அரசியல் அலசல்

தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளின் அதிர்ச்சியின் விளைவான தாக்கங்கள்; இந்தியாவுக்கான படிப்பினைகள்

3 months ago

Published By: VISHNU  16 AUG, 2024 | 03:46 AM

image

சுஹாசினி ஹைதர் 

இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு அதன் அயல்நாடுகளில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக அதிர்ச்சியை கொடுத்துவருகின்றன.

2021 ஆம் ஆண்டில் மியன்மாரில் சதிப்புரட்சியும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சியும். 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிரதமர்  இம்ரான் பதவி கவிழ்க்கப்பட்டார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டார்.

அதற்கு பிறகு மாலைதீவு தேர்தலில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்த ஜனாதிபதி சோலீ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட அதேவேளை, நேபாளத்திலும் கூட்டரசாங்கங்களின் வீழ்ச்சி அதே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவுடன் குறைந்தளவு நட்புறவைக் கொண்ட பிரதமர் ஒலீயின் அரசாங்கம் பதவிக்கு வந்தது.

அடுத்து இப்போது பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவை திடீரென்று பதவியில் இருந்து விரட்டியிருக்கிறது. அவர் இந்தியாவுக்கு தப்பி வந்திருக்கிறார். ஹசீனா அரசாங்கத்தின் மீது இந்தியா எவ்வாறு பெருமளவுக்கு நம்பிக்கை வைத்துச் செயற்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிர்ச்சியை உணர்ந்து கொள்ளமுடியும்.

ஹசீனாவுக்கு பிறகு பதவிக்கு வருபவர்களுடன் எவ்வாறு உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது என்பதில் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களின் நிகழ்வுப்போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  தெற்காசியாவில் ஏற்பட்டிருக்கும் சடுதியான மாற்றங்களின்  விளைவுகளினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அது போன்ற விளைவுகளில் இருந்து தான்  தப்பித்துக் கொள்வதற்கும்  இந்தியாவுக்கு கிடைத்திருக்கக்கூடிய பாடங்கள் எவை? 

இந்திய அரசாங்கம் அதன் சொந்த அயலகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாரில்லாத ஒரு நிலையில் இருந்திருக்கக்கூடாது என்பது முதல் பாடம். 

பங்களாதேஷில் இந்தியாவின் பிரசன்னத்தை பொறுத்தவரை, தலைநகர் டாக்காவில் உள்ள உயர்ஸ்தானிகரகத்துக்கு புறம்பாக, சிட்டாகொங், ராய்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெற் ஆகிய நகரங்களில் துணைத் தூதரகங்களைக் கொண்டிருக்கிறது. அத்துடன் பல இந்திய அமைப்புக்கள் அந்த நாட்டில் பல்வேறு செயற்திட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

இவை எல்லாம் கடந்த ஒரு சில மாதங்களாக மாத்திரமல்ல, கடந்த சில வருடங்களாக ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக வளர்ந்துகொண்டிருந்த எதிர்ப்பை பற்றிய விபரங்கள் முழுமையாக திரட்டப்பட்டு புதுடில்லிக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்திருக்க வேண்டும். 

அவாமி லீக் அரசாங்கம் ஒரு எதேச்சாதிகார, தனிக்கட்சி ஆட்சியாக மாறிக்கொண்டுவந்தது. எதிரணி அரசியல்வாதிகள் பலர்  சிறையில் அடைக்கப்பட்டதுடன் மேலும் பலர் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்கள்.

சிவில் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் தொல்லைகளுக்கு  உள்ளாக்கப்படுவதாகவும் உணர்ந்தார்கள். நிலைமை இவ்வாறாக இருந்தபோதிலும், அதைப் புரிந்துகொள்வதற்கோ அல்லது  தனது அக்கறைகளை ஹசீனா அரசாங்கம்  விளங்கக்கூடிய முறையில் கூறுவதற்கோ இந்திய அரசாங்கம் எதையும்  செய்யவில்லை.

மேலும், பங்களாதேஷ் எதிரணியுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு இந்திய இராஜதந்திரிகள் தவறினார்கள்.  முன்னாள் பிரதமர் பேகம்  காலிதா ஸியாவின் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அது மாத்திரமல்ல, ஒரு சந்தர்ப்பத்தில்,  ஹசீனா அரசாங்கத்தின் வேண்டுகோளையடுத்து பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஒருவரை இந்திய அரசாங்கம் நாடுகடத்தியது. 

இவையெல்லாம் அரசியல் மதிலின் ஒரு பக்கத்தில் மாத்திரம்   நின்றுகொள்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானத்தை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அத்தகைய ஒரு பக்கச்சார்பான ஊடாட்டத்தை வரலாறு பல தடவைகள் வேண்டிநிற்கிறது.

பேகம் காலிதா ஸியாவின் கீழான பங்களாதேஷ் தேசியவாத கட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில்,  குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் எல்லையோரக் கொலைகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக  இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் பாரதூரமானதாக இருந்த அதேவேளை, ஒரு நீண்டகாலத்துக்கு அயல்நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சியை அலட்சியம் செய்வதற்கு இந்தியா முடிவெடுத்திருக்க முடியாது.

 ஆப்கானிஸ்தானில் இந்திய  தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட படுமோசமான தாக்குதல்களில் தலிபான் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும்கூட, அந்த இயக்கத்துடன்  உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா தீர்மானித்தது.

இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அடிக்கடி இந்திய விரோத நிலைப்பாடுகளை எடுத்த வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும், அதன் தலைவர்களை இந்திய அரசாங்கம் வரவேற்றது. கே.பி. சர்மா ஒலீ தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் இந்தியா கடுமையாகாஆட்சேபித்த வரைபடங்கள் தொடர்பிலான அரசியலமைப்பு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கூட அந்த கட்சியுடன் புதுடில்லி விவகாரங்களை கையாண்டது. 

இந்த செயற்பாடுகள் எல்லாம் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை  அயல்நாடுகளில் உள்ள தரப்புகளுடன் ஊடாட்டங்களை வேண்டிநிற்கிறது என்பதைக் காட்டுகிறது.

மாலைதீவில் அன்றைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலீக்கு இந்தியா அளித்த முழுமையான ஆதரவும் முஹமட் முய்சுவை இந்திய விரோத தலைவர் என்று காண்பித்துக் கொண்டதும் தேர்தல் அலை மறுபக்கம் மாறியபோது பயனில்லாமல் போய்விட்டது. கசப்பான ஒரு  உண்மையை இந்தியா ஜீரணித்துக்கொள்ள வேண்டியிருந்ததுடன் மாலைதீவில் இருந்து படைகளை விலக்கிக்கொண்ட போதிலும், கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி முய்சுவின் அரசாங்கத்துடன் நெருக்கமான ஊடாட்டங்களை நாடினார். 

புதுடில்லி அதன் வீறுகாட்டும் மனோபாவத்தைக் கைவிட்டு அயல்நாடுகளுடனான ஊடாட்டங்களை பரந்தளவில் பேணினால் இத்தகைய கடுமையான பாடங்களை தவிர்த்திருக்க முடியும். ஒரு கட்சி ஆட்சியின் உறுதிப்பாட்டை விடவும் நாட்டுக்குள்ளும் எல்லைகளுக்கு வெளியேயும் பன்முகத்தன்மை கொண்ட அரசியல் கருத்துக்களை புதுடில்லி விரும்பி ஆதரிக்கவேண்டும்.

இழந்த நற்பெயரும் இனவாதப் பார்வையும்

இந்தியா அதன் நண்பர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பது பங்களாதேஷ் மற்றும்  ஷேய்க் ஹசீனா விவகாரத்தில் நாம் பெற்றுக்கொண்ட இன்னொரு படிப்பினையாகும்.

காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு தலிபான்களிடம் இருந்து தப்பியோடிவந்த நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களுக்கு விசா வழங்குவதற்கு மறுத்தபோது நம்பிக்கைக்குரிய பங்காளி என்ற நற்பெயரை புதுடில்லி இழந்துவிட்டது. அந்த ஆப்கானியர்களில் முன்னைய ஆப்கான் அரசாங்கத்தில் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.

அவர்கள் தங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் இந்திய இராஜதந்திரிகளை பாதுகாத்தவர்கள். அவர்களுக்கு கதவை மூடுவதற்கு இந்தியா எடுத்த தீர்மானம் தொடர்ந்தும் ஒரு கசப்பான விவகாரமாகவே நீடிக்கிறது. கோட்பாட்டுக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

தெற்காசியாவில் அதிகாரத்தை அடிக்கடி இழக்கும் தலைவர்கள் சில காலத்துக்கு பிறகு திரும்பவும் பதவிக்கு வருகிறார்கள். ஷேய்க் ஹசீனா இன்னொரு பாதுகாப்பான நாட்டைத் தேடிக்கண்டு பிடிக்கும்வரை தங்கியிருப்பதற்கு அனுமதித்ததன் மூலம் நல்ல காரியம் ஒன்றை  இந்தியா செய்திருக்கிறது. அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தால் அது ஒரு துரோகச் செயலாக அமைந்திருக்கும். எதிர்காலத்திலும் அவரை கையாளும் விடயத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறை கடைப்பிக்கப்பட வேண்டும் 

ஹசீனா தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது புதிய அரசாங்கத்துடனான உறவுகளைச் சிக்கலாக்கும். குறிப்பாக அவரை நாடுகடத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தால் அல்லது அவாமி லீக் கட்சியினர் தங்களை மீள அணிதிரட்டுவதற்கு இந்தியாவைப் பயன்படுத்துவதாக கருதப்பட்டால் பிரச்சினை தோன்ற சாத்தியம் இருக்கிறது.

அயல்நாடுகளில் உறவுகளை இனவாத நோக்கின் அடிப்படையில் அணுகுவது ஒரு தவறு என்பது காலந்தாழ்த்தாமல் இந்தியா படிக்கவேண்டிய மூன்றாவது பாடமாகும்.  தெற்காசியா மதரீதியான பெரும்பான்மைச் சமூகங்களைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். வெவ்வேறு நாடுகளில் சனத்தொகையின் அதிகப்பெரும்பான்மையான பிரிவினராக இந்துக்களும் முஸ்லிம்களும் பௌத்தர்களும் வாழ்கிறார்கள். நல்லுறவுகள் ஏதோ ஒரு வகையில் மதத்துடன் பிணைக்கப்பட்டவையாக இருக்கின்றன என்று எண்ணுவது தவறானதாகும்.

இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நேபாளத்துடன் இந்தியா மிகவும் சிக்கலான உறவைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பௌத்தர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பூட்டானும் முஸ்லிம்களை பெரும்பானமையினராகக் காண்ட மாலைதீவும் பெரும்பாலும் இந்தியாவுடன் சிறந்த உறவுகளைக் கொண்டிருந்தன.

முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளில் ( ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பஙகளாதேஷ் ) இருந்துவந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மாத்திரம் குடியுரிமையை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை அயல்நாடுகளில் ( மேலே குறிப்பிட்ட நாடுகளில் மாத்திரமல்ல) எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. 

ஹசீனாவின் பதவி விலகலை தொடர்ந்து பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பில் மோடி அரசாங்கத்தின் காட்டும் அக்கறை சரியானதே. ஆனால், இந்திய உள்துறை அமைச்சின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு போன்ற கருவிகளின் ஊாடாக அல்லாமல் மிகவும் சாதுரியமாக அந்த அக்கறை வெளிக்காட்டப்பட வேண்டும்.

தனது எல்லகைளுக்குள் வாழ்கின்ற சிறுபான்மை இனத்தவர்களையும் பாதுகாப்பதில் பற்றுறுதி கொண்டிருப்பதாக, சொல்லால் அன்றி செயலால், இந்திய அரசாங்கம் காண்பிப்பதன் மூலமாக பங்களாதேஷ் சிறுபான்மை இனத்தவர்கள் மீதான இந்தியாவின் அக்கறை கரிசனையுடன் நோக்கபடுவதை உறுதிசெய்யலாம்.

தெற்காசிய தனித்துவ பொறிமுறை

இந்தியா முதன்மையான வல்லரசு என்ற அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும் என்பது நான்காவது பாடம். பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவல்களை எதிர்க்கவேண்டியது அவசியம் என்கின்ற அதேவேளை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டாபோட்டிக்கான களமாக பிராந்தியம் மாறிவிடக்கூடாது. 

வர்த்தகம், இணைப்பு , முதலீடு மற்றும் மூலோபாய உறவுகளில் இந்தியாவை ஓரங்கட்டுவதற்கு சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் நன்கு தெரிந்தவையே. பங்களாதேஷில் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிரான  அமெரிககாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் நலன்களை நசுக்கிவிட்டன.

பாகிஸ்தான் தேர்தல்கள் குறித்து எந்த கருத்தையும் அமெரிக்கா கூறாமல் இருந்த பின்புலத்தில் நோக்கும்போது வாஷிங்டன் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்ட கடுமையான அறிக்கைகளும் பங்களாதேஷில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளுடன் விசேட விசேட விசா கொள்கையை பிணைக்கும் அமெராக்கத் தீர்மானமும் பாசாங்குத்தனமானவை  என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம்  (சார்க் ) போன்ற தனித்துவமான தெற்காசிய பொறிமுறைகளை மீட்டெடுத்து இந்தியா வெளித்தலையீடுகள் இன்றி அயல்நாடுகளுடன் ஊடாட்ங்களைச் செய்வதற்கு வழிவகைகளை கண்டறியவேண்டும். பாகிஸ்தானுடனான இரு தரப்பு பிரச்சினைகள்  இந்தியா ஒரு தசாப்த காலமாக சார்க் அமைப்பை பகிஷ்கரிக்க வழிவகுத்தன.

பங்களாதேஷுடனான உறவுகள் மோசமடையுமேயானால் ( சார்க்கை  கைவிட்டதைப் போன்று ) பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான  வங்காள விரிகுடா செயற்திட்டம் ( Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Cooperation ) or BIMSTEC ) போன்ற மற்றைய பொறி முறைகளையும் கைவிடவேண்டுமா அல்லது அவ்வாறு செய்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும்  என்பது குறித்தும்  இந்தியா பரிசீலனை செய்யவேண்டும்.

இறுதியாக, கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் கொந்தளிப்புகளில்  இருந்தும்  தேர்தல் முடிவுகளில் இருந்தும் பெறக்கூடியதாக இருக்கும் குறிப்பிட்ட சில பொதுவான பாடங்கள் மீது புதுடில்லி மாத்திரமல்ல, சகல தெற்காசிய தலைநகரங்களும் கவனம் செலுத்தியாக வேண்டும். தொழில் வாய்பின்மையும் சமத்துவமற்ற வளர்ச்சியும் வீதிகளுக்கு மக்களை இறக்குகின்றன. ஆனால்,  எந்தளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஜனநாயக பின்னடைவை மூடிமறைக்க முடியாது.

நவீன ஜனநாயகங்களில் எதிர்ப்பை நசுக்கும் செயற்பாடுகளை நீண்டகாலத்துக்கு தொடரமுடியாது."நீங்கள் ஒரு வருட காலத்துக்கு பயிரை வளர்க்க விரும்பினால் சோளத்தை பயிருடுங்கள்..... காலாதிகாலத்துக்கு பயிர் செய்ய விரும்பினால் ஜனநாயகத்தை வளருங்கள்" என்ற ஒரு பழைய கூற்று இருக்கிறது. இது இந்தியாவையும் அயல்நாடுகளுடனான அதன் உறவுகறையும் பொறுத்தவரை உண்மையாகும்.

https://www.virakesari.lk/article/191184

பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன்.

3 months ago
Ranil-Tamil-partees.png?resize=750,375&s பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள். கட்டமைப்பாக அழைக்கவில்லை. ஆனாலும் கட்டமைப்பில் உள்ள பெரும்பாலானவர்களை அழைத்தார்கள்.ஆனால் பொதுக் கட்டமைப்பாக அழைக்கிறோம் என்று அழைப்பில் குறிப்பிடப்படவில்லை. எதற்காக அழைக்கிறோம் என்றும் இரு தரப்புமே கூறவில்லை.

இதில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஏழு பேர்களும் மேற்படி இரண்டு சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் செல்லவில்லை. ஆனால் மூன்று கட்சிகள் சென்றன. அவை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகளாக அங்கே செல்லவில்லை. ஆனாலும் அவர்கள் அவ்வாறுதான் சென்றார்கள் என்று வெளியில் நம்பப்படுகின்றது. ஏனென்றால் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுக் கட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக அணுகவில்லை என்றாலும் கூட, அது பொதுக் கட்டமைப்பு என்பதற்காகத் தான் அந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தும் பொதுக் கட்டமைப்பை அவர்கள் அழைத்தார்கள். தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியதே அதற்குக் காரணம். எனவே அந்த இரண்டு அழைப்புகளும் வெளிப்படையாக பொதுக் கட்டமைப்புக்கு என்று கூறப்படாவிட்டாலும், பொதுக் கட்டமைப்பை நோக்கியவை தான்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால், அந்த மூன்று கட்சிகளும் அந்த இரண்டு சந்திப்புகளுக்கும் போயிருக்கக் கூடாது.ஆனால் அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் என்ன ?

நாட்டில் உள்ள கட்சிகள் என்ற அடிப்படையில், நாட்டின் தலைவர் ஓர் அழைப்பை விடுக்கும் பொழுது சென்று சந்திப்பதுதான் அரசியல் நாகரீகம் என்று கூறப்படுகிறது. தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அழைக்கும் பொழுது அவர்கள் சென்று சந்திப்பது இயல்பானது. இம்மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளிடம் மொத்தம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே அந்த அடிப்படையில் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றதாக ஒரு விளக்கம் தரப்படுகின்றது.

பொதுக் கட்டமைப்பின் ஊடக அறிக்கை ஒரு பொதுக் கட்டமைப்பாக அந்த சந்திப்பில் தாங்கள் பங்குபற்றப் போவதில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது.
மூன்று கட்சிகளும் பொதுக் கட்டமைப்பின் சார்பாகத் தங்கள் பங்குபற்றியதாகத் தெரிவிக்கவில்லை.

ஆனால்,பொதுக் கட்டமைப்பை விமர்சிப்பவர்கள் பொது வேட்பாளர் விமர்சிப்பவர்கள் அவ்வாறுதான் வியாக்கியானம் செய்கின்றார்கள். பொதுக் கட்டமைப்பு உடைந்து விட்டது, பொதுக் கட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை, அந்த மூன்று கட்சிகள் கூட்டுப் பொறுப்பின்றி நடந்து கொண்டு விட்டன,பொதுக் கட்டமைப்பில் உள்ள மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையில் உருகிப் பிணைந்த கூட்டு உருவாகவில்லை… என்றெல்லாம். விமர்சனங்கள் வருகின்றன

முதலில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய தோற்றப்பாடு.அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது அதற்கென்று ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதிக் கொண்டமையும் ஒரு புதிய தோற்றப்பாடுதான்.கடந்த 15 ஆண்டுகளாக பலரும் எதிர்பார்த்த;எழுதி வந்த ஒன்று.அது இப்பொழுது ஏறக்குறைய ஒரு மாதக் குழந்தைதான்.அதில் பலவீனங்கள் உண்டு.அங்கே தவறுகள் நடக்கும்.அங்கே முழுமையான கூட்டுப் பொறுப்பை, உருகிப் பிணைந்த இணைப்பை எதிர்பார்க்க முடியாது.அதைப் படிப்படியாகத்தான் ஏற்படுத்தலாம்.இவ்வாறு கட்சிகளையும் மக்கள் அமைப்பையும் இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?

ஏனென்றால் தமிழர் அரசியலில் எல்லாமே சிதறிப் போய் இருக்கின்றன என்பதனால்தான், தமிழரசியலின் சீரழிவு காரணமாகத்தான் அவ்வாறு ஒரு கட்டமைப்பு தேவைப்பட்டது.தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரழிந்து வருகிறது.

sajith-tamil-partees.webp?resize=600,300

தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்காக குடிமக்கள் சமூகங்கள் இன்று நேற்று உழைக்கவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து வருகின்றன.மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் தலைமையில்,தமிழ் சிவில் சமூக அமையத்தில் இருந்து தொடங்கி இப்பொழுதுள்ள பொதுமக்கள் சபை வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இந்தக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக விடாமல் முயற்சித்து வருகிறார்கள்.அதில் தற்காலிக வெற்றிகளை அவர்களால் பெற முடிந்திருக்கிறதே தவிர நிரந்தர வெற்றிகளைப் பெற முடியவில்லை.

இவ்வாறான ஒரு துர்பாக்கியமான அரசியல், சிவில் சமூகப் பின்னணியில், இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாதக் குழந்தையாகிய தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பும் ஒரு தற்காலிக வெற்றியாக மாறிவிடக்கூடாது என்ற கரிசனை குடிமக்கள் சமூகங்களுக்கு மட்டுமல்ல எல்லாத் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒற்றுமையைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு கிடையாது. ஒற்றுமை சிதைந்தால் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை யோசிக்கலாம் என்று கூறுவதற்கு வேறு தெரிவே கிடையாது. தமிழ் மக்கள் ஒன்றுசேரத் தவறினால் தமிழ்க் கட்சிகளை ஒரு மையத்தில் ஒன்றிணைக்கத் தவறினால்,அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதை விடவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் ஒரு தூர்ந்து போகும் சமூகமாக மாறிவிடுவார்கள் என்பதுதான்.

எனவே தமிழ்ச் சமூகம் தூர்ந்து போய் ஒரு தேசமாக இல்லாமல் சிதறிப் போவதற்கு அனுமதிக்க முடியாது.அந்த அடிப்படையில் சிந்தித்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா அரசியல் சக்திகளையும் தரப்புகளையும் ஐக்கியப்படுத்துவதுதான் ஒரே வழி. ஐக்கியம் இல்லையென்றால் தமிழ்த் தேசியமே இல்லை என்ற ஒரு விளிம்பில் இப்பொழுது தமிழ் அரசியல் வந்து நிற்கின்றது. அந்த அடிப்படையில்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு யோசிக்கப்பட்டது.

தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அவ்வாறு மக்களை ஒரு பெரிய திரட்சியாகக் கூட்டிக்கட்டுவது என்று சொன்னால், அந்த மக்கள் மத்தியில் வேலை செய்யும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் கட்சிகளையும் கூட்டிக்கட்ட வேண்டும். அவ்வாறு கூட்டிக்கட்டத் தவறினால் தமிழ்ச் சமூகம் இப்பொழுது இருப்பதை விடவும் கேவலமான,பாரதூரமான விதத்தில் தூர்ந்து போய்விடும்.அவ்வாறு தூர்ந்து போகக்கூடாது என்பதற்காகத்தான் பொதுக் கட்ட்டமைப்பு.எனவே பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று உழைப்பவர்கள் வெற்றி பெற்று விடக்கூடாது.

தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதை விரும்பாத சக்திகள் பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்; விரும்புகிறார்கள்;அதற்காகக் காத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் ஒரு மாதக் குழந்தையான பொதுக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்த வேண்டுமா? அல்லது தமிழ் குடிமக்கள் சமூகங்கள் மேலும் தீவிரமாக,தீர்க்கதரிசனமாக;அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டியிருப்பதை அது காட்டுகின்றதா?

ஏனென்றால் இந்த இடத்தில் மனம் தளர்ந்தால்,இந்த இடத்தில் சோர்வடைந்தால், பிறகு தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் செல்லும்? ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தோல்வியுற்ற பின் எட்டு ஆண்டுகள் சென்றன இப்படியொரு கட்டமைப்பை உருவாக்க.ஆரம்ப காலத்தில் ஏற்பட்டிருக்கும் சிறிய சறுக்கல்கள், தளம்பல்கள் போன்றவற்றை பொருட்படுத்தி பலவீனமான ஒரு ஐக்கியத்தை உடைப்பதா? அல்லது அதனை மேலும் பலப்படுத்தி உடைக்கப்பட முடியாத ஒன்றாக உருகிப் பிணைந்த ஒன்றாக வளர்த்தெடுப்பதா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.தத்துவ ஞானி ஹெகல் கூறுவார் “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டது எதையென்றால்,நாம் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.இது தமிழ் அரசியலுக்கு குறிப்பாக பொதுக் கட்டமைப்புக்கும் பொருந்தும். அரசற்ற சிறிய ஒரு மக்கள் கூட்டம் எதிர்த் தரப்பு விரும்புவதை செய்ய வேண்டுமா அல்லது செய்யக் கூடாதா?

https://athavannews.com/2024/1396287

பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்!

3 months ago

பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்!
பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்!

— கருணாகரன் —

தமிழ்ப்பொது வேட்பாளராக(?) ஒருவரை (பா.அரியநேத்திரனை) க் கண்டு பிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப்பொது வேட்பாளருக்கான(?) பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு சீரியஸான விடயமாகவே இருக்கும்) விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “பொதுவேட்பாளர்” விடயம், ஒரு மெய்யான தேராகுவதற்குப் பல சிக்கல்களைக் கொண்டதென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. போகப்போகத்தான் அதனுடைய சிக்கல்களும் சிரமங்களும் விளங்கத் தொடங்கின. (ஒரு கட்டத்தில் பொதுவேட்பாளர் விடயத்தை ஏன் தொட்டோம் என்று எண்ணக் கூடிய அளவுக்கு, இவர்களுடைய தூக்கத்தையே பறித்தது).

முக்கியமாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுகின்றவருக்கு தேர்தல் விதிமுறைகளின்படி இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் என்ன என்பதைக் கூட இவர்கள் விளங்காமலே இருந்துள்ளனர். இதை அவர்களே சொல்கிறார்கள், தமிழ் மக்கள்பொதுச்சபைக்குள் காணப்படும் கருத்துருவாக்கிகள் ஒரு பொதுவேட்பாளர் தொடர்பாக கட்டியெழுப்பிய கருத்துருவாக்கம்என்னவென்றால்கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளர்தான்அவரும் அரசியல் கட்சிகள் சாராதவராக இருந்தால் உத்தமம்என்று கருதப்பட்டதுஆனால் நடைமுறையில் அப்படி ஒரு பெண்வேட்பாளரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நெருக்கடிகள் இருந்தனமட்டுமல்லநாட்களும் குறைவாக இருந்தனஒரு பெண்வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஓர் ஆண்வேட்பாளரை அதாவது கட்சிசாரா ஆண் வேட்பாளரைகண்டுபிடிக்கலாமா என்று சிந்திக்கப்பட்டதுஆனால் அங்கேயும்வரையறைகள் இருந்தன.அதன் பின்னர்தான் கட்சி சார்ந்தயாராவது இருப்பார்களா என்று தேட வேண்டி வந்தது” என.

1.      ஒரு சிறிய குழுவினர் கூடித் தம்மைத்தாமே “தமிழ் மக்கள் பொதுச்சபையினர்” என்று அழைத்துக் கொள்கின்றனர். ஒரு அமைப்புக்குரிய விதிமுறைகள், அடிப்படைகளின்படி இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எவராலும் தெரிவு செய்யப்படவில்லை. மேலும் தம்மைக் கருத்துருவாக்கிகள்(!) என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இந்தக் கருத்துருவாக்கிகள் 2009க்குப் பின் (புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், தம்மை அரசியல் அரங்கில் நிலைப்படுத்துவதற்கு தலைகீழாகக் கூட நின்று பார்க்கிறார்கள். இதற்காக தமிழ்த்தேசியப் பேரவையை உருவாக்கியது தொடக்கம் விக்னேஸ்வரனைத் தமிழர் அரசியலின் மகாமேதை, ஈழத்தின் தலாய்லாமா என்றது வரையில் என்னவோ எல்லாம் செய்து பார்த்தனர். இறுதியாக இப்போது வந்திருக்கும் இடமே தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற “குரும்பட்டித் தேர்”.

2.      தமிழ்ப்பொது வேட்பாளராக கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளரை நிறுத்துவதற்கு தாம் யோசித்ததாகக் கூறப்படுகிறது. நல்ல யோசனைதான். ஆனால், சமூக வெளியில் பெண்களையும் இளையோரையும் அரசியல், சமூக ஆளுமைகளாக வளர்க்காமல், தன்னியல்பாக எங்கேனும் ஓரிருவர் எழுந்து வந்தால் அவர்களைக் கொண்டாடாமல் இருந்து விட்டு, இப்படித் திடீரென ஆட் தேடினால் திரவியம் கிடைக்குமா? அதற்கான உழைப்பு (தேடுவதற்கான உழைப்பல்ல. ஆளுமைகளை உருவாக்குவதற்கான உழைப்பு) ச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுதான் தேசமாகச் சிந்திப்பதன் அடிப்படையாகும்.

3.      இதேதான் அரசியல் சாராத இன்னொரு ஆளுமையைத் தேடுவதிலும் நிறுத்துவதிலும் வந்த பிரச்சினையாகும். ஆக, தமிழ்ச்சமூகம் (தமிழீழம்) மிகப் பெரிய ஆளுமை வரட்சியில் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் இதுதான் நிலைமை. இதையே நாம் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டி வருகிறோம். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நகைப்புக்குரியதாக்கி நிராகரித்தவர்கள், இப்போது சூழலைக் கரித்துக் கொட்டுகிறார்கள். மாற்றுச் சிந்தனையோடு, புதிதாகச் சிந்திப்போரையும் புத்தாக்கம் காண்போரையும் நிராகரித்து ஒதுக்கி வந்ததன் விளைவையும் இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். 

4.      ‘பொதுவேட்பாளரைக் கண்டு பிடிப்பதற்கு கால அவகாசம் (நாட்களும்) போதாமலிருந்தது’ என்று அழுகிறார்கள். 15 ஆண்டுகளாகப் பொதுவேட்பாளரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் கருத்துருவாக்கிகளுக்கு அதற்கான வேட்பாளராக யாரை – எப்படியானவரை நிறுத்தலாம் என்று யோசிக்க முடியாமல் போய் விட்டது. என்பதால்தான் எல்லா இடமும் தேடிக் கட்டக் கடைசீயாக அரியநேத்திரனைக் கண்டு பிடிக்க முடிந்தது. அல்லது அவருடைய கால்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. ம்… எல்லாம் ஒரு விதி!

இன்னும் இவர்களுடைய கவலைகள் முடியவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் பொறுத்து பொதுக் கட்டமைப்புக்குசட்டரீதியாக சில வரையறைகள் இருந்தனதேர்தலில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தலாம்அல்லதுஒரு முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்சுயேட்சையாகக் களமிறங்கலாம்இந்த இரண்டுசாத்தியக்கூறுகளுக்குள்ளும் தான் ஒரு பொது வேட்பாளரைத்தேட வேண்டியிருந்ததுஅதாவது தேர்தல் சட்டங்களின்படிஒன்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி வேண்டும்அல்லதுமுன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும்என.

இப்படிச் சிரமப்படக் காரணம், களநிலை அனுபமும் நடைமுறை அறிவும் இல்லாததே. குறைந்த பட்சம் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கான தகுதிநிலையைப் பற்றிய தேர்தல் சட்டம் என்ன என்று கூடத் தெரியாமலிருந்திருக்கிறது. “கற்பனைக் குதிரையில் சவாரி”  செய்வோரின் நிலை இப்படித்தானிருக்கும்.

இதனால்தான் படாத பாடெல்லாம் பட்டு ஒரு பொதுவேட்பாளரைக் கண்டு பிடிக்கவும் அவரை இணங்க வைக்கவும் வேண்டியிருந்தது. ‘எப்படியோ இறுதியில் ஒரு பலிக்கடா கிடைத்து விட்டது – வசமாக மாட்டி விட்டது’ என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறார்கள். என்பதால்தான் “பொது வேட்பாளர் வந்து விட்டார்” என்று புளகாங்கிதமடைகிறார்கள். உண்மையில் இப்போதுதான் இவர்கள் நிம்மதிப்பெருமூச்சை விடுகிறார்கள். 

அது கூட இவர்கள் எதிர்பார்த்த – இவர்கள் கூறிய பரப்பிற்குள் வேட்பாளர் அமையாமல், எதிர்முகாமான தமிழரசுக் கட்சிக்குள்ளேயே தேடவேண்டியிருந்தது. இதற்கொரு சப்பை நியாயத்தைச் சொல்கிறார்கள். “தமிழரசுக் கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்கவும் அதை உடைக்கவும் அதற்குள்ளிருக்கும் பொது வேட்பாளருக்கான ஆதரவு – எதிர் என்ற இரு நிலைப்பாட்டை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்காகவே தாம் அரியநேந்திரனையும் தவராஜாவையும் இலக்கு வைத்ததாக. (சிரித்து விடாதீர்கள்). இப்படியெல்லாம் கற்பனைக்கதைகள் பல உண்டு. 

ஆனால், மேற்கூறிய அடிப்படையில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தகுதியும் வாய்ப்புகளுமுள்ளவர்கள்  பொதுக்கட்டமைப்பிற்குள்  இருந்தனர். தேவையான சின்னங்களும் அதை வழங்கக் கூடிய கட்சிகளும் இருந்தன. ஆனால், அதற்குத் தயாரான மனநிலை கட்சிகளுக்குள் இருக்கவில்லை என்பதே உண்மை. இதையும்  பொதுச்சபையினரே வெளிப்படையாகச் சொல்கிறார்கள், தமிழ்தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்பட்ட கட்சிகள்உண்டு.பி.ஆர்.எல்.எப்  போன்ற கட்சிகள் அவ்வாறு சின்னத்தைதருவதற்குத் தயாராகக் காணப்பட்டனசில கட்சிகள் தரத்தயங்கினபொதுகட்டமைப்புக்கான புரிந்துணர்வுஉடன்படிக்கையில் ஒரு விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறதுஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்தை ஒரு பொதுநிலைப்பாட்டுக்காகப் பயன்படுத்தி அதன்மூலம் திரட்டப்பட்டவாக்குகளையும் பிரபல்யத்தையும் அடுத்து வரும் தேர்தலில்அக்கட்சி தனது தனிப்பட்ட கட்சி தேவைகளுக்கு பயன்படுத்துவதுதொடர்பாக ஒர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று அங்கேசுட்டிக்காட்டப்பட்டதுஆனால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும்தேர்தல் ஆண்டுகளாகக் காணப்படும் ஓர் அரசியல் பின்னணியில்ஜனாதிபதித் தேர்தலை உடனடுத்து வரக்கூடிய எந்த ஒருதேர்தலிலும் தமது கட்சி சின்னத்தைப் பயன்படுத்தாமல் விடுவதுதொடர்பில் கட்சிகள் அதிகமாக யோசித்தன” என.

ஆக பொதுக்கட்டமைப்பின் விசித்திரம் இப்படித்தானிருக்கிறது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்குத் தாம் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையின்படி, அதற்காக எந்த விட்டுக் கொடுப்பையும் செய்யத் தயாரில்லை. அதாவது அவை தாம் இணைந்து மேற்கொள்ளும் தீர்மானத்துக்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இல்லை. காரணம், அடுத்த தேர்தலிலேயே அவற்றின் அக்கறையுள்ளது. அதனால் அவற்றுக்கு இந்தப் பொதுவேட்பாளர் விடயத்தில் முழுமையான ஈடுபாடில்லை என்பதேயாகும். சில உறுப்பினர்களின் நிர்ப்பந்தம், அரசியற் தடுமாற்றம் போன்றவற்றினாலேயே பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை இவை ஆதரிக்கின்றன. குறிப்பாக ரெலோவுக்குள்ளும் புளொட்டுக்குள்ளும் எதிர்நிலைப்பாடுண்டு. இதை அந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தனிப்படவும் பொதுவெளியிலும் (வினோநோகராதலிங்கம் – ரெலோ) வெளிப்படுத்தி வருகின்றனர்.  இரண்டாவது காரணம், இந்த விளையாட்டுக்காகத் தம்முடைய நீண்டகால அரசியல் நலன்களை அவை இழக்கத் தயாரில்லை என்பதேயாகும்.

இந்த லட்சணத்தில்தான் சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியச் சக்திகளை தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற மாயாவி (குறியீடு!) ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்துத் திரளாகக் கூட்டிக் கட்டுவதைப் பற்றிப் பேசப்படுகிறது. (மேலும் சிரிப்பை அடக்கிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்).

ஆனாலும் பொதுக்கட்டமைப்பிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் தன்னுடைய சின்னத்தைக் கொடுப்பதற்குப் பெருந்தன்மையுடன் முன்வந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அது பொதுச்சபையினரால் ஏற்கப்படவில்லை. (இதற்கான காரணம் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை). இவ்வளவுக்கும் பொதுவேட்பாளருக்கான தகுதியை வழங்கக் கூடியவாறு பொதுக்கட்டமைப்புக்குள்  பதிவு செய்யப்பட்ட கட்சிகள் நான்கு உள்ளன. 

ஆக இவர்களிடம் எந்தத் திரவியங்களுமே இல்லை. விசுவாசமும் தெளிவும் உண்மையும் இல்லை என்பதே நிரூபணம்.  என்பதால்தான் ஒரு வேட்பாளருக்காகத் தமிழரசுக் கட்சியிடம் போகவேண்டியிருந்தது. – அதற்குள்ளிருந்து ஒரு ஆளை எடுக்க வேண்டியேற்பட்டது. 

இதைப் புரிந்து கொண்டோ புரியாமலோ அரியநேந்திரனும் உசாரோடு பொதுவேட்பாளராகத் தன்னுடைய தலையைக் கொடுத்துள்ளார். 

அரியநேத்திரன் தேர்வு செய்யப்பட்டதை ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், சிறிகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சி போன்றவை அவ்வளவாக விரும்பவில்லை. காரணம், முன்பு இந்தக் கட்சிகளையெல்லாம் அரியநேந்திரன் “ஒட்டுக்குழுக்கள், அரசாங்கத்தின் ஆட்கள், துரோகிகள், காட்டிக் கொடுப்போர், தமிழின விரோதிகள், போராட்டத்தை விலை கூறி விற்பவர்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியும் விமர்சித்தும் வந்தவர். இறுதிவரையிலும் (ஏன் இப்போதும் கூட) அப்படியான ஒரு உளநிலையிலேயே இருக்கிறார் அரியநேந்திரன்.

எனினும் ஒரு வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும். இதற்கு மேலும் ஆட்தேடிக் காலத்தை நீடிக்க முடியாது என்ற நிலையில்தான் அவை இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவரை ஆதரிக்கின்றன. 

இதையெல்லாம் ஏற்று அனுசரித்துப் போக வேண்டிய இக்கட்டான நிலை பொதுச் சபைக்கும் பொதுக் கட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கும் வந்து விட்டது.

இப்படிப் பல இடியப்பச் சிக்கல்களுக்கு மத்தியில் பொதுவேட்பாளரைக் கண்டு பிடித்து, வேட்பு மனுத் தாக்கல் செய்தாலும் பிணக்கும் பிரச்சினைகளும் முடியவில்லை. அவை உட்கசப்பையே தந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் வெளிப்பாட்டுக்கு ஒரு சாட்சியமாக – ஒரு பொதுக் குறியீட்டைஏன் தேட வேண்டி வந்ததுஏனென்றால் தமிழ் மக்கள் மத்தியில்கட்சித் தலைவர்கள்நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டுஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒரு புள்ளியில்ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைவர்கள் அநேகமாகஇல்லைதமிழ் மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ்ஒரு பொதுக் கொள்கையின் கீழ்ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைமைகள் இருந்திருந்தால்ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கு தேவையே இருந்திருக்காதுஎனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தேடுவதில் உள்ள சவால்என்னவென்றால்தமிழ் மக்களை ஒரு பொதுக் குடையின் கீழ்ஒன்றிணைக்க வல்ல தலைமைகளுக்கு தட்டுப்பாடு உள்ளதுஎன்பதுதான்” எனப் பொதுச்சபையைச் சேர்ந்த நிலாந்தன் பகிரங்கமாகவே குறிப்பிட்டுள்ளார். 

பொதுக் கட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளுக்கும் அதற்கு வெளியே உள்ள கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் இதைவிட வேறு கௌரவம் வேண்டுமா? நமக்கும் தெரியும் இதுதான் உண்மை நிலவரம் என்று. இதை நாம் ஏற்கனவே பல தடவை சொல்லி விட்டோம். ஆனால், இவர்களையெல்லாம் தலைவர்கள் என்று ஏற்றுக் கொண்ட பொதுச் சபையினர், ஒன்றாகக் கூடிப் பேசி, தேநீர் குடித்து விருந்துண்டு கொண்டே இப்படியொரு விமர்சனத்தை – குற்றச்சாட்டை பொதுவெளியில்  சொல்லியிருப்பதுதான் கேள்வியை எழுப்புகிறது. 

ஆக மொத்தத்தில் பொதுவேட்பாளர் என்ற விடயத்தை தொடக்கத்திலிருந்து தலையில் தூக்கிச் சுமந்து கொண்டிருப்பது பொதுச் சபையினர் என்றே நிரூபிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக இந்தச் சிந்தனையைப் பொதுச் சபைக்குள்ளிருக்கும் சில கருத்துருவாக்கிகள்தான் (மேதாவிகள்) சுமந்து கொண்டிருக்கின்றனர். இப்போது அதை நடைமுறையாக்க முற்படுவதாகச் சொல்கிறார்கள். அதற்காகத் தாம் பட்ட – படுகின்ற சிரமங்களையும் செலுத்துகின்ற உழைப்பையும் பற்றி விளக்குகிறார்கள்.

பொதுவேட்பாளரை ஏற்றிருக்கும் கட்சிகள், வெளியே சொல்கின்ற அளவுக்கு இதில் சீரியஸாகவும் இல்லை. நேர்மையாகவும் இல்லை. இதற்காக உழைப்பதாகவும் இல்லை. இதனால்தான் பொதுவேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யுமிடத்திற் கூட இவர்களில் பலரும் நிற்கவில்லை. அதற்குள் சிங்களத் தரப்பின் ( எதிர்த்தரப்பின்) வேட்பாளரைச் சந்திப்பதற்காகக் கொழும்புக்கு ஓடி விட்டனர் என்று கவலைப்படுகின்றனர் பொதுக்கட்டமைப்பினர். 

தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தியதே எதிர்த்தரப்பினர் மீது நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையில்தான். அப்படியிருக்கும்போது வேட்பு மனுத்தாக்கல் செய்து விட்டு, ரணில், சஜித், அனுர, நாமல் என்று ஓடித்திரிந்தால் மக்கள் எப்படிப் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்வார்கள்? என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர். இதனால்தான் தாம் இந்தச் சந்திப்புகளை நிராகரித்தோம் என்றும் விளக்குகின்றனர். இந்த நியாயம் மதிக்கப்படக் கூடியதே!

இதேவேளை தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயத்தை ஆரம்பித்து வைத்தது தாமே என்று ஈ.பி.ஆர்.எல். எவ் கூறுகிறது. திரு. சுரேஸ் பிரேமச்சந்திரனே இதனை முன்னெடுத்தார் என்கின்றனர் ஈ.பி.ஆர்.எல். எவ்வின் முக்கியஸ்தர்கள். 

தமிழ்ப்பொது வேட்பாளரைப் பற்றிப் பிள்ளையார் சுழி போட்டதே தமது தரப்பு என்கிறது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கி வரும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைக்குழுமம் ஒன்று. வேண்டுமென்றால், எங்களுடைய பத்திரிகையைப் புரட்ப் பாருங்கள். அதற்கான ஆதரமிருக்கும் என்று அந்தத் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. 

இதெல்லாம் ஒருபுறமிருக்க, வேட்பாளரான அரியநேத்திரன் மீது அவருடைய தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளது. கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, கட்சிக்குத் தெரிவிக்காமலே அதனுடைய மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் இப்படிச் செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று ஒரு காலக்கெடுவை விதித்திருக்கிறது தமிழரசுக் கட்சி. அதுவரையிலும் கட்சிச் செயற்பாடுகளில் அரியநேத்திரனுக்கு இடமில்லை.

ஆக, இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள், முரண்பாடுகள், நம்பிக்கையீனங்களின் மத்தியில்தான் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். என்னவோ இதையெல்லாம் பார்க்கும்போது முன்னர் கிராமங்களில் ஆடப்படும் கூத்தில் வருகின்ற பபூன்கள்தான் கண்ணுக்குள் நிற்கின்றனர்.

 

https://arangamnews.com/?p=11104

முன்னணியால் மட்டும் களத்தில் இறங்க முடிவது எப்படி | EETAMIL

3 months ago
முன்னணியால் மட்டும் களத்தில் இறங்க முடிவது எப்படி | EETAMIL

சமகால ஈழத்தமிழர் அரசியயோடு தொடர்புடைய கருத்துப் பகிர்வென்பதால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

ஜனாதிபதி தேர்தல் கள நிலைவரச் சமநிலையை மாற்றுகிறது நாமலின் பிரவேசம்

3 months 1 week ago
12 AUG, 2024 | 11:09 AM
image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

ரணில் விக்கிரமசிங்க முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் அதிகாரத்துக்கு வந்த நேரம் தொடக்கம்  எதிரிகளும்  விமர்சகர்களும் அவரைப்பற்றி பல தவறான கதைகளை கட்டிவிடுவதில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு அஞ்சுகிறார் என்பதும்  அவர் வழமைக்கு மாறான நடவடிக்கைகள் மூலமாக தேர்தலைப்   ஒத்திவைப்பார் என்பதும் அந்த்கதைகளில் ஒன்று.

இந்த போலிக்கதை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி தேர்தல் திகதியை வர்த்தமானியில் வெளியிட்டபோது அம்பலமானது. விக்கிரமசிங்கவே ஒரு சுயேச்சை வேட்பாளராக முதலில் தனது கட்டுப்பணத்தையும் செலுத்தினார். இந்த உண்மை  முகங்கொடுக்க இயலாத அவரது எதிரிகள் தற்போது "பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு முன்னர் அவர் எதையாவது செய்வார்" என்று கூறி ஆறுதல் அடைகிறார்கள்.

இன்னொரு தவறான கதை ரணிலுக்கும் ராஜபக்சாக்களுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. ரணில் முதலில் பிரதமராகவும் பிறகு பதில் ஜனாதிபதியாகவும் அன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார் என்பது நிச்சயமாக உண்மை. கோட்டா பதவியைத் துறந்த பிறகு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களில் 134 பேரினால் ஜனாதிபதியாக தெரிவானார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள். ரணிலின் அமைச்சரவையின் மிகவும் பெரும் எண்ணிக்கையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களே. பிரதானமாக தாமரை மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவின் விளைவாகவே பட்ஜெட்டுகளும் சட்டமூலங்களும் சபையில் நிறைவேறின.

ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவில் தங்கியிருப்பவராக கருதப்பட்ட போதிலும், ஜனாதிபதி விக்கிரமசிங்க எப்போதும் தனது எண்ணப்படி செயற்படுபவராகவே இருந்துவருகிறார். ராஜபக்சாக்களுடன் சுமுகமான உறவுகளை பேணியதுடன் அவர்களின் வேண்டுகோள்களில் சிலவற்றுக்கு விட்டுக்கொடுத்த அதேவேளை, அவர்களிடம் இருந்து ரணில்  மிகவும  உறுதியாக சுதந்திரமானவராகவே இருந்துவந்தார்.

இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து விக்கிரமசிங்க  ராஜபக்சாக்களிடம் இருந்து சுதந்திரமான பொருளாதார பொருளாதார கொள்கை ஒன்றை வகுத்துச் செயற்பட்டார். அவரின் பொருளாதார நடவடிக்கைகளில் பலவற்றை ராஜபக்சாக்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் தயக்கத்துடன் ஒத்துப்போனார்கள். ராஜபக்சாக்களுக்கு ரணில் எந்தளவுக்கு தேவையோ அதேயளவுக்கு ரணிலுக்கு ராஜபக்சாக்கள் தேவைப்பட்டதே இதற்கு காரணமாகும்.

'ரணில் ராஜபக்ச' 

உண்மைநிலை இவ்வாறிருந்த போதிலும்  எதிரிகள் அவரை ராஜபக்சாக்களின் ஒரு உருவாக்கம், பொம்மை அல்லது கையாள் என்று தொடர்ச்சியாக தாக்கிப்பேசினர். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் உருவாக்கப்பட்ட ' ரணில் ராஜபக்ச' என்ற பதத்தை அருவருக்கத்தக்க அளவுக்கு பலரும் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தனர்.

விக்கிரமசிங்க ராஜபக்சாக்களுடன் அணிசேர்ந்து நிற்கிறார் என்ற அரசியல் மாயை ஐக்கிய மக்கள் சக்தியின் பிடிக்குள் தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு சஜித் பிரேமதாசவின் கைகளில் ஒரு வலிமையான கருவியாக இருந்து வந்திருக்கிறது. தவறாக உருவகிக்கப்பட்ட ரணில் - ராஜபக்ச இணைப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன்  மீண்டும் இணைவதை தடுக்கும் இரு பிரதான காரணங்களில் ஒன்று ஒன்றாகும். ரணில் பொதுஜன பெரமுனவின் அனுசரணையிலான ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படப்போகிறார் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.

தங்களது தாய்க்கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் மீண்டும் ஐக்கியப்பட  தயங்குவதற்கு இரண்டாவது காரணம் 2024 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு மகத்தான ஒரு வெற்றி கிடைக்கப்போகிறது என்று எதிர்வு கூறும் புதிரான ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பாகும்.

ராஜபக்சாக்களுடனான ரணிலின் உறவுமுறை பற்றிய தவறான கதை அண்மைய நிகழ்வுகளினால் தற்போது  நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் எனது கட்டுரையில் விரிவாக கூறப்பட்டதைப் போன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு அளிப்பதில்லை என்று பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு தீர்மானித்திருக்கிறது.

தங்களது சொந்தத்தில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் அந்த கட்சிக்கும் ரணிலுக்கும் இடையிலான பிளவை மேலும் உறுதிப் படுத்தியிருக்கிறது. நீண்டநாட்களாக முன்னெடுக்கப்பட்டு  வந்த பொய்ப் பிரசாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டு  விட்டன . ஆனால் இதை ஜீரணிக்க முடியாத ரணில் விரோத சக்திகள் இருக்கின்றன. அதனாால் இவையெல்லாம் ஒரு நாடகம் என்றும் மிக விரைவில் ராஜபக்சாக்களும் ரணிலும் மீண்டும் இணைவார்கள் என்று இந்த பிரிவினர் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

பொதுஜன வேட்பாளர் 

இந்த அபத்தப் பிரசாரம் கூட உண்மையான கள நிலைவரங்களினால் இப்போது மறுதலிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வாரம் எனது கட்டுரையில் கூறியதைப் போன்று, விக்கிரமசிங்கவை ஆதரி்காமல் கட்சியின் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பொதுஜன பெரமுன எடுத்த உத்தியோகபூர்வ தீர்மானம் தாமரை மொட்டை  மீது மிகவும் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உட்பட நூறுக்கும் அதிகமான பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உத்தரவையும் மீறி ரணிலுக்கு ஆதரலளிப்பதற்கு உறுதி பூண்டிருக்கிறார்கள். மேலும் பொதுஜன பெரமுனவின் பல மாவட்ட குழுக்களும் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பொதுஜன பெரமுனவின  ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் மூலமாக நிலைவரம் மேலும் குழப்பமான மாறியிருக்கிறது. கசீனோ உரிமையாளரும் பெரிய தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்கப்படவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் தனிப்பட்ட காரணங்களைக் கூறி அவர் பின்வாங்கிவிட்டார். அதற்கு பிறகு  மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின  ஜனாதிபதி வேட்பாளராக முறைப்படி நியமிக்கப்பட்டார்.

நாமல் ராஜபக்சவின் பிரவேசத்தை அடுத்து 2024 ஜனாதிபதி தேர்தலின் களநிலைவரத்தின் அரசியல் சமநிலை மாறத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்க அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களையும் ஊடக நிறுவனங்களின் உயரதிகாரிகளையும் சந்தித்தபோது அவரிடம் பல கேள்விகள் தொடுக்கப்பட்டன.' தமிழன் ' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா பின்வரும் கேள்வியை ஜனாதிபதியிடம் கேட்டார்.

கேள்வி - தம்மிக்க பெரேரா ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொண்டதையடுத்து ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் உங்களை ஆதரிக்கும் நிலையில் நாமல் ராஜபக்சவிடம் இருந்து ஒரு வலிமையான சவாலை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? 

 ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒரு கணம்  யோசித்துவிட்டு பின்வருமாறு பதிலளித்தார்.

"போட்டி எத்தகைய தன்மையானதாக இருக்கும் என்று என்னால்  எதிர்வு கூறமுடியாது. ஒரு போட்டியில் ஈடுபடுவது அல்ல,  நாட்டை எவ்வாறு எம்மால் முன்னேற்ற முன்னேற்றலாம் என்பதை மக்களுக்கு காட்டுவதும் மக்களுக்கு எனது கொள்கைளை முன்வைப்பதுமே  எனது இலக்கு. எனது நோக்கை நீங்கள் இணங்கிக் கொண்டால் எனக்கு வாக்களிக்கலாம். மற்றையவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி என்பது பற்றி நான் கவனம் செலுத்தவில்லை. நாமல் வரவிரும்பினால்  எனக்கு ஆட்சேபனை இல்லை. உண்மையில் அவர் தனது செய்தியை தெளிவாகக் கூறவேண்டும்.

"நாமல் ராஜபக்சவும் பொதுஜன பெரமுனவும் பாராளுமனனறத்தில் நடைபெற்ற ஜனாதிபநி தெரிவில் என்னை ஆதரித்தார்கள். அதற்காக நான்  அவர்களுக்கு  நன்றியுடையவனாக இரு்கிறேன். கடந்த இரு வருடங்களாக என்னுடன் சேர்ந்து பணியாற்ற  அவர்கள் இணங்கினார்கள். அந்த காலகட்டம் இப்போது கடந்துவிட்டது.

"ஒரு வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது ஒரு வேட்பாளரை நியமிப்பதா என்பது தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை  தீர்மானிப்பது இப்போது அவரைப் பொறுத்தது. தனது யோசனைகளை நாட்டுக்கு முன்வைப்பது அவரது பொறுப்பு.

"இது எனது தனிப்பட்ட போட்டியல்ல. தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பது மக்களைப் பொறுத்தது. அவர்கள் விரும்பினால் எனது செயற்திட்டத்தை ஆதரித்து அதன்படி எனக்கு வாக்களிக்கலாம். அல்லது இன்னொரு வேட்பாளரை ஆதரிக்கலாம்."

சினேகபூர்வ முரண்பாடுகள்

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பதில் நழுவல் தன்மை வாய்ந்ததாக தோன்றினாலும் கூட 2022ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டு பொருளாதார நெருக்கடியின் சவாலை ஏற்றுக்கொண்டதில் உள்ள அவரின் அரசியல் தத்துவத்தின் உட்கருத்தை பிரதிபலிக்கிறது. ரணிலின் கருத்துக் கோணத்தில் பொதுஜன பெலமுனவுடன் அவருக்கு  இருக்கும் வேறுபாடுகள் சினேகபூர்வமானவையும் குறைந்தளவு முரண்பாடுகளைக் கொண்டவையுமாகும்.

கடந்த இரு வருடங்களில் ரணிலின் ஜனாதிபதி பதவி உண்மையில்  பொதுஜன பெரமுனவுடனான ஒரு கூட்டுப் பங்காண்மையாகும். ரணிலுடன் மோதல் தன்மையான போக்கு ஒன்றைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக அவரின் சாதனையில் தங்களுக்கும் பங்கிருக்கிறது உரிமைகொண்டாடி அவருக்கு ஆதரவாக நடந்துகொண்டிருந்தால் அது பொதுஜன பெரமுனவின் நலன்களுக்கு உகந்ததாக இருந்திருக்கும். நாமலின் நடவடிக்கைகளில் தவறானவை என்று தான் கருதுகின்றவைக்காக அவரை தனது பதிலில்  சற்று கடிந்துகொண்ட ரணில் நேரடியாக விமர்சிப்பதை சாதுரியமாக தவிர்த்துக்கொண்டார்.

பொதுவில் பொதுஜன பெரமுனவுக்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுக்கு முக்கியமானவையாக இருப்பவை வேறு விடயங்களாகும். தாஙகள் அலட்சியப்படுத்தப்பட்டதால் ராஜபக்சாக்கள் சீற்றமடைந்தனர். முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும், தினேஷ் குணவர்தனவுக்கு பதிலாக நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், எதிர்கால அரசாங்கம் ஒன்றில் தாமரை மொட்டு கட்சிக்கு அமமைச்சுப் பதவிகளில் பெரும்பங்கை வழங்க வேண்டும் என்பன போன்ற தக்களின் கோராக்கைகளுக்கு இணங்கவில்லை என்பதால் ரணில் மீது பசிலுக்கும் நாமலுக்கும் கடுமையான எரிச்சல்.

ஜனாதிபதி தொடர்பில் புதிய யதார்த்தநிலையை எதிர்நோக்கியபோது ராஜபக்சாக்கள் கடுமையான கோபமடைந்தனர். அமைச்சர்கள், இராஜாங்க  அமைச்சர்கள் உட்பட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர் தலைமைத்துவத்தை அலட்சியம் செய்துகொண்டு  ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

பரிதாபமான நிலைவரம்

இப்போது பொதுஜன பெரமுனவின் கட்சிக் கட்மைப்பின் பல மாவட்ட குழுக்களும் ரணிலுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கி்ன்றன. ராஜபக்சாக்கள் தாங்கள் தாபித்த கட்சிக்குள் கட்டமைப்பு அதிகாரத்தை மாத்திரம் தக்கவைத்துக் கொண்டிருக்கிற அளவுக்கு அவர்கள் ஒரு பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.  உறுப்பினர்களில் கணிசமான ஒரு பிரிவினர் ரணிலின் பக்கத்துக்கு சென்று விட்டதால் கட்சியின் செயற்பாட்டு அதிகாரம் கடுமையாக அரித்தெடுக்கப்பட்டுவிட்டது.

அதனால் நாமல் ராஜபக்ச எதிர்நோக்கும் சவால் விசித்திரமான ஒன்று. அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் போவதில்லை. தனது குடும்பத்தின் தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கே கூடுதலான அளவுக்கு மககள் ஆதரவு இருக்கிறது என்றும் ரணில் ஆதரவாளர்களாக மாறி துரோகம் செய்துவிட்ட பாராளுமன்ற உறுபாபினர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றும் காட்டுவதே நாமலின் குறிக்கோள்.

அதனால் பொதுஜன பெரமுவில் இருந்து பிரிந்து  விக்கிரமசிங்கவின் பக்கத்துக்கு சென்றவர்களினால்  திரட்டப்படக்கூடிய வாக்குகள் தாமரை மொட்டினால் பெறக்கூடிய வாக்குகளை விடவும் பெருமளவுக்கு குறைந்ததாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு நிலை ஏற்படுமானால் ரணில் தோல்வியடையும் நிலை உருவாகும். ஆனால் அது குறித்து  ராஜபக்சாக்கள் கவலைப்படுவா்கள் என்று தோன்றவில்லை. ராஜபக்சாக்களை பொதுத்தவரை நாமல் வெற்றிபெறுவதை விடவும் ரணில் தோற்றுப்போவதே மிகவும் முக்கியமானது.  

"சஜித் ராஜபக்ச"

விக்கிரமசிங்க மீதான வெறுப்பு இப்போது நாமல் ராஜபக்சவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் பொதுவானதாக இருக்கிறது. இரு்முனானாள் பிரதமர்களளினதும் ஜனாதிபதிகளினதும் இரு மகன்கள் தங்களது சொந்த வெற்றிகளையும் விட ரணிலின் தோல்வியில் குதூகலிப்பார்கள்.  சஜித்துக்கும் நாமலுக்கும் ஓத்த நலன்கள் இல்லாவிட்டாலும் கூட இது விடயத்தில் அவர்களுக்கு இடையிலான நலன்கள் சங்கமிக்கின்றன. இந்த  பின்னணியில் " சஜித் ராஜபக்ச " என்ற பதம்  பிரபல்யமாகிறது.

சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்சவும்கும் இடையிலான ஒரு  அரசியல் " புரிந்துணர்வு " பற்றிய பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. விக்கிரமசிங்கவை " ரணில் ராஜபக்ச " என்று குறிப்பிட்டதைப் போன்று பிரேமதாச " சஜித் ராஜபக்ச " என்று குறிப்பிடப்படுகின்றார். இந்த முழுப்பிரசாரமும் ரணில் ஆதரவு இயந்திரத்தின் ஒரு  புத்தாக்கமாக தோன்றுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ். கென்னடி  கொல்லப்பட்டபோது கறுப்பின தலைவரான மல்கம் எக்ஸ் " கோழிக்குஞ்சுகள் கூரையில் ஏறிக் கூவுவதற்கு வந்துவிட்டன "    என்று கூறினார். ரணிலுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களினால் உருவாக்கப்பட்ட தவறான கதை இப்போது திரும்பிவந்து அவர்களைத் தாக்குகின்ற  தற்போதைய பின்புலத்தில் அந்த பிரபல்யமான கூற்று நினைவுக்கு வருகிறது. ரணில் ராஜபக்ச தேய்ந்து சஜித் ராஜபக்ச உரத்துப் பேசப்படுகிறார். ஒருவருக்கு ஒரு சூழ்நிலையில் பொருத்தமாக அமைவது இன்னெருவருக்கு வேறு ஒரு சூழ்நிலையில் பொருத்தமாக இருக்கும்.

தம்மிக்க பெரேரா

தொழிலதிபர் தம்மிக்க பெரேராவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாராகப்போகிறார் பேசப்பட்டது.ரணிலுக்கும் ராஜபக்சாக்களுக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்படத்தொடங்கிய நேரத்தில் இருந்து பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.  பசிலும் நாமலும் தம்மிக்க பெரேராவை விரும்பினர்.  அவர் இணங்கவில்லையானால் தான் களத்தில் இறங்கத் தயாராக இருப்பதாக நாமல் கூறினார். 

பொதுஜன பெரமுனவின் ஜூலை 29 அரசியல் குழு கூட்டத்துக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. தம்மிக்க பெரேராவே கட்சியின் தெரிவாக இருப்பார் வெளிப்படையாக தெரிந்தது. பொதுஜன பெரமுனவின் வாக்குகளுக்கு புறம்பாக தம்மிக்க தனது சொந்தத்தில் பெருமளவு வாக்குகளை திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தம்மிக்க தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி துரிதமாக ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். சுவரொட்டிகள் அச்சிடப்பட்டன. பிரசார கீதமும் இயற்றப்பட்டது. பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தான் நியமிக்கப்படும் அறிவிப்பு ஆகஸ்ட் 6  நெலும் பொக்குணவில் வைத்து செய்யப்படவேண்டும் என்று  சோதிடரின் ஆலோசனையின் பிரகாரம் தம்மிக்க விரும்பினார். முன்னதாக அந்த அறிவிப்பு ஆகஸ்ட் 7 செய்யப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன விரும்பியது.

திடீரென்று எல்லாமே மாறியது.  தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தன்னால் இயலாமல் இருப்பதாக தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். என்ன நடந்தது என்பதைப் பற்றி பெருமளவு ஊகங்கள் கிளம்பின. அவரின் மனமாற்றத்துக்கு சாத்தியமான பல காரணங்கள் குறித்து பொதுவெளியில் பேசப்பட்டன.

ஒரு மருத்துவ அவசரநிலை காரணமாக பெரேராவின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாவும் அவரின் மனமாற்றத்துக்கு அதுவே காரணம் என்றும் கூறப்பட்டது. அவர் போட்டியிடுவதை மனைவியும் பிள்ளைகளும் கடுமையாக ஆட்சேபித்ததாகவும் கூட கூறப்பட்டது.

தம்மிக்கவின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை முன்னெடுக்கவேணடும் என்று வர்த்தக கூட்டாளிகள் கூறிய கடுமையான  ஆலோசனை அவர்  பின்வாங்கியதற்கு  சாத்தியமான காரணமாக இருக்கக்கூடும். பொதுஜன பெரமுனவின் முக்கியமான உறுப்பினர்கள் பெருமளவில் கட்சியை விட்டு வெளியேறியதால் தம்மிக்க கலங்கிப் போய்விட்டார் அவருக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் அபிப்பிராயப்பட்டன. பலவீனப்பட்டுவிட்ட பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று பயந்து அவர் பின்வாங்கிவிட்டார்.

நாமல் ராஜபக்சவின் பிரவேசம்

காரணம் எதுவாக இருந்தாலும், தம்மிக்க பெரேராவின் வெளியேற்றம் நாமல் ராஜபக்சவின் பிரவேசத்துக்கு வழிவகுத்தது. அவர் இப்போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர். விக்கிரமசிங்க மீதான வெறுப்பு அவரை எதிர்ப்பதில் நாமல் மீது பெருமளவுக்கு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்கிற அதேவேளை மெதமுலான முடிக்குரிய இளவரசருக்கு இன்னொரு காரணமும் ஊக்கத்தைக் கொடுக்கிறது.

பொதுஜன பெரமுன வலிமையான ஒரு அரசியல் சக்தியாக தொடர்ந்தும் இருக்கவேண்டுமாக இருந்தால் கட்சி 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாமல் மெய்யாகவே நம்புகிறார். விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன ஆதரித்தால் கட்சிக்கும் தனக்கும் அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் என்று அவர் உணர்ந்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவேண்டியது இப்போது நாமல் ராஜபக்சவின் விதியாகிப் போய்விட்டது.அது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் ஆகஸ்ட் 7 ஒரு சுபநேரத்தில் செய்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் மிகவும் எளிமையான முறையில் அந்த வரலாற்று முக்கியத்துவ நிகழ்வு நடந்தது.

சாகர காரியவாசத்துடன் கைகுலுக்கிய நாமல் தந்தையார் மகிந்த மற்றும் சிறிய தந்தையார் பசில் முன்னிலையிலும் தாழ்பணிந்து அவர்களது ஆசீர்வாதங்களை (முத்தங்களை) பெற்றுக் கொண்டார். அதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி உறுப்பினர்கள் நாமலைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். நாமலின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.

அந்த நிகழ்வில் நாமலின் பெரிய தந்தையார் சமாலும் இன்னொரு சிறிய தந்தையார் கோட்டாபயவும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை அவரின் மைத்துனர் நிபுன ரணவக்க நிகழ்வில் காணப்பட்டார். நாமலின் ஒன்றுவிட்ட சகோதரர்  மொனராகலை பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ச  அங்கு வரவில்லை. நாமலின் தாயார் சிராந்தியும் சகோதரர்கள் யோஷிதவும் றோஹிதவும் கூட அங்கு காணப்படவில்லை.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் வருகை தராமல் இருந்தது குறித்து பலவிதமான கதைகள் கூறப்படுகின்றன. பெரிய தந்தையார் சமால் ராஜபக்சவும் சகோதரர்கள் யோஷிதவும் றோஹிதவும் பொதுஜன பெரமுன ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிக்கவேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் மீதான நாமலின் பகைமையானால் அவர்கள் குழப்பத்துக்கு உள்ளாகியிருப்தாகவும் கூறப்படுகின்றது. ஆனால் அந்த நிகழ்வு ஒரு குடும்ப விவகாரமாக அல்லாமல் கட்சி விவகாரமாகவே அமையவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என்று நாமலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. எதுவாக இருந்தாலும் தஙமகளுக்குள் என்னதான் சச்சரவுகள் இருந்தாலும் ”“வெளியாருக்கு" எதிராக ராஜபகசாக்கள் எப்போதும் நெருக்கமாக அணி சேர்ந்து விடுவார்கள் என்பது நன்கு தெரிந்ததே.

வரலாற்றின் குப்பைக்கூடை

இந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பது நாமல் ராஜபக்சவுக்கு தெரியும். ஆனால் கணிசமான வாக்குகளைப் பெற்று ராஜபக்சாக்கள இன்னமும் வரலாற்றின் கூப்பைக்கூடைக்குள் வீசப்படவில்லை என்று உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே அவரது நோக்கம். தனது தந்தையார் முதுமையடைந்து சுகவீனமுற்றிருக்கின்ற போதிலும் அவரது வசீகரமும் செல்வாக்கும் இன்னமும் சுருங்கிவிடவில்லை என்று  காட்ட நாமல் விரும்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக பொதுஜன முக்கியஸ்தர்களின் வெளியேற்றம் கட்சியை பலிவீனப்படுத்திவிடவில்லை என்றும் அது இன்னமும் மக்கள் மத்தியில் வலுவுடைய ஒரு  சக்தியாக இருக்கிறது என்றும் காட்டுவதற்கு நாமல் விரும்புகிறார்.

ஒரு பருமளவு வாக்குகளை திரட்டுவதில் நாமல் வெற்றி பெறுவாரேயானால், பொதுஜன பெரமுனவுக்குள் தனது தலைமைத்துவ நிலையை அவர் வலுப்படுத்துவதற்கு அது உதவும்.  பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்களில்  பெரும்பாலானவர்கள் ரணில் பக்கம் சென்றுவிட்டதால் இனிமேல்  நாமலின் அதிகாரம் பெருமளவுக்கு மேம்படுத்தப்படும்.

ஜனாதிபதி தன்னால் பெறப்படக்கூடிய வாக்குகளை ஒரு தளமாகக் கொண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நாமல் கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி ஒரு பெரும் எண்ணிக்கையான ஆசனங்களைை பெறக்கூடியதாகவும் இருக்கும். அது அவர் கூட்டரசாங்கம் ஒன்றின் பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக வருவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் கூடும். பிறகு 2029 ஜனாதிபதி தேர்தலில் நாமல் போட்டியிட்டு வெற்றி பெறவும் உதவலாம்.

உண்மையில் அவர்களின் திட்டப்படி  நடந்தால் எல்லாமே நன்றாக இருக்கும். ஆனால் எலியும் மனிதர்களும் சிறந்த திட்டங்கள் அடிக்கடி குழம்பிப்பிப் போய்விடுகின்றன என்று ஸ்கொட்லாந்து கவிஞர் றொபேர்ட் பேர்ண்ஸ் கூறியது நினைவுக்கு வருகிறது. 2024 ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச பரிதாபத்துக்குரிய வகையில் வாக்குகளை எடுத்தால் என்ன நடக்கும்?  இதிகாசத்தில் வரும் பீனிக்ஸ் பறவை போன்று சாம்பலில் இருந்து மீண்டும் எழுவதற்கு ரணிலின் துணிச்சலும் மீண்டெழும் ஆற்றலும் நாமலுக்கு இருக்கிறதா?

https://www.virakesari.lk/article/190870

ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் அரசியலில் தலைதூக்க முயலும் ராஜபக்ஷ குடும்பம் - மிகக் கடினமான சூழலில் நாமல்

3 months 1 week ago

Published By: RAJEEBAN   12 AUG, 2024 | 03:39 PM

image

https://www.scmp.com/

Dimuthu Attanayake

தமிழில் ரஜீபன் 

இலங்கை 2022ம் ஆண்டின் மிகமோசமான நாட்டை முடக்கிய பொருளாதார நெருக்கடியின் பின்னர் முதலாவது தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்வேளையில் ராஜபக்ச குடும்பம் அதன் அரசியல் வாரிசினை அறிவித்துள்ளது.

பல அரசியல் ஆய்வாளர்கள் இதனை அந்த குடும்பத்தின் அரசியல் மறுபிரவேச முயற்சியாக கருதுகின்றனர்.

இந்த வாரம் ராஜபக்சாக்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன யுத்தகால தலைவர் மகிந்த ராஜபக்சவின் 38 வயது மகன் நாமல் ராஜபக்சவை செப்டம்பர் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பாளராக அறிவித்தது.

2022 போராட்டக்காரர்கள் கோரிய இளம் தலைவர் என அவரது தந்தையால் வர்ணிக்கப்பட்ட நாமல் ராஜபக்சவிற்கு மிகவும் கடினமான ஒரு பணி காத்திருக்கின்றது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

aragalaya1.jpg

பிரிவினைவாத விடுதலைப்புலிகளுடனான மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இந்த குடும்பம் முன்னணிக்கு வந்தது – பிரபலமானது.

2009 இல் இலங்கை இராணுவத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் யுத்தவீரர்கள் என அழைக்கப்பட்டனர் குறிப்பாக இலங்கையின் பெரும்பான்மை சமூகத்தினால்.

இரண்டு தசாப்தங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்திய பின்னர் இந்த பரம்பரை நாட்டின் பொருளாதார நெருக்கடியால் உருவான பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து தனது வீழ்ச்சியை சந்தித்தது.

2022 மே மாதம் மூன்றாவது தடவையாக பிரதமராக பதவிவகித்த காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ச தனது பதவியை துறந்துவிட்டு இலங்கையின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்படை தளத்திற்கு தப்பியோடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

தாங்க முடியாத வாழ்க்கை செலவு அத்தியாவசிய பொருட்களிற்கான தட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரது சகோதரர் நாட்டிலிருந்து தப்பியோடி பின்னர் இரண்டு மாதங்களின் பின்னர்  பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அந்த நெருக்கடி காரணமாக விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சராக பதவிவகித்த நாமல் ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச கட்டிடங்களிற்குள் நுழைந்தனர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தை ஆக்கிரமித்தனர், ஜனாதிபதி பிரதமரினது இல்லங்களையும் ஆக்கிரமித்தனர், அவர்கள் ஜனாதிபதியின் நீச்சல் தடாகத்தில் நீந்தினர், அவரது கட்டிலில் உறங்கினர் அவரது பியானோவை இசைத்தனர்.

2023 இல் வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய இலங்கையின் உயர்நீதிமன்றம், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களே காரணம் என தெரிவித்தது.

தற்போது நாமல் ராஜபக்ச தனது முதலாவது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கின்றார், இலங்கையின் அரசியலின் முன்னரங்குகளிற்கு திரும்புவது குறித்த ஆசையை ராஜபக்ச பரம்பரை கொண்டுள்ளது என்கின்றனர் பல ஆய்வாளர்கள். 

நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அவர்களிற்கு அரசியல் எதிர்காலம் உள்ளதை வெளிப்படுத்துகின்றது என்கின்றார் கொழும்பை தளமாக கொண்ட மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து.

எனினும் 2024 ஜனாதிபதி தேர்தலை விட அடுத்த ஜனாதிபதி தேர்தலே நாமல்ராஜபக்சவின் இலக்கு என்கின்றார் அவர்.

ஒரு ராஜபக்ச வேட்பாளர் போட்டியிடவில்லை என்றால் , அவர்களின் முழு பாரம்பரியம் மற்றும் வம்சத்தை உருவாக்கும் முயற்சிகள் முழுமையாக தோல்வியடையும் என்கின்றார் பாக்கியசோதி சரவணமுத்து.

2024 ஜனாதிபதி தேர்தலில் தன்னால் சிறப்பாக செயற்படமுடியும், தனது குடும்பத்திற்கு இன்னமும் ஆதரவுள்ளது என்பதை காண்பிப்பதற்காக நாமல் ராஜபக்ச ஒரு கடினமான சவாலை எதிர்கொள்கின்றார் என பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிடுகின்றார்.

gotabaya-rajapaksa-with-mahinda-rajapaks

ராஜபக்ச ஆட்சியை வீழ்த்திய ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான மெலானி குணதிலக இலங்கையர்கள் இந்த பரம்பரைக்கு எதிராக தொடர்ந்தும் போராடவேண்டும் என அழைப்பு விடுக்கின்றார்.

ஆர்ப்பாட்டங்களின் போது தாங்கள் எதற்காக போராடினார்கள் என்பதை இலங்கையர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன், என தெரிவிக்கும் அவர் இந்த முறையும் அவர்கள் ராஜபக்சாக்களை  தோற்கடிப்பார்கள் இந்த முறை மாத்திரமல்ல எதிர்காலத்திலும் தோற்கடிப்பார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.

ராஜபக்சாக்கள் தங்கள் வலுவை காண்பிக்க முயல்கின்றனர், தங்களிற்கு என்ன வாய்ப்புகள் உள்ளது என பார்க்க விரும்புகின்றனர் என்கின்றார் அவர்.

மகிந்த ராஜபக்ச நாமல் ராஜபக்சவிற்கு அவர்களது பரம்பரைக்கு  ஆதரவு வழங்கும் இலங்கையர் குழுவொன்று காணப்படுகின்ற அதேவேளை அவர்கள் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பார்களா என்பது உறுதியாக தெரியவில்லை என்கின்றார் பாக்கியசோதி சரவணமுத்து.

இளைய ராஜபக்சவிடம் அவரது தந்தையின் கவர்ச்சி இல்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

நாமல் ராஜபக்சவின் அரசியல் திறமையும் கட்சியின் மீள எழும் திறனும் கடுமையாக சோதிக்கப்படும் என்கின்றார் சிங்கப்பூர் பல்கலைககழகத்தை சேர்ந்த அரசியல் விஞ்ஞானி ராஜ்னி கமகே.

இலங்கையர்களை கவர்வதற்காக 78 வயதான மகிந்த ராஜபக்சவை அவரது பரம்பரையை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதே அவரது வயதை கருத்தில் கொள்ளும்போது மிகவும் முக்கியமான பலவீனம் எனவும் அவ தெரிவிக்கின்றார்.

ராஜபக்ச வம்சாவளியின் அரசியல் எதிர்காலத்திற்காக கட்சியில் உள்ள முக்கிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கீழ் மட்டத்திலிருந்து மீண்டும் கட்சியை கட்டியெழுப்பவேண்டும் என்கின்றார் அவர்.

https://www.virakesari.lk/article/190855

மாகாணசபைத் தேர்தல் தனிநபர் பிரேரணையும் தனிநபர்களின் நிகழ்ச்சித் திட்டங்களும்

3 months 1 week ago
மாகாணசபைத் தேர்தல் தனிநபர் பிரேரணையும் தனிநபர்களின் நிகழ்ச்சித் திட்டங்களும்

Digital News Team

2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில்  ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தில் அந்நேரத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதிகரித்துவந்த ஆதரவினாலும் தமிழரசுக்கட்சி மீதான மக்களின் அதிருப்தியினாலும் வடக்கு மாகாணசபையை இழந்துவிடுவோமென்று சுமந்திரன் தரப்புக்கு ஏற்பட்ட பயத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட விளைவே மேற்குறித்த சட்டமாகும்.

                                                                                                         கந்தையா அருந்தவபாலன் 

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்குத் தேவையான சட்டமூலமொன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் 2019 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை மீண்டும் தூசிதட்டி எடுக்கப்பட்டு சென்றவாரம் இரண்டாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்பிரேரணை தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் கருத்துரைகளைத் தொடர்ந்து சபாநாயகரினால் அது சட்டவாக்கக் குழுவின் பரிந்துரைகளுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் அது மூன்றாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னரே சட்ட வலுவைப் பெறும். அது எப்போது சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்பதற்கும், நிறைவேற்றப்பட்டாலும் அதற்கமைய உடனடியாகத் தேர்தல் நடக்குமென்பதற்கும் எத்தகைய உத்தரவாதமும் இலங்கை அரசியலமைப்பில் இல்லை. அப்படியிருக்கும்போது வேட்பு மனுக்கள் கோரப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலையே கிடப்பில் போட்டுவிட்டு ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கும் இந்நேரத்தில் மிக அவசர அவசரமாக இந்த தனிநபர் பிரேரணை இரண்டாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டதான ஒருதொனியில் அதிகளவு முக்கியப்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன? உண்மையில் இது  நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பற்றா அல்லது ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் தங்கள் தனிப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான ஒருசிலரின் முன்னகர்வா?

இலங்கையில் நீடித்து வந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கமைய இலங்கையின் அரசியலமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், மாகாணசபைத் தேர்தல் சட்டமும் உருவாக்கப்பட்டது . இம்மாகாண சபைகள் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் உருவாக்கப்பட்டதுடன், வடக்கும் கிழக்கும் தற்காலிக இணைப்பினடிப்படையில் ஒரே மாகாணமாக  கருதப்பட்டு 1988 இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990 இல் இந்தியப் படையின் வெளியேற்றத்துடன் வடக்கு, கிழக்கு மாகாண சபையின்  முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் வெளியேற அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச அச்சபையைக் கலைத்தார். பின்னர் 2006 இல் ஜே.வி. பி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டு தனித்தனி மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கு முதலாவது தேர்தல் 2008 இலும் இரண்டாவது தேர்தல் 2012 இலும் நடத்தப்பட்டபோதும் வடக்கு மாகாண சபைக்கு 2013இல் மட்டும் ஒரேயொரு தேர்தல் நடத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடைமுறையிலிருந்த மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது. தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான வழிகளைத் திறப்பதற்கு  இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட சட்டத்தினடிப்படையில் புதிய தேர்தல் சட்டமொன்றைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் அப்புதிய சட்டத்திற்கமைய தேர்தலை நடத்துவது. இது உடனடிச் சாத்தியமான ஒன்றன்று.

ranil-1.jpg

இரண்டாவது பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தை  நாடாளுமன்றம் வழங்குவதன் மூலம் தேர்தலை நடத்துவது. இது சாதாரண பெரும்பானமையுடன் நிறைவேற்றக்கூடிய ஒன்றாகும். இதற்காகவே சுமந்திரனால் தனிநபர் பிரேரணை ஒன்று 2019 இல் முன்வைக்கப்பட்டது. அதுவே சென்றவாரத்தில் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டது.

இலங்கையில் அரசியலமைக்குப்புக்கான சில திருத்தங்கள் உட்பட பல சட்டங்கள் நாட்டின், மக்களின் நலனைவிட ஆட்சியாளரின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டமை நாடறிந்த உண்மை. இந்த வகையில் 2017ஆம் ஆண்டு மாகாண சபைகளைக் கலைத்தல், அதன் காலத்தை நீடித்தல், அதனது அதிகாரங்களைக் கையகப்படுத்தல்  உட்பட பல விடயங்களை உள்ளடக்கி அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தமாக ஒன்றைக் கொண்டுவருவதற்கான முன்னெடுப்பொன்றை அப்போதைய நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவர முயற்சித்தது. இதற்கான முதன்மை நோக்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாதிருப்பது அல்லது விரும்பியவாறு காலந்தாழ்த்துவதாகும். காரணம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்து வந்ததனால் தேர்தல் ஒன்றின் மூலம் மாகாண சபைகள் எதிர்க்கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு சென்றுவிடும் என்ற பயம். ஆனால் அதனை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அவர்கள் விரும்பியதுபோல அதனை இலகுவில்  செய்ய முடியவில்லை. எனவே மாகாணசபைத் தேர்தல்களைத் தவிர்க்கும் ஒரு உபாயமாகவே ‘ மாகாண சபைத்தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ அப்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளைச் சுட்டிக்காட்டி அந்நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உட்பட மனித உரிமை அமைப்புக்கள் பலவும் தமது ஆட்சேபனைகள் தெரிவித்திருந்த போதும் நல்லாட்சி அரசாங்கம் குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதனை எள்ளளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. காரணம் அந்நேரத்தில் ரணிலுக்கு மட்டுமல்ல நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தியோகப்பற்றற்ற பிரதமர் தானே என தனது தொண்டர்களுக்கு கூறிந்திரிந்த சுமந்திரனுக்கும் அது தேவைப்பட்டிருந்தது.

ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பண்புகளில் பிரதானமாக இருப்பது உரியகாலங்களில் நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்தி மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்ப்பது. ஆனால் இலங்கையில் பல சட்டங்கள் மட்டுமன்றி பல தேர்தல்களும்கூட ஆட்சியாளர்களின் நலன்களைப் பேணும்வகையில் கையாளப்பட்டு வருகின்றன. தேர்தலைப் பிற்போடுதல், உரியகாலத்துக்கு முன்னரே நடத்துதல், வேறுமுறைகளைக் கையாளுதல் மூலம் இவை இடம்பெற்று வருகின்றன. தங்களின் இத்தகைய செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் ஆயிரம் காரணங்களை கைவசம் வைத்திருப்பார்கள். இதற்கான அண்மிய உதாரணமாக இருப்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பது ஆகும். வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு சுமார் 70% ஆன தேர்தல் பணிகள் நிறைவடைந்துவிட்ட ஒரு நிலையில் போதிய நிதியில்லை என்று கூறி நிதியமைச்சையும் தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி அத்தேர்தலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். அது மட்டுமன்றி ஜனாதிபதித் தேர்தலையும் தள்ளிவைப்பதற்கான சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அரசியலமைப்பும், அதற்கான உச்ச நீதிமன்றத்தின் சரியான பொருட்கோடலும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆட்சியைக் கொண்டு செல்வதில் சிக்கல்நிலை தோன்றும்போது அல்லது தேர்தலை நடத்த முடியாத இக்கட்டான ஒரு நிலை காணப்படும்போது நாட்டு நலன்கருதி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முற்கூட்டித் தேர்தலை நடத்துவது அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு அதை ஒத்திவைப்பது என்பது ஜனநாயக வழிமுறைகளாக ஏற்கப்படுகின்றன. ஆனால் ஆட்சியாளர்கள் நியாயமான காரணமின்றி தமது நலன்களுக்காக தன்னிச்சையாக அதனை செய்துவருவது இலங்கையின் வரலாறாகி வருகிறது. இந்த வரலாற்றைத் தொடக்கி வைத்த பெருமை? இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியின் மாமனாருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையே பெருமளவுக்குச் சேரும்.

1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று 80% இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்  ஜே. ஆர். ஜெயவர்த்தனா இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பைக் கொண்டுவந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தன்னை மாற்றிக்கொண்டது மட்டுமன்றி 1983 இல் நடக்க வேண்டிய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை நடத்தாது தவிர்ப்பதற்காக 1982 டிசம்பரில் மக்களின் கருத்தறியும் சர்வஜன வாக்கெடுப்பு முறையை முன்முதலாகக் கையாண்டார். அதாவது அப்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை 1989 வரை தொடர்வதற்கான மக்களின் சம்மதத்தைப் பெறுவதற்கு புதிய சட்டமொன்றை நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, அதில் அவர் வெற்றியும் பெற்றார். இதற்கான கருவை ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த சிறிமா அம்மையாரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். 1970 இல் ஆட்சியைக் கைப்பற்றிய சிறிமாவோ பண்டாரநாயக்க 1972 இல் முதலாவது குடியரசு அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அதன்மூலம் 1975 இல் நடக்கவேண்டிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை 1977 இற்கு தள்ளிவைத்திருந்தார். இவ்வாறு புதிய சட்டங்களை இயற்றியோ அல்லது இருக்கும் சட்டங்களிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியோ ஆட்சியாளர்கள் தமக்கேற்ற வகையில் தேர்தல்களைத் தீர்மானித்தனர். இது சந்திரிகா, மஹிந்த, ரணில் என இன்றுவரை தொடர்கிறது.

 

ஆட்சியாளரின் இத்தகைய பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியாகவே 2017 ஆம் ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில்  ரணில் – சுமந்திரன் கூட்டு முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘ மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்’ ஆகும். இதை இருவரின் கூட்டுமுயற்சி எனக் கூறுவதன் காரணம், இருவருக்கும் அத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டிய தேவை இருந்ததுடன், நல்லாட்சிக் காலத்தில் சம்பந்தன் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாகச் செயற்பட்டமையுமாகும். தென்னிலங்கையில் நல்லாட்சியாளர்கள் மீது அதிகரித்து வந்த அதிருப்தியினால் மாகாணசபைத் தேர்தல்கள் தனக்குப் பாதகமாக அமைந்துவிடலாம் என ரணில் தரப்புக்கு ஏற்பட்ட பயம் ஒருபுறமும், மறுபுறத்தில் அந்நேரத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அதிகரித்துவந்த ஆதரவினாலும் தமிழரசுக்கட்சி மீதான மக்களின் அதிருப்தியினாலும் வடக்கு மாகாணசபையை இழந்துவிடுவோமென்று சுமந்திரன் தரப்புக்கு ஏற்பட்ட பயத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட விளைவே மேற்குறித்த சட்டமாகும். சுமந்திரனின் இந்தச் செயற்பாட்டினால் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பங்காளிகளிடையேயும் சுமந்திரன் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்க, அதனைத் தணித்து தன்னை உத்தமனாகக் காட்டுவதற்காக அவரால் 2019இல் முன்வைக்கப்பட்டதே தற்போது பேசுபொருளாகியுள்ள தனிநபர் பிரேரணையாகும்.

2017 இல் தத்தமது தேவைகளுக்காக ரணிலும் சுமந்திரனும் போட்ட மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முடிச்சை இப்போதும் தத்தமது தேவைகளுக்காகவே அவிழ்க்கும் நாடகமொன்றை அரங்கேற்ற முயற்சிக்கிறார்கள் என்று கருதலாம். இதனை ஏன் பெரும்பாலான மக்கள் நாடகமாகக் கருதுகிறார்கள்? இந்நேரத்தில் இதை அவ்விருவரைத்தவிர வேறெவரும் அவசரமான ஒன்றாகக் கருதவில்லை.  அத்துடன் புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கிடையில் இது சட்டமாக நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும்கூட அதற்கமைய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்துவது  புதிய ஜனாதிபதியையும் புதிய அரசியல் களநிலைமைகளையும் பொறுத்த விடயம்.  இப்படியிருக்கையில் இந்த நாடகத்தை இருவரும் அரங்கேற்ற விழைவதன் நோக்கம்தான் என்ன? இதற்கான விடை இலகுவானது. தேர்தலில் வெல்வதற்கு ரணிலுக்கு தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குகள் தேவை. அடுத்த ஜனாதிபதியும் நான்தான் என்ற தோரணையில் சிங்கள வாக்காளர்களைக் கவர்வதற்காக அள்ளி வழங்கும் பல வாக்குறுதிகள் போல தமிழ், முஸ்லிம் வாக்காளர்களுக்கு அள்ளி வழங்கும் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. தமிழ் வாக்குகளைக் குறிப்பாக வடக்கின் வாக்குகளை ரணிலுக்குப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் தனது இரண்டாவது ஆட்டத்துக்கான களத்தைத் திறக்கலாம் என்பது சுமந்திரனின் எண்ணம். மாகாண சபை தொடர்பாக மக்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் தமிழரசுக் கட்சித் தேர்தலில் இழந்துவிட்ட தனது விம்பத்தை மீளவரைவதற்கும், தனது ஆதரவாளர்களைத் தக்க வைத்து ரணிலுக்கு ஆதரவாகத் தேர்தல் வேலைகளைச் செய்வதற்கும், ரணிலுக்குத் தான் நல்ல விசுவாசியாக இருப்பதை வெளிப்படுத்தவும் சுமந்திரனுக்கு இந்த நாடகத்தை அரங்கேற்றவேண்டிய தேவை உள்ளது.

அதுவும் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் சுமந்திரனுக்கு இது இன்னும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதுவரை காலமும் சஜித் தரப்புடன் ஒட்டிக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் ரணிலுக்கெதிராக மிகமோசமான விமர்சனங்களை முன்வைத்து வந்தவர் சுமந்திரன். சென்ற ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞர்களுக்கான ஒன்றுகூடலில் நாட்டின் கௌரவத்துக்குரிய ஜனாதிபதியான ரணிலை ஒருமையில் திட்டிய சுமந்திரன் இனிவருங்காலத்தில் எப்படி அவரை அழைக்கப்போகிறார் என்பதை மக்கள் ஆவலுடன் பார்த்திருக்கின்றனர். முன்னர் ரணிலுக்கு எதிரானவராகத் சுமந்திரன் தன்னைக் காட்டிக் கொண்டது நாடகமா? அல்லது இப்போது மீண்டும் சேர்ந்து செய்வது நாடகமா? என்பதில் ஐயமிருந்தாலும் சுமந்திரன் பெரும்பாலும் ஆடுவது நாடகம்தான் என்பதில் பெரும்பாலான மக்களுக்கு ஐயமில்லை. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் சுமந்திரன் சஜித்துடன் ஒட்டுறவாடியதை நம்பி  இதுவரை சஜித்தைப் புகழ்ந்து தள்ளிய அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் இனி என்ன செய்வது என்று திகைத்து நிற்பதுதான்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில், சஜித், அனுரகுமார மூவரதும் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும் வெளிவராவிடினும் இந்த மூவரும் தாம் ஜனாதிபதியானால் அரசியலமைப்பிலுள்ளபடி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைத் தருவதாகப் பொதுவெளியில் வாக்குறுதியளித்துள்ளார்கள். அவ்வாக்குறுதி உள்ளத்திலிருந்தானதா அல்லது உதட்டிலிருந்தானதா என்பதை எதிர்காலத்தில்தான் அறியமுடியும்.

இவர்களில் ஒருவர் ஜனாதிபதியாக வருமிடத்து அவர்கள் வாக்குறுதி அளித்தபடி மாகாணசபைச் சட்டங்களில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதன்பின் மாகாணசபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றால் அது பெறுமதி உடையதாயிருக்கும். அதுவே தமிழ் மக்களின் தற்போதைய எதிர்பார்ப்புமாகும். அவ்வாறிருக்கையில் ரணிலும் சுமந்திரனும் அவசரப்பட்டு ஆடும் இந்த ஆட்டம் தமிழ் மக்களுக்கானது என்பதைவிட தனிநபர்களின் நிகழ்ச்சி நிரலாகவே கொள்ளப்படவேண்டும்.

Thinakkural.lk

பாவம் தமிழ் மக்கள்!

3 months 1 week ago

பாவம் தமிழ் மக்கள்!
பாவம் தமிழ் மக்கள்!

— கருணாகரன் —

“தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தைச் சற்றுக் கிண்டலாக நீங்கள் எழுதி வருகிறீர்கள். அதைப் படிக்கும்போது மனதுக்குக் கொஞ்சம் கஸ்ரமாக உள்ளது. அதுவும் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள் எனும்போது இன்னும் வருத்தமாக இருக்கிறது.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஒரு தரப்பினரின் அரசியல் நிலைப்பாடல்லவா! அதைச் சொல்வதற்கு அவர்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு. அது தொடர்பாக உங்களுக்கு மறு பார்வைகள் இருந்தால், அதை அதற்குரிய ஜனநாயகப் பண்போடு முன்வைக்கலாம். விவாதிக்கலாம். அதுதானே நியாயம். அவ்வாறான விவாதத்துக்குரிய கருத்துகளையும் நியாயங்களையும் எதிர்பார்க்கிறேன்.

அதை விடுத்து, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டையும் அதை முன்னெடுப்போரையும் கிண்டலடித்து எழுதுகிறீர்கள். அது கவலையளிக்கிறது. 

பொதுவாக நீங்கள் எதையும், எவரையும் மதிப்பிறக்கம் செய்யும் உள்நோக்கத்தோடு செயற்படுகின்றவரில்லை. ஆனால், இந்த விடயத்தில் உங்களுடைய எழுத்தும் தொனியும் மாறியிருப்பது ஏன்?…

இதைப்பற்றிச் சொல்ல முடியுமா?” என்று வாட்ஸப்பில் ஒரு நண்பர் தகவல் அனுப்பிக் கேட்டிருந்தார். 

என்மீது அப்படியொரு (நல்ல) அபிப்பிராயம் அவரிடமிருப்பதையிட்டு அவருக்கு நன்றி சொன்னேன். கூடவே அவர் சுட்டிக்காட்ட விரும்பிய முறைமைக்காகவும்.  மிகச் சிறந்த முறையில் தன்னுடைய அபிப்பிராயத்தை உரியவாறு – பொறுப்போடும் நட்புக்குரிய பண்போடும் தெரிவித்திருந்தமைக்கு அவருக்கு மீண்டும் நன்றி. இந்தப் பண்பை நாம் முன்மாதிரியாகப் பின்பற்ற வேண்டும் என்பதால் அவருடைய ஒப்புதலோடு பின்வரும் விடயங்களைப் பொது வெளியின்  (அவருடைய பெயரை மட்டும் குறிப்பிடாமல்) கவனத்திற்காக எழுதுகிறேன். 

அரசியல் கொள்கைகளும் நிலைப்பாடுகளும் பலவகையானவை. ஜனநாயகச் சூழலில் இது இயல்பானதும் அங்கீகரிக்கப்பட வேண்டிதுமாகும். அதற்கப்பால் மனித வாழ்க்கையில், மானுட இருப்பில், விருப்பில் இப்படிப் பல்விருப்பங்களும் பல்நிலைச் சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் இருக்கும். அது இயல்பும் வழமையுமாகும். அதுதான் நியாமும் அழகும் கூட. இதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே நமது நியாயமும். 

ஆகவே தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை ஒரு தரப்பின் அரசியல் நிலைப்பாடு, உபாய முயற்சி என ஏற்றுக் கொள்கிறேன். 

ஆனால், “அதுதான் சரியானது. அற்புதமானது. அதைத்தான் தமிழ்ச்சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச்சமூகத்தை அதை நோக்கிக் குவிக்க வேண்டும். அதற்கு மாற்றான அபிப்பிராயத்தை – நிலைப்பாட்டைக் கொண்டோரெல்லாம் சூதானவர்கள், இனவிரோதிகள், தமிழர்களின் ஐக்கியத்துக்கும் விடுதலைக்கும் எதிரானோர்,  விடுதலை மறுப்பாளர்கள் எனச் சித்திரிக்க முற்படுவதுதான் பிரச்சினைக்குரியதாகிறது. அதாவது இனத்துரோகிகள் என்றவாறாக. 

இது வழமையைப் போல கறுப்பு வெள்ளை அரசியற் சிந்தனைக்குள்ளிருந்து சிந்திக்கும் – செயற்படும் போக்காகும். 

ஜனநாயகத்தைப்பற்றிப் போதிப்போரும் நவீன அரசியலைப்பற்றிப் பேசுவோரும் அதற்கு மாறாக இப்படி கறுப்பு – வெள்ளை என குறுகிக் கிடப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் சில முற்போக்காளர்களும் பன்மைத்துவத்தைப் பற்றிப் பேசுவோரும் அடக்கம். அவர்களுடைய தடுமாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது.

கறுப்பு – வெள்ளைச் சிந்தனையினால் பாதிக்கப்பட்ட – அதற்குப் பெரிய விலைகளைக் கொடுத்த E.P.R.L.F, PLOT, T.E.L.O போன்றவையே இந்தச்சிந்தனைக்கு அடிமைப்பட்டிருப்பதுதான் இங்கே துயரத்துக்குரியது என்பதால்தான் சில முறைகளில் சில விடயங்களைச் சொல்ல முற்பட்டேன். அது சூழலின் தன்மை, அதன் அவசியம் கருதியது. ஒரு கேலிச்சித்திரத்துக்கு (Caricature) அல்லது காட்டூனுக்கு (Cartoon)  உள்ள பண்பையும் வலிமையையும் ஒத்தது. இன்னும் சொல்லப்போனால் அங்கத எழுத்து அல்லது அதொரு satiriar column எனலாம். அதை அந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்வது முக்கியம். அதாவது காட்டூனை ரசிப்பது, ஏற்பது என்ற மாதிரி. 

எனவே இதில் ஜனநாயக மாண்பை மீறாமல், அந்தப் பண்பைக் கடைப்பிடிக்க முயன்றுள்ளேன். என்னுடய பார்வைகளையும் நியாயங்கள், நிலைப்பாட்டையும் தெளிவாகக் கூறி வந்திருக்கிறேன். 

இனி – 

1. தமிழ்ப்பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்குச் சொல்லப்படும் நியாயங்கள் மிகப் பலவீனமானவை. 40 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் பழைய, தோற்றுப்போன கருத்துகள். புதிதாகச் சிந்திக்க முடியாத, புதிய அரசியற் சூழலை விளங்கிக் கொள்ள முடியாத, புதிதாக அரசியலை முன்னெடுக்க இயலாத,  தோல்வியிலிருந்து விடுபட முடியாததன் வெளிப்பாடு. அந்த இயலாமையை மறைப்பதற்குப் பூசப்படும் சலிப்பான வார்த்தைகள். இதைப்பற்றி விரிவாக – விளக்கமாக எழுதியுள்ளேன். பிறரும் எழுதியுள்ளனர்.

2. அதற்கான முயற்சிகள். 

தமிழ்ப்பொதுவேட்பாளர் (இப்படி எழுதும்போதே ஏனோ சிரிப்பும் சலிப்பும்தான் வருகிறது – மன்னித்துக் கொள்ளுங்கள்) ஒருவரை நிறுத்துவதற்கு அரசியல் ரீதியாகவும் ஆளுமை ரீதியாகவும் (ஆள் ஒருவரைத் தேடிப் பிடிப்பதற்கே படுகின்ற அல்லற்பாடுகள்) எடுக்கப்படும் முயற்சிகள் கூட சிறுபிள்ளைத் தனமானவை.

இத்தனை ஆண்டுகால போராட்ட அரசியல், அதற்கான உழைப்பு, தியாகம், கற்றுக் கொண்ட படிப்பினைகள் போன்றவற்றிலிருந்து நாம் பெற்றதென்ன? எத்தனை அரசியல் ஆளுமைகளையும் தளபதிகளையும் செயற்பாட்டாளர்களையும் கண்டிருந்தோம். 

இன்று?

மெய்யானோரும் சரியாகச் சிந்திப்போரும் உண்மையாகவே மாற்றத்துக்காக உழைப்போரும் ஓரங்கட்டப்பட்டு, நடிகர்கள் அரங்கேற்றப்பட்டுள்ளனர். அப்படியென்றால், இப்படித்தான் கிலிசை கேடாக நிலைமை இருக்கும்.

இப்படி நாறிப்போயிருக்கும் பலவீனத்தை மக்களுக்கும் (மேலும் மக்களுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளே நடக்கின்றன) அரசுக்கும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துக்கும் காட்ட வேண்டுமா?

நாம் பலவீனப்பட்ட நிலையில் இருக்கலாம். அதற்காக நம்முடைய வறுமையை வெளியே சொல்லித்தான் ஆக வேண்டுமா? உங்கள் வீட்டிலிருக்கும் அல்லது உங்கள் குடும்பத்துக்குள்ளிருக்கும் பலவீனமான விடயங்களைப் பகிரங்கப்படுத்துவதை விரும்புவீர்களா?

அதையெல்லாம் குடும்பக் கௌரவம், சுயமரியாதை எனக் கவனமாக மறைத்துக் கொள்வீர்கள். சமூகப் பலவீனத்தைத் தக்கமின்றிப் பறை சாற்றுவீர்கள்.

உண்மையில் இந்தக் குறைபாட்டை உணர்ந்து நாம் அதிலிருந்து மீண்டெழ வேண்டுமே தவிர, அதை எதிர்த்தரப்புப் பயன்படுத்துமளவுக்கு வாய்ப்பளிக்கவோ  அனுமதிக்கவோ கூடாதல்லவா!

செயற்பாட்டு அனுபவமில்லாதவர்களின் வேலை அல்லது முயற்சிகள் இப்படித்தானிருக்கும். கள அனுபவமற்றவையாக. 


3. தமிழ்ப்பொது வேட்பாளரரை நிறுத்த வேண்டும் என நிற்போர். 

இவர்கள் ஒரு முகப்பட்ட சிந்தனைக் குழாத்தினரல்ல. ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டோரும் அல்ல. தவிர்க்க முடியாமல் நெல்லிக்காய்களை ஒன்றாகச் சேர்த்ததைப்போல இவர்களை ஓரணியில் சேர்த்தது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஊடக நிறுவனமொன்றின் இயக்குநர். இன்னொருவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன். இதற்கு இணை நின்றவர்கள் பத்தியெழுத்தாளர்கள் இருவர். ஏனையோர் இதில் விரும்பியும் விரும்பாமலும் உள்ளடக்கப்பட்டவர்கள். 

‘உள்ளடக்கப்பட்டவர்கள்’ என்று அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், அவர்கள் தனிப்பட்ட உரையாடல்களில் தமது  விருப்பம் வேறு. தவிர்க்க முடியாமல் நாம் இந்த நிலைப்பாட்டுக்கு சம்மதித்திருக்கிறோம் என்று தொடர்ந்து கூறுவதாகும். அப்படிக் கூறுவது அவர்களுக்கும் அவர்களுடைய அரசியலுக்கும் அழகல்ல. அது அரசியல் செயற்பாட்டுக்கு நல்லதுமல்ல. இருந்தும் அப்படித்தான் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

இன்னொரு தரப்பினரோ இந்தப் பொது வேட்பாளருக்கு மக்களிடம் ஆதரவு கிட்டவில்லை என்றால்…? தம்முடைய அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும் உண்டு. குறிப்பாக ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு. ஏனைய சில்லறைத்தரப்புகளுக்கு எல்லாம் ஒன்றுதான். வென்றாலென்ன? தோற்றாலென்ன? ஏதோ நமக்கும் வடையும் தேநீரும் கிடைக்கிறது. அந்தளவே போதும் என்ற நிலைப்பாட்டோடிருக்கிறார்கள். 

ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு இந்தப்பிரச்சினை இல்லை. அது ஏற்கனவே மிகச் சிக்கலான நிலையில்தான் உள்ளது. அது முன்னிலை பெறுவதற்கான ஆயிரம் கதவுகளையும் தானாகவே அடைத்துச் சாத்திக் கொண்டு பிடிவாதமாக இருட்டறைக்குள் தியானம் செய்கிறது. ஆகவே அதற்கு வாழ்வும் சாவும் ஒன்றுதான்.  வென்றால் இன்னொரு சுற்று ஓடலாம். இல்லையென்றாலும் ஏதோ அவ்வப்போது அரங்கில் நாமும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

சிவில் குழுவினர் (Civil society representatives) என்று தம்மை அடையாளப்படுத்துவோர் ஏனைய தரப்புகளை மறைமுகமாக ஆயுததாரிகள் (Armed parties) அல்லது துணை ஆயுதக்குழுவினர் (paramilitaries) என்ற பழைய மனப்பதிவோடு அல்லது அத்தகைய ஒரு உள்ளுணர்வோடு – விலக்கத்தோடுதான் காரியங்களைச்செய்து  கொண்டிருக்கின்றனர். 

அவர்களுக்குள் தாம் கலந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையை அவர்களிடம் அவதானிக்க முடிகிறது.  இதனால் சற்று விலகி நின்று கொண்டே, “தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத்துக்காக சேர்ந்து வேலை செய்கிறோம். கலந்து கொள்ளவும் கரைந்து போகவும் மாட்டோம்” என்று செயற்பாடுகளால் காட்டுகின்றனர். சிவில் தரப்பும் கட்சிகளும் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை கூட அந்த அடிப்படையிலானதுதான். (பாவம் விக்னேஸ்வரன்).

ஆக இப்படியான சூழலில் எப்படி இவற்றைக் குறித்துப் பேசாமலிருக்க முடியும்? அந்தளவுக்குத் தமிழ்ச் சமூகம் மொண்ணையில்லைத்தானே!

பொய்களையும் மாயைகளையும் களைய வேண்டியது, இனங்காட்ட வேண்டியது, அதை உணர்ந்தறிந்தவரின் கடமை. அதைச் செய்ய முயற்சிக்கிறேன். அவ்வளவுதான். 

பாவம் தமிழ் மக்கள். 

 

https://arangamnews.com/?p=11078

பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன்

3 months 1 week ago

பொது வேட்பாளர் வந்து விட்டார் - நிலாந்தன்

IMG-20240809-WA0010-c-1-730x1024.jpg

 

தமிழ்ப்பொது வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்து விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த கேள்வியை முன்வைத்து பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய பொதுக் கட்டமைப்பினால் ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமாக உருப்பெருக்கிக் காட்டப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன ?

தமிழ் மக்கள் பொதுச்சபை என்று அடக்கப்படும் அமைப்புக்கான முதலாவது கருநிலைச் சந்திப்பு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம் பெற்றது. அதன் பின் தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜூன் மாதம் 29 ஆம் திகதி இறுதியாக்கப்பட்டது. அதன்பின் ஜூலை மாதம் 22 ஆம் திகதி அந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு பொதுக் கட்டமைப்பு இயங்கத் தொடங்கியது. அத் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது ஒரு பொது வேட்பாளரை கண்டுபிடிப்பதற்காக அன்றிலிருந்து இயங்கத் தொடங்கியது. கடந்த எட்டாம் திகதி ஒரு பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அப்படிப் பார்த்தால் மொத்தம் 18 நாட்கள்தான் ஒரு பொது வேட்பாளருக்கான தேடல் மும்முரமாக இடம்பெற்றது. ஒரு சமூகத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயகரமான விதங்களில் தடம் மாற்றக்கூடிய ஒரு குறியீட்டு வேட்பாளரை கண்டுபிடிப்பதற்கு 18 நாட்கள் சென்றன என்பது ஒப்பீட்டளவில் குறைவுதான். அதற்காக 18 மாதங்களை எடுத்துக் கொண்டால் கூட குற்றமில்லை.

ஒரு பொது வேட்பாளர் ஒரு பொதுக் குறியீடு என்று தொடக்கத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது. அவ்வாறு ஒரு பொதுக் குறியீட்டை ஏன் தேட வேண்டி வந்தது? ஏனென்றால் தமிழ் மக்கள் மத்தியில் கட்சித் தலைவர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. ஆனால் தமிழ் அரசியல் சக்தியை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைவர்கள் அநேகமாக இல்லை. தமிழ் மக்களை ஆகக்கூடியபட்சம் ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ்; ஒரு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றிணைக்கவல்ல ஜனவசியமிக்க தலைமைகள் இருந்திருந்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கு தேவையே இருந்திருக்காது. எனவே ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தேடுவதில் உள்ள சவால் என்னவென்றால், தமிழ் மக்களை ஒரு பொதுக் குடையின் கீழ் ஒன்றிணைக்க வல்ல தலைமைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதுதான்.

இப்பொழுது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பொது வேட்பாளர் அவ்வாறு எல்லாத் தகமைகளும் உடையவர் என்று இக்கட்டுரை கூறவரவில்லை. அரசியலில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையில் எதிலுமே 100% பூரணமானது என்று எதுவும் கிடையாது. இருப்பவற்றில் சிறந்தவற்றை வைத்துத்தான் அரசியலைக் கொண்டு போகலாம். ஏனென்றால் அரசியல் எனப்படுவது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியக்கூறுகள் என்று பார்த்தால் இருக்கின்றவைகள்தான் சாத்தியக்கூறுகள். இல்லாதவைகள் அல்ல.

இந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளரை பொதுக் கட்டமைப்பு முன் வைத்திருக்கின்றது. தமிழ்ப் பொது நிலைப்பாடு என்பது தமிழ்த் தேசிய நிலைப்பாடு தான். தமிழ்த்தேசிய நிலைப்பாட்டின் பிரதான மூலக்கூறு தாயக ஒருமைப்பாடு. அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை உணர்வுபூர்வமாகவும் நடைமுறைச் சாத்தியமான விதத்திலும் ஒன்றிணைக்கும் தேவைகளை அடிப்படையாக வைத்து கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஒரு குறியீடுதான். தமிழ் மக்கள் பொதுச்சபைக்குள் காணப்படும் கருத்துருவாக்கிகள் ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக கட்டியெழுப்பிய கருத்துருவாக்கம் என்னவென்றால், கிழக்கிலிருந்து ஒரு பெண் வேட்பாளர்தான். அவரும் அரசியல் கட்சிகள் சாராதவராக இருந்தால் உத்தமம் என்று கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் அப்படி ஒரு பெண் வேட்பாளரைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நெருக்கடிகள் இருந்தன. மட்டுமல்ல, நாட்களும் குறைவாக இருந்தன. ஒரு பெண் வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஓர் ஆண் வேட்பாளரை அதாவது கட்சிசாரா ஆண் வேட்பாளரை கண்டுபிடிக்கலாமா என்று சிந்திக்கப்பட்டது. ஆனால் அங்கேயும் வரையறைகள் இருந்தன. அதன் பின்னர்தான் கட்சி சார்ந்த யாராவது இருப்பார்களா என்று தேட வேண்டி வந்தது.

ஜனாதிபதித் தேர்தல் பொறுத்து பொதுக் கட்டமைப்புக்கு சட்டரீதியாக சில வரையறைகள் இருந்தன. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தலாம். அல்லது ஒரு முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுயேட்சையாகக் களமிறங்கலாம். இந்த இரண்டு சாத்தியக்கூறுகளுக்குள்ளும்தான் ஒரு பொது வேட்பாளரைத் தேட வேண்டியிருந்தது. அதாவது தேர்தல் சட்டங்களின்படி ஒன்றில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி வேண்டும். அல்லது முன்னாள் அல்லது இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டும்.

தமிழ் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உண்டு. ஈ.பி.ஆர்.எல்.எப்  போன்ற கட்சிகள் அவ்வாறு சின்னத்தை தருவதற்குத் தயாராகக் காணப்பட்டன. சில கட்சிகள் தரத் தயங்கின. பொதுகட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒரு விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்தை ஒரு பொது நிலைப்பாட்டுக்காகப் பயன்படுத்தி அதன்மூலம் திரட்டப்பட்ட வாக்குகளையும் பிரபல்யத்தையும் அடுத்து வரும் தேர்தலில் அக்கட்சி தனது தனிப்பட்ட கட்சி தேவைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஒர் உடன்படிக்கை எழுதப்பட வேண்டும் என்று அங்கே சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தேர்தல் ஆண்டுகளாகக் காணப்படும் ஓர் அரசியல் பின்னணியில், ஜனாதிபதித் தேர்தலை உடனடுத்து வரக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தமது கட்சி சின்னத்தைப் பயன்படுத்தாமல் விடுவது தொடர்பில் கட்சிகள் அதிகமாக யோசித்தன.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஒரு சுயேச்சை வேட்பாளரைப் பொதுக் கட்டமைப்பு முன்நிறுத்தியமை என்பது கட்சிச் சின்னம் கிடைக்காத காரணத்தால் அல்ல. அதைவிட முக்கியமாக வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கு நிலையில் இருந்துதான் என்று , தமிழ் மக்கள் பொதுச்சபையின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

மேலும் தமிழரசுக் கட்சிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை பொதுகட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துவது என்பது பரந்தகன்ற தளத்தில் கட்சிகளைக் கடந்த தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான அடித்தளமாகவும் அமையும்.

கடந்த 15 ஆண்டுகளாக கருத்துருவாக்கமாக காணப்பட்ட ஒரு விடயம், இப்பொழுது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வந்து விட்டது. தமிழ்ப் பொது வேட்பாளர் பரந்தகன்ற தளத்தில் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டுவாராக இருந்தால், அதுவே கடந்த 15 ஆண்டுகளில் கிடைத்த மகத்தான வெற்றியாக அமையும்.

தமிழ்மக்கள் எங்கே ஒன்றாக நிற்கிறார்கள்? சில நினைவு கூர்தல்களைத்தவிர மற்றெல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும்  தமிழ்மக்கள் இரண்டாகப்; பலவாக நிற்கிறார்கள். வடக்காக,கிழக்காக;சாதியாக,சமயமாக;கட்சிகளாக,கொள்கைகளாக ; தியாகிகளாக, துரோகிகளாக ;கட்சிகளுக்குள் அணிகளாக; முகநூலில் குழுக்களாக; திருச்சபைக்குள் அணிகளாக;ஆலய அறங்காவலர் சபைகளுக்குள் அணிகளாக ; பழைய மாணவர் சங்கங்களுக்குள் அணிகளாக; புலம்பெயர்ந்த நாடுகளில் அமைப்புகளாக; அமைப்புக்களுக்குள் அணிகளாக….எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் தமிழ்மக்கள் இரண்டாகப்,பலவாக நிற்கிறார்கள். எங்கே ஒன்றாக நிற்கிறார்கள்? ஒன்றாக நிற்கக்கூடாது என்பதில்தானே ஒன்றாக நிற்கிறார்கள்?

தன் பலம் எதுவென்று தெரியாமல்; தன்னைத் தானே நம்பாமல்; சிதறிக் கொண்டு போகும் ஒரு மக்கள் கூட்டத்தை அகக்கூடிய மட்டும் பெருந் திரளாகக் கூட்டிக்கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஏனெனில் தேசம் எனப்படுவது ஒரு பெரிய மக்கள் திரளாகும். தங்களை தேசமாக உணரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உணர்வே தேசியம் எனப்படுகின்றது. அக்கூட்டு உணர்வுக்கு தலைமை தாங்குவதுதான் தேசியவாத அரசியல். தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவின் முதன்மை நோக்கமும் அதுதான்.

ஒன்று திரண்ட தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை வெளி உலகத்துக்கு ஒரே குரலில் கூறுவார்களாக இருந்தால், தமிழ் மக்களின் பேர பலம் அதிகரிக்கும். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 15 ஆண்டுகளாக இன அழிப்புக்கு எதிராக நீதி கிடைக்கவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

2009 மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது ஆயுதப் போராட்டம்தான். அது ஒரு விளைவுதான்.மூல காரணமாகிய ஒடுக்குமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. அதாவது இன ஒடுக்கு முறை நிறுத்தப்படவில்லை. இன ஒடுக்குமுறை எனப்படுவது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாகத் திரண்டிருப்பதை அழிப்பதுதான். தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் காரணிகளை அழிப்பதுதான். அதனால், ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெரும் திரளாக;தேசிய இனமாக தமிழ் மக்களைத் திரட்டி எடுப்பதுதான் தேசியவாத அரசியல்.தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு அந்தக் கொள்கை வழிபட்டதே.

எனவே தமிழ் மக்கள் முன் இரண்டே இரண்டு தெரிவுகள்தான் உண்டு ஒன்று ஒரு தேசமாகத் திரள்வது. அல்லது தன் பலம் எதுவென்று தெரியாத; தன்னைத் தானே நம்பாத; ஒரு மக்கள் கூட்டமாகச் சிதறித் தூர்ந்து போவது.
 

https://www.nillanthan.com/6854/

இலங்கை: விடுதலைப் புலிகளின் 2005-ம் ஆண்டு அறிவிப்பு இந்த தேர்தலிலும் தாக்கம் செலுத்துமா?

3 months 1 week ago
ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் முதல் தடவையாக 1999ம் ஆண்டு போட்டியிட்டார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கையிலிருந்து
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை ஓரளவு மீட்டு இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற கருப் பொருளை முன்னிலைப்படுத்திய ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்பதை முன்னிலைப்படுத்தி 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றதை போன்று, பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்டோம் என்ற கருப் பொருளை முன்னிலைப்படுத்தி ரணில் விக்ரமசிங்க தற்போது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

ரணில் தொடர்ந்து தோல்வி

இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, இரண்டு முறையும் தோல்வியடைந்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க 1994ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முதல் தடவையாக போட்டியிட்டார்.

சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க 4,312,157 வாக்குகளை பெற்றார். ரணில் விக்ரமசிங்க 3,602,748 வாக்குகளை பெற்றிருந்தார்.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தார்.

ரணில் தோல்விக்கு விடுதலைப் புலிகள் காரணமா?

சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதன்மூலம், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் அப்போது பிரதமருக்கு அதிகாரம் காணப்பட்டது. அந்த காலப் பகுதியில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ரணில் கைப்பற்றியிருந்தார்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நார்வே தலையீட்டில் சமாதான பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1999 தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை, 2006ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், நான்காவது ஈழப் போர் ஆரம்பமானது.

இந்த போர் நிறுத்தம் காணப்பட்ட காலப் பகுதியிலேயே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டிய நிலையில், 2006ம் ஆண்டு மீள போர் ஆரம்பமானது.

2005ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என வட, கிழக்கு மாகாண மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது. இதனால், அந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்களை வாக்களிப்பதை பெருமளவு புறக்கணித்திருந்தனர்.

அந்த தேர்தலில் வட, கிழக்கு மக்கள் வாக்களிக்காமையே, ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகின்றது.

ராஜபக்ஸ குடும்பத்தினர்

பட மூலாதாரம்,SLPP MEDIA UNIT

படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோர்.

இந்த விடயம் தொடர்பில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம், பிபிசி தமிழிடம் பேசுகையில், ''2005ம் ஆண்டு தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள். வடக்கு மாகாண மக்கள் பெரும்பாலும் வாக்களிக்க செல்லவில்லை என நினைக்கின்றேன். சில சம்பவங்களும் இடம்பெற்றன. கிழக்கு மாகாணத்தில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. எனினும், குறைந்தளவிலேயே பதிவாகியிருந்தன" என்றார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தான் வடக்கின் பல பகுதிகள் இருந்ததாக அவர் கூறுகிறார்.

"கொத்தணி வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களுக்கு சென்றே மக்கள் வாக்களித்திருந்தனர். வடக்கு மக்கள் வாக்களித்திருந்தால், ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து பொதுவாகவே இருக்கின்றது." என அவர் கூறினார்.

தேர்தலை புறக்கணிக்குமாறு 2005ம் ஆண்டு ஏன் விடுதலைப் புலிகள் அறிவிப்பை வெளியிட்டார்கள் என்ற கேள்விக்கு மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம் பதிலளித்தார்.

''இலங்கையின் தேர்தலை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிங்கள மக்களே தங்களின் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்து விடுதலைப் புலிகளிடம் இருந்தது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் அந்த கோரிக்கையை விடுத்திருந்தார்கள்." என அவர் கூறினார்.

பாரதி ராஜநாயகம்

பட மூலாதாரம்,BHARATI RAJANAYAGAM FB

படக்குறிப்பு,விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தான் வடக்கின் பல பகுதிகள் இருந்ததாக பாரதி ஜனநாயகம் கூறுகிறார்.

''சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட காலத்தில் ரணில் விக்ரமசிங்க சூழ்ச்சிகளை செய்தார் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கின்றது. 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தையை பயன்படுத்தி கருணா போன்றோரை பிரித்து, விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த ரணில் விக்ரமசிங்க முயற்சித்தார் என கூறப்பட்டது" என்கிறார் பாரதி ஜனநாயகம்.

ரணில் விக்ரமசிங்க மீண்டும் வந்தால், சர்வதேச சமூகத்தை தனது கைக்குள் வைத்துக்கொள்வார் என்ற பேச்சும் அப்போது காணப்பட்டதாக கூறும் அவர், அதனூடாக தங்களை ரணில் பலவீனப்படுத்தலாம் என்ற எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்கலாம் என தெரிவித்தார்.

"மாறாக மஹிந்த ராஜபக்ஸவிற்கு சர்வதேச உறவு அவ்வளவாக இருக்கவில்லை. அவர் போருக்கு மீண்டும் வருவார். தம்மால் அவரை வெற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு இருந்திருக்கலாம். அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்" என பாரதி ராஜநாயகம் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்றும் இருக்கின்ற நிலையில், 2005ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வெளியிட்ட அறிவிப்பு 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு தாக்கம் செலுத்துமா என்ற கேள்விக்கு, அவர் பதிலளித்தார்.

''இந்த காலக் கட்டத்திலும் அவ்வாறான கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட முன்வைக்கின்றது. எனினும், ஜனாதிபதி தெரிவில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என தமிழர்கள் எண்ணுகின்றார்கள். இந்த நிலையில், தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அது எந்தளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியாது" என தெரிவித்தார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிவிப்பு, அந்த தேர்தலில் தாக்கத்தை செலுத்தியது.

இந்த நிலையில், 2005ம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் முதல் முறையாக தற்போதுதான் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகின்றார்.

 
இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டதை அடுத்து, மஹிந்த ராஜபக்ஸ போர் வெற்றியை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலை நடாத்தியிருந்தார்.

இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து, பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறக்கப்பட்டார். இலங்கை ராணுவ தளபதியாக ராணுவத்தை வழிநடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தார் என்ற பெருமையை சரத் பொன்சேகா பெரும்பான்மை மக்கள் மத்தியில் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டு, பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறங்கிய நிலையில், அந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை.

அதனைத்தொடர்ந்து, 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

இந்த பின்னணியில், மஹிந்த ராஜபக்ஸவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், மஹிந்த ராஜபக்ஸ அப்போது தலைமைத்துவம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பிரித்தெடுத்து, மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட வியூகம் வகுத்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தலைவர்கள் ஒன்றாக கைக்கோர்த்து, 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கியமை காரணமாக அந்த தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை.

சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சஜித் பிரேமதாஸ (கோப்புப்படம்)

அதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்பட்ட தலைமைத்துவ சர்ச்சை காரணமாக, அந்த கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாஸ பெரும் எண்ணிக்கையிலான ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபித்தார்.

இதன்மூலம் தனிமைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்க 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

இந்த நிலையில், சஜித் பிரேமதாஸவை எதிர்த்து போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஸ, அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.

எனினும், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இலங்கையில் வரிசை யுகத்தை ஏற்படுத்தியது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச

பட மூலாதாரம்,PMD SRI LANKA

படக்குறிப்பு,கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச

எரிபொருள், எரிவாயு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கு என வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத கோட்டாபய ராஜபக்ஸ, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.

அதனைத் தொடர்ந்து, போராட்டம் வலுப் பெற்றதை அடுத்து, நாட்டை விட்டு கோட்டாபய ராஜபக்ஸ வெளியேறிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதுடன், நாடாளுமன்றத்தில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி காலத்தில் எஞ்சிய பகுதியை ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நிறைவுசெய்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 19 வருடங்களுக்கு பின்னர் இம்முறை ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்கின்றார்.

அரியம்: பாக்கியமா, பலியாடா?!

3 months 1 week ago
Tamil-candidate.jpg

புருஜோத்தமன் தங்கமயில்

நீண்ட நெடிய தேடுதல்களுக்குப் பின்னராக தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (அரியம்) அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இரு தடவைகள் பதவி வகித்த அவர், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராவார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் கடந்த வியாழக்கிழமை பொதுக் கட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அரியநேத்திரன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த அறிவிப்பு வெளியானதும், சமூக ஊடகங்களில் யாழ். மையவாதிகளினால் கிழக்கில் இருந்து இன்னொரு பலியாடு களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னும் சிலர், ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ திரைப்படத்தில் முரளி – வடிவேலு கூட்டு போண்டா மணியை மணமகனாக அலங்கரித்து முன்னிறுத்தும் படத்தை வெளியிட்டு, அரியநேத்திரனின் அறிமுகத்தோடு ஒப்பிட்டு நையாண்டி செய்திருந்தார்கள்.

தமிழ்த் தேசியப் பற்றாளராகவும், ஊடகவியலாளராகவும் இருந்த அரியம், தேர்தல் அரசியலுக்கு விடுதலைப் புலிகளின் அனுசரணையோடு வந்தவர். 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் நேரடியாக வெற்றிபெறாத போதிலும், கிங்ஸ்லி இராசநாயகம், தன்னுடைய பதவியை இராஜினாமாச் செய்ததும், அந்த இடத்துக்கு கூட்டமைப்பினால் நிரப்பப்பட்டவர். அதிலிருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அதுவும், மட்டக்களப்பில் கருணா – பிள்ளையான் குழுவின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர், தமிழ்த் தேசிய அரசியல்வாதியாக நின்றவர். இறுதிப் போர் வெற்றிக்குப் பின்னரான காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து இணைந்து கொண்டிருந்த போது, “போனா வருவீரோ, வந்தா இருப்பீரோ...” என்று தன்னுடைய பாராளுமன்ற உரையொன்றில் அரியம் பாடிய தமிழ்த் திரைப்படப் பாடலொன்று மிகப் பிரபலமானது. ஆனால், அவர், 2015க்குப் பின்னரான காலத்தில் அரசியல் அதிகார பதவிகளை இழந்தார். தற்போது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் என்ற அளவில் மாத்திரமே இருக்கிறார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் இன்று கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரியத்தின் மத்திய குழு உறுப்பினர் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உண்டு. 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட்டு, தமிழ் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அதன்மூலம் சர்வதேசத்துக்கு செய்தி சொல்லப்பட வேண்டும் என்பது, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரின் எதிர்பார்ப்பு. அதற்காக அவர்கள் வேட்பாளர் ஒருவரை கண்டடைவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். பொதுக் கட்டமைப்பினரை ஆதரித்த பலரும், வேட்பாளராக மாறுவதற்கு தயாராக இல்லை. ஏன், பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சிகளே தயாராக இல்லை. அதிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களோ தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி, ஜனாதிபதி வேட்பாளராவதில் இருந்து ஒழித்து ஓடினார்கள். இன்னொரு பக்கம், தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகளை வழங்கவும் தயாராக இல்லை. இதனால், பொதுக் கட்டமைப்பினர் மீதான நெருக்கடி அதிகரித்தது. அவர்களுக்கு முன்னால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேடுவதுதான் இறுதி வழியென்ற நிலை உருவானது. அத்தோடு, தங்களின் சொல் பேச்சை மாத்திரம் கேட்பவராகவும் அவர் இருக்க வேண்டும் என்ற வரையறையும் இருந்தது. அதனால்தான், வேட்பாளராக அரியம் தெரிவாகும் நிலை வந்தது. 

வேட்பாளர் தெரிவில் இறுதியாக அரியத்தோடு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இன்னொரு மத்திய குழு உறுப்பினரின் பெயரும் சம்பந்தப்பட்டவரின் அனுமதியோடு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினராக ஒருபோதும் பதவி வகித்தவர் இல்லை என்பதால், அவர் போட்டியிடுவதானால் கட்சியொன்று அவசியம். ஆனால், பொதுக் கட்டமைப்பின் கட்சிகள் எவையும், தங்களது கட்சியை வழங்க முன்வராத நிலையில், சம்பந்தப்பட்டவர் தெரிவாகும் வாய்ப்பும் அற்றுப்போனது. அதனால்தான், அரியம் ஜனாதிபதி வேட்பாளரானார். அவரும் இல்லையென்றால், பொதுக் கட்டமைப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேடிச் சென்றிருக்க வேண்டி வந்திருக்கும். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். ஆனால், அந்த நெருக்கடி நிலையை, அரியம் பொதுக் கட்டமைப்பினருக்கு, குறிப்பாக அந்தக் கட்டமைப்பிலுள்ள அரசியல் பத்தியாளர்களுக்கு வழங்கவில்லை. அந்த வகையில் பத்தியாளர்களுக்கு அரியம் பாக்கியம் செய்திருக்கிறார். 

தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி மீது தமிழ் மக்கள் பெருமளவில் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். அந்த அதிருப்தியைக் கழைந்து, நம்பிக்கையின் பக்கம் நகர்த்தி, தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு தமிழ் மக்களை ஒன்று திரட்டுதல் என்பது அவசியமானது. அதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதும் இல்லை. ஆனால், அந்தக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் தரப்பினர், அதற்கான அர்ப்பணிப்பை முழுவதுமாக வழங்க வேண்டும். அதற்கு மாறாக, ‘வேண்டா வெறுப்பாக பிள்ளையைப் பெற்று, அதற்கு காண்டாமிருகம் என்று பெயர் வைத்தது’ போல, நடந்து கொள்ள முடியாது. பொதுக் கட்டமைப்பிலுள்ள கட்சிகளின் நிலைப்பாடுகளைப் பார்க்கும் போது, அப்படித்தான் தோன்றுகின்றது. ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ என்ற அடையாளத்தோடு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கட்டமைப்பினர் வேட்பாளராக முன்னிறுத்தும் போது, அதற்கான முக்கியத்துவத்தை வழங்கியாக வேண்டும். அவரின் அறிமுகம், பொதுக் கட்டமைப்பின் அனைத்துத் தரப்பினதும் பங்களிப்போடு, பெரும் சமூக – ஊடக கவனம் பெறும் அளவுக்கு பிரச்சார உத்திகளோடு முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரியத்தின் அறிமுகத்தின் போது, பொதுக் கட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற கட்சிகளான ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை. அவர்கள், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டது. வெளிநாட்டு தூதுவராலயங்கள், உள்ளக -அயலக பாதுகாப்புப் பிரதானிகள், இராஜதந்திரிகள் என்று எந்த தரப்பு அழைத்தாலும் எந்தவித கேள்வியும் இன்றி, ஓடோடிப்போய் சந்தித்து விட்டு வரும், இந்தக் கட்சிகளின் தலைவர்கள், தாங்கள் முன்னிறுத்தும் வேட்பாளர் அறிமுகத்தை பாராளுமன்ற அமர்வுகளைக் காட்டி புறக்கணித்தமை அபத்ததத்தின் உச்சம். அது, போக்கிடமின்றி அமைந்த கூட்டின் பங்காளிகள் தாங்கள் என்ற அவர்களின் எண்ண ஓட்டத்தை மக்களிடம் வெளிப்படுத்தியது. அரியம் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் உடல்மொழி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை தீர்க்கமாக வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்கவில்லை. அவர்கள், மனதளவில் சோர்ந்து போய் இருப்பதை, முகங்கள் அப்பட்டமாக காட்டின. அதிலும், உடல்மொழி, பேச்சாளர்களின் மனோ நிலை தொடர்பில் எல்லாம் கடந்த காலங்களில் பகுத்தாய்ந்து எழுதிய பத்தியாளர்களின் முகங்களே பெரும் சோர்வாக காணப்பட்டன. அந்த முகங்களில், ஒரு மாதிரியாக ஒருவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தியாகிவிட்டது என்ற ரேகைகள் படர்ந்திருந்தன. அதனைத் தாண்டி எந்த நம்பிக்கையையும் விதைக்கும் உணர்வுகள் யாரிடத்திலும் இருக்கவில்லை. 

தமிழரின் தாகத்தை தீர்க்க, அரசாங்கத்திடம் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை சலுகைகளாக – இலஞ்சமாக பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம், தமிழ்த் தேசிய அரசியலை தற்போது ஆக்கிரமித்திருக்கிறார்கள். தமிழரின் தாகம் என்பதை, தண்ணீர் தாகம் என்று உணர்ந்து கொண்டாலாவது பரவாயில்லை. அரசியல் புரிதல் இல்லை என்று அவர்களை மன்னித்து புறந்தள்ளி விடலாம். ஆனால், தமிழரின் தாகத்தை, சாராய – கசிப்பு தாகம் என்று உணர்ந்து செயற்படுபவர்களை, தமிழ்ச் சமூகம் எச்சரிக்கையோடு அணுக வேண்டும். இப்படியான அறமற்றவர்களும், சமூக விரோத சிந்தனைக்காரர்களும் தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்திருக்கும் போது, தமிழ் மக்கள் அரசியலில் நம்பிக்கை இழப்பது இயல்பானது. அதனை, மாற்றியமைத்து, தமிழ்த் தேசிய அரசியலை நம்பிக்கையின் பக்கத்திற்கு நகர்த்துதல் என்பது, மிகப்பெரிய செயற்திட்டங்கள், அர்ப்பணிப்புக்கள் சார்ந்தது. அது பதவி, பகட்டு, பணம், இலஞ்சம், ஊழல், சலுகை சார் நிலைகளுக்கு அப்பாலானது. ஆனால், தற்போதுள்ள அரசியலில் இவைகளைக் கடந்தவர்கள் என்று பெரிதாக யாரையும் அடையாளம் காண முடியாது. முள்ளிவாய்க்காலிலும், மாவீரர் நாட்களிலும் தீபமேற்றிவிட்டால் போதும், தமிழ் மக்களின் மண்டையில் மிளகாய் அரைக்கலாம் என்பது, பல அரசியல்வாதிகளின் நிலைப்பாடு. ஆனால், அவர்களின் தென் இலங்கை அரசாங்கங்கள், கட்சிகளுடனான நெருக்கம் என்பது, மிகமோசமான அளவில் இருக்கின்றது. அது, தனிப்பட்ட ரீதியானது என்றால் பிரச்சினையில்லை. ஆனால், அது, தமிழ் மக்களை பலிகடாவாக்கும் போக்கிலானது. அப்படியானவர்களின் கரங்கள், தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் முன்னிறுத்தம் மற்றும் தெரிவிலும் முக்கிய தாக்கம் செலுத்துகின்றதா என்ற சந்தேகம் உண்டு. 

இறுதி மோதல் காலத்தில் ராஜபக்ஷக்களோடு நெருக்கமாக இருந்த தமிழ் வர்த்தகர் ஒருவர், இப்போது யாழ்ப்பாணத்தில் ஊடகங்களை நடத்துவதன் மூலம், தமிழ்த் தேசியக் கட்சிகளையும் தலைவர்களையும் தன்னுடைய கைப்பாவையாக கையாள நினைக்கிறார். அதற்கு இணங்காதவர்களை நாளும் பொழுதும் விமர்சிப்பதுதான் அவரது வேலையாக இருக்கின்றது. அவரின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் இருந்தது. அவர் மீதான விமர்சனம் பொது வெளியில் எழுந்ததும், பொதுக் கட்டமைப்பில் இருந்து அவர் ஒதுங்கிக் கொண்டது போல, காட்டிக் கொண்டார். ஆனாலும் அவரது பிரதிநிதியாக பத்தியாளர் ஒருவர் பொதுக் கட்டமைப்புக்குள் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர்களின் தெரிவும் அரியமாக இருந்திருக்கின்றது. அதற்கான காரணமாக, கேள்விகளைக் கேட்காத ஒருவராக அரியம் இருப்பார் என்பதுதான் ஒற்றை வாதம். 

அரியம், தற்போது செல்வாக்குள்ள அரசியல்வாதியல்ல. தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு குழப்பத்தில், அவர் சிவஞானம் சிறீதரனுக்காக இயங்கியவர். அதன்மூலம் அண்மைய நாட்களில் சற்று ஊடகக் கவனம் பெற்றவர். மற்றப்படி, அவரினால் தேர்தல் – வாக்கு அரசியலில் தற்போது தாக்கம் செலுத்த முடிவதில்லை. மட்டக்களப்பிலேயே அவரினால் சில ஆயிரம் வாக்குகளைக்கூட பெற முடியாது என்பதுதான் யதார்த்தம். அப்படிப்பட்ட ஒருவரை, வடக்கு கிழக்கு பூராவும் பொது வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது எவ்வளவு தூரம் அனுகூலமானது என்பது, பொதுக் கட்டமைப்பின் பத்தியாளர்களுக்குத்தான் வெளிச்சம். ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பொது வாக்கெடுப்பாக கருதி செயற்பட வேண்டும் என்ற அறிவித்தலை விடுத்துக் கொண்டு களத்துக்கு வந்த அரசியல் பத்தியாளர்கள், தற்போது பிரிந்துள்ள தமிழ் வாக்குகளை ஒன்றாக திரட்டுவதுதான் இலக்கு என்று தங்களின் கோரிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டு விட்டார்கள். ஆனாலும், அவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வல்லமை அரியத்திடம் இல்லாத போது, அவரை, ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது என்பது எதனை நோக்கிய அரசியல்?

வேட்பாளர் அறிமுக நிகழ்விலேயே கலந்து கொள்ளாத பொதுக் கட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், அரியத்துக்காக வாக்குச் சேகரிப்பை மனப்பூர்வமாக முன்னெடுப்பார்களா என்பது பிரதான கேள்வி. அரசியல் கட்சிகள், தொண்டர்களின் பங்களிப்பு இல்லாமல், பத்தியாளர்கள் சிலர் மாத்திரம் தமிழ் வாக்குகளை திரட்டும் வல்லமையோடு இருக்கிறார்களா என்றால், அதற்கு வாய்ப்புக்களே இல்லை. ஏனெனில், அந்தப் பத்தியாளர்களில் பலர், செம்மணி வளைவைத் தாண்டியே வெளியில் வராதவர்கள். அப்படியான நிலையில், கடந்த காலங்களில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டமைக்கு மாற்றீடான தெரிவாக மாத்திரமே அரியம் இருக்கப் போகின்றார். மற்றப்படி, அவரை பொதுக்கட்டமைப்பினரின் ஜனாதிபதி தேர்தலுக்கான பலியாடாகவே தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் காண்கிறார்கள். அதனை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்.

-காலைமுரசு பத்திரிகையில் ஆகஸ்ட் 11, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/08/blog-post_11.html

மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டி? – நிலாந்தன்.

3 months 1 week ago
Questen.png?resize=750,375 மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டி? – நிலாந்தன்.

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ராஜபக்சக்களின் வேட்பாளராக களமிறங்குவதை விடவும் ராஜபக்சக்களின் ஆட்களுக்கு தான் தலைமை தாங்குவது என்று முடிவெடுத்து விட்டது போல் தெரிகிறது.ரணில் ராஜபக்சக்களின் கட்சியைச் சாப்பிடத் தொடங்கி விட்டார். கட்சியைக் காப்பாற்றவும் ரணிலுடன் தமது பேரத்தைப் பலப்படுத்தவும் இளைய ராஜபக்சவாகிய நாமல் களமிறக்கப்படுகிறாரா? அவர் இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் கட்டுப் பணம் செலுத்திதியிருக்கவில்லை.

ராஜபக்சக்களின் வேட்பாளராக களம் இறங்கினால் தனக்கு பின்வரும் பிரதிகூலங்கள் உண்டு என்பது ரணிலுக்கு நன்றி தெரியும்.

முதலாவது, அவர் ராஜபக்சகளோடு சேர்த்து பார்க்கப்பட்டால் மேற்கு நாடுகள் அவரிடம் இருந்து சிறிது விலகித்தான் நிற்கும். ஏன் என்றால் மேற்கு நாடுகளும் இந்தியாவும் ராஜபக்சவை ஒரு விருப்ப தெரிவாகப் பார்க்கவில்லை. தவிர பன்நாட்டு நாணய நிதியமும் அப்படித்தான் சிந்திக்கின்றது. அனைத்துலக அளவில் ராஜபக்சக்கள் இப்பொழுதும் விருப்பத்தெரிவாக இல்லை. சீன விரிவாக்கத்தின் கருவிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.

மிகக்குறிப்பாக கடந்த வாரம் பங்களாதேஷில் இந்தியாவுக்கு அதிகம் இணக்கமான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு விட்டது. ஏற்கனவே மாலைதீவுகளில் இந்தியாவின் பிடி, பலவீனமடைந்து விட்டது. பங்களாதேஷிலும் நிலைமைகள் நிச்சயமற்றவைகளாகவே தெரிகின்றன. எனவே இந்தியா இலங்கையில் மீண்டும் சீன விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதை விரும்பாது.

இப்படிப் பார்த்தால் ராஜபக்சகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு ஜனாதிபதியை இந்தியா விரும்பாது. அமெரிக்கா விரும்பாது. மேற்கு நாடுகள் விரும்பாது. பன்னாட்டு நாணய நிதியமும் விரும்பாது. உலக வங்கியும் விரும்பாது.

இரண்டாவது பிரதிகூலம், ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து துரத்திய மக்கள் போராட்டக்காரர்கள் இப்பொழுது தேர்தல் கேட்கின்றார்கள். அவர்கள் தேர்தலில் பெரு வெற்றி பெறப் போவதில்லை. எனினும் சில ஆண்டுகளுக்கு முன் மக்களால் துரத்தியடிக்கப் பட்டவர்களின் பொது வேட்பாளராகக் களம் இறங்கினால் படித்த சிங்கள இளையோரின் வாக்குகளை இழக்கக்கூடிய ஆபத்து அதிகரிக்கும்.

மூன்றாவது பிரதிகூலம், ரணில், ராஜபக்சக்களோடு சேர்த்துப் பார்க்கப்பட்டால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.முஸ்லிம்களும் பெரிய அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

எனவே ராஜபக்சக்களிடம் இருந்து விலகி நிற்பதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று ரணில் எதிர்பார்க்கிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர் நாட்டை மீட்டிருக்கிறார் என்று ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கும் நம்புகின்றது என்று ரணில் நம்புகின்றார். ராஜபக்சக்களிடம் இருந்து விலகி நின்றால் தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் அதிகமாகச் சேகரிக்கலாம் என்று அவர் கணக்குப் போடுகிறார்.அதனால்தான் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகிறார்.முன்பு சஜித்துக்கு தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்கத் திட்டமிட்ட தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தன்னை நோக்கித் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் உண்டு.

இனி வரும் நாட்களுக்குள் மேலும் புதிய சேர்க்கைகளுக்கும் விலகல்களுக்கும் கட்சித் தாவல்களுக்கும் வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. இப்பொழுதும் ரணிலின் ஆட்பலம் ராஜபக்சகளின் கட்சியில் இருந்து கழட்டி எடுக்கப்பட்டவர்கள் தான். ஒற்றை யானையாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர் இப்பொழுது 90க்கும் அதிகமான தாமரை மொட்டுக்களைப் பிடுங்கி எடுத்து விட்டார். இன்னும் எத்தனை பேரைப் பிடுங்கி எடுப்பார்? வேறு எந்த எந்தக் கட்சிகளில் இருந்து பிடுங்கி எடுப்பார் ? என்பவையெல்லாம் இனிவரும் நாட்களில் தெரியவரும். பல்வேறு கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் மேலெழுந்தாலும் அவருடைய அடிப்படைப் பலம் தாமரை மொட்டுக் கட்சிதான். பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர் நாட்டை மீட்டதாகக் கருதும் நடுத்தர வர்க்கத்தின் வாக்கு தீர்மானகரமானது அல்ல. எனவே இப்பொழுதும் ரணிலின் பலம் ராஜபக்சக்கள் தான்.ஆனால் ராஜபக்சக்களை வெளியே தள்ளிவிட்டு அவர் ராஜபக்சக்களின் ஆட்களைத் தன்வசப்படுத்தி விட்டார். வெளித்தோற்றத்துக்கு அவர் ராஜபக்சகளோடு இல்லை என்று தோன்றலாம். ஆனால் அவருடைய அடிப்படைப் பலமே ராஜபக்சக்களின் கட்சிதான்.

அது ராஜபக்சகளின் தந்திரமாக இருக்கலாம் என்ற ஊகமும் உண்டு.ரணிலை வெற்றி பெற வைப்பதற்காக அவர்கள் அவ்வாறு ஒதுங்கி நிற்பதாகவும் சில ஊடகவியலாளர்கள் ஊகிக்கின்றார்கள்.ஆனால் அப்படி ஒரு தந்திரத்துக்காக தமது கட்சியைப் பலியிட ராஜபக்சக்கள் தயாரா?

கடந்த சில வாரங்கள் வரையிலும் தேர்தல் களத்தில் அனுரவும் சஜித்தும்தான் முன்னணியில் நின்றார்கள். மெய்யான போட்டி அனுரவிற்கும் சஜித்துக்கும் இடையில் என்றுதான் அபிப்பிராய வாக்கெடுப்புகள் தெரிவித்தன.இலங்கை போன்ற நாடுகளில் அபிப்பிராய வாக்கெடுப்புகள் திருத்தமாக அமைவது குறைவு. ஆனால் இந்தியாவில் சில பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள் நடாத்தும் அபிப்பிராய வாக்கெடுப்புகள் மிகத் துலக்கமானவைகளாக அமைவதுண்டு.

இப்பொழுது கிடைக்கும் செய்திகளின்படி சஜித்தும் அனுரவும்தான் முன்னணியில் நிற்கின்றார்கள். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் வெற்றிகளை கடைசி வாரங்கள், அல்லது கடைசி நாட்கள் தீர்மானிக்க முடியும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நிகழக்கூடிய திருப்பகரமான சம்பவங்கள் வெற்றியின் போக்கைத் தீர்மானித்து விடும்.

எனவே நாடு அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் நாட்களுக்குள் நுழைந்து விட்டது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்ட பின்னரான கடந்த பல தசாப்தங்களில்,பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாகக் கட்டுப்பணம் செலுத்தியது என்பது இதுதான் முதல் தடவை. ஒரு சுயேட்சையாக கட்டுப் பணம் செலுத்தியவர் பல்வேறு கட்சிகளின் பொது வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதில் வெற்றி பெறுவாராக இருந்தால்,நாமலும் கட்டுப் பணம் செலுத்துவராக இருந்தால்,தேர்தலில் நான்கு முனைப் போட்டிகளுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றனவா?

https://athavannews.com/2024/1395360

சுயநல அரசியலுக்காக அடுத்தகட்ட காய்களை நகர்த்தும் சுமந்திரன் | இரா மயூதரன்

3 months 1 week ago

 

நன்றி - யூரூப்

சமகால அரசியலோடு தொடர்புடைய உரையாடலாதலால் இணைத்துள்ளேன்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள்

3 months 1 week ago

புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள்

கடந்த பத்துவருட புள்ளிவிபரங்களின் சராசரிகளில் வருடாந்தம் 400 அகதிகள் இலங்கையில் இருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோருகின்றார்கள் இவர்களில் இலங்கையின் சிறுபான்மை இனமான 11.20 சதவீதமான இலங்கைத் தமிழர்கள் 65 சதவீதத்திற்கு மேற்பட்ட தொகையில் காணப்படுகின்றார்கள்.

இது தவிர நிபுணத்துவ வெளியேற்றத்தில் தமிழர்களது வெளியேற்றமும் கணிசமான சதவீதத்தினால் அதிகரித்தே வருகின்றது. இவை அனைத்தும் ஒரு முரண் நிலைத் தாக்கத்தினை தாய் நாட்டின் மீது மேற்கொள்கின்றது என்ற ஒரு மறைகாரணி தொடர்பில் நாம் சிந்திக்க மறந்ததொரு சமூகமாக மாறி வருகின்றோம். 

வடபுலத்தில் மட்டும் ஆண்டு தோறும் உற்சவங்கள் நடைபெறும் கோவில்கள் அண்ணளவாக 2800 என  திணைக்கள மயப்படுத்தப்பட்ட தரவுகள் காண்பிக்கின்றன. இவை அனைத்திலும் மகோற்சவம் அல்லது அலங்கார உற்சவம் என சராசரியாக 10 நாட்களுக்கு குறையாத திருவிழா நாட்களை காண்கின்றன.

தமிழ் மக்களது நிதி நடவடிக்கைகள்

வடபுலத்தில் மாத்திரம் அண்ணளவாக 6000 புரோகிதர் குடும்பங்கள் வாழ்வதாக தரவுகளின் அடிப்படையில் அறிய முடிகின்றது. அதில் தொழில் முறை புரோகிதத்தினை 2850 பேர் அளவிலேயே மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கோவில்கள் அனைத்தும் பக்தர்களுக்கு அமைவாக குறித்த காலப்பகுதிகளில் பாலஸ்தானம் செய்யப்பட்டு முறையாக கும்பாபிசேகம் காண்கின்றன. 

zero-impact-investments-by-diaspora-tamils-

சாராசரியாக ஒவ்வொரு வருடமும் 60 கோவில்களுக்கு வடபுலத்தில் மாத்திரம் இராசகோபுரம் கடந்த 10 ஆண்டுகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை தவிர அயல் நாட்டு செண்டி மேளம் தொடக்கம் இசைக் கச்சேரி வரைக்கும் இசைத்து நாகரீகமாக கொண்டாடப்படுகின்றது. 

இவைகள் அனைத்தும் ஒரு சிறிய பகுப்பாய்வுச் சுட்டிகளாக எடுத்து நோக்க வேண்டியதொரு நிலையில் இருக்கின்றோம் என்பதன் அடிப்படையில் புலம் பெயர் தேசத்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களது நிதி நடவடிக்கைகளில் 70 வீதமானவைகள் கோவில்களை மையப்படுத்தி மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றன. 

இவற்றின் ஊடாக பன்னிரண்டு இலட்சத்தினை அண்மித்த வடக்கு மாகாண வாழ் மக்களுக்குள் வெறும் 25000 பேருக்கு உட்பட்டவர்களுடைய அதாவது ஆலய நடவடிக்கைகளில் நேரடியாக ஊதியம் அல்லது நிதி பெறும் தரப்பினர் ஆனவர்கள் உடைய பயனுக்காக புலம்பெயர் தேசத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நிதியில் 70 சதவீதமானவை முன்னுள்ள இருபத்தைந்து வருடங்களில் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை தொகுத்து நோக்கும் போது எவ்வளவு பாரியதொரு தொகை இலங்கையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக அடையாளம் காண முடியும்.

வங்கிகளில் வைப்புக்கள் 

மக்கள் வங்கியின் தலைமைக் காரியாலய நிர்மாணிப்பில் வடபகுதியில் உள்ளவர்களது பாவனையில் இல்லாத வங்கிக் கணக்கு நிலுவைகளில் தான் கட்டப்பட்டதாக ஒரு கதையும் உண்டு ஆனால் இதனை உத்தியோகபற்றுடைய வகையில் உறுதிசெய்ய முடியவில்லை.

zero-impact-investments-by-diaspora-tamils-

இதில் தெளிவாக நாங்கள் அறிய வேண்டிய விடயம் யாதெனில் வங்கிகளில் வைப்புக்கள் இடுவதை மாத்திரம் முதலீடு எனக் கருதும் சமூகம் வடபகுதியில மாத்திரம் செறிந்திருக்கின்றது என்பது கண்கூடு. 

ஒரு பொருளாதாரத்தில் நிதி உட்பாய்ச்சல் ஏற்படும்போது அது உண்மையில் உள்ளகத்தில் புரளும் வேகத்திலும் கனதியிலும் தான் அதன் அனுகூலங்களை ஒரு சமூகம் அதியுச்சமாக அடைய முடியும்.

ஆனால் வரும் நிதியானது குறைந்தது இரண்டு அல்லது மூன்று கொடுக்கல் வாங்கல்களுடன் ஒரு இடத்தில் அடங்கி உறக்கம் கொள்கின்றது. இந்த  வடபுலத்து நிதி வருகையால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பினை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்றது. 

அதனை யாரும் மாற்றிவிட முடியாது அது நியமமானது. அடுத்த தளத்தில் குறித்த நிதியானது ஒரு மிக குறுகிய சனத்திரளுக்குள் மாத்திரம் உட்புகுந்து கொள்கின்றது. 

அது அவர்களது அதியுச்ச நுகர்வுகளுக்கு வெளிப்படுபவைகள் தவிர வேறு எங்கோ ஒரு வகையில் வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றன. இந்த நிதியானது புரள்வுக்கு உட்படும் ஒரு தொழில்துறையில் அல்லது சமூகத்திற்கு நிதியளிக்கும் தொழில்முயற்சியில் உட்புகுத்தப்படவில்லை.

அரசுக்கு வரி 

அனைத்துக்கும் மேலாக வருமானத்தினை காண்பித்து அரசுக்கு வரி செலுத்தும் வகைக்குள் கூட அகப்படுவதில்லை. வட பகுதியை நோக்கி புலம்பெயர் சமூகங்களில் இருந்து நகர்த்தப்படும் ஒவ்வொரு நிதியும் ஒரு திறனற்ற நிதியாக இருப்பதற்கு இந்த ஆலயங்கள் என்ற விடயம் பிரதானமான காரணமாகின்றது.

புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள் | Zero Impact Investments By Diaspora Tamils

கோவில் என்பது மத சூழலில் மத சடங்குகளை பின்பற்றுவதற்குரிய ஒரு அடிப்படையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பாகவும், வரலாற்றுக்காகவும், புனிதத்திற்காகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு விடயதானமுமாகும். 

தற்போதைய வாழ்க்கை முறைக்கு பக்தர்களுக்கு வழிபட நேரம் இல்லை ஆனால் கோவில்கள் பெருகிக் கொண்டு இருக்கின்றன. 

அவற்றின் பௌதீக வளங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை பரிபாலனம் செய்யும் முகமைகள் திறன் வழிகாட்டல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகளில் நுழைகின்றன. 

பல்வேறு தொழில் நுட்ப உதவிகளுடன் அவ்வளங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். கடவுள் இருக்கும் ஆலயத்தினையே கண்காணிப்பு கமராவால் கட்டுப்படுத்த வேண்டிய முரண்நிலை தத்துவத்திற்குள் நகர்கின்றது. 

இவை அனைத்திற்கும் காரணம் அவசியமற்ற வளவிருத்தியாகும். ஆலயங்களில் மணி அடிக்க ஆள் இல்லாததால் தானியங்கி மணி மேளம் செட் வாங்கி வருகின்றோம். 

சமூக வளர்ச்சி

சுவாமி சுற்றுவதற்கு ஆட்கள் இல்லாததால் புதிதாக சிறிய சிறிய பாரம் குறைந்த வாகனங்கள் செய்து வருகின்றோம். இன்னும் சில நாட்களில் வீதி வழித்தடத்திற்கு சேக்கிட் இட்டு அதில் ஒரு தொகுதியைப்பொருத்தி சுவாமியைச் சுற்ற விட்டு சூம் இல் திருவிழா பார்க்கும் ஒரு சமூக வளர்ச்சியில் நாங்கள் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.

புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள் | Zero Impact Investments By Diaspora Tamils

அனைத்து விகாரைகளிலும், அனைத்து பள்ளிகளிலும், அனைத்து தேவாலயங்களிலும் பூசைகள் மற்றும் அனுட்டானங்கள் ஒரு நியம நேரத்தில் இடம்பெறும் ஆனால் அனைத்து கோவில்களிலும் ஒரு நியம நேரத்தில் பூசை பார்க்க முடிவதில்லை,

காரணம் புரோகிதர் தட்டுப்பாடு, ஒவ்வொரு கோவிலாக தான் அவரால் தரிசனம் செய்ய முடியும், ஆலயத்தில் சுவாமி தரிசனம் பார்ப்பதை விடவும் புரோகிதர் தரிசனம் பார்ப்பதே நெருக்கடியாக மாறிவருகின்றது. 

ஆலயம் கூட்டுவதற்கு சம்பள ஆள், அன்னதானம் சமைப்பதற்கு சமையலாளர், சாப்பிடும் நபர்களுக்கு நிலத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாத உடல்வாகு, நெகிழிப் பைகளில் வீடுகளுக்கு அனுப்பும் துர்பாக்கியம், உண்மையாக உணவுக்கு நெருக்கடியாக சமூகம் இன்னமும் எங்கோ ஒருபுறம் வடக்கிலும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றது. 

ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் இவ்வாறான 500 பேருக்கு குறையாத தொகையுடைய அதிவறுமைக் குடும்பங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவை சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் உண்கின்றன. ஒவ்வொரு பாடசாலைகளிலும் காலை உணவினை பொருளாதார நெருக்கடி காரணமாக தவிர்த்து வரும் மாணவர்கள் 5 சதவிகிதம் பேர் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். 

இந்த பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு தனிலும் எங்களது சமூகத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை. பொது விடயங்களில் உதவி செய்கின்றோம், ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்று பல பல நிறுவனங்கள் அமைப்புக்கள் நாட்டிலும் சர்வதேசங்களிலும் முளைவிட்டு இருக்கின்றன.

அரசியல் தீர்வுகள்

ஆனால் இன்றுவரை முறையான முன்னேற்றத்தினை எமது சமூகத்தில் காண்பிக்க முடியவில்லை என்பது வருத்தமானது. இதனை பொறுப்புடன் பகுப்பாய்வு செய்து உத்தியோகபற்றுடைய வகையில் தரவுகளை வெளியிடவேண்டிய பல்கலைக் கழகங்கள் அரசியல் முனைவாக்கம் செய்கின்றன, ஆலயங்கள் அத்திரட்சியால் நிதி காண்கின்றன, அரசியல்வாதிகளுக்கு இவ்விடயதானம் தெரியவே இல்லை, அவர்கள் வாழ்க்கையை வாழவே முடியாத ஒரு சமூகம் இருக்கும் போது அதன் அரசியல் தீர்வுதேடி அலைகின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்களின் பூச்சிய விளைவு முதலீடுகள் | Zero Impact Investments By Diaspora Tamils

அதனை நாட்டிலும் பற்றாக்குறைக்கு சர்வதேசத்திலும் தேடிச் சென்று ஆற்றுப்படுத்த முனைவதாக காண்பிக்கின்றார்கள். கோவில்கள் மீதான அனைத்து நிதியீட்டங்களும் ஒரு வகையில் மட்டுப்படுத்தப்பட்டு கிரமப்படுத்தப்பட்டு முதலீடுகள் தொடர்பாக மீளாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும்.

மிக முக்கியமாக பொது வேட்பாளர் நிறுத்துவது தொடக்கம் அரசியல் தீர்வுகளை பெற்றுத்தருபவர்கள் முதல் வடக்கு கிழக்கினை கனவுகாண்பவர்கள் வரைக்கும் சற்றே விழிப்படைந்து கனவில் இருந்து வெளிவந்து ஒரு முழுமையான சமூக பொருளாதார ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.

அதனை ஒரு சிறந்த நிபுணத்துவம் மிக்க முறையில் மேற்கொள்ள வேண்டும். அதன் விளைவுகளை அடிப்படையாக கொண்டு தமிழ் சமூகம் ஒற்றுமையாக ஒரு திட்டம் வகுத்து பொருளாதார மேம்பாட்டிற்கு பணியாற்ற வேண்டும்.

சர்வஜன வாக்கெடுப்பை கோரும் தமிழ் தரப்பு முறையானதொரு சமூக பொருளாதார ஆய்வினை முறையான வகையில் மேற்கொண்டு அவற்றின் அடைவுகளின் பால் செயலாற்றினால் பதினொரு சதவீத மக்களது கைகளில் இலங்கையின் பொருளாதாரத்தினை தங்கியிருக்க வைக்க முடியும். 

முழுமையுமாக பொருளாதார போசாக்கின் ஊடாக தமிழ் மக்களது அரசியல் பிரச்சினை அணுகப்பட வேண்டும்.  இலங்கை அரசினால் தமிழ் மக்களது செயற்பாட்டினை முடக்கிவிட முடியாது காரணம் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களது தொகையிலும் கணிசமானவர்கள் சர்வதேசங்களிலும் வாழ்கின்றார்கள். 

புத்தியுடைய ஒரு சமூகமாக ஒற்றுமையாக நாம் பயணிப்போம் ஆனால் எமது பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய தகுதி உடையவர்களாக தமிழர்கள் ஆகிய நாமே மாறிவிட முடியம். இல்லையேல் செண்டி மேளத்திற்கும் இராச கோபுரத்திற்கும் திருவிழாக்களில் தமன்னாக்களிற்கும் நிதி வழங்கும் ஒரு சமூகமாக தான் வாழ்வோம்.  
 

https://tamilwin.com/article/zero-impact-investments-by-diaspora-tamils-1723265938

ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள் - சூ.யோ. பற்றிமாகரன்

3 months 1 week ago

ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள்:  வரலாற்றைத் திரிபுபடுத்தும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்காக மீள் நினைவூட்டுகின்றோம்- அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
August 9, 2024

ஈழத்தமிழர்களின் பிரித்தானிய காலனித்துவத் திடம் 1796 முதல் 1948 வரை 152 ஆண்டுகள் நேரடியாகவும் 1972 வரை 176 ஆண்டுகள் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்பு மூலம் பிரித்தானிய முடிக்குரிய அரசுடனான பகிர்வுடனும் இருந்து வந்த ஈழத் தமிழர்களின் இறைமையைச் சிறிமாவோ பண்டாரநயாக்காவைப் பிரதமராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக்கட்சிகள் கூட்டணி சோல்பரி அரசியலமைப்பையும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலின் கோடீஸ்வரன் வழக்குத் தீர்ப்பையும் வன்முறைப்படுத்தி, காலனித்துவ பிரித்தானிய அரசால் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாது உருவாக்கப்பட்ட  இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்ற மரபு ரீதியான வளாகத்துக்கு வெளியே நவரங்கலா என்னும் மண்ட பத்தில், பாரளுமன்றம் என்ற பெயரையும் தம் விருப்புக்குச் சிறிலங்காத் தேசிய சபை என மாற்றி ஈழத்தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றாத சிறிலங்காச் சிங்கள பௌத்த குடியரசு பிரகடனத்தின் மூலம் ஈழத்த மிழர்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியை இழந்த  ஆக்கிரமிப்பு அரசை 22.05.1972 இல் பிரகடனப்படுத்தினர். இதன் விளைவாக அரசற்ற தேசஇனமாக்கப்பட்ட (Nation Without State)  ஈழத் தமிழர்களிடம் அவர்களின் இறைமை மக்கள் இறைமையாக வந்தடைந்தமை வரலாறு.

சிறிலங்காவின்  சிங்கள பௌத்த நாடாக்கும் 1972ம் ஆண்டு  அரசியலமைப்பு ஈழத்தமிழர் களால் என்றுமே ஏற்கப்பட மாட்டாதது என்பதை உலகுக்கு வெளிப்படுத்த  அக்காலத்து ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவராக விளங்கிய சா.ஜே. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பு ரிமையை 22.10.1972 இல் விட்டு விலகி அந்தத் தொகுதிகான தேர்தலை ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான அடையாளக் குடிய யொப்பமாக உலகுக்கு அறிவித்தார். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறை மையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர் தங்களில் நிலைகொண்டுள்ள இறைமையின் அடிப் படையில் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் தங்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவுசெய்யும் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்யும் அரசியல் போராட்டத்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்ப சனநாயக வழியில் இவ் அறிவிப்பு தொடக்கியது.

இதனை அடுத்து ஈழத்தமிழர்களின் பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பு ஆட்சியை உறுதிப் படுத்தவெனத் திட்டமிட்ட சிறிலங்கா அரசாங்கம் 1974ம் ஆண்டு ஜனவரி 10 நாள் யாழ்ப் பாணத்தில் நடாத்தப் பெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தனது பண்பாட்டு இனஅழிப்பைத் தொடக்கி 11 ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியது. இப்பண் பாட்டு இனஅழிப்பு ஈழத்தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாப்பதற்கான ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் 1974 முதல் மக்கள் இறைமை நிலை கொண்டுள்ள வரலாற்றுத் தாயகத்தை மீட்டெடுக்கும் மண்மீட்புக்கான ஆயுதப் போராட்டமாகத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் பரிணாம வளர்ச்சி பெற வைத்தது.

காங்கேசன்துறை அடையாளக் குடி யொப்ப இடைத்தேர்தலை நடத்தாது மூன்று ஆண்டுகள் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து 06.02. 1975இல் நடாத்திய பொழுது பெற்ற 72.55 வீத மான வாக்குகளான 25927 வாக்குகள் அளித்த 15470 பெரும்பான்மை வாக்குகளால் பெற்ற மக்கள் ஆணையைக் கொண்டு அதுவரை கால் நூற்றாண் டாக ஈழத்தமிழர் சிங்களவர் இறைமைகள் பொது வாக இருக்கும் நிலையே ஈழத்தமிழர்களின் அடிப் படை உரிமைகளை மறுத்து அடிமைகளாகச் சிங்கள அரசுக்கள் ஈழத்தமிழர்களை நடாத்த இட மளிப்பதால் சிறிலங்காப் பாராளுமனறத்தில் இருந்து விலகித் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமைப்பது தனது கட்சியின் செயற்பாடாக அமையுமென்ற ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைய சனநாயக வழியில் சிறிலங்காப் பாராளுமன்ற அமர்வில் உலகுக்கு வெளிப்படுத்தி பாராளு மன்றத்தை விட்டு வெளியேறினார்.

இதனை அடுத்து சிறிலங்கா அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பொலிசாரைப் பயன்படுத்தியும் காடையர்களைப் பயன்படுத்தி யும் மீளவும் அரசபயங்கரவாதத்தை ஈழத்தமிழர், மலையகத் தமிழர், தமிழ் பேசும் இலங்கை முஸ்லீம்கள் மேல் 1975க்கும் 1976க்குமிடை வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற் படுத்தி அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையாகச் செயற்படுத்தியது.   சித்திரவதைகளையும் காரண மின்றிக் கைது செய்து நூற்றுக்கு மேற்பட்டோரை விசாரணையின்றித் தடுத்து வைத்தலையும் கோயிலில் வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்த வங்கி எழுதுவினைஞர் பரராசா மற்றும் மலையகத் தோட்டத் தொழிலாளி இலட்சுமணன் ஆகியோரைச் சுட்டுக் கொன்றும் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 7 முஸ்லீம்களைக் கொன்றும் வெளியில் இரண்டு முஸ்லீம்களை உயிருடன் எரித்தும் முஸ்லீம்களின் 200 வீடு களையும் 50 கடைகளையும் அழித்தும் இந்த அரசபயங்கரவாதம் இடம்பெற்றதெனச்  சச்சி பொன்னம்பலம் அவர்களால் எழுதப்பெற்று இலண்டன் தமிழர் தகவல் மையத்தால் 1983இல் வெளியிடப்பெற்ற சிறிலங்கா – தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும் என்னும் நூல் பக்கம் 185இல் பதிவாக்கியுள்ளது.

இந்த அரசியல் சூழ்நிலையிலேயே ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்தை 1976இல் ஈழத்தமிழர்களின் முக்கிய அரசியல் கட்சிகள் தமிழர் கூட்டணியாக ஒருங்கிணந்து வட்டுக் கோட்டையில் நடாத்திய சந்திப்பில் ஏற்று அந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை பண்ணாக மத்தில் நடாத்திய தமிழர் கூட்டணி மாநாட்டில் ஈழத்தமிழர்களின் அரசியல் கொள்கையாக உலகுக்கு அறிவித்து தங்கள் கூட்டணியையும் ஈழத்தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஈழத் தமிழரின் விடுதலைக்காகப் போராடும் அமைப் பாகப் பெயர் மாற்றம் செய்தன.

தொடர்ந்து   1977 இல் ஈழத்தமிழர் தாயகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை “ஈழதேச இனம் ஏற்கனவே அவர்களிடம் நிலை கொண்டுள்ள இறைமையைப் பயன்படுத்தி ஈழதேச மக்கள் தங்களை விடுவித்துச் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற, சோசலிச அரசை தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் சனநாயக வழியிலோ அல்லது வேறு எந்த வழி களிலோ  நிலைப்படுத்துவதற்கான மக்கள் ஆணை” பெறும் குடியொப்பமாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்தது.

இவ்விடத்தில் தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் தேர்தல் கொள்கைத் திரட்டினை மீள்பதிவு செய்ய வேண்டியது சமகாலத்தின் தேவையாகிறது.

“தமிழ்த்தேசஇனம் தன்னுடைய தாயகத் தில் தன்னுடைய தன்னாட்சி உரிமையின் அடிப் படையில் தன்னுடைய இறைமையை நிலைநிறுத்த வேண்டும் என்னும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிபைச் சிங்கள அரசாங்கத்துக்கும் உலகுக்கும் அறிவிப்பதற்கான ஒரே வழியாகத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்தல் உள்ளது. அளிக்கப்படும் இவ்வாக்குகளால் தெரிவாகும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இலங்கைத் தேசிய சபையின் உறுப்பினர் கள் என்ற இருப்புடன் தங்களைத் தமிழீழத் தேசிய சபையினராகவும் கட்டமைத்து தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பை வரைந்து தமிழீழத்தின் சுதந்திரத்தை அந்த அரசியலமைப்பை அமைதி யான வழிகளாலோ அல்லது வேறெந்த நேரடி வழிகளாலோ அல்லது போராட்டத்தாலோ செயல் முறைக்குக் கொண்டு வருவர்”

இந்த தேர்தல் கொள்கை 86.7 வீத தமிழர் தாயக மக்கள் வாக்களிப்பில் பங்கு பற்றி 24 தொகுதிகளில் 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்ததின் மூலம் ஈழத்தமிழ் மக்களின் குடியொப்ப ஆணையாக தமிழீழ அரசு என்பது இன்று வரை உள்ளது. இந்த மக்களாணையை முன்னெடுக்கும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டம் 1978 முதல் 2009 வரை இலங்கைத் தீவு இரு அரசுக்களின் இருப்பு என்ற வரலாற்று உண்மையின் அடிப் படையில் தமிழீழத் தேசியத்தலைவராக வேலுப் பிள்ளை பிரபாகரனை கொண்ட சீருடை தாங்கிய முப்படைகளும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் சட்டவாக்க சட்ட அமுலாக்க முறைமைகளும் நீதிமன்றங்களும் கொண்ட நடைமுறையரசை உலகுக்கு வெளிப்படுத்தியது. 1992ம் ஆண்டு உலக தந்திரோபாய அளவை நூல் “ இலங்கையில் இரு அரசுக்கள் உள்ளன அதனைக் கொழும்பு அரசு ஏற்குமா?” என்கிற கேள்வியை எழுப்பியதும் 2009ஆம் ஆண்டு: முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு வரை பல்வேறு நிலைகளில் ஈழத் தமிழர்களின் இருப்பைத் தாக்கி அழிக்கும் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இன அழிப்புக்கள் வழி 31 ஆண்டுகள் சிறிலங்கா தனது ஈழத்தமிழ் மக்கள் மேலான “மக்கள் மேலான போரை” நடாத்தி இறுதியில் 17.05.2009 இல் 176000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனஅழிப்புச் செய்து தமிழீழ அரசின் அனைத்துக் கட்டுமானங்களையும் செயலிழக்க வைத்து அன்று முதல் இன்று வரை மீளவும் படைபலத்தின் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவைப் பெறும் தந்திரேபாயத்தைத் தொடர்கின்றது.

இந்த வரலாற்று உண்மையினை மறவாது அது தந்துள்ள பாடங்களின் அடிப்படையில் சனநாயக வழிகளில் ஈழத்தமிழர்களின் இறை மையை மீளுறுதி செய்யும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை தொடர வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளவர் களாகவே தமிழர் தாயகத்து எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் ஒற்றுமை யாக இல்லாவிட்டாலும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் ஒருமுகப்பட்டு  அரசியல் பணி யாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். ஆனால் அதற்குச் சிறிலங்காவின் அரசியலமைப்பு ஆறாம் திருத்தமும் சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களும் ஈழத்தமிழரின் அடிப்படைய மனித உரிமைகளை மறுக்கின்ற சூழலில் உலகெங்கும் அரசியல் புகலிடம் கோரியும் மறுக்கப்பட்ட கல்வி தடுக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களாகவும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அந்த அந்த நாட்டின் குடிகளாகக் கூட தங்களின் பூர்விகத் தாயகத்துக்கானதும் அங்கு வாழும் தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பின       ர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊரவர்களுக்காகவும் உண்மைக்கான நீதிக்கான குரலாக ஒலிக்க முடியாமலும் புனர்வாழ்வு கனர் நிர்மாணப் பணிகளில் அடிப்படைய மனித உரிமைகளைப் பேணும் நிலையில் கூடச் செயற்பட இயலாமலும் 31 நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் போராட்ட அமைப்புக்கள் செயற்பாட்டாளர்கள் மேலான பங்கரவாதிகள் என்ற சட்டங்கள் தடுக்கின்றன.

இந்தச் சூழ்நிலை தாயகத்திலும் உலகிலும் ஈழத்தமிழ் மக்களின் ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடு மூலம் உலக மக்களுக்கு உண்மைகள் உணர்த்தும் செயற்பாட்டால் மட்டுமே மாற்றப்பட முடியும். இது தவிர எந்த நாடுகள் தங்கள் சந்தை மற்றும் இராணுவ நலன்களுக்காக உலகின் பாதிக்கப்பட்ட மக்கள் இனமொன்றின் தன் தாயகத்தில் வாழ்வதற்கான போராட்டத்தைப் பிரவினையென்றும் பெரும்படைகளால் நடாத் தப்படும் அழிவை தடுக்கும் ஆயுத எதிர்ப்பைப் பயங்கரவாதம் என்றும் இந்தத் தடைகளைப் போட்டு சிறிலங்காவுக்கு தங்கள் நிபந்தனையற்ற ஆதரவுகளை எல்லா நிலையிலும் வழங்கி அதனை சிங்கள இனத்தின் நாடு, பௌத்த ஆகமச் சட்டங்களை அனைவரும் ஏற்று வாழ வேண்டிய நாடு என்ற சிறிலங்கா அரசின் ஈழத்தமிழின இறைமை மறுப்புக் கொள்கைளையும் கோட்பாடுகளையும் ஊக்கப்டுத்தி வருகின்றனவோ அவற்றுடனனோ அவற்றின் மேலாதிக்கங்கள் உள்ள எந்த ஒரு அனைத்துலக நிறவனங்கள் அமைப்புக்களுடனோ ஒட்டி உறவாடி ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியாது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகிலேயே மக்கள் சத்தி பெறுவதற்குத் தடையாக உள்ள அறியாமை, வறுமை என்னும் மானிடத்தின் இரண்டு பெரும் பகைமைகளுக்கு எதிரானதாகவே எப்பொழுதும் எந்தச் சூழந்நிலையிலும் எந்த அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு இடையிலும் செயற்பாடுகள் அமைய வேண்டும். இதற்கு சமகாலத்துக்கான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அறிவுகளில் பயறிசிகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இளையவர்களின் பங்களிப்புக்கு முதியவர்கள் இடமளித்து வழிகாட்லுக்கும் நெறிப்படுத்தலுக்கும் தங்கள் அனுபவங்களைப் பகிரும் பண்பாடு பரிணமிக்க வேண்டும்.

சிறிலங்கா அரசத்தலைவர் தேர்தல் மட்டு மல்ல அதன் பாராளுமன்றத் தேர்தல்களும் கூட எக்காலமும் ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக் கம், தேசிய நீக்கம், பொருளாதார ஆக்கிரமிப்பு, அரசியல் பிளவுகள், ஆன்மிக மயக்கங்களை வளர்க்கின்ற தன்மை கொண்டதாகவே வரலாற் றுப் பதிவாகியுள்ளது. இதனால் ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் சமஸ்டி, பதின்மூன்றாவது திருத்தம், என்கின்ற புலம்பல்களை விடுத்து ஈழத்தமிழரின் வரலாற்றின் அனுபவங்களின் உண்மைகளையும் மக்களின் விருப்புக்கள் தேவகைளின் அடிப் படையிலும் தப்பிப்பிழைக்கும் வாழ்வியல் நிலையிலும் உண்மைகளும் நீதியும் நிலைக்கத் தக்க வகையில் செயலாற்ற வேண்டிய நேரமிது என்பதை அனைவருக்கும் மீள் நினைவுறுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கு. ஈழத்தமிழர் இறைமையை முன்னிறுத்தி சனநாயக வழிகளில் வன்முறைகளற்று செயல்கள் மூலம் முயலுங்கள் முடியாதது என்று எதுவுமேயில்லை.
 

https://www.ilakku.org/ஈழத்தமிழர்-இறைமை-மீட்புப/

Checked
Thu, 11/21/2024 - 17:45
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed