ஊர்ப்புதினம்

பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு

1 week 3 days ago

பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

31 Mar, 2025 | 05:07 PM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழக  விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

மகன் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ,  மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் மாணவனின் தந்தை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவன், நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து சென்று  கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் காரணமாக மயக்கமடைந்த மாணவனுக்கு கட்டாயப்படுத்தி பனடோல் பருக கொடுத்து,  தனியார் விடுதியிலிருந்து துரத்தி விட்டுள்ளனர்.

பின்னர், குறித்த மாணவன் கூகுள் வரைபட உதவியுடன் தனது பல்கலைக்கழக விடுதிக்குச் சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

தாக்குதல் மற்றும் சித்திரவதைக்குள்ளான நாத்தாண்டியா பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக நீதியானதும், சுதந்திரமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உடலளவிலும், உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட தனது மகனுக்குப் பாதுகாப்பளிக்குமாறும் கோரியுள்ள தந்தை, பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு - மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Virakesari.lk

முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது- சுவஸ்திகா

1 week 3 days ago

31 Mar, 2025 | 05:17 PM

image

முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்த இளைஞனின் கைதுக்கான பல காரணங்களை தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞன் இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களில் கருத்துவெளிப்பாட்டில் ஈடுபட்டான் என தெரிவிக்கின்றனர், இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் என்றால் அது யூத எதிர்ப்பு.

இந்த நாட்டில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன, அந்த இளைஞன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கவேண்டும்.

நான் இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நம்புகின்றேன் என தெரிவிக்கவில்லை ஆனால் அந்த இளைஞர் அவ்வாறு செயற்பட்டிருந்தால் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் இந்த விவகாரத்தை கையாண்டிருக்கவேண்டும்.

வெறுப்பு  பேச்சுக்காக  மக்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்கின்றீர்கள் என்றால் நாட்டில் அதிகளவான மக்களையும், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்களையும் இதற்காக கைதுசெய்யவேண்டும்.

வெறுப்பு பேச்சு என்பது தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நாங்கள் கேள்விப்படாத விடயம் இல்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம்கள் எவ்வளவு குரோத பேச்சுக்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

அவ்வாறான வெறுப்பு  பேச்சுக்களில் ஈடுபட்ட எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது கேள்விக்குரிய விடயம்.

ஆகவே நாங்கள் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆபத்தினை பார்க்கின்றோம்,அது எவ்;வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எவ்வளவு தூரம் இந்த அரசாங்கத்தினாலும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை காண்கின்றோம்.

முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது- சுவஸ்திகா | Virakesari.lk

பொறுப்புக்கூறல் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு முடிவைக் கொண்டுவராது - அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கத்தை வலியுறுத்துகிறது தேசிய சமாதானப் பேரவை

1 week 3 days ago

31 MAR, 2025 | 03:35 PM

image

பொறுப்புக்கூறலினால் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வைக் கண்டுவிட முடியாது என்று கூறியிருக்கும் தேசிய சமாதானப் பேரவை இனமோதலுக்கு வழிவகுத்த ஆழமான காரணிகளைக் கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருக்கும் தேசிய சமாதானப் பேரவை அதில் கூறியிருப்பதாவது ; 

மூன்று முன்னாள் இராணுவ தலைவர்கள் உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் எடுத்த தீர்மானம் முக்கியமான ஒரு விவாதத்தை மூளவைத்திருக்கிறது. உலகின் வேறு பகுதிகளில் பாரிய வன்முறைகள் தடுக்கமுடியாத அளவுக்கு தொடருகின்ற ஒரு நேரத்தில் பிரிடடன் எடுத்திருக்கும் இந்த தீர்மானம் வேவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு நியமங்கள் பிரயோகிக்கப்படுவது பற்றி விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையைக் கண்டறிடதிலும் பொறுப்புக்கூற வைப்பதிலும் உள்ள நாட்டம் சகலருக்கும் ஒரே மாதிரியானதாகவும் அரசியல் நோக்கங்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை பக்கச்சார்பற்ற ஒரு சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் வலியுறுத்திக் கூறுகிறது.

குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு தெரிவு செய்யப்பட்ட முறையில் பிரயோகிக்கப்படுவதாகநீதி இருக்க முடியாது. இன்று பாலஸ்தீனத்திலும் உக்ரெயினிலும் இன்று இடம்பெறுவதைப் போன்று  16 தொடக்கம் 37  வருடங்களுக்கு முன்னர்  அத்துமீறல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்காலுக்கும் பட்டலந்தவுக்கும்  ஒரேமாதிரியான நிதி அவசியமாகிறது.

இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பாடுபடுவதாக ஐக்கிய இராச்சியம் கூறியிருக்கிறது.  இலங்கையின் மனித உரிமைகள் சீர்திருத்தங்களை ஆதரிப்பதிலும் உறுதிப்பாடு கொண்டிருப்பதாக அது கூறுகிறது. தீர்வு காணப்படாத மனித உரிமைகள் பிரச்சினைகள் நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை தேசிய சமாதானப் பேரவை ஏற்றுக்கொள்கிறது.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே வி.பி. ) கிளர்ச்சி யுகத்தின் பட்டலந்த சர்ச்சை அண்மையில் மீண்டும் வெளிக்கிளம்பியிருப்பது  வரலாற்று அநீதிகள் எளிதில் மறைந்துபோய் விடாது என்பதை தெளிவாக வெளிக்காட்டுகிறது. அத்துடன்  மனித உரிமைகள் தொடர்பான அக்கறைகளை  விரிவான  ஒரு முறையில் இலங்கை கையாளத் தவறினால் மேலும் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து இருக்கிறது.

மனித உரிமைகள் அக்கறைகளின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வர்த்தக சலுகைகளை இழக்கக்கூடிய சாத்தியப்பாடு இலங்கையின் பொருளாதார உறுதிப்பாட்டை அச்சுறுத்துகிறது. நம்பகத்தன்மை வாய்ந்த அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை இது தெளிவாக உணர்த்துகிறது.

ஆனால், பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளினால்  மாத்திரம் நாட்டின் நீண்டகால சவால்களுக்கு தீர்வுகளைக் கொண்டுவர முடியாது. இலங்கை அதன் இனமோதலுக்கான மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியமாகிறது.

இனப்போரும் கடந்த காலத்தைய பாரிய வன்செயல்களும் வெறுமனே குற்றவியல்  செயற்பாடுகள் அல்ல, அவை ஒரு பெரிய அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமாகும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அப்பால், நீண்டகால உறுதிப்பாட்டுக்கு அடித்தளத்தை அமைக்கக்கூடிய பரந்தளவிலான அரசியல் கருத்தொருமிப்பு தேவைப்படுகிறது.

சகல சமூகங்களும் அரவணைக்கப்படுவதையும் நியாயமான அதிகாரப்பகிர்வையும்  உறுதிசெய்வதற்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தின் அடிப்படையில் அரசியல் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படாவிட்டால், பொறுப்புக்கூறலை நோக்கிய முயற்சிகள் முழுமை பெறப்போவதில்லை என்பதுடன் பிளவுகள் மேலும் ஆழமாகக்கூடிய ஆபத்தும் உருவாகும்.

பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றுக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலமாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய சமாதான பேரவை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

வெளிப்படைத்தன்மை மற்றும்  பரந்தளவு பங்கேற்பு மீது கட்டியெழுப்ப்பப்படக்கூடியதும் அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து விடுபட்டதுமான உண்மை ஆணைக்குழு ஒன்றை அமைப்பது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கையாக அமையும். ஆனால், அது அரசியல் கருத்தொருமிப்பில் வேரூன்றிய பரந்த ஒரு நல்லிணக்கச் செயன்முறையின் அங்கமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

அத்தகைய ஒரு செயன்முறை எந்தளவுக்கு தாமதிக்கப்படுகிறதோ அந்தளவுக்கு  (பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பரந்தளவிலான  மக்கள் மத்தியில்)  நீதி தொடர்பில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில்  சந்தேக உணர்வை அதிகரிக்கச் செய்யும்.

அத்துடன் பொறுப்புக்கூறலில் இருந்து நழுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாகவும் நோக்கப்படும். பரந்தளவிலான அரசியல் சீர்திருத்தச் செயன்முறை ஒன்றிற்குள் ஒருங்கிணைக்கப்படுகின்ற -- நன்கு கட்டமைக்கப்பட்ட உண்மை ஆணைக்குழு ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கிடைக்கச் செய்யும் என்பது மாத்திரமல்ல , நிலைபேறான சமாதானம், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்துக்கும் வழிவகுக்கும் என்பது எமது உறுதியான நம்பிக்கையாகும்.

https://www.virakesari.lk/article/210739

துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது

1 week 3 days ago

துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது

Published By: Digital Desk 2

31 Mar, 2025 | 05:49 PM

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவரின் கைப்பையில் இருந்து ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து நானூறு ரூபா பணத்தை திருடிய வாடகை வாகன சாரதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவது,  

கடந்த சனிக்கிழமை (29) துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வாடகை வாகனம் ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய கைப்பையை தவறுதலாக வாடகை வாகனத்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய கைப்பை தொடர்பில் குறித்த வாடகை வாகனத்தின் சாரதியிடம் கேட்டுள்ளார்.

இதன்போது  சந்தேக நபரான வாடகை வாகனத்தின் சாரதி, அந்த கைப்பை தனது காரில் இருப்பதாகவும், அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

பின்னர் குறித்த நபர் இன்று திங்கட்கிழமை (31) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வாடகை வாகனத்தின் சாரதியிடம் இருந்து தனது மடிக்கணினி அடங்கிய கைப்பையை பெற்றுக்கொண்டு அதனை சோதனையிட்ட போது கைப்பையிலிருந்த 904,400 ரூபா பணம் காணாமல்போயிருப்பதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் இது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் வாடகை வாகனத்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பணம்  வாடகை வாகன சாரதியின் காதலியிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரான வாடகை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது | Virakesari.lk

கொழும்பில் வானுயர்ந்து காணப்படும் கட்டிடங்கள் பாதுகாப்பானவையா?; வெளியான அறிவிப்பு

1 week 3 days ago

கொழும்பில் உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்கள் பூகம்பத்திலிருந்து தாங்கும் சக்தி கொண்டது என்றும் அவை அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளவை என்றும் நில அதிர்வு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு கூறுகையில்,

இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும், இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது.

இருப்பினும், தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன வானளாவிய கட்டிடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன.

GSMB நில அதிர்வு நிபுணர் கூறியதாவது, நாடு குறைந்த ஆபத்துள்ள பகுதியில் இருந்தாலும், சர்வதேச மற்றும் உள்ளூர் பாரிய கட்டிட ஒப்பந்ததாரர்கள் இப்போது தங்கள் கட்டிடங்களில் நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டுள்ளனர்.

சர்வதேச கட்டுமானத் தரம் கொண்ட நிலநடுக்க எதிர்ப்பு தொழில்நுட்பம் இப்போது இலங்கையிலும் பின்பற்றப்படுகிறது,

மேலும் நகரத்தைத் தாக்கும் பாரிய நிலநடுக்கத்தில் கூட, கொழும்பு வானளாவிய கட்டிடங்கள் தாங்கும் சக்தி கொண்டவையாக உள்ளன என்று நில அதிர்வு நிபுணர் கூறினார்.

https://thinakkural.lk/article/316706

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை!

1 week 4 days ago

bimal-rathnayake-2.png?resize=624%2C375&

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை!

“அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாகத் தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல” என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”தற்போது சிறையில் உள்ளவர்களில் யாரும் வெறும் சந்தேகநபர்கள் அல்ல எனவும், அனைவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும், எனவே முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்  ”முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான கொலைச்சதி, பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு, மத்திய வங்கி குண்டுவெடிப்பு மற்றும் தலதா மாளிகை குண்டுவெடிப்பு போன்ற  சம்பவங்களில் குறித்த கைதிகளுக்கு தொடர்பு  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவை எளிதாக எடுத்துவிட முடியாது எனவும்,  சமூகத்திற்குள் ஒற்றுமையை வளர்ப்பது மட்டுமல்ல, அரசியல் ஆதாயத்திற்காக எவரும் சூழ்நிலையைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும் எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1426875

மீன்பிடி பிரச்சினை குறித்து இலங்கை-இந்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தை – அரசாங்கம்!

1 week 4 days ago

New-Project-404.jpg?resize=750%2C375&ssl

மீன்பிடி பிரச்சினை குறித்து இலங்கை-இந்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தை – அரசாங்கம்!

பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டிற்கு வருகை தருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீன்பிடி தகராறு குறித்து அரசு மட்ட பேச்சுவார்த்தை விரைவில் மீனவர்கள் முன்னிலையில் நடைபெறும் என மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு அவருடன் ஒரு சந்திப்பை நடத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

மீனவர் தலைவர் ஆர்.சகாயம் தலைமையிலான குழு, இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தையை தொடங்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது.

இந்தப் பிரச்சினை குறித்து இறுதியாக அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை 2016 இல் நடைபெற்றது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு நீடித்த தீர்வைக் கோரி, தீவு நாட்டின் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு குழு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது.

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார், மேலும் இலங்கை பிரதமருடனான அவரது சந்திப்பில் மீனவர் பிரச்சினையும் விவாதிக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும்.

இதற்கிடையில், ராமேஸ்வரத்திலிருந்து வந்த குழுவினர் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களைச் சந்தித்து, இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை ஆய்வு செய்தனர்.

மார்ச் 26 அன்று வவுனியாவில் மீனவர் தலைவர்கள் தங்கள் சகாக்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தனர்.

இழுவைப் மீன்பிடியை நிறுத்த இந்தியத் தரப்பு அவகாசம் கோரியது, ஆனால் இலங்கை மீனவர்கள் தங்கள் நீரில் இழுவைப் மீன்பிடித்தல் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை தெளிவுபடுத்தினர்.

இருப்பினும் அவர்கள் ஒரு இணக்கமான தீர்வுக்கு தயாராக உள்ளனர்.

https://athavannews.com/2025/1426904

அமில சம்பத் ரஷ்யாவில் கைது!

1 week 4 days ago

New-Project-408.jpg?resize=750%2C375&ssl

அமில சம்பத் ரஷ்யாவில் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான அமில சம்பத், அல்லது ‘ரோடும்பா அமில’, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது குறித்து நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தல் விவாதங்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1426919

இலங்கை கடற்பரப்பில் பயணித்த கப்பலில் சீன பிரஜைக்கு சுகயீனம் : வைத்திசாலையில் அனுமதித்த இலங்கை கடற்படை

1 week 4 days ago

Published By: DIGITAL DESK 3 31 MAR, 2025 | 10:31 AM

image

இலங்கையின் தெற்கே காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் பயணித்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக்குழுவைச் சேர்ந்த சீன பிரஜையொருவர் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைக்குக் கொண்டுவந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. 

இலங்கையின் தென் கடற்பகுதியில் பயணித்து கொண்டிருந்த  MV AE Neptune கப்பலின் பணிக்குழுவில் இருந்த சீன நாட்டவர் ஒருவர் கப்பலின் இயந்திர அறையில் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். 

அந்த சீன நபரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினை உதவுமாறு, அந்த கப்பலில் இருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவினர் உடனடியாக பதிலளித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியைக் கரைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவக் குழுவுடன் இலங்கை கடற்படைக் கப்பலை அனுப்ப ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தது.

அமதன்படி, நோயாளியை ஏற்றிச் சென்ற MV AE Neptune கப்பல் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்தடைந்த பின்னர், நோயாளி கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டார். 

பின்னர், சுகயீனமடைந்த சீனப் பிரஜைக்கு அடிப்படை முதலுதவிகளை வழங்கிய இலங்கை கடற்படையினர்  அவரை காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

2.jpg

2.jpg

3.jpg

4.jpg

https://www.virakesari.lk/article/210691

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்

1 week 4 days ago

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் | Sri Lanka News | Ada Derana | Truth First

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

நேற்று (30) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும் அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். 

இதன் போது விமான நிலையத்தின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஹர்ச அபய விக்ரம மற்றும் ஏனைய ஊழியர்களுடன் சேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார். 

இதன் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர், பழைய அரசாங்கம் போல் நாம் பொய் கூற மாட்டோம் விமான நிலையத்தின் திட்டமிடல் வரைபடம் உள்ளிட்ட பல்வேறு வேலை திட்டங்கள் நிறைவடைந்துள்ளன எனவே அதனுடைய திட்டமிடலுக்கு ஏற்ப நான்கு மாதங்களுக்குள் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார். 

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cm8wj9shi00gd10a66zsm12sr

O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்!

1 week 4 days ago

exam.png?resize=650%2C375&ssl=1

O/L விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் ஆரம்பம்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் என  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 10ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விடைத்தாள் மதிப்பீட்டில் சுமார் 15,000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426838

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும்

1 week 4 days ago

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், 

"ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி மீண்டும் ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது." 

"பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது," என்றார்.

https://adaderanatamil.lk/news/cm8vk9kfl00gwnr5txjy1pg4f

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மரணம்!

1 week 4 days ago

Published By: VISHNU 30 MAR, 2025 | 09:24 PM

image

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/210668

சுன்னாக நிலத்தடிநீரில் எண்ணெய் படலமா? - ஐந்து கிணறு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்ப முடிவு!

1 week 4 days ago

Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 03:01 PM

image

சுன்னாக நிலத்தடி நீரில் மீண்டும் எண்ணெய் படலம் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்வளங்கள் சபைக்கு உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு  தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்த ராஜா பணிப்புரை விடுத்துள்ளார். 

சனிக்கிழமை(29) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுளமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவனந்தராஜா தலைமையில் இடம் பெற்றபோது சமூகமட்ட பிரதிநிதி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த கூட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் சுன்னாக நிலத்தடி நீரில் நொதேன் பவர் தனியார் நிறுவனத்தினால் வெளியேற்றப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்துக்கு கீழ் இறக்கப்பட்ட நிலையில் மக்களின் குடிநீர் கிணறுகள் தொடக்கம் விவசாய கிணறுகள் வரை கழிவு எண்ணெய் தாக்கம் உணரப்பட்டது. 

சிலர் அதனை மறுத்து வந்த போதும் இறுதியில் உண்மை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சுன்னாக பிரதேச மக்களின் குடிநீர் கிணறுகள் தொடர்பில் என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பது தொடர்பில் மக்களுக்கு தெரியாது. 

ஏனெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களின் கிணறுகள் தொடர்பான பரிசோதனை அறிக்கைகளை எடுத்ததாக நாங்கள் அறியவில்லை. 

அது மட்டுமல்லாது மருதனார் மடப் பகுதியில் அமைந்துள்ள வாகனங்கள் சுத்திகரிக்கும் நிலையத்தில் அதிகளவிலான அரச நிறுவனங்களின் வாகனங்கள் சுத்திகரிப்பு இடம்பெறுகின்றது. 

குறித்த சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி  வளமான விவசாய நிலங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்ற பகுதியில் குறித்த சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் கழிவுகள் அங்கு செல்கின்றது என்பது தொடர்பில் எமக்கு ஏதும் தெரியாது. 

இவ்வாறான நிலையில் முன்பு ஏற்பட்ட பாரிய அனர்த்தம் போன்று எதிர்காலத்தில் கழிவு எண்ணெயினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதன் போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர்,

 சுன்னாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் தாக்கம் தொடர்பில் நான் நன்கு அறிவேன். ஆகையால் பொதுமக்களின் குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு இருக்கும் நிலையில் நீர்வளங்கள் சபை அதிகாரிகள் சுன்னாகப் பகுதியில் உள்ள 5 குடி நீர் கிணறுகளின் நீர் மாதிரிகளில் எண்ணெய் படலம்  இருக்கிறதா என்பது தொடர்பில் பரிசோதனை அறிக்கையை பிரதேச அபிவிருத்தி குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.

அதேபோன்று வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது என அறிக்கை சமர்ப்பிப்பதோடு சுற்றாடல் அதிகார சபையினால் குறித்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உடுவில் பிரதேச சபைச் செயலாளருக்கு  பணிப்புரை விடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்கள், கிராம  சேவையாளர்கள் சமூகமட்ட பிரதிநிதிகள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/210629

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை ஆரம்பம்

1 week 4 days ago

30 MAR, 2025 | 05:37 PM

image

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முதல் ஆரம்பமாகியுள்ளது. 

திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வேளை, விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. 

நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதராக அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

குறித்த விமான சேவையானது தினசரி மதியம் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்ற திருச்சி ஊடாக சிங்கப்பூர் பயணிக்க கூடியவாறான விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளமையால், கொழும்பு சென்று சிங்கப்பூர் செல்வதற்கான நேர விரயம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3__3___1_.jpg

3__1___1_.jpg

01__2___3_.jpg

https://www.virakesari.lk/article/210655

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறும் – கடற்றொழில் அமைச்சர்

1 week 4 days ago

Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 05:05 PM

image

இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையிலான அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் வெகுவிரைவில் நடைபெறவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

இராமேஸ்வரத்தின் அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சகாயம் தலைமையிலான இந்திய மீனவ பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என்பதை இந்திய மீனவர்கள் உணர்ந்தனர் என்பதை அறியமுடிந்தது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கும், இது தொடர்பில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைய அமைச்சு மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் எனவும் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

DSC_7893.jpgDSC_7898.jpgDSC_7909.jpg

https://www.virakesari.lk/article/210644

பிரித்தானியாவின் தடையை வரவேற்கிறோம்; முன்னாள் ஜனாதிபதிகளையும் உள்ளடக்கவேண்டும் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

1 week 5 days ago

30 MAR, 2025 | 01:54 PM

image

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவிதித்துள்ளதை நாம் வரவேற்ப்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதிக்கு முன்பாக அவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், 

இலங்கை அரசானது நீண்டகாலமாக பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதிகோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறோம்.

இன்று போர்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாக சில இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடைவித்துள்ளதன் மூலம் இனப்படுகொலைஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணரமுடியும். 

இவ்வாறு தடைவிதிக்கப்படவேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் மீதும் இவ்வாறான தடைகளை விதிக்கவேண்டும். 

அனைத்துலக நாடுகளும் இந்த பயணத்தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியை பெற்றுத்தரவேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு

இதேவேளை 19காணாமல் போனஉறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். 

அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை.நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றைகூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை. 

மாறாக சர்வதேசத்துக்கு அப்பட்டமான பொய்களை சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர்.

எனவே எமது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இந்தநிலையில் சர்வதேச நீதிப்பொறிமுறையூடாகவே எமக்கான நீதியை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

IMG_20250330_104333__1_.jpg

IMG_1014.jpg

IMG_1011.jpg

IMG_1017.jpg

IMG_20250330_104408__1_.jpg

IMG_20250330_104333__1_.jpg

https://www.virakesari.lk/article/210625

இராணுவத் தளபதி யாழுக்கு விஜயம்!

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 2 30 MAR, 2025 | 02:18 PM

image

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி சர்வ மத தலங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் மதத் தலைவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார்.

வரணி மத்திய கல்லூரியில் மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார்.

மேலும் கொடிகாமம் தெற்கில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடும் பயனாளி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதியை, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹாம்பத் வரவேற்றதுடன் விசேட சந்திப்புக்களும் இடம்பெற்றது.

01__10_.jpeg01__3_.jpeg01__4_.jpeg01__6_.jpeg01__2_.jpeg01__5_.jpeg01__7_.jpeg

https://www.virakesari.lk/article/210624

கிழக்கில் உரிய விசாரணை முன்னெடுக்காது விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை

1 week 5 days ago

கிழக்கில் உரிய விசாரணை முன்னெடுக்காது விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை

karuna-pillayan-viyalan.jpg

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம்  பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1950 ,60,70,80, 90, 2000 க்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் இப்படிப்பட்ட பல்வேறு விடையங்கள் நாட்டிலே நடந்திருக்கின்றது.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம்.

எனவே, நாங்கள் பழிவாங்கும் செயற்பாடுகளுடன் செயற்பட்டிருந்தோம் என்றால் எவ்வளவே வேலையை செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் சட்டரீதியாக ஒப்புவிக்கப்படுவதன் பிரகாரம் நாங்கள் அவர்களுக்கு எதிராக சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் கூட எதிர்வரும் காலங்களில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இதுவும் அரசியல் பழிவாங்கல் அல்ல பிழை செய்திருந்தால் உங்களுக்கு எதிராக அரசாங்கம் என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்துவோம். இதற்கு தான் மக்கள் எங்களுக்கு அனுமதியளித்துள்ளனர்.

பட்டலந்தை ஆணைக்குழு தொடர்பான விவாதம் இப்போதாவது வந்தது என்பது சந்தோஷமானது. சம்பவம் துக்கமான விடையமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக இப்போது பெரும் விவாதமாக எடுக்கப்படுகின்றது

இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணிக்கு நடந்தது என்று பார்ப்பதை விட இது ஒரு உதாரணம் இந்த நாட்டில் சட்டவிரோதமான படுகொலைகள் அரச ஒடுக்கு முறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இருந்தது என சொல்வதற்கான ஒரு உதாரணம் இது

இது நீண்ட ஒரு கறுப்பான யுகத்தில் ஒரு உதாரணம் இது பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றதுடன் நடைபெற்ற எல்லா விடயங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும்

அரசாங்கத்தை பொறுப்பெடுக்கும் போது உண்மை அறியும் ஆணைக்குழுவை நியமித்து இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுவோம் என தெரிவித்தோம். அதற்காக மக்கள் 5 வருடத்துக்கு ஆட்சியை தந்துள்ளனர்.

அதன் பிறகு மக்கள் ஆட்சியை தரப் போகின்றனர். எனவே படிப்படியாக அறிக்கை செய்யப்பட்ட விடையங்களை ஒரே தடவையில் தீர்மானிக்க முடியாது எனவே இந்த விடயங்களை செய்ய 6 மாதகாலம் செல்லும்.

இந்த அடிப்படையில் உண்மையறியும் ஆணைக்குழு முக்கியமாக நல்லிணக்கத்தை கட்டியொழுப்புவதற்கு சாதகமாக இருக்கும் அதேவேளை நல்லிணக்கத்தை குலைக்கின்றதாக இருக்க முடியாது இது ஒரு நீண்ட தூர பயணம்.

நாட்டில் ஜனநாயக ரீதியாக ஒரு பாரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம் இவ்வாறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயக ரீதியாக மாற்றம் இடம்பெறவில்லை அந்த அடிப்படையில் இன்று பாரிய மாற்றம் வந்துள்ளது இருந்தபோதும் ஆங்காங்கே பழைய ஆட்சியாளர்களின் எச்சங்கள் வெளிவருவது இருக்கின்றது இருந்த போதும் ஒட்டு மொத்தமான மக்கள் இந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.

வாழ்க்கை சுமை படிப்படியாக குறைந்து வருகின்றது. ஊழல் மோசடி இலல்லாத கலாச்சாம் மற்றும் அரசியல் கலாச்சாரம் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களில் அமைச்சரே அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பல வாகனங்களில் பிரயாணித்தனர். அதற்கு டீசல், பெற்றோல் மக்களின் பணத்தில், ஆனால் இன்று நாங்கள் வாகனத்தை குறைத்து பாதுகாப்பு இல்லாமல் செய்தமையால் யாரே ஒருவருடைய சாப்பாட்டு தட்டில் உணவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே எங்களால் மக்களுக்கு வரப்பிரசாரங்கள் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

எனவே, இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதே ரீதியில் நாட்டில் ஒரு குரோதத்தை வளர்க்க இடமளியோம். அந்த வகையில் எல்லோரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் எனவும் தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=318404

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்

1 week 5 days ago

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்

30 Mar, 2025 | 01:00 PM

image

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின்  உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின்  உறவினர்களால் அனைத்து மாவட்டங்களிலும்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், தங்கள் கையினால் கையளித்த தங்களது உறவுகளை மீட்டு தருமாறு கோரியும் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தியும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.   

IMG_20250330_110826.jpg

IMG_20250330_110832__2_.jpg

IMG_20250330_112335__1_.jpg

https://www.virakesari.lk/article/210620

Checked
Fri, 04/11/2025 - 09:46
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr