அரசியல் அலசல்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பெருமளவு வாக்குகளை யார் பெறுவார்?

2 months 1 week ago

Published By: DIGITAL DESK 7   09 SEP, 2024 | 09:22 AM

image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில்  ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய அதன் ' மத்திய செயற்குழு ' அதற்கான தீர்மானத்தை எடுத்தது. தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை  என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்.

சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான அரசியல் கட்சிகள் மத்தியில் தமிழரசு கட்சியே ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக இறுதியாக அறிவித்த கட்சியாகும்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளாகும். எனவே பிரேமதாசவுக்கு முக்கியமான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என்பது தெளிவானது.

ஜனாதிபதி தேர்தல் அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெருமளவு வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தனதாக்கிக்கொள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்  சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசமானவர் என்ற நற்பெயரை நீண்டகாலமாகக் கொண்டிருப்பவர் என்பதும் தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவை அனுபவித்தவர் என்பதுமே அதற்கு காரணமாகும். மேலும், அவரின் தலைமையிலான அரசாங்கங்களில் சில சிறுபான்மைச் சமூகக்கட்சிகள் பங்காளிகளாக இருந்தன. அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் வெளியேறிய செல்வாக்குமிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறார்கள்.

சஜித் பிரேமதாச 

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் 2020 பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டன. அவை தொடர்ந்தும் எதிரணியிலேயே இருந்துவந்தன. ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டபோது இந்த கட்சிகள் ரணிலின் பக்கத்துக்கு வந்துவிடும் என்று பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனால் சிறுபான்மைச் சமூகங்களின் பெருமளவு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரணில் முகாம் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தது.

சிறுபான்மைச் சமூகங்களின் கட்சிகள் ஜனாதிபதியின் பக்கத்துக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நடைமுறையில்  சாத்தியமாகவில்லை. முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியும்  அணி மாறுவதற்கு பதிலாக சஜித் பிரேமதாசவுடன் பக்கத்திலேயே தொடர்ந்தும் இருந்தன. இந்த கட்சிகள் பிரேமதாசவுடன் தனித்தனியாக உடன்படிக்கைகளைச் செய்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டன. இப்போது தமிழரசு கட்சியும் அவருடன்  ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளாமலேயே அவருக்கு அதன் ஆதரவை அறிவித்திருக்கிறது. எனவே பிரேமதாச இந்த கட்சிகளின் உதவியுடன் தமிழ்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளின் மிகவும் பெரும்படியான வாக்குகளை பெற்றுக்கொள்வார் என்று தோன்றுகிறது.

ஆனால், இந்த சிறுபான்மைச் சமூக அரசியல் கட்சிகளின் ஆதரவின் விளைவாக தமிழர்களினதும் முஸ்லாம்களினதும் வாக்குகள் மீது பிரேமதாச ஒரு ஏகபோகத்தைக் கொண்டிருப்பார் என்று அர்த்தமாகிவிடாது. கடந்த காலத்தில் செய்தததைப் போன்று இந்த கட்சிகளினால் தங்களது மக்களின் வாக்குகளை தாங்கள் ஆதரிக்கின்ற வேட்பாளருக்கு மொத்தமாக பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பது நிச்சயமில்லை.

தமிழ், முஸ்லிம் வாக்காளர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையினருக்கு உறுதியான சொந்த அபிப்பிராயங்கள் இருக்கி்றன என்பதையும் அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் என்பதையும் தெளிவான குறிகாட்டிகள் மூலம் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. கட்சிகளின் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின் போதிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கும் நேர்மறையான படிமம் அவருக்கு சார்பாக வாக்காளர்கள்  மீது செல்வாக்கைச் செலுத்தும் சாத்தியம் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, தமிழர்கள்,  முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கென்று சொந்த ஆதரவுத்தளம் ஒன்றும்  இருக்கிறது.  செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஏ.எச்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகியவை விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு புறம்பாக தனிப்பட்ட  சில தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும்  அவரை ஆதரிக்கிறார்கள்.

இந்த கட்சிகளின்  ஆதரவுக்கு மத்தியிலும், சிறுபானமைச் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலாக சஜித் பிரேமதாச அனுகூலத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஜனாதிபதியை ஆதரிக்கின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் விட பிரேமதாசவை ஆதரிக்கும் அந்த சமூகங்களின் கட்சிகள் பெரியவை என்பதே அதற்கு காரணமாகும். இருந்தாலும், இந்த கட்சிகள் வழங்கும் ஆதரவு ஒன்றும்  ஒரே சீராக  கெட்டியானவை அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட செல்வாக்குமிக்க சில உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளின் ஆணைக்கு பணியமறுத்து விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை அறிவித்திருக்கிற்ர்கள்.

அநுரா குமார திசாநாயக்க

இத்தகைய பின்புலத்தில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய அரசியல் அணியாக  ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) தலைமையிலான  தேசிய மக்கள் சக்தி இருக்கிறது.ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி அதன் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரா குமார திசாநாயக்காவுக்கு சிறுபான்மை இனத்துவ கட்சிகளின் ஆதரவை நேரடியாக நாடவில்லை.

பதிலாக அது  தமிழ் மக்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் நேரடியாக நேசக்கரத்தை நீட்டி ஆதரவைக் கோருகிறது.

தமிழ், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருந்து உறுப்பினர்களைச் சேர்த்திருக்கும் ஜே.வி.பி./  தேசிய மக்கள் சக்தி கிழக்கில் காத்தான்குடி உட்பட தமிழர்கள், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட பகுதிகளில் அதன் கட்சி அலுவலகங்களையும் திறந்திருக்கிறது. சஜித் அல்லது ரணில் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட அநுரா குமார திசாநாயக்கவும் குறிப்பிடக்கூடிய அளவு தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெறுவார் என்றே தோன்றுகிறது.

இத்தகைய பின்புலத்தில் வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடிய பாங்கு ( Potential voting pattern ) குறித்து கவனத்தை செலுத்துகிறது. குறிப்பாக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகள் பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வழங்கும் ஆதரவு மீது கட்டுரை பிரத்தியேக கவனத்தை செலுத்துகிறது. தமிழ் வாக்காளர்களைப் பற்றியும் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் எவ்வாறு வாக்களிக்கக்கூடும் என்பதை விளக்குவதே நோக்கம்.  தமிழர்களின் வாக்குகளில் பெருமளவானவற்றை சஜித் பிரேமதாச பெறுவாரா என்பதே கேள்வி.

மலையக தமிழர்கள்

மலையகத் தமிழர்கள் என்று அறியப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள் மூன்று இனத்துவச் சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியிலும் சிறிய சனத்தொகையைக் கொண்டவர்கள்( 4.1சதவீதம் ) என்பதுடன் இலங்கையில் நான்காவது பெரிய இனக்குழுவினர். நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வாழும் அவர்கள் பதுளை, கண்டி, மாத்தளை,  கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் சற்று பெரும்படியான அளவில் வசிக்கிறார்கள்.

தோட்டத் தொழிலாளர்களின் மிகப்பெரிய தொழிற் சங்கமாகவும் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சியாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விளங்குகிறது.2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்துவருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கடந்த பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமானும் மருதுபாண்டி இராமேஸ்வரனும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டனர். காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார். அதன் தலைவரான செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகிக்கிறார்.

தோட்டத் தொழிலாளர்களின் தினச்சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்தமை, முறையான வீடுகளுடன் கூடிய சமூகக் குடியிருப்புக்களை அமைப்பதற்கான திட்டத்தின் முன்னே்டியாக லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு அவற்றை உடைமையாக்கியமை, ' அஸ்வேசும ' வறுமை நிவாரணக் கொடுப்பைவை தோட்டத் தொழிலாளர்களுக்கும் விஸ்தரித்தமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக அண்மைக்காலத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுவில் மலையகத் தமிழர்களுடனும் குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடனும் தனனை நேசமானவராக்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் அவரை உறுதியாக ஆதரிக்கிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி 

மலையக தமிழ் மக்களின் முக்கியமான கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விளங்குகின்ற போதிலும், பாராளுமன்ற ஆசனங்களைப் பொறுத்தவரை அது ஏகபோகத்தைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், தமிழ் முற்போக்கு கூட்டணியே பாராளுமன்றத்தில் பெரிய எண்ணிக்கையில்  மலையக தமிழ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.  மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வி. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றை அங்கத்துவக் கட்சிகளாகக் கொண்டதே தமிழ் முற்போக்கு கூட்டணி. அதன் தலைவராக மனோ கணேசன் இருக்கின்ற அதேவேளை இணைச் செயலாளர்களாக திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் உள்ளனர்.

2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் போட்டிரடடுைஆறு ஆசனங்களைக் கைப்பற்றியது. நுவரெலியாவில் இருந்து மூவரும் பதுளை, கண்டி, கொழும்பு மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் தெரிவாகினர். பதுளையில் இருந்து தெரிவான உறுப்பினர் அரவிந்தகுமார் 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அவர் இப்போது ஒரு இராஜாங்க அமைச்சர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியில் தொடர்ந்து  இருந்து வருகின்றது என்றாலும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் அணைப்புக்குள்  அதற்குள் அதிருப்தியின் குமுறல்களும் வெறுப்புணர்வான் முணுமுணுப்புகளும் இருந்தன. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்போது தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பக்கத்தில் இருந்து ரணில் பக்கத்துக்கு மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாக பரவலாக ஊகங்கள் கிளம்பின. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள்.  முதலாவது நுவரேலியா, இரண்டாவது கொழும்பு. நுவரேலியாவில் தேர்தல்களின்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தொழிலாளர் தேசிய சங்கம் - மலையக மக்கள் முன்னணி கூட்டும் எதிரெதிராகவே போட்டியிடுகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் இரு தரப்புமே இரண்டுக்கு மூன்று என்ற விகிதத்தில் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொள்கின்றன. உதாரணமாக, 2020 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு இரு ஆசனங்களும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு (  தொழிலாளர் தேசிய சங்கம் - மலையக மக்கள் முன்னணி கூட்டு ) மூன்று ஆசனங்களும் கிடைத்தன. எதிரெதிராக போட்டியிடுவதன் மூலம் மாத்திரமே  இரு தரப்பினரும் கூடுதல்பட்ச ஆசனங்களை பெறக்கூடியதாக இருக்கிறது 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் கூட்டாக ரணிலை ஆதரித்தால்,  அவர்கள் பாராளுமன்ற தேர்தலிலும் இணைந்தே போட்டியிடவேண்டியிருக்கும். அத்தகைய ஒரு சூழ்நிலை இரு தரப்பினருக்கும் குறைந்தளவு ஆசனங்களே கிடைப்பதற்கு வழிவகுக்கும். தவிரவும்,  நன்றாக நிறுவனமயமாக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இழப்பில் கூடுதல் ஆசனங்கள் பெறுவதை உறுதிசெய்யக்கூடியதாகவும் இருக்கும். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த கணிப்பீடே ரணில் பக்கத்துக்கு மாறுவதை விடவும் சஜித்துடன் தொடர்ந்து இருப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியை நிர்ப்பந்தித்தது.

மனோ கணேசன்

இதே காரணம் கொழும்பில் மனோ கணேசனுக்கும் பொருந்துகிறது. கொழும்பு மாவட்டத்தில் மிகவும் பெரிய அளவில் வாக்குகளைக் கைப்பற்றி பல பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கான தகுதியைக் கொண்ட ஒரு கட்சியில் இருந்து அல்லது கூட்டணியில் இருந்தே போட்டியிட வேண்டிய தேவை மனோ கணேசனுக்கு இருக்கிறது. அவ்வாறு செய்தால்தான்  தமிழ் வாக்குகளில்  மாத்திரம்  தங்கியிருக்கும் மனோ கணேசன் ஒப்பீட்டளவில் குறைந்தளவு விருப்பு வாக்குகளைபை் பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வாகக்கூடியதாக இருக்கும்.  கடந்த காலத்தில் மனோ ஐக்கிய தேசிய கட்சியுடன் அணிசேர்ந்து நின்றார். ஆனால்,2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் குறைந்தளவு வாக்குகளையே பெறப்போகின்றது என்பதை உணர்ந்த அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கத்துக்கு  சென்றார். அவவாறு செய்ததன் மூலம் கொழும்பில் அவர் வெற்றிபெற்றார்.

எனவே கொழும்பு மாவட்டம் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்ற அபிப்பிராயம்  மனோ கணேசனுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இருக்கின்றது போன்று தெரிகிறது. கொழும்பு மாவட்டத்தில் சஜித்தும் அநுரா குமாரவும் கூடுதல் எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதனால்  பொதுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் குறிப்பாக மனோ கணேசனும் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்கவும் பிறகு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி / ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடவும் விரும்பியிருக்கிறார்கள். 56 அம்ச சாசனம் ஒன்றில் சஜித்துடன் கைச்சாத்திட்ட அவர்கள் அவரை ஆதரிக்க உறுதியளித்திருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க

சஜித்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வழங்கும் ஆதரவு எதிர்மறையான விளைவையும் கொண்டிருந்தது. அதன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகத் திரும்பி ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டு அவரை ஆதரிக்கிறார். 2020 ஆம் ஆண்டில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ் முறாபோக்கு கூட்டணியில் இப்போது நான்கு உறுப்பினர்களே இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் இலங்கை தேசிய தோடடத் தொழிலாளர் சங்கத்தின் செல்வாக்குமிக்க செயலாளர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் வடிவேலின் ஆதரவின் வடிவில் ரணிலுக்கு ஒரு ஊக்கம் கிடைத்தது.2020  ஆம் ஆண்டில் ரணிலைக் கைவிட்டு சஜத்துடன் இணைந்துகொண்ட சுரேஷ் பிறகு அவருடனும் முரண்பட்டுக்கொண்டார். மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வந்த அவர் தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதனால் மலையக தமிழ் வாக்காளர்களைப  பொறுத்தவரை ரணில் ஒரு வலிமையான நிலையில் இருப்பதாக தோன்றியது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவும் அரவிந்தகுமார், வேலு குமார் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. சஜித்தை விடவும் கூடுதலான இந்திய தமிழர்களின் வாக்குகளை ரணில் பெறுவது மிகவும  சாத்தியம்.

இலங்கைத் தமிழர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய இனத்தவர்களாக ( 11.1 சதவீதம் ) இருப்பதுடன் மூன்று சிறுபான்மை இனத்தவர்களில் அவர்களே பெரிய சனத்தொகையைக் கொண்டவர்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களே பெரும்பான்மை இனத்தவர்கள். திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய இனத்தவர்களாகவும் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பெரிய இனத்தவர்களாகவும் அவர்கள் விளங்குகிறார்கள்.கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவர்கள் கணிசமான ஒரு சிறுபான்மையினராக இருக்கிறார்கள். 

அண்மைக்காலம் வரை இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் அணியாக தமிழ் தேசிய கூட்டயைப்பே இருந்தது. 2020 பாராளுமன்ற தேர்தலில் அதற்கு பத்து ஆசனங்கள் கிடைத்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்து அதன் மூன்று அங்கத்துவ கட்சிகளில் ரெலோவும் புளொட்டும் இப்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற புதிய அணியை அமைத்திருக்கின்றன. கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசு கட்சி இப்போது தனியாக செயற்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழரசு கட்சிக்கு ஆறு பேரும் ரெலோவுக்கு மூன்று பேரும் புளொட்டுக்கு ஒருவரும் இருந்தனர்.

தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஐந்து அங்கத்துவ கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று அழைக்கப்படும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றன. 69 வயதான அரியநேத்திரன்  2004  ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் தமிழரசு கட்சியில் இருந்தே தெரிவு செய்யப்பட்டார். அரியநேத்திரனை ஏழு தமிழ்க்கட்சிகள் ஆதரிக்கின்ற போதிலும்,  இவற்றில் எத்தனை கட்சிகள் அந்த ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகின்றன என்பது சந்தேகம் நிலவுகிறது. சில கட்சிகள் இரகசியமாக ரணிலை ஆதரிக்கின்றன என்று சந்தேகிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் அப்போது ஐக்கியமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை அல்ல அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்தது. இருந்தாலும், பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மாத்திரமே டலஸுக்கு தங்கள் வாக்குகளை அளித்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அந்த நேரத்தில் தெரிவித்தன. எஞ்சியவர்கள் ஒன்றில் ரணிலுக்கு வாக்களித்தார்கள் அல்லது தங்கள் வாக்குகளை பழுதாக்கினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணிலே பகிடியாக கூறினார்.

தமிழரசு கட்சி

அதேவேளை, பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்கள் தனியொரு பெரிய கட்சியாக விளங்கும் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு அதன் ஆதரவை அறிவித்திருக்கிறது. இது சஜித்துக்கு மனத் தைரியத்தை கொடுத்திருக்கின்ற அதேவேளை ரணிலுக்கு பெரிய தாக்கமாகப் போய்விட்டது  ஆனால் தமிழரசு கட்சி இப்போது இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. ஒரு முகாம் சிவஞானம் சிறீதரனை ஆதரிக்கின்ற  அதேவேளை அடுத்த முகாம் மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரனை ஆதரிக்கிறது. மேலும்  தமிழரசு கட்சி தற்போது ஒரு சட்டச்சிக்கலிலும்  அகப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டவாறு தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு திர்மானித்திருக்கிறது. தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினரான அரியநேத்திரனை ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறும் மத்திய செயற்குழு கேட்டிருக்கிறது. அந்த குழு தீர்மானத்தை நிறைவேற்றிய போதிலும், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ப உறுப்பினர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தமிழரசு கட்சிக்குள் செல்வாக்குமிக்க ஒரு பிரிவினர் பிரேமதாசவுக்கு மேலாக அரியநேத்திரனை ஆதரிப்பார்கள் என்று தோன்றுகிறது. கடந்த வாரம் இந்த பத்தியில் குறிப்பிட்டதைப் போன்று பாரதூரமாக பிளவுபட்டிருக்கும் தமிழரசு கட்சி நிரந்தரமான ஒரு உடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பாக்கியசெல்வம் அரியநேத்திரன்

தமிழரசு கட்சியின் உள்ளக நெருக்கடி பிரேமதாசவையும் கடுமையாக பாதிக்கும். அவரை அந்த கட்சி ஐக்கியமாகவும் உற்சாகமாகவும் ஆதரிக்க இயலாமல் போகும். மேலும் கட்சிக்குள் இருக்கும்  அரியநேத்திரன்  ஆதரவுச்சக்திகள் பிரேமதாசவை தீவிரமாக எதிர்க்கும்.  அரியநேத்திரனுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டங்கள் தமிழரசு கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஏற்கெனவே கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்  தங்களது வழிகாட்டல்களை பின்பற்றிவந்திருக்கிறார்கள் என்று தமிழரசு கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அடிக்கடி கூறிவந்திருக்கிறார்.  அதற்கு சான்றாக 2010  தேர்தலில் சரத் பொன்சேகாவையும் 2015 தேர்தலில் மைத்திரபால சிறிசேனவையும் 2019 தேர்தலில் சஜித் பிரேமதாசவையும் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரித்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். தமிழரசு கட்சியின் அழைப்புக்கு சாதகமான முறையில்  தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில்  செப்டெம்பர் 21  ஆம் திகதி பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

தமிழரசு கட்சி ஒரு சிங்கள வேட்பாளருக்கு மேலாக  இன்னொரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கேட்பதற்கும்   தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஒருவருக்கு மேலாக ஒரு சிங்களக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் மனதிற் கொள்ளவேண்டும்.

சஜித்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழரசு கட்சி எடுத்த தீர்மானம் ரணிலுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 

தமிழரசு கட்சி சஜித்தை ஆதரிக்கின்ற அதேவேளை ஏனைய ஏழு தமிழ் கட்சிகள் அரியநேத்திரனை ஆதரிக்கும் நிலையில் ரணிலின் நிலை சற்று பரிதாபத்துக்குரியதே.

டக்ளஸும் பிள்ளையானும் 

ரணிலைப் பொறுத்தவரை,  தனது சொந்த ஐக்கிய தேசிய கட்சியை தவிர தமிழ் கட்சிகளின் ஆதரவு என்று வரும்போது தற்போது நிச்சயமாக இருப்பது அவரது அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினதும் ஆதரவேயாகும்.

தேவானந்தா அமைச்சரவை அமைச்சராகவும் பிள்ளையான் இராஜாங்க அமைச்சராகவும் இருக்கிறார்கள். தேவனந்தாவின் கட்சி இரு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகள் பிளளையானுக்கே கிடைத்தன. தேவானந்தாவுக்கு வடக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஆனால் நிலையான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து 2018 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தற்போது ஒரு இராஜாங்க அமைச்சர்.  அவரும் ரணிலையே ஆதரிக்கிறார். 2020 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களில் வெற்றிபெற்ற ஒரேயொருவரான அங்கஜன் இராமநாதனும் ரணிலை ஆதரிக்கிறார். 2020 தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகள் அங்கஜனுக்கே கிடைத்தன.

ரணில் முகாமின் நம்பிக்கை

ரணிலுக்கான தமிழ்க்கட்சி ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் இலங்கை தமிழர்கள் தேர்தல் தினத்தன்று ரணிலுக்கு மிகவும் ஆதரவாக நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை  அவரது முகாமுக்கு இருக்கிறது. தமிழ்க்கட்சிகள் ஆதரவு அளிக்காவிட்டாலும் ரணில் தமிழ் மக்களின் ஆதரவை நேரடியாகப் பெற்று வாக்குகளைப் பெறமுடியும் என்று அந்த முகாம் கருதுகிறது. வடக்கு,  கிழக்கு தமிழர்கள் மத்தியில் ரணிலுக்கு இருக்கிற நேர்மறையான படிமத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்த நகர்வு வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் எனலாம்.

https://www.virakesari.lk/article/193187

தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன்

2 months 1 week ago

தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன்
September 9, 2024

 

ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த முடிவு அரசியலில் கடுமையான வாதப் பிரதி வாதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுவின் விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டவா் சுமந்திரன் என்பதில் சந்தேகம் இல்லை.

என்ன அடிப்படையில், எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்று வரையில் தமிழரசு கட்சியின் சார்பில் யாருமே தெளிவான பதிலை கூறவில்லை. தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருந்த பிளவுகளையும் இது தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய அரசியலில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தன. ஆனால் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதில் ஏற்பட்டிருந்த பிளவுகளும், அதில் ஒரு தரப்பினர் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கே ஆதரவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்ததும் உடனடியான தீர்மானம் ஒன்றை தமிழரசு கட்சியால் எடுக்க முடியாமல் போனமைக்கு காரணமாக  இருந்தது.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின் னர் அவற்றை ஆராய்ந்து அதில் யாராவது சமஷ்டிக்கு சமமான யோசனைகளையும் முன்வைக்கின்றார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற முடிவை தமிழரசுக் கட்சி எடுக்கும் என்று சுமந்திரன் ஏற்கனவே கூறியிருந்தார். இதனைத் தீா்மானிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலைமையில் ரணில் விக்கிரம சிங்க, சஜித் பிரேமதாசா, அநுரகுமார திசநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞாபனங்கள் வெளி வந்துள்ளன. தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த திங்கட்கிழமை வெளிவர இருந்த நிலைமையில், ஞாயிற்றுக்கிழமை வவுனி யாவில் கூடிய தமிழரசு கட்சியின் மத்திய குழு அவசரமாக தன்னுடைய முடிவை அறிவித்தது.

சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற அவா்களது முடிவுக்கு என்ன காரணம் என்பது தெளிவாக கூறப்படவில்லை. பிரதானமான மூன்று வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுமந்திரன் கூறியிருக்கின்றார். ஆனால் சஜித் பிரேமதாசாவின் அறிக்கையில் அவ்வாறு என்ன விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை சுமந்திரன் விளக்க வில்லை.அதனை விட இந்தத் தேர்தல் விஞ்ஞா பனங்களை ஆராய்ந்து தமிழரசுக் கட்சியின் முடிவை எடுப்பதற்கு யார் பொறுப்பாக இருந்தார்கள் என்பது தொடர்பில் அவர் எதுவும் தெரி விக்கவில்லை. இதற்காக ஒரு குழுவைத் தமிழரசுக் கட்சி அமைத்திருந்தது. ஆனால், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூட இது குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற கருத்தைத்தான் முதலில் தெரிவித்திருந்தாா். 24 மணி நேரத்துக்குள் அவா் தனது முடிவை மாற்றிக்கொண்டாா் என்பது வேறு விடயம்!

இதன் மூலம் ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, இது தமிழரசுக் கட்சியின் முடிவு என்பதைவிட, இது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்பதுதான் அது!சஜித் பிரேமதாசாவுக்கு தமிழரசு மட்டும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. பல முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள், வடக்கு கிழக்கு தளமாகக்  கொண்டுள்ள   சிறிய     தமிழ் கட்சியில் உள்ள பலரும் கூட அவருக்கு ஆதரவை தெரிவித்து இருந்தனர். அவ்வாறு ஆதரவை தெரிவிக்கும் போது, அது தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி, அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளையும் கையொப்ப மிட்ட பின்னரே ஆதரவை அவா்கள் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்கள்.

ஆனால் தமிழரசு கட்சி மட்டும் எந்த ஒரு பேச்சு வார்த்தைகளையும் நடத்தாமல் புரிந்து உணர்வுடன்படிக்கை எதுவும் செய்யப் படாமல் தங்களுடைய ஆதரவை பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. அதாவது ஒரு வெற்றுக்கா சோலையில் கையொப்பமிடுவதைப் போன்று ஒரு முடிவைத்தான் தமிழரசுக் கட்சி எடுத்துள்ளது.

தமிழரசு கட்சியின் இந்த அவசர முடிவுக்கு என்ன காரணம் என்ற கேள்வி பலராலும் முன் வைக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கொழும்பு வந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பல கட்சிகளையும் சந்தித்திருந்தாா். நான்கு பிரதான ஜனாதிபதி வேட்பாளா்களுடனும் பேச்சுக்களை நடத்தி, அவா்களுடைய அணுகுமுறைகளை நாடி பிடித்துப் பாா்த்தாா். அந்த வரிசையில், தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் அவா் பேசினாா். அனைத்துக் கட்சிகளையும் அவா் ஒன்றாகவே சந்தித்தாா்.

இந்தப் பேச்சுக்களின் போது, தமிழ் மக்கள் தமது வாக்குகளை வீணடிக்காது பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகா் வலியுறுத்தியிருந்ததாக தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொது வேட்பாளரை அவா் திட்டவட்டமாக நிராகரித்த தாகவும் தெரிகின்றது.

இந்தப் பேச்சுக்களைத் தொடா்ந்து, “வெற்றி பெறக் கூடிய, நீங்கள் எதிர்காலத்தில் பேச்சு வார்த்தை நடத்தக்கூடிய ஒவருக்கு உங்களுடைய ஆதரவை வெளிப்படுத்துங்கள்” என்று இந்திய தரப்பு சொன்னதாக ஒரு தகவல் உள்ளது. காலம் தாழ்த்தாது இந்த முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் இந்திய தரப்பு கூறி இருந்ததாக தகவல். காலம் கடத்தப்படும் நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே பொது வேட்பாளருக்கான ஆதரவு அதிகரிப்பதையும் இந்தியத் தரப்பு அவதானித்திருக்கலாம்.

கடந்த காலங்களில் தேர்தல் இடம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னா்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அதன் தலைவராக இருந்த சம்பந்தன் அறிவித் திருக்கின்றார். அந்த வகையில் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும் நிலைமையில் தங்களு டைய முடிவை அறிவிக்கலாம் என்று ஒரு நிலைப்பாட்டில் தான் தமிழரசுக் கட்சியும் இருந்ததாக கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் வருகை, அவா் நடத்திய பேச்சுக்கள் என்பன தமிழரசு தன்னுடைய நிலைப்பாட்டை அவசரமாக அறிவிக்கத் துண்டி யதாக தமிழ் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்துக்கு 25 பேர் ஆதரவளித்தனர். பொது வேட்பாளருக்கு ஆறு பேருடைய ஆதரவு இருந்தது. மூன்று பேர் கருத்துக்களை தெரிவிக்கவில்லை.

தமிழரசு கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் இந்த தேர்த லில் தமிழரசு கட்சி எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் மக்கள் தாங்களாகவே தீர்மானிக் கலாம் என்ற முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இருந்தபோதிலும் சுமந்திரன் தரப்பு அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாக தெரிகின்றது.

தீர்மானம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தன் பின்னணியில் இடம் பெற்ற அரசியல் நிகழ்வுகள் இவைதான்.

தமிழ் மக்களுடைய கருத்துக்களை கவனத்தில் எடுக்காமல், ஜனாதிபதி வேட்பாளர் களால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை களை நுணுக்கமாக ஆராயாமல் தமிழரசு கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

தமிழரசுக் கட்சி இந்த முடிவை எடுத்த போது சஜித் யாழ்ப்பாணத்தில் பரப்புரைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தாா். அவருக்கு ஊடக வியலாளா் ஒருவா் இதனை தொலைபேசியில் சொன்னபோது, அவா் ஆச்சரியப்பட்டாா். செய்தி உண்மையா, என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று அவா் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகின்றது. ஏனெனில் அந்த செய்தியை அவா் நம்பவில்லை. காரணம், தமிழரசுக் கட்சியுடன் அவா் இது தொடா்பாக பேசவும் இல்லை, அவா்களுக்கு எந்த வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கவும் இல்லை. இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் ஆதரவு சிங்களப் பகுதிகளில் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் சஜித்தை சிந்திக்க வைத்துள்ளது!

 

https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சியின்-முட/

மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா?

2 months 1 week ago
மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா?

[TamilNet, Sunday, 18 August 2024, 11:27 GMT]
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பாக ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய அரசியல் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை முன்வைத்து, தேர்தல் அரசியல் தொடர்பான எண்ணங்களும் முடிவுகளும் மூன்று முனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று முனைகளும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான கொள்கை சார் அரசியலில் இருந்து ஏற்கனவே வழுவியுள்ளன அல்லது அவ்வாறு வழுவுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன. மேலெழுந்தவாரியாக ஊடக அறிக்கைகளையும் உடன்படிக்கைகளையும் படிக்கும்போது ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான அடிப்படைகளைச் சரியாகக் கையாண்டிருப்பது போன்ற சொற்பொருட் தோற்றம் ஏற்படலாம். ஆனால், கொள்கைசார் விடுதலை அரசியல் பற்றிய அறிவோடு உற்று நோக்கும் போது இவற்றுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ள பொறிகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும். அந்த அறிவைப் பகிர்ந்துகொள்வது விடுதலை அரசியலின் செல்நெறியை இனியாதல் சரியாக வழிப்படுத்த ஆக்கபூர்வமானதாக அமையும்.

ஆக்கிரமித்துள்ள இன அழிப்பு இலங்கை அரசின் தேர்தல் அரசியலுக்குள் நடைமுறைச்சாத்திய அரசியல் (pragmatic politics) செய்கிறோம் என்ற போர்வையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தேசத்தின் கொள்கை சார் அரசியலை (principled politics) அவ்வரசின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நிரந்தரமாகத் தொலைத்துவிடும் விளைவையே இந்த மூன்று முனைகளும் உருவாக்கிவருகின்றன. இதுவே இலங்கை அரசின் உத்தியும் கூட.

இலங்கை அரசியலமைப்பிற்குள் எதைக் கையாள்வது என்பதை விட அதற்கு வெளியில் வைத்து எதைக் கையாள்வது என்பது பற்றிய தெளிவு ஈழத்தமிழர்களுக்கு முக்கியமானது.

இது தந்தை செல்வாவின் காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை ஈழத்தமிழர் விடுதலை அரசியலில் கூர்ப்புரீதியாகப் பொருத்தமான முறையிற் கையாளப்பட்டுவந்தது.

2009 ஆம் ஆண்டின் பின் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ் மக்கள் பேரவை போன்ற முன்னெடுப்புகள் ஊடாக விடுதலை அரசியல் மீண்டும் முளைவிட்டபோதும், அவையும் இறுதியில் அச்சுத்தவறின. 2016 ஆம் ஆண்டளவில் முற்றாக மங்கிவிட்டன.

விளைவாக, இலங்கை அரசியலமைப்புக்கு வெளியே சுயநிர்ணய உரிமையை எடுத்தாளும் மூலோபாய அச்சில் இருந்து தாயகத்திலுள்ள ஈழத்தமிழர் அரசியல் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளது.

அதே அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல் அரசியலை எதற்கு, எவ்வாறு பயன்படுத்துவது என்ற தந்திரோபாயப் போக்கில் இருந்து அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் நிலைதடுமாறி விலகியுள்ளன.

இந்த மூலோபாயக் குறைபாடுகளும் தந்திரோபாயக் குறைபாடுகளும் விரைந்து களையப்படவேண்டியவை.

மூலோபாயக் குறைபாடுகள் எவை என்பதையும் அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளையும் விரிவாகப் பார்க்க முன்னர், தந்திரோபாயக் குறைபாட்டையும் அதைத் தவிர்க்கும் வழிவகையையும் சுருக்கமாக நோக்குவோம்.

1. தந்திரோபாயக் குறைபாடும் அதைத் தவிர்க்கும் வழிவகையும்

இலங்கையில் தேர்தல் அரசியலைத் தனி வழியாகக்கொண்டு ஈழத்தமிழர் அரசியல் விடுதலையைக் காணலாம் என்று அரசியற் கட்சிகளின் தலைமைகள் கருதுவதும், மக்கள் அவ்வாறு நம்பவைக்கப்படுவதும், கொள்கை சார் விடுதலை அரசியலின் மூலோபாயத்துக்கு முரணானது.

இலங்கை அரசோடு அரசியல் தீர்வு தொடர்பான முதன்மைப் பேச்சுவார்த்தையாளராகத் (Chief Negotiator) தாம் ஈடுபடுவதற்கான ஆணையைத் தமக்கு ஈழத்தமிழர் வாக்குகள் தருகின்றன என்று தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் சிந்திப்பதும், அவ்வாறு மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதும், பெரிய குறைபாடாகக் காணப்படுகிறது.

தேர்தல் அரசியற் கட்சிகள் விடுதலை அரசியலுக்கும், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கும் குந்தகம் விளைவிக்காது செயற்பட்டால் அதுவே பெரிய சாதனை என்பதாகத் தற்போதுள்ள நிலைமை காணப்படுகிறது.

உண்மையில், ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய சக்திகள் தேர்தல் அரசியல் ஊடாக தமிழ் மக்களின் ஆணை பெற்ற பிரதிநிதிகள் போலத் தெரிவு செய்யப்பட்டு, ஈழத்தமிழர் தமது மக்களாணையின் பாற்பட்ட சுய நிர்ணய உரிமையை எடுத்தாள்வதற்குத் தடங்கலாக இடமளிக்கக்கூடாது என்ற தந்திரோபாயத்துக்காக மட்டுமே நல்ல சக்திகளாக ஈழத்தமிழ்த் தேசியப் பிரதிநிதிகள் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல்களில் பங்கேற்கவேண்டும்.

அன்றேல், தேர்தல் அரசியல் ஊடாக எவரும் தேர்ந்தெடுக்கப்படாவண்ணம் தமிழர்கள் முற்றிலும் தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கவேண்டும்.

இந்த இரண்டு தேர்வுகளில் எதை முன்னெடுப்பதென்றாலும் அதற்குத் தேர்தல் அரசியலுக்கு அப்பால், தேர்தல் அரசியல் கட்சிகளால் எதுவகையிலும் கட்டுப்படுத்த இயலாத பலமான ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படும்.

1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களின் ஆணைக்குப் புறம்பாக இயற்றப்பட்டு நடாத்தப்படுகின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல்களிற் பங்கேற்போர் எவரும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியற் தீர்வைக் காணபதற்கான ஆணைபெற்ற ஏக பிரதிநிதிகளாகத் (sole representatives) தம்மைப் பாவனை செய்துகொள்ளாது, அவ்வாறான இலங்கை அரசியலமைப்புக்கு உட்படாத மூலோபாய நகர்வுக்குரிய ஏக பிரதிநிகள் யார் என்பதை நிறுவுவதற்கு அவ்வப்போது தேவைப்படும் மக்களாணையைப் பெற்றுக்கொடுக்கும் பதிலாளிகளாக (proxies) மட்டுமே தம்மை, ஆறாம் சட்டத்திருத்தத்துக்கு உட்பட்டுப் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் சரி, பாவனை செய்து கொள்ளவேண்டும்.

அரசியல் வேணவாவை ஜனநாயக வழியில் வெளிப்படுத்துவது தொடர்பாக 1947 சோல்பரி அரசியலமைப்புக்குள் ஏதோ ஒரு வகையில் 1977 ஆம் ஆண்டு வரை நீடித்த சொற்பக் கருத்துச் சுதந்திர வெளியும் ஆறாம் சட்டத்திருத்தத்தின் ஊடாக 1983 ஆம் ஆண்டோடு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போதுள்ள தேர்தல் அரசியல் வெளி எதற்கு உதவும், எதற்கு உதவாது என்பதில் தெளிவான பொது நிலைப்பாடு இருக்கவேண்டியது அவசியம்.

சுயநிர்ணய உரிமையை மட்டுப்படுத்தாமல், அதாவது எதுவிதத்திலும் சுதந்திரத்தை (பிரிவினையை) மறுக்காமல் அல்லது குறைக்காமல் தமது பிரேரிப்புகளை தேர்தல் அரசியற் கட்சிகள் முன்வைக்கலாம். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைமையொன்றுக்கான மக்களாணையைப் பெற்றுக்கொடுக்கலாம். இதற்கு முரணான அமிலப் பரிசோதனைகளில் தேர்தல் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது.

நடைமுறையில், தேசக்கட்டலுக்கு (nation-building) ஆக்கபூர்வமாகப் பங்களிப்பதைத் தமது உத்தியாகக் கொண்டு தேர்தல் அரசியற் கட்சிகள் செயற்படுவது நல்லது.

தேசக்கட்டல் பற்றிய தெளிவான செயற்திட்டம் அவசியம்.

தாயகத்தில் சமூக விடுதலை, பிரதேச வேறுபாடுகளுக்கு மேலான ஒற்றுமை, சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பொருண்மியத் திட்டங்கள், கூட்டு நினைவுத்திறம் ஆகியவை மக்கள் மத்தியில் முறையாகப் பேணப்படாதுவிடின் ஆக்கிரமிப்பு அரசின் தேர்தல் அரசியல் மக்களைத் திண்டாட்டமான தெரிவுகளுக்குள் இட்டுச் செல்லும்.

ஈழத்தமிழர் தேசத்துக்கான சர்வதேச ஏக பிரதிநிதித்துவத்துக்குரிய கூட்டுத் தலைமையாகவோ தலைமைப் பேச்சுவார்த்தையாளர்களாகவோ இலங்கைத் தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் தம்மை உருவகித்துச் செயற்படுவது கொள்கை சார் விடுதலை அரசியலுக்கு ஆபத்தைத் தருவதாகவே போய்முடியும்.

ஈழத்தமிழர் தேசம் என்பது ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தை மட்டும் கொண்டதல்ல, புலம்பெயர் சமூகத்தையும் இணைபிரியா அங்கமாகக் கொண்டது. தாயகத்திலான தேர்தல் அரசியலுக்குள் புலம்பெயர் சமூகமும் விடுதலை அரசியலைத் தொலைத்துவிட நிர்ப்பந்திக்காது தேசக்கட்டல் முன்னெடுக்கப்படவேண்டும்.

2. மூலோபாயம் தொடர்பான குறைபாடுகளும் அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளும்

ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு ஐரோப்பிய காலனித்துவக் காலத்தை உள்ளடக்கியதான நியாயப்பாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நிறுவப்படுவது.

1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டபோது, அதன் சாசனத்தில், உலகில் அந்நிய காலனித்துவத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட தன்னாட்சியை (Self-Government) எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதற்கு இரண்டு விதமாகப் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு அப்போதிருந்த உறுப்பு நாடுகளிடம் அப் பொறுப்புக் கையளிக்கப்பட்டிருந்தது.

இவ்விரு பொறுப்புகளையும் ஐ.நா. சாசனத்தின் பதினோராம் அத்தியாயமான தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசங்கள் ("Declaration regarding Non-Self-Governing Territories") என்பதன் கீழுள்ள 73-74 வரையான உறுப்புரைகளாகவும், பன்னிரண்டாம் அத்தியாயமான சர்வதேச அறங்காவலர் அமைப்பு (International Trusteeship System) என்பதன் கீழுள்ள 75-85 வரையான உறுப்புரைகளாகவும் ஐ.நா. சாசனம் வகுத்திருந்தது.

ஐ.நா.வின் பொறுப்பில் பொதுவாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்படல் ஆகியவை மேற்குறித்த பொறிமுறைகளுக்குள் அடையாளப்படுத்தப்பட்டு நிரலிடப்பட்ட உலகப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது என்பதாகவும், இதர பகுதிகள் சுய ஆட்சியைப் பெறும் பயணத்தில் ஏற்கனவே இருப்பதால் விரைவில் ஐ.நா. உறுப்புரிமையைப் பெற்றுவிடும் என்ற அடிப்படையில் மேற்குறித்த நிரல்களுக்குள் அவை சேர்க்கப்படாத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.

அப்பொழுது, இலங்கையில் தன்னாட்சி ஜனநாயக முறையில் உருவாக்கப்படும் பொறிமுறைக்கான வேலைத்திட்டத்தை சர்வஜன வாக்குரிமையோடு பிரித்தானியா முன்னெடுத்துக்கொண்டிருந்தமையால் மேற்குறித்த இரண்டு பொறுப்புகளுக்குள்ளும் ஈழத்தமிழர் தாயகத்தை, பிரிட்டிஷ் இந்தியா உள்ளிட்ட வேறு பல உலகப் பகுதிகளைப் போல, அக் காலனித்துவ நாடு பாரப்படுத்தியிருக்கவில்லை.

அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் தேசம் தனியான சுயநிர்ணய உரிமை அலகென்ற நடைமுறையையும் 1833 ஆம் ஆண்டில் பிரித்தானியா ஏற்கனவே இல்லாது செய்திருந்தது.

மேற்குறித்த இரு பொறுப்புகளுக்குள்ளும் பாரப்படுத்தப்படாத பகுதிகளில், ஏற்கனவே காலனித்துவ தரப்புகளால் வகுக்கப்பட்ட நாடுகளுக்கான எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறு தேசிய இனங்கள் தமக்கென்று தனிவேறான சுயநிர்ணய உரிமையைக் கோர இயலாது எனும் நடைமுறை ஐ.நா. மன்றில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை இங்கு குறிப்பாக நோக்கவேண்டும்.

இதற்கான கோட்பாட்டு அடிப்படை நீலக் கடல் விதி (Blue Water Rule) அல்லது உப்புக் கடல் ஆய்வுரை (Salt Water Thesis) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் சபையின் 637 ஆவது தீர்மானத்தின் ஏழாம் உறுப்புரை 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதை வரைபுபடுத்தியுள்ளது.

சட்ட மொழியில் இது uti possidetis juris என்ற இலத்தீன் மொழிக் கலைச் சொல்லால் சித்தரிக்கப்படுகிறது. இதன் ஆங்கில மொழியிலான விளக்கம் பின்வருமாறு இருக்கும்: “Emerging states presumptively inherit their pre-independence administrative boundaries.”

ஒரு நாடு காலனித்துவத்தில் இருந்து ‘விடுதலை’ பெற்று ஐ.நா. உறுப்புரிமை பெற்றபின், அதன் எல்லைக்குள் இருக்கும் அனைவரும் ‘ஒரு மக்கள்’ என்றும் அந்த ஒரு மக்களுக்குப் பொதுவான ‘ஒரு சுயநிர்ணய உரிமை’ மாத்திரமே அதற்கு ஒட்டுமொத்தமாக இருக்குமென்றும், அந்த நாட்டின் முழுமையான பிரதேச ஒருமைப்பாட்டுடன் (territorial integrity) ஒத்துப்போவதாக மட்டுமே அந்தச் சுயநிர்ணய உரிமை கையாளப்படவேண்டும் என்பதே ஐ.நா. கடைப்பிடித்த ஈழத்தமிழருக்கு ஒவ்வாத நடைமுறை.

இவ்வாறு, ஈழத்தமிழர் தாயகம் மேற்குறித்த இரண்டு பொறுப்புகளுக்குள்ளும் உள்ளடக்கப்படாமைக்கும் அல்லது தனிவேறான சுயநிர்ணய உரிமை அலகாகக் கருதப்படாமைக்குமான முழுப் பொறுப்பும் பிரித்தானியாவுக்கே இருக்கிறது.

அதாவது, வேறுவிதமாக இதைச் சொல்வதானால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்த முதலாவது சர்வதேசத் தரப்பு பிரித்தானியா ஆகும்.

பிரித்தானியா மேற்குறித்தவகையில் சுயநிர்ணய உரிமையை மறுத்த போது அதை எதிர்த்து ஈழத்தமிழர் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோரினார்கள்.

இதைச் சரியாக விளங்கியிருத்தல் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பிரதானமானது.

ஈழத்தமிழர் டொனமூர் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை, பின்னர் சோல்பரி ஆணைக்குழுவின் முடிவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.

இப்படியாக, இலங்கையில் முழுமையான தன்னாட்சி அதிகாரம் ஏற்பட முன்னரே அரசியலமைப்புத் தொடர்பான சமூக உடன்படிக்கை (social-contract) ஒன்று ஜனநாயக முறையில் உருவாக்கப்படாது புறக்கணிக்கப்பட்டது.

ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை முதலில் மறுத்த பிரித்தானியாவுக்கு இது தொடர்பில் வரலாற்றுரீதியான பொறுப்புக்கூறல் இருக்கிறது. ஐ.நா. சபைக்கு இது தொடர்பில் நேரடிப் பொறுப்பில்லை.

ஆகவே, ஐ.நா. சபையின் நடைமுறைகளதும் விதிகளதும் பிரகாரம் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையைக் கோருகிறார்கள் என்று மட்டுப்படுத்திச் சொல்லிக்கொள்வது ஈழத்தமிழர் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு ஆபத்தானது.

1924 ஆம் ஆண்டிலே சுயநிர்ணய உரிமை அலகுக்கான நியாயப்பாடு ஈழத்தமிழர் தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறபோதும் அதுகுறித்து அக் காலத்திலே பதியப்பட்ட நம்பகமான எழுத்து மூல ஆதாரங்கள் இதுவரை சரியாக முன்வைக்கப்படவில்லை.

1970களின் நடுப்பகுதியில் வெளியான சில நூல்களை அடிப்படையாகக் கொண்டு 1924 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை ஆதாரபூர்வமாகவும் சட்ட அடிப்படையிலும் எடுத்தாளமுடியாது. அவ்வாறு செய்ய முனைவது மகாவம்ச வரலாறு போல் ஆகிவிடும்.

உரிய காலத்திலே மேற்கொள்ளப்பட்ட பதிவு ஆதாரங்களே உலக நீதிமன்று போன்ற இடங்களில் ஏற்புடையதாகக் கருதப்படும் என்பதால் அவை உரியமுறையில் தேடிக் கண்டுபிடிக்கப்படவேண்டும் (இதைப் போல, இறுதித் தமிழரசனின் பிரதானிகளுடன் போர்த்துக்கேயக் காலனித்துவம் சார்பாக ஸ்பானிய மன்னனின் பிரதானிகள் 1612 ஆம் ஆண்டு நல்லூரில் வைத்து எழுதிய உடன்படிக்கையின் உள்ளடக்கம் எழுத்தாதாரமாக பொதுவெளியில் இல்லாதுள்ளது).

இருப்பினும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பை ஈழத்தமிழர்கள் மிகத் துல்லியமாக நிராகரித்தது மட்டுமல்ல, அப்போதே ஈழத்தமிழர் தலைவர்கள் தனித்துவமான தேசிய சுயநிர்ணய உரிமை தொடர்பான நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதும் மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகிறது.

1947 நவம்பர் 20 ஆம் நாள் தமிழர் தரப்பினர் பிரித்தானிய ஆளும் தரப்பை நோக்கி, “இப்பொழுது இருப்பதைப் போன்ற, சட்டசபை - மந்திரிசபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தைத் தமிழர்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தகுந்த மாற்றுமுறை இல்லாதபடியால் நாங்கள் தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை கோருகிறோம்,” என்ற செய்தியை எழுத்துமூலமாக வழங்கியிருந்தனர்.

இந்தவகையில், ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டில் காலனித்துவத்துக்கு முன்னான ‘இறைமையை மீட்டுக்கொள்ளல்’ (Reversion to sovereignty) என்ற அடிப்படை எடுத்தாளப்படவேண்டியது என்பது குறிப்பாக நோக்கப்படவேண்டியது. பிரித்தானியாவுக்கு இதுதொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளது என்பதும் சிறப்பாக நோக்கப்படவேண்டியது.

இலங்கையின் சர்ச்சைக்குரிய ‘சுதந்திரத்தின்’ பின், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைமைப் பேருரையில் சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள், தனித் தேசிய இனம், சுதந்திரத் தமிழரசு என்பவற்றோடு சமஷ்டி என்ற பெயரில் கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளை அரசியற் தீர்வுக்கான மாதிரிகளாக எடுத்துக்காட்டியிருந்தார். ஐரிஷ் விடுதலைப் போராட்டத்தையும் முன்னுதாரணமாக செல்வநாயகம் எடுத்தாண்டிருந்தார்.

இதன் மூலம், தொடர்ச்சியாகச் சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்கும் இணைப்பாட்சிக்கு ஒப்பான ஒரு கூட்டாட்சியைக் கொள்கையாக அவர் முன்வைக்க முற்பட்டமை தென்படுகிறது. அதை சமஷ்டி என்ற பெயரில் அப்போது அவர் குறிப்பிட்டுவந்தார்.

கனடாவும் சுவிற்சர்லாந்தும் அரசியலமைப்புகளை உருவாக்கிக்கொண்டமை கூட்டாட்சியை (Federation) விடவும் இணைப்பாட்சிக்கு (Confederation) உரிய முன்னுதாரணங்களாகும்.

இணைப்பாட்சி என்பது காலப்போக்கில் கூட்டாட்சி நோக்கி அல்லது சுதந்திரம் நோக்கிப் பயணிப்பதற்கான ஒரு வழிவரைபட அரசியலமைப்புப் பொறிமுறை.

1951 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாம் தீர்மானத்தில் தனிவேறான தேசம் என்ற அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கவொண்ணா உரிமையாகச் சுயநிர்ணய உரிமை அடிப்படையானது என்பது குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, பொதுசன வாக்கெடுப்பும் அதே தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இதற்கும் மேல், அம் மாநாட்டின் இரண்டாம் தீர்மானம் சோல்பரி அரசியலமைப்புத் திட்டத்தை “அறிவுக்கொவ்வாததெனவும் தமிழ் பேசும் மக்களை அடிமைகொள்வதற்கேதுவானதெனவும் இம்மாநாடு கண்டிக்கிறது,” என்று கடுமையான தொனியில் நிராகரித்திருந்தது. இது ஆதாரபூர்வமான வரலாறு.

இலங்கை ஐ.நா. உறுப்புரிமையைப் பெற்றது 1955 ஆம் ஆண்டின் இறுதியிலாகும். அதைப் பெற்று ஒரு சில மாதங்களுக்குள் தனிச்சிங்களச் சட்டமும் இன அழிப்பு வேலைத்திட்டமும் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பாக நோக்கப்படவேண்டியது.

1960 ஆம் ஆண்டு ஐ. நா. பொதுச் சபை சுயநிர்ணய உரிமை தொடர்பாக அடுத்த கட்டமாக 1514(XV) ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

அந்தத் தீர்மானத்தின் இரண்டாம் உறுப்புரையானது அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டென்று அகலமாக வரையறை செய்துவிட்டு, அதை மட்டுப்படுத்தும் விதமாகத் தனது ஆறாம் உறுப்புரையில் வேறொரு விடயத்தைப் புகுத்தியது. அதாவது, ஏற்கனவே உறுப்புரிமை பெற்றுவிட்ட நாடுகளின் நாட்டு எல்லைகளை மாற்றும் வகையில் அந்த நாடுகளுக்குள் இருக்கும் எவரும் தனிவேறான சுயநிர்ணய உரிமை அலகொன்றைக் கோர முற்பட்டால் அது ஐ. நா. சாசனத்துக்கு முரணானது என்று கருதப்படும் என்றது அந்த ஆறாம் உறுப்புரை.

ஆக, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை என்பது, ஐ.நா. நடைமுறைக்கும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டுக்கும் மாறாக, காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்குரிய தேசிய சுயநிர்ணய உரிமையாக (national self-determination) ஆரம்பத்திலேயே ஈழத்தமிழர்களால் வரையறை செய்யப்பட்டுவிட்டது.

இலங்கை ஐ. நா. உறுப்புரிமை பெற முன்னரே, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பாக நோக்கப்படவேண்டியது. அது ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் பார்க்கப்படவேண்டியது.

இந்தப் பின்னணியை மறைத்துவிட்டு, அல்லது வரலாற்றைக் கத்தரித்துவிட்டு, புதிய விளக்கங்களைச் சுயநிர்ணய உரிமைக்குப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று சிந்திப்பது அடிப்படையில் கோளாறானது.

2009 ஆம் ஆண்டில் இன அழிப்புப் போரினால் மெய்நடப்பு அரசும் இராணுவப் பலமும் அழிக்கப்பட்டதால், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான பௌதிக பலம் இல்லாது போய்விட்டதென்றும், அதனால் சுயநிர்ணய உரிமையை இனிமேல் ஏதோ ஒரு வகையில் மட்டுப்படுத்தித்தான் சித்தரிக்கவேண்டும் என்றும் சிந்திப்பது கோட்பாட்டு ரீதியாக மேலும் கோளாறானது.

தந்தை செல்வா கூட்டாட்சி கோரிய காலத்தில் இருந்தது சோல்பரி அரசியலமைப்பு.

அதை இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமாக இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்தவுடன் அந்த நகர்வை அவர் நிராகரித்து, தனது பிரதிநிதித்துவத்தைத் துறந்து, காங்கேசன்துறைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான சூழலை உருவாக்கி, தமிழ் மக்களின் நிராகரிப்புக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துப் போட்டியிட்டு அதற்குரிய மக்களாணையை வென்றெடுத்துக் காட்டியிருந்தார் என்பதும் வரலாறு.

1972 ஆம் ஆண்டுக் குடியரசு யாப்பு, 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா மீண்டும் ஒருதலைப்பட்சமாகக் கொண்டுவந்த அரசியல் யாப்பு ஆகிய இரண்டின் சட்டகங்களுக்குள்ளும் கூட்டாட்சிக் கோரிக்கையை தந்தை செல்வா முன்வைக்கவில்லை. அவர் தொடர்ந்து உயிர்வாழ்ந்திருந்தால் அவ்வாறு முன்வைத்திருக்கவும் மாட்டார்.

இந்தவகையில், தற்போது கூட்டாட்சி என்ற கொள்கையை மீண்டும் தூசிதட்டி எடுத்து முன்வைத்திருக்கும் இக்காலத்துத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் அரசியற் கட்சியினரும் தந்தை செல்வாவுக்கு நேர் விரோதமான அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவர்களே.

கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக இணைப்பாட்சி என்று கொள்கையை முன்வைப்பதே சுயநிர்ணய உரிமையைத் தொடர்ந்தும் தக்கவைக்க இடமளிக்கும். இணைப்பாட்சி முறையூடாகப் பயணித்து, பின்னர் கூட்டாட்சியாக நீடிக்கும் கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளையே தந்தை செல்வா கூட முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று.

இணைப்பாட்சி என்ற வழிவரைபடத்தின் ஊடாகப் பயணிக்காது சமஷ்டி என்ற கூட்டாட்சியை சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி உருவாக்க முற்பட்டால், கூட்டாட்சி உருவாக்கப்பட்டாலும் சுயநிர்ணய உரிமையைத் தனியான அலகாகத் தக்கவைக்க இயலாத நிலைதான் ஏற்படும்.

இதனால், சுதந்திரத்தை (பிரிவினையை) ஒருபோதும் மறுக்காமல், அதேவேளை அதை நேரடியாகவும் கோராமல் தீவுக்குள் இருக்கும் தேர்தல் அரசியலைத் தந்திரமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கூட்டாட்சி என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களாணையை நிராகரிப்பது அடிப்படையிலேயே தவறானது. தந்தை செல்வாவின் அமைதிவழிப் போராட்டத்துக்கும் தலைவர் பிரபாவின் ஆயுதவழிப் போராட்டத்துக்கும் முற்றிலும் முரணானது.

எனவே, முழுமையான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமூக உடன்படிக்கை ஒன்றின் பின்னரே அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்றும், அவ்வரசியலமைப்பிலும் தனி அலகுக்கான சுயநிர்ணய உரிமை முழுமையாகத் தக்கவைக்கப்படவேண்டும் என்றும் தெளிவான கொள்கை தாயகத்திலுள்ள பொது அமைப்புகளால் வகுக்கப்படுவது காலத்தின் தேவையாகிறது.

ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஐ.நா. மன்றுக்குள்ளான uti possidetis juris என்ற நடைமுறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் ஈழத்தமிழர் சுய நிர்ணயக் கோரிக்கை முன்னெடுக்கப்பட ஏதுவாக இன்னோர் நியாயப்பாட்டினையும் எடுத்தாளலாம்.

தன்னாட்சியதிகாரத்துக்கான சமாதான வழிமுறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டு அவை ஏற்கனவே மறுக்கப்பட்டுள்ள சூழலில், இறுதி வழிமுறையாக (last resort) பரிகாரப் பிரிவினை (Remedial Secession) என்பதாக சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தும் சர்வதேச வழமைச் சட்டத்தின் (Customary International Law) பாற்பட்டதே அந்த வழி.

அதாவது, நேரடியாக எழுத்து மூலமாக யாக்கப்பட்ட சர்வதேசச் சட்டத்துக்கு (codified International Law) அப்பாற்பட்ட சர்வதேச வழமைச் சட்டம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளையும் அடியொற்றிப் பின்பற்றப்படுவது.

பிரித்தானியாவுக்கு எதிராக முன்வைத்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் நியாயத்தோடு (Reversion to sovereignty) பரிகாரப் பிரிவினை (Remedial Secession) என்ற சர்வதேச வழமைச் சட்ட நியாயத்தையும் தந்தை செல்வா வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சேர்த்து இரட்டித்த நியாயப்பாடாக கூர்ப்பெய்தவைத்து சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தினார்.

அதேவேளை, அளப்பரிய தியாகங்களைச் செய்ய முன்வருமாறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்களை வேண்டியது.

இந்த மக்களாணை பெற்ற தீர்மான முடிவின் படி போராடிப் பெற்ற இறைமை (Earned sovereignty) என்ற அடிப்படை 2009 ஆம் ஆண்டுவரை ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைமையால் முன்னெடுக்கப்பட்டது.

சோல்பரி யாப்பின் 29(2) உபவிதி தரும் குறைந்தபட்ச நீக்கப்படவியலாக் காப்புரிமை (entrenched safeguard) மீறப்பட்டது தொடர்பாக பிரித்தானிய கோமறை மன்றின் தீர்ப்புகளையும், அவற்றில் இருந்து தப்பும் முகமாக இலங்கை மேற்கொண்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளும் தந்தை செல்வா எடுத்தாண்ட பரிகாரப் பிரிவினைக்கு இடமளிக்கும் சுயநிர்ணய உரிமையைப் பலப்படுத்துகின்றன. இது தொடர்பாகவும் பிரித்தானியாவுக்கு ஈழத்தமிழர் தேசம் தொடர்பான பொறுப்புக்கூறல் உண்டு.

இவை தொடர்பில், பிரித்தானியாவின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட Ceylon Independence Bill 1947, Sri Lanka Republic Act 1972 ஆகிய சட்டவாக்கங்கள் குறித்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் எதிர்ப்பியக்கங்களை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளது.

இந்த அடிப்படைகளை உணர்ந்து, எந்தவிதத்திலும் சுயநிர்ணய உரிமையைக் கீழிறக்காமல் முழுமையானதாக அது எடுத்தாளப்படவேண்டும்.

காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறாமல், ஐரோப்பிய காலனித்துவம் சிங்கள காலனித்துவத்தால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பிரகடனம் செய்ததிலும், வரலாற்று இறைமை, பண்பாட்டு இன அழிப்பு என்பவற்றை எடுத்தாண்டதிலும், சர்வதேச வழமைச் சட்டத்தின் பாற்பட்ட பரிகாரப் பிரிவினைக்குரிய கடைசி வழியாக சுயநிர்ணய உரிமையை நிறுவியதிலும் முன்மாதிரியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே ஈழத்தமிழரின் Magna carta.

காலப் போக்கில், சர்வதேச வழமைச் சட்டத்தில் மீறவொண்ணா வழமை (jus cogens norm) என்ற அடுத்த கட்ட நியாயப்பாட்டு வளர்ச்சியை சுயநிர்ணய உரிமை பெற்றுவருகிறது.

அதாவது, இன அழிப்பு தொடர்பான அரச பொறுப்பு எவ்வாறு விசாரணைக்கு உலக நீதிமன்றில் உட்படுத்தப்படலாமோ, அதேபோல சுயநிர்ணய உரிமையை ஆக்கிரமிப்பு அரசொன்று மறுத்துவருவது பற்றிய அரச பொறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சூழல் விரைவில் தோன்றும் வகையில் சர்வதேச நீதிச் சூழல் வளர்ச்சிபெற்று வருகின்றது.

சுயநிர்ணய உரிமை தொடர்பில் சர்வதேசச் சட்டம் சார்ந்த, எமது வரலாற்று நிலைப்பாடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு அனைத்தையும் கூர்ப்பியற் போக்கில் ஒன்றிணைத்து முன்னெடுப்பதற்குப் பதிலாக, சுயநிர்ணய உரிமையில் “குறைந்தபட்சம் - அதியுச்ச பட்சம்” என்றவாறு அளவுகோற் பிரிப்பை மேற்கொள்வதும், ஆறாம் சட்டத்திருத்தம் என்ற பூச்சாண்டியைப் பார்த்து மிரளுவதும் கொள்கை சார் விடுதலை அரசியலுக்கும் ஈழத்தமிழர் தேசக்கட்டலுக்கும் முற்றிலும் முரணானது.

1947, 1972, 1978 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் ஆணையின்றி நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி இன அழிப்பு இலங்கை அரசின் அரசியலமைப்புக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தமோ, அல்லது கூட்டாட்சி என்ற கோரிக்கையை எழுந்தமானதாக முன்வைக்கும் நகர்வோ ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணிப்பதாகவும், வட்டுக்கோட்டைத் தீர்மான மக்களாணைக்கும் திம்புக் கோட்பாடுகளுக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை (ISGA) என்ற தீர்வுத் திட்ட வரைபுக்கும் ஒவ்வாததாகவும் ஆகிவிடுகிறது.

“சிந்தனையானது மொழியைக் கேடாக்கினால், மொழி சிந்தனையைக் கேடாக்கும்” (“But if thought corrupts language, language can also corrupt thought”) என்று ஜோர்ஜ் ஓர்வல் எடுத்தியம்பியது அரசியற் தமிழின் கேடுற்ற நிலையைச் சிந்திக்கையில் நினைவுக்கு வருகிறது.

தமிழ் ஆட்சி மொழியாக இல்லாமையாலும், தமிழர்களுக்கென்று ஓர் அரசு இன்மையாலும், அரசியற் தமிழ் உலக வளர்ச்சிக்கேற்ப வளரவில்லை.

இதனால், சர்வதேசச் சட்டங்களைப் புரிந்துகொள்வதும், அரசறிவியலில் தெளிவாகச் சிந்திப்பதும், சர்வதேச அரசியலின் சூட்சுமங்களை விளங்கிக்கொள்வதும் தமிழிலே சிந்திக்கவேண்டியவர்களிற் பலருக்குச் சரிவரக் கைகூடுவதில்லை.

கிணற்றுத் தவளைகள் போல, தமக்குத் தாமே போட்டுக்கொண்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அறிவு எல்லைகளுக்குள்ளும் மொழிச் சிக்கலுக்குள்ளும் சிக்குண்டு, போதாமைக்குச் சமூக வலைத்தளங்களில் பரவுபவற்றில் நல்லது எது தீயது எது என்று பிரித்தறிய இயலாத நிலைக்குள் நின்று, தமக்குத் தெரிந்தது கைமண் அளவு என்பதை மறந்து, தற்செருக்கோடு செயற்படும் தன்மை பொது முயற்சிகளில் ஈடுபடுவோரிடையே பாரிய அவல நிலையாக உருவெடுத்துள்ளது.

தேற்றங்களை நிறுவுதலைப் போன்று கொள்கைகள் வடிவமைக்கப்படவும், எழுதப்படும் வரிகளுக்கிடையில் இரத்தினச் சுருக்கமாகச் சொல்விரயமின்றித் தெளிவாகப் புரியவைக்கவேண்டியதைச் சர்வதேசத் தரப்புகள் புரிந்துகொள்ளும் வண்ணம் வெளிப்படுத்தவும், சிந்தனையும் மொழியும் பின்னிப்பிணைந்த, சட்டமும் அரசியலும் இணைந்த, மொழிப் புலமை முக்கியமானது.

2013-2014 ஆம் ஆண்டுப்பகுதியில் தமிழ் சிவில் சமூக நகர்வு முன்னெடுக்கப்பட ஆரம்பித்த போது இந்தத் திறமை முன்மாதிரியாக வெளிப்பட ஆரம்பித்திருந்தது. ஆனால், ஒரு சில ஆண்டுகளுக்குள் அந்தப் போக்கு மங்கிவிட்டது.

சட்டம், கல்வி, ஊடகத்துறைகளில் இருந்து இராணுவத் துறைவரை “unambiguity”, “to the point”, “less is more”, “KISS (Keep It Simple, Stupid) method” என்று பலவிதமாக இந்த நுட்பம் எடுத்தியம்பப்படுகிறது.

ஆங்கில மொழியில் வேண்டிய சுருக்கத் தன்மைக்கு இடமில்லாத போது, சட்டத்துறையில் இலத்தீன் மொழியிலான கலைச் சொற்களைக் கையாளும் வழமை இருப்பதை ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்ட சில உதாரணங்கள் எடுத்துக்காட்டியிருக்கும்.

இவை சார்ந்த அறிவியற் திறமைகளை வளர்த்துக்கொள்ளாது, கொள்கைகளை நீட்டி விரித்து எழுதப் புறப்பட்டு, அவற்றைப் பலவாய் இலக்கமிட்டுப் பெருக்கி, புலம்பலாக ‘அலம்புவது’ புலமையற்ற செயற்பாடாகும்.

இந்தக் கைங்கரியத்தில் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ என்ற அமைப்பு தற்போது களம் இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இதைத் திருத்தவேண்டியது அவ்வமைப்பில் ஈடுபடுவோருக்கும் ஈழத்தமிழர் சமூகத்துக்குமான ஒட்டுமொத்தச் சவாலாக அமைகிறது.

அரசியற் தமிழ் மொழியின் நிலை கேடாயிருப்பதும், ஆங்கில மொழிப் புலமை குறைவாயிருப்பதும், திரிபுவாதத்தை கருவியாக்கி அரசியல் செய்யும் இரு மொழித் திறமை கொண்ட அரசியல்வாதிகளுக்கு மேலும் வாய்ப்பாகிவிடுகிறது.

ஆதலால், மொழியிலும் சிந்தனையிலும் ஆழமான கரிசனையோடு கொள்கைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். புலம்பல்களாக அன்றி, தேற்றங்கள் போல அவை வெளிப்படவேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒன்றே உறுதியும் இறுதியுமான ஈழத்தமிழர் அரசியல் வேணவா (அரசியல் அபிலாசை) பற்றிய மக்களாணை கொண்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதியுயர் இலக்கு என்றும் திம்புக்கோட்பாடுகள் குறைந்த இலக்கு என்றும் கூடியது-குறைந்தது (maximum vs minimum) என்று சுயநிர்ணய உரிமைக்கு அளவுகோலிடுவதும், ஈழத்தமிழர் சுய நிர்ணயத்தை வெளியகம்-உள்ளகம் என்று பிரித்துச் சித்தரிப்பதும், அரசியற் தீர்வு குறித்த புதிய மக்களாணை பற்றிப் பேசுவதும் ஜோர்ஜ் ஓர்வல் சொன்னது போல் ஊழற் சிந்தனையாகும்.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்தில் உள்ள எந்தப் பொது அமைப்பாயினும் முதலில் ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய அலகுக்குரிய (self-determining unit) மறுக்கவொண்ணா சுயநிர்ணய உரிமையைச் (inalienable right of self-determination) சரிவரப் புரிந்து கையாளத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு மூன்றுவிதமான இறைமைப் பின்னணிகள் உள்ளன: (1) வரலாற்றுவழிவந்த இறைமை, (2) போராடிப்பெற்ற இறைமை, (3) இன அழிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக உலகத்தால் வழங்கப்படவேண்டிய (பரிகார) இறைமை. இதை ஈழத்தமிழர் இறைமைப் புரிந்துணர்வு எனலாம். இது 2012 ஆம் ஆண்டிலே வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.

முழுமையான சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்கும் வழியில் மூலோபாயக் கொள்கை இலங்கை அரசியலமைப்பின் எந்தக் கட்டுப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டதாக நியாயப்படுத்தப்படவேண்டும்.

ஈழத்தமிழர் தேசம் எனும் போது, புலம்பெயர் ஈழத்தமிழர் அதில் ஓர் இணைபிரியா அங்கம் என்பதும் வெளிப்படுத்தப்படவேண்டும்.

தீவுக்கு வெளியேயுள்ள தமிழீழரும், தமிழ் நாட்டவரும் ஏனைய உலகத் தமிழரும் வட்டுக்கோட்டைத் தீர்மான மக்களாணையின் படி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கோடு, ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் கூட்டாட்சி கதைக்கும் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒவ்வா நிலையை ஏற்படுத்துகின்றன.

இதைப் போலவே, நீட்சியான இன அழிப்பு (protracted genocide) தொடர்பான நிலைப்பாடும் முக்கியமானது.

இன அழிப்புக்கான நீதிகோரல் பற்றிய கொள்கை பேசப்படும் போது, அதன் சட்ட நியாயாதிக்கத்தை ஆள்புல நியாயாதிக்க (territorial jurisdiction) அடிப்படையிலும், காலவெல்லை நியாயாதிக்க (temporal jurisdiction) அடிப்படையிலும் செல்லுபடியாகும் உச்ச நியாயாதிக்கங்களை உள்ளடக்குவதாக வரையறுக்கவேண்டும்.

இன அழிப்புக்கான நீதிகோரலை மேற்கொள்ளும் போது அதற்குள் உள்ளடங்கும் ஏனைய குற்றங்களை (போர்க்குற்றங்கள், மானுடத்துக்கெதிரான குற்றங்கள்) அதற்குச் சமாந்தரமாக அதுவும் இதுவும் என்ற தோரணையில் அடுக்கக் கூடாது. அதைப் போலவே அவை அனைத்துக்கும் பொதுமையான பெருங்குற்றங்கள் (mass atrocities) போன்ற பொதுச் சொல்லாடலுக்குள் இன அழிப்பு என்ற அதியுயர்க் குற்றத்தைப் புதைத்தல் ஆகாது.

தெளிவற்ற பலபொருள்படும் தன்மைக்கு (ambiguity) ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போல, ஐ.நா.வில் எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை வைத்து ஈழத்தமிழர் கோரிக்கைகளும் அவர்தம் கொள்கை சார் விடுதலை அரசியலின் படிமுறைகளும் வடிவமைக்கப்படல் ஆகாது.

எமது விடுதலைப் போராட்ட அரசியல் வரலாற்று நியாயப்பாடுகளின் வெவ்வேறுபட்ட படிநிலைகளின் கூர்ப்புத் தன்மையோடு உலகப் பரப்பை நோக்கிய கொள்கை சார் விடுதலை அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும்.

சாத்தியமில்லை என்று வல்லாதிக்க உலக ஒழுங்கு கருதுவதைச் சாத்தியமாக்குவதே போராட்டமும் அதற்கான கொள்கை சார் விடுதலை அரசியலுமாகும்.

“பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தில் ஆரம்பம்”, “பதின்மூன்றுக்கும் மேலிருந்து ஆரம்பம்”, “கூட்டாட்சி”, “ஜனாதிபதி ஆட்சியென்றால் இணைப்பாட்சி, நாடாளுமன்ற ஆட்சியென்றால் கூட்டாட்சி,” போன்ற இரண்டுங்கெட்டான் நிலைப்பாடுகளை ஒவ்வொரு தரப்பும் தமக்கேற்ற வகையில் கையாண்டு பலபொருள்படும் தன்மையை சர்வதேச அரங்கில் உருவாக்குவதற்கு இனிமேலும் இடமளித்தல் ஆகாது.

அத்தோடு, நீட்சியான இன அழிப்பு (protracted genocide) தொடர்பாகவும், காலத்துக்குக் காலம் ஈழத்தமிழர் தாயக எல்லைகள் குடியமைவை (demography) மாற்றும் நோக்கோடும், தமிழர் தாயக ஆட்சிப்புல ஒருமைப்பாட்டை (territorial integrity) சிதைக்கும் நோக்கோடும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்ற காலனித்துவம் (Sinhala Settler Colonialism) தொடர்பாகவும் தெளிவான வரையறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமைக்குரியவர்கள் யார், எந்த ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதென்ற திட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த ஆண்டுக்குப் பின்னர் குடியேறியவர்களும் அவர்வழி வந்தோரும் அவ்வாறான பொதுவாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது போன்ற நிலைப்பாடுகள் தொடர்பாகவும் தெளிவான எல்லைகளும் வரம்புகளும் வெளிப்படுத்தப்படவேண்டும்.

இவ்வாறு நிறுவப்படும் கொள்கைகளை சர்வதேச மட்டத்தில் ஏற்புடையதாக்கும் வகையில் படிநிலைச் செயற்பாடுகள் நடைபெற வேண்டும்.

இதற்கு ஏதுவான முதற்படியாக ஈழத்தமிழர் தாயகம் ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகம் (Occupied Homeland) என்பதைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஈழத்தமிழர் தரப்புகளும் இணைந்து பிரகடனப்படுத்த முன்வர வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட தாயகமும் அதன் தேசமும் எனப்படுவதன் நியாயப்பாடு நிறுவப்படவேண்டும்.

அடுத்த படிநிலையாக, நீட்சியான இன அழிப்புத் தொடர்பாக ஏற்கனவே வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை விட மேலும் தெளிவாகவும் கச்சிதமாகவும் நிறுவப்படுவதாக தாயகத்துக்கு உள்ளே முழுத் தமிழர் தாயகத்தையும் இணைத்ததாக அடுத்தகட்டத் தீர்மானம் வெளியாகவேண்டும்.

இந்த இரண்டு படிநிலைகளும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டோடு இணைந்து முன்னெடுக்கப்பட்டால் பொதுவாக்கெடுப்பு (referendum) என்ற நிலைப்பாடு தீவுக்குள்ளிருந்து தெளிவாக வலியுறுத்தப்படுவது சாத்தியமாகும்.

கூட்டாட்சிக்குப் (federation) பதிலாக இணைப்பாட்சி (confederation) என்ற நிலைப்பாட்டை ஐயந்திரிபறவும் மனவுரத்தோடும் தீவுக்குள்ளிருந்து வலியுறுத்த இந்தப் படிமுறைகள் இடமளிக்கும்.

மாறாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்வது போலவோ, தற்போதுள்ள தமிழரசுக்கட்சி சொல்வது போலவோ எழுந்தமானமாகக் கூட்டாட்சி என்று கொள்கை வகுக்கப்பட்டால், சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்க முடியாத தீர்வுத்திட்டங்களே பிரேரிக்கப்படும்.

பல விதங்களில் மேற்குறித்த புரிதலோடும் திறமையோடும் தமிழ் சிவில் சமூகம், தமிழ் மக்கள் பேரவை ஆகிய முன்னெடுப்புகள் 2013-2014 காலப்பகுதியில் சிறப்பாக ஆரம்பித்திருந்தன. ஆனால், அவையும் நாளடைவில் மூலோபாய ரீதியில் தவறிழைத்தன.

அதற்கு எடுத்துக்காட்டு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தின் அவசர கால அதிகாரம் பற்றிய உறுப்புரை 21.1.

ஒருபுறம் சுயநிர்ணய உரிமையை எடுத்தாள்வதான எடுகோளுடன் எழுதப்பட்ட அந்தத் தீர்வுத் திட்டம் மறுபுறம் அதே சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது.

எழுந்தமானமான கூட்டாட்சிக் கோரிக்கையும் தேர்தல் அரசியலும் ஈழத்தமிழரை எங்கே இட்டுச் செல்லும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இதையே இன்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது தீர்வுத்திட்டமாகச் செப்பித்துக் கொண்டிருக்கிறது என்பது விந்தையிலும் விந்தை!

அதை நினைவுபடுத்தி இந்தக் கட்டுரையை முடிவுசெய்யலாம்:
 

21.1 மாநில அரசாங்கம் ஒன்று சமஷ்டியில் இருந்து அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் பிரிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து, அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந் நிலைமைகளுக்கு ஏற்றவாறு, பொறுப்பெடுத்துக்கொள்ளலாம்.”



எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் வரைபுகளை நாமே முன்வைப்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை.

இவ்வாறான விஷப்பரீட்சைகளில் தமிழ் மக்கள் பொதுச்சபை ஈடுபடாது ஆக்கபூர்வமான திசையில் அதன் நகர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

அதை உறுதிப் படுத்திக்கொள்வது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகிறது.

https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39988

‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல்

2 months 1 week ago
‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல்

[TamilNet, Friday, 30 August 2024, 09:08 GMT]
இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாயிருந்த எம். கே. நாராயணன் (2005-2010), சீவ்சங்கர் மேனன் (2010-2014) இருவரின் கட்டளையேற்றுத் தடம்புரண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான காலஞ்சென்ற இரா. சம்பந்தனின் மூலோபாய அச்சுத் தவறிய அரசியலின் விளைவாக 2010 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோன்றியது. மறுபுறம், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக முன்னெடுப்புகளாக ‘தமிழ் சிவில் சமூக அமையம்’, ‘தமிழ் மக்கள் பேரவை’ என்பவை 2013-2014 காலகட்டத்தில் தோன்றின. நாளடைவில், கட்சி அரசியல் உள்ளிட்ட பல காரணிகளால் அந்தச் சமூக முன்னெடுப்புகள் தேக்கமுற்றன. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ‘பொது வேட்பாளர்’ என்ற கருத்தை முன்வைத்து ‘தமிழ் மக்கள் பொதுச் சபை’ தொடக்கப்பட்டுள்ளது. ‘எல்லாவற்றுக்கும் இந்தியாவை எதிர்பார்க்கவேண்டும்’ என்று சிந்திக்கும் இயக்குநர்கள் பின்னணியில் ‘ரிமோட் கொன்ரோல்’களாக மறைந்திருந்து முன்னெடுக்கும் பரிசோதனை என்ற விமர்சனத்தோடு இது ஆரம்பமாகியுள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்திலிருந்த ‘பாலக்காட்டு’ பாதுகாப்பு ஆலோசகர்களின் காலம் போய், பாரதிய சனதா கட்சியின் ஆட்சி நிலவுகின்ற தற்கால இந்தியாவின் உள்விவகார அமைச்சர் அமித் சாவையும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலையும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜய்சங்கரையும் நோக்கிய முனைப்புகளில் நாட்டம் செலுத்துவோருக்கு முதலில் ஒரு செய்தி அழுத்தமாகச் சொல்லப்படவேண்டும்.

‘சாவையும் டோவலையும் ஜய்சங்கரையும் நோக்கிய எலியோட்டப் போட்டியில் காட்டும் நாட்டத்தை விடவும் ஈழத்தமிழர் விடுதலை அரசியலின் பாற்பட்ட கொள்கை நிலைப்பாட்டில் நாட்டம் காட்டப்படுவது முக்கியம்,’ என்பதே அந்தச் செய்தி.

எலியோட்டத்தில் ஈடுபடும் சிலர் ஜய்சங்கரை ‘வெட்டியோட’ டோவல் அல்லது சா பயன்படுவார் என்றுவேறு கதையளக்கிறார்கள். அதுவும், புலியோட்டத்தில் வந்தவர்கள் செய்யும் எலியோட்ட விந்தைகள் மிக வேடிக்கையானவை!

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தமிழக சட்டசபையில் ஏகமனதாக முன்வைத்த தீர்மானத்தில் இருந்து ஈழத்தமிழர் தொடர்பான இந்திய வெளியுறவுக்கொள்கை தமிழ்நாட்டின் ஊடாக அணுகப்படவேண்டும்.

இதற்குத் தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு கைகொடுக்காது என்றால், அதற்கு அப்பாற்பட்ட, அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட, குடிசார் சமூகத் தளம் ஒன்றின் ஊடாக அல்லது அதையும் விடக் காத்திரமான அடிமட்டத் தளம் ஒன்றின் ஊடாக ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு நீதி, சுயநிர்ணய உரிமை தொடர்பான தமிழ்நாட்டு அணுகுமுறை கட்டமைக்கப்படவேண்டும்.

பேராளர்களதும் பிரமுகர்களதும் அரசியலை விட அறிவின் பாற்பட்டு எழுச்சி கொள்ளும் அடிமட்ட மக்கள் தளம் ஈழத் தமிழர் விடுதலை அரசியலுக்கு முக்கியமானது.

இந்தியா குறித்து மட்டுமல்ல, அமெரிக்காவையோ, தற்போது அதன் முழு அடிவருடிகளாகக் கட்டுண்டுபோயிருக்கும் ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையோ, அல்லது மாற்றுத் துருவமாகியுள்ள சீனாவையோ, ரசியாவையோ, ஏன் வேறெந்தத் தென்னுலக நாடுகளில் எவற்றையேனுமோ நோக்கி ‘எலியோட்ட அரசியல்’ செய்வதில் காட்டும் நாட்டத்தை விட, ஈழத்தமிழர் தேசத்தின் கொள்கை சார் விடுதலை அரசியலில் நாட்டம் செலுத்துவது முக்கியமானது.

‘இந்தியாவால் மட்டுந்தான் இனிமேல் அரசியற் தீர்வைக் கொண்டுவர இயலும்’ என்று சிந்திக்கும் ‘மறைமுக இயக்குநர்கள்’ மட்டுமல்ல, ஏற்கனவே ஈழத் தமிழர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மேற்கின் திரிபுவாதிகள் சிலருடன் சேர்ந்து முடக்கும் நோக்கோடு இயங்கியதில் செயற்தடம் (track record) பதித்த விற்பன்னர்கள் சிலரும் நேரடி இயக்குநர்களாகவும் மறைமுகங்களாகவும் தற்போது உருவாகியுள்ள ‘தமிழ் மக்கள் பொதுச் சபை’ என்ற நகர்வுக்குள் பொதிந்துள்ளமை ‘பாம்பின் கால்’ அறிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை.

அதேவேளை, நல்ல நோக்குடையோரும் இப் பொதுச்சபைக்குள் அடங்கியுள்ளனர்.

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவர்.

ம. ஆ. சுமந்திரனும் இராசமாணிக்கம் சாணக்கியனும் பயணிக்கும் திரிபுவாதப் பயணத்துக்கு ஒத்துப்போகாதவர். இதனால், மக்கள் மத்தியில் அவருக்கான ஓர் அலை எழுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனினும், பொதுவேட்பாளர் மீதான அன்புணர்வுக்கு அப்பால், பொதுச்சபையின் கொள்கை நிலைப்பாடு தொடர்பான கேள்விகள் மிக முக்கியமானவை.

இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வேண்டிய தடவழித் திருத்தம் மேற்கொள்ளப்படாவிடின், விடுதலை அரசியல் அறிவு இல்லாது, விடுதலை உணர்வை மட்டும் கொண்டு இயங்குவோரை ‘உசார் மடையர்கள்’ என்று வகைப்படுத்திவிட்டு சுமந்திரனோடு இரகசியமாகக் ‘கூழ்குடித்துக் கொண்டாடும்’ பேச்சாளப் பேராளர்கள் பொதிந்திருக்கும் பொதுச்சபை உள்ளிருந்து பொறிவைக்கும் கெடுவினைக்குத் தளமாகும் நிலை ஏற்படும்.

பொதுச் சபையின் கொள்கை நிலைப்பாடுகள் எவையென்பது இதுவரை முன்வைக்கப்படவில்லை.

பொதுச்சபையின் கொள்கை நிலைப்பாடு என்பது நாணயத்தின் ஒரு பக்கம் போன்றது. பொதுவேட்பாளரின் நிலைப்பாடு அதனோடு ஒத்துப்போகவேண்டிய இன்னொரு பக்கம்.

பொதுவேட்பாளரின் கொள்கைப் பிரகடனம் வெளிவருவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொதுவேட்பாளரின் தேவை பற்றிய கருத்துநிலை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது.

பொதுவேட்பாளருக்கான தேர்தற் பிரகடனம் இறுதி நேரம் வரை இழுபறிப் பட்டு எழுதப்படுவது என்பது கொள்கையைத் தெளிவுபடுத்தாத பொதுச்சபைக்குப் பின்னாலிருக்கும் அவலநிலைக்கு ஓர் அறிகுறி.

இது ஓர் இந்திய சார்பு ‘முஸ்தீபு’; இதன் கொள்கையும் அணுகுமுறையும் கடல் கடந்த ‘ரிமோட் கொன்ரோல்’ ஒன்றினால் இயக்கப்படுகிறது; குந்தகமான மேற்கு மற்றும் சீனத் தொடர்புடைய வெளித்தரப்புகளுக்கு விசுவாசமான சிலர் இதற்குள் பொதிந்துள்ளனர்; பீடையான பதின்மூன்றாம் திருத்தத்தைப் பற்றியே பேசியும் எழுதியும் உழலுவோர் இதற்குள் கை பிசைந்துள்ளனர்; வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவன உதவியில் இயங்குவோர் இதற்கு இயக்குநர்களாக உள்ளனர் என்பது போன்ற பல தனிமனிதர்கள் சார்ந்த பார்வைகளைக் காணமுடிகிறது.

இவை தொடர்பாகக் கண்காணிக்கப்பட்ட உறுதிப்படுத்தலுக்கும் அப்பாற் சென்று, வெறும் குற்றச்சாட்டுகளாக மட்டும் அவற்றை மட்டுப்படுத்திப் ‘பாசாங்கு’ செய்தவண்ணம் இந்த முன்னெடுப்பை ஆராய்வது பொருத்தமானது.

இவ்வாறான ஆராய்வு, விடுதலை உணர்வு கொண்டோரை ‘உசார் மடையர்கள்’ ஆகக் கையாளப்படாமல் விடுதலை அரசியல் நோக்கி நகர்த்த உதவும்.

ஆக, பொதுச்சபைக்குப் பின்னாலுள்ள தொலை இயக்கிகளும் சிக்கலான இயக்குநர்களும் மறைமுகங்களும் யாவர், இவர்களின் கடந்தகாலச் செயற்தடங்கள் தான் என்ன என்பவற்றைப் பட்டியலிட்டு, ‘முயல் பிடிக்கும் நாயை முகத்தில் தெரியும்’ என்ற அடிப்படையில் தனிநபர்கள் சார்ந்த செயற்தடங்களின் அடிப்படையில் பொதுச்சபையை மதிப்பீடு செய்வதைக் காட்டிலும், இந்தப் பரிசோதனையை ஆக்கபூர்வமான திசைக்குத் திருப்பலாமா என்ற கேள்வியை முன்வைத்துக் கருத்துகளை முன்வைக்கும் கோணத்தில் இதை ஆராய்வுக்காக அணுகலாம்.

இந்த அடிப்படையில், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்தகாலப் படிப்பினைகளில் விடுதலை அரசியலுக்குத் தேவையான அறிவியல் முக்கியத்துவம் கொண்டவற்றை எடுத்து நோக்குவது காலத்தின் தேவை.

‘சிவில் சமூகம்’, ‘தமிழ் மக்கள் பேரவை’ ஆகிய முன்னைய முன்னெடுப்புகள் சர்வதேசச் சட்டங்கள் பற்றிய கணிசமான அறிவியற் புரிதலும், ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் நிலைப்பாட்டு வரைபுகளை மேற்கொள்ளும் திறமையும் கொண்டோரால் இயன்றளவு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு இந்திய சார்பு நிலைக்குப் பறிபோகாமல் 2013-2014 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன.

இறுதியில், 2016 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் பேரவை முன்வைத்த தீர்வுத்திட்ட யோசனைகளோடு இந்தப் போக்கின் இறுதியான முரண்நிலைகள் வெளிப்பட்டன.

2013 தொடக்கும் 2016 வரையான இம் முயற்சிகளில் கொள்கை வகுப்பாளர்களாகச் செயற்பட்டவர்கள் இந்திய மாயைக்குள் மாட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், மேற்குலகு கடைப்பிடித்துவருகின்ற இலங்கை தொடர்பான தாராளவாத மேலாதிக்கத்துக்கு உட்பட்ட வெளியுறவுக்கொள்கையால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம், மயக்கம், தயக்கம் என்பவையும் அவரவர் ஈர்ப்புகளாலும் தெரிவுகளாலும் ஏற்பட்ட சார்புநிலைகளும் அவர்களைப் பீடித்திருந்தன.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் தாராளவாத மேலாதிக்கம் உலகளாவி ‘அழுகிப்போயிருக்கும்’ காலம் இது.

ஆதலால், இனியாவது இதை உணர்ந்து மேற்குறித்த முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் தம்மைச் சுதாகரித்துக்கொண்டு மீண்டும் சரிவர இயங்குவார்களா என்ற கேள்வி எழலாம்.

‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசை கொள்வது’ போன்றது இக் கேள்விக்கான விடை.

இன்னொருவகையில் சொல்வதானால், கொள்கையை வெளிப்படுத்தாத பொதுச் சபையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாது, கடந்தகாலத்தில், குறிப்பாக 2009 ஆண்டுக்குப் பின்னர், வெளிப்படுத்தப்பட்ட கொள்கை நிலைப்பாடுகளை மீள்வாசிப்புச் செய்வது இக் கேள்வியைக் கேட்போருக்கும் விடையளிக்க முற்படுவோருக்குமான ஒருவித மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சியாக அமையலாம்.

‘தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகள்’ என்ற தலைப்பில் 2016 ஆம் ஆண்டில் வெளியான தீர்வுத் திட்டத்தை தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற அரசியற் கட்சித் தரப்புகள் இலங்கை அரசையும் சர்வதேச தரப்புகளையும் நோக்கி எடுத்தாண்டுவருகின்றன. ஆகவே, அவர்களுக்கும் அவர்களின் மாயாஜால வித்தைகளை நம்புவோருக்கும் கூட இந்த மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சி அவசியமாகிறது.
 

• • •



தமிழ் மக்கள் பேரவை 2016 ஆம் ஆண்டு முன்வைத்த தீர்வுத்திட்ட யோசனைககள்

தீர்வுத்திட்டத்தின் முன்னுரை பின்வரும் கருத்துநிலைப்பாட்டை முன்வைக்கிறது:

அரசியலமைப்பு ஆக்க முயற்சிக்கு முன் எட்டப்படவேண்டிய அரசு தொடர்பான தொலை நோக்குப் பார்வையானது ஓர் உடன்படிக்கை வடிவில் (பொஸ்னியாவில் கைச்சாத்திடப்பட்ட டேய்டன் உடன்படிக்கை, வட அயர்லாந்து பிரச்சனை தொடர்பில் கைசாத்திடப்பட்ட குட் (f)ப்ரைடே உடன்படிக்கை போன்றவொரு உடன்படிக்கை) சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவேண்டியது அவசியமாகும். இவ்வுடன்படிக்கையில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்களில் தமிழர்களின் தேசம் என்ற அங்கீகாரம், பாரம்பரிய தாயகம் ஆகியன உள்ளடங்கும். எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள பௌத்த சமூகமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் இந்த உடன்படிக்கையை தன்னிச்சையாக கிழித்தெறிந்தால் வேறு மாற்றுவழிகள் எதுவும் இல்லாதவிடத்து தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம் என்ற ஏற்பாடும் இந்த உடன்படிக்கையில் உள்வாங்கப்படவேண்டும். இவ்வுடன்படிக்கையானது மூன்றாம் தரப்பொன்றால் (அமெரிக்கா, இந்தியா போன்ற அரசொன்றால் அல்லது ஐக்கிய நாடுகள் சபையினால்) உத்தரவாதம் அளிக்கப்பட்ட உடன்படிக்கையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு சமூக ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை தொடர்பாகக் குறிப்பிடும் அறிமுகத்தைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான வரைபு முன்மொழிவில், ‘இலங்கை அரசின் தன்மை’ என்ற முதலாம் உறுப்புரையிலேயே மேற்குறித்த சமூக உடன்படிக்கை நோக்கத்துக்கு முரண்பாடான கருத்துகள் வெளிப்படுகின்றன.

தமிழில் ‘பல்-தேசிய அரசு’ என்று குறிப்பிடும் முதலாம் உறுப்புரையானது ஆங்கிலத்தில் அதற்குரிய சொல்லாடலான Multi-national State என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிக்கலான பொருள் பொதிந்த Pluri-national State (பன்மைத்துவத் தேசிய அரசு) என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது.

பல்தேசிய அரசு என்பது வேறு, பன்மைத்துவத் தேசிய அரசு என்பது வேறு.

முன்னையது சரிசீரமைவுடைய (symmetric) தேசங்களைக் கொண்ட அரசைக் குறிப்பிடுவது. பின்னையது சரிசீரமைவற்ற (asymmetric) அரசைக் குறிப்பிடுவது.

ஈழத்தமிழர் தேசமானது சிங்கள தேசத்துடன் சரிசீரமைவுடைய தேசம்.

சரிசீரமைவற்ற தேசிய அரசு என்றால் என்ன?

நில ஒருமைப்பாடற்ற (நில-நீர்த் தொடர்ச்சியற்ற) ஆள்புலப் பரப்புகளை ஆங்காங்கே கொண்டதாகச் சிதறி வாழும் பழங்குடி மக்களையும் அதேவேளை நில ஒருமைப்பாடுள்ள ஆள்புலங்களைக் கொண்ட ஏனைய மக்களையும் சமவுரிமையோடு உள்ளடக்கியிருப்பதை அங்கீகரிப்பதாக பொலிவீயா, எக்வாடோர் போன்ற நாடுகள் தம்மை Pluri-national State என்று குறியீட்டளவில் அழைத்துக்கொள்கின்றன.

இலத்தீன் அமெரிக்கச் சூழமைவுக்கு ஏற்றதான நல்லதொரு கோட்பாடு எனினும் ஈழத்தமிழர் விடயத்தில் இது பொருத்தமற்றது.

‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்று சுமந்திரன் 2003 தொடக்கம் சொல்லிவருவதற்கு ஈடானது.

இந்தவகையில், ஈழத்தமிழர்களின் தேசக் கோட்பாட்டுக்கும் பன்மைத்துவத் தேசிய அரசுக்கும் கொள்கைப் பொருத்தம் இல்லை.

உறுப்புரை 1.3 தமிழ்த் தேசத்தின் ஆள்புலப் பரப்பை வடக்கு-கிழக்கு என்று வரையறுப்பதில் தவறவில்லை.

அதேபோல, உறுப்புரை 1.4 தமிழ் மக்கள் பராதீனப்படுத்தப்பட முடியாத (மறுக்கவொண்ணா) சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுவதிலும் தவறவில்லை.

‘தனது சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிக்கும் இடத்து ஐக்கிய இலங்கை அரசிற்கு தமிழ் மக்கள் தமது பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றனர்,’ என்று தமிழ் மொழியில் அது குறிப்பிடுகிறது.

ஆனால், ஆங்கிலத்தில் அதற்கு மாறாக, இரா. சம்பந்தன் பாணியில் “The Tamil People pledge their commitment to a united and undivided Sri Lanka which respects and affirms the right to selfdetermination of the Tamils,” என்று குறிப்பிடுகிறது.

சம்பந்தன் பிரிவினையை மறுப்பதை இரட்டிப்பாக அழுத்திச் சொல்வதற்கு ‘indivisible and undivided Sri Lanka’ என்ற சொற்தொடரைப் பயன்படுத்திவந்தார்.

இவற்றுக்கிடையில் மிக நுட்பமான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

இந்த இரண்டு பாணிகளும் பராதீனப்படுத்த இயலாத (மறுக்கவொண்ணா, inalienable) சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கின்றன.

அதேவேளை, இறுதிப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆங்கில வரைபு எது என்பது பற்றிய தெளிவும் பொதுவெளியில் இல்லாதுள்ளது.

இவற்றை விட, அவசரகால உறுப்புரை 21.1 பராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமைக்கு முற்றிலும் புறம்பானதாக, அதை மறுதலிப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய பார்வை ஏற்கனவே வெளியான மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா என்ற கட்டுரையில் விளக்கமாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது.
 

 “21.1 மாநில அரசாங்கம் ஒன்று சமஷ்டியில் இருந்து அரசியல் அமைப்புக்கு முரணான வகையில் பிரிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்றும் அவ்வாறான பிரிவு உடனடியானதொன்று என மத்தியின் தலைவர் திருப்திப்படுமிடத்து, அவர் அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்துமிடத்து ஆளுநர் நிறைவேற்று அதிகாரங்களையும் மற்றும் முதலமைச்சரினதும் மாநில அமைச்சரவையினதும் அதிகாரங்களையும் அந் நிலைமைகளுக்கு ஏற்றவாறு, பொறுப்பெடுத்துக்கொள்ளலாம்.”

இவ்வாறு குழப்பமான சொற்பதங்களும், மொழிக்கு மொழி வேறுபடும் இரட்டை நிலைப்பாடுகளும் வெளியானமைக்கான காரணம் என்ன என்பதற்கு அவர்களே ஏதாவது மொட்டை விளக்கம் தருவார்கள். ஆகவே, அந்த ஆராய்ச்சி தற்போது அவசியமற்றது.
 

* * *



தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை 2016 ஆம் ஆண்டு வெளிப்பட்டதென்றால், அதற்கான முதற்படிநிலை ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் சிவில் சமூக முனைப்பில் ஆரம்பித்திருந்தது.

2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சிவில் சமூகத்தின் ஐந்து பரிந்துரைகள், 2014 ஆம் ஆண்டில் மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசப் முன்னிலையில் வெளியான தமிழ் சிவில் சமூக அமையத்தின் 14 புள்ளிக் கொள்கைகள் ஆகியவையும், இன அழிப்புத் தொடர்பாக சிவில் சமூகம் மேற்கொண்ட முடிவுகளும் எதிர்கால நகர்வுகளுக்கான சில அடிப்படையான அடித்தளங்களையும் அளவுகோல்களையும் முன்வைத்திருந்தன.

அதுமட்டுமல்ல, தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட நிலைப்பாடுகளிலும் பரிந்துரைகளிலும் இரு மொழித் திறன் வெளிப்பட்டிருந்தது.

கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும்போது அவற்றைக் கச்சிதமான மொழி நடையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமல்ல, சிங்களத்திலும் வெளிப்படுத்துவது நல்லது.

நிலைப்பாடுகள் திரிபுபடுத்தப்படாமல் இருப்பதற்காகவும், அவை பொருத்தமான சட்டகங்கள் ஊடாக அனைத்துத் தரப்புகளும் விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாகவும் முகவாசகங்கள் கட்டமைக்கப்படவேண்டும்.

இந்தத் திறமைகளை தமிழ் சிவில் சமூக அமைய வரைபுகளில் காணலாம்.

2013 ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்ட சிவில் சமூக ‘முன்னோடி’ நிலைப்பாடு

சிவில் சமூகம் என்ற அமைப்பு தனது கொள்கைப் பிரகடனத்தை 2014 ஆம் ஆண்டு முன்வைப்பதற்கு முன்னதாக, அதன் அமைப்பாளர்கள் ஜேர்மனியிலுள்ள Berghof Foundation என்ற நிறுவனத்தால் தமிழ் அமைப்புகளையும் கட்சிகளையும் ஒன்றுகூட்டி விவாதிக்கும் அமைதி முயற்சிகள் தொடர்பான பேர்லின் மாநாட்டுக்கு 2013 ஜனவரியில் அழைக்கப்பட்டிருந்த போது, ஐந்து பரிந்துரைகளை அவர்கள் அங்கு முன்வைத்திருந்தனர்.

முதலாவது பரிந்துரையில் மிகத் தெளிவாக இலங்கையில் அரசியலமைப்புக்கு-முற்பட்ட தேசங்களுக்கிடையிலான சமூக உடன்படிக்கை (pre-constitutional social contract drawn between the different constituent nations) ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பதும், அதன் ஏற்புக்குப் பின்னரே அரசியல் தீர்வைக் காண இயலும் என்பதும் விளக்கப்பட்டிருந்தது.

பதின்மூன்றாம் சட்டத்திருத்தப் பொறிமுறையை இனச் சிக்கலின் அரசியற் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவும் எடுத்துக்கொள்ள இயலாது என்பதைத் துல்லியமாகக் குறிப்பிட்டது மட்டுமல்ல, கூட்டாட்சி (சமஷ்டி) கூட சிங்கள் பௌத்த முதன்மைவாதப் படிநிலைச் சிந்தனையுடனான அரசியலமைப்புக்குள் செயற்படுத்துவதற்கு இயலாததாகவே இருக்கும் என்ற நிலைப்பாட்டையும் அந்த முதலாவது பரிந்துரை பின்வருமாறு எடுத்துவிளக்கியது:

“The 13th amendment failed not just by the fact that it was set within a unitary framework and because of its flawed institutional design but also because of a conception of a hierarchical state with Sinhala Buddhism at the top. Even a Federal constitution within a Sinhala Buddhist framework would not be workable unless the hierarchical conception of the state is altered. Hence our insistence on the pre-constitutional recognition of Tamil Nationhood and self-determination.”

இவ்வாறு சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட முதலாவது பரிந்துரையில், சுயநிர்ணய உரிமை என்பதைப் பிரிவினை என்று அர்த்தப்படுத்த வேண்டியதில்லை என்ற கருத்தை முன்வைக்க முற்பட்ட கூற்று சரியாக அமைந்திருக்கவில்லை.

அதாவது சுதந்திரத்தை (பிரிவினையைக்) கோராத சுயநிர்ணய உரிமை என்பதான தோரணையில் அந்த வசனம் கோளாறானதாகப் பின்வருமாறு அமைந்திருந்தது: “Needless to say this does NOT mean a separate state”.

இரண்டாவது பரிந்துரையில், பன்மைத்துவத் தேசிய அரசு (Pluri-nationalist state) என்ற கோட்பாட்டை இலங்கை அரசு மறுத்துவருவது பற்றிய விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சொற்பதம் பயன்படுத்தப்படுவது தொடர்பான சிக்கல் ஏற்கனவே இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வழிவரைபடம் பற்றித் தெளிவான முதலாவது பரிந்துரையை முன்வைத்த அதேவேளை, நான்காவது பரிந்துரையில் பிரித்தானியாவிலான ஸ்கொட்லண்ட் சட்டவாக்கம் (Scotland Act 1998) நோக்கிய நகர்வை மக்கள் இயக்கத்துக்கான முன்மாதிரியாக சிவில் சமூக முன்னெடுப்பாளர்கள் எடுத்துக்காட்டியிருந்தனர்.

எழுத்து மூலமான ஓர் அரசியலமைப்பைக் கொண்டிருக்காத ஐக்கிய இராச்சியத்தின் ஒற்றையாட்சிக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை, சுயாட்சித் தன்மையை அல்லது ஒரு தேசிய இனத்துக்குத் தனித்துவமான சுயநிர்ணய உரிமையைக் கூட புதிய சட்டவாக்கத்தால் உறுதிப்படுத்தலாம்.

அதனாற் தான் 1998 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஸ்கொட்லான்ட் சட்டம் போன்ற சட்டங்களூடாக படிப்படியாக ஸ்கொட்லான்டுக்கான ஆட்சிமுறையை அங்கு உருவாக்கமுடிந்தது.

ஆனால், இலங்கையில் வேண்டுமென்றே இறுக்கமாக எழுத்து மூல உறுப்புரையாக வடிவமைக்கப்பட்டுள்ள, ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்த மத முன்னுரிமையையும் அவ்வரசியலமைப்பைப் பின்பற்றிச் செய்யப்படும் எந்தச் சட்டவாக்கத்தின் ஊடாகவும் மாற்றியமைக்க இயலாத உறுப்புரைகள் கொண்டு இயற்றப்பட்டதாகவும் அழுந்தியதாகவும் (codified and entrenched) ஒற்றையாட்சி அரசியலமைப்பு அமைந்துள்ளது.

ஆகவே, அவ்வரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதாகவே ஈழத்தமிழர் தேசத்தின் கொள்கை சார் விடுதலை அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும்.

ஈழத்தமிழர் தேசத்தின் இறைமையின் பாற்பட்ட சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பில், பிரித்தானியாவின் எழுதப்படாத ஒற்றையாட்சி அமைப்பில் ஸ்கொட்லான்ட் சட்டவாக்கம் செய்யப்பட்டதைப் போலச் செய்வது இயலாத கைங்கரியம்.

முற்றிலும் புதிதான அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் (constitutional amendments) ஊடாக அன்றி முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பு (reconfiguration of the constitution) ஊடாகவே இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படலாம்.

ஆகவே, ஸ்கொட்லான்ட் வழிவரைபட மாதிரியை ஈழத்தமிழர்கள் கைக்கொள்ளலாம் என்பதாக எமது மக்களிடம் சிந்தனைகளைத் தூண்டி தவறான அரசியலமைப்பு வழிவரைபடங்களைத் தயாரிக்க இடமளித்துவிடக் கூடாது.

தமிழ் அரசியற் கட்சிகளும் குடிசார் சமூகங்களும் இணைந்து செயற்படுவதற்கான முன்னுதாரணமாக ஸ்கொட்லண்ட் மாதிரியைக் கையாளலாம் என்று உள்ளார்ந்த சமூகத்திற்குச் சொல்லப்படும் செய்தி சர்வதேச மட்டத்தில் வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்படும்.

எனவே, எதை முன்னுதாரணமாகக் காட்டுகிறோம் என்பதில் அதிக சிரத்தை வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் இருப்பினும், ஒட்டுமொத்தமான மதிப்பீட்டில் இந்த ஐந்து பரிந்துரைகளை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னான கொள்கை சார் அரசியலின் மீளெழுச்சிக்கான காத்திரமான வரைபு நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகக் கணிப்பிடலாம்.

ஈழத்தமிழர்களிடம் விடுதலை அரசியலுக்கான இராசதந்திர அறிவு 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் முளைவிடும் என்ற நம்பிக்கையை அந்த ஐந்து நிலைப்பாடுகளை முன்வைத்தவர்களின் முனைப்புத் தந்தது.

அதிலும் குறிப்பாக, ஐந்தாவது பரிந்துரை பொதுவாக்கெடுப்பு நோக்கியதாகவும் இருந்தது.

பிற்காலத்தில், ‘சிங்கப்பூர்க் கோட்பாடு’, அதன் பின்னான ‘இமாலயப் பிரகடனம்’ என்ற ஆபத்தான அமிலப் பரிசோதனைகளுக்குள் ஈழத்தமிழர்களைத் தள்ளிவிட்ட மேற்குலக ‘அரச சார்பற்ற’ தன்னார்வ ஆய்வு மற்றும் நிதி நிறுவன மாயாவிகள் கூட்டியிருந்த ‘பேர்லின் மாநாடு’ அது.

அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய பரப்புரைச் செயற்பாட்டளர்களிற் சிலரை சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்துக்கும் முன்னதாகவே தனது வியூகத்துக்குள் வளைத்துப் போட்டுக்கொண்டிருந்த நிறுவனம் அது.

அவ்வாறான நிறுவனம் கூட்டியிருந்த மாநாடொன்றில், மேற்குறித்த நிலைப்பாடு 2013 ஆம் ஆண்டில் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டதென்பது சிவில் சமூக நிலைப்பாட்டைத் தயாரித்தோரின் மதிநுட்பத்தை மட்டுமல்ல மனவுரத்தையும் வெளிப்படுத்தியது.

இதே மாநாட்டில், தமிழ் சிவில் சமூகத்தின் பரிந்துரைகளுக்கு எதிரான மாற்றுக்கருத்தைக் கொண்டிருந்த மக்கள் அங்கீகாரமற்ற ஒரு சில புலம்பெயர்ப் ‘பேராளர்கள்’ பிற்காலத்தில் சிங்கப்பூர்த் தீர்மானங்களின் பின்னாலும், தற்போது இமாலயப் பிரகடனத்தோடும் தடம்புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பாக நோக்கப்படவேண்டும்.

மேற்குறித்த ஐந்து பரிந்துரைகளையும் முழுமையாக உள்ளடங்கிய அறிக்கையை Civil Society insists on pre-constitutional recognition of Tamil nation, self-determination, என்ற ஆங்கில மொழியிலான தமிழ்நெற் செய்தியின் இணைப்பில் பார்வையிடலாம்.

வேண்டிய திருத்தங்களையும் மேலதிக தெளிவையும் மேற்குறித்த அடிப்படை நிலைப்பாடுகளில் ஏற்படுத்தி அதை மெருகூட்ட முற்படாத 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னரான எந்த ஒரு பொது முன்னெடுப்பும் ஆழமான கேள்விகளுக்கு உள்ளாக்கப்படவேண்டியது என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் 2014 ஆம் ஆண்டுப் 14 புள்ளிக் கொள்கைப் பிரகடனம்

தமிழ் சிவில் சமூகம் என்ற பொதுவான பெயரில் இயங்க ஆரம்பித்திருந்த மேற்குறித்த முன்னெடுப்பு மறைந்த மன்னார் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்களின் அழைப்பின் பேரில் 2014 நவம்பர் மாதம் தனது 14 புள்ளிக் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது.

இதன் ஆங்கில வடிவத்தை Tamil civil society formalises TCSF organisation, என்ற தமிழ்நெற் செய்தியின் இணைப்பில் காணலாம்.

குறித்த அமைப்பைக் கட்டிய முயற்சியில் ஈடுபட்டவர்கள் இரு மொழித் திறமையாளர்கள் என்ற வகையில் அவர்களிடம் தமிழ் மொழியிலான கொள்கைப் பிரகடனமும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

இதன் முதலாம் புள்ளி நிலைப்பாட்டில், இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அலகு (self determining unit of the Tamil Nation) என்ற தெளிவுபடுத்தலும், இந்தப் பாரம்பரிய தாயகத்தில் இறைமைக்குரிய தேசமாக தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கொண்டுள்ளனர் என்பதோடு சுயநிர்ணய உரிமைக்கும் இறைமைக்குரிய தேசம் என்பதற்கும் தமிழர்களைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்றான இரு திசைத் தொடுப்பு உள்ளதென்ற தெளிவுபடுத்தலும் வெளிப்படுத்தப்பட்டது (Owing to their right to self-determination, the Tamil people are a sovereign nation and vice versa).

இருப்பினும், அறிந்தோ அறியாமலோ, திம்புக் கோட்பாடுகளை அடியொற்றி ஆரம்பித்திருந்தது மறைமுகமாக மக்களாணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நுட்பமாகத் தவிர்ப்பதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது.

இந்திய உளவுத் துறையின் மூத்தவரொருவரால் திம்புவில் வரைபாக்கம் செய்யப்பட்டு, அப்போதைய தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் விவாதிக்கப்பட்டு மெருகூட்டப் பட்டவையே திம்புக் கோட்பாடுகள்.

2024 ஜூலை மாதம் 23 ஆம் நாளன்று சீனத் தலைவர் சீ சின்பிங்கின் தலைமையில் 14 பலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட பெய்ஜிங் தீர்மானத்தை விடவும் சிறப்பான முக்கியத்துவம் ஈழத்தமிழர் போராட்டத்தில் திம்புக் கோட்பாடுகளுக்கு இருக்கக்கூடும்.

ஆனால், திம்பு முழுமையான மக்களாணையின் பாற்பட்ட அரசியல் வேணவாவைப் பிரதிபலிக்கும் ஒன்றல்ல.

இந்திய மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சமரசம் நோக்கிய இறுதிச் சவால் (ultimatum) நிலைப்பாடாக அது அமைகிறது.

இன அழிப்புக்கான சர்வதேச நீதி போன்ற முக்கியமான தன்மைகளை அது உள்ளடக்கியிருக்கவில்லை.

சமரசம் நோக்கிய இறுதிச் சவால் நிலைப்பாடுகளில் இருந்து கொள்கைகள் வகுக்கப்படுவதில்லை. அவை பேச்சுவார்த்தை மேசைக்குரிய நிலைப்பாடுகள் மட்டுமே.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடுத்தாள்வதில் தயக்கம் ஏற்பட்டவுடன் திம்புக் கோட்பாடுகளை எடுத்தாள்வது சிலருக்குப் ‘பழக்க தோஷம்’.

இன அழிப்பு என்ற சர்வதேசக் குற்றத்தைத் தனித்துவமாக அடையாளப்படுத்தி அதை மையப்படுத்திய நீதிக்கான நியாயப்பாட்டைச் சரிவர முன்வைப்பதில் சிவில் சமூகத்தின் பதினோராம் புள்ளி தவறியிருந்தது:

“11. TCSF stands for accountability for past injustices and maintains the position that accountability cannot be bartered away for the attainment of a political solution. We also firmly believe that domestic mechanisms lack sufficient will to deliver on accountability.”

கடந்தகால அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை மட்டுமே அது பேசியிருந்தது.

இது ஒரு பாரிய குறைபாடு.

எனினும், மேற்குறித்த பதினோராம் புள்ளி நிலைப்பாட்டில் அரசியல் தீர்வுக்காக பொறுப்புக்கூறலை பண்டமாற்றம் செய்யவோ பேரம் பேசவோ இயலாது என்பது மிகத் தெளிவாக எடுத்தியம்பப்பட்டிருந்தது.

அதேவேளை, உள்நாட்டுப் பொறிமுறைகள் எதுவும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நம்பகத்தன்மையற்றவை என்பதையும் அந்தப் புள்ளி தவறாமல் விளக்கியிருந்தது.

ஈழத்தமிழரிடையே இன அழிப்புக்கான நீதி பற்றிச் சளைக்காது பேசுபவர்களிற் பலர் இன அழிப்புக்கான நீதிகோரலை அரசியற் தீர்வோடு பண்டமாற்றம் செய்துவிடலாம் என்ற விளக்கமற்ற கோளாற்றுத் தனத்தை அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றனர்.

இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரும் பயணம் அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால், ஏற்புடைய அரசியல் தீர்வு ஒன்று உருவாகினாலும், ஏன் தமிழீழமே தங்கத் தட்டில் வைத்துத் தரப்பட்டாற் கூட, இன அழிப்புக்கான சர்வதேச நீதி கைவிடப்படல் ஆகாது.

இந்த அறம்சார் அறிவியற் தெளிவு பலருக்கும் இல்லாதிருக்கும் சூழலில் பதினோராம் புள்ளி நீதி பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டது என்பதைத் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக, அதன் 12 ஆம் புள்ளி நிலைப்பாடு இன்னொரு விடயத்தை நேரடியாகத் தெளிவுபடுத்தியிருந்தது.

எந்த ஒரு சர்வதேசத் தரப்போடும் சார்புநிலை மேற்கொள்ளாமல் சுயாதீனமான தளத்தில் இருந்து பொறுப்புக்கூறலுக்கும் அரசியற் தீர்வுக்குமான தமிழர் பயணம் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே அந்த நிலைப்பாடு.

இன அழிப்பை மையப்படுத்திய நீதிகோரலை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதில் பரவலான தயக்கம் தமிழ்ச் செயற்பாட்டுத் தளத்துக்குள் வெளிச்சக்திகளால் பரப்பப்பட்டிருந்த காலம் அது.

ஆனால், இப்போது அப்படியான நிலை இல்லை.

உலகளாவிய சர்வதேச நீதிப் பரப்பில் இன அழிப்பு என்ற பெருங்குற்றம், அதுவும் அரச பொறுப்பு, தனித்துவத்தோடு மியான்மாரின் ரொஹிங்யா இன அழிப்புத் தொடக்கம் இஸ்ரேலின் பலஸ்தீனர் மீதான இன அழிப்பு வரை கையாளப்படுகிறது.

இன அழிப்பு என்ற பெருங்குற்றத்தை யூதர்களைத் தவிர்ந்த எவரும் பேசக்கூடாது என்று கருதிய யூத சியோனிஸ்டுகளே இன அழிப்பைப் புரிகிறார்கள் என்பது நம்பகமானதாகக் கருதப்படும் நிலை உலக நீதிமன்ற மட்டத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவில் 30 வயதுக்குக் கீட்பட்ட பெரும்பான்மை இளையோரிடம் கூட உருவாகிவிட்டது.

இன அழிப்புக் குறித்த சர்வதேச நீதி தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் 2014 ஆம் ஆண்டு வெளிப்படுத்திய நிலைப்பாடு

2011 ஆம் ஆண்டில் ஐ.நா. மேற்கொண்ட விசாரணை அறிக்கையிலோ, 2012 ஆம் ஆண்டில் மேற்கொண்ட உள்ளக அறிக்கையிலோ, அல்லது ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களிலோ இன அழிப்பு என்ற குற்றத்தை மையப்படுத்திய ஆய்வுகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

தொடர்ந்து, இலங்கையில் தமக்குத் தேவையான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேவைக்கு மட்டும் மட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தலைமையிலான இலங்கைக்கான முதன்மைக் குழு (Core Group on Sri Lanka) ஊடாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படலாயின.

இந்தத் தீர்மானங்கள் பேரவையால் நியமிக்கப்பட்ட விசாரணைப் பொறிமுறைகளின் ஆய்வெல்லைகளைத் (Terms of Reference) தீர்மானிக்கையில் இன அழிப்பை விசாரிப்பதற்கான ஆய்வெல்லையை வழங்காது புறக்கணித்திருந்தன.

பொதுவாக, தீர்மானங்களால் வழங்கப்படாத ஆய்வெல்லைக்குள் விசாரணைப் பொறிமுறை தனது ஆணையை (Mandate) விரிவுபடுத்தாது.

ஆகவே, குறித்த ஆய்வெல்லைகளைக் கெட்டிப்படுத்துமாறு தமிழ்த் தரப்புக் கோரிக்கைகள் தெளிவாகக் கோரிக்கைகளை முன்வைத்திருக்கவேண்டும்.

2021 ஆம் ஆண்டு வரை அது நடைபெறவில்லை. இன அழிப்பு என்பது பெருத்த விவாதங்களின் பின் உள்ளடக்கப்பட்டபோதும் 2021 ஆம் ஆண்டிலும் தெளிவற்ற கோரிக்கைகளாகவே நிலைப்பாடு வெளிப்பட்டிருந்தது என்பது வேறு கதை.

ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் நீட்சியான இன அழிப்புக் குற்றங்களைப் போர்க்குற்றங்கள், மானுடத்துக்கெதிரான குற்றங்கள் என்ற இரண்டு வகைகளுக்குள் மட்டும் குறைத்து, பொறுப்புக்கூறலை கலப்புப் பொறிமுறையாக மட்டுப்படுத்தி, இலங்கையில் தமக்குத் தேவையான புவிசார் நலன்கள் அடிப்படையிலான ஓர் ஆட்சியை உருவாக்கும் தேவைக்காக உள்ளக ‘நல்லிணக்கப் பொறிமுறை’ ஒன்றை ஏற்படுத்தி, சர்வதேச நீதியை உள்ளகப் பொறிமுறைகளோடு பண்டமாற்றுச் செய்துகொள்வது அமெரிக்கா தலைமையிலான் மேற்குலகின் நிகழ்ச்சிநிரலாக இருந்தது.

இதற்கேற்ப அமெரிக்காவின் இலங்கை தொடர்பான தாராளவாத மேலாதிக்க வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டிருந்தது.

இதை விளங்கியிருந்த தமிழ் சிவில் சமூக அமையம் மேற்குறித்த நியதி தொடர்பில் தயக்கத்துள்ளாகியிருந்தது.

இவ்வாறு, மேற்குலகின் வெளியுறவுக் கொள்கை திணித்த நியதிகளோடு ஏதோ ஒரு வகையில் ஒத்து ஓடவேண்டும் என்று தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட தயக்க நிலையில் இருந்தபோதும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேற்கு நாடுகளின் முதன்மைக் குழு முன்வைத்த தீர்மானங்களின் வரைபுகளில் நீர்த்துப் போகும் தன்மைகள் வெளிப்பட்டபோது அவற்றைச் சுட்டிக்காட்டவும் தமிழ் சிவில் சமூக அமையம் தவறவில்லை.

இன அழிப்புக்கான சர்வதேச நீதியின் அவசியம் குறித்து வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்ற நகர்வு முன்னெடுக்கப்பட்டபோது, அதற்கு எதிரான செயற்பாடுகளை ம. ஆ. சுமந்திரன் மிகக் கடுமையாக ஒரு புறம் கட்டவிழ்த்துவிடலானார்.

இதற்குச் சமூக மட்டத்தில் பதிலிறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, தமிழ் சிவில் சமூக அமையம் 2014 ஒக்ரோபர் 24 ஆம் நாளன்று தனது மேற்குலகு சார்ந்த தயக்கத்துக்கும் அப்பாற் சென்று ஐந்து-புள்ளிக் கருத்துநிலையை வெளிக்கொணர்ந்தது.
 

• • •



இக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் தொடர்பான முழுப் பொறுப்பையும் சிவில் சமூக அமைய முன்னெடுப்பில் இதய சுத்தியோடும் நேர்மையோடும் செயற்படப் புறப்பட்டவர்கள் மீது சுமத்திவிடமுடியாது.

ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் சமூக மட்டத்தில் இன அழிப்பு நீதியை மையப்படுத்திய செயற்பாடு தெளிவாக மேலெழுந்திருந்தால் தமிழ் சிவில் சமூக அமையம் போன்ற அமைப்புகள் கொள்கை சார் விடுதலை அரசியலைப் பொருத்தமாக மேற்கொண்டிருக்கும்.

‘சட்டியில் இருந்தாற் தானே அகப்பையில் வரும்’.

அதுவும், தக்க தலைமை இல்லாதவிடத்து ‘அகப்பையை’ விட ‘சட்டியின்’ பங்கு முக்கியமாகிறது.

இன அழிப்பு நீதி குறித்து மட்டுமல்ல, ஈழத்தமிழர் என்ற தமது அடையாளத்தைக் கூட எடுத்தியம்பும் துணிவு தாயகத்தில் இருப்போருக்கு 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருக்கவில்லை.

ஈழத்தமிழர் என்ற அடையாளப்படுத்தலை மேற்கொள்வதற்குப் பதிலாக ‘அடையாளம்’ என்று மட்டுப்படுத்தித் தன்னை அடையாளப்படுத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும், அதற்குத் தேவையான நிதிமூலங்களை மேற்குலக, குறிப்பாக அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு உட்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற என்ற போர்வையில் வேறு நிகழ்ச்சிநிரல்களோடு இயங்கும் தன்னார்வ நிறுவன வட்டாரங்களுக்குள் தேடுவதிலுமாகத் தனது எல்லையை தமிழ் சிவில் சமூக அமைய முன்னோடிகள் மட்டுப்படுத்திக்கொண்டது கவலைக்குரியது.

தன்னார்வ நிறுவனர்களின் சட்டைப்பைக் கடதாசி அமைப்புகளாகக் குடிசார் முன்னெடுப்பை மாறவிடாமற் காப்பாற்றியிருக்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு பரந்துபட்ட சமூகத்துக்கு உரியது.

சமூகத்தின் இந்த நிலைக்கான காரணத்தைத் தேடினால், ‘எஸ்பொ’ என அறியப்பட்ட மூத்த ஈழத்தமிழ் எழுத்தாளர் மறைந்த எஸ். பொன்னுத்துரை அவர்கள் கனடாவில் ஓர் இலக்கியச் சந்திப்பில் முன்வைத்த விளக்கமே மிகப் பொருத்தமான பதிலாகக் கிடைக்கும்.

அது தலைமை பற்றியதோ, ‘அகப்பை’ பற்றியதோ அல்ல, ‘சட்டி’ பற்றியது. அந்த விளக்கத்தை எடுத்தியம்புவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.

போர்க்குற்றங்கள், மானுடத்துக்கெதிரான குற்றங்கள் என்பவை எல்லாம் ஈழத்தமிழர் பார்வையில் இன அழிப்பு என்ற ஒற்றைப் பெருங்குற்றத்துக்குள் அடக்கப்படவேண்டியவை.

ஆனால், இன அழிப்பு என்பதை மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாம் நிலையில் நிரற்படுத்துவதோ அல்லது பரந்துபட்ட பொதுச்சொல்லாடலுக்குள் புதைப்பதோ கோளாறான அணுகுமுறை.

இந்தப் படிப்பினைகளைக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

அகப்பையைப் பற்றிய கரிசனையை விட சட்டியைப் பற்றிய கரிசனை மேலோங்கவேண்டும்.

இன அழிப்பு, சுயநிர்ணய உரிமை, அரசியற் தீர்வு போன்றவை வெறும் சுலோகங்களாக மட்டும் மக்களால் அணுகப்படும் நிலையில் இருந்து, அரசியற் தெளிவு பெற்ற மக்களால் அணுகப்படும் நிலையாக மாற்றுவது பொது முன்னெடுப்புகளில் நாட்டம் கொண்டோர் மேற்கொள்ளவேண்டிய அடிமட்ட வினைத்திட்பம் (grassroots activism) ஆகவேண்டும்.

‘பொங்கு தமிழ்’, ‘சங்கு தமிழ்’ என்ற உணர்வெழுச்சி அரசியல் மட்டும் போதாது.

சரியானதொரு தலைமை இருந்தபோது பொங்குதமிழ் என்று உணர்வெழுச்சி அரசியல் மக்கள் ஆற்றலை வெளிப்படுத்த உதவியது. இந்த உணர்வெழுச்சி, தலைமையற்ற காலத்தில் அறிவார்ந்த விடுதலை எழுச்சியாக மாறவேண்டும்.

சிவில் சமூக அமைய நிலைப்பாடுகளிலிருந்த குறைகளைப் போக்கி அவற்றை மேலும் செழுமைப்படுத்தவல்ல கொள்கை நிலைப்பாட்டைக் கூர்ப்பியல் ரீதியாகச் செப்பனிடுவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் புதிதாகச் சக்கரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது கற்றுக்குட்டித்தனமானது.

இந்தக் கற்றுக்குட்டித்தனத்தை தற்போது தமிழ் மக்கள் பொதுச் சபை தாரளமாக வெளிப்படுத்திவருகிறது என்பது அதன் இயக்குநர்களின் கூற்றுகளில் வெளிப்பட்டுள்ளது.

இது ஆரோக்கியமான அறிகுறி அல்ல.

தேர்தல் அரசியற் கட்சிகள் பொதுக் கட்டமைப்பைக் கொள்கையளவில் ஏற்றாலும் நடைமுறையில் அதனைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உள்ளிருந்து சிதைத்தன.

ஆதலால், தேர்தல் அரசியல் கட்சிகளோடு சமதரப்பு அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது உசிதமற்றது.

இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆரம்பத்திலேயே தவறியுள்ளது.

தவறுகளில் இருந்து விரைவாகப் பாடத்தைக் கற்றுக்கொண்டு தடவழித்திருத்தம் மேற்கொள்ளும் ஆற்றல் ‘பொதுச்சபைக்கு’ இருக்கிறதா என்பது தொக்குநிற்கும் கேள்வி.

தேர்தல் அரசியற் கட்சிகளைக் கட்டுப்படுத்தி ஆற்றுப்படுத்த வல்ல ஆற்றலைப் பெருக்கக்கூடிய மக்கள் இயக்கம் கட்டப்படுவது, கடினமான பாதையெனிலும், அதுவே ஆரோக்கியமானது.

மக்களிடம் விடுதலை உணர்வு சரியாகத் தான் இருக்கிறது என்பதற்குப் பல அறிகுறிகள் உள்ளன.

ஆனால், விடுதலை அரசியல் பற்றிய அறிவு மிகக் குறைவாயுள்ளது.

உணர்வு மட்டும் சட்டியில் இருந்தாற் போதாது. விடுதலை அரசியலுக்கான அறிவும் சட்டியில் இருந்தாற் தான் அகப்பை சரியாக இயங்கும்.

ஆக, மக்கள் மட்டத்தில் விடுதலை அரசியலின் அறிவைக் கொண்டு செல்வது காலம் தந்துள்ள வரலாற்றுக் கடமை.

https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39992

சிறந்த பொருளாதாரக் கொள்கை யாருடையது?

2 months 1 week ago

சிறந்த பொருளாதாரக் கொள்கை யாருடையது?

ச.சேகர்

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னமும் இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் முக்கிய போட்டியாளர்கள் கடந்த வாரம் தமது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிட்டிருந்தனர்.

இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பொருளாதாரக் கொள்கை என்பது காகிதங்கள் சிலவற்றுக்குள் அடங்கியிருக்கும் பொருளாக மாத்திரமே அமைந்திருந்ததுடன், வாக்காளர்கள் மத்தியில் அவை தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனாலும், இம்முறை, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எதிர்வரும் காலங்களில் இன்னும் சவால்களுக்கு முகங்கொடுக்கவுள்ள நிலையில், முக்கியமான காலகட்டத்தில் நடைபெறும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோர் வெளியிடும் பொருளாதாரக் கொள்கை என்பது தொடர்பில் பலரும் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். குறிப்பாக, பொருளாதார மீட்சியை நோக்கிய பயணத்தில், சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசு உடன்படிக்கையை ஏற்படுத்தி, அந்த வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படும் நிலையில், அந்த உடன்படிக்கைகளின் நிபந்தனைகளின் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இதனால் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அபேட்சகர்கள், தாம் பதவிக்கு வந்தவுடன் இந்த உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளடங்கலாக பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய கருப்பொருளாக இந்த பொருளாதாரக் கொள்கையை முன்வைத்துள்ளனர். இவ்வாறு தற்போதைய ஜனாதிபதியும், சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்லது பொருளாதாரக் கொள்கையை ஆராய்வதற்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது.

இந்த பத்தி உண்மையில் பொது மக்களுக்கு, நாட்டின் வாக்காளர்களுக்கு பொருளாதாரக் கொள்கை பற்றிய தெளிவுபடுத்தலையும், எந்தக் கொள்கையில் எவ்வாறான அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைப் பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. மாறாக, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பக்கசார்பானதாக அமைந்திருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு தொடர விரும்புகின்றேன். பொது மக்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவோருக்கும் இடையில் கைச்சாத்திடப்படாத ஒரு உடன்படிக்கையாக இந்தக் கொள்கை அமைந்துள்ள போதிலும், இதுவரை காலமும் அந்தக் கொள்கை அவ்வாறு பார்க்கப்படவில்லை. பெருமளவு செலவு செய்யப்பட்டு, இந்த கொள்கை அச்சிடப்பட்டு, அதனை வெளியிடுவதற்கு பல தரப்பினரும் அழைக்கப்பட்டு வைபவம் ஏற்பாடு செய்யபட்டு பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு வந்த போதிலும், அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் அந்ததந்த கட்சிகளின் தலைவர்கள் எந்தளவுக்கு விடயங்களை அறிந்து வைத்துள்ளனர் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இந்தக் கொள்கைகளை தயாரிப்பது, அந்ததந்த துறைசார் நிபுணர்கள் குழுவினாலாகும். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு எழுத்து மூலம் வெளியிடப்படும் இந்த கொள்கைப் பிரகடனத்தை ஆதாரமாகக் கொண்டு, அரசியல் தலைவர்களை பொறுப்புக்கூரச் செய்யும் நிலைக்கு தள்ளும் நிலைக்கு நாடு உயர வேண்டும். மேலேத்தேய நாடுகளில் இவ்வாறான ஒரு கலாசாரமே நடைமுறையிலுள்ளது.

தேர்தல் மேடைகளில் ஒரு கட்சியினர் மற்றைய கட்சியினரை தாக்கி, ஏளனப்படுத்தி மக்களை கவரும் வகையில் கருத்துகளை வெளியிடுவதும், அதற்கு பதிலளிப்பது போன்று இதர தரப்பினர் தமது மேடைகளில் கருத்துகளை வெளியிட்டு மக்களின் கரகோஷங்களைப் பெறுவதும், நாட்டின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக அமையாது. மாறாக, தாம் என்ன செய்யப் போகின்றோம், எவ்வாறு செய்யப்போகின்றோம் என்பதை தெளிவுபடுத்துவதே பிரதானமானதாகும். நாட்டுக்கும், மக்களுக்கும் அவையே பயனுள்ளதாக அமைந்திருக்கும். அதனை உறுதி செய்யும் ஆதாரமாக இந்தக் கொள்கை அமைந்துள்ளது. போட்டியாளர்களின் ஏனைய கொள்கைகள் அரசியல் ரீதியில் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருந்தாலும், பொருளாதாரக் கொள்கை என்பது பெருமளவில் இலக்கங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டமைவதால், அவை தெளிவானதாக அமைந்திருக்க வேண்டும்.

image_f1ceedf45f.jpg

பொதுவான கருத்தின் பிரகாரம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வசம் பொருளாதாரம் தொடர்பில் அறிவார்ந்த அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர் எனும் கருத்து நிலவி வந்த நிலையில், அந்தக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த கொள்கை தொடர்பில் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பும் காணப்பட்டது. இந்தக் கொள்கையில் விஞ்ஞாபனம் சாத்தியப்படுமா என்பதை உறுதி செய்யும் செயற்திட்டம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு அவசியமான கருப்பொருட்களை இந்த அணியின் கொள்கை கொண்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமையினால், அது தொடர்பில் பெருமளவில் அவரின் கொள்கையில் விளக்கமளிக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனும் அனுமானத்துடன், புதிதாக ஆட்சியேறவுள்ள இதர இரு தேர்தல் அபேட்சகர்களின் பொருளாதாரக் கொள்கைகளை ஒப்பீட்டளவில் எடுத்துக் கொண்டால், தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் புதிய கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) அவசியம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையான அம்சம் இந்த கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) ஆகும். அவ்வாறு அதில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது, தற்போது ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகும். கடந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதற்கு சுமார் ஒரு வருட காலம் வரை தேவைப்பட்டதை நாம் அறிவோம். எவ்வாறாயினும், புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அது போன்ற காலப்பகுதி தேவைப்படும்பட்சத்தில், நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணி வரத்தை இந்த ஒரு வருட காலப்பகுதியினுள் எவ்வாறு உறுதி செய்வது என்பது தொடர்பான விளக்கங்கள் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் இல்லை. இது மிகவும் சிக்கலான செயலாகவே பார்க்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் வதியும் தமது ஆதரவாளர்களின் உதவியைக் கொண்டு, சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒரு வருட காலப்பகுதியில் திரட்டிக் கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும். பிணையம் ஒன்றை உருவாக்கி அவற்றில் முதலிடச் செய்வது எனும் கொள்கையை பின்பற்றினாலும், அது தொடர்பான தெளிவுபடுத்தல்கள் எதுவும் அவர்களின் கொள்கையில் இல்லை. எனவே, இந்தக் கொள்கை அரசியல் ரீதியில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் பின்னாலுள்ள மக்களுக்கு ஒருவித ஏமாற்றத்தை வழங்குவதாகவே அமைந்துள்ளது. உயர்ந்த மட்ட, தெளிவற்ற பொருளாதாரக் கொள்கை ஒன்றே அவர்கள் வசம் உள்ளது.

image_eeb73b4cfc.jpg

மாறாக, ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கையில், இந்த கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நீடித்த நிதி வசதி உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனூடாக, உயர் தொழில்நுட்ப, உயர் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தற்போது காணப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த நிதி வசதி உடன்படிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதனை மேற்கொள்வது பற்றியே ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டில் மூலதனம் இன்மை, போதியளவு புத்திஜீவிகள் இன்மை போன்ற சூழலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது புறக் காரணிகளில் தங்கியிருக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கை அமைந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் காணப்படுவதைப் போன்று, அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு தாய் நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து, அரச நிறுவனங்களை அதன் கீழ் கொண்டு வந்து, அரசின் தலையீடின்றி அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை பேணுவது போன்ற ஒரு முறைமையைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையை எடுத்துக் கொண்டால் அதில் தெளிவான இலக்குகள் என எதுவும் உள்ளடக்கப்படவில்லை. கடந்த பதினைந்து, இருபது வருட காலப்பகுதியில் வெளியிடப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் அடங்கியிருந்த அம்சங்களை திரட்டி அதனை உள்ளடக்கியதாகவே ஜனாதிபதியின் கொள்கை அமைந்திருந்தது. நாட்டை கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மீட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளமையால் தம்மை தெரிவு செய்யுமாறு வாக்காளர்களிடம் வேண்டி ஜனாதிபதியினால் எழுதிய கடிதம் மாத்திரமே இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கை பல நடைமுறைச் சாத்தியமான, செயற்திட்டங்கள் பலதைக் கொண்டுள்ளமை உண்மையில், இதுவரையில் கண்டுற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தூர நோக்குடைய ஒரே திட்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக முக்கிய மூன்று போட்டியாளர்களை சார்ந்த கொள்கைகளில் இது முதன்மை பெற்றுள்ளது என்பது எமது கருத்து.

image_7fecb2a8aa.jpg

உண்மையில் இதுபோன்ற கொள்கை தேர்தல் நடைபெறுவதற்கு ஆகக்குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து, பல தரப்பினரின் கருத்துகளைப் பெற்று, அந்த கொள்கையை மேம்படுத்திக் கொள்வதற்குக்கூட கட்சிகளுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டிருக்கும். ஆனாலும் இந்த விஞ்ஞாபனங்கள் தேர்தலுக்கான திகதி அருகில் தெரியும் சுமார் இரண்டு வாரங்கள் வரையுள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ளமையானது, அனைத்து தரப்பினராலும் இவற்றை முழுமையாக வாசித்து, அதிலுள்ள அம்சங்களை தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமா எனும் கேள்வியும் இல்லாமல் இல்லை.

இருந்தாலும், எமது வாசகர்களுக்கு எம்மாலான தெளிவுபடுத்தலைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த பத்தி அமைந்திருக்கும் என நாம் கருதுகின்றோம். இன்னும் ஐந்து வருட காலப்பகுதிக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைந்திருக்கும். மீண்டும் எமக்கு நெருக்கடிகளுக்குள் சென்றுவிட முடியாது. தமக்கு விருப்பமான போட்டியாளருக்கு வாக்களிக்கும் உரிமை சகலருக்கும் உண்டு, வழமை போலல்லாது, இம்முறை யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னமும் தீர்மானிக்க முடியாமல் மதில் மேல் பூனை போன்ற நிலையிலிருக்கும் வாக்காளர்கள் எவரேனும் இந்த பத்தியை வாசித்துவிட்டு சாமர்த்தியமான தீர்மானத்தை மேற்கொள்வார்களாயின், நாட்டுக்கு அது வெற்றியாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

இவ்வாறான கொள்கைகள் வெளிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அரசியல் ரீதியான தலையீடுகள் இன்றி செயற்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக இந்த மூன்று கொள்கைகளிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கையை கொண்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கை, அந்த கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆட்சிபீடம் ஏறினால், அவர்கள் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்.
 

https://www.tamilmirror.lk/வணிகம்/சிறந்த-பொருளாதாரக்-கொள்கை-யாருடையது/47-343484

ஜனாதிபதித் தேர்தல் 2024; தமிழனாகவும் இலங்கையனாகவும் சிந்தித்தல்

2 months 1 week ago

கந்தையா அருந்தவபாலன் 

ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்டிருக்கும் நாடொன்றில் அந்தந்த இனங்களின் தனித்துவத்தை ஏற்று அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கும் சமத்துவமான ஆட்சிமுறைமை நிலவும் நாடுகளில் வாழும் மக்களிடையே தமது இன உணர்வை விட தமது நாடு என்ற தேசிய உணர்வு மேலோங்கி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மாறாக பெரும்பான்மைத் தேசிய இனம் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் பலவற்றை மறுத்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதும் ஆட்சி முறைமையைக் கொண்டிருப்பதுடன், அத்தேசிய இனங்களை ஒடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஒருநாட்டில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களுக்குத் தேசிய உணர்வை விடத் தமது இன உணர்வே மேலோங்கி இருக்கும். இத்தகைய ஒரு நிலையே இலங்கையிலும் காணப்படுகிறது.


குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் தங்களை இலங்கையர் என்று கருதுவதைவிடத் தமிழர்கள் என்று வெளிப்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இலங்கையர் என்ற அடையாளம் தமிழர்க்கு இருந்தாலும் இலங்கையர் என்ற உணர்வு அவர்களிடத்து இயல்பாக ஏற்படவில்லை. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தலைவர்களிடத்தும் படித்தவர்களிடத்தும் இலங்கையர் என்ற உணர்வு ஓரளவு மேலோங்கிக் காணப்பட்டாலும் அவ்வாட்சிக்காலத்தின் இறுதிக்கூறிலிருந்து தமிழர்களிடம் காணப்பட்ட இலங்கையர் என்ற உணர்வு மங்கத் தொடங்கிவிட்டது. அரசாட்சியில் இலங்கையர் பங்கெடுப்பதற்காகப் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கையரின் பங்கு படிப்படியாக வளர்ச்சியடைய, தமிழர்களின் இலங்கையரென்ற உணர்வு படிப்படியாக வீழ்ச்சியடைந்தமை வரலாறு.


இனபேதம் காரணமாக இலங்கைத் தேசிய காங்கிரஸ்  (Ceylon National Congress) இலிருந்து சேர்.பொன்.அருணாசலத்தின் வெளியேற்றத்துடன் படித்தோரிடையே காணப்பட்ட இலங்கையர் என்ற உணர்வு ம் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டது. இதன் உச்ச நிலைதான் தந்தை செல்வாவின் தனிநாட்டுக் கோரிக்கையும் அதற்கான ஆயுதப் போராட்டமும்.  ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றாலும் தமிழர்கள் தம்மை இலங்கையராகவன்றி தமிழராகவே எண்ணும் உணர்வு முற்றுப்பெறவில்லை. ஏனெனில் அதற்கான எந்தவொரு அரசியல் மாற்றமும் இன்னும் இலங்கையில் நிகழவில்லை. இலங்கையரெனும் வெறும் அடையாளத்துடனும் தமிழர் என்ற உணர்வுடனுமே இதுவரையில் நடந்த எல்லாத் தேர்தல்களுக்கும் தமிழர்கள் முகம் கொடுத்துள்ளனர். இந்த ஒரு பின்புலத்திலிருந்தே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்கள், தமிழர்கள் எவ்வாறு முகம் கொடுப்பார்கள்  என்று சிந்திக்கவேண்டும்.
 

1978 இல் ஆக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கிணங்க இதுவரை எட்டு ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எட்டுத் தேர்தல்களிலும் தென்னிலங்கைச் சிங்கள வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், அத்தேர்தல்களில் இலங்கையராகவன்றி தமிழராகவே சிந்தித்து வாக்களித்துள்ளதைக் காணமுடியும். அதாவது வெற்றி தோல்விகளுக்கு அப்பால் தம்மினத்துக்கு எதிராகச் செயற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராகவே வாக்களித்து வந்துள்ளனர். இவற்றுள் ஈழ விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்த பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற ஆறு தேர்தல்களிலும் தமிழ்மக்கள் இலங்கையராகவன்றி தமிழராகவே சிந்தித்து வாக்களித்துள்ளமை தெளிவாகவே புலப்படும். 1982 இல்  நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்கூட பொதுவேட்பாளராக அன்றித் தனித்துப்  போட்டியிட்ட குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கிய வாக்குகளுக்கு சம அளவிலான வாக்குகளை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை எதிர்த்துப் போட்டியிட்ட கொப்பேகடுவவுக்கும்  (SLFP) தமிழ் மக்கள் வழங்கியிருந்தனர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த பிரேமதாசவுக்கு எதிராக 1988  இலும் பின்னர் சமாதானப்புறாவாக தன்னை வெளிப்படுத்திய சந்திரிகாவுக்கு 1994, 1999 களிலும் 2004இல் விடுதலைப்புலிகளின் கோரிக்கையை ஏற்று புறக்கணிப்பிலும்  2010, 2015, 2019 களில் தமிழினப் படுகொலையாளிகளாக தமிழ் மக்களால் கருதப்படும் ராஜபக்க்ஷக்களுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களும் தம்மைப் போலவே இலங்கையராகச் சிந்தித்துச் செயற்படவேண்டும் என்பதே சிங்களத் தலைவர்களதும் சிங்கள மக்களதும் விருப்பமாகும். ஆனால் அவர்கள் அதற்காகத் தமிழர்களுடன் விட்டுக்கொடுக்கவும் இணக்கத்தை ஏற்படுத்தவும் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. இந்த நாட்டில் தன்னாட்சி உரிமை கொண்ட மூத்த குடிகளான தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்க அவர்கள் தயாராக இல்லை. ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து சமத்துவமான முறையில் கூட்டாட்சி செய்வதன் மூலம் இலங்கையர் என்ற எண்ணத்தை உருவாக்க அவர்கள் ஒருபோதும் முயன்றதில்லை. உண்மையில் அவர்கள் எதிர்பார்க்கும் இலங்கையராக சிந்திப்பது என்பது இங்குள்ள ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சிங்களவராகச் சிந்திக்கச் சொல்வதாகும்.


அதாவது எனக்குச் சமமாக அன்றி கீழாக இருக்கவேண்டும். ஆனால் என்னைப்போல இலங்கையனாகச் சிந்திக்க வேண்டுமென்பதாகும். இது மஹாவம்ச புனைகதைகளை அடித்தளமாகக் கொண்டு  சிங்கள மக்களிடையே கட்டியெழுப்பப்பட்ட பௌத்த – சிங்கள பேரினவாத சிந்தனையின் விளைவாகும். பெரும்பான்மையான சிங்கள மக்களைப் பொறுத்தவரை தேசியம் என்பதைக் குறிக்கும் ‘ஜாதிக’ என்பது ‘ஜாதிய’என்ற  இனத்தைக் குறிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த ஜாதிய என்பது சிங்களச் சாதி அல்லது இனமாகும். தேசிய நல்லிணக்கம் என்பது கூட சிங்கள மக்களின்  அல்லது சிங்களக் கட்சிகளின் ஒற்றுமையாகக் கருதப்படுகிறதே அன்றி இங்கிருக்கும் தேசிய இனங்களின் ஒற்றுமையாகக் கருதப்படுவதில்லை. சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என 1956 இல் தொடங்கிய அதிகாரக் குரல்கள் ஒரே தேசம் ஒரே குரல், ஒரே நாடு ஒரே சட்டம்,  One Nation One Country என இன்று வரை தமது  காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பதை தமிழர்கள் எப்படி மறக்கமுடியும்? நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்கா கூறியதுபோல, இந்நாட்டில் தமிழர்கள், சிங்களவர் எனும் மரத்தைச் சுற்றிப்படரும் கொடிகளாக அல்லது முன்னாள் இந்நாள் ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியது போல, இங்கு தமிழர்கள் விரும்பினால் இருந்துவிட்டுப் போகலாம் உரிமைகள் பற்றிக் கதைக்கக் கூடாது என்ற மனநிலையில் சிங்களத் தலைவர்கள் இருந்துகொண்டு தமிழர்களையும் தம்மைப்போல இலங்கையராக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையே இங்கு காணப்படுகிறது.
 

நாம் தமிழர்களாக மட்டுமன்றி இலங்கையராகவும் சிந்திக்க விரும்புகிறோம் என கடந்த காலங்களில் தமிழ் மக்களாலும் தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு இறுதியில் என்ன நடந்தது? பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் தொடங்கி இடையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை, இறுதியாக நல்லாட்சி அரசின் புதிய அரசியலமைப்பு போன்ற எல்லாவற்றுக்கும் நடந்தது என்ன என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.  அன்று சொந்த முகத்தில் தமிழ் மக்களுக்குத் துரோகஞ் செய்தவர்கள் இன்று ஜனாதிபதி வேட்பாளர் என்ற முகமூடியுடன் தமிழ் மக்களுக்கு அதைத் தருவோம் இதைத் தருவோம் என ஆசை காட்டுவதைப் பார்க்கிறோம். புல்லைக்காட்டி மாட்டை அழைப்பது போல தேர்தல் விஞ்ஞாபன சொல்லைக்காட்டி தமிழர்களை வளைக்க எண்ணும் இத்தலைவர்களின் கடந்த கால  தமிழர் விரோதச் செயற்பாடுகளை மறக்காத தமிழ் மக்கள் தாங்கள் மாடல்லர்  மீண்டும் அடுப்பங்கரையை நாடாத சூடுகண்ட பூனைகள் என்று சொல்லாமல் விடுவார்கள் என்று எவ்வாறு அவர்கள் எதிர்பார்க்க முடியும்? இன்றும் கூடப் பிச்சையிடுவது போல தருவோம் என்று கூறுகிறார்களே அன்றிப் பகிர்வோம் என்று கூறவில்லை. யார் வந்தாலும் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற ஒத்துழைப்போம் என்று கூறாது நான் வந்தால் தருவேன் என்றுதான் கூறுகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது?

1978 ஆம் ஆண்டில் மாமனார் ஜே. ஆரின் காலத்திலிருந்து இன்றுவரை ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவராக, ஜனாதிபதியாக இருந்துள்ளார். இதுவரை தமிழ் மக்களுக்கு ரணில் செய்த நன்மைகள் எவை? சந்திரிகா முன்மொழிந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் எரித்த கூட்டத்தினர்க்கு தலைமை வகித்தார், கருணாவைப் புலிகளிடமிருந்து தானே பிரித்தார் என்றும் அதனால் தன்னாலேதான் யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்தது என மார் தட்டினார், நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற எலும்பைக்கொடுத்து  ஆளுங்கட்சியாகச் செயற்படவைத்ததுடன், புதிய அரசியலமைப்பு என்ற நாடகத்தையும் வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தார், ஜனாதிபதியாக வந்தவுடன் 13 ஐப் பற்றி வாயெடுக்க, பௌத்த துறவிகள் முறைத்துப் பார்த்தவுடன் அப்படியே தன்வாயை மூடிவிட்டார். இப்போது தமிழ் வாக்குகளுக்காக மீண்டும் பழைய பல்லவி பாடத் தொடங்கிவிட்டார்.


வர்த்தகப் பொருளாதாரத்தையே தேரவாத வர்த்தகப் பொருளாதாரமெனப் பெயர் சூட்டி பிக்குகளை மகிழ்விக்க எண்ணும் ரணில் அப்பிக்குகளை மீறி தமிழருக்குத் தீர்வு தருவார் என நம்பலாமா? கூரையைறி கோழிபிடிக்க முடியாதவர் வானமேறி வைகுண்டத்துக்குத் தமிழர்களைக் கூட்டிச் செல்லப் போவதாகக் கூறுகிறார். மஹிந்த தன்னை விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்ட வீரன் என்று கூறி மக்களிடம் வாக்குக் கேட்டது போல, மற்றவர்கள் எல்லாரும் ஓடியொழிந்தபோது முன்வந்து பொருளாதார அழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவந்தவர் தானே எனக்கூறி மக்களிடம் ரணில் வாக்குக் கேட்கிறார். அது ஓரளவு உண்மையென்றாலும் தமிழ் மக்களுக்கு அது பழகிப்போனதொன்றாகும். விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என பல ஆண்டுகளாக தங்கள் மீது ஏவப்பட்ட வெடிகுண்டுகளை மட்டுமன்றி மிக மோசமான பொருளாதாரக் குண்டுகளையும் தாங்கி வாழ்ந்து மீண்ட தமிழ் மக்களுக்கு எரிவாயுவுக்கும் பெற்றோலுக்குமான காத்திருப்பு வரிசைகள் கால் தூசுக்குச் சமானம். அதனால் இந்த விடயத்தில்கூட தமிழ் மக்கள் இலங்கையராக எண்ணுவதைவிட தமிழராக எண்ணுவதற்கே முக்கியத்துவமளிப்பர்.
 

ரணில், அனுர என்பவர்களுடன் ஒப்பிடும்போது சஜித் பலவீனமான ஒரு தலைவர் என்பதை அவரது கடந்த கால அரசியல் செயற்பாடுகளிலிருந்து மதிப்பிட முடியும்.  கிழட்டு நரி எனப்படும் ஜே. ஆரின் அரசியல் வாரிசு ரணில் போல, தமிழ் மக்களுக்கெதிராக மோசமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ரணசிங்க பிரேமதாசவின் நேரடி வாரிசு  சஜித். தொடக்கத்திலிருந்தே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தையும் மாகாணசபை முறைமையையும் எதிர்த்து வந்ததுடன், அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் கையகப்படுத்தும் கைங்கரியங்களைத் தொடக்கி வைத்த பெருமைக்குரிய பிரேமதாசவின் கொள்கைகளைக் பின்பற்றப் போவதாக அவர் மகன் சஜித் இப்போது பரப்புரை செய்கிறார்.

அடித்தட்டு மக்களின் நலனை மேம்படுத்துவதற்கான பிரேமதாசவின் பல திட்டங்கள் சிறப்பானவை என்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அவரது திட்டங்களையும் சஜித் நடைமுறைப்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம். வடக்கு, கிழக்கில் ஆயிரம் விகாரைகளை புனரமைக்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியவர் சஜித் என்பதை தமிழ் மக்கள் மறக்கமுடியாதவாறு குருந்தூர் மலையும் மயிலிட்டியும் நிலாவெளியும் நாளாந்தம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் பௌத்த மதத்திற்கோ அதன் சின்னமான விகாரைகளுக்கோ எதிரானவர்களல்லர். ஆனால் அவை அடக்கு முறைக்கும் ஆக்கிரமிப்புக்குமான சின்னங்களாக மாறுவதற்கு எதிரானவர்கள். இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் இலங்கையராக அன்றித்  தமிழராகவே எப்போதும் தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்புக்கான சலசலப்புத் தோன்றியபோது தற்போதுள்ள மாகாணசபை முறைமைக்கு மேல் அனுமதிக்க முடியாது எனக்கூறிய சஜித், தற்போது வாக்குகளுக்காக 13 ஐ முழுமையாகத் தருவதாகவும் அதில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கையகப்படுத்தாது இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கூறுகிறார்.  காணி, காவல்துறை அதிகாரத்தைத் தருவதாகக் காலையில் யாழ்ப்பாணத்தில் இவர் கூற,  மாலையில் அது ‘பொலிஸ்’ அல்ல ‘செக்குரிட்டிக் காட்’ என கொழும்பில் அவரது பேச்சாளரைக் கூறச்செய்வார். அத்துடன் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகவும் உறுதியளிக்கிறார். மாகாணசபைத் தேர்தல்களைத் தள்ளிவைப்பதற்கான கபடவேலையைச் செய்த நல்லாட்சியில் பிரதமருக்கு அடுத்த நிலை அதிகாரத்திலிருந்தபோது அது தொடர்பாக வாயே திறக்காத சஜித், ஆறு மாதத்தில் தேர்தலை நடத்துவேன் எனக் கூறுவதை தமிழ்மக்கள் எவ்வாறு நம்ப முடியும்?

தமிழர்கள் இலங்கையராகச் சிந்தித்து தனக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கோரும் இன்னொரு முதன்மை வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க. தற்போதைய தேசிய மக்கள் சக்தியினதும் முன்னைய ஜே.வி.பி யினதும் தலைவர் அவர். செஞ்சட்டை அணிந்து பேரணி நடத்தி தம்மை இடசாரிகளாகக் காட்ட முனையும் இவர்கள் உண்மையில் இடசாரிச் சித்தாந்தங்களை கடைப்பிடிப்பவர்களா? தேசிய இனமொன்று பிரிந்து செல்வதற்கான உச்சமட்ட உரிமையைக் கொண்டிருக்கும் என அச்சித்தாந்தம் கூறும்போது  தமிழரின் தேசியப் பிரச்சினையை பொருளாதாரச் சமூகப் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கும் இவர்களை, மதத்தலைவர்களிடம் சென்று அரசியல் ஆசீர்வாதம் வாங்கும் இவர்களை உண்மையான இடதுசாரிகளென தமிழர்கள் எவ்வாறு நம்ப முடியும்?
உண்மையில் இடதுசாரிகள் என்ற பெயரில் கூடியளவு இனவாதத்தைக் கடந்த காலத்தில் விதைத்தவர்கள் இவர்களே. தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு – கிழக்கை நீதிமன்றம் சென்று நிரந்தரமாகத் தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டவர்கள் இவர்களே.

அரசியலமைப்பில் உள்ளதை நடைமுறைப்படுத்துவதற்காக இதை மேற்கொண்டதாக கூறும் அனுர அதே அரசியலமைப்பில் அதே பிரிவில் இருக்கும் மாகாண சபைகளுக்கான காணி, காவல்துறை அதிகாரங்களை ஏன் நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றம் செல்லவில்லை? குறைந்தது அதற்கான குரலைக்கூடக் கொடுக்கவில்லையே. அந்த அரசியலமைப்பின்படி ஏலவே  வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை படிப்படியாகப் பறித்தபோது அதற்கெதிராக ஏன் இவர் குரல் கொடுக்கவில்லை? இப்போது இவர் தமிழர்க்கான நீதியையும் உரிமைகளையும் தான் வழங்கப்போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுகிறார். அதேவேளை யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகளோ, தண்டனைகளோ இல்லை எனவும் கூறுகிறார். தமிழ் மக்கள் கோருவது விடுதலைப் புலிகளுக்கெதிரான செயற்பாடுகளுக்கான நீதியை அல்ல. அப்பாவித் தமிழர்கள் மீதும் பொதுமன்னிப்பின் பேரில் கையளிக்கப்பட்டு, சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான நீதியையே அவர்கள் கோருகின்றனர். இதனை வழங்க மறுப்பவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்குப் பாதகமான சட்டங்களும் நீதி நடவடிக்கைகளும் இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?


முதன்மை வேட்பாளர்கள் மூவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் அதன்மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் என்று கூறுகின்றனர். இலங்கையில் இதுவரை இரண்டு புதிய அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ன. இருபதுக்கு மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 1972 இல் சிறிமா அம்மையாரின் ஆட்சியிலும் 1978 இல் ஜே. ஆரின் ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்புகளினூடாக தமிழர்க்கு எதை வழங்கினார்கள்?  ஏலவே டொனமூர் அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கான கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் இல்லாமலாக்கி மேலும் தமிழ் மக்களுக்குப் பாதகமான உறுப்புரைகளை அரசியலமைப்பில் உள்ளடக்கியதுதானே வரலாறு. இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அதனை இலங்கையராக எண்ணி ஆதரிக்காது தமிழராக நின்று எதிர்த்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் நீங்கள் கோட்டைக்குச் செல்லுங்கள் நாங்கள் நல்லூருக்குச் செல்கிறோம் என அவையிலிருந்து வெளியேறியதும் வரலாறு. இருபதுக்கு மேற்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களுள் இந்தியாவின் அழுத்தத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட 13 ஐ விட ஏனைய திருத் தங்களுள் தமிழர் சார்பாக எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையே. பதிலாக ஏலவே குறையாக வழங்கப்பட்ட 13 ஐயும் வெட்டிக் குறைத்து கோதாக்குவதற்கான தீர்மானங்கள்தானே மேற்கொள்ளப்பட்டன. இந்த இலட்சணத்தில் இவர்கள் கூறும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என அவர்களை நம்பவைக்க முடியுமா?
 

இந்த வகையில் தமிழர்  இலங்கையராகச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை மறுத்து தமிழர்களாகச் சிந்திப்பதற்கான தூண்டுதல்களைத் தொடர்ந்து செய்து வருபவர்கள் சிங்களத் தலைவர்கள். அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் தமக்குத் தேவைப்படும்போது மட்டும் தமிழர்கள் இலங்கையராகச் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக தமிழர்கள் இலங்கையராகச் சிந்திப்பதற்கான அங்கீகாரத்தை முதலில் வழங்குவதற்கு முயலவேண்டும். அதுகூட அவர்கள்  கூறுவது போல நான் செய்வேன், நான் செய்வேன் என தனித்துச் செய்ய முடியாது. நாங்கள் செய்வோம் என அவர்கள் அனைவரும் இணைவதன் மூலமே அது சாத்தியமாகும். அதுவரை தமிழர்கள் தமது அடையாளமாக இலங்கையராகவும் உணர்வில் தமிழர்களாகவுமே இருப்பர். அது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதிபலிக்கும்.

https://thinakkural.lk/article/308963

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள ஒரே பிரச்சினை யாரை நம்புவது என்பதே?

2 months 1 week ago
-விஸ்வாமித்ரா-
“அறியாததை பற்றி ஒருவர்  ஒருபோதும் பயப்படுவதில்லை; அறிந்ததொன்று   முடிவுக்கு வருகின்றது என்றே  என்று ஒருவர் அஞ்சுகிறார் . ~ ஜித்து  கிருஷ்ணமூர்த்தி
ஒவ்வொரு தேர்தலும் அதன் சொந்த வேகத்தை உருவாக்குகிறது. அதன் வாழ்க்கை இயக்கவியல்  அதன் வளர்ச்சியில் சேதனமானது  மற்றும் எப்போதும் தரையில் வேரூன்றியுள்ளது.
 
வேட்பாளர்களும் அவர்களது பதிலீடுகளும்செயற்கையான துணிச்சலில் ஈடுபடலாம்; வாக்காளரிடம் உண்மையைச் சொல்வதை விட, பிரசாரத்தின் முடிவில் அவர் வெற்றி பெற்றால், வேட்பாளரை ஈர்க்கவும், அதன் மூலம் அவரிடமிருந்து ஆதரவைப் பெறவும் அவர்களின் அடிப்படை விருப்பம் அதிகமாக இருக்கலாம். ஆனால் தேர்தல்கள் அடிப்படையில் அவர்களின் சந்தேகத்தின் நிழல்களை மாற்றவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக, தேர்தல்கள் என்று நாம் அழைக்கும் இந்த நிகழ்வுகள் உள் யதார்த்தத்தின் சில காட்டுமிராண்டித்தனமான அம்சங்களைக் கொண்டுள்ளன.
 
பொதுவாக அரசியல்வாதிகளும், குறிப்பாக வேட்பாளர்களும் அரசியலின் ஏற்றத் தாழ்வு, தோல்வி, வெற்றி ஆகியவற்றை நன்கு அறிவார்கள். அரசியலின் புயல் சூழலை சகித்துக்கொண்டு, தாங்குபவர்கள் இறுதியில் பிழைப்பார்கள், வெல்வார்கள் அல்லது தோல்வியடைவார்கள்.
 
தெற்கில் சிங்களவராக இருந்தாலும் சரி அல்லது வடக்கில் உள்ள தமிழர்களாக இருந்தாலும் சரிவாக்காளர் யாராக இருந்தாலும், வேட்பாளரின் கதை நம்பக்கூடியதாகவும், அழகாகவும், நியாயமான நம்பகத்தன்மையுடனும் இருந்தால், வேட்பாளர் பற்றிய அவரது முதல் பார்வை சந்தேகம் மற்றும் அதன் பிறகு நம்பிக்கையாக இருக்கும். எதிரணியின் அடிப்படைச் செய்தியை அதன் வரலாற்று சகிப்புத்தன்மையின் பின்னணியில் சவால் செய்வது ஒவ்வொரு வேட்பாளரின் மீதும் பிரத்தியேகமாக உள்ளது. பெரும்பாலும், வாக்காளர் தனது தவறான நம்பிக்கையை உணர்ந்து கொள்வார், அப்படியானால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர்.
 
வடக்கு வாக்காளர், செல்வநாயகத்தின் தமிழரசுகட்சியின்     காலம் முதல் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்புவரைகுறிப்பாக அவரது இன, கலாசார மற்றும் மதம்  முறைமை மற்றும் வேறுபாடுகளைக் கொண்டு, எமது கடந்தகால  ஆட்சியாளர்கள் அனைவராலும் ஏமாற்றப்பட்டுள்ளார். , பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் யூதர்களை விட தமிழர்கள் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர். ஷேக்ஸ்பியரின் தி மெர்ச்சன்ட் ஒவ்  வெனிஸில் வரும் ஷைலக்கைப் போலவே, தமிழர்களும் ‘பாவம் செய்வதை விட அதிகமாகப் பாவம் செய்திருக்கிறார்கள்’.
 
பெரும்பான்மையான தென்னிலங்கைச் சிங்களவர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஆனால் அது ஒரு உண்மை.
 
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களை ஒருமுறை கைவிட்டார் . இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறிய தாராளவாதி ஒருவர், மகா சங்கத்தினர் மற்றும் உறுதியான குழுவின் அழுத்தத்தின் கீழ் தனது சொந்த பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தை (பணடா -செல்வா . உடன்படிக்கை) ரத்து செய்ய வேண்டியிருந்ததுவளமான மண்ணாக இருந்து நவீன சிங்கள பௌத்த அடிப்படைவாதம் எந்த இடையூறும் இல்லாமல் வளர்ந்தது.
 
எந்த ஒரு சிங்கள பௌத்த அரசியல்வாதியும் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்க்கவோ அல்லது சவால் செய்யவோ மாட்டார். அப்படிச் செய்தால் அது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தாகிவிடும்.
 
பண்டா செல்வா  உடன்படிக்கை கைவிடப்பட்டதன் பின்னர், 1965 பொதுத் தேர்தலின் பின்னர், டட்லி சேனநாயக்க மற்றும் செல்வநாயகம் ஆகியோரால் சேனநாயக்க-செல்வநாயகம்   உடன்பாடு ஆரம்பிக்கப்பட்டது. அது வடக்கு மற்றும் கிழக்கிற்கு மேலும் அதிகாரப் பகிர்வை வழங்குவதாக உறுதியளித்தது. அந்த ஒப்பந்தமும் பண்டா -செல்வா   உடன்படிக்கையை புதைத்த அதே விதியை சந்தித்தது.
 
வடக்குத் தமிழர்களை எரிச்சலூட்டுவது மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாகக் குறைத்து மதிப்பிடும் ஒரு தேசியப் பிரச்சினையை இறுதிவரை பின்பற்றுவதற்கான உள் பலமோ, அரசியல் விருப்பமோ, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோ அதிகாரத்தில் இருந்த காலத்தில் எஸ்   மற்றும் டட்லி இருவருக்கும் இல்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு.
 
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களை ஒருமுறை கைவிட்டார் . இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறிய தாராளவாதி ஒருவர், மகா சங்கத்தினர் மற்றும் உறுதியான குழுவின் அழுத்தத்தின் கீழ் தனது சொந்த பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தை (பணடா -செல்வா . உடன்படிக்கை) ரத்து செய்ய வேண்டியிருந்ததுவளமான மண்ணாக இருந்து நவீன சிங்கள பௌத்த அடிப்படைவாதம் எந்த இடையூறும் இல்லாமல் வளர்ந்தது. எந்த ஒரு சிங்கள பௌத்த அரசியல்வாதியும் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்க்கவோ அல்லது சவால் செய்யவோ மாட்டார். அப்படிச் செய்தால் அது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தாகிவிடும்.
 
பண்டா செல்வா  உடன்படிக்கை கைவிடப்பட்டதன் பின்னர், 1965 பொதுத் தேர்தலின் பின்னர், டட்லி சேனநாயக்க மற்றும் செல்வநாயகம் ஆகியோரால் சேனநாயக்க-செல்வநாயகம்   உடன்பாடு ஆரம்பிக்கப்பட்டது. அது வடக்கு மற்றும் கிழக்கிற்கு மேலும் அதிகாரப் பகிர்வை வழங்குவதாக உறுதியளித்தது. அந்த ஒப்பந்தமும் பண்டா -செல்வா   உடன்படிக்கையை புதைத்த அதே விதியை சந்தித்தது. வடக்குத் தமிழர்களை எரிச்சலூட்டுவது மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாகக் குறைத்து மதிப்பிடும் ஒரு தேசியப் பிரச்சினையைமுடிவுக்கு கொண்டு வரு வதற்கானஆத்ம பலமோ, அரசியல் விருப்பமோ, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோ அதிகாரத்தில் இருந்த காலத்தில் எஸ்.டபிள்யூ .ஆர் . டி     மற்றும் டட்லி ஆகிய இருவருக்கும் இல்லை
 
பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களுக்கும் இந்துத் தமிழர்களுக்கும் இடையிலான இந்த முரண்பாடுகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் தொடர் பகைமைகள் அனைத்தும் வவுனியாவிற்கு  தெற்கில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளின் பிரத்தியேக வசதிக்காகவும் பாவனைக்காகவும் உருவாக்கப்பட்டு இருபத்தேழு வருட யுத்தத்தில் முடிவடைந்தது.
 
போர் முடிந்துவிட்டது. தமிழ்ப் போராளிகளும் அவர்களது படைகளும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு நசுக்கப்பட்டுள்ளன. வடக்கில் ஒரு  அமைதி நிலவுகிறது. எந்த வகையிலும் இது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு அல்ல. யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட   தமது மகன்கள் மற்றும் மகள்கள் வீடு  திரும்பக் காத்திருக்கும் விதவைத் தாய்மார்கள் வடக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஒரு தீர்மானத்தை விடுங்கள், காணாமல் போன இந்த சிறுவர் சிறுமிகள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட அரசாங்கத்தின் மூடிய உதடுகளிலிருந்து வெளிவரவில்லை. தென்னிலங்கை அரசியல் மிகவும் சீர்கெட்டு, சீரழிந்துவிட்டது, அதாவது ஒரு அரசியல்வாதி கூட காணாமல் போன ஆண்களின் மற்றும் பெண்களின் கதியைப் பற்றி வாய் திறக்க முடியாது. இதன் விளைவாக, சிக்கலை முடிக்கவோ அல்லது இறுதி செய்யவோ முடியவில்லை.
 
யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. சிங்கள அரசியல்வாதிகள் வடக்கில் சொல்வதை சிங்களப் பிரதேசத்தில் மீண்டும் கூற முடியாது. இப்பிரச்சினை இவ்வளவு அருவருப்பான சுவையை பெற்று முழு சிங்கள பௌத்த உளவியலையும் விழுங்குகிறது.
இந்த சூழலில்தான் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே கடந்த கால தமிழ்த் தலைவர்களையும் மக்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றிய அந்த  நம்பிக்கையற்ற அரசியல்வாதிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
 
அவர்களின் அரசியல் வம்சாவளி என்பது அவர்கள் எந்த அளவு பெருமையுடனும் அணியக்கூடிய சின்னம்  அல்ல. இரண்டுக்கும் இடையில், ரணில் மிகவும் தாராளவாதமாகத் தெரிகிறார், மேலும் தமிழர்களுக்கு மேலும் அரவணைப்புக் கரத்தை நீட்டத் தயாராக இருக்கிறார், ஆனால் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளிப்பவர்களை ஒரு சுருட்டு முனையில் நம்ப முடியாது! இதனை தமிழ் தலைமைகள் நிபந்தனையின்றி அறிந்து கொள்ள வேண்டும்.
 
யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. சிங்கள அரசியல்வாதிகள் வடக்கில் சொல்வதை சிங்களப் பிரதேசத்தில் மீண்டும் கூற முடியாது. இப்பிரச்சினை இவ்வளவு அருவருப்பான சுவையை பெற்று முழு சிங்கள பௌத்த உளவியலையும் விழுங்குகிறது.
இந்த சூழலில்தான் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது.
 
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே கடந்த கால தமிழ்த் தலைவர்களையும் மக்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றிய அந்த  நம்பிக்கையற்ற அரசியல்வாதிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அரசியல் வம்சாவளி என்பது அவர்கள் எந்த அளவு பெருமையுடனும் அணியக்கூடிய சின்னம்  அல்ல. இரண்டுக்கும் இடையில், ரணில் மிகவும் தாராளவாதமாகத் தெரிகிறார், மேலும் தமிழர்களுக்கு மேலும் அரவணைப்புக் கரத்தை நீட்டத் தயாராக இருக்கிறார், ஆனால் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளிப்பவர்களை ஒருஇறுதிக்கட்டத்தில்  நம்ப முடியாது! இதனை தமிழ் தலைமைகள் நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும்.
 
சஜித் தனது தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத்திற்காக நன்கு அறியப்பட்ட ஒரு தந்தையிடமிருந்து  வந்தவர். 13வது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண ஆட்சி முறைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தது வரலாறு. அவரது தேசியவாதம் வெளிப்படையான இனவாதம்  மற்றும் பாராளுமன்றத்தில் அவரது நடத்தை மற்றும் ஜனாதிபதியாக எப்போதும் தீவிரமான ஒன்றாக இருந்தது மற்றும் அவரது அகங்கார மனநிலையிலிருந்து பிறந்தது. துரதிஷ்டவசமாக ஜனாதிபதி பிரேமதாசவின் மகனான சஜித்துக்கும் அதே மனப்பான்மை மரபுரிமையாகவே காணப்படுகின்றது.
 
தன்னைப் பற்றி மிகையாக மதிப்பிடுவதும், அதை உலகம் முழுவதும் கேட்கும்படி உரக்கக் கூறுவதும் அவருடைய செயல்பாடாக இருந்து வருகிறது. 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வாக்குறுதியளிப்பதும், அதற்கு அப்பால் சென்று 13ஏ உறுதிமொழியை வழங்குவதும் சஜித் பிரேமதாசவுக்கு விசித்திரமான பொது அரசியல் நடத்தை அல்ல.
 
ஆனால் வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்கள் சஜித் தமக்கு என்ன சொன்னாலும் ஒரு சிட்டிகையால் அல்ல, ஒரு ப ரல் உப்பைப் பொறுக்க வேண்டும். ஏற்கனவே மக்களின்நம்பிக்கையை இழந்துவிட்ட சில திறமையற்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் சஜித்துக்கும் ஆதரவாகவும், துணையாகவும் இருந்து வருகிறது. ரணில் மற்றும் சஜித் இருவரும் அந்த நாற்றமும் அழுகியமான கடந்த காலத்தின் ஆபாசமானபொருட்களை  சுமந்து செல்கிறார்கள். அவர்கள் ஒரே கட்சியில் பணியாற்றினார்கள்- ஐக்கிய தேசியக் கட்சி  மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் அரசியல் பாசாங்குத்தனம் என்பதை  சாதாரண விட யமாக அலட்சியப்படுத்தப்படக் கூடாது.
 
இன்னும் அரகலய -22 சிங்கள மக்களின் பொது ஆன்மாவை ஒரு சிறிய அளவிலாவது மாற்றியிருக்கலாம். தற்போதைய சூழ்நிலையின் சிறிய முன்னேற்றத்திற்கு அந்த சிறிய அளவிலான மாற்றம் அவசியமாக இருக்கலாம். வடக்குத் தலைமைத்துவத்தால் ரணிலையோ அல்லது சஜித்தையோ நம்ப முடியாவிட்டால் அதற்கு ஒரே மாற்று அனுரகுமார திஸாநாயக்க மட்டுமே. ஜே.வி.பி இந்தியாவிற்கு எதிரான மற்றும் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை பிரகடனப்படுத்தும் நாட்கள் முடிந்துவிட்டன. அனுரகுமார இப்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவராக உள்ளார்.
 
ஆனால் அவர்  இப்போது சுமக்கும் சுமை மிகப்பெரியது. ஜே.வி.பி.யின் கடந்த காலம் அவரை எடைபோடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து  எந்தவொரு தலைவரின் மீதும் முக்கியமாக  தேசிய விட யங்களில் நம்பிக்கை வைக்க முடிந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி அனு ரகுமாரவாகும் .
தமிழ்த் தலைமைகள் மனதில் கொள்ள வேண்டியது அனுரவின்  தனிப்பட்ட கடந்த காலத்தையும் அவரது மிகவும் தாழ்மையான தொடக்கத்தையும் தான்.
 
அந்தத் தொடக்கங்கள், வடக்கின்  சராசரி பிரஜையுடன்  எளிதில் தொடர்புபடுத்தக்கூடியவை, அவர் தனது முழு நேரத்தையும் வறண்ட நிலங்களில் செலவிடுகிறார், நாளுக்கு நாள் வியர்த்து தனது சந்ததியினரின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சிகள் மற்றும் ஒரு தெற்கு விவசாயியின் வேலைகள் அடிப்படையில் ஒரே மாதிரியானவை அல்லது சில சமயங்களில் கடினமாக இருக்கும். ஆனால்ஒப்பீ ட்டுத் தன்மை மற்றும் பரஸ்பர பச்சாதாபம் ஆகியவை எந்த அரசியல்வாதிக்கும் தேவையற்றவை என்று நிராகரிக்க முடியாத இரண்டு அடிப்படைகள்.
 
வடக்கில் உள்ள தமிழர்கள் ரணில் மற்றும் சஜித் இருவரையும் நிராகரிக்கலாம், ஏனென்றால் அவர்கள் வடக்கால் சவால் செய்யப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட ஒரு கடந்த காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.அனுரவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அவர்கள் இன்னும் முடிவு செய்யலாம். ஆனால் ரணில் அல்லது சஜித்துக்கு வாக்களிப்பது வேறு வழியில்லை.
 
கொழும்பு டெலிகிராப் 

https://thinakkural.lk/article/309033

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? - நிலாந்தன்

2 months 1 week ago

அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? - நிலாந்தன்

spacer.png

ஒரு நண்பர் பகிடியாகச் சொன்னார், “சுமந்திரன் நம்பியாராக மாறி அரியனேந்திரனை எம்ஜிஆர் ஆக்கிவிட்டார், இனி நடக்கப் போவது எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் இடையிலான சண்டை. தமிழ் கூட்டு உளவியல் என்பது கதாநாயகன்-வில்லன் என்ற துருவ நிலைப்பட்ட மோதலை ரசிப்பது. நமது புராணங்களில் இருந்து திரைப்படங்கள் வரையிலும் அப்படித்தான் காணப்படுகின்றன. இந்நிலையில் தமிழரசுக் கட்சியை தமிழ்க் கூட்டு உணர்வுக்கு மாறாக சஜித்தை நோக்கி திருப்பியதனால் சுமந்திரன் இப்பொழுது வில்லனாக காட்டப்படுவார். அவர் வில்லனாகவும் அரியநேத்திரன் கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தப்படும் பொழுது அங்கே ஒரு திரைப்படம் ஓடும். அது தமிழ் பொது உளவியலைக் கவரும். இனி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரச்சாரம் தன்பாட்டில் நடக்கும். கதாநாயகனுக்கு வில்லனுக்கு இடையிலான மோதல். அது அரியனேத்திரனை நோக்கி அதிகம் வாக்குகளை ஈர்க்கும்” என்று.

ஆனால் அரியநேத்திரனை ஒரு பொது வேட்பாளராக முன்னிறுத்திய பொதுகட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்… ”தமிழ் மக்களைத் திரட்டுவது;  அல்லது ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் மக்களை ஒன்றிணைப்பது; அல்லது தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ செய்யப்படும் விடயம் அல்ல என்று. ஒரு நபருக்கு எதிராகவோ ஒரு கட்சிக்கு எதிராகவோ தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஆக்கபூர்வமானது. அது எதிர்மறையானது அல்ல. இந்த இடத்தில் வில்லர்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக ஒரு மக்கள் கூட்டத்தை கட்டமைப்பது நிரந்தரமானது அல்ல. சரியானதுமல்ல” என்பது தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் அங்கம் வகிக்கும் கருத்துருவாக்கிகளின் நிலைப்பாடாகும்.

ஆனால் தேர்தல் களம் அந்த நிலைபாட்டிற்கு மாறாக கதாநாயகன்-வில்லன் என்று துருவ நிலைப்படத்  தொடங்கி விட்டது. அதாவது தமிழ்ப் பொது உளவியலின் பொதுவான வாய்ப்பாட்டுக்குள் அது விழத் தொடங்கிவிட்டது. இதனால் அரியநேத்திரனை நோக்கி குவியும் வாக்குகளின் தொகை அதிகரிக்கலாம்.

IMG-20240818-WA0131-1024x576.jpg

தமிழரசுக் கட்சியில் உள்ள சுமந்திரன் அணியின் இந்த முடிவு ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்டது. அதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே கட்சியின் இரண்டு மாவட்டக் கிளைகள் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதியாக எடுத்திருந்த ஒரு பின்னணியில், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கின்றது.

கட்சியின் மூத்த உறுப்பினராகிய சிவஞானம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை சஜித்தை ஆதரிப்பது மக்களுடைய கூட்டுணர்வுக்கு எதிரானது என்பது அவருக்கு தெரிகிறது. இது கட்சித் தொண்டர்களுக்கும் தெரிகிறது. கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல,  அரசியலை கணிதமாக, விஞ்ஞானமாக அணுகும் யாருக்கும் அது தெளிவாகத் தெரியும். சஜித்திடம் 13ஐத் தவிர வேறு எதுவும் இல்லை. சமஸ்டி கட்சி ஆதரவாளர்கள் 13-வது திருத்தத்தை ஒரு வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ள தயாரா?

13 ஒரு புதிய தீர்வு அல்ல. ஏற்கனவே யாப்பில் இருப்பது. அப்படிப் பார்த்தால் யாப்பை நிறைவேற்றுவேன் என்று கூறும் ஒரு வேட்பாளருக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி கேட்கின்றதா? இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், ஒரு நாட்டின் அதி உயர் சட்ட ஆவணமாகிய யாப்பை நிறைவேற்றுவது தான் அந்நாட்டின் தலைவர்களுடையதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். இலங்கைத் தீவு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக் கொண்டது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எட்டு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் பதவியில் இருந்திருக்கிறார்கள். இவர்களில் யாருமே யாப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை என்பது எதனைக் காட்டுகிறது? நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிகள் இலங்கைத் தீவின் யாப்பை மீறி ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக யாப்பை மீறும் ஒரு பாரம்பரியத்தை கொண்ட ஒரு நாட்டில் இப்பொழுது ஒரு தலைவர் யாப்பை அமல்படுத்துவேன் என்று கூறுகிறாராம் அவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமாம்.

சுமந்திரன் அணியின் இந்த முடிவு தமிழரசு கட்சிக்குள் மேலும் பிளவுகளை அதிகப்படுத்துமா? பொது வேட்பாளர் விடயம் தமிழரசு கட்சிக்குள் ஏற்கனவே காணப்படும் தலைமைத்துவப் போட்டியை மேலும் ஆழப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலையொன்று எழத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில், சுமந்திரன் அணியின் முடிவு வந்திருக்கிறது. இலங்கை போன்ற நாடுகளில் தேர்தலுக்கு முதல் வாரம் அல்லது சில நாட்களுக்கு முன்னர்தான் வாக்களிப்பு அலை தோன்றும். தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இது பொருந்தும்.

தமிழ் நடுத்தர வர்க்கத்தில் ஆங்கிலம் தெரிந்த ஒரு பகுதியினர் ரணில் மீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். மாற்றத்தை விரும்பும் மற்றொரு பிரிவினர் அனுரமீதும் ஆர்வமாக காணப்படுகிறார்கள். இப்பொழுது தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணியானது சஜித்தை ஆதரிக்குமாறு கேட்டு இருக்கிறது. அதனால் தமிழ் வாக்காளர்கள் நான்கு முனைகளில் சிதறடிக்கப்படுவார்களா?

அவ்வாறு தமிழ் வாக்காளர்கள் சிதறடிக்கப்படக்கூடாது என்று முடிவெடுத்துத்தான் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார். தமிழ் மக்களைக் கோர்த்துக்கட்டுவது, கூட்டிக்கட்டுவதுதான் என்று பொது வேட்பாளரை ஆதரிக்கும் தரப்பு தொடர்ச்சியாக கூறி வருகின்றது. ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முதன்மைக் காரணம் தமிழ் மக்களை ஒன்றிணைப்பது. தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பது. தமிழ்க் கூட்டு உளவியலை பலப்படுத்துவது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். அதாவது அவர்கள் தமிழ் வாக்காளர்களைத் திரட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் சுமந்திரனும் அவருடைய அணியும் தமிழ் வாக்காளர்களைச் சிதறடிக்கலாம் என்று நம்புகிறார்கள். உள்ளதில் பெரிய கட்சி என்ற அடிப்படையில் தாங்கள் எடுத்த முடிவை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர்கள் நம்பக் கூடும்.

ஆனால் தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு முடிவெடுத்த தருணங்களில் கட்சியையோ சின்னத்தையோ தலைவர்களையோ பொருட்படுத்தவில்லை என்பதற்கு கடந்த நூற்றாண்டு முழுவதிலும் உதாரணங்கள் உண்டு. கடந்த நூற்றாண்டில்,ஜி ஜி பொன்னம்பலம் மகாதேவாவை தோற்கடித்தார். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று கூறித் தோற்கடித்தார். ராமநாதன் குடும்பத்தில் வந்த உயர் குழாத்தைச் சேர்ந்த மகாதேவாவை ஜி.ஜி தோற்கடித்தார். செல்வநாயகம் ஜிஜியை இலட்சியத்தின் பெயரால் தோற்கடித்தார்.

அதன் பின் தமிழ் ஐக்கியத்தின் பெயரால்; கொள்கைக்காக, தமிழர் விடுதலைக் கூடடணியின் உதய சூரியன் சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள். அதன் பின் இந்திய அமைதி காக்கும் படை நாட்டில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில், நடந்த பொதுத் தேர்தலில், முன்பின் அறிமுகம் இல்லாத சுயேட்சை சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள். உதய சூரியனைப் பின்னுக்குத் தள்ளினார்கள் .வேட்பாளர்களின் முகமே தெரியாத ஒரு போர் சூழலில், தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வெளிச்ச வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து, 13 ஆசனங்களை ஈரோஸ் இயக்கத்துக்குக கொடுத்தார்கள். தேர்தலில் ஈரோஸ் இயக்கத்தின் பிரமுகராகிய பராவை இந்திய அமைதி காக்கும் படை கைது செய்து முகாமில் அடைத்து வைத்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பொழுது கைதியாக இருந்த பராவை “நீங்கள் இப்பொழுது எம்பி ஆகிவிட்டீர்கள் வெளியே போகலாம்” என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

அத்தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதயமாகிய பொழுது உதயசூரியன் சின்னத்தை தமிழ் மக்கள் தோற்கடித்தார்கள். உதய சூரியன் சின்னமானது ஒரு காலம் வெற்றியின் சின்னமாக இருந்தது. ஐக்கியத்தின் சின்னமாக இருந்தது. அப்படிபட்ட உதயசூரியன் சின்னத்தை தோற்கடித்த ஒரு மக்கள் கூட்டம், முகம் தெரியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து சுயேட்சையை வெல்ல வைத்த ஒரு மக்கள் கூட்டம், கூட்டுணர்வோடு முடிவெடுக்கும் பொழுது, சின்னமும் கட்சியும் ஒரு பொருட்டே அல்ல.

 

 

https://www.nillanthan.com/6886/

தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.

2 months 1 week ago
Tamil-Thesiya-pothu-kaddamaipu.png?resiz தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வந்துவிட்டது.
அந்த அறிக்கையானது பின்வரும் விடயங்களை தெளிவாக முன் வைக்கின்றது. முதலாவதாக, அது தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம் என்று கூறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பன்னாட்டுப் பொறிமுறையின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.

இரண்டாவதாக, அந்த அறிக்கையானது ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வுகளை நிராகரிக்கின்றது. அதேசமயம் இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை தீவின் புதிய யாப்பானது பன்மை தேசிய அரசாக கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

மூன்றாவதாக, இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதியை அந்த அறிக்கை கோரி நிற்கின்றது. பரிகாரநீதி என்பது அதன் அதன் பிரயோக வடிவத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை உள்ளடக்கியதுதான் என்ற ஒரு வியாக்கியானம் உண்டு.

அந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடக்கின்றன. அந்த அறிக்கையில் பன்மைத் தேசியம் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பன்மைத் தேசிய அரசு என்ற பதம் கடந்த தசாப்தங்களில் அறிமுகத்துக்கு வந்தது.1980 களின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடாகிய பொலிவியாவில் சுதேச மலைவாழ் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர்களால் பிரயோகிக்கப்பட்ட வார்த்தை அது.பொலிவியாவின் புதிய யாப்பின்படி அங்கு இருப்பது பன்மை தேசிய அரசு என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் எங்கேயும் பொலிவியா என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. பன்மைத் தேசிய பண்புடைய ஒரு அரசைக் கட்டமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர பொலிவியாவைப்போல என்று கூறப்படவில்லை. பொலிவியாவில் இருப்பது போன்ற ஒரு தீர்வை இங்கு உருவாக்க வேண்டும் என்று அந்த தேர்தல் அறிக்கை எங்கேயும் கேட்கவில்லை.

தேர்தல் அறிக்கையில் இருப்பது ஒரு கருத்துருவதைக் குறிக்கும் வார்த்தை.பொலிவியாவில் இருப்பது ஒரு கட்டமைப்பு.இரண்டையும் ஒன்றை மற்றத்துடன் மாறாட்டம் செய்யத் தேவையில்லை.மேலும்,கஜேந்திரக்குமார் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ற் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாரும்போது அந்த வார்தையைப் பயன்படுத்துகிறார்.அவர் தனது உரையில் “ஸ்ரீலங்கா ஒரு பன்மைத் \தேசிய நாடு”என்று கூறுகிறார்.அவர் அப்படிக் கூறியதற்காக, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது, அவருடைய கட்சியின் பகிஷ்கரிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது என்று பொருள் கொள்ளலாமா?

அந்த தேர்தல் அறிக்கை மிகத் தெளிவாக ஈழத் தமிழர்கள் இறமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்; தேசம் என்று கூறுகின்றது. ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வை அது நிராகரிக்கின்றது. அதுமட்டுமில்லை,அந்த தேர்தல் அறிக்கையானது நிலை மாறுகால நீதியை நிராகரித்து, பரிகார நீதியைக் கேட்கின்றது. பரிகார நீதி என்பது இனப்படுகொலைக்கு எதிராகத் தரப்படுவது. அது பெரும்பாலும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் தனக்கு என்ன தேவை என்பதனை அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கேட்பதற்கு உரிமை உடையது என்பதனை ஏற்றுக் கொள்கிறது.அந்த அடிப்படையில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அந்த மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதே பரிகாரநீதியின் பிரயோக யதார்த்தமாக காணப்படுகின்றது.

ஆனால் தேர்தல் அறிக்கையில் பொதுஜனவாக்கடுப்பு வெளிப்படையாக கேட்கப்படவில்லை, பொலிவியாவைப்போல ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வு கேட்கப்படுகிறது என்றெல்லாம் வியாக்கியானங்கள் தரப்படுகின்றன. இந்த வியாக்கியானங்கள் உள்நோக்கமுடையவை. அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் மேலோட்டமாக வாசித்து விட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அவை. சுருக்கமாகச் சொன்னால் யானை பார்த்த குருடர்களின் விமர்சனங்கள்.

தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்பது கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 40 நாள் குழந்தை அது.ஒரு 40 நாள் வயதான ஒரு கட்டமைப்பானது ஒரு பொது முடிவுக்கு வருவதில் பல நெருக்கடிகள் இருக்கும். அந்த கட்டமைப்புக்குள் ஏழு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் 7 கட்சித் தலைவர்களும் உண்டு. மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்குள்ளும் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்ட சிவில் சமூகங்கள் உண்டு. அதுபோல கட்சித் தலைவர்கள் மத்தியிலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டு. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னுறுத்தும் விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள். அதற்காக எல்லா விடயங்களிலும் அவர்கள் உருகி பிணைந்த ஒரு கட்டமைப்பாக மாறிவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

இது தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடு. ஒரு புதிய பண்பாடு. இது இனிமேல் எப்படி வளரப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையில் உறுப்பாக உள்ள குடிமக்கள் சமூகம் ஒன்று அந்த அறிக்கையில் 13ஆவது திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் வர வேண்டும் என்று கேட்டது.

அதுபோல தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில பொது வாக்கெடுப்பை வெளிப்படையாக கேட்க வேண்டாம் என்று வலியுறுத்தின.மொத்தம் 14 பேர்களைக் கொண்ட அந்த கட்டமைப்புக்குள் ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.அந்த பொது முடிவுதான் வெளிவந்திருக்கும் தேர்தல் அறிக்கையாகும்.

அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் அதை விமர்சிப்பவர்கள் பெருமளவுக்கு தாங்கள் எதிர்பார்த்த தீர்வு முன்மொழிவுகள் அங்கே இல்லை என்பதை ஒரு காரணமாக முன்வைக்கின்றார்கள்.ஒரு பகுதியினர் சமஸ்ரி என்பது தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு என்ற விடயம் வெளிப்படையாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தாங்கள் வசிக்கும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களோடு உரையாடும் பொழுது இந்த ஆவணத்தை முன்வைத்து உரையாட வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிடும் அவர்கள், இந்த ஆவணம் தமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமையக்கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

எனினும் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து அந்த ஆவணத்தைத் தயாரிக்க முடியவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தபடியால் எல்லாரையும் திருப்திப்படுத்தும் ஒரு நிலைமை அங்கே இருக்கவில்லை என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அந்த அறிக்கை தொடர்பில் இதுவரையிலும் வெளிவந்த பிரதிபலிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அந்த அறிக்கை தாயகத்திலும் டயஸ்போறாவிலும் பரவலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதனை எல்லாரும் பரபரப்போடு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அந்த அறிக்கைக்குள் தங்களுடைய விருப்பங்கள் கோரிக்கைகள் இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புகளிடமும் இருந்திருக்கிறது. இது எதைக் காட்டுகின்றது?

அப்படி ஒரு அறிக்கை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,தவிப்போடு ஒருவிதத்தில் ஏக்கத்தோடு தமிழ்ச் சமூகம் களத்திலும் புலத்திலும் காத்திருந்தது என்பதை காட்டுகின்றதா?

அதுதான் உண்மை. தமிழ் மக்கள் பேரவைக்குப் பின் கடந்த சுமார் எட்டு வருடங்களாக தமிழ் மக்கள் பேரவையை போல ஒரு கூட்டு வராதா ? அது மீண்டும் ஒருமித்த குரலில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தாதா? என்ற தவிப்போடு பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் அது காட்டுகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதற்கும் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று பொருள்.ஆயின் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்களா?

https://athavannews.com/2024/1398565

எதியோப்பியாவில் சமஷ்டி வடிவமைப்பு இயல்பு மற்றும் தோல்வி

2 months 1 week ago

Published By: DIGITAL DESK 7   03 SEP, 2024 | 03:02 PM

image

தொகுப்பு: ஆர்.ராம்

உலகளாவிய ரீதியில் பல்வேறு சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. அவை நாடுகளின் மேம்பட்ட நிலைமைகளுக்கு அவசியமானவையாக உள்ளன. அந்தவகையில் எதியோப்பியாவலும் சமஷ்டி முறைமை உள்வாங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருந்தன. அதற்கான காரணங்கள் என்னவாக உள்ளன என்பது பற்றிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இரண்டாவது மிகப் பெரும் சனத்தொகையாக 120மில்லியன் மக்களைக் கொண்ட தேசம் தான் எதியோப்பியா. 1936-1941 வரையான இத்தாலிய கட்டுப்பாடு, 1941-1952 பிரித்தானிய கட்டுப்பாடு ஆகிய இரண்டு காலகட்டங்களைத் தவிரவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீண்டதொரு காலனித்துவத்துக்குள் உள்ளாகாத தேசமாக எதியோப்பியா காணப்படுகின்றது.

இது, வரலாற்று ரீதியாகவும், பிராந்திய, பூகோள கலாசார ரீதியாகவும், மொழி வாரியாகவும் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தினைக் கொண்டதொரு தேசமாக காணப்படுகின்றது. 80இற்கும் அதிகமான மொழிகளைக் கொண்டிருக்கின்றமையானது விசேடமானதாகும்.

இப்படியானதொரு தேசத்தில் அரசைக் கட்டியெழுப்பும் செயல்முறை ஒரு முடியாட்சியின் மூலம் இருந்தது. அத்தோடு மத்திய அரசைக் கட்டுப்படுத்துவதற்கு ‘மன்னர்கள்’ அல்லது ‘ராசஸ்’ இடையே கடுமையான போட்டிகள் நிலவியிருந்தன. அதேநேரம், மத்தியிலிருந்து கீழ் மட்டம் வரையில் அணுக முடியாத காரணத்தால் சில பேரரசர்கள் நடைமுறையில் பரவலாக்கப்பட்ட நிர்வாக முறைமையைக் கொண்ட ஆட்சி வடிவத்தில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதியோப்பியா ஒரு பரவலாக்கப்பட்ட நிர்வாகத்திற்கு உகந்ததாகும். எனினும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன அரசின் வளர்ச்சியுடன், நவீன தொழில்நுட்பம் மற்றும் சில மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பயன்படுத்தி ‘மிகை-மையமயமாக்கல்’ போக்குகள் உள்நாட்டுக்குள் வளர்ந்தன.

திறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அழிப்புக்கொள்கைகள் பேரரசர்களாலும் இராணுவ சர்வாதிகாரத்தாலும் பின்பற்றப்பட்டன. அம்ஹாரிக் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகவும், கிறிஸ்தவம் மாநிலத்தின் மதமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் நவீன அரசின் தோற்றம் குழு ஆதிக்கத்தின் வலுவானதொரு ‘மைய’ அதிகாரக் குவிப்பை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

இதனால் ஏற்பட்ட மக்கள் புரட்சி 1974இல் கடைசி பேரரசரான ஹைல் செலாசியை ஆட்சியில் இருந்து அகற்றியது. எனினும், ஜனநாயக ஆட்சி உருவாக்கப்படுவதற்கு பதிலாக ஒரு இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டதோடு சில சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டன. 

ஆனால் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான மக்களின் கோரிக்கைகளுக்;கு இராணுவத்தின் ஆட்சியில் பதிலளிக்கப்படவில்லை. இதனால் உள்நாட்டில் அந்நிய தேசங்களாக்கப்பட்ட பகுதிகளும், உரிமைகள் மறுதலிக்கப்பட்ட தேசிய இனங்களும் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கின. இது 17வருடங்கள் நீடித்திருந்தன.

இதேநேரம், 1950ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 390(வி)ஏ இற்கு அமைவாக, 1952முதல் 1962வரை நீடித்த எதியோப்பியாவுடன் எரித்திரியா இணைக்கப்பட்டது. எனினும், 1962ஆம் ஆண்டில் எதியோப்பியா-எரித்தியா கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யப்பட்டது.

இதனால், 1961இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு அது 1991 வரை தொடர்ந்தது.1991-1993வரையான காலப்பகுதியில் பதவியில் இடைக்கால அரசாங்கம் நீடித்திருந்தது. 1993இல் எரித்திரியா ஒரு மேலாதிக்கக் கட்சியான விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து அதன் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அப்போதைய எதியோப்பியாவின் இடைக்கால அரசாங்கம் எரித்திரியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. அத்துடன் எரித்திரியா ஐ.நா.வின் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொண்டது. எனினும், 1998-2000 வரையிலான காலத்தில் எரித்திரியா எதியோப்பியாவுடன் போரை முன்னெடுத்தது. இதன் விளைவால் எரித்திரியா 1991 இல் நிறுவப்பட்ட இடைக்கால அரசாங்கத்தால் இன்னும் ஆளப்படும் நிலைமையே நீடிக்கின்றது.

பேரரசர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களின் கட்டாய ஒருங்கிணைப்புக் கொள்கைகள், தேசிய இனங்கள் அல்லது இனக்குழுக்களின்; சுயாட்சிக்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன. இதன்விளைவால்; மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன. நீண்ட உள்நாட்டுப் போர் ஒட்டுமொத்தமாக நாட்டையே அழித்தது.

நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ஒருவாறு, 1991இல் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. எனினும் ஒருகுழு ஆதிக்கம் செலுத்தும் சர்வாதிகார ஆட்சிகளின் தீவிர அடக்குமுறை இயல்புகளுக்கு எதிர்வினையாக நாட்டில் பல்வேறு குழுக்கள் வலுவான இனவாத உணர்வை வளர்த்தன.

இதனால், 1991இல் உள்நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவானது. மத்திய அரசைக் கட்டுப்படுத்தியவர்களை முழுமையாகத் தோற்கடித்து நாட்டைக் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்படுத்தின. சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கான மற்றொரு நம்பிக்கை மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது.

இராணுவ ஆட்சியைத் தோற்கடித்த எதிரோப்பிய கிளர்ச்சியாளர்கள் பல்வேறு குழுக்களின் சுயநிர்ணயக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பொதுவான மத்திய அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பராமரிக்க முடிவு செய்தனர்.

பலதரப்பட்ட குழுக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். எனவே நிறுவனமயமாக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு இடமளிப்பதற்கான தேவை உணரப்பட்டது. எதியோப்பியாவை 14சுயாட்சிப் பகுதிகளாகப் பிரித்து, அரசியலமைப்பு ஆணையகத்தால் சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் 1994இல் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு தாமதமின்றி 1995இல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. 

‘எங்களது தேசம் எதியோப்பிய நாடு, நாங்கள் தேசிய இனங்கள் மற்றும் பூர்வீகமான மக்கள்’ என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 46ஆவது சரத்தில் குடியேற்ற முறைகள், மொழி, அடையாளம் மற்றும் சம்பந்தப்பட்ட மக்களின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படும் என்பது தெளிவாக குறித்துரைக்கப்பட்டது.

எனவே, எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசமும், தேசியமும் மற்றும் மக்கள் குழுக்களும் ஒரு சமஷ்டி மாநிலமாக இருக்கலாம். அத்துடன் தங்கள் சொந்த மாநிலத்தை நிறுவுவதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதும் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எந்தவொரு தேசம், தேசியம் அல்லது மக்கள் குழு தனது சொந்த மாநிலத்தை உருவாக்குவதற்கான உரிமையானது பின்வரும் அடிப்படையில் உறுதி செய்யப்படுகின்றது. அவையாவன,

(அ) தேசம், தேசியம் அல்லது சம்பந்தப்பட்ட மக்கள் குழு அரசியலமைப்பு கவுன்சிலின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் மாநில உரிமைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு, கோரிக்கை மாநில கவுன்சிலுக்கு எழுத்துபூர்வமாக முன்வைக்கப்படும் போது

(ஆ)கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுன்சில் ஒரு வருடத்திற்குள் வாக்கெடுப்பை ஏற்பாடு செய்து, கோரிக்கையை முன்வைத்த தேசம், தேசியம் அல்லது மக்கள் குழு மத்தியில் நடத்தப்படும் போது

(இ)வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் மாநில உரிமைக்கான கோரிக்கை ஆதரிக்கப்படும் போது

(ஈ)மாநில கவுன்சில் தனது அதிகாரங்களை, கோரிக்கையை முன்வைத்த தேசம், தேசியம் அல்லது மக்கள் குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது 

(உ)விண்ணப்பமின்றி வாக்கெடுப்பு மூலம் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டால், நேரடியாக எதியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசில் உறுப்பினராகிறது.

(ஊ)எதியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் உறுப்பினர்கள் சம உரிமைகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.

இந்நிலையில் எதியோப்பிய நாடானது, தற்போது மத்திய எதியோப்பியா பிராந்திய மாநிலம், சிடாமா பிராந்திய மாநிலம், தெற்கு எதியோப்பிய பிராந்திய மாநிலம், தென்மேற்கு எதியோப்பியா மக்கள் பிராந்திய மாநிலம் ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம், மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சிறப்பு பிரதிநிதித்துவத்திற்காக அரசியல்சாசனத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனங்கள் மற்றும் சிறு மக்கள் குழுக்களின் சிறப்புப் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 20ஆக இருப்பதோடு மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 550க்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்; என்பதும் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் சபையானது சமஷ்டி அதிகார வரம்பிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து விடயங்களிலும் சட்டம் இயற்றவும், மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய்களைப் பெறவும், வரிகளை விதிக்கவும், மத்திய வரவு,செலவுத்திட்டத்தினை அங்கீகரிக்கவும், சர்வதேச ஒப்பந்தங்களை அங்கீகரிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் ஒரு தேசிய பொலிஸ் படை ஆகியவற்றின் அமைப்பை தீர்மானிக்கவும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றது.

அத்துடன், இச்சபையானது சுயநிர்ணய உரிமை தொடர்பான பிரச்சினைகளை முடிவு செய்வதற்கும், மத்திய மற்றும் மாநில வரிகளின் மூலங்களிலிருந்து பெறப்பட்ட வருவாயின் விகிதங்களைத் தீர்மானிக்கவும், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை முடிவு செய்யவும், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்கவும் அதிகாரத்தினைக் கொண்டிருகின்றது.

மாநில மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு இடையிலான பகிரப்பட்ட ஒத்திசைவுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவும், ஒரு மாநிலம் அரசியலமைப்பு ஒழுங்குக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் தலையீட்டை ஆணையிடுவதற்கும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில், தொகுதிகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கும், அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவை தீர்மானிக்கவும், அரசியலமைப்பு திருத்தம் குறித்து முடிவு செய்யவும் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது.

மேலும், நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான அங்கீகாரத்தினை வழங்குதல், அரசியலமைப்பில் வழங்கப்படாத வரிவிதிப்பு அதிகாரத்தின் மீதான முடிவுகளை எடுத்தல், மாநில அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் மனித உரிமை மீறல்களை செய்கின்றபோது கைது செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை தீர்மானித்தல் உள்ளிட்ட அதிகாரங்களும் மக்கள் பிரதிநிதிகள் சபையிடத்தில் உள்ளன.

எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசங்களும், தேசியங்களும் மற்றும் மக்கள் குழுக்களும் பிரிந்து செல்லும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனையற்ற உரிமை உள்ளது. எதிரோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசமும், தேசியங்களும் மற்றும் மக்கள் குழுக்களும் அதன் சொந்த மொழியைப் பேசவும், எழுதவும், வளர்க்கவும், கலாசாரத்தை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் அதன் வரலாற்றைப் பாதுகாக்கவும் உரிமைகளைக் கொண்டிருக்கின்றன.

எத்தியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசங்களுக்கும், தேசியங்களுக்கும் மற்றும் மக்கள் குழுக்களுக்கும் முழு அளவிலான சுய-அரசு உரிமை உள்ளது, இதில் தான் வசிக்கும் பிரதேசத்தில் அரசாங்க நிறுவனங்களை நிறுவுவதற்கான உரிமையும், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களில் சமமான பிரதிநிதித்துவமும் உள்ளடங்குகின்றது.

இத்தகைய உச்சபட்சமான அதிகாரங்கள் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால்  முன்னர் ஒடுக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் குழுக்கள் உறுதியானவர்களாக மாறி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தோற்றுவிக்கப்பட்டுள்ளதோடு பிராந்தியத்தில் எதியோப்பியாவின் அதிகாரம் அதிகரித்துள்ளது. அதேநேரம் சர்வதேச சமாதான முயற்சிகளில் எதியோப்பியாவின் வகிபாகமும் அதிகரித்துள்ளது.

இருந்தபோதும், எதியோப்பியாவில் மக்கள் குழு அடையாளங்களின் ஆதிக்கம், வலிமையான ஒருங்கிணைப்பு செயல்முறை, என்பன மக்கள் குழுக்களுக்கு இடையில் அவநம்பிக்கைகள் நிலவுவதற்கு வழிசமைக்கிறது. அதுமட்டுமன்றி தற்போதுள்ள பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் வகையில் சமஷ்டி அமைப்புகள் நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றபோதும் யதார்த்தத்தில் பார்க்கும்போது, அந்த வடிவமைப்பில் காணப்படும் சில சிக்கல்களால் கடுமையான நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

மக்கள் சபைக்கான பிரதிநிதித்துவம் தொகுதியின் அனைத்து மக்களின் பிரதிநிதியாக ஒற்றை உறுப்பினர் முறைமை காணப்படுகின்றது. இது பல்வேறு குழுக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்காதுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு சிறு குழுக்களுக்கு கணிசமான பங்கேற்பு இல்லாத சூழல் நீடிக்கின்றது. இதன்விளைவாக,  பெரும்பான்மை அமைப்பானது, அதிக மக்கள்தொகை அதிக பிரதிநிதிகள், அதிக அதிகாரம் போன்ற கோரிக்கைகளை தொடரச் செய்கிறது.

சட்டத்தை உருவாக்கும் செயல்முறைகளில் மக்கள் பிரதிநிதித்துவ சபையின் நிர்வாகியின் உருவாக்கம் சிக்கலுக்குள்ளானதாக காணப்படுகின்றது. அரசியலமைப்பு விளக்கம், மற்றும் நிதி இடமாற்றங்கள், இனங்களுக்கிடையிலான மோதல்களைத் தீர்த்தல் என்பன மையத்தில் இருப்பதால் தேசிய இனங்களின் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்காத நிலைமை காணப்படுகின்றது.

முடிவெடுக்கும் நடைமுறை எளிய பெரும்பான்மை அடிப்படையில் இருப்பதால், சட்டத்தை உருவாக்கும் அமைப்பு போலவே, அதிக மக்கள் தொகை கொண்ட குழுக்கள் அதிக பிரதிநிதிகள் மற்றும் அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கலாம் என்பது இயல்பாகின்றது.

எதியோப்பியாவில் சமஷ்டி அமுலாக்கம் தொடர்ச்சியான சவால்களை சந்திக்கின்றது. குறிப்பாக, சட்டப்பூர்வ பிரச்சினையை தோற்றுவிப்பதாக உள்ளது.  ஆரம்பத்தில், எதியோப்பிய சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளும் சமஷ்டி முறையை நல்ல நிர்வாக அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை. 

முன்னர் சலுகை பெற்ற மக்கள் குழுக்கள் அல்லது உயரடுக்கினர் அதை முற்றிலுமாக நிராகரித்தனர். பல தசாப்தங்களாக அதற்கு எதிராக வேலை செய்தனர். பின்னர் சமஷ்டி, கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. 

பழைய ஆட்சியை எதிர்த்துப் போராட, அரசியல் கட்சிகள், மக்கள் குழுக்கள் இன அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டன, இன்னும் அவை தொடர்ச்சியான அவநம்பிக்கையின் காரணமாக அவ்வாறான கூட்டிலேயே இருக்கின்றது. அந்நிலையானது இப்போது நடந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக காணப்படுகின்றது.

முந்தைய ஆட்சியை இராணுவ ரீதியாக தோற்கடித்த எதியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற இனக் கட்சிகளின் கூட்டணி, அதீத மத்தியத்துவத்துடன் நாட்டை 27 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு இடமளித்தது. இது ஜனநாயக புறக்கணிப்பையும், மத்திய அரசின் சர்வாதிகார ஆட்சி, பிராந்தியங்களில் தலையீடு ஆகியவற்றுக்கும் வழிசமைப்பதற்கு வித்திட்டுள்ளது. 

பன்முகத்தன்மை சார்ந்த சமஷ்டி முறையை ஏற்றுக்கொள்வது என்பது பல்வேறு வகைகளில் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதாகும். எவ்வாறாயினும், இனக்குழுக்களின் உரிமைகளுக்கும், குறிப்பிட்ட இனக்குழுக்கள் வாழும் பிரதேசத்தில் குடியேறும் தனிநபர்களின் உரிமைக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகியுள்ளன.

அடக்குமுறை மற்றும் ஒருமைப்படுத்தல் செயல்முறைகளின் மரபு காரணமாக, அரசியலமைப்பு உரிமைக்கும் நடைமுறைக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும், தேசியமும் மற்றும் மக்கள் குழுவின் உரிமையாக அதன் மொழியை பயன்படுத்த, அதன் கலாசாரம் மற்றும் வரலாற்றை வளர்க்க, சுயராச்சிய அதிகாரத்தைப் பயன்படுத்த, மாநில மற்றும் மத்திய அரசுகளில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, எந்த நேரத்திலும் தங்கள் சொந்த மாநிலத்தை நிறுவவதற்கு இடமளிக்கின்ற போதும் நடைமுறையில் சாத்தியமற்ற நிலைமையே உள்ளது.

எதியோப்பியாவின் தேசங்கள், தேசியங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை,  அரசியலமைப்பு தேசம், தேசியம் மற்றும் மக்கள் குழு என்ற சொற்களில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள மக்கள் குழுக்கள் அனைத்திற்கும் ஒரே வரையறைகளே பயன்படுத்தப்படுகிறது

ஒரு பொதுவான கலாசாரம் அல்லது ஒத்த பழக்கவழக்கங்கள், மொழியின் பரஸ்பர நுண்ணறிவு, பொதுவான அல்லது தொடர்புடைய அடையாளங்களில் நம்பிக்கை, பொதுவான உளவியல் அமைப்பு மற்றும் அடையாளம் காணக்கூடிய, முக்கியமாக தொடர்ச்சியான பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குழு உள்ளிட்டவற்றுக்கான விசேட அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

இதனால், 2018 இல், ஒரு புதிய குழு வெகுஜன ஆர்ப்பாட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியபோது, முந்தைய அனைத்து முன்னேற்றங்களும் மீண்டும் தலைகீழாக மாறியது.

புதிய பிராந்திய மாநிலங்களை உருவாக்க அதிக ஆர்வம் கொண்ட நிலைமையும், வெளிநாட்டு உதவி, புதிய அரசியல் கூட்டணி மற்றும் வெளிநாட்டு தலையீடுகளை நம்பியிருக்கும் நிலைமையும் புதிய வடிவம் பெற்றது.

2020 நவம்பரில் இருந்து, மத்திய அரசு வெளிநாட்டுப் படைகளுடன் இணைந்து தனது சொந்த மக்கள் மீது இனப்படுகொலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையானது சமஷ்டி ஆட்சி அமைப்பின் தோல்வியாகும். இத்தோல்வி என்பது அரசின் தோல்வி என்பதே பொருளாகும். 

எதிரோப்பியாவைப் பொறுத்தவரையில் ஜனநாயக வழிமுறைகள் மூலம் நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவதற்கான கடைசித் தெரிவாக சமஷ்டி முறையே சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டின் பலதரப்பட்ட குழுக்களுக்கு இடமளிக்கும் ஒருநல்ல பொறிமுறையாக இருக்க முடியும். 

அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் புதிய முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நெகிழ்வுத் தன்மைகள் உள்ளன, அதாவது அரசியலமைப்பின் இயக்கம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

எதியோப்பிய சமஷ்டி அமைப்பு முறையானது பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது, ஆனால் அது நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. எதியோப்பியா தன்னை சீர்திருத்துவதில் தோல்வியடைந்தது அல்லது சீர்திருத்தம் மற்றும் வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க மிகவும் தாமதமானது.

இதனால், அரசின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. தற்போதைய நிலையில் மத்தியையும், மாநிலத்தையும் பராமரிப்பதற்கான ஒரேவழி, முற்றிலும் சீர்திருத்துவதும் ஒரு புதிய ஒப்பந்தத்தை கொண்டு வருவதுதான்.

எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு குழு மக்களும், குறிப்பாக மத்திய அரசால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். அத்தகைய தரப்பினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பிராந்தியங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையிலான ‘சரிபார்ப்புகள் மற்றும் சமப்படுத்தல்கள்’ வழிமுறையை அமைப்பது முக்கியமானதாக உள்ளது. சமஷ்டி அதிகார முறைமையை இழந்த பிராந்திய மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மீள வழங்குவது உறுதியாக வேண்டியுள்ளது.

இதேநேரம் மத்திய அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்புக்கூற முடியாது விட்டாலோ அல்லது அச்செயற்பாட்டை எதிர்காலத்திலும் மாற்றுவதற்கு முடியாவிட்டால், மாநிலத்தின் சுய இடையூறுக்கு வழிவகுக்கக் கூடாது. விவாகரத்து முறையே சிறந்தது. அந்த விவாகரத்து முறையானது வன்முறையாக இருக்க வேண்டியதில்லை, அது அமைதியாகவும் இருக்கலாம்.

https://www.virakesari.lk/article/192707

தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?

2 months 2 weeks ago

தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?
தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?

 — கருணாகரன் —

பல அணிகளாகச் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளையும் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் தத்ததளிக்கும் மக்களையும் பலவீனப்பட்டிருக்கும் தமிழ்த்தேசியத்தையும் பலப்படுத்துவதற்கே தமிழ்ப்பொது வேட்பாளர் என்று சொல்லப்பட்டது.

இதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புமாகும். 

இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அதற்கான பரப்புரைகளும் அங்கங்கே  நடக்கின்றன. 

பொதுவேட்பாளருக்காக இன்னும் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் நடக்கவில்லை. என்றாலும் பரப்புரைகள் தொடர்கின்றன.

பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் கலந்து கொண்டாலும் பரப்புரைகளில் ஆழமான, புதிய சேதிகள் எதையும் பொதுக்கட்டமைப்போ, பொதுவேட்பாளரோ சொல்லவில்லை. நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் கூடப் பேசப்படவில்லை.

ஆனால், சொல்லப்பட்டதற்கு மாறாகத் தமிழ்ப்பொது வேட்பாளர், தமிழ்ச்சமூகத்தை ஆழமாகவே பிளவு படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தமிழ்ச்சமூகத்தை மட்டுமல்ல, தமிழ்க்கட்சிகளையும்தான். (பொதுவேட்பாளரை நிறுத்தினால் இதெல்லாம் நடக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது).

பல இழுபறிகள், தடுமாற்றங்களுக்குப் பிறகு, பொது வேட்பாளரைக் கட்சி ரீதியாக ரெலோ ஆதரிக்கிறது. ஆனால், கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான வினோநோகராதலிங்கம் பகிரங்கமாகவே அதை எதிர்க்கிறார். வினோநோகராதலிங்கத்தோடு ஒரு அணியும் இதை எதிர்க்கிறது.

ஆக, ரெலோவுக்குள் இரண்டு நிலைப்பாடுகள்.

இதைப்பற்றிக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது சொன்னார், “ரெலோ ஒரு ஜனநாயகக் கட்சி என்ற அடிப்படையில், எவரும் எந்த முடிவையும் எடுக்கலாம். ஆகவே தன்னுடைய நிலைப்பாட்டைச் சொல்வதற்கு வினோவுக்கு உரித்துண்டு” என. 

இது அவருடைய தலைமைத்துவத் தோல்வியின் வெளிப்பாடாகும். மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த கட்சிகளில் ஓரளவுக்கு மக்கள் செல்வாக்கைக்  கொண்டிருக்கும் ரெலோவின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது என்று அனைவருக்கும் தெரியும். 

அதாவது, தன்னுடைய கட்சியையே பொதுவேட்பாளருக்கான முழுமையான ஆதரவு நிலைப்பாட்டுடன் நிறுத்த முடியவில்லை – செல்வம் அடைக்கலநாதனால். 

இந்தச் சீரில் எப்படிப்பொது வேட்பாளருக்கான ஆதரவை வெளியே மக்களிடத்திலும் பிற அரசியற் சக்திகளிடத்திலும் ஒன்று திரட்டுவது? 

அதற்கான தகுதியையை இழந்து நிற்கிறது ரெலோ.

ஆனால், இதை ஒத்த நிலைமைகள் வேறு கட்சிகளுக்குள் நடந்தால், அதைப் பெரும் பிளவாகக் காட்டுவதற்குப் பலர் உள்ளனர். குறிப்பாக இந்த மாதிரிப் பிரச்சினை தமிழரசுக் கட்சிக்குள் நடக்கிறது என்றால், அதை மேடை போட்டுச் சொல்வதற்கும் அதற்கு எண்ணெய் ஊற்றி தீயைப் பற்ற வைப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள்.  

என்பதால்தான், தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை மீறி அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை எடுத்த பொதுவேட்பாளருக்கான ஆதரவைப் பாராட்டிக் கொண்டாடுவதற்காக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அங்கே ஓடோடிச் சென்றார். 

தன்னுடைய கட்சியின் உறுப்பினர். அதுவும் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாமல், மறுதலித்து வெளியே நிற்கிறார். அதைப் பேசித்தீர்த்து ஒரு ஒழுங்குக்கொண்டு வராமல், அடுத்த வீட்டுப் பிரச்சினையைப் பார்க்கப்போயிருக்கிறார் செல்வம். 

இதைத்தான் சந்தி சிரிக்கும் சங்கதி என்பது. 

கடைசியில் செல்வத்தினால் (தலைவரினால்) வினோநோகராதலிங்கத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் முடிவை முழுமையாகக் கொண்டாடவும் முடியவில்லை. 

காரணம், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டக்கிளைகள் தன்னிச்சையாக எடுத்த – கட்சியின் தீர்மானத்துக்கு மாறான முடிவுகள் செல்லுபடியற்றனவாகி விட்டன. இப்பொழுது தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், அதே பகிரங்கத் தன்மையோடு பொதுவேட்பாளரை மறுதலித்துள்ளது. போதாக்குறைக்கு பொதுவேட்பாளராக நிற்கும் அரியநேத்திரன் அதிலிருந்து விலக வேண்டும். அல்லது கட்சிக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று காலக் கெடுவையும் விதித்துள்ளது. 

இதை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சஜித் பிரேமதாசாவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று யாழ்ப்பாணத்தில் நடந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் நினைவு நிகழ்வில் உரையாற்றும்போது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.  

இதனால் ஓடோடிச் சென்று வாழ்த்துச் சொன்ன செல்வம், மூக்குடைபட்டுப் போயிருக்கிறார். 

இதுதான் பொது வேட்பாளரை ஆதரித்து நிற்கும் தலைமைத்துவங்களின் நிலையாக உள்ளது. 

ஆனால் தமிழரசுக் கட்சியையும் பொது வேட்பாளர் விடயம் இரண்டாகப் பிளந்துள்ளது. ஏற்கனவே அந்தக் கட்சி உள்முரண்பாடுகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக நீதிமன்றப்படியேறி வழக்காடிக் கொண்டிருக்கிறது. 

அதை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் இப்போதுள்ளது.

பொதுவேட்பாளரை அந்தக் கட்சியைச் சேர்ந்த சிறிதரனின் அணியினர் ஆதரிக்கின்றனர். அவருக்கு வெளியே உள்ளவர்கள் அதை எதிர்க்கின்றனர். இது கட்சியை மேலும் ஆழமாகப் பிளவு படுத்துகிறது. 

இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தப் பிளவுகள் மேலும் வலுப்பெறும் என்றே தெரிகிறது. ரெலோ, தமிழரசுக் கட்சிக்குள் மட்டுமல்ல, புளொட்டுக்குள்ளும் மோதல்கள் உருவாகக் கூடிய சூழலே உள்ளது. 

பொதுவேட்பாளர் தொடர்பாக புளொட்டுக்குள் ஏற்கனவே இருவேறு நிலைப்பாடுகளுண்டு. புளொட்டின் தலைவர் சித்தார்த்தனுக்கு இதில் உடன்பாடில்லை. இதை அவர் பல தடவை நேர்ப்பேச்சுகளில் சொல்லியிருக்கிறார். கட்சியின் அடுத்த நிலையில் உள்ள சிலரின் விருப்பத்துக்கு இடமளிக்கும் வகையிலும், தாம் இணைந்து நிற்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காகவுமே பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டியுள்ளது என. 

எனவே ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்தக் கட்சிகளுக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவெடுக்கக் கூடிய சூழலே காணப்படுகிறது.

இதற்கொரு சிறிய எடுத்துக் காட்டு, பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர், தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகும். ஆனால், பொது வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழரசுக் கட்சி உள்ளது. வேட்பாளராகப் போட்டியிடும் அரியநேத்திரனிடம் அது விளக்கம் கோரியிருப்பதுடன், போட்டியிலிருந்து விலகுமாறும் அது பணித்துள்ளது. 

ஆக பொதுவேட்பாளரை நிராகரிக்கின்ற கட்சியிலிருந்து கொண்டே, அதனுடைய மத்திய குழு உறுப்பினராக இருந்து கொண்டே, கட்சியின் நிலைப்பாட்டுக்கும் விதிமுறைகளுக்கும்  மாறான முறையில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் அரியநேத்திரன் என்றால், அவருடைய கண்ணியம், ஒழுங்கு, மதிப்புப் பற்றியெல்லாம் என்னவென்று சொல்வது? குறைந்த பட்சம் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர் விலகிக் கொண்டு தமிழ்ப்பொது வேட்பாளராக நின்றிருக்க வேண்டும். அல்லது இப்பொழுது விலக வேண்டும். 

மட்டுமல்ல, “மட்டக்களப்பு ரகசியங்கள்” என்ற அநாமதேய முகப்புத்தகத்தை இயக்கியோரில் ஒருவராகவும் அரியநேத்திரன் இருந்துள்ளார். அதற்குள்ளிருந்து  கொண்டே தமக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களை அந்த அநாமதேய முகப்புத்தகத்தில் அவர் வசைகளைப் பாடிப் பழிதீர்த்திருக்கிறார். 

பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியபோதுதான் இந்த விடயங்கள் எல்லாம் வெளியே தெரியவந்தன. பொதுவேட்பாளராக அரியநேத்திரன் களமிறங்கியதை விரும்பாத “மட்டக்களப்பு ரகசியங்களின்” ஏனைய பங்காளர்கள் இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளனர். 

இதை மறுத்துரைக்க முடியாத நிலையில் உள்ளார் திரு. அரியநேத்திரன். அரியநேத்திரனின் வயது, தகுதி, பொறுப்பு என எதற்கும் தகுதியில்லாத வேலை அதுவாகும்.

அப்படியான ஒருவரை தமிழரசுக் கட்சி மத்திய குழுவில் வைத்திருந்ததற்காக வெட்கப்பட வேண்டும். அதையும் விட அவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்கிய பொதுக்கட்டமைப்பினரும் அதற்குள்ளிருக்கும் மூத்த கட்சிகளும் கூடத் தலைகுனிய  வேண்டும். 

மொத்தத்தில் சிறுபிள்ளை விளையாட்டாகத் தொடங்கிய தமிழ்ப்பொது வேட்பாளர், பெருந்தீமைகளை உருவாக்கப்போகிறது. 

1980 களில் விடுதலை இயக்கங்கள், மக்களுடைய நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக பொறுப்பற்ற தனமாகச் செயற்பட்டன. இதைக்குறித்து அப்போது எழுத்தாளர் செங்கை ஆழியான், “இந்த நாடு உருப்படாது” என்றொரு நாவலையும் “சிறுபிள்ளை வேணாண்மை”, “குளவிக்கூட்டைக் கலைக்காதீர்கள்” என இரண்டு சிறுகதைகளையும் எழுதினார். 

அந்தக் கதைகள் மிகச்சரியான கணிப்பீட்டையும் மிகக் கூடிய உண்மையையும் எடுத்துரைத்திருந்தன.

ஆனால், அதை அன்று பலரும் ஏற்கவில்லை. எள்ளி நகைத்தனர். இறுதியில் செங்கை ஆழியான் சொன்னதே நடந்தது. 

அதையொத்த காட்சிகளே இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. 

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் வரலாறு நகரவில்லை. தேங்கிக் கிடக்கிறது. 
 

https://arangamnews.com/?p=11189

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரும்; தமிழர் அரசியலின் எதிர்காலமும்

2 months 2 weeks ago
02 SEP, 2024 | 01:38 PM
image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும்  ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் இறந்ததை அடுத்து இப்போது 38 பேர் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள்.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரபல ஊடக நிறுவனங்களின் உரிமையாளரான திலித் ஜயவீர, பிலாட் மார்ஷல் சரத் பொன்சேகா,  முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச,  முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மூத்த இடதுசாரி தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய,  முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளர் நுவான் போபகே மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் ஏனைய குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள்.

முக்கியமான போட்டியாளர்களாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவும், பிரேமதாசவும், திசாநாயக்கவுமே இருக்கிறார்கள் என்பது வெளிப்படையானது. குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகளைப் பெறக்கூடியவர்களாக நாமல் ராஜபக்சவையும், திலித் ஜயவீரவையும் எதிர்பார்க்கலாம்.

ஆனால், சில வேட்பாளர்கள் விசேட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். வேறு சிலர் இரகசிய காரணங்களுக்காக " போலி " வேட்பாளர்களாக நிற்கிறார்கள். சிலர் விளம்பரம் தேடுபவர்கள். ஜனாதிபதி தேர்தலில் எந்த விதத்திலும் தங்களால் வெற்றபெறமுடியாது என்பது பல வேட்பாளர்களுக்கு மிகவும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் பிரத்தியேகமான நோக்கங்களுக்காக அல்லது ஏதோ ஒரு செய்தியைக் கூறுவதற்காக போட்டியிடுகிறார்கள்.

அத்தகையவர்களில் ஒருவரான அரியநேத்திரன் சங்கு சின்னத்தின் கீழ் ஒரு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். 69 வயதான முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் நிற்கிறார். சிவில் சமூக அமைப்புக்களையும் சில தமிழ் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அவரை ஆதரிக்கிறது. அரியம் என்று பொதுவாக அழைக்கப்படும் அரியநேத்திரன் தமிழ் ஊடகங்களில் ' தமிழ் பொதுவேட்பாளர் ' என்று வர்ணிக்கப்படுகிறார்.

பெரிய சர்ச்சை 

தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருப்பது பெரியதொரு சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது. இலங்கை தமிழர்கள் நாட்டின் சனத்தொகையில் 11.1 சதவீதத்தினர் மாத்திரமே.  தமிழ் வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்பது வெளிப்படையானது. அதனால்  தமிழ் பொதுவேட்பாளர் திட்டம் கேலிக்குரியது என்றும் அநாவசியமானது என்றும் பல தமிழர்கள் அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவேட்பாளர் திட்டத்தின் ஆதரவாளர்கள் தங்களது குறிக்கோள் தேர்தலில் வெற்றிபெறுவது அல்ல என்று கூறி அந்த அபிப்பிராயத்தை மறுதலிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் பொதுவேட்பாளர் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழ் தேசியப்பிரச்சினையை தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கவனத்துக்கு கொண்டுவருவார் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல் மற்றும் முறைமை மாற்றம் மீதே கவனம் செலுத்தப்படுகிறது என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இலங்கை்தமிழர்கள் சம்பந்தப்பட்ட பிரத்தியேகமான பிரச்சினைகள் அலட்சியம் செய்யப்படுகின்றன,  முக்கியத்துவமற்றவையாக நோக்கப்படுகின்றன அல்லது கவனிக்காமல் விடப்படுகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அதனால் தமிழ் மக்களின் மனக்குறைகள் இன்னமும் தீர்த்துவைக்கப்படவில்லை என்பதையும் அபிலாசைகளுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை சம்பந்தப்பட்ட சகலருக்கும் தமிழ் நினைவுபடுத்துவார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கே தமிழர்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள்  என்றும் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. அதனால் இந்த தடவை தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு செய்தியை கூறமுடியும் என்று வாதிடப்படுகிறது. தவிரவும், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவருக்கு வாக்குகளை திரட்டுவது தமிழர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் பெருமளவுக்கு மேம்படுத்த உதவும் என்பதுடன் தமிழர்கள் மேலும பிளவுபட்டுப்போவதை தடுக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஒரு வகையான சர்வஜன வாக்கெடுப்பாக காண்பிக்கமுடியும் என்பது தமிழ் வேட்பாளர் திட்டத்தின் ஆதரவாளர்களில் சிலர் வலியுறுத்துகின்ற இன்னொரு கருத்து. தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகளை சமஷ்டி அடிப்படையிலான இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றுக்கான தமிழ் தேசிய அபிலாசைக்கு ஆதரவானவை என்று வியாக்கியானப்படுத்த முடியும் என்பது ஒரு மிதவாதப் போக்கிலான கருத்தாக இருக்கிறது. அதேவேளை, அவருக்கு கிடைக்கின்ற வாக்குகள் சுயநிர்ணயம், தேசியம், தாயகம் என்ற மூன்று கோட்பாடுகளையும் மீள வலியுறுத்தும் எனபது தீவிரவாத போக்கிலான கருத்தாக இருக்கிறது.

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக இல்லாதவர்கள் இந்த வாதங்களை மறுதலிக்கிறார்கள். வெற்றிபெறும் வாய்ப்பை அறவே கொண்டிராத  ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பதை விடவும் வெற்றிபெறும் வாய்ப்பைக் கொண்ட பிரதான ' சிங்கள ' வேட்பாளர்களில் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடியது சாத்தியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதனால்  தமிழ் பொதுவேட்பாளர் திட்டம் பயனற்ற ஒரு செயற்பாடு என்று அவர்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் 1952 ஆம் ஆண்டில் இருந்தே பாராளுமன்ற தேர்தல்களில் சமஷ்டிக் கோட்பாடுகளின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு ஏற்பாடு ஒன்றுக்கு ஆதரவாகவே தொடர்ச்சியாக வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்றும் அதனால் மீண்டும் அதை நிரூபிப்பதற்கு 2024  ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தவேண்டியது தேவையில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் கடந்தகாலத் தேர்தல்களில் இருந்து வேறுபட்டது என்றும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். மூன்று பிரதான வேட்பாளர்களும் பெருமளவு அதிகாரப் பகிர்வுக்கு அல்லது மேம்பட்ட அதிகாரப் பரவலாக்கத்துக்கு இணக்கத்தை தெரிவிக்கக்கூடிய தன்மையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.  பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு பதிலாக அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படும் வரை காத்திருந்து அவர்களுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து சிந்தித்திருந்தால் அது நல்லதாக இருந்திருக்கும். 

மேலும்,  தமிழ் பொதுவேட்பாளர் தனது அரசியல் கோரிக்கைகளை நியாயப்படுத்தி வலுவூட்டுவதற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வாக்குகளில் குறைந்தபட்சம்  ஐம்பது சதவீதமானவற்றை பெறவேண்டும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள். தற்போதைய பின்புலத்தில் அது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. அத்துடன் கிழக்கில் தமிழர்கள் தனியான பெரிய சமூகமாக மாத்திரமே இருக்கிறார்கள். முஸ்லிம்களையும்  சிங்களவர்களையும்  சேர்த்தால் தமிழர்கள் சிறுபான்மையினரே. அதனால் வாக்களிப்பு முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறுபானமையினர் என்பதை வெளிக்காட்டி வடக்கு -  கிழக்கு இணைப்புக்கான நியாயத்தை மலினப்படுத்திவிடக் கூடும்.

'தமிழ் பொதுவேட்பாளர் ' என்ற விபரிப்பு செல்லுபடியற்றது என்றும் வாதிடப்படுகிறது. அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் கொண்ட ஒரு குழு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை பிரேரித்த போதிலும், அதை எதிர்க்கும் வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் குழுக்களும் இருக்கின்றன. சில தமிழ் கட்சிகள் குறிப்பிட்ட ஒரு ' சிங்கள ' வேட்பாளரை ஆதரிப்பதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் சுயேச்சை தமிழ் வேட்பாளர்  'தமிழ் பொதுவேட்பாளர்' என்ற பெயருக்கு உரித்துடையவரல்ல என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

பின்னணியும் வரலாறும்

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்ற இன்றைய  பின்புலத்தில் இந்த கட்டுரை அந்த விடயத்தில் கவனத்தைச் செலுத்துகிறது  இந்த தமிழ் வேட்பாளர் திட்டத்தின் விளைவுகளை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு அதன் வரலாற்றையும் பின்புலத்தையும் ஓரளவுக்கு  சுருக்கமாக ஆராய்வது அவசியமானதாகும்.

2009 மே மாதம் தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவத்தோல்வி தெற்காசியாவின் மிகவும் நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவந்தது. அது தமிழ் தேர்தல் அரசியலில் புதிய கட்டம் ஒன்றை திறந்துவிட்டது. 2010 ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டபோது எதிர்க்கட்சிகள் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பொது எதிரணி வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை களமிறக்கின.

அந்த நேரத்தில் இலங்கையின் வடக்கையும் கிழக்கையும் சேர்ந்த தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் அணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கியது. அதில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும்  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. தமிழ் தேசிய கூட்டயைப்பும் பொன்சேகாவை ஆதரித்தது.

 சிவாஜிலிங்கம்

பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரித்ததை ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எம்.கே. சிவாஜிலிங்கம் கடுமையாக எதிர்த்தார். போரின் இறுதிக்கட்டத்தில் தமழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ராஜபக்சவும்  பொன்சேகாவும் பொறுப்பு  என்பதால் இருவரையுமே எதிர்க்க வேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார்.

பொன்சேகாவை ஆதரிப்பதற்கு பதிலாக தமிழ்க்கட்சிகள் தனியான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று சிவாஜிலிங்கம் யோசனையை முன்வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டம் சிவாஜியின் யோசனையை நிராகரித்தது. அதனால் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் சுபாவத்தைக் கொண்ட அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தன்னை தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்று காட்சிப்படுத்திய அவர் ஒரு சிங்கள வேட்பாளருக்கு பதிலாக தனக்கு வாக்களிக்குமாறு  தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுவே பொதுத்தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கோட்பாட்டின் தொடக்கமாகும். சிவாஜிலிங்கம் 9662 வாக்குகளை மாத்திரம் பெற்ற பரிதாபத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

2019 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டார். பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது கோட்டாபய செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்று சிவாஜிலிங்கம் மீண்டும் யோசனையை முன்வைத்தார். அந்த பொதுவேட்பாளர் திட்டத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் அதை எவரும் கவனத்தில் எடுக்கவில்லை. சளைக்காத சிவாஜிலிங்கம் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்தார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட அவர் தமிழ் கட்சிகளினதும் தமிழ் மக்களினதும் ஆதரவை நாடினார். மீண்டும் படுதோல்வி கண்ட அவருக்கு 12, 256 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தினால் இலங்கை தமிழ் மக்கள் கவரப்படவில்லை என்பதை சிவாஜிலிங்கத்தின் இ்ரட்டைத் தோல்வி வெளிக்காட்டியது. அதனால் அந்த கோட்பாடு வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் போடப்படும் என்றே தோன்றியது. ஆனால் ஒரு மூத்த அரசியல் தலைவரின் முயற்சியின் விளைவாக புத்துயிர் பெற்றது.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன் / சுரேஷ் என்று அறியப்படும் கந்தையா பிரேமச்சந்திரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்எல்.எவ்.) செயலாளர் நாயகம் / தலைவர். அவர் முதலில்  1989 தொடக்கம் 1994 வரையும் பிறகு 2001 தொடக்கம் 2005 வரையும் பாராளுமன்ற உறூப்பினராக இருந்தார். பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கு தேவையான விருப்பு வாக்குகளைப் பெறத்தவறியதால் சுரேஷ் கடந்த ஒன்பது வருடங்களாக பாராளுமன்றத்துக்கு செல்லமுடியவில்லை. 2001 ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாபக கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2016 ஆம் ஆண்டில் அதிலிருந்து வெளியேறியது.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை மீண்டும் ஒரு  பெரியளவில் முன்னெடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரனே. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே அவர் அதைச் செய்யத் தொடங்கினார். சுரேஷ் பெரும் முயற்சி எடுத்தபோதிலும், செல்வாக்குமிக்க ஊடக  உரிமையாளர் ஒருவர் சம்பந்தப்படும்வரை அந்த கோட்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைக்கவில்லை. எஸ்.எஸ். குகநாதன் அல்லது குகன் என்று அறியப்படும் சபாபதி சுப்பையா குகநாதன் யாழ்நகரை தளமாகக் கொண்ட டான் ரி.வி. மற்றும் ஈழநாடு பத்திரிகையை நடத்தும் ஏ.எஸ்.கே குழுமத்தின் உரிமையாளராவார்.

பல தசாப்தகாலா அனுபவத்தைக் கொண்ட ஒரு  நீண்டகால பத்திரிகையாளரான குகநாதன் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஆதரிக்கத் தொடங்கினார். தமிழ் வேட்பாளர் கோட்பாட்டை மேம்படுத்தும் செய்திகளும் ஆசிரிய தலையங்கங்களும் கிரமமாகவும் திட்டமிட்ட முறையிலும் அவரது பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. இந்த கோட்பாட்டுக்கு ஆதரவாக தொலைக்காட்சியில் பல நேர்காணர்களும் விவாதங்களும் ஔிபரப்பாகின. மேலும் குகநாதன் அந்த திட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதற்காக பல்வேறு தமிழ் நகரங்களில் பல பொதுக் கூட்டங்களுக்கும்  கலந்துரையாடல்களுக்கும் நிதியுதவியையும் செய்தார்.

நாளடைவில் பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதும் பல அரசியல் ஆய்வாளர்களும் தங்களது எழுத்துக்கள் மூலமும் தொலைக்காட்சி நேர்காணல்கள் மூலமும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சிலர்  இந்த திட்டத்தை ஆதரிப்பதாகவும் அதற்காக பணத்தை வழங்குவதாகவும்  வதந்திகளும் கிளம்பின.  அதற்கு பிறகு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தொடர்ச்சியாக பல கருத்தரங்குகளும் கலந்தாலோசனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. அவற்றில்  பல சிவில் சமூக அமைப்புக்கள் பங்குபற்றின.

தமிழ் அரசியல் கட்சிகள் 

இன்னொரு மட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும் ஈடுபாடு காட்டத் தொடங்கின. முன்னர் கூறப்பட்டதைப் போன்று தமிழ் பொதுவேட்பாளர் திட்டத் தை மேம்படுத்துவதில் முன்னோடியாகச் செயற்பட்ட அரசியல் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ். தான். பிறகு ஏனைய கட்சிகளும் ஆர்வம் காட்டின. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நிலவிய உள்நெருக்கடி ரெலோவும் தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (புளொட்)  தனிவழி செல்வதற்கு வழிவகுத்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடன் சேர்ந்து இவ்விரு கட்சிகளும் வேறு இரு கட்சிகளும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்தன.  தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சி தனிமைப்படுத்தப்பட்டது. 

தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்துக்கு மேலும் தமிழ் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. மொத்தமாக ஏழு அரசியல் கட்சிகள் அந்த திட்டத்தை ஆதரித்தன. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமீழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும்  தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியவையே அந்த கட்சிகளாகும்.

மறுபுறத்தில் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு 81 தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள் மற்றும்  தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இது  'தமிழ் தேசிய பொதுச்சபை'  என்று அழைக்கப்பட்டது. செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு இந்த பொதுச்சபை நிறைவேற்றுக்குழு ஒன்றையும் ஆலோசனைக்குழு ஒன்றையும் அமைத்தது.

பொதுக் கட்டமைப்பு 

அதற்கு பிறகு தமிழ் மக்கள் பொதுச்சபையும் முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு அரசியல் கட்சிகளும் தமிழ் பொதுவேட்பாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு செயல்முறை ஏற்பாட்டுக்கு வந்தன. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு அமைக்கப்பட்டது.  அந்த கட்டமைப்புக்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு உயர்பீடம் இருக்கிறது. அதில் ஏழு பேர் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகவும் ஏழு பேர் அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் இருந்தனர்.

என்.ஸ்ரீகாந்தா, டி. சித்தார்த்தன்,  எஸ். பிரேமச்சந்திரன், எஸ். அடைக்கலநாதன், சி.வி. விக்னேஸ்வரன்,  ரி.வேந்தன் மற்றும் பி.ஐங்கரநேசன் ஆகியோரே அந்த அரசியல் தலைவர்களாவர். கே.ரி. கணேசலிங்கம்,  செல்வின் மரியாம்பிள்ளை, சி. யோதிலிங்கம்,  ஏ. யதீந்திரா,  கே. நிலாந்தன், ரி. வசந்தராஜா மற்றும் ஆர். விக்னேஸ்வரன் ஆகியோரே சிவில் சமூகப் பிரதிநிதிகளாவர். உயர்பீடத்தின் பதினான்கு உறுப்பினர்களில் பத்துப்பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய நான்கு பேரும் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு,  அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

அரியநேத்திரன் என்ற அரியம்

அதற்கு பிறகு பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்யும்  செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் ஒரு நூறு பேரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதாக தகவறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இது பிறகு 46  பெயர்களைக்  கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறியது. அதற்கு பிறகு இது ஏழு பெயர்களைக் கொண்ட குறுகிய பட்டியலாக சுருங்கியது. இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழ் பொது வேட்பாளராக அரியம் என்ற  பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு முன்வருமாறு அணுகப்பட்டவர்களில் பலர் அதற்கு மறுத்த காரணத்தினால் தெரிவுச் செயன்முறை பெரும் சிக்கலானதாக இருந்ததாக தமிழ் சிவில் வட்டாரங்கள் மூலம் அறியவந்தது. வேறு சந்தர்ப்பங்களில் சிலரை பொதுவேட்பாளராக பரிசீலிப்பதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இருந்து அல்லது அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆட்சேபனை வந்தது. தெரிவு செய்யப்படும் வேட்பாளர் அடுத்த இரு வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் போடடியிடக்கூடாது;  அவர் தான் போட்டியிடுகின்ற சின்னத்தை பிறகு பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையும் பெரிய நெருக்குதலை ஏற்படுத்தியது. பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான முயற்சியும் வெற்றிபெறவில்லை.

வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு அரியநேத்திரனுக்கு அனுகூலமாக மூன்று முக்கிய  காரணிகள் அமைந்தன. முதலாவது  அவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பெருமளவில் தமிழர்கள் மத்தியில் ஐக்கியத்தை ஊக்கப்படுவத்துவதற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை விடவும் கிழக்கு மாகாண வேட்பாளர் ஒருவரை களமிறக்கவேண்டியது முக்கியமானதாக இருந்தது. இரண்டாவது தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக  அரியநேத்திரன் உறுதியளித்திருக்கிறார். இனிமேல் எந்தொரு தேர்தலிலும் தான் வேட்பாளராக நிற்கப்போவதில்லை என்று அவர் கூறினார். மூன்றாவது அவர் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தகுதியைக் கொண்டவராக இருந்தார். தமிழ் அரசியல் கட்சிகள் அவற்றின் சின்னத்தின் கீழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பநற்கு தயங்கியதால் புதியதொரு சின்னத்தின் கீழ் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேவைப்பட்டார்.

தமிழ் பொதுவேட்பாளர் போட்டியிடுவது வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் வாக்குகளைக் குறிவைக்கும் சிங்கள வேட்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது சாத்தியம். அவர்களுக்கு செல்லக்கூடிய வாக்குகள் இப்போது  அரியநேத்திரனுக்கு போகலாம். ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவும் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புடன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். புளொட், ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி  ஆகியவற்றின் பிரதிநிதிகள் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர்.  ரெலோவும், புளொட்டும்  பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.  தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியதற்கான காரணங்கள் இருவருக்கும் விரிவாக கூறப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிளாந்துறையில் 1955  ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி பிறந்த அரியநேத்திரன்  கொக்கட்டிச்சோலையில் அமைந்திருக்கும் மிகவும் பிரபல்யமான ' தான்தோன்றீஸ்வரர் ' சிவன் கோவிலின் மரபுவழியான அறங்காவலர்களாக இருந்துவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.  அரியம் என்று பிரபல்யமாக அறியப்படும் அவர் ஆற்றல்மிகு எழுத்தாளரும் தமிழ்ப் பேச்சாளருமாவார். பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் விடுதலை புலிகளானால் வெளியிடப்பட்ட ' தமிழ் அலை ' பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றினார். தற்போது கொழும்பில் இருந்து வெளியாகும் ' தமிழன் '  பத்திரிகையில் அரசியல் பத்தியொன்றை அரியம் எழுதிவருகிறார்.

அவர் 2004 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராக பாராளுமன்றப் பிரவேசம் செய்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் 35,337 வாக்குகளைப் பெற்றார். மட்டக்களப்பு உறுப்பினராக 2010 பாராளுமன்ற தேர்தலிலும் தெரிவான அவருக்கு16,504 வாக்குகள் கிடைத்தன. 2015 பாராளுமன்ற தேர்தலில் தெரிவாவதற்கு அவருக்கு போதுமான விருப்பு வாக்குகள் கிடைக்கவில்லை  2020 பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால் தொடர்ந்து அரசியலில் தீவிரமாக இயங்கிவரும் அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினராக இருந்துவருகிறார்.

தமிழரசு கட்சியின் சர்ச்சை

தமிழ் பொதுவேட்பாளர் தற்போது தனது கட்சிக்குள் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சி.வி.கே. சிவஞானம், எம்.ஏ. சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் போன்றவர்கள் பொதுவேட்பாளர் திட்டத்தை எதிர்க்கின்ற அதேவேளை  மாவை சேனாதிராஜா, ஜ. சிறீநேசன், சிவஞானம் சிறீதரன் போன்றோர்  அதற்கு ஆதரவாக இருக்கிறார்கள். 

தமிழரசு கட்சி எந்த வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரதான வேட்பாளர்களுடன் பேச்ச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு சுமந்திரனுக்கு அதிகாரமளித்தது.  ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரா குமார திசாநாயக்க போன்ற வேட்பாளர்களுடன் ஏன் நாமல் ராஜபக்சவுடனும் கூட அவர்  பேச்சுவார்த்தைகளை நடத்திவந்தார். பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து  அவர் கட்சிக்கு அறிவித்து வந்தார். பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆழமாக ஆராய்ந்து இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஜனாதிபதி தேர்தலில் 'வெற்றிபெறுபவருடன்'  நிற்கவேணடும் என்று தமிழரசு கட்சி உறுதியாக இருந்தது.

கட்சி இறுதித் தீர்மானத்தை எடுத்திராத நிலையில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு அரியநேத்திரன் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தார். இது விடயத்தில் அவரை சிறீதரன் போன்றவர்கள் வெளிப்படையாக ஆதரித்தார்கள். இது தொடர்பாக அரியநேத்திரனிடம் இருந்து தமிழரசு கட்சி ஒரு விளக்கத்தைக் கோரியது. கட்சியின் கொள்கை வகுக்கும் மத்திய செயற்குழு உறுப்புரிமையில் இருந்து அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டார். தமிழ் வேட்பாளர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் உறுப்பினர்கள் ஈடுபடுக்கூடாது என்றும் கட்சி தடை பிறப்பித்தது. ஏற்கெனவே பிளவடைந்திருக்கும் தமிழரசு கட்சி  இந்த விவகாரம் தொடர்பில் பாரிய பிளவை நோக்கிச் செல்கின்றது போன்று தெரிகிறது.

இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் கூடிய தமிழரசு கட்டியின் மத்திய செயற்குழு ஏகமனதாக மூன்று தீர்மானங்களை எடுத்ததாக சுமந்திரன் செய்தியாளர்கள் மகாநாட்டில் அறிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதில்லை; அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவேண்டும்; தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழரசு கட்சி ஆதரிக்கும் என்பவையே அந்த தீர்மானங்களாகும்.

சங்குக்கு வாக்குகள்

அதேவேளை, அரியநேத்திரன் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.  அவரது பிரசாரப் பயணம்  யாழ்ப்பாணக்குடா நாட்டில் பொலிகண்டியில்  ஆரம்பித்து  அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. வடக்கு,  கிழக்கில் சகல மாவட்டங்கள் ஊடாகவும் அவர் பயணம் செய்வார். அரியத்தின் பிரசாரத்தின் தொனிப்பொருள் ' நமக்காக நாம் ' என்பதாகும். தான் தமிழ்த் தேசியத்தின் ஒரு சின்னம் மாத்திரமே, ஒரு தலைவர் அல்ல என்று அவர் கூறுகிறார்.

அரியநேத்திரனின் அழைப்புக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறு செவிசாய்ப்பார்கள் என்பது செப்டெம்பர் 21 ஆம் திகதி தெரிந்துவிடும். 

தமிழ் பொதுவேட்பாளருக்கு தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களித்தால்  தமிழ் அரசியல் செல்நெறியில் ஒரு தீவிரவாத திருப்பத்தை அது ஏற்படுத்திவிடக்கூடும்.  தமிழர்கள் அவருக்கு குறைந்தளவில் வாக்களித்தால் அது தமிழ்த் தேசியவாதக் கோட்பாட்டினை பலவீனமடையச் செய்துவிடலாம். 

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் இறுதியில் தோல்வியடையப் போகிறவர்கள் தமிழ் மக்களே என்று தோன்றுகிறது.

https://www.virakesari.lk/article/192632

பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத் தீவிரவாதியா? நிலாந்தன்.

2 months 2 weeks ago
Questen.png?resize=750,375 பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத் தீவிரவாதியா? நிலாந்தன்.

அனுர,ரணில், சஜித் ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்க்கப்பட்டது போல அவை அமைந்திருக்கின்றன. 13க்கு அப்பால் அவர்களிடம் தீர்வு கிடையாது. மேலும் இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி உருவாக்கப்படும் புதிய யாப்பு அடுத்த நாடாளுமன்றத்தில் தான் தீர்மானிக்கப்படும்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால், பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தர கூடும் என்பது தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. தபால் மூல வாக்கெடுப்புக்கு சில நாட்களே உண்டு.

தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ முடிவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை அறிவிக்கவில்லை. ஆனால் அதன் திருகோண மலைக் கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து கிளிநொச்சிக் கிளையும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கட்சியின் கீழ் மட்டத்தில் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலை எழத் தொடங்கிவிட்டது.அதை மேற்சொன்னை இரண்டு மாவட்டக் கிளைத் தீர்மானங்களும் நமக்கு உணர்த்துகின்றன.

இதனிடையே சுமந்திரன் தனது twitter பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
“தமிழ் வாக்குகள் பெருந்தொகையாக அரியநேந்திரனுக்கு விழுமாக இருந்தால்,
தமிழ் அரசியலின் போக்கு மேலும் தீவிர நிலைப்பாட்டை நோக்கித் திரும்பும். தமிழ் வாக்குகள் அரியநேத்திரனுக்குக் குறைவாக விழுந்தால் தமிழ்த் தேசிய அரசியல் போக்கு பலவீனமடையும். விளைவு எதுவாயினும், இறுதியிலும் இறுதியாக இழப்பு தமிழ் மக்களுக்குத் தான்.”

சுமந்திரன் கூறுவது போல தமிழ்த் தேசிய தீவிரவாத நிலைப்பாடு என்பது என்ன? ஒரு பொது வேட்பாளரின் நிலைப்பாடு தமிழ் தேசிய தீவிரவாத நிலைப்பாடு என்று அவர் கூற வருகிறார். பொது வேட்பாளர் நாட்டை பிரிக்க சொல்லி கேட்கிறாரா? அவர் தெளிவாகக் கூறுகிறார்.தமிழ் மக்களை ஒன்று திரட்டப் போகிறோம் என்று. திரண்ட தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உரத்த குரலில் சமரசத்துக்கு இடமின்றிக் கூறுவார்கள். அவ்வளவுதான். தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமான குரலில் பலமான நிலையில் நின்றபடி கூறுவது தீவிரவாதமா?

தமிழ் மக்கள் ஒற்றுமைப்படுவது தீவிரவாதமா? தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது தீவிரவாதமா? இல்லை. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது என்பது இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை பலப்படுத்துவதற்காகத்தான். முதலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பலப்பட வேண்டும். அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை, தேசிய இனம் என்பதை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் போதுதான் இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் அல்லது தேசிய இனங்கள் உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படும். அதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். அதை ஏற்றுக்கொள்வதுதான் இலங்கை தீவை ஐக்கியமாகக் கட்டி எழுப்ப ஒரே வழி. அதுதான் இலங்கைத் தீவின் இறைமையை பாதுகாக்கும்; சுதந்திரத்தைப் பாதுகாக்கும். எனவே தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது இலங்கைத் தீவை உடைப்பதற்காக அல்ல. இலங்கைத் தீவை ஒரு பலமான நாடாக கட்டி எழுப்புவதற்காகத் தான்.

தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முன்வைத்த கருத்துருவாக்கிகள் தமிழ் மக்கள் பொதுச்சபையை தொடங்கிய பொழுது அதன் அமர்வுகளில் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டினார்கள். தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ற வார்த்தையை பாவியுங்கள். சிங்கள வேட்பாளர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று.

ஏனென்றால்,தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் பொசிட்டிவ் ஆனது. அது நெகட்டிவ் ஆனது அல்ல.

ஆனால் அவ்வாறு தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவது தீவிரவாதம் என்று சுமந்திரன் கருதுகின்றாரா?

தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதுதானே? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்தார்கள்? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா தனியோட்டம் ஓடினார்கள்? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா இப்பொழுதும் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக கருதுரைப்பதாக கூறிக்கொண்டு தமிழ் மக்களைச் சிதறடிக்க முற்படுகிறார்கள்?

ஆனால் அவருடைய கட்சியின் அடிமட்டம் அவருக்கு எதிராக முடிவு எடுக்க தொடங்கிவிட்டது. இரண்டு மாவட்ட கிளைகள் அந்த முடிவை வெளிப்படையாக அறிவித்து விட்டன. இனி வரும் நாட்களில் ஏனைய மாவட்ட கிளைகள் மத்தியிலும் அது நொதிப்பை ஏற்படுத்தும்.அதன் விளைவாக தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவுத் தளம் மேலும் பலமடையும்; பரவலடையும்.

தமிழ் பொது வேட்பாளரின் நோக்கம் எந்த ஒரு கட்சியையும் உடைப்பது அல்ல. உடைந்து கிடப்பவற்றைச் சேர்ப்பது தான். ஒரு நெல்மணி கூட வீணாக சிந்தக் கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எல்லாருக்குமானது அது அதற்குள் வராத கட்சிகளுக்குமாக எப்பொழுதும் திறக்கப்பட்டு இருக்கின்றது என்று தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் திரும்பத் திரும்பக் கூறுகின்றார்கள். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வெளியே நிக்கும் கட்சிகள் தமிழ்த் தேசிய கட்டமைப்பை விரோதமாக பார்க்கத் தேவையில்லை.

பொது வேட்பாளருக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கச் செல்லும் பொழுது மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், ஒரு உண்மை பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தமிழ் மக்கள் கட்சி அரசியலின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். அரசியலில் அவர்கள் ஏறக்குறைய சலிப்படைந்து விட்டார்கள். ஒரு பகுதியினர் விரக்தி அடைந்தும் விட்டார்கள். இது ஆபத்தான ஒரு வளர்ச்சி.

பொதுவாக கட்சி அரசியல் எனப்படுவது அதன் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான். மக்களை ஓர் அரசியல் சமூகமாகத் திரட்டுவது தான். நம்பிக்கை இழந்தவர்களை வைத்து கட்சியைக் கட்ட முடியாது. நம்பிக்கை இழந்தவர்களை வைத்து நாட்டையும் கட்டி எழுப்ப முடியாது. தேசத்தையும் கட்டி எழுப்ப முடியாது. எனவே தேர்தல் வார்த்தைகளில் கூறின், தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறார்.

கிழக்கில் இருந்து வந்திருக்கும் ஒரு அரசியல்வாதி அவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையை, திரட்சியை கட்டி எழுப்பும் குறியீடாக மாறி வருவது என்பது தமிழ் மக்களின் தாயக ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்தும்; பாதுகாக்கும்.

வடக்கும் கிழக்கும் ஏற்கனவே சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டு விட்டன. அரசாங்கம் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான நிலத் தொடர்ச்சியை அறுப்பதில் கணிசமான வெற்றிகளைப் பெற்று வருகிறது. தவிர நிர்வாக அலகுகளை இணைப்பதன் மூலமும் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான பிணைப்புகள் அறுக்கப்படுகின்றன. நில ஒருமைப்பாடு இல்லையென்றால் தாயகம் இல்லை. தாயகம் இல்லை என்றால் தேசியவாதமும் இல்லை. எனவே வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பது என்று முடிவு எடுத்து கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் ஒரு பொது வேட்பாளர் தமிழ் ஐக்கியத்தின் குறியீடாகவும் தமிழர் தாயக ஒருமைப்பாட்டின் குறியீடாகவும், தமிழ் ஐக்கியத்தின் குறியீடாகவும் மேல் எழுவாரா இல்லையா என்பதை தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு அள்ளிக் கொடுக்கப் போகும் வாக்குகளின் தொகை தான் தீர்மானிக்கும்.

https://athavannews.com/2024/1397747

பிரதான  ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும்  இனப்பிரச்சினையும்

2 months 2 weeks ago

பிரதான  ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும்  இனப்பிரச்சினையும்

  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

  மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களினதும்  தேர்தல் விஞ்ஞாபனங்கள் கடந்த வாரம் வெளியாகின. 

முதலில் ஆகஸ்ட் 26 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பில் தனது  விஞ்ஞாபனத்தை வெளியிட்டார். அடுத்து ஆகஸ்ட் 29 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தலைப்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ‘சகலருக்கும் வெற்றி’ என்ற தலைப்பிலும் தங்களது  விஞ்ஞாபனங்களை வெளியிட்டனர். 

 இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான தங்களது  திட்டங்களுக்கு விஞ்ஞாபனங்களில் முன்னுரிமை கொடுத்திருக்கும்  மூவரும்  நாடும் மக்களும்  எதிர்நோக்குகின்ற பெரும்பாலும்  சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதற்கான  யோசனைகளையும்  முன்வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நீண்ட விஞ்ஞாபனங்களை  சாதாரண மக்கள் அமைதியாக இருந்து முழுமையாக  வாசிப்பதில் அக்கறை காட்டுவார்கள் என்பது சந்தேகமே. 

தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடருவதை தவிர பொருளாதார மீட்சிக்கு வேறு வழியே கிடையாது என்பதே ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடு. அந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மற்றைய இரு பிரதான வேட்பாளர்களினாலும் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கமுடியாது என்ற அர்த்தத்தில் பேசிவரும் அவர் தனக்கு ஐந்து வருடகாலத்துக்கு ஆணை தருமாறு நாட்டு மக்களைக் கேட்கிறார்.

 பிரேமதாசவும் அநுரா குமாரவும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை சில திருத்தங்களுடன் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக  கூறுகின்ற அதேவேளை,  மக்களைப் பெரிதும் வதைக்கின்ற வரிகளைக் குறைப்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். அதனால் எவர் புதிய  ஜனாதிபதியாக வந்தாலும், பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரை அவரின் செயற்பாடுகள் சர்வதேச  நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பின்பற்றியதாகவே  அமையப்போகிறது என்பது தெளிவானது. 

  புதிய அரசியலமைப்பு மற்றும் தேசிய இனநெருக்கடியுடன் தொடர்புடைய பிரச்சினைககள் குறித்து  மூன்று தலைவர்களும்  விஞ்ஞாபனங்களில் கூறியிருப்பதை சுருக்கமாக நோக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

 ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு வெகு முன்னதாகவே மூன்று வேட்பாளர்களும்  இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். விஞ்ஞாபனங்களிலும்  அவர்கள்  அதே நிலைப்பாடுகளையே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 புதிய அரசியலமைப்பு ஒன்றை தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் கொண்டு வரும் என்று அநுரா குமார நீண்ட நாட்களாக கூறிவந்திருக்கின்ற போதிலும், அது தொடர்பில் அவர் விஞ்ஞாபனத்தில் கூறியிருப்பது எவரும் எதிர்பார்க்காததாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்க காலத்தில் (2015 –2019) முன்னெடுக்கப்பட்ட  அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை துரிதமாக நிறைவு செய்து புதிய அரசியலமைப்பின் மூலமாக அனைத்து மக்களும் ஆட்சியில் பங்கேற்கக்கூடியவாறு ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனம், மாவட்டம்  மற்றும்  மாகாணத்துக்கு அரசியல் ரீதியானதும் நிருவாக ரீதியானதுமான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் கூறுகிறது.   அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் குறித்து நேரடியாக அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

 மாகாண சபைகளிடம் இருந்து மத்திய அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்ட அதிகாரங்கள் மீண்டும் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்படும் என்றும் மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு புதிய பாராளுமன்றத்திடம்  ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கும் ஜனாதிபதி உண்மை கண்டறிதல் மற்றும் நல்லிணக்கச் சட்டம் நிறைவேற்றப்படுவதுடன் காணாமல் போனோர் தொடர்பான நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கையும்  நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். 

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரேமதாச  மதத்தலைவர்கள், பாராளுமன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் என்றும் தற்போதைய அரசியல் முறைமையை  பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதுடன் ஒரே நாட்டின் கீழ் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் கூடுதல்பட்ச அதிகாரப்பரவலாக்கம் உறுதிசெய்யப்படும் என்றும்  கூறுகிறார்.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை 13 வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் ;  மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்படமாட்டாது. அதற்கு பதிலாக மாகாண மட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் பலப்படுத்தப்படும் என்றும் பிரேமதாச வாக்குறுதியளித்திருக்கிறார்.

மூன்று தலைவர்களும் புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கூறியிருக்கும் அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை  ஒழிப்பு குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 தங்களது அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துக்கட்டி பாராளுமன்ற ஆட்சிமுறையை நிலைநாட்டுவதுடன் நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதி பதவியை உருவாக்கும் என்று அநுரா குமார கூறியிருக்கும் அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தெரிவாகும் புதிய பாராளுமன்றத்திடம் ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை வரையும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டுமா இல்லையா என்பதை புதிய பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். இது ஒன்றும் அவர் புதிதாக கூறுகின்ற விடயம் அல்ல. பிரேமதாசவும் அநுரா குமாரவும்  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பு குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு மக்களின் புதிய ஆணையுடன் தெரிவாகும் அடுத்த பாராளுமன்றத்திடமே ஒப்படைக்கப்படவேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்னரேயே கூறிவந்திருக்கிறார்கள்.

முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசெத் டெப் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்மொழிவுகளின் அடிப்படையில் புதிய தேர்தல் நடைமுறையை புதிய பாராளுமன்றம் அறிமுகப்படுத்தும்;  மாகாணசபை பிரதிநிதிகளையும் சிவில் சமூக உறுப்பினர்களையும் கொண்டதாக அமைக்கப்படும் இரண்டாவது அரசாங்க சபை ( Second State Council ) மாகாணசபைகள்  அவற்றின் அதிகாரங்களை  நடைமுறைப்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கும் என்று விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனம் கூறுகிறது.

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்து சுமார் மூன்று தசாப்த காலமாக பேசப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரையில் அது தொடர்பிலான எந்த முயற்சியும் ஒப்பேறவில்லை. மூன்று பிரதான வேட்பாளர்களும் என்னதான் விஞ்ஞாபனங்களில் வாக்குறுதியளித்தாலும்,  அது விடயத்தில் அவர்களின் அரசியல் நேர்மை குறித்து மக்களுக்கு நிச்சயமாக வலுவான சந்தேகம்  இருக்கிறது. அத்துடன் தற்போதைய அரசியல் நிலைவரங்களையும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவின் மட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது புதிய அரசியலமைப்பை வரைவது போன்ற பொறுப்புமிகுந்த பணிகளை நிறைவேற்றக்கூடிய அளவுக்கு  பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்தொருமிப்பைக் காண்பது சாத்தியமாக இருக்குமா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

 தேசிய இனநெருக்கடியுடன் தொடர்புடைய பிரச்சினைகளைப் பொறுத்தவரை, மூன்று தலைவர்களும்  பெரும்பாலும் ஒரேவிதமான நிலைப்பாட்டையே  வெளிப்படுத்தப்படுத்தியிருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னரேயே அவர்கள் தங்களது இந்த நிலைப்பாட்டை பகிரங்கமாகக் கூறினார்கள். 

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த தடவை பிரதான அரசியல் கட்சிகளின் அல்லது கூட்டணிகளின் பிரசாரங்களில்  பெரும்பாலும்  இனவாதமற்ற ஒரு போக்கை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. 2019 ஜனாதிபதி தேர்தலின்போது காணப்பட்ட சூழ்நிலையில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. 

தமிழ் அரசியல் கட்சிகள் ஒப்பீட்டளவில் பிரயோசனமான முறையில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு ஒன்று இன்றைய  சூழ்நிலையில் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவதில் அக்கறை காட்டாமல் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

 தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையின் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வைக் கோரிநிற்கும் பெரும்பாலான வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகள் அதற்கு முதற்படியாக 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தைக் கேட்பது மாத்திரமல்ல அவ்வாறு செய்வதற்கு கொழும்புக்கு நெருக்குதலைக் கொடுக்குமாறு புதுடில்லியையும் கேட்கின்றன.

 அவ்வாறு கேட்பதுடன் மாத்திரம் தங்களது பொறுப்பு முடிந்துவிடுகிறது  என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நினைக்க முடியாது.13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தை  நிர்ப்பந்திப்பதற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை பயன்படுத்துவதற்கு அவர்கள் ஒன்றிணைந்து செயற்படவும் வேண்டும். அதற்கு இசைவான சூழ்நிலையை உறுதி செய்வதற்கு அரசியல் தந்திரோபாயத்தை கையாள வேண்டும். 

 தற்போது மூன்று பிரதான வேட்பாளர்களும் 13 வது திருத்தத்துக்கு அனுகூலமான  நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அவர்களுடன் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் மற்றைய இருவரும் அந்த  திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால  முயற்சிகளை எதிர்க்காமல் இருப்பதற்கான  உத்தரவாதத்தைப் பெறவேண்டும். இன்றைய சூழ்நிலையில் அது ஒரு விவேகமான  தந்திரோபாயமாக இருக்கமுடியும். 

இந்த கட்டுரையாளர் ஒன்றும் 13 வது திருத்தத்தின் ரசிகர் இல்லை. ஆனால்,  நிலையான தீர்வாக அமையக்கூடிய சமஷ்டி ஏற்பாட்டை நோக்கிய பயணத்தில்  முதற்படியாக அந்த திருத்தத்தை கருதும் தமிழ்க்கட்சிகள் அத்தகையதொரு தந்திரோபாயத்தை கடைப்பிடிப்பதில்  என்ன தவறு இருக்கப் போகிறது? 

இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடான 13 வது திருத்தத்தை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறுகின்ற பிரிவினரும் தமிழ் அரசியல் சமுதாயத்திற்குள் கணிசமாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் கொழும்பு அரசாங்கம் ஒன்று அந்த திருத்தத்தை ஒழித்துவிட்டால் அதைப் போன்ற  அல்லது அதையும் விட குறைவான ஏற்பாடுகளுடன் கூடிய ஒன்றை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய அரசியல் வல்லமை இன்று தமிழ் மக்களிடம் இருக்கிறதா? இந்த கேள்விக்கு  இதுவரை பதில் இல்லை. கனவுலக அரசியல் செய்வது சுலபம். ஆனால் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளைப் பற்றி சிந்திப்பதே இன்று தமிழ் மக்களுக்கு முக்கியமானது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை நிறைவுசெய்து புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது குறித்து அநுரா குமார தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த செயன்முறையின் போது 13 வது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளையும் விட மிகவும் விரிவான அதிகாரப்பரவலாக்கல் யோசனைகள் குறித்து ஆராயப்பட்டதாக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் காலஞ்சென்ற இரா. சம்பந்தனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் அடிக்கடி கூறினார்கள். அதனால் 13 வது திருத்தத்தைப் பற்றி இனிமேலும் பேசிக்கொண்டிருக்கவேண்டியதில்லை என்பதும் அவர்களது எண்ணமாக இருந்தது. ஆட்சிமாற்றம் காரணமாக  துரதிர்ஷ்டவசமாக அந்த அரசியலமைப்பு வரைவுச்  செயன்முறையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பிரதமர் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

 இடையில் நின்றுபோன அந்த செயன்முறையை நிறைவு செய்யப் போவதாக தேசிய மக்கள் சக்தி கூறியிருப்பதால் அவர்களின் விஞ்ஞாபனத்தில் 13 வது திருத்தம் குறித்து பிரத்தியேகமாக குறிப்பிடப்படாதது ஒரு குறைபாடு அல்ல என்ற அபிப்பிராயத்தைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

ஆனால், மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக 13 வது திருத்தம் கூட ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவந்த சூழ்நிலையில் அந்த திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்த எதிர்பார்ப்புக்களை தமிழ் அரசியல் கட்சிகள் வளர்த்து வந்திருக்கின்றன. அதற்கு இந்தியாவின் தலையீட்டை கடுமையாக எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்தியாவை அவமதிப்பதற்காக 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு கையாண்ட ஒரு தந்திரோபாயமே முதல்  காரணம்.

பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் இந்தியப் படைகளின் வெளியேற்றத்துக்கு பிறகு மீண்டும் உள்நாட்டுப்போர் மூண்ட சூழ்நிலைகளில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு  அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தலைமையில் ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அதில் இருந்தே 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்லமுடியும் என்ற நம்பிக்கை தமிழ்க்கட்சிகளுக்கு ஏற்படத் தொடங்கியது. 

உண்மையில் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு பிரேமதாச கையாண்ட ஒரு தந்திரோபாயமே அதுவாகும். அதற்கு பின்னரும் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரும் 13  வது திருத்தம் ஒழுங்காக  நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொண்ட அதேவேளை  வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். ஆனால் எதுவுமே நிறைவுபெறவில்லை. பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிதிதித்துவக் குழுவின் அறிக்கையை மகிந்த ராஜபக்ச ஒருபோதும் வெளியிடவில்லை. 

இந்த அனுபவங்களை எல்லாம்  படிப்பினையாக எடுத்துக் கொண்டு 13 வது திருத்தமாவது  தற்போதைக்கு  முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யக்கூடிய தந்திரோபாயத்தை தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கடைப்பிடிப்பதே விவேகமானது. 

ஆனால்,  இந்தக்கருத்து வடக்கில் கனவுலக அரசியல் செய்யும்  ஒரு பிரிவினரின்  பரிகாசத்துக்கு  உள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை. 

( ஈழநாடு )

 

https://arangamnews.com/?p=11182

 

ஜனாதிபதித் தேர்தல்:தமிழ்மக்கள் அறிவுபூர்வமாக முடிவெடுப்பார்களா? - நிலாந்தன்

2 months 2 weeks ago

ஜனாதிபதித் தேர்தல்:தமிழ்மக்கள் அறிவுபூர்வமாக முடிவெடுப்பார்களா? - நிலாந்தன்

IMG-20240829-WA0038.jpg

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் குறிப்பாக கணித விஞ்ஞானப் பிரிவுகளைச் சேர்ந்த கல்வி நிலையங்களுக்கு என்னென்ன பெயர்கள் என்று பார்த்தால், விஞ்ஞான மண்டபம்; விஞ்ஞான உலகம்; விஞ்ஞான சமுத்திரம்; விஞ்ஞான நீரோட்டம். விஞ்ஞான மூலை, இணைந்த கணிதத்தில் வெற்றி, மிஸ்டர்  பிஸிக்ஸ்,……இப்படியே நீண்டு கொண்டு போகும். இப்பெயர்கள் யாவும் கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்கள் தொடர்பான ஒரு சமூகத்தின் அபிப்பிராயங்களைக் காட்டுபவை. இந்நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் படிக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தின் முன்னணி தனியார் பாடசாலைகள் சிலவற்றில் கணித அல்லது விஞ்ஞானப் பட்டதாரி ஒருவர்தான் அதிபராகவும் இருக்கலாம் என்று எழுதப்படாத விதி உண்டு. கணிதம் விஞ்ஞானம் ஆகிய பாடங்களைக் குறித்து தமிழ் சமூகத்தில் உயர்வான மதிப்பீடுகள் உண்டு. இவ்வாறு கணித விஞ்ஞானத்  துறைகளில் அதிகம் நாட்டமுள்ள ஒரு சமூகமானது தன் நடைமுறை வாழ்வில் எல்லாவற்றிலும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கணிதமாக அணுக வேண்டும். ஆனால் தனது பாடத் தெரிவுகளில் விஞ்ஞானத்துக்கும் கணிதத்துக்கும் முக்கிய இடத்தைக் கொடுக்கும் ஒரு சமூகம், தனது அரசியல் தெரிவுகளில் எப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகின்றது?

உடுப்பு வாங்கப் போனால் புடவைக் கடையில் எத்தனை மணித்தியாலத்தை எமது பெண்கள் செலவழிக்கிறார்கள்? சந்தையில் நாளாந்தம் காய்கறி வாங்கும் பொழுதும் எவ்வளவு கவனமாகத் தெரிந்தெடுக்கிறோம் ? தக்காளிப் பழத்தை நிறம் பார்த்து; அழுத்திப் பார்த்து ஒவ்வொன்றாக தெரிகிறோம். கத்தரிக்காயை நிறம் பார்த்து; அழுத்திப் பார்த்து ஒவ்வொன்றாகத் தெரிகிறோம். இவ்வாறு அன்றாட வாழ்வில் தெரிவு என்று வரும் பொழுது கவனமாகவும் நேரமெடுத்தும் பொருட்களை வாங்கும் ஒரு மக்கள் கூட்டம், தனது அரசியலில் அவ்வாறு நிதானமாகவும் கணிதமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திக்கின்றதா?

அவ்வாறு விஞ்ஞானபூர்வமாக சிந்தித்திருந்தால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும்? எப்பொழுது எடுத்திருந்திருக்க வேண்டும் ?

தபால் மூல வாக்களிப்புக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்கள்தான் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தன் முடிவை அறிவிக்கவில்லை. இன்னொரு கட்சி பகிஸ்கரிக்கின்றது. ஏனைய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துகின்றன. இதில் எது விஞ்ஞானபூர்வமான முடிவு ?

அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகளைக் கையாள்வது என்பது ஒரு கணித ஒழுக்கம். அப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் தம் முன்னால் இருக்கும் எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆழமாகப் பரிசீலித்து முடிவுகளை எடுக்கின்றார்களா?

தமது கட்சிகளும் தலைவர்களும் எடுக்கும் முடிவுகளை குறித்து தமிழ் மக்கள் கேள்வி கேட்கின்றார்களா? நீங்கள் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுத்தீர்கள் என்று தமது தலைவர்களிடம் அவர்கள் கேள்வி கேட்பதுண்டா ?

சந்தையில் காய்கறிகளைத் தெரியும்பொழுது தெரிவு பிழைத்தால் உணவு வயிற்றில் நஞ்சாகிவிடும். பள்ளிக்கூடத்தில் பாடத் தெரிவு பிழைத்தால் கல்வி நரகமாகிவிடும். உடுப்புக் கடையில் தெரிவு பிழைத்தால் குறிப்பிட்ட நபரின் தோற்றக் கவர்ச்சி குறைந்து விடும். ஆனால் அரசியலில் தெரிவு பிழைத்தால் என்ன நடக்கும் ?

2009 க்கு பின் வந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மூத்த தலைவராகிய சம்பந்தர் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு முடிவை எடுத்திருக்கலாம். அதில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருந்திருந்தால் தமிழ் அரசியலின் போக்கே வேறு திசையில் போயிருந்திருக்கும். சம்பந்தரின் பூதவுடல் தந்தை செல்வா கலையரங்கில் கூரை பதிந்த அந்த சிறிய மண்டபத்தில் விசிறிகளின் கீழே தனித்து விடப்பட்ட அவலம் ஏற்பட்டிருக்காது. ஓர் அரசனைப் போல அவருக்கு ராஜ மரியாதை கிடைத்திருந்திருக்கும்.

ஆனால் சம்பந்தர் ஒரு முதிய தலைவராகவும் அனுபவத்தில் பழுத்த தலைவராகவும் அன்று முடிவெடுக்கவில்லை. போருக்குத் தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களிப்பது என்று முடிவெடுத்தார்..

அந்தத் தளபதி,போருக்கான அரசியல் தீர்மானத்தை எடுத்து போரை வழிநடத்திய ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகத் திரும்பியிருந்தார். அது போர் வெற்றிக்கு உரிமை கோருவதில் வந்த போட்டி. அவ்வாறு ராஜபக்ஸக்களுக்கு எதிராகத் திரும்பிய தளபதியை வைத்து ராஜபசக்களை-அவர்கள் தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர் என்பதற்காக அல்ல, மாறாக-அவர்கள் சீனாவை நோக்கிச் சாய்கிறார்கள் என்பதற்காக, அரங்கில் இருந்து அகற்ற முயற்சித்த நாடுகளின் கொள்கைத் தீர்மானங்களைப் பின்பற்றி தமிழ்த் தரப்பு முடிவெடுத்தது. அதன் விளைவாக சரத் பொன்சேகாவோடு ஒரு உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது. விளைவாக அந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா மட்டும் தோற்கவில்லை, சம்பந்தரும் தோற்கத் தொடங்கினார். சம்பந்தரின் வழியும் தோற்கத் தொடங்கியது.

தமிழ் மக்களை அழிக்கும் போருக்கான அரசியல் தீர்மானத்தை எடுத்து, அதற்காக அனைத்துலக சமூகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக ஒன்று திரட்டிய ஒரு குடும்பத்துக்கு எதிராக வாக்களிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, தமிழ் மக்கள் அந்த குடும்பத்தின் ஆணையை ஏற்றுப் போரை முன்னெடுத்த ஒரு தளபதிக்கு வாக்களித்தார்கள். போருக்குத் தலைமை தாங்கிய ஒரு தளபதிக்கு வாக்களித்துவிட்டு, அந்தப் போரை ஒரு இன அழிப்பு போராகவும் அங்கே போர் குற்றங்கள் நடந்தன என்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்தன என்றும் அனைத்துலக சமூகத்தின் முன் போய் நின்று முறையிடுவது ஒரு புத்திசாலியான சமூகம் செய்யக்கூடிய அரசியலா?

சரத் பொன்சேகா இப்பொழுதும் தனது தேர்தல் பிரச்சாரங்களில் தான் மனித குண்டினால் தாக்கப்பட்ட பொழுது பயணித்த காரை ஒரு காட்சிப் பொருளாகக் காவித்திருக்கிறார். ஆனால் அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு சிங்கள மக்கள் வருவது குறைந்து விட்டது. அந்தக் காருக்கு இருந்த கவர்ச்சி குறைந்துவிட்டது.

 

IMG-20240831-WA0034-c-1024x768.jpg

ஆனால் அந்தப் போரை இன அழிப்பு போர் என்று குற்றம் சாட்டும் ஒரு மக்கள் கூட்டம், அப்போரை முன்நின்று நடாத்திய ஒரு தளபதிக்கு, அந்தப் போரில் வெற்றி கொண்டதற்காகவே ஃபீல்ட் மார்ஷல் விருது பெற்ற ஒரு தளபதிக்கு, அந்தப் போர் நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு கழிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அந்தப் போரினால் அகதியானவர்கள் அப்பொழுதும் நலன் புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், அந்த போரினால் காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடிப் போராட முடியாதிருந்த ஒரு காலச் சூழலில், அந்தப் போரில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில், கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்தது.

கணிதத்தை விஞ்ஞானத்தை விரும்பிக்  கற்கும் ஒரு மக்கள் எடுக்கக்கூடிய புத்திசாலித்தனமான முடிவா அது? அல்லது தீர்க்கதரிசனமும் துணிச்சலும் மிக்க முடிவா அது?

நிச்சயமாக இல்லை. அந்த ஜனாதிபதித் தேர்தலை சம்பந்தர் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டுக் காயங்களுக்கு ஊடாகவும் கூட்டு மன வடுக்களுக்கு ஊடாகவும் சிந்தித்து இருந்திருந்தால் முடிவு வேறு விதமாக அமைந்திருந்திருக்கும். அவருடைய இறுதி ஊர்வலத்தில், தந்தை செல்வாவின் ஊர்வலத்தில் திரண்டதுபோல ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ஒப்பீட்டளவில் அதிக தமிழ் ஆசனங்களுக்குத் தலைமை தாங்கிய ஒரு தலைவர் அரசியலைக் கணிதமாக மதிப்பீடு செய்யத் தவறினார். முடிவுகளை விஞ்ஞானபூர்வமாக எடுக்கத் தவறினார். குறைந்தபட்சம் முடிவுகளை இதயபூர்வமாக எடுத்திருந்தால்கூட நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும். அன்று எடுக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகளின் விளைவுதான் இன்றுள்ள தமிழ் அரசியலாகும்.

இவ்வாறாக கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழ் அரசியலில் எடுக்கப்பட்ட புத்திபூர்வமற்ற விஞ்ஞானபூர்வமற்ற முடிவுகள் அனைத்தையும் தமிழ் மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். காய்தல் உவத்தல் இன்றிப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். தமது வாழ்வின் அன்றாட தேவைகளுக்காக சுண்டிப் பார்த்து பொருட்களை வாங்கும் ஒரு மக்கள் கூட்டம், அரசியலிலும் அவ்வாறு சுண்டிப் பார்த்து முடிவெடுக்குமா? தமிழ்ப் பொது வேட்ப்பாளருக்கு திரண்டு சென்று வாக்களிக்குமா?

நன்றி- உதயன்
 

https://www.nillanthan.com/6877/

 

இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்திய உளவு அமைப்பின் அவசரம்.

2 months 2 weeks ago

அனுரா ஜனாதிபதியாவார்.

ரணில் மூன்றாமிடம்.

அடுத்த பாராளுமன்றை சயித் கைப்பற்றுவார்.

அனுராவின் ஆட்சி ஒரு வருடத்தில் கலைக்கப்படும்.

இதை நான் சொல்லவில்லை மேலே உள்ள காணொளியில் சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்திய, சீன போர்க் கப்பல்கள் இலங்கையில் ஒரே நேரத்தில் முகாம் - என்ன நடக்கிறது?

2 months 2 weeks ago
ஐஎன்எஸ் மும்பை கப்பல்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

படக்குறிப்பு, ஐஎன்எஸ் மும்பை கப்பல் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 31 ஆகஸ்ட் 2024, 13:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சீன போர் கப்பல்களும், இந்திய போர் கப்பலொன்றும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருகை தந்து, மீண்டும் தத்தமது நாடுகளை நோக்கி பயணித்துள்ளன.

இந்த இரண்டு நாட்டு கப்பல்களும் கடந்த 26ஆம் தேதி இலங்கை சென்றன. கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) இலங்கையை விட்டு புறப்பட்டுச் சென்றன. இலங்கையில் இந்திய, சீன போர்க் கப்பல்கள் என்ன செய்தன?

சீன போர்க் கப்பல்கள் இலங்கை வருகை

சீனாவிற்கு சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளன.

“HE FEI”, “WUZHISHAN” , “QILIANSHAN” என்ற மூன்று போர்க் கப்பல்கள் இலங்கைக்கு வருகைத் தந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு வருகைத் தந்த மூன்று சீன போர் கப்பல்களும், இலங்கைக்கு சொந்தமான விஜயபாகு போர்க் கப்பலுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டன.

சீன கப்பல்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

படக்குறிப்பு, சீன போர்க் கப்பல்

போர்க் கப்பல்களுக்கு இடையில் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு கப்பல் தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. சீன போர்க் கப்பலில் வருகை தந்த அந்நாட்டு அதிகாரிகளை இலங்கையின் முக்கிய இடங்களுக்கு கடற்படை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று, சீன போர் கப்பல் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்த தெளிவூட்டல்களும் அந்த நாட்டு கடற்படை அதிகாரிகளினால் இலங்கை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

சீன போர்க் கப்பல்கள் எத்தகையவை?
  • Destroyer ரகத்தைச் சேர்ந்த “HE FEI” என்ற சீனாவின் போர் கப்பலானது, 144.50 மீட்டர் நீளத்தை கொண்டது. அந்த கப்பலில் 267 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.
  • எல்பிடி (Landing Platform Dock) எனப்படும் நீர்-நிலம் இரண்டிலும் செயல்படக் கூடிய கப்பல் ரகத்தைச் சேர்ந்த “WUZHISHAN” போர்க் கப்பலானது, 210 மீட்டர் நீளத்தை கொண்டது. அதில் 872 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.
  • எல்பிடி ரகத்தைச் சேர்ந்த “QILIANSHAN” போர் கப்பலானது, 210 மீட்டர் நீளத்தை கொண்டது. அதில் 334 கடற்படை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.
  • இதன்படி, இந்த மூன்று சீன கப்பல்களிலும் 1,473 கடற்படை அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
இந்திய போர்க் கப்பல் இலங்கைக்கு விஜயம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் மும்பை’ போர்க் கப்பல் கடந்த 26ம் தேதி கொழும்பு துறைமுகத்திற்கு சென்றது. கடந்த வியாழக்கிழமையன்று அந்த போர்க் கப்பல் இலங்கையை விட்டு வெளியேறியது.

இந்திய கடற்படை போர்க் கப்பலானது, இலங்கை கடற்படைக்கு சொந்தமான கஜபாகு போர்க்கப்பலுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டது.

பயிற்சியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகள்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கடற்படை அதிகாரிகள்

இரண்டு நாட்டு போர்க்கப்பல்களுக்கும் இடையில் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக இந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படை அதிகாரிகளினால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இரண்டு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் நட்பு ரீதியான கலந்துரையாடல்களும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பல் 163 மீட்டர் நீளம் உடையது. அந்த கப்பலில் 410 இந்திய கடற்படை அதிகாரிகள் இருந்தனர்.

சீன - இந்திய அதிகாரிகள் இடையில் கலந்துரையாடல் நடந்ததா?

இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு ஒரே தருணத்தில் வருகை தந்த சீன மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு இடையில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

இலங்கை கடற்படை பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய, பிபிசி தமிழுக்கு இதனை குறிப்பிட்டார்.

''எரிபொருள், உணவு போன்ற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையிலேயே இரண்டு நாட்டு போர்க் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தந்தன. அந்த சந்தர்ப்பத்திலேயே இந்த பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதை தவிர வேறு ஒன்றும் இடம்பெறவில்லை. இந்திய மற்றும் சீன கடற்படை அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவில்லை. அவர்கள் எந்த இடத்திலும் சந்திக்கவில்லை" என அவர் கூறினார்.

சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கை வந்தமைக்கு இந்தியா எதிர்ப்பு

சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6 கப்பல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து, சமுத்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்து, ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

தென் இந்தியாவிலுள்ள மிக முக்கிய இடங்களை இலங்கைக்கு வருகை தரும் இந்த கப்பலினால் ஆய்வு செய்ய முடியும் என்ற அடிப்படையிலேயே இந்தியா இந்த கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக இந்தியாவின் பிரபல ஊடகங்கள் அந்த சந்தர்ப்பத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் சீனா ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை இலங்கை கடற்பரப்பில் நடத்தியிருந்தன.

மூன்று சீன கப்பலின் வருகையை இந்தியா எதிர்த்ததா?

சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6 கப்பல், இலங்கைக்கு வருகை தந்த சந்தரப்பத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா, தற்போது சீனாவின் மூன்று போர் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்தமைக்கு எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிடவில்லை.

எனினும், சீனா கப்பல்கள் இலங்கை விஜயத்தை நிறைவு செய்து, மீண்டும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னணியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

பயிற்சியில் ஈடுபட்ட சீன கடற்படை அதிகாரிகள்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்ட சீன கடற்படை அதிகாரிகள்

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த நிகழ்வில் அதிபர் பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இரு நாடுகளுக்கு இடையிலான தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

வல்லுநரின் கருத்து என்ன?

சீனாவிற்கு சொந்தமான போர் கப்பல்கள் இலங்கைக்கு வந்ததை சாதாரண விடயமாக பார்க்க முடியாது என சமூக பணி மற்றும் அமைதிக் கல்வித்துறையின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.

''இந்தியாவிற்கு இலங்கை ஒரு நட்பு நாடு மாத்திரம் அல்ல. பாதுகாப்பு ரீதியில் இந்தியாவிற்கு இலங்கை ஒரு முக்கியமான நாடு. அதற்கு தகுந்த மாதிரியான வேலைகளை இந்தியா செய்து தான் ஆக வேண்டும். அந்த அடிப்படையில் தான் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கைக்கு சென்றுள்ளதை பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.

பாதுகாப்பிற்காக ஒரு நாடு கப்பலொன்றை அனுப்பும்போது, இன்னுமொரு நாடும் கப்பலை அனுப்பும். இதனை வினை, எதிர்வினையாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதுவொரு மோதல் போக்காக மாறுமா? இல்லையென்றால், மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறுமா? என்றால், அப்படியெல்லாம் கிடையாது” என்றார்.

இரண்டு நாடுகளின் கப்பல்கள் வருவது கண்டிப்பாக தற்செயலாக நடந்ததாக இருக்காது என்றும் ஒரு கப்பல் நாடொன்றிற்குள் வரும் போது, உயர் மட்டத்தின் அனுமதியில்லாமல் உளவு கப்பல்களோ அல்லது ஆய்வு கப்பல்களோ வர முடியாது என்றும் அவர் கூறினார்.

சீனா இந்த பிராந்தியத்தில் காலூன்ற வேண்டும் என நினைக்கின்றார்கள். அதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த நினைக்கின்றார்கள். இந்த பிராந்தியத்திற்குள் நீங்கள் வந்தால் எங்களுடைய பாதுகாப்பு கப்பல்களும் அங்கு இருக்க தான் போகின்றது என கூறுவதுதான் இதன் நோக்கம் என சொல்லப்படுகின்றது." என அவர் கூறுகின்றார்.

வழமையான தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காகவே இந்த கப்பல்கள் இலங்கைக்குள் வந்ததாக இலங்கை கடற்படை கூறிய கருத்து தொடர்பிலும், பேராசிரியர் கிளாட்சன் சேவியர் கருத்து தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்த சீன கப்பல்

பட மூலாதாரம்,SRI LANKA NAVY

படக்குறிப்பு, இலங்கைக்கு வந்த சீன கப்பல்

''ரணில் விக்ரமசிங்கவின் மிகப் பெரிய வெற்றி என்னவென்று பார்த்தால், எல்லா தரப்புகளையும் நண்பர்களாக வைத்துக்கொள்வது. அது இரானாக இருந்தாலும் சரி, யுக்ரேனாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி, அது பாலத்தீனமாக இருந்தாலும் சரி. அவர்களுக்குள் மாத்திரமே மோதலே தவிர, எங்களுக்குள் கிடையாது. நாங்கள் நண்பர்களாகவே இருந்து கொள்வோம் என்று சொல்லி நண்பர்களாக வைத்துக்கொள்வதே இவருடைய வழக்கம்” என்கிறார் அவர்.

மேலும், “அதே வழி முறையில் தான் இந்த விடயமும் நடக்கிறது. சீனாவிற்கும் தங்களுக்கும் நேரடி பிரச்னை இல்லை, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பிரச்னை இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை. சீனாவும் வேண்டும். இந்தியாவும் வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை நடக்கின்றது. காரணம் இல்லாமல் கப்பல் வந்தது, வந்த இடத்தில் பயிற்சி அளித்தார்கள் என்றால் நம்ப முடியாது” என்கிறார் அவர்.

ஒரு பாதுகாப்பு துறையிலுள்ள கப்பல் இலங்கைக்குள் சென்று வெறும் எரிபொருள் மாத்திரம் தான் நிரப்ப வந்தோம், எரிபொருள் நிரப்பும் போது பயிற்சிகளை கொடுத்தோம் என்றால், அதை நம்ப முடியாது என தெரிவித்த அவர், எல்லாமே பிராந்திய ரீதியான நிலையை தக்க வைத்துக் கொள்வதாகவே இதனை பார்க்க வேண்டும் என கூறினார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது? -  — வி.சிவலிங்கம் —

2 months 3 weeks ago

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது?(கேள்வி, பதில் வடிவில்)

 — வி.சிவலிங்கம் —

கேள்வி:

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இத் தேர்தல் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது?

பதில்:

மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வரலாற்றோடு அணுகுவது அவசியம். இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பின் ஆரம்பமாகும். இதன் பிரகாரம் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக ஐ தே கட்சியின் சார்பில் ஜே ஆர். ஜெயவர்த்தன பதவியைப் பெற்றார். அவரது பதவிக் காலம் என்பது இலங்கையின் அரசியலை முழுமையாக மாற்றிய காலமாகும். 1948ம் ஆண்டு கிடைத்த சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் சோல்பரி அரசியல்யாப்பின் பிரகாரம் பாராளுமன்ற அடிப்படையிலான ஆட்சி நடைபெற்றது. பாராளுமன்றம் சட்டவாக்கத்தையும், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்று அதிகாரத்தையும், நீதித்துறை நாட்டின் ஆட்சி முறை அரசியல் அமைப்பின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதாகவும், மீறினால் தண்டனை வழங்கும் சுயாதீனக் கட்டுமானம் என மூன்று தனித்தனி சுயாதீன அமைப்புகளாகச் செயற்பட்டிருந்தன. ஆனால் 1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு நாட்டில் ஏற்கெனவே செயற்பாட்டிலிருந்த சுயாதீன நிர்வாகங்களை அதிகாரம் குவிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறைக்குள் கொண்டு வந்ததால், பாராளுமன்றம், நீதித்துறை என்ற சுயாதீன அமைப்புகள் யாவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன.

அரசியல் கட்டுமானம் மாற்றி அமைக்கப்பட்டது போலவே தேசத்தின் பொருளாதாரக் கட்டுமானமும் அந்நிய மூலதனக் குவிப்பிற்குள் தள்ளப்பட்டது. நாடு வெளிநாட்டுப் பொருட்களின் சந்தையாக மாற்றப்பட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின் நாடு நவ-தாராளவாத திறந்த பொருளாதாரமாக மாற்றப்பட்டது.

ஜே ஆரின் பின்னர் ஐ தே கட்சியின் சார்பில் பிரேமதாஸ இரண்டாவது ஜனாதிபதியானார். அவரது காலத்தில் சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் மிக அதிகளவில் ஐ தே கட்சிக்குள் ஊடுருவியது. இதுவரையும் மேற்குலக லிபரல் ஜனநாயகத்தின் நிழலாகவும், பின்னர் நவ-தாராளவாத ஜனநாயகத்தையும் பின்பற்றிய அக் கட்சி சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தின் இருப்பிடமாகியது. அதனால் அதன் மேற்குலக குணாம்சங்கள் படிப்படியாக அகலத் தொடங்கின.

பிரேமதாஸ அவர்களின் படுகொலைக்குப் பின்னர் துணை ஜனாதிபதி என்ற அடிப்படையில் செயற்பட்ட டி பி விஜேயதுங்க மூன்றாவது ஜனாதிபதியானார். இவரது பதவிக் காலம் சில மாதங்களே நீடித்தது. ஜே ஆர் காலத்தில் ஆரம்பித்து கூர்மை அடைந்து சென்ற இன முரண்பாடுகள் மேலும் வளர்ந்து சிவில் யுத்தமாக மாறிய நிலையில் சிவில் யுத்தம் என்பது பயங்கரவாதமாக மாற்றம் பெற்று ராணுவ ஆதிக்கம் அரச கட்டுமானத்திற்குள் படிப்படியாக நுழைந்;தது. தெற்கில் ஜே வி பி இனது போராட்டங்களும், தமிழ்ப் பகுதிகளில் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் சிவில் யுத்தமும் வளர்ச்சியடைந்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்த அரச பயங்கரவாதம் சொந்த மக்களைக் கொன்று குவித்தது. இவை நாட்டின் பொருளாதாரத்தையும், அரச ஜனநாயககட்டுமானங்களையும் மிகவும் பின்தள்ளியது. இந் நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சி நிரலில் சந்திரிகா பண்டாரநாயக்கா 1994இல் நான்காவது ஜனாதிபதியானார்.

சந்திரிகாவின் ஆட்சிக் காலம் என்பது ஒரு புறத்தில் சமாதானத்தை கட்டி எழுப்பவும், மறுபுறத்தில் போரை முடிவுக்கு கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இரு புறங்களிலும் காணப்பட்ட தீவிரவாத சக்திகள் அவரது முயற்சிகளைத் தோற்கடிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டன. இதன் விளைவாக அவரது முயற்சிகள் அவரது கட்சிக்குள் பல முரண்பாடுகளை உருவாக்கிய நிலையில் 2005ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ ஐந்தாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலம் என்பது போரை உக்கிரப்படுத்தும் அதே வேளையில் சிங்கள பௌத்த இனவாத அரசாகவும், ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை மறுதலிப்பதாகவும், இலங்கை என்பது சிங்கள பௌத்த தேசம் என்பதாகவும், ஏனைய சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தின் தயவில் வாழ்வதாகவும் விளக்கங்களை வழங்கும் காலமாக அமைந்தது. இதனால் இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மிகவும் அப்பட்டமாக மறுதலிக்கவும், அதேவேளை ராஜபக்ஸ குடும்பத்தின் வரலாறு என்பது பண்டாரநாயக்கா குடும்பத்தின் வரலாற்றை விட மிக முக்கியத்துவமானது என்ற நிலைக்கு அதிகாரம் என்பது குடும்ப ஆதிக்கமாக மாறிய காலமாகும்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பது பண்டாரநாயக்கா குடும்பத்திலிருந்து ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதிக்கத்திற்குள் சென்ற நிலையில் நாட்டின் ஜனாதிபதி ஆட்சிமுறை ஏகபோக ராஜபக்ஸ குடும்ப ஆதிக்கமாக அரசியல் யாப்பு மாற்றங்கள் மூலம் மாறியதால் நாட்டிலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் எழுந்த முரண்பாடுகள் 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஆறாவது ஜனாதிபதியாக தெரிவானார்.

இவர் ஓர் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமையாலும், பாராளுமன்றத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அதன் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த காரணத்தால் ஐ தே கட்சியின் பாராளுமன்ற ஆதரவோடு ஆட்சியை நடத்தினார். ஆனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஸ ஆதரவு சக்திகள் ஐ தே கட்சியின் கூட்டோடு உருவான நல்லாட்சி அரசை நன்கு செயற்பட முடியாதவாறு தொல்லைகளைக் கொடுத்தனர். அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் 19வது திருத்தத்தை கொண்டு வந்த போதிலும் நாட்டில் முதன் முதலாக பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசு ஓர் தோல்வியடைந்த அரசாக மாறியது.

இத் தோல்வியின் விளைவாக 2015ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த ராஜபக்ஸாக்கள் மீண்டும் தமது குடும்ப ஆதிக்கத்தை தொடரும் வகையில் சிங்கள மக்களின் தனி ஆதரவுடன் ஜனாதிபதி பதவியை எட்ட முடியும் என்பதை மிகவும் அப்பட்டமான இனவாத அரசியலின் மூலம் செய்து முடித்தனர். 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தின் இன்னொரு உறுப்பினரான கோதபய ராஜபக்ஸ நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவானார்.

நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராகவும், 2019ம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் காரணமாக உல்லாச பயணத்துறை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்ப இரும்புக் கரங்கள் தேவை என்பதால் அவரைத் தேர்வு செய்த போதிலும் அவருக்கும், அரசியலுக்கும் போதிய அனுபவம் இல்லாமை காரணமாக அவர் வேறு சிலரின் உபதேசங்களைச் செவிமடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி, டொலர் நெருக்கடி எனத் தோற்றம் பெற்று நாடு வங்குறோத்து நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் கோபமடைந்த மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி விரைந்தார்கள். முடிவில் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்

கோதபய அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால் ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே 2022ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசியல் யாப்பு வழிகள் மூலமாக நாட்டின் எட்டாவது ஜனாதிபதியானார்.

இவ் வரலாற்று விபரங்கள் தெளிவாக புரியப்பட்டால் மாத்திரமே இத் தேர்தலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம், மக்களின் நாளாந்த வாழ்வு, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனை உணராத அல்லது உணர முடியாத சில சக்திகள் ஜனாதிபதித் தேர்தலை வெறும் தமிழர் உரிமைக்குள் முடக்கி தமிழ் மக்களை இருண்ட அரசியலை நோக்கித் தள்ளுவதன் ஆபத்துக்களை புரிதல் அவசியம். எனவேதான் இப் பதிலும் சற்று நீண்டு சென்றுள்ளது.

கேள்வி:

இத் தேர்தல் நான்கு முனைப் போட்டித் தளமாக வர்ணிக்கப்படுகிறது. அவ்வாறாயின் இந்த நான்கு முனைகளும் எவ்வாறு தனித்தனி அமைகின்றன?

பதில்:

சமீப காலமாக சிங்கள ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்போது நான்கு பிரதான கட்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில் முதலாவது இடத்தை சஜீத் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ( Samagi Jana Balavegaya- SJB ) எனவும், இரண்டாவது இடத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி- ஜே வி பி எனவும், மூன்றாவது இடத்தில் சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கரமசிங்க எனவும், நான்காவது இடத்தில் நமல் ராஜபக்ஸவை தேசிய அமைப்பாளராகக் கொண்ட பொது ஜன பெரமுன எனவும் தெரிவிக்கின்றன.

இந்த நான்கு வேட்பாளரும் தேசிய பிரச்சனைகளில் மிகவும் வித்தியாசமான கொள்கைகளைக் கொண்டுள்ளனர். இவ் விபரங்களைப் பின்னர் பார்க்கலாம்.

கேள்வி:

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் என்ற பெயரில் ஒருவர் போட்டியிடுகிறார். இவரது போட்டி என்பது தேசிய அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

பதில்:

ஜனாதிபதித் தேர்தல் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதனை எனது முதலாவது பதில் விபரமாகத் தந்துள்ளது. அப் பின்னணியிலிருந்தே இப் பொது வேட்பாளர் என்ற சங்கதியையும் நோக்க வேண்டும். இப் பொது வேட்பாளரைத் தேர்வு செய்த முறை மிகவும் கேலியானது. அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் கொண்ட ஒரு பொதுக் கட்டமைப்பு இவ் வேட்பாளரைத் தெரிவு செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இவ் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் எத்துணை மக்களின் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றன? எவ்வாறு அவ்வாறான முடிவை நோக்கிச் சென்றார்கள்? தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவைச் சார்ந்த ஒருவர் அக் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மதிக்கத் தெரியாத ஒருவர் தமிழ் மக்களின் பொதுவேட்பாளராக நியமிக்கப்படுவாராயின் மக்களுக்கு எவ்வாறான செய்தியை கொடுக்கின்றனர்?  

இங்கு தமிழ் மக்கள் சார்பில் போட்டியிடுவதாக யாரும் போட்டியிடலாம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குப் பொறுப்புச் சொல்லும் யோக்கியதை போட்டியாளர்களுக்கு அவசியம். சிவில் அமைப்புகள் என அழைப்பவர்கள் எவரும் மக்களின் ஆதரவைக் கொண்டிருப்பவர்களாக தெரியவில்லை. அதே போலவே அரசியல் கட்சிகள் என்போர் தமது பாராளுமன்றப் பதவிகளைத் தமிழரசுக் கட்சி மூலமாகவே பெற்றனர். அவ்வாறாயின் இவர்களில் எவரும் ஜனநாயக அம்சங்களை மதிக்கவில்லை என்பது தெளிவு. இப் போட்டியாளர் சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றினார்கள். இனிமேல் நாம் ஏமாறத் தயாராக இல்லை. எமது பலத்தை எதிரிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் கூறுவோம் என்பதைத் தவிர வேறு எதுவும் அவரின் கொள்கைகளாக இல்லை.

நாட்டில் ஜனநாயக கட்டுமானங்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. அரச கட்டுமானம் ஊழலால் நிரம்பி வழிகிறது. நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தாமல் எதுவும் சாத்தியமில்லை. ஆனால் இப் பொது வேட்பாளரின் வாயிலிருந்து இப் பிரச்சனைகள் பற்றிய எதுவும் வரவில்லை. ஏன்? இவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை. அதனால்தான அவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டார். தனிமனித ஆதிக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். இவர் எவ்வாறு ஜனநாயகத்தை மதிக்க முடியும்? கட்சியின் கட்டுப்பாட்டை மதிக்கத் தெரியாத ஒருவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பார் என எவ்வாறு நம்ப முடியும்? இவர்கள் தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் கோரிக்கைகளை வேடிக்கைப் பொருளாக, தமது சுயநலன்களைப் பெறும் நோக்கிலான பேரம் பேசும் அரசியலை மேற்கொள்கின்றனர். மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு தமது வாக்குகளைப் பிரயோகிக்க வேண்டும்.

கேள்வி:

இத் தேர்தலில் பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டா?

பதில்:

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளே தென்படுகின்றன. உதாரணமாக நால்வர் பிரதான போட்டியாளராக இருக்கையில் நால்வரும் இவர்கள் கோரிக்கைக்கு சாதகமான பதிலளித்தால் தமிழர் தரப்பு யாரை ஆதரிப்பது? அவ்வாறான நிலையில் மேலும் பல சோதனைகளை நடத்த வேண்டும். அதாவது அக் கட்சிக்குள் நடைபெறும் இதர அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்வது அவசியமாகிறது. உதாரணமாக நாட்டின் ஜனநாயக அரசியல் கட்டுமானங்களை ஜனநாயக வழிக்கு மீட்டெடுப்பதாயின் ஊழல், சட்டம், ஒழுங்கு, கட்சியிலுள்ள மிக முக்கிய தலைவர்களின் கடந்தகால அரசியல், அக் கட்சியின் உட் கட்டுமானத்தின் செயற்பாடுகள் என பல அம்சங்களில்; கவனம் செலுத்த வேண்டும். நாம் பேரம் பேசச் செல்லும் வேளையில் அக் கட்சிகளும் எமது தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பும் நிலை ஏற்பட வேண்டும். பேரம் பேசச் செல்லும் தமிழர் தரப்பினர் அவர்கள் எதிர்பார்க்கும் வாக்குப் பலத்தினை வழங்கும் ஒரு தரப்பினராக அவர்கள் நம்ப வேண்டும்.

இவை யாவும் தேர்தலுக்கு முன்னரான தொடர்புகளிலிருந்தே ஆரம்பமாகும். ஏற்கெனவே நம்பிக்கையைக் கட்டி எழுப்பவதற்கான சில அத்திவாரங்கள் ஏற்கெனவே இருந்தால் மட்டுமே அது சாத்திமாகும். தற்போதுள்ள தேர்தல் சூழலில், சஜித், அநுர ஆகியோர் புதியவர்கள். ரணில், நாமல் ஆகியோர் ஏற்கெனவே ஒரு வரலாற்றுச் சுமையை வைத்திருப்பவர்கள். பிற்பட்ட இருவரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை ஏற்கெனவே இழந்த நிலையில் முற்பட்ட இருவர் தொடர்பாக மக்கள் ஆழமாக விவாதிக்க வேண்டும்.

கேள்வி:

தமிழர் தரப்பு வெறுமனே தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார்கள். நாம் எமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டும். சர்வதேசமும், சிங்கள அரசியல் சக்திகளும் அப்போதுதான் பேச வருவார்கள் எனக் கூறும் அரசியலில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?

பதில்:

இந்த பேரம் பேசும் அரசியல் புளித்துப்போன ஒன்றாகும். தமிழர் தரப்பில் பல்வேறு குழுக்களாக இந்த அரசியல் சக்திகள் செயற்படுகின்றன. தூரத்தில் நின்று ஒற்றுமை பற்றிப் பேசுகின்றனரே தவிர ஒற்றுமைக்கான முயற்சிகள் எதுவும் இல்லை. அடிப்படையில் கொள்கை, கோட்பாடுகளில் எவ்வித வேறுபாடுகளும் இல்லாத நிலையில் தனி நபர் அடையாளங்களே முன்னிலையில் உள்ளன. சிவில் மற்றும் அரசியல் தரப்பு என இரு வேறு பிரிவினரின் கூட்டு என்பதே பொதுக் கட்டமைப்பு என விளக்கம் தரப்படுகிறது. ஆனால் சிவில் அமைப்;பு, அரசியல் அமைப்பு என வேறுபடுத்தும் அளவிற்;கு பாரிய வேறுபாடுகள் எதுவும்  இல்லாவிடினும் சிவில் அமைப்பு என தம்மை அழைப்பவர்களில் பலர் பிரிவினை அரசியலை ஆதரிப்பவர்களாக அதிகம் உள்ளனர். தலைவர் என்பவர் கட்சி ஒன்றின் உரித்தாளராக இருத்தல் அவசியம் என்ற நிலையில் ஆளுக்கொரு கட்சி உண்டு. இவர்கள் மத்தியில் பேரம் பேசி ஒரு பொது உடன்பாட்டிற்கு செல்ல முடியாமல் உள்ள இவர்கள் அரசியல் எதிரிகளிடம் எந்த அடிப்படையில் பேரம் பேசுவது? தற்போது பணப் பட்டுவாடாவும் பிரதான பங்கை வகிக்கிறது. சிங்கள அரசியல்வாதிகளுக்கு யாரை விலைக்கு வாங்கலாம்? என்பதும், யாரைப் பயமுறுத்தலாம்? என்பதும் நன்கு தெரியும். பலரின் குற்றப் பத்திரிகைகள் இவர்களிடம் உண்டு. இந் நிலையில் பேரம் என்பது பணப் பட்டுவாடாவுடன் முடியும்.

கேள்வி:

அவ்வாறாயின் தேசிய இனப் பிரச்சனையின் எதிர் காலம் எவ்வாறு அமையும்?

பதில்:

முதலில் தமிழ் அரசியலின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமைதல் பொருத்தமானது என்பதிலிருந்தே நாம் ஆரம்பிக்கலாம். ஏனெனில் தமிழ் அரசியல் மிகவும் சிக்கலடைந்து சில சந்தர்ப்பவாத சக்திகளின் கரங்களில் தமிழ் அரசியல் சிக்கியிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்று வரும் உள் முரண்பாடுகள் அதனையே அடையாளப்படுத்துகின்றன.

தமிழரசுக் கட்சி குறித்து பலருக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும் இக் கட்சி தோல்வி அடையுமெனில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் தோல்வியை நோக்கிச் செல்லும் என்பதே எனது எண்ணமாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பாரக்கலாம்.

தமிழ் அரசியலில் அதாவது கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான குரலாகவே ஒலிக்கிறது. இருப்பினும் கட்சியில் காணப்படும் சந்தர்ப்பவாத சக்திகளின் ஊடுருவல்கள், தலைமைத்துவ பண்பில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், மிதவாத, தீவிரவாத சக்திகளின் உள் மோதல்கள் அதனால் ஏற்பட்ட தொலைநோக்கற்ற அரசியல் மாற்றங்கள் அக் கட்சிக்குள் பாரிய நெருக்கடிகளை உருவாக்கின. இருப்பினும் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் மக்களின் நம்பிக்கைக்குரிய இன்னொரு கட்சியை இதுவரை எவராலும் தோற்றுவிக்க முடியவில்லை. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக அக் கட்சியின் ஆதிக்கத்தைப் பறித்த போதிலும் போரின் பின்னரும் அதாவது போரின் அனுபவங்களின் பின்னரும் புதிய கட்சியை, புதிய பாதையை உருவாக்க முடியவில்லை. மீண்டும் தமிழரசுக் கட்சியே அத் தலைமையை மீட்டெடுத்தது.

எனவே தமிழரசுக் கட்சியின் அனுபவம் என்பது தமிழ் மக்களின் ஓர் அரசியல் வரலாறாகவே இன்னமும் உள்ளது. மாற்று அரசியல் சிந்தனை, மாற்று அரசியல் வடிவம் என்பது தமிழரசுக் கட்சிக்கு வெளியில் பலமாகத் தோற்றம் பெறாத இச் சூழலில் மாற்றுத் தேர்வு என்ன? என்ற கேள்வி எழுகிறது. கட்சிக்கு வெளியில் மாற்றத்திற்கான நிலமைகள் தோற்றம் பெறாவிடினும் அக் கட்சிக்குள் எழுந்துள்ள உள் முரண்பாடுகள் புதிய அரசியல் வடிவத்தை நோக்கிய விவாதங்களாக மாற்றம் பெறுவதை அவதானிக்கலாம். எனவே புறவயத்தில் வாய்ப்புகள் இல்லாவிடினும், அக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகள் பாரிய அரசியல் மாற்றத்தை நோக்கியதாகவே உள்ளன.

எனவேதான் தமிழரசுக் கட்சிக்கான மாற்று அரசியல் தலைமை என்பது அங்கிருந்தே தோற்றம் பெறும் வாய்ப்புகள் உள்ளதால் எமது கவனம் அங்கு குவிக்கப்படுதல் அவசியம் என்கிறேன். குறிப்பாக தமிழரசுக் கட்சியை அதாவது பலமான மாற்று அரசியல் கட்சி தமிழரசுக் கட்சிக்கு வெளியில் தோற்றம் பெறாத நிலையில் இக் கட்சியை அழிப்பது என்பது விடுதலைப் புலிகளின் ஆளுமை தமிழ் அரசியலில் இருந்த போது காணப்பட்ட பலம் அந்த அமைப்பின் அழிவுடன் பாரிய வெற்றிடமாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படினும் அதுதான் இன்னமும் நிலமையாக உள்ளது. அவர்களுக்குப் பதிலான மாற்றுத் தலைமை இல்லாத காரணத்தால் இன்று எதிர்ப்பு இயக்கம் என்பது இல்லாதொழிந்தது. மக்கள் இன்று வரை அதன் தாக்கத்தை உணர்கிறார்கள். எனவே தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்துதான் மாற்றங்கள் தோன்ற வேண்டும்.   சிங்கள, பௌத்த பெருந்தேசியவாதம் அந்த ஏக்களிப்பில் இன்றும் வாழ்கிறது. அவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என்பதன் காரணமாகவே தமிழரசுக் கட்சியின் தோல்வி தமிழ் அரசியலின் தோல்வியாக மாறலாம் என்ற அச்ச உணர்வே அல்லாமல் அக் கட்சியைக் காப்பாற்றும் நோக்கமல்ல.

கேள்வி:

தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய முரண்பாடுகளின் எதிர் காலம் என்னவாக அமையலாம்?

பதில்:

தமிழரசுக் கட்சிக்குள் தற்போது அதன் எதிர்கால அரசியல் போக்கு குறித்த முரண்பாடுகளின் உருவமாகவே காண்கிறேன். வெளிப் பார்வையில் அவை சில தனி நபர்களின் முரண்பாடுகளாகக் காணப்படினும் அவை அடிப்படையில் அரசியல் அம்சங்களை வற்புறுத்துகிறது.

கடந்த 30 வருட கால சிவில் யுத்தம் மிகவும் காத்திரமான, ஆழமான அரசியல் வடுக்களை தமிழ் அரசியலில் விதைத்திருக்கிறது. போர் தோற்றிருக்கலாம். உலகில் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி அடைந்ததை விட தோல்வி அடைந்தவை ஏராளம். எனவே இத் தோல்வி என்பது தற்காலிகமானது. ஆனால் இப் போராட்டம் விட்டுச் சென்ற அரசியல் குறித்தே எமது கவனம் செல்ல வேண்டும்.

உதாரணமாக, இலங்கையில் பெரும்பான்மை சிங்கள, பௌத்த பெரும் தேசியவாதம் இதர தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளைத் தொடர்ந்து நிராகரித்துச் செல்லுமாயின் அங்கு போருக்கான சூழல் எப்போதுமே நீறு பூத்த நெருப்பாக இருக்கும். அதே போராட்ட அனுபவங்களும், சர்வதேச அரசியல் மாற்றங்களும் மாற்றுத் தேர்வுகளையும் வழங்கிச் செல்லும். தமிழ் அரசியல் பலமாக இல்லாத நிலையில் மக்களுக்கு மேலும் துன்பங்களை வழங்காத வகையில் அணுகுமுறைகளை வகுப்பது கட்டாயத் தேவையாக மாறுகிறது.

இவ்வாறான ஒரு அனுபவ வெளிப்பாடே தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளாகும். பிரிவினைக் கோரிக்கையை ஆழமாக நம்பிய காரணத்தினால்தான் மிகவும் கணிசமான தொகை இளைஞர்கள் தம்மை ஆகுதியாக்கினார்கள். அதில் பங்களித்த பலர் இன்னமும் அது சாத்தியம் என நம்புகின்றனர். இவர்கள் எதிரிகளல்ல. போராட்டத்தின் கூறுகள். இவர்களை எவ்வாறு இணைத்துச் செல்வது என்பதே புதிய தலைமையின் ராஜதந்திரமாகும். உலகம் தீர்வுகளைத் தரும் என நம்புவதை விட எமது ராஜதந்திர செயற்பாடுகளே நம்பிக்கை தர வேண்டும். இப் பிரச்சனையில் பாலஸ்தீன அனுவபங்கள் வேறு பதிலைத் தருகின்றன. போரும் அதன் பின்னரான அனுபவங்களும் தமிழ் அரசியலில் இரு வேறு அரசியல் முகாம்களை உருவாக்கியுள்ளது. ஒட்டுமொத்த இலங்கைத் தேசியத்திற்குள் சகல தேசிய சிறுபான்மை இனங்களும் சமாதானத்தோடும், அமைதியோடும் வாழ்வதற்கான பாதை உண்டு என நம்பும் அரசியல் போக்கு தற்போது வளர்ந்துள்ளது. இதற்குப் பிரதான காரணம் சிங்கள சமூகத்திற்குள் இனவாதமற்ற அரசியல் விழிப்புணர்ச்சி காத்திரமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் அது ஒரு போதும் சாத்தியமில்லை என நம்புவோர் தொடர்ந்தும் பழைய அனுபவங்களை உதாரணம் காட்டி பிரிவினைக்கான நியாயங்களை வற்பறுத்துவோரும் உண்டு. இப் பிளவுகள் பலவீனமடைந்தால் மாத்திரமே தமிழ் அரசியல் தழைக்க வாய்ப்பு உண்டு.

கேள்வி:

இப் பதில் ஒரு நம்பிக்கை தருவதாக அமையவில்லையே? அவ்வாறெனில் அதற்கான வாய்ப்பே இல்லையா?

பதில்:

சமூகத்தில் ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் மாற்றங்களைத் தரும் அடிப்படைகளைக் கொண்டிருக்காத நிலையில் எப் பதிலும் போலியாக அமைந்து விடும். போர் முடிவடைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழ் அரசியலில் உள்ளார்ந்த அடிப்படையில் ஓர் நல்லிணக்கம் ஏற்படவில்லை. இயக்கப் பிளவுகள் இன்னமும் கனதியாக உள்ளன. போரில் மரணித்தவர்கள் தமக்காக, சுயநலத்திற்காக செல்லவில்லை. அப்போதிருந்த அரசியல் சூழல்களின் அடிப்படையில் கிடைத்த வாய்ப்புகளினடிப்படையிலேயே தமது இயக்கத்தைத் தேர்வு செய்தார்கள். அனைவரும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்காகவே தம்மைப் பலி கொடுத்தார்கள். இவர்கள் எல்லோரும் தமிழ்த் தாயின் புதல்வர்கள். எனவே இயக்க வேறுபாடுகளின்றி சகலருக்கும் ஒரே மரியாதை வழங்குவது சமூகத்தின் கடமை. ஆனால் பல்வேறு தேவைகளுக்காக சமூகம் இன்னமும் பிளவுகளைக் கொண்டாடுகிறது. இந்த நிலை மாறாத வரை அதாவது எமது சமூகத்திற்குள் உள்ளளார்ந்த அடிபபடையில் நல்லிணக்கம் ஏற்படாத வரை அரசியல் கட்சிகள் மத்தியில் அல்லது சமூகத்தின் மத்தியில் ஒற்றுமை, நல்லிணகக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தேர்தலில் வாக்குக்காக ஒற்றுமை எனக் குரல் கொடுப்பது வெறும் ஏமாற்று.

தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிரிவினையா? அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்க அடிப்படையிலான தீர்வா? என்பது குறித்த தெளிவான விவாதம் தீர்மானகரமான விதத்தில் மேலெழாத வரை எந்த அரசியல் தீர்வும் சாத்தியமில்லை. இவற்றைத் தனிநபர் பிளவுகளாக சில ஊடகங்களும் விபரிக்கின்றன. இதனால்தான் ஒருவர் காலை மற்றவர் இழுத்து வீழ்த்துவது வரலாறாக தொடர்கிறது. அத்துடன் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் எம்மைப் பிரித்தாளுவதற்கான வாய்ப்பாகவே அது அமையும்.  

கேள்வி:

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது உசிதமானது?

பதில்:

இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதே எனது கரிசனையாகும். ஏனெனில் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் தமிழ் மக்களினதோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்களையோ ஏற்படுத்தி விட முடியாது. அந்த அளவிற்கு நாடு மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே நாடு ஒரு புதிய வழியில் செல்வதற்கான கொள்கை, கோட்பாடுகள், அரசியல் தலைமை அவசியமாகின்றன. இவை பற்றி பின்னர் பார்க்கலாம்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது முதலில் ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்படுவது அவசியம் என்பது எனது அபிப்பிராயம். அவற்றை சற்று ஆழமாகப் பார்க்கலாம். இலங்கையின் அரசியலில் மிக மோசமான தாக்கங்களைச் செலுத்திய அல்லது நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு எடுத்துச் சென்ற இரு கட்சிகளில் ஐ தே கட்சி மிக முக்கியமானது. நமது தேசத்தில் இனவாதத்திற்கான அடிப்படைகளாக கல்லோயா, மாவலி போன்ற அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை அமர்த்தி ஏனைய சிறுபான்மை இனங்களின் அடையாளங்களை அழிக்கக் காரணமாக இருந்தது அக் கட்சியாகும். தற்போதும் ரணில் தனது பிரச்சாரங்ககளில் டி எஸ்; செனநாயக்காவை நினைவூட்டுவது ஏன்?    

இக் கட்சியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்றைய இரண்டாவது குடியரசு யாப்பு நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கிருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகள் அனைத்தையும் இல்லாதொழித்தது. நாட்டின் பொருளாதாரத்தை மேற்கு நாடுகளின் உற்பத்திகளின் சந்தையாக மாற்றி, நாட்டில் நிலவிய உள்நாட்டு பொருளாதாரத்தையும் சீரழித்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் தாராளவாத திறந்த பொருளாதாரமே இன்று எமது நாட்டை வங்குறோத்து நிலமைக்குத் தள்ளியது. நாட்டின் பிரதமராக 6 தடவைகள் பதவி வகித்த ரணில் இப் பாதக செயல்களுக்கு பொறுப்பில்லை என யாரும் கருத முடியுமா? தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பினை சந்திரிகா முன் மொழிந்த வேளையில் அதனை எரித்து நிராகரித்தது ரணிலாகும்.

நாட்டில் இனவாதத்தின் மூலம் தேசிய அரசியல் வாழ்வை சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்தை நோக்கித் திருப்பிய கட்சிகளில் ஒன்றான சிறீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அடையாளம் இல்லாமல் போய்விட்டது. நாம் ரணிலைத் தோற்கடிப்போமாயின் அவருடன் ஐ தே கட்சியும் அடையாளம் அற்றுப் போய் விடும். எனவே தமிழ் மக்கள் எமது சமூதாயத்தின் எதிர்காலம் கருதி இனவாதக் கட்சிகளைத் தோற்கடிப்பது தற்போது அவசியமானதே. எனவே இத் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குகளைச் செலுத்த வேண்டும்.

கேள்வி:

ரணில் சிறைக் கைதிகளை விடுவித்தார் எனவும், பறித்த காணிகளை விடுவித்தார் எனவும், 13வது திருத்தத்தை அமுல்படுத்த முனைந்தார் எனவும், தற்போது வடக்கிலும், கிழக்கிலும் பொருளாதார வலையங்களைத் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளாரே! மக்கள் அவரை வேறு விதமாகப் பார்க்கிறார்களே?

பதில்:

தமிழ் மக்களின் அரசியல் அனுபவங்களை அறியாதவர்கள், அரசாங்கத்தின் உதவிகளைப் பெற்று தமது சொந்த நலன்களை வளர்க்க எண்ணுபவர்கள் இவ்வாறான சில அற்ப சலுகைகளை பிரமாண்டமாக வர்ணிக்கலாம். ஆனால் அவர் மேற்கொள்ளும் இச் செயல்கள் தமிழ் மக்கள் உலக நாடுகளின் மேல் போட்ட அழுத்தங்களின் விளைவாக குறிப்பாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மிக அதிகமான அழுத்தங்களே ரணிலின் சில நடவடிக்கைகளுக்குக் காரணமே தவிர இவை அவரது அரசியல் சிந்தனையின் விளைவானது அல்ல.

தமிழ் மக்கள் தமது சந்ததியின் எதிர்காலத்திற்கு தேவையான தீர்வுகளை மையமாக வைத்தே இத் தேர்தலை அணுக வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் பலர் ஒரு புறத்தில் தமிழ் பொது வேட்பாளர் தேவை என ஒப்பமிட்ட பின்னர் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஏன் நடத்தினார்கள்? அவர்கள் வாங்கிய பணப் பெட்டிகளுக்கு வகை சொல்ல அல்லது மதுபான சாலை உத்தரவுப் பத்திரங்களுககுப் பதில் சொல்லவே அங்கு சென்றார்கள். உதாரணமாக, ரணில் பாராளுமன்;றத்தால் ஜனாதிபதியாக 134 வாக்குகளால் தெரிவு செய்;யப்பட்;;டார். இவர்களில் தமிழர் தேசியக் கூட்;டடமைப்பின் சில உறுப்பினர்;களும் அடங்குவர். சம்பந்தன் அவர்கள்  டல்லஸ் அழகப்பெருமா அவர்களைத் தமது கட்சி ஆதரிக்கும் எனத் தெரிவித்;திருந்தார். ஆனால் பின்னனர் பணம் கைமாறியதாக டல்லஸ் கூறுகிறார். இவர்களில் தமிழ் உறுப்பினர்களும் அடங்குவர். இவ்வாறான சந்தரப்பவாத அரசியல்வாதிகள் எவ்வாறு எமது சந்ததியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள்?

மக்கள் ரணிலின் அரசியற் கட்சியையும், அதன் அரசியலையும் ஆழமாக அவதானித்தே தமது வாக்கைச் செலுத்த வேண்டும். இத் தீர்மானகரமான வேளையில் அற்ப சலுகைகளைக் காரணம் காட்டி வாக்களித்தால் தமது தலையில் தாமே மண் அள்ளி வீசுவதற்குச் சமானமானது.

தொடரும் …….

 

https://arangamnews.com/?p=11161

 

தமிழர்கள் தேசிய அரசியல் செயன்முறையில் பங்கேற்பதற்கு ஊக்கம் தராத நாட்டு நிலைவரம்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 7    27 AUG, 2024 | 02:23 PM

image

கலாநிதி ஜெகான் பெரேரா

பொருளாதார நிலைவரம்,  பின்பற்றவேண்டிய பொருளாதார அபிவிருத்திப் பாதை மற்றும் தற்போதைய தருணத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு பொருத்தமான தலைவர் யார் என்ற விடயங்களே இன்று பெருமளவுக்கு பேசப்படுகின்றன. ஆனால், நாடடின் பொருளாதாரப் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் பங்களிப்புச் செய்ததும் தீர்வு காண்பதற்கு சிக்கலானதாக இருப்பதுமான இன்னொரு முக்கிய பிரச்சினை இந்த பேச்சுக்களுக்குள் விரைவில் ஊடுருவப் போகிறது.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்ற அதேநேரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரும் விரைவில் தொடங்கப்போகிறது. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இசைவான முறையில் இலங்கை செயற்படுகிறதா இல்லையா என்பது தொடர்பான பிரச்சினை 2009 ஆண்டில் இருந்து கிரமமாக ஆராய்வுக்கு வந்துகொண்டிருக்கிறது. 

இந்த கூட்டத்தொடரிலும் அந்த பிரச்சினை ஆராயப்படும். அந்த தீர்மானங்கள் கடந்தகால மனித உரிமை மீறல்களை இலங்கை அரசாங்கங்கள் ஒரு ஏற்புடைய முறையில் கையாளவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் மதிப்பீட்டின் அடிம்படையில் அமைந்தவை.

இலங்கை நிலைவரம் தொடர்பாக எடுத்திருக்கும் நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் தற்போதைய தறுவாயில் ஏதாவது ஒரு வகையில் கணிசமான மாற்றத்தை செய்வதில் நாட்டம் காட்டுவதற்கான சாத்தியமில்லை. இலங்கை  செல்ல வேண்டிய புதிய திசைமார்க்கத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதுவரையில் நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசைமார்க்கத்தை விடவும் சிறப்பானதாக புதிய பாதை இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

அதனால் செப்டெம்பரில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் முடிவுகள் இலங்கைக்கென்று நிர்ணயிக்கப்படும் இலக்குகளை  நிறைவேற்றுவதற்கு கூடுதலான கால அவகாசத்தை வழங்கவது பெரும்பாலும் சாத்தியம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸதானிகரின் அண்மைய அறிக்கை இலங்கைக்கு சாதகமானதாக இருக்கவில்லை. இலங்கை பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதும் அதுவரை நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் மீதான ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு தொடரும் என்பதுமே அந்த அறிக்கை மூலமான செய்தி.

"பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை ஒப்புக்கொள்வதற்கும் முழு மனித உரிமை மீறல்களையும் செய்ததில் இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படைகளின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கும் கடந்த காலத்தினதும் சமகாலத்தினதும் மனித உரிமைமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியமையே சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கு" முக்கியமான ஒரு தடையாக இருந்து  வருகிறது. 

"பாரதூரமான குற்றங்களையும்  மனித உரிமை மீறல்களையும் செய்ததாக நம்பகமாக தொடர்புபடுத்தப்படும் பல கட்டமைப்புக்களும் அரச இயந்திரத்தின் கூறுகளும் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பது  பொறுப்புக்கூறல் விடயத்தில் அர்த்தபுஷ்டியான  முன்னேற்றத்தை தடுக்கிறது என்பதுடன் மனித உரிமைமீறல்கள் தொடருவதற்கும் வழிவகுக்கிறது" என்று மனித உரிமைகள் உயர்ஸ்தினிகர் வொல்கர் ரேக் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மேலும், உத்தேச உண்மை கண்டறியும் பொறிமுறை அமைக்கப்படுவதை பாதிக்கப்பட்டவர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் கடுமையாக எதிர்த்திருப்பதை  சுட்டிக் காட்டியிருக்கும் அவர் முதலில் அரசாங்கம் நல்லிணக்கத்துக்கு உகந்த சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதற்கு பிரத்தியேகமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார்.

அரசாங்கத்தின் மறுப்பு 

ஐக்கிய நாடுகள் அறிக்கையில் உள்ள அவதானிப்புக்களை அரசாங்கம் மறுத்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் விளக்கமளித்திருக்கும் அரசாங்கம் கிளப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை இராஜதந்திர குறிப்பு ஒன்றில் தெளிவு படுத்தியிருக்கிறது.

குறிப்பிட்ட நபர்களையும் நிறுவனங்களையும் இலக்குவைத்து விதிக்கப்படும் தடைகள் மற்றும் எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயன்முறைகள் தொடர்பிலான குறிப்புக்கள் உட்பட முடிவுகளையும் விதப்புரைகளையும் நிராகரித்திருக்கும் அரசாங்கம் அவற்றை தவறானதும் உறுதிப்படுத்தப்படாததுமான மூலங்களையும் அடிப்படையாகக் கொண்டவை என்றும் மனித உரிமைகள் பேரவையை உருவாக்கிய  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 60/ 251  தீர்மானத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் இயற்கை நீதிக் கோட்பாடுகள், பக்கச்சார்பின்மை மற்றும் சகலரும் சமம் என்ற கோட்பாடுகளுக்கும் முரணானது என்றும் அரசாங்கம் கூறியிருக்கிறது.

ஆனால் நாட்டில் களநிலைவரம் வேறுபட்டதாக இருக்கிறது. நாட்டின் கிழக்குப் பகுதியில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்படுவதில்லை. உளாளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தாததை நாட்டின் ஜனாதிபதியே நியாயப்படுத்திப் பேசுகிற அளவுக்கு சட்டங்கள் அவமதிக்கப்படுகின்றன.

மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய தீர்மானம் உட்பட பல தீர்மானங்களில் கடுமையான ஏற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை சர்வதேச சமூகம் இன்னமும் பயன்படுத்தவில்லை. அவற்றில் ஒன்று குறிப்பிட்ட சில நிறுவனங்களை அல்லது தனிநபர்களை இலக்குவைத்து தடைகளை விதிப்பதாகும். 

அதை அவர்கள் பயன்படுத்தினால் ஆழமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் தற்போதைய தருணத்தில் இலங்கையினால் அதை தாங்கமுடியாது. விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை நிறைவு செய்யவில்லையானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வாபஸ் பெறப்படக்கூடும்.

அடுத்த சமாளிக்க முடியாத அச்சுறுத்தல்  சர்வதேச குற்றங்களுக்கான உலகளாவிய நீதி  நியாயாதிக்கம் தொடர்பானதாகும். உலகளாவிய நீதி்நியாயாதிக்க கோட்பாடு என்பது இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதை போன்ற சர்வதேச சட்டத்துக்கு எதிரான பாரதூரமான குற்றச்செயல்களுக்காக தனிநபர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கு அரசுகளை அல்லது சர்வதேச அமைப்புக்களை அனுமதிக்கும் ஒரு சட்டக்  கொள்கையாகும்.

குற்றச் செயல்கள் எங்கு இடம்பெற்றன என்பதையோ, குற்றச்செயல்களைச் செய்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதையோ அல்லது அந்த விவகாரம் வேறு எந்த நீதி நியாயாதிகத் தொடர்புகளைக் கொண்டது என்பதையோ பொருட்படுத்தாமல் அந்த கொள்கையை பிரயோகிக்கமுடியும்.

இலங்கையின் பின்புலத்தில் நோக்கும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்கள் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை குறப்பாக 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நீண்ட உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய மீறல்களைக் கையாள்வதில் கவனத்தைச் செலுத்தியிருக்கின்றன. 

உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jursdiction ) பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கு அல்லது சர்வதேச விசாரணை மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் அர்த்தம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் குறிப்பிடப்படும் தனிநபர்கள் இலங்கையின் நியயாதிக்கத்துக்கு வெளியில் விசாரணைகளை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்ககிறது.

ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைச் செயன்முறையை தொடருவது குறித்து சர்வதேச சமூகத்திற்குள் மீள்மதிப்பீடு ஒன்று இடம்பெறுகிறது போன்று தெரிகிறது. இலங்கை மோதலின் மோசமான கட்டம் 15 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் போரின் முடிவுடன் முடிவுக்கு வந்துவிட்டது. உலகின் வேறு பகுதிகளில் நடைபெறுகின்றவற்றுடன் ஒப்பிடும்போது இலங்கையின் இன்றைய நிலைவரம் பெருமளவுக்கு மேம்பட்டதாக இருக்கிறது.

முறைமை மாற்றம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சனத்தொகையின் சகல பிரிவுகளினதும் ஆதரவைப் பெறுவதில் பிரதான அரசியல் சக்திகளின் அக்கறைகள் சங்கமிக்கின்றதன் விளைவாக இலங்கையில் தற்போதைய காலகட்டம் தேசிய நல்லிணக்கத்துக்கு கூடுதலான அளவுக்கு அனுகூலமானதாக இருக்கிறது.

சிறுபான்மைச் சமூகங்கள் தனக்கு ஆதரவாக வாக்களிப்பதை உறுதிசெய்வதற்காக அவர்களை தன்பக்கம் இழுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழு அளவிலான முயற்சிகளில் ஈடுபட்டவருகின்றார். இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் இலங்கையின் வாக்காளர் தொகையில் மூன்றில் ஒரு பங்கினராக இருப்பதால் இறுக்கமான மும்முனைப் போட்டி ஒன்றில்  வெற்றி பெறுவதற்கு அந்த சமூகங்களின் ஆதரவைப் பெறுவது அவசியமாகும்.

மூன்று பிரதான வேட்பாளர்களான ஜனாதிபதி விக்கிரமசிங்கவும்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகளை கையாளுவது தொடர்பிலும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பிலும் ஒப்பீட்டளவில் அறிவுத் தெளிவுடனான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார்கள்.  அளிக்கின்ற வாக்குறுதிகளை தாங்கள் நடைமுறைப்படுத்துவார்கள் என்று மக்களுக்கு அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும்.

சிங்கள இனத்துவ தேசியவாதத்தை முன்னிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்சவின் தீங்கான காலப்பகுதிக்கு பிறகு தற்போது பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு மற்றும் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தேசிய நல்லிணக்கத்துக்கு சார்பாக பொதுமக்களின் நிலைப்பாடுகள் வலுவானவையாக வளர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அதே தேசியவாத சக்திகள் ஜனாதிபதி தேர்தலுக்காக தங்களை மீள அணிதிரட்டுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கோட்டாபயவின் பெறாமகன் நாமல் ராஜபக்ச தேர்தல் நோக்கத்துக்காக சிங்கள இனத்துவ தேசியவாதத்தின் சக்தியை திரட்டுவதில்  சிறிய தந்தையாரின் அடிச்சுவட்டை பின்பற்றுவதாக தெரிகிறது. "இந்த பௌத்த நாட்டில் சகல மதங்களையும் மதிப்பதற்கு நாம் உறுதி கொண்டிருக்கிறோம். மாகாணசபைகளுக்கு காணி அதிகாரத்தையோ பொலிஸ் அதாகாரத்தையோ நாம்  பரவலாக்கம் செய்யப் போவதில்லை. வடக்கில் உள்ள எமது தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் நாம் எந்த பயனையும் அடையப்போவதில்லை" என்று நாமல் கூறியிருக்கிறார்.

அவரது இந்த கூற்றில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பரவலாக்கம் செய்யும்  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை  தமிழ் மக்களும் உண்மையில் சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்ட சகல மக்களும் காண்கிறார்கள்.

இத்தகைய கள யதார்ததங்களுக்கு முகங்கொடுக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற குடையின் கீழ் தமிழ் இனத்துவ தேசியவாத சக்திகளும் தங்களை மிள அணிதிரட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றன. கடந்த காலத்தில் தமிழ்த் தலைவர்களும் அவர்களது கட்சிகளும் தேர்தல்களை பகிஷ்கரித்ததுடன் சிங்களப் பெரும்பான்மையினர் மீதான நம்பிக்கையீனம் காரணமாக நாட்டுப் பிரிவினையைக் கோரினர். கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போனதற்கு இனத்துவ துருவமயமாதலே காரணமாகும். ஆனால் தற்போதைய தருணத்தில் நாட்டில் பிரதான சுலோகமும் அபிலாசையும் முறைமை மாற்றம் ஒன்றுக்கானதாகவே இருக்கிறது. 

இலங்கையில் தங்களது தலையீடுகளின் பெறுமதி பற்றி சர்வதேச சமூகத்தின் மத்தியில் இடம்பெறுகின்ற மீள்சிந்தனையும் மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளரகளும் தமிழ் வாக்காளர்களுக்கு நீட்டுகின்ற நேசக்கரமும் தமிழ் அரசியல் சமுதாயம் விலகிநிற்காமல்  தேசிய அரசியல் செயன்முறையில்  ஈடுபடுவதற்கு காலம் கனிந்திருக்கிறது என்பதன் அறிகுறியாகும்.

அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற விரும்புகின்றவர்களும் சட்டத்தின் ஆட்சிக்கு பாதகமாக அமைகின்றதும் இன, மத சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாரபட்சத்தைக் காட்டுகின்றதுமான இன்றைய நாட்டு நிலைவரங்களில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டியது அவசியமாகும்.

https://www.virakesari.lk/article/192111

Checked
Thu, 11/21/2024 - 10:51
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed