முதலில் நவதாராளவாத பொருளாதாரத்தையும், அதன் அரசியல் கட்டுமானத்தையும் அதன் நன்மை தரும் பகுதிகளைப் பாதிக்காத வகையில் பொறிமுறை மாற்றம் ஒன்றை நோக்கி தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பினைத் தோற்றுவித்து மக்கள் மத்தியில் செயற்பட்டனர். அதன் காரணமாக மக்கள் மனதில் மாற்றங்களைக் கண்ட ஜே வி பி இனர் தேசிய மக்கள் சக்தியுடன் தம்மை இணைத்தனர்.

அதே போலவே நவதாராளவாத பொருளாதாரத்தையும், அதனை நிறைவேற்றும் வகையில் நிறைவேற்று  ஜனாதிபதி ஆட்முறையை அறிமுகப்படுத்திய ஐ தே கட்சியின் ஒரு பிரிவினர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாட்டிலிருக்கும் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானமும், அதிகாரக் குவிப்பைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையும் நாட்டில் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். குறிப்பாக நவதாராளவாத பொருளாதாரம் நாட்டினை ஒரு நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளியதோடு, தேசியத்தின் உள்நாட்டு உற்பத்தியையும் இல்லாதொழித்தது. அதனால் இறக்குமதிக் கலாச்சாரத்திற்குள் நாடு முடங்கியது. அதே போலவே அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை தேசிய நல்லிணக்கத்தை நலிவடையச் செய்ததோடு, நாடு தொடர்ச்சியான போர் நிலைக்குள் தள்ளி நிலைபேறான ஆட்சிக் கட்டுமானத்தைத் தோற்றுவிக்க முடியாதிருந்தது.

இம் மாற்றங்களை அவதானித்த பிரதான கட்சிகளான ஜே வி பி – தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன தமது அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து தம்மை மாற்றிக் கொண்டன. இதன் விளைவாகவே தேசிய மக்கள் சக்தியினர் ஒரு புறத்தில் நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானத்தின் சிறந்த அம்சங்களை தொடருவதும், அதே வேளை அரசியல் கட்டுமானத்தை பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிக் கட்டுமானத்தை நோக்கித் திருப்பும் முடிவை எடுத்தனர். அதன் விளைவே மக்கள் அக் கட்சியினரை ஆட்சிக் கட்டுமானத்தில் உட்கார வைத்துள்ளனர்.

அதே போலவே ஊழல், விரயம், நல்லாட்சிக் கட்டுமானம், உள்ளுர் சிறிய, நடுத்தர உற்பத்தி நிறுவனங்களைப் பலப்படுத்தி தேசியவருமானத்தையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் விதத்தில் சமூக சந்தைப் பொருளாதாரக் கட்டுமானத்தை நோக்கி ஐக்கிய மக்கள் சக்தியினர் மாற்றமடைந்தனர். எனவே இரு சாராரும் எதிர், எதிர் அணிகள் அல்ல என்பதே எனது அவதானிப்பு ஆகும்.

 

கேள்வி:

அவ்வாறாயின் அடுத்து வரும் பொதுத் தேர்தல் முடிவுகள் எவ்வாறான அரசியலை எமக்குத் தரப் போகிறது?

பதில்:

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மையமாக வைத்துப் பார்க்கையில் பல புதிய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். உதாரணமாக, சிங்கள அரசியல் தேசிய பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்களில் செல்லலாம். அதாவது பொருளாதாரக் கட்டுமானம் என்பது பலமான சமூகப் பாதுகாப்பும், நியாயமான செல்வப் பங்கீடும் சந்தைப் பொருளாதாரம் காரணமாக பாதிக்கப்படும் நலிவடைந்த பிரிவினருக்கான பாதுகாப்பையும் மையமாகக் கொண்ட பிரிவினருக்கு தேசிய மக்கள் சக்தி தலைமை தாங்கவும், அதே வேளை நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் நியாயமான, சுயாதீன பங்களிப்பைக் கோரவும், வருமான ஏற்றத்தாழ்வினைத் தடுக்கும் வகையிலான அரசின் தலையீட்டை குறிப்பாக வேலைத் தலங்களில் உள்ள தொழிற் பாதுகாப்பை அதிகரித்தல், வேலையற்றோருக்கான வருமானப் பாதுகாப்பு என்பதைக் கோரும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியினரும் தொழிற்படலாம்.

நாம் இப் பிரச்சனையை நாட்டில் இன்று நிலவும் நவதாராளவாத திறந்த பொருளாதாரத்தின் தாக்கங்களின் பின்னணியிலிருந்தே அணுக வேண்டும். சிலர் உணர்ச்சி தரும் உரைகளின் பின்னணியிலிருந்து நோக்கலாம். ஆனால் நாடு மிக மோசமான பொருளாதாரச் சிக்கலில் உள்ள நிலையில் இரு தரப்பினரதும் அணுகுமுறைகள் மிக அவசியமாக உள்ளன. அத்துடன் தற்போது நடைமுறையிலுள்ள நவதாராளவாத பொருளாதாரம் பல நன்மைகளையும் தந்துள்ளதை நாம் மறுக்க முடியாது. அவற்றை நிராகரித்துச் செல்லவும் முடியாது.

நடைமுறையிலுள்ள திறந்த பொருளாதாரம் சுதந்திர வர்த்தகம், கட்டுப்பாடுகளை அகற்றுதல், தனியுடமையாக்கல், அரச தலையீட்டினைக் குறைத்தல் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கியது. இதன் விளைவாக, மக்கள் உற்பத்தியாளர் நிலையிலிருந்து நுகர்வோராக மாற்றப்பட்டார்கள். உள்ளுர் உற்பத்தி மிகவும் முடக்கப்பட்டது. பதிலாக நுகர்வுக் கலாச்சாரம் என்பது இறக்குமதியாளர்கள். பாரிய வியாபார நிலையங்கள், நிதி நிறுவனங்கள் என்பனவே இப் பயன்களை அனுபவித்தன. இதனால் சாமான்ய மக்கள் கடனாளிகளானார்கள்.

இதனை இந்த இரு தரப்பாரும் மிகவும் விமர்ச்சித்தார்கள். ஆனாலும் ஐக்கிய மக்கள் சக்தியினர் சிறிய மற்றும் மத்தியதர நிறுவனங்களே உள்ளுர் அடிப்படையில் வேலை வாய்ப்புகளையும், வருமானத்தையும் தருவதால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்குமாறும், சில இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளுர் உற்பத்திகளுக்கான விலையைப் பெற உதவுமாறும், உட் கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து குறிப்பாக போக்கு வரத்து, சந்தை வசதிகளை ஏற்படுத்துமாறும் கோருகின்றனர்.

கேள்வி:

அவ்வாறாயின் தேசிய மக்கள் சக்தியினரின் கவனம் எங்கு குவிக்கப்பட்டுள்ளது?

பதில்:

அநுர தலைமையிலான பிரிவினர் வருமான ஏற்றத்தாழ்வு குறித்து வற்புறுத்தினர். ஏனெனில் செயற்பாட்டிலுள்ள திறந்த பொருளாதாரம் பாரிய அளவில் அதாவது ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால் சமூகம் அமைதியற்று இருந்தது. தொழிலாளர்களின் உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டன. திறந்த பொருளாதாரம் பெருந்தொகையான மக்களை வறுமைக் கோட்டின் கீழ் தள்ளியது. இம் மக்களின் எதிர்காலம் குறித்தே தேசிய மக்கள் சக்தியின் கவனம் அதிகளவில் இருந்தது. எனவேதான் சமூக சமத்துவத்தைக் கோரினர். வருமானத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்யுமாறு வற்புறுத்தினர். அத்துடன் தேசத்தின் பொருளாதாரத்தை ஏற்றுமதி வர்த்தகத்திற்கு மாற்றும்படி கோரினர்.

வருமான சமத்துவமின்மை என்பது நவதாராளவாத பொருளாதாரத்தின் விளைபொருளே என்றார்கள். இதன் விளைவாக பணக்காரர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தொழிலாள விவசாய மக்களை கீழே தள்ளியே மேலிடத்திற்குச் சென்றார்கள். தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடற்ற வர்த்தகம், தனியார் உடமையாக்குதல் போன்ற செயற்பாடுகள் செல்வத்தைச் சிலரின் கரங்களில் குவிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது.

மலிவான தொழிலாளர் கிடைக்கும் எனக் கூறி வெளிநாட்டு முதலீடுகளை உள்நாட்டிற்கு வரவழைத்தார்கள். இதன் காரணமாக தொழிலாளர் சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டன. அவர்களின் பாதுகாப்பு கைவிடப்பட்டது. அம் மக்களின் சுகாதாரம், கல்வி, வேலையற்றோருக்கான கொடுப்பனவுகள் போன்றன கைவிடப்பட்டன.

இத்தகைய கொடுமையான நிலமைகளே தேசிய மக்கள் சக்தியின் பிரதான ஆதரவுத் தளங்களாக அமைந்தன.

கேள்வி:

அவ்வாறாயின் இந்த இரு சாராரும் எவ் வழியில் தமது பயணத்தை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு?

பதில்:

தேசிய மக்கள் சக்தி, ஐக்;கிய மக்கள் சக்தி ஆகிய இரு சாராரையும் இரு வகைக்குள் பார்க்கலாம். அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் தேசிய செல்வத்தை நியாயமான விதத்தில் பங்கீடு செய்வதில் அதிக நாட்டம் கொண்டுள்ளவர்களாகவும், ஐக்கிய மக்கள் சக்தியினர் தேசிய உற்பத்தி வளர்ச்சியில் அதிக கவனம் கொண்டுள்ளவர்களாகவும் காண முடியும்.

இப் பிரச்சனையில் அரசின்  செயற்பாடு குறித்து இரு தரப்பாரும் வெவ்வேறு கோட்பாடுகளில் இயங்க வாய்ப்புண்டு. உதாரணமாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் உள்ளுரில் செயற்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி உற்பத்தியை அதிகரிக்கும்படி கோரலாம். அதன் மூலம் வேலை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்திற்கான ஊக்குவிப்பாக கோரலாம்.

ஆனால் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் செல்வத்தை நியாயமான விதத்தில் பகிர்ந்தளிக்கும் வகையில் வரி விதிப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படலாம். இங்கு வரி விதிப்பு என்பது தொழில் நிறுவனங்களைப் பாதிக்குமாயின் உற்பத்தி தடைப்படலாம்.

எனவே இந்த இரு சாராரும் பொது அடிப்படையில் செயற்படுவதற்கு ஏராளமான இடமுண்டு. அதே வேளையில் முறுகல் நிலமைகளும் ஏற்படலாம். ஆனாலும் தேசத்தின் எதிர்காலம் கருதி செயற்படும் அவசியம் உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டது போல இரு சாராரும் தற்போது நடைமுறையிலுள்ள திறந்த பொருளாதார கட்டமைப்பு என்பது பொருளாதார அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் இனிமேலும் பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். ஆனாலும் இப் பிரச்சனைகளுக்கான தீர்வை எட்டுவதில் பிரச்சனைகள் உள்ளன.

இருப்பினும் இந்த இரு சாராரும் சந்தை நடவடிக்கைகளில் அரசின் தலையீட்டைக் கோருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் இரு சாராரும் ஒரு கலப்புப் பொருளாதாரத்தை நோக்கியே பயணமாகின்றனர். இப் பயணம் என்பது நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் நிலவும் சமூக சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பையே வலியுறுத்துகின்றன. அதாவது சமூக ஜனநாயக இலக்கை நோக்கிய பயணமாகவே இதனைக் கொள்ள முடியும்.

 

கேள்வி:

இத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்ற பெயரில் நிறுத்தப்பட்டவரை நிராகரித்துள்ளதோடு ஐக்கிய இலங்கை எனச் செயற்படும் கட்சிகளை நோக்கி பெருமளவில் வாக்களித்துள்ளார்கள். இதனை எவ்வாறு புரிந்து கொள்வது?

பதில்:

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், முஸ்லீம் பிரதேசங்கள் மற்றும் மலையகத்திலும் மக்கள் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகளவிலும் அநுர, ரணில் ஆகியோருக்கும் வாக்களித்த நிலமைகளை அவதானிக்கும் போது ஒட்டு மொத்தமான இதர சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையை அநுர பெறவில்லை என்பது வெளிப்படை. அதை அவர் புரிந்துள்ள நிலையில்தான் தாம் தமக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையைப் பெற உழைக்கப் போவதாக தெரிவித்துள்ளமை உணர்த்துகிறது.

இம் மக்கள் ஆழமான சந்தேகத்தில் இருப்பதை தேர்தலில் உணர்த்தியுள்ளார்கள். இந் நிலையில் நாட்டில் இறுக்கமான விதத்தில் ஜனநாயகக் கட்டுமானங்களைப் பலப்படுத்தி, சட்டம், ஒழுங்கு அடிப்படையில் நாடு முன்னேறிச் செல்லும்போது இச் சந்தேகங்கள் மறைய வாய்ப்புகள் உண்டு.

இங்கு வடக்கு, கிழக்கு மாகாண அரசியலை அவதானிக்கும் போது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான அடிப்படைகள் தெரிகின்றன. உதாரணமாக தமிழரசுக் கட்சிக்குள் நிலவிய முரண்பாடுகளை அவதானிக்கும்போது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரிவினையா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான தீர்வா? என்பதே கேள்வியாக இருந்தது. பிரிவினைவாத சக்திகள் 13வது திருத்தத்தினை முற்றாக நிராகரித்து சுயநிர்ணயம், சுயாட்சி, தன்னாட்சி எனக் கூறியதோடு தமிழ் மக்கள் இப் பிரச்சனையில் மிக ஒற்றுமையாக இருப்பதை உலகிற்கு எடுத்துக் காட்டப் போவதாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் பொது வேட்பாளரை முற்றாக நிராகரித்துள்ளார்கள். இது ஒரு வகையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வா? அல்லது பிரிவினையா? என்பதற்கான வாக்கெடுப்பாக அமைந்தது. மக்கள் தீர்மானகரமான விதத்தில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எதிர்பார்ப்பதாகவே நாம் கொள்ள முடியும்.

தற்போது பொதுத் தேர்தல் அண்மித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நகர்வு என்பது எவ்வாறாக அமையலாம்? என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சி சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக தெரிவித்தது. அதன் பிரகாரம் வடக்கு, கிழக்கில் பெரும்பாலானவர்களும், முஸ்லீம் மற்றும் மலையகப் பிரதேசங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் பெரும்பாலான மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.

ஏற்கெனவே சில கேள்விகளுக்கான பதில்களில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒருமித்துச் செயற்படுவதற்கான அம்சங்கள் நிறைய இருப்பதை அடையாளம் காட்டியிருந்தேன். அதே வேளை ஜனாதிபதி அநுர அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில் சகல மக்களுக்கமான ஒரு ஜனாதிபதியாக செயற்படும் விதத்தில் தமக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையையும் பெற முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே தமிழரசுக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியை தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக மிக விரைவாக செயற்பட்டு தேசிய அமைதியை ஏற்படுத்தி ஜனாதிபதி கூறுவது போல ‘சகலரும் இலங்கையர்’ என்ற அடையாளத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலமே பொருளாதார அபிவிருத்தியை எட்ட முடியும். கடந்த காலங்களில் இரு பெரும் கட்சிகள் இனவாதத்தைப் பயன்படுத்தி தேசிய இனப் பிரச்சனையை உக்கிரப்படுத்தி அதிகாரத்தைக் கைப்படுத்தி நாட்டைச் சுரண்டிய வரலாறுகளே இன்று மிஞ்சியுள்ளன. இதன் விளைவாகவே சாமான்ய மக்களின் பிரதிநிதியை மக்கள் அரியாசனத்தில் இருத்தி உள்ளனர். கடந்த கால இனவாத, பிரிவினைவாத அரசியலுக்கு எதிர் காலத்தில் இடமில்லை என்பதை உணர்த்தும் விதத்தில் மாற்றங்கள் ஆரம்பித்துள்ளன.  ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு தரப்பினரையும் தேச முன்னேற்றத்தின் படிக் கற்களாகவே பார்க்கின்றனர். கடந்த இருண்ட காலம் இனிமேல் வராது என்ற நம்பிக்கையை பெற்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி:

அவ்வாறாயின் எவ்வாறான நகர்வுகளைத் தமிழ் அரசியல் மேற்கொள்ள வேண்டும்?

பதில்:

முதலில் தமிழரசுக் கட்சிக்கு வெளியிலுள்ள ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகளை நேசிக்கும் உதிரிகளாக உள்ள  கட்சிகள், குழுக்களாக இயங்கும் சக்திகள் முதலில் இணைய வேண்டும். இவர்களின் இலக்குகள் என்பது ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான தீர்வை முன்வைக்கும் கட்சிகளோடு உடன்பாட்டிற்குச் செல்லுதல்,  தேசிய வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையிலும், நாட்டில் புதிய சகாப்தம் தோன்றியுள்ளதை உத்தரவாதம் செய்யும் வகையிலும், இனவாத அரசியலுக்கு எதிர் காலத்தில் இடமளிக்காத வகையிலும், சிறுபான்மைத் தேசிய இனங்கள் தேசிய உருவாக்கத்தில் பங்கு கொள்ளும் வகையில் அமைச்சரவையிலும் இணைந்து செயற்பட வேண்டும். அடுத்தது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலைச் சீரழித்து வந்த தமிழ்க் குறும் தேசியவாத சக்திகளை தமிழ் அரசியலிலிருந்து நீக்குதல் என்பனவாகும். ஏனெனில் இந்த அரசியல் தமிழ் சமூகத்தை முன்னேறிச் செல்ல இடமளிக்கவில்லை. பதிலாக தத்தமது சுக போகங்களுக்காக பணப் பெட்டிகளை நோக்கிச் சென்றார்கள். இந்த வரலாறு முடிவுக்கு செல்ல வேண்டும். தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக செயற்படும் ஜனநாயக உரிமை சகலருக்கும் உண்டு. ஆனால் மக்கள் பெருமளவில் தமது விருப்பத்தைத் தேர்தலில் வெளிப்படுத்திய நிலையில் அப் பாதையைத் தொடர இடமளிக்க வேண்டும். ஆனால் தொடர்ச்சியாகவே முன்னேறிச் செல்ல முடியாத வகையில் தடுப்புகளைத் தொடர்ச்சியாக கட்டுவது ஜனநாயக செயற்பாடு எனக் கருத முடியவில்லை.

தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிளவுகளுக்கு காரணமாகவுள்ள பிரிவினை சக்திகள் அகற்றப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை நேசிக்கும் சக்திகள் ஓர் ஜனநாயக கட்டுமானத்தை தோற்றுவிக்க வேண்டும். ஏனெனில் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாகவே ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை வலியுறுத்தியுள்ளன. தமிழரசுக் கட்சி புதிய யுகத்தை நோக்கிச் செல்லும் வகையில் சகல ஜனநாயக சக்திகளும் ஒரே குடையின் கீழ் செயற்படும் வகையில் அறைகூவல் விடுக்க வேண்டும். தமிழ் அரசியலில் சாத்தியமான அரசியல் பாதையை ஒழுங்கமைக்கும் நோக்கில் சகல சக்திகளையும் இணைப்பதற்கு அக் கட்சி தயாராக வேண்டும்.

தமிழரசுக் கட்சி இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக எடுத்த முடிவை தமிழ் மக்கள் ஏகோபித்த விதத்தில் ஆதரித்துள்ளனர். இதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெறுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். தற்போது சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் உறங்கு நிலைக்குச் சென்றுள்ளன. இவர்கள் மீண்டும் தழைக்க முடியாதவாறு இன்றைய ஆட்சியாளர்களைப் பலப்படுத்த வேண்டும். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சகல முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் பக்க பலமாக இருத்தல் அவசியம்.

எதிர்வரும் தேர்தலை எதிர் கொள்வதற்கு தமிழரசுக் கட்சி சகல ஜனநாயக சக்திகளுக்கும் அறைகூவல் விடுக்க வேண்டும். நாட்டின் இன்றைய அரசியல் நிலையில் காத்திரமான முடிவுகளை எடுக்கும் வகையில் கட்சிக்குள் பலமான விதத்தில் ஜனநாயக விழுமியங்கள் தோற்றம் பெற வேண்டும். கட்சிக் கட்டுப்பாடுகளை மீறுவோர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இன்று நாடு புதிய ஜனநாயக மாற்றங்களை நோக்கிப் புறப்பட்டுள்ள வேளையில் தமிழ் அரசியல் அதற்கு ஏற்ற வகையில் மாற வேண்டும்.

தமிழ் பிரதேசங்களில் பொருளாதார அடிப்படையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அரசியல் இணக்கம் காணப்பட வேண்டும். தமிழ் சமூகத்திலுள்ள அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர் என்போரை குறிப்பாக பணப்பெட்டியின் பின்னால் செல்பவர்களைத் தவிர்த்து காத்திரமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

தமிழ் அரசியல் என்பது பிற்போக்குத் தேசிய வாதத்திற்கு எதிராகவும், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களுடன் ஐக்கியத்தைப் பேணும் விதத்திலான அரசியல் கூட்டணி அமைதல் அவசியம்.

முற்றும்.

 

 

அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன்

1 month 3 weeks ago

அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன்
facebook_1727109033365_72440203270822645

இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலைவர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல.

ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலுமான ஜேவிபியின் வெற்றிக்குள் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படுகின்ற புதிய கூட்டை தமிழ் மக்கள் விருப்பு வெறுப்பு இன்றிக் கற்க வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு அது. ஆயுதப் போராட்ட மரபில் வந்த ஓர் அமைப்பும் புத்திஜீவிகளும் இணைந்து அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அக்கூட்டின் மையக் கட்டமைப்புக்குள் 73 உறுப்பினர்கள் உண்டு. அதில் அறுவர் மட்டுமே தமிழர்கள். அங்கு இன விகிதாசாரம் பேணப்படவில்லை.

ஆனால் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியை ஆதரிக்கும் சில படித்தவர்கள் இம்முறை தேர்தலில் இனவாதம் பின்வாங்கி விட்டது என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். தமிழ் பொது வேட்பாளர் இனவாதத்தை முன் வைத்ததாகவும் விமர்சிக்கின்றார்கள். ஆனால் “அரகலிய” போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியது போல, தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதம் பெரிய அளவில் கதைக்கப்படவில்லை என்பதை வைத்து இனவாதம் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.

அனுர கூறும் மாற்றம் எனப்படுவது இனவாதம் இல்லாத ஓர் இலங்கை தீவா?

இது தேர்தல் காலம் மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் சபையின் பொறுப்புக் கூறலுக்கான விவாதங்கள் நடக்கும் ஒரு காலகட்டமும் ஆகும். வரும் ஏழாம் திகதி வரையிலும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறும். இதில் பொறுப்புக் கூறல் தொடர்பில் அனுரவின் நிலைப்பாடு என்ன?

அசோசியேட்டட் பிரஸ் என்ற ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியை இங்கு பார்க்கலாம் “பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்வியைப் பொறுத்தவரை அது பழிவாங்குகலுக்கான ஒரு வழியாக அமையக்கூடாது. யாரையாவது குற்றச்சாட்டுவதாகவும் அமையக்கூடாது. மாறாக உண்மையைக் கண்டுபிடிப்பதாக மட்டும் அமைய வேண்டும்….. பாதிக்கப்பட்ட மக்கள் கூட யாராவது தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் என்ன நடந்தது என்பதனை அறிவதற்கு மட்டும்தான் விரும்புகிறார்கள் ” என்று அனுர கூறுகிறார்.

அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குத் தயாரில்லை. குற்றங்களை விசாரிப்பது உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு என்று கூறுகிறார். ஆயின் யார் குற்றவாளி என்ற உண்மையை கண்டுபிடித்த பின் அவரை தண்டிக்காமல் விட வேண்டும் என்று அவர் கூற வருகிறாரா? பாதிக்கப்பட்ட மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவருக்கு யார் சொன்னது? அதாவது அனுர பொறுப்புக் கூறுவதற்குத் தயார் இல்லை. குற்றவாளிகளைப் பாதுகாப்பது என்பதே இனவாதம்தான்.

நாட்டின் இனவாதச் சூழலை அனுர மாற்றுவார் என்று தமிழ் மக்களை நம்ப வைப்பதாக இருந்தால் அவர், கடந்த காலங்களில் அவருடைய கட்சி குறிப்பாக அவர் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த இரண்டு பிரதான நிலைப்பாடுகளுக்கு பொறுப்புக் கூறுவாரா? மன்னிப்புக் கேட்பாரா?

தமிழ் மக்களின் தாயகத்தை அதாவது வடக்கையும் கிழக்கையும் சட்ட ரீதியாகப் பிரித்தது ஜேவிபிதான். இது முதலாவது. இரண்டாவது, சுனாமிக்குப் பின்னரான சுனாமிப் பொதுக் கட்டமைப்பை எதிர்த்து அனுர தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எனப்படுவது மனிதாபிமான நோக்கங்களுக்கானது. இயற்கைப் பேரழிவு ஒன்றுக்குப் பின் உருவாக்கப்பட இருந்த மனிதாபிமானக் கட்டமைப்பு அது. அதைக் கூட எதிர்த்த ஒருவர் இப்பொழுது அதற்கு பொறுப்பு கூறுவாரா? தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அவரிடம் இனவாதம் இல்லை என்று கூறி அவருக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாகக் கேட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள படித்தவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா?

அதுமட்டுமல்ல தமிழ் பொது வேட்பாளரோடு அனுர பேச முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தமிழ் பொது வேட்பாளரோடு உரையாடத் தயாராக இருந்தார்கள். ஆனால் அனுர உரையாடத் தயாராக இருக்கவில்லை. யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திடம் ஜேவிபி அதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பிடம் அவர் உத்தியோகபூர்வமான கோரிக்கைகள் எவற்றையும் முன் வைத்திருக்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளரை அவர் பொருட்படுத்தவில்லை. அதாவது தமிழ் வாக்குகளை அவர் பொருட்படுத்தவில்லை ?

அவர் பதவியேற்றபோது தேசிய கீதம் இசைக்கப்படுகையில் ஒரு பகுதி பிக்குகள் எழுந்து நின்றமையை சில தமிழர்கள் பெரிய மாற்றமாகச் சித்திருக்கிறார்கள். ஆனால் பதவியேற்ற போது பௌத்தப்பிக்குகளின் முன் அவர் மண்டியிட்டு அமர்ந்து ஆசீர்வாதம் பெறுவதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர் இடதுசாரி மரபில் வந்த ஒரு தலைவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் வழமைகளை மீறிச் செயல்பட முடியவில்லை என்பதைத்தான் அந்த ஆசீர்வாதம் பெறும் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தியது. அந்த மத ரீதியான சிஸ்டத்தை அவரால் மாற்ற முடியவில்லை. அவரும் அந்த சிஸ்டத்தின் கைதிதான்.

அதனால்தான் தமிழ் மக்கள் அவர் கூறும் மாற்றத்தை அதாவது சிஸ்டத்தில் மாற்றம் என்பதனை சந்தேகத்தோடு பார்க்கின்றார்கள். ஏனெனில், தமிழ் மக்கள் கேட்பது மேலோட்டமான சிஸ்டத்தில் மாற்றத்தை அல்ல. தமிழ் மக்கள் கேட்பது அதைவிட ஆழமான கட்டமைப்பு மாற்றத்தை. ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் மாற்றம். அதைச் செய்ய அனுராவால் முடியுமா?

பதவியேற்ற பின் அவர் ஆற்றிய உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பின்வருமாறு கூறுகிறார்.. “சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம். தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.”

இது அரசியல் அடர்த்தி குறைந்த வார்த்தைகளால் வழங்கப்படும் கவர்ச்சியான ஆனால் மேலோட்டமான வாக்குறுதி. இப்படிப்பட்ட லிபரல் வாக்குறுதிகள் பலவற்றை தமிழ் மக்கள் ஏற்கனவே கடந்து வந்து விட்டார்கள். தமிழ் மக்கள் கேட்பது அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தும் கடடமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், தேசங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ளும் மாற்றத்தை. அந்த அடிப்படையில் வழங்கப்படும் ஒரு தீர்வை. தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கும் ஒரு தீர்வை. அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அனுரவால் முடியுமா?
 

https://www.nillanthan.com/6909/

பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.

1 month 3 weeks ago
இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன் பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியமை என்பதே முதலாவது வெற்றி. ஏனெனில் ஓர் அரசுடைய தரப்பு வைக்கும் தேர்தலை அரசற்ற தரப்பு எப்படி படைப்புத்திறனோடும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற தரப்பு ஒன்று அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தன்னுடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக பயன்படுத்தியது ;அத்தேர்தல் களத்தைத் தேசத்தைத் திரட்டும் ஒரு பயில் களமாகாகக் கையாண்டமை என்பது முதலாவது வெற்றி.

இரண்டாவது வெற்றி, பொது வேட்பாளர் தமிழ் மக்களை ஐக்கியப் படுத்துவதில் முதற்கட்டத் திரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம்.அது கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளில் அரைவாசியை விட அதிகம். இந்த அடிப்படையில் அவர் பெற்றது ஒரு தொடக்க வெற்றி. அது ஒரு பிரகாசமான வெற்றி இல்லைத்தான். ஆனாலும் வெற்றி. பொது வேட்பாளரை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களை அவர் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு கணக்கு என்று கருதுகின்றாரா? இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொடுக்கும் மதிப்பு அதுதானா?

மூன்றாவது வெற்றி, பொது வேட்பாளர் தாயகத்தில் உள்ள மக்களை கட்சி கடந்து ஒன்று திரட்டியது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒன்று திரட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்த ஒரு தேர்தல் இது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது வேட்பாளரை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக ஒன்று குவிந்தார்கள். இது மூன்றாவது வெற்றி.

நாலாவது வெற்றி, கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளர் வடக்கில் பெற்ற வாக்குகள்.வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாக ஏற்கனவே பிரித்து விட்டார்கள் நிர்வாக எல்லைகளின் மூலமும் குடியேற்றங்களின் மூலமும் கிழக்கில் கிழக்கு மையக் கட்சிகளை வளர்த்தெடுப்பதன் மூலமும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முற்படும் சக்திகள் வெற்றி பெற்று வரும் ஒரு காலகட்டத்தில்,கிழக்க்கில் இருந்து ஒரு வேட்பாளர் பொது வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார்.அவருக்கு வடக்கில் கிடைத்த ஆதரவு என்பது வடக்கையும் கிழக்கையும் உணர்வுபூர்வமாக பிரிக்க முடியாது என்பதனை உணர்த்தி இருக்கிறது.அதுவும் வடக்கு கிழக்கை சட்ட ரீதியாகப் பிரித்த கட்சியின் தலைவர் அரசுத் தலைவராகத் தெரித்தெடுக்கப்படட ஒரு தேர்தலில். இது ஒரு மகத்தான வெற்றி ஐந்தாவது வெற்றி, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. சங்குச் சின்னத்தின் கீழ் ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் அமைப்பு ஒன்றும் கட்சிகளும் இணைந்து அவ்வாறு தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தமிழ் அரசியல் பண்பாட்டில் ஒரு புதிய போக்கு. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு புதிய பரிசோதனையும் கூட. அந்த ஜனநாயகப் பரிசோதனையில் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சித்தி பெற்றிருக்கிறார்கள்.

பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஜூலை 29 ஆம் தேதி. ஜனாதிபதி தேர்தல் நடந்தது செப்டம்பர் 21 ஆம் தேதி. இடைப்பட்ட சுமார் 50 நாட்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு மிகவும் புதிய ஒரு சின்னத்தை சங்குச் சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றியது என்பதில் ஒரு செய்தி இருக்கிறது.தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு வாக்களிக்கும் பொழுது எந்த ஒரு புதிய சின்னத்தையும் ஸ்தாபிக்கலாம் என்பதுதான் அது. இது ஏற்கனவே தமிழ் மக்கள் உதயசூரியன் சின்னத்தை நிராகரித்த பொழுது நிரூபிக்கப்பட்டது. அதன் பின் ஈரோஸ் இயக்கம் சுயேட்சையாகப் போட்டியிட்ட பொழுது கிடைத்த வெற்றியும் அதனை நிரூபித்தது. இப்பொழுது சங்குக்கு கிடைத்த வெற்றியும் அத்தகையதுதான். முற்றிலும் புதிய ஒரு சின்னத்தை 50 நாட்களில் ஸ்தாபிக்க முடிந்தமை என்பது ஒற்றுமையின் விளைவு. ஒற்றுமையின் பலமும் தான்.

ஆனால் இந்த ஒற்றுமை இப்பொழுதும் பலவீனமானதாகவே காணப்படுகிறது பொதுக் கட்டமைப்பு ஒரு பலமான இறுகிப் பிணைந்த கூட்டாக இன்னமும் உருவாகவில்லை. ஒரு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து செயல்பட்டன. இதே இணைந்த செயல்பாடு தொடர்ந்து வரும் தேர்தலிலும் இருக்குமா என்ற கேள்வி உண்டு. கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் நடந்த கூட்டத்தில் அது அது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவிப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கேட்டுள்ளது. அந்த மக்கள் அமைப்பு அதன் பொதுச்சபையைக் கூட்டி அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு மக்கள் அமைப்பு தொடர்ச்சியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அந்த அமைப்பிடம் தயக்கம் காணப்படுவதாக தெரிகின்றது.தேர்தல் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பொதுச்சபை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் தேர்தல் ஒரு பகுதியே தவிர தேர்தல்கள் மூலம் மட்டும் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவது என்று கூறிப் பொதுகட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்பு எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் ஆகப் பிந்திய முயற்சி.

கட்சிகள் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டன.பொதுக் கட்டமைப்புக்குள் அங்கமாக உள்ள ஏழு கட்சிகளும் அது தொடர்பில் கூடி முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கூடி முடிவெடுக்க விருப்பதாகத் தெரிகிறது.

ஒரு ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது வேறு, ஏனைய தேர்தல்களை கையாள்வது வேறு என்ற விளக்கம் பொதுச் சபையிடம் காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாக அல்லாது தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு பயில் களமாகவே பொதுச்சபை பார்த்தது. அந்த அடிப்படையில்தான் பொதுச்சபை பொதுக் கட்டமைப்புக்குள் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முழு அளவுக்கு ஈடுபட்டது. ஆனால் ஏனைய தேதர்கள் அவ்வாறானவை அல்ல. எனவே அந்த தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு பொதுச் சபை கால அவகாசத்தை கேட்டது.

பொதுச்சபை எனப்படுவது ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி உதயமாகிய ஒரு கட்டமைப்பு. அதற்கு ஐந்து மாதங்கள் தான் வயது.5 மாத வயதான ஒரு கட்டமைப்பு அடுத்தடுத்து வரும் தேர்தல்களுக்கு பதில் வினை ஆற்ற வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு விடை இன்று இரவுக்குள் தெரிய வந்து விடும்.

https://athavannews.com/2024/1401614

Checked
Thu, 11/21/2024 - 10:51
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed