ஊர்ப்புதினம்

மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்

6 days 5 hours ago

மட்டக்களப்பில் வெற்றி,தோல்வியடைந்த புள்ளிகள்

image_1068777a87.jpg

ரீ.எல்.ஜவ்பர்கான்   

நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள், இரு பிரதி அமைச்சர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தோல்வியடைந்ததுடன் ஒரு  அமைச்சர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் 

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சோ. கணேசமூர்த்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியைத்  தழுவியுள்ளனர் 

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எஸ் ஸ்ரீநேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் எம் எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்  ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/மட்டக்களப்பில்-வெற்றி-தோல்வியடைந்த-புள்ளிகள்/175-347252

தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து

6 days 6 hours ago

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வழங்கிய செவ்வி ஒன்றின் மூலம் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது யாழ் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் அவர் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இல்லை என தெரிவிக்கின்றது.

தேசியப்பட்டியல்

எனினும், மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என்றும் சுமந்திரன் குறித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து | Ma Sumanthiran Regarding The National List

இந்நிலையில், தற்டீபாது நாடளாவிய ரீதியில் நாடாளுமன்ற தேர்தலு்ககான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/ma-sumanthiran-regarding-the-national-list-1731646785

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை

6 days 7 hours ago
15 NOV, 2024 | 10:02 AM
image
 

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின்  தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்னொருபோதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல் தடவை.

https://www.virakesari.lk/article/198851

யாழ். வாக்கெண்ணும் நிலையத்தில் களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்!

6 days 18 hours ago

15 NOV, 2024 | 12:02 AM

image
 

பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வன்முறைகளை தடுப்பதற்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அதி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சற்று முன்னர் கலகத் தடுப்பு பொலிஸாரும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

VideoCapture_20241114-224955.jpg

VideoCapture_20241114-224939.jpg

https://www.virakesari.lk/article/198745

ஒரு வார காலத்துக்கு பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை - பொலிஸ் பேச்சாளர்

6 days 19 hours ago
 
image
 

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரு வார காலத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198730

எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

6 days 19 hours ago

image

(இராஜதுரை ஹஷான்)

ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும். 21 ஆம் திகதிக்கு பின்னர் எமது கொள்கைத் திட்டத்தை முறையாக செயற்படுத்துவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார்.

கொழும்பு – மிரிஹான பகுதியில் வியாழக்கிழமை (14) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமக்கு பதவி முக்கியமல்ல, பலமான பாராளுமன்றத்தை அமைப்பதையே எதிரர்பார்த்துள்ளோம். பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது. பதவிகள் தொடர்பில் எமது அணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.

10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (21) கூடும். ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் முன்வைத்த கொள்கைத் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்துவோம். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு நாங்கள் குறிப்பிடும் போது எதிர்தரப்பினர் பழையவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். பழையவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்பதை ஆராய வேண்டும்.

அத்துடன் அனுபவமில்லாதவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப கூடாது என்று குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. அரச நிதியை  மோசடி செய்த அனுபவமும்,  பாராளுமன்றத்தில் முறையற்ற வகையில் செயற்பட்ட அனுபவமும் எமக்கு கிடையாது.

ஆளும் தரப்புக்கு புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதை போன்று எதிர்க்கட்சிக்கும் புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும். சிறந்த மற்றும் பலமான எதிர்க்கட்சி இருப்பது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/198729

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

6 days 20 hours ago
ஊரடங்கு சட்டம் தளர்வு ! ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எவ்வித அறிவிப்பும் கிடைக்கவில்லையென்றும் ஜனாதிபதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதுவரையில் ஊரடங்குக்கான எந்தவொரு அறிவிப்பும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை. அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறுவதால் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானம் எடுக்குமென்பதைக் கூறமுடியாது. எனவே, அரசாங்கம் அப்படியொரு தீர்மானத்தை அறிவிக்குமென்றால் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுப்போமென்றும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1408532

தேர்தல் குறித்த ஆர்வம் குறைவு - நிச்சயமற்ற நிலையேற்படலாம் - ரணில்

6 days 23 hours ago
image

வாக்காளர்கள் மத்தியில் தேர்தல்  குறித்த ஆர்வம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனால் நிச்சயமற்ற தன்மை உருவாகும் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படும் என அவர் முன்கூட்டியே எதிர்வுகூறியுள்ளார்.

வாக்காளர்கள் குறைந்தளவிலேயே வாக்களிக்க கூடிய சூழ்நிலை தென்படுகின்றது. இதனால் நிச்சயமற்ற நிலைமை உருவாகலாம் அனைத்து கட்சிகளிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எல்போர்ட் ஜனாதிபதி பதவியிலிருக்கின்றார்! எல்போர்ட் நாடாளுமன்றமும் உருவாகக்கூடாது என  அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198723

படத்தில் கடைசியாக உள்ள எழுத்து உள்குத்தாக இருக்குமோ?!

பொதுஜன பெரமுனவுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என நம்புகின்றோம் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

6 days 23 hours ago

image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பொதுத் தேர்தலில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு  சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வியாழக்கிழமை (24) அம்பாந்தோட்டை, டீ.ஏ.ராஜபக்ஷ தேசிய பாடசாலையில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

எமது அணிக்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். எம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. தற்போதுள்ள அரசாங்கம் சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/198722

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024

1 week ago

 

முடிவுகளை அறிவிக்க வேண்டாம்   
 

Editorial   / 2024 நவம்பர் 14 , பி.ப. 06:13 -

தேர்தல்கள் ஆணைக்குழுவினால், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலும், உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

 

image_1512cf1d25.png

 
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/முடிவுகளை-அறிவிக்க-வேண்டாம்/150-347131

யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

1 week ago
புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு! யாழில். வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதான சுபாஷ் எனற்  பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம்  உயிரிழந்த  நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது உடலை மீட்ட கோப்பாய் பொலிஸார் அதனை  உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இச்சம்பவத்தினால் இன்றைய தினம் காலை குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டு,வாக்களிப்பு சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1408409

பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் வாக்கை செலுத்திய 106 வயது முதியவர் !

1 week ago

பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் வாக்கை செலுத்திய 106 வயது முதியவர் !
ShanaNovember 14, 2024
 
106-age-e1731558579545.jpg

 

106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் இன்று (14) பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.

 

யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து, தமது 22 வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்ந்து அங்கே வாழ்ந்து வருவதாகவும், இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
 

https://www.battinews.com/2024/11/106.html

பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது

1 week ago

பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக  8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு  17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
 
நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.  
 

https://www.tamilmirror.lk/liveblog/347084/பாராளுமன்றத்-தேர்தல்-2024-வாக்குப்பதிவு-தொடங்கியது

தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் 

2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.

 

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

1 week ago

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்
November 14, 2024
1731560057-election-leader-2-696x392.jpg

வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும்.

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அல்லது தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

குறிப்பாகஇ எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டால் நீங்கள் பெறும் வாக்குச் சீட்டின் மேல் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.ஒரு அரசியல் கட்சி அல்லது நீங்கள் விரும்பும் சுயேச்சைக் குழுவிற்கு முன்னால் உள்ள பெட்டியில் புள்ளடி இடுவதன் மூலம் நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு புள்ளடி மாத்திரமே இதன்போது பயன்படுத்த முடியும்.

அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கினை அளிக்க நினைத்தால் வாக்குச் சீட்டின் கீழே உங்கள் மாவட்டம் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப எண்ணுக்கான சில பெட்டிகள் உள்ளன.அந்தப் பெட்டிகளில் ஒன்று இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கினை அளிக்க முடியும் வாக்களிக்க அந்த பெட்டிகளில் புள்ளடி மாத்திரமே பயன்படுத்த வேண்டும்’ என்றார்.
 

https://eelanadu.lk/வாக்காளர்-அட்டை-இன்றியும/

 

வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்! 

1 week ago

வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்! 

spacer.png

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி,  நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன.


இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
 

https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!

கடன் மீள செலுத்த சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் - ரணில்

1 week ago

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிவைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (13) இடம்பெற்ற பெண்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் பிரதான பிரச்சினை பொருளாதாரமாகும். 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்தது. அதன் பிரகாரம் எமது நாடு வங்குராேத்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. எமக்கு முதலாவதாக வங்குராேத்து நிலையில் இருந்து வெளியேறுவதற்கே இருந்தது. அதனை நாங்கள் மாத்திரம் அறிவித்தால் மாத்திரம் போதாது. சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

நாணய நிதியத்துடன் கலந்துரையாடுமாறு உலக நாடுகள் அதன்போது எங்களுக்கு தெரிவித்திருந்தன. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு அறியத்தருமாறும் அந்த நாடுகள் தெரிவித்தன. நாங்கள் 18 நாடுகளிடம் கடன் பெற்றிருந்தோம். அதற்கு மேலதிகமாக பிணைமுறி பத்திரங்கள் உலகில் தனியாருக்கு விற்பனை செய்திருந்தது.

ஆரம்பமாக இந்த வங்குராேத்து நிலையில் இருந்து மீள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடினோம். வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவந்து கடன் செலுத்துவது தொடர்பில் நிலைபேரான தன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடினோம்.

மீண்டும் கடன் செலுத்துவதற்கு எந்தளவு காலம் வழங்க முடியும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். எமது கடனில் எந்தளவு தொகையை குறைத்து வழங்க முடியுமா என்ற விடயம் தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்தோம்.

2028ஆம் ஆண்டில் கடன் செலுத்துவது ஆரம்பமாகும் என நாணய நிதியம் எமக்கு தெரிவித்தது. 2028ஆம் ஆண்டு கடன் செலுத்தாவிட்டால் எமக்கு பிரச்சினையாகும். 2028இல் கடன் செலுத்த ஆரம்பித்து 2042 ஆகும்போது கடன் செலுத்துவதை முடிவுக்கு கொண்டுவருமாறும் அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்.

குறித்த 18 நாடுகள் மற்றும் பிணைமுறி பத்திரம் மூலம் எங்களுக்கு 8000 முதல் 12000 மில்லியன் டொலர் வரை பெற்றுக்காெள்ள முடியும். அந்த நடவடிக்கையை மேற்கொள்ள எமக்கு பொருளாதார இலக்கு இருக்கிறது. அந்த பொருளாதார இலக்குக்கு அமைய செயற்பட்டாவிட்டால் எமக்கு நன்கொடைகள் கிடைப்பதில்லை.

எமக்கு கடன் செலுத்த முடியாது என அறிவித்தால் மீண்டும் நாங்கள் வங்குராேத்து நிலைக்கு ஆளாகுவோம். இதனை நாங்கள் 18 நாடுகளுடன் கலந்துரையாடினோம். அந்த 18 நாடுகளும் இதற்கு இணக்கம் தெரிவித்தன. சிறிய திருத்தங்களை முன்வைத்தோம். அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்த நாடுகளுடன் இருந்த இரு தரப்பு ஒப்பந்தத்தை நாங்கள் பிணைமுறியாளர்களுக்கு பெற்றுக்கொடுத்தோம்.  அவர்களும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

நாங்கள் தேர்தலுக்கு செல்ல முன்னர் அந்த விடயங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் முடித்தாேம். அதன் பிரகாரம் ஒக்டோபர் 4ஆம் திகதி புதிய அரசாங்கத்துக்கும் அறிவித்தாேம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தற்போது நாங்கள் அதன் பிரகாரம் வேலை செய்ய வேண்டும். எங்களுக்கு கடன் செலுத்த முடியும் என்பதை காட்ட வேண்டும்.

அதன் பின்னர் நாங்கள் 2028முதல் கடன் செலுத்த வேண்டும். கடன் பெற்ற பின்னர் அவற்றை செலுத்தும்போதும் இணக்கப்பாட்டுக்கமைய செயற்பட வேண்டி இருக்கிறது. ஆரம்ப சில வருடங்களில் எங்களுக்கு 300 மில்லியன் டொலர் செலுத்த இருக்கிறது. அதன் பிரகாரமே நாங்கள் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறோம்.

அதேபோன்று தேசிய கடன்களை மீள செலுத்துவதற்கும் வேலைத்திட்டங்களை தயாரித்தோம். தேசிய மற்றும் சர்வதேச கடன் என மொத்தமாக 84000 மில்லியன் டொலர் இருக்கிறது. அதில் 42 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனாகும். அடுத்த அரைவாசி தேசிய கடனாகும். எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினை 2028ஆம் ஆண்டில் இந்த கடனை செலுத்த இருப்பதாகும்.

இதனை செய்யாவிட்டால் நாங்கள் வங்குராேத்து நிலைக்கு தள்ளப்படும். அதனை தடுப்பதாக இருந்தால் நாங்கள் எமது பொருளாதார இலக்கை அடைந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதாக இருந்தால் 2028ஆம்போது எமது அரச வருமானம் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 15வீதமாக இருக்க வேண்டும்.  தற்பாேது அது நூற்றுக்கு 12வீதத்துக்கும் குறைவாகும். ஒவ்வொரு வருடமும் அந்த அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

தேவையான வருமானத்தை பெற்றுக்கொள்ள மக்களுக்கு புதிய வரி சுமத்த முடியாது. வட் வரி அதிகரிக்க முடியாது. அப்படியானால் புதிய வருமானம் என்ன? அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது? அத்துடன் எங்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமா?. அடுத்த வருடம் நிதி தேடிக்கொவதாக இருந்தால் வாகனம் இறக்குமதிக்கு இடமளிக்க வேண்டும்.

அப்போது அதன் மூலம் தீர்வை வரி கிடைக்கும். அதேநேரம் எங்களுக்கு பொருளாதாரத்தை விரைவாக முன்னேற்ற முடியுமானால் நிறுவனங்களினால், வியாபாரங்களினால் எமது வரி வருமானத்தை அதிகரிக்கும். அத்துடன் வரி செலுத்தவேண்டிய சிலர் அதனை தவிர்த்து வருகின்றனர். அந்த வரிகளை அறவிட்டுக்கொள்ளும் அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் புதிய வரிகள் தொடர்பில் எங்களுக்கு சிந்திக்க வேண்டி ஏற்படும்.

2025ஆம் ஆண்டுக்காக  இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பாகவே எமக்கு சிந்திக்க இரக்கிறது . இதுதொடர்பில் திறைசேரி எவ்வாறு கலந்துரையாடுகிறது என இன்று எனக்கு தெரியாது.  அத்துடன் அந்த நடவடிக்கைகள் முடிவடைவதில்லை. அடுத்த வருடம் எங்களுக்கு 6 ரில்லியன் தேடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த பணத்தை எங்கிருந்து தேடிக்கொள்வது?. எந்தவொரு அரசாங்கமும் இதுதொடர்பாகவே அதானம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதுதொடர்பில் கவனம் செலுத்தாமல் சத்தமிட்டும், வேறு விடயங்களை கதைத்தும் பயன் இல்லை.

அதனால் எங்களுக்கு பழைய முறையில் வியாபாரம் செய்ய முடியாது. பழைய முறைக்கு அரசியல் செய்ய முடியாது. பழைய முறைக்கு ஊடகங்களை கொண்டுசெல்ல முடியாது. ஒவ்வொருவரும் புதிய வேலைத்திட்டத்துடன் செயற்பட வேண்டும். அதனை மறக்க வேண்டாம். எமக்கு கடன் செலுத்தும் நிலை இல்லாமல் போனால் அனைத்தும் அழிந்துவிடும். நாங்கள் அதனை நினைவில் வைத்துக்கொண்டு முன்னோக்கிச்செல்ல வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/198617

அரசாங்க சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் திட்டத்துக்கான பிரவேசம் : பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் பெற முன்னோடித் திட்டம்

1 week 1 day ago
image

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த செயற்றிட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடித் திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள முறைமைக்கேற்ப வெளிநாட்டுத் தூதரகங்கள் மூலம் இந்த சான்றிதழ்களை வழங்கும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாக பராமரிக்கப்பட்டு e-BMD தரவுக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஆரம்ப கட்டத்தில் e-BMD தரவுக் கட்டமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

இந்தச் சான்றிதழ்கள் 01.01.1960க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் என்பதோடு தரவுக் கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்கள் பின்னர் திருத்தப்பட்டால், அத்தகைய சான்றிதழ்கள் தரவு அமைப்பில் புதுப்பிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

https://www.virakesari.lk/article/198595

மேய்ச்சல் நிலம் இருந்தும் தர மறுக்கிறார்கள் : அதிகாரிகளும் அரசியல் வாதிகளுமே இடையூறு - நானாட்டான் பண்ணையாளர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு!

1 week 1 day ago
image

மன்னார் நானாட்டான் பிரதேச பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்டும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையிடினால் எட்டு வருடங்களாக கையளிக்கப்படவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டினார்கள்.  

நேற்று செவ்வாய்க்கிழமை (12) வட மாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமது மேய்ச்சல் தரவை நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மஜகர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தனர்.  

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,   

நானாட்டான் பகுதியிலுள்ள மேய்ச்சல் தரவை நிலத்தை நம்பி 2,500 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன.  

எமக்கான மேய்ச்சல் தரவை நிலம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதனை கையெழுப்பதற்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடையூறு விளைவித்து வருகின்றனர். 

மன்னாரில் உள்ள உயர் அதிகாரிகாகு மேச்சல் தரவை நிலத்தில் திருட்டுத்தனமாக காணி  இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதனை மக்கள் பாவனைக்கு வழங்க விடாமல் அரசியல் பின்னணியில்   தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

மேச்சல் தரவை நிலத்தை தருமாறு எட்டு வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம் தருகிறோம் எனக் கூறுகிறார்கள் ஆனால் இதுவரை தரவில்லை.  

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநரிடம் எமது கோரிக்கையை கையளித்திருக்கிறோம் அவர் எதிர்வரும் 21ஆம் திகதி மன்னாருக்கு வருகை தந்து எமது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்வதாக தெரிவித்திருக்கிறார்.  

ஆகவே எமது  பிரதேச மக்கள்  வாழ்வாதார தொழிலாக பண்ணை வளர்ப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் எமக்கான மேய்ச்சல்  தரவை நிலத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

20241112_110538.jpg

https://www.virakesari.lk/article/198574

துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்பிகளுக்கு அறிவிப்பு!

1 week 1 day ago

image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம்  30  ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/198551

வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு

1 week 1 day ago

வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார். 

அப்பெண்  மேலும் தெரிவிக்கையில் ,

“சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது. 

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.” 

அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வேட்பாளர்-பட்டியலில்-பெயர்-பெண்-முறைப்பாடு/150-347050

Checked
Thu, 11/21/2024 - 10:51
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr