ஊர்ப்புதினம்

போராட்டத்தில் பங்களிக்காதவர்கள் போராட்டத்திற்காக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் - சித்தார்த்தன்

2 weeks 1 day ago
விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்

விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன்,

விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

மிகவும் தாழ்வான முறையில் அவர்கள் தங்களது விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த காலத்திலும் தமிழர்கள் தரப்பாக இருந்ததில்லை, தமிழர்களுக்காக எந்தவொரு சேவையையும் செய்யவில்லை.

பதவிகள் கிடைக்கின்ற போது அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்து தான் அவர்களுடைய தொழிலாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/311851

பிரமிட் திட்டத்தின் ஊடாக 180 கோடி ரூபா பணமோசடி செய்தவர் விமான நிலையத்தில் கைது

2 weeks 1 day ago

image

மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய்  பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198150

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் - பிள்ளையான்

2 weeks 2 days ago

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் pillayana-sankeyan.jpg

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.

இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள்.

இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.

 

என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது.

இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது.

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும்.

எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள்.

இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம்.

ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள்.

இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார்.

ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்.

அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள்.

இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம்.

இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் .

இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார்.

அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள்.

இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது .

அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.

 

பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம்.

இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள்.

அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது.

யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும்.

அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
 

https://akkinikkunchu.com/?p=298338

 

முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!

விமான நிலையத்தின் நாணய மாற்று கருமப்பீட ஏலம் : ஐந்து நிறுவனங்கள் தெரிவு

2 weeks 2 days ago

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மூன்று வருட காலத்திற்கு நாணய மாற்று கருமப்பீடங்களை இயக்குவதற்கான ஏலத்தில் ஐந்து நிறுவனங்கள் வென்றுள்ளன.

அவற்றின் மொத்த ஏல மதிப்பு 2.3 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாகும்.

இதன்படி,  இலங்கை வங்கி 798.028 மில்லியன் ரூபாய்களுடனும், சம்பத் வங்கி 633.662 மில்லியன்களுடனும், கொமர்சல் வங்கி 381.364 மில்லியன்களுடனும், தோமஸ் குக் லங்கா (பிரைவேட்) லிமிடெட் 299.064 மில்லியன்களுடனும், ஹட்டன் நெசனல் வங்கி 225.689 மில்லியன் ரூபாய்களுடனும் ஏலத்தில் வென்று, நாணய மாற்று கருமப்பீடங்களை தக்கவைத்துள்ளன.

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு 

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த பிரேரணைக்கு அமைவாக நேற்று அமைச்சரவை இந்த ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

விமான நிலையத்தின் நாணய மாற்று கருமப்பீட ஏலம் : ஐந்து நிறுவனங்கள் தெரிவு | Five Entities Win Bia Currency Exchange Counter

முன்னதாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏல ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன.

https://tamilwin.com/article/five-entities-win-bia-currency-exchange-counter-1730964676#google_vignette

கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள் சூழ்கிறது

2 weeks 2 days ago

image

கொழும்பு உட்பட தீவின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளது.

இதன் விளைவாக, சுவாசிப்பதில் சிலர் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.

காற்றின் தரமானது இன்று வியாழக்கிழமை (7) கொழும்பு மற்றும் கண்டி நகரங்களின் காற்றின் தரச் சுட்டெண் 122 முதல் 130 வரையிலும், குருநாகலில் 118 முதல் 126 வரையிலும் இருந்தது.

மேலும், கண்டி, கேகாலை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, பதுளை, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய நகரங்களில் நிலைமை சுட்டெண் சற்று சாதகமற்ற மட்டத்திற்கு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/198142

சமூக ஊடக மோசடிகள் குறித்து அரசாங்கத்தின் எச்சரிக்கை..!

2 weeks 2 days ago

வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

dir.ccid@police.gov.lk ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நிதி உதவிக்கான கோரிக்கைகள்

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஊடுருவதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக மோசடிகள் குறித்து அரசாங்கத்தின் எச்சரிக்கை..! | Government Warning About Social Media Scams

இணைப்புகளைத் திறக்கவோ அல்லது ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP/ PIN), குறியீடுகள் அல்லது SMS அல்லது WhatsApp செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

https://tamilwin.com/article/government-warning-about-social-media-scams-1730970446#google_vignette

கிழக்கை காப்பாற்ற வேண்டுமாயின் வடக்கு மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் - த. சுரேஸ்

2 weeks 2 days ago

image

கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக  போராடிவருகின்றோம். எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார்.

IMG_0406.JPG

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.  

IMG_0398.JPG

இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு  இந்த தீவிலே ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோடு வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது.

தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்று ரீதியாகப் போராடி ஒரு மரபுவழியாக தமக்கான ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும் ஒரு இனம் அதனடிப்படையில் தமிழர்கள் இந்த தீவிலே சுதந்திரமாக வாழ்வதற்காக அதிக விலை கொடுத்துள்ளனர், உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர், கோடான கோடி சொத்துக்களை இழந்துள்ளனர் நிலங்களைப் பறிகொடுத்துக் கட்டமைக்கப்பட்ட இனழிப்புக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் இந்த தேர்தல் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடனும் கரிசனையுடனும் கையாளவேண்டும்.

வடக்கு கிழக்கிலே சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது. தென்பகுதியை பொறுத்தமட்டில் ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அனுரகுமார திசாநாயக்காவை  ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுப்போம்  அதற்கு தலமைதாங்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழர்கள் நம்பி யுத்தத்தின் பின்னர் மூன்று தடவைகள் வாக்களித்து அறுதி பெரும்பான்மையான ஆணைகளைப் பெற்று தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனழிப்புக்கு சந்தர்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனைத் தட்டிக்களித்து எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எந்தவொரு வேலையையும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்யவில்லை.

அதனால் நாங்கள் கடந்த 15 வருடங்களாக தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வடகிழக்கிலே நடைபெறுகின்ற கட்டமைப்புசார் இடம்பெறும் இன அழிப்பை மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தி வருகின்றோம் அப்படிப்பட்ட எங்கள் தலைமைக்கும் அணிக்கும் ஒரு தடவை இந்த தேர்தலில் சந்தர்ப்பம் தாருங்கள்.

எந்த நோக்கத்தோடு எங்களைச் சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி .நா. மனித உரிமை இனழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள்

மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகச் செயற்படுகின்ற சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இந்த அணியைப் பலப்படுத்தப் போகின்றீர்களா? இல்லை வழமைபோன்று சாராயம் அரிசி மாவுக்கும் வெறும் சலுகைகளுக்கும் நீங்கள் வாக்களித்து இனிமேல் உரிமை என்றால் என்ன என்று கேட்கமுடியாத ஒரு நிலைக்கு இட்டுச் சென்று நிரந்தரமாகத் தமிழர்கள் அடிமையாகப் போகின்றோமா? என்ற கேள்வியைப் பெருவாரியான மக்கள் விளங்கி வடக்கிலும் கிழக்கிலும் சைக்கிள் அணிக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக இந்த மண்ணில் இருந்து போராடி செயற்பட்டு வருகின்றோம் கிழக்கில் மக்கள் நிச்சயமாக ஆணையை தரும் அதேவேளை வடக்கில்; எங்கள் கட்சி மீது மக்கள் திசை திரும்பியுள்ளனர் அதனால் ஏனைய சிங்கள கட்சிகளும் அவர்களுடன் சோந்திருக்கின்ற கட்சிகளும் குழப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடியளவு சாராயம் மற்றும் பணங்களையும் கொடுத்து இந்த மக்களை திசைதிருப்புவதற்கான வேலைத் திட்டங்களை செய்கின்றனர்.

வீடு, சங்கு, சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது பிறிந்து செயற்படும் அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர் எனவே  இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/198140

மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்

2 weeks 2 days ago
மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல் மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல்.

பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1407705

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புச் செலவு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

2 weeks 2 days ago

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட அதிகம் என  அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை விவரித்தார்.

அதற்காக நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளது.

சராசரியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்கட்டினார்.

ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்,

அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள் ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்தார்.

https://thinakkural.lk/article/311856

இலங்கைக்கு தங்க விருது.

2 weeks 2 days ago
465109551_547949407859540_39982183763697 இலங்கைக்கு தங்க விருது.

2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த தரப்படுத்தலில் இலங்கை 8வது இடத்தில் இருந்தது. இலங்கையை Most Desirable Island பெயரிடுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்திய பெருங்கடலின் முத்து என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள புராதன இடங்கள் குறிப்பாக சிகிரியா, தம்புள்ள குகைகள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை புராதன இடிபாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகை விருதுகளில், இரண்டாவது இடத்தை தாய்வானும், மூன்றாவது இடத்தை போர்ட்டோ ரிகோவும் பெற்றுள்ளது.

சர்வதேச ரீதியாக 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தரப்படுத்தலுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1407698

பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதே அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணம் - சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம்

2 weeks 2 days ago

image

பீர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி வழங்கப்படுவதால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நேரடிப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தின் தலைவர் பீர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கச்சா அரிசி நெல் அறுவடை மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக சேமசிங்க சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் கருத்து தெரிவித்த யு.கே.சேமசிங்க,

"பீர் தயாரிக்க கச்சா அரிசி தேவை. ஆனால் பீர் தயாரிக்க தேவையான கச்சா அரிசி நெல் அரிசியில் இருந்து பெறப்படுகிறது. எனவே, பீர் உற்பத்திக்கு அதிக சதவீதத்தை இயக்கும்போது, நெல் அரிசி உற்பத்திக்கு தேவையான நெல் பற்றாக்குறை உள்ளது. "

அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போது வரை கட்டுப்பாட்டு விலையில் அரிசி கிடைக்கவில்லை என கடைக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து அரிசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

நிலைமையை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, பாரிய அரிசி வியாபாரிகளை அழைத்து கலந்துரையாடினார், அங்கு சில்லறை சந்தையில் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/198081

பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும்?

2 weeks 2 days ago

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பொலன்னறுவை, மொனராகலை மற்றும் களுத்துறை ஆகிய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் ஒரே நெடுவரிசையிலும், ஏனைய தொகுதிகளுக்கான வாக்குச் சீட்டுகள் இரண்டு பத்திகளிலும் அச்சிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் விநியோகிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலில் ஒவ்வொரு தொகுதிக்கான மாதிரி வாக்குச் சீட்டு அச்சிடப்படும்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கும் விருப்பங்களை குறிப்பதற்கும் புள்ளடியை (X) மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களிக்கும் போது வாக்காளர்கள் பின்வரும் வாக்களிப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்;

1-1-1024x689.jpg 2-1.jpg

https://thinakkural.lk/article/311839

நாடாளுமன்ற தேர்தல்; பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு!

2 weeks 2 days ago
நாடாளுமன்ற தேர்தல் செலவு வரம்புகள் நிர்ணயம்! நாடாளுமன்ற தேர்தல்; பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு!

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன.

ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1407540

மன்னார் நீதிமன்றத்தில் பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற சிறை அலுவலர் கைது

2 weeks 2 days ago

image

மன்னார் நீதிமன்றத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி  மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது, 

கடந்த 5 ஆம் திகதி  வவுனியா சிறைச்சாலை  அலுவலர் மன்னார் நீதவான் நீதிமன்றில் கடமைக்காக வந்துள்ளார்.

குறித்த சிறைச்சாலை  அலுவலர், மன்னார் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற பெண் ஒருவரிடம்  தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை பார்வையிடுவதற்காக 1,000 ரூபாய் பணத்தை  பலவந்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில்  மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த சிறைச்சாலை அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையில் குறித்த  சிறைச்சாலை  அலுவலர்  நீதவான் நீதிமன்றில் வைத்து கைது செய்து  விசாரணைகளின் பின்னர்  கடந்த 5 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த சிறைச்சாலை அலுவலரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/198096

முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை - வேந்தன்

2 weeks 3 days ago

முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை - வேந்தன்
1756748653.jpg

முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வடமராட்சியில் இன்றையதினம் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையிலே ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது சிங்கள மக்கள் ஆனால் அவர்கள் எமது பகுதிக்கு வந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போவது என்பது ஒரு வேடிக்கையான விடயம், இணைந்திருந்த வடக்கு கிழக்கையும் பிரித்தவர்கள் இந்த ஜேவிபியினர்தான். 

அதேபோன்று சுனாமி கட்டமைப்பையும், இல்லாமல் செய்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை கூட இல்லாமல் செய்தவர்களும் இவ் ஜேவிபியினர்தான்.

 ஐ.நாசபையில் கொண்டுவரப்பட்ட யுத்த குற்ற பிரேரணை தொடர்பில் இலங்கையில் யுத்த குற்றம் நடைபெறவில்லை , தாம் எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு போகத் தேவை இல்லை என்று சொன்னவர்களும் இந்த ஜேவீபியினர்தான்.

ஆகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது எங்கள் தலையில் மண் அள்ளி போடும் செயல் என்றும் தெரிவித்ததுடன்  நாங்கள் ஜனநாயக ரீதியாக பல கட்சிகளின் கூட்டாக இணைந்து இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஆகவே எங்களுக்கு எமது சங்கு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.  (ப)

 

 

https://newuthayan.com/article/முன்னாள்_போராளிகளுக்கு_அங்கீகாரம்_தேவை_-_வேந்தன்

சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை

2 weeks 3 days ago

சுமந்திரனிடம் 500 மில்லியன் இழப்பீடு கேட்டுள்ள அங்கஜனின் தந்தை
adminNovember 6, 2024
Angayan.jpg

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு , அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி மன்னாரில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் “அங்கஜன் இராமநாதனின் தந்தையாரின் பெயரிலும் ஒரு மதுபான சாலைக்கான கடிதம் வழங்கப்பட்டமைக்கான அத்தாட்சி கடிதம் கூட வெளிவந்துள்ளது” என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். என்றும் அதன் ஊடாக தனது பெயருக்கும், தனதுமகனின் பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தனது சட்டத்தரணி ஊடாக எம். ஏ சுமந்திரனிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடத்த பிரச்சார கூட்டம் ஒன்றில் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்த கருத்து தொடர்பிலும் இழப்பீட்டு தொகை கேட்டு ,தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் சதாசிவம் இராமநாதன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

34-1-553x800.jpg34-2-558x800.jpg34-3-538x800.jpg34-4-565x800.jpg34-5-577x800.jpg
 

சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை!

2 weeks 3 days ago
arrest-1.jpg?resize=670,375&ssl=1 சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை!

இலங்கை சுங்கத்திணைக்களத்தின்  முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணமாகும்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1407492

இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு!

2 weeks 3 days ago
இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு! இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு!

முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல் தொடர்புகள் ஊடாக வெளிநாட்டு இராஜதந்திரப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் 2024 டிசம்பர் 01 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் அரசாங்கத்தினால் சில வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று (06) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு சேவைகளில் அனுபவம் பெற்றவர்கள் அல்ல, அவர்கள் அனைவரையும் அரசியல் நியமனங்கள் என்று வகைப்படுத்த முடியாது.

அவர்களில் சிலர் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவிகள் தூதுவர் பதவிக்கு கீழான பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://athavannews.com/2024/1407496

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் வவுனியா நீதிமன்றால் விடுதலை

2 weeks 3 days ago

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான தீங்கு விளைவிக்கும் ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் குற்றமற்றவர்கள் என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா பெரிய புளியாளங்குளம் பகுதியைச்  சேர்ந்த இருவர், மற்றும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2019 ஆண்டு தை மாதம் வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் தீங்கு விளைவிக்க கூடிய ஆயுதங்களான கிளைமோர் குண்டுகளை உடமையில் வைத்திருந்தனர் என்று கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் பீ அறிக்கை தயார் செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில்  நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த எதிரிகளுக்கு எதிராக  நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நிறைவுபெற்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் பெறப்பட்டு 1996 ஆண்டின் 18 ஆம் இலக்க தீங்குவிளைவிக்கும் ஆயுதசட்டம் 2(1)ஆ பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக எதிரிகளான மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தின்  அரசதரப்பு வழக்கு தொடுனரால் சந்தேகத்துக்கு அப்பால் இறை ஒப்புச்சாட்சியங்கள்  எம்பிக்க தவறியமையால்  சட்டவிதிகள் வழக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தநிலையில் இன்றையதினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் தீர்ப்பை அறிவித்த மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எதிரிகளான மூவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

https://thinakkural.lk/article/311820

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது - ரோஹண விஜய வீரவின் மகன் உவிந்து

2 weeks 3 days ago

image

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகண விஜய வீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும் என இரண்டாவது தலைமுறை கட்சியின் பொதுச்செயலாளரான உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார்.

ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால்  உருவாகக்கூடிய விளைவுகள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1977 பொதுத்தேர்தலில் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்ற பின்னர் ஜேஆர் ஜெயவர்த்தன முன்னெடுத்த அரசியல் தந்திரோபாயங்கள் குறித்து நினைவுபடுத்தியுள்ள ரோஹன விஜயவீரவின் மகன், அவ்வாறானதொரு நிலைமையை நாடு தாங்காது என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதற்காக ஊழல் அரசியல்வாதிகளை தோற்கடிக்கவேண்டும் என்ற தேசிய மக்கள் சக்தியின் பிரகடனம் பிழையானது என நான் கருதவில்லை, ஆனால் புதிய பழைய கட்சிகளில்இருந்து புதியவர்கள் பலர் போட்டியிடும் இந்த தருணத்தில் வாக்காளர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும் என அழுத்தம் கொடுப்பது சரியானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக்கு வாக்காளர்கள் பலியாகவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198053

Checked
Sun, 11/24/2024 - 00:15
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr