புதிய பதிவுகள்2

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

1 day 16 hours ago
ரஹானே கட்டாயமாக அவுட்டை ரிவியூ செய்திருக்கவேண்டும்! ரசல்ஐ எதுக்காக விளையாடுகிறார்களோ தெரியவில்லை! பந்தும் போடுவதில்லை. ஐந்து ஒவர்கள் இன்னமும் இருக்கும்போது முதல் பந்துக்கே இப்படியா அடிப்பது! மொயீன்அலியை கட்டாயமாக விளையாடும் அணியில் சேர்க்க வேண்டும். அவர்தான் KKR இற்கு லக்கி சாம்!! குய்ந்தோன் டீகோக்க்கும் கலைக்கப்பட வேண்டிய ஒருவர்! ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாசை விளையாடலாம்!

டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!

1 day 17 hours ago
என்ன ஒரு நேர்த்தி, பாதணியால் உரசுவதுபோல் இருக்கு ......... ஆனால் எளிமையாயும் இருக்கு .......... !

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 day 17 hours ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ஆண் : நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ஆண் : தாயாரைத் தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாத போதும்…ம்ம் தாயாரைத் தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாத போதும் தானென்று சொல்லாத போதும் ஏனென்று கேட்காமல் வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்……இறைவன் ஆண் : உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்….ம்ம் உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லாத இடம் தேடி வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்…….இறைவன் ........! --- பிள்ளைக்கு தந்தை ஒருவன் ---

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

1 day 17 hours ago
சிறுபான்மை மக்களுக்கான நீதியை பெறவே முடியவில்லை: சர்வதேச விசாரணை வேண்டும் - சுமந்திரன்Published By: J.G.STEPHAN 10 DEC, 2020 | 04:53 PM (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/140568/sfkghjghj.jpg அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதியானதாக இல்லை என்பது சபையில் பேசியவர்களின் கருத்தில் தெரிகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. அதேபோல் மனித உரிமை வழக்குகள் மாகாண மேல் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் குறித்த முரண்பாடுகள் எமது நாட்டின் மீதான தவறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறும்பான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. தசாப்த காலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளது. அரசியல் தலையீடுகள் நீதிமன்றங்கள் மீது பிரயோகிக்கப்படுவதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகின்றது என கருதுகிறேன். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்பட்டும் வருகின்றது. இது குடியுரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரையில் நீட்டிக்கப்படுகின்றது. அண்மைக்கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டாலும் கூட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் எழுகின்ற நேரங்களில் எல்லாம் நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அவரால் அதனை மாத்திரமே செய்ய முடியும். முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் குறித்த பிரச்சினை எழுந்த நேரமும் அதனையே அவர் செய்தார். பெரும்பான்மையின் நிலைப்பாட்டுக்கு அமைய நியாயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோல் வேறு சில காரணிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பவர்கள் அரச பாதுகாப்பிலேயே உயிரிழக்கின்றனர் என்றால் அது பாரிய பிரச்சினையாகும். அண்மையில் மஹர சிறையிலும் கைதிகள் கொல்லப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ சிறையில் 27 பேர் கொல்லப்பட்டனர் . 2012 வவுனியா சிறையில் நிமலரூபன், டில்ருக்ஷன் கொல்லப்பட்டனர். இவர்கள் அடித்து கொல்லப்பட்டனர். கை கால்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதற்கான சாட்சியங்கள் உள்ளது. இவ்வாறு பட்டியலை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியும். அரசாங்கம் ஜனநாயகத்தை உயரியதாக கருதுவதாக கூறுகின்றது. சிறந்த நீதிமன்ற கட்டமைப்பு உள்ளதாக கூறுகின்றது. அவ்வறு இருந்தும் எவ்வாறு சிறைக்குள் கொல்லப்படும் நபர்கள் குறித்த உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்காது இருக்க முடியும். நீதிமன்ற சுயாதீனமே இல்லாத ஒரு நாட்டிற்கு எதற்கு நீதி அமைச்சர் என்ற கேள்வியே எழுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்பது மிக மோசமான நீதி கட்டமைப்பாகும். திருகோணமலை ஐந்து மாணவர் கொலை விவகாரத்தில் நீதி எங்கே? கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விடயத்தில் என்னவானது? சிவநேசன் விடயத்தில் என்னவானது? ரவிராஜ் விடயத்தில் நீதி எங்கே? பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விசாரணைகள் என்னவானது? லசந்த விக்கிரமதுங்க, கீத் நோயர், பிரகீத் எக்னளிகொட, 34 தமிழ் ஊடகவியலாளர்கள் காணமால் போனமை, கொல்லப்பட்டமை குறித்தெல்லாம் ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை. ஒரு சிலரது கொலைகளில் பாதுகாப்பு படையினர் தொடர்புபட்டுள்ளனர். இந்த விடயங்களில் குறைந்த பட்சம் விசாரணைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஜனநாயக, சட்ட வல்லமை கொண்ட நாடென்றால் ஏன் இவ்வாறு நடக்கின்றது. எனவே நீதிமன்றம் மீது நம்பிக்கை எமக்கு இல்லை என நேரடியாக எம்மால் கூட முடியும். இதற்கான எம்மை நீங்கள் திட்ட முடியாது. இந்த நாட்டில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச குற்றங்கள் பல நடந்துள்ளது. அதனால் தான் சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம். சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கோருகின்றோம். அதனை நீங்கள் வேண்டாம் என கூற முடியாது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் வெளியாகிவிட்டது. நாம் புதிதாக கூறத் தேவையில்லை, நீங்களே அதனை கூறிக்கொண்டுள்ளீர்கள் என்றார். https://www.virakesari.lk/article/96329

தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்

1 day 17 hours ago
ஒருவரை எமக்கு பிடிக்காவிட்டால் நேர்மையாக அவரது அரசியலை விமர்சிக்காமல் அவர் மீது ஆதாரமில்லாமல் அவதூறுகளை வீசி, பின்னர் துரோகி பட்டம் கொடுத்துப் பின்னர் போட்டு தள்ளு. இதுவே எமக்கு காலாகாலமாய் சொல்லிக் கொடுக்கப்பட்ட அரசியல் பாடம். அதை தான் நாம் செய்வோம். என்ன செய்ய, கடைசியில் சொல்லப்பட்டதை செய்யவோ செய்விக்கவோ முடியாமல் வயிறு எரிஞ்சு நாங்க படுற அவஸ்தை தெரியாமல் ஆதாரம் அது இது என்று நீங்க வேற தொல்லை. 😂

 ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை

1 day 18 hours ago
கண்டன அறிக்கை : உண்மைகளும் பொய்களும் April 15, 2025 ஷோபாசக்தி என்மீதான ஒரு கண்டன அறிக்கை நேற்று இணையத்தில் ‘அதற்கமை பெண்ணியக் குழு’ என்றொரு அமைப்பால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கண்டன அறிக்கை குறித்து எனது தரப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கமொன்றுக்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன். எவரையும் அவதூறு செய்வதோ, குணச்சித்திரப் படுகொலை செய்வதோ, கடந்தகால உறவுகளின்போது நிகழ்ந்த தனிமனித அந்தரங்கங்களையோ, உணர்வுச் சிக்கல்களையோ, முரண்களையோ பொதுவெளியில் அறிக்கையிட்டு, கீழ்மையான கிசுகிசுப் பசி பிடித்து அலையும் சமூக வலைத்தளவாசிகளுக்கு மலிவுத் தீனி போடுவதோ எனது பதிவில் நிகழவே கூடாது என்ற கவனத்துடனும் பொறுப்புடனுமே இதை எழுதுகிறேன். கண்டன அறிக்கையில் 116 கையெழுத்துகள் என்பது பெருந்தொகைதான். ஆனால், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் முக்கால்வாசிப் பேர்களை நான் முன்பின் அறிந்ததில்லை. அவர்களுக்கும் என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களில் பெரும்பாலானோர் கேரளா – டில்லி – வங்காளம் போன்ற இடங்ளைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். அறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் மிகுதிக் கால்வாசிப் பேர்களில் பெரும்பாலானோரை எப்போதாவது இலக்கியக் கூட்டங்களில் அல்லது புத்தகச் சந்தையில் பார்த்திருப்பேன். அவ்வளவே அறிமுகம். அதேவேளையில், கண்டன அறிக்கையில் கையொப்பமிட்டிருப்பவர்களில் ஒருசிலர் என்னோடு இணைந்து பல வருடங்களாகக் கலை – அரசியல் செயற்பாட்டிலும், நெருங்கிய நட்பிலும் உறவிலும் தோழமையிலும் இருந்தவர்கள். இவர்களிடம் என்னுடைய அலைபேசி எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் இருக்கின்றன. இவர்களில் பலர் இந்த விநாடிவரை எனது முகநூல் நட்புப் பட்டியலிலும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் ஒரே ஒருவருக்குக்கூட கண்டன அறிக்கையில் கையெழுத்திட முன்பாக என்னிடம் எனது தரப்பு விளக்கத்தைக் கேட்டு அறிய வேண்டும் என்று தோன்றவில்லை. முதலாளித்துவ நீதிமன்றங்களில் கூட குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு விளக்கமளிக்கப் பல வாய்ப்புகளைக் கொடுத்த பின்பே தீர்ப்பிடுகிறார்கள். ‘அதற்கமை பெண்ணியக் குழு’வின் விசாரணை மன்றத்திலோ அவ்வாறான வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், நேரடியாகவே ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பிடும் நடைமுறை அமலில் இருக்கலாம். ஆனாலும், நான் எனது தரப்பைச் சொல்லித்தான் ஆகவேண்டும். எனது தரப்பை அறிந்துகொள்ளாது முன்னரும் ஒருமுறை ‘பாலியல் குற்றவாளி’ எனச் சமூக வலைத்தளங்களில் நான் அநீதியாகத் தீர்ப்பிடப்பட்டிருக்கிறேன். அந்த நிகழ்வை முதலில் இங்கே சுருக்கமாகக் குறித்துக் காட்டிவிடுகிறேன். ஏனெனில், அந்த நிகழ்வுக்கும் தற்போதைய கண்டன அறிக்கைக்கும் நெருங்கிய ஒற்றுமையிருக்கிறது. அந்தப் பாலியல் குற்றச்சாட்டு இன்றைக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்மீது சுமத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக என்மீது தொடர்ந்து அந்தக் குற்றத்தைச் சுமத்தினார்கள். தனிநபர்களோடு அரசியல் இயக்கங்களும் என்மீது அந்தக் குற்றத்தைச் சுமத்தின. ம.க.இ.க. மற்றும் சார்லஸ் ஆன்டனி போன்ற மே 17 இயக்கத்தின் அன்றைய முக்கிய செயற்பாட்டாளர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி என்மீது குற்றம்சாட்டினார்கள். குற்றச்சாட்டும் மிகக் கடுமையானதுதான். பிரான்ஸ் தமிழச்சியிடம் நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் என்பது குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுத்தேன் (Link). அந்தக் குற்றச்சாட்டு திட்டமிடப்பட்ட கூட்டு அவதூறுக் குரல் என்றேன். ஆனாலும், அந்தப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்து இன்றுவரை என்மீது பழி சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு அவ்வப்போது சற்றே தூசி தட்டப்பட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி மறுபடியும் யூ – டியூப் நேர்காணல்களில் தோன்றுகிறார். என்னோடு சேர்த்து என்னுடைய தோழர்களில் பலர் அவதூறுகளால் தாக்கப்படுகிறார்கள். அதைத் தாண்டியும் சகட்டுமேனிக்குப் பலரின்மீது தமிழச்சியால் பாலியல் குற்றம் சுமத்தப்படுகிறது. இவை எல்லாற்றுக்கும் ஆரம்பம் என்மீதான தமிழச்சியின் அவதூறுகளுக்கு 2010-இல் நூற்றுக்கணக்கான நபர்களும் சில அரசியல் இயக்கங்களும் கூட்டாகக் களம் அமைத்துக் கொடுத்ததே. அதுதான் இப்போது மறுபடியும் இந்தக் கண்டன அறிக்கை மூலம் நிகழ்த்தப்படுகிறது. கடந்த வருடம் பாரிஸில் நடந்த 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘பாலியல் சுரண்டல்: எதிர்கொள்ளலும் பொறுப்புக்கூறலும்’ என்றொரு அமர்வு நிகழ்ந்தது. அந்த அமர்விலும் தமிழச்சி என்மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக் குறித்த கேள்வி மறுபடியும் ஒருமுறை எழுப்பப்பட்டது. அமர்வை ஒருங்கிணைத்த விஜி அந்தக் கேள்விக்கு “தமிழச்சியின் குற்றச்சாட்டு ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்பது எங்களுக்குத் தெரியும்” எனப் பதிலளித்தார். அதாவது, நீண்ட பதினைந்து வருடங்கள் நான் பொய்ப் பழியைச் சுமந்து அலைந்ததன் பின்னாக, முதற்தடவையாக ஒரு பொது அரங்கில் என்மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது எனச் சொல்லப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவரை காலமும் தமிழச்சியின் இந்தப் பொய்க் குற்றச்சாட்டைத் தோன்றியபோதெல்லாம் தங்களது கையிலெடுத்து என்மீது அவதூறை வீசியெறிந்தவர்களும் தற்போதைய இந்தக் கண்டன அறிக்கையில் கையழுத்திட்டிருப்பவர்களுமான மோகனதர்ஷினி, பாரதி சிவராஜா, அஞ்சனா போன்றோர் தங்களது அந்த அவதூறுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்களா என்ன! இல்லை. இப்போதும் அந்த அவதூறுகள் முகநூலில் கிடக்கின்றன. இந்தப் பொறுப்பின்மையின் இன்னொரு வடிவம்தான் இப்போதைய கண்டன அறிக்கை. இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார் என அறிக்கையில் விபரமில்லை. இதில் கையொப்பமிட்டிருக்கும் அனைவருமே இணைந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கண்டன அறிக்கையே மின்னஞ்சலில் பலருக்கும் அனுப்பப்பட்டுக் கையெழுத்துகள் கோரப்பட்டன. லீனா மணிமேகலையின் மின்னஞ்சல் மூலமாக எனது தோழமைகள் சிலருக்கும் இந்தக் கண்டன அறிக்கை அனுப்பப்பட்டுக் கையெழுத்துக் கோரப்பட்டிருந்தது. எனவே, கையெழுத்திட்டவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து இந்த அறிக்கையைத் தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அறிக்கையின் உண்மைத்தன்மையைத் தீர விசாரித்துத் தெரிந்துகொள்ளாமல் Solidarity என்ற அடிப்படையில் பெரும்பாலான கையெழுத்துகள் பதிவாகியிருக்கின்றன. பகிரங்கமான ஓர் அரசியல் நிகழ்வுக்கு எதிராக, அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக இந்தமுறையில் ஒரு கூட்டுக் கண்டன அறிக்கை வெளியாவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதுதான் நடைமுறை. ஆனால், உறவிலிருந்த இரு நபர்களுக்கு இடையேயான அந்தரங்கப் பிரச்சினைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் ஒருதரப்பின் மீதான Solidarity என்ற அடிப்படையில் மட்டுமே அணுகிக் கையெழுத்திடுவது ஒருபோதும் சரியாக இருக்காது. ‘ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்தோம்’ எனக் கண்டன அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசீலனையாளர்கள் யார்? அவ்வாறு பரிசீலித்து இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் யார்? இந்த விபரங்களை மறைத்து வைப்பதன் மூலம் கண்டன அறிக்கையைத் தயாரித்த பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். Solidarity கையொப்பங்களின் பின்னே அவர்கள் மறைந்து நிற்கிறார்கள். ஆனாலும், இந்த அறிக்கையை முன்னின்று உருவாக்கியவர்கள் எவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சாரம் ஏற்கனவே சிவா மாலதியால் முகநூலில் (13 டிசம்பர் 2024) வைக்கப்பட்டது. அதைப் போன்றே கடந்த இரண்டு வருடங்களாகவே இந்தக் குற்றச்சாட்டுகள் அரசல்புரசலாகவும் கவிதையாகவும் லீனா மணிமேகலையால் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகளை இணைத்து உருப்பெருக்கி எழுதப்பட்டிருப்பதே இந்தக் கண்டன அறிக்கை. சிவா மாலதி கடந்த டிசம்பர் மாதத்தில் எந்தச் சூழ்நிலையில், என்னமாதிரியான குற்றச்சாட்டை என்மீது வைத்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. 51-வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ தொகுப்பு வெளியீடு, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘இமிழ்’ வெளியீட்டு நிகழ்வுக்கு எழுத்தாளர் கிரிசாந் பேசுவதற்கு அழைக்கப்பட்டது தொடர்பான விவாதங்களில் ‘இமிழ்’ தொகுப்பின் பதிப்பாசிரியர்களில் ஒருவன் என்ற முறையில் எனது நிலைப்பாட்டை ‘இமிழ் – வால்டேயரை நினைவுபடுத்தல்’ என்ற தலைப்பில் கட்டுரையாக (Link) எழுதியிருந்தேன். கிரிசாந் எழுதிய கட்டுரைகள் மீது எதிர்க் கருத்து இருப்பதற்காக அவரைச் சமூகப் புறக்கணிப்புச் செய்யுமாறு (சிவா மாலதி போன்றோர்) கோருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தேன். கடந்த டிசம்பர் மாதத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, கிரிசாந்தின் கவிதை நூல் வெளியீடு யாழ் நூலக மண்டபத்தில் நிகழ்ந்தது. ஒரு பார்வையாளனாக நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். இதை விமர்சித்து சிவா மாலதி ‘பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டலும் சோபாசக்தியும்’ என்றொரு முகநூல் பதிவை எழுதியிருந்தார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது மூலமாகப் பாலியல் குற்றவாளிகளை நான் காப்பாற்ற முயற்சிக்கிறேன் என்று சொன்னார். அவரது அர்த்தமற்ற வாதத்திற்குப் பலம் சேர்ப்பதற்காக என்மீதான பொய்களையும் தனது பதிவில் இணைத்திருந்தார். அந்தப் பதிவில், என்னால் பல பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாகவும் என்னால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள் என்றும் சிவா மாலதி குறிப்பிட்டார். தற்கொலைக்கு முயன்றாக ஒரு பெண்ணின் அடையாளத்தைக் குறிப்பிட்டே எழுதியிருந்தார். சிவா மாலதி குறிப்பிடும் அந்தப் பெண் யார் என்பதை என்னைப் போலவே பலராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், எனக்கும் இங்கே குறிப்பிடப்படும் அந்தத் தோழிக்கும் இருந்தது இரகசிய உறவல்ல. அது பகிரங்கமாகவே இருந்தது. சிவா மாலதி இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்பும் பின்பும் கூட அந்தத் தோழி என்னுடன் நல்ல நட்பிலேயே இருந்தார். சிவா மாலதியின் இந்தக் குற்றச்சாட்டு வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பின்பு, என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்தத் தோழி என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைப் புத்தக சந்தைக்கு வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரமாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டாலும், சிவா மாலதியின் பதிவு குறித்து நான் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. ஏனெனில், அந்தப் பொய்ச் செய்தியைச் சொல்லி அந்தத் தோழியைப் பதற்றப்படுத்த நான் விரும்பவில்லை. அன்று தில்லையின் ‘தாயைத்தின்னி’ நாவலை நான் புத்தக சந்தையில் வெளியிடுவதாக இருந்தது. நீங்களும் வாருங்கள் என அந்தத் தோழியையும் என்னுடன் அழைத்துச் சென்றேன். நானும் அவரும் சேர்ந்திருந்தே ‘தாயைத்தின்னி’ நாவலை மிகுந்த மகிழ்ச்சியோடு வெளியிட்டோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் (29 டிசம்பர் 2024) இப்போதும் தில்லையின் முகநூலில் இருக்கின்றன. என்னால் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட ஒருவர் இவ்வாறு நடந்துகொள்வது சாத்தியமா? இந்தத் தற்கொலைப் பொய் தற்போது வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலும் வெளியாகியுள்ளது. சிவா மாலதியின் இந்தப் பதிவைத் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட (14 டிசம்பர் 2024) லீனா மணிமேகலை ‘இத்தனை வருடங்களாக நான் எனது கண்களைக் கட்டிக்கொண்டு இருந்துவிட்டேன். கனடா வந்ததும்தான் என் கண்கள் திறக்கப்பட்டு ஷோபாசக்தி பெண்களை வேட்டையாடுபவர் எனத் தெரிந்துகொண்டேன்’ என எழுதினார். லீனா மணிமேகலை போன்ற கூரிய புத்திசாலித்தனமும் மிகுந்த தைரியமும் கொண்ட ஒருவரின் கண்கள் பதின்மூன்று வருடங்களாகக் கட்டப்பட்டிருந்தன என்றால் அது வருந்தத்தக்கதுதான். ஆனால், அவரது கண்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. 2009 முதல் லீனா மணிமேகலைக்கும் எனக்கும் இருந்த உறவு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாங்கள் பிரிந்து இருவருமே வெவ்வேறு உறவுகளுக்குப் போய்விட்ட பின்பும்கூட இருவரும் நட்பாகவே இருந்தோம். சேர்ந்து வேலைகள் செய்திருக்கிறோம். 2021-இல் அவரது ‘Black July’ குறும்படத்திற்கு நான்தான் பிரதியெழுதிக் குரல் நடிப்பும் செய்திருந்தேன். 18 மே 2021-இல் அவர் படித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக வகுப்பில் நடந்த Zoom meeting-லும் கலந்துகொண்டு நான் உரையாற்றினேன். ‘கோவிட்’ கெடுபிடிக் காலத்திற்குப் பின்பாக 2022 -இல் நான் இந்தியாவுக்குச் சென்றபோது, புதியதொரு உறவில் நுழைந்தேன். அப்போதிலிருந்துதான் லீனா மணிமேகலை என்மீது ‘பெண்களை வேட்டையாடுபவன்’ என்ற குற்றத்தைச் சுமத்த ஆரம்பித்தார். இதை அவர் இந்தக் கண்டன அறிக்கை சொல்வதுபோன்று பரிசீலனை – ஆய்வு செய்தெல்லாம் அறிக்கையிடவில்லை. முதலில், என்னுடன் உறவிலிருக்கும் தோழியின் முகநூலின் ‘கொமென்ட்’ பகுதியில் நுழைந்து என்னைக் குறித்த பொய்களை எழுதினார். அதை எனது தோழி அழித்தவுடன் ‘இதை உன்னால் அழித்துவிட முடியும். ஆனால், ஷோபாவைப் பொதுவெளியில் அம்பலப்படுத்த எனக்கு ஒரு நிமிடம் ஆகாது’ என்று மேசேஜ் அனுப்பினார். பின்பு எனது நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு இதேபோன்று ‘பெண்களை வேட்டையாடுபவன்’ மின்னஞ்சல்களை அனுப்பினார். பின்பு ‘அந்தோணிதாசன்’ என என்னை விளித்துச் சாபமிடும் கவிதையும் எழுதினார். ஏற்கனவே என்னில் கோபமுற்றிருந்த சிவா மாலதி போன்றவர்களும் இவரோடு சேர்ந்துகொள்ள, இப்போது அவை எல்லாமே புனைவுகளாகவும் பொய்களுமாகச் சேர்ந்து மூன்றரைப் பக்கங்களில் கண்டன அறிக்கையாகப் பரிணமித்திருக்கிறது. நான் பல பெண்களோடு உறவில் இருந்தேன் என்பது உண்மை. என்னுடைய 23 வயதிலிருந்தே எனக்குத் தொடராகக் காதல்கள் இருந்தன. திருமணம், குழந்தைகள், ஒழுக்கவாதம், கலாசாரம் போன்ற எல்லைகளுக்குள் வாழ விரும்புவர்களுக்கு என்னுடைய வாழ்க்கைமுறையும் தேர்வுகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், நான் மிக இளம் வயதிலேயே திருமணம் – குழந்தைகள் என்ற நிறுவன முறைக்கு வெளியே வாழும் ‘சுதந்திரக் காதல்’ வாழ்க்கைமுறையை வரித்துக்கொண்டவன். என்னுடைய அரசியல் கல்வியாலும் இளமையிலேயே அனார்க்கிஸத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பாலும் நான் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவன். இதைப் பகிரங்கமாகவே பொதுவில் பலமுறை அறிவித்திருப்பவன். ‘எதுவரை’ இதழில் 2010 -இல் வெளியாகிய என்னுடைய நேர்காணலில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருந்தேன். ”காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது.” எனது வாழ்க்கைமுறை பகிரங்கமானது. எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை. இந்தக் கண்டன அறிக்கையில் ‘திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் என்னால் கொடுக்கப்பட்டது’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எவருக்கும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோன்று என்னுடன் உறவிலிருந்த யாருமே அவ்வாறு என்னிடம் வாக்குறுதி கேட்டதில்லை என்பதும் உண்மையே. பாலியல் வன்முறை, பொருளாதாரரீதியாகச் சுரண்டியது, அதிகாரத்தை உபயோகித்துப் பாலியல் துர்ப்பிரயோகம் செய்தது போன்ற எந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டன அறிக்கையில் கிடையாது. பின்பு என்னதான் குற்றச்சாட்டு? காதல் உறவில் இருந்தவர்களை மேலாதிக்கம் செய்தேன், நம்பிக்கைத் துரோகம் செய்தேன், அவர்களுடன் திடீரெனத் தொடர்புகளைத் துண்டித்தேன் என்பவையே சாரமான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். எவரொருவர் மீதும் நான் மேலாதிக்கமோ பாலியல் சுரண்டலோ செய்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சுட்டுப் போட்டாலும் – உண்மையாகவே துப்பாக்கியால் சுட்டாலும் – செய்வது என் இயல்பில்லை. உறவிலிருந்து பிரிந்த பின்பும் பலருடனும் நட்புரீதியான தொடர்புகளையும் சந்திப்புகளையும் இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன். பொத்தாம் பொதுவாக அவருக்கு அப்படி நடந்தது, இவருக்கு இப்படி நடந்தது எனக் கண்டன அறிக்கை சொல்கிறது. இப்படி யாரும் எவர்மீது வேண்டுமானாலும் எளிதாகக் குற்றம் சொல்லலாம். தனியொரு முகநூல் வம்பரும் இப்படிச் சொல்லலாம், 116 கையெழுத்துகள் சேர்ந்தும் சொல்லலாம். எண்ணிக்கை அல்ல உண்மையைத் தீர்மானிப்பது. இவ்வாறான ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, சில குறிப்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரைச் சொல்லாமல் இருப்பதில் நியாயம் இருக்கலாம். எனினும், எனது வாழ்க்கை எப்படிப் பகிரங்கமானதோ அவ்வாறே எனது காதல் உறவுகளும் பகிரங்கமானவையே, எல்லோருக்கும் தெரிந்தவையே என்றிருக்கும்போது இங்கே அந்தப் பெயர்களைக் குறிப்பிட்டிருக்க முடியும். அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் என்னால் ஆதாரபூர்வமாகக் காலவரிசைப்படி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து எது உண்மையென நிரூபணம் செய்திருக்க முடியும். அந்த வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டோடு விளக்குகிறேன். 2010-இல், பிரான்ஸ் தமிழச்சியின் பெயரைக் குறிப்பிடாமல் ‘ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்’ எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருந்தால் அந்தக் குற்றச்சாட்டின் தன்மையை நான் எவ்வாறு புரிந்துகொண்டிருக்க முடியும்? அந்தக் குற்றச்சாட்டை எப்படி ஆதாரத்தோடு என்னால் மறுத்திருக்க முடியும்? இந்தக் கண்டன அறிக்கையும் இவ்விதமே கற்பனைக் குற்றச்சாட்டுகளோடு வெளியாகிப் பொறுப்புக்கூறுமாறு என்னிடம் கேட்கிறது. பெயரற்ற பெண்கள் – கற்பனைக் குற்றச்சாட்டுகள் என்றிருந்தால் என்னால் எவ்வாறு எனது தரப்பைச் சொல்ல முடியும். பொத்தாம் பொதுவாக ‘மறுக்கிறேன்’ என்றுதான் சுருக்கமாகச் சொல்ல முடியும். எனினும், கண்டன அறிக்கையை மிகக் கவனமாகப் படித்து, முடிந்தவரை நான் பொறுப்புடன் என்னுடைய மறுப்பை இங்கே விளக்கமாக எழுதியிருக்கிறேன். கண்டன அறிக்கையின் பொய்களின் அணிவகுப்பில் அடுத்த குற்றச்சாட்டு ‘திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார்’ என்பது. இந்தப் பாரதூரமான குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன். ‘ரூபா’ திரைப்படம் 2016-இல் கனடாவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் கதை ‘செங்கடல்’ திரைப்படம் முடிந்த கையோடு லீனா மணிமேகலைக்காக என்னால் 2011- இல் ‘சிட்டு’ என்ற தலைப்பில் திரைக்கதையாக எழுதிக் கொடுக்கப்பட்டது. எனினும், முயற்சி மேற்கொண்டு நகரவில்லை. இதே கதை கனடாச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு, ‘ரூபா ‘என்கிற கதையாக என்னால் எழுதப்பட்டு, ‘ரூபா’ திரைப்பட இயக்குனரிடம் என்னால் கொடுக்கப்பட்டது. ‘ரூபா’ திரைக்கதை என்னுடைய உறவில் நடந்த உண்மைக்கதை என்பதில் சற்றும் உண்மையில்லை. குயர் சமூகத்தோடு எனக்கு நீண்டகாலமாகத் தொடர்பும் தோழமையும் இருக்கின்றன. நான் அவர்களோடு நிறைய உரையாடி அவர்களது வாழ்பனுபவம் குறித்து அறிந்திருக்கிறேன். கூவாகத்திற்குச் சென்று கள ஆய்வு செய்து லீனா மணிமேகலைக்காக ‘ரதிலீலா’ என்று இன்னொரு திரைக்கதையையும் எழுதிக் கொடுத்திருக்கிறேன். குயர் சமூகத்தவர்களுக்கு இலங்கை – இந்தியாவில் உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் அய்ரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோர என்னவகையான சட்ட வழிகள் இருக்கின்றன எனச் சொல்லியிருக்கிறேன். பிரான்ஸில் தஞ்சம் கோரிய சிலருக்கு ‘கலை மற்றும் சினிமாவுக்கான பிரெஞ்சு அகாதமி’யின் உறுப்பினர் என்ற முறையில் சாட்சியச் சான்றிதழ் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதையெல்லாம் நான் பாலியல் சுரண்டலுக்காகச் செய்தேன் என்று கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது எனக்கு இழைக்கப்படும் அநீதி அல்லாமல் வேறில்லை. பத்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டு, உறவில் ஏற்படும் சிக்கல்களாலும் முரண்பாடுகளால் விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுபவர்கள் உண்டு. அதற்கான உரிமை தார்மீகரீதியாக மட்டுமல்லாமல் சட்டப்படியும் அவர்களுக்குண்டு. அதுபோலவே காதலர்களுக்கும் பிரிந்து செல்வதற்கான உரிமை உண்டு. சிலவேளைகளில் இந்தப் பிரிவு நட்புணர்வுடன் சுமூகமாக நடக்கும். சிலவேளைகளில் முரண்பாடுகளால் எழுந்த கசப்புகளோடும் பழிவாங்கும் வன்மத்தோடும் இந்தப் பிரிவுகள் நிகழும். அங்கே நிச்சயமாக உணர்வுரீதியான பாதிப்புகளும் உளக்கொந்தளிப்புகளும் இருக்கும். ஆனால், இருவருக்கு இடையேயான இந்த உறவுச் சிக்கலை ‘பாலியல் சுரண்டல்’ எனச் சொல்லிப் பழிதீர்க்க நினைப்பது அருவருப்பானது. அதைப் பெண்ணியச் சாயம் பூசிய கண்டன அறிக்கையாக வெளியிடுவது தவறான முன்னுதாரணம். கண்டனத்திற்கு உரிய செயல். இத்தகைய பொய் அறிக்கைகளை உலாவவிடுவது என்பது எதிர்காலத்தில் உண்மைகளின், ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் அறிக்கைகளையும் சமூகம் சந்தேகத்தோடு அணுகத் தூண்டும் பொறுப்பற்ற செயல். கண்டன அறிக்கையில் குறிப்பிடப்படும் இன்னொரு விஷயம் “மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும் – ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்கிறார்” என்பது. இந்தக் கண்டன அறிக்கையைத் தயாரித்தவர்கள், கையொப்பமிட்டவர்கள் இதை நிரூபிக்கத் தயாரா? ஏன் இந்தப் பொய்கள்! இது உண்மை என்றால் யாரை மிரட்டினேன் என இங்கு பகிரங்கமாகச் சொல்வதில் என்ன சிக்கல் உங்களுக்கு? கலாசாரக் காவலரா எனக் கேட்டு எங்கு எழுதினேன்? யாரை மிரட்டினேன்? ஆளும் சொல்லாமல் பேரும் சொல்லாமல் ‘ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம் கலாசாரக் காவலரா எனக் கேட்கிறார்’ எனக் கண்டன அறிக்கையில் புகார் சொல்லப்படுகிறது. என்னுடைய புகார் என்னவென்றால், அப்படி என்னால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்களின் சார்பில் இந்த நிமிடம்வரை எவரொருவரும் என்னிடம் பேசவில்லை என்பதுதானே. அடுத்த குற்றச்சாட்டு ‘அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார்’ என்பது. எனது அறிவுஜீவி கூட்டாளிகளை எப்போது எவர்மீது நான் ஏவிவிட்டேன்? இதற்காவது உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? சேறடிக்க வேண்டுமென்று இறங்கிவிட்டால் எந்த எல்லைக்கும் இறங்கிச் சேறு வீசிவிடுவீர்களா? எனது ‘அடியாள் எழுத்தாளர்கள்’ என ஒரு பட்டியல் அவ்வப்போது முகநூல் வம்பர்களால் வெளியிடப்படுவதுண்டு. இந்தப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்கள் ஒவ்வொரும் தங்களது எழுத்துத் திறனால் தங்களை இலக்கிய உலகில் நிறுவிக்கொண்டவர்கள். தங்களுக்கு எனத் தனித்துவமான பார்வைகளைக் கொண்டவர்கள். இலக்கியத்திற்கு எந்த மதிப்புமளிக்காத சமூகச் சூழலிலிருந்து தங்களது உழைப்பாலும் திறனாலும் எழுந்துவரும் இளம் எழுத்தாளர்களை இவ்வாறு கொச்சைப்படுத்துவது நாணயமற்றது. கண்டன அறிக்கையில் நகைச்சுவை அம்சங்களுக்கும் இடம் இருக்கக்கூடாது என்றில்லை. ஆனால், அது அசட்டு நகைச்சுவையாக இருப்பது இரசிக்கத்தக்கதல்ல. ‘தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை’ என்பதும் என்மீதான ஒரு குற்றச்சாட்டாம். இதை மறுப்பதென்றால் நான் மிகுந்த உடல் நலத்தோடு இருக்கிறேன் என்று மருத்துவச் சான்றிதழ் பெற்று இங்கே சமர்ப்பித்தால்தான் முடியும். வேண்டுமென்றால் அதையும் பொறுப்பாகச் செய்துவிடுகிறேன். ‘பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார்’ என்றொரு கண்டனக் குற்றச்சாட்டு. இதெல்லாம் ‘குமுதம்’ கிசுகிசுவுக்கு நிகரான கண்டனம். இந்தக் கண்டனத்திற்கு என்ன பொறுப்புக் கூறுவது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஒரு குடி அடிமையால் முப்பது வருடங்களாக இலக்கியத்திலும் சினிமாவிலும் இடையறாது இயங்க முடியுமா? ஒரேயொரு கிட்னியோடு முப்பது வருடங்களுக்கும் மேலாக முழுமையான தேக ஆரோக்கியத்தோடு இருக்க முடியுமா? என்றெல்லாம் நீங்களாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான். கற்பனைக் குற்றச்சாட்டுகளுடன் கண்டன அறிக்கை வெளிவந்துவிட்டது. இனி என்ன நடக்கும்? என்மீது அரசியல்ரீதியாக நெடுங்காலமாகவே பகைமை பாராட்டிவரும் பெருமக்கள் இந்தப் பொய் அறிக்கையைப் பரப்பிச் செல்வார்கள். பாலியல் கிசுகிசுகளுக்காகவே காத்துக்கிடக்கும் முகநூல் வம்பர்கள் இதைக் காவிச் செல்வார்கள். கண்டன அறிக்கையை ஆதரிக்கிறேன் எனப் பொய் ஆதாரங்களும் பொய்ச் சாட்சியங்களும் இனி அணிவகுக்கும். அதேவேளையில் தீர ஆராய்ந்து தெளிந்து நடப்பவர்கள் இந்த அறிக்கையிலுள்ள பொய்களையும் அறிக்கையின் உண்மையான நோக்கத்தையும் தெரிந்துகொள்வார்கள். இந்த மறுப்புப் பதிவை எழுதி முடிக்கும் இந்தத் தருணத்தில் எனக்குத் தயக்கமோ வருத்தமோ ஏதுமில்லை. மாறாக, கடந்த இரண்டு வருடங்களாகவே என்மீது அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருந்த அவதூறுகளுக்கு ஒட்டமொத்தமாகப் பதில் சொல்லி முடித்திருக்கும் மனநிறைவே என்னிடம் இருக்கிறது. கடைசியாக ஒன்று… இந்த அறிக்கையின் நோக்கம் என்னைப் பொறுப்புக்கூற வைப்பதுதான் என்றால், நான் பொறுப்பாக மறுப்புக்கூறி அந்த நோக்கத்தை இங்கே நிறைவேற்றி வைத்துவிட்டேன். ஆனால், அறிக்கையின் மைய நோக்கம் அதுவல்லவே. அது என்னவென்று அறிக்கை அறிவிக்கிறது: “ஷோபாசக்திக்குத் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு’ இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்கிறது கண்டன அறிக்கை. என்னைத் தனிமைப்படுத்திச் சமூகப் புறக்கணிப்புச் செய்வது, என்னோடு தோழமை பாராட்டும் இயக்கங்களிலிருந்து என்னைப் பிரித்துவைப்பது, என்னைக் குறித்து எழுதும் ஊடகவியலாளர்களைத் தடுப்பது, எனது பதிப்பக வாய்ப்புகளைக் கெடுப்பது, என்னைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் சர்வதேச அளவிலான சினிமா வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது என்பவைதான் கண்டன அறிக்கையின் மைய நோக்கம். இதையெல்லாம் செய்யுமளவுக்குக் கற்பனைகளுக்கும் பொய்களுக்கும் சக்தி இருக்குமானால், முப்பது வருடங்களாக எந்த அதிகார சக்திகளுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சாமலும் பணியாமலும் எழுதிவரும் எனது எழுத்திலுள்ள நேர்மைக்கும் உண்மைக்கும் அதைவிட அதிக சக்தியுண்டு என்பதே எனது நன்நம்பிக்கை. -ஷோபாசக்தி 15.04.2025 https://www.shobasakthi.com/shobasakthi/2025/04/15/கண்டன-அறிக்கை-உண்மைகளும/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR43YTEm6EiiMBVsbEpDyij4Tlsosd_5QlFrRgQlWlYv-yjzXDyREzvslMgcxQ_aem_XMWxW8ugOe8AUcND3d66aA

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்

1 day 18 hours ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்– 4 BookDay11/03/2025 தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்– 4 எதிர்காலக் கதையைக் கூறி கடந்தகால, நிகழ்கால நடப்புகளைச் சாடிய நாவல் (The Handmaid’s Tale) அ. குமரேசன் கனடா நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கியத் திறனாய்வாளர் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood). 18 கவிதை நூல்கள், 18 நாவல்கள் இவற்றுடன் சமூக நிலைமைகள் தொடர்பாகப் பல கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். 85 வயதில் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார், இலக்கிய விவாதங்களில் பங்கேற்று வருகிறார். சுற்றுச்சூழல் இயக்கத்தில் ஒரு முன்னணிச் செயற்பாட்டாளர். 1985ஆம் ஆண்டில் அவர் எழுதி வெளியிட்ட நாவல் ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்‘ (The Handmaid’s Tale) (ஓரு சேடியின் கதை). பெண்களின் ஒழுக்க வாழ்வு பற்றிய வழிகாட்டல்களை விமர்சிக்கிறது, ஒழுக்க விதிகளை மீறுவதற்குப் பெண்களைத் தூண்டுகிறது, மதத்திற்கு உள்ள அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்றெல்லாம் கூறி அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் இந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் இரண்டுமே நாவலுக்கு நிலையான தடை விதிக்க வற்புறுத்தின. அவருடைய சொந்த நாடான கனடாவில் தடை செய்யப்படவில்லை என்றாலும், பெண்ணின் உடல், பாலியல் உறவு சார்ந்த கொச்சையான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும், கட்டுப்பாடுகளை அவமதிக்கிறது என்றும் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. இந்தியாவில் தடை அளவுக்குப் போகவில்லை, ஆனால் சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. உலக அளவில் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்தத் தடைகளும் எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் படிப்படியாக அடங்கிப் போயின. உண்மையில் இன்றளவும் எல்லாச் சமுதாயங்களிலும், நவீன வாழ்க்கை முறைகளிலேயே, தாண்டவமாடுகிற ஆணாதிக்க ஆணவங்களைச் சந்தியில் நிறுத்துகிறாள் ஓர் உயரதிகாரி வீட்டுச் சேடியான ஆஃப்ஃப்ரெட். வெளியானது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில். எதிர்காலத்தில் (21ஆம் நூற்றாண்டில்) ஒரு கற்பனையான நாட்டில் (கிலியட்) நடக்கும் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளை, குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வக்கிரங்களைப் பற்றிப் பேசுவது போல முக்காலத்திற்கும் உரிய பார்வையைப் பகிர்ந்திருக்கிறார் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood). ஒரு நாடு ஒற்றை மதவெறி ஆட்சியின் பிடியில் சிக்கினால் மக்கள் என்ன ஆவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். கதைக்குள் போவோம். அழிவுக்குப் பின்னால்… தடுக்கப்படாமல் அலட்சியமாக விடப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாக அமெரிக்க நாடு சிதைகிறது. ‘சன்ஸ் ஆஃப் ஜேக்கப்’ என்ற ஒரு கலவரக் குழு ஆட்சியைக் கைப்பற்றுகிறது. ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டுவதற்கு மாறாக, பழைய மதங்களிலிருந்து கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை எல்லாம் எடுத்துத் தனதாக்கிக்கொண்டு, அனைத்து மதங்களையும் ஒடுக்கிவிட்டு ஒரு புதிய மதத்தை உருவாக்குகிறது. நாட்டின் அரியாசன மதம் அதுதான் என்று அறிவிக்கப்படுகிறது. சர்வாதிகாரத்திற்கே உரிய வழக்கப்படி முதலில் ஊடகச் சுதந்திரத்தை அந்த அரசு முடக்குகிறது. கடுமையான சமூக விதிகள், முக்கியமாகப் பெண்களைக் கட்டுப்படுத்தி வைக்கிற சடங்குகள் நடைமுறைக்கு வருகின்றன. பெண்கள் போராடிப் பெற்றிருந்த உரிமைகள் யாவும் விலக்கப்படுகின்றன. சட்டப்படியே எல்லாப் பெண்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நாட்டின் பெண்களிலேயே உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் யாரென்றால், உயரதிகாரிகளின் மனைவிமார்கள்தான். அவர்கள் உட்பட அனைத்துப் பெண்களும் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனி நிறங்களில் சீருடைகள் கட்டாயமாக்கப்படுகிறது. அவர்களுக்கு சொத்துரிமை, பணம் வைத்திருக்கும் உரிமை, படிக்கும் உரிமை, எழுதும் உரிமை எதுவும் கிடையாது. அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்குக் கருவுறும் உரிமை கூடக் கிடையாது. அதிகார பீடத்திலிருந்து, எந்த ஆணுடன் ஒரு பெண் உறவுகொள்ள வேண்டும் என்று ஆணை வருகிறதோ அவனுடன்தான் அவள் செல்ல வேண்டும், அவனால் உருவாகும் கருவைத்தான் சுமக்க வேண்டும், பெற்றுத் தர வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ‘ஹேண்ட்மெய்ட்’ என்று பெயர். தமிழில் சேடி, பணிப்பெண், வேலைக்காரி, பெண் கையாள் என்று சொல்லலாம். அப்படியொரு சேடிதான் ஆஃப்ஃப்ரெட். ஏற்கெனவே திருமணமாகிப் பிரிந்துவிட்ட ஒருவனோடு வாழ விரும்பி, தன் மகளுடன் ஊரை விட்டு வெளியேற முயலும்போது பிடிபட்டுவிடுகிறாள். அவளையும் சிறுமியையும் பிரிக்கிறார்கள். அவள் விபச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைக்கிறார்கள். யாருடன் தப்பிக்க முயன்றாளோ அவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. புதிய சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட பெண் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் அல்லது அரசாங்கம் சொல்கிறபடி யாருடைய வீட்டிலாவது சேடியாக வேலை செய்ய வேண்டும். அவளுடைய உண்மையான பெயர் மறைக்கப்பட்டு, யாருடைய வீட்டுக்கு அனுப்பப்படுகிறாளோ அவனுடைய பெயருடன் “ஆஃப்” என்ற முன்னொட்டு சேர்த்து அழைக்கப்படுவாள். உயிரோடு இருந்தால்தான் மகளைக் கண்டுபிடிக்க முடியும், இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிற மற்ற பெண்களுக்கும் உதவ முடியும். ஆகவே ஆஃப்ஃப்ரெட் அதை ஏற்கிறாள். குழந்தை பிறக்காதவனான, கமாண்டர் எனப்படும் ஓர் உயரதிகாரியின் வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவனுடைய பெயர் ஃப்ரெட். ஆனவே இவளுடைய பெயர் ஆஃப்ஃப்ரெட். அவனுடைய மனைவிக்குத் தனது உடலில் குறையா அல்லது அவனிடம் குறைபாடா என்று தெரியாத நிலையில் இவளைக் கணவனின் இருப்பிடத்திற்கு ஒரு சடங்குக்காக அனுப்பி வைக்கிறாள். உண்மையில் அது வக்கிரமான வல்லுறவு ஏற்பாடுதான், ஆனால் சடங்கு என்பதாக அமைத்திருக்கிறார்கள் அதிகார பீடத்தினர். ஆஃப்ஃப்ரெட் தனது கடந்த கால நினைவுகளுடன் வாழ்கிறாள். கணவன், மகள், நண்பர்களின் நினைவுகள் அவளை வாட்டுகின்றன. அவள் கிலியட் நாட்டின் கொடுமையான வாழ்க்கை முறையை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறாள். அதற்காக மற்ற சேடிகளுடன் ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறாள். ஆஃப்க்ளென் என்ற சேடி ஒத்தாசையாக இருக்கிறாள். ஏற்கெனவே நாட்டில் ஆட்சிக்கு எதிரான சில குழுக்கள் ரகசியமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. அவர்களோடும் இவள் தொடர்பு கொள்கிறாள். சுதந்திரத்தை மீட்கத் துடிப்போரின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெறுகிறாள். கமாண்டர் இவள் மீது மோகம் கொண்டவனாகத் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறான். அவளைப் பயன்படுத்திய பின்பு பாலியல் விடுதியில் அவளைத் தள்ளிவிடத் திட்டமிட்டிருக்கிறான். அரசாங்கத்திற்குத் தெரியாமல் இப்படிச் சந்திப்பதும் சட்டவிரோதம். அவனுடைய மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதிகார அமைப்புகள் பற்றிய தகவல்களை அவனிடமிருந்து கறக்கிறாள் ஆஃப்ஃப்ரெட். மகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று எதையும் செய்யத் துணிகிறாள். இதனிடையே, கமாண்டரின் உதவியாளனான நிக் என்பவனுக்கும் இவளுக்கும் இடையே ஒரு நேசம் உருவாகிறது. ஆஃப்க்ளெய்ன் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வருகிறது. இவளுக்குத் தானும் செத்துப் போவதா அல்லது எப்படியாவது தப்பிப்பதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. நிக் உண்மையிலேயே நம்பக்கூடியவனா அல்லது அரசாங்கத்தின் கையாளா என்ற சந்தேகமும் தோன்றுகிறது. திடீரென ‘கடவுளின் கண்கள்’ என்ற படைப் பிரிவினர் ஆஃப்ஃபிரெட்டைக் கைது செய்கிறார்கள். வெளியே கொண்டுசெல்லப்படும்போது அவளை நெருங்கும் நிக், தன்னை நம்புமாறு கேட்டுக்கொள்கிறான். வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு வாகனத்தில் ஏறச் சொல்கிறார்கள். தயங்கினாலும் பிறகு துணிந்தவளாக வாகனத்தில் ஏறுகிறாள். அதற்கப்புறம் என்ன ஆகிறது என்று நாவல் சொல்லவில்லை. அந்த வாகனம் அவளைத் தண்டனைக் கூடத்திற்குக் கொண்டு செல்ல வந்ததா அல்லது தப்பிப்பதற்காக நிக் செய்த ஏற்பாடா, அவன் தன் மகளைக் கண்டுபிடித்தாளா, மற்ற பெண்கள் என்ன ஆனார்கள் என்ற பல கேள்விகள் சூழ்கின்றன. எதிர்காலக் கற்பனை நாடு ஒன்றில் தொடங்கிய நாவல், எதிர்காலக் கற்பனை மாநாடு ஒன்றில் நிறைவடைகிறது. 2195ஆம் ஆண்டில் நடைபெறும் அந்த மாநாட்டில் ஒரு ஆய்வாளர், “இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய, அக்காலத்துத் தொழில்நுட்பம் சார்ந்த ஒலிப்பேழை ஒன்று ஆராய்ச்சியில் கிடைத்திருப்பதாகவும், அதில் ஆஃப்ஃபிரெட் என்ற பெண் தன் கதையைப் பதிவு செய்திருக்கிறாள்,” என்றும் அறிவிக்கிறார். அவளுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை அவரும் ஊகமாகவே முன்வைக்கிறார். நிகழ்கால உண்மைகள் நாவல் பற்றிய கருத்தரங்குகளில் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood), கதையில் வரும் நிகழ்வுகள் காலங்காலமாகப் பெண்கள் சந்திக்கிற அவலங்களின் சித்தரிப்புதான் என்று கூறியிருக்கிறார். பெண்களின் சுதந்திரத்தை மிதித்து நசுக்கும் மதங்களின் கட்டுப்பாடுகளோடு கலந்து தொடர்கிற ஆணாதிக்க வன்மங்களைச் சொல்வதற்குக் கற்பனையான எதிர்காலம் உதவியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இன்று பல மதங்களில் பெண்கள் பற்றிய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று அங்கீகரிக்கிற அவர், அந்த மாற்றம் மேலும் வலுப் பெறுவதற்கு இப்படிப்பட்ட படைப்புகள் உதவும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்திருக்கிறார். ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid’s Tale) நாவலுக்கு பல முக்கியமான விருதுகள் கிடைத்துள்ளன. கனடாவின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான கவர்னர் ஜெனரல் விருது (1985), சிறந்த அறிவியல் புனைகதைக்கான ஆர்தல் சி. கிளார்க் விருது (1987), காமன்வெல்த் இலக்கிய விருது (1987), ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையின் புனைகதை விருது (1986) ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். பல நாடுகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும், இளையோருக்கான படக்கதைப் புத்தகங்களாகவும் ஆஃப்ஃப்ரெட் உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறாள். 2019ஆம் ஆண்டில் இதன் இரண்டாவது பாகமாக ‘தி டெஸ்டமென்ட்ஸ்’ (சாட்சியங்கள்) வெளியானது. கிலியட் நாடு பிறகு என்ன ஆனது எனக் கூறும் அந்த நாவல் புக்கர் பரிசைப் பெற்றது. முதல் பாகம் புக்கர் பரிசுக்கான பரிந்துரையை மட்டும் பெற்றது. பின்னர், 2000ஆவது ஆண்டில், குடும்ப ரகசியங்கள் பற்றிப் பேசும் ‘தி பிளைண்ட் அசாசின்’ (கண்மூடித்தனமான கொலையாளி) புக்கர் பரிசைப் பெற்றது. ‘தி டெஸ்டமென்ட்ஸ் மூலமாக, இரண்டு முறை அந்தப் பரிசைப் பெற்ற படைப்பாளிகளின் வரிசையில் இவரும் சேர்ந்தார். https://bookday.in/books-that-overcame-obstacles-series-4-written-by-a-kumaresan/

"தனிக் குடித்தனம்"

1 day 18 hours ago
"தனிக் குடித்தனம்" இலங்கையின் யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பரபரப்பான தெருக்கள் மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு மத்தியில், அகநகை மற்றும் இளங்கவி என்ற புதுமணத் தம்பதிகள் வாழ்ந்தனர். புதிதாகத் திருமணமாகி, உற்சாகத்தில் மூழ்கிய அவர்கள், தங்கள் பெற்றோரின் வீடுகளின் ஆறுதலான அரவணைப்பிலிருந்து விலகி, தங்களுக்கென சொந்தக் கூடு அல்லது தனிக் குடித்தனம், "இனித்திட இனித்திடத்தான் நகைமுத்தன் எழில் அறம் நடத்துதற்கு தனியில்லம் கொண்டான்" என்று பாரதிதாசனார் கூறியது போல, கட்டுவதற்கான பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அகநகையின் பெற்றோர் அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை, " நீ ஆரம்பத்தில் இருந்தே செல்லமாக, சுதந்திரமாக வாழ்ந்துவிட்டாய், காலையில் நேரத்துடன் கூட எழும்பமாட்டாய், அவசரமாக அரைகுறை குளிப்புடன், வாசனையை முகத்துக்கும் உடலுக்கும் அடித்து விட்டு ஸ்கூட்டரில் பல்கலைக்கழகம் போய்விடுவாய், ஒரு தேநீர் கூட ஒழுங்காகப் போடத் தெரியாது, இப்ப திருமணம் ஆகி ஒரு கிழமை தான், எப்படி தனிக்குடும்பம் போய் சமாளிப்பாய், கொஞ்சம் யோசி?" தாய் அழாக்குறையாக கேட்டாள். தந்தையும் தாய்க்கு ஒத்துப்பாடினார். ஆனால் அவளோ " இல்லை அம்மா, என்னால் முடியும், இப்ப சமையல் எல்லாம் பெரும் பிரச்சனை இல்லை, முன்னமே தயாரிக்கப்பட்ட [ரெடிமேட்] இட்டலி கலவை, தயார் செய்து பெட்டியில் அடைக்கப்பட்ட கறித்தூள், போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்ப நகர்ப்புறத்தில் இலகுவாகப் பெறலாம். சமையல் புத்தகம் இருக்கிறது, அவர் கட்டாயம் சமையலுக்கு ஒத்துழைப்பர், அப்பா மாதிரி இல்லை?" என்று கூறிவிட்டு அப்பாவை ஒரு பார்வை பார்த்தாள், அப்பாவின் செல்லப்பிள்ளை! "அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே", தந்தை தன் மகளை கட்டிப் பிடித்தார். அவர் வாய் பாரதிதாசனின் பாடலை முணுமுணுத்தபடி, அவளின் விருப்பத்துக்கு ஆமா போட்டார். "உவந்தொருவன் வாழ்க்கை சரியாய் நடத்த உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்! அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான் அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!" மணம் கமழும் மல்லிகைக் கொடிகளாலும், வண்ணமயமான மெல்லிய காகிதப் பூவாலும் அலங்கரிக்கப்பட்ட அவர்களது அழகிய சிறிய வீட்டிற்குள் அவர்கள் காலடி எடுத்து வைத்தபோது, யதார்த்தம் அவர்களுக்குப் புலப்பட்டது. சமைப்பதில் இருந்து சுத்தம் செய்வது வரை, நிதியை நிர்வகிப்பது முதல் புது திருமண காதல் உறவை நல்ல புரிந்துணவுகளுடனும் நட்புடனும் வளர்ப்பது வரை, அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அவர்கள் இப்போது பொறுப்பாக, தாமே இருப்பதை உணர்ந்தனர். ஆரம்ப நாட்களில் காதல் உணர்ச்சிகள் மற்றும் புதிய தம்பாத்திய வாழ்வின் சவால்களின் சூறாவளியில் இருவரும் தங்கள் புது அனுபவத்தைக் கண்டனர். அகநகை, தன் பெற்றோரிடம் இருந்த காலத்தில், ஒரே ஒரு செல்ல மகளாக இருந்தபடியால், சமையலறைக்குள் அதிகம் செல்லவில்லை. தன் தாயின் சமையல் திறன்களை தான் எப்படி உருவாக்கலாம் என்பதில் கவனம் செலுத்தினாள். பானைகள் முழங்க, மசாலாப் பொருட்கள் பறக்க, அவளும் இளங்கவியும் தங்களின் அரைகுறை சமையலை ருசித்தபோது இருவரும் மனம் நிறைந்த சிரிப்பைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் வீடு விரைவில் எரிந்த கறிவேப்பிலை மற்றும் அதிக வேகவைத்த அரிசியின் நறுமணத்தால் நிரம்பியது, ஆனால் அவர்கள் சுதந்திரமான பெரியவர்களாக, தம்பதிகளாக மாறுவதற்கான ஆரம்ப பயணத்தில் இந்த குளறூபடியான அனுபவங்களை பாடங்களாக ஏற்றுக் கொண்டனர். ஆளுக்கு ஆள் உதவி செய்து ஒன்றாக, அவர்கள் சமையல் கலையை மெல்ல மெல்ல கற்றுக் கொண்டனர், சுவைகளை பரிசோதித்தனர் மற்றும் மசாலாப் பொருட்களின் நுட்பமான சமநிலையில் தேர்ச்சி பெற்றனர். ஆனால் சிரிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு இடையில், விரக்தி மற்றும் கருத்து வேறுபாடுகளின் தருணங்கள் வராமல் இல்லை. ஊடல் இல்லையேல் கூடலில் சுவை இருக்காது என்பது அவர்களின் வாழ்விலும் பொருத்தமாக இருந்தது. "காதல் கொடுக்கும்; ஈர்ப்பு எடுத்துக்கொள்ளும். காதல் நிரந்தரம்; ஈர்ப்பு வரும் போகும். காதல் உளமார்ந்தது; ஈர்ப்பு உடல் சார்ந்தது" இதை நன்கு புரிந்தவள் தான் அகநகை. அதனால் தான் என்னவோ அவளுக்கு முதலில், செல்லமான சண்டைகள், சமாதானம் பின் புணர்தல். பிரியாமல் நெடுங்காலம் நிலைத்துக் கண்ணனுடன் நின்ற ஆய்ச்சியர் [இடையர்குலப் பெண்கள்] விளையாடும் கூடல் விளையாட்டு ஞாபகம் வந்தது. "ஊடல் கூட லுணர்தல் புணர்தலை நீடு நின்ற நிறையுக ழாய்ச்சியர் கூட லைக்குழற் கோதைமுன் கூறிய" தன் சொந்த வழிகளுக்குப் பழக்கப்பட்ட பெற்றோரின், அண்ணன்மார்களின் செல்லத் திருமகள் அகநகை, வீட்டு வேலைகள் மற்றும் பழக்க வழக்கங்களில் சமரசம் செய்து கொள்வது அவளுக்கு பெரும் சவாலாக இருந்தது. இளங்கவியும் தனது பெற்றோரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் ஆறுதலுக்காக ஏங்கி, அவர்களின் புதிய வாழ்க்கையை சரிசெய்ய தன்னால் இயன்றவரை போராடினார். அகநகை: பதட்டமாகச் சிரித்தாள் "சரி, சமையல் குறிப்பு நமக்குத் தேவை... ம்ம்ம்... எவ்வளவு கறிவேப்பிலை?" இளங்கவி : சிரித்துக்கொண்டே "ஆமாம், பார்த்து சொல்லேன்? அகநகை: செய்முறைப் புத்தகத்தை புரட்டிப் புரட்டிப் பார்த்து, "இது ஒரு கைப்பிடி அளவு என்கிறது. ஆனால் அதிர்ஷ்டத்திற்காக இன்னும் கொஞ்சம் சேர்க்கப்போகிறேன்" அகநகை தாராளமாக கறிவேப்பிலையை சலசலக்கும் எண்ணெயில் வீசும் போது இருவரும் ஒன்றாக கட்டிப்பிடித்துக் கொண்டு சிரித்தார்கள். அப்பொழுது அகநகை, புகை எழும்போது கண்கள் விரிந்து "அச்சச்சோ! அவை எரிகின்றன என்று நினைக்கிறேன்!" என்றாள். இளங்கவி: சிரித்துக் கொண்டே "அதுதான் ஸ்மோக்கி ஃப்ளேவர் [smoky flavor] சேர்க்க இப்ப எமக்கு ஒரே ஒருவழி, சரியா?" மீண்டும் இருவரும் அரவணைத்துக் கொண்டு சிரித்தார்கள். அந்த சமையல் குளறூபடியிலும் அவர்களின் காதல் மட்டும் மாறாமல் இருந்தது. கிசுகிசுப்பான மன்னிப்புகள் மற்றும் மென்மையான வருடல்கள் மூலம், ஒருவருக் கொருவர் விசித்திரங்களையும் தனித்துவங்களையும் பாராட்ட கற்றுக் கொண்டனர். அன்றாட வாழ்க்கையின் குழப்பங்களுக் கிடையில் காதல் மலர்ந்த இடமாக அவர்களின் வீடு ஒரு சரணாலயமாக மாறியது. அப்பொழுது, அகநகையை பார்க்கும் பொழுது, இளங்கவிக்கு கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167 பாடல் நினைவுக்கு வந்தது. “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து விட்டு, புதிதாக திருமணம் செய்த தலைவி தன் காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள். பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள். தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு ... பழக்கம் வேறு இல்லை. தலைவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல் வேறு. விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. தலைவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று அதன் பின் புளிக் குழம்பும் செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள் என்கிறது அந்த பாடல். ஒரு முறை இருவருக்கும் இடையில் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டது அகநகை: "கவி, இன்னைக்கு குப்பையை வெளியே எடுக்க ஞாபகம் இருக்கா? மறுபடியும் நிரம்பி வழிகிறது." இளங்கவி: "ஆமாம் ஆமாம், பிறகு செய்வேன்." அகநகை: விரக்தியுடன் "நீங்கள் எப்பொழுதும் அப்படிச் சொல்கிறீர்கள், பிறகு அது நிறைவேறாது. இப்போது உடனே செய்ய முடியுமா, தயவுசெய்து?" இளங்கவி: "ஏன் என்னை எப்பவும் நச்சரிக்கிறே? நான் செய்வேன் என்று சொன்னேன், சரியா?" அகநகை: "நான் நச்சரிக்கவில்லை கவி. நாம் நம் வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவ்வளவு தான்." இளங்கவி: "ஓகே, தெரியும், மன்னிக்கவும். உடனே எடுத்துவிடுகிறேன்." அகநகையும் இளங்கவியும் திருமண வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில், எல்லா பொதுவான குடும்பங்கள் போல் பயணிக்கும் போது, பெற்றோரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறவும் மற்றும் ஒருவருக் கொருவர் திறம்பட தொடர்பு கொள்வதைக் கற்றுக் கொள்வும் பழகிக் கொண்டார்கள். அவர்களின் அன்பும் உறுதியும் பிரகாசிக்கத் தொடங்கி, ஒன்றாக ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பாதையை அவர்களுக்கு ஒளிரச் செய்தன. "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக!" என்று இளங்கவி பாடிக்கொண்டு, அகநகையை வருக வருக என்று ஒருநாள் சாப்பாடுக்கு அழைத்தான்! ஆனால் அவளோ "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும்!" என்று போட்டிக்கு ஒரு பாட்டு பாடி, பார்த்தாலே ஒரு பார்வை உடலுக்கும், கூடலுக்கும் அவர்களின் வாழ்வில் குறைவே இல்லை! நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியபோது, அகநகையும் இளங்கவியும் தங்கள் இருவரும் உள்ளத்தால், புரிந்துணர்வால், விட்டுக் கொடுப்பால், காதலால் நெருங்கி வருவதைக் கண்டனர், அவர்கள் ஒன்றாகச் சமாளித்த சவால்கள் அவர்களது பிணைப்பை வலுவூட்டியது. அவர்கள் இனி தங்களை இரு நபர்களாகப் பார்க்கவில்லை, ஆனால் அன்பு மற்றும் தோழமையின் வாழ்நாள் பயணத்தில் பங்காளிகளாகப் பார்த்தார்கள்! தனிக்குடும்பம் தனித்துவமாக ஒளிவீசியது!! "வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே! நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத் தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

 ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை

1 day 18 hours ago
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடத்தைக்கெதிரான கண்டன அறிக்கை பொறுப்புக்கூறல் பெண்ணிய அக்கறையாளர்கள் இணைந்து தயாரித்த கண்டனக் கூட்டறிக்கையை உங்கள் கவனத்திற்கு வைக்கிறோம். எழுத்தாளர் நடிகர் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளால் பாதிப்புக்குட் படுத்தப்பட்ட பல பெண்கள்மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்ததின் அடிப்படையில், அவர்களுக்கான எங்களின் முழுமையான ஆதரவையும், ஆணதிகார துஷ்பிரயோகத்திற்கான எதிர்ப்பையும் பரவலாக்கும்முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பேற்று அதற்கமைந்த பெண்கள் கூட்டமைப்பொன்றினை உருவாக்கியுள்ளோம். பெண்களின் குரல்கள் எழும்போதெல்லாம் காக்கப்படும் கள்ள மெளனங்கள் நம்மை மேலும் மேலும் பலவீனமாக்குவதைஅனுமதிக்க முடியாதென்பதாலும் கலை இலக்கிய அரசியல் வெளிகளுக்குத் துணிந்து செயலாற்ற வரும் பெண்களுக்கும்பால்பல்வகையினருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதிமுக்கியமான தேவை என்பதாலும் இந்த கையெழுத்துஇயக்கத்தை முன்னெடுக்கிறோம். பாலியல் சுரண்டலானது ஆண் பாலினத்திற்கு வழங்கப்பட்ட சலுகையாக இயல்பாக்கப்பட்டிருப்பதும், வரலாறுநெடுகிலும் வன்முறையை அனுபவிப்பதே பெண் பாலினத்திற்கும், பால்பல்வகைமையினர்களுக்கும் விதிக்கப்பட்டநியமமாக இருப்பதும் கண்கூடு. இதை வெற்று மெளனத்தால் கடப்பது, ஒடுக்குமுறைகளிலேயே அதிமுதன்மையானநிறுவனமான ஆணாதிக்கத்தின் அடிமைச் சங்கிலிகளை இன்னும் இறுக்கி கொள்வதற்கு சமமானது தான் என்பதால்நாங்கள் அதை உடைத்து நொறுக்குவதில் உறுதியாக இருக்கிறோம். எழுதும் ஆண் தன் ஆதிக்கப்பால்நிலை (cis gender) அடையாளத்தை, அது தரும் அதிகாரத்தை, பாலியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பெண்களைச் சுரண்டுவதற்கும், பெண்களுக்கும், பால்பல்வகைமையினர் (queer) மற்றும்திருநர்களுக்கும் எதிரான வன்முறைகளுக்குப் பயன்படுத்துவதும், அதை அறிவுப்பித்து, கலைமனப்பிறழ்வு, மீறல், கட்டுடைத்தல் என்று முட்டுக் கொடுப்பதும் தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. சுயமரியாதை சிந்தனைகளால்ஈர்க்கப்பட்டு, தாங்கள் சார்ந்த குடும்பம் - சாதி- மத அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளைத் தாண்டி அரசியல், கலை, இலக்கியம் என்று அறிவுத் துறைகளைத் தேர்ந்தெடுத்து வரும் பெண்களும் திருநங்கைகளும் அதே சுரண்டலால்பாதிக்கப்படும்போது சமூக ரீதியாக எந்த பாதுகாப்புமற்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். திரும்புவதற்கு இடமில்லாமல்அநாதரவாகின்றார்கள். கனவுகளைக் காவு கொடுத்துவிட்டு தங்கள் கூண்டுகளுக்கே திரும்ப நேர்கின்றனர். தமிழில் தேர்ந்த எழுத்தாளர் என்று தன் தொடர்ச்சியான படைப்புகளால் அடையாளம் காணப்படுபவர் ஷோபாசக்தி. பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்காரிய, பெண்ணியக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுவராகவும் தன்னைமுன்னிறுத்திக்கொண்டவர். ஆனால் அவர் மேல் பாலியல் சுரண்டல் புகார்களை பல பெண்களும் குயர் சமூகத்தினரும்எழுப்பியுள்ளனர். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களுக்கு பொய் வாக்குறுதிகள் தந்து உறவில்ஈடுபடுத்திவிட்டுப்பின், அதில் இரண்டு பெண்களைத் தற்கொலை முயற்சிக்கு தள்ளுமளவு மனச்சேதத்தைஏற்படுத்தியுள்ளார். இவ்வறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் தீவிர பங்கேற்புடனும், ஷோபாசக்தியால் தங்களுக்கு இழைக்கப்பட்டதுஷ்பிரயோகத்தின் அனுபவங்களை வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படுத்திய பல பெண்களுடனும்‘குயர்’ சமூகத்தினருடனும் இடம்பெற்ற தொடர்ச்சியான உரையாடல்களின் விளைவாகவும் உருவாக்கப்பட்டதாகும். ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான இந்த உரையாடல்களில் வெளிப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும்சுரண்டலின் வடிவங்கள்/போக்குகள்: 1. ஷோபாசக்தி தன்னையொத்த கண்ணோட்டம் கொண்ட பெண்களைச் (பெண்ணிலை வாதிகள், மார்க்சியவாதிகள், சாதி மறுப்பாளர்கள், ‘குயர்’ சமூக கூட்டாளிகள்) சுரண்ட தனது அரசியல், கலை சார்ந்த பார்வைகளைபயன்படுத்துகின்றமை. 2. ஷோபாசக்தி பொதுவெளியில் அறியப்பட்ட பெண்ணிலைவாதிகள், கலைஞர்கள் மற்றும் அரசியல்செயற்பாட்டாளர்களுடனான தனது தொடர்புகள் மற்றும்/அல்லது உறவுகளைப் பயன்படுத்தி தனது துஷ்பிரயோகமற்றும் சுரண்டல் நடத்தைகள் குறித்த சந்தேகங்கள் எழாதவாறான சூழலை உருவாக்குகின்றமை. 3. ஷோபாசக்தி தான் அகதியாக இருந்த வரலாற்றையும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் முன்னாள்உறுப்பினராக இருந்த அடையாளத்தையும், தன்மீது அனுதாபத்தினை ஏற்படுத்துவதற்கும், அதன்மூலம்பெண்களை ஏமாற்றித் தன்வசப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றமை. 4. ஷோபாசக்தி சர்வதேச தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, குடியுரிமை தொடர்பானசட்டச்சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் ‘குயர்’ சமூகத்தினருக்கு புகலிடக் கோரிக்கைகள்/குடியுரிமைகள் விடயத்தில் உதவுவதாக நம்பிக்கை ஏற்படுத்தியதோடு தனது அந்தஸ்தையும் அனுபவங்களையும்பயன்படுத்தி நீண்டகால வதிவுரிமைப் பாதுகாப்பிற்கான பொய் நம்பிக்கைகளை விதைத்தமை. 5. ஷோபாசக்தி தன்மீது உணர்வு ரீதியாக நெருக்கமாகி, சார்ந்திருக்க வேண்டிய நிலையை(co-dependency) உந்துகிற வகையில் தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறிபெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை. 6. ஷோபாசக்தி திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் நெருங்கி வாழத் தொடங்கியப் பெண்களிடம்ஆரம்பக்கட்டத்தில் அளவுக்கதிகமாக அன்பை கொட்டுவதைப்(love bombing) போல காட்டிப் அவ்வப்போது தனிமைப்படுத்திப் பின் ஒரேயடியாக புறக்கணித்து அவர்களை முற்றிலும் பலவீனப்படுத்திப்பயன்படுத்திக்கொண்டமை. 7. ஷோபாசக்தி அவரை விட்டு விலக முடிவெடுக்கும் பெண்களுக்கு அமையும்வேறு உறவுகளைக் குழப்பும் வகையில், அவர்களின் வாழ்வை அத்துமீறிப் பின்தொடர்வதோடு(stalking) அவர்கள்மீதான தனது 'உடைமை உணர்வையும்’(territorialising) தக்கவைத்துக் கொள்கின்றமை. 8. ஷோபாசக்தி தனது அரசியல், இலக்கிய சகபாடிகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட பெண்கள்மற்றும் ‘குயர்’ சமூகத்தினரின் பாடுகளையும் அனுபவங்களையும் கீழ்மைப்படுத்தி, 'கலைஞனின் பிறழ்வுஇயல்பானது' எனக் கற்பிதங்களைப் பரப்பி தனது வக்கிரங்களை நியாயப்படுத்துகின்றமை. 9. தனது விசுவாசமிக்க ஆதரவாளர்களைக்கொண்டு பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் ஏளனப்படுத்தியும் அச்சுறுத்தியும் மலினப்படுத்தியும் வாயடைக்கச் செய்கின்றமை. இதன்மூலம் பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களின் சுயத்தை உடைத்து அவர்களைகழிவிரக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றமை. 10. ஷோபாசக்தி ஒரே சமயத்தில், பல்வேறு நாடுகளில், நகரங்களில் பல பெண்களிடம் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, நிலைத்த துணைக்கான - நீடித்த பந்தத்துக்கான உத்தரவாதத்தைப் பொய்யாகஅளித்து, உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றி பித்தலாட்டம் செய்து வஞ்சித்தமை. பாதிப்புக்குட்படுத்தவர்களால் வெளிப்படுத்தப்பட்ட அனுபவங்கள்: பாலியல் சுரண்டல் இடம்பெறும் வகையில் சூழலை உருவாக்குவது: ஷோபாசக்தி பாலியல் ரீதியாக சுரண்டிய பெண்களில் பெரும்பாலானோர், அவருக்கு எப்போதும் நற்சான்றிதழ் தரும் அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் நிறைந்த சபைகளிலும் இடங்களிலும் தான் அவரை சந்தித்ததாகவும், அவர்கள் அவரிடம் காட்டும் அதே மரியாதையுடனும் அக்கறையுடனும் தம்மையும் நடத்துவார்கள் என்று நம்பியதாகவும் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அவரோடான உறவை ஊக்குவித்த மேன்மக்களை அணுகி உறவில் நடக்கும் முறைகேடுகளை பேச முற்பட்ட போதெல்லாம், ஷோபாசக்தி போரினால் பாதிக்கப்பட்டவர் - அகதி, பல கஷ்டங்களை அனுபவித்தவர் எனஅவர்மீது அனுதாபம் கொள்ளும்வகையில் பேசியதுடன், கலைஞனின் அதீதம் புரிந்துக்கொள்ளப் பட வேண்டியது எனவாதாடியதன் மூலமும் மெளனிக்கப்பட்டிருக்கிறார்கள். அவருடைய வெறித்தனமான நடத்தை (obsession) தொடர்பில்பெண்கள் சந்தேகப்பட்டு அவரின் சகாக்களிடம் பேசுகையில், எழுத்தாளனதும் கலைஞனதும் பிறழ்வுகள், அதீதப்போக்குகள் இயற்கையானவை என அப்பெண்களிடம் சொல்லப்பட்டு இவரின் துஷ்பிரயோக நடத்தைகள்நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதன்மூலமாக அந்த உறவினை அவராக முறித்துக்கொள்ளும்வரை, சுரண்டல் என்றுஉணர்ந்தும் அப்பெண்கள் அந்த உறவில் தொடர்ந்து நிலைத்திருப்பதனை அவரின் கூட்டாளிகள்உறுதிப்படுத்தியிருக்கின்றனர். எழுதிவைக்கப்படடது போலவே ஒன்றுக்கு மேல் ஒன்று, ஒன்றோடொன்று என்றாலும் ஒரே மாதிரி அவர் உறவினை ‘திடீரென’ முறித்துக்கொள்ளும் போது, தனது ‘ஆளுமையாலும், புகழாலும், மேதைமையாலும்’ ஈர்க்கப்பட்டு அப்பெண்கள், திருமணம் குடும்பம் எனக்கேட்டு தன்னை ‘நிறுவனமயப்படுத்த’(institutionalise) முற்படுவதாக பொய்சொல்லி, ஷோபாசக்தி தன் சுரண்டலை ஒவ்வொரு தடவையும் நியாயப்படுத்தியிருக்கிறார். கட்டுப்படுத்துவதும் தன்னுடைமை எனக் அதீத உரிமை எடுப்பதும்: பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களின் முறையீடுகளின் படி ஷோபாசக்தி தன்னுடன் உறவிலிருந்த பெண்கள்மீது அதீத உடமையுணர்வை(possessive) வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவருடன் நீண்ட கால உறவிலிருந்த ஒரு பெண்ணிடம், அவர் கழிவறைபோகும் போதுகூட ‘என்னை விட்டுவிட்டு அப்படியே வெளியே போய்விடுவாயா?’ என்று கேட்டு அழும் அளவிற்குவெறித்தனமான (obsessive) ஒட்டுதலுடன் இருந்திருக்கிறார். தன்னுடன் உறவிலிருந்த பெண்கள் தங்களது வாழ்க்கையில்கவனம் செலுத்துகையில் குறிப்பாக அவர்கள் மற்றுமொரு உறவிற்குச் செல்லுகையில், ஷோபாசக்தி திடீரெனஅறிவிக்காமல் அவர்களது வீடுகளுக்குச் செல்லுதல், பொதுவெளிகளில் எதிர்பாராவிதத்தில் சந்திக்கும் இடங்களில் கூடஅப்பெண்களின் துணைவர்களுக்கு சந்தேகம்வரச் செய்வதனை நோக்கமாக கொண்டு, அவருடனான உறவு இன்னும்முடியவில்லை என்பதுபோல நிரூபிக்க முயற்சித்தல் ஆகிய நடத்தைகளைக் கொண்டிருந்திருக்கிறார். இதன் காரணமாகஇவருடன் உறவிலிருந்த பெண்களை உறவிற்குப் பின்னரும் ஏதோ ஒருவிதத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள்வைத்திருப்பதன் மூலம் எப்போதாவது வாய்ப்புக்கிடைக்கும்போது பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதற்கு ஏதுவானசூழலினைப் பேணியிருந்திருக்கிறார். அனுதாபத்தை ஏற்படுத்தி நச்சு சார்புநிலையை உருவாக்குதல்: ஷோபாசக்தி அளவுக்கு மீறிய சுய அபிமானக் (narcissist) கூறுகள் நிறைந்த நடத்தைகளை அவருடன் பழகிய பெண்கள் எல்லோரோடும் வெளிப்படுத்தியிருக்கிறார். உறவுகளின் ஆரம்பத்திலிருந்தே அளவுக்கதிகமாக அப்பெண்களை நேசிப்பதாக நடிப்பதில்தொடங்கி, பிறக்காத கற்பனைப் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது வரை எதிர்காலத்திற்கான பொய்யானஉத்தரவாதத்தினை வழங்கி நம்பிக்கையைக் கட்டியெழுப்பி திட்டமிட்டு பாலியல் சுரண்டலை நடத்தியிருக்கிறார். ஐரோப்பாவில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக வாக்கு தந்து குயர் உறவுகளைப் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். உறவிலிருக்கும் பெண்கள்மீது இவர் வைத்திருந்த கட்டுப்பாடு(control); மிகையான அன்பைக் கொட்டுவது(love bombing); அதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பெண்களை கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம்(neglect) தன்னை நினைத்து ஏங்கச் செய்வது; இவ்வாறான ஒரு வன் (abusive) உறவுஏற்படுத்தும் பதட்டங்களை உருவாக்கி, அப் பெண்களைவிட்டு இவர் விலகும்போது, இலகுவில் அவரைவிட்டுவிலகமுடியாத நிலையினையும், அதன் காரணமாக ஆழ்ந்த மனச்சிதைவையும் ஏற்படுத்தியிருந்திருக்கிறார். தான் கடந்த காலத்தில் அகதியாக இருந்த கதைகளை சொல்லியும் தன் நோய்களைச் சுட்டியும், தன்னைப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லை என்று பச்சாதாபத்தை ஏற்படுத்தியும், தான் செத்தால் கொள்ளிப் போட வேண்டும் என்று கேட்டும், தன் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தி, உணர்வுகளைச் சுரண்டி, ஒரு நச்சான சார்பு நிலையை உறவுகளில் உருவாக்கியிருக்கிறார். பாதிப்புக்குட்ப்படுத்தப்பட்டப் பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார். ஆக இவருடன் உறவில் இருந்தப் பெண்களோ, குயர் சமூகத்தினரோ இவர் பரப்பிய பொய்யானப் பிம்பத்தைப் போன்று இவரின் ஆளுமைமீது மோகம் கொண்டு இணைந்து வாழ விரும்பியிருக்கவில்லை. மாறாக இவர் அவர்கள்மீது காட்டிய வெறித்தனமான பிடித்தம், எதிர்காலம் குறித்து ஷோபாசக்தி ஏற்படுத்திய நம்பிக்கை, முற்போக்கு சித்தாந்தங்களைப் பேசி உருவாக்கிய பாதுகாப்புணர்வு என்பவற்றின் காரணமாகவே அவர்மீது ஆழமான நேசத்தினை வளர்த்திருந்தனர். விளிம்புநிலை திருநங்கைகளை சுரண்டுதல்: ஷோபாசக்தி வெளிநாட்டில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக கூறி திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட அத்திருநங்கை, “ரூபா”திரைப்படத்தைப் பார்த்தபோது தனக்கேற்பட்ட உணர்வுகள் தொடர்பில் கூறுகையில், அந்தப் படத்தில் வெளிப்பட்டதிருநங்கை வெறுப்பே (transphobia) திருநர்கள் தொடர்பில் ஷோபாசக்தி யின் உண்மையான நிலைப்பாடு எனவும், தன்னை அவர் மற்ற ஆண்களைப் போல மனிதத்தன்மையற்ற முறையில் தனது பாலியல் இச்சைகளைத்தீர்த்துக்கொள்ளவே பயன்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். பொதுச் சமூகத்தில் திருநங்கைகளைப் பாலியல்ரீதியாகச் சுரண்டுவது இயல்பானதாயிருக்கின்றதாயினும் திருநர் கூட்டாளியாக (trans ally) தன்னைக் காட்டிக்கொண்டஇவரிடம் அத்தகைய கீழ்மையான செயலைத் தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் கூறி வருந்தினார். பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் இழிவுபடுத்துதல்: ஷோபாசக்தி தான்உறவிலிருந்த பெண்களுடன் உறவினை எதேச்சதிகாரமாக முறித்துக்கொண்டது தொடர்பில் பிறர் வினவும்போதுஅப்பெண்கள் தன் மீது உடைமை உணர்வுடன் (possessive) இருப்பதாகவும், சில பெண்கள் தனது அம்மா மற்றும்தங்கையுடன் பேசுவதைக்கூட விரும்புவதில்லை எனும் அளவிற்கு தன்னை சொந்தம் கொண்டாடுவதாகவும், உறவென்றானப் பிறகு தன்னைத் திருமணம் செய்ய அவர்கள் வற்புறுத்துவதாகவும் கூறி அதனாலேயே தான் அந்தஉறவினை முறித்துக்கொண்டதாக சாட்டு சொல்லி நியாயப்படுத்தி வந்த சோபாசக்தி, தனது ஆளுமையினைக் கேடயமாக்கி தன்னைத் தானேத் தொடர்ந்து பாதுகாத்தும் வந்திருக்கிறார். மற்ற இளைய எழுத்தாளர்கள் மீது பிற பெண்ணியலாளர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பாலியல் புகார்கள் வைத்தபோதும், ஷோபாசக்திதன் இலக்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு அரண்கொடுக்கும் நடவடிக்கைகள், அவர்களோடு இணைந்து பாலியல் சுரண்டலாளர்களை ஆராதிக்கும் ஒரு கலைக்குழுவை உருவாக்குவது போன்ற செயல்பாடுகள், தன் அழுக்கை மறைத்துக் கொள்வதற்கான பிரயத்தனங்கள் என்றே புரிந்துக்கொள்ள முடிகிறது. மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும்: ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா(cultural Policing) என்று கேட்டதுடன் அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுதவைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி,பாதிப்புக்குட்ப்படுத்தப்பட்டப் பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாகஅடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் தனது ஒரே பாணியிலானமூளைச் சலவைக் கதைகளினூடாகச் சுரண்டி அதில் இரண்டு பெண்களைத் தற்கொலைக்கு தள்ளுமளவு மனச்சேதத்தைஏற்படுத்தியுள்ளார். தற்கொலை முயற்சியினை மேற்கொண்ட பெண்களையும் ஷோபாசக்தி யும் அவரது குழாமும்விட்டுவைக்கவில்லை. “ஆளுமை இருக்கும் பெண்கள் இந்த அனுபவத்திலிருந்து மீண்டு இதைப்பற்றிப்பேசிக்கொண்டிருக்காமல் தமது வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள், ஆளுமை குறைந்த அல்லது ஆளுமையற்றபெண்களே இதுதொடர்பில் சதா புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தற்கொலை முயற்சி செய்கிறார்கள்” எனஅப்பெண்களை அவர்கள் குற்றம் சுமத்துவதானது (victim blaming) பாதிக்கப்பட்டவர்களை மனிதத்தன்மை நீக்கம்செய்வதல்லாமல் (dehumanising) வேறேது? பாதிப்புக்குட்ப்படுத்தப்பட்டப் பெண்கள், பாதிக்கப்பட்டவர்களாகஉணரக்கூடாது் - அவ்வாறு உணர்வது இழிவானது, பாதிக்கப்பட்டாலும் அதை சத்தம் போடாமல் கடந்துப் போவது தான்‘பின் நவீனச் சிந்தனை’ எனப் பேசி, ஷோபாசக்தி யின் ‘எழுத்துலக, கலையுலக, அரசியிலுலக’ சகாக்கள், பாலியல்சுரண்டலினை சாதாரணமயப்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதுதவிர அன்பு செய்த அளவிற்கு ஏமாற்றத்தையும்துரோகத்தையும் ஒரு மனவடுவாக உணர்வதும் அதைத் தாங்கிக்கொள்ளமுடியாதளவிற்கு மனச்சிதைவினைஏற்படுத்தியவனை விட்டுவிட்டு தற்கொலை முயற்சி செய்யும் பெண்களைக்கூட குற்றஞ்சுமத்தி, ஆளுமையான பெண்கள்இவ்வாறான சுரண்டல்களைக் கடந்துபோய்விடுவார்கள் என்பதாகப்பேசி நேர்மறையான தீர்ப்பு (positive judgement) மூலமாக அவர்களின் குரலை ஒடுக்கியிருக்கிறார்கள். ஆண் கலைஞர்களது பிறழ்வுகள் எத்தகையதாயினும் மனநோயாகவோ அல்லது மன அழுத்தமாகவோ கருதப்படுவதுபால்நிலை பாரபட்சமும் இரட்டை நிலைப்பாடுமல்லாது வேறேது? இருபதிற்கும் மேற்பட்டப் பெண்களிடம் ஒரேநாடகத்தை மீண்டும் மீண்டும் ஆடி பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கான அனுமதியை(license) 'எழுத்தாளர்', 'கலைஞர்' என்ற பெயரில் ஆண்களுக்கு வழங்குவதை எந்த சித்தாந்தம் வழிமொழிகிறது? ஆக பெண்களைப் பாலியல் ரீதியாகச்சுரண்டுவதுடன் அதிலிருந்து தமக்குத்தாமே தண்டனை விலக்கும் பொறுப்புக் கூறலிலிருந்து விலக்கும் பெற்றுக்கொள்வதற்காக, பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஷோபாசக்தி போன்றோராலும் அவர்களது குழாமினாலும்உருவாக்கப்பட்டு பரவவிடப்பட்ட கருத்தியல் கட்டுக்கதையே கலைஞர்களின் ‘பிறழ்'வாகும். பொதுவாக பாலியல் சுரண்டல்காரர்களின் உத்திகளில் பல பொதுவான போக்குகளை அவதானிக்க முடியும். அவைஒரேமாதிரியானவை. அதிலொன்றுதான் பெண்களையும் திருநங்கைகளையும் பாலியல் பண்டங்களாக நடத்தும் போக்கு.தன்னைவிட இளவயது பெண்களிடம் உறவிலிருக்கும் போது, அதையும் பெருமையாக, 'I am having a young lover' எனப்பெருமை பாடியும், அவர் குடிக்குமிடங்களில் தன்னோடு உறவிலிருந்து பெண்களைப் பற்றி பிதற்றியும் தனது ஈகோவிற்கும்ஆணாதிக்கச் சிந்தனைக்கும் தீனியளித்து வந்த ஷோபாசக்தி சமூகத்தில் தன்னை முற்போக்கானவராகவும்,அநீதிக்கெதிரான ஒடுக்குமுறைக்கான குரலாகவும் காட்டிக் கொண்டாலும், அவர் பார்வையில் பெண்கள் வெறும் பாலியல்பண்டங்களே! இந்தப் புகார்களுக்கெல்லாம் ஆதாரம் என்ன, அந்தப் பெண்கள் ஏன் அப்போதே பேசவில்லை, ஏன் போலீஸுக்குப்போகவில்லை, ஏன் தற்காப்பு கலைகள் பயிலவில்லை, அவர்களும் மனம் ஒத்து தானே அவரிடம் பழகினார்கள், என்றுகேட்பதற்கான எந்த அருகதையும், பேசத்துணியும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலும் பார்வைகளாலும், தங்கள்தீர்ப்புகளாலும் வல்லாங்கம் செய்யக் காத்திருப்பவர்களுக்கு இல்லை என்பதையும், ஆண்மைய சமூகத்தில் நிலவும் அதிகாரஏற்றத்தாழ்களில் ஒப்புதல்(consent) எப்படி ஓர்மைப்படுகிறது என்ற புரிதல் இல்லாதது போல பாசாங்கு செய்பவர்கள்சுரண்டலுக்குப் பல்லக்கு தூக்குகிறவர்கள் என்பதையும் இங்கு நினைவுறுத்துகிறோம். இந்தச் சமுகம்பாதிப்புக்குட்ப்படுத்தப்பட்டப் பெண்கள் பேசுவதை மதிக்கக்கூடிய, நம்பக்கூடிய மன உயரங்களை அடையும்போது இந்தஅறிக்கைகள் எழுதும் பொறுப்பிலிருந்தும் எம்மை நாம் விடுவித்துக்கொள்வோம். சமூக அழுத்தங்களையும் மீறி குரலெழுப்பிய பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களைக் கேட்டறிந்தபின்னும், அதற்கான எந்தவொரு பொறுப்புக் கூறலையும் கோராத அதேவேளை, ஷோபாசக்திக்கும் அவரது பாலியல்சுரண்டல் நடவடிக்கைகளை முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் பின்பற்றும் இளம் எழுத்தாளர்களுக்கும் தளங்களைஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு' இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத்தெரிவித்துக் கொள்கின்றோம். ஷோபாசக்தி, பல பெண்களையும் குயர் மக்களையும் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், மோசமாகப் பாதிப்படையச் செய்த தனது நடத்தைகளுக்குப் பொறுப்புக்கூறுவதுடன், இனி இத்தகைய நடத்தைகளில்ஈடுபடுவதை அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். ஷோபாசக்தி, தான் எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடமாட்டார் என்பதைதன்னுடன் தொடர்புள்ள கலை இலக்கியச் சமூகத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் . ஷோபாசக்தியைப் பொறுப்புக்கூறச் செய்வதற்குப் பதிலாக, அவரது முறையற்ற நடத்தையினைச்சாத்தியப்படுத்திய அவரது அனைத்து நட்புசக்திகளிடமும் தமது செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்குமாறுவலியுறுத்துகிறோம். ஷோபாசக்தியுடன் இயங்கும் அனைத்து அமைப்புக்களையும், தெரிந்தும் தெரியாமலும் அவரதுஇத்தகைய செயற்பாடுகளுக்கு உடந்தையாயிருந்தமைக்காக பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஷோபாசக்தியால் பாதிப்புக்குட்படுத்தப்படட பெண்களையும் குயர் சமூகத்தினரை கருத்தில் கொள்ளாதஅமைப்புக்களிடமும் நபர்களிடமும் (கலைஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள்) இப்பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரை நீண்டகாலமாக நச்சுச்சூழலில் நீடிக்கச் செய்தமை தொடர்பிலும், அதன்விளைவாக அவர்கள் பங்களிப்புச் செய்துக் கொண்டிருந்த துறைக்கும், இயக்கங்களுக்கும் ஏற்படுத்திய தீங்குதொடர்பிலும் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம். அநீதியின் மீதான மெளனமும், பாதிப்புக்குட்ப்படுத்தப்பட்டப் பெண்குரல்வளைகளின் மீது அலட்சியமாக நடந்து செல்லும்போக்கும் சுரண்டலுக்கும் வன்முறைக்கும் துணை நிற்கும் அநீதியான சூழலில், எதிர்ப்பு ஒன்று தான் மனிதத்தின்மனசாட்சியாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கை அதன் எதிரொலி. https://adhoc-feministcollective.blogspot.com/2025/04/blog-post_13.html

கூடுவேம் என்பது அவா / குறள்1310

1 day 18 hours ago
கூடுவேம் என்பது அவா / குறள்1310 ஊடல் காட்டுவது அழகின் வடிவமே ஆடல் கலையின் ஒரு முத்திரையே வாட விடாமல் அருகில் இருந்தே மடவரல் பெண்ணைத் தேற்றினால் என்ன? கூடல் இல்லா இன்பம் உண்டா பாடல் தராத இசை இருக்கா தேட வைத்து கண்ணீர் வரவழைக்காமல் மடந்தை நெஞ்சுடன் இணைந்தால் என்ன? தேடல் கொண்டு உள்ளம் அறிந்து உடல் வனப்பை பார்த்து மகிழ்ந்து அடக்கம் தூவும் நாணம் அகற்றி ஆடவள் மனதில் குடிகொண்டு வாழ்ந்தாலென்ன? கூடுவேம் என்பது அவாவின் வெளிப்பாடு நாடும் ஆசைக்கும் வடிகால் அதுவே கூடு போட்டு அதைச் சிறைவைக்காமல் கேடுவிளைக்கும் பொய்க் கோபம் அழிந்தாலென்ன? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது

1 day 18 hours ago
வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது April 16, 2025 12:27 pm சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் வாங்கக்கூடாது என்று சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விமானங்களைத் தவிர, விமான பாகங்கள் மற்றும் கூறுகளும் விலை அதிகமாகியுள்ளது. முன்னதாக சீனாவின் ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை 2025 மற்றும் 2027 க்கு இடையில் 179 போயிங் விமானங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த விமானங்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையை தடையைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ் மற்றும் சீன உற்பத்தியாளர் கோமாக் ஆகியவற்றை நம்பியிருக்க வேண்டியிருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். இதனிடையே, சீனாவின் தடை அமெரிக்க பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்கு விலை மூன்று சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ளது. எவ்வாறாயினும், சீனாவின் அறிவிப்பு உலகளாவிய விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்களை வாங்குவதில் சிரமப்படும் இந்திய விமான நிறுவனங்களுக்கு உதவக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் தற்போது 100 போயிங் விமானங்களை வாங்குவதற்கு தயாராகியிருந்தது. எனினும், சீனாவின் தடை காரணமாக அந்த விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஆகாசா ஏர் நிறுவங்கள் வாங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “ சீன விமான நிறுவனங்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்களில் சில இந்திய நிறுவனங்களுக்கு திருப்பி விடப்படும் என்று விமானத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். https://oruvan.com/trade-war-china-bans-boeing-planes/

யாழ் செல்லும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

1 day 19 hours ago
யாழ் செல்லும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை! adminApril 16, 2025 யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமை (17.04.25) ஜனாதிபதி வருகை தரும் போது, யாழ் மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து , எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒரு பகுதி விவசாய காணிகளை விடுவித்து , ஆக்கங்களில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதேவேளை “உறுமய” காணி வழங்கப்படும் திட்டத்தின் ஊடாக ஒட்டகப்புலம் பகுதியில் 408 குடும்பங்களுக்கு 235 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. விவசாய நடவடிக்கைகாக பலாலி வடக்கு , பலாலி கிழக்கு , பலாலி தெற்கு , வயாவிளான் மேற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் காணிகள் விடுவிக்கப்பட்டன குறித்த விவசாய காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் கடுமையான நிபந்தனைகளுடன் , கட்டுப்பாடுகளை விதித்தே விவசாய நிலங்களுக்கு மக்களை அனுமதித்துள்ளனர். குறிப்பாக , பின்மாலை பொழுதுகளின் பின்னர் காணிகளுக்குள் நிற்க முடியாது, விவசாய நிலங்களில் ஓய்வு எடுப்பதற்கு தற்காலிக கொட்டகைகளை அமைக்க அனுமதியில்லை, போன்ற கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் குறித்த காணிகளை சுற்றி உயர் பாதுகாப்பு வலய வேலிகள் அகற்றப்படாமல் இருப்பதனால் , தமது விவசாய காணிகளுக்கு சுற்று பாதைகள் ஊடாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலைமைகளும் காணப்படுகிறது. குறித்த வேலிகளை பின் நகர்த்த 18 மில்லியன் ரூபாய் செலவு என இராணுவத்தினர் மதிப்பீடு செய்து, நிதி கோரியுள்ள நிலையில் ,அந் நிதி இராணுவத்தினருக்கு வழங்கப்படாமையால் , இராணுவத்தினர் வேலியை பின் நகர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி, யாழ் . மாவட்ட கட்டளை தளபதியுடன் கலந்துரையாடி, விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்குள் சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/214396/

நானும் ஊர்க் காணியும்

1 day 19 hours ago
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்துகொண்டு நாற்பது ஆண்டுகளாகக் குடும்பத்துக்கு உழைத்துக் களைத்து அங்கு போய் நிம்மதியாக இருப்போம் என்றால் எல்லாரும் என்னை புல் பிடுங்கச் சொல்கிறீர்கள், மண்வெட்டி பிடிக்கச் சொல்கிறீர்கள். என்ன நியாயம் இது 😃 இலங்கையில் இப்பொழுது இந்தியன் இயந்திரங்கள் இறக்குமதி செய்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். சைனாவின் பொருட்களும் இருக்கலாம். இம்முறை செல்லும்போது விசாரிக்கவேண்டும். இங்கிருந்து கொண்டுபோகநிறையச் செலவு. இந்தியாவிலும் நிறைய இலகுவான முறையில் இயங்கும் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் சென்று அல்லது ஓடர் செய்வது என்றால் அதிக வரி செலுத்தவேண்டி வரும் .

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்!

1 day 19 hours ago
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க முழுமூச்சுடன் செயற்படும் சனத் ஜயசூரிய Published By: VISHNU 16 APR, 2025 | 02:15 AM (ரொபட் அன்டனி) யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நாங்கள் அமைத்தே தீருவோம். இதனை நிர்மாணிப்பதற்கான உதவிகளை இந்தியாவிடம் உத்தியோகப்பூர்வமாக கோருவதற்கான கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாண மக்கள் இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பில் மிக்க மகிழ்ச்சியை என்னிடம் தெரிவித்தனர். எனவே இதற்காக நாம் சகல முயற்சிகளையும் எடுப்போம் என்றும் சனத் ஜயசூரிய குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்கு கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுடன் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியையும் சனத் ஜயசூரிய பார்வையிட்டார். இது தொடர்பில் கேசரியுடன் கருத்து பகிர்கையிலேயே முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜயசூரிய மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டினார். ‘‘யாழ்ப்பாணத்துக்கு நான் வியாழக்கிழமை விஜயம் செய்து அங்கு மக்களுடன் கலந்துரையாடினேன். யாழ். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னுடன் உரையாடினர். கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக யாழில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் யாழ். மக்கள் என்னிடம் மிக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிநிதிகளுடன் இணைந்து நான் தற்போது இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியைப் பார்வையிட்டேன். யாழில் நாங்கள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை எப்படியாவது அமைப்போம். இதற்காக முழுமூச்சுடன் செயற்படுவோம்.’’ இவ்வாறு குறிப்பிட்டார் சனத் ஜயசூரிய. அண்மையில் இலங்கைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்த போது 96ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி வீரர்களை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட சனத் ஜயசூரிய நெருக்கடி நேரத்தின் போது இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை அவதானத்தைப் பெற்றதாக அமைந்தது. இது தொடர்பில் விரைவில் உத்தியோகப்பூர்வமாக கடிதமொன்றை இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சனத் ஜயசூரிய குறிப்பிட்டார். ‘‘இந்தியப் பிரதமரை சந்தித்த போது நாங்கள் இந்தக் கோரிக்கையை. வாய்மூலம் விடுத்தோம். ஆனால் அது தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுக்கவேண்டியுள்ளது. எனவே விரைவில் இதற்கான உத்தியோகப்பூர்வமான கடிதம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படும்.’’ என்றும் சனத் ஜயசூரிய சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/212064

யாழ். குருநகர் கடற்கரையில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட துப்பாக்கி

1 day 19 hours ago
யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடற்கரைப் பகுதி ஒன்றில் வைத்து ரி 56 ரக துப்பாக்கியொன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக காவல்துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/gun-seized-by-police-at-guru-nagar-beach-jaffna-1744775933#google_vignette
Checked
Thu, 04/17/2025 - 23:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed