புதிய பதிவுகள்2

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 day 20 hours ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் ஆண் : அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : { என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை } (2) ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை ஆண் : { நடை பழகும்போது தென்றல் விடை சொல்லி கொண்டு போகும் } (2) ஆண் : { அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் } (2) ஆண் : { நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை } (2) ஆண் : { கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை } (2)......... ! --- காற்று வாங்க போனேன் ---

குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!

1 day 20 hours ago
நாங்க புதிய முதலமைச்சரை வெளிக்கிடுத்தி நீங்க புள்ளிகள் போடுமட்டும் காவலிருக்க திரையரங்கில் படுத்துக் கிடந்து அன்ரிமாரை ரசித்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் உடனுக்குடன் புள்ளிகளைப் போட்டுவிட்டு யாரையாவது ரசியுங்கள்.

சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா!

1 day 20 hours ago
அதே விளையாட்டுத்தான். கோவிட் நேரம் உலகமே சுவாசக் கருவிகள் இல்லாமல் அமளிப் பட்டுக் கொண்டிருக்க... பிரான்சுக்கு ஒரு தொகை சுவாசக் கருவிகளை ஏற்றுமதி செய்தால்... அது தரமற்ற கருவி மட்டுமல்ல, அதில் பயன்படுத்தும் செயல் முறை முழுக்க சீன எழுத்துக்களில் இருந்தனவாம். கோவிட் நேரம் மருத்துவர்களின் தட்டுப்பாடு ஏற்பட்ட போது... சீனா தாம் உதவுகின்றோம் என ஒரு குழுவை அனுப்பி, அதற்கும் ஒரு தொகை பணத்தை வாங்கி விட்டார்களாம். பிரான்ஸ் இதற்கு சீன அரசாங்கத்திடம் ஆட்சேபனை தெரிவித்த போது... அவை தனிப்பட்ட நிறுவனங்கள் என்றும் தமக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என சொல்லி விட்டதாம்.

குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!

1 day 20 hours ago
ஆம். காலைக் கூட நீட்டிக்கொண்டு ஹாயாகப் பார்க்கலாம்😜 ஆனால் வீட்டில் உள்ள சோபாவில் இருந்து பார்க்கவில்லை😆

குட் பேட் அக்லி Review: கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு மட்டும்!

1 day 23 hours ago
எத்தினை வயதிலிருந்து அங்கிள் வயது ஆரம்பமாகும்? ஏனென்றால் என்னை பத்து வயதிலிருந்தே சிலர் மாமா என்று கூப்பிடத் தொடங்கீட்டினம்

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்; தங்கத்தின் விலை புதிய சாதனை!

1 day 23 hours ago
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்; தங்கத்தின் விலை புதிய சாதனை! அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளதால், தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, புதன்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,357.40 (£2,540) அமெரிக்க டொலர்கள் என்ற விலையை எட்டியது. பின்னர் அதன் விலை உச்சத்திலிருந்து சரிந்து. வியாழக்கிழமை (17) 3,322 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலையானது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகள் மெதுவான வளர்ச்சி, அதிக விலைகள் மற்றும் வேலையின்மை அபாயங்களைக் குறிக்கும் என்று அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் கூறியதைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் முதலீட்டாளர்களுக்கு இந்த விலைமதிப்பற்ற உலோகம் ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுகிறது. ஆய்வாளர்கள் இந்த ஆண்டு தங்க ஏற்றத்தை நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஈரானியப் புரட்சியுடன் ஒப்பிட்டுள்ளனர். அப்போது 1979 நவம்பர் முதல் 1980 ஜனவரி வரை தங்கத்தின் விலைகள் கிட்டத்தட்ட 120% உயர்ந்தன. உலகளாவிய வர்த்தகப் போரின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை தொடங்கியதால், கடந்த மாதம் முதல் முறையாக தங்கம் ஒரு அவுன்ஸ் $3,000 ஐத் தாண்டியது. ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரிகள், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகங்களுக்கு விதிக்கப்படும் வரிகள், பணவீக்கம் குறித்த அச்சங்களைத் தூண்டியுள்ளது. இது முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பான புகலிட சொத்துக்கள் என்று அழைக்கப்படுவதை நோக்கித் தள்ளியுள்ளது. ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரை வரி விதித்துள்ளார். ஏற்கனவே உள்ளவற்றுடன் புதிய வரிகள் சேர்க்கப்படும்போது, சில சீனப் பொருட்களின் மீதான வரிகள் 245% ஐ எட்டக்கூடும் என்று அவரது நிர்வாகம் இந்த வாரம் கூறியது. மேலும் சீனா அமெரிக்க இறக்குமதிகள் மீது 125% வரியை விதித்து பதிலடி கொடுத்துள்ளது. 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்ட பின்னர், பல நாடுகள் மீதான அமெரிக்க வரிகள் அமலுக்கு வருமா என்பது குறித்தும் நிச்சயமற்ற தன்மை உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு உற்பத்தியை மீண்டும் கொண்டு வரும், அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பில்லியன் கணக்கான டாலர்கள் வரி வருவாயை உருவாக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. https://athavannews.com/2025/1428646

புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை - ஈபிடிபி

1 day 23 hours ago
புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை வழக்கமாக தேர்தல் காலங்களில் எமது கட்சிக்கு எதிராக சேறுடிப்பதையும், புலிகளின் தலைமைக்கும் எமது செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை வைரலாக்குவதும் எமது அரசியல் எதிர் தரப்புக்கள் கையாள்வது வழக்கம். அவ்வாறு தற்போதும், சில காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - புலிகளின் தலைமையும் எமது செயலாளர் நாயகமும், எமது மக்களின சுதந்திரமான - கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக இரு வேறு ஆயுதப் போராட்ட அமைப்புக்களை வழிநடத்தியவர்கள். எங்களுடைய கைகளிலே ஐந்து விரல்கள் காணப்படுகின்போதிலும் அவை வித்தியாசமான செயற்பாடுகளை கொண்டவையாக காணப்படுகின்றன. அதே போன்றுதான், எமது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட பிரதான ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் தலைவர்களும் வித்தியாசமான செயற்றிறன்களையும், வேறுவேறான சிந்தனைகளையும் கொண்டிருந்தனர். அந்தவகையில் எமது செயலாளர் நாயகத்திற்கும் புலிகளின் தலைமைக்கும் இடையில் தமது இலக்கினை அடைவது தொடர்பில் வித்தியாசமான சிந்தனைகள், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் காணப்பட்டன. எத்தகைய அழிவுகளை கொடுத்தேனும் இலக்கை அடையும் வரையில் ஆயுதப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்க வேண்டும் என்பது புலிகளின் தலைமையின் சிந்தனை. விவேகம் அற்ற வீரம் விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சர்வதேச பூகோள நிலவரங்களை அனுசரிக்க வேண்டும், இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி நகர வேண்டும், சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும், உருவாகும் சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பது எமது செயலாளர் நாயகத்தின் சிந்தனை. ஆனால் இருவருக்கும் இடையில் பொதுவான குணாம்சங்களும் காணப்பட்டன அதாவது, தாங்கள் ஒரு விடயத்தினை தீர்மானித்து விட்டால் அதில் உறுதியாக இருந்து அதற்காக கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவது. மற்றது, யாருடைய மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்கு அடிபணியாத பிடிவாதம். நான் நம்புகின்றேன். இவ்வாறான இருவருக்கும் பொதுவான குணாசமங்கள்தான், இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை வலுப்படுத்தின. இவர்களுக்கிடையிலானபிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு எம்மத்தியில் காலத்திற்கு காலம் இருந்த சமூக சிந்தனையாளர்கள் புத்திஜீவிகள் என்று பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. தன்னுடைய பயணத்திற்கு எதிரான தடைகளும், மாற்றான சிந்தனைகளும் அழிக்கப்பட வேண்டியவை என்ற தன்னுடைய சிந்தாந்தத்திற்கு அமைய புலிகளின் தலைமை எமது செயலாளர் நாயகத்தை அழிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றை தன்னுடைய தற்துணிவினாலும் எமது தோழர்களின் அர்ப்பணிப்பாலும் எமது செயலாளர் நாயகம் முறியடித்தார். இந்த நிலை பல வருடங்களாக நீடித்த நிலையில் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் திரட்சியடைந்து வீரியமடைந்தது. இப்போதும் 2009 இற்கு முற்பட்ட சூழல் இருக்குமாயின் இருவருக்கும் இடையிலான முரண்பாடு என்பது இன்னும் தீவிரமடைந்திருக்கும். இந்த முரண்பாடு என்பது ஈழத் தமிழர்களுக்காக பொங்கி எழுந்த இரண்டு தலைவர்களின் சிந்தனை வேறுபாடுகளினாலும் செயற்பாடுகளினாலும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறான பின்னணயில்தான், எமது மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கருத்தாடல்கள் உருவாகின்ற சந்தர்ப்பங்களில் எமது செயலாளர் நாயகம் புலிகளின் தலைமையை கடுமையாக விமர்சிக்கின்றார். இந்த நிலையில் எமது மக்கள் ஒரு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களுக்காக உருவாகிய ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தையும் களத்தில் இருந்து அகற்றி தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலத்தை பலவந்தமாக தமது கையில் எடுத்த புலிகளின் தலைமை, அதனை சரியான முறையில் பயன்படுத்த வில்லை என்ற ஆதங்கம் எமது செயலாளர் நாயகத்தின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எமது மக்கள் சந்தித்த அனைத்து இழப்புக்களுக்கும் புலிகளின் தலைமையின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்பது எமது செயலாளர் நாயகத்தின் திடமான வாதமாக இருக்கின்றது. அதைவிட, எங்களுடைய செயலாளர் நாயகமும் சாதாரண மனிதன் என்ற அடிப்படையில், தன்னுடைய வழிமுறைகளை பின்பற்றி செயற்பட்டார்கள் என்ற ஒரே நோக்கத்திற்காக தன்னுடைய சக தோழர்களான பல ஆளுமைகளை கொலை செய்யப்பட்டமை எமது செயலாளர் நாயகத்தின் ஆழ் மனதில் ஆறாத வடுவாக இருந்து கொண்டே இருக்கின்றது. அவை எல்லாவற்றையும்விட முக்கியமானது 2009 இற்கு பிற்பட்ட காலத்தில் அவர் எதிர்நோக்கிய நடைமுறை சிக்கல்கள். அதாவது, நூற்றாண்டுகளாக எமது மக்கள் வழிபட்டு வந்த வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாடு நடத்த அனுமதியுங்கள் என்றால், சுற்று நிரூபங்கள் என்றும் சட்டதிட்டங்கள் சாக்கு போக்கு சொல்கிறார்கள் பல்வேறு திணைக்களங்களும் கூகுளில் பார்த்துவிட்டு கையகப்படுத்தி வைத்துள்ள எமது மக்களின் காணிளை விடுக்க முயலும்போது அவர்கள் சொல்லுகின்ற ஆயிரம் வியாக்கியானங்களும் கால இழுத்தடிப்புக்களும் அவரை சினம் கொள்ள வைக்கின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம்..., காலத்தின் தேவையுணர்ந்து ஈடுஇணையற்ற தியாகங்களினால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் பலம் சரியான முறையில் கையாளப்பட்டு பாதுகாக்கப்பட்டிருப்பின், இவ்வாறு ஒவ்வொருவும் கதை சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? என்று செயலாளர் நாயகத்தின் உள்ளுணர்வு குமுறுகின்றது. அந்தக் குமுறல் புலிளின் தலைமைக்கு எதிரான விமர்சனமாக அவ்வப்போது வெளிப்படுகின்றது. இதுதான் உண்மை. ஆக எமது செயலாளர் நாயகம் வெளிப்படுத்தும் புலிகளின் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் அறச் சீற்றமே தவிர வேறெதுவும் இல்லை என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அறச் சீற்றத்தினை வெளிப்படுத்துகின்ற போது, புலிகளின் அமைப்பின் தியாகங்களை வைத்து போலி அரசியல் செய்கின்றவர்களினால் காண்பிக்கப்படுகின்ற பிம்பங்களையும் கற்பனைகளையும் விமர்சிக்கின்றார். ஆயுதப் போராட்டம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. எங்கெங்கு தவறுகள் இடம்பெற்றன. எவ்வாறு தவறுகள் இடம்பெற்றன என்பதை வெளிப்படுத்துகின்றார். எனவே எமது செயலாளர் நாயகத்தின் அறச் சீற்றமும், அரசியலுக்காக எதையும் மூடி மறைக்காமல் வெளிப்படுத்தும் வரலாற்று உண்மைகளுமே எமது அரசியல் எதிரிகளால் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கப்பட்டு எமக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதே உண்மை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cm9k1qxzk00eyhyg3teekg89u

முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை

1 day 23 hours ago
முரண்பாடுகளை அதிகரித்த மோடியின் வருகை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புணர்வில் உறுதியாகவிருந்ததுடன் சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் கட்சியாகவே செயற்பட்டது. அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன், அதன் அப்போதைய தலைவர் ரோஹன விஜேவீர தலைமையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. அனுரகுமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பியின் இன்றைய முன்னணி தலைவர்களில் பலர் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜே.வி.பியில் இணைந்தவர்களாகவேயுள்ளனர். இலங்கையின் வடக்குக்கு ‘அமைதி காக்கும் படையை’ அனுப்பி வைக்க கைச்சாத்திடப்பட்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த ஜே.வி.பி., இந்தியா, இலங்கையைப் பிரிக்கத் திட்டமிடுவதாகக் கூறி அதற்கு எதிராக ஆயுத கிளர்ச்சி மற்றும் படுகொலை வன்முறைகளை முன்னெடுத்தது. வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது இதன் விளைவாக சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 37 வருடங்களுக்கு முன்னர் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீது, இராணுவ அணிவகுப்பு மரியாதையில் விஜயமுனி என்ற கடற்படை அதிகாரி தாக்க முற்பட்ட சம்பவம் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், குறித்த நபர் ஜே.வி.பி. பின்னணியைச் சேர்ந்தவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இத்தாக்குதலில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையிலேயே அண்மையில் இலங்கை வந்த இந்தியப் பிரதமர் மோடிக்கான இராணுவ அணி வகுப்பு மரியாதையில் மோடியின் பாதுகாப்பு பிரிவினர் முன்னெச்சரிக்கையாக அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடிக்குப் பாதுகாப்பை வழங்கினர். அப்போது, நாட்டில் ஜே.வி.பியின் படுகொலைகள், வன்முறைகள் உச்சம் தொட்ட நிலையில், ஜனாதிபதியாக பிரேமதாச பதவியேற்ற பின்னர், இரும்புக் கரம் கொண்டு ஜே.வி.பி. அடக்கப்பட்டது. இதன் பின்னர் ஜே.வி.பி. தலைமைத்துவம் 1994இல் மீண்டும் தலைதூக்கி, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன், அதன் சோசலிச கொள்கைகளைப் பெருமளவில் கைவிட்டு விட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்ததுடன், போருக்கான அதன் ஆதரவு மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களில் அதன் பங்கேற்பு அல்லது அரசியல் ஆதரவளிப்பினால் செல்வாக்கு இழந்துபோன ஜே.வி.பி. 2015இல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஸ்தாபித்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று இன்று ஆட்சியாளர்களாகியுள்ளனர். ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்னர் இருந்த ஜே .வி.பி. - என்.பி.பி. ஆகியவற்றின் கொள்கைகளும் பிரசாரங்களும் கொடுத்த வாக்குறுதிகளும் ஆட்சி பீடமேறிய பின்னர் ஒட்டுமொத்தமாக மாறியதே இன்று இவர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவதற்கும் இவர்களின் ஆதரவாளர்கள் விசனப்படுவதற்கும் காரணமாகியுள்ளது. அதிலும், இந்தியாவின் எதிர்ப்புணர்வாளர்களாகவே தம்மை இறுதிவரை காட்டி வந்த இவர்கள், இன்று இந்தியா மீது கொண்டுள்ள காதல் இவர்களின் கொள்கை. இரட்டைவேடம் தொடர்பிலான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதுவே ஜே.வி.பியில் இன்றுமுள்ள சில தீவிர இந்திய எதிர்ப்புணர்வாளர்களினால் ஜே .வி.பி.- என்.பி.பி. கட்சிகளிடையில் பிளவுகளும் முறுகல்களும் ஏற்பட்டுள்ளதை அண்மைய இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் அம்பலப்படுத்தியுள்ளது. மக்கள் விடுலை முன்னணி (ஜே.வி.பி.)- தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் தனது முதல் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவுக்குச் சென்றமை ஜே.வி.பி. - என்.பி.பிக்கிடையில் முதலில் புகைச்சலை ஏற்படுத்தியது. ஜனாதிபதி அனுரகுமார தனது முதல் விஜயமாக சீனாவுக்குச் செல்ல வேண்டுமென விரும்பியபோதும், அயல்நாடு என்றவகையில் இந்தியாவுக்கு முதலில் செல்ல அனுரகுமாரவுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், அதற்கான அழுத்தமும் இந்தியாவினால் கொடுக்கப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமாரவின் இந்த இந்திய விஜயம் தொடர்பில் ஜே.வி.பிக்குள் எதிர்ப்பலைகள் எழுந்ததுடன், நாட்டிலும் அனுரகுமார அரசுக்கு எதிரான விமர்சனங்கள், விசனங்கள் கிண்டல்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில், அனுரகுமாரவின் இந்திய விஜயத்தையும் அவரது உயர்மட்ட கலந்துரையாடல்களையும் அவரது கட்சிக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாகத் தேசிய மக்கள் சக்தி வெளிக்காட்டி பிரசாரங்களை முன்னெடுத்தது. அண்மையில் கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, அதானியின் கொழும்பு மேற்கு துறைமுக அபிவிருத்தி ,திருகோணமலை துறைமுக மேம்பாடு குறித்தும் அதன் அறிவிப்பை இந்தியப் பிரதமர் வரும்போது வெளியிடலாமென்றும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டபோது, அவற்றையெல்லாம் நிராகரித்தார் ஜே.வி.பி அமைச்சர் ஒருவர். இந்தியாவுக்கு அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே.வி.பியின் இடதுசாரி அடையாளத்தை மெதுவாக இழக்க வைக்கத் தொடங்கியிருக்கின்றது. என்பது ஜே.வி.பியில் உள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை சினமடைய வைத்துள்ள நிலையில்தான், அண்மைய இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே.வி.பிக்குள் புகைந்து கொண்டிருந்த முறுகலை, பிளவுகளைத் தீவிரப்படுத்தி விட்டுள்ளது. இதன் வெளிப்பாடுகளாகவே இந்தியப் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்வு, இராப்போசன விருந்துபசாரம் போன்றவற்றை ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முக்கிய அமைச்சர்கள் புறக்கணித்தனர். இன்று நாடொன்றின் பிரதமரையே கூடி நின்று வரவேற்க முடியாத நிலைமை ஜே .வி.பி.-என்.பி.பி. அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மோடியின் இந்த விஜயத்தின்போது, இலங்கை மற்றும் இந்தியா இடையே பல பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்குப் புலனாய்வுத் தகவல் வழங்குவது, திருகோணமலையில் சக்திவாய்ந்த ராடர் ஒன்றை நிறுவுவது, இலங்கை கடல் படைக்குப் பயிற்சி, விமானப் படைக்குப் பயிற்சி மற்றும் விமானங்களை வழங்குவது என்று 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் இலங்கை இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனூடாக ஒட்டு மொத்தத்தில் மோடி, இலங்கையை வளைத்து கைக்குள் போட்டுள்ளார். சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்கான முழு நடவடிக்கையில் இறங்கிய மோடிக்கு இது பெரும் வெற்றி அளித்துள்ளது.இதுவே ஜே.வி.பியிலுள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை இந்தியப் பிரதமரிற்கான வரவேற்பை, சந்திப்பை, இராப்போசன விருந்தை புறக்கணிக்க வைத்தது. கொழும்பு பாதுகாப்பு மாநாடு மற்றும் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக ஒரு சர்ச்சை உள்ளது. கவலைப்பட ஒன்றுமில்லை. பிராந்திய பாதுகாப்பை நாம் நிறுவ வேண்டும். மேம்பட்ட மற்றும் திறமையானவர்களின் உதவியைப் பெற வேண்டும். இல்லையெனில், நாம் முன்னேற முடியாது என்றும் அனுரகுமார கூறியுள்ளார். எமது அயல் நாட்டின் தலைவர் மோடி நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுச் சென்றுள்ளார்.ஆனால், எதிர்க்கட்சியினர் சர்வதேசத்துக்கு நாட்டை அரசு காட்டிக்கொடுப்பதாக தற்போது குற்றஞ்சாட்டுகின்றார்கள். அரசு நாட்டை காட்டிக் கொடுக்கவில்லை.அவர்கள் காட்டிக்கொடுத்தவற்றை நாமே நிறுத்தியுள்ளோம். ரணில், மில்கோ நிறுவனத்தை இந்தியாவின் தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்தார். ஆனால், நாம் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதேபோன்று மஹவ - ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ - அனுராதபுரம் ரயில் பாதை சமிக்ஞை கட்டமைப்பு ஆரம்பத்தில் இந்தியாவின் கடன் உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், ஜனாதிபதி அனுரகுமார, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இந்தியப் பிரதமர் இந்தத் திட்டங்களை அன்பளிப்பாக வழங்குவதாகக் குறிப்பிட்டார். அதேபோன்று இந்தியாவிடம் இருந்து நாம் கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.தற்போது இந்தக் கடனுக்கான வட்டியைக் குறைப்பதாக இந்தியப் பிரதமர் மோடி எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முறியடித்து நாம் சர்வதேசத்தின் முழு ஒத்துழைப்புடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, எமது அரசை எந்தச் சதி முயற்சியாலும் கவிழ்க்கவே முடியாது என்று ஜே .வி.பி.யின் பொதுச் செயலாளரும் தே.ம.ச.யின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான ரில்வின் சில்வா வும் இந்தியாவுடனான காதலை உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே, இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசில் முரண்பாடுகளையும் பிளவுகளை ஏற்படுத்திவிட்டுள்ளதுடன் அதனை வெளியுலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் சிக்கித்தவித்து வரும் நிலையில் தற்போதைய இந்தியப்பிரதமரின் இலங்கை விஜயத்திற்கும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் ஜே.வி.பியினரின் உள்ளம் கவர்ந்த சீன அரசு காட்டப்போகும் பிரதிபலிப்புக்கள் இலங்கையில் இந்திய-சீன தலையீடுகளின் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தவே போகின்றன. அனுரகுமார, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன், முதல் நாடாக இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் இலங்கையில் ஏற்படுத்திய அதிர்வலைகளை விடவும் கடந்த 4ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசு மீது அதிக எதிர்ப்பலைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தியாவுக்கு எதிரான ஜே .வி.பியின் கொள்கை தொடர்பிலான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி, ஜே .வி.பி.-என்.பி.பி. கட்சிகளுக்குள் முரண்பாடுகளையும் பிளவுகளையும் அதிகரித்துள்ளது. முருகானந்தம் தவம் https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முரண்பாடுகளை-அதிகரித்த-மோடியின்-வருகை/91-355661

“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “

1 day 23 hours ago
“மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “ மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார். மன்னார் பஜார் பகுதியில் வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. மேலும் மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது.ஆனால், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு,சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் முதல்,மேலதிகமாக 4 இலட்சம் நபர்களுக்கு அஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன்,திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மன்னார்-ராமேஸ்வரம்-இடையே-படகு-சேவை/175-355691

கொபசெ சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் திடீர் அறிக்கை! நாம் தமிழர் கட்சியில் புது பஞ்சாயத்து!

1 day 23 hours ago
ஆனால் இன்றோ அன்று ஓடி வந்தவர்களினால் தான் அந்த மண்ணுக்கு பலம்.🙂 புலம்பெயர் தமிழர்கள் இல்லையென்றால் அங்கிருப்பவர்களை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? 😎

பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்

2 days ago
ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி பிள்ளையானா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுவதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஆனால் 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் கைதாகி இருந்தவரை 2019இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூற முயல்வதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் தனது அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். நான் பிள்ளையானை அரசியல்வாதியாக அன்றி சட்டத்தரணியாகவே சந்தித்தேன். இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் நாட்டின் சட்டத்தை மீறி முறையில் கடந்த 8ஆம் திகதி பிள்ளையானை கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்ட ஒழுங்குவிதிகளுக்கமைய அவ்வாறான கைதுகளை செய்வதென்றால் அதற்கான காரணத்தை கைதாகுபவரின் உறவினர்களுக்கு எழுத்து மூலம் கூற வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு சட்டத்தரணியை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கவும், குடும்பத்தினருடன் சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது எதுவும் பிள்ளையான் கைது செய்யயப்பட்ட விடயத்தில் நடக்கவில்லை. 9 ஆம் திகதி அவரின் சட்டத்தரணிக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரின் குடும்பத்தினர் என்னை சந்தித்தனர். இதனை தொடர்ந்து நான் சீஐடி பணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அதுபற்றி தெளிவுப்படுத்தினேன். இதன்படி இனி நானே பிள்ளையானின் சட்டத்தரணி என்பதனை கூறியதுடன், அதன்படி எழுத்துமூலம் நான் சட்டத்தரணியாக அனுமதி கேட்டேன். இதன்படி 13ஆம் திகதி பிள்ளையானை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி 30 நிமிடங்கள் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். நான்கு பொலிஸ் அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்தனர். சட்டத்தரணி சேவை பெறுநருடன் பேசுவது இரகியமானது. இவ்வாறாக கதைக்க அனுமதி கேட்ட போதும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் நான்கு அதிகாரிகளின் முன்னிலையில் நான் உரையாடினேன். அப்போது பிள்ளையான் கண்களில் கண்ணீர் வடிய உரையாற்றினார். தான் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகி, எனது உயிரையும் பணயம் வைத்து விடுதலைப் புலிகளை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தேன். அன்று புலிகளுடன் இருந்தவர்கள் இப்போது எம்.பிக்களாகவும், வியாபாரிகளாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் சிலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவர்களில் எவருக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் என்னை மட்டும் இப்படி நடத்துகின்றனர் என்றார். ஏற்கனவே 5 வருடங்கள் என்னை தடுத்து வைத்திருந்து போதுமான சாட்சியங்கள் இல்லையென நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நான் மீண்டும் தடுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றார். இந்த நாட்டை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பதற்காக தீர்மானம் மிக்க பங்களிப்பு செய்தவர். இதனால் இவர் தேசிய வீரராக கருதப்பட வேண்டியவர். கருணாவும் பிள்ளையானும் விடுதலைப் புலிகளிடம் இருந்து விலகி அவர்களுக்கு எதிராக நடத்திய போராட்டமே விடுதலைப் புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாகும். பிள்ளையான் போன்று கருணா அம்மானும் திறமையான போராட்ட வீரராகும். இவரின் தலைமையில் கிழக்கில் இருந்து வந்தவர்களே கிழக்கில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடிந்தது. இவர்கள் புலிகளை தோற்கடிக்க பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இப்போது 2006இல் நடந்த பேராசிரியர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தினத்தில் தான் எங்கே இருந்தேன் என்று தெரியாது என்றும், ஆனால் கிழக்கு யுத்தம் நடந்த காலம் என்பதனால் தான் மாவிலாறு முகாமிலேயே அந்தக் காலத்தில் இருந்திருப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு பயங்கரவாதிகளுக்கும், தெற்கு பயங்கரவாதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி மக்கள் மறந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தீர்மானம் மிக்க பங்களிப்பை வழங்கிய பிள்ளையானுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுப்பது ஏன். இப்போது பயங்கரவாதத்தின் அரசாங்கமே உள்ளது. இதனாலேயே பிள்ளையானுக்கு தண்டனை வழங்க முயற்சிக்கின்றனர். பிள்ளையானுக்கும் எனக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியில் நட்பு கிடையாது. பயங்கரவாத அமைப்பில் இருந்து விலகி அந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடுவது மிகவும் அரிதாக நடக்கும் விடயமாகும். இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட தேசப்பற்றாளருக்காக நிபந்தனையின்றி முன்னிற்காவிட்டால் எதிர்காலத்தில் பயங்கரவாதத்தை கைவிட்டு அரசாங்கத்துடன் இணைவதற்கு பயங்கரவாதிகள் தயங்குவர். இதனால் செய்நன்றியை மறக்காமல் அதற்கான உபகாரத்தை வழங்குவதையே நான் செய்கின்றேன். இதேவேளை பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக ஏப்ரல் 12ஆம் திகதி ஜனாதிபதி மட்டக்களப்பில் கூறியிருந்தார். நான் ஏப்ரல் 13ஆம் திகதியே பிள்ளையானை சந்தித்தேன். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் ஒரு வசனமேனும் கதைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையில் கைதாகி இருந்தவர் 2019இல் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென எவராவது கூறுவராக இருந்தால் அவ்வாறு கூறுபவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும். குறைந்தது சஹரானுடன் புகைப்படம் எடுத்த அரசியல்வாதியை பிரதான சூத்திரதாரியென கைது செய்திருந்தால் அதில் தர்க்க ரீதியான விடயம் இருக்கும். ஆனால் தாக்குதலுக்கு 4 வருடங்களுக்கு முன்னர் இருந்தே சீஐடியின் கீழ் இருந்தவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென கூறுவதனாது இதற்கு மேலும் நகைச்சுவையாக இருக்க முடியாது. ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பொறுப்பு கூற வேண்டிய சிலரை வெளியிடவுள்ளதாக மார்ச் 30ஆம் திகதி ஜனாதிபதி கூறியிருந்தார். இந்நிலையில் இன்னும் சிலநாட்களே 21ஆம் திகதிக்கு உள்ளது. இதனால் தன்னை நரியென ஏற்றுக்கொள்ளும் வரையில் முயலை தாக்கியது போன்றே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை விடயத்திலும் அரசாங்கம் நடந்துகொள்ள முயற்சிக்கின்றது. முயலை நரியாக மாற்றியது போன்றும், சிறுமி ஷேயா கொலை விசாரணையில் கொண்டையாவை குற்றவாளியாக கூறியது போன்றும் பிள்ளையானை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக மாற்றுவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது. பிரபாகரனுடனும் மோதிய பிள்ளையானை முயல் மற்றும் கொண்டையாவை போன்று அரசாங்கம் நினைத்துக்கொண்டிருந்தால் அரசாங்கம் செய்யும் பெரும் தவறாகும். பிள்ளையானை அவரின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்திக்க விடாது அவருக்கு அழுத்தங்களை கொடுத்து அவரின் ஊடாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருடன் முயல் விளையாட்டை செய்ய முடியாது என்பதனை பொலிஸார் புரிந்துகொண்டுள்ளனர். அவர் பேராசிரியர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வடக்கில் போராடிக்கொண்டிருந்த போது கொழும்பில் நடந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் எனக்கு எப்படி தெரியும் என்றே கூறியுள்ளார். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலோ, ராஜபக்‌ஷக்களுடன் இணைந்து செய்ததாக கூறி பிள்ளையான் சகலதையும் கக்கினார் என்று சமுக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யாகும் என்றார். -(3) https://www.samakalam.com/ஈஸ்டர்-தாக்குதல்-பிரதான/

யாழ் செல்லும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

2 days ago
காணி விடுவிப்பு கோரி ஊடக சந்திப்பினை மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய காவல்துறையினா் adminApril 17, 2025 யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியிடம் தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்த காணி உரிமையாளர்களுக்கு காவல்துறையினா் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் , பலாலி வீதி கட்டுப்பாடுகள் இன்றி முழுமையாக திறக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் ஊடகங்கள் ஊடாக முன் வைக்கும் வகையில் வசாவிளான் சந்திக்கு அண்மையில் ஊடக சந்திப்பொன்றினை ” வலி. வடக்கு காணி விடுவிப்புக்கான அமையம்” எனும் அமைப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு ஆரம்பமாக இருந்த சமயம் அவ்விடத்திற்கு சென்ற பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறைக் குழுவினர் இவ்விடத்தில் ஊடக சந்திப்பினை நடாத்த முடியாது என ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களை அச்சுறுத்தி , அவர்களை தனித்தனியே ஒளிப்படங்கள் எடுத்ததுதான் , அவர்களின் பெயர் , அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை பதிவு செய்தனர். அத்துடன் அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். அச்சறுத்தல்களையும் மீறி குறித்த ஊடக சந்திப்பு அவ்விடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பலாலி காவல்து நிலைய பொறுப்பதிகாரி இனவாத ரீதியில் செயற்பட்டு வருபவர் எனவும் ,சட்டவிரோதமான முறையில் தையிட்டி கட்டப்பட்டுள்ள விகாரைக்கு எதிரான போராட்டங்களின் போதும் போராட்டக்காரர்களுடன் முரண்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் என்பதுடன் , விகாரைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க முற்படுபவர் எனவும் மக்களால் குற்றம் சாட்டப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/214432/

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 days ago
நடராஜன் இல்லாமலே 6 போட்டிகளில் 5 இனை டெல்லி வென்று முதல் இடத்தில் இருக்கிறது. மிகுதி 8 போட்டிகளில் 3 இனை வென்றால் playoff க்கு டெல்லி தெரிவாகலாம் . சிலவேளை சென்ற வருடம் பெங்களூரூ போல மேலும் 2 போட்டிகள்( மொத்தம் 7 /14 போட்டிகள்) வென்றும் தெரிவாகலாம். நடராஜன் 7,8 மாதங்கள் காயம் காரணமாக விளையாடவில்லை. 2024 இல் விளையாடியது போல வருவாரா? . வெற்றி பெற்ற 3 போட்டிகளில் டு பிளிஸ் விளையாடினார். அதில் ஒன்றில் 2 ஒட்டங்கள் பெற்றாலும் மற்றைய போட்டிகளில் 29, 50 என எடுத்திருக்கிறார். நீங்கள் சொல்வது போல டூ பிளிஸ், நடராஜன் போன்றவர்களின் வருகையினால் ஜேக் பிரேசர் மெக்கர்க், முகேஷ் குமார் (அல்லது மோகித் சர்மா) உள்ள டெல்லி அணியை விட பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என நானும் நம்புகிறேன்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

2 days ago
இந்தப் போட்டியிலேயே நான் அதைத்தானே செய்தென் . ........... வீரனுக்கு எதிராக .......! 😂 கிரிக்கட்டில் ஆளுமைமிக்க இரு பெண்களின் அபிநயங்கள் . ........ ! 😂
Checked
Sat, 04/19/2025 - 08:26
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed