புதிய பதிவுகள்

Published By: RAJEEBAN 03 APR, 2025 | 02:22 PMimageஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் சகாக்களிற்கு கத்தார் அதிகாரிகளுடன் தொடர்புகள் உள்ளமை தெரியவந்ததை இஸ்ரேல் அரசியல் பெரும் சர்ச்சை  மூண்டுள்ளது.கத்தார் குறித்து  இஸ்ரேலில் சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக கத்தாரிடமிருந்து பணம் பெற்றதாக பெஞ்சமின் நெட்டன்யாகுவின் இரண்டு நெருங்கிய சகாக்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.கத்தார் ஹமாசிற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்ற நாடு என இஸ்ரேலில் பலர் கருதுவதாலும், இஸ்ரேலிற்கும் கத்தாருக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் இல்லை என்பதாலும், இந்த விவகாரம் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published By: DIGITAL DESK 2 03 APR, 2025 | 04:53 PMimage(இராஜதுரை ஹஷான்)2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டு காலப்பகுதில் அமுல்படுத்தப்படவுள்ள ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும்  புதன்கிழமை (09) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு  செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாதொழிப்பு என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு  மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது அந்தப் பொறிமுறையை வலுப்படுத்தும் முதன்மையான அரச கட்டமைப்பாக காணப்படுகிறது.ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க அனைத்து
03 APR, 2025 | 08:13 PMimage"மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம்" என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவும் நோக்கில் ஏர்முனை மாற்று திறனாளிகள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி சந்திப்பின் பிரதம அதிதிகளாக ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஆறாம் வட்டார தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளருமான செ.நிலாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் ஆகியோர் கலந்து கொண்டு உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர்.ஏறாவூர் பற்று பிரதேசத்தில் யுத்தத்தினால் அவயவங்களை இழந்த போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள் உட்பட இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாக பிறந்தவர்கள் உள்ளடங்களாக சுமார் 850 மாற்று திறனாளிகள் உள்ளனர்.இவர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டங்களை ஏர் முனை
Published By: DIGITAL DESK 2 03 APR, 2025 | 04:53 PMimage(இராஜதுரை ஹஷான்)2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டு காலப்பகுதில் அமுல்படுத்தப்படவுள்ள ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும்  புதன்கிழமை (09) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு  செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாதொழிப்பு என்பது ஒரு நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு  மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது அந்தப் பொறிமுறையை வலுப்படுத்தும் முதன்மையான அரச கட்டமைப்பாக காணப்படுகிறது.ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் வலுவான ஊழலுக்கு எதிரான தேசியக் கொள்கையை உருவாக்க வேண்டியதன் அவசியம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் முதன்மைப் பொறுப்பு அரசியலமைப்பின் ஊடாக ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக ஆணைக்குழுவின் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான ஊழல் எதிர்ப்புக் கொள்கை உருவாக்கம் மற்றும் கண்காணித்தல் வரையான ஆணைக்குழுவின் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளன.இலங்கையின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளின்படி, ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் உட்பட ஊழலுக்கு எதிரான சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆணைக்குழு முக்கிய பங்கு வகிக்கிறது.ஊழலுக்கு எதிரான  ஐக்கிய  நாடுகளின் சமவாயத்தின் 5ஆவது பிரிவின் கீழான கடப்பாடுகளுக்கு அமைவாக  இலங்கையில் தயாரிக்கப்பட்ட  முதலாவது தேசிய செயற்திட்டம் (2019-2023) 2019.02.05 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டது.2019-2023 காலப்பகுதிக்கான தேசிய செயற்திட்டத்தின் அடைவுகள் மீளாய்வுக்கு உட்பட்டுள்ளதுடன் கற்றுக்கொண்ட விடயங்கள் தற்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.2025 ஆம் ஆண்டிலிருந்து ஊழல் ஒழிப்பு எதிர்ப்பு செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கில்  தேசிய மற்றும் சர்வதேச தரப்பினரின் பங்களிப்புடன் 2025-2029 வரையான காலப்பகுதிக்கான  புதிய ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் இறுதி வரைவு, 2025.01.21 ஆம் திகதியன்று தொடர்புடைய தரப்பினரின் பரிசீலனைக்காக ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்  அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.https://www.virakesari.lk/article/211043
Published By: RAJEEBAN 03 APR, 2025 | 02:22 PMimageஇஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் சகாக்களிற்கு கத்தார் அதிகாரிகளுடன் தொடர்புகள் உள்ளமை தெரியவந்ததை இஸ்ரேல் அரசியல் பெரும் சர்ச்சை  மூண்டுள்ளது.கத்தார் குறித்து  இஸ்ரேலில் சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக கத்தாரிடமிருந்து பணம் பெற்றதாக பெஞ்சமின் நெட்டன்யாகுவின் இரண்டு நெருங்கிய சகாக்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.கத்தார் ஹமாசிற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்ற நாடு என இஸ்ரேலில் பலர் கருதுவதாலும், இஸ்ரேலிற்கும் கத்தாருக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் இல்லை என்பதாலும், இந்த விவகாரம் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.qatar_scandal.jpgகத்தார் இஸ்ரேலின் அரசியலின் உயர்பீடம் வரை தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதும் இஸ்ரேலில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹமாஸ் இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் பிரதான
வங்கிக்கொள்ளை, கர்நாடகா வங்கி, உசிலம்பட்டி, கிணற்றில் தங்க நகைகள்பட மூலாதாரம்,ANIபடக்குறிப்பு,பிடிபட்ட தங்க நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன2 ஏப்ரல் 2025கர்நாடக மாநில வங்கியில் கொள்ளையடித்த தங்கத்தை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் பதுக்கி வைத்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 மாதங்களுக்குப் பின்னர் சகோதரர்கள் போலீஸாரிடம் சிக்கியது எப்படி? திசை தெரியாமல் சென்ற விசாரணையில் முக்கிய திருப்பம் எப்படி நடந்தது என்பது குறித்து அதிர்ச்சி தரும் விவரங்கள் வெளியாகியுள்ளன.கடந்த 2024 அக்டோபர் 28 ஆம் தேதி, திங்கள்கிழமை. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு கர்நாடக மாநிலம், தாவனகரே மாவட்டத்தில் உள்ள நியாமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.வங்கிக் கிளையின் ஜன்னல் உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த சுமார் 17 கிலோ தங்க நகைகள் கொள்ளை போயிருந்தன. இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக, திங்கள்கிழமையன்று (மார்ச் 31) தாவனகரே போலீஸார் தெரிவித்துள்ளனர்.'இது அவர்களின் முதல் குற்றம். சிறு தடயம் கூட இல்லாமல் நகைகளைக்
30 MAR, 2025 | 10:21 AMimageநமது நிருபர்கனேடிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் நான் தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.அவர்களில் இருவர் லிபரல் கட்சி சார்பிலும் ஏனைய இருவர் கொன்சவேர்ட்டிவ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர். கடந்த லிபரல் அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியிலும் புதிய முகமாக தற்போதைய மார்க்கம் நகரசபையின் 7ஆம் வட்டார உறுப்பினர் ஜுவொனிற்றா நாதன் மார்க்கம் பிக்கரிங் - புரூக்ளின்  தேர்தல் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.கொன்சர்வேர்ட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடும் லையனல் லோகநாதன் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியிலும் மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான நிரான் ஜெயநேசன் மார்க்கம்-யுனியன்வில் தொகுதியிலும் களமிறங்கவுள்ளனர்.https://www.virakesari.lk/article/210588
மோதிபட மூலாதாரம்,GETTY IMAGESபடக்குறிப்பு,கடந்தாண்டு டிசம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு அரசமுறை பயணமாக வந்திருந்தபோதுகட்டுரை தகவல்எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்பதவி,பிபிசி தமிழுக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் நரோந்திர மோதி வரும் ஏப்ரல் 4-அம் தேதி முதல் 6-அம் தேதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.அப்போது, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டிகருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்மீண்டும் கரம் கோர்த்த விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் - காரணம் என்ன?இந்த நிலையில்,
தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி, தாய்ப்பால் வங்கி, தாய்ப்பால் சேகரிப்பு, தாய்ப்பாலை எப்படி சேகரிப்பது, தாய்ப்பால் வாரம்பட மூலாதாரம்,GETTY IMAGESகட்டுரை தகவல்எழுதியவர், சோஃபியா பெட்டிஸாபதவி, பிபிசி உலக சேவை3 மணி நேரங்களுக்கு முன்னர்திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை நிபுணர்கள், மாய சக்தியின் பிறப்பிடம் என்றும் கூறுகின்றனர்.தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பலை, அதில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர்.மூன்று குழந்தைகளுக்கு அப்பாவான ஜேம்சன் ரைடெனூர் அவருடைய 39 வயதில் முதன்முறையாக தாய்ப்பாலை அருந்தினார். அவருடைய துணைவி மெலிசா குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவந்தார். அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை ஜேம்சன் தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக சேர்த்து வந்தார்."மெலிசா இதனை 'ஒருவிதமாக' நினைத்தாலும் கூட, நான் இதனை 'ஷேக்கில்' பயன்படுத்துகிறேன்,"
Published By: RAJEEBAN 03 APR, 2025 | 05:04 PMimageகுச்சவெளியில் திடீரென 2500 ஆண்டுகளுக்கான எச்சங்களைத் தேடிக் கொண்டு அந்த இடத்தை பௌத்தத்தின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்தி இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பதன் மூலமாக அங்கிருந்து மக்களை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என 'குச்சவெளி" நில ஆக்கிரமிப்பு குறித்து ஆவணப்படத்தின் இயக்குநர்  செல்வராஜா ராஜசேகர் தெரிவித்துள்ளார்.kutchaveli5.jpgமாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தயாரித்துள்ள குச்சவெளி ஆவணப்படத்தின்   காட்சிப்படுத்தல் கலந்துரையாடல் கொழும்பு லக்ஸ்மன்கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்றவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராஜா ராஜசேகர் மேலும் தெரிவித்ததாவது,குச்சவெளி ஆவணப்பட காட்சிப்படுத்தலில்  பெரும் சவால்களை எதிர்கொண்டோம். அந்த இடத்திற்கு செல்வது மக்களை சந்திப்பது வீடியோ எடுப்பது எல்லாமே சவாலான விடயங்கள்.
488055158_2787470144974341_4744971898498🌾இயற்கையிலிருந்து ஒரு வேதனையான உண்மை. 🦂பிரசவத்திற்குப் பிறகு, ஒரு தாய் தேள் தனது குழந்தைகளைப் பாதுகாக்க முதுகில் சுமந்து செல்கிறது. இந்த நேரத்தில், அது சாப்பிடுவதில்லை, ஆனால் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்க தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நாட்கள் செல்லச் செல்ல, அது பலவீனமாகி, தனது குட்டிகள் உயிர்வாழ்வதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் அர்ப்பணிக்கிறது. குழந்தை தேள்கள் போதுமான அளவு வலிமையாக இருக்கும்போது, அவை தங்கள் தாயை விட்டு வெளியேறி தங்கள் சொந்த வாழ்க்கையைத் தொடங்குகின்றன. அதற்குள், அவள் பெரும்பாலும் சோர்வடைந்து பாதிக்கப்படக்கூடியவள் - அவர்களுக்காக தன்னை முழுமையாக தியாகம் செய்துவிட்டாள்.அமைதியான தியாகத்தின் இந்த உருவம் பல
487323521_4045574579020660_8278196373180இரண்டும் முரண்பட்டுக் கொண்டன. கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன.நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை. மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன.இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை.இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும்சண்டைகளும் கூட! நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை.நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல.மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம்.உலகில்
'இதெண்டு' என்னும் சொல் பற்றிய உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!“மக்களாகிய நீங்கள் உள்ளூராட்சி தேர்தலில் எங்களுக்கு இதெண்டு விட்டீங்க எண்டா, நாங்கள் உங்கள் பிரச்சனைகளை இதெண்டு விடுவம். நாங்கள் இதெண்டோணும் எண்டா, நீங்களும் எங்களுக்கு இதெண்டோணும். வாருங்கள் எல்லோரும் சேர்ந்து நாட்டை இதெண்டுவம்” என்று அண்மையில் தேசிய மக்கள் சக்திப் பாராளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன் பேசியதாக ஒரு தகவலினை வடமராட்சி நியூஸ் என்னும் முகநூற் பக்கத்தில் வாசித்தேன். அதனையொட்டி மேலும் சிலர் முகநூலில் இதெண்டு என்ற சொல்லை வைத்துச் சொற் சிலம்பம் ஆடி வருவதைக் காண முடிகின்றது. நான் இளங்குமரனின் உரையினைக் கேட்கவில்லை. மேலுள்ளதில் உள்ளது போன்றா அவர் உரையாற்றியிருந்தார்? அறிந்தவர்கள் அறியத்தரவும்.பொதுவாக பேச்சு வழக்கில் நாம் அதெண்டு இதெண்டு என்று பாவிப்பதுண்டு. அது , இது என்பதற்காக அவ்விதம் பாவிப்போம். உதாரணத்துக்கு எழுத்தாளர் க.நவம். செ.குணரத்தினம் அவர்களின் சிறுகதைகளில் வரும் கூற்றுக்களைப் பார்ப்போம்."இந்த நாடாவுக்கு மனிசி மக்கள் மருமக்கள் பெறாமக்களெண்டு கனடாவிலை பெரிய குடும்பம். அவ மனிசிக்கு ஒரு நல்ல ஒஃபீசிலை கனகாலம் வேலை. ஓவரைம் அது இதெண்டு இராப்பகலாக உழைச்சுழைச்சு, பாவம், மனிசி ஓடாப் போச்சுது" ( க.நவம் எழுதிய சிறுகதை - தினவு. அதில் வரும் வரிகள் இவை.)"ஆது இதெண்டு எல்லாத்தையும் சம்பளத்தாலை
487033301_1204198595046879_6840208997346என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன.என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின.இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என்
02 APR, 2025 | 11:13 AMimageஏப்ரல் 5 முதல் 15 வரை நிழல் சிறிது நேரம் மறையும் அரிய நிகழ்வு நிகழவுள்ளதாக  வானியலாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். வானியலாளர் அனுர சி.பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது. அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்." "4 ஆம் திகதி சூரியன் நம் நாட்டிற்குள் நுழைகிறது. அதாவது இந்த உச்சம் பெறுதல் பருத்தித்துறை முனையில் ஆரம்பமாகிறது. ஏப்ரல் 5 ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6 ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பு - களனி, ஏப்ரல் 8 ஆம் திகதி மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சத்தை அடையும் என்றார்.https://www.virakesari.lk/article/210889
  ஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ   ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவிitalo-calvino-bw1-frmல் பிறந்தார்.இத்தாலியில் வளர்ந்தார். இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தியநாவலாசிரியர்களில் தலை சிறந்தவராகக்  கருதப்படுகிறார். இவர்எழுதியுள்ள முக்கியமான நூல்கள்: தி காஸ்ட்ல் ஆப் க்ராஸ்ட் டிஸ்டினீஸ்(நாவல், 1973), இன்விஸிபில் சிட்டீஸ் (1972), டிபிக்கல்ட் லவ்ஸ்(சிறுகதைகள், 1984), ரோட் ஆப் சன் ஜியோவன்னி (1994) மற்றும் அன்டர் த ஜகர்ஸன் (1992). திருமதி ஸ்டெஃபனியா ஆர். காலை ஆறு மணிக்குத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அதுதான் முதல் தடவை. கார் அவளுடைய வீடு இருந்த கட்டடத்திற்கு முன்பாக இல்லாமல் சற்று முன்னாலேயே திருப்பத்தில் நின்றது. அந்த இடத்தில் தன்னை விட்டுவிடும்படி அவள்தான் ஃபர்னெரோவை கேட்டுக்கொண்டாள்; ஏனென்றால், கணவன் ஊரிலில்லாத சமயத்தில் அதிகாலையில் ஓர் இளைஞனுடன் அவள் வீடு திரும்புவதைக் காவலாள் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. என்ஜினை நிறுத்தியவுடன் ஃபர்னெரோ அவளைத் தன் கையால் அணைக்க முற்பட்டான். வீடு அருகிலிருந்தமை
மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன?மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும், புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்க்களில் முயற்சித்து வருகின்றன.மேலும் பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் மதுசாரத்தினால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பெண்கள் முகங்கொடுக்கின்றனர். இவற்றை வெளிக்கொணரும் வகையிலும், ஏனையோரின் மதுசார பாவனையினால் பெண்கள் முகங்கொடுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது ஆய்வொன்றினை மேற்கொண்டது. 25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கும் மேற்பட்ட 1000 பெண்களிடம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது மதுசார பாவனையினால் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர், மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை
"மரியாதை" [அந்தாதிக் கவிதை] & ["சூடினாள் மல்லிகை"  "மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு  வாங்கும் புகழ் நிலைத்து நிற்கட்டும்  நிற்கும் நிலையில் உறுதி மலரட்டும்    மலரும் நட்பில் துலங்கட்டும் மரியாதை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. "சூடினாள் மல்லிகை" "சூடினாள் மல்லிகை அழகு கொண்டையில்  ஆடினாள் நிருத்தம் முத்திரைகள் காட்டினாள்   கூடினாள் இதயத்தில் கவர்ச்சி வீசினாள்   தேடினாள் நட்பை சேர்ந்து அனுபவிக்க!" "நாடினாள் அன்பை தனிமை போக்க  பாடினாள் கவிதை இனிமை கொடுக்க   ஓடினாள் கரையில் ஆனந்தம் பொங்க   மூடினாள் நெஞ்சை ஒருவனை நிறுத்தி!"  "வேதம் சொல்லா பாசம் வேண்டி  பாதம் பார்த்து கைகள் கோர்த்து  இதமான வாழ்வில் காமம் சேர்த்து    பதமாய் குழைத்து ஊட்டினாள் உறவை!"  "காதல் மலர கனிவு துளிர    மோதல் அற்ற புரிந்துணர்வு பூக்க இதழ் இரண்டும் தேன் பருக   கூதல் காற்று இரண்டை ஒன்றாக்கியது!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
Published By: VISHNU 01 APR, 2025 | 07:44 PMimage(நெவில் அன்தனி)கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் பொறளை வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் பி.சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 5ஆவது வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ண இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் வெற்றி தோல்வியின்றி இன்று (01) முடிவடைந்தது.இதன் காரணமாக வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு மேலும் ஒரு வருடத்திற்கு கிண்ணம் சொந்தமானது.இரண்டு அணிகளும் 3 இன்னிங்ஸ்களிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததுடன், வெஸ்லி கல்லூரி சார்பாக நால்வர் அரைச் சதங்கள் குவித்ததுடன் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி சார்பாக இருவர் அரைச் சதங்கள் பெற்றனர்.திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி முதல் இன்னிங்ஸில் நிர்ணயயிக்கப்பட்ட 65 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி முதலாம் நாள்
யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன.நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம்.சமூக விரோத செயற்பாடுஇது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலையத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன.