அரசியல் அலசல்

தமிழரசின் தனிப் பயணம்; சுமந்திரனின் வெற்றி தோல்வியை ‘இறுதி’ செய்யும் தேர்தல்!

1 month ago

 (புருஜோத்தமன் தங்கமயில்)

 

itak%2024.jpg


இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘தனித்து’ தன்னுடைய வீட்டுச் சின்னத்தில் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் களம் காண்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, ரணில் அரசாங்கத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தால், அது தமிழரசுக் கட்சியின் தனிப் பயணத்தின், மீள்வருகையாக பதிவாகியிருக்கும். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை வெற்றியடைய வைத்து, தங்களின் தனியாவர்த்தனத்துக்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்று அந்தக் கட்சியின் முடிவெடுக்கும் தலைமை நம்புகின்றது. குறைந்தது எட்டு பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவது கட்சியின் எதிர்பார்ப்பு; அதிகபட்சம் 12 ஆசனங்கள். இந்த எண்ணிக்கையைவிட குறைவான ஆசனங்களை தமிழரசுக் கட்சி பெறுமானால், அதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும், இப்போது கட்சியின் நிழல் தலைவராக செயற்படும் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கவேண்டி வரும். அது, அவருக்கு கட்சிக்குள் பெரும் நெருக்கடியை வழங்கி, அவரின் அரசியல் வாழ்வின் முடிவுரையை எழுதும் சூழலை ஏற்படுத்தலாம். 

தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் நாற்பதுக்கும் அதிகப்படியான வாக்குகளினால், சிவஞானம் சிறீதரனிடம் தோல்வியடைந்த சுமந்திரன் இன்றைக்கு கட்சிக்குள் அதியுச்ச அதிகாரங்களோடு இருக்கிறார். அது, மறைந்த சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவராகவோ, கூட்டமைப்பின் தலைவராகவோ கொண்டிராத அதிகாரத்தின் அளவைத் தாண்டியது. சுமந்திரனைக் கேளாமல் எதுவும் கட்சிக்குள் நடைபெறாது என்ற நிலை இன்றைக்கு வந்துவிட்டது. அதுவும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தோடு, சுமந்திரனுக்கு கட்சிக்குள் இருந்த நெருக்கடிகள் எல்லாமும், அவரின் எதிரிகளாலேயே இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. கட்சிக்குள் அவரை எதிரியாக நினைத்துக் கொண்டிருந்தவர்களே, அவரிடம் கட்சியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியிருக்கிறார்கள். கட்சியின் வட்டாரக் கிளை தொடங்கி, கட்சியின் இறுதி முடிவு வரை சுமந்திரனின் இணக்கம், தலையீடு இன்றி எடுக்கப்படுவதில்லை என்ற கட்டம் வந்துவிட்டது. 

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் யாவும் சுமந்திரனின் இணக்கத்தோடுதான் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அவர், யார் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நிராகரிக்க நினைத்தாரோ, அவருக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருக்கின்றது. அதில், சிறீதரனும் விதிவிலக்கல்ல. சிறீதரனை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளராக அறிவிப்பதற்கு சுமந்திரன் எதிர்ப்பினை வெளியிட்டார் என்பது வெளியில் அறிவிக்கப்பட்டாலும், அதன் நேரடி உண்மை அதற்கு மாறானது. சிறீதரன், ‘சங்கு’ சின்னத்திற்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 20,000 வாக்குகளை கிளிநொச்சியில் பெற்றார். அது தனிப்பட்ட ரீதியில் அவரின் தோல்விதான்.  ஆனால், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கான வாக்குகளில் சிறீதரனை வெளித்தள்ளுவதன் மூலம் 20,000 வாக்குகள் இழக்கப்படுவதை சுமந்திரன் விரும்பவில்லை. அதனால்தான், அவர் நியமனக்குழுக் கூட்டத்தில் சிறீதரனை எதிர்ப்பதாக கூறினாலும், பெரும்பான்மையினரின் விருப்பத்தின் பேரில், அவரை வேட்பாளராக முன்னிறுத்துவதாக காட்டிக் கொண்டார். அது சிறீதரனுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கூடத் தெரியும். நியமனக் குழுவில் இருந்த பதினொரு பேரில், எட்டுப் பேர் சுமந்திரன் அணியினர் என்று கொள்ளலாம். அதில், கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, சிறீதரன், சண்முகம் குகதாசன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் தவிர்ந்து சுமந்திரனோடு சேர்த்து ஏழு பேர் அவரின் நிலைப்பாட்டுக்கு மாறாக எந்த முடிவுக்கும் ஆதரவினை வழங்கமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. சிறீதரனை வெளித்தள்ள வேண்டுமாக இருந்தால், அதனை சுமந்திரன் இலகுவாக செய்திருப்பார். அதனை அவர் உள்ளூர விரும்பவில்லை. அதற்கு இன்னொரு எளிய தேர்தல் கணக்கொன்றும் இருந்தது. அதாவது, சுமந்திரனால் வேட்பாளர் நியமனம் நிராகரிக்கப்பட்ட சசிகலா ரவிராஜ், கே.வி.தவராசா, ஈ.சரவணபவன் உள்ளிட்டவர்களோடு வெளித்தள்ளப்பட்டு சிறீதரனும் இணைந்திருந்தால், அது தமிழரசுக் கட்சிக்கான வாக்கு வங்கியில் யாழ்ப்பாணத்தில் பெரும் இடறலை ஏற்படுத்தியிருக்கும். அதனை தவிர்ப்பதற்கு சிறீதரனை கட்சிக்குள் வைத்திருப்பது அவசியமானது. அதன்போக்கில் சுமந்திரன், ‘இந்த விடயத்தில்’ நின்று நிதானித்து(!) இயங்கியிருக்கிறார். கட்சித் தலைவரான மாவை, தன்னுடைய நிலைப்பாடுகளை நியமனக்குழுவுக்குள் சொல்ல முடியாத பொம்மையாக நின்றார். அவர், பரிந்துரைத்த யாரையும் வேட்பாளராக அறிவிக்கும் நிலையில், சுமந்திரன் இல்லை. அதனால்தான், அவர் வெறுப்படைந்து கட்சியின் தலைமைப் பதவியை துறப்பதாக ஊடகங்களில் அறிவித்தார். மாவை, பதவியைத் துறந்தாரா இல்லையா என்பது அவருக்குத்தான் வெளிச்சம். ஏனெனில், அவரின் பதவி துறப்புக்கான கடிதம், பதில் செயலாளருக்கு இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்குள் ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு என்கிற பெயரில் சுமந்திரனால், வேட்பாளர் நியமனம் மறுக்கப்பட்டவர்கள் சிலர் இணைந்து சுயேட்சைக்குழுவாக போட்டியிடுகிறார்கள். அதில், ஒரு எதிர்பார்க்காத வரவு, பசுமை இயக்கத்தின் பொ.ஐங்கரநேசன் மட்டுமே. அவர், தன்னுடைய கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யும் நடைமுறைகளின் போக்கில், இந்தத் தேர்தலை அணுகுவதாக தெரிகின்றது. ஏனெனில், அவரின் தேசிய பசுமை இயக்கத்தின் அடையாளமாக மாம்பழத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.  தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம், தேசிய பசுமை இயக்கத்தை தனிக்கட்சியாக அங்கீகாரம் கோரும் நோக்கம் அவரிடம் இருக்கலாம். அதுதான், மாம்பழச் சின்னம் கோரலுக்கான பின்னணியும் கூட. 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், கட்சியின் முடிவுக்கு எதிராக நின்று ஊடகங்களில் கருத்துரைத்தார்கள் என்ற பெயரில் இளைஞர் அணியின் தலைவராக இருந்த சிவகரன் உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்கள். அப்போது, சிவகரன் ஜனநாயக தமிழரசுக் கட்சியினர் என்று தன்னையும் தன் சார்ந்தவர்களையும் அடையாளப்படுத்தி வந்தார். அவ்வாறான சூழலில், ஜனநாயக தமிழரசுக் கட்சி அடையாளத்தை, தவராசா, சரவணபவன் குழுவினர் எடுத்துக் கொண்டால், ஊடக வெளிப்படுத்தலில் சிக்க வேண்டி வரும் என்கிற நிலையில், அவர்கள் ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு என்ற நாமகாரணத்துக்குள் சென்றிருக்கலாம். பசுமை இயக்கத்தைச் சேர்த்துக் கொண்டிருப்பதன் மூலம், கூட்டமைப்பு என்ற விடயத்தையும் அவர்கள் தர்க்க ரீதியாக நியாயப்படுத்த முயன்றிருக்கலாம். இன்றைக்கு ஜனநாயக தமிழரசு நாமம் சூடிய குழுவினர், ஏற்கனவே ‘இளைஞர் அலை’ என்கிற பெயரில் கடந்த காலத்தில் குழு அமைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அது, சுமந்திரன் எதிர்ப்பு அணிக்குள் இருந்து நிழலாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் பெரும்பாலோனோர், இப்போது ஜனநாயக தமிழரசு சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்களாக இருக்கிறார்கள். இந்தக் குழுவினரின் வருகை, யாழ் தேர்தல் களத்தில் யாருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று நோக்கினால், தமிழரசுக் கட்சிக்கு சில ஆயிரம் வாக்குகளை இழக்கப்பண்ணலாம். குறிப்பாக, தீவக (மக்கள்) மற்றும் வட்டுக்கோட்டைத் தொகுதி வாக்குகளில் சேதாரங்களை ஏற்படுத்தலாம். அதனால், சுமந்திரனுக்கு பெரிய பின்னடைவுகள் ஏற்படும் என்று கருத வேண்டியதில்லை. ஏனெனில், இந்தச் சுயேட்சைக்குழு களம் காணாது இருந்திருந்தால், அவர்களின் ஆதரவாளர்கள் தமிழரசுக்கு வாக்களித்திருப்பார்கள். அத்தோடு, விருப்பு வாக்கினை சிறீதரனுக்கு வழங்கியிருப்பார்கள். ஆனால், இப்போது, இவர்களின் தனி சுயேட்சைக்குழுப்  பயணம், சிறீதரனின் விருப்பு வாக்குகளில் ஒரு சில ஆயிரங்களையாவது குறைக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வேட்பாளர்கள் ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்ட பின்னணியில், சிலரை வெளிப்படையாக வெளியே தள்ளும் நோக்கம் இருந்தது. அதில் முக்கியமானவர் சசிகலா ரவிராஜ். அவர், கடந்த தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு சுமந்திரன் காரணம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அனுதாபத்தைத் தேடிக் கொண்டவர். அவ்வாறான நிலையில், சசிகலாவை அனுமதிக்கக் கூடாது என்பதில் சுமந்திரன் உறுதியாக நின்றார். அதன்மூலம், அவர் தமிழ் மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தியொன்றை ஒருசில நாட்களிலேயே சொல்லியதாகவும் நம்புகிறார். அதாவது, சசிகலா, கொள்கை கோட்பாட்டு ரீதியான  அரசியல்வாதியல்ல. அவர் பதவிகளுக்கான நபர். அதற்காக அவர் யாருடனும் கூட்டுச் சேர்வதற்கு தயாராவார். அப்படிப்பட்ட ஒருவருக்கான அனுதாபம் தேவையற்றது என்பது, அது. இப்போது, சசிகலா, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர். அவர் ‘சங்கு’ச் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்கிறார். அதுவும், தமிழ்ப் பொது வேட்பாளரின் சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் அபகரித்துவிட்டதாக, தமிழ் மக்கள் பொதுச்சபையே, குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிற நிலையில், அந்த அணியில் சசிகலா இணைத்திருக்கிறார். அதனால், அவர் அதிகமாக விமர்சிக்கப்படுகிறார். சிலவேளை, அவர் சிலநாட்கள் காலம் தாழ்த்தி, ஜனநாயக தமிழரசு என்று அடையாளப்படுத்தும் சுயேட்சை அணியோடு இணைந்திருந்தால், அவர் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருந்த அனுதாபம், வாக்குகளாக மாறியிருக்கும். இப்போது, அதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு.

கடந்த காலத்தில், சிறீதரனுக்காக களம் ஆடிய யாருக்காகவும் அவரினால் ஆதரவாக நிற்க முடியவில்லை. தனக்கான ஆசனத்துக்காகவே சிறீதரன் போராடி வேண்டியிருந்த நிலையில், மற்றவர்களுக்காக அவரினால் போராட கோருவதில் தர்க்க நியாயம் இல்லைத்தான். மட்டக்களப்பில், சிறீதரனின் ஆதரவாளராக அறியப்பட்ட, பொது வேட்பாளர் விடயத்தில் சேர்ந்து ‘சங்கு’ நாதம் எழுப்பிய சிறீநேசனுக்கான, வேட்பாளர்  நியமனமே, சுமந்திரன் – சாணக்கியன் இணையினால்தான் இறுதி செய்யப்பட்டது. இறுதிநாட்களில் சிறீநேசன், சாணக்கியனோடு இணக்கமான மனநிலையை வெளிப்படுத்தத் தலைப்பட்டார். அவர், ஊடக சந்திப்பை நடத்தி, சங்குக் கூட்டணியை விமர்சிக்கவும் செய்தார். தமிழரசுதான் தாய்வீடு, வீடுதான் சின்னம் என்றெல்லாம் அவர் சொல்ல வேண்டி வந்தது. அதன்மூலம், அவர் பொது வெளியில், தன்னை தாழ்த்திக் கொண்டு, வேட்பாளராவதற்கான நிலைகளைச் செய்து முடித்தார். அதனால், அவர் நியமனம் பெற்றார். 

இப்போது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்து வேட்பாளர்களில் சிறீதரன், தந்தை செல்வாவின் பேரன் இளங்கோவன் தவிர்த்து ஏனைய ஏழு பேரும் சுமந்திரன் அணியினர் என்று கொள்ளலாம். அது, அவரின் வெற்றியை இலகுபடுத்தலாம். இப்போது சுமந்திரன் எதிர்ப்பு அணியினர் தமிழரசுக் கட்சிக்குள் அமுங்கிப் போய்விட்டார்கள். இன்னும் சிலரோ வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக, யாழ்ப்பாணத்துக்குள் சிலர் வெளியேறிவிட்டார்கள். ஏனைய மாவட்டங்களில் அந்த நிலை இல்லை. தமிழரசு ஓரணியில் நிற்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில், சொந்தக் கட்சிக்காரர்களில் அநேகர் தன்னைத் தோற்கடிக்கும் முனைப்புக்களில் முழுவதுமாக ஈடுபட்டிருக்க, அதனைச் சமாளிப்பதே, சுமந்திரனுக்கு பெரும் வேலையாகிப் போனது. ஆனால், இம்முறை அதற்கான வாய்ப்புக்களை அவர் வெட்டிக் குறைத்திருக்கிறார். இனி, தமிழரசுக்குள் இருந்து கொண்டு இந்தத் தேர்தலில் சுமந்திரன் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யும் துணிவு யாருக்கும் இருக்காது. ஏற்கனவே, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சங்குக்கு வாக்குக் கேட்டவர்களின் பரிதாப நிலை, அதற்கான அண்மைய படிப்பினையாக அமையும். அதனால், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை, மாற்றுக் கட்சிகளை எதிர்கொள்வது மாத்திரமே சுமந்திரனுக்கான வேலையாக இருக்கும். அதனை, தன்னால் இலகுவாக சமாளிக்க முடியும் என்று அவர் நம்புகிறார். ஏனெனில், தேர்தல் மேடைகளில், தன்னை யார் குறிவைத்து தாக்கினாலும், அவர்களை ‘ஆயுதக் குழுக்கள், ஒட்டுக் குழுக்கள், சங்குத் திருடர்கள், சாராயக்கடை முகவர்கள் மற்றும் பதவி வெறியர்கள்’ என்று சொல்லிவிட்டு அவர் கடப்பார். அந்தப் பதிலடி, யாழ்ப்பாணத்தைத் தாண்டி வடக்குக் கிழக்கில் முழுவதுமாக எடுபடும். அதுபோக, யாழ்ப்பாணத்துக்கு வெளியில், வன்னி, திருகோணமலை, அம்பாறை இறுதியாக மட்டக்களப்பு என்று நான்கு தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த வாக்களிப்பு நடைபெறவில்லை என்றால், அது ஏனைய சமூகத்தினரின் – இனத்தினரின் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகப்படுத்தும். அப்படியான கட்டத்தில், தமிழ் மக்களிடம் தமிழரசுக் கட்சியை நோக்கிய ஒருங்கிணைவுக் கோசம், பிரதான தேர்தல் பிரச்சாரமாக எழும். அதனை, தமிழரசுக் கட்சி பெரும்பாலும் அறுவடையும் செய்யும். 

சாராயக்கடை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள் விடயம் தமிழ் தேர்தல் களத்தில் முக்கியமானது. விக்னேஸ்வரனும், சாள்ஸ் நிர்மலநாதனும் அதில் ஆதாரங்களோடு மாட்டிக் கொண்டுவிட்டார்கள். அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற சிலர், தமிழ்த் தேசிய அரசியலில் இம்முறையும் வேட்பாளர்களாக இருப்பதான சந்தேகம் உண்டு. சிலவேளை, அவை ஆதாரங்களோடு வெளியாகும் பட்சத்தில், அதன் பலனையும் தமிழரசுக் கட்சி கணிசமாக அறுவடை செய்யும். ஏனெனில், ஆரம்பம் முதலே, தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியினர் என்று அறியப்பட்ட தரப்பினர், சாராய அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களை வெளிப்படுத்தும் நிலைப்பாட்டோடு இருந்தார்கள். அப்படியானால், இந்த சாராய அனுமதிப்பத்திர விடயத்தில் அவர்களின் கை சுத்தம் என்பது அர்த்தம். அப்படியான நிலையில், அந்த விபரங்கள்,  அநுர அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்பட்டாலும், அது சுமந்திரனுக்கு வலுச்சேர்க்கும். 

செங்குத்தாக பிளவுபட்டிருந்தாக கடந்த ஒரு வருட காலமாக தெரிந்த தமிழரசுக் கட்சி, இப்போது கிட்டத்தட்ட ஓரணிக்குள் வந்துவிட்டது. சுமந்திரன் தனிப்பட்ட ரீதியில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வென்று, கட்சி தனித்து எட்டு ஆசனங்களைத் தாண்டிவிட்டால், இனி அவர் தமிழரசின் ஏக தலைமையாக மாறுவார். அது, அந்தக் கட்சியின் ஜனநாயக அம்சங்களை சிலவேளை, கேள்விக்குள்ளாக்கலாம். இன்னொரு கட்டத்தில் கூட்டுத் தலைமைக்கான ஜனநாயக வாதத்தின் பக்கத்தில் தமிழ்த் தரப்பு ஒருபோதும் நின்றதில்லை என்ற சாட்சிகளின் போக்கில், ஒற்றைத் தலைமைக்கான தேடலை அது இறுதி செய்யலாம். அதனை சுமந்திரன் அடைந்தால், சிலவேளை தமிழரசுக் கட்சி புதிய பாய்ச்சல் பெறலாம். அதற்கான வாய்ப்புக்கள் உண்டு. ஏனெனில், அவருக்கு எதிரான பக்கத்தில் இருப்பவர்கள் ஒன்றிணையவோ, ஆளுமையோடு போட்டிக் களத்தினைக் கையாளவே தெரியாமல் தடுமாறுகிறார்கள். அதனால்தான், சுமந்திரனின் வெற்றிகள் இலகுவாக்கப்பட்டு அவரிடம் சேர்கின்றன. அதனை, இறுதிக் காலத்தில் மறைந்த சம்பந்தன் தெளிவாக உணர்ந்தும் வைத்திருந்தார். அதுதான், அவர், தலைமைப் பதவிக்கான போட்டியை தவிர்ப்பதற்கும், சிறீதரனிடம் அதனை வழங்க நினைத்ததற்கும் காரணம். இந்தத் தேர்தலில் சுமந்திரன் தோல்வியடைந்தால், அவர் தேசியப்பட்டியல் என்ற மாற்று வழிகளைத் தேட மாட்டார் என்று நம்புகிறேன். அப்படி நாடினால், அது அவரின் படுதோல்வியாக முடியும். அது, அவரை, இன்று இருக்கும் நிலையில் இருந்து தூக்கித் தூர வீசும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமல்ல, இந்தப் பொதுத் தேர்தலும் வடக்கு – கிழக்கில்  சுமந்திரனின் தனிப்பட்ட வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கட்டங்களுக்குள் சுருங்கிவிட்டது. அது ஆரோக்கியமான அரசியலுக்கான செய்தி அல்ல. 

-காலைமுரசு பத்திரிகையில் ஒக்டோபர் 13, 2024 வெளியான பத்தி.

அநுரகுமார அலை என்ன செய்யும்?  

1 month 1 week ago

 

 

அநுரகுமார அலை என்ன செய்யும்?  
 
அநுரகுமார அலை என்ன செய்யும்?  

 — கருணாகரன் —

அனுரகுமார திசநாயக்கவின் வெற்றி, புதிய அலையொன்றை  அல்லது புதிய சூழலொன்றை உருவாக்கியுள்ளது. அது சிங்களம், முஸ்லிம், தமிழ், மலையகம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் நாடுமுழுவதிலும் உருவாகியிருக்கும் புதிய அலையாகும். இதனால் சிங்களத் தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத் தேசியம் என்பவற்றைக் கடந்து பெருவாரியான மக்கள் NPP எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரளும் நிலை உருவாகியிருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால், அனுரவின் பக்கமாகத் திரள்கிறது என்பதே சரியாகும். ஏனெனில் இந்த அலையோ, இந்தத் திரட்சியோ JVP அல்லது NPP என்பவற்றின் சித்தாந்தத்தைப் புரிந்து கொண்டு எழுந்ததில்லை. இதுவரையிலான அரசியற் செல்நெறியில் ஒரு  மாற்றம் வேண்டும், அதை அனுர தரப்புச் செயற்படுத்தும், அதற்கொரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்ப்போம் என்ற நம்பிக்கையினால் ஏற்பட்டிருப்பது. இதையே பெரும்பாலான அனுர ஆதரவாளர்கள் வெளிப்படையாகக் கூறுகிறார்கள். 

ஜனாதிபதித் தேர்தலின்போது “நாடு அனுரவோடு” என்ற வாக்கியத்தைக் கொண்ட சுவரொட்டிகள் நாடெங்கும் காணப்பட்டன. அது உண்மையோ என்று யோசிக்கக் கூடிய அளவுக்கே தற்போதைய சூழல் உள்ளது. வரலாறு சிலவேளை இப்படியான வரலாற்றுப் பாத்திரங்களின் வழியாக அதிசயங்களை நிகழ்த்துவதுண்டு. “அனுர” என்ற இந்த வரலாற்றுப் பாத்திரம், அப்படியான அதிசயத்தை உருவாக்குகிறது போலும். அல்லது வரலாற்றுப் பாத்திரமாக அனுர மாறவும் கூடும். இந்த மதிப்பீட்டுக்கு நாம் இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். 

அனுரவின் மூலம் தேசிய மக்கள் சக்தி (NPP) க்கு இதுவரையில்லாத அளவுக்குப் பேராதரவு பெருகியிருக்கிறது என்பது உண்மையே! இன்னொரு நிலையில் இது தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களத் தேசியங்கள் என்ற அடையாளக் கோடுகளைத் தகர்த்து, ஐக்கிய இலங்கை என்ற பொதுப் பரப்பிற்குள் சொல்லாமற் கொள்ளாமல் எல்லோரையும் இழுத்து விடப்பார்க்கிறது. இது, இதுவரையிலும் ஆட்சியிலிருந்தோர் ஐக்கிய இலங்கைக்குள் – ஒன்று பட்ட இலங்கைக்குள் – அனைத்துத் தேசிய இனங்களையும் கட்டிப்போடுவது எனச் சூழ்ச்சிகளின் மூலம் மேற்கொண்ட முயற்சிகளை விட இலகுவாக அனுர விக்கெற்றுகளை வீழ்த்தியிருக்கிறார் எனலாம். இதை விளங்கியோ விளங்காமலோ தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்கள் அனுர அலையில் உள்ளீர்க்கப்படுகின்றன. இதற்கு இன்னொரு காரணம், தெற்கிலே உள்ள ஏனைய அரசியற் சக்திகள் தோற்றதைப்போல தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் தோற்றுப் போனதுமாகும். அதாவது அவற்றின் நம்பகத்தன்மை குறைவடைந்தமையாகும்.

இதனால் தற்போது உருவாகியிருக்கும் NPP க்கு ஆதரவான அலையைக் குறித்தோ அல்லது NPP ஐப் பற்றியோ யாரும் விமர்சிக்கவும் முடியாது. மதம், அரசியல், கலை போன்றவற்றில் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு, அது தீவிரப் பற்றாக வளர்ச்சியடைந்து பேரபிமானமாக மாறிவிடுவதுண்டு. இந்த ஈர்ப்பு அமைப்புகள், கட்சிகளிடம் மட்டுமல்ல, தனி நபர்களில் மீதும் உருவாகும். அப்படி உருவாகி விட்டால் அதற்குப் பிறகு அந்த அமைப்பையோ, அந்தத் தலைவரையோ யாரும் கேள்வி கேட்கவும் முடியாது, விமர்சிக்கவும் முடியாது. அப்படி விமர்சித்தால் அல்லது கேள்வி கேட்டால், விமர்சிப்போரும் கேள்வி கேட்போரும் துரோகிகளாகவே நோக்கப்படுவர். இப்படியான ஒரு நிலை இப்போது உருவாகியுள்ளது. அந்தளவுக்கு NPP மீதான பேரபிமானம் சகல தரப்பு மக்களிடமும் மேலோங்கியுள்ளது. 

இந்த அபிமானம் நாட்டிற்குள் மட்டுமல்ல, நாட்டுக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களிடத்திலும் பரவியுள்ளது. இதனால் பாராளுமன்றத் தேர்தலில் NPP ஐ வெற்றியடைய வைப்பதற்குக்  களப்பணியாற்றுவதற்கென்று இலங்கைக்குப் பயணித்துக் கொண்டுள்ளனர். 

இந்தப் பேரார்வத்துக்குக் காரணம், இலங்கையில் மாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும். புதிய அரசியற் பண்பாடொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற விருப்பமேயாகும். இந்த விருப்பம் நீண்ட காலமாகப் பலருடைய மனதிலும் நிறைவேறாமலிருந்த மாபெரும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்குவதற்கான வரலாற்றுத் தருணம் இதுவெனப் பலரும் கருதுகின்றனர். ஆகவேதான் அதற்கான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று செயலாற்ற விளைகின்றனர். 

இந்த நிலையை உருவாக்கியது கடந்த காலத்தில் ஆட்சியதிகாரத்திலிருந்த தரப்புகளேயாகும். அவற்றின் கூட்டுத் தவறுகளே “அரகலய” (எழுச்சி). அதுவே NPP க்கான மாபெரும் ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இப்போது NPP எதிர்பாத்திராத அளவுக்கு இந்த அலை உச்சமடைகிறது. NPP சும்மா இருக்கவே வேலை நடக்கிறது என்று சொல்வார்களல்லவா, அப்படிச் சொல்லுமளவுக்கான நிலைமை – சூழல் – NPP க்குச் சாதகமாக  உருவாகியுள்ளது.

பேராளுமைகள் அல்லது வரலாற்றுச் சூழலைக் கையாளத் தெரிந்த ஆற்றலர்கள் எழுச்சியடையும்போது இவ்வாறான “மாற்றச் சூழல்” (Condition of Change)அமைவதுண்டு. இது எப்படி அமையும் என்பது NPP யின் அடுத்த கட்ட நகர்வைப் பொறுத்தே தெரியும். ஏனென்றால், NPP யோ அனுரவோ புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. தேர்தல் ஜனநாயக விதிமுறைகளின் வழியாகவே – சட்ட வரம்புக்குட்பட்டே (Legal definition) – ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த விதிகளின்படி, அந்த வரையறைகளுக்குட்பட்டே மாற்றங்களை நிகழ்த்த முடியும். அதற்குக் கால அவகாசமும் வரையறுக்கப்பட்ட மட்டுப்பாடுகளும் இருக்கும். 

ஆனாலும் தமக்குக் கிடைத்த வரலாற்றுத் தருணத்தை அனுரவும் NPP யும் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகின்றன? எவ்வாறு மதிப்பைக் கூட்டப்போகின்றன என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். இதற்கு அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற வேண்டும். 

இப்போது  அனுர தலைமையிலான மூவர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவையில் அதிரடியாகச் சில வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றக் கலைப்பு, அமைச்சரவை நியமனம், அமைச்சுச் செயலாளர்கள் நியமனம், இழுபறியிலிருந்து பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம், சுற்றுலாப்பயணிகளுக்கு விசா பெறுவதில் இருந்த நெருக்கடிகளை மாற்றியமைத்தமை, அநாவசியச் செலவுகளைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகள், மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் விலைக்குறைப்பு, உர மானியம் போன்றவற்றை வழங்குவதற்கான ஏற்பாடு போன்றவற்றைப் புதிய அமைச்சரவை செய்துள்ளது. இது NPP க்கு மேலும் ஒரு சிறிய கவர்ச்சியையும் நம்பிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது. 

ஆனாலும் எதிர்பார்க்கப்பட்ட ஊழல்வாதிளின் மீதான நடவடிக்கை, ஈஸ்டர் குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகளைக் கண்டறிவதும் நடவடிக்கை எடுப்பதும் போன்றவற்றில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. அதைப்போல வடக்குக் கிழக்கில் உள்ள படைத்தரப்பின் உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்குதல், காணிகளை விடுவித்தல் போன்றவற்றிலும் எந்த மாற்றமும் முன்னேற்றமும் நிகழவில்லை. அதைப்பற்றி அனுர – NPP யின் நிலைப்பாடு என்னவென்றும் தெரியாது. ஏனென்றால் அதைப்பற்றிய பேச்சுகளே அந்தத் தரப்பின் வாயிலிருந்து வரவில்லை. பதிலாக பௌத்த பீடங்களிடம் ஆசி வாங்கும் அனுசரணையைப் பெறும் காட்சிகளே வெளியாகின்றன. 

இது அனுரவும் NPP யும் மக்களை முன்னிலைப்படுத்துவதை விடவும் பௌத்த பீடங்களைக் குளிர்ச்சியடையச் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் பிரயத்தனத்தைக் காட்டுகிறது. அப்படியானால் மாற்றம் எந்த அடிப்படையில் நிகழப்போகிறது? அதனுடைய எல்லைகள் எப்படியாக இருக்கப்போகின்றன என்ற ஒரு தெளிவான காட்சியை இப்பொழுதே நாம் உணரக் கூடியதாக உள்ளது.

ஆனாலும் இதையெல்லாம் கடந்து இப்பொழுது பலருடைய வாயிலும் உச்சரிக்கப்படும் பெயராக அனுரகுமார திசநாயக்க மாறியிருக்கிறார். “AKD” என்று அனுரவைச் செல்லமாக – உரிமையோடு அழைக்கிறார்கள். தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரைப்போல அல்லது நெருங்கிய நண்பரைப்போல அனுரவைப் பற்றி நெருக்கமாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் அவருடைய Profile ஐ தேடி அறிந்து கொண்டிருக்கிறார்கள். அனுரவின் வீடிருக்கும் “தம்பேத்கம” என்ற சிறிய – ஆழக் கிராமத்தை நோக்கி YouTuper’s குவிகின்றனர். சமூக வலைத்தளங்களில் அனுரவின் படங்களும் நிகழ் காட்சிகளும் செய்திகளுமே நிறைந்து கிடக்கின்றன. ஒரு YouTupe காட்சியில் அவருக்கு MakeUp போடுகின்ற காட்சியைக் கூடப் பார்க்கக் கூடியதாக இருந்தது. சினிமாக் கதாநாயகர்களுக்கிருக்கும் கவர்ச்சிக்கு நிகரானது இது. தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் ஜனாதிபதியாகியது மட்டுமல்ல, ஒரே நாளில் பெரியதொரு கதாநாயகனாகவே அனுரகுமார திசநாயக்கவின் பிம்பம் மேலெழுந்துள்ளது.

ஆம், இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக உச்சமான செல்வாக்கைப் பெற்ற தலைவராகியிருக்கிறார் அனுர. இப்படி அனுர புகழடைந்த அளவுக்கு அவருடைய தேசிய மக்கள் சக்தி அறிமுகமாகிருக்கிறதா?  புகழடைந்திருக்கிறதா? அதனுடைய கொள்கை தெளிவாக்கப்பட்டிருக்கிறதா? என்றால், இன்னுமில்லையென்றே சொல்ல வேண்டும். 

இன்னும் அதற்கு நாடு முழுவதிலும் கட்டமைக்கப்பட்ட செல்வாக்கு மண்டலம் உருவாகவில்லை. இன்னும் அதைப்பற்றிய தெளிவான சித்திரம் பலருக்கும் தெரியாது. ஆக இதொரு திடீர் வீக்கமாகவே உள்ளது. என்னதான் ஆதரவு அலை NPP  க்கு உருவாகியிருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு அது பொருத்தமான ஆட்களை தேடிக்கொண்டேயிருக்க வேண்டிய நிலை. இதனால் வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் அரசியலே என்னவென்று தெரியாதவர்களும் சில பிரமுகர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். தெற்கில் ஓரளவுக்குச் சமாளிக்கக் கூடியதாக இருந்தாலும் வடக்குக் கிழக்கில் தகுதியான ஆட்களைத் தேடுவதில் அதற்குப் பிரச்சினை உண்டு. இதனால் வடிகட்டலைச் செய்ய முடியாமல் போய் விட்டது NPP க்கு. 

ஆக அனுரவின் மூலம், அவருடைய வெற்றியின் வழியே இப்பொழுது தேசிய மக்கள் சக்தி (NPP) பரவலாக அறியப்பட்டு வருகிறது. அதாவது ஏற்கனவே அது பெற்றிருந்த அறிமுகப் பரப்பை விட இப்போழுது அதனுடைய பரப்பெல்லை விரிவடைந்துள்ளது என்பது உண்மையே. பலரும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு முற்படுகின்றனர். இதனால் அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூடுதலான ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அது எந்தளவுக்கு என்பதை இப்பொழுது சரியாக மதிப்பிட முடியாது விட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெறும் என்பது உறுதி. அதில் வடக்குக் கிழக்கு வாக்குகளும் சேரக் கூடிய சூழலுண்டு. இது வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியவாதச் சக்திகளைப் பின்னுக்குத் தள்ளக் கூடியதாக அமையும். 

ஆகவே NPP ஆட்சியை வலுப்படுத்தக் கூடிய நிலையை நோக்கி நகர்கிறது எனலாம். அப்படி அமைந்தால் அது எப்படியான நிலை இலங்கையில் உருவாகும்? என்ற கேள்வி முக்கியமானது. “வலுவான ஆதரவுத் தளம் இருந்தால்தான் NPP குறிப்பிட்டதைப்போல அல்லது திட்டமிட்டிருப்பதைப்போல மாற்றத்தை நோக்கிய முழுமையான ஆட்சியை வழங்க முடியும். மாற்று அரசியல் பண்பாடொன்று எழுச்சியடையும். ஊழல்வாதிகளின்மீது துணிந்து நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும். அப்படி அமையவில்லை என்றால், பலவீனமான அரசாங்கத்தினால் எதையும் செய்ய முடியாது போய்விடும். இழுபறிகளே தொடரும். அது இலங்கைக்கு நல்லதல்ல. பதிலாகப் பிராந்திய சக்திகளுக்கும் வல்லரசுகளுக்குமே (பிற சக்திகளுக்கு) மிக வாய்ப்பாகி விடும். இதை நோக்கியே இந்தியாவும் அமெரிக்காவும் காய்களை நகர்த்துகின்றன” என்பது ஒரு சாராருடைய கருத்து. இதில் உண்மையுண்டு. இப்போதே பிராந்திய சக்திகளும் சர்வதேச வல்லரசுகளும் அதைச் செய்யத் தொடங்கி விட்டன. 

இதற்கு மாற்றுப் பார்வையுமுண்டு.

NPP க்குப் பேராதரவு கிடைக்குமாக இருந்தால் அது இரண்டு விதமாக  நிலைமையை உருவாக்கும். ஒன்று,  1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்குக் கிடைத்த பலத்தைப்போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு கேள்விக்கிடமில்லாத வகையில் அது தனக்கேற்ற வகையில் அனைத்துத் தீர்மானங்களையும் அனைத்துத்திட்டங்களையும் தனித்து முன்னெடுக்கும். அதை விமர்சிக்கவோ தவறெனில் தடுத்து நிறுத்தவோ பிற சக்திகளால் இயலாமற் போய் விடும். இதனால் ஜனநாயகச் சூழல் கெட்டுவிடும்.  

NPP யின் வரலாறு என்பது ஜே.வி.பியினுடைய வரலாறாகும். ஜே.வி.பி என்பது ஆயுதம் தாங்கியதோர் அமைப்பு. ஆயுதம் தாங்கிய அமைப்பில் என்னதான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினாலும் அதற்கப்பால் அதற்குள் ஒரு மூடுண்ட நிலை எப்போதுமிருக்கும். ஜே.வி.வி ஆயுத அரசியலை விட்டுப் பல ஆண்டுகளாகினாலும் அதனிடத்தில் இன்னும் அந்தக் கூறுகள் நிறைய உண்டு. அதாவது ஆயுதமேந்திய இயக்கம் என்ற உள்ளுணர்வு. தன்னையே புனிதத் தரப்பாகக் கட்டமைத்துக்கொள்ளும் தன்மை. தாம் திட்டமிடுவதும் தீர்மானிப்பதுமே சரி. மற்றதெல்லாம் தவறு என்ற உணர்வு அவர்களிடம் எப்போதுமுண்டு. இதனால்தான் அது எவரோடும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் தனித்தே நிற்கிறது. தன்னைத்தூய்மையானதாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. 

இதெல்லாம் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் தரப்பினருக்கு (கட்சியினருக்கு) பொருத்தமானதல்ல. ஆனாலும் இதைப் புரிந்து கொண்டு தம்மை விரித்துக் கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தியினால் முடியாதிருக்கிறது. இந்த நிலையைக் கடக்க வேண்டிய யதார்த்தை NPP எதிர்கொள்ள வேண்டும்.  ஆட்சிக்கு வெளியே நின்று பேசுவது இலகு. ஆட்சியில் செயற்படுவது கடினம் என்ற உண்மையை NPP இப்பொழுது உணர வேண்டும்.

இதேவேளை இப்பொழுது நாட்டில் இரண்டு வகையான அரசியல் போக்கு உருவாகியுள்ளது. NPP யின் எழுச்சி அல்லது அலை. இந்தப் போக்கே இனிச் சில காலத்துக்குத் தொடரும். அடுத்த தேர்தலிலும் இந்த அடிப்படையிலான தேர்வே உண்டு. எப்படியென்றால் –

ஊழல்வாதிகள் – நேர்மையானோர்

சரியானவர்கள்  – தப்பானவர்கள்

நல்லவர்கள்  – கெட்டவர்கள்

கறுப்பு – வெள்ளை 

தனித்துத் தனித்துவமாக நிற்போர் – கூட்டு வைத்திருப்போர் கூட்டணிகள் என. 

இந்த எதிரொலிப்பு நாடு முழுவதிலும் பரவியுள்ளது. இதனால்தான் பல தலைவர்கள் தேர்தலிலேயே போட்டியிடாமலே ஒதுங்கியிருக்கின்றனர். மிஞ்சியோர் தேர்தல் மூலமாக ஓரங்கட்டப்படுவர். தமிழ்ப்பரப்பிலும் NPP யின் தாக்கத்தை உணர முடிகிறது. மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரன்  போன்றோர் ஒதுங்கியதும் இந்தத் தாக்கத்தினால்தான். இப்போது தமிழ்த்தேசியக் கட்சிகளே NPP யைக் கண்டு அஞ்சுகின்றன. நிச்சயமாக பொதுத் தேர்தலில் இதனுடைய பிரதிபலிப்பைக் காணலாம். 

அடுத்த வரப்போகிற மாகாணசபை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் எப்படியான தெரிவை மக்கள் செய்யப்போகிறார்கள்? என்பதே இலங்கையின் – NPP யின் – அனுரவின்  வெற்றி – தோல்வியை முழுதாகத் தீர்மானிக்கும். 
 

https://arangamnews.com/?p=11327

பொது தேர்தலில் இருந்து பின்வாங்கும் முன்னாள் எம்.பி.க்களும் இழுபறிப்படும் கட்சித் தலைமைகளும்

1 month 1 week ago

-நஜீப் பின் கபூர்-

rajapaksa-1.jpg

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது தரப்புக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று கடைசி நிமிடம் வரை நம்பிக் கொண்டும் இருந்த மற்றுமொரு பெரும் கூட்டமும் நாட்டில் இருந்தது. அந்தத் தேர்தல் பற்றி இப்போது நாம் பேச வரவில்லை. ஆனால் வருகின்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் என்ன என்பதனை முன்கூட்டி தெரிந்து கொண்டுதான் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தலில் இறங்கி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஆனால், இன்று ஜனாதிபதித் தேர்தலில் பின்னடைந்த அணிகளில் இருந்து போட்டியிடுகின்ற கட்சிகள் – கூட்டணிகளின் வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தமது தனிப்பட்ட வெற்றி இதில் இருப்பதால் அவர்கள் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். இந்தத் தேர்தலில் தனி நபர்களின் வெற்றி மற்றும் தேசிய மற்றும் பிராந்திய இன ரீதியான கட்சிகளின் செல்வாக்கு மேலோங்கி இருப்பதால் ஏதோ ஒருவகையில் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலையொன்றும் இருப்பதை நாம் மறுக்க முடியாது.

அந்தப் போட்டி ஆளும் தரப்புக்கு எத்தனை ஆசனங்கள், பிரதான எதிரணிக்கு எத்தனை ஆசனங்கள், ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு வந்த ரணில் தரப்புக்கு எத்தனை ஆசனங்கள்? நான்காம் இடத்துக்கு வந்த மொட்டு அல்லது நாமல் தரப்புக்கு எத்தனை ஆசனங்கள்? மற்றும் உதிரிக் கட்சிகள், சுயேட்சைகள் என்றும் பல வரும். தேர்தல் முடிவுகளில் இவர்களுக்கான ஆசனங்கள் என்ன என்று தெரியவரும்.

வெள்ளிகிழமை நண்பகலுடன் முற்றுப் பெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தொடர்பில் பரபரப்பான செய்திகளும் நகைச்சுவையான தகவல்களும் தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பி இருந்து கடைசி நேரத்தில் ஏமாறியவர்களும் அவர்களது ஒப்பாரிகளும் என்று நிறையவே கதைகள் இருக்கின்றன. அதுபற்றியும் நாம் இங்கு பேச வர விரும்பவில்லை. அவை ஒரு பக்கம் இருக்க, இப்போது தேர்தல் களத்தில் அனுர தலைமையிலான என்.பி.பி. அணி பலமான நிலையில் இருக்கின்ற போது அடுத்த பிரதான கட்சியாக இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி. நமது பார்வையில் அடுத்து அதிக ஆசனங்களைப் பெறப் போவது வடக்கு, கிழக்கில் இருக்கின்ற தமிழ் தரப்பினராக இருப்பார்கள். ஆனாலும் அவர்களது பிரதிநிதித்துவம் கூட சிதறிப்போய் அமையும். ரணில் மற்றும் நாமல் தரப்பினர் மேலும் ஒரு படி கீழிறங்கி நான்காம், ஐந்தாம் இடத்துக்குத்தான் இந்த முறை வருவார்கள்.

இப்போது நாம் கட்சிகளின் செல்வாக்கு மற்றும் வியூகங்கள் பற்றி பார்ப்போம். ஜனாதிபதி அனுரவை தலைமையாகக் கொண்ட கட்சி ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்பதனை மறுக்க முடியாது. அதனை அவர்களது எதிரிகள் கூட பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அதேநேரம், என்.பி.பி. கட்சியில் இருந்து போட்டிக்கு வருகின்ற பெரும்பாலானவர்களை பொது மக்களுக்குத் தெரியாது என்று ஒரு பலமான குற்றச்சாட்டு எதிரணியினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதில் உண்மைகள் இருந்தாலும் என்.பி.பி. தமது பிரதிநிதித்துவங்களை வென்றெடுப்பதற்காக வியூகங்களை சிறப்பாக வடிவமைத்திருக்கின்றது என்பதனை தேர்தல் முடிவுகளில் இவர்கள் கண்டு கொள்ள முடியும்.

1994ல் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் ஜே.வி.பி. பட்டியலில் போட்டிக்கு வந்தவர்கள் யார் என்பது அப்போது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்தக் கூட்டணியில் எல்லா மாவட்டங்களிலும் அவர்கள்தான் முதலாம் இடத்துக்கு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தார்கள் என்பதனையும் இந்த விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்.பி.பி. வேட்பாளர் யார் என்று தெரியாமல் இருப்பது பற்றிய எதிரணியினர் விமர்சனங்களை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அடுத்து இன்று நாட்டில் இரண்டாவது பெரிய அரசியல் இயக்கமாக இருக்கின்ற சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அதனோடு இருக்கின்ற கூட்டுக் கட்சியினரும்தான். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனாலும் அங்கு மோதல்கள் இருக்கின்றன என்று நாம் முன்பே சொல்லி இருந்தோம். இப்போது தெருச்சண்டை போல அது அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. ஹர்ஷ டி சில்வா, திஸ்ஸ, சுஜீவ சேமசிங்ஹ, ஹிருணிக்கா, கிரியெல்ல என்று நிறையப் பேர் இப்போது முரண்பாட்டில் இருக்கின்றார்கள்.

அது எப்படி இருந்தாலும் தேர்தலில் என்.பி.பி.க்கு இன்று சவால் விடுக்கக்கூடிய மிகப் பெரிய கட்சி இது என்பதால் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த சஜித் தரப்பு கட்சியுடன் இணைய ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். இதற்கு அந்தக் கட்சித் தலைவர் ரணிலின் சம்மதமும் அனுசரணையும் இருந்தது. அதோடு இதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யும் ஆப்பையும் தனது கரங்களில் வைத்துக் கொண்டுதான் ரணில் தனது ஆட்களை சஜித்திடம் அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் ரணிலின் நயவஞ்சக அரசியலை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்ற சஜித் சுவரில் எறிந்த பந்து போல ரணிலின் இந்த முயற்சிக்கு பதில் கொடுத்திருந்தார். முதலில் ஐ.தே.க.வில் இருந்து ரணிலை வெளியேற்றிவிட்டு வாருங்கள் என்பதில் சஜித் உறுதியாக இருந்தார். அவரது அந்த நிலைப்பாட்டில் தனிப்பட்ட ரீதியில் நமக்கும் உடன்பாடுகள் இருக்கின்றன. ரணில் தரப்பில் அவருக்கு இதுவரை நெருக்கமாக இருந்தவர்கள் இந்தத் தேர்தலில் நொண்டிக் காரணங்களைச் சொல்லி தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருக்கின்றார்கள்.

இவர்களில் முக்கியமானவர்கள் அவரது நெருங்கிய உறவினரும் அரசியல் வாரிசுமான ருவன் விஜேவர்தன முக்கியமானவர். தோல்வியைத் தழுவுகின்ற ஒரு தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் ரணில் முகத்திற்கே கூறி விட்டார். ஆனாலும் அவரை போட்டியிடுமாறு ரணில் கடைசி வரை கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்.

அடுத்து சர்ச்சைக்குரிய அவரது ஆலோசகர் ஆசு மாரசிங்ஹ. அவர் சஜித் அணியில் இணைந்து போட்டியிட வேண்டும் அல்லது யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கின்ற மொட்டுக் கட்சிக்காரர்களுடன் இணைந்து சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதால் தான் இந்தத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக ஆசு மாரசிங்ஹவும் அறிவித்திருக்கின்றார்.

இவை எல்லாம் நொண்டிக்காரணங்கள் என்பதுதான் எமது கணக்கு. எதில் போட்டியிட்டாலும் கரை சேர முடியாது என்பதால்தான் இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இது தவிர இன்னும் பெரும் எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதை தாமாகவே தவிர்த்திருக்கின்றனர். அதற்கு தமக்கு வாய்ப்பில்லை என்பதனை அவர்கள் அறிந்து வைத்திருப்பதுதான் முக்கிய காரணம்.

கடந்த தேர்தலில் சஜித் மற்றும் ரணிலுக்கு கிடைத்த வாக்குகளில் இருந்து டசன் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொள்ள முடியும் என்ற நிலை இருப்பதால் அதனை நம்பி பலர் இந்த தேர்தலில் குதித்திருக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில் உண்மைகள் இருந்தாலும் அவர்களின் எத்தனை பேருக்குத்தான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் வர முடியும் என்று தெரியாது.

இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இருக்கும் அரசியல் கட்சிகள் மத்தியில் என்றும் இல்லாத அளவில் ஒரு குழப்ப நிலை காணப்படுகின்றன. அதனால் அந்தக் கட்சிகள் மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருக்கின்றார்கள். மூத்த தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் தெற்கு அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களுக்குமிடையில் எந்த வித்தியாசங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் பிரதிபலிப்புக்களை அங்கு வரும் தேர்தல் முடிவுகளில் நாம் பார்க்க முடியும். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் செயல்பாடுகள் சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் அங்கு கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கின்றது.

அதேபோன்று தனித்துவம் பேசுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் இந்தமுறை தேர்தலில் கடும் போட்டி நிலை இருப்பது தெரிகின்றது. கண்டியில் போட்டிக்கு வரும் ஒரு முஸ்லிம் தலைவர் இந்த முறை தனக்குக் கடும் நெருக்கடி நிலை இருப்பதனை எம்முடன் நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருந்தார். அடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வகிக்கின்ற அமீர் அலி இளைஞர்களிடம் தற்போது ஏற்பட்டிருக்கின்ற என்.பி.பி. மோகம் தனித்துவ சமூக அரசியலுக்கு மிகவும் ஆபத்தானது. இதனால் எமது பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து. இளைஞர்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. அத்துடன் அவர்களுக்கு நாம் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாய்ப்புக் கொடுப்போம். அவர்கள் இந்தத் தேர்தலில் சமூக நலன் கருதி எமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அலி கேட்டிருக்கின்றார்.

சமூகத்துக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திய இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு மு.கா. இந்தத் தேர்தலில் வேட்புமனு கொடுக்க கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் கேட்டிருக்கின்றார். அப்படி ஹக்கீம் செய்வாராக இருந்தால் அவருடன் ஒரு இணக்க அரசியலுக்குத் தன்னால் வர முடியும் என்று அவர் ஹக்கீமுக்கு பகிரங்கமான ஓர் அழைப்பைக் கொடுத்திருக்கின்றார். ஆனால் தலைவரின் வேண்டுகோளுக்காகத்தான் நாம் அன்று அப்படி நடந்து கொண்டோம் என்பது கை தூக்கியவர்களின் வாக்குமூலமாக இருக்கின்றது. எனவே ரிசாட் விடுக்கும் இந்த அழைப்பு எந்தவகையில் சாத்தியம் என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

கட்சிகளில் வேட்புமனு கிடைக்காதவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தனது கட்சியில் வேட்புமனு தரமுடியும் என்று சீலரத்ன தேரர் பகிரங்க அழைப்பு விடுத்திருந்ததும் தெரிந்ததே. மொட்டுக் கட்சியின் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்த பலர் இன்று திலித் ஜயவீர அணியில் போய் இணைந்திருக்கின்றார்கள். அதில் வரும் வாக்குகளை வைத்து தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெற்று நாடாளுமன்றம் போகலாம் என்று அங்குள்ள தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் போலும்.

இப்படியாக 2024ல் நாடாளுமன்றம் வரும் புதிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வயதுக்காரர்களாகவோ அல்லது இளைஞர்களாகவோ இருப்பார்கள். அதிலும் அதிகமானவர்கள் என்.பி.பி. தரப்பில் இருந்துதான் பெரும்பாலானோர் வருவார்கள். வயதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த முறை மண்கௌவ்வ அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர்களில் ஒரு சிலர் கட்சிகளின் தேசிய பட்டியலில்தான் வர எதிர்பார்க்கின்றார்கள் என்றும் தெரிகின்றது. பந்துல குணவர்தன இதன் பின்னர் தான் தேர்தலுக்கு வரப்போவதில்லை சினிமாத் துறைக்குப் போக இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

https://thinakkural.lk/article/310634

சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன்

1 month 1 week ago

சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன்
October 13, 2024

 

“வீட்டிலிருந்து வெளியே வர எமக்கு விருப்பமில்லை. ஆனால், அங்கு இப்போது ஒரு தனிநபரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக் கின்றது. அந்த ஒருவரால் பலா் வெளியேறிக் கொண்டிருக்கின்றாா்கள். இறுதியாக கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா கூட பதவியைத் துறந்துவிட்டாா்.” இது யாழ். மாவட்ட முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினா் ஈ.சரவணபவனின் கூற்று. தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை அமைத்து யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சிக்கு பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமைதாங்குகின்றாா். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை இக்கட்சியின் சாா்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னா் சரவணபவன் தெரிவித்த கருத்துதான் இது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவா் ஐங்கர நேசசனும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளாா்.

பொதுத் தோ்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் வீட்டிலிருந்து முக்கிய பிரமுகா்கள் பலரும் வெளியே வந்திருப்பதைக் காணமுடிகின்றது. தமிழரசுக் கட்சிக்குள் இப்போது, சுமந்திரனுக்கு குடைச்சல் கொடுப்பவராக இருக்கும் ஒரேயொருவா் சிறீதரன் மட்டும்தான் பொதுத் தோ்தலின் முடிவுதான் தமிழரசுக் கட்சித் தலைமைக்கான போட்டியின் அடுத்த கட்டம் எவ்வாறிருக்கும் என்பதை வெளிப்படுத்தும். தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப் புக்களிலிருந்தும் விலகுவதாக அதன் தலைவா் மாவை சேனாதிராஜா அறிவித்திருப்பதும் சுமந்திரனின் செயற்பாடுகளால்தான்.

ஒரே அணியில் சுமந்திரனும், சிறீதரனும் களமிறங்கியிருப்பதும், தமிழரசிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளா் குழு தனியாகக் கள மிறங்கியிருப்பதும் அரசியல் களத்தை இந்த வாரம் பரபரப்பாக்கிய செய்திகள்.  இதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக அமையும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி!

கடந்த சுமாா் 10 வருடங்களாக மாவை சேனாதிராஜாதான் கட்சியின் தலைவராக இருக்கின்றாா். பெயரளவுக்குத்தான் தலைவராக இருக்கின்றாா் என்பது பகிரங்கமானதுதான். அனைத்து விடயங்களையும் கையாள்பவராக, முக்கிய தீா்மானங்கள் எடுப்பவராக சுமந்திரன்தான் இருக்கின்றாா். கட்சிக்குள் சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு செக் வைக்கக்கூடியராக சிறீதரன்தான் கருதப் பட்டாா். இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையின் கூட்டத்தில் சுமந்திரனைத் தோற்கடித்து சிறிதரன் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றே பலரும் கருதினாா்கள்.

பொதுச் சபைக்கூட்டத்தில் இடம்பெற்ற தெரிவுகள் நீதிமன்றத்துக்குச் சென்று, தெரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டபோது, இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. நீதிமன்ற விசாரணைகள் தொடரும் நிலையில், தெரிவுகள் மீண்டும் நடைபெறவேண்டும் என்ற நிலைதான் உருவாகியிருக்கிறது.  அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு இன்னும் சில மாதங்கள் செல்லலாம் என்ற நிலையில், கட்சி இரண்டாக அல்லது மூன்றாகப் பிளவுபடுவது தவிா்க்கமுடியாத ஒன்றாகிவிடலாம் என்பதுதான் தற்போதைய நிலை. சிறிதரனும், சுமந்திரனும் ஒரே அணியில் இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டி யிடுகின்ற போதிலும், தோ்தல் முடிவுகளின் பின்னா் பிளவு பகிரங்கமாகலாம். இப்போது தமிழரசுக் கட்சியின் பட்டியலில் இருவரும் உள்ள போதிலும், ஒருவரை மற்றவா் தோற்கடிப்பதற்கான உபாயங்களுடன்தான் செயற்படுகின்றாா்கள்.

தமிழரசுக் கட்சியால் அமைக்கப்பட்ட வேட்பாளா் தெரிவுக்குழுவின் 11 பேரில் ஒன்பது போ் சுமந்திரனின் ஆதரவாளா்கள். அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னுடைய ஆதரவாளா்களையே சுமந்திரன் யாழ்ப்பாணப் பட்டியலில் போட்டிருக்கின்றாா் என்று அதிருப்தியாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றாா்கள். இந்த வேட்பாளா் தெரிவில் மாவையும் ஓரங்கட்டப்பட்டுள்ளாா். அவா் செல்லாக்காசாகவே வேட்பாளா் தெரிவுக் குழுவில் இருந்தாா். வேட்பாளா்களே வேட்பாளா் தெரிவுக்குழுவிலும் இருந்தாா்கள் என்பதும் தவறான ஒரு முன்னுதாரணம். வேட்பாளா் தெரிவு இடம்பெறும் நிலையில் இரண்டு விடயங்களை சுமந்திரன் தெரிவித்தாா். கட்சியின் தீா்மானத்தை மீறி பொது வேட்பாளரை ஆதரித்தவா்கள், கடந்த தோ்தலில் தோல்வியடைந்தவா்களுக்கு இடமளிக்கப்படாது என்பதுதான் அந்த அறிவிப்பு. அதேவேளையில், புதியவா்கள், பெண்களுக்கு இடமளிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பொது வேட்பாளரை ஆதரித்த சிறிதரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், சசிகலா ரவிராஜ் போன்றவா்களை ஓரங்கட்டுவதுதான் இதன் உள்நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. அதில் மாவையும், சரவணபவனும், சசிகலாவும் கடந்த தோ்தலில் தோல்வியடைந்தவா்கள். சிறிதரன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவா் என்பதால் அவரையும் போட்டியிலிருந்து விலகுமாறு சுமந்திரன் கோரினாா். ஆனால், சிறிதரன் மறுத்துவிட்டாா்.

கடந்த மூன்று பொதுத் தோ்தல்களிலும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தோ்தல் மாவட்டத்தில் வெற்றிபெற்றவா் சிறிதரன். அதனைவிட, அதிக விருப்பு வாக்குகளை தமிழரசுக் கட்சியில் பெற்றவராகவும் அவா்தான் இருக்கின்றாா். சிறிதரனுக்கு கணிசமான – நிரந்தரமான வாக்கு வங்கி ஒன்றுள்ளது. இந்த நிலையில், அவரை வெளியே விடுவது ஆபத்தானது என்பதும் சுமந்திரனுக்குத் தெரிந்திருந்தது.  தன்னுடைய வெற்றிக்கும் சிறிதரனின் வாக்கு வங்கி உதவும் என்பதும் சுமந்திரனுக்குத் தெரியும். சிறிதரனை தம்முடன் அரவணைத்துக் கொள்வதற்கு பெருமளவு முதலீட்டுடன் புதிதாக உருவாகும் கட்சி ஒன்று உட்பட வேறு சில கட்சிகளும் தயாராக இருந்தன. இதனால், சிறிதரனை தமிழரசுக் கட்சிக்குள் வைத்தே தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் சுமந்தரனின் திட்டமாக இப்போதுள்ளது.  யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இம்முறை இங்கு ஆறு ஆசனங்கள்தான் உள்ளன. அதில் ஐந்து உறுப்பினா்கள் விகிதாசாரப் படி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் எம்.பி.க்களாகத் தெரிவு செய்யப்படுவாா்கள். அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு போனசாக ஒரு ஆசனம் கிடைக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டிருப்பது, தமிழரசுக் கட்சியிலிருந்து பலா் வெளியேறியிருப்பது போன்றன தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியை கணிசமாகப் பாதித்திருக்குகிறது. அத்துடன், மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகச் சொல்லிக்கொள்ளும் அநுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியும் ஒரு ஆசனத்தையாவது பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது.  தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள அதிருப்தியால் அவா்கள் அநுரவின் கட்சிக்கு அல்லது டக்ளஸின் கட்சிக்கு வாக்களிக்கும் மனப்பான்மையில் இருக்கின்றாா்கள்.  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொடா்ச்சியாக வெற்றிபெற்றுவரும் சித்தாா்த்தனுக்கு தனிப்பட்ட முறையில் வாக்கு வங்கி உள்ளது. அதனைவிட, சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதித் தோ்தலில் யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றவா். பொதுத் தோ்தலிலும் ஒரு ஆசனத்தையாவது பெற அவா்கள் கடுமையாகப் போராடுவாா்கள் என்று எதிா்பாா்க்கலாம்.  விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் முதன்மை வேட்பாளராக களமிறங்கியிருக்கு யாழ். மாகநர முன்னாள் மேயா் வி.மணிவண்ணனுக்கும் தனிப்பட்ட முறையில் செல்வாக்குள்ளது.  அவரது வருகை கஜேந்திரன்களின் தமிழ்க் காங்கிரஸை அதிகம் பாதிக்கும்.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள்தான் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது. வாக்காளா்கள் முதலில் கட்சிக்கு வாக்களித்துவிட்டு பின்னா் அதில் மூவருக்கு தமது விருப்பத் தெரிவு வாக்கை வழங்கலாம். தன்னுடைய ஆதரவாளா்களான ஏழு பேரை களமிறக்கியதன் மூலம், அவா்கள் தமக்கும் சோ்த்து வாக்குச் சேகரிப்பாா்கள் என்பது சுமந்திரனின் கணக்கு. அதன்மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்த அவா் முயல்கிறாா். தப்பித்தவறி தோல்வியடைந்தால், தேசியப் பட்டியல் மூலமாக வருவது அவரது திட்டம்!  அதனால்தான், பொது அமைப்புக்கள், சமூகப் பெரியவா்களின் வேண்டுகோளையும் புறக்கணித்து அம்பாறையில் தமிழரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்பதில் அவா் உறுதியாக இருக்கின்றாா். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட இணங்கியது. மறுபுறம் அம்பாறையை தமக்குத் தருமாறு கேட்டது. இப்போது அம்பாறையிலும் இரு அணிகளும் களத்தில் இறங்குவதால், தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் ஆபத்து உருவாகியிருக்கின்றது. தேசியப்பட்டியலுக்குத் தேவையான வாக்குகளைச் சேகரிக்க அம்பாறையை மீண்டும் பறிகொடுக்க தமிழரசுக் கட்சி தயாராகியிருக்கின்றது. இணக்கத்தை ஏற்படுத்த தொடா்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்திருக்கின்றது.

இந்த நிகழ்வுகள் அனைத்திலும் பாா்வையாளராக இருந்துவரும், கட்சியின் தலைவா் மாவை சேனாதிராஜா, தொடா்ந்தும் தாம் தலைவராக இருப்பதில் அா்த்தமில்லை என்ற நிலையில்தான் பதவியைத் துறக்கும் முடிவை அறிவித்திருக்கின்றாா். சிறிதரனைத் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அவா் அழைத்திருக்கின்றாா். ஆனால், தமிழரசுக் கட்சியின் தெரிவுகள் அனைத்துக்கும் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்விடயத்தில் தமது அடுத்த நகா்வு பொதுத் தோ்தலின் பின்னா் இடம்பெறும் என்று சிறிதரன் தெரிவித்திருக்கின்றாா்.

நவம்பா் 14 ஆம் திகதி நடைபெறப்போகும் பொதுத் தோ்தலைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணத் தோ்தல் களம் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குக் காரணம் தமிழரசின் அதிகாரத்துக்காகப் போராடும் இருவா் இங்கு களமிறங்கியிருப்பதுதான். யாழ்ப்பாணத் தோ்தல் களத்தை சூடாக்கியிருப்பது இந்த இருவருக்கும் இடையிலான விருப்பு வாக்குப் போட்டிதான்! தோ்தல் முடிவின் பின்னா் வீட்டில் உள்ள மற்றவா்களும் வெளியே வரும் நிலை உருவாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்!

 

https://www.ilakku.org/சுமந்திரனால்-காலியாகும/

 

சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்? - நிலாந்தன்

1 month 1 week ago

 

சிங்கங்களும், பன்றிகளும், அறுவான்களும், குறுக்கால போவான்களும்?- நிலாந்தன்.
adminOctober 13, 2024
spacer.png

கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து, திரண்டு வாக்களித்தார்கள். அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை. தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள். இம்முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா?

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது “தேசமாகத் திரள்வோம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சிதறுவோம் அல்லது குழுக்களாகச் சிதறுவோம் அல்லது கட்சிக்குள் அணிகளாகச் சிதறுவோம் அல்லது சுயேச்சைகளாகச் சிதறுவோம் என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டி வருமா?

நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்த்தேசிய அரசியல் களம் அப்படித்தான் காட்சி தருகின்றது. தேசியவாத அரசியல் என்பது மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது. மக்களை கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு தேசமாகத் திரட்டுவது. ஆனால் கட்சிகள் மத்தியில் கூட்டுணர்வு இருந்தால்தான் அவை மக்களைக் கூட்டிக்கட்ட முடியும். கட்சிகள் மத்தியில் அது இல்லையென்றால் எப்படி மக்களைத் தேசமாகத் திரட்டுவது?

உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஒரு தனிநபரின் கருவியாக மாறி அந்தத் தனிநபரை வெல்ல வைப்பதற்காக அவருடைய விசுவாசிகளை வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கின்றது. அந்த விசுவாசிகள் தமக்கு விசுவாசமான தலைவருக்காக வாக்குகளை சேகரித்துக் கொடுப்பார்கள். ஒரு மூத்த கட்சியானது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது என்னென்ன அளவுகோல்களை வைத்து அதைச் செய்திருக்க வேண்டும் ?

ஆனால் அதைக் கேள்வி கேட்க வேண்டிய மூத்தவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனும் என்ன செய்கிறார்கள்? சிறீதரனுடைய ஆதரவாளர்கள் ரஜினிகாந்தின் படத்தில் வரும் ஒரு பஞ் டயலாக்கை பரவலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். “சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாகத்தான் வரும். பன்றிகள்தான் கும்பலாக வரும்” என்ற வசனம் அது. அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி சிங்கங்களும் பன்றிகளுமாக,சிவஞானம் கூறுவதுபோல “அறுவான்களும் குறுக்கால போவான்களுமாக” சிதறிப்போகிறது என்று பொருள். அது தேசியக் கூட்டுணர்வோடு ஒரு திரட்சியாக இல்லை.

வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததிலிருந்து கட்சிக்குள் மகளிர் அணியும் தவராசா அணியும் ஏனைய அணிகளும் நொதிக்கத் தொடங்கிவிட்டன. தவராசா அணி சுயேச்சையாகப் போட்டியிடுகின்றது. இவ்வாறு தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் ஏற்கனவே தூர்ந்து போன கட்சியை மேலும் சிதைக்கக்கூடும். அவ்வாறு தமிழரசுக் கட்சி பலவீனமடையும் பொழுது அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேறு கட்சிகள் அல்லது வேறு கூட்டுக்கள் உண்டா?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தேசியவாத அரசியல் குறித்த பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தரிசனங்களைக் கொண்டிராத ஒரு கட்சி. தங்களைத் தியாகிகள் ஆகவும் புனிதர்களாகவும் காட்டுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டும் ஒரு கட்சி. தன்னை புத்திசாலிகள், கொள்கைவாதிகளின் கட்சியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கட்சி. தேசம் என்பது புனிதர்கள், தியாகிகள், கொள்கைவாதிகளை மட்டும் கொண்டதல்ல. திருடர்கள், அயோக்கியர்கள், சமானியர்கள் என்று எல்லா வகைப்பட்டவர்களினதும் திரட்சிதான் தேசம். முன்னணியின் அரசியல் பெருந்திரட்சிக்கு உரியதல்ல. அதனால் முதன்மைக் கட்சியாக மேலுயர முன்னணியால் இதுவரை முடியவில்லை.

அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றுக்கூடாகத்தான் கொள்கையைப் பரவலாக்கலாம், மக்கள் மயப்படுத்தலாம், அதை ஒரு திரண்ட அரசியல் சக்தியாக மாற்றலாம். தூய தங்கத்தை வைத்துக்கொண்டு ஆபரணம் செய்ய முடியாது. அதில் செம்பு கலக்க வேண்டும். செம்பைக் கலக்காவிட்டால் தங்கம் பிரயோகநிலைக்கு வராது. அப்படித்தான் நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்காவிட்டால் கொள்கை மக்கள் மயப்படாது. இதுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ள பிரதான பலவீனம். அவர்களால் தேசத்தைத் திரட்ட முடியாது. எனவே தமிழரசுக் கட்சி சிதையும்போது ஏற்படும் வெற்றிடத்தில் ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாக மாறி ஆசனங்களைக் கைப்பற்றத் தேவையான அரசியல் தரிசனமும் நெகிழ்வும் முன்னணியிடம் இல்லை.

அடுத்தது குத்துவிளக்குக் கூட்டணி. அந்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் பின் சங்குச் சின்னத்தை கைப்பற்றியதன்மூலம் சங்குக் கூட்டணியாக மாறியிருக்கிறது. அங்கேயே சர்ச்சைகள் உண்டு. ஒரு கூட்டு வெற்றியை அதன் பங்காளிகளில் ஒரு பகுதி மட்டும் சுவவீகரிக்கப் பார்க்கின்றது. சங்கு இப்பொழுது தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பின் சின்னம் அல்ல. ஏனெனில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு இப்பொழுது இல்லை. அதற்குள் இருந்த தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் ஈடுபடவில்லை. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் தமிழ் மக்கள் கூட்டணியும் அக்கூட்டுக்குள் இல்லை. எனவே சங்கு பொதுக் கட்டமைப்பின் சின்னமல்ல. சங்குக்கு விழுந்த 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளும் சங்கச் சின்னத்தை எடுத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்குமா?

சங்குக்கு விழுந்த வாக்குகள் தேசத் திரட்சிக்கு விழுந்த வாக்குகள். அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசத் திரட்சி என்ற அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். அரியநேத்திரன் ஒரு குறியீட்டு வேட்பாளர். ஏறக்குறைய ஒரு துறவிபோல அவர் தேர்தலில் நின்றார். அவருக்கு வாக்குத் திரட்டுவதற்காக மக்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் துறவிகளைப்போல சம்பளம் வாங்காமல் இரவு பகலாக வேலை செய்தார்கள். அவரை வேட்பாளராக முன்னிறுத்திய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித்தான் உழைத்தன என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் பொது வேட்பாளரை நோக்கி அவர்கள் திரட்டிய வாக்குகள் பொதுவானவை. பொதுவான வாக்குகள் இப்பொழுது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள சங்குக் கூட்டணிக்கு மட்டும் கிடைக்குமா?

கிடைக்காது. உதாரணமாக, கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி சங்குக்காக வேலை செய்தது. அது முழுமையாக வேலை செய்ததா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அங்கு கிடைத்த வாக்குகளுக்குள் தமிழரசு கட்சியின் வாக்குகளே அதிகம் உண்டு. எனவே சிறீதரனா? சங்கா? என்று வரும் பொழுது சிறீதரனின் ஆதரவாளர்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள்.

அப்படித்தான் மட்டக்களப்பிலும் அரிய நேத்திரனுக்காக சிறீ நேசனும் உட்பட பல மூத்த தமிழரசுக் கட்சிக்காரர்கள் ஒன்றாக நின்று உழைத்தார்கள். தங்களின் ஒருவருக்கு அவர்கள் பொதுவாக வாக்குத் திரட்டினார்கள். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் வீட்டுக்குத் தான் விழும். சங்குக்கு அல்ல. அப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அருண் தப்பிமுத்து திரட்டிய வாக்குகளும் சங்குக்கு விழாது.

மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சரவணபவன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் உட்பட பலரும் சங்கின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் சங்கு கூட்டணிக்குள் நிற்கவில்லை. மாறாக தவராசாவின் சுயேட்சைக் குழுவாக களமிறங்குகிறார்கள். அவர்கள் சங்குக்கு திரட்டிய வாக்குகள் இனி அவர்களுடைய சுயேச்சைக் குழுவுக்குத்தான் அதிகமாக விழும்.

அப்படித்தான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுயேச்சையாக நிற்கும் தமிழர் சம உரிமை அமைப்பும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்காக விசுவாசமாக உழைத்தது. அந்த அணி இப்பொழுது சுயேச்சையாகக் கேட்கின்றது. எனவே பொது வேட்பாளருக்காக அவர்கள் சேகரித்த வாக்குகள் அந்த சுயேச்சைக்கு விழுமா அல்லது சங்குக்கு விழுமா? தமிழ் மக்கள் சின்னத்தைப் பார்த்து மயங்குவார்களா?

இதுதான் பிரச்சினை. ஒரு சன்னியாசி போல அரியநேத்திரன் தேர்தலில் நின்ற பொழுது தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு அவருக்கு வாக்களித்தார்கள். அதே கூட்டுணர்வோடு இப்பொழுது வாக்களிக்க மாட்டார்கள். கட்சி விசுவாசம், தனி நபர் விசுவாசம், பிரதேச விசுவாசம், ஊர் விசுவாசம் போன்ற பல காரணிகளாலும் வாக்குகள் சிதறடிக்கப்படும் ஆபத்து அதிகமுள்ள ஒரு தேர்தல் இது. மேற்சொன்ன அனைத்து விசுவாசங்களும் தேசியக் கூட்டுணர்வுக்கு விரோதமானவை. பொது வேட்பாளருக்கான தேர்தலில் பிரச்சாரப் பணிகள் தொடங்கிய போது “எமக்காக நாம்” என்று கூறப்பட்டது. ஆனால் நடக்கவிருக்கும் தேர்தலில் “எனக்காக நான்” என்பதுதான் நடைமுறையாக உள்ளது.

அடுத்தது, விக்னேஸ்வரனின் கட்சி. அது இப்போதைக்கு பிரதான நீரோட்டக் கட்சியாக பலமாக எழும் என்று நம்பமுடியாத ஒரு கட்சிச் சூழல்தான் காணப்படுகிறது. நடக்கவிருக்கும் தேர்தல் அந்த கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் காட்டும்.

தொகுத்துப்பார்த்தல், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சங்குக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜேவிபியின் கூட்டணி, சுயேச்சைக் குழுக்கள் என்று மொத்தம் 44 தரப்புகள் தமிழ் வாக்குகளைக் கேட்கப் போகின்றன. இதில் அனுர அலை எந்த அளவுக்கு வாக்குகளைக் கவரும் என்பதை இப்பொழுது மதிப்பிடுவது கடினம்.

இப்படி ஒரு நிலையை கிழக்கில் அனுமதித்தால், குறிப்பாக திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அங்குள்ள சிவில் சமூகங்களிடம் உண்டு. திருகோணமலையில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் இது தொடர்பில் தலையிட்டிருக்கிறார். அங்கே போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதனால் வாக்குகள் சிதறுவது தடுக்கப்பட்டு குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதித்துவமாவது பாதுகாக்கப்படலாம். ஆனால் அம்பாறையில் நிலைமை அவ்வாறில்லை.

ஆகமொத்தம் வரும் நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களை வாக்காளர்களாகச் சிதறடிக்கப் போகிறது. சில கிழமைகளுக்கு முன்பு தேசமாகத் திரள்வோம் என்ற கோஷம் ஜனாதிபதித் தேர்தலில் பலமாக ஒலித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளாகச் சிதறும் ஆபத்தே அதிகரித்து வருகின்றது. எனது நண்பர் ஒருவர் பின்வருமாறு கேட்டார் “இப்படியே சிதறிப்போனால் சனங்கள் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்” என்று சலிப்படையக்கூடுமா?



https://www.nillanthan.com/6934/

 

 

"திண்ணைக் காற்று" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு]

1 month 1 week ago

"திண்ணைக் காற்று"
[நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு]

 

"திண்ணைக் காற்று புயலாய் வீசுது 
கண்ணைத் திறந்து மின்னலாய் ஒளிருது 
மண்ணைக் காப்பாற்ற இடியாய் முழங்குது 
ஒன்றாய் இணைய எனோ மறுக்குது?"

"தேர்தல் வருகுது மனத்தைக் குழப்புது
தேசம் இருந்தும் பிரிந்து நிற்குது 
தேய்வு இல்லா ஒற்றுமை இல்லாமல் 
தேசியம் பற்றி மேடையில் கத்துது?"    

"ஆவதும் உன்னாலே அழிவதும் உன்னாலே
ஆற அமர்ந்து ஆழமாய் சிந்திக்காயோ 
ஆக்கம் கொண்ட கொள்கை வகுத்து 
ஆசை துறந்து அர்ப்பணிப்பு செய்யாயோ?"

"உறவை மறவாதே உண்மையைத் துறக்காதே 
உலகம் உனதாகும் உள்ளம் திறந்தால்
உடம்பு ஆற திண்ணையில் இருப்பவனே 
உயிரோடடம் உள்ள கருத்துக்களை பகிராயோ?"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

463074626_10226534547172699_2057744127115300958_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=f-RMX8oFxU0Q7kNvgFpIjrl&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=A8cAbalV6M094PRuLDDC-jX&oh=00_AYDLU-e69liKb29toJKKR2LXzmAFM9S-uUZSXhkqmN-UMA&oe=67115051 463137912_10226534546852691_4735937020791275446_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=UD95F-YygQgQ7kNvgF95kml&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=A8cAbalV6M094PRuLDDC-jX&oh=00_AYDrEYQzDvRpqXrpohBdY5PjtcmCWaH8GxDcumk0lbGkUQ&oe=67113A23 

 

 

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில் முனைப்பாக வெளிக்காட்ட முடியும்

1 month 1 week ago
image

கலாநிதி ஜெகான் பெரேரா 

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம் நீட்டின. தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மேற்குலக நாடுகளின் விருப்பத்துக்குரியவராக விளங்கினார் போன்று தோன்றியது.

பொருளாதாரத்தை விக்கிரமசிங்க கையாண்ட முறையைப் பாராட்டி அந்த நாடுகள் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டன. சர்வதேச நாணய நிதியமும் அதேபோன்று அவருக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டது. விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் மேற்குலக நாடுகளின் தலைமையிலான நடவடிக்கைகளுடன் தன்னை அடையாளப்படுத்துவதற்கு விசேட முயற்சிகளை முன்னெடுத்தது. செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு போதிய வசதிகளுடனான கப்பல்கள் இல்லாவிட்டாலும் கூட அவற்றில் பங்கேற்பதற்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம்.

தேசிய மக்கள் சக்தியினதும் அதன் ஜனாதிபதி வேட்பாளரினதும் வெளியுறவுக் கொள்கைத் திசைமார்க்கமே பொதுவில் மேற்குலக நாடுகளினதும் குறிப்பாக இந்தியாவினதும் முக்கிய கரிசனைக்குரிய விடயமாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியின்  பிரதான அங்கத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) மார்க்சிய - லெனினிச கோட்பாட்டை பின்பற்றுகின்றது என்பதால்  அதே போன்ற ஒரு  கோட்பாட்டையுடைய நாடுகளை  நோக்கி தேசிய மக்கள் சக்தி சரிந்துவிடும் என்பதே ஊகமாகும்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள்  அவரது அரசாங்கம் சீனாவையும் ரஷ்யாவையும் நோக்கிச் சாயும் என்று கருத்துக்கு வலுச்சேர்க்கும் பாங்கில் அமைந்திருந்தன. அந்த இரு நாடுகளும் நீண்டகாலமாக இலங்கையின் நெருங்கிய நேச சக்திகளாக இருந்து வருவதுடன் போர்க்காலத்திலும் பிறகு போரின் பின்புலத்தில் கிளம்பிய மனித உரிமைகள் தொடர்பான பிரச்சி னயிலும் சீனாவும் ரஷ்யாவும் இலங்கைக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றன.

ஆனால், ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நலன்களையும் பொறுத்தவரை, இந்தியாாவுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார். அவரை முதலில் சந்தித்து வாழ்த்துக் கூறியவர் இந்திய உயர்ஸ்தானிகரே.  திசாநாயக்க பதவியேற்ற பிறகு இலங்கைக்கு முதலில் விஜயம் செய்த வெளிநாட்டு அமைச்சரும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரேயாவார். அவர் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இந்தியவுடனான பொருளாதார அபிவிருத்தித் திட்டக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு இலங்கையின் முன்னுரிமை அக்கறைக்குரிய ஒரு விடயம் என்று ஜனாதிபதி திசாநாயக்க இந்திய அரசாங்கத்துக்கு  உறுதியளித்தார். அதேவேளை, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் ரஷ்யா உட்பட  சந்தை வாய்ப்புக்களையும் பொருளாதார உதவிகளையும் வழங்குவதால் இலங்கைக்கு முக்கியமானவையாக விளங்குகின்ற நாடுகளிடம் இருந்தும்  உலகம் பூராவும் இருந்தும் நல்லெண்ணச் செய்திகள் வந்து குவிந்தவண்ணமே இருக்கின்றன.

புதிய தலைமைத்துவம் 

அரசாங்கம் விரைவில் அதன் முதன் முதலான வெளியுறவுக் கொள்கைச் சவாலுக்கு முகங்கொடுக்கப் போகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறும் கடப்பாடு,  பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் கையாளப்படுகின்ற முறை தொடர்பில் இலங்கை மீதான அதன் கண்காணிப்பு மட்டத்தை இவ்வாரம் தீர்மானிக்கவிருக்கிறது.

வடக்கு போர்க்களத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டில் இருந்து மேற்குலக நாடுகள் தலைமையிலான சர்வதேச சமூகம் கடந்த காலத்தை விசாரணை செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன என்பது பற்றியும் காணாமல் போனவர்களை கண்டறிதல், மக்களின் காணிகளை திரும்பக் கையளித்தல், வடக்கு, கிழக்கில் இராணுவமய நீக்கம் செய்தல் உட்பட பல்வேறு விவகாரங்களில் பொறுப்புக் கூறப்படுவதை உறுதிப்படுத்து பற்றியும் பிரச்சினை இருக்கவே செய்கிறது.

2022 அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 51/1  தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பல்வேறு விடயங்களுக்கு மத்தியில்,  மனித உரிமைமீறல்கள் தொடர்பிலான சான்றுகளைச் சேகரித்து பேணிக்காத்து வைப்பதற்கு  மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்ட்ட ஆணையை நீடிப்பதற்கு தீர்மானித்தது. அதன் நோக்கம் தங்களது நியாயாதிக்கத்தின் கீழ் போர்க்குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கு அனுமதிக்கும் நாடுகளில்   பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதும் நீதிவிசாரணைச் செயன்முறைகளுக்கு ஆதரவளிப்பதுமேயாகும்.

அந்த தீர்மானத்தை ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் உறுதியாக எதிர்த்தன. ஆனால், அவர்கள் முனவைத்த சட்டவாதங்களும் இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் மேம்பட்டிருக்கிறது என்பதைக் காண்பிப்பதற்கு சமர்ப்பித்த சான்றுகளும் ஐக்கிய நாடுகள் முறைமையின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், இந்த தடவை நிலைவரம் வேறுபட்டதாக இருக்கமுடியும் என்பதுடன் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கின்ற முறையும் வேறுபட்டதாக இருக்கலாம். 2009  ஆம் ஆண்டில் தொடங்கி  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவந்த இதுவரையான காலப்பகுதியில் முதல் தடவையாக போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற அத்துமீறல்களில் பங்கேற்றதாக குற்றஞ் சாட்டப்பட்ட  ஒரு 

உறுப்பினரைத் தானும் கொண்டிராத அரசாங்கம் ஒன்று இலங்கையில் பதவிக்கு வந்திருக்கிறது.

தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பாதுகாப்பு படைகளை நிலைவைப்பது  தொடர்பாகவும் படைபலத்தைப் பயன்படுத்துமாறு உத்தரவிடுவது தொடர்பாகவும் தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியதாக அதிகாரப் பதவிகளில் இருந்ததில்லை. 2004 -- 2005 காலப்பகுதியில் மாத்திரமே அவர்கள் அமைச்சரவையில் பதவிகளை வகித்தார்கள். அந்த வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததுடன்  போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு  ஆயுதமோதல்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் இன்றைய ஜனாதிபதி விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்தார்.

வெற்றிக்கதை 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானம்  இரு வருடங்களுக்கானது. அது இந்த மாதம் முடிவுக்கு வருகிறது. அதில்  உள்ள முன்மொழிவுகளில் பெரும்பாலானவை இலங்கை அரசாங்கத்தினால் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தீர்மானத்தை காலாவதியாக மேற்குலக நாடுகள் முகாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மேலும் ஒரு வருடத்துக்கு அதை நீடிப்பதற்கான தீர்மான வரைவு ஒன்று மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. 

"51/1 தீர்மானத்தின் ஆணையையு  அதன் பிரகாரம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திடம் எதிர்மார்க்கப்படும் சகல பணிகளையும் நீடிம்பதற்கும்  தீர்மானிக்கப்படுகிறது.  மனித உரிமைகள் பேரவையின் 58 வது கூட்டத்தொடரில் வாய்மூல அறிக்கை ஒன்றை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வெளியிடவேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து 60 வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் கடப்பாடு பற்றிய விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது " என்று அந்த வரைவில் கூறப்பட்டிருக்கிறது.

முன்னைய இரு அரசாங்கங்களும் எடுத்த எதிர்முகமான பாதையைத் தொடருவதற்கு பதிலாக, தீர்மானத்தில் உள்ள ஏற்பாடுகளை ஆராய்வதற்கும் அதன் முன்மொழிவுகளின் நடைமுறைப்படுத்தலின் தற்போதைய நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு அடுத்த வருடத்தில் எவற்றை  நடைமுறைப்படுத்தமுடியும் என்பதை தீர்மானிப்பதற்கும் கால அவகாசம் தேவை என்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பது புதிய அரசாங்கத்துக்கு நல்ல ஒரு தெரிவாக இருக்கமுடியும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை விடயத்தில் கடைப்பிடித்ததைப் போன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர்களில் தீர்மானத்துக்கு திருத்தங்களை பிரேரிக்கும் ஒரு நிலைப்பாட்டை திசாநாயக்க அரசாங்கம் எடுக்கலாம். இது இலங்கையும் மனித உரிமைகள் பேரவையும் இணக்கத்துக்கு வரக்கூடிய ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதே பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும். ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அயைதியான முறையில் இடம்பெற்ற அதிகார மாற்றம் ஐக்கிய நாடுகள் முறைமைக்குள் இலங்கை மீதான நல்லெண்ணத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

முன்னைய அரசாங்கங்களினால் தொடங்கப்பட்ட ஆனால் தொடர்ந்து முன்னெடுக்கப்படாத தேசிய நல்லிணக்கச் செயன்முறையை மீண்டும் முன்னெடுப்பதில் புதிய அரசாங்கம் ஆற்றலை வெளிக்காட்டுமேயானால் அதன் நம்பகத்தன்மை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 57 வது கூட்டத்தொடரின்போது ஒரு பக்க நிகழ்வில்  அமெரிக்க தூதுக்குழுவினால் நடத்தப்பட்ட 'சகிப்புத்தன்மையின்மை, வெறுப்புக் குற்றச்செயல்கள் மற்றும் இஸ்லாமியப் பீதியை தோற்கடிப்பது' தொடர்பில் ஆராயப்பட்டது. அதில் இலங்கையில் சிவில் சமூகத்தினால் செய்ய்பப்பட்ட பணிகளுக்கு விசேடமான அங்கீகாரம் கிடைத்தது.

புதிய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை உலகின் மனச்சாட்சியின் குரலாக விளங்குவதற்கான  வாய்ப்புகள் இருக்கின்றன. சர்வதேச நியமங்களில் ஏற்பட்ட சீர்குலைவினால் உலகின் மனச்சாட்சி பெருமளவுக்கு தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு இலங்கை அதன் பங்களிப்பசை் செய்யமுடியும்.

https://www.virakesari.lk/article/195848

யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்; இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர்

1 month 1 week ago
யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்; அரசியல் தலைவர்கள் கூட வெளிநாடு செல்ல முடியாத நிலையேற்படும் - இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர்
image

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையேற்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுரமத்தேகொட  தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கேள்வி ; ஒவ்வொரு வருடமும் இலங்கை ஜெனீவாவில் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றது-ஐக்கிய நாடுகளின் ஹேக் தீர்ப்பாயத்தில் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வை காணத்தவறியதன் மூலம் நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என நீங்கள் கருதுகின்றீர்கள்? நாங்கள் என்ன செய்யவேண்டும்?

பதில் ; இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய பின்னர் நான் ஹேக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இணைந்துகொண்டேன்.

முன்னைய யுகொஸ்லோவியாவில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் இசர்வதேச சட்டங்கள் பாரதூரமான முறையில் மீறப்பட்டமைக்கு காரணமானவர்களை விசாரணை செய்வதற்காக அந்த தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்டது.

யுகொஸ்லோவியாவில் ஜனாதிபதி ஸ்லோபடான் மிலோசெவிக் காலத்தில் - 1990 - 91 இல் யுத்தம் மூண்டது உங்களில் பலருக்கு தெரியும்.

ஜனாதிபதி டிட்டோ உயிரிழந்த பின்னர்இயுகொஸ்லோவிய கூட்டமைப்பு பல துண்டுகளாக சிதறியதுஇஅவற்றிற்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இது யுத்த குற்றங்களிற்கு வழிவகுத்ததுஇஇந்த விவகாரம்  குறித்தும் பாரதூரமான மீறல்கள் குற்றவியல் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து  ஆராய்வதற்காக ஐக்கியநாடுகள் தீர்ப்பாயமொன்றை ஏற்படுத்தியது.

நான் அந்த தீர்ப்பாயத்தின் வழக்கறிஞர் அலுவலகத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றினேன்.

ICTY-Full-Form.jpg

2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே இலங்கைக்கு  எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் வெளியாக  ஆரம்பித்தன.

அமெரிக்க காங்கிரசில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது .அந்த அறிக்கை அப்போதைய இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

அந்த அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் நான் இடம்பெற்றிருந்தேன்இநாங்கள் அந்த அறிக்கையை ஆராய்;ந்து  ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்தோம்.

யுத்த குற்றங்கள் குறித்த எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால்இகண்மூடித்தனமான கொலைகள்இசர்வதேச சட்டங்களை பாரியளவில் மீறுதல்இயுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாடு என்ற அடிப்படையில் நாங்கள் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

சர்வதேச சட்டங்களின் கீழ் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு எங்களிற்குள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் விசாரணைகைள முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கும் ஆய்வுக்கட்டுரையொன்றை நான் 2010 இல் இடம்பெற்ற தேசிய சட்டமாநாட்டில் சமர்ப்பித்திருந்தேன்.

ஆயுதபடையை சேர்ந்தவர்களோ அல்லது வேறு யாரோ யுத்த குற்றங்களிற்கு காரணமாகயிருந்தால் அவர்களை விசாரணை செய்யவேண்டும்.

இதனை மூடிமறைக்க முயல்வதால் எந்த பயனும் ஏற்படாது.

யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை உலகின் எந்த மூலையிலும் கைதுசெய்யலாம்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றம் இந்த விடயத்தினை கவனத்தில் எடுத்தால் இஅந்த நபரை கைதுசெய்யலாம்.

அவர்கள் பொதுமக்கள் அல்லது அதிகாரிகளாயிருந்தாலும் சரி படைத்தரப்பினராகயிருந்தாலும் சரி அவர்களை கைதுசெய்யலாம்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு என்ன நடந்தது என பாருங்கள்இயுத்த குற்றங்களிற்காக சர்வதேச நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்துள்ளது.

அவரது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  பிடியாணையை பயன்படுத்தி நபரை கைதுசெய்யலாம்.

யுத்த குற்றங்களிற்காக தண்டனை அனுபவிக்கும் ஏனைய தலைவர்கள் உள்னனர்.

அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்இஅவர்கள் விசாரணை செய்யப்பட்டனர் தற்போது யுத்த குற்றங்களிற்காகவும் ஜெனீவா சாசனத்தின்  ஏனைய மீறல்களிற்காகவும்  தண்டனையை அனுபவிக்கின்றனர்.

இதுபோன்று நாங்களும் செயற்படவேண்டும்.நான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.ஏனையவர்கள் வேறு கருத்துக்களை கொண்டிருக்கலாம்இ  ஆனால் நாங்கள் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என  உறுதியான கருத்தினை நான் கொண்டுள்ளேன்.

அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரகைளை முன்னெடுக்கவேண்டும்இ இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் என்ன செய்யும்? எங்கள் குற்றவாளிகளை விசாரணை செய்வதற்காக நாங்கள் சர்வதேச தீர்ப்பாயத்தினை அமைப்போம்.

ஆனால் நாங்கள் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.இது எங்களிற்கு சிறந்த விடயமாக விளங்கும்.

அனைத்து பிரதிவாதிகளிற்கும் கிடைக்ககூடிய அனைத்து உரிமைகளுடன்இநியாயமான விசாரணைகளை உறுதி செய்துஇஎங்கள் நீதிமன்றங்களில்இஎங்கள் நீதித்துறை அமைப்பிற்குள் இந்த விடயங்களை கையாண்டு வழக்குகளை நடத்துவது இலங்கை நீதிமன்றங்களிற்கு சிறந்த விடயமாக அமையும்.

கேள்வி ; நீங்கள் சரியாக சொன்னது போல எங்கள் இராணுவ அதிகாரிகள் சிலரால் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றதுஇ அவர்களிற்கு விசா வழங்க மறுக்கின்றனர்.

தற்போது புதிய அரசாங்கம் உள்ளது இ நாங்கள் ஜெனீவாவிற்கு சென்று வாக்குறுதியளித்துவிட்டு வந்து இங்கு அதனை கைவிடுகின்றோம்இவேறு எதனையோ செய்கின்றோம்- இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?

mullivaikal11.jpeg

பதில் ; நீங்கள் சொன்னது சரிஇஅவ்வேளை ( யுத்தம் இடம்பெற்றவேளை) உயர் பதவிவகித்த சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் பலர் அவர்களிற்கு விசா வழங்கப்படாததால் வெளிநாடு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

சிலருக்கு எதிராக ஏற்கனவே சில நாடுகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.இதன் காரணமாக இந்த காரணத்திற்காக நாங்கள் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்து போதுமான ஆதாரங்கள் இருந்தால்இநீதிமன்ற விசாரணைகளிற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தால்இநாங்கள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.

புதிய அரசாங்கம் இது குறித்து சிந்திக்கவேண்டும் அவர்கள் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்கவேண்டும் இது சர்வதேச அளவில் அவர்கள் குறித்த நம்பகதன்மையை உயர்த்தும்.

சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையில் நாங்கள் செயற்பட்டால் சர்வதேச சமூகத்திலிருந்து இலங்கை புறக்கணிக்கப்படும் நிலை மாறும்.

நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பகுதியில்லைஇரோம்சட்டம் குறித்து எனக்கு தெரியும்.

சில சட்ட நிபுணர்கள் இதனை மறுக்க கூடும் ஆனால் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் பொறிமுறை மூலம் இங்கு இழைக்கபட்ட யுத்த குற்றம் குறித்து விசாரணை செய்வதற்கான வழிவகையுள்ளது.

இது இடம்பெற்றால் எங்களின் இராணுவத்தினர் மாத்திரமல்ல அரசியல் தலைவர்களும் வெளிநாடு செல்ல முடியாத நிலையேற்படும்.இதன் காரணமாக எங்களின் விடயங்களிற்கு நாங்களே தீர்வை காண்பது சிறந்தது.

இலங்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் வந்து தீர்ப்பு வழங்குவதை விட இலங்கை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடுப்பது சிறந்தது.

புதிய அரசாங்கம் இந்த கோணத்தில் ஆராய்ந்து சர்வதேச அரங்கில் இலங்கை குறித்த நம்பகதன்மை மீண்டும் ஏற்படுவதற்கு வழிசெய்யும் என நம்புகின்றேன்.

https://www.virakesari.lk/article/196031

"ஆசை கடந்த கூட்டு வேண்டும்!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு]

1 month 1 week ago
"ஆசை கடந்த கூட்டு வேண்டும்!"
[நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு]
 
 
"கைகளை கோர்த்து நாடகம் போடாதே
கைத்தாளம் போட்டு மேடை ஏறாதே
கைவசம் பதவியை இறுக்கி பிடிக்க
கைமாறு செய்யும் ஊழல் கொண்டு
கைவண்ணம் காட்டிடும் ஒற்றுமை வேண்டாம்?"
 
"ஆறு கைகள் ஆராய்ந்து பிடித்து
ஆற அமர தெளிவாக முடிவெடுத்து
ஆழமான உறவை கொள்கையில் ஏற்படுத்தி
ஆக்கமான முடிவில் ஒன்றாக செயற்பட்டு
ஆசை கடந்த கூட்டு வேண்டும்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
462695380_10226511683681126_8939619261536860303_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=AgqpesSbYncQ7kNvgEHlPsw&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AoAwovhdsDodmLezwWIZPAx&oh=00_AYAF_mSnAJp5julvg5pk9qtgHUkZXo7K7oyJ7kWvjeACgQ&oe=670F41D6 462654731_10226511683641125_1392582699724509803_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=BwtwKm3fKCIQ7kNvgF-dyMe&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AoAwovhdsDodmLezwWIZPAx&oh=00_AYAEQrAIA3W2vvyiNX3-J8qLoTYQYV0caIkcsGhyF-4BXA&oe=670F5398 462632192_10226511684401144_8843972854289482641_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=NPHK7FCTBmQQ7kNvgGWRI0S&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AoAwovhdsDodmLezwWIZPAx&oh=00_AYAqEQB3Ci8Ho2bbnrTL0OcUh9Cj3gWMjt-e54SoS2hQUg&oe=670F4258
 

"விழித்தெழு தமிழா!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் முன்னிட்டு]

1 month 1 week ago
"விழித்தெழு தமிழா!"
[நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தல் முன்னிட்டு]
 
[ஏப்ரல் 2004 பொதுத் தேர்தலில், தமிழர் கூட்டணி, ஓரு அணியில் ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக) வடக்கு மற்றும் கிழக்கில் 22 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது இன்று இது ஒரு தூர கனவாகி, சென்ற 2019 அது 11 ஆக, அரைவாசியாக மாறியதை எனோ இன்னும் அவர்கள் உணரவில்லை? அப்படி என்றால் இந்த 14 நவம்பர் 2024 இல் ??]
 
 
"உறக்கம் என்பது விழிகள் காணட்டும்
உள்ளம் என்றுமே விழித்தே இருக்கட்டும்
உயிரற்ற அரசியல் தலைமை ஒழியட்டும்
உயர்ந்த ஒற்றுமை நாட்டி உழைக்கட்டும்!"
 
"அடுப்படியிலே அடைந்து கிடந்தது போதும்
அழகு வடிவமே வெளியே வாராயோ
அன்பு பொழியும் ஆணும் வருவான்
அடிமைத்தளை உடைத்த ஒற்றுமை வீரனாய்!"
 
"பெண் இன்றி சமுதாயம் இல்லை
ஆண் ஒன்றானால் தாழ்வு இல்லை
மண்ணில் நாம் உரிமையுடன் வாழ
கண்ணியம் காக்கும் ஒற்றுமைக்கு அழை!"
 
"உந்தன் குரலும் உந்தன் செயல்களும்
உனக்கு பெருமை நாளை உணரடி
உறங்கிக் கிடைக்கும் ஆண்கள் விழிக்கட்டும்
உயர்ந்து ஒங்க தமிழன் எழுச்சிகொள்ளட்டும்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
462593896_10226497731732336_3478042371066494774_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=V7Ef6l_sX8QQ7kNvgEqEbBy&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=ARVnhSNPhJw8Ji4THTomH5D&oh=00_AYB0bNMXCIqoQQNShEEZdwXaRh0JZJuMbTHaFALoiPdH_Q&oe=670D602D 462754200_10226497731972342_231908329458530244_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=8enuYqukSpkQ7kNvgEMqW9J&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=ARVnhSNPhJw8Ji4THTomH5D&oh=00_AYAInWrs_mksQVpBvVVssPjdIQ0Ep49kQxoLc6GflUP1EA&oe=670D772A 462672426_10226497731292325_5492512683545033153_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=iVKro5GTMO0Q7kNvgGEppGG&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=ARVnhSNPhJw8Ji4THTomH5D&oh=00_AYBcPkFZpjBznVuGqatQDo2S8gkbI1uAhcFVdb1fB4ZtFA&oe=670D5CB3 462602438_10226497732172347_4801099679188136843_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=v5dclMymxOoQ7kNvgG_gq-i&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=ARVnhSNPhJw8Ji4THTomH5D&oh=00_AYAdi9hQXj4YOyLVfISzF8RECAjCpnAphSqeKp5LRksSvg&oe=670D721F
 

அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன?

1 month 1 week ago

அமெரிக்க அதிபர் தேர்தலும், உலக அரசியல் சூழலும்: தமிழர்கள் அறிய வேண்டியவை என்ன?
Oct 07, 2024 07:00AM IST ஷேர் செய்ய : 
L653fdQC-Rajan-1.jpg

ராஜன் குறை 

உலகின் எந்தப் பகுதியுமே இன்று தனித்தீவு அல்ல. மிக நெருக்கமாகப் பின்னப்பட்ட பொருளாதார வலைப்பின்னல் அனைத்து சமூகங்களையும் பிணைத்துள்ளது. நீங்கள் கேட்கலாம். இது புதியதல்லவே, உலகில் தூர தேசங்களிடையே வர்த்தகம் என்பது பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளதே என்று. உதாரணமாக, தமிழ்நாட்டில் ரோமப் பேரரசின் நாணயங்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஆனால், இத்தகைய வர்த்தகப் பரிமாற்றங்கள் உள்நாட்டு பொருளாதாரத்தை, உள்ளூர் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவையாக இருக்கவில்லை. ஏனெனில் பண்டங்கள் அனைத்தையும் தொலைதூரங்களுக்கு துரிதமாகக் கொண்டு செல்லும் வாய்ப்பு இல்லாததால், பெரும்பாலும் நுகர்வு என்பது உள்ளூர் உற்பத்தியை சார்ந்தே இருக்கும்.

இன்றைக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள் என அனைத்துமே பிரம்மாண்டமான போக்குவரத்து வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டுள்ளன. அதனால் பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்தால் உள்ளூர் சந்தையில் காய்கறிகள் விலை அதிகரிக்கும் சூழல் உள்ளது. முதலீடு, உற்பத்தி, தொழிலாளர்கள், பண்டங்கள், நுகர்வு எல்லாமே எல்லைகள் கடந்து இடம்பெயரும், பரவும் தன்மையுடன் உள்ளன.

அத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியது என்னவென்றால், மக்களாட்சி அரசியல் என்ற தத்துவமும் உலகளாவிய ஒரு சிந்தனைப்போக்காக மலர்ந்தது என்பதைத்தான். ஒவ்வொரு பண்பாட்டிலும் அதற்கான வேர்கள், விழுமியங்கள் பலவிதமாக உருவாகியிருக்கலாம். ஆனால், அவையனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து உலக அளவிலான மானுடவாத நோக்காக, மக்களாட்சி தத்துவமாக மலர்ந்தது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தன்னை இந்த உலகளாவிய மறுமலர்ச்சியின் பகுதியாகத்தான் கருதியது. பல்வேறு உலக சிந்தனையாளர்களையும், பல்வேறு நாட்டின் அரசியல் இயக்கங்களையும் குறித்து திராவிட இயக்க ஏடுகள் தொடர்ந்து எழுதி வந்தன.

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஐரோப்பிய நாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியதுதான். அதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டி என்பது 1914-ம் ஆண்டு உலகப் போராக மாறியது. அதனால்தான் தமிழ்நாட்டுக்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லாத ஜெர்மனியின் எம்டன் கப்பல் 1914-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் குண்டுகளை வீசியது. இதனால் எம்டன் என்ற சொல் தமிழ் மொழியில் வெகுஜன வழக்கில் ஆபத்தான திறமையும், ஆதிக்க உணர்வும் கொண்டவர்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது.

முதல் உலகப்போரின் விளைவாக செய்தித்தாள் வாசிப்பும், பத்திரிகைகள் வாசிப்பும் தமிழ்நாட்டில் அதிகரித்தது. முதல் உலகப் போர் முடிந்து இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இதனால் உலக அரசியல் என்பது குறித்த அக்கறை தமிழ்நாட்டில் தவிர்க்கவியலாமல் பரவியது.
பல்வேறு நாடுகளிலும் காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும், பழைய மன்னராட்சி போன்றவற்றை எதிர்த்தும் உருவான மக்கள் கிளர்ச்சிகள், போராட்டங்கள் ஆகியவை தமிழ்நாட்டிலும் அரசியல் தன்னுணர்வை வளர்க்கப் பயன்பட்டன. துருக்கியின் கமால் பாட்ஷா, வியட்நாமின் ஹோசிமின் உள்ளிட்ட பல தலைவர்களைக் குறித்து திராவிட இயக்க ஏடுகள் எழுதி வந்தன.

இருப்பினும் கடந்த சில பத்தாண்டுகளில் உலக அரசியலில் தமிழ் ஊடகங்கள் போதுமான ஆர்வம் காட்டுவதில்லை. உள்ளூர் அரசியல் செயல்பாடுகளில் கவனத்தைக் குவிப்பதால் நம்மை வெகுவாக பாதிக்கக்கூடிய உலகச் செய்திகளைக்கூட மிகக் குறைவாகவே ஊடகங்கள், குறிப்பாக தமிழ் தொலைக்காட்சி ஊடகம் விவாதிக்கிறது.

உண்மையில் உலகம் இன்று மிக விநோதமான ஒரு முரண்பாட்டில் சிக்கியுள்ளது. மிகப்பெரிய பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள், Multi National Corporation (MNC) என்பவை உலகளாவிய உற்பத்தி, வர்த்தகத்தை நிர்வகிக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நிறுவப்பட்ட உலக வங்கி (World Bank), சர்வதேச நிதிக் குவியம் (International Monetary Fund) ஆகியவை உலக நாடுகள் அனைத்திற்கும் கடன் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகின்றன. அதேசமயம், உலகெங்கும் பல தேசங்களிலும் தீவிர வலதுசாரி தேசியம் இன வெறுப்பு அரசியலையும், குறுகிய தேசிய பார்வையையும் கொண்டு வளர்ந்து வருகிறது.

XoznOkyw-Rajan-2.jpg

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இரு துருவ உலக அரசியலின் குறியீடாக விளங்கிய பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் இணைந்தபோது, ஒரு துருவ உலகம் உருவாகிவிட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ந்ததும், ரஷ்யா பல நாடுகளாக சிதறியதும் ஒரு துருவ உலக அமைப்பு (Unipolar World) நிலைபெற்றதாகக் கருத இடமளித்தது. உலக அளவில் மிகப்பெரிய ராணுவ பலத்தைக் கொண்ட அமெரிக்கா, பொருளாதார ஆற்றல் மிக்க நாடாகவும் இருந்ததால் ஒரு துருவ உலகின் மேற்பார்வையாளனாக, போலீஸாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. இன்றைக்கு அதில்தான் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது.

மீண்டும் இரு துருவ உலகம் 

எண்பதுகளில் சீனா, அமெரிக்க முதலீட்டை அனுமதித்ததால், அமெரிக்காவுடன் பிரம்மாண்டமான வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அது ஒரு துருவ உலக அமைப்புக்கு எதிரானதாகக் கருதப்படவில்லை. ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் அது அமெரிக்காவுக்கு இணையான ராணுவ, பொருளாதார வலிமை கொண்ட தேசமாக மாறியுள்ளது. ராணுவ பலம் இருந்தாலும், பொருளாதார வலுவில்லாத ரஷ்யாவுக்குப் பின்புலமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. வட கொரியா, ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய அணு ஆயுத சக்தி வாய்ந்த நாடுகள் தெளிவாக அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு எதிராக இயங்கும் வல்லமையுடன் கூட்டணி சேர்ந்து உள்ளன.

lbo6Nnu9-Rajan-4.jpg

எந்த நாடு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினாலும் அது பெரும் சேதத்தை விளைவிப்பதுடன், உலகப் போருக்கே வித்திடலாம் என்பதால் அணு ஆயுத நாடுகளைப் பிற நாடுகள் நேரடியாகத் தாக்குவது தவிர்க்கப்படுகிறது. அணு ஆயுத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தபோது மேற்கத்திய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார உதவிகள்தான் செய்கின்றனவே தவிர, எந்த நாடும் ரஷ்யாவைத் தாக்க முன்வரவில்லை. காரணம், அப்படித் தாக்கினால் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயங்க மாட்டார் என்பதுதான். அதனால் உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல்கள் கடுமையாகி உக்ரைனில் கடும் சேதங்கள் விளைகின்றன. உக்ரைனும் ரஷ்யாவின் மீது சில தாக்குதல்களை நிகழ்த்துகிறது என்றாலும், ரஷ்யா பன்மடங்கு வலுவானது என்பதால் உக்ரைன் அதை வெல்வது சாத்தியமில்லை.

ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அதைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவால் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா உட்பட பல நாடுகளும் வர்த்தக ஆதாயம் கருதி ரஷ்யாவுடன் தொடர்ந்து பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றன. இந்தியாவும், பிரதமர் மோடியும் போர் நிறுத்தத்திற்கு முயற்சி செய்வதாகச் சொன்னாலும், சந்தர்ப்பவாத நிலைபாடுகளையே மேற்கொள்வதாகத் தெரிகிறது. சீனா வெளிப்படையாகவே ரஷ்யாவை ஆதரித்து அதற்கான பின்புலமாக விளங்கி வருகிறது.

உக்ரைனுக்கு அடுத்த முக்கிய போர்ச்சூழலாக இஸ்ரேல் – லெபனான் – ஈரான் போர் மூளத் தொடங்கியுள்ளது. வெகுகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பாலஸ்தீனியப் பிரச்சினையில், காஸாவின் மீதான தன் ஒடுக்குமுறையை இஸ்ரேல் தளர்த்தாததால், காஸாவில் ஆட்சியிலிருந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தீவிரவாதத் தாக்குதலைத் தொடுத்து, பலரை கடத்திச் சென்றது. ஹமாஸுக்கு பாடம் புகட்டுவதாக இஸ்ரேல் காஸாவின் மீது கொடூரத் தாக்குதலை நிகழ்த்தி, அப்பாவி மக்களை இரக்கமின்றி கொன்று குவிக்கத் தொடங்கியது.

இந்தப் போர் துவங்கி ஓராண்டுக் காலம் ஆகியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. நாற்பதாயிரம் அப்பாவி பாலஸ்தீனியர்களைக் கொன்றும், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. பிணையக் கைதிகளையும் மீட்க முடியவில்லை. இதற்கிடையில் ஹமாஸுக்கு ஆதரவாகத் தெற்கு லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா என்ற தீவிரவாத அமைப்பு இஸ்ரேலை தாக்க, இஸ்ரேல் அங்கும் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர் கருவிகளில் குண்டு வைத்து விநியோகம் செய்து அவற்றை வெடிக்கச் செய்த இஸ்ரேல் பல அப்பாவி மக்களும் அந்த விபரீத பேஜர் வெடிப்புகளில் இறக்கக் காரணமாகியது.

ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் லெபனான் மீதான தாக்குதல்களாக மாற, ஹிஸ்புல்லா/லெபனானுக்கு ஆதரவாக ஈரான் இஸ்ரேலைத் தாக்கியுள்ளது. பதிலடியாக இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகக் கூறியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக சீனா குரல் எழுப்பியுள்ளது. லெபனானுக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஃபிரான்ஸும் குரல் கொடுத்துள்ளன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய போர் ஒன்று இஸ்ரேல் – அரேபியப் பகுதிகளில் வெடிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அலங்கோலங்கள்

மன்னரேயில்லாத நவீன மக்களாட்சிக் குடியரசாக இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவான அமெரிக்காவின் மக்களாட்சி இன்று அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. காரணம், ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். இவர் கடுமையான இனவெறி வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுடன், சர்வதேச அரசியலிலும் வாய்க்கு வந்தபடி பேசி அதிர்ச்சியளிப்பவராக இருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் அதிபரான தந்தைக்குப் பிறந்தவர். தந்தையும், தனயனும் பல சர்ச்சைக்குரிய பணப்பரிமாற்றங்களில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். பின்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் புகழ்பெற்றார். அவர் அரசியலில் புகுந்து ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளராக 2016-ம் ஆண்டு களம் இறங்கினார். அப்போதே அவர்மீது பாலியல் ரீதியான புகார்கள், பெண்களை இழிவாகப் பேசிய புகார்கள் எழுந்தன. ஆனால் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வரும் அகதிகளுக்கு எதிராக கடும் இனவெறுப்பு அரசியல் பேசியும், தீவிர வலதுசாரி அரசியல் பேசியும் கவனம் ஈர்த்தார்.

அமெரிக்கத் தேர்தல் முறை வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்தல் சபை பிரதிநிதிகள் உண்டு. அமெரிக்க அதிபராகப் போட்டியிடும் வேட்பாளருக்கு அனைத்து மக்களும் நேரடியாக வாக்களித்தாலும், மாநில வாரியாக யார் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாநிலத்தின் தேர்தல் சபை வாக்குகள் அனைத்தும் கிடைத்துவிடும். இந்த முறையில் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைவிட டிரம்ப் தேசிய அளவில் குறைவான வெகுஜன வாக்குகள் பெற்றாலும், அதிக தேர்தல் சபை வாக்குகளைப் பெற்று அதிபராகப் பதவி ஏற்றார். இவர் பதவிக் காலத்திலும் சர்ச்சைகளுக்குக் குறைவில்லை; கொரோனா வைரஸ் குறித்து இவர் பேசியதெல்லாம் இன்னொரு வேடிக்கை.

PlPKfUNY-Rajan-3.jpg

அதையெல்லாம் தூக்கியடித்தது என்னவென்றால் 2020 தேர்தலில் இவர் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தெளிவாகத் தோற்றபோதும் இவர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்ததுதான். இவருடைய ஆதரவாளர்களை ஏவிவிட்டு அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தையே தாக்க வைத்தார். தேர்தல் முடிவுகளுக்கு எதிராக இவர் தொடுத்த வழக்குகள் எல்லாம் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும், இவரும், இவர் ஆதரவாளர்களும் இன்றுவரை தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்பதுதான் விபரீதமானது.

இப்போது நடைபெறும் தேர்தலில் இவருக்கு எதிராக டெமாக்ரடிக் கட்சியில், துணை குடியரசுத் தலைவராக உள்ள, கருப்பின மற்றும் இந்திய-தமிழ் வம்சாவழியினரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அமெரிக்காவின் இருநூற்றைம்பது கால மக்களாட்சி வரலாற்றில் இதுவரை ஒரு பெண் அதிபராக பதவி வகித்ததில்லை என்பது வெட்கக் கேடானது. இதைக் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரை என்று அமெரிக்கப் பெண்கள் அமைப்புகள் வர்ணிக்கின்றன. அந்த கண்ணாடிக் கூரையான ஆணாதிக்க மனப்பான்மையின் துணையுடன்தான் ஹிலாரி கிளிண்டன் என்ற பெண்ணை தோற்கடித்து டிரம்ப் ஆட்சிக்கு வந்தார்.

உலக அரசியலின் பிரச்சினைகளுக்குப் பின்னணியில் அமெரிக்க உலக மேலாதிக்க முயற்சிகளின் வரலாறு இடம்பெற்றுள்ளது. அதனால் திடீரென அமெரிக்கா அந்தப் பிரச்சினைகளிலிருந்து விலக முடியாது. ஆனால், தீவிர வலதுசாரி தேசியம் பேசும் டிரம்ப் தேசிய சுயநலத்தை வெகுஜன கவர்ச்சி அரசியலாகப் பேசுகிறார். உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் எலான் மஸ்க் டிரம்ப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

உக்ரைன் X ரஷ்யப் போர், இஸ்ரேல் X காஸா – லெபனான் – ஈரான் போர் ஆகியவற்றின் பின்னணியில் அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் ரஷ்யாவின் அங்கமாக இருந்த உக்ரைனை அதன் செல்வாக்கிலிருந்து பிரித்து நேட்டோ அமைப்பில் சேர்த்து தங்கள் வசம் கொண்டுவர அமெரிக்கா செய்த முயற்சிகளின் விளைவாகத்தான் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது என்பதே வல்லுநர்கள் பலரின் கருத்து. அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமானால் அது அமெரிக்காவின் பங்கின்றி நடக்காது. டிரம்ப் உக்ரைனை கைவிட நினைக்கிறார். அது மேலும் சமன் குலைவையே ஏற்படுத்தும்.

அதைவிட இஸ்ரேலுக்கு டிரம்ப் இரு தினங்களுக்கு முன் சொன்ன ஆலோசனைதான் கடும் அதிர்ச்சியளிப்பது. ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்கி அழித்துவிட வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார் டிரம்ப். அவர் சமநிலையுடன் (Mental balance) சிந்தித்துச் செயல்படுவதில்லை என்று அவருடன் பணியாற்றிய சிலர் கூறியுள்ளார்கள். அந்தக் கூற்றை நம்பாமல் இருக்க முடியவில்லை. இஸ்ரேல் அப்படி ஈரானின் அணு ஆயுத ஆற்றலைத் தாக்கினால் ஈரான் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? அல்லது ஈரானுக்கு பின்னால் நிற்கும் சீனாதான் வாளாவிருக்குமா?

உலக அரசியல் முரண்பாடுகள் மிகுந்த சிக்கலடைந்து கொண்டுள்ளது தெளிவாக உள்ளது. அந்த சிக்கலுடன் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகும் சிக்கலையும் உலகம் தாங்குமா என்று தெரியவில்லை. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன உலக அரசியல் தெரியுமோ அந்த அளவுக்குக்கூட தெரியுமா என்பது ஐயமே.

இதுதான் இன்றைய உலகின் நிலை. பெரும்பாலான நாடுகளில் மக்கள் அன்றாட பிரச்சினைகளில் மூழ்கியுள்ளார்கள் அல்லது அதிலிருந்து விடுபட கேளிக்கைகளை நாடுகிறார்கள். முதலீட்டிய சக்திகளும், தேசிய அரசுகளும் சிக்கலான அதிகாரப் போட்டியில் பெரும் ராணுவங்களுடன், அணு ஆயுதங்களுடன் ஈடுபட்டுள்ளன. முற்போக்கு சிந்தனையாளர்கள் இடையில் கிடந்து அல்லாடுகிறார்கள்.

கட்டுரையாளர் குறிப்பு:   

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
 

 

https://minnambalam.com/political-news/us-presidential-election-and-global-political-environment-what-tamils-need-to-know-by-rajan-kurai-article-in-tamil/

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான அவசியமும்

1 month 1 week ago

image

அ. டீனுஜான்சி

64 வயதுடைய மக்கரி ராஜரத்னம், கந்தப்பளையைச் சேர்ந்தவர், தனது இடது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டினை நிவர்த்திப்பதற்காக  கடந்த ஆண்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

2023 ஏப்ரல் 5 ஆம் திகதி கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பினார். அப்போது வைத்தியசாலையால் வழங்கப்பட்ட பிரட்னிசோலோன் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்தினார். 

அதன் பின்னராக, அதிகமான கண்ணீர் வெளியேறல், கண் வலி, தலைவலி போன்ற கடுமையான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதனால் மே 10 ஆம் திகதி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மக்கரி ராஜரத்னம் நிரந்தரமாக பார்வையை இழந்துள்ளார் என்ற துயரச் செய்தி வைத்திய அதிகாரிகளால் வெளியிடப்பட்டது.

அதேதினத்தில், பண்டாரவளை அளுத்கம பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பீ.ஏ.நந்தசேன நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்க்கொண்டிருந்தார். ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பியபின்னர் வைத்தியசாலையால் வழங்கப்பட்ட  பிரிட்சிசொலன் அசிரேட் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்த  ஆரம்பித்தார்.

இவருக்கும் மக்கரி ராஜரத்னம் போலவே, கடுமையான கண் வலி, தலைவலி மற்றும் அதிக கண்ணீர் வெளியேறல் போன்ற அசௌகரியங்களை எதிர்கொண்டார். இதனால் மே 22ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவர் தனது இடது கண் பார்வையை முழுமையாக இழந்துள்ளமை மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

இவர்களைப்போன்றே, தனது இடது கண்பார்வையை இழந்திருக்கிறார், 61 வயதுடைய மந்தனா ஆராய்ச்சி கல்யாணி. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் திகதி  நுவரெலியா பொது மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டாவருக்கு மருத்துவமனையால் பிரெட்னிசோலன் அசிடேட் கண்மருந்து வழங்கப்பட்டது. 

அதனைப் பயன்படுத்திய பின், கடுமையான கண் வலி ,தலைவலி ஏற்பட்டது. இதனால், மே 18ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் இடது கண் பார்வை இழக்கப்பட்டுள்ளமை மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. 

கட்புரை சிகிச்சைக்காகச் சென்று ஈற்றில் கண்பார்வையைப் பறிகொடுத்தவர்களாக இருக்கும் மேற்படி நபர்களால் தற்போது கொழும்பு  உயர்நீதிமன்றத்தில் இழப்பீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இவ்வழக்கில்  எதிரிகளாக கெஹெலிய  ரம்புக்வெல (முன்னாள் சுகாதார  அமைச்சர்),  ஜனக சந்திரகுப்தா (முன்னாள் செயலாளர், சுகாதார அமைச்சு), தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல்  ஆணையகம், எஸ்.டி.ஜெயரத்ன (தலைவர், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை  ஆணையகம்) , விஜித்  குணசேகர  (இயக்குனர், தேசிய  மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்) , வைத்தியர் அசேல குணவர்த்தன (பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சு)  வைத்தியர் ரோகண  எதிரிசிங்க (கண் அறுவைச் சிகிச்சை நிபுணர், பொது வைத்தியசாலை நுவரெலியா) வைத்தியர்  மகேந்திர செனவிரெட்ன (இயக்குனர் பொதுவைத்தியசாலை நுவரெலியா)  இந்தியானா ஆபத்தில்மிக்ஸ் குஜராத் 363035 (மருந்து நிறுவனம்), சட்டமா  அதிபர் திணைக்களம்  ஆகியோர்  பிரதிவாதிகளாக  சேர்க்கப்பட்டுள்ளனர்.

வழக்குத் தொடர்ந்த மூவரும் 100மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பாராத பார்வையிழப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி  மற்றும் பொருளாதார இழப்புகள் மனரீதியான அச்சத்தை பெருமளவில் விட்டுச்சென்றிருக்கிறது.  சொந்த உழைப்பால் வருமான மீட்டியவர்கள்  இப்போது  தங்கி வாழ்பவர்களாக  மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இச்சம்பவம் இடம்பெற்று ஒருவருடத்திற்கும் அதிகமான  காலம் உருண்டோடியிருந்தாலும், அவர்களுக்குரிய  இழப்பீடுகள்  வழங்கப்படவில்லை. தமக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பலர் காத்திருந்தாலும், நியாயத்தை தேடும் பயணத்தை சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த கண்மருந்துப் பாவனையால் பார்வையிழப்பைச் சந்தித்த 6 பேர் தமக்கான இழப்பீட்டைக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

இலவச வைத்திய  சேவை என்பது இலங்கையின் குறிப்பிடத்தக்க சிறப்பான திட்டங்களுள் முதன்மையானது. சுகாதாரத்துறையின் சேவைகளை  மக்கள் அனைவரும் சமவாய்ப்புடன்  இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும்.  இது நாட்டு மக்களின் அவசிய மருத்துவசேவையை  செலவின்றி பகிரக்  கூடிய வாய்ப்பையும்,  நம்பிக்கையையும்  பெற்றிருந்தது. ஆனால் தரமற்ற மருந்துகளின் தாக்கத்தால் உருவான அச்சம், மீண்டும் பொதுமக்களிடையே சுகாதாரத்துறை மீதான நம்பிக்கையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.  

2022 மற்றும் 2023 ஆகிய காலகட்டங்களில்  நாட்டில் ஏற்பட்ட பொருளாதார  நெருக்கடி, சுகாதாரத்துறையில் மீது  கடும் அழுத்தத்தைப்  பிரயோகித்தது. முக்கிய மருந்துப் பொருட்களுக்கு  ஏற்பட்ட  தட்டுப்பாடு  காரணமாக, மருத்துவத்துறை  ஸ்தம்பித்தது.  இதனை  நிவர்த்திக்கும்  நோக்கில், அப்போதைய  சுகாதார துறை அமைச்சினால் சில மருந்துப்பொருட்கள்  அவசரக் கொள்வனவின் மூலம்  இறக்குமதி  செய்யப்பட்டன. இவற்றுக்கான இறக்குமதிக்கான அனுமதிகள் முறையான செயன்முறைகளுடாக பெறப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவை  இந்திய  அரசாங்கத்தின் கடனுதவித் திட்டம் மற்றும் ஏனைய  உள்நாட்டு  நிதிப்பங்களிப்புடன்  இறக்குமதி  செய்யப்பட்டன. அந்த மருந்துகளைப் பாவித்த  நோயாளிகள் பல்வேறு  இழப்புக்களை  எதிர்கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற  பரிசோதனையின்  பின்  அந்த  மருந்துகள்  தரமற்றவை  எனத்தெரியவந்தது.  

அவ்வாறு  இறக்குமதி  செய்யப்பட்ட  தரமற்ற மருந்துகளுள்  ஒன்றுதான்  ‘பிரட்னிசொலோன்’ எனப்படும் கண்சொட்டு  மருந்து.  இம்மருந்து  சத்திரசிகிச்சையின்  பின் பயன்படுத்தப்படுகிறது. 

கடந்தாண்டு தரமற்ற மருந்துகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், இலங்கையின் சுகாதாரத்துறையின் கறுப்பு பக்கங்களை புரட்டியது. கண் சத்திர சிகிச்சைக்கு பின் சொட்டு மருந்தாக பயன்படுத்தப்படும் prednisolone  Acetate Ophthalmic suspension USP 10 – PRED-S எனும் மருந்தில்  உருவான பற்றீரியா காரணமாக இந்த மருந்தை பயன்படுத்திய 20 நோயாளிகள் தங்கள் கண்பார்வையை இழந்தனர்.

கொழும்பு, நுவரெலியா, அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. குறிப்பாக நுவரெலியா  வைத்தியசாலையில் பத்து நோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் பிரிவினால் வெளியிடப்பட்ட  சுற்றறிக்கை  இலக்கம் MSD/Q/P/2023/25 சுற்றறிக்கையின் கீழ் இந்த மருந்து தொகுதியை உடனடியாக  திரும்பப் பெறுமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும்  அறிவுறுத்தப்பட்டது.  

பாதிக்கவப்பட்டவர்கள் சார்பாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விபரத்தின் படி இந்த மருந்துகள் இந்தியாவின் குஜராத்தை தளமாக கொண்ட இந்தியானா ஆபத்தில் மிக்ஸ் மருந்து நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது . வழக்கின் பிரதிவாதிகள் பட்டியலில் குறித்த மருந்து நிறுவனமும் இணைக்கப்பட்டுள்ளது.

நட்டஈடு வழங்குவதை வலியுறுத்தும் குரல்கள்

 “பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் என்று  அடையாளம் காணப்பட்ட  மருந்துத்  தொகுதிகள்  மட்டுமே  மீளப்பெறப்பட்டன. அந்த  நிறுவனத்தை  நாங்கள் தடைசெய்யவில்லை.  இது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட  நிறுவனம்” என்று தொடர்பாக  தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல்  அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் சவேன் சேமேஜ் குறிப்பிடுகின்றார்.

மருந்துகள் தர உறுதி  ஆய்வகத்தின்  அறிக்கையின் படி, சத்திரசிகிச்சையின்  பின்னர்  பயன்படுத்தப்பட்ட  பிரெட்னிசொலன்  மருந்து தொகுதியில் மாசுபாடு  மற்றும்  கோகோபாசில்லி   பற்றீரியாவால்  பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

அத்துடன் சத்திரசிகிச்சையால் பார்வையிழப்பு ஏற்படவில்லை என்பதும் தரமற்ற மருந்தின் விளைவுதான் பார்வையிழப்பிற்கான  காரணம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தும் குறித்த நிறுவனம் தடை செய்யப்படாதிருப்பதற்கு காரணங்கள் எவையும் சுட்டிக்காட்டப்படவில்லை. 

IMG-20241008-WA0000.jpg

அரச  வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின்  ஊடகப் பேச்சாளர் (தமிழ்) வைத்தியர்  சப்னாஸ்  மஹரூப், “நாங்கள் இந்த விடயத்தில் ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுக்கிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு,  இந்த சம்பவம் இடம்பெற்ற போது கண் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கண்பார்வையை இழந்திருக்கிறார்கள். சிலர் பார்வை குறைபாடுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள் இதற்கான காரணமாக குறிப்பிட்ட மருந்தில் பற்றீரியா தாக்கம் இருந்ததாக  பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் அரசாங்கத்தின் ஊடாக மட்டுமல்ல, தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த நபர்கள் மற்றும் மருந்து தயாரித்த நிறுவனம் ஊடாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். மேலும் பார்வை இழப்புகள் சத்திர சிகிச்சைகளால்  ஏற்பட்டதல்ல. சத்திர சிகிச்சைக்கு பின்னராக பயன்படுத்தப்பட்ட மருந்து மூலம் ஏற்பட்டது என்பது ஆய்வுகளில் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, கண்சொட்டு மருந்து அவசர மருந்து கொள்வனவு  முறை மூலமாக இறக்குமதி செய்யப்பட்டது. மருந்துக் கொள்வனவில் வெளிப்படைத்தன்மை வேண்டும். நாங்கள் அவசரக் கொள்வனவை முழுமையாக எதிர்க்கிறோம்.  மருந்துகளின் தரம் மற்றும் மருந்துகளின் பாதுகாப்பு முறைகளை பின்பற்றல் சம்பந்தமாக தொடர்ந்தும் பேசுகிவருகிறோம் அத்துடன் மருந்துகளின் தரத்தை பரிசோதிப்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய ஆய்வகம் ஒன்று அவசியமாக உள்ளது இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி. வருகிறோம் “ என்றார்.

guru_new_photo.jpg

மருத்துவம் சார்ந்த இழப்பீடுகளுக்கான சட்ட ஏற்பாடு  தொடர்பாக,  சிரேஷ்ட சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன்,  “மருத்துவ அலட்சியத்தால் உண்டாகும் பாதிப்புகளுக்கான சட்ட ரீதியான தீர்வுகளுக்காக சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது ரோமன் டச் பிரிவில் இலங்கை பொதுச் சட்டத்தில் உள்ளடங்குகிறது. அதன்படி ‘கவனத்தை காட்ட வேண்டிய நபர் கவனயீனமாக  கவனத்தை காட்டாமல் தவறு இழைத்திருந்தால் அதன் போது ஏற்பட்ட விளைவுகளுக்கான சட்ட ஏற்பாடாக இந்த தீங்கியல்  சட்டம்  அமைந்துள்ளது’ என்றார்.

“இந்த சட்ட துணையை நாடும் பாதிக்கப்பட்ட நபர் இரண்டு வருடங்களுக்குள் தனக்கு நேர்ந்த பாதிப்புகளுக்கான ஆதாரங்களுடன் வழக்கு தொடர வேண்டும். இவ்வாறான வழக்கினை தொடரும் பாதிக்கப்பட்ட நபருக்கு வைத்தியதுறை சார்ந்த  வழக்காக  இருந்தால் சம்பந்தப்பட்ட வைத்தியர், வைத்திய அத்தியட்சகர், பரிசோதனை கூட ஆய்வாளர்கள், தாதியர் மற்றும் சம்பவத்தின் போது  பங்குபற்றுனர்களாக  இருந்தவர்களை  சாட்சியங்களாக  எடுத்துக்கொள்ள முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுக்கொள்வனவு சட்டத்தின் அவசியம் 

பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டனர். இந்த விடயம் சுகாதாரத் துறை மீதான நம்பிக்கையீனத்திற்கு வழிவகுத்தது.ஊழல்களால்  உருவாக்கப்படும் இழப்புகள் பற்றிய அச்சத்தையும் விட்டுச் சென்றது. 

பல தசாப்தங்களாக, வெளிப்படைத்தன்மையற்ற, பொதுக்கொள்வனவு முறை இலங்கையின் ஊழல் பக்கங்களுக்கு வடிவம் கொடுத்து வருகிறது என்பது வெளிப்படையான விடயம். ,ஆனாலும் அதற்கெதிரான மாற்றங்களுக்கான கோரிக்கைகள் பல வருடங்களாக ஒலித்தாலும் அவசர மருந்து கொள்வனவின் பின்னரான பாதிப்புகள் ஊழல்களுக்கு  சாதகமான எழுத்து வடிவங்களை மாற்றத் துணிந்துள்ளன.

ec258c37f43a6b1d372b57008a781d12.jpeg

அந்த வகையில் தேசிய ரீதியிலான திறந்த பொதுக்கொள்வனவு சட்டத்தின் அவசியத்தை சர்வதேச நாணயநிதியம்  தொடர்ந்தும்  வலியுறுத்தி  வருகிறது. இந்த விடயம் தொடர்பாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனத்தின் ஆளுகை மற்றும் ஊழல்  எதிர்ப்பு  பிரிவின் தலைவர் சங்கீதா  குணரத்ன, “சர்வதேச நாணயநிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக புதிய கொள்வனவு சட்டம் இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன்,  சட்டவரைபு  தயாரிக்கப்பட்டு, தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு  அனுப்பப்பட்டுள்ளது” என்று குறிப்பிடுகின்றார். 

“அச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் பொது ஆலோசனைக்கு  அனுப்பப்பட  வேண்டும். இன்னுமொரு புதிய கொள்முதல் வழிகாட்டல் கையேடு தயாரிக்கப்பட்டு, பாராளுமன்ற அனுமதிக்காக  அனுப்பப்பட்டுள்ளது.ஆனால் இன்னும் அதற்குரிய  அனுமதி கிடைக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், “தரமற்ற  மருந்துகளால் மக்கள்  நேரடியாகப்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் அதிகமாக  மக்களின்  கவனத்தைப்  பெற்றிருக்கிறது. இந்த அவசரக்  கொள்வனவால் இடம்பெற்ற  ஊழல்கள்  மிக நேர்த்தியாக  அவர்களைச் சென்று  சேர்ந்திருக்கிறது” என்று சங்கீதா  குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வெளிப்படைத் தன்மையற்ற கொள்வனவுகளால் உண்டாகும் ஊழல் வாய்ப்புகளை தடுப்பதற்கான முறைகளை பின்பற்ற வேண்டியது இன்றியமையாதது.அந்த வகையில் இலங்கையில் உள்ள பொருட்கொள்வனவு  வழிகாட்டியை  முழுமையாக பின்பற்றுதல், பொருட்கொள்வது செயல்முறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தல் மற்றும் அவசியம் இல்லாத போது அவசர நிலைமைகளின் கீழ் பொருட்கொள்வனவு செய்வதை தவிர்த்தல், பாவனைக்கு முன் மருந்துகளின் தரத்தைப் பரிசோதித்தல்  என்பவை முக்கியமானவை.

அந்தவகையில் இந்த விடயப் பரப்பிற்கான முன்னுரிமை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் சூழல்  உருவாக்கப்பட வேண்டும். கிராம மற்றும் மாவட்டங்களில் காணப்படுகின்ற சுகாதார சேவை தொடர்பான ஊழல்களை அம்பலப்படுத்த மக்களுக்கான விழிப்புணர்வும் அவதானமும்  அவசியமானது.  இதற்காக, பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் .

மேலும் பொதுமக்களை விழிப்பூட்டி ,சுகாதாரத்துறை  ஊழல்களை   ஒழிக்க சிவில் அமைப்புகள் மிகவும் காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டும்.இத்தகைய மாற்றங்கள் தென்படும் போது ஊழலுக்கெதிரான சூழல் கருக்கொள்ளும்.

https://www.virakesari.lk/article/195734

வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பிரிவில் அனுரவின் அதிரடி நடவடிக்கை.

1 month 1 week ago

 

தேவாலய குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள்

ஜோசெப் பராராசசிங்கம் கொலை

பல அரசு இயந்திரங்களில் கொள்ளை

என பல கோப்புக்களை தூசிதட்டி எடுத்துள்ளனர்.

மந்திரியின் வண்டி சாரதிக்கு கொழும்பு 7 இல் மாடிவீடு.

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

1 month 1 week ago

Published By: DIGITAL DESK 7  06 OCT, 2024 | 05:14 PM

image

ஆர்.ராம்-

‘தமிழ்த் தேசியம்’ தான் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிரதான கோசமாகும். ஆனால் அந்த அரசியல் கட்சிகளுக்குள் தங்களில் யார் தமிழ்த் தேசியவாதிகள் என்பதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகக் கூடிய ஆகக்கூடுதலான விடயங்களை உள்வாங்கியிருக்கின்ற அரசியல்கட்சிகள் ‘தூய தமிழ்த் தேசியவாத சக்திகளாக’ அல்லது ‘தமிழர்களின் உரிமைக்கான குரல்களாக’ அடையாளப்படுத்தப்படுகின்றன.

அதே நேரம், மத்திய அரசாங்கத்துடன் ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அல்லது அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கக் கூடிய தரப்புக்கள் ‘தமிழ்த் தேசிய விரோதிகளாக’ அல்லது ‘தமிழ்த் தேசிய துரோகிகளாக’ சித்தரிக்கப்படுகின்றன.

மேற்படி வகையறாக்களுக்குள் தான் ‘மிதவாத’ அல்லது ‘முற்போக்கு’ சிந்தனை சக்திகளும் உள்ளடக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிட்டுக் கூற வேண்டியதொரு விடயமாக உள்ளது.

தமிழ்த் தேசியத்தின் உண்மையான வாரிசுகள் யார், போலித் தமிழ்த் தேசியவாதிகள் யார் என்று ஆராய்வது இந்தப் பத்தியின் நோக்கமல்ல. ஏனெனில் அது தமிழ் மக்களின் ஆணையுடன் சம்பந்தப்பட்ட விடயம். 

மாறாக, வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ‘தமிழ்த் தேசிய மையவாத அரசியல் கட்சிகளுக்கு’ முன்னால் காணப்படுகின்ற பாரிய சவால்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துவது தான் இந்தப் பத்தியின் பிரதான நோக்கமாக உள்ளது.

நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி, சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியனவும் அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய தனிநபர்களும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்த  ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் அவர் 84,588 வாக்குகளையும், வன்னியில் 52,573வாக்குகளையும், மட்டக்களப்பில் 91,132வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். திருகோணமலையில் 40,496 வாக்குகளையும், அம்பாறையில் 86,589 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க பெற்றிருந்தாலும் அதில் தமிழ்த் தரப்பு வாக்குகள் சொற்பமானவையே.

இவ்வாறான நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படியான பெறுபேற்றுக்கு  டக்ளஸ் தேவானந்தா, சிவநேசத்துரை சந்திரகாந்தன், அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய நான்கு நபர்கள் தான் பிரதான காரணிகளாக உள்ளனர். 

இதில், டக்ளஸ், சந்திரகாந்தன் ஆகியோர் தனியாக தமது கட்சிகளின் ஊடாக பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுகின்றார்கள். அவர்களுக்கும், அவர்களின் கட்சிகளுக்கும் நிலையான வாக்குவங்கியொன்று உள்ளது. ஆகவே அவ்விருவரினது வெற்றி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டது எனலாம். 

ஆனால், வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோர் கடந்தமுறை தேசிய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதித்திருந்தாலும் இம்முறை அவர்கள் புதுப்பொலிவுடன் வரவுள்ள பழைய தேசிய கட்சியொன்றின் கூட்டுடன் தான் கைகோர்க்க வேண்டியுள்ளது. 

அந்தக் கைகோர்ப்புக்கான அங்கீகாரம் எவ்வளவு தூரம் வெற்றியை உறுதி செய்யும் என்பதில் கேள்விகள் உள்ளன. ஏனெனில்,  வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோருக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களுடன் கொண்டிருந்த ஊடாட்டம் தான் வெற்றியை உறுதி செய்தது. 

ஆகவே, அவர்களின் வாக்காளர்கள் மத்தியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதை தான் எதிர்பார்பாக கொண்டிருப்பார்கள் என்று கொள்கின்றபோது, இம்முறை அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படவில்லை. ஆகவே அவர்களின் ஆதரவாளர்கள் எவ்விதம் சிந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடித்தவர் சஜித் பிரேமதாச. இவரை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் அணி மட்டும் தான் ஆதரித்திருந்தது. அதில் யாழில் சுமந்திரனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் ஆதரித்து வாக்குச் சேர்த்தார்கள்.

அதற்கு அமைவாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 121,177வாக்குகளை அவர் பெற்றார். இதில் கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி பெற்றுக்கொடுத்த 30ஆயிரம் வரையிலான வாக்குகளும் உள்ளடக்கம். வன்னியில் 94,422வாக்குகளையும், மட்டக்களப்பில் 139,110வாக்குகளையும் திருகோணமலையில் 120,588 அம்பாறையில் 200,348 வாக்குகளையும் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டுள்ளார்.  இதில் முஸ்லிம் கட்சிகளின் வாக்குச் சேகரிப்பும் உள்ளடங்கியுள்ளது.

ஆகவே, சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் தங்களின் அறிவிப்புக்கு மக்கள் திரண்டு வாக்களித்ததாக தர்க்கத்துக்காக கூறினாலும் சஜித்துக்கான வாக்குகளில் தங்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதை உறுதியாக கூற முடியாதவொரு நிலைமையே உள்ளது.

ஏழு அரசியல் கட்சிகளும், 83சிவில் அமைப்புக்களும் இணைந்து களமிறக்கிய தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் 116,688 வாக்குகளும், வன்னியில் 36,377வாக்குகளும், அவரது பிறந்த மண்ணான மட்டக்களப்பில் 36,905வாக்குகளும் திருமலையில் 18,524வாக்குகளும் அம்பாறையில் 9,985வாக்குகளும் கிடைத்துள்ளன. 

கொழும்பு மாவட்டத்தில்  3,168வாக்குகளும் கொழும்புக்கு வெளியே வடக்கு,கிழக்கு அல்லாத ஏனைய மாவட்டங்களில் 4,696 வாக்குகளும்  உள்ளடங்கலாக அவர் 2,26,243வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சிறிதரன் ஆதரவு அணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, சிவில் அமைப்புக்களின் கூட்டான தமிழ்த் தேசிய பொதுச்சபை ஆகிய நான்கு தரப்புக்கள் அந்த வாக்குகளுக்கு உரிமை கோருகின்றன. இதனைவிட, புலம்பெயர் சமூகத்தின் வகிபாகமும் உள்ளது.

ஆகவே, ‘தேசமாக’ அணி திரட்டிய அரியநேத்திரனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் எந்தத் தரப்பிற்குச் செல்லும் என்பதிலேயே அதற்கான உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும், சிறிதரன் தரப்பும், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுக்குள் சில சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

அதுமட்டுமன்றி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பொதுவேட்பாளரின் ‘சங்கு’ சின்னத்தை தனதாக்கியுள்ளது. இது ஏனைய தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பிரசார மேடைகளில் ‘சங்கு’ சின்னத்தை மையப்படுத்திய வாதப்பிரதிவாதங்களும் தாராளமாக எழுவதற்கு இடமுள்ளது.

இம்முறை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த தரப்பில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்களின் தேர்தல் செலவீனங்களை பெருவர்த்தக நிறுவனமொன்று தத்தெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகள் சாத்தியமாகின்றபோது குறித்த தரப்புக்கள் பெருவர்த்தக நிறுவனத்தின் ‘கை பொம்மைகளாக’ மாறும் நிலைமையே ஏற்படும்.

இவற்றைவிடவும், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த அணியும், ரணிலை ஆதரித்த அணியும் உள்ள அரசியல்வாதிகள் சம்பிரதாய தமிழ்த் தேசிய அரசியல் கலாசாரத்திற்கு அப்பாற்சென்று பெற்றுக்கொண்ட சலுகைகள் பற்றிய தகவல்களும் மெல்லக் கசிய ஆரம்பித்துள்ளன. அவையும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள அநுரகுமார திசாநாயக்க வடக்கு,கிழக்கில் நேரடியாகவே களமிறங்கிப் பிரசாரம் செய்திருந்தார். யாருடனும் கூட்டணி அமைத்திருக்கவில்லை. அவருக்கு யாழில் 27,086வாக்குகளும் வன்னியில் 21,412வாக்குகளும் மட்டக்களப்பில் 38,832வாக்குகளும் கிடைத்துள்ளன. திருகோணமலையில் 49,886வாக்குகளும், அம்பாறையில் 108,971வாக்குகளும் கிடைத்துள்ளன. 

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பாராளுமன்ற ஆசனமொன்றைப் பெறுவதற்கு சொற்பமான வாக்குகளே அவருக்குத் தேவையாக உள்ளன. தற்போதைய சூழலில் வடக்கு,கிழக்கில் உள்ள துறைசார்ந்த நிபுணத்துவத் தரப்புக்கள் ஜே.வி.பியின் பெலவத்த தலைமையகத்திலும், ஜனாதிபதி செயலகத்திலும், நீண்ட வரிசையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கோரி நிற்கின்றன. 

அவ்விதமானவர்களில் ஜே.வி.பி.அடையாளம் கண்டு பொருத்தமான மக்கள் அபிமானத்தை வென்றவர்களை களமிறக்கும்போது வெற்றி உறுதியானதாக மாறுவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன.

ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கில் தலா ஒவ்வொரு ஆசனங்களை வெற்றி கொள்வது தான் முதற்கட்ட இலக்காக கொண்டுள்ள நிலையில் அந்த இலக்கு இலகுவில் அடையப்படும் என்பதே கணிப்பாக உள்ளது.

இதேநேரம், தேர்தல் புறக்கணிப்பைக் கோரிய தமிழ்;த் தேசிய மக்கள் முன்னணி தனித்து களமிறங்குகின்றது. அது தன்னுடைய வழமையான ஆதரவாளர்களை நோக்கியே நகருவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமுள்ளது. 

இவ்விதமான சூழலில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஏதேவொரு வகையில் அழுத்தங்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாகவே உள்ளன. 

அத்தோடு தமிழ்த் தேசியத்தை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் அபிமானமும் தற்போதைய சூழலில் குறைமதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலைமை தமிழ் மக்கள் மத்தியிலும் ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்ற சிந்தனையை வெகுவாக தோற்றுவித்து வருகின்றது.

மூன்று சதவீதத்தினைக் கொண்டிருந்த ஜே.வி.பி.அரியணைக்கு செல்லுமளவிற்கு உருவெடுத்திருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கிலும் மாற்றத்தை மையப்படுத்திய சிந்தனைகள் வலுப்பெற்றுள்ளன.

ஆகவே, வடக்கு,கிழக்கு எதிர்பார்க்கும் மாற்றம் தமிழ்த் தேசியத்துக்குட்பட்டதாக இருந்தால் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. சிலவேளைகளில் அந்த மாற்றம் தென்னிலங்கை காண்பித்த ‘திசைகாட்டியை’ நோக்கியதாக இருந்தால் தமிழ்த் தேசிய மையவாத அரசியல் கட்சிகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

https://www.virakesari.lk/article/195636

இங்கே, இங்கிருந்து தான் பாதை

1 month 1 week ago


திசராணி  குணசேகர

“மழையைத் தேடுகிறேன்
மழையைத் தேடுகிறேன்."
– கில் ஸ்கொ ட்-ஹே ர ன் (அமெரிக்காவில் குளிர்காலம்)

ஜனாதிபதி திஸாநாயக்கவும் அவரது கட்சியும் அவர்களின் நீடித்த ஆதிகால விசுவாசங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று உண்மையான சமத்துவத்தின் தளத்தில் சிங்களவர்கள் அல்லாத இலங்கையர்களிடம் விண்ணப்பிக்க முடியுமா?

தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து உலுக்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட உத்தரவை பாராளுமன்றத் தேர்தல் காலமென இந்த வாரம், நிறுத்தியிருந்தது.

அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் பல கொடுப்பனவுகளை நிறுத்தியது.
சரியான சட்டங்கள், நிறுவனங்கள், வழிகாட்டுதல் மற்றும் நேரம் கொடுக்கப்பட்டால், இலங்கை அரசு இன்னும் காப்பாற்றக்கூடியது என்பதை தேர்தல் ஆணைக்குழுவின்  செயற்பாடு சுட்டிக்காட்டுகிறது; மேம்படுத்தக்கூடியது கூட.

2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருந்தது. தேர்தல் சட்டங்கள் வெளிப்படையாகக் கண்டிப்புடனும் சமத்துவமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தேசபந்து தென்னகோனின் தொடர்ச்சியான செல்வாக்கின்றி பொலிசார் பின்பற்றுவதற்கு (உயர் நீதிமன்றத்திற்குப் பாராட்டுக்கள்!) தடையின்றி தேர்தல் ஆணைக்குழு வழிவகுத்தது,
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அவரது கோட்டையான  தம்புள்ளையில் பாரியளவில் வீடு வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தம்புள்ளை பொலிஸாரினால் அது நிறுத்தப்பட்டது. அமைச்சரின் முகத்தில் இருந்த திகைப்பான வெளிப்பாடு, பொலிஸாரின் தலையீட்டின் முன்னொருபோதுமில்லாத தன்மை, அவரது அனுபவத்திற்கு அப்பாற்பட்ட நியாயமான-விளையாட்டுக்கான விசுவாசத்தின் வெளிப்பாடு மற்றும் எங்களுடையது என்று தொடங்கி பலவற்றைப் பேசியது.

தேர்தல் கூட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இளம் ஆதரவாளர்களுக்கு மதிய உணவு உபசரிப்பதை தடுக்க தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தலையிட்டனர். மஹரகமவில் உள்ள இளைஞர் நிலையத்திற்கு அதிகாரிகள் இறங்கிய போது, உணவுப் பொருட்களை கைப்பற்றி பொலிஸாரிடம் விருந்தினை கையளித்த போது ஜனாதிபதி உடனிருந்தார்.

கோத்தாபய  ராஜபக்சவின் 20 வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருந்திருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வளவு சுதந்திரமாகச் செயற்பட்டிருக்க முடியாது. அந்தத் திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஜனாதிபதியின் பிற்சேர்க்கைகளாக மாற்றியது. அதிர்ஷ்டவசமாக இலங்கை ஜனநாயகத்தின் அதிர்ஷ்டவசமாக, ரணில் விக்கிரமசிங்க, 21வது திருத்தத்தின் மூலம் ஆணைக்குழுக்களை மீண்டும் சுயாதீனமாக்கினார், அவர்  முதலில் இலங்கையில்   பிரசார நிதியச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

தேர்தல் ஆணைக்குழுவில்  பணியாற்றும் அரசியல்  செல்வாக்கு இல்லாத அதிகாரத்துவம், அதன் அரசியலமைப்பு ரீதியாக  உத்தரவாதமான சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது, தேர்தல் சட்டங்களை அச்சமோ ஆதரவோ இல்லாமல் எழுத்துபூர்வமாக நடைமுறைப்படுத்தியது.
2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் எப்போதும் இல்லாத விதத்தில் மிகவும் அமைதியானதாக இருந்தது. துப்பாக்கி குண்டுகள் அல்லது தீ வைப்பு ஒருபுறம் இருக்கட்டும் பட்டாசு வெடிக்கவில்லை. என்.பி.பி /ஜே .வி .பி  கூறியமை செயற்படுத்தபட்டிருக்கக்கூடும் . இந்தத் தேர்தலில் அரசியல் வர்க்கத்தின் மீதான மக்களின் கோபம் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்ததால், அதீத மகிழ்ச்சியின் சில சம்பவங்கள் எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் எதுவும் இல்லை. தேர்தல் முடிவு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது, ஆனாலும் நாடு தங்க மீன் கிண்ணம் போல் அமைதியாக இருந்தது.

வெற்றியில் என்.பி.பி /ஜே.வி.பி.இன் சிறந்த நடத்தை எதிர்கால வெற்றியாளர்களால் பின்பற்றப்படும், மேலும் எமது அரசியல் கலாசாரத்தில், ஒரு பெரிய புதிய பாரம்பரியத்தில் நிலை நிறுத்தப்படும் என்று நம்புகிறோம். (அதேசமமாக, மிகவும் பொருத்தமான ஹரிணி  அமரசூரியவை பிரதமராக அவர்கள் நியமித்திருப்பது, உயர் மட்டங்கள் உட்பட, பொருத்தமான பெண்களுக்கு கதவுகளைத் திறக்க ஏனைய  தரப்பினரை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்)

போட்டியில்  இரண்டாம் இடத்தைப் பிடித்தவரை தேர்தல் பணியின் நிறைவு நிகழ்வில் பேச அழைத்ததன் மூலம் தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சிறந்த முன்னுதாரணத்தை அமைத்துள்ளது. சஜித் பிரேமதாச ஒரு குறுகிய மற்றும் உறுதியான உரையை நிகழ்த்தும் சந்தர்ப்பத்திற்கு உயர்ந்தார், இரண்டு உரிச்சொற்கள் பொதுவாக பயன்படுத்த முடியாதவை மற்றும் அவரது கூற்றுகள். ரணில் விக்கிரமசிங்கவுக்கு முகவர் ஒருவரை அனுப்புவதற்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் நிகழ்வில் கலந்துகொள்ளும் தைரியம் இருந்திருந்தால், இத்தருணத்தின் தொனி மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். தேசத்திற்கு சிந்தனைமிக்க உரையை ஆற்றியதன் மூலம் அவர் அந்த குறையை சரிசெய்தார்.

ஒன்றாக எடுத்துக்கொண்டால், 2024 ஜனாதிபதித் தேர்தல் முதிர்ச்சியடையாத ஜனநாயகத்திலிருந்து முதிர்ந்த ஜனநாயகத்திற்கு மாற்றும் படியை இலங்கை எடுத்த தருணத்தைக் குறிப்பதாக  இருந்தது. ஜனநாயகம் என்பது செயற்பாட்டில்இருக்கிறது. மந்திரக்கோலை அசைத்தால் கிடைப்பது போல் ஜனநாயக முன்னேற்றங்கள் ஒரு நொடியில் நடக்காது. அவை நீண்ட செயல்முறைகள், பெரும்பாலும் பல மாறுபாடுகளுடன். இன்று நம்மிடம் உள்ள உண்மையான சுதந்திரமான தேர்தல் ஆணைக் குழு  உருவாகி இரண்டு தசாப்தங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலம் எடுத்தது.

2001 ஆம் ஆண்டு 17வது திருத்தம் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியது. செயல்படுத்தப்படாவிட்டாலும், அது ஒரு யோசனை, ஒரு நம்பிக்கை, ஒரு பார்வையை நிலைநிறுத்தியது. மகிந்த ராஜபக்ச 18வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஆணைக்குழுக்களை ஜனாதிபதியின் பிற்சேர்க்கையாக மாற்றினார். சிறிசேன – விக்கிரமசிங்க நிர்வாகம் அந்த பின்னடைவை 19வது திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்து, இன்னும் சொல்லப்போனால், ஆணைக்குழுக்களை செயற்பட வைத்தது.

கோத்தாபய  ராஜபக்ச, உண்மையான ராஜபக்ச பாணியில், 20 வது திருத்தத்தின் மூலம் ஆணைக்குழுக்கள் மீது ஜனாதிபதி கட்டுப்பாட்டை மீண்டும் சுமத்தினார். ரணில் விக்கிரமசிங்க சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவினார்.

நல்லது, கெட்டது மற்றும் அசிங்கமானது

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது “என்னை நேசிக்கும் மக்கள் நிச்சயமாக நாமலை நேசிப்பார்கள்” என்று மகிந்த ராஜபக்ச  கூறினார். நாமல் ராஜபக்சவின் துணிச்சலான பிரசாரம் இருந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக இலங்கை ஜனநாயகத்தில் , ‘என்னை நேசிக்கின்ற -என் மகனை நேசிக்கின்ற’ என்ற இலங்கையர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தனர்; 342,781 வாக்காளர்கள், 2.6% வாக்காளர்கள். ராஜபக்ச மந்திரம் போய்விட்டது  என்றென்றும் போய்விட்டது.

“மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்திருக்கும்” என்று பசில் ராஜபக்ச 2022  டிசம்பர்  இல் ஒரு தொலைக்காட்சி சனலுக்குத் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். ராஜபக்சக்கள் இயங்கும் பொருளாதாரத்தை மரபுரிமையாகப் பெற்றனர் மற்றும் அதிலிருந்தவற்றை  எடுத்து, இலங்கை மக்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்கள். கோத்தாபய ராஜபக்ச வெளியேற்றப்பட்ட நேரத்தில், 14 பேர் வரிசையில் நின்று இறந்தனர்.

நாம் எப்படி வங்குரோத்து நிலையை அடைந்தோம் என்பது பற்றிய நியாயமான விவாதம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெளிப்படையாக இல்லாமல் இருந்தது. ராஜபக்ச மெத்தனம் புரிந்துகொள்ளக்கூடியது, இயற்கையானது. துரதிர்ஷ்டவசமாக, மூன்று முக்கிய வேட்பாளர்களுக்கும் இந்த பிரச்சினை ஒரு பிரச்சினையாக இல்லை. கோத்தாபய ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அவருக்கு ஆதரவளித்ததால் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தைத் தவிர்த்து விட்டார். சஜித் பிரேமதாசவும் அநு ரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி சில அங்குலங்கள் மேலே இழுத்ததற்காக எந்தப் புகழையும் பெற விரும்பாத காரணத்தினால் இந்தப் பிரச்சினையைத் தவிர்த்துவிட்டனர். (தற்செயலாக, ரணில் விக்ரமசிங்க  சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம், அவர் ஒரு காலத்தில் ராஜபக்சவின் அடிவருடிகள் தன்னைச் சூழ்ந்து கொள்ளாமல், ஐ.தே.க.வின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தால். வெற்றி அவருக்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவருக்குக் கிடைத்த இழப்பை  தவிர்த்திருக்க முடியும்). மக்கள் ஞாபகமாக  வைத்திருந்து செயல்பட்டனர். ராஜபக்சவின் வாக்குத் தளம் இப்போதைக்கு இல்லை.


ஐ.எம்.எவ்.பிணை மீட்பு  பொதியில்  கையொப்பமிடப்பட்ட போது, சுனில் ஹந்துன் நெத்தி (எதிர்கால என்.பி.பி  அரசாங்கத்தில் ஒரு சாத்தியமான நிதியமைச்சர்) அதை “சமீபத்திய ஐ.எம்.எவ்  உடன்படிக்கைகளில் மிகவும் மோசமானது” என்று குறிப்பிட்டிருந்தார் . பிரசாரத்தின் போது, என்.பி.பி /ஜே. வி.பி.  அதன் எதிர்ப்பைக் குறைத்தது, இது யதார்த்தத்திற்கு இடமளிக்கும் செயல்முறையாகும். இது ஒப்பந்தத்தை ரத்து செய்யாது என்ற வாக்குறுதியில் முடிந்தது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த புதிய நிர்வாகமும் இதுவரை நடுநிலையாக இருக்கிறது, நேரடி வரிகள் தொடர்பாக , மற்றொரு கடந்தகால வாக்குறுதிக்கு வரும்போது, அதே அளவு எச்சரிக்கையுடன் இருக்கும் என்று நம்புகிறோம்.

மீண்டும், ஹந்துன்நெத்தியின் கூற்றுப்படி என்.பி.பி.  வரி இல்லாத வரம்பை  மாதத்திற்கு ரூபா 200,000 மற்றும் மேல் விகிதத்தை 24% ஆக குறைக்கவும் திட்டமிடுகிறது . மங்கள சமரவீர காலத்தில் இருந்த வரம்பை அதிகரித்து, ரூ. 150,000, அர்த்தமுள்ளதாக இருக்கிறது; உயர்மட்ட வீ தத்தை மிகக் கடுமையாகக் குறைப்பது இல்லை – ஐ.எச்.பி.வாக்கெடுப்பின்படி, 40% செல்வந்தரான இலங்கையர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் என்.பி.பி.க்கு ஆதரவாக இருந்தனர் என்பதை ஒருவர் நினைவுபடுத்தும் வரை. இந்த குறிப்பிட்ட வட்டத்தை சதுரமாக்குவதற்கு ஒரு குறைவான நிதி அழிவு வழி இருக்கலாம். புதிய அரசாங்கம் உண்மையில் ஊழலையும் வீண்விரயத்தையும் குறைக்குமானால், 36% வரி விதிக்கப்படுவதை அதன் ஆதரவாளர்கள் எவ்வாறு எதிர்க்க முடியும். ஏனெனில் அவர்களின் வரிப்பணத்தை இழிவுபடுத்தப்பட்ட அரசியல் வர்க்கத்தை வளப்படுத்துவதற்குப் பதிலாக நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்?

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு ஒரு எளிமையான  விவகாரம். மைத்திரிபால சிறிசேனவைப் போலவே, எளிமையான, மலிவான மற்றும் மிகவும் அணுகக்கூடிய முதலீட்டைக் கொண்டிருந்தார். ஜனாதிபதி சிறிசேன தனது பதவியேற்பு உரையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக உறுதியளித்தார். நாட்டின் மற்றும் அவரது துரதிர்ஷ்டத்திற்கு வாக்குறுதி மீறப்பட்டது.

என்.பி.பி./ஜே.வி.பி . கூட நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால், தேர்தலுக்குப் பின், அந்த வாக்குறுதி குறித்து அதிகம் பேசப்படவில்லை. ஜனாதிபதி பதவி ஏற்கனவே புதிய ஆட்சியாளர்களின் மனதில் பதிந்துவிட்டதா?

புதிய நிர்வாகம் தொடங்கியதில் இருந்து, வாகனக் கண்காட்சி என்பது ஊரில் மிகப்பெரிய பேச்சாக இருக்கலாம். மிகக் குறைந்த நேரத்தில் பொது நிதியை விரயம் செய்யம் குற்றம்  (ஏன் போர்ஷே, சொர்க்கத்திற்காக?) அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு அளவிட முடியாத நெகிழ்ச்சித் தன்மையின் நிரந்தர வாசலை ஜனாதிபதி பதவி எவ்வாறு உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. ஒரு ஜனாதிபதி தனது விசுவாசிகளுக்கு வெகுமதி அளிக்க பொது நிதியைப் பயன்படுத்துகிறார் என்ற (சமீபத்திய கதை) மீண்டும், ஏன் ஜனாதிபதி பதவி ஜனநாயகத்திற்காக மட்டுமல்ல, நிதிக்காகவும் செல்ல வேண்டும் என்பதை நிரூபிக்கிறது.

பொருளாதார ஆரோக்கியம்.
வாகனப் பிரச்சினையை அதிகம் பயன்படுத்திய என்.பி.பி /ஜே.வி.பி  இன்னும் அந்தக் குறிப்பிட்ட கருத்தைக் கூறவில்லை. புதிய ஆட்சியானது டோல்கீனின் லார்ட் ஆஃப் தி ரிங் என்ற இலங்கைப் பதிப்பின் ஃப்ரோடோ, மோதிரத்தின் கவர்ச்சியை எதிர்த்து அதை அழித்ததா?

வடக்கு, தெற்கு மற்றும் காஸாவிலிருந்து ஒரு பாடம்
ஜனாதிபதி மாளிகையில் இரண்டு வீதிகளை திறந்து வைத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டப்பட்டார். (மைத்திரிபால சிறிசேனவும் தனது முதல் வாரங்களில் இதேபோன்ற ஒன்றைச் செய்தார்).

யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள பல வீதிகளை திறந்து வைப்பதன் மூலம் வடக்கிற்கு இதேபோன்ற செயற்பாட்டை  மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கைக்கு ஜனாதிபதியின் பதில் இன்னும் வரவில்லை. திஸாநாயக்க பிக்குகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை நம்பியிருப்பதால் வராமல் போகலாம்.

குறைந்தபட்சம் ஒரு வகையில், அநுரகுமார திஸாநாயக்க, கோத்தாபய  ராஜபக்சவுடன் (மற்றும் ரணில் விக்கிரமசிங்க) ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளார்: அரசியல் விசுவாசமான ‘போர் வீரரை’ பாதுகாப்புச் செயலாளராக நியமித்தல் (மற்றும் வைத்திருத்தல்). அத்தகைய ஜனாதிபதியால் இறுதி ஈழப்போர் = மனிதாபிமான நடவடிக்கை என்ற கட்டுக்கதைக்கு அப்பால் செல்ல முடியுமா? அவர் முயற்சி செய்வாரா?

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், வடக்கு மிகவும் இராணுவமயமாகவே உள்ளது. 2022 இல், இலங்கையின் 21 இராணுவப் பிரிவுகளில் 14 வடக்கில் நிலைகொண்டிருந்தன. இப்போது நிலைமை வேறுவிதமாக இருக்க முடியாது. வடக்கை ஏன் இராணுவத்தால் நிரப்ப வேண்டும்? இன்னும் ஏன் தமிழர்களை இப்படி வித்தியாசமாக நடத்துகிறார்கள்? அவர்கள் தமிழர்கள் என்பதால், அந்த அளவுகோலால் எப்போதும் சந்தேகப்படுவார்களா?
நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது வடக்கு மற்றும் கிழக்கில் திஸாநாயக்க மிகவும் மோசமாக இருந்தார். வெளிப்படையாக, அங்குள்ள மக்கள் அவரது சகோதரத்துவ பாடல் வரிகள் சந்தேகத்தின் அளவுடன் கருதுகின்றனர். பிக்குகள்  மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தின் மீது அவர் வெளிப்படையாகச் சார்ந்திருப்பது, அதிகாரப் பகிர்வுக்கான அவரது அர்ப்பணிப்பு இல்லாமை, ஊழல் மற்றும் வீண்விரயத்தை எதிர்த்துப் போராடும் தெற்கு முற்போக்குவாதிகளுக்கு (அதுவும் செய்யப்பட வேண்டும்) முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் அந்த இரு மாகாணங்களின் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருப்புகள்  தொடர்பாக  கவலையளிக்காதது எவ்வாறு?

ஜனாதிபதி திஸாநாயக்கவும் அவரது கட்சியும் அவர்களின் நீடித்த ஆதிகால விசுவாசங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று உண்மையான சமத்துவத்தின் தளத்தில் சிங்களம் அல்லாத இலங்கையர்களிடம் முறையிட முடியுமா?
அவ்வாறான அணுகுமுறை இல்லாத பட்சத்தில், வடக்கின் தீவிர -இராணுவமயமாக்கல் முடிவடையாது, மேலும் இலங்கை இராணுவ இறக்குமதி வளாகமானது அனைத்து இலங்கையர்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பற்றாக்குறை வளங்களை தொடர்ந்து நுகரும்.


காசா மீதான இஸ்ரேலின் போரின் தொடக்கத்தில், சமாதானத்துக்கான  யூதர்களின் ரப்பி ஜெசிகா ரோசன்பெர்க்  மினியாபோலிஸில் நடந்த பைடன் -நன்கொடையாளர்களின் கூட்டத்தில் குறுக்கீடு செய்து , “திரு. ஜனாதிபதிஅவர்களே , யூத மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால்,  நீங்கள் இப்போது போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்” என்று கோரிக்கை  விடுத்தார் . 1,000-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் கூச்சலிட்டனர். அவர்  அகற்றப்பட்டார்.
 2024 செப்டம்பர் வரை, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 41,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  2024ஆகஸ்ட் க்குள், போரினால் இஸ்ரேலுக்கு 67.3 பில்லியன் டொலர்கள் செலவானது. இஸ்ரேல்  பைத்தியக்காரத்தனமான போரை லெபனானுக்குள் விரிவுபடுத்துவது நிதி மற்றும் மனித செலவுகளை செங்குத்தாக உயர்த்தும்.


தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள்  இலங்கையர் என்ற தன்மையை ஏற்றுக்கொள்ள சிங்களவர்களால் முடியாதமையே , சுதந்திரத்தின் போது நாடு கொண்டிருந்த பெரும் ஆற்றலை உணரத் தவறியதற்கு முக்கிய காரணியாக இருந்தது. இராணுவச் செலவைக் குறைக்கவோ அல்லது வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளை இராணுவ மயமற்றதாக்கவோ  நாங்கள் விரும்பாததன் மூலம் இந்த இயலாமை தொடர்கிறது. இதுவே சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கும் விக்கிரமசிங்க  ஜனாதிபதி பதவியும் அகப்பட்டுக்கொண்டதும் துன்பகரமா னதாக   இருந்த இக்கட்டான  நிலையாகும்  .[ இரண்டு சமமான ஆபத்தானவற்றுக்கு  இடையில், இரண்டையும் எதிர்கொள்ளாமல்  கடந்து செல்ல முடியாது மற்றும் மற்றொன்றுக்கு பலியாகலாம்]. . அநுரகுமார திஸாநாயக்க நிர்வாகம் சிறப்பாக செயற்பட முடியுமா? சமூகத்திலும் அதன் சொந்த அணிகளிலும் ஆழமாக வேரூன்றியிருக்கும் தப்பெண்ணங்களைக் கடந்து, இலங்கைக்கு மிகவும் தீங்கு விளைவித்த இன-மத தீய சுழற்சியில் இருந்து வெளியேற முடியுமா?
பினான்சியல் டைம்ஸ்

https://thinakkural.lk/article/310354

பாதியைத் தாண்டிவிட்ட அனுர மீதியையும் தாண்டுவாரா?

1 month 1 week ago

கந்தையா அருந்தவபாலன்

இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றத்தின் ஆதரவின்றி அவரது அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகித்து ஆட்சி செய்ய முடியாது. அவரது ஆட்சிக்குத் தேவையான சட்டங்களை ஆக்குவதற்கு மட்டுமன்றி நிதியொதுக்கீடுகளுக்கும் நாடாளுமன்றத்தின் ஆதரவு அவசியமாகும். அதுவும் மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கும் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு வழமைக்கு மாறான மிகக் கடினமான பல தீர்மானங்களை அவர் எடுக்கவேண்டியுள்ளதால் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மட்டுமன்றி மூன்றில் இரண்டு சிறப்புப் பெரும்பான்மையும் அவருக்கு அவசியமாகும். குறைந்தது சாதாரண அறுதிப் பெரும்பான்மையான 113  ஆசனங்களை அவரது கட்சி பெற்றால் மட்டுமே அனுர தனது ஜனாதிபதி பதவியை நிலைப்படுத்த முடியும். அவ்வாறு பெறமுடியாத நிலை ஒன்று உருவாகுமானால் நாடு உறுதியற்ற ஒரு குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சி அல்லது அதனது வேட்பாளர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அளவைக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு அக்கட்சி பெறக்கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையளவை எதிர்வுகூற முடியாது. ஜனாதிபதிப் பதவியை வென்ற கட்சிக்குச் சார்பான கருத்துநிலை ஒன்று இயல்பாகவே மக்களிடத்து உருவாகும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் சதவீத அளவைவிட கூடுதலான அளவு நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்றாலும் அது நிச்சயமான ஒன்றெனக் கூறமுடியாது.

ஏனெனில் இலங்கையின் அரசியல், சமூக நிலைமைகள் மற்றும் தேர்தல் முறைமை என்பவற்றுக்கு அமைய  வெவ்வேறு தேர்தல்களில் வெவ்வேறு வகையான காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் என்பது இலங்கை முழுவதும் ஒரு தொகுதியாக கருதப்படும் தேர்தல் முறையாகும். இதில் உள்ளூர் அல்லது பிரதேசம் மற்றும் தனிநபர் சார்ந்த சிறப்புக் காரணிகளின் செல்வாக்கு மிகக் குறைவாகும். தேசிய நோக்கில் நாடு தொடர்பான காரணிகளின் தாக்கமே அதிகளவில் இருக்கும்.

உதாரணமாக 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் இனவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன மக்களின் தெரிவில் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தியது போல இவ்வாண்டுத் தேர்தலில் கடந்த கால ஆட்சியாளரின் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகள், பொருளாதாரப் பாதிப்புகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாலும் இலங்கையில் பல்லினத்தன்மை கொண்ட மக்கள் வாழ்வதாலும் அத்தேர்தலில் பிரதேச மற்றும் தனிநபர் சார்ந்த காரணிகள் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.

இனம், மதம், மொழி போன்ற காரணிகளுடன் வேட்பாளர் தொடர்பான தனிநபர் செல்வாக்கு, பிரதேச கட்சிகளின் செல்வாக்கு போன்ற பல காரணிகள் மக்களின் தெரிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் எல்லா மாவட்டங்களிலும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கே கூடுதலான வாக்குகள் கிடைத்தன. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் அக்கட்சிக்கே  அதிகளவு ஆசனங்கள் கிடைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கப் போவதில்லை. பதிலாக வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுக்கே அதிகளவு ஆசனங்கள் கிடைக்கும். அதேபோல, இத்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 2.57 ஆகும். இதற்கமைய இக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெறக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகும். ஆனால் அவ்வாறு இருக்கப்போவதில்லை. அதைவிடக் கூடுதலான உறுப்பினர்களை அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக் கொள்ளும்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்குகளில் அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகள் சுமார் 42% ஆகும். இதற்கமைய நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 97 உறுப்பினர்கள் அக்கட்சிக்கு கிடைக்கவேண்டும். இந்தளவு கிடைக்குமா? அல்லது இதைவிடக் கூட கிடைக்குமா? அல்லது இதைவிடக் குறையுமா? என்பது ஆய்வுக்குரியது. பொதுவாக இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதே வழமையாக உள்ளது. அந்த வகையில் அறுதிப் பெரும்பான்மையை (113) அல்லது மூன்றில் இரண்டு சிறப்புப் பெரும்பான்மையை (151) அக்கட்சிகள் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில் தேசிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை 97 ஐ விட  கணிசமான அளவு அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. இதில் இரண்டு முக்கிய காரணிகள் தேசிய மக்கள் சக்திக்குச் சார்பானவையாக உள்ளன. ஒன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் சார்பாக மக்களின் கருத்து நிலையில் ஏற்படும் மாற்றம். இதன்மூலம் அக்கட்சிக்கான வாக்குகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டாவது, மாவட்ட ரீதியிலான சிறப்பு ஒதுக்கீட்டு (போனஸ்) உறுப்பினர்கள். அதாவது ஒரு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் கட்சிக்கு ஒரு உறுப்பினர் ஒதுக்கப்பட்ட பின்னரே ஏனையவை விகிதாசார அடிப்படையில் பங்கிடப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 15 தேர்தல் மாவட்டங்களில் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் குறித்த அந்த 15 மாவட்டங்களிலும் அதேயளவு வாக்குகளை அக்கட்சி பெறுமிடத்து பங்கீட்டுக்கு மேலாக 15 உறுப்பினர்களைப் பெறக்கூடிய வாய்ப்புண்டு. இதேபோலவே தேசியப் பட்டியலிலிருந்தும் கூடிய உறுப்பினர்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வழிகளில் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலைமைகள் காணப்படுவதால் அறுதிப் பெரும்பான்மையை (113) விட சற்றுக் கூடுதலான உறுப்பினர்களை இலகுவாக பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவ்விடயத்தில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கான வாய்ப்புக் குறைவாகும். ஏனெனில் அவரின் கட்சி ஏழு மாவட்டங்களில் மட்டும் முதன்நிலை பெற்றிருப்பதுடன், அவை வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த மாவட்டங்களாக உள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இக்கட்சி முதன்மை பெறுவதற்கான வாய்ப்புக் குறைவு என்பதற்கப்பால் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இம்மாவட்டங்களில் மிகக் குறைவாகவே இருக்கும்.

இதுவரை இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் முதல் சுற்றிலேயே  50 % இலும் கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதிகள் தெரிவாகியிருந்தனர். ஆனால் இம்முறை 50% இலும் குறைவான வாக்குகளையே அனுர பெற்றிருந்தார். எனினும் அவரது நேர் எதிர்ப் போட்டியாளரை விட 13 இலட்சம் அதிகப்படியான வாக்குகளை அவர் பெற்றிருந்தார். இது 10% உயர்வானதாகும். 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய ராஜபக்‌ஷ தனது நேரெதிர் போட்டியாளரைவிட 14 இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தார். அத் தேர்தலிலும் இருவருக்கிடையில் 10% வேறுபாடே இருந்தது. எனினும் அதன்பின் 2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோதாபயவின் பொதுஜன பெரமுன கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 145 உறுப்பினர்களைப் பெற்றபோது சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி 54 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தது.

இக்குறைவுக்கு  ஏலவே சுட்டிக்காட்டியது போல அத்தேர்தலிலும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களே அதிகளவில் சஜித்துக்கு வாக்களித்திருந்ததன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் அப்பகுதிகளைச் சேர்ந்த பிரதேசக் கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்கள் அதிகம் கிடைக்காமல் போனமையாகும்.இதேபோன்ற ஒரு காட்சி  இம்முறையும் தோன்றினால் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றில் உறுதியான பலம் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எனினும் இந்த வாய்ப்பானது எதிரணிகளின் வியூகங்களால் மட்டுப்படுத்தப்படுவதற்கான நிலைமைகளும் உண்டு.

அவ்வியூகங்களில் முக்கியமானதொன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பாகும். உண்மையில் இவ்விரு கட்சிகளும் மோதகமும் கொழுக்கட்டையும் போன்றதுதான். இவ்விரண்டும் சேர்ந்து மோதகமாகவோ அல்லது கொழுக்கட்டையாகவோ அல்லது இன்னொரு பெயரிலோ ஒன்றிணைவதற்கான சாத்தியம் அதிகமுண்டு.  ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே எலும்புக்கூடாகிவிட்டது. ரணிலின் ஆட்சியைத் தக்கவைத்தவர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள். அவர்களில் கணிசமானவர்களும் முக்கிய புள்ளிகளும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் பின்னால் நின்றவர்கள். அவர்கள் எதிர்காலத்தில் என்ன முடிவெடுப்பார்கள் என்று கூறுவது கடினம். பலர் மீண்டும் தமது தாய்க்கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு திரும்பக்கூடும். எனினும் அக்கட்சியின் நிலை இறங்குமுகமாக இருப்பதால் ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும்போது அவர்களில் கணிசமானவர்களும் அதில் இணையக்கூடும். ஏனெனில் அவர்களுக்கு கட்சி, கொள்கை என்பவற்றைவிட பதவி முக்கியம். இவ்வாறான ஒரு இணைவு ஏற்பட்டாலும்  அல்லது கணிசமானவர்கள் தமது தாய்க்கட்சியான பொதுஜன பெரமுனவுடன் இணைந்தாலும் அது நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

புள்ளிவிபர அடிப்படையில் பார்த்தால் தேர்தலில் அனுர பெற்றது 42%, சஜித் பெற்றது 32%, ரணில் பெற்றது 17%. சஜித்தும் ரணில் தரப்பும் இணையும்போது அது 49% ஆக மாறும். இது அனுரவைவிட 7% அதிமானது. அதனால் நாடாளுமன்றில் எதிர்த்தரப்பு தேசிய மக்கள் சக்தியைவிட அதிகஆசனங்களைக் கைப்பற்றும் என வாதிடமுடியும். ஆனால் புள்ளிவிபரங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மைநிலையைப் பிரதிபலிப்பதில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியுடனான ஏனைய கட்சிகளின் கூட்டு அதிலும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனான கூட்டு அப்படியே தொடர்வது நிச்சயம் தேசிய மக்கள்

சக்தியின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோலவே ஜனாதிபதித் தேர்தலைப் போன்றல்லாது நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை, எதிர்காலத்தில் கூட்டுக்களில் மாற்றம் அல்லது புதிய கூட்டுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எதுவாயினும் தேசிய மக்கள் சக்தியுடன் பலமுள்ள வேறு கட்சிகள் கூட்டுச் சேர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகக் காணப்படுவதால் எதிர்த்தரப்புகளின் திரட்சி அக்கட்சிக்கு சவாலாக அமையலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியுள்ள இன்னொரு சவால், வேட்பாளர்கள் தொடர்பானது. எதிர்த்தரப்புகளால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது அவர்களைப் போன்ற பிரபலமானவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் புதியவர்களாக அல்லது ஒப்பீட்டு ரீதியில் மக்கள் மத்தியில் பிரபலம் குறைந்தவர்களாகவே இருக்கப்போகிறார்கள். இவ்வேட்பாளர்கள் படித்தவர்களாக, நேர்மையானவர்களாக இருக்கக்கூடும். ஆனால் தேர்தலில் வெல்வதற்கு அத்தகைமைகள் மட்டும் போதுமானவையல்ல.

ஏலவே சுட்டிக்காட்டியது போல இதில் தனிமனிதக் காரணிகள் அதிகம் செல்வாக்குச் செலுத்தக்கூடியன. ஒரு தொகுதியில் ஏலவே அரசியலில் பதவிகளை வகித்து கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் ஒருவரை அவர் எக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எதிர்த்து கூடிய வாக்குகளை புதிய ஒருவர் பெறுவது இலகுவான ஒன்றல்ல. மாற்றத்துக்காக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்ததுபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.

இவற்றுக்கு மேலாக அனுரவின் வெற்றியை விரும்பாத பலதரப்புகள் இச்சந்தர்ப்பத்தில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் காத்திருக்கின்றன என்பதையும் நிராகரிக்க முடியாது. உள்நாட்டைப் பொறுத்தமட்டில் நீண்டகாலமாக அரசியல் அதிகாரத்தையும் அதனுடன் இணைந்து அளவுக்கதிகமான வசதி வாய்ப்புகளையும் அனுபவித்த மேற்றட்டு அரசியல்வாதிகள், இவர்களுடன் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்ட முதலாளிகளும் நிறுவனங்களும், எல்லை கடந்து அனுரவின் கையில் அதிகாரம் செல்வதை விரும்பியிருக்காத இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் போன்றன நாடாளுமன்றத்தினூடாக அனுரவுக்கு குடைச்சல் கொடுத்து தமக்கு வசதியாக மீண்டும் பழைய நிலைக்கு நாட்டை கொண்டுவர முயற்சிப்பர் என்பதையும் நிராகரிக்க முடியாது.

இது போன்ற பல தடைகளையும் திரைமறைவு முயற்சிகளையும் எதிர்கொண்டே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமையால் நாடாளுமன்றத் தேர்தலில் எழக்கூடிய புதிய சவால்களையும் அது வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்க முடியும். இலங்கை என்ற வண்டிலின் எருதுகளை அனுரவிடம் கொடுத்த மக்கள் அவற்றின் நாணயக் கயிற்றையும் அவரிடம் கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என நம்பலாம். பாதியைத் தாண்டிய அனுர மீதியையும் தாண்டுவதற்கான வாய்ப்புகளே அதிகமுண்டு. இல்லையெனில் அதன்விளைவுகளை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிடும்.

https://thinakkural.lk/article/310088

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக் கட்சிகள்

1 month 2 weeks ago
07 OCT, 2024 | 12:57 PM
image

வீரகத்தி தனபாலசிங்கம் 

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்ததைப் போன்று பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றன. தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்த மக்களிடம் திசாநாயக்க தனது ஆட்சியை உறுதியான  முறையில் முன்னெடுப்பதற்கு வசதியாக தேசிய மக்கள் சக்தி பலம்பொருந்திய  அரசாங்கத்தை அமைப்பதற்கு  பாராளுமன்ற தேர்தலில் அமோகமான வெற்றியைத்  தருமாறு கேட்பார். 

 ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் நோக்கும்போது  பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மைப் பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்று முன்கூட்டியே மதிப்பீடுகளை வெளியிடுகிறவர்களும்  இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் கட்சிகளுக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் அந்த மதிப்பீடுகள்  பெருமளவுக்கு  பொருத்தமானவை அல்ல. அத்துடன்  இரு தேசிய தேர்தல்களிலும் ஒரே மாதிரியான காரணிகள் முழுமையாகச் செல்வாக்கு செலுத்துவதில்லை. 

ஜனாதிபதி திசாநாயக்க ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை என்றபோதிலும், மக்கள் மாற்றம் ஒன்றுக்காகவே அவருக்கு வாக்களித்தார்கள். மாற்றத்துக்கான வேட்பாளராக திசாநாயக்கவை அடையாளம் கண்டு வெற்றிபெறவைத்த மக்கள் அவர் உறுதியான அரசாங்கத்தை அமைத்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு  போதுமான ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு   வழங்குவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரின் கட்சியே அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது வழமையாகும். அதுவும் இந்த தடவை பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்பைக் கொண்டிருக்கும் பின்புலத்தில்  ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் கிடைத்த வாக்குகளையும் விடவும் கூடுதலான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன.

2019 ஜனாதிபதி தேர்தலில் 3.16 சதவீதமான  வாக்குகளைப் பெற்ற திசாநாயக்க இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஐம்பது சதவீதமான வாக்குகளைப் பெறுவதற்கு பிரமாண்டமான பாய்ச்சலை செய்வது சாத்தியமில்லை என்றே பரவலாக நம்பப்பட்டது. ஆனால் அரசியல் என்பது கணிதம் அல்ல சமூக விஞ்ஞானம் என்று  கூறிய திசாநாயக்க நாட்டில் பரவலாக தேசிய மக்கள் சக்திக்கு  அதிகரித்துவந்த பெரும்  ஆதரவின் அடிப்படையில் தனது வெற்றியில் திடமான  நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார்.

இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி திசாநாயக்க சாதித்துக்  காட்டியதைப் போன்று இலங்கையின்  முன்னைய வேறு எந்த அரசியல் தலைவரும் செய்ததில்லை என்று கூறினால் அது மிகையில்லை. முன்னைய ஜனாதிபதி தேர்தலில் தனக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதத்தை விடவும் 14 மடங்கு பாய்ச்சலை ஒரு ஐந்து வருடங்களுக்குள் செய்து அவர் சாதித்த  வெற்றி இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் வேறு பாகங்களிலும் கூட முன்னென்றும் கண்டிராததாகும் என்றுகூட  சில அவதானிகள் வர்ணிக்கிறார்கள்.

ஐக்கிய முன்னணி என்ற பழைய வாகனம்  இல்லாமல் இடதுசாரி கட்சியொன்றினால் தேர்தலில் வெற்றிபெற  முடியும் என்று காட்டிய பெருமையும் ஜனாதிபதி திசாநாயக்கவையே சாரும். கடந்த நூற்றாண்டில் மிகவும் பெரிய கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தே  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியைப்  பிடிக்கக்கூடியதாக இருந்தது. அந்த கட்சி ஒருபோதும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்ததில்லை. பழைய இடதுசாரி கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு சுதந்திர கட்சியுடனான கூட்டணியையே நம்பியிருந்தன.

அந்த இடதுசாரி கட்சிகள் எல்லாம் வரலாறாகிவிட்ட நிலையில் இன்று தேசிய மக்கள் சக்தி தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு சக்தியாக மாறியிருப்பது இலங்கை அரசியலில் ஒரு மைல்கல்லாகும். தேசிய மக்கள் சக்தியின்  கொள்கைகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், இங்கு அதன் தேர்தல் சாதனை மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ அல்லது ராஜபக்சாக்களின  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ பிரதான கட்சிகள் என்று இனிமேல் அழைப்பது பொருத்தமில்லை. அவை  தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக் கூடியவையாக இல்லை. கூட்டணி அமைப்பதற்கு இந்த கட்சிகளைத் தேடி மற்றைய கட்சிகள் வந்த காலம்போய் இப்போது மற்றைய கட்சிகளைத் தேடி  இவற்றின் தலைவர்கள் ஓடுகிறார்கள். ஆனால் அவர்களுடன் கூட்டணி அமைக்க குறிப்பிடத்தக்க செல்வாக்கு மிக்க வேறு எந்த கட்சியும் முன்வருவதாகவும்   இல்லை.

ஆளும் கட்சியாக தேசிய மக்கள் சக்தியும் பிரதான எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வெளிக்கிளம்பியிருக்கும் புதியதொரு அரசியல் கோலத்தையே இன்று காண்கிறோம். 

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனடியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேருவதற்கு அழைப்பு விடுத்தது. பிரேமதாசவும் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை சேர்த்துப்பார்க்கும்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற  எதிர்பார்ப்பே அதற்கு காரணமாகும்.

ஆனால், பிரேமதாச அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். விக்கிரமசிங்க தலைவர் பதவியில் இருந்து விலகினால் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை தாங்கள் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில தலைவர்கள் கூறினார்கள். இனிமேல் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று விக்கிரமசிங்க அறிவித்திருந்தாலும்,  கட்சியின் தலைமைத்துவத்தை உடனடியாக அவர் கைவிடுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை தவிர்ப்பதற்காகவே அவர் இணங்கமுடியாத அந்த நிபந்தனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முன்வைத்தனர் போலும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகளில் இருந்து  வெளியேறிவந்து ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர்கள்  பாராளுமன்ற தேர்தலில்  புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக கூறப்பட்டது  ஆனால்,  மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் வேறு பலரும்  மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டணி என்ற பெயரில் வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானத்திருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியும் வேறு குழுக்களுமே சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிகிறது.

ராஜபக்சாக்களை கைவிட்டு விக்கிரமசிங்கவுடன் சேர்ந்தவர்களினால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கணிசமான  அளவு வாக்குகளைப் பெற்றுக்ககொடுக்க முடியவில்லை. ராஜபக்சாக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்ததைப் போன்றே அவர்களுடன் சேர்ந்தவர்களும் மக்களினால் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிக்காட்டின.

இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் சிலர்  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர்  ருவான் விஜேவர்தன,  உதவி தலைவர் அகில விராஜ் காரியவாசம் போனறவர்களும் கூட  தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் தங்களது அரசியல் எதிர்கால வாய்ப்புக்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவின் வெற்றியை மாத்திரமே நம்பிக்கொண்டிருந்தார்கள். அவர் தோல்வியடைந்ததும்  அவர்களின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டுவிட்டன.

எதிரணிகளுக்குள் தோன்றியிருக்கும் குழப்பநிலை தேசிய மக்கள் சக்திக்கு முன்னரை விடவும் அனுகூலமான அரசியல் சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன. குறுகிய காலத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி திசாநாயக்க எதிரணிக் கட்சிகளை தடுமாற வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

இது இவ்வாறிருக்க, பொதுவாழ்வில் ஒரு தூய்மையைப் பேணவேண்டும் என்றும் மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும்  அக்கறை கொண்டவர்களை  பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு இந்த தடவை மக்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதுவரையில் அதிகாரத்தில் இருந்த சகல கட்சிகளும் ஊழல்தனமான அரசியல்வாதிகளினால் நிறைந்து கிடக்கின்றன.  அவர்களில் பெரும்பான்மையானவர்களை தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியவர்களை  வேட்பாளர்களாக நியமிப்பது அந்த கட்சிகளைப் பொறுத்தவரை சாத்தியமில்லை. 

ஆனால், தேசிய மக்கள் சக்தி அனேகமாக முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடிய வாய்ப்பு தாராளமாக இருக்கிறது. நல்ல கல்வித்தகைமையும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட இளம் வேட்பாளர்களை களமிறக்குவதில்  தேசிய மக்கள் சக்தி அக்கறை காட்டும் என்பது நிச்சயம். இதுகாலவரையில் அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்காத காரணத்தால் அத்தகைய  புதிய  வேட்பாளர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு சிரமமில்லை.

அதனால், மற்றைய கட்சிகளும் புதிய முகங்களை களத்தில் இறக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம். ஆனால் அந்த கட்சிகளை  விடவும் அது விடயத்தில்  தேசிய மக்கள் சக்தி  பெருமளவுக்கு அனுகூலமான நிலையில் இருக்கிறது.   

பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத ஒரு கூட்டமாகவே மக்கள் பார்க்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சியின்போது ராஜபக்சாக்களும் அவர்களுடன் இருப்பவர்களும் மாத்திரமல்ல, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்கு போகவேண்டும் என்று மக்கள் குரலெழுப்பியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 

மிகவும் சுலபமாக குறுகிய காலத்திற்குள்  பெருமளவு சொத்துக்களை குவிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக  இன்று அரசியல் விளங்குகிறது. அந்த கெடுதியான அரசியல் கலாசாரத்தை  மாற்றுவததை நோக்கிய  முதற்படியாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மக்களினால் நிச்சயமாக பயன்படுத்தமுடியும்.

இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் ஐக்கியம் பற்றி உரத்துப்பேசிய வண்ணம்  தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டு போகின்றன. எந்தவொரு கட்சிக்குள்ளும்  ஒழுங்கு  கட்டுப்பாடு என்பது மருந்துக்கும் கிடையாது. கட்சிகளின் உண்மையான நிலைப்பாட்டை எவர் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் மக்கள் தடுமாறுகிறார்கள். 

ஏற்கெனவே சிதறுப்பட்டுக் கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒன்றுபடுவதற்கான எந்த சாத்தியத்தையும் எதிர்பார்க்க முடியாது. தலைவர்கள் எனப்படுவோரின்  அகம்பாவமே தலைதூக்கி நிற்கிறது.

இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கூறுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற இயக்கத்திற்குள் தேர்தல் முடிந்து இரு வாரங்களுக்குள்ளாகவே பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில்  முரண்பாடுகள் தோன்றிவிட்டன.

இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற விபரீதமான முனைப்புடன் செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் உள்ள சில குழுக்களும் தனவந்தர்களும் வடக்கு, கிழக்கு அரசியலை ஊழல்தனமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 

அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு கட்டுறுதியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது.

காலம் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் உருப்படியான எந்த  அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல்  வெறுமனே தீவிர தேசியவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். 

தென்னிலங்கையில் மக்கள் பாரம்பரியமான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதைப் போன்று வடக்கு, கிழக்கிலும் ஒரு நிராகரிப்பு காலத்தின் தேவையாகிறது.

ஒரு மாற்றமாக பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது குறித்து தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல.

https://www.virakesari.lk/article/195674

"உறவை மறவாதே" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு]

1 month 2 weeks ago
"உறவை மறவாதே"
[நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு]
 
 
"உறவை மறவாதே நட்பைக் குலைக்காதே
உலகம் உனதாகும் கைகள் இணைந்தாலே!
உயிரும் உடலுமாக ஒன்றி வாழ்ந்தாலே
உயர்ச்சி பெறுவாய் மனிதம் காப்பாற்றுவாய்!"
 
"தேர்தல் வருகுது மனத்தைக் குழப்பாதே
தேசம் ஒன்று உனக்கு உண்டே!
தேய்வு அற்ற உறவைச் சேர்த்து
தேசியம் காக்க ஒன்றாய் இணை!"
 
"ஆதி மொழி பேசும் மனிதா
ஆசை துறந்து அர்ப்பணிப்பு செய்யாயோ?
ஆவதும் உன்னாலே அழிவதும் உன்னாலே
ஆறஅமர்ந்து ஒன்றாய் நின்றால் என்ன?"
 
"உறவை மறவாதே உண்மையைத் துறக்காதே
உலகம் உனதாகும் உள்ளம் திறந்தால் !
உதவும் கரங்கள் வெளிச்சத்தைக் கொண்டுவரட்டும்
உவகை கொண்டு எல்லோரையும் அணைக்கட்டும்!"
 
"யாதும் ஊரே யாவரும் கேளிர்
அன்று சொன்னான் எமக்கு வேதமாய்!
யாவரும் ஒன்றாய்க் கூடி இருந்து
இன்று ஒன்றாய் களத்தில் நிற்போம்!"
 
"கூட்டுக் குடும்பம் கூடி மகிழவே
கூத்து அடித்து ஆடி மகிழவே!
கூழும் கூட அமுதம் ஆகும்
கூடிக் குலாவி ஒன்றாய் இருந்தால்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
462078574_10226468082831132_5465838699560409480_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=K4wTlzR6oVEQ7kNvgGSxrzr&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AqIFKvfp8ZQUwRsOpR89zE5&oh=00_AYAeBcy4iMverfQBe4uw0nYLDE7xN6l2jfil8UZkWyxm4g&oe=67094FA9 462153873_10226468082871133_4285999921006397472_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=gXGBAbunJVoQ7kNvgErt5Rp&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AqIFKvfp8ZQUwRsOpR89zE5&oh=00_AYDKUEskB_lReKY9g3nd5t6cvSwDSI0g2HV_uJdwJNnimw&oe=6709395A 462261934_10226468082911134_8523871574458972234_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=Md7x04GsGhUQ7kNvgH3OW5P&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AqIFKvfp8ZQUwRsOpR89zE5&oh=00_AYCHpXtrICM2-S4jSEl1ozmHoi1cu-ZDP18xR6GwQNgObQ&oe=67093BCD
 
Checked
Thu, 11/21/2024 - 10:51
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed