ஊர்ப்புதினம்

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

5 days 19 hours ago

தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியிலில் திரு சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவாரா?

அநுர அரசின் புதிய பிரதமர் யார்?

5 days 19 hours ago

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சி பரிசீலித்து வருகிறது.

அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

இதனையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

புதிய பிரதமர்

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக, தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்தை நியமிக்க வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அநுர அரசின் புதிய பிரதமர் யார்....! | New Prime Minister Discussion In Anura Government

தற்போது வெளியான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய 716,715 வாக்குகளை விஜித் ஹேரத் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

விருப்பு வாக்கு

சமகால பிரதமரும், புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹரினி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளை கொழும்பு மாவட்டத்தில் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/new-prime-minister-discussion-in-anura-government-1731684786

 

தேசிய மக்கள் சக்தி அமைக்கப் போகும் அடுத்த அரசில்

நீதி அமைச்சராக நீதிபதி இளஞ்செளியனை நியமித்தால் நன்று.

இல்லது அவருக்கு அற்ரோர்னி ஜெனரல் போன்ற உயர்மட்ட பதவிகள் ஏதாவது வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் அமைச்சு செயலாளர்களாக திறமை வாய்ந்த தமிழர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.

5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஹரினி அமரசூரிய

இந்த அம்மாவுக்கு பிரதமர் பதவி இல்லாவிட்டால் வெளிநாட்டமைச்சர் பதவி பொருத்தமாக இருக்கும்.

உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

5 days 19 hours ago
image

(எம்.மனோசித்ரா)

தமிழ்க் கட்சிகள் தனித்துப் போட்டியிட்ட பொதுத் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக யாழ்ப்பாண மக்கள் தென்னிலங்கையை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்தத் தருணம் தேர்தல் முடிவுகளில் மாத்திரமின்றி, முழு நாட்டினதும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட வேறுபாடுகளை விட உண்மையான வேறுபாடுகள் எப்போதுமே அரசியல் சார்ந்தவை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எமக்கு நினைவூட்டுகின்றன. 

மேலும் இந்த மாற்றமானது மக்கள் பிளவுகளுக்கு அப்பால் செல்ல தயாராக இருப்பதைக் காட்டுகிறது. ஒன்றாக, நீடித்த நம்பிக்கையை உருவாக்கவும் உண்மையான நல்லிணக்கத்தை அடையவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய ஐக்கியத்தில் இலங்கை செழிக்கட்டும். மேலும் அனைத்து இலங்கையர்களின் நலனுக்காகவும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சேவையாற்றுவர் என்று நம்புகின்றோம் என அலி சப்ரி தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/198871

வரலாற்று வெற்றியை பதிவு செய்த அமைச்சர் விஜித!

5 days 20 hours ago

வரலாற்று வெற்றியை பதிவு செய்த அமைச்சர் விஜித!

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கம்பஹா  மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

அதேநேரம் இந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 வாக்குகளை பெற்றிருந்தார்.

இதற்கு முன்னதாக அதிக விருப்பு வாக்குகளை பெற்ற சாதனையை மஹிந்த ராஜபக்சவே வைத்திருந்தார்.

அவர் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

எனினும் இம்முறை தேர்தலில் அவரின் அந்த சாதனையை ஐக்கிய மக்கள் சக்தியின் இரு பிரதான வேட்பாளர்களும் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=195965

மாகாண சபை – உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும்

5 days 20 hours ago
sumanthiran.jpg
 
மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் . ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,
 
தேர்தலில் எந்த கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்ததில்லை. 2010ஆம் ஆண்டு பொது தேர்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவருக்கு கூட மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சித் தாவல்கள் மூலமே அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றனர்.  ஆனால் இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதனை தாண்டி 173 ஆசனங்களை பெற்றுள்ளனர். இதொரு உயர் தகு வெற்றியாகும்.
 
அவர்கள் தேர்தல் அறிக்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என தெட்ட தெளிவாக கூறியுள்ளார்கள். குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போதான தேர்தல் அறிக்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நல்லாட்சி காலத்தில் வரைபை பூர்த்தியாக்குவோம் என கூறி இருந்தார்கள். அந்த விடயங்களை அவர்கள் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் அதனை சரியாக செய்யும் போது அவர்களுக்கு எமது கட்சியின் பூரண ஒத்துழைப்பு இருக்கும்.
 
மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும்.  இந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்தே போட்டியிட்டது. அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், அம்பாறையில் ஒரு ஆசனம் , திருகோணமலையில் ஒரு ஆசனம், யாழ் . தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தலா ஒரு ஆசனங்களை பெற்றுள்ளோம். ஆகவே இது எமக்கு தோல்வி அல்ல.
 
இந்த முறை நான் தெரிவாகவில்லை. மக்களின் தெரிவை ஏற்றுக்கொள்கிறேன்.  ஆனாலும் தொடர்ந்து தமிழரசு கட்சியுடன் சேர்ந்து இயக்குவேன். பொறுப்புடன் மக்களுடன் சேர்ந்து இயக்குவேன்.  புதிய அரசியலமைப்புக்கு எமது உதவிகள் தேவைப்பட்டால் , அதனை நான் நிச்சயம் செய்வேன்.
 
தமிழரசு கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. நான் மக்கள் மத்தியில் தேசிய பட்டியலில் செல்ல மாட்டேன் என கூறியுள்ளேன்.  ஆனாலும் தேசிய கட்சி விவகாரம் மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் தான் அமையும் என மேலும் தெரிவித்தார்.

இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது - பாக்கிஸ்தான் பிரதமர் ஜனாதிபதிக்கு வாழ்த்து

5 days 20 hours ago

image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கட்சி அமோக வெற்றியீட்டியமைக்காக பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தின் மீது இலங்கை மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையுடனான தனது நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஷெபாஷ் ஷரீப் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள நெருங்கிய மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்த எமது அரசாங்கம் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/198887

1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் மீட்பு

5 days 21 hours ago

image

(எம்.மனோசித்ரா)

கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் ஹெரோயின் கடத்தலுக்கு பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் வெள்ளிக்கிழமை (15) காலி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்ட படகு மேலதிக சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போதே அதிலிருந்து 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 66 கிலோ 840 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 - 34 வயதுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு இதுவரைக் காலமும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 17,483 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/198883

தமிழ் தேசிய போராட்டம் தொடரும் - இரா.சாணக்கியன் பகிரங்கம்

5 days 21 hours ago

தமிழ் தேசிய போராட்டம் தொடரும் - இரா.சாணக்கியன் பகிரங்கம்
Vhg நவம்பர் 15, 2024
1000376284.jpg

தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய போராட்டம் தொடரும் அதில் எவ்வித மாற்றமில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியில்(ITAK) மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் களுவாஞ்சிகுடியில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்கள்

மேலும் தெரிவிக்கையில், இது என்னுடைய வெற்றி அல்ல ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களுடைய வெற்றியாகும்.

நாடு முழுவதிலும் திசைகாட்டி சின்னத்துக்கும் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் வாக்கு அதிகமாக இருக்கும் பொழுது, மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை மட்டக்களப்பு வாழ் மக்கள் எனக்கு தந்திருக்கிறார்கள் வடக்கு கிழக்கு முழுவதற்கும் இது ஒரு செய்தியாகும்.

வடக்கு - கிழக்கிலே உள்ள எட்டு மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்த கட்சி இலங்கை தமிழரசி கட்சி மாத்திரம்தான்.

மூன்றாவது அதிகூடிய ஆசனங்கள்

எங்களுடைய கட்சி தற்பொழுதும் இலங்கையிலேயே தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சியாகும். இலங்கையிலேயே மூன்றாவது அதிகூடிய ஆசனங்களை பெற்ற கட்சியுமாகும்.

இந்நிலையில், தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய போராட்டம் தொடரும் அதில் மாற்றமில்லை.

இனி வருங்காலத்தில் தமிழரசு கட்சி மாத்திரம்தான் இந்த மாவட்டத்திலேயே மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கப் போகின்றோம்.

அந்த வகையிலே அனைவரையும் இணைத்துக் கொண்டுதான் நாங்கள் பயணிப்போம். நாங்கள் எவருக்கும் எதிரானவர்கள் அல்ல.

நாங்கள் இந்த மாவட்டத்திற்கும் இந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் சிறந்த ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

https://www.battinatham.com/2024/11/blog-post_201.html

பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை - அங்கஜன் இராமநாதன்

5 days 21 hours ago

image

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று வெள்ளிக்கிழமை (15) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதோடு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் நாம் மக்களுக்காக பொறுப்பெடுத்து மேற்கொண்ட பொறுப்புகளை மக்கள் எம்மிடமிருந்து எடுத்து புதியவர்களின் கைகளுக்கு கொடுத்துள்ளனர். இம்முடிவை வழங்கிய மக்களிடம் நாம் எவ்வித வெறுப்புகளும் கொள்ளப்போவதில்லை. பல்வேறு தேவைகளோடு வாழும் மக்கள் அவற்றை தீர்ப்பதற்கான வழியை புதிதான முறையில் தேர்ந்தெடுத்த ஓர் தீர்மானமாகவே கருகிறோம்.

நாம் பதவிகளில் இருக்கும்போது எம்மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்தோம் என்ற மனத்திருப்தி முழுமையாக உள்ளது. ஏனையவர்களைப்போன்று எதையும் செய்யாது காலத்தைக் கடத்திய அரசியல்வாதியாக நான் இருக்கவில்லை என்பது நிதர்சனமானது. இந்த பொறுப்பை மக்கள் இப்போது புதிதாக கையளித்துள்ளவர்களும் இப்பணிகளை சிறப்பாக தொடர்வார்கள் என்ற நம்பிக்கையே மக்களிடத்தில் உள்ளது.

இத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் மக்களுக்கு என்னால் ஆற்றக்கூடிய சேவைகளை அங்கஜன் இராமநாதன் என்ற தனிநபராக தொடர்ந்தும் மேற்கொள்வேன். தோல்விகளை சந்திக்காதவர்கள் ஒருபோதும் வெற்றியாளராவதில்லை. அதேநேரத்தில் தோற்றாலும் விட்டுச்செல்வதுமில்லை.

இத்தேர்தலில் எம்மீது நம்பிக்கையோடு வாக்களித்த 12,427 யாழ், கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

https://www.virakesari.lk/article/198880

மஹிந்தவின் சாதனையை முறியடித்த பிரதமர் ஹரிணி

5 days 21 hours ago
15 NOV, 2024 | 06:47 PM
image
 

கொழும்பு தேர்தல் தொகுதியில்  தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விருப்பு வாக்கு பட்டியலில் 655,289 வாக்குகளை பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாதனையை முறியடித்துள்ளார்.

விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் வரலாற்றில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் விருப்பு வாக்குகளில் பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளாக பிரதமரின் விருப்பு வாக்குகள் காணப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவராக கருதப்பட்டார்.

விருப்பு வாக்குப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக் கொண்ட அதிகூடிய வாக்குகளை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198882

சக ஜனநாயக நாடாக இலங்கை மக்களின் ஆணையை வரவேற்கின்றோம் - ஜனாதிபதியை முதலில் சந்தித்து வாழ்த்திய இந்திய உயர்ஸ்தானிகர்

5 days 21 hours ago

15 NOV, 2024 | 08:44 PM

image

(எம்.மனோசித்ரா)

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (15) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை முதன்முதலாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சக ஜனநாயக நாடாக, இந்தியா இந்த ஆணையை வரவேற்கிறது மற்றும் நமது மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/198886

அமைதியான, ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு ஜப்பான் தூதுவர் வாழ்த்து

6 days 1 hour ago
15 NOV, 2024 | 03:37 PM
image
 

அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நட்புறவை   மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான  நட்புறவை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198870

முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு

6 days 2 hours ago

15 NOV, 2024 | 04:31 PM

image

(சி.சிவகுமாரன்)

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். 

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதே வேளை பதுளை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

1977 ஆம் ஆண்டு முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம்.

https://www.virakesari.lk/article/198879

தோல்வியடைந்த முன்னாள் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள்

6 days 2 hours ago
சரத்வீரசேகர -நிமால் தோல்வி
image
 

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட  முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தோல்வியடைந்துள்ளார்.

இதேபோன்று முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் தோல்வியடைந்துள்ளார்

இதேபோன்று முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவும் தோல்வியடைந்துள்ளார்.

1989இல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் 35 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198860

தோல்வியடைந்த முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்

6 days 2 hours ago

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.
அதேபோல், ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்.மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.

அதேபோல், கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் தோல்வியடைந்தார்.

கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தோல்வியடைந்துள்ளார்.

ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், முதன்முறையாக அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

அதேபோல்,வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.

பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கடந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாச்சலம் அரவிந்த்குமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தனர்.

https://thinakkural.lk/article/312174

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: 159 இடங்களைக் கைப்பற்றி அநுர குமாரவின் கட்சி பாரிய வெற்றி

6 days 2 hours ago
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: 141 இடங்களைக் கைப்பற்றி அநுர குமாரவின் கட்சி பாரிய வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

நேரடி வாக்களிப்பின் மூலம் 141 ஆசனங்களையும், தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் அடங்களாக 145 ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது.

எனினும், அந்த எண்ணிக்கையையும் தாண்டி தேசிய மக்கள் சக்தி இம்முறை 159 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

 
தேர்தல் முடிவுகள்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் – நேரலை

வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் மற்றும் நாடாளுமன்ற ஆசனங்களின் விவரங்கள் விரிவாக:

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 வாக்குகள் (159 ஆசனங்கள்)
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,968,716 வாக்குகள் (40 ஆசனங்கள்)
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 500,835 வாக்குகள் (5 ஆசனங்கள்)
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,429 வாக்குகள் (3 ஆசனங்கள்)
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 257,813 வாக்குகள் (8 ஆசனங்கள்)
  • சர்வஜன அதிகாரம் (SB) - 178,006 வாக்குகள் (1 ஆசனம்)
  • ஐக்கிய ஜனநாயகக் குரல் (UDV) - 83,488 வாக்குகள் (0 ஆசனம்)
  • வேறு கட்சிகள் - 945,533 வாக்குகள் (9 ஆசனங்கள்)
தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், மொத்த வாக்களிப்பில் அதன் பங்கு 61.56% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தலில் 141 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு, 18 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி 1,968,716 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், அது மொத்த வாக்களிப்பில் 17.66% எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 35 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு, 5 தேசிய பட்டியல் உறுப்புரிமைக்கான அனுமதி கிடைத்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்தக் கட்சி 500,835 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி மொத்த வாக்களிப்பில் 4.49% வாக்குகளை சுவீகரித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய ஜனநாயக முன்னணிக்கு மொத்தமாக 3 ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை, அந்தக் கட்சிக்கு மொத்தமாக இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 257,813 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு 178,006 வாக்குகள் கிடைத்துள்ள பின்னணியில், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை. எனினும், கட்சி பெற்ற வாக்கு விகிதத்தின் அடிப்படையில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.

 
தமிழர் பகுதிகளின் இறுதித் தேர்தல் முடிவுகள்
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்த ஏனைய அனைத்து தமிழர் பகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 96,975 வாக்குளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பெற்றுக்கொண்டது. ஆனால், அதுதவிர இதர தமிழர் பகுதிகளை தேசிய மக்கள் கட்சி கைப்பற்றியுள்ளது.

மலையக தமிழர்கள் அதிகம் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளதுடன், இரண்டாவது இடத்தை ஐக்கிய மக்கள் சக்தியும், மூன்றாவது இடத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.

அதேபோன்று, மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி அமைந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வசம் கடந்த முறை காணப்பட்ட யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்கள் அடங்கிய தேர்தல் மாவட்டமாக வன்னி தேர்தல் மாவட்டம் விளங்குகிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

கண்டி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்தது. ஆனால், இந்த முறை 2020 தேர்தலில் நான்காவது இடத்தைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் காணப்பட்ட நுவரெலியா மாவட்டம், இம்முறை தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 79,460 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தது. அதோடு, இம்முறை அந்த வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளாது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை இம்முறை பெற்றுக் கொண்டதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்திருந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் அப்போது எட்டாவது இடத்தை பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி, முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

ஆனால், முன்னர் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன இம்முறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த முறை முஸ்லிம் கட்சிகள் பெற்ற வாக்கு வங்கியில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் இடத்தை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி, இம்முறை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றதுடன், ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

மூன்றாவது இடத்தை கடந்த முறை பெற்றுக்கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அதே மூன்றாவது இடத்தில் இம்முறையும் காணப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது இடத்தை பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இம்முறை பாரிய பின்னடைவை திருகோணமலை மாவட்டத்திலும் எதிர்நோக்கியுள்ளது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

மாத்தறை மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்த நிலையில், இம்முறை அந்தக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் 6 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பிடித்துள்ளது. அதேவேளையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

பதுளை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்தது. ஆனால், அப்போது மூன்றாவது இடத்தை பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை முன்னிலை வகிக்கிறது.

வரலாற்றில் முதல் முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னிலை வகித்து வந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக பெரும்பாலான தமிழர் பகுதிகளில் தேசிய கட்சியாக விளங்கும் புதிய ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளே வெற்றி பெறுவது வழக்கமானது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

எனினும், மத்தியை ஆட்சி செய்யும் கட்சியொன்று இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலான தமிழர் பகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த விடயம் தொடர்பாக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, “தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் அதிருப்தியை தமிழர்கள் இம்முறை தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், தமிழர்கள் தற்போது மாற்றத்தை விரும்புவதாகவும்” கூறினார்.

மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய தென்னிலங்கை மக்களோடு, வட, கிழக்கு தமிழ் மக்களும் அந்த மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகளில் வெளிவந்த மிகவும் தெளிவான விடயம் என்கிறார் சிவராஜா.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை

பட மூலாதாரம்,R.SIVARAJA

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்கூட ஐக்கிய மக்கள் சக்திக்கு கணிசமான ஆதரவு வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் இருந்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நேரடியாகவே தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய, “இது, அவர்கள் மாற்றத்தை விரும்பியதைக் காட்டுகிறது. அடுத்தது, தமிழர் பிரதேசங்களில் உள்ள அரசியல் விரக்தி நிலைமையைக் காட்டுகிறது. அவர்கள் தமது பிரதிநிதிகளை ஏதோவொரு காரணத்திற்காக, அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தை, அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்” என்றார்.

குறிப்பாக வடக்கில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு வாரத்திற்கு முன்னர் சென்று ஆற்றிய உரை, அங்குள்ள மக்களின் மனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தான் கருதுவதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவராஜா.

 
ராஜபக்ஸ குடும்பத்தை நிராகரித்த மக்கள்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: அநுர குமார முன்னிலை, ரணில், சஜித் பாரிய பின்னடைவு – நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாமல் ராஜபக்ஸ

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாகக் காணப்பட்ட ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்ற அரசியல் களத்தில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மேலும் பல ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் நேரடி அரசியல் ஈடுபட்டு வந்த நிலையில், இம்முறை தேர்தலில் சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷிந்திர ராஜபக்ஸ மாத்திரமே தேர்தலில் போட்டியிட்டார்.

நாமல் ராஜபக்ஸவின் பெயர், தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டதுடன், ஏனைய ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் நாடாளுமன்ற களத்தில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

இந்த நிலையில், ஷஷிந்திர ராஜபக்ஸ மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட போதிலும், அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், தேசியப் பட்டியலில் அக்கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இதன்படி, ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்தத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை.

ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், தனது சொந்த மண்ணில் தேர்தல் ஒன்றில் போட்டியிடாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஸ குடும்பம் ஆட்சி அமைத்த நிலையில், அப்போது தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், ராஜபக்ஸ குடும்பத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்தமையே இதற்கான காரணமாக அமைந்துள்ளது.

 
சஜித், ரணில் கட்சிகள் பாரிய பின்னடைவு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: முதல்முறையாக தமிழர் பகுதிகளில் தேசியக் கட்சி முன்னிலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாட்டின் பெரும்பாலான இடங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக தமிழர் பகுதிகளில் இதுவரை காலம் தமிழ் கட்சிகள் வெற்றி பெற்று வந்த நிலையில், இம்முறை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளை தேசிய கட்சி ஒன்று கைப்பற்றியுள்ளது.

அத்துடன், தேசிய ரீதியில் செயற்படும் ஏனைய கட்சிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக விளங்கிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டதாகக் கூறப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடக்கும்?
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தேசிய மக்கள் கட்சி முன்னிலை – சமீபத்திய நிலவரம்

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 உறுப்பினர்கள் வாக்காளர்கள் மூலமாகவும் 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் என்ற வகையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் தேவை.

தேசியப் பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும். தேர்தல் ஆணையக் குழுவானது இந்த 29 இடங்களை ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கும்.

இலங்கையில் நிர்வாக ரீதியாக 25 மாவட்டங்கள் இருந்தாலும், அவை 22 தேர்தல் மாவட்டங்களாகவே பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், மக்கள்தொகையைப் பொறுத்து வேறுபட்ட எண்ணிக்கையில் நாடாளுமன்ற இடங்கள் இருக்கின்றன.

குறைந்தபட்சமாக திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 4 இடங்களும் அதிகபட்சமாக கம்பகா தேர்தல் மாவட்டத்தில் 19 இடங்களும் உள்ளன.

இப்படி தேர்வு செய்யப்படும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கும்.

தகவல்கள்: இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி - ஜனாதிபதி அனுர திஸாநாயக்க !

6 days 3 hours ago

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி - ஜனாதிபதி அனுர திஸாநாயக்க !
By Shana

on Friday, November 15, 2024

174.webp

“ மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

image_22f6887c12.jpg
 

தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!

6 days 3 hours ago

தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி!
Vhg நவம்பர் 15, 2024
1000375980.jpg

 

நடந்து முடிந்த  இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலும் தேசியப்பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் இணைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.battinatham.com/2024/11/blog-post_539.html

பாராளுமன்றத்திற்குத் தெரிவான  ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்

6 days 5 hours ago

பாராளுமன்றத்திற்குத் தெரிவான  ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்

ravikaran.jpg

தேர்தலில் வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சென்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராச ரவிகரன் இன்று காலை 11.15 மணியளவில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியிருந்தார்.

 

https://thinakkural.lk/article/312161

பதுளையில் இரண்டு தமிழர்கள் தெரிவு

6 days 5 hours ago

பதுளையில் இரண்டு தமிழர்கள் தெரிவு

image_759bdf36ec.png

ஆறுமுகன் புவியரசன்

பதுளை மாவட்ட 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றி வெற்றியை தனதாக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ,புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.

இதன்படி  தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட

 சமந்த வித்தியாரத்ன - 208,547 ,

 கிட்ணன் செல்வராஜ்- 60,041,

அம்பிகா சாமுவேல்- 58,201,

ரவிந்து அருண பண்டார - 50,822,

சுதத் பலகல்ல- 47,980,

தினிது சமன்குமார- 45,902

என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிட்ட

நயன பிரியங்கர வாசலதிலக்க- 35518,

சமிந்த விஜயசிறி - 29791 என விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். 

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட

சாமர சம்பத் தசாநாயக்க -19359 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கடந்த இரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் போட்டியிட்ட இரு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைப் போன்று இம்முறை தேசிய மக்கள் சக்தியின் சார்பாக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் , அம்பிகா சாமுவேல் ஆகியோர்  வெற்றி பெற்றுள்ளமை தமிழ் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பதுளை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக  தமிழ் பெண் பிரதிநிதியாக அம்பிகா சாமுவேல் தெரிவாகியுள்ளமை மலையக பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு சான்றாக அமைந்துள்ளது. 

 

https://www.tamilmirror.lk/மலையகம்/பதுளையில்-இரண்டு-தமிழர்கள்-தெரிவு/76-347254

Checked
Thu, 11/21/2024 - 10:51
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr