புதிய பதிவுகள்2
மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் adminApril 16, 2025 போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்தமைக்காக பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபை இணைந்து நடத்திய வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் – 2025 நிகழ்வு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் உரையாற்றுகையில், காலத்துடன் இணைந்து பல மாற்றங்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். பல விளையாட்டு நிகழ்வுகள் அருகிச் செல்கின்றன. பல விளையாட்டுகளை மறந்தே போய்விட்டோம். நடைபெறுகின்ற விளையாட்டு நிகழ்வுகளில்கூட இளையோர் பங்கேற்பும் மிகக் குறைந்துள்ளது. பாடசாலை மாணவர்கள், பாடசாலை அதன் பின்னர் தனியார் கல்வி நிறுவனம் என்று தமது நாளைச் செலவிடுகின்றனர். இல்லையேல் வீட்டில் இருந்து அலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். இப்படியிருந்தால் அவர்களால் எப்படி விளையாட்டில் ஈடுபட முடியும்? உண்மையில் மிகச் சிறப்பான நிகழ்வை வடக்கு மாகாண கல்வி அமைச்சும், பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஏற்பாடு செய்திருக்கின்றன. தமிழ் – சிங்கள மாணவர்கள், கலைஞர்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருக்கின்றார்கள். மறந்துபோகின்ற எங்கள் பாராம்பரியங்களை நினைவூட்டும் வகையில் இந்தக் கொண்டாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருப்பது மகிழ்வைத்தருகின்றது. எப்போதும் புத்தாண்டு பிறக்கும்போது நாம் சிறப்பாக அந்த ஆண்டு அமையவேண்டும் என்பதற்காக ஆலயங்களில் வழிபாடு செய்வோம். பிறந்திருக்கின்ற சித்திரைப்புத்தாண்டு எமது மாகாணத்தில் அபிவிருத்திகள் நடந்தேறி மக்கள் சந்தோசமாக வாழ்வதற்கு வழிசெய்யவேண்டும். கனவுகளை நிறைவேற்றுகின்ற ஆண்டாக இது அமையவேண்டும் என தெரிவித்தார். அதேவேளை சித்திரைப்புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் இன்னிய வாத்திய இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அத்துடன் தமிழ்ப் பாரம்பரியத்துடனான குடில் மற்றும் சிங்கள பாராம்பரிய குடில்கள் என்பன மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் ஆளுநர் பார்வையிட்டார். அவற்றைத் தொடர்ந்து மைதானத்தில் தமிழ் மற்றும் சிங்கள பாரம்பரிய கலாசார நடன நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றை ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் தமிழ்ப் பாரம்பரிய குடிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ‘குந்தில்’ இருந்து பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து வேடப் போட்டியையும் பார்வையிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளையும் ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். https://globaltamilnews.net/2025/214400/
சிரிக்கவும் சிந்திக்கவும் .
கொஞ்சம் ரசிக்க
அன்னைக்கு நிகர் அவளேதான் . .......... ! 😁
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒவ்வொரு மேட்ச் முடிந்தபின்னும் எனது டென்ஷனையும் கோபத்தையும் பார்த்துவிட்டு எனது மனைவியும் பிள்ளைகளும் சொன்னது, அடுத்த யாழ் கள போட்டியில் நான் எனது தெரிவுகளை சமர்ப்பிக்கமுன் தங்களிடம் தரட்டாம். தாங்கள் அப்படியே எதிர்மாறாய் மாற்றிவிட்டு சமர்ப்பிக்கிறார்களாம்! அப்ப இலகுவாக வெல்லலாமாம்! ஏனென்றால் எனது அதிஷ்டம் அப்படி!!🤣
இனித்திடும் இனிய தமிழே....!
Gowri Shankari oensrSdopt07ih2228ta5c55a6h305570f90546u30ucf881i8 879u312a5 · தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்.. இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். 1. பிரபவ - நற்றோன்றல் 2. விபவ - உயர்தோன்றல் 3. சுக்கில - வெள்ளொளி 4. பிரமோதூத - பேருவகை 5. பிரசோத்பத்தி - மக்கட்செல்வம் 6. ஆங்கீரச - அயல்முனி 7. சிறிமுக - திருமுகம் 8. பவ - தோற்றம் 9. யுவ - இளமை 10. தாது - மாழை 11. ஈசுவர - ஈச்சுரம் 12. வெகுதானிய - கூலவளம் 13. பிரமாதி - முன்மை 14. விக்ரம - நேர்நிரல் 15. விச - விளைபயன் 16. சித்திரபானு- ஓவியக்கதிர் 17. சுபானு - நற்கதிர் 18. தாரண- தாங்கெழில் 19. பார்த்திப - நிலவரையன் 20. விய - விரிமாண்பு 21. சர்வசித்த - முற்றறிவு 22. சர்வதாரி - முழுநிறைவு 23. விரோதி - தீர்பகை 24. விகிர்தி- வளமாற்றம் 25. கர - செய்நேர்த்தி 26. நந்தன - நற்குழவி 27. விசய - உயர்வாகை 28. சய - வாகை 29. மன்மத - காதன்மை 30. துன்முகி - வெம்முகம் 31. ஏவிளம்பி - பொற்றடை 32. விளம்பி - அட்டி 33. விகாரி - எழில்மாறல் 34. சார்வரி - வீறியெழல் 35. பிலவ - கீழறை 36. சுபகிருது - நற்செய்கை 37. சோபகிருது - மங்கலம் 38. குரோதி - பகைக்கேடு 39. #விசுவாவசு - #உலகநிறைவு 40. பராபவ - அருட்டோற்றம் 41. பிலவங்க - நச்சுப்புழை 42. கீலக - பிணைவிரகு 43. சவுமிய - அழகு 44. சாதாரண - பொதுநிலை 45. விரோதி கிருது - இகல்வீறு 46. பரிதாபி - கழிவிரக்கம் 47. பிரமாதீச - நற்றலைமை 48. ஆனந்த - பெருமகிழ்ச்சி 49. இராட்சச - பெருமறம் 50. நள - தாமரை 51. பீங்கள - பொன்மை 52. காளயுக்தி- கருமைவீச்சு 53. சித்தார்த்தி - முன்னியமுடிதல் 54. ரவுத்ரி- அழலி 55. துன்மதி- கொடுமதி 56. துந்துபி- பேரிகை 57. உருத்ரோத்காரி - ஒடுங்கி 58. இரக்தாட்சி- செம்மை 59. குரோதன்- எதிரேற்றம் 60. அட்சய - வளங்கலன் #தமிழ்_உலகின்_தொன்மையான_பாரம்பரியம்_கலாச்சாரம் https://www.facebook.com/share/g/1E4d8JBL7H/ தமிழில் தமிழ் ஆண்டுகள் .......... ! 👍
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி ஒரு போட்டியைத்தவிர எல்லாப்போட்டிகளிலும் வென்றிருக்கிறது. இதனால் அடிக்கடி அணியை காட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படவில்லை. முக்கியமாக Faf du Pleassis காயம் காரணமாக விளையாடாத சூழ்நிலை. அத்துடன் வேறு ஆரம்ப துடுப்பாடாளர்களும் அணியில் இல்லை. ஆனால் சென்னைக்கு எதிரான போட்டியில் ராகுல் ஆரம்ப துடுப்பாட்டாளராக விளையாடி 77 ஓட்டங்கள் பெற்றவர். ( முன்பும் பஞ்சாப்,லக்னோ அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ராகுல் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.) Jake Frasher McGurk க்கு பதிலாக ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், சமீர் ரிஸ்வி ராகுலின் இடத்திலும் விளையாடலாம். சிலவேளை துடுப்பாட்ட வரிசையில் 3 - 5 இடங்களில் அணிக்கு சிறந்த வீரர் ராகுல் ( சூரியகுமார் ஜாதவ், ஹென்ரிச் கிளாசன் மாதிரி) விளையாடினால் நல்லது என நினைக்கிறார்களோ.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
அப்பிடியெண்டுநீங்களா கற்பனை பண்ணுங்கோ. சுமந்திரன் எப்பவாவது சர்வதேச விசாரணை தேவை என்பதுபற்றிக் கதைச்சவரா?இப்ப தேர்தலில்நிறைய அடி விழப்போகுது என்பதால் கதைக்கிறார் அதைத்தான் சொன்னேன்
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
உங்கள் சிறுவயதில் மச்சம் படைத்திருக்கலாம்! ☺️
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரிதான். எந்த எந்த இடத்துக்கு எந்த வீரர் என்று கணக்கு இருக்கு. ஆரம்பத் துடுப்பாட, மூவர்தான் இருக்கினம். இருவர் எப்போதுமே. அதில் ஒருவர் காயமென்றால்தான் மற்றவருக்கு வாய்ப்பு. இப்பிடித்தான் அணியைக் கட்டமைக்கலாம். பந்து வீச்சும் அப்பிடியே. முக்கியமா, எதிர் அணி வீரர்களையும் கணக்கில எடுத்துத் தான் பந்து வீச்சாளரைத் தெரிவு செய்வினம். மற்றது ஆடுகளம். அதுவும் T20 மாதிரி விளையாட்டில் அணித் தெரிவு இன்னும் கடினம். திருத்தி அமைப்பதற்கு முன்னம் போட்டி முடிஞ்சிடும்.
பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்
கருத்து படங்கள்
பிள்ளையான் ராக்கெட். 😂
VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவிப்பு!
வற் வரி தொடர்பில் வெளியான தகவல் Published By: DIGITAL DESK 3 17 APR, 2025 | 10:48 AM உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வற் வரி நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வற் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு அனுமதி அளித்தார். அதன்படி, தொடர்புடைய சட்டம் குறித்த திகதியில் அமுலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் 'நாப்தா' மீதான வற் வரியும் நீக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய வரி திருத்தத்திற்கு அமைவாக, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரியை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், வெளிநாட்டு நபர்கள் இலங்கை தனிநபர்களுக்கு மின்னணு தளங்கள் மூலம் வழங்கும் சேவைகளுக்கு வற் வரி பொருந்தும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் வற் வரி திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/212183
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையான் ராக்கெட். 😂
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
ராஜஸ்தானுக்கு பயம் காட்டிய ஸ்டார்க் - த்ரில் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 16) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. கடந்த 4 ஐபிஎல் சீசனில் முதல் சூப்பர் ஓவர் போட்டி நேற்று நடந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே சூப்பர் ஓவரில் டெல்லி அணி வென்றது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் சூப்பர் ஓவர் இந்த சீசனில் முதல் சூப்பர் ஓவரில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் ரன்அவுட் ஆகவே 2 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 11 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி, 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி சார்பாக சந்தீப் சர்மா பந்து வீசினார். கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி உள்பட 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கவே டெல்லி அணிக்கு மீதமிருந்த 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மிட் விக்கெட்டில் சிக்ஸர் விளாசவே 4வது பந்திலேயே டெல்லி இலக்கை அடைந்து வென்றது. டெல்லி அணி தோற்க வேண்டிய ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு இழுத்துச் சென்ற மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். நான்கு ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். கவர் போடாத செல்போன் கீழே விழுந்தால் திரை உடையுமா? பிபிசி செய்தியாளரின் ஒரு மாத பரிசோதனை அனுபவம்16 ஏப்ரல் 2025 இந்த சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் குழந்தையை மோசமாக பாதிக்கலாம் என்பது தெரியுமா?16 ஏப்ரல் 2025 பேட்டர்களின் மெத்தனம் பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணியின் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. களத்தில் இருந்த பேட்டர்கள் பெரிய ஷாட்டுக்கு முயலவில்லை, கைவசம் 5 விக்கெட்டுகள் வரை இருக்கும் நிலையில் டெத் ஓவர்களில் நிதானமாக ஆடியது ராஜஸ்தானை தோல்விக்கு இட்டுச் சென்றது. ஹெட்மெயர், துருவ் ஜூரெல் பேட்டிலிருந்து பெரிய ஷாட் வந்திருந்தால் சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றிருக்க வாய்பில்லை. இருபதாவது ஓவரை ஸ்டார்க் வீசும்போது, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஸ்டார்க் துல்லியமாக 5 யார்கர்களை வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். கடைசிப் பந்தில் 2 ரன்கள் ஓட முயன்ற துருவ் ஜூரெல் ரன் அவுட் ஆகவே ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. டெல்லி அணியை தோல்வியிலிருந்து மீட்ட ஆபத்பாந்தவனாக ஸ்டார்க் நேற்று திகழ்ந்தார். இந்த வெற்றியால் டெல்லி கேப்டல்ஸ் அணி 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?14 ஏப்ரல் 2025 தனிமை - தனித்திருத்தல் என்ன வேறுபாடு? தனிமையை வெல்வது எப்படி?14 ஏப்ரல் 2025 ஸ்டெப்ஸ், அக்ஸர் அபாரம் டெல்லி அணிக்கு 6வது போட்டியாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரேசர் மெக்ருக் சிறப்பான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றி 9 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கருண் நாயர் இந்த முறை டக்-அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் அபிஷேக் போரெல் 23 ரன்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். 34 ரன்களுக்கு டெல்லி 2 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, அபிஷேக்குடன் சேர்ந்தார். பவர்ப்ளேவில் டெல்லி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் நிதானமாக பேட் செய்து 17 பந்துகளில் 18 ரன்கள் என மெதுவாக ஆடினார். நீண்ட நேரம் நிலைக்காத ராகுல் 32 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். விக்கெட்டுகள் சரிந்த போதிலும் அரைசதம் நோக்கி நகர்ந்த அபிஷேக் போரெல் 49 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு கேப்டன் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அருமையான கேமியோ ஆடிய அக்ஸர் படேல் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 34 ரன்கள் சேர்த்து தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்த டெல்லி அணி, அக்ஸரின் அதிரடியாக அடுத்த 2 ஓவர்களில் 146 ரன்களை எட்டியது, அக்ஸரும் 34 ரன்களில் வெளியேறினார். அஷுதோஷ் சர்மா, ஸ்டெப்ஸ் கூட்டணி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ஸ்டெப்ஸ் 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். 20வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 4 வைடுகள், ஒரு நோ பால் என 11 பந்துகளை வீசி பவுண்டரி, சிக்ஸர் என 19 ரன்களை வாரி வழங்கினார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் அதிகமான பந்துகளை வீசிய பெருமையை சந்தீப் பெற்றார். 19 பந்துகளில் இருவரும் சேர்ந்து 42 ரன்கள் சேர்த்தனர். ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 34 ரன்களுடனும், அஷுதோஷ் சர்மா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 10 நிமிடங்களில் வீட்டிற்கே டெலிவரி: ஆன்லைன் செயலிகளால் மளிகைக் கடைகள் காலியாகிறதா?15 ஏப்ரல் 2025 மூளை வளர்ச்சி, அறிவாற்றலை மேம்படுத்த உதவும் முட்டை - எப்படி தெரியுமா?15 ஏப்ரல் 2025 கடைசி ஓவரில் சொதப்பிய சந்தீப் சர்மா பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசுவதற்கு முன்பு வரை 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே வழங்கி கட்டுக்கோப்பாகப் பந்துவீசியிருந்தார். ஆனால் 20வது ஓவரில் 4 வைடுகள், ஒரு நோபால் ஒரு சிக்ஸர், பவுண்டரி எனத் தேவையின்றி 11 பந்துகளை வீசி 19 ரன்களை வாரி வழங்கினார். இந்த ஓவரை சந்தீப் சர்மா வழக்கம்போல் வீசியிருந்தாலே ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்கலாம். ராஜஸ்தான் அணி வென்றிருக்கும். அப்படியில்லாமல் அவர் 19 ரன்களை சந்தீப் வழங்கியது ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பிவிட்டது. சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட் ராஜஸ்தான் அணியும் 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் அதிரடியாகத் தொடங்கியது. சாம்ஸன், ஜெய்ஸ்வால் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். முகேஷ், மோகித் சர்மா, விப்ராஜ் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என சாம்ஸன் வெளுத்தார். இதனால் பவர்ப்ளே ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. ஆனால், சிறப்பாக பேட் செய்து வந்த சாம்ஸனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 8 ரன்னில் அக்ஸர் பந்துவீச்சில் போல்டானார். 3வது விக்கெட்டுக்கு வந்த ராணா, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை உயர்த்தி மெல்ல அணியை வெற்றிக்கு நகர்த்தினர். ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். குல்தீப் பந்துவீச்சில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட ஜெய்ஸ்வால் 51 ரன்னில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்தார். இளநீருக்குள் தண்ணீர் வருவது எப்படி? ஆச்சர்யம் தரும் தென்னை16 ஏப்ரல் 2025 டைப்-5 நீரிழிவு: இந்தியாவில் இளம் வயதினரையும் பாதிக்கும் புதிய வகை நீரிழிவு யாருக்கெல்லாம் வரும்?16 ஏப்ரல் 2025 ராணா அதிரடி பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்த சிறிது நேரத்தில், ராணாவும் ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால், ராணா தப்பிவிட்டார். அவர் 20 ரன்கள் சேர்த்திருந்தபோது, அக்ஸர் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கிடைத்த கேட்சை ஸ்டெப்ஸ் தவறவிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ராணா அடுத்த 12 பந்துகளில் 31 ரன்களை சேர்த்து, 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா களத்தில் இருந்த வரை ராஜஸ்தான் அணி வென்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ராணா 51 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். வாய்பைத் தவறவிட்ட ஹெட்மெயர், ஜூரெல் கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 23 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஹெட்மெயர், துருவ் ஜூரெல் களத்தில் இருந்தனர். மோகித் சர்மா வீசிய 19வது ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க 14 ரன்கள் சேர்த்தனர். ஹெட்மெயர் பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர். ஆனால், நேற்று அவரது பேட்டில் எதிர்பார்த்த ஷாட் சிக்கவில்லை. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தை சந்தித்த ஹெட்மெயர் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஜூரெலிடம் கொடுத்தார். அதன் பிறகு ஸ்டார்க் 5 பந்துகளையும் யார்க்கர்களாகவும், அவுட்சைட் யார்க்கர்களாகவும் வீசவே ஒரு ரன், 2 ரன்கள் என சேர்க்க முடிந்தது. கடைசி பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜூரெல் மிட்விக்கெட்டில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடி, 2வது ரன்னுக்கு முயலும்போது ரன்அவுட் ஆகவே ஆட்டம் டிராவில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது. அந்தமானில் மர்மமாக வாழும் சென்டினல் பழங்குடிகளை பார்க்க முயன்ற அமெரிக்கர் என்ன ஆனார்?11 ஏப்ரல் 2025 உடல் பருமன் தினசரி வாழ்வில் ஏற்படுத்தும் சவால்கள் என்ன? எப்படி சமாளிப்பது?11 ஏப்ரல் 2025 சூப்பர் ஓவர் பட மூலாதாரம்,GETTY IMAGES சூப்பர் ஓவரில் ஹெட்மெயர், ரியான் பராக் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய ஓவரில் முதல் பந்தில் ரன் சேர்க்காத ஹெட்மெயர் 2வது பந்தில் பவுண்டரியும், அடுத்து ஒரு ரன்னும் எடுத்தார். நான்காவது பந்தை சந்தித்த ரியான் பராக் பவுண்டரி விளாசவே அந்த பந்து நோ பாலாக மாறியது. 4வது பந்தில் ரியான் பராக் ரன்அவுட் ஆனார். 5வது பந்தில் ஹெட்மெயர் ரன் அவுட் ஆகவே 2 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது. சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு 12 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டெப்ஸ், ராகுல் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய ஓவரில் முதல் பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்தார். அடுத்த பந்தில் ராகுல் பவுண்டரி விளாசி, 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3 பந்துகளில் 6 ரன்கள் கிடைத்தன. 4வது பந்தை எதிர்கொண்ட ஸ்டெப்ஸ் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடித் தந்தார். ராஜஸ்தானின் வெற்றியைப் பறித்த ஸ்டார்க் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறித்து ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், "நான் பேட் செய்யும் சூழலில் இல்லை, அதனால்தான் மீண்டும் வரவில்லை. என் உடல்நிலை குறித்து நாளை தெரியும். நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினோம். எங்களின் பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் நன்றாகச் செயல்பட்டதால்தான் குறைந்த ரன்களில் சுருட்ட முடிந்தது. டெல்லிஅணியின் ஸ்கோர் இந்த மைதானத்தில் சேஸ் செய்யக் கூடியதுதான். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தைத் திருப்பியது. 20வது ஓவரில்தான் டெல்லி அணிக்கு ஸ்டார்க் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். எங்களின் வெற்றியை ஸ்டார்க் எடுத்துச் சென்றார்," என்று தெரிவித்தார். மேலும், "கடந்த சில சீசன்களாகவே சிறப்பாகப் பந்துவீசுகிறார் என்பதால் சந்தீப் சர்மாவை சூப்பர் ஓவரில் பயன்படுத்தினோம். நான் களத்தில் இல்லாதது துரதிர்ஷ்டம். ஜோப்ரா ஆர்ச்சர் இழந்த ஃபார்மை மீட்டது அற்புதம்," என்றும் குறிப்பிட்டார். அடுத்த முக்கிய ஆட்டங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடம்: மும்பை நேரம்: இரவு 7.30 சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மும்பையின் அடுத்த ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே நாள் - ஏப்ரல் 20 இடம் – மும்பை நேரம்- இரவு 7.30 மணி ஆர்சிபியின் அடுத்த ஆட்டம் ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ் நாள் - ஏப்ரல் 18 இடம் – பெங்களூரு நேரம்- மாலை 7.30 மணி ஆரஞ்சு தொப்பி யாருக்கு? நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்) சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்) மிட்செல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்) பர்ப்பிள் தொப்பி யாருக்கு? நூர் அகமது(சிஎஸ்கே) - 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்) குல்தீப் யாதவ்(டெல்லி) - 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்) கலீல் அகமது(சிஎஸ்கே) - 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgpq034q00o
VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவிப்பு!
VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவிப்பு! பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் திரவ பால் மற்றும் தயிர் மீதான VAT வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி, தொடர்புடைய சட்டம் அந்தத் திகதியில் அமலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் நாப்தா மீதான VAT வரியும் நீக்கப்பட்டுள்ளதாக இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் படி, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு VAT விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு VAT பொருந்தும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1428590
பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்
Published By: VISHNU 17 APR, 2025 | 04:01 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் புதியதொரு தேர்தல் கூட்டணி தோன்றியது. பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கழகமும் சேர்ந்து கிழக்கு தமிழர் கட்டமைப்பை அமைத்தன. ஒரு சில வாரங்களுக்குள் கேணல் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இணைந்து கொண்டதை அடுத்து புதிய கூட்டணி பலமடைந்தது. கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அதன் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களை உற்சாகத்துடன் கிழக்கில் தொடங்கியது. யாழ்ப்பாண தலைமைத்துவத்துடனான தமிழ்க்கட்சிகளின் போதாமை மற்றும் கிழக்கில் முஸ்லிம் விஸ்தரிப்புவாதம் என்று சொல்லப்படுவதன் விளைவான பிரச்சினைகள் மீது கவனத்தை குவித்து கிழக்கு தமிழர்களின் வாக்குகளை கவரும் நம்பிக்கையை கூட்டமைப்பு கொண்டிருந்தது. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பிரசாரங்கள் உத்வேகம் அடைந்துகொண்டிருந்த நிலையில், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்ற "மும்மூர்திகளுக்கும் " அனர்த்தம் ஏற்பட்டது. இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்து விடுதலை புலிகளுக்கும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும் இடையிலான போரின்போது மனித உரிமைமீறல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு முரளிதரனுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்தது. இறுதியாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பரில் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் தொடர்பிருந்ததாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டம் முதலில் பிள்ளையான் விசாரணைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டார். அதற்கு பிறகு விசாரணைகளை தொடருவதற்காக அவரது தடுப்புக்காவல் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. இரு தடுப்புக்காவல் உத்தரவுகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிறப்பிக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தற்போது பெருமளவு ஆர்ப்பாட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 2024 ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதியளித்ததன் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு பதிலாக அதே சடடத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்கி்ன்றமைக்காக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் பிரதான எதிர்க்கட்சிகளும் செய்கின்ற ஆர்ப்பாட்டங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எட்டியும் கூட பார்க்கவில்லை. முன்னாள் முதவமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் இருந்த போதிலும், பிள்ளையானுக்கு ஒரு நேர்மறையான படிமம் ( Image) கிடையாது. பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக உண்மையில் அவருக்கு கெட்டபெயரே இருக்கிறது.ஆட்கள் கடத்தல் தொடங்கி கொலைகள் வரை அவருக்கு எதிரானவை என்று கூறப்படுகின்ற குற்றச்செயல்களின் பட்டியல் மிகவும் நீளமானது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் சம்பந்தபட்டதாக கூறப்பட்டு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், பிள்ளையான் குறாறவாளியாகக் காணப்படவில்லை. பிள்ளையானுக்கு ஒரு எதிர்மறையான படிமம் இருக்கின்ற போதிலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அந்த கொடிய சட்டத்தை ஒரு கோட்பாட்டு அடிப்படையில் எதிர்ப்பதாக இருந்தால் பிள்ளையானின் தடுப்புக்காவலையும் எதிர்த்திருக்க வேண்டும். பதிலாக, அவர்கள் பக்கச்சார்பாகவும் தெரிந்தெடுத்து சிலரின் தடுப்புக்காவல்களை மாத்திரம் எதிர்க்கின்றார்கள் போன்று தெரிகிறது. இத்தகைய பின்புலத்தில் இந்த கட்டுரை பிள்யைானின் கைதையும் தடுப்புக் காவலையும் பற்றி கவனம் செலுத்துகிறது. சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக தெரிவு செய்யப்படடதன் மூலம் வரலாறு படைத்தார். 2012 ஆம் ஆண்டுவரை அவர் முதலமைச்சராக பதவி வகித்தார். பிள்ளையான் 2020 பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார். அந்த தேர்தலில் மாவட்டத்தில் மிகவும் கூடுதல் விருப்பு வாக்குகள் அவருக்கே கிடைத்தன.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழும் அதே பதவியில் தொடர்ந்து நீடித்தார். 2024 ஜனாதிபதி தேர்தலில் பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர். ரணில் மூன்றாவதாக வந்தார். 2024 பாராளுமன்ற தேர்தலில் பிள்ளையானுக்கும் அவரது கட்சிக்கும் மட்டக்களப்பு மாவடடத்தில் மிகவும் குறைவான வாக்குகளே கிடைத்தன. அந்த மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி இலங்கை தமிழரசு கட்சி பெருவெற்றி பெற்றது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்திக்கும் மடக்களப்பில் ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்தது. பிள்ளையான் உள்ளூராட்சி தேர்தல்களின் மூலமாக அரசியல் மீட்சியைப் பெறுவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நோக்கத்தைச் சாதிக்க கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது பிள்ளையானின் திட்டங்கள் எல்லாமே சிதறிப்போயின. முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏப்ரில் 8 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தை (சி.ஐ.டி.) சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டார். அவர் மட்டக்களப்பில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்த வேளையிலேயே கைது இடம்பெற்றது. முதலில் பிள்ளையான் விசாரணைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டார். பேராசிரியர் இரவீந்திரநாத் ஆரம்பத்தில் வெளியான ஊடகச் செய்திகளின் பிரகாரம் பிள்ளையான் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் வைத்து காணாமல்போன சம்பவம் தொடராபாகவே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். முன்னாள் துணைவேந்தர் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் பிள்ளையானுக்கு இருந்ததாக கூறப்படும் ஈடுபாடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் பேகச்செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை பிள்ளையானிடமிருந்து பெறமுடியும் என்று தாங்கள் நம்புவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் கூறின. நிலைவரம் விரைவாகவே மாறியது.பிள்ளையான் 90 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஊடகச் செய்திகளின் பிரகாரம் பிள்ளையான் இப்போது 2019 ஏப்ரில் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஜ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையது என்று கூறப்பட்ட சஹரான் ஹாசிம் தலைமையிலான முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்றினால் ஈஸ்டர் ஞாயிறன்று நான்கு சுற்றுலா ஹோட்டல்களிலும் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தொடர்ச்சியான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.260 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். கார்டினல் மல்கம் ரஞ்சித் தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பிலான முழு விபரங்களும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் ஆறாவது வருடாந்த நினைவுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கொழும்பு கத்தோலிக்க அதிமேற்றிராணியார் அதிவண. கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு உறுதியளித்திருக்கிறார். ஈஸ்டர் அனர்தத்துக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவது பற்றி கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு ஜனாதிபதி திசாநாயக்க அளித்த வாக்குறுதி, விசாரணைகளின் கவனம் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்கு திரும்ப வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது போன்று தெரிகிறது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவது ஏப்ரில் 21 காலக்கெடுவை சந்திப்பதற்காக துரிதப்டுத்தப்பட்ட முயற்சியின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது. உதய கம்மன்பில ஒரு வழமைக்கு மாறான திருப்பமாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில் பிள்ளையானின் சட்டத்தரணியாக வந்திருக்கிறார். தடுப்புக்காவலில் உள்ள பிள்ளையானை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் முன்னிலையில் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசுவதற்கு கம்மன்பில அனுமதிக்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகவே தன்னைக் கைதுசெய்ததாக தனக்கு பிள்ளையான் கம்மன்பிலவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவரிடம் கூறப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் பெயர்களை வெளியிட்டு அரச சாட்சியாக மாறும்படி பிள்ளையான் இப்போது கேட்கப்படுகின்றார். சனல் 4 தொலைக்காட்சி ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு இருந்ததாக கூறப்படும் தொடர்பு 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொலைக்காட்சியிலேயே முதன்முதலாக வெளியிடப்பட்டது. 2023 செப்டெம்பர் 5 செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அதன் " டிஸ்பாச்சஸ் " என்ற நிகழ்ச்சியில் " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்" என்ற விவரண தொகுப்பை ஔிபரப்பியது. அதில் பிள்ளையானின் முன்னாள் செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளருமான அசாத் மௌலானா என்ற முஹம்மத் மிஹிலார் முஹம்மத் ஹன்சீர் தனது முன்னாள் தலைவரைப் பற்றிய அதிர்ச்சிதரும் தகவல்களை வெளியிட்டார். கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த அசாத் மௌலானா ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்று சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார். பிள்ளையானுக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான மேஜர் -- ஜெனரல் சுரேஷ் சாலேக்கும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகள் இருந்ததாகவும் இருவருக்கும் குண்டுத்தாக்குதல் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அசாத் மௌலானா கூறினார். ஆனால் பிள்ளையானும் சாலேயும் குற்றச்சாட்டுக்களை உடனடியாகவே மறுத்தனர். அப்படியானால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேக்கும் எதிரான அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுக்கள் எவை? சனல் 4 தொலைக்காட்சியினால் " டிஸ்பாச்சஸ் " நிகழ்ச்சியில் ஔிபரப்பு செய்யப்பட்ட " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் " விவரணத் தொகுப்பு ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் 2023 செப்டெம்பர் 21 ஆம் திகதி வேறு ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அப்போது விவரணத் தொகுப்பின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தொம் வோக்கரும் நிறைவேற்று தயாரிப்பாளரான பென் டி பியரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். பிறகு அங்கு ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலுக்கு முன்னதாக அசாத் மௌலானாவினால் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை ஒன்றின் பிரதிகள் பிரசன்னமாகியிருந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. நேரடியாகக் கலந்து கொள்ளாத அசாத் மௌலானா பிறகு வீடியோ இணைப்பின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளித்தார். அசாத் மௌலானாவின் அறிக்கை அவரால் சனல் 4 தொலைக்காட்சி விவரணத் தொகுப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் தெளிவுபடுத்தலும் விரிவுபடுத்தலுமாகவே அமைந்தது. விவரணத் தொகுப்பில் வெளியிட்ட தகவல்களை கூடுதல் விபரங்களுடன் அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன் தற்போதைய பொருத்தப்படும் முக்கியத்துவமும் கருதி அசாத் மௌலானாவின் அறிக்கையை முழுமையாக கீழே தருகிறோம் ; அசாத் மௌலானாவின் அறிக்கை "பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் செப்டெம்பர் 5 ஆம் திகதி ஔிபரப்பான " இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் " விவரணத் தொகுப்பு இலங்கையில் கணிசமானளவுக்கு ஆர்வத்தை தோற்றுவித்திருக்கிறது. பல்வேறு கட்டுரைகளும் ஆசிரிய தலையங்கங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. விவரணத் தொகுப்பு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்ற கோராக்கைக்கு ஓரளவு ஆதரவைத் திரட்டியிருக்கின்ற அதேவேளை பெருமளவு வதத்திகளும் போலிச் செய்திகளும் வெளியிடப்பட்டன. எனது மனைவி, பிள்ளைகளும் கூட அவதூறு செய்யப்பட்டார்கள். அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அதனால் பின்வரும் அறிக்கையை வெளியிடுவதற்கு நான் விரும்புகிறேன். " கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்காக நான் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 பெப்ரவரி வரை பணியாற்றினேன். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி முன்னதாக ஒரு தீவிரவாத இயக்கமாக செயற்பட்டது. நான் அந்த கட்சியின் பிரசாரச் செயலாளராகவும் பேச்சாளராகவும் இருந்தேன். நான் ஒரு போராளி அல்ல. உண்மையிலேயே நான் ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டவன் அல்ல. " எனது பதவி காரணமாக ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பாகவும் முக்கியமானதும் இரகசியமானதுமான பெருமளவு தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது. " 2019 ஏப்ரில் 19 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் 45 சிறுவர்களும் 40 வெளிநாட்டவர்களும் உட்பட 269 பேர் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். தற்கொலைக் குண்டுதாரிகளின் அடையாளத்தை ஊடகங்கள் வெளியிட்ட பின்னர் மாத்திரமே அந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகள் மற்றும் அவற்றை நடத்தியவர்கள் பற்றியும் தாக்குதல்களின் நோக்கங்கள் பற்றியும் என்னிடம் உறுதியான சான்றுகள் இருப்பதை நான் புரிந்துகொண்டேன். அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு தயாரிப்பு வேலைகளைச் செய்ததிலோ அல்லது தாக்குதல்களை நடத்தியதிலோ எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது. " 2015 ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியைத் தொடர்ந்து பிள்ளையான் கைது செய்யப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டார். பரராஜசிங்கம் 2005 நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார் . " பிள்ளையானின் ஒரு செயலாளர் என்ற வகையில், அவரை அவரின் சட்டத்தரணிகள் சகிதம் சந்தித்து சட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு என்னை நீதிமன்றம் அனுமதித்தது. 2017 செப்டெம்பரில் சிறைச்சாலைக்கான ஒரு விஜயத்தின்போது தன்னுடன் ஒரே கூண்டில் காத்தான்குடியைச் சேர்ந்த சில முஸ்லிம் கைதிகள் இருப்பதாக பிள்ளையான் என்னிடம் கூறினார். ஒரு தந்தை, அவரின் மகன் மற்றும் ஆறு பேர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் காத்தான்குடியில் இன்னொரு முஸ்லிம் குழு மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். " பிள்ளையானின் வேண்டுகோளின்பேரில் நான் சைனி மௌலவியைச் சந்தித்தேன். பிறகு பிள்ளையான் என்னிடம் இந்த கைதிகளை பிணையில் வெளியில் எடுப்பதற்காக அவர்களின் உறவினர்களுக்கு நிதியை ஏற்பாடு செய்வதற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டார். அவர்கள் 2017 அக்டாபர் 24 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். 2018 ஜனவரி பிற்பகுதியில் பிள்ளையான் சைனி மௌலவியின் குழுவுக்கும் அப்போது ஒரு பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலேக்கும் இரகசிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் கேட்டார். சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் தொடர்பில் சுரேஷ் சாலே எனக்கு அறிவிப்பார் என்றும் பிள்ளையான் கூறினார். " ஒரு சில நாட்கள் கழித்து சுரேஷ் சாலே என்னுடன் தொடர்பு கொண்டு புத்தளம் வனாத்தவில்லு பகுதிக்கு வருமாறு சைனி மௌலவிக்கு வேண்டுகோள் விடுக்குமாறு என்னைக் கேட்டார். அடுத்த நாள் கொழுப்பில் இருந்து புத்தளத்துக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவருடன் நான் பயணம் செய்தேன். சைனி மௌலவியின் குழு குருநாகலையில் இருந்து அங்கு வந்து சேர்ந்தது. இந்த சந்திப்புக்கு எனது சொந்த வாகனத்தையோ அல்லது சாரதியையோ பயன்படுத்த வேண்டாம் என்று என்னிடம் கூறிய பிள்ளையான் போக்குவரத்துக்கு இராணுவப் பலனாய்வுப் பிரிவு ஒழுங்கு செய்யும் என்று கூறினார். " புத்தளத்துக்கு வெளியே அமைந்திருக்கும் 50 -- 60 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பெரியதொரு தென்னந்தோட்டத்தில் 2018 பெப்ரவரி முற்பகுதியில் அந்த சந்திப்பு இடம்பெற்றது.சுரேஷ் சாலே சாம்பல் நிற டொயோட்டா கார் ஒன்றில் சாரதியுடன் வந்திருந்தார். அரை மணிநேரம் கழித்து சைனி மௌலவி ஆறு பேர் கொண்ட ஒரு குழுவுடன் வெள்ளை வான் ஒன்றில் வந்திருந்தார். சைனி மௌலவி தனது மூத்த சகோதரர் மௌலவி சஹரானை தங்களது குழுவின் தலைவர் என்று அறிமுகம் செய்தார். சந்திப்பு இரு மணித்தியாலங்களுக்கும அதிகமான நேரம் நீடித்தது. நான் அதில் கலந்துகொள்ளாமல் வெளியில் காத்திருந்தேன். அந்த சந்திப்புக்கு பிறகு நான் மட்டக்களப்புக்கு பயணம் செயதேன். சந்திப்பு பற்றி மறுநாள் பிள்ளையானுக்கு விபரங்களை தெரிவித்தேன். சுரேஷ் சாலேக்கு ஒரு பெரிய திட்டம் இருக்கிறது என்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடன் இருப்பதைப் போன்ற உடன்பாடொன்று சஹரான் குழுவுடனும் அவருக்கு இருக்கிறது என்றும் பிள்ளையான் கூறினார். இந்த சந்திப்பு பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்திருக்குமாறும் ஏதாவது உதவியை அவர்கள் கேட்டால் செய்துகொடுக்குமாறும் அவர் என்னிடம் கூறினார். 2017 செப்டெம்பரில் சிறையில் சைனி மௌலவியை சந்தித்ததை தவிர பிறகு நான் சஹரானையும் அவரின் குழுவினரையும் சுரேஷ் சாலேயுடனான 2018 பெப்ரவரி சந்திப்பின்போது ஒரு தடவை மாத்திரம் சந்தித்தேன். அதைத் தவிர அவர்களுடன் எனக்கு எந்த தொடர்புமோ அல்லது உறவுமுறையோ இருந்ததில்லை. அவர்களின் பயங்கரவாத நோக்கங்கள் குறித்தோ அல்லது திட்டம் குறித்தோ பயங்கரவாத தாககுதல் நடைபெறும் வரை எனக்கு எதுவும் தெரியாது. " 2019 ஏப்ரில் 19 ஈஸ்டர் ஞாயிறன்று காலை 7 மணியளவில் சுரேஷ் சாலே என்னுடன் தொடர்புகொண்டு கொழும்பில் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு உடனடியாகச் சென்று அங்கு காத்துக்கொண்டு நிற்கும் ஒரு நபரை ஏற்றிக் கொண்டு வருமாறும் அவரது தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுமாறும் கூறினார். அந்த நேரத்தில் நான் கொழும்பில் அல்ல மட்டக்களப்பில் நிற்கிறேன் என்று அவரிடம் கூறினேன். " இந்த தொலைபேசி சம்பாஷணைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஏககாலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்களை அடு்த்து உடனடியாக பிள்ளையான் ஒரு சிறைக்காவலர் ஊடாக செய்தி அனுப்பி தன்னை அவசரமாகச் சந்திக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். அவரை காலை 11 மணியளவில் நான் சந்தித்தபோது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி சுரேஷ் சாலேயே என்றும் இதே போன்ற தாக்குதல்கள் நடக்கும் என்று தான் நினைத்திருந்ததாகவும் என்னிடம் கூறினார். " சைனி மௌலவியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைவரத்தை அறியுமாறு பிள்ளையான் என்னைக் கேடடார். நான் முயற்சித்தேன். பதில் இல்லை. பிள்ளையானின் வேண்டுகோளின் பேரில் நான் ஏற்பாடு செய்த சந்திப்பில் பங்கேற்றவர்களே உண்மையில் ஈஸ்டர் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் என்பதை அன்றைய தினம் மாலை ஊடகச் செய்திகள் மூலமாக மாத்திரமே நான் அறிந்து கொண்டேன். நான் போய்ச் சந்திக்க வேண்டும் என்று சுரேஷ் சாலே விரும்பிய அந்த பேர்வழி ஜமீல் என்பவரே என்பதையும் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அவர் பிறகு இறுதி நேரத்தில் திட்டத்தை மாற்றி அந்த ஹோட்டலை விட்டு வெளியேறி தெஹிவளையில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் குண்டை வெடிக்க வைத்தவர் என்பதையும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் ஊடாக நான் அறிந்து கொண்டேன். " பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தனர். கோட்டாபய ஜனாதிபதியாக வந்த பிறகு சுரேஷ் சாலே இலங்கை திரும்பினார். அவருக்கு மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டு அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அந்த பதவியில் அவர் தொடருகிறார். " ஆனால், உறுதியளித்ததன் பிரகாரம் பிள்ளையானை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவில்லை. பிள்ளையானுக்கு எதிராக தீர்க்கமான சான்றுகள் இருந்ததால் அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபர் மறுப்புத் தெரிவித்ததே அதற்கு காரணமாகும். 2020 ஆகஸ்ட் 5 பாராளுமன்ற தேர்தலின்போது சிறையிலேயே தொடர்ந்து இருந்த பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தேர்தலுக்கு பிறகு பிள்ளையான் என்னனயும் அவரது சகோதரரரையும் சுரேஷ் சாலேயைச் சென்று சந்திக்குமாறும் கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு அதிகாரத்துக்கு வந்தார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று அவரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டார். தன்னை விடுதலை செய்யவில்லையானால் அதற்காக பாரியதொரு விலையை செலுத்த வேண்டியிருக்கும் என்று சுரேஷ் சாலேயை எசாசரிக்குமாறும் எம்மிடம் அவர் கூறினார். " சில நாட்கள் கழித்து பிள்ளையானுக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வைத்து வாபஸ் பெற்றார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதர்களை ஏற்பாடு செய்தவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை தவிரவும், 2005 -- 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றிய விரிவான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. " இந்த கொலைகளில் பெருமளவானவை இலங்கை இராணுவத்தின் கீழ் இயங்கிய திரிப்போலி பிளட்டூன் என்ற இரகசிய கொலைப் படைப் பிரிவினாலேயே செய்யப்பட்டன. அந்த பிரிவு தொடக்கத்தில் மேஜர் பிரபாத் புலத்வத்த தலைமையிலும் பிறகு கேணல் ஷம்மி கருணாரத்ன தலைமையிலும் இயங்கியது. அது அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் பின்னர் இராணுவ அதிகாரிகளின் பிரதானியாகவும் இருந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேனவின் நேரடி கட்டளையின் கீழ் இயங்கியது. இந்த பிளட்டூன் நேரடியாக கோட்டாபயவுக்கே பதில் கூறும் கடப்பாட்டைக் கொண்டிருந்தது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவரிடமிருந்து மாத்திரமே உத்தரவுகளை அது பெற்றது. " இந்த பிளட்டூனும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் போர்காலத்திலும் போரின் முடிவுக்கு பின்னரும் பத்திரிகையாளர்கள் கொலைகள் மற்றும் காணாமல்போதல் உட்பட பெருமளவு அரசியல் கொலைகளுக்கு பொறுப்பாக இருந்தது. குறிப்பாக அவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், பத்திரிகையாளர்களான லசந்த விக்கிரமதுங்க, தராக்கி சிவராம், ஐ. நடேசன் ஆகியோரின் கொலைகளுக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் காணாமல் போனதற்கும் பொறுப்பாக இருந்தன. " இராணுவப் புலனாய்வு பிரிவினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் கூட்டாகச் செய்த பல்வேறு மனித உரிமைமீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் இருக்கின்றன. அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி எனக்கு இணக்கம் இல்லை என்ற போதிலும், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக அவர்களிடம் இருந்து என்னை விலகியிருக்க என்னால் முடியாமல் இருந்தது. இலங்கை அதிகாரிகள் என்னை கடத்தவோ அல்லது சிறையிலடைக்கவோ அல்லது ஏன் கொலைசெய்யவோ கூடும் என்ற பயம் இன்று வரை எனக்கு இருக்கிறது. " சனல் 4 தொலைக்காட்சி விவரணத் தொகுப்பை ஔிபரப்பிய பிறகு உடனடியாக பொலிசார் எனது தாயாரையும் சகோதரியையும் சென்று பார்த்து விசாரணை செய்தார்கள். அது எனது பயத்தை மேலும் அதிகரித்தது. எனது தொலைபேசி இலக்கத்தையும் விலாசத்தையும் கண்டறியும் ஒரு முயற்சியாக எனது சகோதரியின் மகனை இனந்தெரியாத இரு நபர்கள் விசாரித்தார்கள். " ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரணை செய்யும் பெறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அந்த அனர்த்தத்தின் சூத்திரதார்கள் மற்றும் அதை செய்தவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. " குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, அவர் தலைமையிலான விசாரணைக்குழு ( இராணுவத்தினருக்கும் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ) முக்கியமான சான்றுகளை கண்டறிந்தது. ஆனால், அந்த குழு விசாரணைகளை தொடருவதை இராணுவம் தடுத்தது. " நான் இந்த விபரங்களை எல்லாம் தெரிந்திருக்கின்ற காரணத்தினால், இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுச் சேவையினால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன். எனது உயிரைப் பாதுகாப்பதற்காக அரசியல் தஞ்சம் கோருவதற்காக நான் ஐரோப்பாவுக்கு தப்பியோடி வந்தேன். சுயாதீனமான சர்வதேச விசாரணை " இலங்கையில் இடம்பெற்ற பல பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் கொலைகள், ஆட்கடத்தல்கள் திட்டமிடப்பட்டதை நேரில் கண்ட ஒரு சாட்சி என்ற வகையில் இந்த குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் முன்வருகிறேன். ஆனால், உண்மையை வெளிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு அக்கறை இருக்கிறது என்று நான் நம்பவில்லை . அதனால் நான் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றின் முன்னிலையில் மாத்திரம் சாட்சியமளிக்க முன்வருவேன்." https://www.virakesari.lk/article/212173
புத்தாண்டின் இரு நாட்களில் 412 பேர் வைத்தியாசலையில் அனுமதி!
புத்தாண்டின் இரு நாட்களில் 412 பேர் வைத்தியாசலையில் அனுமதி! புத்தாண்டின் இரண்டு நாட்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார். அவர்களில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த நோயாளிகளில் 80 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலானவை வீடுகளில் பதிவாகியுள்ளன. அந்த விபத்துகளில் காயமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆகும். மேலதிகமாக வீதி விபத்துக்கள் காரணமாக 94 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1428631
ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்குக் கடிதம்!
ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்குக் கடிதம்! மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அங்கு சில நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் யாகூப் ஹபீபுதீன் டூசி, ஷம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். முகலாயப் பேரரசரின் கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளர் என்றும் கூறும் இளவரசர் யாகூப், அந்தக் கல்லறை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக’ அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958இன் கீழ் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘இச் சட்டத்தின் விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தில் அல்லது அதற்கு அருகில் எந்தவோர் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம், மாற்றம், அழிவு அல்லது அகழ்வாராய்ச்சியையும் மேற்கொள்ள முடியாது. மேலும், இதுபோன்ற எந்தவொரு செயலும் சட்டவிரோதமாகவும் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரியதாகவும் கருதப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், 1972ஆம் ஆண்டு உலக கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டதை மேற்கோள் காட்டி, ‘அத்தகைய நினைவுச்சின்னங்களை அழித்தல், புறக்கணித்தல் அல்லது சட்டவிரோதமாக மாற்றுவது சர்வதேச கடமைகளை மீறுவதாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, ஔரங்கசீப்பின் கல்லறைக்கு தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி முழு சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ASI -க்கு உத்தரவிடுமாறு அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அலுவலகத்தை வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1428626
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed